hai Friends,
FB வந்தாச்சு... ஹீரோ ஹீரோயின் இல்லாத ஃப்ளாஸ்பேக்.... எந்த அளவுக்கு இருக்கும்னு தெரியலை... பார்க்கலாம்... என்னதான் ராஜ்-பவித்ரா ரொமான்ஸ் எமோஷனல் இருந்தாலும் செண்டர் ஆஃப் அட்ராக்ஷன் ரிஷி கண்மணி தான் எனக்கும் தெரியும்... கண்மணியையாவது சின்ன வயசு கண்மணியா பார்க்கலாம்... ரிஷி கால்ஷீட் இப்போதைக்கு இல்லை... ஆனால் சீக்கிரம் ரிஷி கண்மணிக்கு தாவிடலாம்...
அண்ட்... கண்மணியை போன எபிசோட்ல பிடிக்காமல் போயிருக்கலாம்...
மருது-கண்மணி எபிசோட்ஸ்ல கண்மணியோட பாசம் வித் மருது ஓவரா கூட இருக்கலாம்... என்ன பண்றது நாம ரிஷியோட கண்மணியா பார்த்து பழகிட்டோம்... அதை ஏத்துக்க முடியாதுதான்... மருது கேரக்டரை நல்லவன்னு ஜஸ்டிஃபைலாம் பண்ணல... பண்ணவும் மாட்டேன்... எப்படி ரிஷியோட லைஃப்ல சேஞ் நடந்ததோ... பொறுப்பில்லாதவன் பொறுப்பானவனா மாறின மாதிரி... கெட்ட நண்பர்கள் சேரும் போது நல்லவனும் கெட்டவனா மாறுகிற நிலை... மருதுவின் கதாபாத்திரமும் அப்படித்தான் இங்கு...
ஹீரோயின திட்றவங்களாம் கமெண்ட்ஸை ரிசர்வ் பண்ணி வச்சுக்கங்க... அடுத்த கதைக்கு தேவைப்படும்... சாரி சாரி... ஜஸ்ட் பார் ஃபன்...
இனி அப்டேட் படிக்கலாம்... படிச்சுட்டு கமெண்ட்ஸ் மறக்காமல் போடுங்க...
நன்றி பிரவீணா...
அத்தியாயம்:89
/*நீ பார்க்கின்றாய் என்னுள்ளே மின்னல் தொடும் உணர்வு
நீ பேசினாய் என்னுள்ளே தென்றல் தொடும் உணர்வு
ஒரே முறை நீ கண் பாரடி அதில் கண்டேன் நான் தாயின் மடி
நீயம் நடந்தால் என்னை கடந்தால் ஒரு
பூங்காவே என் மேலே மோதும் சுகம்
கண்ணை அசைத்தாய் என்னை இசைத்தாய் ஒரு
பனி பாறை என்னுள்ளே தோன்றும் கனம்
உன்னை சுற்றிடும் விண் கலம் ஆகிறேன்
உந்தன் பார்வையில் நான் வளமாகிறேன்
நீ ஓர கண்ணில் பார்த்தால் சில லட்சம் மின்னல் வீசும் */
ரிஷி ஹோட்டல் வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு…
’அம்பகம்’ குழுவின் சந்திப்புக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நீண்ட நெடிய அறையில்… ’அம்பகம்’ குழுவின் அனைத்து முக்கியமான அனைத்து நபர்களும் அமர்ந்திருக்க… அதன் நடுநாயகமாக நாராயணன் நின்றபடி… அவர்களோடு பேசிக் கொண்டிருந்தார்… அந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததின் முக்கிய காரணம் கண்மணியை அனைவருக்கும் அறிமுகப்படுத்துவது என்பதுதான்
“சோ… ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான்…. இந்த ’அம்பகம்’ குழுமத்துக்கு அடுத்த வாரிசுனு சொல்வதை விட… இந்த ’அம்பகம்’ குழுமம் உருவானதின் காரணமே என்னோட என்னோட பேத்தி கண்மணிதான்… அவ பேர்ல இந்தக் குழுமத்தை உருவாக்கி என்னோட மொத்த சொத்தையும் அதுல இணைத்துட்டேன்… இதோ இனிமேல் கண்மணிதான் இதோட முழுப் பொறுப்பையும் எடுத்துக்கப் போறாங்க…” என ஆரம்பித்து வந்திருந்த அனைவரின் சந்தேகங்களை எல்லாம் பொறுமையாக விளக்கிக் கொண்டிருக்க…
சட்ட ரீதியாக சந்தேகம் வந்தால் உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்கும் குழுவில் அந்த சந்திப்பில் பார்த்திபனும் பங்கேற்றிருக்க… கண்மணி பொறுப்பேற்பது அவன் குடும்ப உறுப்பினர் பொறுப்பேற்பது போன்ற உற்சாகம் அவனுக்கும்…
ஆக கண்மணியின் வரவை அவனும் பெரிதும் எதிர்பார்த்தபடியே சந்தோசமாக அங்கிருந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தான்…
நாராயணன் நல்ல நேரத்தை அனுமானித்து…. தன் பேத்தியை அழைக்க… கண்மணியும் வந்தாள்….
கூடவே அர்ஜூனும் அவளோடு உள்ளே நுழைய… பார்த்திபனோ இப்போது யோசனையோடு அவர்களைத் தாண்டி வாசலையேப் பார்த்தான் ரிஷியின் வரவை எதிர்பார்த்து…
ஆனால் ரிஷி அங்கு இருந்தால் தானே… இருந்தால் என்பதை விட அவனுக்கு விசயம் தெரிந்தால் தானே அங்கு வருவதற்கு…
“ரிஷி வரவில்லையா” என்று மட்டுமே அவனுக்குத் தோன்ற… வேறு எந்த எண்ணமும் இல்லை…
அதே நேரம்… கண்மணியும் அர்ஜூனும் அருகருகே நின்றிருக்க…
“நாராயணன் பேரனும் பேத்தியும்…. முதல் முறை பார்க்கிறேன்… இவங்க ரெண்டு பேரும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃஃபா… மேரேஜ் திடிர்னு நடந்ததா… ஏன் சொல்ல வில்லை” வந்திருந்தவர்கள் அவர்களுக்குக்குள் கிசு கிசுத்துக் கொண்டிருக்க..
பார்த்திபன் கண்மணியையே பார்த்தபடி இருந்தான்… அவன் அடிக்கடி கண்மணியை ரிஷியோடே சேர்ந்து பார்த்தது இல்லைதான்… ஆனால் திருமணமான பின் கண்மணியின் கண்களில் ஒரு துறுதுறுப்பு இருக்கும்… இன்று அது கண்மணியிடம் சுத்தமாக மறைந்து போயிருக்க… கண்மணியின் வெறுமையான பார்வையில் சட்டென்று அவனது உற்சாகமும் ஏனோ வடிந்தாற் போல உணர்வு…
அதுமட்டுமல்லாது ஒரு காலத்தில் கண்மணி-அர்ஜூன் தான் பொருத்தமான ஜோடி என்று சொன்னவன் தான் இவன்… கண்மணியோடு வாதிட்டவன்தான்… ஆனால் இன்று கண்மணி அர்ஜூனோடு அருகில் இருந்தும்… அப்படி தோன்றவில்லை அவனுக்கு… மாறாக கண்மணியைப் பார்த்த போதே ரிஷியின் நினைவே அவனுக்குள் வந்திருந்தது…
அர்ஜூனின் அருகில் கண்மணி இருந்த போதும்… ரிஷியோடு கண்மணியை நினைத்துப் பார்க்க… கண்மணி ரிஷி இருவரும் பெரும்பாலும் சேர்ந்து அருகருகில் நிற்க மாட்டார்கள் தான்… ஆனால் இருவரின் பார்வைப் பறிமாற்றங்களும்… அவர்களின் விழி பாசைகளும்… இருவரின் ஜோடிப் பொருத்தத்தை பார்க்கும் யாருக்கும் சொல்லி விடும்…
கண்மணி எவ்வளவு தூரத்தில் இருந்தாலும்… அவளின் பார்வை ரிஷியைச் சுற்றியே இருக்கும்… ரிஷி அவளை எவ்வளவு தவிர்த்தாலும்… தவிர்க்க நினைத்தாலும்… கடைசியில் அவளிடம் தான் அவனின் பார்வை முடிந்திருக்கும்… பார்த்திபனே இதைப் பலமுறை கவனித்திருக்கின்றான்… அதுவே அவர்களுக்கு அழகான பொருத்தத்தைத் தந்திருக்கும்…
தானா ஒரு காலத்தில் அர்ஜூன் கண்மணியும் பொருத்தமான ஜோடி என்று சொன்னோம்… இன்று அதை அவனால் எண்ணிக் கூட பார்க்கவே முடியவில்லை… இப்படியெல்லாம் பார்த்திபன் நினைத்துக் கொண்டிருந்த போதே… கண்மணியையும் அவன் கவனிக்காமல் இல்லை…
என்ன தான் அவள் அர்ஜுனோடு… நாராயணனோடு… அங்கிருந்தவர்கள் அனைவரோடும் பேசிக் கொண்டிருந்தாலும்… அவள் கண்கள் அது வெறுமையில் இருந்தது போலத் தோன்ற… ரிஷிக்கும் கண்மணிக்கும் பிரச்சனையோ என்ற எண்ணம் முதன்முதலாக பார்த்திபனுக்குள் தோன்ற ஆரம்பித்திருந்தது….
கண்மணி… ரிஷியின் ஊருக்கு வராததால்… அவனது முக்கியமான நிகழ்வில் பங்கேற்காததால்… அந்தக் கோபத்தில் ரிஷி இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லையோ????…
’சரி கண்மணியாவது ரிஷியைத் தேடுகிறாளா என்று பார்ப்போம்’ என்ற எண்ணம் தோன்ற அந்த எண்ணத்தோடு கண்மணியை பார்க்க… அப்படி எந்த ஒரு தேடலும் கண்மணியின் கண்களில் சுத்தமாக இல்லை…
“ஏன் ரிஷி வரவில்லை… ரிஷிக்கு போன் செய்து பார்ப்போமா” எதற்காக அங்கு வந்தானோ அதெல்லாம் மறந்து போய்… ஏதேதோ எண்ண ஓட்டங்களோடு பார்த்திபனின் ஆராய்ச்சிப் பார்வை கண்மணியையே தொடர்ந்து கொண்டிருக்க…
கண்மணியை அறிமுகப்படுத்தும் படலமும் முடிந்திருந்து…. அங்கிருந்தவர்களுக்கெல்லாம் ஒரு மிகப்பெரிய விருந்து என நாராயணன் அறிவித்திருக்க… அந்த விருந்து நிகழ்ச்சியும் தொடங்கியது…
இதற்கிடையே பார்த்திபன் கண்மணியிடம் தனியே பேச நினைத்து அதற்கான சமயம் எதிர்பார்த்து கண்மணியின் அருகில் சற்று தள்ளி நின்றிருக்க… அர்ஜூனும் கண்மணியும் பேசிக் கொண்டிருந்தனர்…
அங்கு இசை… ஆராவரம் என பல இடையூறுகள் இருந்த போதும்… பார்த்திபனின் கவனம் முழுக்க… கண்மணி மட்டுமே என்றிருந்ததால் அர்ஜுன் கண்மணியின் உரையாடல்கள்.. அவன் காதுகளில் நன்றாகவே விழுந்தது…
“அர்ஜூன்… எனக்கு தலை வலிக்குது… இன்னும் ரெண்டு மணி நேரத்துக்கு வீட்டுக்கு போக முடியாது, இங்கதான் இருக்கனும்னு எனக்கும் தெரியும்… அட்லீஸ்ட் நான் ரூம்ல போய் ரெஸ்ட் எடுக்கவா… இல்லை நான் கண்டிப்பா இங்கதான் இருக்கனுமா… க்ரவ்ட்… சத்தம்லாம் அலர்ஜியா இருக்கு” என அர்ஜூனிடம் கண்மணி சொல்லிக் கொண்டிருக்க…
அர்ஜூனோ
”இருக்கனும் தான்… ஆனா உனக்குப் பிடிக்கலேன்னா வேண்டாம்…” என்ற போதே…
”லைட்டா தல சுத்துற மாதிரி இருக்கு அர்ஜூன் அதுதான்… இந்த பார்ட்டி இன்னும் இரிட்டேட்டா இருக்கு… தாத்தாவுக்காக மட்டும் தான் இங்க இருக்கேன்” என்றவளின் குரலில் வழக்கமான கம்பீரம் இல்லை…
கோடிகளின் அதிபதி… ஆனால் அருகில் இல்லாத தன் பதியின் நினைவால் ஏக்கமுற்ற சதியாக அவளின் நிலை…
இது அவளே ஏற்படுத்திக் கொண்ட நிலை என்று தெரிந்த போதும்… இயல்பில் இல்லாமல் இல்லாமல் இருக்க… குரலில் மட்டுமல்ல… அவளிடமும் தடுமாற்றம் வந்திருக்க
“கண்மணி” என வேகமாகக் கைகளைப் பிடித்துக் கொண்டவனின் கைகளைப் பற்றிக் கொண்டவள்…
“அர்ஜூன்… நான் உங்களை ரொம்பக் கஷ்டப்படுத்துறேன்னு எனக்கு நல்லாவே தெரியுது… “ எனும் போதே அர்ஜூன் அவளை முறைக்க…
“ப்ச்ச்… முறைக்காதீங்க… எனக்கு உடனே விசா ப்ராசஸ் ஆகுமா…. நெக்ஸ்ட் வீக் போயிறலாமா… அவ்ளோ ஃபாஸ்டா கிடைக்குமா” என்றவளிடம்…
“கிடைக்கும்… அது பிரச்சனையில்லை… அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்… ஆனால் நிவேதா வீட்ல தான் தங்குவேன்னு அது என்ன அடம்” அர்ஜூன் கடுப்பாக விசாரிக்க…
“எனக்கு அவங்ககிட்ட ஒரு டீல் இருக்கு… தாத்தாகிட்ட டீல் பேசுன மாதிரி “ என கண்மணி அர்ஜூனைப் பார்த்து கண்சிமிட்ட… அர்ஜூனும் சவாலாகப் பார்வை பார்த்தபடியே சிரித்தவன்
“உன் எண்ணம் அது ஒரு காலமும் நடக்காது… எனக்கு மேரேஜ் ஆனால் தான் கையெழுத்து போடுவேன்னு தாத்தாவை மிரட்டலாம்… அனால் என்கிட்ட அது நடக்காது….”
கண்மணி சிரித்தாள்….
“நான் ஜெயிப்பேன்… பார்க்கலாமா… தாத்தாக்கு என் கையெழுத்து முக்கியம்… அதுக்கு தாத்தா உங்களுக்கு மேரேஜ் பண்ணி வைக்காம ஓய மாட்டாரு… நான் சொல்லிட்டேன்… அர்ஜூன்- நிவேதா மேரேஜ் முடிந்தால் தான் நான் இந்தப் பொறுப்பெல்லாம் ஏத்துப்பேன்னு… கண்டிப்பா நடக்கும்… ஒண்ணும் அவசரமில்லை… டைம் எடுத்துக்கங்க” என்றவள்… அவன் முன் கைகட்டியபடி
“அவ்ளோ ஈஸியா நான் மூணாம் மனுசங்க விசயத்துல தலையிட மாட்டேன்… அது உங்களுக்கே தெரியும்… அப்படிப்பட்ட நானே இன்வால்வ் ஆகிறேனா… நான் ஒரு முடிவோடத்தான் இருக்கேன்னு தெரியலையா அர்ஜூன்…” என்ற கண்மணியை அர்ஜூன் அடிபட்டாற் போல பார்த்தான்
“நான் உனக்கு மூணாவது மனுசனா…” என்ற விதத்தில் அவன் பார்வை இருக்க… கண்மணியோ அதை எல்லாம் கண்டு கொள்ளாமல்…. தன்னைப் பிடித்திருந்த அவனது கையைக் காட்டி….
“சேச்சே அப்படி நினைச்சேன்னா… அன்னைக்கு உங்களை என்னைக் கூட்டிட்டுப் போக வரச் சொல்லி இருப்பேனா… நான் உங்க அத்தை பொண்ணு… அந்த உரிமையை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்… அதே போல உங்க அத்தைமகள்ன்ற உரிமையோடு…. இந்தக் கையை… நிவேதா கையோட சேர்த்து வைக்காமல் விட மாட்டேன்” என்றவளின் குரலில் சின்ன உற்சாகம் வந்திருக்க… அவளது அந்த சந்தோசம் அர்ஜூனை கடுப்பேற்றி இருக்க
”ஏன் கண்மணி இப்படி மாறிட்ட நீ… யாரையும் எந்த ஒரு விசயத்துக்காகவும் கட்டாயப்படுத்த மாட்டியே… உன்னோட அன்பை… பாசத்தைக் காட்டி மிரட்ட மாட்டியே நீ…. உனக்கு நான் வேணும்னா என் அப்பாவை ஏத்துக்கோனு என்கிட்ட சொல்வியோன்னு எத்தனையோ முறை எதிர்பார்த்திருக்கிறேன்… அப்போலாம் விட்டுட்டு… இப்போ இன்னைக்கு இந்த மாதிரிலாம் என்னை… தாத்தாவை உன் பாசத்தால அன்பால விலை பேச ஆரம்பிச்சுட்ட… எங்க போனுச்சு உன் நல்ல குணமெல்லாம்… ரொம்ப கஷ்டமாயிருக்கு கண்மணி… சுயநலமா மாறிட்டியா நீ”
கண்மணி அவனைப் பார்க்க முடியாமல் தலை குனிந்தவளாக
”எனக்கு யாருமே முக்கியம் இல்லை… என் ரிஷிக்கண்ணா மட்டும் தான்… அவரோட சந்தோசம் மட்டும் தான் எனக்கு முக்கியம்னு உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை அர்ஜூன்… என் ரிஷி மட்டும் தான் இப்போ என் மனசுல இருக்காரு… மற்ற யாருமே முக்கியமா படலை… ஒரு காதல் என்னை இந்த அளவுக்கு சுயநலவாதியா மாத்தும்னு நினைக்கக் கூட இல்லை… ”கண்மணி தன் எண்ண ஓட்டங்களோடு இருந்த போதே
“உனக்கு என்னடி ஆச்சு… நீ ஏன் இப்படி தலை குனிந்து நிற்கிற…. அவன் உன்னை இந்த அளவுக்கு மாத்திட்டான்னு நினைக்கும் போது அவனை கொலை பண்ற அளவுக்கு வெறி வருது” எனும் போதே அர்ஜூனை முறைக்க…
”முறைக்காத… சரி நானும் கேட்கிறேன்…. நீ ஏன் அந்த ரிஷியை விட்டு வந்தேன்னு நான் கேட்டேனா???… இப்போ ஏன் அமெரிக்கா வர பிடிவாதம் பிடிக்கிறேன்னு கேட்டேனா???… அப்போ நீ ஏன் என்னோட பிரைவசில தலையிடற… அடேங்கப்பா… அத்தை மகளாம்… அதான் மூணாம் மனுசன்னு சொல்லிட்டியே” அர்ஜூன் கோபத்தோடு கேட்டபடி முன்னே நடக்க
கண்மணி ஏதும் பதில் சொல்லாமல் அவன் பின்னே நடந்து போக… அவர்கள் அறியாமல் பார்த்திபனும் அவர்களைத் தொடர்ந்தான்…
பார்ட்டி நடந்த ஹாலை விட்டு…. வெளியே வந்த அர்ஜூன் இப்போது நின்றான்… அவன் கோபத்தோடு நின்றிருந்த போதே…
“அர்ஜூன்… ஏன் இவ்ளோ கோபம்… நான் சொல்றதை முதல்ல கேளுங்க… என்னோட வாழ்க்கை… ரிஷி… இதெல்லாம் என்னோட தனிப்பட்ட விசயம்… உங்களுக்கான வாழ்க்கை உங்களோட தனிப்பட்ட விசயம் தான்… எனக்கும் ரிஷிக்கும் உள்ள பிரச்சனையை அதோட சம்பந்தப்படுத்திக்காதீங்க… எனக்கு ரிஷி மேல கோபம்… அது எனக்கும் அவருக்குமான பிரச்சனை…” என்ற போதே
”அவன் மேல உனக்கு இவ்ளோ கோபம் இருக்குனா… அப்புறம் ஏன் அவனோட இத்தனை நாள் வாழ்ந்த… இப்போ ஏன் வந்த… எனக்கு விளக்கம் கொடுன்னா கொடுக்கப் போறியா… தாத்தா கேட்டதுக்கே பதில் இல்லை.. பாட்டி ஒருபக்கம் வருத்தத்தில இருக்காங்க… நீ பண்றதெல்லாம் யாரும் தட்டிக் கேட்க மாட்டேங்கிறாங்கன்னு அட்வாண்டேஜ் எடுத்துக்கிறியா… உன் வாழ்க்கைல யாரும் முடிவெடுக்கக் கூடாதுனா… அப்போ என் வாழ்க்கைலயும் நானும் அதை எதிர்பார்ப்பேன் தானே” அர்ஜூன் கடினமான குரலில் அவளைக் கேட்க
“சரி விடுங்க… நான் யார் வாழ்க்கைலையும் தலையிடலை… அதே மாதிரி என்னையும் விடுங்கன்னு சொல்லிடறேன்…. தாத்தா கிட்ட போய்ச் சொல்லிடறேன்… என்னோட வாழ்க்கையை நான் எப்படி பிறந்தேனோ… எப்படி வளர்ந்தேனோ அப்படி பார்த்துக்கிறேன் ” என்றபடி அவனைத் தாண்டி முன்னே செல்ல…
அர்ஜூன் அதற்கு மேல் கோபப்படுவானா என்ன… இப்போதுதான் கண்மணி அவர்கள் வீட்டுப் பெண்ணாகவே வந்திருக்கின்றாள்… எதற்காக அவளைக் காயப்படுத்த வேண்டும்… அவளைப் போலவே தானும் விட்டுப் பிடிப்போம் என்றெண்ணியவனாக
”சரி சரி…. உடனே கோபப்படாத… இப்போ என்ன… யு எஸ் விசிட் போகனும் அவ்ளோதானே… நெக்ஸ்ட் வீக் கன்ஃபார்ம் ஆகிரும்… இப்போவாது சிரி…” எனும் போதே… கண்மணியின் எண்ணம் ரிஷியிடம் சென்றிருக்க… அவள் கண்கள் அவளையுமறியாமல் குளம் கட்ட ஆரம்பித்திருக்க… அர்ஜூனிடம் அதைக் காட்டாமல் அவனை விட்டு வேகமாக நடக்க ஆரம்பித்திருந்தாள்….
சற்று தூரம் சென்றவள்… அர்ஜூன் அறியாமல் கண்களைத் துடைத்துக்கொண்டவளாக
“இந்த விசயம்… நான் போகிற வரை ரிஷிக்குத் தெரியக் கூடாது அர்ஜூன்…” திரும்பாமல் அர்ஜூனின் முகம் பார்க்காமல் சொன்னவள்…. விடுவிடென்று அறையை நோக்கிச் சென்றும் விட்டாள்
---
ரிஷி பைக்கில் சென்று கொண்டிருந்த போதே விக்கி அவனுக்கு தொடர்ந்து அழைத்துக்கொண்டிருக்க…
“எடுக்கலேன்னா… விட்றானா…. ப்ச்ச்…” என எரிச்சலோடு பைக்கை ஓட்டியபடியே அவனின் அழைப்பை எடுக்க
“டேய் மச்சான்… ட்ரைவிங்லயா இருக்க… சரி அப்புறமா பேசுறேன்” விக்கி சொன்ன போதே
“சொல்லித் தொலைடா… அதான் எடுத்துட்டேன்ல” ரிஷி அதே கடுப்போடு கேட்க… விக்கியோ
“ஏன்டா என் மேல இவ்ளோ கடுப்பு…. நான் என்னடா பண்ணினேன்” பரிதாபமான குரலில் விக்கி கேட்க…. ரிஷி தன்னைத்தானே திட்டிக் கொண்டவனாக…
”இல்லடா… வேற டென்ஷன்…. உன்கிட்ட காட்டிட்டேன்… விசயம் என்னன்னு சொல்லுடா... அப்படி என்ன தலை போற விசயம்” என்று ரிஷியும் நண்பனிடம் இயல்புக்கு வந்திருக்க
“ஏண்டா… மேரேஜ் டேட்டை ஆறு மாசம் கழிச்சு குறிக்கச் சொல்லிருக்கீங்க…” விக்கி பேசிக் கொண்டே இருக்க..
“இது எப்போ நடந்தது…” தனக்குள் யோசித்தப்படி இருக்கும் போதே
“கண்மணி தாத்தாகிட்ட கேட்டாளாம்… தாத்தாவும் சரின்னு சொல்லிட்டாரு… ஏண்டா… உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் இந்த கொலைவெறி…. ஏண்டா இன்னமுமாடா என் மேல கோபம் அவளுக்கு… நேரம் பார்த்து பழி வாங்குறா…” எனும் போதே
“ப்ச்ச்… அவ சொன்னா அதுக்கு காரணம் இருக்கும்டா… சும்மாலாம் சொல்லமாட்டா… இப்போ என்ன… ஆறு மாதம் கழிச்சுனு தானே சொன்னா… கல்யாணமே வேண்டாம்னு சொல்லலை தானே… சந்தோஷப்பட்டுக்க… “ மனைவியை கொஞ்சம் கூட விட்டுக்கொடுக்காமல் ரிஷி பேச
அதிர்ச்சியில் வாயடைத்துப் போனது எதிர்முனையில் பேசிய விக்கிதான்…
“உன்னை… நேர்ல வந்தேன்னு வச்சுக்கோ… புருசனையும் பொண்டாட்டியையும் ஒரு கை பார்க்காமல் விட மாட்டேன்… நல்லா ஜால்ரா அடிக்கிறடா நீ… ஆனால் அதுக்கு என் வாழ்க்கைதான் கெடச்சுதா” விக்கி பொங்க ஆரம்பித்திருக்க
”சரிடா… வைடா நான் அப்புறமா பேசுறேன்… வேறொரு முக்கியமான விசயத்துக்கு போயிட்டு இருக்கும் போது நீ வேற” என விக்கிக்கு மேலும் அதிர்ச்சியை பரிசாக அளித்தபடி அலைபேசியை வைத்த ரிஷியின் மூளை வேகமாக அனைத்தையும் கணக்குப் போட ஆரம்பித்திருக்க… கொஞ்சம் கொஞ்சமாக தெளிவு பிறக்க ஆரம்பித்திருக்க… ஓரளவு கண்மணியை எதிர்கொள்ள திட்டங்கள் அவனுக்குள்ளும் உதிக்க ஆரம்பித்திருந்தன….
அடுத்த சில நிமிடங்களில் ஹோட்டலின் முன் சாலையில் உள்ளே நுழைவதற்கான வரிசையில் ரிஷி காத்துக் கொண்டிருந்தான்…
---
அந்த நட்சத்திர ஹோட்டெல்… நகரின் பிரதான சாலையில் இருக்க… சாதாராணமாகவே அங்கு போக்குவரத்து நெரிசல் இருக்கும்… அதிலும் அன்று பல்வேறு பட்ட விழாக்கள்… இன்னும் அதிமுக்கியமாக அமைச்சர் ஒருவரின் மகனின் நிச்சயதார்த்தமும் இருந்திருக்க… கூட்டமும்… வாகன நெரிசலும் தவிர்க்க முடியாமல் போயிருந்தது…
ரிஷி அங்கு வந்து ஹோட்டலின் உள் நுழையும் வரிசையில் காத்திருந்த அதே நேரம்… அந்த ஹோட்டலின் வெளியே செல்லக் காத்திருந்த கார்களின் வரிசையில் அர்ஜூனின் காரும் நின்று கொண்டிருந்தது….
பார்த்திபன் கண்மணியின் அலைபேசிக்கு அழைத்துக் கொண்டேயிருக்க… அவனது அழைப்பைத் தவிர்க்கும் பொருட்டு கண்மணி எடுக்கவில்லை தான்… ஆனால் கண்மணி ஓரளவு பார்த்திபனை அனுமானித்து… அவன் செயலை முன்கூட்டியே உணார்ந்து… உடனடியாக ஹோட்டலை விட்டு வெளியேறியிருந்தாள்… இதோ அர்ஜூனையும் விரைவுபடுத்திக் கொண்டிருந்தாள்
“அர்ஜூன் நான் வீட்டுக்கு போகனும் உடனே…” அர்ஜூனை வற்புறுத்த
“நான் என்ன பண்றது கண்மணி… போகனும்னு அடம் பிடிச்ச… காரை எடுத்தேன்தானே.. ட்ராஃபிக் கிளியர் ஆக வேண்டாமா… என் கைல என்ன இருக்கு… ஏண்டா என்ன ஆச்சு… உடம்புக்கு ஓக்கே தானே…” அவள் தனியாள் இல்லை… வயிற்றில் கருவைச் சுமந்து கொண்டிருப்பதையும் உணராமல் இல்லை… அந்த அக்கறையில் கேட்டபடியே… அவளை உச்சி முதல் பாதம் வரை சரி பார்த்தும் கொண்டான்…
அதே நேரம்… இதுவரை அவள் கர்ப்பமாக இருப்பதை கண்மணி வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை என்பதும் அவனுக்குத் தெரியும்… கண்மணிக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை அதுவும் அர்ஜூனுக்கு புரிந்ததுதான்… அவளாகச் சொல்லும் வரை தானும் கேட்கக் கூடாது என்று முடிவெடுத்திருந்தான்… எப்படியும் அமெரிக்கா பயண ஏற்பாட்டின் போது தெரியத்தானே போகிறது… என விட்டும் விட்டான்…
இதற்கிடையே வைதேகி கூட இவனிடம்
“என்னடா… இந்த நேரத்தில மாப்பிள்ளை கூட சண்டை போட்டு வந்திருக்கா… தெரிந்து பண்றாளா.. இல்லை அவளுக்கே தெரியலையா…. கண்மணி கிட்ட கேட்கிறதா இல்லையா ஒண்ணுமே தெரியலை… இந்த மனுசன் வேற… அவளை யாரும் ஏதும் கேட்கக் கூடாது… அவ எப்போ சொல்றாளோ அப்போ நாம தெரிஞ்சுப்போம்னு என்னை வேற கட்டிப் போட்டுட்டாரு… “
“பாட்டி… பொறுமையா இருங்க… அவளுக்கு தெரியாமல் இருக்க சாத்தியமே இல்லை… அவ்ளோ தெளிவில்லாத பொண்ணா… ஒண்ணுமே தெரியாத பொண்ணுங்க கூட இத்தனை நாள்ள கெஸ் பண்ணியிருப்பாங்க… இவ தெரியாமல் இருக்காளா… ஆனா ஒண்ணு அந்த ரிஷிக்கு தெரியாது அது மட்டும் நிச்சயம்… அவளே வாயைத் திறந்து சொல்ற வரை விட்டுப் பிடிப்போம்….”
வைதேகியிடம் பேசியது ஞாபகத்துக்கு வர… கவலையோடு கண்மணியைப் பார்க்க ஆரம்பித்திருந்தான் அர்ஜூன்…
தலை வலிக்கிறதென்று அறையில் இருந்தவள்… உடனே வீட்டுக்குக்குச் செல்ல வேண்டுமென… அவனை அழைக்க… அதுவும் அபூர்வமாக அவனிடம் கெஞ்சிக் கேட்டிருக்க அர்ஜூன் அவள் கோரிக்கையை நிறைவேற்றாமல் இருப்பானா…. இருவருமாக உடனே ஹோட்டலை விட்டு வெளியேறி இருக்க…
இதை எல்லாம் தடுக்க முடியாமல் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது பார்த்திபனால்… ரிஷிக்கு அழைத்து கண்மணி சென்று விட்டாள்… வர வேண்டாம் என சொல்லலாம் என்று பார்த்தால் அவனோ அலைபேசியை எடுக்கவேயில்லை… வேறு வழி இன்றி பார்த்திபன் ஹோட்டலில் ரிஷிக்காக காத்திருக்க ஆரம்பித்திருந்தான்…
----
கண்மணி காரினுள் இருக்கையில் சாய்ந்தவாறே கண்களை மூடி இருக்க… அதே நேரம் அவளுக்குள் ஏதோ தோன்ற… வேகமாக காரின் வெளியே பார்க்க… அவளது ரிஷி அவள் கண் முன்னே… அவனது பைக்கில் அமர்ந்திருந்தான்…
அவன் பைக்கைக் கண்டவளுக்கு அவள் உள்ளம் பரவசம் ஆனது….
‘தன் ரிஷி…’
’ரிஷிக்கண்ணா ’என்று அழைக்க… அவனிடம் ஓடோடிச் செல்ல அவள் மொத்த உடலும் துடிக்க ஆரம்பித்திருக்க… அதே நேரம் ரிஷி தலைக்கவசம் அணிந்திருக்க
ரிஷியைப் பார்த்து முழுதாக இரண்டு நாட்கள் ஆகியிருந்தது… அவளுக்கு அவனைப் உடனே பார்க்க வேண்டும் போல இருக்க அவனோ முகத்தை மறைத்திருக்க… கைக்கு எட்டும் தொலைவில் அவன் இருக்க… ஆனால் அவன் முகத்தைக் கூடப் பார்க்க முடியாத நிலை…
கண்மணிக்கு அழுகையே வந்து விடும் போல இருக்க… வேகமாக ஓடிப் போய் கட்டிக் கொள்ள வேண்டும் போலத்தான் இருந்தது… அவள் தேகம் தான் அங்கிருந்தது… மனமும் எண்ணமும் அவனருகில் சென்றிருக்க… என்ன செய்வது…. அவள் நிலையை அவளே நொந்து கொண்டவளாக தன்னையே கட்டுப்படுத்திக் கொண்டவள் அவனையே பார்த்தபடி….
“ரிஷி ஹெல்மெட்டைக் கழட்டு ரிஷி… ப்ளீஸ் ரிஷி… ரிஷிக்கண்ணா… எனக்கு உன்னைப் பார்க்கனும் ரிஷிக்கண்ணா” இவள் தனக்குள் உருப் போட்டுக் கொண்டிருந்தபோதே…. ரிஷிக்கும் அவள் எண்ணங்கள் சென்றடைந்திருந்ததோ எனும்படி… அவனும் ஹெல்மெட்டைக் கழட்டி இருக்க… அவனின் முகம் கண்மணியின் கண் மணியில்… அவன் பிம்பத்தை தன் கண்ணில் நிரப்பிக் கொண்ட கண்மணியின் கண்களில் நீர் திரள… அது கன்னங்களிலும் வழிந்திருக்க….
வேறு எங்கும் விழியை அகற்றாமல் அவனையே பார்த்தபடி தன் விழிகளில் அவனநிறைத்துக் கொண்டவள்… அவனை அவன் முகத்தை ஆராயவும் தவறவில்லை….
இந்த சில நாட்களாக… அதிலும் அவனோடு சண்டையிட்டு வந்தபின் இந்த இரண்டு நாட்களாக அவனை சுத்தமாகப் பார்க்காமல் இருக்கும் வேதனை அவள் மட்டுமே அறிவாள்… அவளது ஒரு மனம்… இருக்கும் வரை அவனோடு சந்தோசமாக வாழ்ந்து விட்டு போ என அவளை அவனோடு போகச் சொன்னாலும்… இன்னொரு மனமோ பிடிவாத மனம்… அவளைப் போக விடவில்லையே… வேகமாக அர்ஜூன் பார்க்கும் முன் கண்களைத் துடைத்துக் கொண்டவள்… சன்னலோரம் ஒட்டி அமர்ந்து ரிஷியை ஏக்கத்தோடு பார்த்தபடி அமர்ந்து விட்டாள்…
தன்னவனின் முகத்தில் பெரிதாக மாற்றம் இல்லை…. வழக்கம் போலத்தான் இருந்தான்…. அதுவே அவளுக்கு மிகப்பெரும் திருப்திய அளித்தது
கண்மணிக்கு அவளின் மனம் சொன்னது… ‘இதுதானே நீ எதிர்பார்த்தது… நீ இருந்தாலும் இருக்காவிட்டாலும் அவன் இயல்பாக இருக்க வேண்டும்… இதோ அவன் இயல்பாகத்தான் இருக்கின்றான்… இனிமேலும் இருப்பான்…’ மனம் சொல்ல…
நிம்மதியாக… சந்தோஷமாக… தன்னவனை விழிகளில் நிரப்பியபடி இருந்த போதே…
”கண்மணி…. யாரைப் பார்க்கிற….” என அர்ஜூன் இப்போது அவளிடம் திரும்பி கேட்க…
“யா… யாரும் இல்லை… சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருக்கேன்” ரிஷியிடம் இருந்த பார்வையை மாற்றாமல் அர்ஜூனிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே … ரிஷியின் அருகில் ஒரு இளம் பெண் வந்து நிற்க கண்மணி… சட்டென்று பரபரப்பானாள்…
--
“ஹாய்” என ரிஷியின் அருகே வந்து நின்றிருந்தாள் அந்தப் பெண்…
“ஹாய்…” ரிஷி புருவம் சுருக்கியபடியே அந்நியமாகப் பார்வை பார்த்தபடியே கேட்க…
“என் பேர்…. மேஹா” என அந்தப் பெண் ஆங்கிலத்தில் தன்னை அறிமுகப்பத்திக் கொள்ள…
“ஓ… நான் ரிஷி… சொல்லுங்க” சாதரணமாக அந்தப் பெண்ணிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாலும்… அவள் யார்… தன்னிடம் ஏன் வந்து பேசிக் கொண்டிருக்கின்றாள்… புரியாத அந்நியப் பார்வையோடு ரிஷி அவளைப் பார்க்க
“நான் ஈவண்ட் ஆர்கனைசர்…. இங்க ஒரு ப்ரோகிராம் பண்ண வந்தேன்… இங்க முடிச்சுட்டு அடுத்த ஷோக்கு போயிருக்கனும்… ஆனால் அதுக்குள்ள இந்த ட்ராஃபிக்ல மாட்டிட்டேன்… ஏதோ மினிஸ்டர் வீட்டு ஃபங்க்ஷனாம்… என்னோட காரை எடுக்க முடியலை… அடுத்து ஷோ ஆரம்பிக்கிற டைம் ஆகிருச்சு… நான் இந்த நேரத்துக்கு அங்க இருக்கனும்.” என படபடப்பாக அந்த பெண் சொன்னபடி
“என்னோட கார்… இப்போதைக்கு இங்கேயிருந்து வெளிய போக முடியாதுன்னு சொல்லிட்டாங்க… ஆனால் அங்க நான் போய் ஆகனும் ரிஷி…” கவலையோடு ரிஷியிடம் ஏதோ அவளுக்கு மிகத் தெரிந்தவன் போல… பழகியவன் போல சொல்ல ஆரம்பித்திருக்க… ரிஷியின் முக ராசி… யாரையும் அவனிடம் நெருங்க வைத்துவிடும் போல… இன்றும் அப்படியே நடந்திருக்க
“அதுக்கு… நான் என்னங்க பண்ண முடியும்” ரிஷி கடுப்பாகத்தான் கேட்க நினைத்தான்… ஆனால் அவன் என்று எந்தப் பென்ணிடம் கோபப்பட்டிருக்கின்றான்… இன்றும் கோபப்பட முடியவில்லை… கடுப்பாகக் கேட்க நினைத்தான்தான்… பழக்க தோசம்… தோழமையான தொணியில் கேட்டு முடித்திருந்தான் ரிஷியும்…
ரிஷி கேட்ட விதத்திலேயே அந்தப் பெண்ணின் முகம் பிரகாசமடைந்திருக்க… அதைப் பார்த்துக் கொண்டிருந்த கண்மணியின் புருவத்திலோ… இலேசாக பொறாமை முடிச்சுக்கள்… தான் பேச முடியாமல் இங்கே இப்படி இருக்க… யாரோ ஒருத்தி தன் ரிஷியோடு பேச முடிகிறதே என்ற இயலாமையில் வந்த பொறாமையே தவிர… மற்றபடி சந்தேகத்தில் எல்லாம் இல்லை…
இதெல்லாம் அறியாத அந்தப் பெண்ணோ….
“நீங்க பைக்ல வந்திருக்கீங்க… ஈசியா இந்த ஹோட்டல் ட்ராஃபிக்ல இருந்து எஸ்கேப் ஆகிறலாம்… ஜஸ்ட் பக்கத்து பஸ்டாப்ல இறக்கி விட்டுட்டீங்கன்னா போதும்… இந்த ஹெல்ப் மட்டும் ரிஷி…ப்ளீஸ் ரிஷி” என அந்தப் பெண் உரிமையோடு கொஞ்சும் தொணியில் கெஞ்சிக் கேட்க…
சற்று தள்ளி நின்றிருந்த காரைப் பார்த்தபடியே… யோசித்தபடியே…. சில நொடிகள் இருந்த ரிஷி… தனக்குள் இலேசாக புன்னகைத்துக் கொண்டவனாக
“ஹ்ம்ம்ம்.. ஆபத்துக்கு பாவமில்லை… சரி உட்காருங்க…“ என அந்தப் பெண்ணை அமரச் சொல்ல… காரில் அமர்ந்திருந்த கண்மணிக்குள்ளோ… ஏசியிலும் சுர்ரென்று அனலடிக்கச் செய்தது… பல்லைக் கடித்தபடி அமர்ந்தவளால் வேறு என்ன செய்ய முடியும்….
“என் அப்பா பைக்ல என் அம்மாவைத்தவிர வேற யாரையும் ஏத்த மாட்டாரு… போனால் போகுதுன்னு இவனுக்கு கொடுத்தால் ஊர்ல இருக்கிற எல்லாரையும் ஏத்திட்டு போயிட்டு இருக்கான்” அவனை ஏதாவது சொல்லி திட்ட வேண்டுமென்று…. ஏதோ கிடைத்த காரணத்தை வைத்து ரிஷியைத் தனக்குள் திட்டியபடி இருந்த போதே….
“என்ன கண்மணி… நொடிக்கு நொடி ஆயிரம் ரியாக்ஷன் கொடுக்கிற…” கேட்ட அர்ஜூனிடம் பதிலேதும் சொல்லாமல் ரிஷியை மீண்டும் பார்க்க ஆரம்பித்திருந்தாள் கண்மணி
”ஏங்க பைக்ல உட்கார்ந்து அனுபவம் இருக்கா.. உட்கார்ற விதத்தைத் பார்த்தாலே என்னையும் தள்ளிவிட்ருவீங்க போல… நீங்க ஈவண்ட் ஆர்கனைஸ் பண்ண போகனும்னு என்னைக் ஹாஸ்பிட்டல்ல ஈவண்ட் ஆர்கனைஸ் பண்ண வச்சுறாதீங்க… பார்த்து உட்காருங்க… பைக்கை எடுக்கவா…” என்றபடியே பைக்கை எடுத்தவன் மீண்டும் தான் வந்த திசையிலேயே ரிஷி விட்டவனாக… கண்மணியின் கண்களில் இருந்து மறைந்திருக்க… அர்ஜூனின் காருக்கும் இப்போது வழி கிடைத்திருக்க… அவனும் சாலையை நோக்கி விரைய… அமர்ந்திருந்த கண்மணியின் கண்களோ… சாலையில் அவளவனைத் தேடியபடியே…
“அர்ஜூன்…. ரிஷி கால் பண்ணினா… எடுக்காதீங்க… எதுவா இருந்தாலும் லீகலா அப்ரோச் பண்ணச் சொல்லிருங்க…” என்றவளை அர்ஜூன் புரியாத பார்வை பார்த்தபடி கேள்வி கேட்க வாய் திறந்த போதே
“ப்ளீஸ் ஏதும் கேட்காதீங்க…. தலை வலிக்குது” என்று கண்களை மூடி இருந்தாள் கண்மணி
----
”ஹாய்… அப்புறம்… செம்ம பார்ட்டி போல” உற்சாகமாக கேட்டபடி பார்த்திபனின் அருகில் போய் பைக்கை நிறுத்த…
அவன் போனில் பரபரத்து பேசிய விதம் என்ன… இப்போது அவன் வந்து உற்சாகமாக வந்து நிற்கும் விதம் என்ன… குழப்பமும் ஆச்சரியமும் கலந்து பார்த்தபடியே
“ஏன் ரிஷி… உன்னை எப்போ வரச்சொன்னா… எப்போ வந்து நிற்கறீங்க…” பார்த்திபன் கேட்க
“கண்மணி கிளம்பிட்டா…. அதுதானே….” என்ற ரிஷியின் நக்கலான வார்த்தைகளில் பார்த்திபன் கேள்வியாகப் பார்க்க
“நான் வரும்போதே… அவ வெளியில் வந்துட்டா… என்னை எப்படி அவாய்ட் பண்றதுன்னு இருக்கிறவ… என்னை பார்க்கிறதுக்கு மட்டும் சான்ஸ் கொடுத்திருவாளா என்ன” என ரிஷி கடுப்பை தனக்குள் மறைத்தபடி சொல்ல…. பார்த்திபன் ஆச்சரியத்துடன் பார்க்க
“அந்த அர்ஜூன் காரைப் பார்த்தேன்…“ என ரிஷி உணர்ச்சியே இல்லாமல் சொன்னவனாக
”நம்மை நினைக்கிறவங்களை ஆயிரம் மைல் தூரத்தில இருந்தாலே நாம் ஃபீல் பண்ணுவோம்… இதுல கண்ணுக்கெட்டிய தூரத்தில்… இருக்கிறதை ஃபீல் பண்ண முடியாதா… அவளும் அந்தக் கார்ல இருந்தா தானே… ”
“அப்போ பேசி இருந்திருக்கலாம்ல… அட்லீஸ்ட் பார்த்து இருந்திருக்கலாமே… ரிஷி… என்னாச்சு அவங்களும் சரி இல்லை… நீங்களும் இப்படி பேசுறீங்க… ஏன் இப்படி… உங்க ரெண்டு பேருக்கும் என்னதான் ஆச்சு… என்னதான் கோபம்னாலும் கண்மணி உங்களப் பார்த்தால் சரி ஆகி இருப்பாங்க… பேசுங்க ரிஷி…. அவங்களப் பார்க்க பாவமா இருக்கு… நீங்க கூட நார்மலா இருக்கிற மாதிரிதான் இருக்கு… கண்மணிகிட்ட அவங்க தேஜஸே போன மாதிரி ஃபீல்” பார்த்திபன் அங்கலாய்க்க…
ரிஷி அதை எல்லாம் கண்டுகொள்ளாதவன் போல…
“பார்த்தி… எனக்கு ஒரு நல்ல வக்கீல் வேண்டும்… “எனும் போதே பார்த்திபன் அதிர்ச்சியாகப் பார்க்க
“அட என்ன லுக்கு… டிவோர்ஸ் கேஸ் பைல் பண்ண்றதுக்கு வக்கில்னா மயக்கமாயிருவீங்களா என்ன…” அடுத்தடுத்த ரிஷியின் வார்த்தைகளில் பார்த்திபன்… ஆயிரம் வெடிகுண்டுகள் வெடித்தது போல உணர்வுகளைக் காட்ட
ரிஷி அவனிடம்…
“என்ன ஆச்சு…. அடுத்த அதிர்ச்சி வேணுமா…. அந்த டிவோர்ஸ் எனக்கும் கண்மணிக்கும் தான்… நமக்குப் பிடிச்சவங்க நாம என்ன கொடுத்தால் சந்தோசமா இருப்பாங்கன்னு தெரிந்தால் அதைக் கொடுத்துறனும் பார்த்தி… “ என தோளைக் குலுக்கியவன்…
“என் பொண்டாட்டி… என்கிட்ட இதுதான் அவ சந்தோசமா என்கிட்ட இப்போதைக்கு எதிர்பார்க்கிறா… கொடுத்துறனும் தானே” ரிஷி என்னமோ பரிசு கொடுப்பது போல பேசிக் கொண்டிருக்க
“ரிஷி… என்ன இப்படி பேசுறீங்க… நீங்களா… உங்க ரெண்டு பேரையும் ஆதர்ச தம்பதிங்கள்னு நாங்க நினைக்க… இவ்ளோ அசால்ட்டா டைவர்ஸ்னு பேசறீங்க… கேட்கிற எனக்கே அதிர்ச்சியா இருக்கே…” என்ற பார்த்திபனிடம்
“உங்களை நாங்களா நினைக்கச் சொன்னோம்… நம்ம வாழ்க்கைல நமக்கெதிரா எல்லோரையும் பரமபதம் விளையாடக்கூடாது…. அதுல எதிரியோட மூவ் என்னன்னு நமக்குத் தெரியாது… சோ களத்தை மாத்திறனும்… சதுரங்க வேட்டைதான் என்னோட களம்… எதிரியோட மூவ அஹெடா திங் பண்ணி… அவங்களைத் திக்குமுக்காட வைக்கனும்” என ரிஷி இதழ் வளைந்த நக்கல் பாவனையில் சொல்ல
“கண்மணி என்ன உங்க எதிரியா… ஏன் ரிஷி இப்படி பேசுறீங்க… அவங்க உங்க கூட இல்லைனு எனக்கே இவ்வளவு மனசு கஷ்டமா இருக்கு… நீங்க என்னடான்னா இப்படி பேசுறீங்க… வருத்தமே இல்லையா” என பார்த்தி கோபத்துடன் கேட்க….
அவன் கேட்ட அனைத்து கேள்விகளுக்கு இல்லை என்பது தலை ஆட்டியவனாக
“வருத்தப்பட்டா வந்து நின்றுவாளா… ”
”அவ எதிரி இல்லை… அவளோட தேவையில்லாத எண்ணங்கள்… அது இப்போ எனக்கு எதிரா நிற்குது… அதுக்கு எதிராதான் போராடப் போறேன்…” என்றபடியே…. மணியைப் பார்த்தவன்
“சரி பார்த்தி…. லாயரை அரேஞ்ச் பண்ணுங்க… மீட் பண்ணலாம்… கேஸ் ஃபைல் பன்றதுக்கு முன்னால லாயர் மூலமா கண்மணியை மீட் பண்ணனும்… சில விசயங்கள் தெளிவுபடுத்த எனக்கு அந்த சந்திப்பு தேவை… அதை லாயர் மூலமாகவே தெரியப்படுத்துங்க… நாராயணன் சார் கிட்ட… அவங்க பேத்திகிட்ட பேசனும்னு சொல்லி மீட்டிங் ஏற்பாடு பண்ணிருவோம்”
ரிஷியின் குரல் தெளிவாக இருக்க… பார்த்திபனையும் அவன் கேள்வி கேட்கவே விடவே இல்லை… அதன் பின் பார்த்திபனிடம் பொதுவான விசயங்களை பேசிவிட்டு வீட்டை நோக்கிச் செல்ல… அங்கோ இலட்சுமி… ரிதன்யா… விக்கி என அத்தனை பேரும்… கண்மணி இல்லத்திற்கு வந்து சேர்ந்திருந்தனர்…
வந்தவர்களுக்கு விசயம் தெரிந்திருக்க… நட்ராஜை கேள்விகளால் துளைத்தெடுத்துக் கொண்டிருக்க… அனைவரின் கேள்விகணைகளுக்கும் பதில் சொல்லமுடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த நட்ராஜை ரிஷிதான் வந்து காப்பாற்றினான்…
“கண்மணி அவ தாத்தா பாட்டி வீட்டுக்கு போனது அவ்ளோ தப்பா… ஏன் இவ்ளோ தூரத்துக்கு பெரிய விசயமா பேசுறீங்க” ரிஷி இப்போதும் கண்மணியை விட்டுக் கொடுக்காமல் பேச…
“நிறுத்துடா… அவளுக்கு சப்போர்ட் பண்ணாத…. விக்கி தாத்தா எல்லாம் சொல்லிட்டார்…“ இலட்சுமி சுள்ளென்று விழ…
ரிஷியோ கோபத்தோடு விக்கியைப் பார்க்க…
“என்னை எதுக்குடா முறைக்கிற… நிவேதா மூலமா அவருக்கு தெரிய வந்திருக்கு… மறைக்கனும்னு நினைக்காத… என்னடா நடந்துச்சு”
”ஓகே… கண்மணி என்னை விட்டுப் போயிட்டானு நீங்க எல்லோருமே முடிவு பண்ணிட்டீங்க போல… ஆனால் எனக்கு அவ என்கூடவே இருக்கிற மாதிரி ஃபீல் பண்றேன்… சோ எனக்கு இது பிரச்சனையா தெரியலையே… அதுனால நீங்களாம் இந்த விசயத்தை விட்டுட்டு… அவங்கவங்க வேலையைப் போய்ப் பாருங்க ” ரிஷி அவர்களிடம் சொல்ல
”இவன் என்ன லூசா” என்ற விதத்தில் அத்தனை பேரும் ரிஷியை ஒரு மாதிரியாகப் பார்க்க ஆரம்பித்திருக்க… எதையும் கண்டு கொள்ளாமல் ரிஷி மேலே தன் அறைக்குச் சென்று விட…
“அம்மா பார்த்தீங்களா… எந்த நிலைமைல நம்ம அண்ணனை கொண்டு வந்து விட்ருக்கானு… இதுக்குத்தான் நான் அவ்ளோ சொன்னேன்… படிச்சு படிச்சு சொன்னேன் யாரும் கேட்கலையே… விக்கி… அந்தக் கண்மணி பெரிய இவளா என்ன… அவளுக்கு இருக்கு… அவ இஷ்டத்துக்கு வாழ… ஆட்டம் போட என் அண்ணன் வாழ்க்கைதான் கிடைத்ததா… வாங்க… அவளைப் போய் என்ன ஏதுன்னு கேட்கல… என் பேரு ரிதன்யா இல்லை” ரிதன்யா ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்றிருக்க
விக்கி வேறு வழியின்றி அர்ஜூனுக்கு போன் செய்ய…
“என்னது கண்மணியைப் பார்க்கனுமா… கண்மணி என்ன அந்த பிச்சைக்காரன் கட்டின வீட்ல இருந்த கண்மணியா என்ன… நீங்க நினச்ச நேரத்தில எல்லாம் பார்க்கிறதுக்கு… பேசுறதுக்கு… அவ உங்க கூடலாம் பேசவே தயாரா இல்லை… வேற வேலை இருந்தா பாருங்க… கண்மணியை வந்து பார்க்கிறதுக்குப் பதிலா உன் ஃப்ரெண்ட் ரிஷிக்கு அட்வைஸ் பண்ணி… வேற பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி லைஃப செட்டில் பண்ணி வை…” அர்ஜூன் போனை வைத்து விட… விக்கி அர்ஜூன் பேசியதை ரிதன்யாவிடம் சொல்ல… ரிதன்யா இலட்சுமியிடம் சொல்லி விட… இன்னும் பிரச்சனை பெரிதாக ஆகி விட்டிருந்தது…
இலட்சுமி பொங்கி விட்டார்… தன் மகன் நிலையை நினைத்து அந்த ஆதங்கத்தோடு புலம்ப ஆரம்பித்திருக்க… ஒரு கட்டத்தில் அவருக்கு உடல்நிலையும் மோசமாகி விட… உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் இருக்க….
மீண்டும் தங்கள் அன்னை பழைய நிலைக்கே போய்விடுவாரோ என மொத்தக் குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்திருக்க… இலட்சுமியின் நிலை கேள்விப்பட்டும் கூட கண்மணி வரவில்லை…
தன் குடும்பத்தின் நிலைமை மீண்டும் பழைய நிலைக்கே சென்று விடுமோ…. கவலையில் ரிதன்யாவின் பொறுமை பறந்திருக்க… தன் அண்ணனோடு சண்டை பிடிக்க ஆரம்பித்திருந்தாள்…
“இதுக்குத்தான்… அவளை மேரேஜ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வந்தியா… என் அம்மாக்கு மட்டும் ஏதாவது ஆனது…. அவளை கொலை பண்ணிருவேன்… உன்னையும் சும்மா விட மாட்டேன்…” நட்ராஜ் இருந்தார் என்றெல்லாம் பார்க்கவில்லை ரிதன்யா….
நிலைமை இப்படி இருக்க… நல்ல வேளை இலட்சுமிக்கு பெரிதாக ஆபத்தில்லை…. அடுத்த நாளே இயல்புக்கு வந்திருந்தார்… ஆனாலும் ரிதன்யாவின் ஆத்திரம் அடங்க வில்லை… கண்மணியை நட்ராஜ் முன்னேயே திட்டிக் கொண்டிருக்க… விக்கிதான் அவளை வெளியே இழுத்து வந்திருந்தான்
”எனக்கு மனசு ஆற மாட்டேங்குது விக்கி… அந்தக் கண்மணி அவ புத்தியை காமிச்சுட்டா பார்த்தீங்களா… நீங்க கூட இப்போலாம் அவளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு பேசிட்டு இருந்தீங்களே… அவ நல்ல பாம்பு… எப்போ விசத்தைக் கக்கனுமோ அப்போ கக்கிட்டு போய்ட்டா பார்த்தீங்களா… நான் என் அண்ணண்ட்ட எத்தனை தடவை சொல்லியிருப்பேன்…. கேட்டானா… இப்போ பாருங்க… எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கான்னு… இப்போ கூட அவன் அவள ஒண்ணும் சொல்ல மாட்டேங்கிறான்… எனக்கென்ன வந்ததுன்னு கல்லு மாதிரி இருக்கான்… எங்களுக்காகத்தானே அவளைக் கல்யாணம் பண்ணேன்னு சொன்னான்… எங்க இப்போ நாங்க அதே நிலைமலதான் இருக்கோம்… அவளைப் போய்க் கூட்டிட்டு வரச்சொல்லுங்க பார்க்கலாம்… நல்லா ஏமாத்திட்டு போய்ட்டா… சத்தியமா அவ நல்லாவே இருக்கமாட்டா” ரிதன்யா அழ ஆரம்பித்திருந்தாள்
“ஏய் ரிது… பொறுமையா இரு… அர்ஜூன் கிட்ட பேசினேன்… அத்தை இப்படி இருக்காங்கன்னு சொல்லியும் கண்மணி வர மாட்டேன்னு சொல்லிட்டாளாம்..”
ரிதன்யா… அழுகையோடு அதிர்ந்தும் பார்க்க..
“அர்ஜூன் வரச் சொல்லிருக்காரு…. அவரைப் போய்ப் பார்ப்போம்… என்ன நடந்ததுன்னு கேட்போம்… நமக்கும் ஒரு தெளிவு கிடைக்கும்… இவனும் ஒழுங்கா சொல்ல மாட்டேங்கிறான்… நட்ராஜ் சார்க்கும் ஏதும் தெரியலேன்னு சொல்றாரு… அவர்கிட்டயாவது பதில் கிடைக்குதான்னு பார்ப்போம்” என விக்கி ரிதன்யா இருவருமாக அர்ஜூனைப் பார்க்கச் செல்ல…
மீண்டும் கண் திறந்த இலட்சுமியோ… படுத்த படுக்கையிலேயே கண்மணிக்கு சாபம் விட ஆரம்பித்திருக்க… ரிஷி யாரிடமும் ஏதும் பேச வில்லை… யார் பேச்சையும் அவன் தடுக்க நினைக்கவும் இல்லை
மருத்துவமனை அறையின் வெளியே வந்து நின்று.... தனியே வந்து நின்றபடியே வெட்ட வெளியை வெறிக்க ஆரம்பித்தவனின் கண்களில்… இன்றும் மூன்றாம் பிறை அவனுக்கு காட்சி அளிக்க… ஆனால் சில நிமிடங்களில் அதுவும் மெல்ல மெல்ல மேகங்களில் மறைந்தும் போயிருக்க…
“எப்படிடி என்னை விட்டுட்டு இருக்க… என்கிட்ட ஏன் ஏதும் சொல்ல மாட்டேங்கிற.. என்னை எவ்ளோ அவமானப்படுத்தினாலும் எனக்கு கஷ்டம் இல்லடி… ஆனால் நீ எவ்ளோ கஷ்டப்பட்டுட்டு இருப்பியோன்னு நினைக்கும் போதுதான் எனக்கு என் மனசு வலிக்குது… நீ யார்கிட்டயும் மனசு விட்டும் பேச மாட்ட… ஆனால் ஒண்ணுடி… நான் கவலைப்பட மாட்டேன்… அழ மாட்டேன்… நீ கார்ல என்னைப் பார்த்தும் பேச முடியாமல் தவிச்ச வேதனை எனக்கு மட்டும் தாண்டி தெரியும்… நான் வேற உன்னை வேதனைப்படுத்திட்டேன்… சாரிடி… சீக்கிரம் எல்லாத்தையும் சரி பண்ணுவேன்… ” இப்படியெல்லாம் தைரியமாக இருந்தவன் தான் அவர்களது வளைகாப்பு தினத்தில் மொத்தமாக உடைந்து போயிருந்தான்… எது நடக்க கூடாது என்று கண்மணி அவனை விட்டு விலகினாளோ… அது நடக்கவும் செய்தது…
வெட்ட வெளியை வெறித்தபடி அமைதியாக நின்றிருந்தவனின்… அருகில் ரித்விகா வந்து ஆறுதலாக அவன் கையைப் பிடிக்க… ரிஷி இப்போது தங்கையிடம் பார்வையை வைக்க
“அண்ணா… அண்ணிக்கு உன் மேல அவ்ளோ பிரியம்னா… அது எனக்கு நல்லாவே தெரியும்… நீ எப்படி கவலைப்படாமல் இருக்கியோ… அதே மாதிரிதான் நானும்… எனக்கு கண்மணி அண்ணி மேல சந்தேகமே இல்லை… கண்டிப்பா அவங்க நம்ம வீட்டுக்கு வருவாங்க” ரித்விகா நம்பிக்கையோடு சொல்ல.. தன் தங்கையை மார்ப்போடு அணைத்துக் கொண்டவன்…
“தேங்க்ஸ்டா… அவளை யாருமே புரிஞ்சுக்கலை…. அம்மா கூட புரிஞ்சுக்கலை… உன் அண்ணி மேல இங்க யாருக்குமே நம்பிக்கை இல்லைடா… நீ ஒருத்தி இருக்கியே… அவளை புரிஞ்சுகிட்டியே… இது போதும்டா…” என்ற தன் அண்ணனைப் பார்த்து சிரித்த ரித்விகா
“அண்ணியை சீக்கிரமா கூட்டிட்டு வந்துருண்ணா… நீ கூட்டிட்டு வந்துருவ….”
”கண்டிப்பாடா… அவ ரொம்ப கஷ்டப்பட்ருக்காடா… இப்போ என்னால மறுபடியும் கஷ்டப்பட்டுட்டு இருக்கா… அதுதாண்டா எனக்கு வேதனையா இருக்கு” ரிஷி தன் தங்கையிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே…
கண்மணியைப் பற்றிய இலட்சுமியின் வார்த்தைகளின் வீச்சில்… நட்ராஜால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை
“என்னைப் பார்த்தாதான்… கவனிச்சாதான்… அதுக்கு ஆயிரம் ஜென்மத்துக்கும் அவளுக்கும் செருப்பா இருப்பேன்…. ஆனால் எனக்கு என் மகன்… அவன்னு வந்துட்டா… எனக்கு உங்க பொண்ணு முக்கியமில்லை சம்பந்தி”
“அவ நல்லாவே இருக்கமாட்டா… என் பையன் என்ன பாவம் பண்ணினான்… எத்தனையோ தடவை அவகிட்ட சொல்லி இருக்கேன்… என் பையன் உன்னை அவன் உயிரை விட மேலா நினைக்கிறான்… கை விட்றாத தாங்க மாட்டான்னு… இவன் அவ மேல வச்சிருக்கிற பாசம் எல்லை மீறுற மாதிரி நான் ஃபீல் பண்ணும் போதெல்லாம் அவகிட்ட சொல்லுவேனே… நான் ஏன் அவரை விட்டு போறேன்னு சொல்லிட்டு… இப்படி பண்ணிட்டு போயிட்டாளே… சத்தியமா சொல்றேன்… பெத்த வயிறு பத்திட்டு எரியுது சம்மந்தி… என் புள்ளையை ஏமாத்துனா அவ நல்லாவே இருக்க மாட்டா” எனும் போதே நட்ராஜ் கைகூப்பி கதற ஆரம்பித்தவராக
“அம்மா… என் புள்ளைக்கு சாபம் கொடுக்காதீங்கம்மா… அவ ஏற்கனவே பல சாபத்தை சுமந்து கஷ்டப்பட்ட பொண்ணும்மா… இப்போ நீங்களும் கொடுக்காதீங்க….” என நட்ராஜ் பதற
“அப்படி என்ன… என் பையன் அனுபவிச்சதை விடவா உங்க பொண்ணு பட்ருக்கா… எல்லாமே தெரிஞ்சும் இப்படி பண்ணிட்டு போய்ட்டாளே… படு பாவி… ” என்ற போதே
“என் பொண்ணு ஜனிச்ச நாள்ள இருந்தே சாபத்த தான்மா வாங்கிருக்கா… இன்னுமா அவ அனுபவிக்கனும்” என ஆரம்பித்தவர்…. ரிஷியின் அன்னையிடம்… தன் மனைவி… மகளின் கடந்த காலம் சொல்ல ஆரம்பித்திருக்க…
அதே நேரம் ரிதன்யா அர்ஜூனிடம்
“நீங்க யாருமே என்ன ஏதுன்னு கேட்க மாட்டீங்களா… அவ என்ன சொன்னாலும் தலையை ஆட்டிட்டு சம்மதம்னு சொல்லிருவீங்களா… “
“ஆமாம்… எங்களுக்கு எங்க வீட்டு பொண்ணு… அவ வார்த்தைதான் முக்கியம்”அர்ஜூன் அலட்சியமாகச் சொல்ல
“ஹ்ம்ம்… அவளுக்கு பணம்லாம் முக்கியமில்லைனு இத்தனை நாள் நெனச்சுட்டு இருந்தேன்… ஆனால் இப்போதான் தெரியுது… இந்த மகாராணி இந்த வாழ்க்கைக்குத்தான் அவ ரொம்ப நாளா ஆசைப்பட்டுட்டு இருந்தா போல…பணத்தாசை பிடித்த கேவலமான பிறவி… என்ன பண்ணினால் மொத்த சொத்தும் அவ பேருக்கு வரும்னு ப்ளான் பண்ணி பண்ணிருக்கா… இந்த சொத்துதான் முக்கியம்னா… என் அண்ணன் வாழ்க்கைல எதுக்கு வரணும்… தோ நீங்கதான் இருக்கீங்களே… கல்யாணம் பண்ணி இருக்க வேண்டியதுதானே… என் அண்ணனுக்கு வருங்காலத்தில வரப் போகிற சொத்தையும் கணக்குப் பண்ணி இருப்பா போல” எனும் போதே அர்ஜூன்… அவளிடம்
“யாரு கண்மணியா… பணத்தாசை பிடித்தவளா… இந்த மகாராணி வாழ்க்கையா… உன் அப்பாவான்னு ஒரு பாயிண்ட் வந்தப்போ… அந்த நட்ராஜ் அவ வாழ்க்கையையே அழி்க்க நினைத்தவன்… அவனால பைத்தியக்கார ஆஸ்பத்திரி வரைக்கும் போனவ… அந்த அப்பாதான் வேணும்னு போனவளுக்கு இப்போ பணம் முக்கியமா…” என்றவனை விக்கியும் ரிதன்யாவும் அதிர்ச்சியாகப் பார்க்க…
கண்மணியின் கடந்த காலம் பவித்ரா-ராஜ் இவர்களிடமிருந்து ஆரம்பித்திருந்தது…
--
கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன்…
”இப்போ… உடனே… வீட்டுக்கு வரனும்” தெருமுனை பொது தொலைபேசி கூண்டுக்குள் இருந்து பவித்ரா… தன் கணவனுக்கு கட்டளைகள் போட்டுக் கொண்டிருக்க
“ஏண்டி… உனக்கு மத்தியான டியூட்டினுதானே சொன்ன.. கிருத்தி வந்திருப்பாளே… இப்போ எதுக்கு என்னை வீட்டுக்கு வரச் சொல்ற…” நட்ராஜ் எதிர்க் கேள்வி கேட்க
“இப்போ வரலைனு வச்சுக்க… நான் இந்த பூத்லயே இருப்பேன்… என்ன கேள்விலாம் கேட்கிற” என்றவளிடம்
“என்னன்னு சொல்லுடி… ஒண்ணுமே சொல்லாமல் வா வான்னா என்ன அர்த்தம்”
“நோ… சொல்லமாட்டேன்….”
“நீ பைக்கை எடுத்துட்டீயா” பவித்ரா தன் பிடிவாதத்திலேயே நின்றிருக்க
அடுத்த நொடி…
“வைடி… இப்டி பிடிவாதம் பிடிச்சுதான் என்னை உங்கப்பாக்கு எதிரி ஆக்குன…” சலித்தவனிடம்….
“அப்போ வர மாட்ட… சரி விடு….” என்றபடியே
“லவ் யூ டா ராஜ்… லவ் யூ…. லவ் யூ” ஆரம்பித்தவள் அதை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்க
“நீ வர்றேன்னு சொல்ற வரை… இதைக் கேட்டுட்டே இரு… லவ் யு… லவ் யூ ராஜ்…” பவித்ராவின் அதிரடி ரகளை ஆரம்பித்திருக்க
“வர்றேண்டி.. வர்றேண்டி… ஃபோன் பூத்ல இருக்கேண்டி… இங்கேயே சாச்சுருவ போல… வீட்டுக்கு வர வேண்டாமா” என ராஜ் சிரித்தபடி வைத்தவனாக… தன் பட்டறைக்கு வந்தவனாக
“வாசு…. வீடு வரைக்கும் போயிட்டு வந்துறேன்... ஷெட்டைப் பார்த்துக்க…” தன் மனைவி வாங்கிக் கொடுத்திருந்த வண்டியை நிறுத்திய இடத்திற்கு வந்திருக்க… அந்தப் பைக்கின் அருகில் ஒரு சிறுவன்… சிறுவன் என்று கூட சொல்ல முடியாது…. 12 வயதுக்குக்கு மேல் இருக்கும்…
வ்ண்டியின் மேல் ஏறியபடியே சாவியைப் போட்டவனாக…. அந்தச் சிறுவனிடம்
”என்னடா… என்ன வேணும்… யாரு நீ… பைக்கையே வெறிச்சுப் பார்த்துட்டு இருக்க…” ராஜ் பைக்கை ஸ்டார்ட் செய்திருக்க…
“அண்ணா… ஏதாச்சும் வேலை இருக்குமான்னு கேட்க வந்தேன்னா” என்ற போதே….
“சின்னப் பசங்களை எல்லாம் வேலைக்கு வச்சுகிறதில்லை… கெளம்பு கெளம்பு” என்றபடி அவன் பதிலை எல்லாம் எதிர்பார்க்காமல் ராஜ் விரைந்து விட… சோகமாய் மருது அவன் போன திசையையேப் பார்த்தபடி நிற்க… வாசு அங்கு வந்தான்…
“டேய்… நீ அண்ணாகிட்ட கிட்ட கேட்டா உனக்கு வேலை கிடைக்காது… நேரா வீட்டுக்குப் போ… பவி அக்கா இருப்பாங்க… அவங்ககிட்ட கேளு… உனக்கு கண்டிப்பா வேலை கிடைக்கும்” என சொல்லி மருதுவை வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தான் வாசு…
---
/* உந்தன் விழிக்குள் என்னை அடைத்தால் ஒரு
அழகான சிறைச்சாலை இதுவல்லவா
உன்னை பிரிந்தால் எந்தன் விழிக்குள் ஒரு
முன்னூறு முள் வந்து நடமாடுதே
கொன்று விட்டதே உன் ஒரு பார்வையே
அன்பு செய்திடு என் அதிகாரியே
நீ பூமி பந்தில் வந்து நடமாடும் குட்டி சொர்க்கம்
நீ கல்லில் அல்ல பெண்ணே கனியாலே செய்த சிற்பம்
உந்தன் கண்கள் அது ஒரு அங்குலம்
ஆனால் அதில் என் உயிர் சங்கமம் */
Nice update
Nalla purithal ritvi ku kooda super
Rishi kooda irunda avaluku edum agathu
Ana ipa tan bp raise agum adutan valaikapula nadanthirukum thonudu
Adiye aarumasamomla Rishi vitruvana