/*
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
'EUEU' மது சொல்வா... “ அந்த சைக்கோ... கொஞ்சம் நல்லவன்... என்னை டார்கெட் பண்ணல... கீர்த்திகாதான்.. அவன் டார்கெட்... அதுனாக நான் தப்பிச்சேன்னு” - மதுவை அப்படி காப்பாத்தி விட்டேன்...
அடுத்து ANI தீக்ஷா மாட்டும் போது... அவள கடத்துற ரவுடிங்க மூலமா காப்பாற்றி விட்டேன்...
அடுத்து SV சந்தியாக்கு சிவா இருந்தான்...
இப்போ KMEKM கார்லாக்கு ரிஷி இருந்தான்...
இப்படி எல்லாருக்கும் யாரோ அந்நியவங்க ஒருத்தவங்க அவங்கள காப்பாற்றி இருப்பாங்க... சீன்ஸும் வைக்கத் தேவைப்படல...
ஆனால் கண்மணிக்கு அவங்க கூட இருந்தவங்களே... நம்பினவங்களே பாதுகாப்பு கொடுக்கல... அவளே போராடனும்... கண்டிப்பா அந்த சிச்சுவேஷனை எழுதியே ஆக வேண்டிய கட்டாயம்... ஆக கண்மணியும் மாட்டினாள்... நான் மாட்டினேன்...
எழுதும்போது அந்த சீன்... அவங்க எமோஷனல் எல்லாமே நானும் ஃபில் பண்ணித்தான் எழுதியாகனும்...
ஹீரோவைக் கலாய்க்கிற சீன்... வெறுப்பேத்ற சீன்லாம் நமக்கு ஜூஜூபி.... ரொமான்ஸ் எபினா தடுமாறுவேன்... எமோஷனல் எபினா மெனக்கெடுவேன்... மற்ற நார்மலான சீன்ஸ்லாம் சிச்சுவேஷன்... கூட இருக்கிறவங்கன்னு சமாளிப்பேன்..... ஆனால் இது ரொம்பவே என்னை டிஸ்டர்ப் பண்ற காட்சி... எப்படியோ எழுதிட்டேன்...
எமோஷனலா ஃபீல் பண்ற அளவுக்கு... படிக்க முடிகிற அளவுக்கு ஹேண்டில் பண்ணி எழுதியிருக்கேன்னு நினைக்கிறேன்... படிச்சுட்டு சொல்லுங்க...
வாருணியா ஐ மீன் ரீடரா அதை விட பொண்ணா படிச்சுட்டுத்தான் பிரவீணான்ற ரைட்டருக்கு அப்ரூவல் கொடுத்திருக்கேன்...
என்னால முடிந்த வரையில் இந்த எபியை எவ்ளோ கட் ஷாட் பண்ணனுமோ... ஃபிஷிக்கல் அப்யூஸ் அண்ட் வல்காரிட்டி எவ்வளவுக்கெவ்வளவு அவாய்ட் பண்ண முடியுமோ அந்த அளவு 100 பெர்சண்ட் பண்ணியிருக்கேன்... எழுத்துக்கள் வார்த்தைகள்ள இருக்கிற நாகரீக வரம்பையும் நூல் பிடிச்சுதான் எழுதிருக்கேன்... இருந்தாலும்... நீங்க ஏதாவது எங்காவது முகம் சுழிக்கிற மாதிரி ஃபீல் பண்ணினா ... கண்டிப்பாகத் தெரியப்படுத்தவும்
அண்ட் யெஸ் கண்மணி ஃபீனிக்ஸ் பறவைதான்... அவள எங்கயும் விட்டுக் கொடுக்க மாட்டேன்...
நன்றி
பிரவீணா விஜய்
*/
அத்தியாயம் 95-1
கண்மணி “அப்பா” என்று அழைத்திருக்க… அதைக் கேட்ட அர்ஜூனுக்கு அப்படி ஒரு ஆத்திரம்… ஆக்ரோஷம்
இவ்வளவு நடந்தும் இந்தப் பெண்… அவனைப் பார்த்து அப்பா என்கிறாள்… அர்ஜூனுக்கு கோபம் தலைக்கேற… நாராயணனிடம் கத்த ஆரம்பித்திருக்க… நாராயணன் பேரனின் ஆவேசத்தில் பயந்தவராக… அவனைக் கூட்டிக் கொண்டு வெளியே வந்த… அவன் தாய் தந்தையிடம் ஒப்படைத்து விட்டு மீண்டும் கண்மணியிடம் வந்திருந்தவர் பேத்தியைப் பார்த்தபடி கண்ணீர் சிந்த ஆரம்பித்திருந்தார்… சில நிமிடங்கள் சென்றிருக்க… காவல்துறை அதிகாரி வந்திருந்தார்….
“சார் உங்க பேரன்… கீழ மீடியா பெர்சனை அடிச்சுட்டார் சார்…” எனும் போதே… அங்கிருந்த மருத்துவர் வந்து….
“சார் உங்க பேரன் எங்கள டுயூட்டி பார்க்க விடாம ரொம்ப தொல்லை பண்றார்… மேல் டாக்டர்ஸ்லாம் கண்மணியைப் பார்க்கக் கூடாதுன்னு ரெஸ்ட்ரிக்ட் பண்றார்…. போற போக்கைப் பார்த்தால் அந்தப் பையனுக்குத்தான் ட்ரீட்மெண்ட் கொடுக்கிற நிலை வரும் போல….”
நாராயணன் அதிர்ந்து பார்க்க…
“அந்தப் பையனை ஏன் இங்க கூட்டிட்டு வந்தீங்க… அவரைப் கூட்டிட்டு வந்தது உங்க தப்பு சார்…”
“முதல்ல அந்தப் பையன இங்க இருந்து கூட்டிட்டுப் போயிருங்க சார்… இந்தப் பொண்ணுக்கு ஏற்பட்ட நிலை அவரால ஏத்துக்கவே முடியலேன்னு நினைக்கிறேன்… சின்னப் பையன்… அடுத்த கட்டத்துக்கு போற வயசு… மனசு… இதுல இள ரத்தம் வேற… இதுல அவன் கண்ட்ரோல்ல இல்ல… அந்தப் பொண்ணோட அப்பாவை கொன்னு போட்டாலும் போட்ருவான் போல…”
”இந்த இன்சிடெண்ட் அந்தப் பையனோட ஃப்யூச்சர்க்கே த்ரெட்டனிங்கா மாறினாலும் மாறும்… அந்த அளவுக்கு ஓவரா நடந்துக்கிறான்..”
இதை எல்லாம் அர்ஜூனின் பெற்றவர்களும் கேட்டுக் கொண்டிருக்க… அவர்கள் பேச ஆரம்பிக்கும் முன்பே… நாராயணன் அவர்களிடம்
“அர்ஜூனைக் கூட்டிட்டுப் போயிருங்க…. அவன் இங்க இருக்கவே வேண்டாம்… இன்னைக்கே டிக்கெட் போட்ருங்க… அவன் கிட்ட நான் பேசி அனுப்பி வைக்கிறேன்… இப்போதைக்கு இங்கயிருந்து அவனைக் கூட்டிட்டுப் போயிருங்க…” என்றபடி அர்ஜூன் பெற்றவர்களிடம் சொல்லிவிட… வைதேகியைக் காரணம் காட்டி அர்ஜூனை எப்படியோ அங்கிருந்து அழைத்துச் சென்றிருந்தனர்…
---
நட்ராஜும் நாராயணனும் மட்டுமே கண்மணியிடம் இருந்தனர்…. நட்ராஜூக்கும் கொடுக்கப்பட்டிருந்த மருந்துகளின் உதவியால் அவனது போதை மருந்து கலந்த மதுவிலிருந்து அவனும் ஓரளவு நிலைக்கு வந்திருக்க… ஆனாலும் கண்மணியின் அருகில் செல்ல அனுமதிக்கப்படவில்லை…
நாராயணன் மட்டுமே கண்மணியின் அருகில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்…. சொல்லப்போனால் அவரது செல்வாக்கு அங்கும் தன் வேலையைக் காட்டி இருந்தது
“என் பேத்தியை நான் வேற ஹாஸ்பிட்டலுக்கு மாத்தலாம்னு இருக்கேன் டாக்டர்… மூணு மணி நேரம் இங்க நான் அவள விட்டு வச்சுருந்ததே அதிகம் ” நாராயணன் மயக்கத்தில் இருந்த பேத்தியைப் பார்த்தபடியே கேட்க
“சார்… போலிஸ் ஃபைல் பண்ணியிருக்காங்க…” என்ற போதே…
“எவன் வந்தாலும் கவலை இல்லை… டிஸ்சார்ஜ் பண்ணுங்க… நான் பார்த்துக்கிறேன்… என் கண்ட்ரோல்ல இருக்கிற ஹாஸ்பிட்டல் ஆயிரம் இருக்கு…” என்று குரலை உயர்த்தியவரிடம்…
“அப்டிலாம் ஈஸியா கூட்டிட்டுப் போக முடியாது” என மருத்துவர் சொல்லி முடிக்கவில்லை… அந்த அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர்… நாராயணனிடம் பவ்யமாக வந்து நின்றவராக…
“நீங்க ஏன் சார்… இங்க இருக்கீங்க… என் ரூம்க்கு வாங்க” என்று அழைக்க…
“என் பேத்திய இங்க இருந்து கூட்டிட்டுப் போகனும்… எனக்குத் தெரிந்த ஹாஸ்பிட்டல்ல பேசிட்டேன்… பிரைவேட்டா நாங்க பார்த்துக்கிறோம்… வெளிய நிக்கிறான்ல அவன்கிட்ட மட்டும் சைன் வாங்கிக் கொடுத்திருங்க“ என்று முடித்திருந்தார்…
நட்ராஜும் பிடிவாதம் எல்லாம் பிடிக்கவில்லை… கோபப்பட்டுக் கத்தவும் இல்லை… மௌனமாக கையெழுத்தைப் போட்டுக் கொடுத்திருக்க… கண்மணி அந்த நிமிடங்களில் இருந்து நாராயணின் பேத்தி என்று மட்டுமே ஆகி இருந்தாள்
---
அதிகாலையி ஏழு மணிக்கெல்லாம் கிருத்திகாவின் போன் அதிர… படுக்கையில் இருந்தபடியே எடுத்து பேச ஆரம்பித்திருந்தாள்…
”இதான் மேடம் நடந்தது…”
“ட்ரீட்மெண்ட்டுக்கு கோ ஆபரேட் பண்ண மாட்டேங்குது… நீங்க வந்தால் சப்போர்ட்டா இருக்கும் மேடம்… இமீட்டியட்டா அட்டெண்ட் பண்ணனும்… சாரி.. பொண்ணு பெரிய இடத்துப் பொண்ணு… பிரஷர் ஜாஸ்தியா இருக்கு… ”
கிருத்திகா மௌனித்தவளாக…
“உங்களுக்கே தெரியும்… என் பையனுக்கு அப்புறம் தான் எனக்கு மத்த பிரையாரிட்டியெல்லாம்… தெரிஞ்சே கால் பண்றீங்க… அவனை ஸ்கூலுக்கு அனுப்பிட்டுத்தான் வர முடியும்… அவன் இவ்ளோ நாள் கனடால இருந்துட்டு… இப்போ சென்னைக்கு அடாப்ட் ஆகவே மாட்டேங்கிறான்… இதுல நானும் அவனும் மட்டும் தான்… அவங்க அப்பா கூட இங்க எங்க கூட வர முடியல… எல்லாமே உங்களுக்குத் தெரியும் தானே… இதெல்லாம் சொல்லித்தானே இங்க ஜாயின் பண்ணேன்” என்ற போதே
”மேம்” என்று ஆரம்பித்தவர் கண்மணி பற்றி அவருக்குத் தெரிவிக்கப்பட்ட தகவல்களைப் பற்றி சொல்லிவிட்டு
“கேஸ் ஃபைல் அனுப்புறேன் மேம்” என்று வைத்துவிட்டான் மருத்துவமனையின் நிர்வாகி
“கண்மணி… வயது பத்து…” திடுக்கென்று இருந்ததுதான் கிருத்திகாவுக்கு… ஆனாலும் அடுத்து யோசிக்க திடமில்லை…
“பெரிய இடத்துப் பொண்ணுன்னு சொல்றாங்க… ஆனால் பொண்ணுக்கு பிரச்சனை ஏற்பட்ட இடம் வேற மாதிரி சொல்றாங்க…” கிருத்திகாவின் மனதின் ஆராய்ச்சியில் இறங்கிய போதே கைகள் நடுங்க… வேகமாக கணினியை எடுத்தாள்…
படித்து முடித்தவளின் பார்வையில் அவளும் பவித்ராவும் இருந்த புகைப்படம் பட்டு மீள… மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து தகவல் சேகரிக்க போன் செய்ய நினைத்தவள்… என்ன நினைத்தாளோ வேண்டாம் என்று வைத்து விட்டு
”மரகதம்” தன் வீட்டு வேலையாளை கூப்பிட்டவர்…
”நித்தினைப் பார்த்துக்கங்க… முக்கியமாக கேஸ்…” என வேக வேகமாக கிளம்பி காரை எடுத்தவள்… மருத்துவமனையில் இறங்கிய போதே… அந்த மருத்துவமனை வளாகத்தில் ஓரமாக அமர்ந்திருந்த நட்ராஜ்தான் பார்வையில் பட்டான்…
”கடவுளே” கிருத்திகாவுக்கு அடிவயிறு பதறியது…
“என் பவித்ராவோட கண்மணியா இருக்கக் கூடாது” நினைத்த போதே.. அப்படி என்றால் யாரோ ஒரு பொண்ணா இருந்தால் உனக்கு கவலை இல்லை… மனசாட்சி அவளைக் குதற ஆரம்பித்திருக்க வேகமாக நட்ராஜைப் பார்க்காமல்… பார்க்க முடியாமலும் உள்ளே செல்ல… அவள் அறையில் அவளுக்காக காத்திருந்ததோ நாராயணனும்… தலைமை மருத்துவரும் …
மொத்தமாக அந்த மனநல மருத்துவரின் உலகம் சுற்ற ஆரம்பித்திருந்தது
-------
முந்தைய நாள் இரவு…
எப்போதும் தாமதமாக நட்ராஜை வீட்டுக்கு அழைத்து வரும் மருது அன்று நேரத்தோடே வீட்டுக்கு அழைத்து வந்திருக்க… அதுவும் முழு போதையில்…
”ஏய் என்ன… சீக்கிரமா வந்துட்டீங்க”
”ஏன் அப்பாக்கு உடம்பு சரியில்லையா” எனக் கேட்டபடியே வழக்கமான பணியாகத் தந்தைக்கு படுக்கை விரித்தவள்… நட்ராஜின் நெற்றியைத் தொட்டுப்பார்த்தபடியே மருதுவைப் பார்க்க… மருதுவோ பதிலே சொல்லாமல் திரும்பி இருக்க… துரைதான் பதில் கொடுத்தான்
“உங்கப்பாக்கு ஃபீலிங்க்ஸ் அதிகமான இதைத்தானே செய்வாரு… புதுசா என்ன கேள்வி… என்னமோ உங்க அப்பா ஒழுங்கான உத்தமரு மாதிரி பேசுற” துரை அவளிடம் எகத்தாளமாகச் சொல்ல.. கண்மணிக்கு சுருக்கென்று இருக்க… அவ்வளவுதான் கண்மணிக்கு தன் உண்மையான முகத்தைக் காட்ட ஆரம்பித்தாள்…
“என்ன பேச்செல்லாம் ஒரு மாதிரி இருக்கு… இவனோட ஃப்ரெண்ட் அதுனால போனா போகுதுனு விட்டா… ரொம்ப பேசுற… ஒழுங்கு மரியாதையா வந்துட்டு போகனும்… இல்ல நாக்கை இழுத்து வச்சு அறுத்துருவேன்… “ கண்மணியின் துடுக்குத்தனம் அவளையுமறியாமல் அவள் பேச்சில் வந்து விழுந்த போதே… மருது அவளை முறைத்தான்… கண்மணி அவனையும் விடவில்லை
“நீ எதுக்கு முறைக்கிற… உன் ஃப்ரெண்ட்னா அது உன் கூட… உனக்கு…” எனும் போதே…
“துரை கிட்ட மன்னிப்பு கேளு…” மருதுவின் கோபம் அவன் உரிமையை கண்மணியிடம் நிலைநாட்டும் தீவிரத்தில் இருக்க
“என்னால முடியாது… என் அப்பா பற்றி பேசுறதுக்கு அவனுக்கு என்ன உரிமை இருக்கு… யார் அந்த ரைட்ஸ் கொடுத்தது” என்றபடி கண்மணி அந்த இடத்தை விட்டு நகன்ற போதே… கண்மணியை பிடித்து இழுத்து நிறுத்திய மருது…
“அவன் கிட்ட மன்னிப்பு கேட்கனும் நீ… அவ்ளோதான்… “ மருது அவளை வற்புறுத்த… கண்மணி மருதுவை முறைத்தபடி நின்றிருந்தாளே தவிர வேறெதுவும் சொல்லாமல் இருக்க…
“அவ மன்னிப்பு கேட்க மாட்ட… வா போகலாம்” என்றபடி துரை மருதுவை இழுத்துக் கொண்டுச் செல்ல… கண்மணி வேகமாக அவன் முன்னே சென்றவளாக…
”அவனை விடு…” எனத் துரையிடமிருந்து மருதுவைப் பிரித்தவளாக
“ஏன் மருது… உனக்காக நீ சொன்னேன்றதுக்காக பாட்டி கூப்பிட்டும் போகல நான்… ஆனால் இவனுக்காக என்கிட்ட நீ கோவிச்சுட்டுப் போற…” என அவன் முன் போய் நிற்க…
”என்னடா நீதான் மணி மணின்னு சொல்ற… இவ உன் பேச்சை எல்லாம் கேட்க மாட்டா போல… இவ இப்பவே இப்படினா” என கொக்கி போட்டு நிறுத்த…
கண்மணிக்கு குழப்பம் மட்டுமே…
“நான் என்ன தவறு செய்தேன்… இவன் ஏன் இப்படி பேசுகிறான்“ யோசனையோடு மருதுவைப் பார்த்தவள்…
“நான் சொன்னேன்னு நீ உன் பாட்டி வீட்டுக்கு போகலதானே… அப்போ இவன்கிட்ட மன்னிப்பு கேட்கச் சொல்றதும் நான் தானே… ஏன் அதைக் கேட்க மாட்டேங்கிற… அப்போ என் வார்த்தைக்கு என்ன மதிப்பு”
அமைதியாக இருந்தவள்… என்ன நினைத்தாளோ… அவளுக்கேத் தெரியவில்லை…
“சாரி…” துரையைப் பார்த்து அந்த வார்த்தையைச் சொல்ல மனமே வரவில்லைதான்… ஆனால் மருதுவுக்காக அவன் சொன்ன வார்த்தைக்காக மன்னிப்பு கேட்டவளுக்கு… தொண்டைக்குள் அந்த இரண்டு எழுத்துக்களும் சண்டை போட்டுத்தான் வெளிவந்திருந்தன
கண்மணி நினைவு தெரிந்ததில் தானாக தன்மானமின்றி யாரிடமும் இந்த மாதிரி ஒரு அசிங்கப்பட்டதில்லை… அவமானப்பட்டதில்லை… சண்டையோ சச்சரவோ எதிர்த்து நின்றுதான் பழக்கம்… அடி வாங்கினால் கூட சிங்கம் போல சிலிர்த்து எழுவாளே தவிர அடங்கிப் போக மாட்டாள்…
முதல் முறை கண்மணி மருதுவால் அந்த அவமானத்தைப் பட்டிருக்க… அவளையுமறியாமல் கண்களில் நீ வர ஆரம்பித்திருக்க…
‘மருதுவுக்காக அவன் மனதுக்காக…’ என கண்களைத் துடைத்தபடியே
“நான் தான் மன்னிப்பு கேட்டுட்டேன்ல… நீ போகாத மருது” என அவன் கைகளைப் பிடித்து கெஞ்சியவளைப் பார்த்து துரை நக்கலாகச் சிரித்தான் தான்… இருந்தும்
“டேய் பாப்பா… மன்னிப்பு கேட்ருச்சுல்ல… நீ எ….ன்…ன சொன்னாலும் கேட்குதுடா பாப்பா… அதை ஏன் அழ வைக்கிற” என அவள் கன்னங்களில் வழிந்த கண்ணீர் கரைகளைத் துடைக்கப் போக… முதன் முதலாகக் கண்மணி அவனை விட்டு விலகினாள்… கோப முகத்தோடு… ஆனாலும் அவனிடம் காட்டாமல் திருப்பிக் கொள்ள…
“ஓகே ஓகே… நான் போறேன்… ஒரு அஞ்சு நிமிசம் அவன் கூடத் தனியா பேசனும்… நீ போறியா ” என்றபடியே கண்மணியின் முகத்தைப் பார்த்தவன்… அதில் இருந்த கடுப்பை உணர்ந்தவனாக
“அட மருதுவை விட்டுட்டுத்தான் போறேன்… இப்போ நீ போய் முதலாளியைப் பாரு….” எனக் கண்மணியை வீட்டுக்குள் அனுப்பி வைத்தவன்… மருதுவிடம் பேச ஆரம்பித்தான்….
“இங்க பாரு… அந்தப் புள்ள கொஞ்சம் கொஞ்சமா யோசிக்க ஆரம்பிக்குது…. அர்ஜூன்… அந்த அரண்மனை வாசம்லாம் பழக ஆரம்பிச்சுருச்சுனா உன்னை மதிக்கவே மதிக்காது போல… இவ இவ்வளவு திமிரா பேசுவாளா என்ன…” துரை நைச்சியமாக பேச ஆரம்பித்திருக்க
மருது அமைதியாகவே இருக்க
“அவளுக்கும் உனக்கும் உள்ள வித்தியாசம்லாம் தெரியுறதுக்கு முன்னாடியே நீ அவளை உன்வசம் கொண்டு வந்துரு… என்ன சொல்றேன்னு புரியுதா… நீ என்ன சொன்னாலும் இன்னைக்கு கேட்கிறவ நாளைக்கே உன்னைத் தூக்கி எறிஞ்சுட்டும் போகலாம்… யோசி… ஆனால்யோசிக்கிறதுக்கு கூட டைம் இல்ல… நான் அவ அப்பாவைப் பார்த்துக்கிறேன்… இன்னும் ரெண்டு ஃபுல்லோட போதை மருந்தையும் கலந்து ஆள ஃப்ளாட் ஆக்குறேன்… இந்தா இதை வச்சுக்கோ.. சொல்றது புரியுதுனு நினைக்கிறேன்” எனச் சாக்லேட் பாரை நீட்ட
“கண்டிப்பா இது தேவைப்படும்… உனக்குமே” என்றபடியே அவனிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே… கண்மணி வெளியே வந்திருக்க…
“பைடா… வாழ்த்துக்கள்…” என்று துரை சீட்டியடித்தபடி வெளியேறி இருக்க… மருதுவோ குழப்பத்துடன் அமர்ந்திருக்க… கண்மணி அவன் முன் வந்து நின்றவளாக… புன்னகைத்தாள்… அவள் முகமெங்கும் சந்தோசம் மட்டுமே…
“எதுக்கு இப்படி இருக்க… நீ சீக்கிரம் வந்துருக்க… அதுவும் தண்ணி அடிக்காமல் நீயா இருக்க… எவ்ளோ சந்தோசமா இருக்கேன் தெரியுமா… ” என்ற போதே மருது அவளைப் பார்த்தான்…
அவன் பார்வையில் அவள் குழந்தை என்பதை மறந்த போதை…
அங்கிருந்த மரத்திண்டில் அமர்ந்தவன்…
“மணி…. இங்க வா” என அழைக்க… அவளும் திரும்ப அவனை நோக்கி வந்திருக்க… வந்தவளை தன் அருகே உட்காரச் சொன்னவன்… அவள் தோள் மேல் கை போட்டபடி அவளிடம் பேச ஆரம்பித்திருக்க…
”ஏய் தெருமுனை வீட்டு பாப்பா இருக்குல…” என ஆரம்பித்தவள்… அடுத்தடுத்து கதைகளுக்கு தாவிக் கொண்டிருக்க.. அவன் கைகளின் அழுத்தம்… அவளுக்கு ஹார்மோன்களின் மாற்றங்களை ஏற்படுத்தவில்லை… அது புரியும் வயதும் இல்லை… அவளைப் பொறுத்தவரை அவளுக்கு கனமாக மாறி இருக்க…
”கையை எடு… “ என அவன் கையைத் தன்னிடமிருந்து எடுக்க முயல… மருதுவும் அவளிடம் தன் எதிர்ப்பைக் காட்டவில்லை… மாறாக
“நான் என்ன சொன்னாலும் கேட்பியா” அவன் குரல் மாற்றம் வந்திருக்க
“கேட்பேனே” அவனைப் பார்த்து அவன் கண்களைப் பார்த்துச் சொல்ல..
“மருது மாமானு கூப்பிடு” சொன்ன அந்தக் கண்களில் தெரிந்த காம அரக்கனை கண்மணிக்கு வித்தியாசம் காணத் தெரியவில்லை…
“ஏன்… மருது தான் எனக்குப் பிடிச்சிருக்கு” என்றபோதே…
“அர்ஜூன் அம்மாஞ்சினு கூப்பிடப் பிடிச்சிருக்கா” அவன் கண்களில் அப்படி ஒரு வெறி வந்திருக்க…
“ஓ அதுவா… நான் இதுவரை யாரையுமே அப்படி உறவு முறை வச்சு கூப்பிட்டதில்லையா… பாட்டி சொன்னவுடனே ஜாலியா இருந்துச்சு… அதான் “ என்றவளிடம்
“நான் கதை கேட்கல… என்னை மாமான்னு சொல்லச் சொன்னேன்” மருது மிரட்டலாகக் கேட்க
அவன் தொணி மாறியதை உணர்ந்தவளாக….
“ஏன் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி முகத்தை வச்சுருக்க… மாமா தானே சொல்லனும்”
“மருது மாமா… “ போதுமா
மருதுவின் முகம் மாறியிருக்க…
“மருது மாமா ஒருதரம்… மருது மாமா ரெண்டு தரம்” எனச் கள்ளங்கபடம் இல்லாமல் சிரித்தவளுக்குத் தெரியவில்லை… அதுதான் அவளின் கடைசிச்சிரிப்பாக இருக்கப் போகின்றது என்பது…
”நான் எப்போதும் உன் கூட இருக்கனுமா..” அவள் கைகளை மென்மையாகப் பற்றிக் கேட்க
”ஹ்ம்ம்… எப்போதுமே…” என்று அவனைப் பார்க்க
”அப்போ நீ என்னை மேரேஜ் பண்ணிக்கிறியா…” அவளிடம் கேட்ட போதே
“அதான் நீயே சொன்னியே… என்னோட 20, 22 வயசுல பண்ணிக்கலாம்னு..”
“ஹான் சொன்னேன்… ஆனால் இன்னைக்கு நாம அதைக் கொண்டாடலாமா” என்றபடியே… மருது தன் சட்டைப்பையில் இருந்த சாக்லேட் பாரை நீட்டியிருக்க
“ஏய்… எவ்ளோ பெருசு… இதுவும் ஃபாரின் சாக்லேட்டா…” என்றபடி மற்றதெல்லாம் மறந்து ஆர்வமாக அதை வாங்கி… வேகமாகப் பிரிக்கப் போனவள்
“நோ ஷேரிங்…” என்றபடியே யோசித்தவள்…
“சாப்பிட்டுட்டு சாப்டுக்கிறேன்… ” என்றவளிடம்…
“சாப்பிடு” என மருது சொன்னபடியே…
“இன்னொன்னு இருக்கு… ஆனால் அது நம்ம ரெண்டு பேருக்கும் ஷேரிங்… இதைச் சாப்பிடு” என்று சொல்ல…
“ஓகே… ஆனால்… அதையும் நானே வாங்கிச் சாப்பிட்ருவேன்” சொன்னபடியே… சாக்லேட் பார் ஒவ்வொன்றாகச் சாப்பிட ஆரம்பித்திருக்க… மருது அவளையே பார்வையால் தின்ன ஆரம்பித்திருந்தான்…
முழுவதுமாகச் சாப்பிட்டு முடித்தவளிடம்…
“சரி வா… சாப்பிடப் போகலாம்” என மருது அழைக்க…
“எனக்கு பசிக்கல… திடீர்னு வயிறு ஃபுல்லானது மாதிரி இருக்கு மருது…” என்றவளிடம்..
“மருது மாமா” அப்டித்தான் இனி சொல்லனும் மருது திருத்த…
“ஹ்ம்ம்” என எழுந்தவள்…
“எனக்கு சாப்பாடு வேண்டாம்… நான் தூங்கப் போறேன்” என தன் வீட்டை நோக்கிப் போக…
“தூக்கம் வருதா மணி” என அவளைத் தன்புறம் இழுத்தபடி பேச…
“தூக்கம் வரல… ஆனால்… தூங்கனும்” கண்மணி தன்னை மறந்து கொண்டிருக்கும் நிலை அறியாமல் பேச ஆரம்பித்திருக்க…
“தூக்கம் வரலைதானே… அப்போ மாமா கூட வா… எனக்கு பசிக்குது… நான் சாப்பிடனும்ல” என அவளை தன்னோடு கூட்டிச் செல்ல
”நீ சாப்பிடு…. ஆனால் எனக்கு வேண்டாம்” கண்மணியும் அவன் பின்னால் செல்ல ஆரம்பித்தாள்… அவன் உள்ளே வரும் வரை அமைதியாக இருந்தவள்… வீட்டுக்குள் நுழைந்த அடுத்த நிமிட சட்டென்று எம்பி அவனிடம் இருந்த மற்றொரு சாக்லேட் பாரையும் எடுத்தவளாக..
“டொட்டடாங்… எனக்குத்தான் இதுவும்… நோ ஷேரிங்… கண்மணிக்கு மட்டுமே” மருது ஒன்றும் சொல்லாமல்… அவளைச் சாப்பிட விட்டவனாக… பாதி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது… அவளருகில் போக
தன்னிடம் இருக்கும் சாக்லேட்டைத்தான் வாங்க வருகிறான் என கண்மணி வேகமாக அவனை விட்டு தள்ளிச் சென்றவள்… சாக்லேட்டைச் சாப்பிட்டபடியே
“ஆமா என்ன என் ஃபோட்டோலாம் உன் பாக்கெட்ல ஏறிருக்கு இப்போலாம்… நான் பார்த்துட்டேனே… என் ஃபோட்டோ ஏன் வச்சுருக்க… ஏன் வச்சுருக்க…” என்றபடியே அவனிடம் விளையாட்டாகத் தள்ளி நின்று போக்கு காட்டியவள்… மருதுவின் முகம் வியர்த்திருந்ததைக் கண்டு
“சரி சரி அதெல்லாம் கண்டுக்கல… பொழச்சுப் போ… நீதான் சொல்லிட்டேல… நாம தான் மேரேஜ் பண்ணிக்கப் போறோம்னு…” என்று கண் சிமிட்டியவளின் வார்த்தைகளைக் கண்டு கொள்ளாமல் அவளை நோக்கி வந்தவனின் கண்களில் காம மிருகம் மட்டுமே குடி கொண்டிருக்க…
“ஏய் என்ன… சொல்லிட்டே இருக்கேன்ல… வராத பக்கத்துல…” சிரித்தபடியே விலகிச் சென்றவள்…
“தர மாட்டேனே… இது எனக்கு மட்டும் தான்… இது சாப்பிட்டு முடிக்கிற வரை பக்கத்துல வரக்கூடாது…. போ போ… சாப்பிடு” என அவனை விளையாட்டாக மிரட்டியபடியே …
“நீ சாப்பிடு… உன் ட்ரெஸ்ஸெல்லாம் மடிச்சு வைக்கனும்னு நெனச்சேன்… மறந்துட்டேன்… நான் அதை மடிக்கிறேன்… “ என்றபடி அங்கு கொடியில் கிடந்த அவனின் உடைகளை மடித்து வைக்க ஆரம்பித்திருக்க…
மருது இப்போது… அவளைத் தொடரவில்லை… அவளையேப் பார்த்துக் கொண்டிருக்க…
“என்ன ஆனாலும்… இன்னைக்கு என்னை விட்டு நீ போக முடியாது… “ மருது விட்டு விட… அவன் ஆடைகளை மடித்து வைத்த போதே… … கண்மணியோ சுதாரித்திருந்தாள்… காரணம் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த புத்தகங்களின் விளைவால்
”இது என்ன புக்… நான் படிச்சுட்டுச்சுட்டு தர்றேன்..” என்றபடி வேகமாக அங்கிருந்து எடுத்து அதைப் புரட்ட ஆரம்பித்த போதே மருது வேகமாகத் தாவி அவளிடமிருந்து அந்த புத்தகத்தை வாங்கியவனாக…
“இதெல்லாம் நீ படிக்கவேண்டாம்… ” வாங்கிய போதே… கண்மணி அவனிடமிருந்து தள்ளிச் சென்றிருந்தாள்… அவள் முகமும் மாறி இருந்தது… மருது அதைக்கவனிக்காமல்
“ஏய் இது என்ன…” அவள் கன்னத்தில் ஒட்டியிருந்த சாக்லேட்டைப் பார்த்துக் கேட்க..
“நான் துடச்சுக்கிறேன்… விடு..” என்ற போதே கண்மணியின் குரலில் விலகல் வந்திருந்தது… ஆனால் அவள் விலக முடியவில்லை… மருது இன்னும் நெருங்கி இருக்க… அவள் கைகளையும் பிடித்திருக்க
“விடு… விடுன்னு சொல்றேன்ல” அந்த புத்தகத்தில் அவள் பார்த்த புகைப்படங்கள் மொத்த கடுப்பையும் அவள் குரலில் கொண்டு வந்திருக்க.. அதே வேகத்தில் மருதுவையும் தள்ளி விட்டவளாக… அருவருப்பும் எரிச்லும் கலந்த குரலில் பேச பேச ஆரம்பித்திருந்தாள்…
“என்ன புக்ஸ் படிக்கிற நீ…” என அவனை முறைத்தவளுக்கு தனக்கு நேரப் போகும் ஆபத்து அப்போதும் புரியவில்லை… திட்டத் தோன்றியதே தவிர அப்போதும் அவளால் மருதுவைத் தவறாக நினைக்க முடியவில்லை…
“உனக்குத்தான் புக்ஸ் படிக்கிறதுக்கு பிடிக்கும் தானே… அப்புறம் என்ன… எல்லாம் புக்ஸ் தானே” என்ற மருதுவின் குரலில் அலட்சியம் மட்டுமே…
”அதெல்லாம் விடு… “ என அவன் அவளை மாற்றும் விதமாக
“நான் உன் மருது மாமா தானே மணி…. நான் கொடுத்த சாக்லேட் தானே இது” என்றபடி அவள் கன்னத்தில் இருந்த சாக்லேட்டை அவன் தன் நாவால் துடைக்கப் போக
சட்டென்று அவனிடமிருந்து கன்னத்தைத் திருப்பியவளுக்கு முதன் முதலாக மருதுவின் வேறொரு முகம் தெரிய ஆரம்பித்திருக்க… நம்பவும் முடியவில்லை… நம்பாமலும் இருக்க முடியவில்லை… கோபத்திலும் ஆக்ரோஷத்திலும் கண்கள் சிவக்க ஆரம்பித்திருக்க…
“மருது… என்னது இது… ஏன் இப்படி நடந்துக்கிற”
“நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னுதானே சொன்னதானே… அதுக்கான டோக்கன் மாதிரி” என்றவன்.. இப்போது அவளிடம் தாராளமாக உரிமையை கையாண்டிருக்க…
சட்டென்று அவனை எம்பி அடிக்கப் போனவளின் மணிக்கட்டை எட்டி மருது பிடித்திருக்க… பிடித்தவன் அதே வேகத்தில்… “ஆ வென்று அலறியிருக்க” கண்மணிக்கு அவன் ஏனென்று அலறினான் என்றெல்லாம் தெரியவில்லை… கிடைத்த சந்தர்ப்பத்தை அவள் ஆராய்ச்சி செய்யவும் விரும்பவில்லை… வேகமாக அந்தக் குடிசையை விட்டு வெளியே வந்தவள்… கதவை வெளியே தாளிட்டு… பூட்டி இருக்கும் இடம் அவளுக்குத் தெரியாதா…. வேகமாக அந்தப் பூட்டையும் வைத்து பூட்டியவளாக…
“நாளைக்கு காலையில உனக்கு இருக்கு… கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னால்… ஸ்கூல் போற சின்னப் புள்ளைகிட்ட இந்த மாதிரி நடப்பியா என்ன… குடிச்சுட்டு வந்துட்டு குடிக்காத மாதிரி நடிச்சுட்டு இருந்திருக்க… உனக்கு நாளைக்கு வேப்பிலை அடிச்சு அந்த துரைப் பேயை ஓட்டனும்…” என்றபடியே தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்திருக்க… மருதுவோ கதவைத் திறக்கும் முயற்சியில் அதை வேகமாக அதை உடைக்க ஆரம்பித்திருக்க
அவன் கதவை உடைக்கும் வேகம் முதன் முதலாகக் கண்மணிக்கு பயத்தைக் கொண்டு வந்திருக்க…. படபடப்பில் முதன் முதலாக கண்மணி அந்தத் தவறைச் செய்தாள்.. அந்த இடத்தை விட்டுப் போவதற்குப் பதிலாக தன் குடிகாரத் தந்தையை நம்பியிருக்க… வேகமாக தன் வீட்டுக்குள் நுழைந்தவளாக… படுத்திருந்த தன் தந்தையிடம் ஓடி இருந்தாள்….
“அப்பா… “ குடிபோதையில் படுத்திருந்த நட்ராஜை உலுக்கியவளாக….
“மருதுவை வந்து என்னன்னு கேளுங்கப்பா… நீங்க வந்தால் அவன் பயப்படுவான்… எழுந்திருங்க…. நீங்க பேச வேண்டாம்… அவனை முறைங்க… அதுக்கே அவன் அடங்கிருவான்” கண்மணிக்கு தொண்டை வறண்டாற்ப் போல உணர்வு… குரல் கூட நடுக்கமாக வர ஆரம்பித்திருக்க… திடீரென்று இந்தவீட்டின் கதவு மூடப்படும் சத்தம் கேட்க…
”அந்தக் கதவை உடச்சுட்டு மருது வந்துட்டனா” … பதட்டத்திலும் பயத்திலும் வேகமாக தன் தந்தையை விட்டு விட்டு கதவை நோக்கிப் பார்க்க… அங்கு நின்ற துரையைப் பார்த்த கண்மணியின் கண்கள் இப்போது அதிர்ச்சியில் வெறித்து நின்றிருக்க… அடுத்த அதிர்ச்சி அவளுக்கு கிடைத்திருந்தது…
“நீ போகலையா… இங்கதான் இருக்கியா” அவனிடம் பேசியபடியே கண்மணி தன் தந்தையைப் பார்த்தாள்… நிராயுதபாணியாக
மருதுவிடமிருந்து தப்பித்து இங்கு வந்தால்… இவன் இங்கு இருக்கின்றான்… இவன் போக வில்லையா…கண்மணி துரையை எதிர்பார்க்கவே இல்லை… மருதுவின் நடவடிக்கையையே அவள் எதிர்பார்க்கவில்லைதான்… ஆனால் மருதுவை மிரட்டினால்… திட்டினால் மாறி விடுவான் என்ற நம்பிக்கை இருந்தது… இந்தத் துரை யார் அவளுக்கு… இவள் பேச்சை அவன் எப்படி கேட்பான்… மருதுவே அப்படி நடந்தான் என்றால் துரை… கண்மணிக்குப் பயப்பந்து அடிவயிற்றில் சுழன்றிருக்க
தந்தையை விட்டு… எழுந்து நின்றவள்… தன்னைக் காக்கும் முயற்சியை அனிச்சையாக யோசிக்க ஆரம்பித்திருக்க… துரையோ… அவளருகே செல்லாமல் நட்ராஜின் அருகே வந்திருக்க.. அவன் கையில் ஏதோ ஒரு பாட்டில்(குடுவை) இருக்க… அதை நட்ராஜின் அருகே கொண்டு செல்ல… அதைப் பார்த்தவள்… தன்னை… தன் பாதுகாப்பை… தன் நிலையை எல்லாம் மறந்தவளாக…
“ஏய்… அது என்ன… அவருக்கு ஏன் கொடுக்கிற….” வேகமாக அவனருகே வந்து அந்தப் பாட்டிலைத் தட்டியும் விட்டிருக்க… துரையோ இளக்காரமாகச் சிரித்தான்…
“பரவாயில்ல பாப்பா… இன்னொரு பாட்டிலும் கைவசம் இருக்கும்… உன் அப்பனுக்கு இதை ஊத்திட்டா உன் அம்மா கூடவே போயிருவாரு… எதுக்கு இந்த ஆளு… அதான் நாங்க இருக்கோம் உனக்கு” என்றபடி… இப்போது இன்னொரு பாட்டிலைக் காண்பிக்க… அவசரத்தில் கண்மணி அதைக் கூர்ந்து கவனிக்கவில்லை… அது ஏற்கனவே நட்ராஜுக்கு கொடுக்கப்பட்டிருந்த காலியான இருந்த பாட்டில்….. அவன் கை வைத்து மறைத்தும் காண்பித்திருக்க… கண்மணிக்கு அவள் எண்ணங்களில் அவள் தந்தை மட்டுமே இருக்க மற்றதெல்லாம் உன்னிப்பாக நோக்கவில்லை……
கண்மணி இப்போது வேகமாக அவனிடமிருந்து அதை வாங்க முயற்சித்து போராட ஆரம்பித்திருக்க… துரையின் கைகளில் லாவகமாக மாட்டி இருந்தாள்…
---------
நட்ராஜ் பவித்ராவின் புகைப்படம் கீழே விழுந்து நொறுங்கி இருக்க… அந்த அறை எங்கும் அந்தப் புகைபடத்தை மேல் இருந்த கண்ணாடி இப்போது சிதறல்களாக காட்சி அளிக்க…
இன்னொரு புறமோ உடைந்த கண்ணாடி வளையல்கள்… அவை அனைத்தும் பவித்ரா கையில் அணிந்திருந்த வளையல்கள்….
துரையின் உதவியால் நட்ராஜின் வீட்டுக்குள் வந்திருந்த மருது அதை எல்லாம் பார்த்தபடியே துரையைப் பார்க்க…
“பொண்ணாடா அவ… பிசாசு… என்ன பண்ணி வச்சுருக்கா பாரு… நீ இரு நான் பார்த்துக்கிறேன்… அவ இன்னைக்கு உனக்குத்தான்” சொன்ன முகத்திலும் ஆங்காங்கே சில கீறல்கள்…
”என்னடா கைல போட்ருக்கா அவ…” என்றபடி முகத்தைத் அழுந்தத் துடைத்தவன்….
“நீ கொஞ்ச நேரம் அங்க மறஞ்சு இரு… கிச்சன்ல போயிட்டு கதவைப் பூட்டிட்டா… ”
“டேய்… நீ ஏண்டா…” மருது பேச ஆரம்பித்த போதே
“நீ ஒண்ணும் சொல்லாத… முழுக்க நனைஞ்சாச்சு… இனி விட்டோம்னா நீ அவ்ளோதான்…. நான் சொல்றதை மட்டும் கேளு… அவளை உன் காலடில வந்து போட்றேன்” என அவனை மறைந்து நிற்கச் சொல்லிவிட்டு… வேகமாக கண்மணி பூட்டிக் கொண்டு உள் இருந்த சமையலறைக் கதவின் அருகே போய் நின்றவனாக…
“ஏய் வெளில வாடி… பெரிய ஜான்ஸி ராணி மாதிரி… நீ ஆக நெனச்சாலும்.. உன்னால ரொம்ப நேரம் தாக்குப் பிடிக்க முடியாது…” துரை கதவைத் தட்ட
சமையலறைக்குள் அமர்ந்திருந்த கண்மணி கொஞ்சமும் அசையவில்லை… மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்க… அவள் மூளை… எப்படி தன்னைக் காத்துக்கொள்வது இதைத் தவிர வேறு எதைப் பற்றியும் யோசிக்க மறுத்திருந்தது…
இங்கிருந்து எப்படி தப்பிப்பது… அதுவும் தனக்கு ஏதும் பாதிப்பு ஏதும் இல்லாமல்… அதுவும் முக்கியம்… யோசித்த போதே…
மருது வசித்த குடிசையின் பக்கவாட்டுப் பகுதி தெரிய… ஒரு புறம் குடிசையில் மாட்டிக் கொண்டிருக்கும் மருதுவின் முகமும் வந்து போக… இன்னொரு புறம் துரையிடம் மாட்டிக் கொண்டிருக்கும் தந்தையின் முகமும் வந்து போக… அவளையுமறியாமல் அவளுக்கு விம்மல் வந்து போனது…
யாரை பாதுகாப்பு அரண்களாக கருதினாளோ… இருவருமே அவளுக்கு உதவும் நிலையில் இல்லை… கண்களில் இருந்து கண்ணீர் கரகரவென இறங்கி… கன்னங்களில் வடிந்திருக்க… வேகமாக கையை வைத்து துடைக்கப் போக… கன்னங்களில் சுள்ளென்று வலி…
மருதுவும்…. சற்றுமுன் துரையும்… இப்போது இவளும் முகம் சுருங்க காரணம்.. வேகமாக கைகளைத் திருப்பிப் பார்க்க… அவள் அணிந்திருந்த அந்தச் சிறுவன் கொடுத்திருந்த காப்பு… அதில் இருந்த சிலும்பல்கள் இந்த அளவுக்கு வலி தருமா… மருதுவிடமிருந்து தப்பித்த காரணமும் துரையிடமிருந்து தப்பித்த காரணமும் இதனால் தானா…
கண்மணிக்குள்… சிறு உத்வேகம் வந்திருந்தது…
“நான் தான் உன்னைக் காப்பாத்தினேன்” அவன் சொன்னது ஞாபகம் வந்திருக்க… ஒருவேளை அவன் அன்று இல்லாவிட்டால்… இதே மாதிரி சூழ்நிலைதான் அன்றும் கிடைத்திருக்குமோ…
“எங்கேயும் போய் மாட்டிக்காதடி” அவன் கடைசியாக எச்சரித்த வார்த்தைகள் இப்போதும் காதுகளில் ஒலித்தாற்போல இருக்க… கன்னங்களில் கண்ணீர்
”நான் ஷக்தி மான் சூப்பர் மேன் மாதிரி… நினைத்தால் உடனே வருவேன்” அவன் சொன்னதும் ஞாபகத்துக்கும் வந்திருக்க… அவன் சொன்னது பொய் … அவன் வரமாட்டான் என்று தெரியும்… எல்லாம் தெரிந்து… புரிந்தும்.. அந்தக் குழந்தையின் மனது அவனையும் நினைத்துப் பார்க்கச் சொன்னது…
வருவானா என்ன… நட்ராஜ் ரிஷியிடம் கேட்டது போல…
“யாரோ ஒரு கார்லாவைக் காப்பாற்றினாய்… ஏன் என் மகளைக் காப்பாற்றவில்லை…” அவளின் ரிஷி எங்கோ ஓர் மூலையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தானே…
அன்று கை கால் கட்டப்பட்டு… செயல்படவே முடியாத நிலையிலும் தப்பித்து வந்தது கண்மணிக்குள் இப்போது ஞாபகத்திற்கு வந்திருக்க… கண்மணி மீண்டும் தனக்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்ட போதே
அருகில் இருந்த மண்ணெண்ணெய் பாட்டில் கண்ணில் பட்டிருக்க… வேகமாக… மூளை கொடுத்த யோசனையில் மனம் துள்ளியது…
”ஒரு பத்து நிமிசம்… என்னைக் காப்பாத்திகிட்டா நான் தப்பிச்சுறலாம்…” மனதில் நம்பிக்கை வந்திருக்க… வேக வேகமாகத் தான் அணிந்திருந்த சட்டையின் நுனியின் ஒரு பகுதியைக் கிழித்தவளாக… அங்கு கிடைத்த கரண்டியில் சுருட்டி… மண்ணெண்ணையில் முக்கியவள்… தீப்பெட்டியைத் தேடி எடுத்து… பற்ற வைத்து சன்னல் வழியே தூக்கி எறிய நினைத்த போதே… மருது அந்த வீட்டுக்குள் இருப்பது நினைவுக்கு வந்து கண் முன் வந்து நிற்க… தானாக அவள் கைகள் இறங்கியிருக்க… என்ன செய்வதென்று… தெரியவில்லை… புரியவில்லை… மீண்டும் அழ ஆரம்பித்திருந்தாள் தன் நிலையை எண்ணி…
“ஏய் வாடி… வெளில வாடி… “ கதவை உடைத்துக் கொண்டிருந்தான் துரை…
கையில் வைத்திருந்த துணி மொத்தமும் எரிந்து முடியப் போகும் தருணம்…
“ஐயோ… நீ ஏண்டா மருது இப்படி மாறின” என தலையில் அடித்தபடி அழ ஆரம்பித்த போதே… அவள் கைகள் மரத்துப் போனது போல உணர்வு… கால்கள் தரையில் படாதது போல உணர்வு…
“ஏன் எப்படி தனக்குள் நடக்கிறது… என்ன ஆனது” தள்ளாட ஆரம்பித்தவளுக்கு அதற்கான விடையும் கிடைத்திருந்தது துரையின் வார்த்தைகளில்
“ஏய் ரொம்ப புத்திசாலினு நினைக்காதடி… நீ சாப்பிட்ட சாக்லேட்னால இன்னும் கொஞ்ச நேரத்துல மயங்கியிருவ… எங்க இருந்தால் என்ன… எனக்குப் பிரச்சனை இல்ல… ஆனால் இப்போ வெளில வந்தேன்னாதான் உன் அப்பாவைக் காப்பாத்தலாம்…”
கேட்ட அடுத்த நொடி…
“சாக்லேட்ல… மயக்க மருந்தா…” மருதுவை முழுமையாக நம்பியிருந்த கண்மணியின் மனது சில்லு சில்லாக உடைந்த தருணம் அந்தத் தருணம் தான்… அதே தருணம் தான் கண்மணியின் நம்பிக்கை ஒளி… அவளை விட்டு தூரமாகவும் விலகி சென்றிருந்தது…
”அவ்வளவுதான் இனி… என்ன செய்து என்ன ஆகப் போகிறது” தன்னையே வெறுத்தவளாக கையில் இருந்த கரண்டியை வெளியே வீசி எறிந்திருக்க… அதே நேரம் கதவும் உடைக்கப்பட்டிருக்க… அவள் இப்போது போராட முயலவில்லை… தன் இடத்திலேயே நின்றிருக்க… துரை அவள் முன் வந்து நிற்க… இப்போதும் தன் திமிரை விடவில்லை….
“ஏண்டா… உனக்கென்ன நான் பாவம் பண்ணேன்… அவனை ஏண்டா இப்படி மாத்துன… என் கையாலேயே கொல்ல வச்சுட்டதானே… என்னை என்ன பண்ணப் போற… இல்ல என்ன பண்ணிருவ நீ…” அவனிடம் கத்தியவளாக அவனை அடிக்க ஆரம்பித்திருக்க…
“அடி… எவ்ளோ அடினாலும் என்னை அடிடி… ஆனால் இதை மட்டும் கழட்டிட்டு அடி” என்றபடி அவளது கையில் இருந்த கைக்காப்பை கழட்டி இரண்டாக உடைத்து எறிந்திருந்தவன்… அவளை இழுத்துக் கொண்டு வரவேற்பறைக்கு வந்து தள்ளி விட… கீழே விழுந்தவளின் உடலெங்கும்.. முகமெங்கும் கண்ணாடி சில்லுகள்
கண்மணிக்கு தெரிந்து விட்டது… இனி என்ன முயன்றும் இவனிடமிருந்து தன்னைக் காப்பாற்ற முடியாது என்பதை… அதை அவள் உள்ளமும் உறுதி செய்திருக்க… எழ முடியாமல் எழுந்து அமர்ந்தவள்… தன் அப்பாவின் அருகே சென்றவள்.. அவரை அப்போதும் எழ முயற்சித்தபடியே
“என் அப்பாவை விட்ரு” துரையிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் அருகே துரையின் முகம் நெருங்கியிருக்க…
“உன்னை கொல்லாமல் விட…” கண்மணி முடிக்கவில்லை அவனிடம் அறை வாங்கி இருக்க…
“நீ பொழச்சு வா… அதுக்கப்புறம் என்னைக் கொல்றதைப் பற்றி பேசலாம்..” என்ற போதே மருதுவும் அங்கிருந்து வந்திருக்க…
கண்மணி மருதுவைப் பார்க்கவில்லை… அவள் துரையிடம் மட்டுமே போராடிக் கொண்டிருக்க
“நா இல்லேனாலும்” எனும் போதே துரை அவள் தலை முடியைப் பிடித்து கொத்தாகத் தூக்கியிருக்க…
”உன்னோட கடைசி நிமிசத்துக்கு காரணம் நானாத்தான் இருப்பேன்” என்றவளின் வார்த்தைகளை ரசித்த அந்த ராட்சசன் சிரித்தபடியே… மருதுவின் புறம் அவளைத் தள்ளியிருக்க… மருதுவும் அங்கு நிற்கிறான்… என்பதை அறியும் முன்னரே…. வெளியே பெரும் வெடி வெடித்தது போல சப்தமும் வெளிச்சமும் அவள் கண்களுக்கு வந்து சேர்ந்திருக்க… கண்மணியின் கண்கள் வெளியே குடிசையை வெறித்து… மருதுவிடம் அவள் எண்ணம் சென்றபோதே… கண்மணியும் இருளுக்குள் சென்றிருந்தாள்…
ஏதோ ஒரு இரவில் தான் கண்ட உயிர்துடிப்பான அந்தக் கண்களைத் தேடி அலைந்த ரிஷிக்கு அவளே உயிராகவே வந்து சேர்ந்திருந்த போதும்… கண்டுபிடிக்க முடியாத நிலையில்… அந்தக் கண்கள் தன் உயிரை தொலைத்திருந்தது அந்த இரவில்தான்
------------
Ssssappa