/* ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
நாம கண்மணி கதைதான் படிச்சுட்டு இருக்கோம்... ஞாபகத்தில இருக்கட்டும்... ராஜ் பவித்ரா கண்மணி எழுதுற கதைல நாயக நாயகி... நாம அங்கிருந்து சுட்டதுதான்...
கண்மணியோட அப்பாவா பார்த்த நட்ராஜ்..... ரிஷி மாமனாரா பார்த்த நட்ராஜ்... பவித்ராவின் ராஜ்ஜா எப்படி... படிச்சுட்டு சொல்லுங்க...
நாளை அடுத்த அப்டேட் 89-3
நன்றி
பிரவீணா...*/
அத்தியாயம் 89-2
/*உன்னைப் போன்ற
பெண்ணை கண்ணால்
பார்த்ததில்லை உன்னையன்றி
யாரும் பெண்ணாய் தோன்றவில்லை
ஒரு காதல்
என்பது உன் நெஞ்சில்
உள்ளது உன் நெஞ்சில்
உள்ளது கண்ணில்
வந்ததடி*/
ராஜ் தங்கள் ஏரியாவின் வழியே வரும் போதே… வழியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிருத்திகாவின் காரைப் பார்த்தபடியேதான் தங்கள் வீட்டிற்கு வந்தான்…
“கிருத்திதான் வந்திருக்காளே… நம்மள எதுக்கு வரச் சொல்லிருக்கா” என யோசித்தபடியே… வண்டியை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் வர… ஹாலில் அமர்ந்திருந்தாள் கிருத்திகாவும்
அவளும் நட்ராஜைப் பார்த்தவளாக… பெரிதாக புன்னகைத்தவளாக….
“ஹாய் மாம்ஸ்… என்ன இந்த நேரத்துல..” உற்சாகமாக வரவேற்றவள்… சட்டென்று தன் சத்தத்தின் அளவைக் குறைத்து சன்னமான குரலில்…
“நான் வந்துருப்பேன்னு தெரிஞ்சு… என்னைப் பார்க்கத்தானே மாம்ஸ் வந்தீங்க” என்றபோதே….
“ஓய்… கொன்னுருவேன்… சைலன்டா பேசினாலும் என் காதுக்கு வந்துரும்…” என பவித்ரா… கிருத்தியை சமையலறையில் இருந்தபடியே எச்சரிக்கை செய்ய…
இது வழக்கமாய் நடக்கும் சம்பவம் தான்…. ராஜ் கிருத்தியையும் கண்டு கொள்ளாமல்… கிருத்திகாவுக்கான பவித்ராவின் அர்ச்சனைகளையும் கண்டு கொள்ளாமல் நேராக சமையறைக்குள் நுழைந்தவன்…
“ஹாய்…. பொண்டாட்டி… அப்டி என்ன அவசரம்டி… என்ன வச்சுருக்க… வரச்சொன்னதுதான் சொன்ன… கூடவே கரடியையும் வச்சுக்கிட்டு வரச் சொல்லிருக்க “ வேகமாக பவித்ராவைப் பின்புறமாகக் கட்டிக் கொள்ள… பவித்ராவும் அவன் மார்பில் சாய்ந்தபடியே…
“ராஜ்…” என்று குழைந்தவளிடம்
“செகண்ட் ஷிஃப்ட்னா கிருத்தியை வரச்சொல்லித்தானே போவ… இன்னைக்கு என்ன… திடீர்னு ராஜ் ஞாபகம்” என்று கரகரத்த குரலில் மனைவியின் கன்னத்தில் முத்தம் வைத்த போதே…
“ஹலோ… ரொமான்ஸ்லாம் கொஞ்சம் சைலண்ட் மோட்ல பண்ணுங்க மாம்ஸ்… ஹால்ல ஆடியன்ஸ் உட்கார்ந்திருக்கோம்னு சாரி சாரி கரடிலாம் இருக்குதுனு தெரியுதுதானே…” கிருத்திகா வரவேற்பறையில் இருந்தபடியே அவர்கள் இருவரையும் ஓட்ட ஆரம்பித்திருக்க…
“வேணும்னா நீ காதைப் பொத்திகோ” ராஜ் இங்கிருந்தே கிருத்திகாவுக்கு சொல்ல
பவித்ராவும்
“எங்க சைட்ல இருந்து ம்யூட் சான்ஸே இல்லடி…” என்றபோதே
கிருத்திகா சமையலறைக்குள் வந்திருக்க…. பவித்ராவும் பதறவில்லை… ராஜும் பதறவில்லை… ஏன் நட்ராஜ் கூட தன் மனைவியையும் விட்டு விலகாமல் நின்றிருக்க
“டேய் ரொம்ப பண்ணாதீங்கடா…. இந்த அறியாப் பொண்ணோட சாபத்தை எல்லாம் வாங்கிக்காதீங்க….” என பெரு மூச்சு விட்டபோதே
”ஏன்டி… உங்க அம்மா மாப்பிள்ளை ஃபோட்டோஸ் எல்லாம் அனுப்பி பார்க்கச் சொன்னால் ரொம்ப பிகு பண்றியாமே… எங்களைப் பார்த்து கூட உனக்கு மேரேஜ் பண்ணிக்கனும்னு ஆசை இல்லையா…” பவித்ரா இப்போது கணவனை விட்டு விலகி… தட்டில் தயிர் சாதத்தைப் போட்டபடியே… அவளது கணவனுக்கு முதல் கவளத்தை எடுத்து ஊட்ட… ராஜும் வாங்கியபடியே… தோழியரின் பேச்சில் கவனம் வைத்தான்…
“உங்களைப் பார்த்து மேரேஜ் பண்ணிக்கனும்னு ஆசை வருதுதான்…. “ ஆனால் என நட்ராஜைப் பார்த்தபடியே இழுக்க…
“என்ன… ஆனால்… உனக்கென்ன பிரச்சனை கல்யாணம் பண்ணிக்க…” இப்போது ராஜ் கேட்க…
“மாம்ஸ்… அதெல்லாம் மேரேஜ்லாம் பிரச்சனை இல்லை… நாளைக்கே பண்ணிக்கிறேன்… உனக்கு ஓகே வா … இவளைக் கட்டிட்டு தயிர்சாதம்தான் உனக்கு மிச்சம்… பேசாமல் என்னைக் கட்டிக்கோயேன்… சிக்கன்… மட்டன்… நண்டு… இறா… மீன்… கருவாடுன்னு வகை வகையா இறக்குறேன்….” எனும் போதே ராஜுக்கு புரையேறி இருக்க…
பவித்ரா அவன் தலையில் தட்டியபடியே
“மேடம்… நாங்க எங்க எப்போ எப்படி எந்த மாதிரி நான் – வெஜ் என் புருசனுக்கு கொடுக்கனுமோ அப்படி கொடுத்து சமாளிச்சிப்போம்… நீங்க கவலைப்பட வேண்டாம்… உங்க வழியைப் பார்த்துட்டு போங்க… ” என்றபடியே தன் கணவனிடம்
“ராஜ்… கண்ணு முன்னாடியே ஒருத்தி உன்னை சைட் அடிச்சுட்டு இருக்காளே… அப்போ என் கண்ணுக்குத் தெரியாமல் எத்தனை பேர் என் புருசனை சைட் அடிக்கிறாங்களோ… முதல்ல நீ இந்த சட்டை பட்டனைப் போடு…” என கணவனுக்கு அறிவுரை கூறிக்கொண்டு இருக்கும் போதே
”ஏண்டி… என்னை வரச்சொல்லிட்டு… ராஜையும் வரச்சொல்லிருக்க… இப்போ ஹாஸ்பிட்டலுக்கு வர்றியா வரலையா… அதைச் சொல்லு…” என கிருத்திகா விளையாட்டுத்தனத்தை விட்டு விட்டு கேட்க
பவித்ரா சிறு வெட்கப்புன்னகையோடு…
“ஏன் எதுக்குனு சொல்லிட்டுத்தான் ராஜை நான் வரச்சொல்லனுமா… பார்க்கனும்னு தோணுச்சு… அவர்தான் என்னை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போகனும்னு தோணுச்சு… அவர் கூடப் போகப் போறேன்…”
“அடிப்பாவி…. உன்னை… இதுல வெட்கம் வெங்காயம் வேற…” என கிருத்திகா அவளை அடிக்கப் போக… பவித்ரா… வேகமாக ஓடிப் போய் தன் கணவனின் பின் மறைந்து கொள்ள… ராஜும் தன் மனைவியை அவளிடமிருந்து பாதுகாத்திருக்க
”யப்பா இவர் வேற… பொண்டாட்டியை விட்டுக் கொடுக்கமாட்டாரு… என்னமோ பண்ணித் தொலைங்க… சரி நான் போறேன்… நீ வந்து சேரு” என கிருத்திகா கிளம்பும் போதே
“ஏய் ஏய்… லூசு… இரு இரு… நெக்ஸ்ட் ஸ்ட்ரீட்ல ஒரு மார்க்கெட் இருக்குதானே… அங்க ஒரு ஃபேன்ஸி ஸ்டோரு இருக்குதானே… அங்க வெயிட் பண்ணு… வர்றேன்” என்று கிருத்திகாவையும் போக விடாமல் பவித்ரா கட்டளையிட
”சரி வந்து தொலை…. வெயிட் பண்றேன்… உனக்கு ஃப்ரெண்டா ஆனதுக்கு இன்னும் என்னவெல்லாம் பண்ணித் தொலையனுமோ” எனத் தோழியிடம் பொய்க்கோபம் காட்டியபடி…. நட்ராஜின் தோளை உரிமையோடு இடித்தவளாக…
“மாம்ஸ்… ஜாலியா பைக் ரைட் நாம ரெண்டு பேரும் எப்போ போகலாம்… ரொம்ப நாளா பைக் வாங்கினதுலருந்து வெயிட்டிங்” எனக் கண்சிமிட்டிக் கேட்க
”ஏய்… என் பொண்டாட்டியை கொலகாரியா ஆக்கனும்னே கங்கணம் கட்டிட்டு திரியுற போல நீ… ஓடிப் போயிரு” கிருத்தியிடம் ராஜ் சொல்லிக் கொண்டிருக்கும் போதே…
“நீயும் வா… சேர்ந்தே ஓடிப் போகலாம் மாம்ஸ்... லவ் யூ மாம்ஸ்” எனும் போதே…
“அடங்கவே மாட்டியா நீ” எனச் சிரித்த ராஜ்ஜிடம்…
“ஒகே பை… பை… இன்னைக்கு இவ்ளோ போதும் “ என கலகலத்தபடி சொன்னவளின் கண்ணில் அந்த மாமரக் கன்று பட….
“ஹேய்ய்ய்ய் பவி… இந்த மாமரம் சின்ன குருத்து விட்ருக்குடி… பாரு… பாரு…” கிருத்திகா உற்சாகமாக சொன்னபடி அந்த மாமரக் கன்றின் அருகே துள்ளிக் குதித்துப் போக
”பார்த்தேன்… பார்த்தேன்…” என்றவளின் கண்கள் தோழியிடம் இல்லாமல்… அவளது கணவனிடம் ரகசியப் பாஷை பேச… ராஜும் உணர்ந்தான் தான்… இவனும் பார்வையாலே என்னவென்று கேட்க….
அழகாய் வெட்கப்பட்டவளாக குனிய… ராஜும் தன் மனைவியின் அழகில் மயங்கிப் போய் நின்ற போதே…
“அண்ணே” எனக் குரல் கேட்க… அங்கு வந்து நின்றதோ மருது…
“டேய் நீ எங்க இங்க… அதான் அப்போவே சொன்னேனே…. வேலை எல்லாம் கிடையாதுன்னு” என ராஜ் கடுங்குரலில் விரட்ட
பவித்ராவும்… கிருத்தியும் இப்போது அந்தச் சிறுவனைப் பார்த்தபடியே
“என்னாச்சு ராஜ்” எனக் கேட்க… ராஜ் நடந்தவற்றை விவரிக்க….
“ஏண்டா ஸ்கூல் போற வயசுல… வேலை எதுக்கு உனக்கு…”
“இந்த வயித்துக்குத்தான்… வேற எதுக்குக்கா… அதுமட்டுமில்லாமல் படிப்பு வந்தால் நான் ஏன் படிக்காமல் இங்க வர்றேன்… படிப்பு சோறு போடாதுன்னு தெரிஞ்சு போச்சு… அட்லீஸ்ட் கைத்தொழிலாவது உதவும்னுதான்” என மருது அந்த வயதுக்கு மீறிய தெளிவோடு… அழகாக பேச
“என்ன வயசுடா” பவித்ரா கேட்க
“12னு நினைக்கிறேன்… பிறந்த நாள் சொல்றதுக்கு அம்மா அப்பாலாம் இல்லை… குத்து மதிப்பா நானே கணக்குப் பண்ணி சொல்றதுதான்….” மருது அந்த இளம் வயதிலும் தெளிவாகப் பேச ஏனோ பவித்ராவுக்கு அவனைப் பிடித்துப் போக
“அண்ணே பைக்கைப் பார்த்து அவரைப் ஃபாளோ பண்ணிட்டே இருந்தேன்… அவரே ஷெட் வச்சுருக்கிறதைப் பார்த்தேன்… யக்கா ஏதாவது வேலை கொடுக்கச் சொல்லு… நான் சீக்கிரமா கத்துக்கிருவேன்…. ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாம இருக்கேன்…” பரிதாபமாகச் சொல்ல… பவித்ரா கிருத்திகா இருவரின் முகமுமே அந்தச் சிறுவனின் மீதான பரிதாபத்தை ஒட்டிக் கொண்டிருக்க
“ராஜ்… பார்க்க பாவமா இருக்கு… சேர்த்துக்க வேண்டியதுதானே… ” பவித்ரா சொன்னபோதே ராஜ் முறைக்க…
“டேய்… விட்றா அவர் வேலை போட்டுத் தரலைனா என்ன… நீ ஒண்ணு பண்ணு…. எனக்கு ஹெல்ப்பா ஒரு ரெண்டு வருசம் இங்க இரு… அப்போப்ப ஷெட்டுக்கும் போ…. உனக்கும் ஓரளவு வயசு வந்திருக்கும்… அப்புறமா இவர்கிட்ட வேலை வாங்கித் தரேன் ” என்ற போதே
“சரிக்கா சரிக்கா… இப்போ நான் என்ன பண்ணனும்… இந்த தோட்டத்தை சரி பண்ணிடறேன்… காலைல சாயங்காலம் தண்ணி ஊத்தறேன்… உனக்கு காய் வாங்கித்தாறேன்… அப்புறம் வீடெல்லாம் சுத்தமா வச்சுக்கறேன்… எனக்கு சமைக்கக் கூடத் தெரியும்… அப்புறம் நான் நல்லா கானா பாட்டு பாடுவேன்… அப்புறம்… குத்தாட்டம் கூட ஆடுவேன்… எங்க ஏரியால ஒரு பொணம் கூட என் டான்ஸ் இல்லாமல் குழிக்குள்ள போகாது.. உனக்கு எண்டர்டெயின்மெண்ட்… குக்கிங்…. செக்யூரிட்டி... ஹெல்ப்பிங் எல்லாத்துக்குமே நான் கேரண்டி…” எனும் போதே… கிருத்திகா இடையில் வந்து
“சமைப்பேன்னு சொல்றேல… நான் -வெஜ்… அதாவது அசைவம் சமைக்கத் தெரியுமா” எனக் கேட்க
“சூப்பரா தெரியும்க்கா… என்கூட ப்ளாட்ஃபார்ம்ல இருக்கிற மக்கள்கிட்ட வந்து கேட்டுப் பாரு” என மருது சொல்ல
பவித்ராவுக்கு மருதுவின் துருதுரு பேச்சு… அவனின் பாவனை எல்லாம் மிகவும் பிடித்துப் போக… கிருத்திகாவுக்கோ… அவன் சமைக்கத் தெரியும் என்று சொன்னாதாலேயே மிகவும் பிடித்துப் போயிருந்தது…
“தெரிஞ்சோ தெரியாமலோ… உன் லவ்வுக்கு நான் துணை போய்…. பாவம் ராஜ் வயித்துல அடிச்சுட்டோன்னு எனக்கு ரொம்ப நாளா தூக்கம் இல்லடி… இன்னைக்குத்தான் எனக்கு விடிவு காலம் வந்திருக்கு” என பெருமூச்சு விட்டவளாக அந்த நேரத்திலும் தன் தோழியை வாற… தன் தோழியின் முதுகில் செல்ல அடி அடித்தவளாக…
”ராஜ்… பார்த்தால் பாவமா இருக்கு… ஆனால் இவன்கிட்ட ஒரு ஸ்பார்க் இருக்கு ராஜ்… கண்டிப்பா பெரியா ஆளா வருவான் ராஜ்… ப்ளீஸ்… நம்ம கூடவே இருக்கட்டுமே… ப்ளீஸ் ப்ளீஸ் “ என கணவனிடம் மருதுவுக்காக சிபாரிசு செய்ய.. மனைவி கெஞ்சினால்… நட்ராஜ் மீறுவானா என்ன… இருந்தும்
“கொஞ்ச நாள் பார்த்துட்டு சொல்றேன்…. ஆனால் எனக்குப் பிடிக்கலைனா… அதுக்கபுறம் கட்டாயப்படுத்தக் கூடாது” என்றவன்…
“டேய் கிளம்பு… நான் உன்னை ஷெட்ல வந்து பார்க்கிறேன்… கிருத்தி நீயும் கிளம்பு” என இருவரையும் கிளப்பியவனாக… ஏதோ ஒரு ஞாபகம் வந்தவனாக
”பேர் என்ன சொன்ன…” ராஜ் அவனைக் கேட்க
“மருது… “ என சொன்னவனிடம்
“சரி சரி… இப்போ ஷெட்டுக்கு போ… வாசு இருப்பான்… உனக்கு என்ன வேலை கொடுக்கனுமோ… அதைக் கொடுப்பான்…. “ என அவனை கிளம்பச் சொல்ல… சந்தோசத்துடன் மருது அங்கிருந்து சென்றான்…
போகும் போதே… அருகில் நின்றிருந்த நட்ராஜின் பைக்கை ஆசையோடு தொட்டுப் பார்த்தபடியே செல்ல…
கிருத்திகாவும் அவனருகில் சென்றவனாக
“என்ன இந்த பைக் மேல ஒரு கண்ணா….” எனும் போதே… மருது பதிலேதும் பேசாமல் சென்று விட… இப்போது கிருத்திகா அந்த பைக்கைப் பார்த்தபடியே… அதில் இருந்த எழுத்தைப் பார்த்தபடியே
“ஏய் பவி… இது என்னடி… வெறும் ’R’ னு மட்டும் போட்ருக்க… ‘RP’ போடலையா…” என்ற போதே
“R லயே P யும் இருக்குதானே… அதை எதுக்கு ரெண்டு லெட்டரா பிரிக்கனும்… லெட்டர்ல கூட பாரு நானும் என் ராஜும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு” என்றபோதே
“ஷ்… ஷப்பா.. கண்ணைக் கட்டுதுடி… ராஜ் மேல உன் காதல் பைத்தியம் எப்போ குறையுமோ….”
“அதெல்லாம் ஒன்லி இன்கிரீசிங் மோட்தான்… உனக்கு என்னடி பிரச்சனை…. “ என்ற பவித்ராவிடம்…
“சரி விடு… உன் ராஜை நீயே வச்சுக்க…” எனும் போதே பவித்ரா முகம் புன்னகையில் பெரிதாக மலர… விடுவாளா கிருத்திகா
“ஆனால் அந்த ’நட்’ வேணும்னா நான் வச்சுக்கிறேன்…” அவள் சொல்லும் போதே பவித்ராவின் முகம் சுருங்கி இருக்க…
“ஏய் என்ன நெனச்சுட்டு இருக்க நீ… வீட்டுப் பக்கமே வர விடமாட்டேன்… சும்மா ராஜ் இவளை எப்படியாவது யார்கிட்டனாலும் பிடிச்சுக் கொடுத்துரனும்… டென்சன் பண்றா… பாரு “
“அதுசரி… நான் தான் நட்ராஜை முதல்ல பார்த்தேன்… கொஞ்சம் டைமிங் மிஸ் ஆனதுல நீ கரெக்ட் பண்ணிட்ட… உன் லவ்வுக்கு நான் தூது போக வேண்டியதாகிருச்சு... சரி அதை விடு…” என்றவள்…
அந்த பைக்கில் இருந்த ஸ்டிக்கரைப் பார்த்தபடியே
”இந்த ‘R’ க்கு பக்கத்தில ’K’ லெட்டர ஒட்டிரு… ‘R K’ சூப்பரா இருக்குதானே இதுதான் அம்சமா இருக்கு…. சொல்றதுக்கும் கேட்கிறதுக்கும் பார்க்கிறதுக்கும்… எல்லாத்துக்குமே… என்ன சொன்ன என்ன சொன்ன…” என பவித்ராவைப் பார்த்தவள்
“’’R’ லயே ‘P’ இருக்கா… ‘K’ ஸ்மால் லெட்டர் அப்படியே ‘R’ ஐ ரெப்லிகேட் பண்ணும்… என்ன ஒரு பொருத்தம்… R ல P கொண்டு வர்றதுக்க்கு… கோட்டை அழிக்கனும்… அது நெகட்டிவிட்டி ஆனால் ஸ்மால் K கொண்டு வர்றதுக்கு ஜஸ்ட் ஒரு கோட்டை மேல நோக்கி இழுக்கனும்… இது பாஸிட்டிவிட்டி… அப்போ எந்த பேர் பெஸ்ட்” எனும் போதே பவித்ராவின் முகம் வாட ஆரம்பித்து இருக்க… கண்கள் கூட கலங்கி இருக்க… அவ்வளவுதான் கிருத்திகா தன் விளையாட்டுத்தனத்தை நிறுத்தியவளாக…
“லூசு… சும்மா விளையாண்டேண்டி… ராஜ்… இந்த லூசைப் பாருங்க… ” எனத் தோழியைக் கட்டிக் கொள்ள…
“சும்மா கூட இப்படிலாம் பேசாத கிருத்தி… நான் தான் எப்போதுமே ராஜ்க்கு பெஸ்ட்… “
”இதெல்லாம் வச்சுக்கிட்டு எப்படி ராஜ் குடும்பம் நடத்துறீங்க…. அழுமூஞ்சி” என்றவளிடம்
“அம்மா தாயே கெளம்பு… என் பொண்டாட்டிய அழ வச்சுட்டதானே… போதுமா… அழுமூஞ்சியா இருந்தா என்ன… எப்படி இருந்தால் என்ன… அவ என் பவி… நான் பார்த்துக்கிறேன்… போ போ வழி அந்தப் பக்கம் “ என்றபடி பவித்ராவை அணைத்துக் கொள்ள
“RP தான் பெஸ்ட்னு நெனச்சுட்டு இருந்தேன்… இவ RK தான் பெஸ்ட்டுனு சொல்லிட்டா… ஆனால் அவ சொல்றதும் லாஜிக்கா கரெக்ட்தானே” என்றவளின் சிறுபிள்ளைத்தனமான அழுகையில்… கிருத்திகாவே லேசாக பயந்தவளாக
”ராஜ்… ஏதாவது ஜிகினா வேலை செஞ்சு என் ஃப்ரெண்டை சரி பண்ணிருங்க… அவளைக் கண்கலங்காமல் வச்சுப் பார்த்துக்கிறேன்னு என்கிட்ட ப்ராமிஸ் பண்ணிருக்கீங்க…” என்று நட்ராஜைப் பார்த்து ஆணையிட… நட்ராஜ் அவளைப் பார்த்து முறைக்க..
“எஸ்கேப் கிருத்தி” என்றபடி கிருத்திகா அங்கிருந்து சென்று விட…
”ஏண்டி நீயெல்லாம் ஒரு டாக்டராடி… இந்த கிறுக்குத்தனத்தையெல்லாம் பார்த்தா எவனும் நம்ப மாட்டான்” என ராஜ் பொய்க்கோபத்தோடு அவளைத் திட்ட ஆரம்பித்த போதே…
“அவ லாஜிக்கா கரெக்டா சொல்லிட்டாளே…” பவித்ரா அங்கேயே நிறக
“அதுக்கு என்ன பண்ண முடியும்… அதுக்காக உன் பேரை K ல இனிமேல மாத்த முடியுமா…” அவளைத் தன்னோடு அணைத்தபடி குறுநகையோடு தேற்றியவனிடம்… இன்னும் ஒன்றியபடி பவித்ரா விசும்ப
“சரி விடு… இப்போ என்ன உன் பேர் என்னவா இருந்தால் என்ன… கண்ணே மணியே கொஞ்சிட்டா போச்சு… போதுமா” எனக் கண்சிமிட்டியவனிடம்… அப்போதும் பவித்ரா சமாதானமடையாமல் இருக்க
”நாராயணன் நல்ல புள்ளையை பெத்து என் கைல கொடுத்துட்டு போயிருக்காரு… அழுமூஞ்சி.. “ எனக் கிண்டல் செய்ய
“என் அப்பாவைப் பத்தி பேசுன… அவர் ஒண்ணும் உன் கைல என்னைப் பிடிச்சுக் கொடுக்கலை… நானேதான் வந்தேன்….” என்று சண்டைக்கு வருவது போல அவன் முன் நிற்க…
“இது என் பவி… போகலாமா… கதவைப் பூட்டிட்டு வர்றேன்” என்றபடி வீட்டை நோக்கிப் போக… பவித்ராவோ… இன்னும் அந்த எழுத்துகளின் தொடர்புகளில் இருந்து வெளியே வர முடியவில்லை… பைக்கில் இருந்த ‘ஆர்’ எழுத்தையே வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள்…
“ஏண்டி… என்னாச்சு… வழக்கமா… அவரைப் போய்ப் பார்த்தியா… இவனைப் போய்ப் பார்த்தியா… இங்க உன் மாடல் டெமோ கொடுக்கச் சொன்னாங்க… அங்க உன்னை வரச்சொன்னாங்க… அன்னைக்கு போன டெமோக்கு பதில் வந்துச்சான்னு…. இப்படித்தானே இருக்கும்… இன்னைக்கு வேற லெவல்ல இருக்க…” ராஜ் வேண்டுமென்றே தன் மனைவியைச் சீண்ட… முறைத்த பவித்ரா
“வண்டியை எடுடா… அப்டியே இவர் ரொமான்ஸ் பண்றதுக்கே நாங்க விட்டதில்லை…” மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டவள்
“ரொமான்ஸ் பண்ணாமத்தான்…. இன்னைக்கு ரிசல்ட் வந்திருக்கு” தனக்குள் முணுமுணுக்க… அவள் கணவனுக்கு அது காதில் விழவில்லை….
வண்டியில் ஏறியவள்… அவனிடம் பேசிக் கொண்டே வர…. ராஜும் மனைவியின் வார்த்தைகளில் மட்டுமே கவனம் வைத்தவனாக… அவளுக்கு பதில் சொல்லிக் கொண்டே வர… அவர்களின் பயணம் தொடர்ந்தது
---
பவித்ரா பேசிக் கொண்டே வந்து கொண்டிருக்க…. நட்ராஜின் கவனம் சாலையில் இருந்து முற்றிலும் விலகி… மனைவியின் வார்த்தைகளில் மட்டுமே இருக்க… அதன் விளைவு…. முன்னால் சென்ற பைக்கில் மோதப் போய்… எப்படியோ… திருப்பி… மீண்டும் சாலையில் நட்ராஜ் விட்டிருக்க
“சாவுகிராக்கி… பொண்ணு பின்னாடி இருந்தால் கண்ணு முன்னாடி இருக்காதா… நீ உன் குடும்பத்தோட மேலோகம் போய்ச்சேரு… அதுக்கு ஏண்டா என்னையும் இழுக்கிற…” என்று நட்ராஜ் மோதிய பைக்காரன் தன் வண்டியை ஓட்டியபடியே போகிற போக்கில் நட்ராஜைத் அர்சித்து விட்டு போக… பவித்ரா அதை எல்லாம் கவனிக்கிற நிலைமையில் இல்லை
“ராஜ்.. அவன் யாரு… என்ன சொல்லிட்டு போறான்… நான் சொல்றதை கேளுங்க…” என பவித்ரா பேச ஆரம்பிக்க
“கேட்கிறேன்மா… கேட்டுட்டுத்தான் வந்துட்டு இருக்கேன் சொல்லு சொல்லு… “ என்றவன்… எவன் திட்டினால் என்ன… மீண்டும் மனைவியின் வார்த்தைகளில் முழுவதுமாக கவனம் வைக்க… அங்கங்கே மீண்டும் தடுமாறினான் தான் நட்ராஜ்…. இருந்தும் மனைவியை பேசவேண்டாம் என்று சொல்லவே இல்லை… அதன் பின் பிரதான சாலையில் இருந்து தெருவுக்குள் அவன் பைக் நுழைந்திருக்க… அப்போது… ஒரு நடுத்தர வயதுக்காரர்… வேகமாக முன்னே வந்து… நட்ராஜின் பைக் முன் நிற்க… நட்ராஜ் நிறுத்தி அவரைப் பார்க்க… பவித்ராவும் யோசனையோடு அவரைப் பார்த்தாள்…
அவர் நட்ராஜிடம் பேசவில்லை… மாறாக பவித்ராவிடம்
”ஏம்மா… பைக்ல உட்கார்ந்து போகும்போது அந்தப் பையன்கிட்ட பேசாமல் போனால் தான் என்னம்மா…” எனும் போதே பவித்ராவின் முகம் கோபத்தில் கொதிப்படைந்து சிவப்படைந்திருந்தது
“இவர் யார்… என் புருசன்கிட்ட பேசாமல் போகச் சொல்ல…” என உச்சியில் சுர்ரென்று ஏறி இருக்க…
இப்போது அந்தப் பெரியவர்
“தம்பி… … அந்த சிக்னல்ல இருந்து… நானும் உங்க பின்னாடியே தான் வர்றேன்… நீ மோதினதுல அந்த வண்டிக்காரன் பேசுனதை நானும் கேட்டேன்… அதான் மனசு தாங்கலை… ரெண்டு பேரும் அவ்ளோ பொருத்தமா இருக்கீங்க… பார்க்கிறதுக்கே அவ்ளோ பாந்தமா இருக்கு… பார்த்துப் போங்கப்பா ரொம்ப வருசம் வாழனும்பா நீங்க ரெண்டு பேரும்... ரோட்ல போற எல்லாரையும் பார்த்து இப்படி சொல்லனும்னு தோணாது… உங்ககிட்ட சொல்லனும்னு தோணுச்சு… ஹெல்மெட் போட்டுக்கங்கப்பா… இந்த காலத்து பசங்களுக்கெல்லாம் ஸ்டைல் தான் முக்கியமா போச்சு “ என்றபடி கடந்து செல்ல…
நட்ராஜ் அவரின் வார்த்தைகளை புரிந்து கொண்டதால் பேசாமல் நின்றிருக்க
“ஏய் ராஜ்… அந்தாளு அவர்பாட்டுக்கும் பேசிட்டு போயிட்டு இருக்கார்… நீ தேமேன்னு நின்னுட்டு இருக்க… வண்டியை எடு… அவரை நாலு வார்த்தை நறுக்குனு கேட்கனும்… ஊர்ல எப்படி எப்படியெல்லாம் வண்டியில போறாங்க… அவங்களை எல்லாம் திட்டாமல்… புருசன் பொண்டாட்டி நம்மள வந்து நின்னு திட்டிட்டு போறாரு… நீ வண்டியை எடு ஃபர்ஸ்ட்… “ என அவனை வேகப்படுத்த
“ஏய் இருடி… அவசரக் குடுக்கை… நிதானமா யோசிடி… திட்டிட்டுத்தான் போனாரு… ஆனால் என்ன சொன்னாரு… ஏன் சொன்னாரு…. எல்லா வார்த்தையும் நம்ம மேல இருக்கிற அக்கறைல வந்தது… அதை நீ கவனிக்கலையா… கடவுள்ல்லாம் நேர்ல வர மாட்டாங்க… இந்த மாதிரி மனுசங்க ரூபத்துல தாண்டி வருவாங்க… யார் கண்டது ஒரு வேளை இவர் வந்து சொல்லலைனா… எச்சரிக்கை பண்ணலைனா ஆக்ஸிடெண்ட் கூட ஆகி இருக்கலாம்.. அந்த அளவுக்கு நான் உன் பேச்சுல டைவர்ட் ஆகி ஓட்டிட்டு வந்தேன்… எதையும் மேலோட்டமா பார்க்காதடி… “ என்ற கணவனின் வார்த்தைகளில் பவித்ராவும் யோசிக்க ஆரம்பிக்க… அவளையும் மீறி அவள் கைகள் அவள் வயிற்றில் சென்றிருந்தது…
---
”ஏய் என்ன இங்க வந்துருக்க… இங்க வளையல் மட்டும் தான் இருக்கும் போல” அந்தக் அங்காடி வளையல்கள் மட்டுமே பிரத்யோகமாக விற்பனை செய்யும் கடை… நட்ராஜ் அந்தக் கடையைப் பார்த்தபடியே கேட்க… கிருத்திகாவும் சரியாக வந்து சேர்ந்திருக்க…
“சொல்றேன்… உள்ள வா” எனக் கணவனின் கைகளைப் பிடித்துக் கொண்டு உள்ளே செல்ல… கிருத்திகாவும் யோசனையுடன் அவர்கள் பின்னே செல்ல…
“ராஜ்… எனக்கு வளையல் வாங்கிக் கொடு… கண்ணாடி வளையல்… கை ஃபுல்லா போட்டுக்கணும்…” என்றபோதே அவள் குரலில் மென்மை தாங்கி இருக்க
“என்னது கை ஃபுல்லா கண்ணாடி வளையலா… ஏண்டி… கிருத்தியாவது சைக்கியார்டிஸ்ட்… ஆனால் நீ கைனெகாலஜிஸ்ட்… டாக்டர் மாதிரியாடி பேசுற… பேஷ்ண்ட்ஸ்லாம் பார்க்கும் போது டிஸ்டர்ப்பா இருக்காது……..” எனும் போதே கிருத்திகாவுக்கு தோழியின் வார்த்தைளுக்கு பின்னால் உள்ள அர்த்தம் புரிந்திருக்க…
“ஹேய் பவி… கங்கிராட்ஸ்டி… அடிப்பாவி…… எனக்குக் கூட சொல்லலைதானே நீ… “ எனத் துள்ளிக் குதித்தவள்…
“ஹேய்…. ராஜ்… என்ன பார்க்கிறீங்க… அந்த லூசு சொல்ல வந்தது புரியலையா…” எனக் கேட்க
நட்ராஜ் இப்போதும் புரியாமல் பார்க்க
“பவி… உங்களை லவ் பண்ணப்போ… அவளுக்காக பேசி பேசி உங்களைக் கரைய வச்சது பத்தாதுன்னு… இப்போ இது வேறயா… ராஜ் அவ சொல்றது புரியலையா… கை ஃபுல்லா வளையல் போடனும்னு ஆசைப்பட்றா… “
ராஜ் புரியாமல் அப்போதும் பார்க்க
“சுத்தம்…” என கிருத்திகா பவித்ராவைப் பார்க்க… அவளோ வேறு புறம் வெட்கத்துடன் திரும்பிக் கொள்ள
“ம்க்கும்… இதுல வெட்கம் வேறயாக்கும்… விளங்கிடும்… இதெல்லாம் மகப்பேறு மருத்துவர் வேற… “ என கிருத்திகா தலையிலடித்தவளாக
“ஹலோ மிஸ்டர் நட்ராஜ்… வளையல் எல்லாம் கை நிறைய பொண்ணூங்க எப்போ போடுவாங்க…”
“கல்யாணத்துக்கு… அப்புறம்” எனும் போதே… நட்ராஜுக்கும் மூளையில் விளக்கெரிந்திருக்க
“ஏய் பவி…” என உற்சாகமாகக் அவளின் அருகே செல்ல… பவித்ரா வெட்கத்துடன் தலையைக் குனிந்து கொள்ள… வேகமாக அவளைத் தூக்கப் போக… கடைக்காரரே அதிர்ந்த பார்வை பார்க்க ஆரம்பித்திருக்க
“சாரி சார்… நீங்க வேணும்னா கண்ணை மூடிக்கங்க…” என்றபடி வேகமாக பவித்ராவை தூக்கியவன் தட்டாமலை சுற்ற ஆரம்பித்திருக்க
கிருத்திகா இருவரையும் சந்தோசமாக பார்த்தபடி
”அவங்க அப்படித்தான்… கண்டுக்காதீங்க… நீங்க வளையலை எடுத்துப் போடுங்க சார்…” என்றபடி வளையல்களையும் தேர்வு செய்ய ஆரம்பித்திருந்தாள்…
---
அந்த ஏரியாவில் இருந்த குணா மருத்துவமனையில் தான் பவித்ராவும்… கிருத்திகாவும் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்… வேறு வேறு பிரிவு என்றாலும் ஒரே மருத்துவமனையில் தான் வேலை பார்க்க வேண்டும் என்று விண்ணப்பிக்க… இங்கு இருவருக்கும் கிடைக்க… ஒன்றாகவே சேர்ந்து விட்டனர்… வேலையும் பார்த்துக் கொண்டிருந்தனர்
அன்றைய தினம் 4 மணி அளவில்… மருத்துவமனை வளாகத்தின் கேண்டீனில் கிருத்திகாவும்… பவித்ராவும் அமர்ந்திருக்க… பவித்ரா தன் கையில் அணிந்திருந்த வளையல்களோடு விளையாண்டபடி… தேநீரைச் சுவைத்துக் கொண்டிருக்க.. கிருத்திகா யோசனையோடே அவளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்… பவித்ராவும் அவளைப் பார்த்தபடி தான் இருந்தாள்…
“என்னடி… ஒரே ஆராய்ச்சிப் பார்வை…” பவித்ரா கேட்க
“தெரிஞ்சுதான் எல்லாம் பண்றியாடி…” கிருத்திகா கவலையோடு கேட்க
“என்னடி… என்ன பண்றேன்….” என பவித்ரா இப்போதும் விளையாட்டாக கேட்க
“ப்ச்ச் … சீரியஸா நான் பேசிட்டு இருக்கேன் பவி… கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம்ல… உனக்கு சொல்லத் தேவையில்லைதான்… இப்போ குழந்தை அவசியமா உங்க ரெண்டு பேருக்கும்…” என்றபடியே
“எனக்கும் ஹேப்பிதான்… ஆனால் அதைவிட நீங்க ரெண்டு பேரும் தேவையில்லாத ப்ரஷரை இழுத்துவச்சுக்கிட்டீங்களோன்னு தோணுது….” என்ற தோழியை பார்த்தபடியே பவித்ராவும் தீவிர தொணியில் பேச ஆரம்பித்திருந்தாள்
“ஹ்ம்ம்ம்.. புரியுதுடி… ஏற்கனவே அப்பாகிட்ட சவால் விட்டு… அதை ராஜ்கிட்ட அந்த ப்ரஷரைல் காமிச்சுட்டு இருக்கேன்… அவரை ரெண்டு வருசத்துக்குள்ள பெரிய ஆளா மாத்திக் காமிக்கிறேன்னு அவரை அதை நோக்கி துரத்திட்டு இருக்கேன்… இப்போ இந்தக் குழந்தை வேற… என்னைப் பார்ப்பாரா… இல்லை அவர் ப்ரஃபஷனலைப் பார்ப்பாரா… இதுதானே உன் கேள்வி” பவித்ரா கேட்டபடியே
“எனக்கும் தெரியும்டி… நான் நெனச்சுருந்தா ராஜ் ஒரு நல்ல நிலைமைக்கு வந்த பின்னால குழந்தை பெத்துருந்துக்கலாம்… ஆனால் “ என இழுத்தவள்…
“எனக்கு என்ன ராஜை பெரிய ஆளாக்குறது பெரிய முக்கியமா என்ன… அவர் திறமைக்கு கண்டிப்பா அவர் என்னைக்காவது பெரிய ஆளாவாரு… ஆனால் ஏன் ரெண்டு வருசம்னு அப்பாகிட்ட சவால் விட்டேன் தெரியுமா… அப்பாகிட்ட இருந்து ராஜை காப்பத்தனும்… நான் பண்ணினது தப்புதான்… நானும் ராஜை லவ் பண்ணிறக் கூடாதுன்னு எவ்வளவோ ட்ரை பண்ணினேன்… முடியலடி… அவரும் என்னை எவ்வளவோ அவாய்ட் பண்ணினாரு… என்னோட காதல் அவரையும் பலிகடா ஆக்கிருச்சு…” என்றபடியோ வெளியே வெறித்தவள்…
“ஆனால் நான் தப்பான ஆளை… ஜஸ்ட் அப்பியரன்ஸ் பார்த்து… இல்லை வயசுக்கோளாருல மட்டும் லவ் பண்ணலேன்னு உனக்குத் தெரியும் தானே கிருத்தி… ராஜ் பாவம் எனக்காக எப்படியாவது முன்னேறனும்னு வெறில இருக்கார்… நான்… இந்தக் குழந்தை… எல்லாமே அவரை திசை திருப்புற விசயங்கள்தான்” பவித்ராவின் கண்களில் கண்ணீர் வந்திருக்க
“ஆனால் நான் கஷ்டப்பட்றதுக்காக இந்தக் குழந்தையை பெத்துக்கலடி… இஷ்டப்பட்டு பெத்துக்கிறேன்… ஏன் தெரியுமா… இப்போதே கிட்டத்தட்ட ஒரு வருசம் முடிஞ்சுருச்சு… ஒரு வேளை ராஜ் அவர் ப்ரஃபெஷனல்ல அப்பா கிட்ட சவால் விட்ட மாதிரி ரெண்டு வருசத்தில முன்னேற முடியலேன்னா… என்ன ஆகும் சொல்லு… அப்பாவும் பெரிய நம்பிக்கையோட இருக்காரு… கண்டிப்பா ராஜால சாதிக்க முடியாதுன்னு… அவர்கிட்ட அவர் பொண்ணா வந்துருவேன்னு நினச்சுட்டு இருக்கார்… ஒரு வேளை ராஜால ஜெயிக்க முடியலேன்னா.. நான் என்ன பண்றது… சவால்ல தோத்துப் போயிட்டேன்னு… என் அப்பாகிட்ட போக முடியுமா… எங்களுக்குனு ஒரு குழந்தை வந்துட்டா அப்பாவால எங்களைப் பிரிக்க முடியாதுதானே…” என்ற பவித்ரா
“நான் எப்போதுமே ராஜோட இருக்கனும் கிருத்தி… எனக்கு அவர் இல்லாமல் இருக்க முடியாது… எல்லோருக்கும் அவரோட முரட்டுத்தனம் மட்டும் தான் தெரியும்… ஆனால் எனக்கு மட்டும் தான் அவரோட இளகிய மனசு தெரியும்… அவருக்கு அழகான ஒரு வாழ்க்கையை காட்டிட்டு நானே அதை பறிக்க முடியுமா என்ன… எப்டியாவது இந்த உலகத்தில நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழனும்… அதுக்காகத்தான் போராடிட்டு இருக்கேன் கிருத்தி “
”லூசு… நீ கவனக் குறைவா இருந்துட்டியோன்னு நெனச்சேன் அவ்ளோதான்… அந்த சந்தேகத்துலதான் கேட்டேன்… நீ தெளிவா இருக்கதானே அது போதும்” என்று எழுந்தவள் தன் தோழியின் அருகில் போய் அவளைத் தன் மார்போடு அணைத்துக் கொள்ள
“எனக்கு ஏன் ராஜைப் பிடிச்சதுன்னே தெரியலை கிருத்தி… அவரோட முரட்டுத்தனம்… கோபம்… இதெல்லாம் விட அவரோட இன்னோசண்ட் அவரை நோக்கி என்னை இழுத்துருச்சு… அவரோட ஐடியாவை எல்லாம் அவருக்குத் தெரியாமல் வாங்கி பிஸ்னஸ் பண்ணினவங்களை அவருக்கு காட்டப் போய்… கடைசியில என் மனசை அவர்கிட்ட தொலச்சுட்டேன்… கண்டிப்பா பாரு ஒருநாள் என் அப்பாவை விட பெரிய ஆளா வருவார் பாரு… அப்போ என் அப்பா முன்னால என் ராஜோட… என் குழந்தையோட அவர் முன்னால கம்பீரமா நிற்பேன் கிருத்தி” என்றவள்
“ஆனால் என் அப்பாவையும் அம்மாவையும் மிஸ் பண்றேன்… ரொம்ப ரொம்ப “ என மகளாகவும் பவித்ரா அழ ஆரம்பித்திருக்க… கிருத்திகாவுக்குமே வார்த்தைகள் கிடைக்கவில்லை… தன் தோழியை அணைத்தபடி அவளை மௌனமாகவே தேற்ற ஆரம்பித்திருந்தாள்
---
இரண்டு மாதங்கள் கழிந்திருந்த நிலையில்
”டேய் மருது… ஷெட்டுக்கு வேண்டாம்… கோவிலுக்கு வண்டியை விடு” என நட்ராஜ் சொல்ல.. மருதுவும் வண்டியை திருப்ப ஆரம்பித்திருந்தான்… எங்கு போகச் சொன்னால் என்ன… அந்த வண்டியை ஓட்டுவது மட்டுமே அவன் நோக்கம்… அவனது ஆசை…
“டேய்… மெயின் ரோட் வழியா போயிறாத…. போலிஸ் நிற்கப் போறாங்க.. லைசன்ஸ் வேற இல்லை” என நட்ராஜும் எச்சரிக்கையோடு தெருவின் சந்து வழியாக வந்து கோவிலின் முன் நிற்க… அதே நேரம் நாராயண குருக்கள்… அவர் பேரன் அர்ஜூனோடு கோவிலை விட்டு வெளியே வந்திருக்க…
நட்ராஜ்… தூரத்தில் வரும் போதே பவித்ராவின் தந்தையைப் பார்த்தும் விட்டான்… அவரைப் பார்த்தபடியே இறங்கியவன்… ஒரு முடிவோடு நாராயணனைப் பார்த்தபடியே…. மருதுவிடம்
“மருது.. அதோ வர்றாரே அவர் யார் தெரியுமா…” எனக் கேட்க
மருதுவோ புரியாமல் விழிக்க…
“உங்க அக்காவோட அப்பா…. மல்ட்டி மில்லியனர் நாராயண குருக்கள்… ” என்றவனிடம்
“பார்த்தால் ரொம்ப சாந்தமா இருக்கிற மாதிரி இருக்கு அண்ணே… இவர்தான் அக்காவை மிரட்டினவரா… இவருக்குத்தான் அக்கா பயப்படறாங்களா…. இவர்கிட்ட இருந்து உங்களை காப்பாற்றத்தான் ரெண்டு வருச சவால் வேறயா” மருதுவும் நக்கலாகக் கேட்டபடி தன் முதலாளியைப் பார்க்க
“கற்பூர புத்திடா உனக்கு… கலாய்ச்சு ரொம்ப நாள் ஆச்சு… யாரையாவது கலாய்க்கனும் தோணுதே… நம்ம மாமனாரை வச்சு செஞ்சுரலாமா” மருதுவிடம் கேட்டபடி நட்ராஜ்… சட்டைக் காலரை பின்னால் இழுத்து விட்டபடி… நாராயணனைப் பார்த்தபடியே இருக்க… மருதுவும் கட்டை விரலை உயர்த்தி உற்சாகமாகத் தலை ஆட்ட…
நாராயணனும் தூரத்திலேயே நட்ராஜைக் கவனித்து விட்டார்தான்… இருந்தும் பார்க்காதது போல விலகி நடந்து போக நினைக்க
“நாராயணா நாராயணா…” கைகளை மேலே உயர்த்தி கும்பிட்டவனாக… நட்ராஜ் சத்தமாக வேண்ட ஆரம்பித்திருக்க… அர்ஜூனோ பயந்தே விட்டான்… நட்ராஜின் சத்தத்தில்
நாராயணன் அப்போதும் நட்ராஜிடம் ஏதும் பேசாமல் அவனை முறைத்தபடி… தாண்டிச் செல்ல முயல…
“நாராயணா….நாராயணா…” என நட்ராஜும் அவர் முன் வேண்டுமென்றே செல்ல… இப்போது நாராயணன் நிற்க….
“நீ…. நீங்க போங்க சார்… நான் சாமியைத்தான் வேண்டிட்டு இருக்கேன்… நீங்க ஏன் நிற்கறீங்க” எனும் போதே… நாராயணன் மீண்டும் நடக்க ஆரம்பிக்க… நட்ராஜ் இப்போது சிரித்தபடியே
“நாராயணா… நாராயணா” என பின்னால் போனபடி நாராயணன் முன் நிற்க…
”சாமியத்தான் வேண்டறேன்… “ எனச் சிரிப்பை மறைத்தபடி நட்ராஜ் சொல்ல
“என்ன.. நக்கலா… வேணும்னே வம்பு பண்றியா… அம்மன் கோவிலுக்கு வந்து நாராயணன் பேர் சொன்னா… அதுக்குப் பேர் வேண்டுதல்னு நாங்க நம்பிருவோமா” என்றவர்.. நட்ராஜைப் பார்த்த பார்வையில் கோபத்தை விட ஆதங்கமே
அவன் அணிந்திருந்த உடையில் இருந்து… காலணி வரை அனைத்துமே தாழ்வான நிலைதான்… கண்கள் கலங்கி விட்டது அவருக்கு… மனம் தாளவில்லை… தன் மகள் எப்படிப் பட்டவள்… செல்வச் செழிப்பில் வளர்ந்தவள்… மாசு மருவில்லாத சந்தனச் சிலை போன்ற அழகானவள்… திறமையானவள்… இப்படிப்பட்டவனின் மனைவியாக இன்று அவள்… சாதாரண புடவையும்… மஞ்சள் கயிறும்… நினைக்கும் போதே அவரது நெஞ்சமெல்லாம் பெற்ற தந்தையாக பதறத்தான் செய்தது…
எப்படியாவது தன் மகளை இந்த முரடனிடமிருந்து மீட்டு வர வேண்டுமே… தவியாகத் தவித்தது அவர் நெஞ்சம்…
“மாமோய்… என்ன என்னமோ…. என் பொண்டாட்டிகிட்ட சவால் விட்டீங்களாமே… ரெண்டே வருசத்தில அட்லீஸ்ட் லட்சாதிபதியாகியாவது காமிக்கனும்னு… இல்லைனா உங்ககிட்டயே வந்துரனும்னு… “ என்று நட்ராஜ் சொன்னபடியே
“சொல்லப் போனால்… இதுக்காகவே நான் ரெண்டு வருசம் கழிச்சு உழைக்கலாம்னு இருந்தேன்… ப்ச்ச் என் பொண்டாட்டிக்காக… என் பவிக்காக மட்டுமே… நானும் இந்த சவால்க்கு ஒத்துக்கிட்டேன்… அப்படியே நான் சவால்ல தோத்துப் போனாலும்… என் பொண்டாட்டியை உங்ககிட்டலாம் அனுப்ப மாட்டேன் மாமா…”
“பார்த்துறலாம்டா…” என நாராயணன் பேசாமல் விலகி நடக்க
“மாமோய்… உன் பொண்ணைக் குடு…” வேண்டுமென்றே நட்ராஜ் பாட ஆரம்பித்திருக்க…
“அட ஆமாம் சொல்லிப்புடு” மருதுவும் விசில் அடித்தபடி… தாளம் தட்டி… நாராயண குருக்களை சுற்றி ஆட்டம் போட்டு நாராயண குருக்களை வெறுப்பேற்ற
“லோ கிளாஸ் ஸ்கவுண்ட்ரல்ஸ்…” என்றபோதே…
“ப்ச்ச்… சோ சேட்… என்ன பண்றது… உங்களுக்குத் தெரியுது… நீங்க பெத்த உங்க பொண்ணுக்கு தெரியாமல் போச்சே மாமா…” என நட்ராஜ் இன்னும் கிண்டல் செய்ய
“இன்னொரு தடவை…. மாமான்னு சொன்ன…” என நாராயண குருக்கள் அவனிடம் எகிற…
“என் பொண்டாட்டிய பெத்தவங்க நீங்கதானே… அப்போ நீங்கதானே எனக்கு மாமா.. மருது நீ சொல்லுடா… என் பொண்டாட்டியோட அப்பா எனக்கு என்ன வேணும்…”
“மாமாதான் முதலாளி…”
“பாருங்க மாமா சின்னப் பையன் அவனுக்குத் தெரியுது… உங்களுக்குத் தெரியாமல் போச்சே” நட்ராஜ் எக்காளமிட்டு கேட்க
“என்னடா உன் மேல கை வைக்க மாட்டேன்னு என் பொண்ணுகிட்ட சொல்லிருக்கேன்… அதுனால ஆட்டம் ஆட்றியா…”
“அட ஆமால்ல… ரெண்டு வருசம் என்னைப் பொழச்சுப் போன்னு விட்ருக்கீங்களாமே…. உயிர் பிச்சை எனக்கு… என் பொண்டாட்டிக்கு தாலிப் பிச்சை… சொன்னா சொன்னா… எத்தனை பேரை அடிச்சுப் போட்டுட்டு நான் பவியை மேரேஜ் பண்ணினேன்னு சார்க்கு ஞாபகம் இருக்கா… அந்த நாள் தெரியாமல் போச்சா… இல்லை மறந்து போச்சா…”
நாராயணன் அவன் முன் வந்து நின்றவராக
”எல்லாம் ஞாபகம் இருக்கு… நல்லா ஆட்டம் போடு… ஆனால் இதெல்லாம் ஒரு நாளைக்கு முடிவுக்கு வரும்… கண்டிப்பா அன்னைக்கு நீ என்னை நினைப்ப”
“அட மாமா… உங்கள எதுக்கு நான் நினைக்க… நான் உங்க பொண்ணத்தான் நினைக்கனும்… அதை விடுங்க… நான் எங்க ஆடினேன்… நான் டான்ஸே ஆடலையே மாமா… மருதுதானே ஆடினான்” என நட்ராஜ் நாராயணனை ஓட்ட
“ஞாபகம் வச்சுக்கோ… எனக்கும் ஒரு காலம் வரும்… அதை விடு… உனக்கும் ஒரு காலம் வரும்… உனக்கு ஒரு பொண்ணு பிறந்து… அவ உன் பேச்சைக் கேட்காமல்… ஒருத்தனை உன் முன்னால கூட்டிட்டு வந்து நிற்பா பாரு… வயிறெரிஞ்சு சொல்றேன்… பெத்த வயிறு பத்திட்டு எரியுதுடா” எனக் கடுங்கோபத்தில் நாராயணன் சொல்லிக் கொண்டிருக்க… அர்ஜூன் தன் தாத்தாவின் கோப முகத்தை அன்றுதான் முதன் முதலாக பார்க்க… அதற்கு காரணமான மருதுவையும் நட்ராஜையும் பார்வையாலேயே எரிக்க ஆரம்பித்திருக்க… நட்ராஜ் அர்ஜுனைப் பார்க்கவில்லை…. ஆனால் மருது அர்ஜூனை… அவனது முறைப்பான பார்வையைக் கவனித்து விட
“ஏய் என்ன தம்மாந்துண்டு இருந்துகிட்டு... அப்டியே விட்டேன்னு வச்சுக்க... பறந்து போய் விழுவ.... “ என நாக்கைக் கடித்துக் கொண்டு கை முஷ்டியை உயர்த்திய மருதுவின் கொடூர பாவனையில் அர்ஜூன்... பயந்து போய் தன் தாத்தாவின் முழங்காலைப் பிடித்துக் கொண்டு அவரின் பின் புறமாக மறைந்து கொள்ள...
“அது... அந்த பயம் இருக்கனும்” என்ற மருது அதற்கு மேல் அவனை வம்புக்கு இழுக்க வில்லை... தன் முதலாளி பேச்சில் கவனம் வைக்க ஆரம்பித்தான்....
“மாமா… இப்போ நீங்க எனக்கு சாபம் கொடுக்கறீங்களா இல்லை ஆசிர்வாதம் பண்றீங்களா.. கன்ஃபியூஸ் பண்றீங்களே மாமா… நீங்க யோசிச்சுதான் பேசறீங்களா… ” கிண்டலும் நக்கலும் கலந்து நட்ராஜ் கேட்க
“எனக்கு பொம்பளைப் பிள்ளை பிறந்து…. அவளுக்கு கல்யாணம்… அதுவும் எனக்கு பிடிக்காத கல்யாணம்… கேட்கிறதுக்கே செமையா இருக்கே… என் பொண்ணு… அவ கல்யாணம்… அதெல்லாம் விடுங்க… அப்போ நானும் பவியும் உங்களுக்கு ஒரு பேத்தி பெத்துக் கொடுக்கனும்… அவ்ளோதானே… இதை நேராச் சொல்ல வேண்டியதுதானே… இதை எதுக்கு சுத்தி வளச்சுட்டு” எனும் போதே….
நாராயணன் கண்கள்… ரத்தச் சிவப்பேறி இருக்க… வேகமாக நட்ராஜின் சட்டையைப் பற்றிய போதே…. நாராயணின் அடி ஆட்கள் அனைவரும் அங்கி வந்திருக்க…
நாராயணன் வேகமாக நட்ராஜை விட்டவராக…
“இப்போ நினைத்தால் கூட… உன்னை சின்னா பின்னாமாக்கி அடிச்சுப் போட்டுட்டு என் பொண்ணை தூக்கிட்டு போக முடியும்… ஆனால் என் பொண்ணு அவளா வரனும்… நான் தப்பு பண்ணிட்டேன்… அவன் வேண்டாம்னு என்கிட்ட வரணும்… அதுதாண்டா நான் ஜெயிச்சதுக்கு அர்த்தம்…. அதுக்காகத்தாண்டா காத்துட்டு இருக்கேன்… கண்டிப்பா நடக்கும்… அன்னைக்கு இருக்குடா உனக்கு…” என்றவரிடம்
“அப்படி ஒரு நாளும் என் பவி உங்ககிட்ட வந்து நிற்க மாட்டா… “ நட்ராஜும் அதே தீவிர பாவத்தில் தன் மாமனாரிடம் சவால் விட ஆரம்பித்திருக்க…. நாராயணன் வேகமாக அவனைக் கடந்து செல்ல… அப்போதும் விட்டானா நட்ராஜ்…
“மாமோய்… உன் பொண்ணைக் கொடு” என மீண்டும் பாடி வெறுப்பேற்ற
இப்போது அர்ஜூன் திரும்பிப் பார்த்து நட்ராஜை முறைக்க…
“சில்வண்டு… என்ன பார்க்கிற… நாளைக்கு நீயும் இதே பாட்டை பாட்ற நிலை வந்தாலும் வரும்… அதுனால மாமாவை முறைச்சுக்காத…. கெளம்பு கெளம்பு” எனும் போதே நாராயணன் திரும்பி முறைக்க
“மாமா… என்ன முறைக்கறீங்க… ஆக்சுவலா அது என் மருமகன் அர்ஜூனுக்குத்தான் பொருந்தும்… நீங்கதான் எனக்குப் பொண்ணைக் கொடுத்துட்டீங்களே… டேய் மருமவனே உனக்காக சீக்கிரமா உன் அத்தையும் நானும் ஒரு பொண்ணைப் பெத்துக் கொடுக்கிறோம்… நீ பாரு என்கிட்ட வந்து இதே பாட்டைப் பாடப் போற” என்று அர்ஜூனையும் தங்கள் வம்பில் இழுத்து வைக்க…
இதற்கு மேல் இங்கு நின்றால்… தன் மானம் தான் போகும் என்பதை உணர்ந்தவராக… நாராயணன் தன் பேரனோடு வேகமாக அங்கிருந்து கிளம்பியும் சென்றிருந்தார்…
---
அன்றைய இரவு…
”டேய் மருது… இன்னைக்கு நம்ம வீட்ல என்ன சாப்பாடுடா…” என்றபடி… கூரையில் வேய்ந்த கொட்டாரத்துக்குள் நட்ராஜ் நுழைந்தான்…
ஆம்… மருதுவுக்கென தனி குடிசை கட்டப்பட்டு கொடுக்கப்பட்டிருந்தது… அனைத்தும் பவித்ராவின் ஏற்பாடே…
“ராஜ்… அவன் ஷெட்ல படுக்க வேண்டாம்… இங்கேயே ஒரு குடிசை போட்டுக் கொடு… அவன் நம்ம கூடவே இருக்கட்டும்… அதுதான் அவனுக்கு நல்லது… ரெண்டாவது… தனியா போனால் உங்களுக்காக அசைவமும் சமைக்கலாம்” என பவித்ரா சொல்ல… நட்ராஜ் சமையலை விட்டவனாக
”ஏண்டி… அவன் நம்ம கூடவே இருக்கனும்னு அழுத்தம் கொடுக்கிற…” என்று மனைவி அழுத்த வார்த்தைகளைக் கணித்துக் கேட்க
”இல்லை… அவன் கடையில நிற்கும் போது பார்த்தேன்… சிகரெட் பிடிக்கிறவங்களை எல்லாம் ஒரு ஆர்வத்தோட பார்த்தான்… அவன் ரொம்ப நல்லவந்தான்… ஆனால் தண்ணீர் மாதிரி… எங்க இருக்கானோ அதே மாதிரி மாறிடுவான்… நம்ம கூட இருந்தால் கண்டிப்பா நல்ல நிலைக்கு வருவான்… கொஞ்சம் விட்டோம்னா அவன் தடுமாறிருவான் ராஜ்… அவன் நல்லா வரணும்… அந்த அக்கறைலதான்… நாம எப்போதுமே அவனை விடக் கூடாது ராஜ்…” என்றவளிடம்…
“அது எப்டிட்டி எல்லோரையும் அசால்ட்டா கண்டுபிடிக்கிற… பெரிய ஆளுதான் நீ” என சந்தடி சாக்கில் கொஞ்சியவன்… மருதுவுக்கும் அருகிலேயே குடிசை போட்டுக் கொடுக்க… அது மட்டுமல்லாது…
“நம்ம பைக்ல என் சீட்லதான் வேற யாருக்கும் இடம் இல்லை…. ஆனால் ட்ரைவர் யார் வேணும்னாலும் இருக்கலாம்… மருது ஆசைப்பட்றான்… கத்துக் கொடுங்க…” என பைக்குக்கும் சிபாரிசு செய்திருக்க… அதன் விளைவு இப்போதெல்லாம் மருதுதான் நட்ராஜின் இருசக்கர வாகன ஓட்டுனர்…
மருதுவை நினைத்தபடியே… வீட்டுக்குள் நுழைய
“கருவாட்டுக் குழம்புண்ணா… அண்ணி இந்தப்பக்கம் எட்டிப் பார்க்கவே இல்லை… நீ சாப்புட்டுட்டு போயிருண்ணா… “ என்றவனிடம் நட்ராஜும்…
“போடு… போடு… கை கழுவிட்டு வர்றேன்… நீ சாப்பிட்டியா” என்றபடி வெளியே போனான்… பவித்ரா அங்கிருந்த வெளித் திண்ணையில் புத்தகத்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருக்க
“ஹாய் மஹாராணி… என்ன பண்றீங்க… சாப்பிட்டீங்களா… அய்யா வீட்ல இன்னைக்கு கருவாட்டுக் குழம்பு” என்றபடி பவித்ராவின் கன்னத்தைச் செல்லமாகத் தட்ட… வேகமாக அவன் கையைத் தட்டிவிட்டவள் மீண்டும் புத்தகத்தில் கவனம் வைக்க…
“ஏய் என்னடி…”
“ப்ச்ச்… போயிரு உன் மேல கோபமா இருக்கேன்… நீ சாப்பிட்டுட்டு வா… இருக்கு உனக்கு” என்றவளிடம்
“ஓகே… தெம்பா வர்றேன்” என்றபடி முன்னே நடக்க….
“குளிச்சிட்டுதான் வீட்டுக்குள்ள வரணும்… மருது வந்ததில இருந்து ஒரே நான்வெஜ் தான்… அதான் நீ ரொம்ப ஆடிட்டு இருக்க…” என்றபோதே அவளின் கோபத்தின் காரணத்தை யூகித்தவனாக
“டார்லிங்க்…. சூடா இருக்கீங்களா என்ன… காலையில உங்க அப்பாகிட்ட வம்பு பண்ணதை தம்பி சொல்லிட்டான் போல…” என்றவன் அதற்கு மேல் அங்கி நிற்காமல் மருது இருந்த குடிசைக்குப் போயிருந்தான்… சாப்பிட்டு… பின் குளித்துவிட்டு தன் வீட்டுக்குச் சென்றவன்… கோபமாக அமர்ந்திருந்த மனைவியைப் பார்த்தபடியே உடை மாற்றியவன்
”இந்த கோபமாலாம் சீன் போடாத… ரெண்டு மாசமா நீ சொன்னதால விலகி இருந்தேன்ன்… இனிமேலாம் உன்னை விட்டு இருக்க முடியாது” என்றபடி அவளைக் கட்டிக் கொண்டவனிடம்
“லூசு… காட்டான்…” என்றபடி அவனைத் தள்ளிவிட…
”ஏண்டி… காட்டான்னு தெரிஞ்சுதானே பின்னால சுத்தி சுத்தி வந்த… இப்போ என்ன மாறுச்சு… அதே காட்டான் தான்.., இந்தப் பவியோட காட்டான் தான் அப்போதும் இப்போதும் எப்போதும்” என்றவன் இன்னும் அவளை இறுகக் கட்டிக் கொள்ள…
“யப்பா… விட்றியா … ஃபர்ஸ்ட் நீ இதுக்கு பதில் சொல்லு.. நீ ஏன் அப்பாகிட்ட வம்பு பண்ணின… அவர்தான் அவர் வேலையைப் பார்த்துக்கிட்டு இருக்காரே… உனக்கு என்ன அவ்ளோ திமிர்… “ என்று திமிறி விலகியவளிடம்
“ப்ச்ச்…. அவர் உன்கிட்ட பெரிய சவால் விட்ருக்கார்ல… ரெண்டு வருசத்துக்குள்ள உன்னை பவித்ர விகாஸ்க்கு கொண்டு வந்து சேர்க்கிறேன்னு… கூடிய சீக்கிரம் பாரு… நாம நம்ம வீட்டுக்கு பவித்ரா இல்லம்னு பேர் வச்சு… அந்த பேரையே அவர் வீட்ல இருந்து தூக்க வைக்கிறேன்…” என்றவனிடம் முறைத்தவள்…
“சரி.. சரி… இந்த அளவு வைராக்கியம் இருந்தால் போதும்…. போய்த் தூங்குங்க…” என்றபடி தனியே படுக்கப் போக… எட்டி அவளைப் பிடித்து தனக்குள் கொண்டு வந்தவன்…
“மேடம் சாரிங்க மேடம்… இவ்ளோ நாள் விரதம் இருந்ததெல்லாம் போதும்… இனிமேலல்லாம் முடியாது…” என்றபடி ராஜின் விரல்கள் அவள் மேனியில் விளையாட ஆரம்பித்து… அவள் இடையில் தன் கை வரிசையைக் காட்ட ஆரம்பித்திருக்க…
“என்கிட்ட செக் அப் வர்றவங்ககிட்டயே நான் அட்வைஸ் பண்ணுவேன்… என்கிட்டேயேவா” என பேச ஆரம்பித்த போதே
“தன் வைத்தியம் தனக்கே செல்லாது தங்கம்…. “ என்றவன் அவளைப் பேச விடாமலேயே அவளிடம் அத்துமீற ஆரம்பிக்க
“ராஜ்…” என இழுத்தவளிடம்
“ஹ்ம்ம்ம்ம்ம்ம்… சொல்லுங்க ராணி“
“உங்ககிட்ட ஒரு விசயம் மறச்சுட்டேன்…” எனும்போதே
“என்கிட்ட மறைக்கிறதுக்கு ஒண்ணுமே இல்லையே உன்கிட்ட… என்ன புதுசா… ஒருவேளை ஏதாவது மச்சம் வந்திருக்கா” என்றவனின் வாயிலேயே அடித்தவளிடம்
“ஏண்டி… வலிக்குது” என அடி வாங்கிய வலியில் உதட்டைத் தடவியபடியே
“எப்போ பாரு… இதே நினைப்புதான்… அப்போ அடிக்க மாட்டாங்களா” பவித்ரா முறைக்க
”ஹலோ… 2 மந்த்ஸ்… சும்மா படுத்தாத… நாம அப்புறமா பேசிக்கலாம்”
“என்னை பேசவிடுடா காட்டான்….” என்றவள் அவனை விட்டு வலுக்கட்டாயமாக விலக்கியவள்… தானும் விலகி நின்று
“நான் பேசுற வரை… நீ அந்தப் பக்கம்… நான் இந்தப் பக்கம்… கோட்டை தாண்டுன… கொலை விழும்..” என்றபடி
”பெரிய கோடு… அடிப்போடி… சொல்லு…” என அவளை மீண்டும் நெருங்கிக் நிற்க
”உன்னை…”
“அதெல்லாம் என்னைத் திருத்த முடியாது… நீ சொல்லு” என்றபடி மீண்டும் தன் கை வளைவுக்குள் கொண்டு வந்தவனிடம்
“நமக்கு… என்ன கொழந்தை தெரியுமா…” என்றவள் தயங்கி பின் மீண்டும் பேச ஆரம்பித்தாள்…
“சொல்லக் கூடாதுன்னுதான் நெனச்சேன்… அப்பாகிட்ட போய் வம்பிழுத்துட்டு வந்திருக்கேல்ல… அவர் வேற உனக்கு சாபம் விட்டுட்டாராமே… பாரு உனக்குத் தேவையா இது… அதுனால சொல்றேன்” என்று கவலையாகச் சொன்னவளிடம்
நட்ராஜும் இப்போது விளையாட்டுத்தனத்தை எல்லாம் விட்டவனாக… ஓரளவு யூகித்தவனாக
“பெண் குழந்தையா…” புருவ முடிச்சுகள் விழக் கேட்டவனிடம்
“ஆமாம்… ஏன் உனக்கு இவ்ளோ திங்கிங்… ஏன் பெண் குழந்தை பிடிக்காதா” பவித்ரா கேட்க
“லூசு… தேவதைங்களாம் வரமா கெடச்சா வேண்டாம்னு சொல்வாங்களா…” என்றபடி
“ப்ச்ச்… மாமனார்கிட்ட நல்ல வரம் வாங்கிட்டு வந்திருக்கேன் போல இன்னைக்கு… உங்க அப்பா வருங்காலம்லாம் சொல்றார்டி… எனக்கு பொண்ணுதான் பிறக்கும்னு…. ஹ்ம்ம்ம்… கைவசம் பெரிய தொழில் வச்சிருக்காரு… இப்போலாம் இதுலதாண்டி செம்ம வருமானம்” என்றவனின் கைகளில் கிள்ள
“யம்மா…” என்றபடியே
“சொல்றதைக் கேளுய்யா… என் அப்பாவை வம்பிழுக்கலைனா தூக்கம் வராதே” முறைத்தவளிடம்…
“மாமனார் மேல அவ்ளோ பாசம்டி… உன் அப்பாக்கு அது தெரியல… என்னை மாதிரியேதான் எனக்கும் மருமகன் கிடைப்பான்னு சாபம் விட்ராறாம்… அப்போ என் மருமகனும் என்மேல பாசக்காரனாத்தானே இருக்கனும்…”
நட்ராஜும் கண் சிமிட்டிச் சிரிக்க… பவித்ரா அதை எல்லாம் கண்டு கொள்ளாமல்…
“ராஜ்… நான் பாப்பாக்கு பேர் கூட வச்சுட்டேன்… கண்மணி” என்றவள்
“நீங்க என்ன கண்ணே மணியே கொஞ்ச வேண்டாம்… நாம ரெண்டு பேரும் சேர்ந்து… நம்ம பாப்பாவை கண்ணே மணியேன்னு கொஞ்சி வளர்க்கலாம்” என்றவளின் கண்களில் எதிர்காலக் கற்பனைகள் மட்டுமே… நட்ராஜும் அதில் கலந்திருக்க… நிமிடங்களும் கடந்திருக்க
“சரி.. சரி… நமக்கு தேவதை கிடைச்சிருக்காள்ள கொண்டாட வேண்டாம்… இன்னைக்கு நீ எனக்கு ட்ரிட் கொடுப்பியாம் நானும் உனக்கு அதுக்கு ரிட்டர்ன் ட்ரீட் கொடுப்பேனாம்… அப்புறம் நீ எனக்கு ரிட்டர்ன் ட்ரீட் கொடுப்பியா… இப்டியே ரிபிட் மோட்ல போகலாமா…” என மீண்டும் தன் வழிக்கே ராஜ் வந்திருக்க
“உன்னை… திருத்தவே முடியாதுடா… கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்லிட்டு இருக்கேன்… நீ பாட்டுக்கு பேசிட்டு இருக்க… அதுலாம் பாப்பா வந்த பின்னால ட்ரீட்… ரிட்டர்ன் ட்ரீிட் ரிப்பீட்… எல்லாம் பார்த்துக்கலாம் எல்லாம்…. கெளம்பு… கெளம்பு… காத்து வரட்டும்” என்றவளை ராஜ் விட்டால் தானே
“அது என்னடி ’கண்மணி’னு பேர்…… கிருத்தி ஒரு பேச்சுக்கு சொன்னா… உடனே K ல வச்சுட்ட ”
“லாஜிக் லாஜிக்தான்… இனிஅவ சொல்ல முடியுமா என்ன… ‘R P K ‘ எல்லாம் நம்ம ஃபேமிலில வந்துருச்சு…” என்றவளை நட்ராஜ் உன்னை எல்லாம் திருத்த முடியாது என்ற பார்வை பார்த்திருக்க
“பார்த்ததெல்லாம் போது… எனக்குத் தூக்கம் வருது… நான் தூங்கினால் தான் பாப்பாவும் தூங்குவா… ” நட்ராஜ் அப்பாவிப் பார்வை பார்க்க
“என்ன பார்க்கிற… பாப்பா முழிச்சுட்டு இருப்பா… பக்கத்துல வந்த… அவ்ளோதான்… நாங்க தூங்கப் போறோம்… குட்நைட் குட்நைட்… ரெண்டு குட்நைட்… ஒண்ணு என்னோடது… இன்னொன்னு நம்ம இளவரசியோடது” என்ற போதே… பவித்ராவின் முன் மண்டியிட்டவன்… அவள் வயிற்றில் தன் முகத்தை வைத்தபடி
“பாப்பா… நீ சமத்தா தூங்குவியாம்… அப்பா கொஞ்ச நேரம் அம்மாவை கொஞ்சிக்குவேனாம்…” எனும் போதே பவித்ரா சிரித்தபடியே… அவன் தலையில் செல்லமாக அடிக்க
“ஏய்… என் பொண்ணை இப்பவே என் பேச்சைக் கேட்கிற மாதிரி வளர்க்கிறேண்டி… உன் அப்பா வேற சாபம் விட்டுட்டாறு…. டெய்லி என் பொண்ணுக்கு கொஞ்சல் வித் இந்த ப்ராக்டிஸ்தான்… ப்ராக்டிஸ் மேக்ஸ் பெர்ஃபெக்ட் டி… எப்புடி என் இங்க்லீஷ்….” என்றவனைப் பெருமையாகப் பார்த்தபடியே
“சரி சரி எழுந்திருங்க… போதும் போதும் பொண்ணைக் கொஞ்சினது…” என்றவள் சந்தோஷமாகச் சொன்னாலும்… கடைசியாக பொறாமையும் அதில் மிஞ்சியிருக்க…
“என் பொண்டாட்டிக்கு லைட்டா குரல்ல பொறாமை பிசிறு தட்டுதே… கூடாதே… அப்டிலாம் ராஜ் அவன் பொண்டாட்டிய தவிக்க விட மாட்டானே…” என்றபடியே அவளைத் தூக்கிக் கொள்ள… பவித்ராவும் அவனைச் சந்தோசமாகக் கட்டிக் கொள்ள…
“என்ன ஓகேவா… ப்ளீஸ்டி” என்றவன் மறக்காமல் சம்மதமும் கேட்டு கெஞ்ச… அவன் மனைவியும் வெட்கத்துடன் தலை ஆட்ட… நட்ராஜின் மகளோ அப்போதிருந்தே அவள் அப்பாவின் பேச்சைக் கேட்க ஆரம்பித்திருந்தாள்….
---
/* அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ
என்றைக்கும் அந்த சுகம் வருமோ
தள்ளாடும் பொன் மேகம் நான்
எந்நாளும் உன் வானம் நான்
என் தேவா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கண்மலர் மூடிட ஏன் தவித்தேன்
என் விரல் நகங்களை தினம் இழந்தேன்
தாலாட்டுப் பாடாமல் தூங்காது என் பிள்ளை
நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம்
போவோம் இனி காதல் தேசம்
பூவோ இது வாசம்
போவோம் இனி காதல் தேசம் */
Super