/* ஹலோ ஃப்ரெண்ட்ஸ்...
கண்மணி என் கண்ணின் மணி... நாம சின்ன வயசுல படிச்ச சிண்ட்ரெல்லா கதை... தவளை இளவரசன்... இந்த மாதிரி பல ஃபேண்டசி கதைகளோட தாக்கத்துல நான் யோசிச்ச கதைதான் இது... இப்போ அதை எப்படி எழுத முடியும்... அந்த மாதிரி யோசிச்சு ட்ரை பண்ணின கதைதான்... சில இடங்கள் ரியாலிட்டியா இருக்கும்... சில இடங்கள் ஃபேண்டசியா இருக்கும்.... இந்த எபியும் அந்த மாதிரி ஃபேண்டசி பேஸ் எபிசோட்...
இந்தக் கதை பெரிய கதைனு சொன்னதே இதுனால தான்... கண்மணி கேரக்டர் கிட்டத்தட்ட ஒரு ஃபேண்டசி கேரக்டர் தான்... சிண்ட்ரெல்லா ஸ்டோரியோடலாம் கம்பேர் பண்ணக் கூடாதுதான்....... அந்த மாதிரி ஃபீல் கொடுக்க முடியுமான்னு தெரியலை... ஆனால் என்னோட ஒவ்வொரு கதையோட ஹீரோயினும் அவங்களோட ஹீரோக்கு தேவதைகளோ இல்லையோ எனக்கு தேவதைகள்...சிறகில்லாத தேவதைகள்... அதுல கண்மணியோட கேரக்டர் கொஞ்சம் அதிகப்படியான கற்பனைகள் சேர்க்கப்பட்டு எழுதப்பட்ட கேரக்டர்... ரியல்ல இப்படி ஒரு பொண்ணை நாம மீட் பண்ணவே முடியாது... அதுதான் உண்மை...
அண்ட் இந்த எபிசோட் பற்றி... அதாவது சின்ன வயது ரிஷி-கண்மணி பற்றி...
ரொம்ப ஆழமாவும் எமோஷனலாவும் சொல்ல முடியாது... சின்ன வயசு பசங்க... அந்த ஃபீல்ல எவ்வளவு சொல்ல முடியுமோ அதை சொல்ல ட்ரை பண்ணியிருக்கேன்...
அண்ட் அப்கம்மிங் எபிசோட்ஸ் பற்றி...
இது வரை... கண்மணி லைஃப்ல எவ்ளோ சோகம் இருந்தாலும்... அவ உலகம் அவ சந்தோசம்னு இருந்த பொண்ணு... அவளோட அந்த சந்தோச உலகம் உடையும் பகுதிகள் இனி...
சோ ரொம்ப இளகிய மனசு இருக்கிறவங்க ஸ்கிப் பண்ணிகங்க... கதையை கதையா படிக்கிறவங்க மட்டும் படிங்க... ப்ளீஸ்... இது என்னோட ரிக்வஸ்ட்
அடுத்து என்ன.... வழக்கம்போல உங்க அன்புக்கும்... கண்மணி ரிஷிக்கு நீங்க கொடுக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி.... கோடான கோடி நன்றிகள்...
நன்றி
பிரவீணா
*/
அத்தியாயம்-93
/*உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும்
உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும்
இரு பூக்கள் கிளை மேலே
ஒரு புயலோ மலை மேலே
உயிர் ஆடும் திகிலாலே
என் வாழ்வின் ஓரம் வந்தாயே செந்தேனே
கண்ணீரே கண்ணீரே
சந்தோஷக் கண்ணீரே கண்ணீரே
தேடித் தேடித் தேய்ந்தேனே
மீண்டும் கண்முன் கண்டேனே*/
கண்மணியின் மயக்கம் முற்றிலுமாக போயிருக்க… மெல்ல கண்களை விழித்துப் பார்த்தவளுக்கு இருள் மட்டுமே… மெல்ல மெல்ல இருளுக்கு கண்கள் பழகிய போதே பௌணர்மி நிலவின் வெளிச்சமும் அந்த இடத்துக்குள் வந்திருக்க… இப்போது கண்மணியின் கண்களுக்கு எல்லாமே நன்றாக தெரிய ஆரம்பித்திருக்க… அவளது ஐம்புலன்களும் அதனதன் இயல்புக்கு வர முயற்சி செய்த போதுதான் தெரிந்தது… அவளது வாயில் போடப்பட்டிருந்த கட்டு… இருந்தும் கண்மணி பேச முயற்சிக்க… அது இயலாமல் போக.. விட்டவளாக… தன்னை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்திருந்தாள் கண்மணி… படுத்திருந்த நிலையில் கையும் காலும் கட்டப்பட்டிருக்க… அப்போதும் பயப்படவில்லை அவள்…
அடுத்து என்ன செய்யலாம்… எப்படி தப்பிக்கலாம்… இதுதான் அவள் யோசனை.
இதே யோசனையில்… தான் படுத்திருந்த சுற்றுப்புறத்தை நோட்டமிட ஆரம்பித்திருக்க… அவளைக் கடத்தி வந்த ரவுடிகள் இருவர் கூடவே இன்னொருவன்… என மூவர் அங்கிருக்க… கண்மணிக்கு கொஞ்சம் பயம் வரத்தான் செய்தது…. இருந்தும் இப்போது பயந்தால் ஒன்றுமே செய்ய முடியாது என்று உணர்ந்தவளாக… தனக்குள் தைரியத்தை வரவழைத்தபடி… மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்…
“அப்பாவைப் பார்க்க போக வேண்டும்… கண்டிப்பாக அது நடக்கும்… தன் அப்பாவைப் பார்க்காமல் தான் இந்த உலகை விட்டு போக மாட்டேன்….. நிச்சயமாக அப்பாவைப் பார்ப்பேன்” என்று தனக்குள் தானே நம்பிக்கையூட்டிக் கொள்ள.. அந்த நம்பிக்கை அவளுக்குள் புது உற்சாகம் பிறந்திருக்க… அதைத் தன் கண்களுக்குள் கொண்டு வந்திருந்தாள்…
அதன் பிறகு… இப்போது மெல்ல தூரப் பார்வையை விடுத்து தன்னைச் சுற்றி நோட்டமிட ஆரம்பித்திருக்க அப்போதுதான் அவள் கண்களுக்கு அவன் கண்ணில் பட்டான்…
அவளைப் போல அவனும் பள்ளி செல்லும் சிறுவன் என்பதை பார்த்த உடனே தெரிந்து கொண்டவள்… அவனையேப் பார்த்தபடி இருந்தவள்… அந்தச் சிறுவனும் கண் விழிக்கும் வரைக் காத்திருக்க ஆரம்பித்திருந்தாள்…
---
நிமிடங்கள் கடந்திருக்க… மெல்ல அவனும் முகம் சுருக்கியபடி கண் விழிக்க… அவன் கண்மணிகள் பிரதி எடுத்திருந்தது கண்மணியின் முகத்தைத்தான்… இவள் கண்களைத்தான்… கண்மணியும் அவன் கண்களைச் சந்திக்க..அந்தக் கண்களில் கலந்த அடுத்த நிமிடம் அந்தச் சிறுவனின் கண்களில் பேயைப் பார்த்த பீதி வந்தது போல் திகில் பரவியிருக்க… அந்த பயத்தில் அவன் கத்த முயற்சித்த போதே… கண்மணி நொடியில் சுதாரித்தவளாக… அவனிடம் கண்களாலேயே ’கத்தாதே’ என்பது போல சைகை காட்டி… அவனை தன் கண்களின் அசைவுகளாலேயே அடக்கியிருக்க… அவனும் இப்போது மௌனமாகியபடி இவளையே பார்க்க ஆரம்பித்திருந்தான்…
ரிஷியும் சரி கண்மணியும் சரி… இன்று வரை அதாவது அவள் ரிஷியின் கண்மண்யாக… அவன் கண்மணியின் ரிஷியாக மாறிய போதும் தெரிந்திருக்கவில்லை… தாங்கள் முதல் முதல் சந்தித்த தருணங்களை…
“உங்க லைஃப்ல நடந்த ஏதாவது விசயங்களை சென்சார் பண்ணிட்டீங்களா..” கண்மணி ரிஷியிடம் அவர்களின் திருமண நாள் இரவில் கேட்டிருப்பாள்… ஆம்… ரிஷி அவன் வாழ்க்கைக் கதையைச் சொன்னபோது கத்தரித்த பக்கங்கள்… இப்போது காணலாம்…
ரிஷிக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை… கடந்த ஆறு மணி நேரத்தில் இரண்டு முறை மயக்க மருந்த்து கொடுக்கப்பட்டிருக்க… ஒரு மாதிரியான தளர்வான நிலையில் இருந்தான்…
முதல் முறை மயக்கம் தெளிந்தபோது அவனைக் கடத்தி வந்தவர்கள் மட்டுமே இருக்க… இப்போது தன் அருகில் இன்னொரு சிறுமி… தன்னை விட பெரியவளா சின்னவளா… கண்டுபிடிக்க முடியவில்லை… அவள் முகத்தைப் பார்த்தும் சொல்ல முடியவில்லை… அதே நேரம் இன்னொன்றும் தோன்றியது அவள் கண்களில் போட்டிருந்த கண்மை… இல்லையில்லை அப்பியிருந்த கண்மை..
கண்மணியைப் பார்த்தவுடனே ரிஷி பயந்து போனதுதான் உண்மை… சாமிதான் இல்லையென்று சொல்லுவான்…. பேயை என்றால் கொஞ்சம் பயம்தான்…
ஆக அவளைப் பார்த்தவுடன் அவன் இருந்த நிலையிலும் அவனுக்கு இதுதான் தோன்றியது…
“யம்மா… அந்தக் கண்மையை கொஞ்சமா போட்ருக்க கூடாதா... ” ஆனால் மெல்ல மெல்ல அந்தக் கண்களின் மீது தோன்றிய பயம் விலகியிருக்க… அதுவும் அவளும் தன்னைப் போல இவர்களிடம் மாட்டியிருக்கின்றாள்…. பெண் பிள்ளை வேறு… தானாகவே அவனுக்குள் அவனையுமறியாமல் தைரியம் மெல்ல மெல்ல தலை தூக்க ஆரம்பித்திருக்க… இப்போது அவளைப் பார்வையில் கனிவு வந்திருக்க… அதே பார்வையோடு கண்மணியைப் பார்க்க… அவன் பார்த்த அவள் கண்களிலோ கொஞ்சம் கூட பயம் என்பது இல்லை… மாறாக கடத்தப்பட்ட எந்தவித பயமுன் இன்றி இவனை ஒரு அலட்சியப் பார்வையுடன் பார்த்திருக்க… ரிஷிக்கும் தன்மானம் விழித்துக் கொண்டாது..
ஒரு சிறு குழந்தை… அதுவும் பெண் குழந்தை… அவளே இப்படி இருக்கும் போது தான் மட்டும் ஏன் பயப்படுவானேன்… அந்த 13 வயது ஆண்மகனுக்குள் கம்பீரம் வந்திருக்க… கண்மணியை நேருக்கு நேராகப் பார்த்தபடி…
”நீயும் என்னை மாதிரி மாட்டிக்கிட்டியா” ரிஷி கரகரத்த குரலில் கேட்டான்… அவன் குழந்தைப் பருவம் மாறி அடுத்த கட்டத்திற்கு அடி எடுத்து வைத்த காலம் என்பதால் கேட்பதற்கு அவன் குரல் உடைந்திருந்தது
கண்மணிக்கு அந்த இரவில் அந்தக் குரலைக் கேட்கவே கர்ண கொடுரமாக இருந்தது… பார்த்தால் சிறுவனாக இருக்கின்றான்… குரல் என்ன இப்படி இருக்கின்றது என்ற ரீதியில் கண்மணியோ கடுப்பாகப் பார்த்தாள்…
அந்தக் கடுப்பு அவன் குரலுக்காக மட்டும் இல்லை… இவள் வாயை மட்டும் துணியால் கட்டியவர்கள் அவனுக்கு மட்டும் கட்டவில்லையே… அந்தக் கடுப்போடு பார்க்க…
“கேட்கலையா… இரு பக்கத்துல வர்றேன்” என்றபடி… கஷ்டப்பட்டு மெல்ல புரண்டு அவள் புறம் நெருங்கியவனைப் பார்த்து கண்மணியே அரண்டாள் தான்..
”இன்னும் பக்கத்துல வேற இவன் குரலைக் கேட்கனுமா…” தனக்குள் நொந்து கொண்டவளாக… அவனைப் பார்க்க ஆரம்பிக்க
“நான் வந்து ரொம்ப நேரம் ஆச்சு… உன்னை இப்போதான் கடத்தினாங்களா… இவங்க ரொம்ப கெட்டவங்க… நம்ம கையைக் காலை உடச்சு … கண்ணை நோண்டி பிச்சை எடுக்க வச்சுருவாங்களே அந்த கூட்டம்…” ரிஷி பீதியோடு சொல்ல… கண்மணி அவன் பேச்சை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தாள்…
”நீ பேச மாட்டியா… ஓ வாயைக் கட்டிட்டாங்களா… எனக்கு எடுத்துட்டாங்க… அவளிடம் பேசிக் கொண்டே இருக்க”… அவன் பயந்து விழித்ததாலோ… ஏனோ என்னவோ அவனை அவளுக்குப் பிடிக்கவில்லை… அதனால் கண்மணிக்கு அவனிடம் பேசப் பிடிக்கவில்லை… எதற்கு இவனிடம் பேசவேண்டும் என்று யோசித்தவளாக… அமைதியாக இருக்க… ரிஷி அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை… அவளையும் பார்க்க வில்லை… அதே நேரம் ரிஷிக்கு இப்போது தானாகவே பொறுப்பு வந்திருக்க… தன் கையை வாயருகே கொண்டு வந்தவனாக… தன் கைக்கட்டை நெகிழ்த்தும் முயற்சியுடன் பல்லில் கடித்து இழுத்தபடி இருக்க… கண்மணிக்கோ அது கூட முடியாது… அவள் கையைப் பின்னால் சேர்த்துக் கட்டியிருந்தனர்…
ரிஷியோ முயற்சித்துப் முயற்சித்துப் பார்க்க அவனால் முடியவே இல்லை… அவ்வப்போது அந்த கடத்தல் காரனையும் பார்த்தபடியே தன் கைக்கட்டைப் பிரிக்க முயற்சித்துக் கொண்டிருந்தான்… முதலில் இதே போல் முயற்சி செய்த போதுதான் மீண்டும் மயக்க மருந்து கொடுக்கப்பட்டது… இந்த முறையும் அது போல் ஆகக் கூடாது என மிக எச்சரிக்கையாக இருந்தான் ரிஷி…
அவனின் எச்சரிக்கை உணர்ச்சியும்… அவனின் முயற்சியும் கண்மணிக்கு அவன் மேல் சிறு நம்பிக்கை கொடுத்திருக்க… அவன் மீதான் அவள் பார்வையும் மாறி இருக்க… அவன் தன்னை மீண்டும் பார்க்கும் வரை கண்மணி அவனையே பார்த்தபடி இருக்க… ஒரு கட்டத்தில் ரிஷி அவளை மீண்டும் பார்க்க… அதற்காகவே காத்திருந்தார்ப் போல கண்மணி அவனைப் பார்த்து கண் சிமிட்ட… பார்த்த ரிஷிக்கோ.. சட்டென்று அதிர்வு அவனுக்குள்…
“என்ன இவ… கண்ணடிக்கிறா” பதின்மத்தின் தொடக்கத்தித்தில் இருந்தவனுக்கு ஏதோ ஒன்று உள்ளுக்குள் தோன்ற… கொஞ்சம் அவனுக்குள் ஏதோ ஒரு மாற்றம் தான்… முதன் முதலாக அவன் இளமையின் ஹார்மோன் அன்றுதான் அவனிடத்தில் பணியைத் தொடங்கியது போன்ற உணர்வு.. என்னவென்றல்லாம் தெரியாது உணர்வு… வந்த வேகத்திலேயே போயிருக்க…. அவளை ரிஷி முறைக்க..
அவளுக்கோ அவன் உணர்வுகள் எல்லாம் புரியவில்லை… மாறாக… மீண்டும் கண் சிமிட்டி… அவனை அவனருகே அழைக்க… அதுவும் அவள் கழுத்தில் கிடந்த கருப்புக் கயிற்றைக் காட்டி ஏதோ சொல்ல…
ரிஷிக்கு முதலில் புரியாவிட்டாலும்… அவளது தொடர் கண் சைகையில் அவள் கண்பார்வைகளின் மொழி மெல்ல மெல்ல புரிய ஆரம்பித்திருக்க…
’தன்னை அவள் அருகே வரச் சொல்கிறாள்…” உணர்ந்தவனாக மெல்லப் புரண்டு அவள் அருகே நெருங்கியவனிடம்.. கழுத்தைக் கண்மணி காட்ட… ரிஷியின் புருவங்கள் உயர்ந்தன…
“என்ன சொல்ல வருகிறாள்… அவள் கழுத்தில் இருக்கும் கயிற்றில் என்ன இருக்கு…” அதை வாயாலே கேட்டும் விட… கண்மணியும் இப்போது சைகை மொழி காட்ட…
“கயித்துல டாலர் இருக்கா…” ரிஷி சந்தேகமாகக் கேட்க… கண்மணி வேகமாகத் தலை ஆட்ட..
“இருக்கட்டும் அத வச்சு என்ன பண்ண… என் பல்லை விட அது என்ன கூர்மையா இருக்க போகுதா” ரிஷி அலட்சியமாகச் சொல்ல
“லூசு… அதுல ப்ளேடு இருக்குடா மரமண்ட… இவன வச்சுக்கிட்டு நாம தப்பிச்சுட்டாலும்…” கண்மணியால் உள்ளுக்குள் தான் திட்ட முடிந்தது… ஆனாலும் விடாமல் அவனிடம் சொல்ல முயற்சித்துக் கொண்டே இருக்க
“சரி வெயிட் பண்ணு… டாலர்ல எதாவது வச்சுருக்கியா என்ன “ என்றபடி அவளது கழுத்தின் அருகே வந்தவன்… கயிற்றை விரல்களால் தொட்டு வெளியே எடுக்க.. ரிஷிக்கோ அதிர்ச்சிதான்… ஆச்சரியம் தான்
“ஏய்.. என்ன நீ ப்ளேட்லாம் டாலரா போட்ருக்க… உனக்கு தெரியுமா என்ன… உன்னைக் கடத்தப் போறாங்கன்னு… இல்ல நீ பேபி ரௌடியா என்ன” என்றவனுக்கு அடுத்து என்ன செய்ய என்றுதான் தெரியவில்லை…
”இதை வைத்து…. என் கைக் கட்டை ..உன் கைக்கட்டை அவிழு “ கண்மணி சைகை மொழிப் பாடம் அவனுக்கு எடுக்க… ரிஷிக்கும் அது புரிய… வேகமாக அந்தக் கயிற்றினை அவள் தலை வழியே எப்படியோ கஷ்டப்பட்டு கழட்டியவன்… ப்ளேடின் மேல் இருந்த பேப்பரை எடுத்து அதைக் கைகளால் எடுத்து கண்மணியின் கைக்கட்டைப் பார்க்க… கண்மணிக்கோ பின்னால் கைகட்டப்பட்டிருக்க…
“நீ திரும்புனாத்தான் கைக்கட்டை பிரிக்க முடியும்… ட்ரை பண்ணிப் பாரு…” என ரிஷி சொல்ல… கண்மணியும் முயற்சித்தாள் தான்… ஆனால் திரும்ப முடியவில்லை…
யோசித்த ரிஷிக்கு வேறு வழியில்லை … வேகமாக ப்ளேடை தன் பற்களால் கவ்வியவன்… தன் கைக்கட்டைத் தானே அவிழ்க்க ஆரம்பித்திருக்க… கண்மணியின் கண்களிலோ இப்போது அச்சம் வந்திருந்தது…. கண்டிப்பாக அவனால் உதட்டில் காயம் ஏற்படாமல் அந்தக் கட்டை அவிழ்க்க முடியாது என்பது நன்றாகவேத் தெரியும்…
தன் உதட்டில் அவள் பார்வை பதிந்திருப்பதையும்… அவள் பார்வையில் இருந்த கலவரத்தையும் கண்ட ரிஷிக்கும் அவள் பயம் புரிந்திருக்க
“நான் பார்த்துக்கிறேன்… ” உள்ளுக்குள் பயம் இருந்தாலும் அவளிடம் காட்டிக் கொள்ள அவன் கெத்து விடவில்லை… எப்படியோ தன் கைகட்டைப் பிரித்திருக்க… அதன் விளைவு… தன் உதட்டில் கண்மணி கொடுத்த ப்ளேடால் முத்தங்கள் வாங்கி இருந்தான் தான்…. உதட்டில் ஆங்காங்கே கீறல்கள்… ரத்தம் வேறு கசிய ஆரம்பித்திருந்தது…
கண்மணி அவனைப் பாவமாகப் பார்க்க… அவனோ அதை எல்லாம் கண்டு கொள்ளாமல்… அந்தக் கடத்தல்காரர்களைப் பார்க்க… அவர்கள் மூவருமே போதையின் உச்சத்தில் இருக்க… இதுதான் நல்ல சமயம் என்று அவனுக்குத் தோன்ற… தன் காயம் அதில் ஏற்பட்ட எரிச்சல் இதெல்லாம் அவனைக் கட்டுப்படுத்தவே இல்லை…. வேகவேகமாகச் செயல்படத் தொடங்கினான்… சில நிமிடங்களில்… கைக்கட்டு மற்றும் கால்க்கட்டு இரண்டையும் தங்கள் இருவரிடமிருந்தும் கழட்டி எறிந்தவன்… கண்மணியைத் தன் கைகளில் பிடித்துக் கொண்டு வெளியேறப் போக… அங்கோ கடத்தல் காரர்களில் ஒருவன் அவர்கள் வழியை மறைத்தபடி… அவர்களைப் பார்த்து கோப முறைப்போடு இருக்க…
ரிஷிக்குத்தான் உள்ளுக்குள் முழுப் பயப்பந்து சுழன்றிருந்தது… மறுபடியும் அடி உதை… மயக்க மருந்தா… கண்மணியைக் கலக்கத்தோடு பார்க்க… அவளோ கொஞ்சம் கூட பயமின்றி அவனைப் பார்த்தாள் தான்
“இவ ஒருத்தி… இவளுக்கு பயமே இருக்காதா… இவளப் பார்த்து நமக்கு வேற அப்போப்ப ஹீரோவா மாற வேண்டிய நெலமை… டேய் ரிஷி அவளே இவ்ளோ தைரியமா நிக்கிறா… அவ முன்னாடி நீ பயப்பட்றதா… ” வேறு வழியின்றி தனக்குத்தானே தைரியத்தைச் சொல்லிக்கொண்டவனாக… இப்போது தன் கலக்கத்தை மாற்றி… அவளிடம்
“ஒண்ணுமில்லை… நான் பார்த்துக்கிறேன்… எனக்கு கராத்தே தெரியும்… “ எனக் கூடுதல் தகவல் சொல்லி அவளைப் பார்க்க… அவள் கண்களில் தெரிந்தது ஏளனமோ என்னவோ…
’நம்மள நம்பலையா இவ…” அவளிடம் ஏதோ பேசப் போக… அப்போது அவன் உதடுகளில் இரத்தம் கசிய ஆரம்பித்திருக்க… வேகமாக பதட்டத்துடன் கண்மணி தன் துப்பட்டாவைக் கொடுக்க… ரிஷி அதை வாங்கியபடி துடைத்த போதுதான் அவனுக்கே தெரிய வந்தது…. அதன் இரு ஓரங்களிலும் கல் இருப்பது….
“என்ன பொண்ணுடா இவ..” அதிர்ச்சியுடனும் திகிலுடனும் கண்மணியைப் பார்க்க… அவளோ… கண்களாலேயே அடி என்பது போலச் சொல்ல…
அதன் பின் ரிஷி யோசிக்கவெல்லாம் இல்லை… முன்னால் நின்றவன்.. கிட்டத்தட்ட முழுப் போதையில் நின்றிருக்க… ரிஷிக்கு அவனைச் சமாளிப்பது பெரிதாகவே இல்லை… கண்மணியின் துப்பாட்டாவில் இருந்த கல் உதவியாக இருக்க… எப்படியோ கீழே சாய்த்து… அவனை தனக்குள் கொண்டு அவன் மீது ஏறி அமர்ந்து… ஏற்கனவே மயங்கி இருந்த அவனிடம் தன் கராத்தே திறமைகளைக் காட்டிக் கொண்டிருக்க… இதற்கிடையை கண்மணி தன் வாயில் கட்டியிருந்த துணிக்கட்டையும் கழட்டி இருந்தாள்..
அதன் பின் அந்த இடத்தில் கிடந்த கயிற்றை எல்லாம் கொண்டு வந்து ரிஷியிடம் கொடுக்க… ரிஷி தான் அடித்து உதைத்துக் கொண்டிருந்த கடத்தல்காரனைக் கட்ட ஆரம்பித்தவன்… கண்மணிக்கும் கட்டளைகள் இட ஆரம்பித்திருக்க… கண்மணியும் அவன் சொன்னது போல மற்ற இருவரையும் ஒன்றாகச் சேர்த்து கட்ட ஆரம்பித்திருந்தாள்…
“ஏய் பாப்பா… அவங்க ரெண்டு பேர்கிட்ட யார்கிட்டயாவது என் ப்ரேஸ்லெட் இருக்கும் பாரு… இவன்கிட்ட இல்லை” எனத் தான் இருந்த இடத்தில் இருந்தே கண்மணியிடம் கத்த
அந்தக் கண்மணிப் பாப்பா முறைத்தாள் தான்… ரிஷி ‘பாப்பா’ என்று அழைத்ததற்கு… ரிஷி அதை எல்லாம் கண்டு கொண்டால் தானே.. அவன் அவனை சூப்பர் ஹீரோவாக நினைத்தபடி காற்றில் பறந்து கொண்டிருந்த போது கண்மணியை அவள் கோபத்தை எல்லாம் கவனிப்பானா என்ன…
அதே நேரம் கண்மணிக்கு ரிஷியின் கைச்செயின் கிடைத்திருக்க… அது காப்பு போலவும் சங்கிலி போலவும் இருந்தது… அதை எடுத்த கண்மணி அவனிடம் காட்ட…
“போட்டுக்க…. நான் அப்புறமா வாங்கிக்கிறேன்” ரிஷி சொல்ல… கண்மணியும் போட்டுப் பார்க்க… கண்மணிக்கு கச்சிதமாகப் பொருந்த… முதன் முதலாக அவள் அணியும் தங்கம்… அவளுக்கு அது பாந்தமாகப் பொருந்தி இருக்க… அவளையுமறியாமல் அதை ரசித்துப் பார்த்தபடியே இருந்த போதே… அவளருகில் வந்தவன்
“அப்புறமா ரசிச்சுக்கோ… இப்போ டைம் இல்லை….” என்றபடி… கண்மணியின் மணிக்கட்டைப் பற்றியவன்… வேகமாக அவளை இழுத்துக் கொண்டு வெளியே வந்திருக்க…. வந்தவன் நிற்கவும் இல்லை… அந்த இடத்தை விட்டு சில மீட்டர் தள்ளி வந்துதான் அவன் நின்றான்… அவளையும் விட்டான்… ஒடி வந்த வேகம் அவன் பெருமூச்சில் வந்திருக்க… இருந்தும் அதைப் பற்றிக் கவலைப்படாமல்…
“நாம தப்பிச்சுட்டோம்… பெரிய ஆபத்தில் இருந்து தப்பிச்சுட்டோம்” மூச்சு வாங்கியபடியே சொல்ல… அவன் முகத்தில் அவ்வளவு ஒரு சந்தோசம்
“இப்போ இங்க இருந்து எப்படி போறதுன்னு பார்க்கனும்…” என்றபடி சுற்றி முற்றி அந்த இடத்தைப் பார்த்த போது என்னவோ அவன் கடத்தப்படவில்லை… அந்தப் பெண் குழந்தையை காப்பாற்றி கூட்டிப் போகும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது போல மிகத் தீவிரமாக இருந்தான்…
சுற்றி முற்றி பார்த்துக் கொண்டிருந்தவன்… கண்மணியை மீண்டும் ஒரு பார்வை பார்க்க… அந்தப் பார்வையில் இவளிடம் சொல்வோமா… வேண்டாமா என்ற தயக்கம் மட்டுமே… அதன் பின் என்ன நினைத்தானோ என்னவோ…
“ஆறு மணி நேரம்… ரொம்ப நேரமா அடக்கி வச்சுட்டு இருக்கேன்… வெயிட் பண்ணு…” என்றபடி… வேகமாக அங்கிருந்த மரத்தை நோக்கிச் சென்றவன் அதன் பின் செல்ல… கண்மணியோ தலையிலடித்துக் கொண்டவளாக நின்றிருந்தாள்……
தன் தலைக்குல்லாவைக் கழட்டி மூச்சை விட்டவள்… இதுதான் சமயம்… இவனை விட்டு தப்பித்துச் செல்ல வேண்டும்… இவனோடு சேர்ந்து சென்றால்… மீண்டும் கந்தம்மாளிடம் தான் போய்ச் சேர வேண்டும்…
இவன் வருவதற்குள்… இந்த இடத்தை விட்டு ஓடி விட வேண்டும் என யோசித்து… ஓட முயற்சித்தவளுக்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது…. தன் துப்பட்டா அவனிடம் இருப்பது… அதையும் அவன் கழுத்தில் சுற்றிப் போட்டிருந்தான்
“ப்ச்ச்… பாவம்னு… ரத்தத்தைத் துடைக்க ஷாலைக் கொடுத்தா திருப்பிக் கொடுத்தானா… .. லூசுப் பையன்… சரி பரவாயில்ல… அதுவா முக்கியம் “ என்று யோசித்த போதே… அவள் கையில் இருந்த அவனது கைச்செயின் ஞாபகம் வந்திருக்க… அதுவும் தங்கம்…. என்ன செய்வது…கொடுக்காமல் போனால் அதை எடுத்துக் கொண்டு ஓடி விட்டோம் என்று சொல்லி விடுவானோ…
“ப்ச்ச்… பராவாயில்ல… எப்படி இருந்தாலும் அந்த கடத்தல் காரங்ககிட்ட மிஸ் ஆகி இருந்திருக்கும்… இப்போ என்கிட்ட… அவ்ளோதான்… நான் திருடவெல்லாம் இல்லை…” தனக்குள் தேற்றிக் கொண்டபடியே…. எதிர்திசையில் ஓட நினைத்து இரண்டு அடிகள் தான் கால்கள் எடுத்து வைத்திருப்பாள்… அதே நேரம்… அவள் துப்பட்டா அவள் மீது விழுந்து அவளைச் சிறை செய்திருக்க…ரிஷிதான் அவளைப் போக விடாமல் அவளது ஷாலைப் போட்டு தன் புறம் இழுத்திருந்தான்… கோபத்தில் அவனது முகம் வேறு சிவந்திருந்தது
அவனிடம் திரும்பி…. தன் சுட்டு விரலால்
“நான் இந்தப் பக்கம் போகிறேன்… நீ அந்தப் பக்கம் போ” எனும்படி.. சைகையால் சொல்ல… ரிஷிக்கும் அவள் சொல்வது புரிந்ததுதான்… ஆனால் அதைக் கேட்கும் மனநிலையில் தான் இல்லை…
வேகமாக அவளைத் தன்புறம் சுண்டி இழுக்க…. அவன் இழுத்த வேகத்தில் கண்மணி அவனை நோக்கி வந்திருக்க… வந்தவள் அவன் மீதே மோதி நின்றிருக்க… ரிஷியோ இதை எதிர்பார்க்காமல் கீழே விழுந்திருக்க… கண்மணியோ அவன் மீது விழுந்திருந்தால்…
இவன் அவளை முறைக்க… அவள் இவனை முறைக்க… அவளை விலக்கி எழுந்து அமர்ந்தவன்…
“ஏய் எங்க ஓடப் போன… ஃபர்ஸ்ட் உன் பேரைச் சொல்லு… அவ்ளோ சீக்கிரம் என்னை விட்டுப் போக ட்ரை பண்றியா என்ன…” என்றபடி… அவளது கையை அவளது துப்பட்டாவின் ஒரு முனையை வைத்துக் கட்டியவனாக… துப்பட்டாவின் இன்னொரு முனையைக் தன் கையில் வைத்துக் கொண்டபடி…
“ஹான்… இனி எங்கயும் உன்னால போக முடியாது… யூ ஆர் அண்டர் அரஸ்ட்… உன்னை என் உயிரக் கொடுத்துக் காப்பாத்தி கூட்டிட்டு வந்தால்… நீ என்கிட்டயே சொல்லாமல் போவியா… அட்லீஸ்ட் ஒரு தேங்க்ஸ் கூட சொல்லத்தோணல தானே உனக்கு… இனி நானே உன்னை விட்டால் தான் நீ போக முடியும்” பேசியபடியே எழுந்தவன்…
அவளிடம் கை நீட்ட… அவன் கையைத் தட்டி விட்டவள்… தானாகவே எழுந்து நிற்க… அப்போதுதான் ரிஷி உணர்ந்தான்… அவளது வாயில் துணிக்கட்டு இல்லை என்பதை
அதை உணர்ந்தவனுக்கு… அவள் இப்போதும் சைகையில் பேசியது ஞாபகம் வந்திருக்க… அவனாகவே எண்ணிக் கொண்டான்…இவள் வாய் பேச வராத பெண் என்று….
ரிஷியின் கோபமெல்லாம் எங்கோ போயிருக்க
“பிறந்ததுல இருந்தே உனக்கு பேச்சு வராதா… நீ பேச மாட்டியா என்ன” பரிதாபமாக அவளிடம் பேச ஆரம்பித்திருக்க…
கண்மணியின் முகம் இப்போது சுவாரஸியாமாக மாறி இருக்க…
“அது சரி… இந்தப் பையன் நம்மள…. பேச்சு வராத பொண்ணுனு நெனச்சுட்டான் போல… கண்மணி அப்படியே மெயிண்டைன் பண்ணு… கொஞ்ச நேரம் தான் அப்புறம் இவன் கிட்ட யிருந்து சீக்கிரம் எஸ்கேப் ஆகிற வழியப் பாரு… “
என்று நினைத்த போதே… அவன் கோபத்தோடு சொன்ன வார்த்தைகள் அவளுக்குள் வந்து போயிருந்தன்….
“என்னது…இவன் என்னைக் காப்பாத்தினானா… இவருக்கு தேங்க்ஸ் வேற சொல்லனுமாமே… கொய்***லே… என்ன ஒரு சேட்டை… ஆறு மணி நேரமா தப்பிக்க முடியாமல்… பயந்து மயக்கத்துல கெடந்தவனுக்கு… நான் ஹெல்ப் பண்ணி கூட்டிட்டு வந்தா… இவன் எனக்குத் தேங்க்ஸ் சொல்லாமல்… நான் இவனுக்குச் சொல்லனுமா..”
கண்மணி அவனைத் திமிராகப் பார்க்க
“ஃபர்ஸ்ட் இதைத் தொடம்மா… இந்த நைட்ல உன்னைப் பார்க்கவே பயங்கரமா இருக்கு” அவள் கண்ணைப் பார்த்து சொன்னவன்…. பின் என்ன நினைத்தானோ தெரியவில்லை….
அவள் கண்களில் இருந்த அதிகப்படியான மையை… அவளது துப்பட்டவினாலேயே அதுவும் அவனாகவே துடைத்தும் விடப் போக…
வேகமாக விலகியவள்… ஒரு விரல் காட்டி எச்சரித்தபடி…. அவனிடமிருந்து நன்றாக விலகி நின்றவள்… தானே துடைக்க ஆரம்பித்திருக்க…
“ஆமா உன் பேர் என்ன…” ரிஷி இழுத்தபடி கேட்க
கண்மணி அதை எல்லாம் கவனிக்காமல்… தன் முகத்தில் இருந்த மையைத் துடைக்க… அதில் இன்னுமே அவள் முகம் கருப்பானதுதான் மிச்சம்…
ரிஷி சிரித்தபடியே… அவளைப் பார்க்க… அவளோ முறைக்க
“லூசு… காமி” என அவளது முகத்தைத் துடைத்துவிட்டவன்
“உன்னைப் பார்த்து பேசனும்ல… அதான் துடைக்கச் சொன்னேன்… சரி சொல்லு உன் பேர் என்ன…” என்றபடி அவளிடம் பேச ஆரம்பித்திருந்தவனுக்கு… அப்போதுதான் அவள் பேசமுடியாது என்பது ஞாபகம் வந்திருக்க
“சாரி சாரி… உனக்கு பேச்சு வராதுல…” என்றவன்…
“எழுதப் படிக்கத் தெரியுமா…. உன் பேரை எழுதிக் காட்ட முடியுமா” எனக் கேட்க…
கண்மணி இளக்காரமாக அவனைப் பார்த்தபடி அவன் கையை இழுத்து…’ க’ என்ற எழுத்தைத்தான் எழுத ஆரம்பித்தாள்… பின் என்ன நினைத்தாளோ.. இவனுக்கு ஏன் நம் நிஜப்பெயரைச் சொல்ல வேண்டும்… நினைத்த அடுத்த நிமிடத்திலேயே… தனக்கான வேறு பெயரை யோசிக்க ஆரம்பித்திருக்க,,, அவளுக்கு உடனே ஞாபகம் வந்தது அமுதினியின் பெயர்தான்…
ரிஷியின் கையில் ‘அ’ என்ற எழுத்தை கண்மணி எழுதி முடித்திருக்க… ரிஷியின் கண்கள் விரிந்திருந்தது யோசனையில்… கொஞ்சம் பீதீயோடும் தான்…. காரணம் அவள் எழுதிய தமிழ் எழுத்தில்…
” ஐயோ… என்ன இவ தமிழ்ழ எழுதுற… எனக்கு ஆ ஆ வரிசைலயே குழப்பமா இருக்குமே… ஐயையோ இவகிட்ட சொதப்ப போறோமோ… ரிஷி உன் மானமே போகப் போகுதுடா…” தயங்கி அவளைப் பார்க்க…
“மு’ அடுத்த எழுத்தை கண்மணி எழுத… ரிஷிக்கு அந்த எழுத்து ம வரிசை என்பது மட்டுமே புரிய… ‘ம்’ ஆ… இல்ல ம வா… இதை இப்படி சுத்துனா வேற எழுத்து என்னமோ சொல்வாங்காங்களே… ரிஷி இது என்னடா உனக்கு வந்த சோதனை… இந்த சின்னப் பொண்ணுகிட்ட போய் நீ தோத்துப் போகனுமா… “ அடுத்த எழுத்தை கண்மணி எழுத ஆரம்பித்த போதே… வேகமாக கையை எடுத்துக் கொண்டவன்…
“அம்மு. அதானே உங்க வீட்ல செல்லப் பேர்… எதுக்கு முழுப் பேரு… பேர் சொல்லிக் கூப்பிடனும் எனக்கு அவ்ளோதானே அம்மு… அம்மு நல்லாதான் இருக்கு ” என அவனே ஒரு பேர் வைத்து… அதைக் கொண்டும் அழைத்தவனாக… கெத்தாகக் கண்மணியைப் பார்க்க… கண்மணி அவனைப் பார்த்து விழிக்க ஆரம்பித்திருக்க…
“’அமுதினி’ யா இருந்தால் என்ன… ’அம்மு’ வா இருந்தால் என்ன… இன்னைக்கு ஒரு நாள் என்ன பேர் இருந்தால் என்ன… இவன் எப்படிக் கூப்பிட்டால் நமக்கென்ன” கண்டுகொள்ளாமல் விட்டு விட்டாள் அன்றைய கண்மணி…
“சரி அம்மு சொல்லு… உங்க வீட்டு அட்ரெஸ் என்ன… அப்பா அம்மா பேர் என்ன… நீ எப்படி மாட்டின… சைகைலயே சொல்லு… நீ பேசலேனா கூட இந்த ரெண்டு கண்ணும் என்ன சொல்லுதுனு என்னால ட்ரான்ஸ்லேட் பண்ண முடியுது… இப்படி ஒரு கண்ணைப் பார்த்ததே இல்லை… கண்லயே கதகளி மட்டும் இல்லை… குச்சிப்புடி… பரத நாட்டியம்… பாலே டான்ஸ் கூட ஆட முடியும்னு இன்னைக்குத்தான் பார்க்கிறேன்…”
”சரி விடு அம்மு… என்னை எப்படி கடத்தினாங்கன்னு சொல்றேன்… நான் ஒரு மேரேஜ் ஈவெண்டுக்கு வந்தேனா… ” என்று பேச ஆரம்பித்தவன் தான்.. ஒரு பத்து நிமிடத்திற்கு மிகப்பெரிய கதையை கண்மணியிடமே ஓட்டியிருக்க… இவனிடம் போய்த் தான் வாய் பேச முடியாது என்ற சொன்னது தவறோ முதன் முதலாக கண்மணி யோசிக்க ஆரம்பித்திருக்க… ரிஷியோ… பேசிக் கொண்டே இருந்தான்… பேசிக் கொண்டே இருந்தான்… முடிக்கவேயில்லை…
“உனக்கு ஒண்ணு தெரியுமா… என்னை யாரும் கடத்தலை… நானே என்னை கடத்த வச்சுக்கிட்டேன்… இவனுங்களாம் எனக்கு சும்மா சுண்டு விரலுக்குச் சமம்… இந்த மாதிரி அம்முனு ஒரு பொண்ணு மாட்டப் போறா… நீதான் அவளைக் காப்பத்தனும்னு டெலிபதி சொன்னுச்சு… அதான்… “ எனும் போது கண்மணிச் அவனைக் கடுப்பாகப் பார்க்க
“உண்மைதான் அம்மு… இந்த ஷக்திமான்… சூப்பர் மேன்… பேட் மேன்… அந்த மாதிரிதான் தான் நானும்… யாருக்காவது ஏதாவது பிரச்சனைனா உடனே வந்து நிற்பேன் தெரியுமா… நீ வேணும்னா ஃப்யூச்சர்ல டெஸ்ட் பண்ணிப் பாரு…. சர்னு வந்து நிப்பேன்..” எனக் கண்மணியைப் பார்த்த போதே… அவள் கண்ணில் தெரிந்த நக்கலில்
“நம்பல.. அதானே… உன் கண்ல நக்கல் தெரியுது… சரி விடு…” என்றபடி அவளது துப்பட்டாவில் இன்னொரு சுற்று சுற்றி அவன் கழுத்தில் போட்டுக் கொள்ள… அதன் காரணமாக கண்மணி இப்போது அவன் அருகில் வந்திருக்க…
“அது எப்படி… இந்த ஜனவரி மாதக் குளிருக்கு கம்பளிக் குல்லா… இந்த துப்பட்டால கல்லு… மிளகாபொடி. கழுத்துல ப்ளேடு” எனும் போதே அவன் கழுத்தில் கிடந்த அந்தக் கருப்புக் கயிறு ஞாபகத்துக்கு வந்திருக்க
“இந்தாம்மா அம்மு… உன் கயிறு…” என்றபடி தன் கழுத்தில் இருந்து கழட்டியவன்… அதே வேகத்தில் அவள் கழுத்திலும் போட்டு விட்டபடி
”சாரி உன் ப்ளேடு டாலரைத் தூக்கிப்போட்டுட்டேன்… வெறுங்கயிறுதான்… வேற டாலர் வாங்கிப் போட்டுக்க ஓகேவா” என்றவனிடம்… கண்மணி ஒன்றும் சொல்லாமல்… அவன் போட்ட அடுத்த நொடியே அந்தக் கருப்புக் கயிறைக் கழட்டித் கீழேப் போட்டிருக்க…
‘அடிப்பாவி… ஏண்டி… உன்னோடதுன்னு உன்கிட்டயே ஒப்படச்சா… ஓ உன் டாலரைத் தூக்கிப் போட்டுட்டேன்னு கோபமா” நக்கலாகக் கேட்ட ரிஷியிடம்… அவள் கையைக் காட்ட
ரிஷி அந்த ப்ரேஸ்லெட்டை அலட்சியமாகப் பார்த்தபடி…
“எனக்கு வேண்டாம்… நீயே வச்சுக்கோ… உன் டாலரைத் தொலச்சிட்டேன்னு நீ கோபமா இருக்கதானே… நாங்கள்ளாம்… ஒரு பொருளை ஒருத்தவங்ககிட்ட கொடுத்தா வாங்க மாட்டோம்… எங்க பரம்பரை அப்படிப்பட்ட வள்ளல் பரம்பரை… அதுக்கு ஒரு இழுக்கு என்னால வந்துரக் கூடாது… என் அப்பா அப்டித்தான் எனக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்துருக்கிறார்… என்ன ஆச்சுனா ஒரு தடவை” ரிஷி ஆரம்பித்திருக்க… கண்மணிக்குத் தாங்கவே முடியவில்லை…
“இவன் ஏன் இப்படி பேசுகிறான்… ஒண்ணு கேட்டா அதுக்குப் பின்னால ஆயிரம் கதை பேசுறான்… இவனையெல்லாம் இவங்க வீட்ல எப்படி வச்சு சமாளிக்கிறாங்களோ” மனதுக்குள் நினைத்தவளுக்கு தான் வாயாடித்தனம் எல்லாம் மிக மிக குறைவே என்று தோன்றியிருக்க… தானும் அவனுக்கு உடனுக்குடன் பதில் சொல்லி இருந்தாலும் இந்த அளவுக்கு அவன் பேசியிருக்க மாட்டானோ என்று தோன்றாமல் இல்லை… ஆனாலும் கண்மணி பேசவில்லை… மாறாக கண்மணி அவனை விட்டு விலகி எப்படி தன் தந்தையின் ஏரியாவிற்குச் செல்வது என யோசிக்க ஆரம்பித்தவளுக்கு… உடனே நல்ல யோசனை தோன்றியிருக்க… தன் பாட்டுக்கு பேசிக் கொண்டு சென்று கொண்டிருந்தவனிடம்..வேகமாக அவன் கையைச் சுரண்ட…. ரிஷி திரும்பிப் பார்க்க… திரும்பிப் பார்த்த அவனிடம்… கண்மணி… வேகமாக சுண்டு விரலை உயர்த்திக் காட்ட… ரிஷியும் அவளைப் புரிந்து கொண்டவனாக…
“அதோ அந்தப் பக்கம் போ… பார்த்து போய்ட்டு வா… நான் இங்கதான் நின்னுட்டு இருக்கேன்… பயப்டாத… வெயிட் பண்ணிட்டே இருப்பேன்” என்றபடி அவள் கையில் கட்டியிருந்த துப்பாட்டாவின் கட்டைக் கழட்டி விட்டவனாக… வேறு திசை நோக்கி திரும்பி நிற்க… கண்மணி வேகமாக அவனை விட்டு விலகி ஓடியவள்…. மீண்டும் வேகமாக ஓடி வந்து… அவன் கழுத்தில் இருந்த தன் துப்பட்டாவை இழுக்க…. ரிஷி சுதாரிக்கும் முன்னரே… அவன் கழுத்தில் இருந்த கண்மணியின் துப்பட்டா அவனிடமிருந்து கண்மணியிடம் சென்றடைந்திருந்தது…
ரிஷி தன்னந்தனியே நின்றிருந்தான்… நிமிடங்கள் கடந்திருக்க…
“ஏய் அம்மு… குளிருது… சீக்கிரம் வா… ஷாலக் கொண்டு வந்து கொடு..” கத்தியபடியே காத்துக் கொண்டு நின்றிருக்க… அம்முவும் வரவில்லை… அவளது துப்பட்டாவும் வரவில்லை…
“ஏய் அம்மு… அம்மு… எங்கடி போய்ட்ட… எங்காவது மாட்டிக்காதடி…” ரிஷியின் கத்தல்கள்… கதறல்கள் எல்லாம் கண்மணியின் காதில் விழுமா என்ன… அவள் தான் ரிஷியிடமிருந்து கண்மணி வெகுதூரமாக விலகிச் சென்றிருந்தாளே….
------------
/* பால் நதியே நீ எங்கே
வரும் வழியில் மறைந்தாயோ
பல தடைகள் கடந்தாயோ
சொல் கண்ணே
பேரன்பே உந்தன் நினைவு
என் கண்ணைச் சுற்றும் கனவு
இது உயிரைத் திருடும் உறவு
உன் துன்பம் என்பது வரவு
மர்ம ராணி நில் நில்
ஒரு மௌன வார்த்தை
சொல் சொல்
கண்ணீரே கண்ணீரே
சந்தோஷக் கண்ணீரே கண்ணீரே
தேடித் தேடித் தேய்ந்தேனே
மீண்டும் கண்முன் கண்டேனே */
Lovely update
Kanmani kannula ammu va thaaan thednaru rishi sir
semma siss. nice ud
anyway I am happy Rishi kanmani kitta thaan mudal matratha unnarunthu irrukanga
epadi siss EUEU layam BALA KIRTHI thaan mudala meet pannuvanga FB la
semma connectivity
இந்த ரிஷி பய அந்த காலத்திலேயே கண்மணி துப்பட்டாவை கழுத்துல சுத்தி போட்டு இருக்கான்பா.ரிஷி கண்மணியோட சின்ன வயசு photo பார்த்து இருக்கான் தானே.but அவனுக்கு இந்த நிகழ்வு ஞாபகம் வரலியா?
Please upload the next epi sister.
Wow Semma sis♥️♥️♥️
I think Rk thought tiz scenario in his tour.. He's searching something in Fabio's daughter at critical situation.. That's tiz Ammu's vision I think so.. Connectivity🔥jii...
உங்களுடைய எல்லா கதைகளும் அருமை. your writing Style is amazing ma
அருமை. அடுத்த epi சீக்கரம் தாங்க Pra