/*
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
சோகம் இல்லாமல் சொல்லத்தான் ட்ரை பண்றேன்... கண்மணி எவ்ளோ ஜாலியா இருக்கா... நாமளும் அவ வழியே போகலாமே... அண்ட் கண்மணியோட FB... சுருக்கமா சொல்ல முடியல... மத்த பார்ட்லாம் பெருசா சொன்னதுனால இதுவும் பெருசா சொன்னாத்தான் அதோட டெப்த் கிடைக்கும்... அட்ஜ்ஸ்ட் பண்ணிக்கங்க... சீக்கிரம் முடிச்சுறேன்...
அப்புறம் ரிஷியை எல்லோரும் தேடறீங்க.... புரியுது....
இந்த அப்டேட்ஸ் எல்லாம் ஹீரோ இல்லாத... ஹீரோயின் ஓரியண்டட் அதுவும் குழந்தை நட்சத்திரம் படம் பார்த்த ஃபீல் இருக்கும்... வேற வழி இல்லை... நான் என்ன பண்ண... சீக்கிரம் ரிஷியை கூட்டிட்டு வந்துறேன்.. கண்மணியோட ஹஸ்பண்டா மாஸ் பெர்ஃபார்மன்ஸ் பண்ண வச்சுருவோம்… ஆனால் அதுக்கும் முன்னால FB லயே ஒரு சர்ப்ரைஸ் இருக்கு... காத்துட்டே இருங்க....
*/
அத்தியாயம் 91-3
/* இது சங்கீத
திருநாளோ புது சந்தோஷம்
வரும் நாளோ ரதி நம் வீட்டில்
பிறந்தாளோ சிறு பூவாக
மலர்ந்தாளோ
சின்ன சின்ன
அசைவில் சித்திரங்கள்
வரைந்தாள் முத்த மழை
கன்னம் விழ நனைந்தாளே
கொஞ்சி கொஞ்சி பிஞ்சு
நடை நடந்தாளே
பூவெல்லாம் இவள்
போல அழகில்லை பூங்காற்று
இவள் போல சுகமில்லை இது
போல சொந்தங்கள் இனி இல்லை
எப்போதும் அன்புக்கு அழிவில்லை
இவள் தானே நம் தேவதை*/
”ஏய் கண்மணி… அந்தக் கலெக்டர் பொண்ணு பேரு ’அமுதினி’ யாம்…. “
“யப்பா… என்ன அழகா இருக்கு… சினிமால வர்ற பொண்ணு மாதிரி ஒல்லியா ஹைட்டா…. என்ன ஒரு கலரு… முகமெல்லாம் பளபளன்னு… மின்னுது கண்மணி… கண்மை போட்ட அந்த கண்ணும்… அதுலயும் அந்த மூக்கு இருக்கு பாரு… அதுலயும் அது போட்ருக்கு பாரு ஒரு மூக்குத்தி… அந்தப் புள்ள முகம் பளபளன்னு இருக்கா… அந்த மூக்குத்தி பளபளன்னு இருக்கான்னு தெரியல…. யப்பா வேற லெவல்… அது சரி ஏன் நீயெல்லாம் மூக்குத்தி குத்தல” என்று கேட்ட போதே கண்மணி அவனை வெட்டலாமா… குத்தலாமா என்ற பார்வை பார்க்க…
“என்ன பார்க்கிற…”
“குத்தலாமா வேண்டாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்…” என்ற கண்மணியின் கடுப்பான குரலில் சற்று சுதாரித்துப் பார்க்க
“என்ன பார்க்கிற… எனக்கு மூக்குத்தி குத்திறதைப் பற்றி இல்லை… உன் கொமட்டுல குத்தலாமா வேண்டாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்…” என்றவள் பல்லைக் கடித்துக் கைமுஷ்டியை மடக்கி அவனை நோக்கிக் காட்ட… அவள் நண்பன் இன்னுமா அமுதினியைப் பற்றி பேசுவான்… பேசாமல் வாயை மூட…. இலட்சுமணனோ ஆரம்பித்திருந்தான்
”இங்க்லீஸ்லாம் எப்டிலாம் பேசுது தெரியுமா… அதை விட எவ்ளோ ஸ்வீட்டா பேசுது தெரியுமா” எனும் போதே… கண்மணி எரிச்சலுடன்…
“இப்போ நான் கதை சொல்லவா… வேண்டாமா… இல்ல அந்த அமுதினி புராணம் கேட்கலாமா“ கேட்டவள்…
”என்ன இலட்சுமணா…. உனக்கு… ஸ்வீட் வேணுமா… இல்லை ஸ்லிப்பர் வேணுமா… நாங்களும் சம் டைம் இங்கிலீஷ்ல பேசுவோமாக்கும்… செருப்பை இங்க்லீஷ்ல சொன்னா அசிங்கமாவே தெரியலைல்ல”
“கண்மணி… சாரி… சாரி மன்னிச்சுரு…” என இலட்சுமணன் உடனே இறங்க… அப்போதும் கண்மணி இறங்காமல் மலை ஏறிய அவதாரத்திலேயே இருக்க..
“நீ கதை சொல்லும்மா… அடேய் இனி அமுதினின்ற வார்த்தை இங்க வரவே கூடாது…. தலைவி கோபப்படுது பாரு… ” என்றபடி அனைவரையும் இலட்சுமணனே சமாதானப்படுத்த… கண்மணியும் சமாதானமானவளாக… கையில் இருந்த சிலேட்டை எடுத்து தன் புறம் திருப்பி வரையத் தொடங்கியவள்… வரைந்து கொண்டே கதையும் சொல்ல ஆரம்பித்திருந்தாள்…
”இதுதான் அந்தக் கா……….டு… அதுக்கு நடுவில… பெரி…………ய மர்ம பங்களா… இங்கதான் நம்ம சுப்பு அவங்க கிராமத்துல தொலஞ்ச மக்களைத் தேடப் போறான்…. அப்போ சரியான புயல்காத்து… நம்ம” கண்மணி கண்களை உருட்டி பயம் காட்டியபடி சொல்ல ஆரம்பித்து முடிக்கவும் செய்திருக்க
‘சூப்பர் கண்மணி…” செமையா கதை சொல்ற… இன்னைக்கு நான் நான் தூங்குவேனா என்னனு தெரியலையே… கனவுல எல்லாம் பேயாதான் வரப்போகுது… செம ஸ்டோரி கண்மணி” எனும் போதே கண்மணி நக்கலாகச் சிரித்தபடி… தனக்குள் சொல்லிக் கொண்டாள்…
“இந்த வார சிறுவர்மலர் கதையை ஓட்டுனா… இவங்க எல்லாரும் நம்மள செமையா பாராட்டுறாங்களே…”
“ஏ.. கண்மணி… பேய்க் கதை மட்டும் தான் சொல்வியா… டெய்லி பேய்க் கதை இல்ல மந்திரவாதி கதைதான் சொல்ற.. .. லவ் ஸ்டோரிலாம் சொல்ல மாட்டியா…” என்று அவள் நண்பன் சலிப்பாகக் கேட்க
“ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்… வோட் போட்ற வயசு வரும் போது சொல்றேன்… அப்ப வந்து கேளு… இப்போலாம் சொல்லமாட்டேன்…. போவியா” என்றவள்… காதல் கதை கேட்ட நண்பனைப் பார்த்து
“இந்த மூஞ்சிக்கு இந்தக் கதை சொல்றதே பெருசு… இதுல ரொமான்ஸ் கதை வேற கேக்குதா… இங்க பாரு… நான் ரொமான்ஸ் கதையே சொல்ல ஆரம்பித்தாலும்… உனக்கு எப்போதுமே பேய்க்கதை கேட்க மட்டும் தான் அனுமதி… நான் என்ன சொல்றேனோ அதைத்தான் இங்க எல்லோரும் கேட்கனும்… என்ன புரிஞ்சதா… இப்போ எல்லோரும் கிளம்புங்க” என்று கண்மணி உச்சகட்ட ஆணவத்தில் பேசினாள்… நண்பர்கள் என்று அவர்களை நினைத்தால் தானே… அவளைப் பொறுத்தவரை அவர்கள் அவளின் அடிபொடிகள்… அப்படித்தான் அவர்களை அவள் வைத்திருந்தாள்… அவளை யாரும் எதிர்த்துக் கேள்வி கேட்கக் கூடாது… மறுத்தும் பேசக் கூடாது… இப்படித்தான் கண்மணி அவர்களை எல்லாம் பழக்கி வைத்திருந்தாள்…
ஆனால் இந்த அமுதினி வந்ததில் இருந்தே… எல்லாமே மாறிக் கொண்டிருப்பது போல எண்ணம் அவளுக்கு… பள்ளிக்கூடம்… ஆசிரியர்கள்… மாணவர்கள்… என்றில்லாமல் தன் கூட்டமுமே… கண்மணிக்கு இப்போதெல்லாம் கோபத்தோடு பொறாமையும் சேர்ந்திருந்தது…
மொத்த கூட்டமும் கலைந்து செல்வதற்காக எழுந்து நிற்க… அப்போது…. அவள் முன் வந்து நின்றான் அந்தப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் சிவா… அவனுக்கும் கண்மணி போலவே ஒரு கூட்டம் உண்டு அந்தப் பள்ளிக்கூடத்தில்…
”என்ன…” கண்மணி மொத்தக் கூட்டத்தையும் தெனாவெட்டாகப் பார்த்தபடியேக் கேட்க
“பேசனும்…” சிவாவும் திமிராகச் சொல்ல…
இருவரின் நண்பர்கள் படையும் அவர்கள் பின் நிற்க… கண்மணி அந்த சிவாவை யோசனையுடன் பார்த்த போதே… சிவா பேச ஆரம்பித்தான்
“என் பேரு சிவக்குமார்… சுருக்கமா ”எஸ் கே” னு கூப்பிடுவாங்க”
“தெரியும் தெரியும்.. சொல்லு” கண்மணி தேவையில்லாத பேச்சைக் கேட்கும் பாவனையில் கடுப்பாக அவனைப் பார்க்க
”நான் கொஞ்சம் ஃப்யூச்சர் பற்றி பேசனும்… “ சிவாவும் சட்டென்று சொல்ல
“உன் ஃப்யூச்சர் பற்றி பேச நான் எதுக்கு…. நீ அப்படி ஓரமா உட்கார்ந்து தனியா பேசு…” கண்மணி சட்டென்று கிளம்ப எத்தனிக்க… அவனோ அவள் போகாமல் கை நீட்டி அவளைத் தடுத்திருக்க… கண்மணியின் புருவம் கோபத்தில் உயர… அவனோ அதை எல்லாம் கண்டு கொள்ளாமல்
“அதுல நீயும் இன்வால்வ் ஆகுற” எனும் போதே… கண்மணியின் நண்பர் கூட்டத்தில் ஒருவன் கண்மணியின் காதில் கிசுகிசுத்தான்…
“என்ன கண்மணி… பையன் உன் கிட்டயே பிட்ட போட்றான்… போற போக்குல பார்த்தால்… உன்னை ரொமான்ஸ் ஸ்டோரி சொல்ல வச்சுருவான் போல” எனும் போதே… கண்மணி முறைக்க.. சட்டென்று அவள் நண்பன் வாயை மூடி இருக்க
“சுத்தி வளைக்காமல் நேரடியா வர்றேன்… அடுத்த வருசம் நீ ஆறாவது… நான் எட்டாவது…”
“அதுக்கு” கண்மணி புரியாமல் கேட்டாலும்…
‘நீ இப்படியே பேசிட்டு இருந்தால்… நான் ஆறாவது போவேன்… ஆனால் நீ எட்டாவது போவியா எட்டாமல் போயிருவியான்றதுதான் சந்தேகம்…” கண்மணி அப்போதும் தன் எதுகை மோனையை விடாமல் பேச…
”சொல்றேன் சொல்றேன்… பொறுமையா கேளு… நம்ம ஸ்கூல்ல எலெக்ஷன் வரும்… தெரியும்தானே… ஸ்கூல் ப்யூப்பிள் லீடருக்கு(SPL) ஏழாவதுல இருந்துதானே எடுப்பாங்க.. தெரியும் தானே” எனச் சொல்ல
“அடேய்… இவன் இந்த ஃப்யூச்சரைப் பற்றி பேசிருக்கான் பயபுள்ள…” என கண்மணியின் காதில் ஓத… கண்மணி அதைக் கண்டு கொள்ளாமல்
“நான் என்ன பண்ணனும்…” கண்மணியின் குரலில் தீவிரம் வந்திருக்க… சிவாவும் தொடர்ந்தான்…
”ஆறாவது வரப் போற பசங்களைத்தான் ASPL போஸ்ட்டுக்கு நாமினேட் பண்ணுவாங்க… ஸ்கூல்ல உன்னைப் பற்றி கேள்விப்பட்டேன்… சோ உனக்கும் எனக்கும் தான் வின் பண்றதுக்கு பெரிய சான்ஸ் இருக்கு… நாம இப்போதே ஒண்ணா சேர்ந்து பழக ஆரம்பிக்கனும்… அப்போதான் நம்ம ஸ்கூலை நல்ல நிலைமைக்கு கொண்டு வர முடியும்… எனக்கு பலதிட்டம் இருக்கு… நாம் அதைப் பற்றி எல்லாம் டிஸ்கஸ் பண்ணனும்… நாம நமக்குள்ள ஒரு அண்டர்ஸ்டேண்டிங் கொண்டு வந்தால்தான் நம்ம பீரியட்ல நம்ம ஸ்கூல் பெரிய லெவல்ல வரும்… இதுவரைக்கும் வந்த SPL – ASPL காம்ப்போல நாமதான் மாஸா இருக்கனும்..” என்றவன்
“அதுமட்டும் இல்லை… இந்த தடவை தான்… இப்படி ஒரு காம்போ… பையன் பொண்ணுனு… சிவன் சக்தி மாதிரி நாம மாஸ் காட்டனும்… “
முன்னால் விழுந்திருந்த இரட்டைச் சடையைப் பின்னால் தூக்கிப் போட்டவள்…
”அப்புறம்” கண்மணி கைகளைக் கட்டியபடி அவனை நிமிர்ந்து பார்க்க
“பாரு… ’S..K’ S ஃபார் சிவா… K ஃபார் கண்மணி பேர் பொருத்தம் கூட செமையா இருக்கு…” அதற்கு மேல்
”இவன் யாருடா காமெடிப் பீசா இருக்கான்… ஓடிப் போயிரு… ஃப்யூச்சர் பற்றி பேசவந்தாராம்… நீ எஸ்பிஎல் நா… கண்டிப்பா நான் ஏஎஸ்பிஎல் போஸ்ட்டுக்கு போட்டி போட மாட்டேன்… போறியா… வந்துட்டான்… ஆளும் மூஞ்சியும் பாரு… சிவனாம் சக்தியாம்… எஸ் கே வாம்” என்றவளிடம்
“கண்மணி…” என அந்த சிவா பேச முயற்சிக்க…
“அடி வாங்கிட்டு போகனும்னு ஆசை இருந்தா என் முன்னாடி நில்லு… அடுத்த வார்த்தை பேசு…. இல்ல இடத்தை உடனே காலி பண்ணு…” எனும் போதே அவன் பக்க ஆட்கள் சண்டை போட வர… சிவாவும் அவளை முறைத்தபடியே அவளை நோக்கி வர… அடுத்த நொடி கண்மணியும் தயங்கவில்லை…
கண்மணி சிவாவின் கன்னத்தில் அறைந்திருக்க… சிவா கன்னத்தைப் பிடித்தபடியே அவளைப் பார்த்தபோதே.. ஒற்றை விரலைக் காட்டி எச்சரித்தவளாக
“ஓடிப் போயிறு… அதே மாதிரி உன் அடிப்பொடிகளும் இடத்தைக் காலி பண்ணிருக்கனும்… இல்ல..” எனும் போதே
“எங்க தலைவிகிட்ட அடிவாங்காத ஆளுங்க இந்த ஸ்கூல்ல குறஞ்சுகிட்டே வரும்… ” என்று கோரஸாக கண்மணியின் நண்பர்கள் சொல்ல
“சிவா மேலயே கை வைச்சுட்டேல… உனக்கு இருக்கு…” என சிவா மிரட்ட ஆரம்பித்த போதே
“ச்சீ போடா… நீ மிரட்றதைப் பார்க்கும் போது சிரிப்பா வருது… பெரிய சிவா சிறுத்தை… சீறிக்கிட்டு வந்துருவாரு” கண்மணி சிரிப்பை அடக்கிக் கொண்டு சொல்ல… சிவாவும் அவளை நேரம் பார்த்து பழிவாங்குவதாகச் சொல்லியபடி அங்கிருந்து இடத்தைக் காலி பண்ண… பிரச்சனை ஒழிந்தது என்று அந்த இடத்தை விட்டு போக நினைத்த போதே… அடுத்து அவர்களின் முன் வந்து நின்றதோ அமுதினி…
சிவாவோடு நடந்த கலாட்டாவால் சிரித்த முகமாக இருந்த கண்மணி இப்போதோ அக்னிப் பார்வையால் அமுதினியைப் எரித்தாள்…
“கலெக்டரின் மகள் என்ற அதிகாரம்… பேரழகு… அறிவு… இன்னும் கூடவே நுனிநாக்கு ஆங்கிலம்… ஆனால் இதை எல்லாம் விட கனிவான அவள் குணம்”
கண்மணியைவிட அமுதினி எல்லாவற்றிலும் மிஞ்சி இருந்தாள்… அவள் இந்தப் பள்ளிக்கு வந்து 4 நாட்களே ஆக… அதுவும் இவள் வகுப்பு என்பதால் கண்மணிக்கு அவளைப் பற்றி உடனே எல்லாம் தெரிந்து கொண்டாள்… மொத்தப் பள்ளியிலும் மெல்ல மெல்ல அமுதினி தெரிய வர ஆரம்பித்திருக்க… அவளைப் பார்ப்பதற்கென்றே தனிக் கூட்டம் தினமும் அவள் வகுப்பில் அலை மோத ஆரம்பித்திருந்தது
‘அந்தப் பொண்ணு மட்டும் வித்தியாசமா ஸ்கூல் யூனிஃபார்ம் போட்ருக்கு… நம்ம புள்ளைங்க எல்லாம் பாவாடை சட்டை யூனிஃபார்ம் போட்ருந்தா… இந்த பொண்ணு என்னமோ பின்னோஃபார்ம் யூனிபார்னு சொல்லுது… எல்லோரும் ரெட்டைசடை போட்டு பின்னிட்டு வந்தா… இது மட்டும் ப்ளண்ட் கட்னு சொல்லுது…”
இந்த ஒருவாரமாக அமுதினிதான் தான் அந்தப் பள்ளிக் கூடத்தின் பேசும் பொருளாக மாறி இருக்க… கண்மணியிடம் அந்த அமுதினியும் சினேக கரம் நீட்ட முயற்சித்தாள் தான்…. ஆனால் கண்மணிதான் அவளிடம் பிடி கொடுக்காமல் நழுவியபடி இருந்தாள்…
“என்னவாம்டா… கேட்டுச் சொல்லு…” கண்மணி அந்தப் பெண்ணை நேருக்கு நேராகப் பார்ப்பதைத் தவிர்த்திருக்க….
அந்த அமுதினியோ கண்மணியை மட்டுமே புன்னகையுடன் பார்த்திருந்தாள் சிநேகப் பாவனையோடு…
“கண்மணி… எனக்கு உன்னோட எல்லா நோட்டும் வேணும்… வீக் எண்ட் காப்பி பண்ணிட்டு கொண்டு வந்து தர்றேன்… ப்ளீஸ்” அந்தப் பெண் தாழ்மையுடன் கேட்க
“அதெல்லாம் என் நோட்டை யாருக்கும் தர முடியாது… நான் யாருக்கும் தர மாட்டேன்… சொல்லுங்கடா அந்தப் பொண்ணுகிட்ட”
“ஏன் கண்மணி… இப்படி இருக்க… எல்லோருக்கும் ஹெல்ப் பண்ணுவேனு சொன்னாங்க… “ எனும்போதே
“எல்லொருக்கும் பண்ணுவேன்… ’அமுதுனி’ ன்னு பேர் உள்ளவங்களுக்கு பண்ண மாட்டேன்..”
“ஏன்…” அந்தப் பெண் குழப்பமாகக் கேட்க
“ஹ்ம்ம்ம்… என் ஜாதகத்துல அப்படித்தான் போட்ருக்காங்க… போதுமா…” என்றபடி தன் புத்தகத்தைப் பார்த்து குனிய…
“நான் நம்பமாட்டேன்…”
“அது உன் இஷ்டம்…” எனக் கண்மணி நிமிராமலேயே பேச… அந்த அமுதினியோ… இப்போது வேகமாக கண்மணியின் அருகில் வந்து… வேகமாக கண்மணியின் புத்தகப் பையை எடுத்திருக்க…
நம் பொறுமையின் சிகரம் கண்மணி அடுத்து என்ன செய்திருப்பாள்… கண்மணியின் கைவண்ணம் பதிந்த நபர்களின் வரிசையில் அமுதினியும் சேர்ந்திருக்க… இப்போது அந்தப் பெண்ணுக்கும் கோபம் வந்திருக்க… கண்மணியை அறையக் கை ஓங்கப் போனவள்… என்ன நினைத்தாளோ… கையை இறக்கியவளாக
“உன்னை மாதிரி கோபத்துல… அறிவை இழக்கிற கேவலமான பொண்ணு நான் இல்லை… என் அப்பா அம்மாவும் அப்படி என்னை வளர்க்கல”
“ஏய்… என்ன வளர்ப்பு அதுன்னு இதுன்னு ஓவரா பேசுற… பல்ல கழட்டி கைல கொடுத்துருவேன்…பார்த்துக்க” கண்மணியும் இன்னுமே ஆவேசம் குறையாமல் அதட்ட ஆரம்பித்திருக்க… அமுதினியோ நக்கலாகச் சிரித்தபடி
”உனக்கு பொறாமை… கண்மணியோட பொறாமை கண்லயே தெரியுது... என் மேல இருக்கிற பொறாமை… ஐ மீன் இந்த கண்மைலயே தெரியுதே… நேத்து ஏதோ பப்பூன் மாதிரி மேக்கப் போட்டுட்டு தெருவுல திருஞ்சியாம்… என் ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்க” கண்மணியைச் சரியாக கண்டு கொண்டவளிடம் கண்மணியும் பேச முடியாமல் திணற… அமுதினியோ விடவில்லை அவளை…
”உன்னை விட எல்லாத்துலயும் நான் பெஸ்ட்டுனு உனக்கு பொறாமை… எங்க் உன் நோட்ஸெல்லாம் கொடுத்தா உன்னை விட முதல் மார்க் நான் வாங்கிருவேன்னு பயம்” அந்தப் பெண் சொல்ல
கண்மணியோ இப்போது அவளைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிக்க…
“என்ன சிரிக்கிற… அடுத்து வர்ற எக்ஸாம்ல நான் தான் ஃபர்ஸ்ட் ரேங்க் எடுப்பேன்… நீ எனக்கடுத்துதான் … இது சவால்” அவள் சொல்ல
‘அப்படி நடக்கலைனா… உன்னால முடியலேன்னா… அது நடக்கவே போறதில்ல… நீ உன் சவால்ல ஜெயிக்கவே போறதில்ல” கண்மணி சொல்ல
“பார்க்கலாம்…. என் சவால்ல ஜெயிக்கிறேனா இல்லையானு… சரி நான் தோத்துட்டால் என் பேரை மாத்திக்கிறேன்… சப்போஸ் நான் ஜெயிச்சுட்டா நீ என்ன பண்ணுவ…”
“அப்டியா… சவால்ல ஜெயிக்கிறதுலாம் இருக்கட்டும்… நான் நல்ல பேரை சஜஸ்ட் பண்றேன்… அதைப் பற்றி மட்டும் யோசிச்சுட்டு இரு… இனி நீ ’அமுதினி’ இல்லை ’நஞ்சுனி’... நல்லா இருக்கானு யோசிச்சுட்டே இரு… டேய் வாங்கடா போகலாம்” எனக் கண்மணி கிளம்பி இருக்க…
“நான் சவால்ல ஜெயிச்சா என்ன பண்ணுவ… அதையும் சொல்லிட்டுப் போ….”
“ஹ்ம்ம்ம்… இந்த ஸ்கூல்ல விட்டே போயிறேன் போதுமா… “ எனக் கூறிவிட்டு கண்மணி செல்ல… அது போலவே அந்த வருடத்தின் பாதியோடு அந்தப் பள்ளியை விட்டு இருவருமே விலகிச் சென்றிருந்தனர்… ஒருத்தி இந்த உலகத்தை விட்டே… இன்னொருத்தியோ ஊரை விட்டே
--
காலாண்டுத் தேர்வுகள் முடிந்து மீண்டும் பள்ளி ஆரம்பித்திருக்க… வழக்கமாக கண்மணி தேர்வு முடிவுகளை பெரிதாக எதிர்பார்க்க மாட்டாள்… அது அவளுக்கு மட்டுமல்ல வகுப்புக்கு மட்டுமல்ல… அந்தப் பள்ளிக்கே தெரிந்த விசயம் தான்…ஆனால் இந்த முறை கண்மணிக்குள் ஒரு பரபரப்பு… காலையில் எழுந்த போதே மதிப்பெண்கள் தான் அவள் கண்முன் வந்து நிற்க
“ஏய் அமுதினி… அந்தப் பேரோட கடைசி நாள் இன்னைக்கு… என்கிட்டயே சவால் விட்றியா…” என்றபடி பள்ளிக்கும் போக… அன்று அமுதினி வகுப்புக்கு வரவில்லை…
”என்னடா… அந்தப் பொண்ணு… ஓடிருச்சு போல…” கண்மணியும் அவள் கூட்டமும் தங்களுக்குள் பேசியபடியே தங்கள் வகுப்பு ஆசிரியருக்காக காத்திருக்க ஆரம்பித்தனர்…
அவர்கள் வகுப்பாசிரியர் தமிழ் ஆசிரியர்… வந்தவர் அனைத்து பாடங்களின் தேர்வுத்தாள்களையும் கொண்டு வந்தவராக
‘பசங்களா.. பேப்பர் வாங்கிங்க…. மார்க் எண்ட்ரி பண்ணிறலாம்… தமிழ் மட்டும் டோட்டல் போடல… டீச்சர்க்கு நேரம் இல்லை… உங்க பேப்பர் கைக்கு வந்த பின்னால மார்க்கை கூட்டிப் போட்டுட்டு கொண்டு வாங்க.. உங்களுக்கு டீச்சர் கணக்குப் பாடமும் எடுக்கிறேன் பாருங்க” என்று சொல்ல
“டோட்டல் பண்ண சோம்பேறி பட்டுட்டு என்ன ஒரு பேச்சு நம்ம டீச்சருக்கு” அருகில் இருந்த மாணவிகள் கிசுகிசுக்க… கண்மணி முறைத்தாள்… ஏனென்றால் அவளுக்குத் தமிழ் ஆசிரியர் பிடித்தமான ஒருவர்…
“உனக்கு ஒரு பேப்பர் கூட்டிப் போட்றதுக்கே வலிக்குதுதானே… அவங்க எத்தனை பேப்பர்… எத்தன செக்ஷன்… எத்தன க்ளாஸ்… “ எனக் கண்மணி அதட்ட… அருகில் இருந்த பெண்ணும் இப்போது அமைதி ஆகி இருக்க… கண்மணி தன் தமிழ் பேப்பரா டோட்டல் போட ஆரம்பித்திருக்க… அவள் முகத்தில் புன்னகை… வேகமாக எழுந்து போனவள்… ஆசிரியரின் முன் நின்றவளாக
“டீச்சர்… 120 வருது… இந்த செக்ஷன்ல வர்ற கொஸ்ட்டீனுக்கு 2 மார்க்ஸ் தான்…. நீங்க 4 மார்க்ஸ் போட்ருக்கீங்க… அப்புறம்… இது … எக்ஸாம் ஹால் போரடிச்சதுன்னு … சாய்ஸ் விடாமல் எழுதினது… 10 மார்க் எக்ஸ்ட்ரா வந்திருச்சு…” கண்மணி சொல்ல…
“அப்டியா… ஏண்டா அப்படி எழுதின… “ என்றபடியே…
“சரி கொடு… “ என வாங்கி மீண்டும் திருத்தம் செய்து கொடுக்க… கண்மணி தமிழில்.. இப்போது நூற்றுக்கு நூறு… மற்ற மாணவர்களுக்கு அவளே திருத்தம் செய்து கொடுக்க… தமிழ் ஆசிரியருக்கும் வேலை முடிந்திருக்க… அடுத்து மற்ற பாடங்களின் பேப்பரை எடுத்தார்…
கண்மணி அமுதினியை விட தமிழில் இரண்டு மதிப்பெண்கள் முன்னிலையில் இருந்தாள்…
ஆங்கிலம் வரும் போது மட்டும் கண்மணிக்குக்கு கொஞ்சம் உதறல் எடுத்திருக்க… அதில் கண்மணியும் அமுதினியும் ஒரே மதிப்பெண்… அடுத்து மற்ற பாடங்களிலும் அதே போல… கடைசியில் கணக்குப் பாட மதிப்பெண்… கண்மணியின் பயம் அறவே போயிருந்தது… கணக்குப் பாடத்தில் அவளுக்கே தெரியும் என்ன மதிப்பெண் வாங்குவாள் என்று… ஆக மொத்தம் தான் தான் முதல் தரம் என முடிவு செய்தபடி இருக்க
”அமுதினி… கணக்குல 100… அவ வரலைனாலும் எல்லோரும் கை தட்டுங்க…” என அமுதினியின் பேப்பரை மேஜையில் வைத்தவர்… அடுத்தடுத்து மாணவ மாணவிகளுக்கு மதிப்பெண்களை அறிவித்து பேப்பரைக் கொடுக்க… கண்மணியின் கணிதத் தேர்வுத்தாளும் வந்திருக்க… அதில் இருந்த மதிப்பெண்ணைப் பார்த்த தமிழ் ஆசிரியருக்கு அதிர்ச்சி வந்திருக்க… ஆசிரியரின் முகம் பார்த்து கண்மணி முகம் சுருக்கினாள்…
“கண்மணி…நூற்றுக்கு அ.. று.. ப.. து…” எனும் போதே மொத்த வகுப்பும் கண்மணியை ஒரு சேரப் பார்க்க… கண்மணிக்கு அவமானம் பிடுங்கித் தின்ன… அதே நேரம் கண்மணி யோசிக்க ஆரம்பித்திருந்தாள்… கணக்கில் தான் அறுபதா… வாய்ப்பே இல்லையே… எப்படி… வாங்கிப் பார்க்க…
”நூற்றுக்கு நூற்றி நாற்பது” எனப் போட்டு…. 140-80 என அடுத்துப் போட்டு அவளது மொத்த மதிப்பெண் 60 எனப் போட்டிருக்க… அவளுக்கு அந்த மதிப்பெண்ணின் விபரம் புரிந்திருக்க… உடனே தனது வகுப்பாசிரியரிடம் இருந்து பேப்பரை வாங்கிக் கொண்டு தன் கணக்கு டீச்சரை நாடிப் போனாள்…
”இந்த மதிப்பெண்ணை உடனே மாற்ற வேண்டும்… தான் தான் வகுப்பில் முதன் மாணவியாக இருக்க வேண்டும்… அந்த அமுதினி அல்லவா இப்போது முதலிடத்தில் இருக்கிறாள்… இது எவ்வளவு பெரிய அவமானம் தனக்கு… கண்மணிக்கு நாடி நரம்பெல்லாம் துடிக்க… அவமானத்தில் அவள் இரத்தமும் கொதிக்க ஆரம்பித்திருந்தது”
---
”என்ன வாங்க மேடம்… என்ன இந்தப் பக்கம்” பிரபாவதி இலேசான சிரிப்புடன்… அவளுடையை கையில் இருந்த கணக்குப் பேப்பரைப் பார்க்க…
“டீச்சர்… எக்ஸ்ட்ரா கொஸ்டினுக்கு மார்க்கை மைனஸ் பண்ணினா… நூறு தானே வரும்…” எனும் போதே….
பிரபாவதி அமைதியாக இருக்க
”எனக்கு எப்போதுமே சாய்ஸே இல்லாமல் கணக்குப் பரிட்சை எழுதி பழக்கம்… எனக்கு எல்லா கொஸ்டினுக்குமே ஆன்சர் தெரியும்… டைமும் இருந்துச்சு… எழுதுனேன்… நீங்க உங்க நூறு மார்க்குக்கு மட்டும் கரெக்ட் பண்ணி மார்க் போட வேண்டியதுதானே” கண்மணி அதிகப்பிரசங்கியாகப் பேச
“இந்த அதிகப்பிரசிங்கித் தனத்துக்குத்தான் மைனஸ் மார்க்… இனி பண்ண மாட்டதானே… அதுனாலதான்…” என்று முடித்து விட… கண்மணிக்கோ கெஞ்சுதல் என்பதை தன் அகராதியில் இருந்து எப்போதோ நீக்கி விட்ட வார்த்தை… கேவலம் மதிப்பெண்ணுக்காக இந்த பிரபாவதியிடம் கெஞ்சுவதா… வந்து விட்டாள்…
“சரி விடு கண்மணி.. ஆக்சுவலா நீ அமுதினியை விட அதிக மார்க்தான்… சோ சவால்ல அவ ஜெயிச்ச மாதிரி இருந்தாலும்… நீ தோக்கலஒ அதுதான் உண்மை…” என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டு வர… அவளது நண்பர்கள் கூட்டமோ விடவில்லை அவளை
“அது எப்படி கண்மணி… உனக்கும் எங்களுக்கும் தெரியும்… ஸ்கூல்ல இருக்கிறவங்க எல்லோருக்கும் தெரியுமா…. உன் மானம் போனது போனதுதானே… அந்த அமுதினி ஜெயிச்சுட்டா தானே… அவ கிளாஸ்ல சொன்னது மாதிரி கலெக்டர் ஆகப் போறா…” எனச் சொல்ல…
“அவ கலெக்டர் தான் ஆவா… நான் அவளுக்கும் மேல எஜுகேஷன் மினிஸ்டர் ஆகிறேன்” கண்மணியின் குறிகோள்… ஆசிரியர்… ஆடிட்டர்… என்ஜினியர்… என்றெல்லாம் மாறி இப்போது மந்திரி என்ற இடத்தில் வந்து நின்றிருந்தது…
’என்னது மினிஸ்டரா….” நண்பர்கள் அனைவரும் அவளை ஆவென்று பாத்திருக்க… கண்மணியோ பழிவாங்கும் படலத்தில் இறங்கியிருந்தாள்….
“பிரபாவதியோட டிவிஎஸ் ஃபிஃப்டிக்கு இனி பிரேக் கொடுத்திற வேண்டியதுதான் அதோட ப்ரேக்க புடுங்கி…” என வாகனங்கள் நிறுத்தி இருந்த இடத்திற்கு வர… அங்கோ அமுதினியின் தந்தையும்… பிரபாவதி டீச்சரும் பேசிக் கொண்டிருக்க… அவர்களுக்குத் தெரியாமல் மறைவாக நின்றவளுக்கு அவர்கள் பேசுவதையும் கேட்க நேர்ந்தது…
“அமுதுக்கு ஹாஸ்பிட்டல் ட்ரீட்மெண்ட் போயிட்டு இருக்கு ரெண்டு நாள்ள முடிஞ்சிரும்…அப்புறமா ஸ்கூலுக்கு அனுப்புறேன்… அவளுக்கு கடவுள் 3 மாசம்னு தான் கெடு வச்சிருந்தார்… அந்த மூனு மாசமும் முடிஞ்சுருச்சு… இந்த உலகம் அவளை இன்னும் தன்கூட வச்சிருக்கனும்னு ஆசைப்படுது போல… இந்த ஸ்கூல் அவளுக்கு ரொம்ப பிடிச்சுருக்கு மூச்சுக்கு முன்னூறு தடவை இந்த பள்ளிக்கூடம் பற்றிதான் அவளுக்குப் பேச்சா இருக்கும்… கண்மணினா யாரு… அவளை இவளுக்கு ரொம்ப பிடிக்கும் போல… ஸ்கூலைப் பற்றி பேச ஆரம்பிச்ச அவளப் பத்திதான் பாதி இருக்கும்…”
சிரித்தவர்…
“அவளும் ரொம்ப நல்ல பொண்ணுதான்… கொஞ்சம் முரட்டுதனம் சாஸ்தி… “ என்றவர் ஏதோ யோசித்தபடி
“அந்தப் பொண்ணுக்கு அவங்க வீடு சரி இல்லைனு நினைக்கிறேன்… பேரண்ட்ஸ்கிட்ட வளராம பாட்டிகிட்ட வளர்றா… அவங்களும் இவளைக் கண்டுக்கிறது இல்லை… இவ திறமையைத் தெரிஞ்சு அவளை கண்ட்ரோல் பண்ணி… சரியான திசையில வளர்த்தாங்கன்னா வேற லெவல்ல வரும் அந்தப் பொண்ணு… அவளை விடுங்க.. நான் பார்த்துக்கிறேன்… அமுதினியைப் பார்த்துக்கங்க…”
”அமுதுவ ரெஸ்ட் எடுத்துட்டு… மெதுவா வரச் சொல்லுங்க… அப்புறம்… அவகிட்ட சொல்லுங்க… அவதான் ஃபர்ஸ்ட் ரேங்க்னு… கண்மணியை வின் பண்ணிட்டான்னு” எனும் போதே கண்மணியின் கண்களில் இருந்து கண்ணீர் வர ஆரம்பித்திருக்க… அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டாள்…
வாழ்க்கையில் முதன் முதலாக அவளது அழுகை மன உணர்வுகளோடு சம்பந்தப்பட்டு வந்த நிகழ்வு… அன்றுதான் கண்மணிக்கு நடந்தது
வாழ்க்கையில் கல்வி, செல்வம், வீரம், அழகு மட்டுமல்ல… நோயற்ற வாழ்வும் முக்கியம் என்பதைக் கண்மணி உணர்ந்த தருணம் அந்த தருணம்… அது மட்டுமல்ல… தான் பார்க்கும் மனிதர் முகமும்… அதன் பின் இருக்கும் முகமும் வேறு வேறு என்பதையும் உணர்ந்த தருணம்…
பிரபாவதியிடம் அடுத்த நாளே சென்றிருந்தாள் கண்மணி… தன் செயல்கள் எல்லாவற்றுக்கும் மன்னிப்பும் கேட்டவள்… அமுதினியைப் பற்றியும் விசாரிக்க… பிரபாவதி பெரிதாக சொல்லாவிட்டாலும்
”அமுதினியின் ஆயுட்காலம் இன்னும் சில மாதங்களுக்கே…” பிரபாவதி சொல்லி விட்டார்… அதுகூட கண்மணிக்குத் தெரிந்து விட்டதால் மட்டுமே சொல்ல.. கண்மணியால் தாங்கவே முடியவில்லை…
”இன்னொரு விசயம் அமுதுக்கே தெரியாது… பார்த்து நடந்துக்கோ” என்ற பிரபாவதியிடம் தலை ஆட்டியவளிடம்
”இருக்கிற கொஞ்ச நாளைக்கு அவ ஃப்ரெண்டா இரு…” பிரபாவது கேட்க
“இல்ல டீச்சர்… என்னால முடியாது…. நான் இப்படியே விலகி நின்னுக்கிறேன்… ஆனால் அவ எப்போதுமே இந்த ஸ்கூல்ல ஃபர்ஸ்ட் ரேங்க் தான்…” என்றவளின் குணங்கள் ஒரே அடியாக மாறா விட்டாலும் முதலில் இருந்தது போல் யாரையும் எடுத்தெரிந்தெல்லாம் பேசவில்லை…
அதே போல அமுதினியை விட்டு விலகியே இருந்தாலும்…. அவளின் குணங்கள் அவளுக்கு ஆச்சரியமே… படிப்பும்… அழகும்… பணம் மட்டுமல்ல அவளின் சாந்தமான குணமும்… பொறுமையும் அவளுக்கு அழகு சேர்க்கிறது என்பதையும் கண்டுகொண்டாள் கண்மணி…
இப்படிப்பட்ட ஒரு பெண்ணுக்கு இந்த உலகில் இடமில்லையா… நினைக்கும் போதே மனம் வலிக்க ஆரம்பித்தது கண்மணிக்கு…. ஒருநாள் உடம்பு சரி இல்லை என விடுமுறை எடுத்த அமுதினி… அதன் பின் வரவேயில்லை… தினமும் அவளுக்காக அவர்கள் பள்ளியின் வழிப்பாட்டுக் கூட்டத்தில் வேண்டுதல் நடக்கும்… ஏனோ அத்தனை பேரின் கூட்டு வழிபாடு கூட அமுதினியைக் காப்பாற்றவில்லை… கடைசியில் வேண்டுதல் அஞ்சலியாக மாறி இருந்தது…
“அமுதினியை நமக்குப் பிடிச்ச மாதிரியே கடவுளுக்கும் பிடிச்சிருச்சு கண்மணி… அமுதினி அவர்கிட்ட சந்தோசமா இருப்பா…”
கணக்கு டீச்சர் பிரபாவதிதான் கண்மணியைத் தேற்றினார்….
அது மட்டுமல்ல கண்மணியைப் பற்றியும் விசாரிக்க ஆரம்பித்தார்… கண்மணியின் பெற்றோர் பற்றி ஒழுங்கானத் தகவல் கிடைக்காமல் போக… கண்மணியிடம் கேட்க… அவள் சொல்வதிலும் முன்னுக்கு பின்னாக முரணாக இருந்தது… அவருக்கு திருப்தி வராமல் போக… கந்தம்மாளைக் கூப்பிட்டு விசாரிக்க… கந்தம்மாளும் முதலில் எப்போதும் போல பொய்தான் சொன்னார்…
“கண்மணி அவங்க அம்மா டாக்டர்னு சொல்றா… அப்புறம் எப்படி இப்படி… இங்க இருப்பா… உண்மையைச் சொல்லுங்க… இல்லை…” என மிரட்ட வேறு வழி இல்லாமல்… கண்மணியைப் பற்றி உண்மையைச் சொல்ல….
கண்மணியின் தாய் இறந்தது கூடத் தெரியாமல் வளர்ந்து வருகிறாளா… அதைவிட தந்தை இருந்தும் அநாதை என்ற நிலையா… பிராபாவதிக்கு அதிர்ச்சியே
பிரபாவதி அதன் பின் கண்மணியை தன் பிள்ளைப்போல பார்க்க ஆரம்பித்தார்தான்.. ஆனாலும் குருவின் இடத்தில் இருந்து என்ன கொடுக்க முடியுமோ அதைத்தான் கொடுக்க முடிந்தது…
மெல்ல பிரபாவதியின் வார்த்தைகளை கண்மணி கேட்க ஆரம்பித்திருக்க… அவளின் குணமும் நேர்படத் தொடங்கியது… காட்டாற்று வெள்ளத்தை பிரபாவதி நெறிப்படுத்த ஆரம்பித்திருக்க… கண்மணியும் நல்ல குணங்களோடு வளரத் தொடங்கினாள்…. ஆனால் காட்டாற்று நீரை எப்படி கட்டுப்படுத்தினாலும்… அது சங்கமிக்கும் கடலை நோக்கி போகாமல் நிறுத்தி வைக்க முடியுமா…. கண்மணியும் அவள் தந்தை நட்ராஜை தேடிச்செல்லும் காலமும் வந்தது….
அரையாண்டு விடுமுறை நாட்கள் ஆரம்பித்திருக்க… கண்மணி விடுமுறையை தன் நண்பர்களோடு கொண்டாடிக் கொண்டும்… ஒரு புறம் கந்தம்மாளிடம் அடி வாங்கிக் கொண்டும் தன் விடுமுறையைக் செலவழித்துக் கொண்டிருந்தாள்…
அன்று டிசம்பர் 31…
‘கண்மணி நாளைக்கு உனக்கு பத்தாவது பிறந்த நாள்… எப்படியாச்சும்… கெழவிகிட்ட இந்த தடவைனாலும் பால்பாயசம் பண்ணிக் கொடுக்கச் சொல்லனும்… சாக்லேட் வாங்கி சாப்பிடனும்….” தனக்குள் எண்ணியபடியே படுத்தவள் அதே நினைவோடு காலையிலும் எழ…
எழுந்தவள்… கந்தம்மாளை நோக்கிப் போக….
அங்கோ கந்தம்மாள் வாயிலும் வயிற்றிலும் அடித்தபடி அழுது கொண்டிருக்க… மொத்த சேரி மக்களும் அங்கு கூடி இருந்தனர்
“ஏன் கந்தம்மாள்… உன் பிள்ளைக்கு இப்போ என்ன ஆச்சு…. முடியாமல் ஐசியூ ல இருக்கான்னுதானே சொல்லிருக்காங்க… போய்ப் பார்க்கிறதை விட்டுட்டு ஏன் இப்படி அழுது ஒப்பாரி வச்சுட்டு இருக்க”
”ஏம்மா கண்மணி… கெளம்பு… கந்தம்மாளைக் கூட்டிட்டு கெளம்பு” என ஒரு ஆட்டோவைப் பிடித்து அனுப்பி இருக்க…
கந்தம்மாளும் மருது சொன்ன விசயத்தைக் கேட்டு மகனைப் பற்றிய கவலையில்… கண்மணியை மறந்தவளாக… கண்மணியோடு நட்ராஜ் சேர்க்கப்பட்டிருந்த மருத்துவமனையை நோக்கிப் போனார்…
Rowdy baby
Ana appa va parka pogama irundrunda kanmainiku ivlo kastam ila to hoom
Raj ku
Namma kanmani school days la ivlo aratha? Conversations lam superb sis..
Nice update
Nice epi. But 5th std padikkumpothe iuvalavu pillaingalluku panna theriyuma? Edho collage ragging madhiri irukku. Next epi yoda fb mudichiduma.
Arumaiyana ud. Kanmani semma, mass ah irukka. Amuthini varavu avala konjam matri irukku.
இது படிக்கும் போது என்னோட childhood ஞாபகம் வந்துட்டுது.நானும் இப்படி தான் maths exam la choice விடாம ஆர்வ கோளாருல பன்னி வசசிருவேன்.very nice epi kanmani FB ok but rishi ya romba miss pannurom.seekirama FB mudichu present ku vaanga madam.
Amuthini- even if its a small part the impact behind her🔥🔥🔥Nys jii.. RK n her life is just a mystery jii.
Nice sis👌👌 but missing Rishi badly... Epayum unga Ela Stories layum heroine tan score panuvanga but ithula Rishi 😍 Semmaya score pandran Theda vaikuran.. waiting for RK♥️
Nice
Next ud marudhu kanmani fb ya siss