”உனக்கு எப்போதுமே அவதான் முக்கியம்… தனா தனான்னு… மெடிக்கல் சீட் கெடச்சு கூட போக மாட்டேன்னு சொல்லிட்டு… ஆராதனா கூட படிக்கிறேன்னு சொன்னப்போதே உன்னை கண்டிச்சுருக்கனும்… எவ்ளோ நாள் நீயும் அவளும் ஒண்ணாவே இருப்பீங்கன்னு நானும் பார்க்கிறேன்” கடுப்போடு தன் மகளிடம் சொல்ல…
---
“அவளைப் பொண்ணு பார்க்க வர்றாங்கம்மா… பொண்ணு பார்க்க வர்றாங்கன்னா… கிட்டத்தட்ட நிச்சயம் மாதிரிதான்… டேட் கூட ஃபிக்ஸ் பண்ணிட்டாங்களாம்… அடுத்த வாரத்துக்கு அடுத்த வாரம்…”
அதிர்ச்சியுடன் செல்வியின் தாயும் தந்தையும் பார்க்க
---
“என்ன ராஜா… உன் தங்கச்சிங்க வந்தா தானே உங்க வீடு களை கட்டும்… பொண்ணு கொடுக்கலைன்னு பெரிய தங்கச்சியோட சண்டை போட்டுட்ட… அப்போ என்ன அமெரிக்கால இருந்து பூர்ணி வருதா…”
கார்த்திக் இப்போது கோபமாக வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வந்த போதே… இராஜசேகர் மகனைப் பார்வையால் அடக்கியவராக…
---
“பாட்டி… தனா எங்க…” கண்ணாத்தாள் பாட்டியிடம் கேட்க…
“நான் எங்க போய்ச் சொல்லுவேன்… யார்கிட்ட சொல்லுவே… என் பேத்தி இங்க வந்து விளக்கேத்த முடியலை… இப்போ என் குடும்ப குத்து விளக்கு யார் வீட்டுக்கோ போகப் போகுதே” செல்வியின் வார்த்தைகளைக் கண்டுகொள்ளாமல் கண்ணாத்தாள் பாட்டி புலம்பிக் கொண்டிருக்க…
---
“முறச்சுதானே பார்த்தேன்… அப்படியும் பார்க்கக் கூடாது… முறைக்கவும் கூடாதுன்னா என்ன அர்த்தம்… என் கண்ணு… என் பார்வை… அதை எப்படி வேணும்னாலும் நான் பார்ப்பேன்… அதை கேட்கிறதுக்கெல்லாம் உங்களுக்கு ரைட்ஸ் கிடையாது…” செல்வியும் படபடவென்று சொல்ல
“உன் பார்வைதான்… ஆனா அது என்னைப் பார்க்குது… என்ன தைரியம் இருந்தா முறச்சுப் பார்த்துட்டுப் போவ” கார்த்தில் பல்லைக் கடித்துக் கொண்டு கேட்க
----
செல்வி குழம்பியவளாக…
“எல்லாமே சரி தனா… உன் அப்பா… அண்ணா குடும்பம்… இதெல்லாம் இருக்கட்டும்… உனக்கும் மனசு இருக்குதானே… அதுல கனவு கற்பனை இருக்கும் தானே.. நீ லவ் பண்ணலதான்… ஆனாலும் உனக்குனு எதிர்பார்பு…. ஆசை இதெல்லாம் உனக்குனு வரப்போறவங்ககிட்ட இருக்கும்ல…”
ஆராதனா அவள் முன் வந்து நின்றாள்….
---
“இவன் மட்டும் ஒழுங்காக இருந்திருந்தால்… ஆராதனாவுக்கு இப்படி ஒரு அவசர திருமணம் நடக்க இருக்குமா… “ அந்தக் கோபத்தில் தான் கார்த்திக்கையும் முறைத்தது…
---
”போட்டோல விட… இதுல அண்ணா இன்னும் நல்லா இருக்கார்டி… ஸ்டைலாவும் இருக்காங்கடி…” அவளையுமறியாமல் உறவு முறையும் வந்திருக்க…
ஆராதனா புன்னகைத்தாள் திருப்தியான பாவத்தோடு…
----
“ஷ… ஷண்முகம் மாமாக்கு….” ஆராதனா தடுமாறி பின் சொல்ல
“என்னது மாமாவா… ஹப்பா… என் ஹார்ட் சில்லு சில்லா உடையுதே… இந்த மாமான்ற வார்த்தைல… மாமாவா… இது எப்போலருந்துடி…” செல்வி வேகமாகக் கேட்க… தோழியின் திருமணம் பற்றிய நேற்றைய சஞ்சலம் எல்லாம் இல்லை… செல்வியும் தோழியுடன் ஐக்கியமாகி இருந்தாள்…
---
அனைவரும் ஷண்முகத்தைப் பார்க்க…
“நான் ஆரா… ஆராதனாவோட பேசனும்…” மொத்த கூட்டமும் அவனை வைத்த விழி வாங்காமல் பார்க்க…
“ஜஸ்ட் பத்து நிமிசம் போதும்… ஆரா கூட பேசனும்” இப்போது அவன் ஆராதனாவைப் பார்க்க… ஆராதனாவிடமோ சலனமில்லாத பாவம்… அதே நேரம்
---
“ஆனால் நீ என்னை ’ஷாம்’ னு கூப்பிடலாம்… நீ அப்படி கூப்பிடனும்னு என்னோட ஆசை…” கண்களில் காதல் மட்டுமே நிரம்பி வழிய அவன் பேச ஆரம்பிக்க… ஆராதனா குழப்பம் பாதி.. ஆச்சரியம் பாதி என அவனையேப் பார்த்தபடி இருக்க… அவனோ தொடர்ந்தான்…