ஹாய் ஃப்ரெண்ட்ஸ்....
அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன்....
ஹேப்பி ரீடிங்...
சென்னை மக்கள் எல்லாம் எப்படி இருக்கீங்க... எல்லோரும் சேஃப் தானே... Hope all are safe....
நன்றி
பிரவீணா
அத்தியாயம் 15:
நள்ளிரவில் அந்த இரவில் இருளைக் கிழித்துக் கொண்டு சென்ற அந்த வாகனத்தின் வேகத்தை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்குத்தான் தெரியாது… அதை ஓட்டி வந்து கொண்டிருந்தவனின் கோபம்… ஆனால் உள்ளே அமர்ந்திருந்த செல்வியும் நரேனும் உணர்வார்களே…
இத்தனைக்கும் பிறகும் அமைதியாக தன் அருகில் அமர்ந்திருந்த நரேனை திரும்பி முறைத்த கார்த்திக்…
“நான் இவளைப் பற்றி இவ்வளவு சொல்லியும்… எப்டிடா இப்படி அமைதியா வர்ற…. இதே இடத்தில என் தங்கச்சி இருந்திருந்தான்னு வச்சுக்கோ… இந்தக் கார் முன் சக்கரத்துக்கு ரத்த பூஜைதான் நடந்திருக்கும்….” அவனின் அந்த வார்த்தைகளிலேயே அவனின் கோபம் எந்த அளவுக்கு உச்சகட்டத்தில் இருக்கும் என்று நரேனுக்குப் புரிய
“இப்போ என்னை என்ன பண்ணச் சொல்ற….” நரேன் நண்பனிடம் அமைதியான குரலில் கேட்டாலும்…. பின்னால் திரும்பி தங்கையிடம் முறைப்பான பார்வையும் பார்த்து வைத்தான்தான் நரேன்…
“ஏண்டா நீ அவ அண்னன் தானே…. விசயத்ததை சொன்னா… இதுதான் உன் ரியாக்ஷன்டா….” இப்போது கார்த்திக்கின் குரலில் கோபம் இல்லை… எரிச்சல் மட்டுமே மிச்சம் இருக்க
“இப்போ நான் என்ன அட்வைஸ் பண்ணினாலும்… அவ மறுபடியும் மறுபடியும் அவ பிடிச்ச பிடிலதான் இருப்பா… உன்னை லவ் பண்றேன்னு தான் பேசப் போறா…விட்டுப் பிடிப்போம்….” நரேன் பேசும் போதே…
“நான் எப்போதுமே என்னோட பிடிலதான் இருப்பேன்… மாறவே மாட்டேன்… அது இந்த ஜென்மத்துல நடக்கவே நடக்காது” செல்வி வேகமாகச் சொல்ல
”பார்த்தியா…. பார்த்தியா… நான் யார்கிட்டயும் சொல்லாம இவளை விட்டேன்ல… அதுக்குத்தான் இப்போ நான் தண்டனை அனுபவிக்கிறேன்…. இதுல நீயும் விட்டுப் பிடிக்கப் போறியா…. இவளை..” கார்த்திக் செல்வியிடம் பார்த்து கடுப்பும் கோபமும் கலந்து பல்லைக் கடிக்க
நரேன் மனம் வலித்தது… தங்கைக்காக… நண்பன் என்றாலும் அவன் திட்டுவது தன் தங்கையை அல்லவா… ஒருநாள் கூட அவளை அவர்கள் வீட்டில் இம்மென்று சொன்னது கிடையாது…
“நரேனுக்கு நன்றாகத் தெரியும்… கார்த்திக் ஒருபோதும் செல்வியை ஏற்றுக் கொள்ள மாட்டான் என்று… கார்த்திக்கின் அனைத்து குணநலன்களுமே இவன் அறிவான்…”
எந்த அளவுக்கு நண்பனைப் பற்றி அவனுக்குத் தெரியுமோ அதே அளவு நம்பிக்கை இருந்தது தங்கையின் மனதை மாற்றி விடலாம் என்று..
முள் மேல் விழுந்த சேலை போல… தங்கையின் வாழ்க்கையையும்…. அவள் மனதையும் மீட்டெடுக்க வேண்டும்… செல்விக்கு இந்த வயதில் இது தேவையில்லாத ஒன்றுதான்… அதற்காக கார்த்திக் போல எல்லாம் ராட்சசனாகவெல்லாம் மாற முடியாது… அதே போல் அவன் தன் தங்கையைத் திட்டுவதையும் அவனால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை
”டேய் நான் பார்த்துக்கிறேன்…. என் தங்கச்சி பற்றி இனி நீ கவலைப்படாத அவ உன் வழியில் இனி வரமாட்டா…” என்று முடிக்க… அதற்கு பதிலாக செல்வி ஏதோ பேசப் போக…. நரேன் ஒரு முறை முறைத்தான் தன் தங்கையை…. அவ்வளவுதான் செல்வி சட்டென்று அடங்கினாள்… அவனுக்கு கோபம் அவ்வளவு சீக்கிரம் வராதே… கார்த்திக்கிடம்… அவன் கோபத்தின் முன் பதிலுக்கு பதில் வாயாடியவளுக்கு தன் அண்ணனிடம் பதில் பேச வரவில்லை…
நரேன் கார்த்திக் போல அடிக்கடி கோபப்படுபவன் அல்ல… அவ்வளவு சுலபமாக யாரிடமும் கோபப்படவும் மாட்டான்…. அடி தடியிலும் இறங்க மாட்டான்…. அப்படிப்பட்டவன் ஒருவன் மீது கோபப்பட்டாலோ…. இல்லை விரோதியாகப் பார்த்தாலோ அதில் கண்டிப்பாக ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும்… நரேனுக்கும் கோபம் வரும்… அவனுக்கும் ஒருவனை பிடிக்காமல் இருக்கிறது என்றால் அது செழியன் மட்டுமே
செழியனிடம் பேசாமல் இருப்பதற்கும்… அவனைப் பார்க்கும் போதெல்லாம் விரோதியாகப் பார்ப்பத்தற்கும் பின்னால் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும்…
செழியனும் அது என்னவென்று சொன்னதில்லை… இவனும் சொன்னதில்லை…. ஆக நரேனின் கோபப்பார்வையில் தானாகவே அடங்கினாள்…
ஆக கார்த்திக்கின் கோபத்தை…. ஆக்ரோஷத்தை எல்லாம் இயல்பாக அலட்சியப்படுத்துபள்….. தன் சகோதரனின் அமைதியான அழுத்தமான் கோ முறைப்பில் அடங்கினாள் செல்வி… மனதில் வலியுடன் கண்களை மூடியவளுக்குள் சற்று முன் நடந்த சம்பவங்கள் வந்து நின்றன….
---
கார்த்திக் கேக் இருந்த அட்டைப் பெட்டியை கேக்கோடு வெளியே வீசி எறிந்திருக்க
”கேக்கை தூக்கி வீசிட்டா…. என் மனசுல இருக்கிற உங்கள தூக்கி எறிஞ்சிட்டோம்னு நினைப்பா…” செல்வியும் கோபத்தோடு கேட்க…. வேகமாக ஓட்டுநர் இருக்கையில் இருந்து இறங்கி வந்தவன்…. பின்னால் அவள் அருகில் போய் அமர்ந்திருந்தான்… அதே வேகத்தில் வாகனத்தின் கதவையும் சாத்தி இருக்க… செல்வியோ கண்களில் அச்சத்தைக் கொண்டு வந்திருந்தாலும்…. சிலை போல் அமர்ந்திருந்தாள்…
“ஏய்…. இன்னையோட நீ நடத்துற கூத்துக்கெல்லாம் முடிவு கட்றேன்…. உன் அண்ணன் வரட்டும் அவன்கிட்டயும் இருக்கு கச்சேரி…” என்ற போதே செல்வி இதழை அலட்சியமாக சுழிக்க….
அவளின் அலட்சிய பாவத்தில் கார்த்திக்கோ தீப்பிழம்பானான் இன்னும் கோபத்தில்….
“ஆமா… என்னைப் பற்றி என்ன தெரியும்னு… இந்த லூசுத்தனமான வேலைலாம் பண்ற…”
செல்வி அமைதியாக இருக்க
“ஏய் கேட்கிறேன்ல சொல்லு…. என்ன தெரியும் உனக்கு…. “
“சரி அதை விடு…. என்ன தைரியத்துல என்கிட்ட லவ் யூன்னு வந்து நிற்கிற… “
“என்ன தைரியம் வேனும்…. எனக்குப் பிடிச்சிருக்கு…. சொல்லத் தோணுச்சு…” செல்வியும் அவனிடம் நிமிர்ந்த பார்வையோடு கேட்டுக் கொண்டிருக்கும் போதே…
ஆள்காட்டி விரல் காட்டி எச்சரித்து அவளை அவளின் பேச்சை நிறுத்தியவன்….
”நாங்க உங்க கூடலாம் சரிசமமாத்தான் பழகுறோம்… அதுனால…. கோபுரமும் குப்பையும் சரிசமமா …” என்றவன்… என்ன நினைத்தானோ தன் வார்த்தைகளைத் தொடாமல்
“எங்க அந்தஸ்து…. நாங்க யார் இதெல்லாம் உனக்குத் தெரியுமா தெரியாதா…. படிச்சிருக்கீங்க… நாகரீகம் அது இதுன்னு என்ன வந்தாலும் எங்க கால் தூசிக்கு பக்கத்துல கூட நீங்க வர மாட்டீங்க….” என்றவனை அற்பப் பார்வை பார்த்தாள் செல்வி…
”ஏன் என் அப்பாவும் அம்மாவும் கலப்பு திருமணம் பண்ணதுனால சொல்றீங்களா…. நாங்களும்” என்ற போதே
“இங்க பாரு… நீ… இல்ல உன் குடும்பம் யாரா வேணும்னாலும் இருந்துக்கங்க…. எனக்குனு…. என் குடும்பத்துக்குனு ஒரு மதிப்பு இருக்கு…. நான் அதை கலைக்க மாட்டேன்…. மாறவும் விட மாட்டேன்… “
”அந்த ஒடுகாலிய வெட்டிப் போட்ருந்தால் நீயெல்லாம் இப்படி வந்து என் முன்னாடி நின்னு பேசிட்டுருக்க மாட்ட… அவளாலதான்.. எனக்கு இந்த நிலைமை… என்னை எல்லோரும் ஈஸியா நெனச்சுட்டீங்க ” கார்த்திக் கமலியையும் விட்டு வைக்க வில்லை….
செல்வி இப்போது பதட்டத்துடன்
“என்னோட காதல் உண்மை கார்த்…” செல்வியைப் பேச விடவில்லை கார்த்திக்
”என் பேரைச் சொன்ன…. பல்ல உடச்சுருவேன்….” கார்த்திக்கின் கோபம் கரை உடைத்திருக்க….
“ஏய் இப்போ சொல்றேன் கேட்டுக்கோ…. அந்தக் கமலி இல்லேனா என்ன… எங்க ஆளுங்கள்ள ஆயிரம் பேர்… ஆயிரம் பேர் என்ன நூறாயிரம் பேர் சொடக்கு போட்டா வந்து நிப்பாங்க…. அதுல ஒருத்திய கல்யாணம் பண்ணிப்பேன்… உன்னலாம்… நீயெல்லாம் என்னை… நான் உன்னைப் போய்… ஹ்ம்ம்ம்…. நான்லாம் கவரி மான் ஜாதிடி நாங்கள்ளாம்….”
இப்போது செல்வி எரிச்சலாக அவனைப் பார்க்க
“என்ன என்னடா இவன் இப்படியெல்லாம் பேசுறான்னு பார்க்கிறியா…. என் இரத்தம்லாம் வேறடி…. எங்க பரம்பரைல கலப்படமே இருக்காது…. இருக்கவும் விட மாட்டேன்…”
“எனக்கு ஒருத்தி பொண்டாட்டியா இருக்கனும்னா…. என் புள்ளைய பெத்துக் கொடுக்கனும்னா… என் ***தியா நீ இருக்கனும்… வந்துட்டா லவ்வு… ஹேப்பி பேர்த்டென்னு…. உன்னலாம் கை நீட்டி அடிக்க எவ்ளோ நேரம் ஆகும்… என் சுண்டு விரல் படனும்னா கூட அதுக்கு ஒரு தகுதி வேணும்… இதுல நீ என் பொண்டாட்டியா ஆகனுமா” கார்த்திக் செல்வியை ஏளனமாகத் தள்ளி விட்டிருக்க…..
“பார்க்கத்தானே போறேன்…. “ அவனை விட எகத்தாளமாக செல்வி சொல்லி அவனின் ஏளன முகத்தை நொடியில் மாற்றி இருக்க
“இவ்வளவு கேவலப்படுத்தியும்…. உனக்கு அறிவு வரலை… ஆமாம் நீ என்னை லவ் பண்றியா… இல்லை எங்க சொத்தைப் பார்த்து மயங்கிட்டியா….” கார்த்திக் கொட்டும் தேளாக மாறி அவளை கொட்டிக் கொண்டிருக்க… இப்போது செல்வியின் முகம் சட்டென்று மாறி கண்களும் கலங்கியிருக்க…
செல்வியின் கண்களில் வழிந்த நீரைத் துடைத்தவளாக….
”தனாக்கிட்டகோபக்கார அண்ணான்னு ஒரு பிம்பம் நீங்க காட்டுவீங்களே… அதோட உண்மை முகம் என்னன்னு அவ காட்டினா… அந்த முகத்தை நானும் பார்க்க ஆரம்பிச்சேன்… என்னோட நல்ல நேரம் கமலியக்கா அதை மிஸ் பண்ணிட்டாங்க…’ செல்வி சொல்ல ஆரம்பித்த போதே…
”உன்னலாம் திருத்தவே முடியாதுடி… பிம்பமா…உண்மை முகமா… இதுதான் நான்…” ஆவேசத்துடன் அவன் ஆரம்பித்தபோதே
அவனின் அலைபேசி அடிக்க… எடுத்துப் பார்க்க வேறு யாருமில்லை நரேன்தான்…
‘”உன் அண்ணன் தான்… அவன் வரட்டும்…. இனி உன்கிட்ட எதுக்கு நான் பேசனும்… அவன்கிட்ட இருக்கு… நான் அவன்கிட்ட பேசிக்கிறேன்” என்றபடி எழுந்திருந்தான்…. தன் இருக்கைக்கும் மாறி இருந்தான்
---
நினைவுகளை விடுத்து… கண்களைத் திறந்து…. தன் அண்ணனைப் பார்த்தவளின் கண்களில் கண்ணீர் மறைத்திருந்தது… இதுவே நரேன் இடத்தில் வேறொருவன் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்…
”குடும்ப மானத்தையே வாங்கி விட்டாய் “ என்ற கோபமும்… திட்டும் மானாவாரியாக விழுந்திருக்கும் …. ஏன் அடி கூட விழுந்திருக்கும்
மாறாக நரேன்… கார்த்திக் சொன்னதை எல்லாம் பொறுமையாக அனைத்தையும் கேட்டபடி… கார்த்திக்கிடமும் மன்னிப்புக் கேட்டவனாக… கார்த்திக் இனி இந்த விசயத்தில்… அதாவது செல்வி விசயத்தில் இனி கவலைப்பட வேண்டாம்… தான் அனைத்தையும் பார்த்துக் கொள்வதாகவும் கூறி விட்டான்….
வாகனம்… செல்வியின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருக்க…
“இறங்கிக்க…” நரேனைக் கூடப் பார்க்காமல் கார்த்திக் சொல்ல… நரேன் இறங்கியவனாக…
“செல்வி நீ முன்னால போ… வீட்ல எதையும் காட்டிக்காத” என்று தங்கையை அனுப்பி வைத்தவன்… கார்த்திக்கைப் பார்க்க… கார்த்திக்கும் இப்போது நண்பனின் நிலைமை புரிந்தவனாக
“வர்றேண்டா…. தப்பா எடுத்துக்காத… சொல்லி வைடா அவகிட்ட… “ என்றபடி தன் காரை மீண்டும் ஸ்டார்ட் செய்யப் போக… அவனை கீழே இறங்கச் சொன்னான் நரேன்….
”என்னடா… ஏதாவது பேசப் போறியா… கேட்கிற மூடு இல்லடா…” கார்த்திக்கின் குரலில் கோபம் எல்லாம் இல்லை… மாறாக விரக்தி மட்டுமே இருக்க…
“அட இறங்குடா… ரொம்பத்தான் பண்ற… செல்விலாம் ஒரு விசயமே இல்லை… இதுக்குப் போய் ரொம்பத்தான் சலிச்சுக்கிற…” என்றவனின் கூலான வார்த்தைகளில் கார்த்திக்கும் இயல்புக்கு வந்தவனாக இறங்க… அவன் இறங்கிய அடுத்த நொடியே///
“ஹேப்பி பேர்த்டே டா மச்சி” நரேன் அவனைக் கட்டி அணைக்க…
“ஏண்டா… தங்கச்சி ஒரு மாதிரி வெறுப்பேத்துனா… அண்ணன்காரனுமா….’ திட்டினாலும் கார்த்திக்கின் முகத்தில் நக்கல் மட்டுமே இருக்க…..
”உன் தங்கச்சி தனா உனக்கு வச்சிருக்கிற சர்ப்ரைஸ மெயின்டைன் பண்ணனும்னுதான் நெனச்சேன்… ஆனா என் தங்கச்சி பண்ண வேலைல வேற வழியில்லாமல் சொல்ல வேண்டியாதாகிருச்சு…”
“என்னடா சொல்ற” கார்த்திக் குழம்பியவனாகக் கேட்க… நரேன் ஆராதனாவின் திட்டம் எல்லாம் சொன்னவனாக…
“உன் குடும்பம் மொத்தமுமே இங்கதான் இருக்கு…. எல்லாம் ’தனா’ ப்ளான்….”
கார்த்திக் இப்போதும் உம்மென்று இருக்க…
“செல்விக்கும் தெரியும்… ஆனால் செல்வியோட ப்ளான் தான் எங்களுக்குத் தெரியாமல் போச்சு…. மே பி… தனாக்கும் தெரியாமல் தான் இருக்கும்…. டேய்…. செல்வி விசயத்தை நெனச்சுட்டு… உன் தங்கச்சியோட இந்த பிறந்த நாள் ஏற்பாடை கெடுத்துறாதா…. ஒரு வாரமா அவ்ளோ ப்ளான் பண்ணா… உன்னை இப்படி நடு ராத்திரில இங்க கூட்டிட்டு வர… என்கிட்ட எவ்ளோ கெஞ்சினா தெரியுமா… அவளுக்காகத்தான் நான் இதுக்கு ஒத்துகிட்டதே… பாவம்டா அவ… செல்வி பண்ணின காரியத்துனால உன் தங்கச்சி மனசை கஷ்டப்படுத்திறாத”
கார்த்திக்கி கண்களில் இலேசாக ஈரம் கசிய… அதே வேகத்தில் வேகமாகத் துடைத்தவன்
“நான் அண்ணனா என்னடா பண்ணியிருக்கேன்… கோபம் தான் பட்ருக்கேன்…” என்ற போதே… அன்று அவன் அறையில் அரைமயக்க நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது ஆராதனா துடித்த துடிப்பு கண்களுக்குள் வந்து போக… சட்டென்று கண்களைத் துடைத்தவனாக…
“சரி வா போகலாம்” என்றபடி நரேனுடன் சேர்ந்து நரேன் வீட்டில் நுழைந்தான்…
---
”அண்ணா… அம்மா அப்பா…. தாத்தா அப்பத்தா கூட நில்லு…’
ஆராதனாவின் குரலில் அப்படி ஒரு ஆனந்தம்…
”ஓகே…. டைம்… 11.55…. 10 9…. 8… 7…” ஆராதனா எண்ணிக் கொண்டிருக்க செல்வி ஓரமாக ஒதுங்கி நின்றிருந்தாள்…. எந்த உணர்வுகளையும் காட்டாமல்
ஆராதனா செல்வியைக் கவனிக்காமல் எல்லாம் இல்லை… ஏதோ பெரிதாக நடந்திருக்கிறதென்று அவளுக்கும் புரிந்தது… அண்ணனும் இயல்பாக இல்லை… அதே நேரம்… இந்த விழா நிகழ்ச்சியை எந்த கோபமும் இல்லாமல் அவன் ஏற்றுக் கொண்டதும் ஆச்சரியமாக இருந்தது….
நரேனுடன் வந்தாலும்…. எப்படியும் தன் கோபப்படுவான் என்றுதான் ஆராதனா எதிர்ப்பார்த்திருந்தாள்… ஆனால் கோபப்பட்டாலும்… தன் அண்ணன் கேக்கை வெட்டுவான் என்ற நம்பிக்கை மட்டுமே இருக்க… ஆனால் ஏதும் சொல்லாமல் அமைதியாக
“அப்பா… அம்மா… அவதான் ஆடினான்னா நீங்களுமா….” என்றபடி பொய்க்கோபத்தை மட்டுமே அனைவரிடமும் கார்த்திக் காட்ட … ஆராதனாவால் தன் கண்களையே நம்ப முடியவில்லை…. தன் அண்ணனின் அமைதியை… அதுமட்டுமல்லாமல்… இவள் கொடுத்த உடையை மறுபேச்சின்றி அணிந்தும் வந்திருந்தான் கார்த்தி…….
“கட்சிக் கரை வேஷ்டி…. லினன் ஷர்ட்… நீ எப்போதும் இதே கம்பீரத்தோட இருக்கனும்ணா..” தன் அண்ணனின் ட்ரேட் மார்க்கை அவனுக்கு பரிசாக அளித்திருக்க… அதை அவன் அணிந்து நிமிர்ந்த நடையுடன் வந்த போது மொத்த குடும்பமும் அவன் கம்பீரத்தில் மயங்கியிருக்க… செல்வி அமைதியுடன் யோசனையுடன் நின்றிருக்க… நாயகியின் கண்களிலோ இன்னும் திருப்தி இல்லை... தன் அண்ணனின் கம்பிரத்தோடு வேறொரு பிம்பம் வந்து நின்றது…
---
கார்த்திக் கேக் வைக்கப்பட்டிருந்த மேஜையின் முன் வந்து நின்றவன்…. அமைதியாக கேக்கையே பார்த்தான்… அந்த கேக்கில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகளைப் பார்த்தவனுக்கு அந்த வார்த்தைகள் தனக்கு தகுதியான வார்த்தைதானா…. அவனுக்குள்ளேயே கேள்வி எழ… குற்ற உணர்ச்சியுடன் தன் குடும்பத்தைப் பார்க்க…
”அண்ணே …. இங்க யாரு சொன்னாலும்.,.. சொல்லலைனாலும் நீதான் எங்களுக்கு ராஜா… சாரிண்ணா… உன் பேரைச் சொல்றதுக்கு… கார்த்திக்.. எங்களுக்கு கிங்க் தான்… யாரும் அதை மாத்த முடியாது ” ஆராதனா சொன்னவளாக…
“அண்ணன கேக்கை வெட்டச் சொல்லுங்கம்மா” தன் அன்னையிடம் சொல்ல… மேகலாவும் தன் மகனைப் பார்க்க…
கார்த்திக்கும் கேக்கை வெட்டக் குனிந்தவன்… சற்று தயங்கி நிமிர்ந்தான்…. நிமிர்ந்தவனின் பார்வை யாரைப் பார்க்கக் கூடாது என்று நினைத்தானோ அங்கேயே நிலைத்தது…..
சில மணி நேரத்திற்கு முன்…. ஒருத்தி நீட்டிய கேக்கை தூக்கி வீசி எறிந்த காட்சி நிழலாட.. இப்போது செல்வியைப் பார்க்க முடியாமல் தடுமாற… செல்விதான் அவனின் பிறந்த நாள் வாழ்த்தைப் முதல் ஆளாகப் பாட ஆரம்பித்திருக்க… அடுத்த சில நிமிடங்களில்…. கார்த்திக் செல்வியைப் பற்றி எல்லாம் நினைக்காமல் கேக்கை வெட்டி… அனைவருக்கும் கொடுத்தவன்… தன் தங்கையை அருகில் அழைக்க…. ஆராதனாவும் வேக வேகமாக ஒடியவள்… அவனருகே போய் நின்று கைகளை நீட்ட… அவள் தலையில் செல்லமாக குட்டு வைத்தவன்… தன் தங்கை நீட்டிய கையில் கேக்கைக் வைக்காமல் அவள் வாயில் ஊட்ட… சந்தோஷமாக மன நிறைவோடு தன் அண்ணனைப் பார்த்தவள்….
“ஏய் செல்வி வா….” தன் தோழியை அழைக்க… கார்த்திக்கின் முகம் நொடியில் மாறினாலும்… சமாளித்து இயல்பாக இருக்க…
“வா… வா… வாங்கிக்க…” சொன்னபடி கார்த்திக் அருகில் செல்விக்கு இடம் விட்டு ஆராதனா தள்ளி நிற்க…
“செல்விக்கு குடுண்ணா… கேக் பெருசா எடுத்துக் கொடு….” அண்ணனை ஊக்குவிக்க… கார்த்திக்கும் வேறு வழியில்லாமல்… வேண்டா வெறுப்புடன் கேக்கை எடுத்து செல்வியின் கைகளில் நீட்ட….
செல்வி அமைதியாக அதைக் கைகளில் வாங்கியவள்…. ஒரு நொடி யோசித்தவள்…. அதே நொடியில் முடிவும் எடுத்தவளாக அந்தக் கேக்கையும் சுற்றி நின்ற மற்றவர்களையும் தீர்க்கமாக நோக்கியவள்… பின் கார்த்திக்கை மட்டுமே தன் கண்களில் நிரப்பியவளாக
“இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கார்த்திக் மாமா” சொன்னவள்… அடுத்த நிமிடமே அந்தக் கேக்கைப் பிட்டு கார்த்திக்கின் வாயில் வைத்தவள்… மீதிப் பாதியை தன் வாயில் வைக்க…
யாருமே எதிர்பாராத செல்வியின் இந்தச் செய்கையில் மொத்தக் குடும்பமுமே அதிர்ச்சியுடன் நின்றிருக்க… கார்த்திக்கோ வாயில் அவள் வைத்த கேக்கை அவனையுமறியால் விழுங்கி இருந்தான் அதிர்ச்சியோடு….
----
அதன் பிறகு அந்த நள்ளிரவு பற்றி கேட்க வேண்டுமா என்ன….. அமளி துமளியாகி இருந்தது… செல்வியின் பெற்றோர் செல்வியை அடிக்கவில்லை அவ்வளவுதான்…. ஆனாலும் அவளைத் திட்டிக் கொண்டிருக்க… கார்த்திக் ஒரு புறம் ஆக்ரோசமாக இத்தனை நாள் செல்வி செய்ததெல்லாம் அனைவரிடமும் போட்டு உடைத்திருக்க…
நரேன் தான் கார்த்திக்கை கட்டுப்படுத்திக் கொண்டிருக்க… செல்வி ஆராதனா அருகில் கல் போல் நின்று கொண்டிருந்தாள்… கண்களில் அருவியும் ஊற்றெடுக்காமல் இல்லை….
”ஏய் அழாதடி…” ஆராதனா செல்வியைத் தேற்றிக் கொண்டிருக்க
“அவளுக்கு நீ சப்போர்ட்டா… உனக்கு இருக்கு… உன்னை வா வீட்ல வச்சு கவனிச்சுக்கிறேன்…” கார்த்திக் தன் தங்கையிடம் எகிறினான்…. சற்று முன் வீசிய பாசப் பார்வைகள் எல்லாம் மாறிப் போயிருந்தது….
நடப்பதெல்லாம் பார்த்தபடி இருந்த ராஜசேகர்…. இதற்கு மேலும் தான் அமைதியாக இருப்பது நல்லதல்ல… முடிவெடுத்தவராக ராஜசேகர் எழுந்து நின்றவர்….
“நான் ஒரு நிமிசம் பேசலாமா….” என்று கர்ஜனை குரலில் கேட்க அனைவரும் அமைதி ஆகி இருந்தனர் இப்போது….
“கதிர் சார்… நான் உங்க கிட்ட பேசனும்… அதாவது உங்க எல்லார்கிட்டயும் என் குடும்பத்தோட சார்பா பேசனும்” நிறுத்தி செல்வியின் தந்தையைப் பார்க்க
அவர் அப்போதும் அமைதியாக இருந்தார்…
“நீங்க இங்க வந்து 12 13 வருசம் ஆகிருச்சு… என் மச்சான் முத்துராமோட ஃப்ரெண்டாத்தான் அறிமுகமானீங்க…. அப்புறம் நாமளும் குடும்பமா நெருங்கி பழக ஆரம்பிச்சோம்… நம்ம பசங்களும் இன்னைக்கு அதே தோழமையோட இருக்காங்க… செல்வி நான் பார்த்து வளர்ந்த பொண்ணு… அவளும் எனக்கு மக மாதிரிதான்… “
அத்தனை பேரும் படபடப்புடன் அவரையேப் பார்த்தபடி இருக்க…
செல்வியைப் பார்த்தவர்
“மக மாதிரி நான் நினைச்சேன்… ஆனா மருமகளா வரனும்னு இருக்கு….” என்று முடிக்க… அதுவரை இழுத்துப் பிடித்திருந்த மூச்சை செல்வி சந்தோஷமாக இழுத்து விட்டபோதே கண்களில் கண்ணீரும் அதே வேகத்தில் கன்னத்தில் வழிந்திருக்க
“இது என்னோட முடிவு … நானும் என் மனைவியும் நானும் சேர்ந்து எடுத்த முடிவு…. ஆனால் கதிர் சார் நீங்களும் சொல்லுங்க… உங்க பொண்ணைப் பற்றின ஆசைகள்… உங்களுக்கும் இருக்கும்தானே… உங்க மாப்பிள்ளை எப்படி இருக்கனும்னு உங்களுக்கும் கனவுகள் இருக்கும் தானே… யோசித்து சொல்லுங்க…”
“அப்பா… என்னப்பா… நீங்களும் அவ நடிப்பை நம்பிட்டு“ கார்த்திக் வேகமாக கத்திய போதே…
“உன்கிட்ட வீட்ல பேசுறேன்…. “ என்று கார்த்திக்கை நிறுத்தியவர்…
”சார் நீங்க யோசித்து சொல்லுங்க… நாங்க கிளம்புறோம்” என எழும் போதே…
“தாமரை… உன்கிட்ட பேசனும்,…” மனைவியைத் தனியே அழைத்துச் சென்ற செல்வியின் தந்தை… அதன் பின் ராஜசேகர் மேகலாவிடமும் அவர்கள் வீட்டு பெரியவர்களிடமும் தனியே பேசி முடித்து விட்டு சில நிமிடங்களில் வெளியே வந்தவர்….
“எங்களுக்கு சம்மதம் சார்…. எங்க பொண்ணோட சந்தோஷம் அது மட்டும் தான் எங்களுக்கு வேணும்” அனைவரின் முன் ராஜசேகரிடம் கதிரேசன் சொல்லி முடிக்க…
ராஜசேகர் இப்போது…
”அம்மா செல்வி இங்க வா…” செல்வியை அழைக்க… செல்வி அவர் அருகே பவ்யமாகப் போய் நிற்க…
“முதல்ல இந்த காலேஜ் படிப்பை படிச்சு முடி… மத்ததெல்லாம் நாங்க பார்த்துகிறோம்… உனக்கு அவனை பிடிச்சிருக்குதானே… அதுல உறுதியா இருக்கதானே… அதே நேரம் இவனுக்கும் உன்னைப் பிடிச்சிருந்தால் தான் திருமணம்…”
“ரொம்ப ரொம்ப மாமா… நான் என்னைக்குமே என் முடிவுல இருந்து மாற மாட்டேன் மாமா… “ செல்வி சொல்ல….
கார்த்திக்கோ பல்லைக் கடித்துக் கொண்டு அவளை முறைக்க…
“சரி… இப்போதைக்கு நம்மைத் தவிர இது வேற யாருக்கும் தெரிய வேண்டாம்…’ என்றவர் செருமியவராக
“முத்துராம்… அதான் என் மச்சான் உங்க ஃப்ரெண்டுனு எங்களுக்குத் தெரியும்… அவருக்கு கூடத் தெரிய வேண்டாம்…” ராஜ சேகர் முடித்து விட…
கார்த்திக் இப்போது….
“அப்பா… யாரைக் கேட்டு இவங்களுக்கு வாக்கு கொடுக்கறீங்க… நான் நான் சரின்னு சொல்லனும்… எனக்கு இவளைப் பிடிக்கல….நான் இவள ஒருநாளும் மேரேஜ் பண்ணவே மாட்டேன்… எனக்கு அதுல விருப்பம் இல்ல”
“உனக்கு டைம் இருக்கு கிட்டத்தட்ட இரண்டு வருசம்… அப்போ சொல்லு…” என்றவர்…
செல்வியிடம் திரும்பி…
“அம்மா… இவன் பிடிவாதம் அப்போதும் இருந்துச்சுன்னா என்ன பண்ணுவ….”
”கண்டிப்பா இருக்காது மாமா… அதுக்காக இவரைத் தொந்தரவும் பண்ண மாட்டேன்… எனக்கு நம்பிக்கை இருக்கு மாமா… அவர் என்னைக் கல்யாணம் பண்ணிப்பாரு ”சொன்னவள் கார்த்திக்கை உரிமையுடன் உறுதியுடனும் பார்க்க….
இப்போது கார்த்திக் கோபத்தோடு அவளின் அருகே போகப் போக… நரேன் தான் எப்படியோ தனியே அழைத்து வந்திருந்தான்…
“டேய்… விட்றா என்ன… என்ன பண்ணி வச்சுருக்கா பார்த்தியா உன் தங்கச்சி… பதினெட்டு வயசு இருக்குமா… இம்மாந்துண்டுல இருந்து நான் பார்த்து வளர்ந்தவ…. என்னமா பேசி நடிச்சு…. எங்க குடும்பத்தையே வளச்சுப் போட்டுட்டா… சதிகாரி…. கைல கெடச்சான்னு வச்சுக்க… செத்தா அவ… என்னைக் கல்யாணம் பண்ணிக்கனுமா… நான் அவளைத்தான் பண்ணுவேன்னு என்ன திமிர் இருந்தா என்னைப் பார்த்தே சொல்லுவா” அவள் அண்ணனிடமே…. செல்வியை சராமரியாக திட்டிக் கொண்டிருக்க
“ஏண்டா… பொறுமையா இருடா…யார் உன்னை புரிஞ்சுக்கலைனாலும் நான் இருக்கேண்டா உனக்கு… உன்னை மீறி… உனக்குப் பிடிக்காத ஒண்ணு நடக்க விட மாட்டேண்டா… என்னை நம்புடா”
நரேன் ஆரம்பித்த போதே கார்த்திக் அவனையும் மீறி… நண்பனைக் கட்டிக் கொண்டவன் அவனிடமே குலுங்கி அழ ஆரம்பித்திருக்க
“டேய் மச்சான்… எனக்கு உன் நிலைமை புரியுதுடா…” நண்பனின் முதுகில் தட்டிக் கொடுத்து அவனை ஆறுதல் படுத்திய நரேன்…
”இத்தனை வருசம் இவதான் வருங்கால வாழ்க்கைனு நினச்சிட்டு இருந்தது மாறினது… இப்போ உன் தங்கச்சியும் என் வாழ்க்கைல விளையாட்றாடா…” என்று ஆரம்பித்தவனுக்கு ஏதோ தோன்ற… கார்த்திக் சட்டென்று நரேனை விட்டு விலகி அவனைப் பார்க்க…
‘எனக்கும் அந்த வலி தெரியும்டா” நரேனின் குரல் தடுமாறி இருக்க… இப்போது கார்த்திக்கின் முறையானது தேற்றுவது…
“டேய் நரேன்… டேய் மச்சான்… இன்னுமாடா அந்த பூஜாவை நெனச்சுட்டு இருக்க..”
“ப்ச்ச்… அதெல்லாம் இல்லடா… அவளுக்கு ஒரு வாழ்க்கை… ஹஸ்பண்ட் கொழந்தைனு… இனி என்ன நெனச்சு என்ன பண்ணி பிரயோஜனம்…” எங்கோ பார்த்த நரேனின் கண்களில் விரக்தி மட்டுமே இருக்க…
“டேய்…”
”அந்த செழியன் பெரிய இவன் மாதிரி பூஜாவை ப்ரடெக்ட் பண்றேன்னு சீன் போட்டான்… நானும் என் பூஜா… ப்ச்… பூஜா எங்க போயிருவான்னு அசால்ட்டா விட்டுட்டேன்… ஆனால் எல்லாம் கை மீறி போனது என்னாலயே ஏத்துக்க முடியலடா…செழியன் அவனாலாதாண்டா என் காதலே அழிஞ்சு போச்சு….”
கார்த்திக் அமைதியாக நின்றிருக்க
“அப்புறம் வந்து மன்னிப்பு கேட்டான் பாரு… அதாண்டா அல்டிமேட் நடிப்பு… ராஸ்கல்… மன்னிக்கவே மாட்டேண்டா அவனை….”
“நல்லவன் மாதிரி நடிச்சு… எல்லாரையும் ஏமாத்திட்டாண்டா… உன்னை…. என்னை… எல்லாரையும்…. துரோகி….” கார்த்திக்கும் நரேனின் வார்த்தைகளை ஆமோதித்து… செழியனை வசை பாட ஆரம்பித்தவனாக
“அவனை விடக் கூடாதுடா… நான் விடவே மாட்டேன் அவனை… கண்டிப்பா எனக்கு பதில் சொல்லியாகனும் அவன்….” சொல்லி நரேனைப் பார்க்க… நரேனோ கார்த்திக்கிடம்
“அவன்லாம் அவ்ளோ ஈஸியாலாம் நம்ம கிட்ட சிக்க மாட்டாண்டா… ஆனால் ஏதாவது ஒரு விசயத்துல அவன் மாட்டினான்னு வச்சுக்கோ…. அப்போ அதை நான் விடவே மாட்டேன்… “
“நான் உன் கூட இருப்பேண்டா… அதே மாதிரி அவன் என்கிட்ட மாட்டினா நீ எனக்கு உதவியா இருக்கனும்” கார்த்திக் முடித்திருந்தான்…
செல்வியைப் பற்றி ஆரம்பித்து… செழியனைப் பழிவாங்குவதில் தங்கள் பேச்சை முடித்திருந்தனர் தோழர்கள் இருவரும்..
----
வீட்டின் வெளியே தோழர்கள் அப்படி இருக்க… வீட்டின் உள்ளே தோழிகளின் நிலையோ வேறு மாதிரி இருந்தது…
”ஏய் செல்வி…. கங்கிராட்ஸ்டி” நண்பியைத் தட்டாமாலை சுற்றாத குறையாக ஆராதனா செல்வியைக் கட்டிக் கொண்டு சுற்ற ஆரம்பித்திருக்க….
“ஏய்… ஏய்…. தனா… நான் பண்ண வேண்டிய வேலையை நீ பண்ணிட்டு இருக்கடி…” செல்வி மனம் விட்டு சிரித்தபடி சொல்ல
ஆராதனாவும் இப்போது செல்வியை விட்டவளாக….
”ஏய் செல்வி… உன்னோட சந்தோசத்தோட அளவு என்னன்னு தெரியாது…. ஆனால் நான் வானத்துல பறந்துட்டு இருக்கேன்… என் ஃப்ரெண்ட்… எனக்கு பிடிச்ச என் ஃப்ரெண்டு… என் அண்ணியாகப் போறான்னு….”
செல்வி சிரிப்போடு ஆராதனாவின் சந்தோசத்தைப் பார்த்தபடி…. நின்றிருக்க
“எனக்கு உன்னை எவ்ளோ புடிக்கும்னு தெரியுமா…. உன்கிட்ட கூட சொன்னதில்ல நான்… நான் என்னனென்னல்லாம் யோசிச்சுருக்கேன் தெரியுமா”
செல்வி புரியாமல் பார்க்க…
“உனக்குத் தெரியுமா எத்தனையோ நாள் நான் சாமிக்கிட்ட சண்டை போட்ருக்கேன்…. எனக்கு ஏன் இன்னொரு அண்ணன் இல்லைனு…”
“என்னது” செல்வி அதிர்ச்சியுடன் ஆராதனாவைப் பார்க்க
“ஆமாடி… கார்த்தி அண்ணாக்கு உன்னை ஜோடி சேர்க்க முடியாதுன்னு தெரியும்… இன்னொரு அண்ணன் இருந்திருந்தா என் செல்வி எனக்கு அண்ணியா வந்துருப்பாளே…. ஏன் இல்லைனு திட்டுவேன்…”
”அவ்ளோ பிடிக்குமா என்னை… சொல்லவே இல்லையே” செல்வி குறும்ப்போடு கேட்க
“ஹ்ம்ம்ம்… ஆனால் என்ன பண்றது… அதுக்காக இன்னொரு அண்ணனா ரெடி பண்ன முடியும்… ஆனால் வேற ஒண்ணு நெனச்சேன்…”
“அது என்ன….” செல்வி ஆர்வமாகக் கேட்க
“எங்க வீட்டுக்கு மருமகளா வர்றது முடியாத காரியம்… அதாவது அப்போ நெனச்சேன்… அட்லீஸ்ட் எங்க குடும்பத்துக்குள்ளயாவது உன்னை இழுக்கனும்னு நெனச்சேன்… எங்க திலகா அத்தைகிட்ட பேசி… அவங்க பையனுக்கு உன்னை எடுக்க வைச்சிறனும்னு….”
செல்வி ஆவென்று அதிர்ச்சியுடன் ஆராதனாவைப் பார்த்தவள்… அடுத்த நிமிடமே… தன் தோழியின் தோளிலேயே அடி போட்டவளாக
“செழியன் அண்ணண்டி எனக்கு…”
“ஹான் ஹான் அதெல்லாம் எங்களுக்கும் தெரியும்… ஆனால் அண்ணன்னு சொன்னா அண்ணா ஆகிருவாங்களா… சொந்த அண்ணனா என்ன… சொல்லப்போனா அந்தப் பையனை எல்லாம் நினைக்கல… எங்க அத்தைக்குத்தான் மருமகளா நெனச்சேன்… “
“ஆனா அதுக்கும் வேட்டு வைக்கிற மாதிரி… நீ எங்க அண்ணாவை சைட் அடிக்க ஆரம்பிச்சுட்டியா… அப்புறம் பெருசா அதைப் பற்றி யோசிக்கல… ஆனா இப்போ இப்போ என் வீட்டுக்கே… என் அண்ணாக்கே… ஐயோ…. என்னால சந்தோசம் தாங்க முடியலையே…. காலேஜ் முடிச்ச உடனே உனக்கும் அண்ணனுக்கும் மேரேஜுன்னு சொன்னங்கள்ள… நான் அம்மாகிட்ட இப்போவே சொல்லிருவேன்… அதுக்கபுறம் ரெண்டு வருசம் கழிச்சுதான் எனக்கு மேரேஜ் பண்ணனும்னு சொல்லிருவேன்… நாத்தனார் ராஜ்ஜியம் நடத்திட்டுத்தான் போவேனாக்கும்…. அவ்ளோ ஈசியா… என்னை விட்டு ஓடிற முடியாதும்மா….” ஆராதனா உற்சாகக் குரலில் சொல்ல…
”அப்படிங்களா மேடம்… நாங்களும் அஞ்சாத சிங்கம் தான்… பார்த்துறலாம் அந்த நாத்தனார் ராஜ்ஜியத்தை… ஆட்டம் காண வைக்க வருவோமாக்கும்” செல்வியும் அதே உற்சாகத்தோடு பேச… தோழியர் இருவரும் வெகு நாட்களுக்குப் பிறகு மனம் விட்டு சிரித்தனர்….
அதே நேரம் செல்வியின் தாய் தாமரையின் மனமோ வேறொரு சிந்தனையில் இருந்தது…
“ஆராதனா மேகலா… நீலவேணி இவர்களைப் பற்றி எல்லாம் தெரியும்… அவர்கள் வீட்டில் பெண்கள் எப்படி இருக்க வேண்டுமென்று ஒரு இலக்கணம் இருக்கும்… தன் மகள் அந்த இலக்கணத்துக்கெல்லாம் அப்பாற்பட்டவள்… இங்கு அவள் வாழும் வாழ்க்கை முறையே வேறு… அவளால் அங்கு தாக்குப் பிடிக்க முடியுமா… கார்த்திக்கும் வேறு தன் மகளை ஏற்றுக் கொள்ளவில்லை… என்ன ஆகப் போகிறதோ… தன் மகள் ஏன் இப்படி முடிவுகளை எடுக்கின்றாள்… அவள் சொன்னதெல்லாம் கேட்டு ஆடியதற்கு பெற்றோராகிய எங்களுக்கு தண்டனையா இது… அதை விட அவள் சந்தோசமாக இருப்பாளா… காதல் அவள் கண்களை மறைத்துவிட்டதா…” என்னதான் சம்மதம் சொன்னாலும்… தாயாக தாங்கள் இளவரசியாக வளர்த்து வந்த தன் செல்ல மகளை நினைத்து மருகத் தொடங்கியிருந்தது…
----
அடுத்து இரண்டு வாரங்கள் கடந்திருந்த நிலையில் , செழியன் நல்ல உறக்கத்தில் இருந்தான் அந்த அதிகாலை 6 மணி அளவில்.. அவனின் இரவு உறக்கத்தை எப்போதும் அவனின் முதல் நினைவாக வந்து கலைப்பவளுக்கு பதில்… அவனது அலைபேசி அடிக்க… இமைகளைப் பிரித்து யார் எனப் பார்த்து விட்டு மீண்டும் கண்களை மூடியபடி அலைபேசியை எடுத்து காதில் வைத்தான்…
முகிலன் மட்டுமே அவனுக்கு நேரம் காலம் பார்க்காமல் அழைப்பவன்… இவனும் அவனிடம் அப்படியே இருப்பான்…
“என்னடா… என்ன விசயம்…” பாதித் தூக்கம்… தூக்கம் கலைந்த கடுப்பு… அதே நேரம் அந்தத் தூக்கத்தை விட்டு விடாத கரகரப்பு என செழியன் முகிலனின் பேச ஆரம்பிக்க..
“டேய்… சீக்கிரம் உன் வாட்சப்பைப் பாரு…” படபடத்தான் முகிலன்…
முகிலனின் குரலில் இருந்த படபடப்பில் செழியனின் தூக்கம் போனதா… இல்லை முகிலன் படபடப்புக்கு காரணம் ஆராவுக்கு ஏதாவதா என்ற எண்ணம் வந்ததாலா…. படக்கென்று படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்தான் செழியன்…
“என்னடா ஆச்சு… ஆராவுக்கு “ என ஆரம்பித்த போதே…
“டேய்… ஆ ஊன்னா ஆரா பல்லவியை முதல்ல நிறுத்து… முதல்ல வாட்சப்பை பாரு…. நான் சொல்றதைச் செய்”
”முகிலனின் படபடப்புக்கு ஆரா காரணம் இல்லை எனத் தெரிந்த போதே…. செழியன் தானாகவே இயல்புக்கு வந்தவனாக… ”
“லைன்லயே இருடா…” பொறுமையாகச் சொன்னவன்…
“என்ன அனுப்பி இருக்கான்,,,” அலட்சிய பாவத்தோடு வாட்சப்பை எடுத்துப் பார்த்தவனின்… கண்கள் பெரிதாக விரிந்தன… அவன் கண்ட காட்சியை அவனாலேயே நம்ப முடியாமல் மீண்டும் மீண்டும் பார்த்தவனுக்கு… அந்த உண்மையை சீரணிக்க சில நிமிடங்கள் தேவைப்பட்டிருக்க
“டேய் 2 மினிட்ஸ்டா…” என்று குளியலறைக்குக் போய்விட்டு மீண்டும் வந்து நண்பனுக்கு அழைத்தவன்…
“என்னடா… எப்படிடா… நம்ம செல்வியா” செழியனால் நம்பமுடியாமல் மீண்டும் கேட்க…
“அது நம்ம செல்விதான்… அது நம்ம கார்த்திக்தான்….. அதான் அந்த ரத்னம் இருக்காரே… “
“ஆமா அவர் பையனுக்கு இன்னைக்கு மேரேஜ்… அம்மா நேத்து நைட் புலம்பிட்டு இருந்தாங்க…. ஊர்ல ஏதாவது கல்யாணம் நடந்துச்சுன்னா அதை சாக்கா வச்சுட்டு அண்னன் வீட்ல ஒரூ வாரம் தங்கிட்டு வருவேன்... இன்னைக்கு முடியலேன்னு….”
“என்னன்னு தெரியல அந்த ரத்னமு ஓவரா பாச மழைல பொங்கினாரு… நைட் எனக்கு கால் பண்ணி… வர்றீங்களா மாப்பிள்ளை… மினிஸ்டருக்குலாம் ரூம் போட்ருக்கேன்…. உங்களுக்கும் போடவான்னு கேட்டார்டா… தீடீர்னு என்னடா இந்த மனுசனுக்கு நம்ம மேல பாசம்னு யோசிச்சுட்டே தூங்கிட்டேண்டா” செழியன் சொல்லும் போதே
“அதேதாண்டா,… உங்க மாமா வீட்டுக்கு… எங்க வீட்டுக்குலம் திடீர் விசிட் வந்தார்டா… அந்த ரத்னம் அதே பாச மழை இங்கேயும் பொழிஞ்சார்னா பார்த்துக்கோயேன்…. நானும் நீ என்ன நெனச்சியோ அதேதான் நெனச்சேன்…”
செழியன் சிரித்தபடியே…
“அது ஒண்ணுமில்லடா…. எல்லாம் ஓட்டுக் கணக்குல வந்த பாசம் தான்…. சட்டசபை எலெக்ஷன்ல நிக்கப் போறாராம்… அட அவரை விடு… செல்வி கார்த்திக் இங்க எங்க வந்தாங்க… ரத்னத்துக்கு இவங்க மேரேஜுக்கும் என்ன சம்பந்தம்” மீண்டும் அந்த புகைப்படத்தை உற்றுப் பார்த்தான் செழியன்….
மணக் கோலத்தில் செல்வியும் கார்த்திக்கும்… மணக்கோலத்தில் மட்டுமல்ல… செல்வி திருமதி கார்த்திக் ஆகி விட்டதற்கான சாட்சியாக அவள் கழுத்தில் மாங்கல்யமும்…
செல்வியின் முகத்தைப் பார்த்தபடியே இருந்தவனை முகிலனின் குரல்தான் கலைத்தது….
“அந்த ரத்னம் அவர் மகன் கல்யாண நிகழ்ச்சில… கலப்புத் திருமணம் பத்து ஜோடிக்கு பண்ணினார்… அதுல ஒரு ஜோடி நம்ம பசங்க… “
“இதுல என்ன ஹைலைட்னா… ரத்னம் பையன்.. மத்த ஜோடியைலாம் யாரும் கண்டுக்கல… கார்த்திக் தான் விழா நாயகன்… அந்த கட்சித் தலைவர்…. கார்த்திக்கை கொண்டாடு கொண்டாடுன்னு கொண்டாடிட்டார்… ஒரு சாதிக்கட்சில தீவிர கொள்கையோட இருந்துட்டு அந்த கொள்கையை விட்டு இந்தக் கட்சில சேர்ந்து… நம்ம கொள்கைலாம் வேற யாருக்கோ நமக்கு இல்லைனு சொல்லாமல் அதை செஞ்சு காட்டினதுக்குனு… ஒரே பாராட்டு மழைதான்… உன் மச்சானுக்கு”
சொன்னபடியே
“கார்த்தி அண்ணாக்கு அங்க பாராட்டு மழைனாலும்… ஊர்ல விசயம் தெரிஞ்சு என்னாகுமோ…. அதை விட பெரியப்பா என்ன சொல்வாரோன்னு பயமா இருக்கு… இந்த செல்விப் புள்ளைக்கு லூசு கீசூ பிடிச்சிருச்சா…”
முகிலன் பரிதவிப்போடு பேசினான்….
”செல்வி நல்ல புள்ளைதான்…. கார்த்தி அண்ணா ஏதாவது மிரட்டி இருப்பாரோ….” முகிலன் புலம்பியபடி இர்க்க
செழியனின் பார்வை செல்வியிடமே இருந்தது… அந்தப் புகைப்படத்தில் பார்வையை வைத்தபடியே
“செல்வி கார்த்திக்கை லவ் பண்ணினாளா… அந்த மாதிரி எதுவும் உனக்கு தோணுச்ச்சா… தோண்ற மாதிரி நடந்திருக்காளா…” செழியன் ஆராய்ச்சிக் கேள்விகளை முகிலனிடம் வைத்திருக்க
செழியனின் கேள்விக்கு தலையை மறுப்பாக ஆட்டியபடி
‘ப்ச்ச்… பெரியப்பா வீட்டுக்கு வரும்… போகும்… தனா கூடத்தான் பேச வரும் போகும்… தனா கூடத்தான் பெரும்பாலும்…இருக்கும்… அப்படிலாம் இல்லடா… எனக்கு அந்த மாதிரி ஏதும் தோணினது இல்லை…. “
“கார்த்தி ஏதும் மிரட்டி இருப்பானோ… பாவம்டா செல்வி… நல்ல புள்ள…. அதெல்லாம் லவ் பண்ணுமா” முகிலன் செல்விக்கு ஆதரவாகப் பேச
“ப்ச்ச்…நல்ல புள்ளனா லவ் பண்ணக் கூடாதா..” செழியன் கடுப்பாகக் கேட்க
“டேய்… உனக்கு ஏண்டா குத்துது… ஒரு பேச்சுக்கு சொன்னேன்….” முகிலன் கடுப்பாகச் சொல்ல
“என்னமோ நடந்திருக்குடா… செல்வி முகத்தில் விருப்பமில்லாம நடந்த மேரேஜ் மாதிரி தெரியல…”
செழியன் சொல்ல… அந்த முனையில் இருந்த முகிலன்… தன் அலைபேசியில் இருந்த புகைப்படத்தை மீண்டும் பார்க்க ஆரம்பித்திருந்தவன்
“ஏண்டா … இப்போலாம் யாரை நம்புறதுனே தெரியலையேடா… செல்வியும் தனாவும் தானே ஒண்ணா சுத்துறாங்க…. செல்வியே இப்படினா… ” என முகிலன் ஆரம்பித்த போதே
“காலையிலேயே என்னை கெட்ட வார்த்தை பேச வைக்காத… நீ ஒண்ணும் ’ஆரா’ வை எல்லாம் ஆராய வேண்டாம்… செல்வி கார்த்திக் மேட்டருக்கு மட்டும் வா….” செழியன் முகிலனின் வார்த்தைகளை முடித்து வைத்தவன்… மேலும் செல்வியின் செயல்களுக்கு விளக்கம் வேறு கொடுத்தான்
“செல்வி ஒண்ணும் ’ஆரா’ மாதிரி அம்மா அப்பா அண்ணன்னு அவங்க சொல்றதுக்கு எல்லாம் தலை ஆட்ற பொண்ணு கிடையாதுடா… தெளிவா… தனக்கு தேவையானதை நோக்கித்தான் போவா… நீயே பார்த்துருப்பியே… டாக்டர் சீட் கெடச்சும் வேண்டாம்னு சொல்லிட்டு ஆர்ட்ஸ் காலேஜ்ல படிச்சாதானே…. அவளை எல்லாம் கார்த்திக் மிரட்டிலாம் அடி பணிய வைக்க முடியாது…”
‘அப்புறம் கார்த்தி மச்சானும் அந்த மாதிரி ஆள் கிடையாது… பொண்ணுங்கதான் குடும்பத்தோட மானம்னு நினைக்கிறவரு… கோபப்படுவார்தான்… லவ்லாம் பிடிக்காதுதான்… அவரோட கோபம் வேற மாதிரி இருக்கும்… அதெல்லாம் விட… கமலிதான் அவர் கட்டிக்கிற போற பொண்ணுனு ஒரு நாளும் எல்லை மீறினதில்ல…”
“உன்னை மாதிரி இல்லைனு சொல்லுடா மச்சான்... ” முகிலன் சந்தடி சாக்கில் செழியனையும் குத்திக் காட்டத் தயங்கவில்லை
“டேய்…” செழியன் பல்லைக் கடித்தான்….
“என்ன கோபம்லாம் துரைக்கு வருது… உண்மையைத்தானே சொன்னேன்… லாஸ்ட் டைம் அவளைப் நேர்ல பார்க்கிறப்போ கூட… அதுவும் அது எந்த மாதிரி சிச்சுவேஷன்… அப்போ கூட தண்ணி சொம்பை வாங்கிறதுல உரிமையக் காட்டினவன் தானே…”
“டேய்… நான் என்ன பேசிட்டு இருக்கேன்… நீ என்ன பேசிட்டு இருக்க… சமயம் பார்த்து என்னைக் குத்திக் காட்டலேனா தூக்கம் வராதே…” என்ற செழியன்…
“அவ என் பொண்டாட்டி… அவ்வளவுதான் எனக்கு தெரிஞ்சதெல்லாம்… மத்தவங்களப் பற்றிலாம் கவலை இல்ல”
”இன்னும் மேரேஜ் ஆகல …. அதுவும் ஞாபகம் வச்சுக்கோ….”
“முகிலா… உனக்கு என்னடா பிரச்சனை… நானே மாமாவை நெனச்சு கவலைல இருக்கேன்… ஏற்கனவே இப்போதான் ஹார்ட் அட்டாக்னு ஹாஸ்பிட்டல்ல படுத்து எழுந்து வந்திருக்காரு… அடுத்து இந்த அதிர்ச்சி வேறயா அவருக்கு….” செழியனின் கவலையில் முகிலனும்
“பாவம்டா பெரியப்பா…உங்க குடும்பம் பண்ணின வேலை… அடுத்து கார்த்தி குடிச்சுட்டு சுத்திட்டு இருந்தான்… அடுத்து தனாவோட மேரேஜ் … அதுல நடந்த குளறுபடி…. இதெல்லாம் போதாதுன்னு… இப்போ இது வேற…”
”அதேதாண்டா…”
”ஒரு மனுசன் எவ்ளோதான் தாங்குவாரு… ஆனால் பழகிட்டாருன்னு நினைக்கிறேன்… இதே மனதிடத்துல இருக்கனும்…” செழியன் கவலை கலந்த அக்கறையுடன் சொல்ல
“ஆமாமா… சார் வேற ஷாக்காகிற மாதிரி அவர் மாமாக்கு என்னைக்கு ஹை வோல்டேஜ் ட்ராக் கொடுக்கப் போறிங்களோ…”
செழியன் இதற்குப் பதில் சொல்லவில்லை… மாறாக
“செல்வி குடும்பம்… அதுலயும் அந்த நரேன் வேற என்னச் சொல்லப் போறானோ… கார்த்தி மச்சான் மேல கை அவன் மட்டும் வைச்சான்னு வை… அடுத்த நிமிசம் அவன் காலி…” செழியனின் மாமா மகன் பாசம் அவனையுமறியாமல் வந்திருக்க
“ஏண்டா… அது எப்படிடா இப்படி பேச மனசு வருது….”
“என் மச்சானுக்கும் எனக்கும் ஆயிரம் இருக்கும் அது எங்களோட… இன்னைக்கு அடிச்சிக்கிவோம்…. நாளைக்கே கூடிருவோம்”
முகிலன் இப்போது இன்னும் நக்கலாக
“அது நேத்து வரை… இப்போ கார்த்திக்குக்கு உன்னை விட அந்த நரேனுக்குத்தான் உரிமை சாஸ்தி… தங்கச்சியோட புருசன்…. நரேன் யாரு… பொண்டாட்டியோட அண்ணன்… சோ தங்கச்சியோட புருசன்…. மாமா மகன் அத்தை மகன் பந்தத்தை விட இனி இந்த பந்தம் தான் ஒரு படி முன்னால…. நான் சொன்னது கேட்டுச்சா.. இனி நீயெல்லாம் ஒரு அடி தள்ளிதான் நிக்கனும்”
செழியன் இப்போது வழக்காடாமால் அவனுக்குத் திருப்பி பதிலடி கொடுக்காமல் சில நிமிடம் யோசித்தவன்…. நரேன் பேச்சைத் தவிர்த்தவனாக
“சின்ன மாமாவையே லவ் மேரேஜ்னு தள்ளி வச்சவர்டா எங்க மாமா… சொந்த மகன் இப்படி பண்ணிட்டு வந்து நின்னா எப்படி இருக்கும் அவருக்கு… ரொம்ப பிரச்சனை ஆகிருமோன்னு பயமா இருக்குடா… அவர் என்னடா பாவம் பண்ணினார்… பாசம் வச்சவங்களாம் அவருக்குத் துரோகம் பண்றாங்கடா…. ”
செழியன் ஆராதனாவை எல்லாம் நினைக்காமல் அவனது தாய்மாமன் பற்றிய கவலையில் ஆழ்ந்திருந்தான்….
உறவான நிலவொன்று சதிராட - 16 Teaser
“கொஞ்ச நேரத்துல தலைவர் வருவார்…. கால்ல விழனும்… உனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லதானே…” அமைதியான குரலில் கார்த்திக் அவளுக்கு மட்டுமே கேட்கும் படி சொல்ல…
----
“நான் ரொம்ப அழகா இருக்கனா என்ன… அப்போப்ப ரொமான்ஸா எல்லாம் லுக் விடறீங்க… ” முகம் மாறாமல் சந்தோஷமாக சபையைப் பார்த்தபடியே அவனை வம்பிழுக்க…
“அப்புறம் காயும்மா… நாம எந்த பார்டர்ல இருக்கோம்…” ஆராதனா அவளை ஓட்ட ஆரம்பித்திருக்க….
”போடி…” காயத்ரி இன்னும் வெட்கப்பட்டிருக்க…
----
”அண்ணா இப்படி பண்ணும்னு நான் எதிர்பார்க்கலை செல்வி… நான் காயத்ரி ராஜாக்காகத்தான் அவர்கிட்ட பேசினே…. ஆனா அண்ணா அதுவே இப்படி பண்ணிட்டு வந்து நிக்கும்னு தெரியல… இல்லைனா நான் சொல்லியிருக்கவே மாட்டேன்…” முடித்த போது
ஆராதனா செல்வியின் கண்களை இப்போது பார்க்கவில்லை..
----
“புடவை… இருக்கு… ஹோட்டல்ல ரூம் புக் பண்ணிருக்கேன்… அங்க நாம ரெண்டு பேரும் ட்ரெஸ் மாத்திட்டு மண்டபத்துக்கு கிளம்புறோம்… உன் ஃப்ரெண்ட் காயத்ரியும் ராஜாவும் கூட நம்ம கூடத்தான் வர்றாங்க….”
”ப்ச்ச்… அட்லீஸ்ட் எனக்கு பிடிச்ச கலர் எதுனாலும் கேட்ருக்கலாம்ல…” புடவையை புரட்டி புரட்டிப் பார்த்தபடி செல்வி அவனைப் பார்க்க
“ஏண்டி… நீ உண்மையிலேயே கவலைப்படலையா… இல்ல கவலைப்படாத மாதிரி நடிக்கிறியா…” கார்த்திக் முதன் முதலாக அவளுக்காக அவள் மனதுக்காக கோபப்பட்டிருந்தான்…
---
இதை எப்படி பேசுறதுனும் தெரியல… பேசுறது சரியான்னும் தெரியல… அண்ணியா உன்கிட்ட பேசனுமா… ஃப்ரெண்டா உன் கிட்ட பேசனுமான்னு கூடத் தெரியல” தயங்கியவள்…
“உனக்கு… உன் மனசுக்கு… காதலுக்குனு ஒரு மரியாதை இருக்கு…. அதுக்கான உண்மையான அர்த்தம் கிடைக்காதவரை… உணர்ச்சிகளுக்கு அடிமை ஆகிறாத… என் அண்ணனையும் ஆக்கிறாத” சட்டென்று வெளியேறினாள் அவள் முகத்தைப் பார்க்காமலேயே…
அதே வேகத்தில் மாடியறைக்குச் சென்றவளாக தனிமையில் மௌனமாகக் கதறி அழ ஆரம்பித்திருந்தாள் ஆராதனா…
----
”ஹலோ… நியாயம்னா நியாயம் தான்… “ என்றபடி வேக வேகமாக விரித்தவள்…
“ஹ்ம்ம்… இப்போ படுங்க… ” சொன்னவள்… கட்டிலில் படுத்தும் விட்டாள்…
கார்த்திக்கு என்ன சொல்வதென்றே தெரியாத நிலை…
----
“குட்நைட்… இதானே… நானே சொல்லிட்டேன்… நீ ஒண்ணும் கழட்ட வேண்டாம்…” என்ற போதே
“அட யாருக்கு வேணும் குட்நைட்…” செல்வி மீண்டும் எழுந்து அமர…
---
“ஐயோ… சாபம் பலிச்சிருச்சுனா என்ன பண்றது… மாமா… நீங்க வேணும்னா இப்படி பக்கத்தில படுங்க… நான் விழுந்தா கூட உங்க மேல…” எனும் போதே… கார்த்திக் முறைப்பில்…
Lovely update pravee
Kalyanam epdi
Randu varusam enna achi