/* ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
இன்னும் 2 எபி... அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க... முடிந்தவரை அப்டேட் ஃப்ரிக்வெண்டா கொடுத்துட்டுத்தான் இருக்கேன்....
சீக்கிரம் முடிச்சுறேன்...
அண்ட்... கீதா... எஸ்... மிஸ் பண்ணிட்டேன்... ஆக்சுவலா பஞ்சு மிட்டாய் வாங்கிக் கொடுக்காத மாதிரிதான் எழுத நெனச்சேன்... துரைய ஆட் பண்ற அவசரத்துல அதை மிஸ் பண்ணிட்டேன்... அண்ட் இந்த மாதிரி சீன் வரும் போது பேக் டூ அந்த அப்டேட் போய் பார்த்துட்டு வருவேன்... கொஞ்சம் சோம்பேறித்தனம்... ’யாரும் வாங்கிக் கொடுக்கலைனு கண்மணி சொல்ற மாதிரி எழுதினதா ஞாபகத்தில இருந்துச்சு... அவங்க ரெண்டும் பேரும் கொஞ்சம் பேசிருந்தா பரவாயில்ல... எல்லா சீனையும் கனெக்ட் பண்ற ஆர்வக் கோளாறு வேற... சாரி... அண்ட் தேங்க்ஸ் கண்டுபிடிச்சு சொன்னதுக்கு.... ஸ்டில் மிஸ் பண்ண சான்ஸ் இருக்கலாம்.... எஃப்ஃபி முடியற வரை சோம்பேறித்தனம் பார்க்காமல் பழைய எபி பார்த்து படிச்சு எழுதனும்... பண்ணிருவோம்...
நன்றி
பிரவீணா...
*/
அத்தியாயம்: 92-3
”என்னமோ பெருசா பேசுன… என் மேல அக்கறைலாம் கிடையாதுன்னு…. அப்புறம் ஏன் என்னை தேடுன… சொல்லு சொல்லு” மருது செய்து கொடுத்த வெறும் சேமியா பாயாசத்தைச் சாப்பிட்டபடியே கண்மணி அவனை ஓட்டிக் கொண்டிருக்க…
மருது ஏதும் பேசாமல்… அங்கிருந்த மரக்கிளையில் தொங்கியபடி உடற்பயிற்சி செய்து கோண்டிருக்க…
“நானு… நானு… என்னையும்… தூக்கி விடு….” என்று பாயாசத்தை வேகமாகக் குடித்து விட்டு அவனிடம் கைகளை உயர்த்த… மருது இப்போது சிரித்தபடி…
“உனக்கு வாலு மட்டும் தான் இல்லை… மத்தபடி எல்லா அம்சமும் பொருத்தமா இருக்கு” என அவளைத் தூக்கி ஒரு சுற்று சுற்றி தட்டாமலை சுற்றியவன்… மரக்கிளையில் ஏற்றி விட… கண்மணியும் அவனைப் போலவே தொங்கி… உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்திருந்தாள்… அவள் கீழே விழும் போதெல்லாம் அவன் அவளை தூக்கி … கிளையில் தொங்க விட…
கண்மணியின் குணம் தெரியாமல்… மருது… மெல்ல மெல்ல அவனையுமறியாமல் அவளின் குறும்புத்தனத்தை ரசிக்கவும் ஆரம்பித்திருந்தான்…
---
மாலை மங்க ஆரம்பித்திருக்க… புது வருடத்தின் எதிரொலி…. முன்னதாகவே தொடங்கப்பட்டு விட்டதன் எதிரொலியாக… வானத்தில் வானவேடிக்கைகள் ஆரம்பித்திருக்க…
கண்மணி மருதுவோடு சேர்ந்து அமர்ந்தபடி… அதைப் பார்த்தபடியே… அவனோடு பேச ஆரம்பித்திருந்தாள்…
“மருது…. ச்சேய்… ஒரு நாள் மட்டும் பின்னால் பிறந்திருந்தால் இந்த ஊரே என் பிறந்த நாளையும் கொண்டாடிருக்கும்ல… எங்க கெழவி அடிக்கடி சொல்ற மாதிரி நான் அதிர்ஷ்டம் இல்லாதவதானே…” வானைப் பார்த்தபடியே சொல்ல… மருது அவளை ஆச்சரியமாகப் பார்த்தான்… அவளின் இப்படிப்பட்டப் பேச்சை முதன் முதலாகக் கேட்ட ஆச்சரியமே அது…
குறும்புப் பெண்ணாக… சுட்டிப் பெண்ணாக… மட்டுமே இத்தனை மணி நேரம் அவனிடம் பேசிக் கொண்டிருந்தவளின் இந்தப் பேச்சு ஆச்சரியமாக இருக்க… அந்த ஆச்சரியத்தில் அவளையேப் பார்த்துக் கொண்டிருக்க
“ஆனால் பரவாயில்லை… இந்த உலகம் உருண்டைதானே… சோ இந்த நிமிசம்… இந்த உலகத்தோட இன்னொரு மூலையில புத்தாண்டு வந்திருக்கும்… அப்போ அங்க வெடி வெடிச்சுருப்பாங்கதானே… அப்போ என் பிறந்த நாளை யாரோ எங்கோ கொண்டாடியிருப்பாங்க தானே” எனும் போதே மருது முதன் முதலாக அவளிடம் தீவிர தொணியில் கேட்டான்
”ஏன் மணி… இவ்ளோ அறிவா இருக்கிற… ஏதேதோ பேசுற… எனக்கே அதுல பாதி புரியல… இவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்கிற நீ உன் அப்பா அம்மாவைப் பற்றி மட்டும் தெரிஞ்சு வச்சுக்கலையா” அவனுக்கே சந்தேகம் தோன்றியிருக்க… கேட்டும் விட்டான்
கண்மணி அவனிடம் பட்டென்று சொன்னாள்….
“நான் பேசுறதெல்லாம் புக்ல படிச்சது… பேப்பர்ல இருக்கிறது… என் அப்பா அம்மாவைப் பற்றி எந்த புக்ல இருக்கு… இல்லை எந்த பேப்பர்ல இருக்கு…. சொல்லு… அப்படி இருந்திருந்தா எனக்கும் தெரிஞ்சிருக்கும்…” என்றவளிடம் மருதுவும் அதன் பிறகு ஏதும் கேட்கவில்லை… முக்கியமாக நட்ராஜைப் பற்றி வாயே திறக்கவில்லை…
இரவு 9 மணி ஆகி இருக்க… அங்கு வந்த வாசு… நட்ராஜ் இன்றே வீடு திரும்பப் போவதாக சொல்லி… கண்மணியை அங்கிருந்து வேறு எங்காவது கூட்டிப் போய் வைத்திருக்க வேண்டும் என்று சொன்னதோடு… மருதுவைக் கண்மணியோடு கோவிலுக்கு அனுப்பி வைத்தவன்… நட்ராஜை வீட்டிற்கு கூட்டி வந்து விட்டு… அவனை உறங்கவைத்தபின்… கந்தம்மாளை கண்மணியும் மருதுவும் காத்திருந்த கோவிலுக்கு அழைத்தும் வந்திருந்தான்…
---
”மருது…. இந்தப் புள்ள இங்க இருந்தா முதலாளிக்கு இன்னும் பிரச்சனை ஆகும்… அதுனால இன்னைக்கே பஸ் ஏத்தி விட்ரு” என மருதுவிடம் சொல்லி விட்டு வாசு கிளம்பி விட…
கண்மணியையும் கந்தம்மாளையும் அழைத்துக் கொண்டு பேருந்து நிலையத்திற்கும் வந்திருந்தான் மருது…
கோவிலில் இருந்து பேருந்து நிலையத்திற்கு வந்த பத்து நிமிடத்தில் கந்தம்மாளும்… கண்மணியும் பேசினார்களா… சண்டை போட்டார்களா…. மருதுவுக்கு அவர்கள் உரையாடலை பிரித்துப் பார்க்கத் தெரியாமல் குழம்பித்தான் போனான்…
’இருவருக்கும் இடையில் தெரியாமல் மாட்டிக் கொண்டோமே’ என்று நொந்து கொண்டே வந்தது ஒரு புறம் இருந்தாலும்… கண்மணியை அவ்வப்போது பார்த்தபடியேதான் வந்து கொண்டிருந்தான் மருது…
காலையில் இருந்து இந்த நிமிடம் வரை… அவன் பின்னேயே சுற்றிக் கொண்டு திரிந்தவள்… இப்போதும் சந்தோசமாக வேடிக்கை பார்த்தபடி வந்து கொண்டிருக்க…
”நம்மள விட்டுட்டு போறோம்னு… இவளுக்கு கவலையே இல்லையா… அப்படி பேசுனா… என்னையே சுத்தி சுத்தி வந்தாள்…ஆனால் இப்போ ஊருக்குப் போறோம்னு சந்தோசமா இருக்கா” மருது அவள் முகத்தையேப் பார்த்தபடி இருக்க…
”மருது சன்னல் சீட் இருக்கிற பஸ்ஸா பார்த்து ஏத்தி விடு…. கூட்டம் இருந்தால் நான் ஏற மாட்டேன்” கண்மணி சொல்ல… அதில் மருதுவின் முகம் தானாக வாடியது…
அவள் வந்ததில் இருந்து இந்த நிமிடம் வரை… அவனை அவள் வார்த்தைகளால் சுழல வைத்தவள்… இப்போது கொஞ்சம் கூடக் கவலை இல்லாமல்… பேருந்தின் சன்னல் இருக்கைதான் முக்கியம் என்பது போலப் பேசுகிறான்… அவன் என்ன எதிர்பார்த்தான் அவனுக்கே தெரியவில்லை…
கண்மணியின் குணம் இதுதான்… அவள் ஒருவருடன் பழக வேண்டுமென்றால் அவளுக்கு அவர்களைப் பிடித்திருக்க வேண்டும்… ஏதாவது ஒரு வகையில் அவளைக் கவர்ந்திருக்க வேண்டும்… அந்த வகையில் அவளுக்கு மருதுவைப் பிடித்திருந்தது… ஏன் அந்த மருத்துவமனையில் இருந்த காவலாளித் தாத்தாவையும் தான்… கள்ளம் கபடமின்றி உண்மையாகப் பழகுவாள்… அவளின் அன்பையும் காட்டுவாள்… அதே நேரம்… அவர்களைத் தேடவும் மாட்டாள்… அப்படித்தான் மருதுவிடமும் பழகினாள்… உரிமையுடன் அவனது அன்பை கேட்டு வாங்கினாள்…. அவ்வளவுதான் அவனுக்கும் அவளுக்குமான தொடர்பு… கந்தம்மாளையும் வீராவையும் தவிர அவள் பார்க்கும் பழகும் அத்தனை பேருமே அவளைப் பொறுத்தவரை வழிப்போக்கர்கள் தான்…மருதுவும் அப்படியே…
பாவம் அது தெரியாமல் மருது அவளின் பாசத்தில்… குறும்பில் ஏமாந்து போயிருந்தான்….
சிறிது நேரத்தில் கந்தம்மாளும் கண்மணியும் வசிக்கும் ஏரியாவுக்குச் செல்லும் பேருந்து வந்திருக்க… கண்மணி அந்த எண்ணை மனதுக்குள் ஏற்றிக் கொண்டபடி… மருதுவிடம் விடை பெற்றபடி பேருந்தில் ஏறியிருந்தாள்….
ஏறும் சமயத்திலாவது தன்னைப் பார்த்து… ஏக்கப் பார்வை பார்ப்பாள் என மருது எதிர்பார்த்திருக்க… கண்மணியோ… படிக்கு பின்னால் இருந்த இருக்கையின் சன்னல் சீட்டைப் பார்த்தபடி… அதில் வேறு யாரும் உட்கார்ந்து விடக்கூடாது என முனைப்புடன் ஏறினாளே தவிர… மருதுவைக் கவனிக்கவேயில்லை… திரும்பிப் பார்க்கவும் இல்லை..
பேருந்தும் கிளம்பியிருந்தது….
-------------
சன்னல் ஓர இருக்கையில் அமர்ந்த கண்மணியிடம் அதுவரை இருந்த குறும்பெல்லாம் இல்லை… மாறாக கண்களில் கண்ணீர் மட்டுமே… இருக்கையில் உட்கார்ந்த அடுத்த சில வினாடிகளிலேயே தான் வைத்திருந்த நெகிழிப் பையை எடுத்தாள்…
பஞ்சு மிட்டாய் வாங்கும் போதே அங்கு சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த பவித்ராவின் புகைப்படத்தைக் கிழித்து… தன் இடுப்பில் சொருகியிருந்தாள்… மருதுவிடம் பை கேட்டதே தன் அன்னையின் புகைப்படத்தை வைப்பதற்காகத்தான்…. பத்திரப்படுத்தி வைத்திருந்த பவித்ராவின் நினைவஞ்சலி புகைப்படத்தை வெளியே எடுத்தவள்…. அந்த முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்… கூடவே அந்த வயதான பெண்மணி… தன்னைப் பார்த்து ’பவித்ரா’ எனச் சொல்லியது…. அந்த பணக்கார கிழவன் கந்தம்மாள்என தன் பாட்டியின் பெயர் சொல்லிக் கேட்டதும்காதுக்குள் ஓடிக் கொண்டே இருக்க… அந்தக் காகிதத்தை மூடி வைத்தவள்…
“நீ இப்பவும் அமெரிக்காலதான் இருக்க… என் அம்மா அமெரிக்காலதான் இருக்காங்க…” தனக்குள் சொன்னவள்… இனி ஒன்றே ஒன்றுதான் தெரிய வேண்டும் தன் பிறப்பின் ஆதி மூலத்தைப் பற்றி…
“தன் தந்தை… ராசு…. பெயர் மட்டுமே தெரியும்…”
“என் அம்மா அமெரிக்கால இருக்காங்க… அவங்க முகத்தைப் பார்த்துட்டேன்… என் அப்பாவும் இதே மாதிரி என்னைக்காவது என்கிட்ட அவர் முகத்தைக் காண்பிப்பார்… அன்னைக்கு இதே மாதிரி நாலு கண்ணீர் துளி அவருக்கும் கொடுப்பேன்” என்றபடி தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்…
தாயின் மரணத்தைக் கூட இலகுவாக ஏற்றுக் கொண்டிருந்தாள்… இன்னும் தன் தந்தையின் நிலை அறியவில்லை… தானாக அறிந்து கொள்ளவும் முயற்சிக்க மாட்டாள்… தந்தையின் நிலையை அறியாத வரை.. அவரும் அவள் மனதில் உயிரோடுதான் இருப்பார்…
ஒரு நாள் கண்டிப்பாக தன் தந்தையைப் பற்றி தெரியவரும்… அப்படி தெரியவரும் போது… கேள்விப்படும் விசயம் மனதுக்கு உவப்பாக இருக்கப்போவதில்லை துக்கத்தைத்தான் கொடுக்கப் போகிறது…. அது எதுவாக இருந்தாலும்… அவர்கள் இருவரும் எங்கோ இருக்கிறார்கள் என்று இத்தனை நாள் எப்படி வாழ்ந்தாளோ அதே போல் இனியும் வாழ்வாள்….
“அவர்களோடு சேர்ந்து வாழ்ந்தால்தான் வாழ்க்கையா…. என் மனதில் அவர்களுக்கென்று ஒரு முழுமையற்ற உருவம் இருக்கிறது… இன்று தன் தாய்க்கு அது முழுமை அடைந்திருக்கின்றது… என்றாவது தந்தைக்கும் அது முழுமையடையும்” தனக்குத்தானே சொல்லிக் கொண்டவளாக தன்னைப் பற்றி நினைத்தபடியே எதேச்சையாக கண்மணி பின்னால் சாலையைத் திரும்பிப் பார்க்க… அவளின் கண்கள் அப்படியே சந்தோசத்தில் விரிந்திருந்தது….
”மருது” சத்தமாக கத்த நினைத்தாள் தான்…. அவன் ஓடி வருகிறான் என பேருந்து ஓட்டுநரிடம் சொல்ல நினைத்தாள் தான்…. அடுத்த நொடியே அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டவளாக… கண்மணி சத்தம் போடாமல் மருதுவைப் பார்த்தபடியே வர…. அடுத்த ஒரு சில நிமிடங்களில் மருது பேருந்தைத் தொட்டிருக்க…. பேருந்தின் படிகளில் ஏறியவன்… நடந்துனரின் திட்டுக்களை எல்லாம் கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் கண்மணியின் அருகில் வந்து அமர… கண்மணி சந்தோசமாக அவன் அமர்வதற்கு போதுமான இடம் கொடுத்து அவனையேப் பார்த்தபடி இருக்க… இதெல்லாம் ஏதும் அறியாமல் கந்தம்மாளோ நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்… பேருந்தில் ஏறிய மறு நொடி… பயணச் சீட்டைக் கூட வாங்காமல் கந்தம்மாள் கண் அயர்ந்திருக்க…. கந்தம்மாளைப் பார்வை பார்த்தபடியே… ஒரு புறம் ஓடி வந்ததில் மூச்சு வாங்க… மூச்சு வாங்கியபடியே கண்மணியிடம் மருது பேச ஆரம்பித்தான்
“லூசு… என்னப் பார்த்ததானே… பஸ்ஸை நிறுத்தச் சொல்ல மாட்டியா” அவள் தலையில் செல்லமாக கொட்டு வைக்க…
‘அப்புறம் எப்படி உன்னை ஹீரோன்னு உலகம் நம்புறது… நான் மட்டும் இல்லை உன்னை இந்த உலகமும் நம்பனும்ல” கண்மணி அவனிடம் குறும்பாகச் சொன்னபடி
“இதுதான் த்ரில்லா இருக்கும் மருது… நீ ஏறுவியா மாட்டியான்னு… செம்ம டென்ஷன்… நீ ஏறின உடனே … அந்த டென்ஷன் எல்லாமே அதை விட பல மடங்கு சந்தோசமா மாறிருச்சு” என்ற போதே அவளின் கையைப் பிடித்து உள்ளங்கையைத் திருப்பி… சாக்லேட் பாக்கெட்… ஒன்றை வைக்க… அதுவும் அவளுக்குப் பிடித்த ப்ராண்ட்… இரண்டு மூன்று முறைச் சாப்பிட்டு இருப்பாள்… அதுவும் சிறிதளவு மட்டுமே….
கண்மணியின் கண்கள் விரிந்திருக்க…
“ஹேப்பி நியூ இயர்” மருது சொன்ன பொதே வானெங்கும் பட்டாசு சிதறல்கள்…. கண்மணி அவனுக்குத் திரும்பி பதில் வாழ்த்து கூட சொல்லவில்லை…
“இதெல்லாம் எனக்குத்தானே… நீ கொடுத்தேன்னு சொல்லி பங்கு கேட்கக் கூடாது” என்றபடி… வெளியே வான வேடிக்கைகளை வேடிக்கை பார்த்தபடியே சாக்லேட்டைப் பார்த்தபடியே வந்து கொண்டிருந்தாள்… மருதுவோ அவளையேப் பார்த்தபடி வந்து கொண்டிருக்க… நடத்துனர் வந்த போதுதான் மருது பார்வையையே மாற்றினான்…
நடத்துனரிடம் மூவருக்கும் பயணச்சீட்டை தானே காசு கொடுத்தும் வாங்கியும் கொண்டான் மருது…. நடத்துனரும் தெரிந்த பையன் தான் போல என சென்று விட்டார்
---
கண்மணி அந்த மொத்த சாக்லேட் பட்டைகளையும் சாப்பிட்டு முடிக்கும் வரைக் காத்திருந்தவன்….. அவள் முடித்ததும்… அவளைத் தன்புறம் திருப்பியவனாக… அவள் முகத்தில் இழுவியிருந்த சாக்லேட் கரைகளைக் காட்டியவனாக… தன்னிடம் இருந்த கைக்குட்டையைத் தர… கண்மணியும் அதை வாங்கித் துடைத்துக் கொண்டு அவனிடம் திருப்பியும் கொடுத்திருந்தாள்…
“மணி…” மருது அவளை அழைக்க…
“ஏய் இரு… அந்த வெடி பாரு… அது வெடிச்சு முடிக்கிற வரை நான் பார்க்கனும்… டிஸ்டர்ப் பண்ணாத” என்றவளை முறைப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்… மொத்த வெடியும் வானத்தில் விதவிதமாக பூத்தூவி முடிக்கும் வரை பார்த்து விட்டு அவன் பக்கம் திரும்பியவள்… அவன் புறம் நன்றாகத் திரும்பி அமர்ந்தபடி…
”சொல்லு… “
“நீயுமா எங்க ஊருக்கு வரப் போறியா… கெழவி சொல்லவே இல்லை… “
“இது சமச்சே போடாது… அப்படியே போட்டாலும் வாய்க்கு வெளங்காது”
“ப்ச்ச்… ஆனால் நீதான் சமைப்பேல… அப்பா நான் தப்பிச்சேன்..”
மருதுவைப் பேசவிடாமலேயே கண்மணி பேசிக் கொண்டே வர… ஒரு கட்டத்தில் மருது பொறுமை இழந்தவனாக அவள் உதட்டில் தன் விரல் வைத்து அவளை மிரட்டி அவளைப் பேசவிடாமல் நிறுத்த… இப்போது கண்மணியும் அவனைப் பார்க்க…
”நான் ஏன் இந்த பஸ்ல ஏறினேன் தெரியுமா” என்று மருது ரகசியக் குரலில் அவள் புறம் குனிந்து கேட்க..
கண்மணியோ தெரியாதென்று புரியாத பார்வையோடு தலை ஆட்டினாள்…
--------
கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் கடந்திருந்தது… மணி இரவு பதினொன்றைத் தொட்டிருக்க… கண்மணி… நன்றாக உறங்கிக் கொண்டிருந்த கந்தம்மாளையும் வீராவையும் எச்சரிக்கையுடன் பார்த்தபடி… மெல்ல அடி எடுத்து வீட்டை விட்டு வெளியே வந்திருக்க… முழு நிலவின் ஓளியில் அந்தத் தெருவே பகலைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது… ஒரு ஆள் நடமாட்டம் கூட இல்லாமல் வெறிச்சோடி இருக்க…. கண்மணி பேருந்து நிலையத்தை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தாள்…
கடந்த இரண்டு நாட்களாகத்தான் பள்ளிக்கு போய் வந்து கொண்டிருந்தாள்… அதற்கு முன் தினம் கந்தம்மாளிடமும் வீராவிடமும் தினம் சண்டைதான்…. தினம் போராட்டம் தான்
தன் தந்தையைப் பார்க்க வேண்டும்… இதுதான் அவளின் ஒரே எண்ணம்… மருது அவளிடம் சொன்ன வார்த்தைகளில் இருந்து…
--
“உன்னோட அப்பா நட்ராஜ்… என்னோட முதலாளி… இன்னைக்கு உடம்பு சரியில்லாம நீ பார்க்க வந்தியே அவர்தான் உன்னோட அப்பா… உன் அம்மா… அவங்க உயிரோட இல்லை… அவங்க வேற யாருமில்ல…” எனும் போதே கண்மணி அவனை அடுத்து பேசவிட வில்லை தன்னிடமிருந்த பவித்ராவின் புகைப்படத்தைக் காட்டியபடி….
மருதுவின் கண்கள் கலங்கி அவளைப் பார்க்க… கண்மணிக்கோ இப்போது அவள் தந்தை மட்டும் தான் எண்ணங்களில்…
----
“நட்ராஜ்…” அவளையுமறியாமல் ஆயிரம் முறை சொல்லிப் பார்த்திருந்தாள் இந்த இரண்டு வாரங்களில்..
“இந்த கந்தம்மாள் கெழவி என் அப்பாக்கு வடமொழி எழுத்துல பேர் வச்சுருக்கு… அதான் நான் என் அப்பாவைப் பிரிஞ்சுட்டேன்… ஆனால் அதுனால எல்லாம் என் அப்பாவை விட்டு நான் இருக்க முடியுமா…”
”பேர்ல… அதுல இருகிற எழுத்துல என்ன இருக்கு… இனி நான் பேர்ல இருக்கிற எழுத்தெல்லாம் பார்க்கவே மாட்டேன்… ” ஒரு வழியாக இந்தப் பேர் பொருத்த பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டு வந்திருந்தாள் நம் நாயகி… நல்ல வேளை நம் நாயகனும் தப்பித்திருந்தான்…
எதைப் பார்த்தாலும்… எதைப் பற்றி பேசினாலும் தன் அப்பாவுடனே தொடர்பு படுத்தி பேச ஆரம்பித்திருந்தாள்… நினைக்க ஆரம்பித்திருந்தாள்… அப்பா அப்பா அந்த உறவு மட்டுமே அவளின் எல்லாமுமாக மாறி இருக்க.. தன் அப்பாவிடம் போக வேண்டும்… மற்ற குழந்தைகளைப் போல தனக்கும் தந்தை பாசம் வேண்டும்… ஏங்க ஆரம்பித்திருக்க… அவளால் அங்கு இருக்கவே முடியவே இல்லை… ஒருகட்டத்தில் கந்தம்மாளிடம் போய் நின்றவள்…
“என்னை என் அப்பாகிட்ட கொண்டு போய் விடு” என அவளிடம் கேட்க ஆரம்பித்திருக்க… கந்தம்மாளுக்கோ தலை சுற்றாத குறைதான்…
மகன் என்ன சொல்வானோ… பயந்தவராக…. கண்மணியை மிரட்டி வீட்டுக்குள் அடக்கி வைத்திருக்க… கண்மணி அடங்குவாளா என்ன… இரண்டும் முறை பகல் பொழுதில் வீட்டை விட்டு சென்று அடி வாங்கி வீட்டில் அடைக்கப்பட்டிருக்க…
அதன் பின் கண்மணி சிந்தித்து திட்டம் தீட்ட ஆரம்பித்திருந்தாள்…
அதன் படி நல்ல பிள்ளை போல நடித்து அமைதியாக இருந்தவள்… கந்தம்மாளை ஏமாற்றி… இதோ கிளம்பி விட்டாள்.. பகலில் சென்றால் தானே யாராவது பார்த்து இவளை மாட்டி விடுகின்றனர்… இரவைத் தேர்ந்தெடுத்தாள்… அதுவும் பௌர்ணமி இரவுக்காக காத்திருந்தவள்… கிளம்பியிருந்தாள்…
உள்ளுக்குள் பயமாகத்தான் இருந்தது… எத்தனையோ முறை நடு இரவில் வீட்டுக்கு வந்திருக்கின்றாள் சினிமா பார்த்துவி்ட்டு… அப்போதெல்லாம் துணைக்கு யாராவது இருப்பார்கள்… ஆனால் இன்று அப்படி அல்ல… தனியாகச் செல்கிறாள்… அதுவும் ஏரியா விட்டு ஏரியா தாண்டிச் செல்கிறாள்… முன்னேற்பாடுகளோடுதான் சென்றாள்… அதே போல அவள் திட்டமிட்டபடியே… அதிகாலை தன் தந்தை இருந்த ஏரியாவுக்கும் சென்றடைந்திருந்தாள்… மருது தினம் சாமி கும்பிட வரும் அம்மன் கோவிலில் காத்திருக்க ஆரம்பித்தாள் அவன் வருகைக்காக..
---------
கந்தம்மாளின் வீட்டில் இருந்தவரை நடந்திருந்த… கண்மணி கடந்த கால நிகழ்வுகளை சொல்லி முடித்தவனாக ரிஷி… நட்ராஜைப் பார்த்தான்… அதற்கு மேல் அவனால் கண்மணியின் வாழ்க்கையில் நடந்தவற்றைச் சொல்ல முடியவில்லை… வார்த்தைகளைக் கோர்க்க முடியவில்லை… முற்றிலுமாக உடைந்திருந்தான் ரிஷி… நட்ராஜைப் பார்த்த அவன் கண்களின் இப்போதும் அவரைக் கொல்லும் வெறி வந்திருந்தது என்பதுதான் உண்மை…
என்னதான் ரிஷி நட்ராஜை மன்னித்திருந்தாலும்… அவனின் ஆத்திரத்தை.. கோபத்தைக் கட்டுப் படுத்தமுடியவில்லை..
மருமகனைப் பார்க்க முடியாமல் ஏன் நட்ராஜின் கண்களில் கண்ணீர் மட்டுமே…
”அப்பான்னு இவரத் தேடி வந்த உங்க மருமகளுக்கு இவர் என்ன பரிசு கொடுத்தார் தெரியுமாம்மா… வாழ்நாள் முழுக்க நடைபிணமா வாழ்ற வாழ்க்கையத்தான்… ”
“அம்மா அப்பா இல்லாத அநாதை மாதிரி வாழ்க்கை வாழ்ந்தப்ப கூட சந்தோசமா இருந்தாம்மா அவ… இவரைத் தேடி சந்தோசமா சிறகை விறிச்சு வந்த என் கண்மணியை…….கொஞ்சம் கொஞ்சமா குத்தி கொதறி… கடைசியில மருதுகிட்டயும்…. அந்த துரைகிட்டயும் சிக்க வச்சு… சிறகை ஒடிச்சு குத்துயிரும் குலை உயிருமாத்தான் விட்டாரு… கண்மணி்ன்னு ஒரு குறும்புத்தனமான ஒரு பொண்ணு அன்னைக்குத் தொலஞ்சவதான்… இன்னைக்கு வரை நமக்கு அவ திரும்பக் கிடைக்கவேயில்லை”
இலட்சுமி இதயம் படபடவென்று அடிக்க ஆரம்பித்திருக்க…
“என்னடா சொல்ற…. என்னால முடியலையே… அடப்பாவிங்களா… உங்கள எல்லாம் நம்பி வந்த பச்சை மண்ணை என்னடா பண்ணி வச்சீங்க” இலட்சுமி அழ ஆரம்பித்திருக்க…
“நான் பாவிதான் ரிஷி… பாவி என்னை நம்பி வந்த என் பொண்டாட்டியையும் காப்பாத்த முடியலை… என் மகளையும் கைவிட்டுட்டேன்” நட்ராஜால் அதற்கு மேல் முடியவில்லை…. முகத்தில் அறைந்து கொண்டு அழ ஆரம்பித்திருக்க… ரிஷி அவரைத் தடுத்து நிறுத்தவில்லை…
”இன்னைக்கு மகள் வேணும்னு இவரும்… பேத்தி வேணும்னு அவரும் போட்டி போடறாங்களே… இவங்க ரெண்டு பேர்ல ஒருத்தவங்க அவளை அப்போ தங்களோட உறவா ஏத்துட்டு இருந்திருந்தா… அந்த மருதுவை நம்பியிருப்பாளா… பண்ணலையேம்மா இவரு… வைதேகிப் பாட்டி இவளால குணமான பின்னால கூட அவ தாத்தாக்கு இவளைப் பேத்தினு சொல்ல மனசு வரலையே… அவ என்னம்மா பாவம் பண்ணினா… இவருக்குப் பொண்ணா பிறந்தது தப்பா… எந்த மாதிரி வாழ்க்கை வாழ வேண்டியவ… எந்த மாதிரி வாழ வேண்டிய நிலைமை… அப்போ கூட சந்தோசமாத்தானே இருந்தா…. ”
ரிஷி அவரையேப் பார்த்தபடி தன் அன்னையிடம் சொல்லிக் கொண்டு இருந்தாலும்…. அவன் உடலும் தேகமும் ஆட ஆரம்பித்திருக்க…
“இவர்… இவர் மட்டும் தான் எல்லாத்துக்கும் காரணம்… ஒரு நொடி தன் மகள்னு அவளை நினச்சிருக்கலாமே… கேளுங்கம்மா… இவர்கிட்ட கேளுங்க… என் கண்மணியை ஏன் இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டார்னு… எனக்கு என் கண்மணி வேணும்மா… பத்து வயசு வரை இருந்த கண்மணி வேணும்மா… அவள மீட்டுக் கொடுப்பாரா… கேட்டுச் சொல்லுங்கம்மா… எனக்கு அந்தக் கண்மணி வேணும்மா…” ரிஷி கட்டுப்பாடை இழந்திருக்க… அவனின் குரல் அந்த அறை முழுவதும் ஓங்கி ஒலித்து எதிரொலிக்க ஆரம்பித்திருக்க… அதே நேரம் ரிஷியின் கண்களில் நட்ராஜைக் கொல்லும் வெறி மட்டுமே… ஆனால் முடியாதே… … ஆக்ரோஷத்தில் ரிஷி இறுக ஆரம்பித்திருக்க… பயந்த இலட்சுமி மகனை அணைத்து அவனைத் தேற்ற ஆரம்பித்திருக்க… இலட்சுமியின் மடியில் விழுந்த அவர் மகனோ அவளிடம் கதற ஆரம்பித்திருந்தான்… இலட்சுமிக்கோ அதற்கு மேல் கற்பனை செய்து கூட பார்க்கமுடியாத பயத்தில் தனக்குள்ளே ஒடுங்கி இருக்க….
இதற்கிடையே ரிதன்யாவும் விக்கியும் அவர்கள் வீட்டுக்கு வந்திருந்தனர்… திரும்பி வந்த அவர்களின் இதயத்தில் கண்மணியின் மொத்த கடந்து காலத்தையும் வந்த பாரம் மட்டுமே….
தளர்வாக உள்ளே வந்த விக்கிக்கு… நட்ராஜைப் பார்த்த அடுத்த நொடி எங்கிருந்துதான் கோபம் அப்படி வந்ததோ….
”ச்சேய் நீயெல்லாம் அப்பனா… உன் மேல நான் எவ்வளவு மரியாதை வச்சுருந்தேன்…. உன்னை மாதிரி ஒரு அப்பா… எத்தனை நம்பிக்கையோட.. உன்னைப் பார்க்க வந்தா… அர்ஜூன் சார் உங்க மேல கோபமா இருக்கிறது தப்பே இல்லை…”
ரிதன்யா நட்ராஜை ஏதுமே சொல்லவில்லை…. தன் அண்ணனையேப் பார்த்தபடி இருந்தவள்… அவன் அருகே சென்றவள்…
“நீ எதுக்குண்ணா அழற… அண்ணி உனக்காக பிறந்தவங்க…. அவங்க எத்தனையோ கஷ்டப்பட்டு அதையெல்லாம் தாண்டி உன்கிட்ட வந்தவங்க… இனிமேலா உன்னை விட்டு போகப் போறாங்க…” ரிஷி அவளிடம் நிமிரவே இல்லை…
ரிதன்யாவின் கண்கள் கலங்கிய போதும்… அவள் சற்று தைரியமாக இருக்க… அதைப் பார்த்த இலட்சுமியின் முகத்தில் ஓரளவு தைரியம் வந்திருக்க…. ரிதன்யா புன்னகைத்தவளாக…
“உன் மருமகள் அந்த ஃபீனிக்ஸ் பறவை மாதிரிம்மா… நீ எதுக்குமா கவலைப்பட்ற… பெருமைப்படும்மா… இப்படிப்பட்ட பொண்ணு உனக்கு மருமகளா கெடச்சிருக்கான்னு… யாருமே பண்ணாத புண்ணியம் நம்ம குடும்பம் பண்ணியிருக்குமா” ரிதன்யா சொல்லச் சொல்ல ரிஷியின் தேகம் மட்டுமே குலுங்கியது….
-------
கண்மணியின் கைகளில் அர்ஜூன் கொடுத்து போன கைக்காப்பு இருக்க… அதையே பார்த்தபடி எத்தனை மணி நேரம் இருந்தாளோ தெரியவில்லை….
விக்கி ரிதன்யாவிடம் பேசிவிட்டு வந்த அர்ஜூனுக்கு… மனம் கனத்திருக்க… அறைக்கு வந்தபின்னும் கண்மணியின் நினைவுகள்… தன் அத்தையின் நினைவுகள் மட்டுமே…
அப்போதுதான் அவனுக்கு ஞாபகமே வந்தது… கண்மணியிடம் கொடுக்க நினைத்த கைக்காப்பு… வேகமாக எடுத்தவன்… அதைக் கண்மணியிடமே மீண்டும் ஒப்படைப்பதற்காகக் கண்மணியிடம் சென்றான்…
”இதை உன்கிட்ட கொடுக்க ரொம்ப நாளா காத்துட்டு இருந்தேன்…. சந்தர்ப்பம் கெடைக்கல”
கண்மணி அந்த காப்பை புரியாத பார்வை பார்க்க
“உன்னை மறுபடியும் முதன் முதலா பார்க்கும் போது உனக்கு பரிசா கொடுக்கனும்னு நெனச்சேன்… அன்னைக்கு முடியல… அப்புறம் சந்தர்ப்பம் கிடைக்கல”
“அர்ஜூன்… ப்ளீஸ் என்னை நீங்க ரொம்ப சங்கடப்படுத்துறீங்க… இந்த அன்புக்கெல்லாம் நான் தகுதியானவளான்னு நானே அடிக்கடி கில்ட்டியா ஃபீல் பண்ற அளவுக்கு நீங்க நடத்துக்கறீங்க… ப்ளீஸ் உங்க கிஃப்ட்ட எடுத்துட்டுப் போங்க…”
எனும் போதே அர்ஜூன் விரக்தியாகச் சிரித்தவன்…
“நீ மிஸ் பண்ணின கிஃப்ட்… இது உன் அம்மாவோட கிஃப்ட்… “ இப்போது கண்மணியின் புருவம் சுருங்க…
“உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையான்னு தெரியல… சாரி என்னை மன்னிச்சுக்கோ…. எதையும் ஞாபகப்படுத்தனும்னு நினைக்கல… “ என தயங்கியபடி சொன்னவன்
“போலிஸ் உங்க வீட்ல இருந்து கிடைச்சதுன்னு இதை தாத்தாகிட்ட கொடுத்தாங்க… பாட்டி கூட சொன்னாங்க… இதை நீ கைல போட்ருந்தேன்னு….”
கண்மணி அமைதியாக இருக்க… அவளுக்குமே ஞாபகம் இருந்தது… அதே நேரம் அந்தக் காப்பு அப்படி ஒண்ணும் அவளுக்கு முக்கியமானதும் அல்ல அன்றைய நட்ராஜின் மகள் கண்மணியாக இருந்த போது
”ரொம்ப டேமேஜ் ஆகி இருந்துச்சு… ஆல்ட்டர் பண்ணிருக்கேன்…. டைமண்ட் ஸ்டோன் சேதாரம் ஆகல… ஆனால் அந்த லெட்டர் இருந்த பார்ட் மட்டும் சேதாரம் ஆகிருச்சு….” எனக் கைகளில் கொடுத்தவன்
“இது என்னோட கிஃப்ட் இல்லை சரியா… நீ போட்ருந்த உன் அம்மாவோட கிஃப்ட்… அதைத்தான் உன்கிட்ட திருப்பிக் கொடுத்தேன்” என்றபடி அங்கிருந்த மேஜையில் வைத்துவிட்டு போக… இப்போது அதில் இருந்த எழுத்துக்களின் ஞாபகம் கண்மணிக்கு வந்திருக்க… அந்தக் கைக்காப்ப்புக்கு முக்கியத்துவம் வந்திருந்தது இன்றைய ரிஷியின் கண்மணியாக
கண்மணியின் கண்களில் எப்படித்தான் அப்படி ஒரு நீரோ… அருவியாக வழிந்து கொண்டிருந்தது…. தாயின் நினைவில் அல்ல…. அவள் கணவனின் நினைவில்
அந்த கைக்காப்பை எடுத்து அதனைப் பார்த்தவளின் கண்கள்… அதில் இருந்த R’’’K’ எழுத்துக்களைத் தேட ஆரம்பித்திருந்தது…
அந்தக் காப்பிற்கு கூட கொடுப்பினை இல்லை…. ‘R’’K’ என்ற எழுத்துகள் நிரந்தரமாக சேர்ந்து இருப்பதற்கு…
வேகமாக தனது அலைபேசியில் இருந்த ரிஷியின் புகைப்படத்தை எடுத்தபடி அதில் பல முத்தங்களைப் பதித்தவள்….
அந்த ப்ரேஸ்லெட்டைக் கையில் எடுத்தபடி….
“ரிஷி… உங்களுக்குத் தெரியாதுல… ’R’ ’K ’ நீங்க இப்போதான் சொல்றீங்க ஆனால் நான் அப்போவே நம்ம ரெண்டு பேர் முதல் லெட்டரையும் கைல போட்ருந்தேன்… ” கண்களில் கண்ணீர் வழிந்து அலைபேசியில் இருந்த ரிஷியின் முகத்தில் பட்டிருக்க…
“நான் ரொம்பவே அன்லக்கி ரிஷி… அப்போ இதை மிஸ் பண்ணேன்… பெருசா ஃபீல் பண்ணலை… ஆனால் இன்னைக்கு இது திரும்ப கைக்கு கிடைக்கும் போது இந்த தங்கம்… வைரம்… என் கண்ணுக்குத் தெரியல இதை எல்லாம் விட ’RK’ லெட்டர்ஸ் இல்லைனு மனசு வலிக்குது… அர்ஜூன் இதை அந்த லெட்டர்சோட கொடுத்திருந்தால் எனக்கு ஒரு நம்பிக்கை வந்திருக்கும் ரிஷி… உங்ககிட்ட எடுத்துகிட்டு ஓடோடி வந்துருப்பேன்… ஆனா இது கூட என் நம்பிக்கையைக் காப்பாத்தலை…” அதைத் தூக்கி எறிய கையை உயர்த்திய போதே… கண்மணிக்கு ஏனோ அப்படி செய்ய மனம் வராமல்… அந்த கைக்காப்பையே பார்த்திருக்க… அது அவள் கைக்கு வந்த தினம் ஞாபகத்துக்கு வந்திருந்தது… தன் தந்தையைத் தேடிச் சென்ற தினம்… தன் மனதோடு மட்டுமே இருந்த நினைவு… இதுவ்ரை யாரிடமும் பகிறாத நினைவு… கிருத்திகாவிடம் கூட…
கண்மணி நட்ராஜைத் தேடிச் சென்ற தினம்… கண்மணியைத் தவிர மற்ற அனைவருக்கும் அவள் கந்தம்மாவின் ஏரியாவில் இருந்து நட்ராஜின் ஏரியாவிற்கு சென்றாள்… அது மட்டுமே தெரியும்… அந்த இரவில் என்ன நடந்தது… கண்மணிக்கு மட்டுமே தெரியும்…. அதன் நினைவுச்சின்னம் தான் தற்போது அவள் கையில் வைத்திருந்த பிரேஸ்லெட்…
---
அன்று…
கண்மணியின் முகத்தில் கண்களும் மூக்கும் மட்டுமே தெரிந்திருக்க… அந்தக் கண்ணிலும் கண்மையை நன்றாக தடவியிருந்தாள் கண்மணி…. பார்க்கும் யாருக்கும் தான் யாரென்று தெரியக் கூடாது… அப்படியே பார்த்தாலும் பயந்து போக வேண்டும் என்ற முன்னேற்பாடுதான் அது… நன்றாக முகத்தை மூடியிருந்தாள்… பனிக்குப் போடும் கம்பளிக்குல்லாவைப் போட்டு….
கன்னம் கூட தெரியக் கூடாது… என்று நன்றாக இழுத்து விட்டிருந்தாள்… அவளின் கன்னக்குழி அவளின் மிகப்பெரிய அடையாளம்… அதையும் மறைத்து வி்ட்டிருந்தாள்….
உடையாக அவள் தேர்ந்தெடுத்தது…. துப்பட்டா இருந்த ஒரு சல்வாரை… அந்த துப்பட்டாவில் ஒரு முனையில் கூழாங்கல் முடிச்சு… இன்னொரு முனையில் கருங்கல் முடிச்சு… அதற்கு மேலே இருபுறமும் மிளகாய் பொடி… மிளகுப்பொடி… இது எல்லாவற்றையும் விட… கழுத்தில் ப்ளேடை டாலராக அணிந்த கருப்புக் கயிறு…
போரளியாக…. ஜான்ஸி ராணியாக வீர மங்கம்மவாக தன் தந்தையின் இடம் நோக்கி செல்லக் காத்திருந்தாள் அந்த பேருந்து நிறுத்தத்தில்… அதுவும் கடைசிப் பேருந்துக்காக
அந்த இரவில் தனியாக நின்றிருந்த அவள் முன் ஒரு கார் வந்து அவளருகே நிற்க…. அத்தனை பேரும் திமிர் பிடித்த பணக்கார வாரிசுகள்… குடி போதையில் அவள் முன் வந்து ஒருவன் நின்றிருக்க… கண்மணி கொஞ்சம் கூட அஞ்சவில்லை… மாறாக தன் முன் வந்து நின்றவனை பார்வையால் எரிக்க…
“டேய் மச்சான்…. பேய்டா… மோகினிப் பிசாசுடா” எனும் போதே இன்னொருவன் அவள் முன் வந்து நின்றிருக்க….
அப்போது காருக்குள் இருந்த ஒருவன்….
“டேய் டைம வேஸ்ட் பண்ணாதீங்கடா… நமக்காக அங்க ரம்பை ஊர்வசிலாம் காத்துட்டு இருக்கும் போது… இதுகிட்ட என்னடா வேலை… வாங்கடா” என அழைக்க
“ஆளும் மூஞ்சியும் பாரு” என்றபடி அவளை நக்கல் செய்துவிட்டு காருக்குள் ஏறி அமர்ந்துவிட… அந்த வாகனமும் பறந்து விட… கண்மணி நிம்மதிப் பெருமூச்சு விட்டவளாக மூச்சை இழுத்து விட்ட போதே… பின்னால் இருந்து ஒரு கரம் அவள் மூக்கில் எதையோ வைக்க…. கண்மணி சுதாரிக்கும் முன்னரே அவள் கடத்தப்பட்டிருந்தாள்….
நினைவுகள் எங்கோ பறந்ததா…. இல்லை அவள் பறந்து கொண்டிருந்தாளா தெரியவில்லை… ஏதோ குரல் மட்டுமே அவள் காதருகில் ஒலித்தது…
“பாஸ்…. இன்னைக்கு ரெண்டாவது பட்சி மாட்டியிருக்கு…. ஆனால் இது முதல் பட்சி மாதிரி பணக்கார பட்சி இல்லை…”
எதிர் முனை ஏதோ சொல்ல…
“அதேதான்… சொந்தப் பார்ட்டிகிட்ட பணம் கெடச்சால் ஓக்கே… இல்லை வெளிபார்ட்டிகிட்ட பணத்தை வாங்கிட்டு வித்துறலாம்” என்றபடி வைத்தவன்…
தன் பையில் வைத்திருந்த பிரேஸ்லெட்டை எடுத்தவன்…. வைரக்கல்லு…. தங்கம்… வித்தோம்னா இலட்சக்கணக்குல கிடைக்கும்டா… பாஸ்க்கு தெரியாமல் நமக்கு ஒரு லக்கி ப்ரைஸ் கெடச்சுருக்கு… இந்த RK பார்டை மட்டும் கட் பண்ணி தூக்கி எறிஞ்சுட்டு எங்காவது வித்துறனும்டா” என்றபடி…
“இதுகிட்ட ஏதாவது தேறுமான்னு பார்ப்போமாடா” எனும் போதே….
“நீ சும்மா இருக்கியா… பொண்ணப் பார்த்தால் வசதி வாய்ப்போட இருக்கிற பொண்ணா தெரியல…. நீ ஒழுங்கா வா… பார்ட்டிகிட்ட சேதாரம் இல்லாமல் ஒப்படைக்கனும்ன்றது நம்ம பாஸ் நமக்குச் சொல்லிருக்காரு… “ என்றபடியே முன்னவனைத் திட்ட… அவனும் அமைதியாக இருந்துவிட…
கண்மணியோ அரை மயக்கத்தில்… அப்போதும் அவள் கண்களில் பயமோ பதட்டமோ இல்லை… கண்டிப்பாக இதில் இருந்து தப்பித்து விடுவோம் என்று அவள் உள்மனம் நம்பிக்கை சொல்ல… அந்த நம்பிக்கையும் அவளைக் காப்பாற்றியது என்றே சொல்ல வேண்டும்…
-------------
Sad 😭😭😭😭
Episode FB படிக்க கஷ்டமாக இருந்தாலும், கண்மணியின் குறும்புகள் சேட்டைகள் interesting. Nice writing.. Coming episodes ரொம்ப கஷ்டமாக இருக்கும் போல் தெரிகிறது.. Hope atleast, at end Kanmani will be happier with Rishi and children. Give more happier parts.
Nice update.curiosity increases. Also mistakes happens with everyone praveena I just want to bring it to your notice.
Enna ippadi kanmaniya romba ka
shpaduthra seen neraya vachirukkinga. I feel very much. Put soon normal epi
Nice
Sis ala vaikirenga.. Nejamave kanmani oru masterpiece than..
Rishi vaara kutty seen layum rishiya ala vachuteengale,ethu thagumaa varuni .
Nice update
Rithanya changed
nice siss
Rishi kanmani kaga waiting sis
Kanmani Papa's name description🔥jii.. Rithanya changed..OMG..But she has no rights to take rights over RK..😏.. RK born for Rk.. Destiny, whatever it maybe.. They've to be together soon.. Waiting jii..
Hahaha I'm de one who is reading this update first ... I love this story and keep waiting for de updates... usually it shows like 1 day ago, 18 hours ago, 6 hrs ago... And today it's jus 8 mins ago... just realising how crazy I'm on this story... I never commented in this forum... This is my first comment in this forum and also for this update... Kudos to the writer... Keep up... Expecting many stories like this in your style....😘