அத்தியாயம் 97-1:
/* பரவசம் பரவசம்நெஞ்சிலே பரவுதே
எந்தன் தேகம் உந்தன் வாசம் வீசுகின்றதே
புது சுகம் புது சுகம் என்னை வந்து சூழுதே
உந்தன் பார்வை ஒன்றில் நானும் வீழுகின்றதே
அலையோ தாலாட்டு பாட கடலும் கரை சேர்ந்ததே
என்னுள் நீ உன்னை தேடகவிதை உருவானதே
உண்மை சொன்னால் வேறென்ன வேண்டும்
எந்தன் மூச்சில் உந்தன் வாசம்ஒன்று போதும்
நெஞ்சுக்குள்ளே நீ விழுந்தாய்
நான் உன்னை கொஞ்சம் கோர்த்து வைத்தேன்
என்னோடு..*/
பவித்ர விகாஸ்...
"மேடம்… சார் வரச் சொல்லிருந்தாங்க” என்றபடி அந்த வக்கீல் உள்ளே வந்திருக்க… அவரை வரவேற்ற வைதேகிக்கோ ஒன்றும் புரியவில்லை…
‘வந்தவர் அவர்களின் குடும்ப வக்கிலும் இல்லை… வேறு யாராக இருக்கும்…’ தனக்குள் யோசித்தார் வைதேகி
பெரும்பாலும் இவர் பார்வைக்கே வராது இந்த மாதிரியான சட்டப்பூர்வமான விசயங்கள் எல்லாம்… இங்கேயும் வைத்து பேச மாட்டார் நாராயணன் ... அப்படி இருக்க இன்று மட்டும் ஏன்?... யோசித்தபடியே தன் கணவரிடம் சென்றார் வைதேகி… விசயத்தையும் சொல்ல… அவரும் கேட்டுக் கொண்டவராக…
”அர்ஜூன் வந்துட்டானா… அவன் தான் வரச் சொல்லி இருந்தான்… கண்மணிக்காக” நாராயண குருக்கள் என்னவோ சாதாரணமாகத்தான் சொன்னார்… ஆனால் அதைக் கேட்ட வைதேகிதான் பத்ரகாளியாக மாறி இருந்தார்
“என்ன நடக்குது இங்க… வக்கீல் எல்லாம் எதுக்கு… அவ என்னடான்னா விரதம் இருக்கேன்னு பிடிவாதம் பிடிச்சு மயங்கி விழுந்து… எழுந்து உட்கார்ந்திருக்கா… வயித்துல புள்ள இருக்குனு அவளுக்கு தெரியுமா?? தெரிந்திருந்தால் இப்படி உண்ணாவிரதம் இருக்கேன்னு வயித்தைக் காயப்போடுவாளா..??... காலையில இருந்து நான் இப்படி கவலைப்பட்டுட்டு இருக்கேன்… நீங்க என்னடான்னா இப்போ இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போட்றீங்க…”
நாராயணன் தன் மனைவியைக் கோபத்துடன் பார்த்து முறைத்த போதே…
“முறைக்காதீங்கோ… சரி மாப்பிள்ளை மேல வருத்தத்துல வந்திருக்கா… ரெண்டு நாள்ல இல்ல ஒரு வாரத்துல அவளாவே சரி ஆகிருவான்னு நான் நெனச்சுட்டு இருந்தா.. இங்க நடக்கிறது ஏதுமே சரியா இல்லையே…” கோபத்தொணி புலம்பலுக்கு மாறியிருக்க
“இல்ல நான் தெரியாமல் தான் நான் கேட்கிறேன்… பிடிக்காத புருசனோடத்தான் குடும்பம் நடத்தி… இன்னைக்கு புள்ளையவும் சுமத்துட்டு இருப்பாளா… இப்போ வக்கி்ல் வருகிற அளவுக்கு என்ன நடந்துச்சு” எனும் போதே
“கன்சீவா இருக்கேன்னு கண்மணி என்னைக்காவது உன்கிட்ட சொன்னாளா…” நாராயணன் அமைதியாக மனைவியைப் பார்த்து கேட்க… வைதேகி அதிர்ந்து பார்த்த போதே
“அர்ஜூன் சொன்னானே…..”
“காட்டினானே” வைதேகிக்கு நாவறண்டிருக்க… மனமோ கண்டதையும் நினைத்து குழம்ப ஆரம்பித்து இருந்தது..
“அதேதான்… அர்ஜூன் சொன்னான்… அவ்ளோதானே… வேற எப்படி நமக்கு தெரியும்… அதே போல இப்போ நம்ம பேத்தி கர்ப்பமா இருக்காள்னு தெரியுமா உனக்கு…. அர்ஜூன் சொன்னப்போ இருந்திருக்கலாம்… இடைப்பட்ட இவ்ளோ நாள்ள ஏதாவது ஆகியிருக்கலாம்ல…”
“வாயை மூடுங்க…” என்றார் வைதேகி பட்டென்று
“வைதேகி எல்லா பக்கமும் யோசி… அவ கோவிச்சுட்டு வந்ததுக்கு அது கூட காரணமா இருக்கலாம் தானே… பொறுமையா இரு… ரிஷி இன்னைக்கு வர்றாரு… சொல்லப்போனால் அர்ஜூனோ இல்லை நானோ எதையும் இனிஷியேட் பண்ணலை… ரிஷிதான் இதுக்கு முழு முதற் காரணமுமே.. ஐ மீன் வக்கில்.. இன்னைக்கு மீட்டிங்… டைவர்ஸ்… எல்லாத்துக்குமே “
வைதேகிக்கு அடுத்த அதிர்ச்சி… என்னது ரிஷிதான் விவாகரத்து கோருகிறானா…
அங்கேயே அமர்ந்து புலம்ப ஆரம்பித்து விட்டார் வைதேகி…
“அன்னைக்கே சொன்னேனே… அவன் என் பேத்திகிட்ட வந்து இப்படி கேட்டான்னு… அவன் வந்து அவளை மேரேஜ் பண்ணக் கேட்டதை என்கிட்ட சொன்னப்போ என் பேத்தி முகத்தில அப்படி ஒரு வருத்தம்… இவன்லாம் வந்து கேட்கிற நிலைமல என்னை விட்டுட்டீங்களேன்னு சொல்லாமல் சொன்னுச்சு அவ முகத்தில இருந்த வேதனை… அது தாங்காமல்தான் உங்ககிட்ட வந்து சொன்னேனே… ஆனால் எதையுமே தடுத்த நிறுத்த முடியலையே… ஒரு வேளை நான் அர்ஜூன் கிட்ட சொல்லாமல் இருந்திருந்தால்… இந்தக் கல்யாணமே… நடந்திருக்காதோ… பெருமாளே எல்லாம் என்னாலதானா…” தன்னையும் நொந்து கொண்டார்…
”அந்த ரிஷிக்கு, அவன் குடும்பத்துக்கு என் பேத்தி அன்னைக்குத் தேவைப்பட்டாள்… இன்னைக்குத் தேவைப்படலையாமா… இன்னைக்கு வரட்டும் அவனுக்கு இருக்கு” ஒரு பக்கம் தன் பேத்தியின் நிலையை நினைத்து புலம்பினாலும்… இன்னொரு பக்கம் ரிஷியைத் திட்டவும் ஆரம்பித்திருக்க… அதே நேரம் அர்ஜூனும் சரியாக வந்திருக்க… அவ்வளவுதான் அவனையும் பந்தாடி விட்டார் வைதேகி…
“எல்லாரும் என் மக வாழ்க்கைல விளையாண்டது பத்தாதுன்னு என் பேத்தி வாழ்க்கைலயும் விளையாட்றீங்களே… இன்னைக்கு அவ கேட்டாள்னு டைவர்சுக்கு பேரனும் தாத்தாவும் ஆளா பறக்குறீங்கள்ள… அன்னைக்கு அவ கட்டாயக் கல்யாணத்தை தடுத்து நிறுத்திருந்திருக்கலாமே… எங்கே போனது… உங்க பண பலமும்.. அதிகாரமும்… என்னமோ பேத்தி பேத்தினு உருகுனீங்க… அவ பாதுகாப்பு முக்கியம்னு மூச்சுக்கு முந்நூறு முறை சொல்றீங்களே…. உங்களால அன்னைக்கு அவ கல்யாணத்தை தடுத்து நிறுத்த முடிந்ததா… முடியலைதானே... இவங்கதான் அவளோட பாதுகாப்புக்கு உத்தரவாதமாம்… அப்படி இனி மார்தட்டிட்டு சொல்லாதீங்க...”
”பாட்டி…” அர்ஜூன் வைதேகியை ஆறுதல் படுத்த முயல…
”என்னதான் இருந்தாலும் என் பொண்ணோட புருசன்கிட்ட நெருங்க முடியலதானே… அவரோட முடிவுதான் பவித்ரா விசயத்துலயும்… இப்போ என் பேத்தி விசயத்துலயும் “ சொல்லி முடிக்க வில்லை… நாராயணன் வைதேகியின் கழுத்தைப் பிடித்திருக்க…
“யாரைப் பற்றி… யார்கிட்ட பேசுற… கொன்னுருவேன்…. “ வெகு நாட்களுக்குப் பிறகு நாராயணன் வெகுண்டிருக்க… அர்ஜூன் தான் நாராயணனிடமிருந்து வைதேகியை தன்வசம் கொண்டு வந்தவனாக
“தாத்தா… என்னது இது… பொம்மனாட்டி மேல கை வைக்கிற அளவுக்கு…” என்று… வைதேகியைச் சமாதானப்படுத்திக் கொண்டிருக்கும் போதே… ரிஷியும் பார்த்திபனும்… வந்திருப்பதாகச் தகவல் அனுப்பப்பட்டிருக்க… வக்கீலுடன் வந்திருக்கிறார்களா என்பதை உறுதி செய்தபின் தான் அவர்கள் இருவரையும் உள்ளேயே வர அனுமதித்தான் அர்ஜூன்
---
அந்த பிரமாண்ட வரவேற்பறையில்… நாராயணன் வைதேகி ஒருபுறமும்… ரிஷியும் பார்த்திபனும் ஒரு புறமும் அமர்ந்திருக்க… கூடவே அவரவர் பக்க வக்கில்களும் அவரவர் புறம்…
அதெல்லாம் ஒரு புறம் இருக்க… வந்திருந்த ரிஷியையும் வைதேகியின் கோபம் விட்டு வைக்கவில்லை…. வீட்டின் உள்ளே வந்தபின் வழக்கம் போல வைதேகிப் பாட்டியைப் பார்த்து ரிஷி புன்னகை முகம் காட்டி இருக்க… வைதேகியே அவனை முறைத்தபடி வேறுபுறம் திரும்பி விட்டார்…
ரிஷியால் பெருமூச்சைத்தான் விட முடிந்தது… ஆனால் அவனுக்கு வைதேகியின் கோபமா இப்போது முக்கியம்… இந்த ஒருவார காலமாக தன் கண்ணிலேயே படாமல் கண்ணாமூச்சி விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கும் அவன் மனைவிதானே முக்கியம்… கண்கள் அலைப்பாய்ந்தன… அந்த வீட்டைச் சுற்றி… இங்கிருந்து வருவாளா… அங்கிருந்து வருவாள என… நாலாபுறமும் தேடியபடி இருந்தவனின் அவஸ்தை அவன் மட்டுமே உணரக் கூடியது… அவளை எந்த அளவு தேடுகிறான் என அந்த நொடிதான் அவனுக்கே புரிந்தது… அவனுக்கே ஒரு மாதிரி உள்ளுக்குள் அவஸ்தையான உணர்வு… ஒரு பக்கம் அவளைப் பார்க்கப் போகும் பரவசமா… பதட்டமா தெரியவில்லை… ஏசியிலும் வியர்த்தார்ப் போல ஒரு உணர்வு…
என்னவோ முதன் முதலாக தனக்குப் பிடித்த பெண்ணை… அவள் வீட்டில் சென்று பெண் பார்க்கப் போகும் புது மாப்பிள்ளை போல் தன்னை தன் படபடப்பை உணர்ந்தான் ரிஷி… அந்த எண்ணம் தோன்றிய போதே…
“என்னது புதுமாப்பிள்ளையா…” ஒரு வேளை காலையில் பூமி பூஜைக்காக கட்டியிருந்த வேஷ்டியோடு இங்கும் வந்ததால்… அப்படி ஓர் எண்ணம் தோன்றியதோ.. தன்னையே நினைத்து… தன் எண்ணத்தை நினைத்து தனக்குள் உள்ளுக்குள் சிரித்தும் கொண்டான் ரிஷி….
அதே நேரம் இப்படி தன்னைத் தவிக்க விடுபவள் மேல் கோபம் இல்லாமல் இருக்குமா என்ன… அது ஒரு புறமும் அவனை பந்தாடிக் கொண்டிருந்தது..
ஆனால் அனைத்துமே… கண்மணி வரும் வரைதான்… மாடிப்படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்த கண்மணியைப் பார்க்கும் வரைதான்…. அவளைப் பார்த்த பின்னரோ…. கண்மணி… அவள் மட்டுமே அவன் கண்களில்… அவள் எண்ணங்களில்… மற்ற அனைத்துமே… படபடப்பு… கோபம்… ஏன் அங்கிருந்த நபர்கள் முதல் தாங்கள் இருந்த இடம் வரை அனைத்துமே ஒரே நொடியில் மந்திர அழிப்பான் மூலம் அழிக்கப்பட்டது போல… கண்மணி மட்டுமே அவன் கண் கண்ட அத்தனை காட்சிகளுக்கும் தரிசனம் கொடுத்திருக்க… ரிஷியைப் பொறுத்தவரை அங்கு அப்போது அவனும் அவன் மனைவியும் மட்டுமே என்பது போல… அவன் பார்வையும் அவளிடம் மட்டுமே மையம் கொண்டிருந்தது….
தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து கண்மணியையே பார்த்தபடி… அவள் இறங்கி வருவதையேப் பார்த்தபடி இருந்தவன்… அவள் எப்போது கண் தன்னை கொண்டு பார்ப்பாள் என அவள் முகத்தையே பார்த்தபடி இருக்க… அருகில் … சுற்றிலும் இருந்தவர்களைப் பற்றி எல்லாம் அவன் கவலைப்படவே இல்லை…
ஆனால் அவன் அருகில் அமர்ந்திருந்த பார்த்திபன் நிலைதான் பரிதாபமான நிலை…
ஆம்... பார்த்திபன் கண்மணியையும் பார்த்தான்… தன் அருகில் அமர்ந்து அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் ரிஷியைப் பார்த்தான்…
கண்மணி… அவளோ ரிஷியை ஏறெடுத்து கூடப் பார்க்காமல் சாதாரணமாக மேலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருக்க…. அவளுக்கு மாறாக ரிஷியோ ஆவென்று கண்மணியைப் பார்த்துக் கொண்டிருந்தான் விழி அகற்றாமல்…
ஒரு வாரம் ஆகியிருக்குமா… இவன் அவளைப் பிரிந்து… என்னமோ வருடக்கணக்கில் பார்க்காதது போல இப்படி பார்க்கிறான்… விட்டால் அவளைப் பார்வையாலேயே விழுங்கி கபளீகரம் செய்து விடுவான் போல… கண்மணி அவன் மனைவிதான் இல்லை என்று சொல்ல வில்லை… அதற்காக இப்படியா!!!… பார்த்திபன் தலையிலடித்துக் கொள்ளாத குறையாக அமர்ந்திருக்க
அவன் அருகில் இருந்த வக்கீலோ
“சார்… நாம வந்திருக்கிறது டைவர்ஸ் ரிலேட்டடா தானே… ரிஷி சாரைப் பார்த்தால் அப்படி தெரியலையே… பொண்ணு பார்க்க வந்தது மாதிரி அவங்களை இப்படி பார்த்துட்டு இருக்காரு… நம்மள வச்சு காமெடி கீமெடி பண்ணலையே”
பார்த்திபன் கடுப்பாக வக்கில்லைப் பார்த்தபடி…
“காமெடி… கீமெடி கிடையாது… கன்ஃபார்மா அப்படித்தான்…” இவர்கள் இப்படி தங்களுக்குள் ரிஷியை வைத்துப் பேசிக் கொண்டிருக்க… ரிஷி அதை எல்லாம் கவனிக்கும் நிலையிலா இருந்தான்…
ரிஷியின் நிலையே இப்படி என்றால்… கண்மணிக்கோ… கேட்கவா வேண்டும்…
அர்ஜூன் முன் செல்ல அவன் பின்னால் மாடிப்படியில் இறங்க ஆரம்பித்த போதே… அவள் மனதில்… ஆயிரம் வண்ணத்துப்பூச்சிகள் படபடக்க ஆரம்பித்திருந்தன…
”என் ரிஷிக்கண்ணா…” மனம் துடிக்க ஆரம்பித்து… விழியோ அவள் ரிஷிக்கண்ணாவைப் பார்க்க எத்தனித்த போதே… தான் எடுத்த முடிவும் ஞாபகம் வந்திருக்க… தன்னையே விறைப்பாக்கிக் கொண்டவள்… முகத்தை இயல்பாக வைத்தபடி இறங்க ஆரம்பித்திருந்தாள்…
என்னதான் முயன்றாலும் அவனைத் தவிர்க்க முடியுமா என்ன… அவனைப் பார்க்க விழி உயர்த்தியபோதே… அத்தனை பேரும் கண்மணியையே பார்த்தபடி கீழே வரவேற்பறை சோபாவில் அமர்ந்திருக்க… வேறு வழியின்றி அவனைப் பார்க்காதது போல இறங்கி வந்தவள்… கடைசிப்படிக்கு இரண்டு படிகள் இருக்கும் போது… யார் என்ன சொன்னால் என்ன… யார் எப்படி பார்த்தால் என்ன.. தன் முன் ரிஷி… கிடைக்கும் வாய்ப்பை ஏன் நழுவ விட வேண்டும்…
அவள் பிடிவாதமும்… கட்டுப்பாடுகளும் அவள் முன் அவன் வராதவரைதான்… ஆக தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அவனைப் பார்க்கத் தொடங்கி இருக்க……
இதற்குத்தானே காத்திருந்தான் அவளது கணவனும்… வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தது எதற்காக… இந்தத் தருணத்திற்காகத்தானே… விடுவானா… சட்டென்று அவளைப் பார்த்து கண்சிமிட்டியவன்… அதோடும் நிறுத்தாமல் மிக இலேசாக இதழ் குவித்தும் அவள் ரிஷிக்கண்ணாவாக அவளிடம் தன் குறும்புத்தனத்தைக் காட்டியிருக்க…
கீழே அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் கண்மணியையே பார்த்துக் கொண்டிருந்ததால்… ரிஷியின் செய்கைகளை சேட்டைகளைப் பார்த்திருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்க… ஆனால் இறங்கி வந்து கொண்டிருந்தது கண்மணி மட்டுமா… அவளுடன் அர்ஜூனும் அல்லவா… கண்மணி எப்போது மாடிப்படியில் இறங்க ஆரம்பித்தாளோ… அந்த நொடியில் இருந்து அவளை ரிஷி பார்த்த விதம்… அதைப் பார்த்த அர்ஜூனுக்குள் அவன் இரத்தத்தில் கொந்தளிப்பைக் கொண்டு வந்திருக்க…
எல்லாவற்றிருக்கும் மேலாக… அந்தக் கண்சிமிட்டலும்… கடைசியில் முத்தாய்ப்பாக ரிஷியின் உதடு குவித்த முத்தமும்… அர்ஜூனுக்கு இரத்த அழுத்தம் தானாகவே வந்திருக்க… அதே நேரம்… ரிஷி வேகமாக பதட்டமாக தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழ ஆரம்பித்திருக்க… இவன் ஏன் இவ்வளவு பதட்டமாகிறான்… அவனையே பார்த்தபடி யோசித்துக் கொண்டிருந்த போதே… ரிஷி அவர்கள் அருகில் வந்திருக்க… இப்போது சுதாரித்து அர்ஜூன் கண்மணியைப் பார்க்க.. கண்மணியோ ரிஷியின் கை வளைவில்…
அர்ஜூன் கவனம் சிதறிய நிமிடம் இதோ…
கண்மணி ரிஷியின் பார்வை தந்த தாக்கத்தில் தன்னை மறந்து… இரண்டாவது படியில் இருந்து நேராக… தரையில் காலை வைத்து தடுமாறி இருக்க…
ரிஷி கனகச்சிதமாக கண்மணியை நெருங்கிய நிமிடங்களும் அதுவே…
சில எட்டுக்களில்… கண்மணியின் அருகில் வந்து கண்மணியைக் கைப்பிடித்து இல்லையில்லை அவள் இடைதொட்டு நிறுத்தி இருந்தான் ரிஷி…
கண் இமைக்கும் நேரத்தில் ரிஷி அர்ஜூக்கும் கண்மணிக்கும் இடையே வந்திருந்தான்… அதோடு மட்டுமல்லாமல்… கண்மணியை விடாமல் கையணைவிலேயே வைத்தபடியே…
“சாரி… மேடம் நீங்க கீழ விழுந்துருப்பீங்க… அதான்… யூ நோ... பேசிக்கலி... ஐ ஆம் ஹெல்ப்பிங் மைண்டட் பெர்சன்.... நான் உதவி பண்றதை என்னாலேயே கட்டுப்படுத்தமுடியாது... அது ரத்தத்திலேயே ஊறியிருக்கு.. யாரா இருந்தாலும்… ஐ மீன் பொண்ணோ பையனோ யாரா இருந்தாலும் நான் இதைத்தான் பண்ணியிருப்பேன்… மற்றபடி எந்த தப்பான எண்ணத்திலும் இல்லை” எனும் போதே ரிஷியைக் கண்மணி முறைத்திருந்தாள்…
காரணம் அவன் இடை உணர்ந்த அவன் கரங்களின் அழுத்தம்… கணவனாக அதன் உரிமையைச் சொல்லி இருக்க.. பல்லைக் கடித்தாள் கண்மணி… கூடவே கோபத்தால் அவள் மூக்கின் நுனியும் கோவைப்பழமாக மாறி இருக்க…
வழக்கம் போல ரிஷியின் பார்வை அவள் அணிந்திருந்த மூக்குத்தியை தொட்டுச் சென்றதுதான்… உரிமையாக அதைத் தொட்டு அவளைக் கிண்டல் செய்ய நினைத்த போதே… அடுத்த நொடியே… இருக்குமிடம் உணர்ந்தவனாக… அவளை விட்டு விட்டு தன் இடத்திலேயே வந்து அமர்ந்தவன்… அப்போதும் தன் பார்வையை கண்மணியிடமிருந்து மாற்றிக் கொள்ளவில்லையே… அவளையே பார்த்தபடி சோபாவில் அமர்ந்தான்…. அமர்ந்தவனின் பார்வை தன்னவளைப் தொடர்ந்தபடியே தன் பயணத்தையும் ஆரம்பித்தது,,,
ஆக மொத்தம் கண்மணியை இப்படி பார்த்தே அவளை ஒரு வழி செய்ய முடிவு கட்டி வந்திருந்தான் போல ரிஷி… கண்மணிக்குத்தான் இப்போது விலாங்கு மீன் நிலை…. இருந்தும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவளாக…. அமைதியாக நாராயணனின் அருகில் அமர… ரிஷியின் பார்வை பயணம் அவளைத் தொடர்ந்து பயணித்தபடியே அவள் அமர்ந்தவுடன் தன் பயணத்தை நிறுத்தி அவளிடம் நிலைத்தும் நின்று விட்டது… கண்மணி நிமிர்ந்தால் ரிஷியின் துளைக்கும் ஊசிப் பார்வையைத்தான் எதிர் கொள்ள வேண்டிய நிலைமை… அது துளைக்கும் பார்வையோ… ஊசிப் பார்வையோ… அதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவளா அவள்… அவனைப் பார்க்க… அவன் பார்வையைப் பார்க்க அவளுக்கும் ஆசைதான்… ஆனால் அது முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருந்தாளே… அவனுக்கான தன் அத்தனை ஏக்கத்தையும் மறைத்து அவனைத் தவிர மற்ற அனைவரையும் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்…
ரிஷி அழைத்து வந்த வக்கீல் தான் இப்போது பேச ஆரம்பித்தார்… அவர் பேச ஆரம்பித்த போதே… அவரைத் தடுத்து நிறுத்திய அர்ஜூன்…
“மியூச்சுவல் கன்செர்னுக்கு எதுக்கு லாயர்… பேச்சு… நேரா ஃபைல் பண்ணியிருக்கலாமே…” அர்ஜூன் சட்டென்று கேட்க
“சார்… எல்லாம் ஓகே… ஆனால் ஃபைல் பண்றதுக்கு முன்னால சில பாயிண்ட்ஸ் என் கட்சிக்காரர் டிஸ்கஸ் பண்ணனும்னு நினைக்கிறார்…” வக்கில் பதில் கொடுத்தார்…. ரிஷி அமைதியாக அமர்ந்தபடி கண்களுக்கு மட்டுமே வேலையைக் கொடுத்திருந்தான்…
”ஒகே பேசுங்க…” அர்ஜூன் வார்த்தைகளை கடுப்புடன் வழக்கறிஞரிடம் எறிந்திருந்தாலும்… அவன் பார்வையோ ரிஷியை மட்டுமே எரித்தபடி இருந்தது…
”அவங்க ரெண்டு பேர் மட்டும் தனியா…” என வக்கீல் ஆரம்பித்த போதே…
”ஏன் இவர் இங்க பேச மாட்டாராமா… ” அர்ஜூன் சீற ஆரம்பித்திருக்க
“ரிஷி சார் எதையும் லீகலா ப்ரொசீட் பண்ணனும்னு நினைக்கிறார்” என ரிஷியைப் பார்க்க… ரிஷியும் உலகத்திலேயே மிக நல்ல பையன் அவன் தான் என்பது போல மிக வேகமாக ‘ஆமாம்’ என அப்பாவி போல தலையாட்ட…
அர்ஜூனோ உள்ளுக்குள் பற்றி எரிந்தான்…
“அவளைப் பார்க்கிறதுக்கு… அவளைத் தொட்றதுக்கு சார் லீகலா ப்ரோசீட் பண்ணனும்னு நினைக்கல… ஆனால் பேசுறதுக்கு மட்டும் லீகலா பிரொசீட் பண்ணணும்…” தனக்குள் சொல்லியபடியே ரிஷியைப் பார்க்க… அர்ஜூனையோ… அவன் கோபப் பார்வையையோ பார்க்க ரிஷி என்ன முட்டாளா என்ன… யாருக்காக வந்தானோ… அவள் ஒருத்தியைப் பார்க்கும் பணியை மட்டும் மீண்டும் செவ்வனே செய்து கொண்டிருந்தான்...
“தனியா பேச அனுமதி தரலைனா என்ன பண்ணுவீங்க….” அர்ஜூன் அலட்சியமாக சொன்னபடியே …
“லீகலா தானே ரிஷி சார் எதையும் ஹேண்டில் பண்ணுவார்… சோ லீகலா கோர்ட்ல பெர்மிஷன் வாங்கிட்டு வாங்க… அப்புறம் பார்க்கலாம்…” என இளக்காரமாகச் சொல்லி ரிஷியைப் பார்க்க.. ரிஷி இப்போது நாராயணனைப் பார்க்க…
நாராயணனோ தன் பேத்தியைப் பார்த்தார்… அந்தப் பார்வையில்…
“ரிஷியுடன் உனக்குப் பேச சம்மதமா” என்ற கேள்வி மட்டுமே இருக்க….
கண்மணியோ… ’இல்லை’ என்று தலையை மட்டும் அசைக்க… அவளையேப் பார்த்துக் கொண்டிருந்த ரிஷிக்கு... அவளின் தலையாட்டலில் இரத்தம் ஓட்டம் எகிறியதுதான்.. ஆனாலும் காட்டிக் கொள்ளவில்லை… இருந்த போதிலும் அவன் முகத்தில் கோப அலை மெல்ல பரவ ஆரம்பித்ததின் அறிகுறியாக… கண்மணியைப் பார்த்தபடி இருந்த அவனின் முகம் பாறை போல் இறுக ஆரம்பித்திருக்க
நாராயணன் இப்போது பேச ஆரம்பித்தார்…
“ரிஷி… என் பேத்தி உங்க கூடப் பேசவே இஷ்டம் இல்லைனு சொல்றா… இருந்தாலும் நீங்க பேசலாம்… ஆனால் எதுவா இருந்தாலும் இங்கேயே பேசுங்க…. “ என்றபோதே…
“நான் அவகிட்ட பேசனும்.. அதுவும் தனியாக…” அவன் குரல் நிறுத்தி நிதானமாக அதே நேரம்.. அழுத்தமாக ஒலிக்க… கண்மணியை மட்டுமே அவன் குரலும் பார்வையும் மொத்தமாகச் சூழ்ந்திருக்க…
“என்னடா… ’அவ’… இனிமேல ’அவ இவ’ ன்னு சொன்ன… டைவர்ஸ் வரைக்கும் வந்தாச்சுதானே… அப்புறம் என்ன… இன்னும் உரிமை வேண்டியிருக்கு… ஒழுங்கா மேடம்னு கூப்பிடு… என்ன நான் சொல்றது புரியுதா” அர்ஜூன் ரிஷியின் கோபத்தில் இன்னும் எண்ணெய் விட்டு வார்த்திருக்க… அதற்கு மேல் பொறுத்திருப்பானா என்ன ரிஷி…
அர்ஜூன் ரிஷியிடம் ரிஷியின் கண்மணிக்கான உரிமையைப் பற்றி விளக்கம் கொடுத்த அடுத்த நொடி… ரிஷியின் கை… கண்மணியைப் பற்றி இழுத்திருக்க… அதற்கு அடுத்த நொடியோ… ரிஷி நாராயண குருவின் அடி ஆட்களினால் சூழப்பட்டிருந்தான்… அதுமட்டுமல்லாமல் கண்மணியிடமிருந்து அவனைப் பிரித்தும் இருந்தார்கள்
ரிஷிக்கு அதெல்லாம் ஒரு கவலையுமில்லை… வருத்தமும் இல்லை.... அதே நேரம் ரிஷி அவர்களை இலட்சியமும் செய்யாமல்… கண்மணியை மட்டுமே நோக்கியவன்…
“கண்மணி... இங்க பாருடி... இப்போ நீ என்கூட பேச வரலைனா… நான் இவங்கள ஒரு அடி கூட திருப்பி அடிக்க மாட்டேன்…” தனக்கான அவளின் பலவீனம் உணர்ந்தவனாகிற்றே…. அதைக் கொண்டே அவளை மிரட்ட ஆரம்பித்திருக்க
“என்னடா மிரட்றியா… தூக்கிப் போடுங்கடா வெளில… இன்னைக்கு நீங்க கொடுக்கிற பரிசுல கண்மணின்ற பேரையே அவன் மறந்துரனும்” அர்ஜூன் மீண்டும் இடையில் வந்திருக்க…
ரிஷியோ அசையாமல் நகராமல் கண்மணியை மட்டுமே பார்த்திருக்க… கண்மணி அவனிடம்
“எனக்கு உங்ககிட்ட பேச இஷ்டம் இல்ல… சொன்னா கேளுங்க… ஒழுங்கா இங்கயிருந்து.. போயிருங்க” எனும் போதே... அவள் குரல் தடுமாற ஆரம்பித்திருந்தது அவனிடம்... அவளால் அவன் நிலையைப் பொறுக்கவே முடியவில்லை... எல்லாமே தன்னால்தான் தான் என நினைத்த போது இன்னுமே மனம் தவிக்க ஆரம்பித்திருக்க
“எனக்கு உன்கிட்ட பேசனும்டி… பேசனும்டி… பேசனும்டி… பேசனும்… பேசாமல் ஒரு அடி கூட எடுத்து வைக்க மாட்டேன்டி…” ஆவேசமாக கத்த ஆரம்பித்திருக்க… அர்ஜூன் கண் சைகை கொடுக்க... நாராயணனின் அடி ஆட்களில் ஒருவன் வேகமாக கையை ஓங்க ஆரம்பிக்க… அடுத்த நொடி… வேகமாகக் கண்மணி…
“ஏய்… அவரைத் தொட்ட” என அவனை அதட்டியவள் பார்வையில் அதிகாரம் மட்டுமே… சற்று முன் நெகிழ்ந்து தடுமாறிய தொணி மாறியிருந்தது அவளிடம்.... சட்டென்று உயர்ந்த அந்த அடி ஆளின் கைகள் இறங்கியிருக்க…
“அவரை விடுங்க… எல்லோரும் போங்க” கண்மணி குரல் உயர்த்தி உத்தரவிட்டிருக்க… அர்ஜூன் கண்மணியைக் கடுமையாக நோக்கியபடியே… தன் அடி ஆட்களை ரிஷியை விட்டு விலகச் சொல்ல… அவர்களும் விலக
ரிஷி மௌனமாக அவளைப் பார்த்து புன்னகைத்தபடியே… சட்டைக் காலரையும் கசங்கிய சட்டையையும் சரி செய்ய ஆரம்பிக்க… கண்மணி அவனிடம் பேச ஆரம்பித்தாள்…
“என்ன தனியா பேசனும்… நமக்குள்ள அப்படி ஏதும் பிரைவேட்டா பேசற அளவு ஒண்ணுமில்லைனு தான் நினைக்கிறேன்…”
“உனக்கு இல்லாமல் இருக்கலாம்… ஆனால் எனக்கு ஆயிரம் கேள்வி இருக்கு அதெல்லாம் இன்னொரு நாள் கேட்டுக்கிறேன்… ஆனால் என்னோட சில கேள்விகளுக்கு மட்டும் உன்கிட்ட இருந்து பதில் இன்றைக்கே இப்போதே வேண்டும்… அது எல்லாமே உனக்கும் எனக்குமான அந்தரங்கம் … என்னோட ப்ரைவசிய… உன்னோட ஈகோவுக்ககாகவெல்லாம் விட்டுக் கொடுக்க முடியாது…” ரிஷி அவளைப் பார்த்து தீர்மானமாகச் சொல்ல…
இப்போது கண்மணி அவன் அழைத்து வந்த வக்கீலை நக்கல் பார்வை பார்க்க…
“இவர் ஏன்னு பார்க்கறியா… புரியுது உன் நக்கல் பார்வையோட அர்த்தம்… அது ஒண்ணுமில்ல அம்மு… இந்த வீட்டோட வரலாறு தெரிஞ்சவன் நான்… இன்னொரு நட்ராஜா லாக்கப் கம்பிலாம் எண்ணிட்டு இருக்க முடியாது… “ ஏளனமாகச் சொல்லி அவளைப் பார்க்க…
‘அம்மு’ இயல்பாக அவன் அவளை அழைக்கும் அவளுக்கே உரிமையான தன் கணவனின் வார்த்தை வெகு நாட்களுக்குப் பிறகு அவன் வாயிலிருந்து அவள் கேட்டிருக்க... கண்கள் கலங்க ஆரம்பித்தனதான் கண்மணிக்கு....
ஆனாலும் கண்மணி அழுத்தமானவளே.... அவனை பார்ப்பதைத் தவிர்த்தபடி அவளது தாத்தாவைப் பார்த்தாள்… ரிஷியுடன் பேசும் அனுமதி கேட்டவளாக… நாராயணனும் அவள் பேசுவதற்கு அனுமதி அளிக்கும் விதமாகத் தலையை ஆட்ட…. நாராயணன் சம்மதித்தால் மட்டும் அர்ஜூன் அவ்வளவு சுலபமாக விடுவானா என்ன???… நாராயணன் அனுமதி அளித்த போதும்…. வைதேகியையும் கூட்டு சேர்த்துக் கொண்டு… கண்மணி ரிஷியுடன் தனியே பேசுவதற்கு பலவித முட்டுக் கட்டைகள் போட்டபடி இருக்க… கடைசியாக சில பல வாக்குவாதங்களுக்குப் பின்… அரை மனதாகச் சம்மதித்தான்… அதுவும் பல நிபந்தனைகளோடு…
--
“இங்க பாரு… அந்த ரூம் தான் பேசுறதுக்கு ஏற்பாடு பண்ணிருக்கோம்… ரூம் ஃபுல்லா கேமெரா… நாங்க காட்ற இடத்துல மட்டும் தான் நீ நின்னு பேசனும்… ஒரு அடி கூட அசையக் கூடாது… எங்க பார்வைலாதான் இருக்கனும்… “ அர்ஜூன் விதிமுறைகளை அடுக்க ஆரம்பித்திருக்க…
“சீக்கிரம் சொல்லி முடிங்க” என அர்ஜூனிடம் ரிஷி அசட்டையாகச் சொன்னாலும்… கண்மணியிடம் ரிஷி காட்டிய பார்வை உக்கிரத்தின் உச்சமாகத்தான் இருந்தது…
“உன்னை… என் பொண்டாட்டி உன்னைப் பார்க்கிறதுக்கு… இவ்வளவு கட்டுப்பாடா எனக்கு…” என்ற கேள்வியை மட்டுமே அந்த உக்கிரப் பார்வையும் தாங்கி இருந்தது…
---
/*உருகினேனோ நான் உடைகிறேனோ
உந்தன் அன்பில் நாளை கரைகிறேனோ
மீண்டும் உன்னை சேர்வதென்றால்
நான் இன்று கூட பிரிந்து போவேன்
என் அன்பே
மீண்டும் உன்னை பிரிவதென்றால்
நான் இந்த நொடியே இறந்து போவேன் உன் முன்பே..
போதுமே போதுமே இந்த பந்தம் ஒன்று போதுமே போதுமே.
வாழுமே வாழுமே நூறு ஜென்மம் எந்தன் ஜீவனும் வாழுமே.
மீண்டும் உன்னை சேர்வதென்றால்
நான் இன்று கூட பிரிந்து போவேன்
என் அன்பே */
Some Snippets from கண்மணி... என் கண்ணின் மணி- 97-2
“எனிவே… இந்த 15 நிமிசத்துக்கு என்னைப் பிரிப்பேர் பண்ணத்தான்… ஆஸ்திரேலியால ரியாலிட்டி ஷோ பண்ணிருப்பேன் போல… ஹ்ம்ம்… எங்கும் கேமரா… எதிலும் கேமரா… “ என்று எழுந்தவன்…
---
”நீயெல்லாம்… இப்படி ஒரு படபடப்பா… ஃபர்ஸ்ட் நைட்ல கூட இப்படி இருந்ததில்லடி… ஐ மீன்… ஆக்சுவல் ..” எனும் போதே… கண்மணி கொடுத்த உண்மையான முறைப்பில்… தானகவே தன் நிலைக்கு வந்த போதே…
---
“லவ்வோ… லஸ்…” ரிஷி மீண்டும் அந்த வார்த்தைகளைச் சொல்ல ஆரம்பித்த போதே கண்மணியின் கண்களில் நீர்ப்படலம் வர ஆரம்பித்திருக்க…
ரிஷியும் தடுமாறியவனாக… அந்த வார்த்தையைச் சொல்லாமல் நிறுத்தியவன்…
---
”ஓகே… சப்போஸ் குழந்தை இல்லைனா… இந்த கண்டிஷன் ஏதும் இல்லைதானே… சிம்பிளா முடிச்சுரலாம் தானே”
”இல்லையே… அது இன்னும் காம்ப்ளிகேஷன் ஆச்சே” ரிஷி இழுக்க… கண்மணி பார்த்தாள் அவனை….
---
”ரிஷி மைண்ட் யுவர் வேர்ட்ஸ்… வாட்ஸ் யுவர் டங்…” கண்மணியின் முகம் கோபத்தில் சிவந்திருக்க…
“என்னடி… இங்க்லீஸ்ல பீட்டர் விட்ற… ஓ மேடம் நாராயணன் பேத்தினு … இல்லல்ல பவித்ர விகாஸுக்கு இளவரசினு காட்றீங்களா…”
--
”டேய் என்ன… ரொம்பத் துள்ற… சின்னக் கீறல் அவ மேல பட்டுச்சு…” அர்ஜூன் ஆவேசத்துடன் அதே நேரம் பயந்தவனாக... எச்சரிக்க ஆரம்பித்த போதே
“என்ன பண்ணுவ… கீறல் போடட்டுமா... பார்க்கலாமா... இவ்ளோ துடிக்கிற” ரிஷி மெல்ல கையின் அழுத்தத்தை கூட்ட…
---
“ஏய்…” ரிஷி பதறி கையை விலக்கிய போதே… கண்மணியின் கழுத்தில் ப்ளேடு பட்ட இடத்தில் இருந்து ரத்தக் கசிவு வர ஆரம்பித்திருக்க... அது வைதேகியின் கண்களிலும் பட்டிருக்க
“அடப் படுபாவி… என் பேத்தி உனக்கு என்னடா பாவம் பண்ணினா… உன்னை நம்பி வந்ததுக்கு… இப்படி வாயும் வயிறுமா இருக்கிற புள்ளைய இந்தப் பாடு படுத்துற…”
---
“வி…………க்………கி…” சந்தோசக் கூப்பாடு போட்டபடி அவனின் அருகில் போனவன்… ஒரே அலாக்காக அவனை தூக்கித் தட்டாமலை சுற்ற ஆரம்பித்திருந்தான்….
Lovely update
Precap ha ha unmaiya