ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
88-2 அண்ட் 88-3 மொத்தமா போடத்தான் நினைத்தேன்... ஒரே நேரத்தில் ஃபுல்லா ஸ்பெல் அண்ட் செண்டென்ஸ் செக் பண்றது கஷ்டமா இருக்கு.... இன்னைக்கு நைட் இல்லைனா நாளை 88-3 போட்ருவேன்... நோ வொர்ரி.
தேங்க்ஸ்...
88-3 ல மீட் பண்றேன்...
நன்றி
பிரவீணா...
அத்தியாயம் 88-2
“இதுதான்மா நடந்தது… ” மகிளா ரிஷிக்கு நடந்த வாக்குவாதங்களை விடுத்து… ஊரில் நடந்த அனைத்தையும் மகளிடம் சொல்லி முடித்த நட்ராஜ்…
“நீ ஊருக்கு வரலைன்ற ஒரு குறையைத் தவிர… வேறு ஒரு குறையும் இல்லடாம்ம்மா… எல்லாம் சந்தோசமா நல்லபடியா முடிந்தது… நீ வந்துருக்கலாம்”
மகள் கொடுத்த டீயைக் குடித்தபடியே அவளோடு பேசிக் கொண்டிருக்க… கண்மணியும் கேட்டபடியே சமைத்துக் கொண்டிருக்க… ரிஷி இப்போது அங்கு வந்திருந்தான்…
ரிஷியைப் பார்த்த நட்ராஜ் உடனே…
“மணிடாம்மா… ரிஷியும் வந்துட்டாரு…” கண்மணியிடம் சொல்லியபடியே… ரிஷியிடம் திரும்பியவராக..
“டீ குடி ரிஷி… மணி போட்ருச்சு… உட்காருங்க” சொன்ன நட்ராஜிடம்…. ஏதும் வெளிக்காட்டிக் கொள்ளாமல்…
“இ… இல்ல மாமா… நானே கிச்சனுக்கு போய் எடுத்துக்கிறேன் ” என்றபடி… அடுத்து நட்ராஜின் வார்த்தைகளை எல்லாம் எதிர்பார்க்காமல்…. வேகமாக சமையலறைக்குள் நுழைந்திருந்தான் ரிஷி..
அதே நேரம் இவன் வந்ததையும்… அவள் அருகில் வந்து நின்றதையும் கவனித்தும் கவனிக்காதது போல் அடுப்பில் கவனம் வைத்திருந்தவளின் தோள் தொட்டு கோபமாக தன்புறம் திருப்பியவனுக்கு… கோபம் உச்சத்தில் இருந்ததுதான்… ஆனாலும் அதே வேகத்தில் காட்ட முடியாத நிலை… காரணம் வெளியே நட்ராஜ் அமர்ந்திருந்த காரணத்தால்…
குரலை உயர்த்தாமல்…. பல்லைக் கடித்தபடி அடிக்குரலில் அவளிடம் பேச ஆரம்பித்தான் ரிஷி…
“ஏய்… என்னடி… நினச்சுட்டு இருக்க… ஏதேதோ பண்ணிட்டு இருக்க.. கணக்க்கை முடிச்சிருவோம்ன்ற… அப்படி இப்படின்னு அன்னைக்கு அப்படி பேசின… இன்னைக்கு நம்ம ரூம்ல பெயின்ட் அடிச்சு வச்சுருக்க… உன் திங்க்ஸ்… ஏன் ஃபோட்டோஸ் கூட காணோம்…”
அவன் மெதுவாகப் பேசினாலும் படபடவென்று பேசிக் கொண்டிருக்க… அவளோ அவன் புறம் நிதனாமாக திரும்பியவளாக…
“பேசலாம் ரிஷி… ஒரு டென் மினிட்ஸ்ல சமையல் முடிஞ்சுரும்… நிதானமா பேசலாம்” என்று சாதாரணமாகப் பேச… ரிஷியோ பல்லைக் கடித்தபடி…
“ஏண்டி… இங்க ஒருத்தன் வெந்நீரைக் கால்ல கொட்டின மாதிரி… பதறி வந்துருக்கேன்… உனக்கு சமையல் ரொம்ப முக்கியமோ…” என்றபடியே… அவளைப் பேசவிடாமலே… ஸ்டவ்வை ஆஃப் செய்ய
“ஹலோ… ஹலோ… என்ன பண்றீங்க” என்று அவள் தடுத்த போதே… தடுத்த அவள் கைகளைத் தன்வசம் கொண்டுவந்தவனாக… அடுப்பை அணைத்தவனிடம்
“சரி சரி… பேசலாம்…… ஆனால் “ரிஷி… இங்கயிருந்து என்ன பேசமுடியும்… ஹால்ல பேசுவோம்… என்னை விடுங்க” அவனிடமிருந்து விலக முயற்சித்தபடியே… அதே நேரம் கண்மணி பதற்றமின்றி சொல்ல
ரிஷியும் இப்போது தன் பிடியை தளர்த்தினான்… கோபமாக இருக்கின்றேன் என்று சொல்பவள்… தன் அருகாமையை… நெருக்கத்தை… இப்படித்தான் எதிர்ப்பாளா…???
உணார்ந்த போதே… கொதித்த பாலில் நீர் துளி பட்டால் அடங்கும் பால் போல ரிஷியின் கோபமும் அடங்கியது… அதில் அவன் குரலும் தணிந்து வெளி வந்தது
“அங்க மாமா இருக்கார்… நீ பண்ணி வச்சுருக்க வேலைக்கு… அவரை வேற நடுவுல வச்சு நாம பேசனுமா…” அவன் சொன்னபோதே அவனிடமிருந்து கைகளை விடுவித்தவள்… அவனை விட்டு தள்ளி நின்றவளாக
“என்னதான் நான் இந்த ’கண்மணி’ இல்லத்தை நிர்வகித்தாலும்… அப்பாதானே ஹவுஸ் ஓனர்… அவருக்கு தெரிய வேண்டாமா?… ஹால்ல பேசினா என்ன தப்பு… நீங்க வீடு காலி பண்ணப் போறிங்கன்னு அவர்கிட்டதான் முதல்ல சொல்லனும்…” கண்மணி அவன் கண்களைப் பார்த்தபடி அவனிடம் பேச…
அடங்கி இருந்த ரிஷியின் கோபம் மீண்டும் வந்திருக்க… அதிலும் முன்காட்டிலும் அதிகமா உயர்ந்திருக்க… அந்த வேகத்தில்… அவள் கைகள் மட்டும் தன்வசம் இருந்தபடியால் மொத்தமாக அவளை இழுத்து தன்வசம் கொண்டு வர முயற்சித்தபடியே
“அப்டியே அறஞ்சேன்னு வச்சுக்க… ஜன்னலைத் தாண்டி வெளியில போய் விழுவ… “ என்றவனின் நெருக்கத்தையும்… கோபத்தையும் கொஞ்சம் கூட இலட்சியம் செய்யாமல்…
“ப்ச்ச்..” என்றபடி அவனை அலட்சியம் செய்தவளாக அவனை விட்டு எப்படியோ விலகி நடக்க…
”ஏய்…பேசிட்டே இருக்கேன்… நீ பாட்டுக்கு போய்ட்டே இருந்தா என்னடி அர்த்தம்” என்றவன் தன்னைத் தாண்டிச் சென்ற அவளை நிறுத்தும் பொருட்டு கைகளை நீட்ட…. அதில் கண்மணி அவனிடமிருந்து விலக முயற்சித்திருக்க… இவர்களின் இந்தப் போராட்டத்தை அந்த சிறிய சமையலறை தாங்குமா என்ன..
அங்கிருந்த பொருட்கள் மேல் ரிஷியின் கைப்பட்டு அனைத்தும் கீழே விழ ஆரம்பித்திருக்க… அவன் நேரம் அந்தப் பாத்திரங்கள் வெற்று பாத்திரங்கள் வேறு… பெரும் சத்தத்துடன் தரையில் விழ ஆரம்பித்திருக்க… என்ன ஏதென்று புரியாமல்… நட்ராஜ் பதறி அடித்தபடி இப்போது உள்ளே வந்திருந்தார்…
அவரைப் பார்த்தவுடன் ரிஷி சட்டென்று தன் கைகளை கண்மணியிடமிருந்து விடுவித்தவனாக… அதே நேரம் அவரிடம் ஏதும் காட்டிக் கொள்ள விரும்பாதவனாக…
“மேல இருந்து திங்க்ஸ் எடுக்கச் சொன்னா மாமா… அ… அது கை நழுவி கீழே விழுந்து” என ரிஷி சமாளிக்க ஆரம்பிக்க… கண்மணியோ…
“இல்லப்பா… இவர் பொய் சொல்றாரு…. இவருக்கும் எனக்கும் பிரச்சனைதான்… என் மேல கோபமா இவர் கையைப் பிடித்து இழுக்கும் போது… நான் வெளிய வர ட்ரை பண்ணப்போ… கைதவறுதலா பாத்திரத்துல பட்ருச்சு” கண்மணியின் குரல் ஙஞணநமன வாசிக்க ஆரம்பித்திருக்க…
கண்மணி போட்டுடைத்த உண்மை வார்த்தைகளில் ரிஷி அதிர்ந்து அவளைப் பார்த்தபடி நின்றிருக்க… நட்ராஜனோ கண்மணியைப் பார்த்து புன்னகைத்தவராக…
“உங்க ரெண்டு பேருக்கும் வேற வேலை இல்லை… மணி என்னடா இது விளையாட்டு…” என்றவரைப் பார்த்து கண்மணியோ அதிர்ந்து நின்றாள்…
---
அடுத்த பத்தாவது நிமிடம்… அதிர்ந்த பார்வை பார்க்கும் பார்வை …மருமகன் மகளுக்கு அடுத்து நட்ராஜின் முறையாகிப் போயிருந்தது… காரணம் மகள் சொன்ன வார்த்தைகளில்
“என்ன மணி சொல்ற… தெரிஞ்சுதான் பேசுறியா இல்லையா… ஏன் ரிஷியும் சம்பந்தி அம்மாவும் வீட்டைக் காலி பண்ணனும்…. ” நம்ப முடியாத தொணியில் ரிஷியைப் பார்த்தபடியே நட்ராஜ் கண்மணியிடம் கேட்க
“அப்பா… என்னைப் பொறுத்தவரை… கஷ்டப்பட்றவங்களுக்குத்தான் இந்தக் ’கண்மணி’ இல்லத்தில வாடகைக்கு வீடு… இப்போ இவங்களுக்கு என்ன குறை… வசதி வாய்ப்பெல்லாம் வந்திருச்சு தானே… இதோ இந்த ஏரியாவிலேயே… இவரோட வீடு மறுபடியும் இவருக்கே வந்திருக்கும்தானே…. அங்க போய்த் தங்க வேண்டியதுதானே”
தன் மகள் சொல்லச் சொல்ல… வழக்கமாக அவள் அப்படித்தான் வீடு வாடகைக்கு விடுவாள்… நட்ராஜுக்குமே அது தவறாகப் படவில்லை… அதே நேரம் மகள் தன்னை விட்டுச் சற்றுத் தூரமாகப் போய் விடுவாளே… அந்தக் கவலைதான் அவருக்கு… அதனால் ரிஷியிடம்
“ரிஷி மணி சொல்றதும் சரியாத்தானே படுது.. இப்போ என்ன… மூணு தெரு தள்ளி வந்தால் உங்களைப் பார்க்கப் போறேன்… எனக்கொன்னும் பிரச்சனை இல்லைப்பா… நான் தனியாளா இருக்கிறது புதுசா என்ன”
ரிஷிக்கோ சுவரில் முட்டிக் கொள்ளாத குறைதான்…
“மாமா..” என்று மட்டுமே சொல்ல முடிந்தது… அடுத்த வார்த்தை ஏன் அடுத்த எழுத்து கூட வாயில் வரவில்லை அவனுக்கு…
எங்கு ஆரம்பிப்பது… எப்படி ஆரம்பிப்பது…. சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் ரிஷி தத்தளித்த நிலையில் நின்று கொண்டிருக்க
“நீங்க ஏன்ப்பா தனியாளா இருக்கப் போறிங்க… நான் உங்க கூடத்தான் எப்போதும் இருப்பேன்” என கண்மணி பட்டென்று சொல்ல.. நட்ராஜ் இப்போதும் அப்பாவியாக… அவளிடம்
“ரிஷி போனா…. நீயும் போய்த்தானே ஆகனும்… அவரை வீட்டைக் காலி பண்ணச் சொல்றதும் நீதானே… அப்புறம் எப்படி நீ இங்க இருப்ப” என நட்ராஜ் விளக்கம் கொடுத்து அவளைப் பார்க்க
“நான் அவர் கூட போனாதானே… எனக்கு அவர் கூட போக இஷ்டம் இல்லைப்பா….”
கண்மணி முதன் முதலாக ரிஷியை விட்டு பிரிவதற்கான வார்த்தைகளை சொல்லி தன் தந்தையைப் பார்க்க… நட்ராஜின் முகம் இப்போது உணர்வுகளின் தாக்கத்தில் மொத்தமாக ஆட்கொள்ளப்பட்டிருக்க
மகளைப் பார்க்காமல்… ரிஷியைப் பார்க்க… அவனோ கண்மணியையேப் பார்த்தபடி இருக்க… அந்த முகத்தில் ஆயிரம் எரிமலைகள் வெடித்துச் சிதறிய பாவனை…
மீண்டும் வேகமாக மகளிடம் திரும்பியவர்
“போக இஷ்டம் இல்லைனா புரியலை எனக்கு… ரிஷிதான் இங்க இருக்கேன்னு சொல்றாரே… நீதானே போகச் சொல்ற” நட்ராஜின் வார்த்தைகளில் தடுமாற்றம் தானாகவே வந்திருக்க
“சரி தெளிவா சொல்றேன்… எனக்கு அவர் கூட வாழ இஷ்டம் இல்லை… இப்போ புரியுதா” சொன்னவள் இப்போது… தன் தந்தையைப் பார்க்கவில்லை… மாறாக கணவனைப் பார்த்துச் சொல்ல…
ரிஷி இப்போதும் அவளைப் பார்த்தபடியே கல் போல் நிற்க… அங்கு மௌனம் மட்டுமே இருக்க…
ரிஷி கோபமாகக் கத்துவான்… குறைந்தபட்சம் ஏதாவது பேசுவான் என நட்ராஜ் நிதானிக்க… ரிஷியோ வாயைத் திறக்காமல் இருக்க… நட்ராஜே மீண்டும் பேச ஆரம்பித்தார்
“என்னடாம்மா இது… ஏண்டா இப்படிலாம் பேசுற.. என்ன ஆச்சு உனக்கு… ரிஷி கூட வாழ இஷ்டம் இல்லையா… நீ சொல்றதை யாராச்சும் நம்புவாங்களா… ரிஷி மேல நீ உயிரையே வச்சுருக்க… இங்க எல்லாருக்குமே தெரியுமே… விடு யார்க்குத் தெரியுமோ இல்லையோ உன் அப்பா எனக்குத் தெரியாதா????”
ரிஷியின் கண்கள் அவனையுமறியமால் ஈரத்தை இலேசாக படர விட ஆரம்பித்திருக்க… வேகமாக தலையைவேறு புறம் திரும்பி… தன்னை நிதானப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்க… கல் போன்று நின்று பேசிக் கொண்டிருந்த கண்மணியோ தன் தந்தையைப் பார்த்து வெற்றுப் புன்னகைப் புரிந்தவளாக
“பிடிக்கலைன்றதை காட்டிக்கலை…. அதுனால இவ்ளோ நாள் உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை….“
அடுத்த ஈட்டியை மகள் இறக்கியிருக்க
“என்ன சொல்ற பிடிக்கலையா… ஏன் ஏன் பிடிக்கலை….”
”பிடிக்காதவ மாதிரிதான் நடந்தியா… இல்லை அவரோட வாழ்ந்தியா நீ… பிடிக்கலையாம் பிடிக்கலையாம்…” படபடத்தவர் பின் கொஞ்சம் தன்னைக் கட்டுக் கொண்டுவந்தவராக
“அதை ஏன் இப்போ சொல்ற…“ நட்ராஜின் குரல் மகளிடம் உயர்ந்திருக்க… தந்தையின் கடினக் குரலில்… கண்மணி புருவம் மட்டும் உயர்த்திப் பார்க்க
”இல்லை பிடிக்கலைனு நான் ரிஷிக்கு உன்னைக் கேட்டப்போதே சொல்லியிருக்க வேண்டியதுதானே…” நட்ராஜ் தடுமாறினாலும்… மருமகனுக்காக மீண்டும் பேச ஆரம்பித்திருக்க
“நீங்க எப்போப்பா என்கிட்ட சம்மதமான்னு கேட்டிங்க…” கண்மணியின் குரல் இப்போது தழுதழுத்திருக்க…
“ரிஷி மேல உயிரையே வச்சிருக்கேன்னு இன்னைக்கு இவ்ளோ நிச்சயமா சொல்ற உங்களுக்கு… அப்போ அந்த டைம்ல என் மனசுல யார்… ப்ச்ச்… என்ன இருந்ததுன்னு உங்களுக்கு தெரியாமல் போனது ஏன்ப்பா… இல்லை தெரிஞ்சிருந்தும் உங்களுக்கு அதுல இஷ்டமில்லையா” கண்மணி நட்ராஜின் முகம் பார்த்துக் கேட்க
நட்ராஜ் ஒரு நிமிடம் ஆடிப் போனார்தான் இருந்தும்…
“ஏண்டா.. இப்படிலாம் இன்னைக்குப் பேசுற… என்னடா ஆச்சு உனக்கு…”
“அதெல்லாம் விடு…. உனக்கு ஏன் ரிஷியைப் பிடிக்கலைனு சொல்ற…. காரணம் சொல்லு”
“ஆயிரம் காரணம் இருக்குப்பா…” கண்மணி சொன்னபோதே
“ஆயிரம் வேண்டாம்… ஒரு…. ஒரே ஒரு காரணம் சொல்லு..” ரிஷி குரல் அவளருகில் ஒலிக்க… கண்மணி அவனைப் பார்க்க விரும்பாமல் வேறு புறம் திரும்பிய போதே
“சொல்லுடி…” கல் போன்ற இறுகிய முகத்துடன்… ரிஷி அவள் முன் வந்து நின்றவன்… அவள் தாடையை பிடித்து தன் புறம் திருப்ப… அவனை நிமிர்ந்து பார்த்தாள் கண்மணி….
”ரிஷி… ரிஷி… இரு… கோபப்படாத நான் கேட்கிறேன்…” மகளை அவனிடமிருந்து இழுத்து தன்புறம் கொண்டு வந்தவராக… அங்கிருந்த இருக்கையில் அமர வைத்தவர்…. தன் மகளின் முன் மண்டியிட்டு அமர்ந்தபடி…
“மணி… அப்பா கேட்டேன் தான்… ஆனால் கட்டாயப்படுத்தல தானே” நட்ராஜ் தவிப்பாக மகள் முகம் பார்த்துக் கேட்க… அவர் சொல்வது சரிதான் என்பது போல தலை அசைத்தாள் கண்மணி
”அப்புறம் ஏண்டா… பிடிக்கலைனா அப்போதே சொல்லியிருக்க வேண்டியதுதானே…. இவ்ளோ நாள் கழித்து ஏன் சொல்லனும்… அப்போ பிடிக்கலைனே வச்சுக்கலாம்… ஆனால் அதுக்கப்புறம் ரிஷி கூட சந்தோசமாதானே இருக்க… அப்புறம் ஏன்டாம்மா இப்படி திடிர்னு இந்த முடிவு…” நட்ராஜ் மகளிடம் படபடக்க…
“ஏன்னா எனக்கு உங்களைப் பிடிக்கும்… அவ்ளோ பிடிக்கும்… நீங்க கேட்டுட்டீங்களே அப்பா… மறுக்க முடியலை… அதுனால அப்போ சம்மதம் சொன்னேன்” கண்மணி அவர் கண்களைப் பார்த்து சொன்னவள்
தந்தையைப் பாசப்பார்வை பார்த்தபடியே…
“உங்களுக்காகத்தான்ப்பா சொன்னேன்… வேற யார்க்காகவும் இல்லை… எனக்கு என்னப்பா தேவை… யாரோ ஒருத்தன் … அவன் குடும்பம் கஷ்டப்பட்டா எனக்கென்ன வந்தது… என் வாழ்க்கையையே நான் தியாகம் பண்ணனுமா… ஆனால் நீங்க கேட்டுட்டீங்களேப்பா”
மூச்சுக்கு முன்னூறு முறை… வாய் ஓயாமல் அவள் அழைக்கும் அவளின் ரிஷிக்கண்ணா யாரோ ஒருவனா… ரிஷிக்கு இதயம் துடிக்க மறந்து நின்று பின் துடிக்க ஆரம்பிக்க… கண்மணியோ இன்னும் பேசிக் கொண்டிருந்தாள்..
“ஒரு பொண்ணோட மனசை சுக்கு நூறாக்கி அவளை நடைபிணமா மாத்த நினச்சவனை கல்யாணம் பண்ணக் கேட்டிங்கப்பா… நான் என்ன பண்ண… பிடிக்கலைதான்… அதே நேரம் உங்க மூலமா எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது… தியாகமா பண்ணாமல்… அவனுக்கு பாடம் புகட்ட நினைத்தேன்… அவ்ளோதான்… ” இப்போது ரிஷியைப் பார்க்காமல்..
“இந்தக் காரணம் போதுமா அவருக்கு…” இளக்காரமாக தன் தந்தையிடம் கேள்வியை வைக்க
இப்போது ரிஷியின் முகத்தில் கோபம் எல்லாம் இல்லை… மிக மிக இயல்பாக மாற்றிக் கொண்டவனாக… அவன் கண்மணியைப் பார்த்து மென்னகை புரிந்தவனாக
“ஓ மே…ட்….டம்… மகிளாவுக்காக நீங்க என்னைப் பழிவாங்க நினச்சீங்களா…”
நட்ராஜிடம் திரும்பி
“மாமா சொன்னேன் தானே… என்ன நான் சொன்ன அளவு கொஞ்சம் கம்மி… மகிளாகிட்ட எக்ஸ்ட்ரா அறை இவ்ளோதான் நான் யோசிச்சேன்… உங்க பொண்ணு வேற லெவல்… ப்ளானை வேற லெவல்ல எக்சிக்யூட் பண்ணிருக்காங்க” எனும்போதே கண்மணி ரிஷியைப் புரியாமல் வேகமாகப் பார்க்க
“என்ன பார்க்கிற… மகிளாகிட்ட அறை வாங்கிட்டு வந்து நிற்கிறேன் போதுமா… சந்தோசம் தானே உனக்கு” எனும் போதே அவன் குரல் தடுமாற ஆரம்பித்தாலும்…. கண்மணியின் பார்வை மாற்றத்தில்….
“நீங்க ஏங்க மேடம் இப்போ இந்த லுக் விடறீங்க… அது பரவாயில்லை… நீங்கதான் கத்தியையே இறக்கிட்டிங்களே… நாம நம்ம கதைக்கு வருவோம்… அதாவது நீங்க உங்க… காதலைத் திகட்ட திகட்ட காட்டி… என்னை அதுல திக்குமுக்காட வச்சுட்டு… அதுக்கப்புறம் பிரிவோட வலியைக் காட்டி கிளம்புறீங்களா… ஓ…. ஓ… ரிவெஞ்ச் பார்முலா…. என்கிட்டேயாவா” என்றவன்… முகம் இப்போது நக்கல் பாவனையை விட்டு தீவிர பாவத்தில் மாறி இருக்க… அவள் முன் சொடக்கு போட்டவனாக
“கதை நல்லால்ல… நம்புற மாதிரி சொல்லு…. ஓகே வா… ஒண்ணு பண்ணு… நீ நாவல் எழுதுறவதானே… கதையா எழுது… ஹீரோவோட முதல் காதலுக்கு மனைவி கோவில் கட்ற மாதிரி எழுதி புத்தகமா போடு… என் வாழ்க்கைல எல்லாம் உன் கதை எழுதுற திறமையக் கொண்டு வராத… என்ன புரிஞ்சதா.. ” என்றவன்… நட்ராஜிடம் திரும்பி
“மாமா அவகிட்ட இனி ஏதும் கேட்க வேண்டாம்… மேடம் கதை ஆசிரியர்ல.. ஆயிரம் காரணம் என்ன… பத்தாயிரம் காரணம் கூட வச்சுருப்பா… அதைச் சொல்லவும் செய்வா… ஆனால் அதை எல்லாம் நான் நம்பனுமே… அட என்னை விடுங்க மாமா… நீங்க நம்புவீங்களா அதைச் சொல்லுங்க… நீங்களே நம்ப மாட்டீங்க…. அப்புறம் எதுக்கு டைம் வேஸ்ட் பண்ணிட்டு…” என்றபோதே கண்மணி அவனை முறைக்க
“முறைக்காதடி… உன் 1000 காரணத்தையும் ஆயிரம் புத்தகமா மாத்த ட்ரை பண்ணு… அதை வேணும்னா படிக்கிறேன்… சரியா… இப்போ எனக்கு முக்கியமான வேலை இருக்கு வெளில கிளம்புறேன்… அப்புறம் சாப்பிட்றாத… வந்து ஊட்டி விட்றேன்… ரொம்ப நாள் ஆன மாதிரி ஃபீல்” ஏக்கத்தோடு… எகத்தாளத்தையும் சேர்த்து பேசியபடியே…
“மாமா… சொல்லி வைங்க இவகிட்ட… என்னை வீட்டை விட்டு போகச் சொல்றதெல்லாம் இருக்கட்டும்… நைட் வீட்டுக்கு வரும்போது… இவ திங்க்ஸ் எல்லாம் மறுபடியும் மாடி ரூம்க்கு வந்திருக்கனும்னு… “ என்றவன்…
“மாமா… டைம் பாருங்க… நீங்க மாத்திரை போடற டைம்ல இது… போட்டுட்டு வாங்க…” நட்ராஜிடம் சொல்ல… மருமகன் மகளிடம் ஏதோ தனியாகப் பேச நினைக்கிறான் என்பதை…. நட்ராஜும் அவனைப் புரிந்து கொண்டு அறைக்குள் சென்றிருந்தார்…
இப்போது தன்னருகே தனித்து அமர்ந்திருந்த கண்மணியை நோக்கி குனிந்தவனாக
“பரவாயில்லை…. ஹார்ட் சிம்பளை மறைத்து பெயிண்ட் அடிச்சா என்ன… மறுபடி போட முடியாதா என்ன… நைட் உனக்கும் எனக்கும் அதுதான் வேலை…. அப்புறம் அந்த வேலை முடிச்சுட்டு… இந்த மூணு நாளா… இதோ இந்த நிமிசம் வரை நீ பண்ணிட்டு அடாவடிக்கெல்லாம் பதில் சொல்லவும் ரெடியா இருந்துக்கோ” ரிஷி சொல்லிக் கொண்டிருக்கும் போதே
“அப்பா” கண்மணி சத்தமாக கத்தி நட்ராஜை அழைக்க…
“ஏய்… இப்போ எதுக்குடி காட்டுக் கத்து கத்துற”…. ரிஷி காதைத் தேய்த்தவனாக
நட்ராஜ் மீண்டும் பதறி வெளியே வர… கண்மணி வேகமாக எழுந்தபடி
“இன்னும் ஒரு வாரத்துக்குள்ள ரிஷியும் அவரோட ஃபேமிலியும் நம்ம வீட்டைக் காலி பண்ணனும்… இல்லை… பண்ண வைப்பேன்… அசிங்கப்படாமல் வீட்டை விட்டு காலிப் பண்ணிட்டு போகச் சொல்ல்லுங்க” கண்மணி ரிஷியிடம் பேசுவதைத் அறவே தவிர்த்தவளாக நட்ராஜிடம் சொல்ல…
நட்ராஜ் ஏதோ சொல்லப் போக… அவரைக் கைகாட்டி பேசாமல் நிறுத்தியவன்
“என்கிட்ட பேசுடி… என்னை ஏன் அவாய்ட் பண்ற… நான் சொல்றேன் கேட்டுக்கோ… போக மாட்டேன்… என்ன பண்ணனுமோ பண்ணிக்கோ… சரி இப்போ மேடம் நீங்க சொல்லுங்க… என்ன பண்ணிருவீங்க நீங்க” ரிஷி அவளிடம் நேருக்கு நேராக சவால் விட
“என்னைப் பற்றி தெரியாமல்… நான் யார்னு தெரியாமல்… விளையாட்டா பேசிட்டு இருக்கீங்க ரிஷி… “ கண்மணி விரல் காட்டி எச்சரித்த போதே… அவள் விரலைப் பற்றியவன்
“தெரியுமே… நல்லாவே தெரியுமே… கண்மணி இல்ல வீட்டுக்காரம்மா எவ்ளோ கறாரானா ஹவுஸ் ஓனர்னு தெரியுமே… ஆனால்… இந்த ரிஷியோட கண்மணி யார்னு எனக்குத் தெரியுமே… மேடம்க்குத்தான் தெரியலை… உங்களுக்கும் காட்டிருவோம்” ரிஷி நக்கலாகச் சொல்ல… வேகமாக அவனிடமிருந்து தன் கைகளை இழுத்துக் கொண்டவள்…
“ஒழுங்கா காலி பண்ணுங்கன்னு சொன்னா கேட்க மாட்டீங்க… அப்போ சரி… பார்த்துக்கலாம்… இன்னைக்கு ஈவ்னிங் உங்க பொருளை எல்லாம் தெருவுல வந்து அள்ளிட்டு போங்க” கண்மணி சொல்லியபடி எழுந்து போக முயற்சிக்க…
“ஒரு நிமிசம்… ஒரு நிமிசம்… இருங்க மேடம்… அதுக்குள்ள போனா என்ன அர்த்தம்… இங்க ரெண்டு பஞ்சாயத்து அந்தரத்துல நிற்குது… ஒண்ணு மேடம் என்கூட வாழ மாட்டீங்க… ரெண்டாவது நான் கண்மணி இல்லத்துல இருக்கக் கூடாது… முதல் பஞ்சாயத்து… வாய்தாவுக்கே வராமல் போற அளவுக்கு செல்லாக் கேசு… அதுனால அதை விட்றலாம்… ரெண்டாவதுதான் அதாவது வீடு பிரச்சனை… அதுதான் இப்போ நாம பேசித் தீர்க்க வேண்டிய பஞ்சாயத்து…”
என்ன நடக்கிறதென்றே புரியாமல் நட்ராஜ் இருவரையும் கவலையோடு பார்த்துக் கொண்டிருக்க
“என்னை வீட்டை விட்டுப் போகச் சொல்ல நீ யாரு… ஜஸ்ட் வாடகை வசூலிக்கிற ஓனரோட பொண்ணு… அவ்ளோதானே… சோ இவர் சொல்லட்டும்… எங்க இவரைச் சொல்லச் சொல்லு…. என்னை காலிப் பண்ணச் சொல்லி… அதுக்கப்புறம் பார்த்துக்கலாம்…” என ரிஷி அவளிடம் சவாலாகச் சொல்லி திமிராகப் பார்க்க… கண்மணி வேகமாக நட்ராஜிடம் திரும்பினாள்…
“அப்பா… நான் சொன்னா செய்வீங்க தானே… சொல்லுங்க… வீட்டைக் காலி பண்ணச் சொல்லுங்க” கண்மணியும் நட்ராஜை மையப்படுத்திச் சொல்லி அவரைப் பார்க்க…
நட்ராஜுக்கோ உச்சகட்ட தர்மசங்கட நிலை… மகனா மருமகளா முடிவெடுக்க முடியுமா என்ன…
ஆனாலும் நட்ராஜ் சொல்வாரா என்ன… அமைதியாக இருக்க…. ரிஷியின் இதழ்கள் பெருமிதத்தில் வளைய… புருவங்களோ கண்மணியிடம் தன் வெற்றியை உயர்த்திக் காட்ட
“அப்பா… நான் சொல்றேன்… உங்க பொண்ணு சொல்றேன்…. சொல்லுங்கப்பா… ஏன்ப்பா அமைதியா இருக்கீங்க.. போகச் சொல்லுங்கப்பா” கண்மணி தன் தந்தையைப் பார்த்து கத்திக் கேட்க
“ப்ச்…. அச்சோ… பாவம்…. உன் பக்க கேஸ் தோத்துப் போயிருச்சு கண்மணி…. என் முதலாளி தீர்ப்பு என் பக்கம்... புரியலையா உனக்கு… “ எனச் சொல்லி அவளைப் பார்க்க…. கண்மணியோ அவனைப் பார்க்கவில்லை… மாறாக… தன் தந்தையையே சில நொடிகள் பார்த்தவள்… பின் சட்டென்று தன் அலைபேசியை எடுத்தவள்…
“அர்ஜூன்…. இங்க ’கண்மணி’ இல்லத்துக்கு வர்றீங்களா… என்னை என் தாத்தா பாட்டிக்கிட்ட கூட்டிட்டு போய் விட்ருவீங்களா… அவங்க வேண்டாம்னு என் அப்பாதான் வேணும்னு வந்ததுக்கு…. அவருக்காக என் மனசில இருந்த காதலை அரும்பிலேயே தூக்கித் தூரப்போட்டதுக்கு நல்ல தண்டனை கொடுத்திட்டார் அர்ஜூன்…” கண்மணி அழ ஆரம்பித்திருக்க… அங்கோ அர்ஜூன் பதற ஆரம்பித்திருந்தான்
“என்ன… என்னடி ஆச்சு… என்ன ஆச்சு… அந்த அயோக்கிய ராஸ்கல் என்ன பண்ணித் தொலஞ்சான்… சொல்லித் தொலை” அர்ஜூன் ஒன்றும் புரியாமல் விளங்காமல் பதட்டத்துடன் பேச ஆரம்பித்திருக்க
“என்னன்னு சொன்னால் தான் வருவீங்களா அர்ஜூன்… என்னைக் கூட்டிட்டு போங்கன்னா போங்க” தன் சுயலாபத்திற்காக அடுத்தவர்களை பயன்படுத்திக் கொள்ளும் குணம் தன்னவளிடம் இருக்கிறதா... அதே நேரம் கண்மணியின் குரலில் முதன் முதலில் நடிப்பை... போலித்தனத்தை உணர்ந்தான் ரிஷி…
கண்மணியிடம் இப்படி ஒரு சுயநலத்தை ரிஷி எதிர்பார்க்கவே இல்லை… கோபப்படக்கூடாதென்று… அவன் வேண்டுமென்றே அவனுக்குள் கொண்டுவந்திருந்த கிண்டல்… நக்கல் எல்லாம் இப்போது முற்றிலும் மாறி கோபத்தில் அவன் கண்கள் நெருப்பின் ஜுவாலையை பூசிக் கொள்ள ஆரம்பித்திருக்க…
இப்போது கண்மணி திருப்தியான பாவனையோடு…. ரிஷியைப் பார்த்தாள்…
அப்போதும் அவனிடம் பேசாமல்… நட்ராஜிடம் வந்தவளாக
“அப்பா… அர்ஜூன் பத்து நிமிசத்துல வந்திருவார்…. அந்த பத்து நிமிசத்தை உங்களுக்குத் தர்றேன்… உங்களுக்கு நான் தான் …. உங்க பொண்ணு மட்டும் தான் முக்கியம்னு இவர்க்கு காட்டுங்க. அதுக்கு இவரை வீட்டை விட்டு காலி பண்ணச் சொல்லுங்க… அது போதும் எனக்கு…” என்றவள்
“அப்படி இல்லைனா… நீங்க உங்க பொண்ணு எங்க போயிறக்கூடாதுன்னு நினச்சீங்களோ… பயப்பட்டீங்களோ,… அங்க நிரந்தரமா போயிருவா…” நட்ராஜை கண்மணி கத்தி முனையில் நிற்க வைத்தாள்… நெருப்பின் நடுவில் சுழல வைத்தாள்
---
Some Snippets From கண்மணி... என் கண்ணின் மணி- 88 -3
“எங்க போயிருக்கா… அவங்க தாத்தா வீட்டுக்குத்தானே… பொறந்த வீட்டுக்கு கோவிச்சுட்டு எல்லாரும் போவாங்க… என்ன இவ அங்க போயிருக்கா… அவ்ளோதான்… என் மேல கோபம்லாம் அவளுக்கு ஒரு நாள் தாங்காது…. நாளைக்கே ரிஷிக்கண்ணான்னு வருவா பாருங்க… “
நட்ராஜ் கலங்கிய கண்களுடன் பார்த்தபடி இருக்க
---
“யமுனா வந்திருக்கா… உன்கூட பேசனுமாம்… ” ரிஷி சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஹர்ஷித்தின் உடல் விறைக்க ஆரம்பித்திருக்க… அவனது முகமோ பாறை போல இறுகியிருக்க
“நான் யாரையும் பார்க்க விரும்பலை… எனக்கு யாரும் தேவையில்ல…. யார் அவங்க எனக்கு… அவங்க எதுக்கு என்னைப் பார்க்கனும்… எனக்கு யார்கூடவும் அட்டாச்டா இருக்க விருப்பம் இல்லை… சொன்னால் யாரும் புரிஞ்சுக்க மாட்டீங்களா“ அவன் குரல் உயர்ந்திருக்க… ஏர்போர்ட் என்று கூட அவன் பார்க்க வில்லை
--
“ஏய் லூசு… உன் கோபம் நியாயமானதுதான்…. உன் அண்ணா மேல கோபப்பட்றது உன் உரிமை… தங்கச்சியோட கோபத்தை எப்பாடு பட்டாவது தீர்த்து வைக்கிறது அண்ணனோட கடமை…” என்றபோதே… யமுனா அவன் தோளில் சாய
---
“ஆனால் ஒண்ணு மாமா… அவ சொன்னாளே… ஆயிரம் காரணம்.. அதெல்லாம் என்னன்னு தெரியாது… ஒரு விசயத்துல எனக்கும் அவளுக்கும் எப்போதும் பிரச்சனைதான்.. நான் பேசித் தீர்த்திருக்கனும்… விட்டுட்டேன்” அவனது கைகளின் அழுத்தம் அதிகரிக்க…
நட்ராஜ் அவனைக் திகிலாகப் பார்க்க
--
“நான் என்ன மாமா பண்றது… ரிதன்யாவும் விக்கியும் லவ் பண்ணும் போது என் பொண்டாட்டிக்கு உன்னைப் பிடிக்காது… அதுனால என் தங்கச்சியை விட்டு விலகிருன்னு சொல்ல முடியுமா என்ன… அதைத்தான் இவ எதிர்பார்த்தாளா என்னா… அப்படிப்பட்ட குணமுள்ள பொண்ணா கண்மணி… சோ அதுவும் ஒரு காரணமா இருக்க முடியாது… ”
--
“சார்… சார்…” ரிஷி வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டிருக்க
ரிஷியின் புருவம் சுருங்க… ஹெல்மெட்டைக் கலட்டியவனாக… காவலாளி தடுத்து நிறுத்தியதில் வந்த கோபத்தில் முகம் கடுக்க அவர்களைப் பார்க்க
--
”என் பேத்தி.. நீ வந்தால் உள்ள விடக் கூடாதுன்னு சொல்லிட்டா… அவ பேச்சுக்கு இங்க அடுத்த வார்த்தை ஏன் அடுத்த எழுத்து நான் பேச மாட்டேன்… நாளைக்கே அவ உன்னைப் பார்க்கனும்னு சொன்னால் உன் கைல கால்ல விழுந்து கூட சமாதானம் பண்ணத் தயாரா இருப்பேன்… சரியா… இப்போ கிளம்பு”
கண்மணியின் மேல் இப்படி பாசப் பைத்தியமாக இருக்கும் அவரைப் பரிதாபமாகப் பார்த்தவன்
---
”கண்மணி…” தொண்டைச் சவ்வு கிழிய கத்தியவனின் கண்கள் இரத்தச் சிவப்பை கொண்டு வந்திருக்க… அவன் குரல் அந்த மாளிகை எங்கும் எதிரொலிக்க
----
“இப்போ கண்மணி அங்க இருக்காளா…. வந்தால் நான் பார்க்க முடியுமா…” ரிஷி பேசியபடியே…. வேக வேகமாக வெளியே வர
“ஹான்… இன்னும் அரை மணி நேரம் இருப்பாங்க… நீங்க வந்தால் பார்க்கலாம்னு நினைக்கிறேன்… எங்க இருக்கீங்க… வந்துற முடியுமா…” பார்த்தி கேட்டபோதே அவனிடம் அடுத்து பதில் எல்லாம் சொல்லவில்லை… அவன் பைக்கின் வேகம் தான் அவனின் பதிலைச் சொன்னது
Nice update
Hoom kulapathin vidai
Adu mattumtana ila vera eduvum
Edu pannalum Avan unna marndu poiruvana
Pithiyam tan aaavan kanmani