ஹாய் ஃப்ரெண்ட்ஸ்....
அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன்....
ஹேப்பி ரீடிங்...
நன்றி
பிரவீணா
அத்தியாயம் 14:
அந்த வார இறுதி நாளான ஞாயிறன்று…
செல்வி…. ஆராதனாவின் வீட்டு முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திய போதே…. ஆராதனாவின் வீட்டின் முன் கிடந்த காலணிகளை பார்த்தவளாக
”யாரா இருக்கும்… தனா அப்பா… இல்ல அவ அண்ணனைப் பார்க்க வந்திருந்தாங்கன்னா… ஜெண்ட்ஸ் செப்பல்தான் இருக்கும்… ஆனா ஃபேமிலியா வந்திருப்பாங்க போல… எல்லாம் கலந்து இருக்கு… இத்தனை பேர் வந்திருக்காங்க…. என்ன விசயமா இருக்கும்… “
யோசித்தபடியே உள்ளே வந்தவளின் யோசனை சரியே என்பது போல… நடுத்தர வய்துடையவர் அவர் மனைவி மகனோடு கார்த்திக் மற்றும் ராஜசேகரோடு பேசிக்கொண்டிருக்க… அனைவரையும் பார்த்தபடி வந்தவள் கடைசியில் பார்வையைக் கார்த்திக்கிடம் முடித்திருக்க… அவனோ இவளை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை….
”வாம்மா செல்வி… “ ராஜசேகர் தான் அவளை வரவேற்றார்… வரவேற்றதோடு மட்டுமல்லாமல் அவளின் பெருமைகளையும் கூடவே அவள் குடும்பத்தின் பெருமையும் பேச ஆரம்பித்திருந்தார்…
“செல்வி… தமிழ்செல்வி உங்க பொண்ணு படிக்கிற காலேஜ்ல எங்க செல்விதான் காலேஜ் டாப்பர்…. உங்க பொண்ணு சொல்லியிருக்கனுமே… அப்பா அம்மாவும் காலேஜ்ல வேலை பார்க்கிறாங்க… நம்ம தனாவோட க்ளோஸ் ஃப்ரெண்ட்… அவங்க அண்ணா சென்னைல சாஃப்ட்வேர் கம்பெனி வச்சிருக்காரு… நம்ம கார்த்திக் ஃப்ரெண்டுதான்… தங்கமான குணம்…” ராஜசேகர் தமிழ்செல்வியின் குடும்பத்தைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்திருக்க… செல்வியால் இப்போது அவர்களைத் தாண்டிச் செல்ல முடியவில்லை…
வேறு வழி இல்லை… அங்கு நின்றாக வேண்டுமே…
கிடைத்த சந்தர்பத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு…கார்த்திக் அமர்ந்திருந்த நாற்காலியின் அருகில் போய் நின்றவளாக…. அனைவருக்கும் வணக்கம் சொல்ல… அதே நேரம் வந்தவர்கள் யாரென தெரியாமல் முகத்தை கேள்வியாக வைக்க…
“உங்க காலேஜ் சேர்மன் காவேரியோட அப்பா…” கார்த்திக் அவளுக்கு விளக்கம் கொடுத்தான் அவள் முகத்தைப் பார்க்காமலேயே….
“அதை முகத்தைப் பார்த்துதான் சொன்னா என்ன….” மனதுக்குள் நினைத்துக் கொண்டவளாக… காவெரியின் பெற்றோரிடம் இரண்டு நிமிடம் நின்று பொதுவாகப் பேசியவள்… சில நிமிடத்திலேயே
“காவேரி வரலையா ஆண்ட்டி…”
“வந்திருக்காம்மா… உள்ள ஆராதனாவோட பேசிட்டு இருக்கா” காவேரியின் தாய் பதில் சொல்லியிருக்க… அதுதான் சாக்கென்று அங்கிருந்து நகன்றவளாக ஆராதனா அறைக்குப் போயிருந்தாள்…
----
அங்கு காவேரி ஆராதனாவோடு பேசிக்கோண்டிருக்க… செல்வியும் அவர்களோடு கலந்து கொண்டாள்… ஒரே கல்லூரி… என்பதால்… அவர்களுக்குள் பேச ஆயிரம் விசயங்கள் இருக்க…. மூவரும் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தனர்….
செல்விக்கும் காவேரியிடம் பேச எந்த உறுத்தலும் இல்லை என்றே சொல்ல வேண்டும்… தானாகாவே காவேரிக்கு வாழ்த்துக்கள் சொல்ல… காவேரியும் அதை ஏற்றுக் கொள்ள… அங்கு கலகலப்பு மட்டுமே…
அப்போது…
“தனா… இங்க வா….” மேகலாவின் குரல் சமயலறையில் இருந்து வந்திருக்க
“இதோ வர்றென்மா… ஏய் நீங்க பேசிட்டு இருங்க… அம்மா கூப்பிடறாங்க” என்ற ஆராதனா வேகமாக அடுத்த நொடி… அங்கிருந்து கிளம்பியிருக்க…
காவேரி ஆச்சரியமாகப் பார்த்தாள் ஆராதனாவை….
கல்லூரியில் அவள் இருப்பதற்கும்… வீட்டில் அவள் இருப்பதற்கும் ஆயிரம் வித்தியாசம் இருந்தது…
கல்லூரியில் ஒரு தோரணையோடு வலம் வருபவள்… இங்கு… அப்பத்தா… அம்மா… அப்பா…. அண்ணன்… தாத்தா என அவர்களின் சொல்லுக்கு இணங்கி நடக்கின்றாள்…
செல்வியிடமே அந்த வித்தியாசத்தைக் தனக்கு வந்த சந்தேகத்தைக் கேட்க…
“எனக்கு அப்படியெல்லாம் வித்தியாசம் தெரியலையே…” செல்வி தன் பதிலைச் சொல்ல காவேரியும் விட்டு விட்டாள்… அதற்கு மேல் அவள் அதை விசாரிக்கவ்வில்லை
----
”நான் தான் முட்டாளா இருந்துட்டேன்…. சின்னப் புள்ளைங்களுக்கு இருக்கிற தெளிவு கூட எனக்கில்ல… கார்த்திக் தம்பியை எதிரியாவே இதுநாள் வரை நெனச்சுட்டு இருந்தேன்… எனக்கு அறிவே இல்லண்ணா… ரெண்டு பேரும் ஒண்ணா தொகுதிக்கு உழச்சிருந்தா எங்கேயோ போயிருப்போம்” காவேரியின் தந்தை ராஜசேகரிடம் புலம்பியவராக
“என் பொண்ணு… உன் பொண்ணு காலெஜ் எலக்ஷன ஒண்ணுமில்லாம பண்ணிட்டாங்க… நான் ஜெயிச்சா என்ன நீ ஜெயிச்சா என்ன… நீ சேர்மனா இரு…. நான் உனக்கு எல்லா விதத்திலயும் உதவியா இருப்பேன்னு தனா சொல்லுச்சாமே… எனக்கு அந்த அறிவில்லாம போயிருச்சு… நம்ம சாதிக் கட்சில இருந்த போதும் இப்போதும்…. கார்த்திக்கைப் பார்த்து பொறாமைப் பட்டு எனக்கே நான் குழி பறிச்சுக்கிட்டேன்… இனி கார்த்தி தம்பிதான் என் பக்கபலம்…. நான் இருக்கேன் தம்பி… கட்சியில இனி உனக்கு செல்வாக்குக்குக்கு குறைச்சல் இல்ல… சேர்ந்தே களம் காணுவோம்…”
கார்த்திக்கும் ஆமோதிப்பபான புன்னகையைக் காட்டி தலை ஆட்டியிருக்க…. காவேரியின் தந்தை இரத்தினம் செருமியவராக
“சரி நான் இப்போ வந்தது என் பொண்ணு காவேரி இங்க வரணும்னு சொன்னதுக்காக மட்டுமில்ல…” என்றவராக…
“அடுத்த வாரம் … என் பையனுக்கு மேரேஜ்… டவுன்லதான் நடக்குது…. அதுக்கு உங்க எல்லாரையும் அழைக்கத்தான்…. “ என்றவாறு தன் மனைவியைப் பார்க்க…
அவர் மனைவி வெள்ளித் தட்டோடு எழ மேகலாவும் அங்கு வந்தார்… ராஜசேகர் மனைவியைக் கண் அசைவிலேயே அங்கு அழைத்திருந்தார்…
“நாம அங்காளி பங்காளியா இருந்தும்… இதுவரை விலகி இருந்துட்டோம்… இனி அப்படி இருக்க வேண்டாம்… உன் பையன் கல்யாணம் மாதிரி நெனச்சு.. கல்யாணத்துக்கு எல்லோரும் வந்துறனும்…. கார்த்தி நீதான் முன்ன நின்னு பண்ணனும்….”
“கண்டிப்பா பண்ணிடலாம் பெரியப்பா…” கார்த்திக் சந்தோசமாகச் சொல்ல
“அதுமட்டுமில்ல… அன்னைக்கு அதே மண்டபத்துல…. ஒரு பத்து பேருக்கு கலப்பு திருமணம் செய்து வைக்கப் போகிறேன்…. சாதி மத வேறுபாடு கலையுறதுதானே நம்ம கட்சியோட முக்கிய கொள்கை… தலைவர் கண்டிப்பா இதை நோட் பண்ணுவாரு… கட்சிக்கும் சந்தோசம்… நமக்கும் பேர் கிடைக்கும்…. இப்படிலாம் பண்ணினாத்தான் பேர் கிடைக்கும்… அதுனால யாரும் தப்பா எடுத்துக்காதீங்க…”
”அதெல்லாம் தப்பா எடுத்துக்கல பெரியப்பா… வேற லெவல்லா ஜமாய்ச்சிறலாம்… மாப்பிள்ளை பொண்ணுலாம் ரெடியா… “ கார்த்திக் கேட்க
”இன்னும் ரெண்டு ஜோடி கிடைக்கனும்…. பார்த்துக்கலாம் விடு…” என்றவர்… பத்திரிக்கையை கொடுத்து விட்டு அமர்ந்த ரத்தினம்…. சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவர்…
பின்… பெருமூச்சு விட்டவராக
“எல்லா விசயமும் கேள்விப்பட்டேன்… கார்த்திக் தம்பி பற்றி… “ என்ற போதே ஒட்டு மொத்த குடும்பத்தின் முகமும் மாறி இருக்க
“உறவு முறைல இதெல்லாம் நடக்கிறது சகஜம் தான் ராஜா… அதுக்காக தங்கச்சி உறவு இல்லைனு ஆகிருமா… ”
இப்போது ராஜசேகர் அமைதியாக அமர்ந்திருக்க… அவரின் பாவனையே அவருக்கு இந்தப் பேச்சு பிடிக்கவில்லை என்பது போல இருக்க
“பொண்ணை வெளில விட்டுட்டோம்… அதுக்காக நம்ம நம்ம வாரிசை விட்ற முடியுமா…”
”பெரியப்பா… காஃபி எடுத்துக்கங்க... பெரியம்மா நீங்களும்…” ஆராதனா அங்கு வந்திருக்க…. காஃபி இருந்த குவளையை எடுத்தவராக
“என் பெரிய பொண்ணு…. என்னமோ இன்டர்ன்ஷிப்னு காலேஜ்ல சொன்னங்கன்னு நம்ம செழியன் தம்பி ஆபிஸ்ல தான் மூனு மாசம் போயிட்டு வந்துச்சு…. செழியன் தம்பிதான் செர்டிஃபிகேட்லாம் கொடுத்துச்சு…”
ஆராதனா அனைவருக்கும் காஃபியைக் கொடுத்து விட்டு… தனது அறைக்குச் சென்று செல்வி காவேரியோடு சேர்ந்து கொண்டாள்…
---
“என் பொண்ணுக்கு பேசலாம்னு இருக்கேன்…. எல்லாம் விசாரிச்சுட்டேன்… கார்த்திக்குத்தான் பொண்ணு பேசி வச்சுருந்தீங்க… ஆனா செழியன் மாப்பிள்ளைக்கு அப்படியெல்லாம் பேசி வைக்கலன்னு கேள்விப்பட்டேன்…… நான் பேசலாம்தானே” எனும் போதே ராஜசேகரின் இரத்தம் கொதிக்க ஆரம்பித்தது தான்…
என்ன கொதித்து என்ன பிரயோஜனம்… தங்கையே இனி இல்லை எனும் போது… தங்கை மகன் , மருமகன் உரிமை மட்டும் எங்கிருந்து வரும்…
“உங்க பொண்ணு… நீங்க கொடுக்க நினக்கிறீங்க…. இதுல நாங்க என்ன சொல்ல…” ராஜசேகர் எப்படியோ தடுமாற்றம் இல்லாமல் தோரணை குறையாமல் சொல்லி முடித்திருக்க….
“காவேரி விசயம் இல்லேண்ணா… நான் இது கூட கேட்ருக்க மாட்டேன்… நேரா திலகா தங்கச்சி வீட்ல நின்றுப்பேன்… மாப்பிள்ளைய பக்கத்தில பார்த்து நானே பிரமிச்சுட்டேன்… நம்ம ஊர்ல தான் சின்ன வயசில வளர்ந்த பையன்னு சொன்னா நம்ம மாட்டாங்க… அப்போதே முடிவு பண்ணிட்டேன்… என் பெரிய பொண்ணை கொடுக்கனும்னு… கொட்டிக் கொடுக்கலாம்… இப்படி ஒரு மருமகனுக்கு… என் பொண்ணும் சாஃப்ட்வேர்ல தான் இருக்கு… அவருக்கேத்த மாதிரி மாடர்னான பொண்ணுதான்….” ஆராதனாவைப் பார்த்து விட்டு சொன்னாரா… இல்லை இயல்பாக அவரிடமிருந்து வந்ததா… அவருக்கே தெரியவில்லை… மொத்த குடும்பத்தின் மனநிலை புரியாமல் ராஜசேகரிடம் அவர் செழியனைப் பற்றி பேசிக் கொண்டிருக்க…
இங்கோ பெண்கள் மூவரும் இருந்த அறையில்
“ம்க்கும்… எங்க அக்கா அப்படியே சரின்னு சொல்லிருவா…” காவேரி இழுத்தாள் அப்படி ஒரு சலிப்பாக…
”ஏன் … என்னாச்சு… ” ஆராதனா சட்டென்று கேட்க
“அந்த செழியனுக்குத்தானே…. எங்க அக்கா இதைக் கேட்டு ஓடாம இருந்தா சரி….
”ஏப் உங்க அக்கா வேற யாரைவது லவ் பண்றாங்களா…” ஆராதனா கண்களில் ஆர்வத்துடன்… ஒரு வேகத்துடனும் கேட்க
”அதெல்லாம் இல்ல…” காவேரி தயங்க…. ஆராதனவோ ஏமாற்ற பாவனையோடு முகத்தை மாற்றி இருக்க
செல்வி இப்போது இடையிட்டாள்……
“தனா… புரியலையா… யுவர் ப்ளட்… சேம் ப்ளட்… ப்ராஜெக்ட் போன இடத்துல இவ அக்கா ஏதோ சொதப்பல் பண்ணியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்…. மிஸ்டர் பெர்ஃபெக்ட் நம்ம செழியண்ணே டோஸ் விட்ருப்பாங்க… இதான் நடந்திருக்கும் “ செல்வி சரியாகக் கணித்திருக்க
“அதே அதே…. அந்த அண்ணாவை அக்காக்கு பிடிக்கவே பிடிக்காது… எப்டிடா மூணு மாசம் முடியும்… செர்ட்டிஃபிகேட் வாங்கிட்டு தப்பிச்சு வரணும்னு வந்தா… அப்பாக்கு இந்த எண்ணம் இருக்குன்னு என் அக்காக்கு மட்டும் தெரிஞ்சது அவ்ளோதான்…” காவேரி கொஞ்சம் கலவரத்துடன் சொல்ல…
செல்வி ஆராதனாவைப் பார்த்து சிரிக்க… ஆராதனா முகத்திலோ பெரிதாக மாற்றமில்லை
“தனா என்னடி உனக்கு ஒரு கூட்டாளி கிடச்சிருக்கு…. நீயும் உன் பங்குக்கு தாளி…” செல்வி சொல்ல
“ப்ச்ச்… அத்தை மகன்னு ஒரு உரிமை இருந்துச்சு… ரெண்டு வார்த்தை பேசினேன்…. இப்போ அதுவும் இல்லை… அப்புறம் எதுக்கு அவங்களப் பற்றி பேச… ஒதுங்கியிறதுதான் உத்தமம்… “
செல்வியும் விட்டு விட… ஆராதனாவோ ஏதோ யோசித்தவளாக் இப்போது காவேரியிடம்
“படிக்கிற இடத்துல… வேலை பார்க்கிற இடத்துல பிஹேவ் பண்றதுக்கும்… புருசன் பொண்டாட்டியா வாழ்றதுக்கும் வித்தியாசம் இருக்குதானே… உங்க அக்காக்கு அதைப் புரிய வை.. ” என்ற ஆராதனாவைப் பார்த்த செல்வி
”யாரு நம்ம தனாவா… அதுவும் எங்க செழியன் அண்ணனனுக்கு ஆதரவாக…. அடடே ஆச்சரியக் குறி…”
“ஏய்…. இது அப்படில்ல… விலை போகாத பொருளுக்கு மார்கெட்ல கொஞ்சம் விளம்பரம் பண்ணுவோமே அந்த… அந்த மாதிரி… நானே என் அத்தை பையனுக்கு சப்போர்ட் பண்ணலைனா எப்படிடி…” எனும் போதே ஆராதனா அவளையும் மீறி சிரித்து விட…
இப்போதுதான் காவேரி அரண்டவளாக…
“அடிப்பாவி தனா …. மாமா மக நீயே இப்படி பேசினா…”
”ஏய் சீரியஸா… என் அத்தை பையன் நல்ல பையன் தான்ப்பா… என்ன உங்க அக்காவை JEEE…. NEET…. இதுக்கெல்லாம் ப்ரிபேர் பண்ணச் சொல்லு… கொஸ்ட்டீன் கேட்கும் போது தெரியலேண்ணா… ஃபர்ஸ்ட் நைட்ல கூடப் படிக்க வச்சு ஆன்சர் சொல்ல வச்சுட்டுத்தான் அடுத்த கட்டமே…”
”ஆன்சர் தெரியலேண்ணா... ” காவேரி அவளையுமறியாமல் பாவமாகக் கேட்க
“உங்க அக்காக்கு பொட்டி படுக்கை எல்லாம் கட்டி விட்டு உங்க வீட்ல உட்கார்ந்து படிச்சுட்டு மெதுவா வரச் சொல்லிருவாரு… ” சிரிக்காமல் ஆராதனா சொல்லி முடிக்க… காவேரி ஆராதனா உண்மை சொல்கிறாளா இல்லை பொய் சொல்கிறாளா… என்ற பாவனையில்
“ஏய் இவ உண்மை சொல்றாளா… இல்லை சும்மா ஓட்றாளாடி….” செல்வியிடம் கேட்க
செல்வி காவேரியிடம்
“கொஞ்சம் உண்மை… கொஞ்சம் பொய்…. ஒரு நாள் அவகிட்ட செழியன்னா கொஸ்ட்டீன் கேட்டு தெரியும்னு சொல்லி மாட்டிகிட்டா… அதுக்கப்புறம் அந்த சப்ஜெக்ட் முடிக்கிற வரை விடலை… படிக்க வச்சிட்டுத்தான் விட்டாரு… அந்தக் காண்டுல சொல்றா…”
“இல்லேண்ணாலும்… ” ஆராதனா நீட்டி முழங்க…
காவேரி இப்போது….
“இப்படி ஒரு மாமா எனக்கு வந்தா… ஆத்தி யோசிக்கும் போதே… கதி கலங்குதே… வேண்டாம்பா… எங்க அக்காவே ஓகே சொன்னா கூட நான் வேண்டாம்னு சொல்லிருவேன்…”
“ஹலோ சும்மா சொன்னேண்டி… நான் முதல்ல சொன்னதுதான்… கல்யாணம் பண்ணிட்டு வர்ற பொண்ணுகிட்ட கணக்குப் பாடம் எடுக்கிற அளவு எங்க அய்த்தான் கிடையாது…. ஆனால்…. பொண்ணோட தங்கச்சிகிட்ட வேணும்னா” என இழுக்க…
“அய்யோ… இந்தப் பையனுக்கு எங்க வீட்டு மாப்பிள்ளை போஸ்ட் கட்… ஆனா எங்க அப்பா கேட்கனுமே… கடவுளே எங்க அக்கா கூட இந்த பையனுக்கு சாதகப் பொருத்தம் சுத்தமா இருக்கக் கூடாது”
“ஏய் பார்த்துடி… அக்கா ஜாதகம் பொருத்தம் சரி இல்லை… தங்கச்சிக்கு பாருங்கன்னு சொல்லிறப் போறாங்க… சரியா சாமிகிட்ட வேண்டிக்க…”
“போங்கடி போங்க… எங்க செழியண்ணாக்கு எப்படிப்பட்ட பொண்ணு வரும்னு பாருங்க..” செல்வி பழிப்புக் காட்ட
“வரும் வரும்… வரும் போதும் நாமளும் பார்க்கலாம் ” என்றவள்… சட்டென்று செழியன் பேச்சை விட்டவளாக
“ஏன் காவேரி… உங்க அண்ணா மேரேஜ் அன்னைக்கு எங்க அம்மாவோட பெரியப்பா வீட்லயும் ஃபங்க்ஷன்…. நாங்க திருச்சிக்கு போயிருவோமே… மூணு நாளைக்கு முன்னாடியே கிளம்புறோம்... அனேகமா உங்க வீட்டு ஃபங்க்ஷனுக்கு அண்ணாதான் வருவாங்கன்னு நினைக்கிறேன்…”
காவேரி ஏமாற்றத்துடன் தன் தோழியைப் பார்த்து…
“அப்போ நீ வரமாட்டியா… “ என்று கவலையுடன் கேட்டுக் கொண்டிருக்க… அதே நேரம் வெளியே காவேரிக்கு அழைப்பு வந்திருக்க… காவேரியும் மற்றதெல்லாம் விட்டவளாக
“தேங்க்ஸ் ஆராதனா… எலெக்ஷன்ல எனக்காக விட்டுக் கொடுத்ததுக்கு….”
“அதெல்லாம் ஒரு பெரிய விசயமே இல்ல…. எத்தன தடவைதான் தேங்க்ஸ் சொல்லுவ…” என்றவாரு ஆராதனாவும் புன்னகைக்க… செல்வியும் அவர்களின் புன்னகையில் சேர்ந்து கொண்டாள்…
---
கார்த்திக் பிறந்த நாளின் முன் தினம்….
“ஏய் செல்வி…” அலைபேசியில் ஆராதனா கத்திய கத்தலில் செல்வியின் காது சுடாகியிருக்க…. இருந்த போதும்
“ஏண்டி இப்படி கத்துற…” செல்வி சாதாரணமாகக் கேட்டாள்
“நீ எங்க இருக்க…. காலேஜ் முடிச்சதும் நேரா வீட்டுக்த்தானே வரச் சொன்னேன்… இப்போ நைட் லேட்டா வருவேன்னு சொல்ற… உங்க வீட்லதானே எல்லா ஏற்பாடும் பண்றோம்… அதானே ப்ளான் நீ இப்படி பண்ணுனா என்னடி அர்த்தம்…” தோழியிடம் கத்தினாள் அலைபெசியில் ஆராதனா
‘நீ உங்க அண்ணனுக்காக அவர் பிறந்த நாளுக்காக பண்ற… என்னை எதுக்கு கூட்டு சேர்க்கிற…” செல்வி நக்கலாகச் சொல்ல
“என்ன சொல்ற… உன்னோட சேர்ந்துதானே உங்க அண்னாகிட்ட ஹெல்ப் கேட்டுத்தானே எல்லாம் பண்ணினோம்…. உங்க அண்ணா நாம சொன்ன மாதிரி எங்க அண்ணாகிட்ட போன்ல பேசி… நைட் வரைக்கும் பஸ்ஸ்டாண்ட்ல வெயிட் பண்ண வைக்கிறேன்னு சொல்லிட்டாரு… நீ என்னடி இடையில சொதப்புற….” ஆராதனா கடுப்பாகவும் கோபமாகவும் பேச ஆரம்பித்திருக்க…
“அது உன் ப்ளான்… என் ஆளுக்கு நான் தனியா ப்ளான் எக்ஸிகியூட் பண்ணிட்டேனே… “ செல்வி உற்சாகமான கலகலப்பான குரலில் தோழியிடம் சொல்ல
“என்ன செல்வி சொல்ற…” ஆராதனா குழம்பிய குரலில் கேட்டாள்…
“உங்க அண்ணா… எங்க அண்ணா கூட நைட் கரெக்டா வந்திருவேன் தனா செல்லம்…. கவலைப்படாத உன் ப்ளான் சொதப்பாதுன்னு நினைக்கிறேன்…. “
”ஹ்ம்ம்ம்… என்னடி சொல்ற சொதப்பிற மாட்டியே…. உன் அண்ணாக்கும் உன் ப்ளான் தெரியாதுதானே…” என்றபோதே
“எந்த தங்கச்சியாவது லவ் ப்ரப்போஸ் பண்ணும் போது அண்ணனை வச்சு ப்ளான் பண்ணுவாளா… சோ ஓன் அண்ட் ஒன்லி கார்த்திக் தமிழ்செல்வி மட்டுமே”
ஆராதனா அமைதி ஆகி இருக்க
“ஓய்…. சிஸ்டர் இன் லா…. என்ன சைலண்ட் ஆகிட்ட”
”பார்த்துடி… அண்ணா உன்னை ஹர்ட் பண்ணிறப் போகுதுடி… “ ஆராதனாவின் குரலில் தழுதழுப்பு வந்திருக்க.. தன் அண்ணனின் குணம் தெரிந்த தங்கையாக… … தன் தோழிக்கான வருத்தம்…
”வேற வழி இல்லடி…எனக்கே தெரியல… இது எங்க போய் முடியும்னு…. ஆனால் என்ன அவமானம்… தோல்வி வந்தாலும்… என் கார்த்திக் மனசில இடம் பிடிக்க முடிவு பண்ணிட்டேன்… “ என்ற செல்வியின் குரலில் சற்று முன் இருந்த விளையாட்டுத்தனமெல்லாம் இல்லை…
”சரி நான் வைக்கவா…. கேக் ஆர்டர் பண்ணியிருந்தேன்…. வந்துருச்சு…” என்றபடி சட்டென்று செல்வி வைத்திருந்தாள்..
---
”டேய் என்னடா மச்சான் சொல்ற… நீ ஓகே தானே… சொல்லு நா காரை எடுத்துட்டு ஸ்பாட்டுக்கே வந்துரவா… உனக்கு ஏண்டா இந்த வேண்டாத வேலை… எப்போதும் போல உன் பிஎம்டபிள்யூ தேரையே எடுத்துட்டு வர வேண்டியதுதானே…” கார்த்திக் நரேனிடம் திட்டல் பாதி… அக்கறை பாதி என கலந்து பேச
“டேய் டேய் பேச நேரம் இல்லைடா… ஃபோன்ல வேற சார்ஜ் இல்ல… திட்றதுனா... நேர்ல வர்றேன் அப்போ திட்டு”
“ம்க்கும் இது வேறயா… சரி சொல்லு… நான் என்னதான் பண்ண… உன்னைக் கூட்டிட்டு வர்றேன்… நைட் 10 மணிக்குத்தான் வீட்டுக்கு வருவேன்னு சொல்லி இருக்கேன்… ஏற்கனவே நான் பண்ணி வச்ச வேலைல… என்னை தனியா அனுப்புறதுக்கே… இல்லனா லேட் ஆனாலே வீட்ல பதட்டம் ஆகிறாங்க… பொம்பளப் புள்ளைய வெளிய அனுப்பின மாதிரி ஃபோன் மேல ஃபோன் போட்டு கொல்றாங்க….”
“ப்ச்ச்.. மச்சான்… 11 மணிக்கெல்லாம் வந்துருவேண்டா… அதுவரைக்கும் வெயிட் பண்ணுடா… போன் ஸ்விட்ச் ஆஃப் பண்றேன்…. பக்கத்துல வந்ததும் ஆன் பண்றேன்…. போயிறாதடா மச்சான்…. உன்னை நம்பிதாண்டா வர்றேன்.. ஒரே பையண்டா எங்க வீட்டுக்கு” நரேன் சொல்லியபடி போனை வைத்துவிட…
”இவன் ஏன் இன்னைக்கு இவ்ளோ சீன் போட்றான்…. சம்பந்தமே இல்லாம பேசுறான்… ஒண்ணும் சரி இல்லையே… அதெல்லாம் விட இவன்லாம் பஸ்லலாம் வர்ற கேஸே கிடையாதே…. ஹ்ம்ம்ம்.. வரட்டும்…. வந்ததும் கிழிக்கிறேன்…” என்றபடி அந்த பஸ்ஸ்டாண்டை சுற்றிப் பார்த்த கார்த்திக்…. தனது மொபைலை எடுத்தபடி… அதைப் பார்த்தபடி… தனது காருக்குள் உட்காரப் போக… அப்போது எதோ தோன்ற நிமிர்ந்து பார்க்க…. அந்த பேருந்து நிலையத்தில் இருந்த ஒரு கடையில் இருந்து…. செல்வி வெளியே வந்து கொண்டிருக்க… ஏனோ அவன் முகத்தில் அப்படி இரு கோபம்.. வேகமாக தன் கைக்கடிகாரத்தைப் பார்க்க… அது 8 மணி என்று காட்டியிருக்க
“மணி என்னாச்சு… இவ இன்னும் வீட்டுக்குப் போகலையா… இவ்ளோ நேரமாச்சும்… இன்னும் இங்க சுத்திட்டு இருக்கா..” பல்லைக் கடித்தபடி வாய் விட்டே அவளைத் திட்ட ஆரம்பித்திருக்க….
செல்வி சரியாக அதே நேரம்…. அவனைப் பார்த்து கை ஆட்டியபடி… தான் அங்கே வருவதாகச் சொல்லியபடி அவனை நோக்கி சர்வ சாதரணமாக நடந்து வந்து கொண்டிருக்க
“கடவுளே” தலையிலடிக்க மட்டுமே இவனால் முடிந்தது…
---
”ஹாய்…. அண்ணா எப்போ வரும்…. 8.30 க்குலாம் இங்க வந்து நிற்கிறேன்னு சொன்னுச்சே… என்னையும் வெயிட் பண்ணச் சொன்னுச்சே“
“என்னது…. உன்னையும் இங்க வந்து நிற்கச் சொன்னானா” கார்த்திக்கின் மொத்த கோபமும் தன் நண்பன் மேல் சென்றிருந்தது….
வேக வேகமாகத் தலையாட்டினாள் செல்வி….
“என்னோட ஃப்ரெண்டு ஒருத்தி ஃபிவர்னு காலேஜ் வரலை… அவளுக்கு இந்த ஒன் வீக் நோட்ஸெல்லாம் கொடுத்துட்டு வர்றேன்னு அப்பா அம்மாகிட்ட சொல்லிட்டு… அண்ணாகிட்டயும் சொன்னேன்… அண்ணா இன்னைக்கு வர்ரேன்னு சொல்லிட்டு… என்னையும் அவன் ஃப்ரெண்டோட கார்ல பிக் அப் பண்ணிட்டு போறேன்னு சொன்னுச்சே…. “ என்றவள்… சுற்றி முற்றிப் பார்த்து விட்டு… அவன் காரையும் பார்த்தவளாக
“ஓ அந்த ஃப்ரெண்ட் நீங்கதானா.. உங்க கார்லதானா” ஒன்றுமே தெரியாதவள் போல் அப்பாவியாக முகத்தை வைத்தவள்…
”அண்ணா ஃபோனுக்கு போன் போட்டா ஸ்விட்ச் ஆஃப்னு வருதே…. என்னாச்சு… உங்களுக்கு பேசுச்சா…” தன் தோழி ஆராதனாக்கு மட்டுமல்ல தன் அண்ணன் நரேனுக்கும் தெரியாமல் தன் திட்டத்தைப் போட்டிருந்தாள் செல்வி….
ஆராதனா திட்டம்…. நரேன் கார்த்திக்கை 12 மணி அளவில் ஊருக்கு கூட்டி வர வேண்டும் என்பது…
அதன்படி நரேனும் சென்னையில் இருந்து பேருந்தில் வருவதாகச் சொல்லி கார்த்திக்கின் உதவி வேண்டியிருக்க… அவனும் அழைத்துப் போவதாக சொல்லி இருக்க… வேண்டுமென்றே தாமதமாகக் கிளம்பியவன்… பஸ் ப்ரேக் டவுன் என்றும்… போன் ஸ்விட்ச் ஆஃப் என்றும் கார்த்திக்கிடம் சொல்லி தன் பங்கு நாடகத்தை முடித்திருக்க…
ஆராதனா திட்டம் தெரிந்தவள் தானே…. அதனால் தன் அண்ணன் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்த பிறகு செல்வி கார்த்திக்கிடம் வந்து நின்றாள்…
இதெல்லாம் அறியாத கார்த்திக்… நரேனுக்கும் சேர்த்து செல்வியை முறைத்தவாறே
“ஹ்ம்ம்….. உங்க நொண்… அண்ணன் வர லேட்டாகுமாம்… பாசமலர் உன்கிட்ட சொல்லலையா” நக்கலும் கடுப்புமாக கார்த்திக் கேட்க
“என்னது அண்ணன் வர லேட்டாகுமா… ஐயையோ மணி இப்போவே எட்டாகிருச்சே…. நான் எங்க அண்ணனை நம்பி கடைசி பஸ்ஸையும் விட்டுட்டேனே…. ஐயோ நான் எப்படி ஊருக்குப் போறது…” வராத அழுகுரலில் செல்வி நடித்திருக்க
”ஏய்… அடங்குறியா… இப்போது எதுக்கு கத்தி கூப்பாடு போட்ற…. இப்போ என்ன… நீ ஊருக்கு போகனும் தானே…. இரு…” என்றவாறு சுற்றி முற்றி ஏதாவது வாகனம் இருக்கின்றதா என்று பார்க்க
“ஹலோ…. ஹலோ எங்க அண்ணா வர்றார்னுதான் நான் இன்னைக்கு லேட் பண்ணினேன்… என்ன வேற யார்கூடயோ அனுப்ப ப்ளான் பண்றீங்களா…. எங்க அண்ணா எத்தனை மணிக்கு வந்தாலும் இருந்து அவர்கூடத்தான் போவேன்…” இப்போது பாவம் போல் குரல் தொய்வாக மாறி இருக்க… கார்த்திக் இப்போது திட்ட வில்லை…
கடைசியாக… எப்படியோ அவள் பிடிவாதம் ஜெயித்திருக்க…
“சரி….சரி கார்ல உட்காரு…. வெளில நின்னு மானத்தை வாங்காத….”
“ஓகே…. கார்ல ஏசி போட்டுக்கலாம “ என்ற வாறு…. அவனின் கோபத்தை எல்லாம் கண்டு கொள்ளாமல்…. வேகமாக முன் இருக்கையை நோக்கிப் போக
”ஏய்…. அங்க எங்க போற…. பின்னால உட்காரு….’’
“ஓ….கே பாஸ்…. “ என்றவள்…. பின்
“பாஸ்… இந்த பாக்ஸைக் கொஞ்சம் பிடிச்சுக்கறீங்களா….” கார்த்திக் முறைக்க
“ஏன் சார் பிடிச்சா குறஞ்சு போயிருவீங்களா… என்னயவா பிடிக்கச் சொன்னேன்ன்… பாக்ஸைத்தானே…” என்ற போதே கார்த்திக்கின் பார்வை ஆக்ரோசத்தின் எல்லைக்குச் செல்ல ஆரம்பித்திருக்க…
“சரி சரி முறைக்காதீங்க” என்றபடி பின் சீட்டில் அமர்ந்தவள்…
“நீங்களும் வாங்களேன்… பேசிட்டு இருந்தால் நேரம் போறது தெரியாதுள்ள” என்று வேறு அவனை அழைத்தாள் அடுத்து அவனிடமிருந்து அர்ச்சனை வரும் என்று எதிர்பார்த்தே…
“ஏய்… ஒழுங்கா பேசாமல் இருந்தா உங்க அண்ணன் முகத்துக்காக பேசாமல் இருப்பேன்… இல்ல… ஃப்ரெண்ட் தங்கைனு கூட பார்க்க மாட்டேன்… விட்டுட்டு போயிட்டே இருப்பேன்”
“ஓ…. அப்போ தங்கச்சியோட ஃப்ரெண்டுனு பார்க்க… லா … , மே” கார்த்திக் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க ஆரம்பித்திருக்க… செல்வியின் வார்த்தைகளும்…. மெல்ல மெல்ல அடங்கி பின்
“சரி சரி…. ஃப்ரெண்டோட தங்கச்சின்னு பார்க்க வேண்டாம்.… தங்கச்சியோட ஃப்ரெண்டுன்னு பார்க்க வேண்டாம்... “ சமாதானமாக ஆரம்பித்தவள்.. அப்போதும் விடாமல்.…
“உங்க கேர்ள்… ஃப்ரெண்” என தன் வழக்கமான பாடத்தை ஆரம்பித்திருக்க… சடாரென கார்த்த்திக் மூடிய அவனது கார்க் கதவின் சத்தத்தில் செல்வி ஆரம்பித்த வார்த்தைகள் வெளியே வராமல் காருக்குள்ளேயே அடங்கி இருந்தது…
---
மணி பத்தரையைத் தாண்டி இருக்க…. கார்த்தில் காருக்குள் அமராமல்… வெளியிலேயே சுற்றிக் கொண்டிருக்க… செல்வியோ அலைபேசியில் ஆராதனாவோடு பேசிக் கொண்டிருந்தாள்…
”ஏண்டி…. உனக்கு உன் லவ்வ ப்ரப்போஸ் பண்றதுக்கு வேற நாளே கிடைக்கலையா…. நான் ப்ளான் பண்ணும் போது நீ ஏன் இடையில வந்த….”
“ஆமா உன் அண்ணன் அப்படியே நான் சொன்னவுடனே காதல் மழைய பொழியப் போகுதாக்கும்…. நீ வேற”
“அப்புறம் ஏன்…. எங்கண்ணனாச்சும் ஒழுங்கானாச்சும் பிறந்த நாள் கொண்டாட விட்ருக்கலாம்ல… ஃபர்ஸ்ட் டைம் அதுக்கு பிறந்த நாள் சர்ப்ரைஸ் கொடுக்க நெனச்சா…” ஆராதனா புலம்பிய போதே
“அது நானாத்தான் இருக்கனும் தனா…” செல்வியின் குரலில் அத்தனை தீவிரம்…. இது நாள் வரை ஆராதனா உணராதது….
“ஏய் அண்ணா உன் மனசைக் கஷ்டப்படுத்திறப் போகுதுடி….” ஆராதனா கலங்கிய குரலில் சொன்னாள்… தோழிக்கு ஏதாவது அவமானம் வந்து விடுமோ என்ற அச்சத்தில்…மறுபடி மறுபடி ஆராதனா அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்…
“எது வந்தாலும்… என் கார்த்தி மாமாவை நான் விட்டுப் போக மாட்டேண்டி…. நீ பார்க்கத்தான் போற…. நானும் அவங்களும் வாழப் போற வாழ்க்கையை…”
எதிர் முனையில் இருந்த ஆராதனா அமைதியைக் கடைப்பிடித்திருக்க….
“இந்த தமிழ்ச்செல்வி தான் என் உயிர்னு உங்கண்ணன் சொல்ற நாள் சீக்கிரம் வரும்… நடத்திக் காட்டுவேன்…” என்றபடி வெளியே பார்த்தாள்… கார்த்திக்கை தேடவும் ஆரம்பித்தாள்…
”ஏய் வைடி… உங்கிட்ட பேசிட்டு இருந்த நேரத்துல என் பார்வைல இருந்து உன் அண்ணன் எஸ் ஆகிட்டாரு… வை வை…”
“உன்னலாம்… வீட்டுக்கு மட்டும் எங்க அண்ணனைக் கூட்டிட்டு வராமல் இரு… அப்புறம் இருக்குடி உனக்கு…” என்ற ஆராதனா கடுப்பான போதே… வேகமாக போனை வைத்திருந்தாள் செல்வி இந்த முனையில்
“என்ன நம்ம ஆளைக் காணோம்…” என்று யோசித்தபடியே காரில் இருந்து இறங்கி வெளியே வந்தவள்… அவனைத் தேட…. அவனோ அங்கிருந்த டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருக்க….
“உள்ள ஒருத்தி இருக்காளே…. அவளுக்கு ஏதாவது வேணுமான்னு கேட்கத்தோணுச்சா… செல்விம்மா… உன் பாடு படு திண்டாட்டம் தான் போல….” கைகளை வானத்தை நோக்கி காட்டியபடி தனக்குள் செல்வி பேசிக் கொண்டிருக்க… கார்த்திக்கும் சரியாக அங்கு வந்து சேர்ந்திருந்தான்…
வந்தவனோ…. அவள் பக்கமே வராமல் அவளைச் சுற்றிப் போய் ஓட்டுநர் இருக்கையில் போய் அமர்ந்து விட…. செல்வியும் வேகமாக உள்ளே அமர்ந்தவள் அவனைப் பார்க்க… அவனோ… கண்களை மூடியபடி இருக்கையில் சாய்ந்திருக்க….
“எல்ஸ்கியூஸ் மீ….”
“ஏய்…. வாயை மூடிட்டு இருன்னு சொன்னேன்… ஏதாவது நொய் நொய்னு பேசுன….”
“எங்க அண்ணன் எப்போ வரும்….”
“ஹ்ம்ம்ம்… அதை உங்க அண்ணாகிட்ட கேளு….”
”அதான் அண்ணன் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகிருக்கே…. இல்லைனா நான் கேட்ருக்க மாட்டேனா…. சரி… விடுங்க ஏதாவது பாட்டு போடுங்க… பேசவும் கூடாதுன்னு சொல்லிட்டீங்க… அட்லீஸ்ட் பாட்டாவது கேட்டுட்டு டைமக் கடத்துவேன்ல…”
“அன்னைக்கே சொல்லிட்டேன்…. என் கார் செல்வின்ற பேர் இருக்கிறவங்களுக்கு பாட்டெல்லாம் பாடாதுன்னு”
கார்த்திக் வழக்கம் போலவே அவளிடம் சுள்ளென்று தான் விழுந்தான்…. வழக்கம் போல செல்வியும் அதைத் தட்டி விட்டவளாக
“ஓ…. உங்க கார்… உங்க செட்… ஆனால் என்கிட்ட மொபைல் இருக்கே…. அது பாடுமே… உங்க கார்கிட்ட சொல்லி… காதை மூடிக்கச் சொல்லிருங்க….” என்றபடியே தன் அலைபேசியில் பாடலை வைத்தாள்…
“எனக்கும் என் ஃப்ரெண்டுக்கு ரொம்ப பிடிச்ச பாடல்…” என்ற போதே அவளின் அலைபேசி கார்த்திக்கின் கைகளில் வந்திருந்தது… அவள் சொன்ன வேகத்திலேயே கார்த்திக் எட்டிப் பறித்திருக்க… செல்வியும் எதிர்பார்த்தவள் போல அலட்சியமாக தோளைக் குலுக்கியபடி அமர்ந்திருக்க
“ஏய் என்ன பிரச்சனை பண்னனும்னு வந்துருக்கியா” அவனது குரல் உயர்ந்திருக்க….
செல்வி நிமிர்ந்து பார்த்திருக்க…. கார்த்த்க்கின் முகத்திலோ ருத்திர தாண்டவ பாவம் வந்திருக்க…. உள்ளுக்கு கலவரம் மூண்டாலும் அதை எல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு
“ப்ரச்சனை பண்ணலாம் வரலை…. “ என்றவள் ஒரு நிமிடம் தயங்கியவள்… எச்சிலை மிடறு விழுங்கியவளாக சட்டென்று
“ஹேப்பி பர்த்டே கார்த்திக் மாமா” வேக வேகமாகச் சொன்னவள்…. அதே வேகத்தில்
“ஐ லவ் யூ கார்த்திக் மாமா” எங்கு இடையில் நிறுத்தினாள் அவன் அடுத்து என்ன சொல்வானோ பண்ணுவானோ என பட படவென்று சொல்லி முடித்து அவனைப் பார்த்தபோதே.,… அவனது கை அவளது கன்னத்தின் அருகே வந்து உயர்ந்து… அப்படியே நின்றிருக்க…
செல்வியின் கண்களில் கலவரமும்…. காதலும்…. கலந்த கண்ணீர் வந்து நின்றிருக்க… இருந்தும் அடக்கியவளாக
வேகமாக பின்னால் திரும்பி அட்டை பெட்டியை ஒப்பன் செய்து….
“ப்ளீஸ் இந்த கேக் உங்களுக்காக வாங்கினது…. உங்க பிறந்த நாளுக்கு வாங்கினது…. என் மேல என்ன கோபம்னாலும் அதை அப்புறம் பார்த்துக்கலாம்… ப்ளீஸ் வெட்டுங்க எனக்காக.”
அடுத்த நிமிடம் கேக் வெளியே பறந்திருந்தது…. அது பறந்த வேகமே அவனின் பெருங்கோபத்தை பறை சாற்றி இருந்தது….
உறவான நிலவொன்று சதிராட - 15 Teaser
“ஏண்டா நீ அவ அண்னன் தானே…. விசயத்ததை சொன்னா… இதுதானாடா உன் ரியாக்ஷன்….”
---
”டேய் நான் பார்த்துக்கிறேன்…. என் தங்கச்சி பற்றி இனி நீ கவலைப்படாத அவ உன் வழியில் இனி வரமாட்டா…” என்று முடிக்க… செல்வி ஏதோ பேசப் போக…. நரேன் ஒரு முறைத்தான் முறைத்தான்…. அவ்வளவுதான் செல்வி சட்டென்று அடங்கினாள்…
---
ஆனால் கோபப்பட்டாலும்… தன் அண்ணன் கேக்கை வெட்டுவான் என்ற நம்பிக்கை மட்டுமே இருக்க… ஆனால் ஏதும் சொல்லாமல்
“அப்பா… அம்மா… அவதான் ஆடினான்னா நீங்களுமா….” என்றபடி பொய்க்கோபத்தை மட்டுமே கார்த்திக் காட்ட … ஆராதனாவால் தன் கண்களையே நம்ப முடியவில்லை….
---
ராஜசேகர் இப்போது…
”அம்மா செல்வி இங்க வா…” செல்வியை அழைக்க… செல்வி அவர் அருகே பவ்யமாகப் போய் நிற்க…
---
“ப்ச்ச்… அதெல்லாம் இல்லடா… அவளுக்கு ஒரு வாழ்க்கை… கொழந்தைனு… இனி என்ன…” எங்கோ பார்த்த நரேனின் கண்களில் விரக்தி மட்டுமே இருக்க…
---
“ஆமாடி… கார்த்தி அண்ணாக்கு உன்னை ஜோடி சேர்க்க முடியாதுன்னு தெரியும்…இன்னொரு அண்ணன் இருந்திருந்தா என் செல்வி எனக்கு அண்ணியா வந்துருப்பாளே…. ஏன் இல்லைனு திட்டுவேன்…”
”அவ்ளோ பிடிக்குமா என்னை… சொல்லவே இல்லையே” செல்வி குறும்ப்போடு கேட்க
---
“என்னன்னு தெரியல… நைட் எனக்கு கால் பண்ணி வர்றீங்களா மாப்பிள்ளை… மினிஸ்டருக்குலாம் ரூம் போட்ருக்கேன்…. உங்களுக்கும் போடவான்னு கேட்டார்டா… தீடீர்னு என்னடா இந்த மனுசனுக்கு நம்ம மேல பாசம்னு யோசிச்சுட்டே தூங்கிட்டேண்டா” செழியன் சொல்லும் போதே
“அதேதாண்டா,… உங்க மாமா வீட்டுக்கு… எங்க வீட்டுக்குலம் திடீர் விசிட் வந்தார்டா… பாச மழை பொழிஞ்சார்னா பார்த்துக்கோயேன்…. நானும் நீ என்ன நெனச்சியோ அதேதான் நெனச்சேன்…”
--
“செல்வி ஒண்ணும் ஆரா மாதிரி அம்மா அப்பா அண்ணன்னு அவங்க சொல்றதுக்கு தலை ஆட்ற பொண்ணு கிடையாதுடா… தெளிவா… தனக்கு தேவையானதை நோக்கித்தான் போவா… நீயே பார்த்துருப்பியே… டாக்டர் சீட் கெடச்சும் வேண்டாம்னு சொல்லிட்டு ஆர்ட்ஸ் காலேஜ்ல படிச்சா தானே…. அவளை எல்லாம் கார்த்திக் மிரட்டிலாம் அடி பணிய வைக்க முடியாது…”
‘அப்புறம் கார்த்தி மச்சானும் அந்த மாதிரி ஆள் கிடையாது… பொண்ணுங்கதான் குடும்பத்தோட மானம்னு நினைக்கிறவரு… கோபப்படுவார்தான்… லவ்லாம் பிடிக்காதுதான்… அவரோட கோபம் வேற மாதிரி இருக்கும்… அதெல்லாம் விட… கமலிதான் அவர் கட்டிக்கிற போற பொண்ணுனு ஒரு நாளும் எல்லை மீறினதில்ல…”
“உன்னை மாதிரி இல்லைனு சொல்லுடா மச்சான்... ”
“டேய்…” செழியன் பல்லைக் கடித்தான்….
====
Lovely update praveee
Selvi theeviram karthi manam iranguma
Aara ponnu diff tan
Manasula edo iruku purinjukka mudila
மேடம் டீசர் விட்டு ஒரு வாரம் ஆகிடுச்சு. இன்னும் எபி போட மாற்றிங்களே
Nice episode. From the beginning you are showing Aradhana character in enigma.
Very nice. Congratulates for your fasr epi similarly you put soon next epi.