ஹாய் ஃப்ரெண்ட்ஸ்....
அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன்....
அகைன்... செல்வி கார்த்திக் லைஃப் இவங்களத் தாண்டிதான் ஆராதனா செழியன் ஃபேஸ் ஆஃப் அத்தியாயமே வரும்... அதுவரை கார்த்திக் செல்வி தான் மெயின் ஃபோகஸா வருவாங்க...
ஹேப்பி ரீடிங்...
நன்றி
பிரவீணா
---
அத்தியாயம் 16:
அடுத்து மூன்று தினங்கள் கழிந்து…
மதுரையின் பிரபல திருமண மண்டபம்….
“கார்த்தி வெட்ஸ் தமிழ்” என்ற பூ வேலைப்பாடு நிறைந்த அலங்கார பதாகை மட்டுமல்ல… அந்த ஏரியா எங்கும் அவர்களின் திருமண வாழ்த்துக்கான சுவரொட்டிகள் … அது போதாதென்று கட்சி பாகுபாடின்றி அரசியல்வாதிகள்… அவர்களது தொண்டர்கள்… இது எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக கட்சியின் தலைவரின் வருகையும் கார்த்திக் செல்வியின் வரவேற்ப்பை இன்னும் சிறப்பாக்கியது என்றால் மிகையல்ல
மணமகன் மணமகள் இருவருமே அன்றைய அவர்களின் வரவேற்புக்கான பிரத்யோக உடையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த சபையில் நின்று அனைவரின் வாழ்த்துக்களையும் ஆசிர்வாதங்களையும் மன நிறைவோடு முக மலர்வோடும் வாங்கிக் கொண்டிருந்தனர்…
“தமிழ்…” செல்வியை கார்த்திக் அழைக்க…. செல்வியும் அவனை வேகமாக பார்க்க…
“கொஞ்ச நேரத்துல தலைவர் வருவார்…. கால்ல விழனும்… உனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லதானே…” அமைதியான குரலில் கார்த்திக் அவளுக்கு மட்டுமே கேட்கும் படி சொல்ல…
”இல்ல… அதுனால என்ன… பெரியவங்க கால்ல விழறதுல… அவங்க ஆசிர்வாதம் வாங்கறதுல என்ன தப்பு…” செல்வியும் கணவனிடம் சொல்லிவிட…. கார்த்திக் அவளைப் புரிந்து கொள்ள முடியாத ஒரு பார்வையை பார்த்து விட்டு… மீண்டும் சபையைப் பார்க்க… செல்வி வேகமாக அவனிடம்
“நான் ரொம்ப அழகா இருக்கனா என்ன… அப்போப்ப ரொமான்ஸா எல்லாம் லுக் விடறீங்க மாமா… ” முகம் மாறாமல் சந்தோஷமாக சபையைப் பார்த்தபடியே அவனை வம்பிழுக்க… கார்த்திக்கால் உடனடி முறைப்பை கொடுக்க முடியவில்லை… இருந்தாலும்
“ஹ்ம்ம்ம்… அந்தப் பார்வைக்கு அது அர்த்தம் இல்லம்மா… என் பக்கத்தில நிற்கிறது நான் தாலி கட்டின என் பொண்டாட்டி தமிழ்செல்வி தானா…. இல்ல வேற யாரோவான்னு அப்போப்ப செக் பண்ணிக்கிறேன்… “ என்றபடியே
“மேக் அப்ன்ற பேர்ல முகத்துக்கு மாஸ்க் போட்டுட்டு வந்துட்டு…. அழகா இருக்கனான்னு வேற கேள்வி…” கார்த்திக்கும் செல்விக்கு பதிலடி கொடுத்தாலும் புன்சிரிப்பை மாற்றாமல் சொல்ல… செல்வியின் முகம் மாறவில்லை….
பதிலுக்கு…
“தனா….” என்று தனாவை அழைக்க… அவள் அருகே இருந்தால் தானே…. மேகலாதான் வந்தார்
“என்ன செல்வி… உட்காருரியா…”
“அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்ல அத்தை… தனா எங்க…. “
மேகலா அவளை கேள்விக்குறியாகப் பார்க்க
“இல்ல… இந்த மேக் அப் நல்லா இல்லைனு இவர் சொல்றாரு…நான் அவர் பொண்டாட்டி செல்வியா இல்ல வேற யாரோவான்னு அதான் தனாவைக் கூப்பிட்டேன்… அவதான் எல்லாமே ஏற்பாடு பண்ணினது…” கார்த்திக்கை அவனது தாயிடமே செல்வி மாட்டி விட்டிருக்க…
மேகலா சபையிலேயே மகனை முறைக்க ஆரம்பித்திருக்க
“அம்மா… சும்மா…” கார்த்திக் அன்னையிடம் தடுமாறிக் கொண்டிருக்கும் போதே… ஆராதனா அந்த மேடைக்கு வந்திருந்தாள்… தன் அன்னையைத் தேடி…
“அம்மா… அப்பா கூப்பிடறாங்கம்மா…. அப்புறம்… வீட்ல பாட்டிக்கு சாப்பாடு அனுப்ப ஆள் அனுப்பனும்மா…. அப்புறம்… கட்சி ஆளுங்க வர்றதுகுள்ள கேக் வெட்டனும்… அவங்க போன பின்னால… செல்வியும் அண்ணனும் பட்டு வேஷ்டி பட்டு சேலை மாத்தனும்… ரிஷப்ஷன் மண்டப டெகரேஷன மேரேஜ் டெகரேஷனுக்கு இவங்க ட்ரெஸ் சேஞ்ச் பண்ற கேப்ல மாத்திறலாம்னு சொன்னாங்க… அம்மா… மேரேஜ் மாதிரியே செட் போடச் சொல்லிருக்கேன்… யாகம் ஐயர்.. எல்லாமே வரச் சொல்லிருக்கேன்… செல்வி எதையும் மிஸ் பண்ணிறக்கூடாதும்மா…”
செல்வியின் தாயும் இப்போது அவர்கள் அருகே நின்றிருக்க… அவரது கண்களோ கண்ணீரில் நிரம்பியிருக்க….
“அட அத்தை இப்போ எதுக்கு அழறீங்க… ஏதாவது மிஸ் பண்ணிட்டோமான்னு சொல்லுங்க… நாளைக்கு என் மருமகனோ… மருமகளோ…. வந்து ஏதும் கேள்வி கேட்றக் கூடாது… ஆமாம்…”
செல்வியின் தாய்… சந்தோஷ முகத்துடன் தன் சம்பந்தியிடம் திரும்பினார்
”இது போதும் மேகலா… என் பொண்ணுக்கு… நான் ரொம்ப பயந்துட்டு இருந்தேன்… மூனு நாளைக்கு முன்னால நடந்ததுல…”
“ப்ச்ச்…. அத்தை… அண்ணனும் அப்பாவும் எல்லாத்தையும் சரி பண்ணிட்டாங்கள்ள… அம்மா அத்தைகிட்ட எடுத்துச் சொல்லுங்க” என்றபடி செல்வியின் தாய் தாமரைக்கு ஆறுதல் சொல்லிவிட்டு தன் அன்னையிடமும் அவருக்கு ஆறுதலாக பேச சொன்னவள்…… செல்வியின் அருகில் வந்தவள்….
“என்னாச்சு செல்வி…. திடீர்னு முகம் மாறுச்சு… நான் ஸ்கீரின்ல பார்த்துட்டுதான் வந்தேன் ஸ்டேஜ்க்கு வந்தேன்…”
கார்த்திக் தன் தங்கையிடம்
“என்ன மேக் அப் இது….” செல்வியிடம் காட்டாத கடுப்பை தன் தங்கையிடம் கேட்ட… அவனிடம் ஆராதனா எதிர்த்துப் பேசுவாளா…
“சாரிண்ணா… அண்ணே ஃபோட்டோக்கு வீடியோக்கு இதான் நல்லா இருக்கும்… ட்ரெஸ்… பேக்ரவுண்ட். லைட்னிங்… எல்லாம் ப்ரைட்டா இருக்கும் போது… பொண்ணும் அதே ப்ரைடென்ஸ்ல இருக்கனும்ல… கொஞ்ச நேரம் தானே அட்ஜஸ்ட் பண்ணிங்கங்க… நம்ம வீட்டுக்கு வந்த பின்னால உன் பொண்டாட்டிய உன் பொண்டாட்டி மாதிரியே அனுப்பிறேன்….”
கார்த்திக் வேறெதுவும் சொல்லாமல் திரும்பியவன்… வாசலைப் பார்க்க… அப்போது
காயத்ரியும்…. ராஜாவும் வந்து கொண்டிருந்தனர்….
“தனா… அந்தப் பொண்ணும் அந்தப் பையனும் வர்றாங்க… தனியா விட்றாத…. இங்க இருக்கிறவங்க ஏதாவது பேசி கஷ்டப்படுத்திறப் போறாங்க….” கார்த்திக் சொல்ல… செல்வியும் தனாவும் அப்போதுதான்… காயத்ரியைப் பார்த்தனர்…
“ஹேய் புதுப் பொண்ணும் மாப்பிள்ளையும்… வந்துட்டாங்கடி செல்வி… நான் பார்த்துக்கிறேன்ணா… செல்வி அண்ணாகிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன்… ஜஸ்ட் இவங்கள மட்டும் அவர்கிட்ட இண்ட்ரோ கொடுத்துட்டு வந்துறேன்… அதுக்கப்புறம் காயுவயும் ராஜாண்ணாவையும் அவங்க பார்துக்குவாங்க” வேக வேகமாக நரேனை நோக்கி ஓடினாள் ஆராதனா…
---
”சரிம்மா நான் பார்த்துக்கிறேன்… “ நரேன் ஆராதனாவிடம் சொன்ன போதே….
“அவங்க இன்னைக்கு நம்ம கூட நம்ம ஊருக்குத்தான் வருவாங்க… அதுவரை அவங்க உங்க பொறுப்புதான்… நம்மள நம்பித்தான் வந்துருக்காங்க…” என்ற போதே… ஆராதனாவின் அலைபேசி அடித்திருக்க… அதை எடுத்தபடி நரேனிடம் நின்று கூடப் பேச முடியாமல் ஆராதனா அங்கிருந்து நகன்றிருந்தாள்…
“ஹான் முகிலண்ணா… வீடியோ காலுக்கு வாங்க… அப்போதான் பார்த்து சொல்ல முடியும்… அந்த குத்து விளக்கான்னு…”
ஆராதனா கிட்டத்தட்ட பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தாள்…
ஆராதனாவின் அப்பத்தா நீலவேணி… சபையின் முன் அமர்ந்து... அவர் கண்பார்வையில் நடப்பவைகளை எல்லாம் கண்காணித்துக் கொண்டிருக்க…
அவரது அருகில் இருந்த அவரின் சொந்தத்தில் இருந்த மூதாட்டி… பெருமூச்சு விட்டவராக
“ம்ஹ்ம்ம்ம்… திலகா மக இருக்க வேண்டிய இடத்துல யாரோ ஒருத்தி… என்ன பண்றது… சரி நம்ம பொண்ணுதான் இல்ல… நம்ம சாதி சனத்துலயாவது எடுத்திருக்கலாம்… என்னமோ போ…” என்றவர்… அந்த மண்டபத்தையே தன் ஆளுமைக்குள் கொண்டு வந்திருந்த ஆராதனாவைப் பார்த்தவராக
”அந்தப் பொண்ணு செல்விப் புள்ள நம்ம தனாவுக்கு ஃப்ரெண்டாமே…. சொன்னாங்க…” என்றவருக்கு நீலவேணி பதிலே சொல்லாமல் சபையைப் பார்த்தபடி இருக்க… அந்த மூதாட்டி இப்போது பேச்சை மாற்றினார்….
“ஏன் வேணி… மேகலாக்கு தப்பாம பொறந்திருக்கா அவ மகளும்… இவ போக போற வீடு கொடுத்து வச்சிருக்கனும்... இந்த வயசுலயே அத்தனை சடங்கையும் சரியா எடுத்து நடத்துறா… அது சரி என்ன இருந்தாலும் உன் வளர்ப்பும் மேகலா வளர்ப்பும் தப்பிருமா என்ன… இந்த காலத்துப் பசங்கலாம் இதெல்லாம் இனி எடுத்து பாப்பாங்களான்னு எனக்குள்ள ஒரு வருத்தம் இருந்துச்சு… தனாவைப் பார்த்து… இன்னும் ஒரு மூணு தலமுறைக்கு கவலையில்லனு தோணுது…”
“பொண்ணுக்கும் மாப்பிள்ளைகும் சுத்திப் போடும்போது தனாக்கும் சுத்திப் போட்ருங்க… ஆமா தனா போட்ருக்க ஒட்டியாணம் எங்க பண்ணினது… ஜடைல போட்ருக்க அட்டிகை எல்லாம் ஏற்கனவே ஒரு மேரேஜ்க்கு போட்ருந்தானே… அது பார்த்தது தான்… இது நல்லா இருக்கே… நம்ம ஆசாரிகிட்ட கிட்ட பண்ணினதா “ என்று நீலவேணியிடன் விசாரிக்க…
”ஆமா… இப்போதான் கொஞ்ச நாளைக்கு முன்னால… அவ கல்யாணத்துக்குனே செட்டா பண்ணிட்டோம்… தை மாதம் கல்யாணம்னு கமலிக்கு பண்ணினோம்… அதே மாடல் அப்படியே இவளுக்கும் பண்ணச் சொல்லிட்டோம்…”
“ஓஒ… என்ன சொல்லி என்ன சொல்ல... நம்ம வீட்ல யாரோ ஆட்சி செய்யப் போறாங்க… நம்ம வம்சமே மாற போகுது… என்னதான் சொல்லு… நம்ம கமலியாகிருமா இந்தப் பொண்ணு” மீண்டும் ஆரம்பித்திருந்தார்…. அந்த மூதாட்டி
நீலவேணி… கண்கள் கலங்கியதுதான்… ஆனாலும் காட்டிக் கொள்ள வில்லை… ஆனாலும் மனம் தாளாமல் மகளைப் பற்றி பேச ஆரம்பித்திருந்தார்…
“நாங்க கல்யாணத்துக்கு கூப்பிடல கமலா.. பொண்ணோட அப்பா மருமகப்பிள்ளையோட ஃப்ரெண்ட்… அவர் நேர்ல போய் பத்திரிகை வச்சு கூப்பிட்டாராம்… ஆனால் திலகா வரல… பூர்ணியும் உடனடியா வர முடியல.... சின்னவன் தலமுழுகினவன பத்தி என்னத்த சொல்ல…. எல்லாம் என் ராசி… என் பேரன் கல்யாணம் திருவிழா மாதிரி நடத்த நினச்சோம்….” என நீலவேணி ஆரம்பித்த போதே…. ஆராதானா அவர் அருகில் வர… பேச்சை நிறுத்தி இருந்தார் நீலவேணி…
“பாட்டி… கேட்டரிங்க்ல இருந்து வந்துட்டாங்களாம்.. அம்மாவும் நானும் பார்க்கப் போகிறோம்… நீங்களும் வந்து சரி பார்த்துட்டு போறிங்களா…” என்றவள்…
பக்கத்தில் இருந்த மூதாட்டியிடம்
“அம்மாச்சி… நீங்க சொன்ன மாதிரி… தாலிக்கயிறு பெருக்கிப் போடற பொருளெல்லாம் எடுத்து வச்சிருக்கேன்… அண்ணிக்கு நீங்கதான் எல்லாம் பார்த்து பண்ணனும்… எங்க அண்ணியும் உங்க பேத்தி மாதிரிதான்… இனி அவங்களும் நம்ம குடும்பம் தான்… எங்க அப்பாத்தா சொல்லி இருக்காங்க… நீங்களும் தாத்தாவும் தான் நம்ம பரம்பரையிலேயே மூத்தவங்களாம்… தம்பதி சகிதமா நீங்க வந்தாலே போதும்... சபை நிறஞ்சிரும்னு… உங்க ஆசிர்வாதம்தான் முக்கியம்மா வேணும்… அம்மா உங்ககிட்ட தான் முதல்ல தாலிச்செயினைத் தொட்டு வாங்கச் சொன்னாங்க ” என்றபடியே
”ஜெயின் எப்போ கொடுக்கனும்… நான் தான் வச்சிருக்கேன்”
என்றவளிடம்…
”பொண்ணுக்குத் தாலி பெருக்கிப் போடும் போது கொண்டு வந்தா போதும் தனா…” என்று முடித்து விட…
ஆராதனாவும் சென்று விட்டாள்…
ஒரு வழியாக அடுத்த சில மணி நேரங்களில் அரசியல் பிரமுகர்கள்… பொது வெளி ஆட்கள்… உறவினர்கள் என அனைவரும் கலைந்து சென்றிருக்க…
ஆராதனா ஏற்பாட்டின் படி… அனைவரின் முன் திருமண எப்படி நடந்திருக்குமோ… அதே போல் மீண்டும் மண்டபம் போடப்பட்டு,… மணமகனும் மணமகளும் பட்டுப் புடவையில் பட்டு வேஷ்டியில் வந்து அமர….
“அண்ணா… நீங்க மறுபடியும் தாலி கட்ற மாதிரி போஸ் கொடுத்தா போதும்… இந்த கேமேராக்கு மட்டுமே…. ” அண்ணனிடம் சொன்னவள்… மற்றவர்களிடம் திரும்பி
”அப்பா அம்மா அத்தை மாமா… அப்புறம் எல்லோரும் மறக்காமல் கைல வச்சிருக்கிற அட்சதை போட்ருங்க… நானும் நாத்தனார் முடிச்சு போட்ற மாதிரி ஆக்ட் பண்ணுவேன்… ஜஸ்ட் 10 மினிட்ஸ்…”
அவள் சொன்னதுபோ போல இயல்பான திருமண சடங்குகள் மீண்டும் நடந்து முடிந்திருக்க… மணியும் பத்தைத் தொட்டிருக்க…
ஆராதனாவை மேகலா அழைத்தார்…
“வனியும் நீயும் ஜமுனா கூட போயிருங்க… ஜமுனாகிட்ட எல்லா ஏற்பாடும் பண்ணச் சொல்லிட்டேன்… நீ வீட்ல மத்த ஏற்பாடை பண்ணிட்டு இரு… நம்ம தோட்டத்து பங்களால எல்லா ரிலேட்டிவையும் இறக்கி விட்டுட்டு நம்ம வீட்டுக்கு போயிருங்க…” என்று முடித்திருக்க
ஆராதனாவும் தன் தோழி காயத்ரியையும் அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்கு சென்றிருந்தாள்..
---
ஆராதனாவின் இல்லம்… கார்த்திக்கின் அறையில்…
காயத்ரி… செல்வி… ஆராதனா மூவர் மட்டுமே… மணி பதினொன்று ஆகியிருந்தது….
செல்வியும் ஒப்பனைகளை எல்லாம் கலைத்து… சாதரணமான அலங்காரத்தில் இருந்தவள்… இப்போது மணமகள் தோற்றம் கலைந்து… தோழியாக மாறி… தன் முன் அமர்ந்திருந்த காயத்திரியைப் பார்த்து கண்சிமிட்டியவளாக…
”அப்புறம் காயு… என்ன சொல்றாரு ராஜா மாமா..” என்ற ஆரம்பித்திருக்க… ஆராதனாவும் தன் தோழி செல்வியுடன் சேர்ந்து கொண்டாள்… காயத்ரி… கொஞ்சம் வெட்கமும்… சந்தோஷமும் கலந்து
“நல்லா பார்த்துகிறார்டி…” என்றவள்
”ஆனாலும் எந்த நிமிசம் என்ன நடக்குமோன்னு பயமாத்தான் இருக்கு…” என்ற போதே
செல்வி ஆராதனாவை விட்டு எழுந்து… அவளருகே சென்று ஏதோ காதில் கேட்க… காயத்ரி முகம் சிவந்தவளாக… வெட்கத்துடம் தலை குனிய…
“ஹலோ… போங்காட்டம்… என்னை மட்டும் விட்டுட்டு பேசுறீங்க… “ என்று ஆராதனா செல்வி காயத்ரி இடையே வந்து அமர்ந்தவள்…
”அடிப்பாவிங்களா கூட்டு சேர்ந்துட்டீங்களா… எனக்கு கல்யாண ஏற்பாடு நடந்தப்போ அப்போதும் கூட்டு சேர்ந்துட்டு என்னை என்னவெல்லாம் பண்ணுனீங்க… இப்போ உங்க டர்ன் எனகும் சொல்லுங்க… ”
செல்வி வேகமாக…
“இந்தப் பக்கம் சல்லிக் காசும் தேறாது… படிப்பு முடிச்ச பின்னாலதான் எல்லாம்… காயத்ரிதான் உன் தகவல் சேகரிப்புக் களஞ்சியம்… அங்கயே கேட்டுக்க” காயத்ரியை மாட்டி விட்டு செல்வி தப்பித்திருக்க
காயத்ரி இன்னும் இன்னுமே வெட்கப்பட்டிருக்க…
“அடேங்கப்பா… புதுப்பொண்ணு அநியாயத்துக்கு வெட்கப்படுதேடி… ராஜா மாமா… பாப்பாக்கு பல பாடம் சொல்லிக் கொடுத்திருப்பார் போல… “
“அப்புறம் காயும்மா… நாம எந்த பார்டர்ல இருக்கோம்…” ஆராதனா அவளை ஓட்ட ஆரம்பித்திருக்க….
”போடி…” காயத்ரி இன்னும் வெட்கப்பட்டிருக்க…
”ஏன் செல்வி… இவ இந்த வெட்கபட்றதைப் பார்த்தா பார்டர்லாம் இல்ல போல எடுத்த எடுப்பிலேயே டிஸ்டிங்ஷன் வாங்கிருப்பா போல செல்வி… பயபுள்ளைக்கு… புத்தகப் பாடத்துலதான் எந்தப் பக்கம்னு எந்த பார்டர்னு டவுட் போல…”
செல்வி இப்போது ஆராதனாவைப் போல் காயத்ரியை ஓட்டாமல் அமைதியாக சிரிக்க மட்டுமே செய்ய… அவளைக் கண்டுகொண்ட காயத்ரி இப்போது…
“ஏய் நீ என்னடி சைலண்டா சிரிக்கிற… தனா உன் ஃப்ரெண்ட் நம்ம கூடப் பேசிக்கிட்டே உன் அண்ணன் கூட டூயட் பாடப் போயிட்டா போல… மேடம் பாடப் புத்தகத்துலயே கில்லி மாதிரி… இதுல கேட்கவா வேணும்… கார்த்தி அண்ணனுக்கே பாடம் எடுப்பா… அவ கண்ணைப் பாரு… காதல் அருவி பொங்கி வழியுது…”
செல்வியும் தன் முகத்தை சிவக்க வைக்கா வண்ணம் அரும்பாடு பட்டுக் கொண்டிருக்க..
ஆராதனாவோ… செல்வியை எல்லாம் பார்க்க வில்லை… மாறாக
“அண்ணன் பொண்டாட்டியா போயிட்டாளேடி… அண்ணி ஆகிட்டாளே… அம்மாக்கு சமம்… உன் அளவுக்கு இவள ஓட்ட முடியாதே…” ஆராதனா கவலையாக சொன்னவளாக… காயத்ரியைப் பார்க்க… காயத்ரி அடிப்பாவி என்ற பார்வையை ஆராதனாவைப் பார்த்து வைக்க… அப்போது செல்வியின் குடும்ப வந்தது…
தாமரை … கதிரேசன்… நரேனும் அவர்கள் பின்னால் வந்திருக்க
“அம்மா” செல்வி எழுந்திருக்க…
“செல்விம்மா… அம்மா வீட்டுக்கு போறேண்டா…” எனும் போதே அவரின் கண்கள் கலங்கி… அடுத்த நிமிடமே கரை உடைந்திருக்க
ஆராதனா அவர்களின் குடும்பத்துக்கு தனிமை கொடுத்தவளாக… காயத்ரியுடன் வெளியேறி இருந்தாள்
---
அதன் பின் அரை மணி நேரம் சென்றிருக்க
”ஏய் செல்வி அழாதடி…” ஆராதனா செல்வியின் கைகளைப் பிடித்து ஆறுதல் சொல்ல…
“கஷ்டமா இருக்கு தனா… நான் ரொம்ப சுயநலமா யோசிச்சுட்டேனோன்னு எனக்கே என் மேல கொஞ்சம் கோபமா வருது…”
ஆராதனா அமைதியாக அவளைப் பார்த்து…. அவள் கைகளை மென்மையாக அழுத்திப்பிடித்தவள்
”என்னை மன்னிச்சுக்கோ செல்வி… எல்லாத்துக்கும் நானும் ஒரு காரணம் தான்… ஆனால் அண்ணா இப்படி பண்ணும்னு நான் எதிர்பார்க்கலை செல்வி… நான் காயத்ரி ராஜாக்காகத்தான் அவர்கிட்ட பேசினேன்... அவங்களுக்கு மேரேஜ் பண்ணி வச்சா… அண்ணாக்கு கட்சில நல்ல பேர் கிடைக்கும்னு சொன்னேன்… ஆனா அண்ணா அதுவே இப்படி பண்ணிட்டு வந்து நிக்கும்னு தெரியல… இப்படி உனக்கு ஒரு நிலைவை வரும்னு தெரிஞ்சிருந்தா… நான் சொல்லியிருக்கவே மாட்டேன்…” கடைசி வரிகளைச் சொன்ன போது
ஆராதனா செல்வியின் கண்களை இப்போது பார்க்கவில்லை.. வேறெங்கோ வெறித்திருந்தாள்…
செல்வி சட்டென்று நிமிர்ந்தாள்… தன் தோழியை அதிர்ச்சியுடன் பார்க்க
“ஆமாம் செல்வி… காவெரி அண்ணா மேரேஜ்ல கலப்பு திருமணம் பண்ணி வைக்கும் போது… காயத்ரிக்கும் ராஜாண்ணாக்கும் பண்ணி வைனு நான் தான் சொன்னேன் செல்வி… அது இப்படி பண்ணினா அதுக்கு ஒரு பேர் கிடைக்கும்னு சொன்னேன்… காயத்ரியோட அப்பா அண்ணா ஏற்கனவே இருந்த கட்சில உறுப்பினர்… பெரிய இடம்… சோ கொஞ்சம் ரிஸ்க்கான காரியம்… அதுனால இதை அண்ணா இதைப் பண்ணி வச்சா அண்ணாக்கு நல்ல எதிர்காலம் இருக்கும்னு எனக்கு தோணுச்சு… ஆனால் அண்ணன் அதுவே… உன்னையும் எப்படி சம்மதிக்க வச்சு” என்று முடித்த போதே
“எங்கள விடுடி… காயத்ரிக்கு ஒண்ணும் ஆகாதுல்ல… பயமா இருக்கு தனா… உங்க அண்ணாக்கு நல்ல பேர்னு… காயத்ரி வாழ்க்கைய பணயமாக்கலாமா?… நாளைக்கு ஏதாச்சும் ஆச்சுனா..” என்றவளை… சட்டென்று நிறுத்தியவளாக
”நல்ல நாள் அதுவுமா நெகட்டிவா பெச வேண்டாம் செல்வி… அதெல்லாம் அண்ணா பார்த்துகிரும்… ஆனால் இங்க இருந்தா அவங்களுக்கு பாதுகாப்பு இல்ல செல்வி…”
“தெரியும்…. இவர் எங்க அண்ணாகிட்ட சொல்லிருக்கார்… அண்ணா சென்னைக்கு இன்னைக்கே கூட்டிட்டு போகப் போகுதாம்… சொன்னுச்சு ஏன் தனா… இவ்வளவு ரிஸ்க் எடுக்கனும்…”
“ப்ச்ச்… நீ எடுக்கல…. அது மாதிரிதான்… உன் காதலுக்கு நீ எடுத்த ரிஸ்க் மாதிரிதான் காயத்ரியும் எடுத்திருக்க…. இங்க பயந்தா ஒண்ணும் நடக்காதுடி… காதல்னா எல்லாம் தான் அதே போல அண்ணா இப்படி எல்லாம் பண்ணினதாலதான் இன்னைக்கு கட்சி தலைவரே உங்க ரிஷப்ஷனுக்கு வந்திருந்தாரு… இன்னும் கொஞ்ச நாள்ள பாரு… அண்ணனோட லெவல்ல… அண்ணா ஜெயிக்கனும்டி… அத்தனை பேரும் என் அண்ணன் காலடில வரனும்… வருவாங்க… என் அண்ணன் யாருன்னு அவங்கள்லாம் பார்க்கனும்டி… அவ்ளோதான்… ”
சொன்ன ஆராதனாவின் முகத்தை எல்லாம் செல்வி கவனிக்கவில்லை… அவளின் எண்ணமெல்லாம் மூன்று நாள் முன்பு… அதாவது அவர்கள் திருமண நாளின் முந்தைய நாள் இரவு கார்த்திக் பேசியதில் தான் இருந்தது…
---
“ஹலோ நான் கார்த்தி… பேசுறேன்” அலைபேசியில் அவன் எண்ணைப் பார்த்த போது கூட கார்த்திகேயனாக இருக்கக் கூடும் என்று நினைக்கவில்லை செல்வி… ஆராதனாவாக இருக்கக் கூடும் என்று நினைத்துதான் செல்வியும் அலைபேசியை எடுத்தாள்..
ஆனால் அலைபேசியில் அவன் குரலைக் கேட்டபின்… அதுவும் கிட்டத்தட்ட 11 மணி நள்ளிரவில்…
“சொ… சொல்லுங்க,,, இந்த டைம்ல” செல்வி தடுமாறி இருக்க
“நீ உண்மையிலேயே என்னை லவ் பண்றியா…” வேறெதுவும் சொல்லாமல் அதிரடியாக கேட்டான் கார்த்திக்…
முதன் முதலாக அவனிடமிருந்து இப்படி ஒரு வார்த்தை…. தன்னைச் சமாளித்தபடி
“இவ்வளவு நடந்த பின்னாலயும் நீங்க என்னை… என் காதலை நம்பலையா…” செல்வியின் குரல் இறங்கியிருக்க
“அப்படியா… அப்போ நாளைக்கு நான் மூணு மணிக்கு உங்க வீட்டுக்கு முன்னால வந்து நிற்கிறேன்… வெளில வா…”
“புரியல” இந்த வார்த்தையை மட்டுமே சொன்னவளுக்கு சத்தியமாக எதுவுமே புரியவில்லைதான்..
அதேநேரம் ஏன் எதற்காகவென்றும் திருப்பிக் கேட்க முடியவில்லை…. அவளுக்கு யோசிக்கும் உணர்வே இல்லாதது போல் இருந்த நொடி… இருந்தும் அடுத்த நொடியே தன் கலக்கத்தை எல்லாம் மறைத்தவளாக…
“நான் மூணு மணிக்கு வீட்டை விட்டு வெளிய வந்தால் என்னை… என் காதலை நம்புவீங்களா என்ன.. கார்த்தி மாமா….” என்று நக்கலாக ஆரம்பித்திருந்தாள்…
”வீட்டை விட்டு வெளிய வர்றது மட்டுமில்லை.. நாளைக்கு உனக்கு எனக்கும் மேரேஜ்…”
“என்னது…” செல்வி சட்டென்று படுக்கையில் இருந்து வாறி எழுந்து அமர…
இவனும் அவள் பதட்டத்தை உள்வாங்கி இருந்தான் தான்… இருந்தும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல்
“ஹ்ம்ம்… நமக்கு நாளைக்கு மேரேஜ்னு சொல்றேன்… அப்புறம் இதையும் சொல்லிக்கிறேன்… நாளைக்கு இல்லைனா என்னைக்குமே உனக்கும் எனக்கும் அந்த மாதிரி ஒரு நாள் வரும்னு தோணல… கட்டாயப்படுத்தல… முடிவு பண்ணிக்கோ… மூணு மணிக்கு வெயிட் பண்றேன்… ஏதோ லவ்… உயிர்னு வசனம்லாம் பேசுனதை செயல்லயும் காட்டுவேன்னு நினைக்கிறேன்… இன்னொரு முக்கியமான விசயம்… எங்க வீட்ல யாருக்கும் தெரியாது… உங்க வீட்ல சொல்லிட்டு வருவியோ… சொல்லாம வருவியோ… அது உன்னோட இஷ்டம்….”
“ஏன்… இப்படி பண்றீங்க… எதுக்கு இவ்ளோ அவசரம்… நம்ம ரெண்டு பேர் வீட்லயும் எல்லோரும் சம்மதம்னு தானே சொன்னாங்க… சும்மா என்னை மிரட்றீங்களா… நான் வருவேனா வர மாட்டேனான்னு செக் பண்றீங்களா… இல்லை இப்படி எல்லாம் பண்ணினா நானா உங்கள விட்டு போயிருவேன்னு நினைக்கறீங்களா” செல்வி கேள்வி மேல் கேள்வியாகக் கேட்க கேட்க…
“ஏய்… உன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல நேரம் இல்லை.. நாளைக்கு 3 மணி… வெயிட் பண்ணிட்டு இருப்பேன்… நீ வந்தாலும் வரலேன்னாலும் எனக்கு ஒரு பிரச்சனையுமில்லை… முடிவு உன் கைல… ஆனால் நாளைக்கு மேரேஜ் இல்லைனா… எப்போதுமே உனக்கும் எனக்கும் எப்போதுமே மேரேஜ் இல்ல… இது என் அம்மா மேல சத்தியம்” சொன்னவன் வைத்தும் விட்டான்…
----
செல்வி அதன் பின் எத்தனையோ முறை முயன்றும் அவன் மீண்டும் எடுக்கவில்லை… ஒரு வேளை என்னை என் காதலை டெஸ்ட் பண்றானா…நான் வர மாட்டேன்னு நினைக்கிறானா… செல்வியின் மனம் குழப்பத்திலேயே இருக்க… அதே நேரம் வீட்டை விட்டு வெளியே வரவும் தயங்கவில்லை… வெளியே வருவதிலும் அவளுக்கு சிரமம் இருந்திருக்கவில்லை…
வெளியே வந்தவளுக்கு கார்த்திகேயன் மட்டுமே அவள் மனதில் இருந்தான்… இன்னொரு அவமானம் அவனுக்கு வர அவள் காரணமாக இருக்கக் கூடாது… இந்த எண்ணம் மட்டுமே அவளின் அனைத்து செயலுக்கும் காரணமாக இருந்தது… கார்த்திகேயனை மட்டுமே தன் அனைத்துமாக அந்த நொடியில் இருந்து எண்ண ஆரம்பித்தவள்… தன் குடும்பத்தை விட்டு வெளியே வரவும் துணிந்திருந்தாள்
சாதரணமாக சல்வார் அணிந்து வெளியே வந்தவள்… உண்மையிலேயே கார்த்திக் வந்திருப்பானா… இல்லை விளையாடுகிறானா… என்று யோசித்தபடியே தெருமுனைக்கு வந்திருக்க…. கார்த்திக் தன் காருடன் நின்றிருக்க..
செல்விக்கு இப்போது தயக்கமெல்லாம் இல்லை… இருந்தபோதும் தன் குடும்பத்தைப் பற்றி… அவன் குடும்பத்தைப் பற்றி… மனதில் அச்சம் எழத்தான் செய்தது மனதின் இன்னொரு ஒருபுறம்
அதே நேரம் அவனே எல்லாம் என்று முடிவெடுத்து விட்டவளுக்கு இப்போது வேறு எந்தக் கவலையுமில்லை… தனக்கு ஒரு அவமானத்தை அவன் தேடித் தர மாட்டான் என்று நிச்சயமாக நம்பினாள் செல்வி...
தன்னருகில் வந்து நின்றவளைப் பார்த்த கார்த்திக்கின் பார்வையில் என்ன இருந்தது அவளுக்கே தெரியவில்லை…
“வர மாட்டேன்னு நினச்சீங்களா… கார்த்தி மாமா” மனதில் பல கலக்கங்கள்… இருந்தும் அவனைப் பார்த்து குறும்பாகக் கேட்டவள்…
“உங்க மேல காதல் மட்டும் மில்ல… எனக்கு ஒரு அவமானத்தை… கஷ்டத்தை நீங்க கொடுக்க மாட்டீங்கன்னும் எனக்கு நம்பிக்கை இருக்கு” செல்வி சொல்ல..
கார்த்திக் எங்கோ பார்வையைப் பார்த்தவன்… அடுத்த நொடியே…
”நீ ரெண்டு வருசம் காத்திருந்தால் கூட உன்னை மேரேஜ் பண்ணக்கூடாதுன்ற என்னோட முடிவு மாறி இருக்காது… ஏன்னா நான் யாருக்காகவும் என் மனசை மாத்தியிருக்க மாட்டேன்… ஆனா இந்த நிமிசம்… எனக்கு உன்னோட உதவி தேவைப்படுது… உன்னோடான திருமணம் என்னோட அரசியல் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு பெரிய அஸ்திவாரம்… ஏதோ ஒரு பொண்ணை மேரேஜ் பண்றதுக்கு… என்னை விரும்பின பொண்ணை மேரேஜ் பண்ணிக்கலாமே… அவ்ளோதான்… மத்தபடி காதல்லாம் இல்லை” என்றவன் சற்று நேரத்தில் நடக்கப் போகும் திருமண விபரத்தைச் சொல்ல…
செல்வி மௌனமாகவே இருந்தவள்… பின் அவனைப் பார்த்து….
“ஆனால் பெரியவங்களோட சம்மதத்தோட பண்ணக் கூடாதுனு சொன்னாங்களா…”
“நான் உன்னைச் சொல்ல வேண்டாம்னு சொல்லலையே… எங்க வீட்ல சொன்னா அம்மாவும் அப்பாவும் கண்டிப்பா இப்படி ஒரு அவசர கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டார்… அதாவது இப்படி கூட்டத்தோட கூட்டமா… “
அதற்கு மேல் செல்வியும் அவனிடம் வார்த்தையாடவில்லை…
“நீங்க எப்படியோ… எனக்கு நீங்கதான் எல்லாம்… அரசியல் ஆதயத்துக்கு என்னோட காதல் தேவைனா எடுத்துக்கங்க… என்னோட காதல உங்களுக்குத் தராமல் வேற யாருக்கு தரப் போறேன்… என்னோட… என் காதலோட உரிமையாளனே நீங்கதானே… காதல்லாம் இல்லைனு நீங்க சொன்னாலும்… இல்ல உங்க காதலுக்கு நீங்க எப்படி பேர் வச்சுகிட்டாலும் எனக்கு ஒரு பிரச்சனையுமில்லை… அது ஏன்னு தெரியல… உங்கள ஏன் எனக்குப் பிடிச்சதுன்னு” என்றபடியே… என்ன நினைத்தாளோ
“ஐ லவ் யூ கார்த்தி மாமா…”
என்றவள்…
“இதுக்கு எனக்கு எப்போ பதில் கிடைக்கும்…. அட்லீஸ்ட் நான் சாகுறதுக்குள்ள” கண் சிமிட்டிக் கேட்டவளின் கண்களில் இலேசாக கண்ணீர் வந்திருக்க…
கார்த்திக்கின் அவள் சொன்ன அதே வேகத்தில் அவளை அறைவதற்காக அவள் கன்னத்தை நோக்கிச் சென்றிருக்க… அதே நேரம் அதைச் செய்ய முடியாமல் அதே வேகத்தில் நின்றும் இருக்க… சட்டென்று அவன் கையைப் பிடித்தவளாக
“இது போதும் மாமா… இந்தப் பாசத்தை… இந்த காதலை… வாய் வார்த்தைல சொல்வீங்கன்னு…”
இப்போது கார்த்திக்கோ காரினுள் அமர்ந்திருந்தான் அவள் வார்த்தைகளை கேட்காதது போலவே… அதே நேரம் தன் அருகே இருந்த இருக்கையின் கதவையும் திறந்து விட்டிருக்க…
“ஹ்ம்ம்… பரவாயில்லையே நல்ல இம்ப்ரூவ்மெண்ட்… “ என்று அவள் அவனைப் பார்க்க… அவனோ…. பின் சீட்டில் இருந்து எதையோ தேடிக் கொண்டிருந்தவன்… பின் அவளிடம் ஒரு கவரை நீட்டியவனாக
“புடவை… இருக்கு… ஹோட்டல்ல ரூம் புக் பண்ணிருக்கேன்… அங்க நாம ரெண்டு பேரும் ட்ரெஸ் மாத்திட்டு மண்டபத்துக்கு கிளம்புறோம்… உன் ஃப்ரெண்ட் காயத்ரியும் ராஜாவும் கூட நம்ம கூடத்தான் வர்றாங்க….”
”ப்ச்ச்… அட்லீஸ்ட் எனக்கு பிடிச்ச கலர் எதுனாலும் கேட்ருக்கலாம்ல…” புடவையை புரட்டி புரட்டிப் பார்த்தபடி செல்வி அவனைப் பார்க்க
“ஏண்டி… நீ உண்மையிலேயே கவலைப்படலையா… இல்ல கவலைப்படாத மாதிரி நடிக்கிறியா…” கார்த்திக் முதன் முதலாக அவளுக்காக அவள் மனதுக்காக கோபப்பட்டிருந்தான்…
“மனசுக்கு பிடிச்சவனை மேரேஜ் பண்ணும் போது… மத்ததெல்லாம் எதுக்கு… சரி விடுங்க…” என்றவள்… வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கி இருக்க… அவனோ… அவளின் புறம் பார்வை செல்வதை தவிர்க்க முடியாமலும் அதே நேரம் சாலையில் கவனம் வைக்க முடியாமலும் தடுமாற ஆரம்பித்திருந்தான்….
இப்படியாக சென்று கொண்டிருந்தவன்… ஒரு கட்டத்தில் அங்கு நிலவிய அமைதியைத் தாங்க முடியாமல்… முக்கியமாக செல்வியின் அமைதியைத் தாங்க முடியாமல்
“ஏய் செல்வி… பாட்டு போட்டுக்க…” என்றவனை இவளோ முறைக்க… அடுத்து ஏதும் பேசாமல் கார்த்திக் தன் பார்வையைச் சாலையில் வைத்தான்…
---
அதன் பிறகு… அதிகாலை பிரம்ம முகூர்த்த திருமணம்… திருமணம் முடிந்த கையோடு இரு வீட்டிற்கும் தெரியப்படுத்த..
செல்வியின் பெற்றோர் மட்டுமே.. ஊரில் இருந்தனர்…. கார்த்திக் குடும்பம் மொத்தமும் திருச்சியில் இருக்க… பதறி வந்திருந்தனர்… அதே போல நரேனும்…
மீண்டும் ஒருமுறை கார்த்திக் தெருவில் நிறுத்தப்பட்டிருக்க… இந்த முறை செல்வி அவனருகே… அவன் கைகளைப் பிடித்தபடி…
---
ராஜசேகருக்குத்தான் மனம் தாளவில்லை… ஏன் இந்த அவசர கோலம்… சொல்லி இருந்தால் தானே ஏற்பாடு செய்திருப்பேனே… பிரமாண்டமாக நடத்தியிருப்பேனே.. இப்படி ஒரு அவமானத்தை கொண்டு வந்து நிறுத்தி விட்டானே… ”
“நம்ம பையன் பண்ணது தவறுதான்… ஆனால் செல்வி என்ன பண்ணினா…. அவங்க குடும்பம் என்ன பண்ணினாங்க… நாமதான் அவங்க குடும்ப கவுரவத்தை திருப்பிக் கொடுக்கனும்… உள்ள கூப்பிடுங்க முதல்ல…” மேகலா கணவனிடம் கெஞ்சிக் கொண்டிருக்க…
ஆம்… அந்தப் பெண்ணுக்கும்… அந்தக் பெண்ணுடைய குடும்பத்த்துக்கும்… ஏற்பட்ட அவமானத்தை எப்படி போக்குவது…
மொத்த குடும்பமும் குழம்பிப் போயிருக்க…
“அப்பா… அண்ணா பண்ணினது தப்புதான்.. அதுனால அப்படியே விட்ற முடியுமா… நாம ஒரு பெரிய ரிஷப்ஷன் வச்சு சரி பண்ணிறலாம்பா… அம்மா சொல்லுங்கம்மா… அப்பத்தா சொல்லுங்கப்பத்தா… அப்பாதானே செல்விய மருமகள்னு மனப்பூர்வமா ஏத்துகிட்டாங்க… அவளுக்காக யாரும் பார்க்க மாட்டீங்களா…”
ஒருவருமே ஆராதனாவின் தவிப்புக்கு பதில் சொல்லாமல் இருக்க..
”நான் ஆரத்தி கரைக்கப் போறேன்…”
ஆராதனா ஆரம்பித்து வைக்க… கடைசியில் ஆராதனா சொன்ன வார்த்தைகளே… அதாவது கார்த்திக்-செல்வி ரிஷப்ஷன் என்பதும் முடிவாகவும் மாறி இருக்க… எப்படியோ ஒரு வழியாக கார்த்திக்-செல்வி திருமணப் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்திருந்தது…
----
”ஏய் செல்வி… என்னடி யோசிச்சுட்டு இருக்க…” ஆராதனாதான் உலுக்கினாள் செல்வியை…
“நான் அம்மா அப்பா அண்ணனை நினைக்கவே இல்லன்னு நினைக்கிறியா தனா… எனக்குத் தெரியும் என் அம்மா அப்பா அண்ணன் எல்லோருக்குமே என் சந்தோசம் முக்கியம்னாலும்… மனசுக்குள்ள ஒரு வருத்தம் இருக்கும்தான்… ஆனால் அதுவும் ஒரு நாள் போயிரும் பாரு… உங்க அண்ணன நான் நம்பி வந்தது ஒரு ப்ரசண்ட் கூட தவறான முடிவு இல்லைனு”
வேகமாகக் தலை ஆட்டினாள் ஆராதனா கண் கலங்கியவளாக
“செல்வி… மத்தவங்களுக்கு ஏன் என் அண்ணனுக்கு கூட நீ சாதரணமானவளா இருக்கலாம்… ஆனால் எனக்கு எங்க குடும்பத்தோட குல விளக்கு செல்வி… இதுவும் ஒரு நாள் எல்லோரும் புரிஞ்சுக்குவாங்க… நீ நல்லா இருக்கனும்டி… நீ நல்லா இருப்படி…” தன் தோழியைக் கட்டிக் கொண்டவள்…
“சரி… அம்மா என்னை மாடிக்குப் போகச் சொன்னாங்க…” என்றபடி… எழுந்தவள்… கதவு வரைச் சென்றவள்… பின் மீண்டும் திரும்பி வந்தவளாக
“இதை எப்படி பேசுறதுனும் தெரியல… பேசுறது சரியான்னும் தெரியல… அண்ணியா உன்கிட்ட பேசனுமா… இல்ல ஃப்ரெண்டா உன் கிட்ட பேசனுமான்னு கூடத் தெரியல” தயங்கியவள்…
“உனக்கு… உன் மனசுக்கு… உன் காதலுக்குனு ஒரு மரியாதை இருக்கு…. அதுக்கான உண்மையான அர்த்தம் கிடைக்காதவரை… உணர்ச்சிகளுக்கு அடிமை ஆகிறாத… என் அண்ணனையும் ஆக்கிறாத” சொன்ன ஆராதனா சட்டென்று வெளியேறினாள் அவள் முகத்தைப் பார்க்காமலேயே…
அதே வேகத்தில் மாடியறைக்குச் சென்றவளாக தனிமையில் மௌனமாகக் கதறி அழ ஆரம்பித்திருந்தாள் ஆராதனா…
தன் அண்ணனின் வாழ்க்கைக்காக தன் தோழியின் வாழ்க்கையை பணயம் வைத்த தன்னையே திட்டியும் கொண்டாள்…. தன் அண்ணனுக்காக தன் வாழ்க்கையை தானே திசைமாற்றிய போதெல்லாம் தடுமாறாதாவள்… தன் தோழிக்காக அழுது தீர்த்திருந்தாள்….
அழுகையின் முடிவில் செல்வியும் தன் அண்ணனும் நன்றாக இருக்க வேண்டும்… செல்வி மட்டுமல்ல… காயத்ரியும் ராஜாவும் அவர்கள் வாழ்க்கையில் எந்த இரு துன்பமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டவள்… அதேநேரம் அதற்கு மாறான வேண்டுதலையும் வேறு இருவருக்காக வழக்கம் போல வைத்தாள்…
----
அங்கு ஆராதனா அப்படி இருக்க… இங்கு கார்த்திக்கின் அறையில் கார்த்திக்கின் அறையை நாலா புறமும் சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள் செல்வி…
“ஏய்… ஏன் இந்த ரூமை நீ பார்த்ததே இல்லையா… என்னமோ இன்னைக்குத்தான் முதன் முதல்ல வந்து… புதுசா பார்க்கிறவ மாதிரி சுத்தி சுத்தி பார்த்துட்டு இருக்க…” ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவனாக கார்த்திக் செல்வியைப் பார்த்துக் கேட்க
“உங்களப் பார்த்தா திட்டுவீங்க… அதான் அட்லீஸ்ட் இந்த ரூமையாவது பார்க்கலாம்னு பார்த்தேன்… வேற வழி இல்லையே… ஆனால் எனக்கு ஒரு டவுட் மாமா” என்றவளை அவன் முறைக்க
“பார்த்தீங்களா… அதான் உங்க வழிக்கே வராம நான் உண்டு… என் பார்வை உலான்னு இருந்தேன்… உங்களப் பார்த்தாலும் திட்றீங்க… உங்க ரூமைப் பார்த்தாலும் திட்றீங்க… ரொம்பத்தான் பண்றீங்க மாமா நீங்க… ”
அதற்கும் கார்த்திக் முறைப்பையே பதிலாகக் கொடுக்க…
“அதெல்லா விடுங்க… இப்போ நான் எங்க படுக்கிறது… என்ன தூங்கலாமா… இல்ல என் காதலை நிருபிக்கிறதுக்கு இன்னும் ஏதாவது பாக்கி இருக்கா…” செல்வி அவனருகே வந்து அவனை ஒட்டி அமர்ந்திருக்க
அவனோ பதறி வேகமாக எழுந்து விட
“ஓஓஓஓ ஓ… இதுதான் பஞ்சும் நெருப்பு அலர்ட்டா…. ஒகே ஒகே… அப்போ நான் தூங்குறேன் பை…” என்றபடி செல்வி படுக்கப் போக…
“ஏய்… அது என்னோட பெட்… நீ கீழ படு…”
“ஏன் ஏன்… இனி என்னோடதும் தான்… ‘ என்றபடியே…
”சரி சரி முறைக்காதீங்க… நானே கீழ படுக்கிறேன்… உங்க பெட்டை நீங்களே வச்சுக்கங்க… ஆனா ஒரே ஒரு சின்ன ஸ்மாலே ஸ்மால் கண்டிஷன் கார்த்தி மாமா….”
“என்ன” கார்த்திக்… இப்போது பொறுமையாகவே கேட்டான்
“யார் மேல படுத்தாலும்… ” இப்போது கார்த்திக் அவளை உக்கிரமாக முறைத்திருக்க
”வை திஸ் கொலை வெறி மாமா… நோ டபுள் மீனிங்… நான் என்ன சொல்ல வந்தேன்னா… ஐ மீன் இந்த பெட் மேல யார் படுத்தாலும்… ”
“என்ன பார்க்கறீங்க… கார்த்திகேயனின் சரி பாதி இந்த தமிழ்செல்வி தான்.. சோ கார்த்திக்கு என்னவெல்லாம் சொந்தமோ… அது எல்லாமே இந்த தமிழ்ச்செல்விக்கும் சொந்தம்…”
“நீட்டி முழங்காம… கண்டிஷனைச் என்ன… அதை மட்டும் சொல்லித் தொலடி…” என்ற போதே… அவன் கையில் படுக்கை விரிப்பைத் திணித்தவள்..
“யார் சொகுசா மேல படுக்கிறாங்களோ… அவங்க கீழ படுக்கிறவங்களுக்கு படுக்கை விரிக்கனும்… கண்டிஷன் அப்ளிக்கபிள் பார் ரெண்டு பேருக்குமே…”
கார்த்திக் இப்போது…. அவளை மேலும் கீழுமாக நக்கலாகப் பார்த்தவன்…
”ஹ்ம்ம்… என்னது நான் உனக்கு விரிக்கனுமா… அப்படி ஒரு சொகுசு எனக்குத் தேவையேயில்ல… அதாவது நீயே மேல படு… நானே விரிச்சு நானே கீழே படுத்துக்கிறேன்” என்றபடி… படுக்கையை விரிக்கப் போக
வேக வேகமாக அவனிடமிருந்து படுக்கை விரிப்பை வாங்கியவள்…
”ஹலோ மாமா… நியாயம்னா நியாயம் தான்… “ என்றபடி வேக வேகமாக படுக்கை விரிப்பை அவனிடமிருந்து விரித்தவள்…
“ஹ்ம்ம்… இப்போ படுங்க… ” அவனைக் கீழே படுக்கச் சொன்னவள்… கட்டிலில் படுத்தும் விட்டாள்…
கார்த்திக்கு என்ன சொல்வதென்றே என்ன செய்வதென்றே தெரியாத நிலை…
“ஆடு… எல்லாம் என் நேரம்… “ என்றவனுக்கு வேறு வழி… கீழே படுத்தும் இருக்க…
”மாமா.. கார்த்தி மாமா…” செல்வி அழைத்திருக்க
“ஏய்… “ அவள் புறம் திரும்பாமலேயே கடுப்பாகச் சொல்ல
”ஒரே ஒரு வார்த்தை… டெய்லி தூங்குறதுக்கு முன்னாடி நான் சொல்லிட்டுத்தான் தூங்குவேன்… நீங்க கேட்டுத்தான் ஆகனும்…”
அவள் புறம் திரும்பிப் படுத்தவன்…
“குட்நைட்… இதானே… நானே சொல்லிட்டேன்… நீ ஒண்ணும் கழட்ட வேண்டாம்…” என்ற போதே
”ஹி ஹி… நானும் கழட்ட ரெடியா இல்ல மாமா…”
தான் சொன்ன வார்த்தைகளை நினைத்து தன்னையே தலையலடித்துக் கொண்டவனாக அவளை முறைக்க
”சரி டென்ஷன் ஆகாதீங்க… அதை விடுங்க… அதுக்கு முன்னாடி என்ன சொன்னீங்க… ஹான் குட்நைட்… ஆனால் அது யாருக்கு வேணும்…” செல்வி மீண்டும் எழுந்து அமர…
“அப்போ என்னடி வேணும்…“ இவனும் பதறாத குறையாக எழுந்து அமர்ந்தவனாக
“எல்லாம் பேசிட்டுத்தானே தாலி கட்டுனேன்… படிச்சு முடிக்கிற வரை… நீ உன் பேருக்கேத்த மாதிரி செல்வி தான்… ” என்று விளக்கம் வேறு கொடுக்க…
“அதெல்லாம் ஞாபகம் இருக்கு மாமா… இது வேற… “
“என்னது” கார்த்திக்கும் இழுக்க
“ஐ லவ் யூ”
கார்த்திக் முறைக்க…
“டெய்லி நான் சொல்வேன்… உங்க ரிப்ளை நீங்க எப்போ வேணும்னாலும் கொடுக்கலாம்… “ என்றவளின் குறும்பு கொப்பளித்த குரல்…
“எவ்ளோ நாள் வேணும்னாலும் காத்திருக்கேன்… ஆனால் எனக்கு மனப்பூர்வமான பதில் மட்டும் தான் வரனும்” அவளின் குரலில் மெல்ல நடுக்கம் இருந்ததோ….
கார்த்திக் பதில் சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருக்க…
“கார்த்தி மாமா…” செல்வி மீண்டும் அழைக்க…
“இப்போ என்னதாண்டி உன் பிரச்சனை…” கார்த்திக்கின் குரல் சராணகதி தொணி வந்திருக்க
“குட்நைட்”
கார்த்திக் யோசனைப் பாவத்தில் அவளைப் பார்க்க…
“இந்த ஒரு நைட்டே இப்படி இருக்கே… வாழ்நாள் முழுவதும் எப்படி இவளைச் சமாளிக்கப் போறோமேனுதானே யோசிக்கிறீங்க… இனி யோசிச்சு ஒரு பிரயோஜனமும் இல்லை… கதம் கதம்…. படுங்க…” என்றபடி படுத்தபோதே
”ஆனால் நீ உஷார்டி… எப்படியோ… என்னைக் கீழ படுக்க வச்சுட்டேல்ல… “ என்றபடி படுத்தவன்…
“என் சாபமெல்லாம் உன்னைச் சும்மா விடாது… கீழதாண்டி விழுவ…” கார்த்திக் மிகப்பெரிய சாபமாக விட…
“ஐயோ மாமா… சாபம் பலிச்சிருச்சுனா என்ன பண்றது மாமா… நீங்க வேணும்னா இப்படி பக்கத்தில படுங்க… நான் விழுந்தா கூட உங்க மேல…” எனும் போதே… கார்த்திக் முறைப்பில்…
“ஓகே… ஒகே… லைட் ஆஃப் பண்ணிட்டு வந்துறேன்… மேல படுத்தா இதுவும் பண்ணனும்… ஆமா ஸ்விட்ச் எங்க இருக்கு மாமா… ஹான் இங்க இருக்கு... ஓகே ஆஃப் பண்ணிட்டேன்…”
”ஐயோ இருட்டா இருக்கே….”
“கார்த்தி மாமா… நீங்க எங்க இருக்கீங்க… நான் உங்க மேல விழுந்திறப் போறேன் போல… மா…மா… “ அவளின் போலியான பயக் குரலே சொல்லியது… அவனை வம்பிழுக்கிறாள் என்று…
”இதை வச்சு என்ன ட்ராமா பண்ணுவாளோ…. கார்த்திக் உஷார்டா….” என்றபடி… வேகமாக தன் அலைபேசியை கார்த்தில் ஒளிர்பிக்க…
“தேங்க்ஸ் மாமா…. ஃபர்ஸ்ட் நைட்ல... அதான் ஒண்ணும் தெரியல... நாளைலருந்து கில்லி மாதிரி...” என்ற போதே
அந்த அலைபேசியி ஒளியினால் அவனின் முகம் சிவந்ததா… கோபத்திலா,… ஆராய்ச்சி எல்லாம் செய்யாமல் அடங்கியவள்…
“ஓகே மாமா… குட் நைட் மாமா… லவ்.. யூ கார்த்தி மாமா….”
ஆயிரம் ‘மாமா’ போட்டவளாக கட்டிலினருகே சென்றவள்… அடுத்த நிமிடமே கண்களையும் மூடியிருக்க…
கார்த்திக்கோ உறங்காமல்… பின்னங்கழுத்தில் கைகளைக் கோர்த்தபடி விட்டத்தைப் பார்த்து விழித்திருந்தான்…
-----------
Manapoorvama oru naal solvan selvi karthi romba nalla piyanakum❤️❤️
Karthi selvi life padikra engaluku jolly ah pogum pola
Naren lv Pooja avaluku hus ila nu trinja naren enna seivan
Aaru baby Yoda venduthal anda randu peruku yaar athu
Than annanukaga ellathaum maathikita lv um serthu pola