ஹாய் ஃப்ரெண்ட்ஸ்..
எபி படிச்சுட்டு திட்டாதீங்க... லேட் பண்ணி அப்டேட் வந்தும் நீங்க எதிர்பார்க்கிற எபி இல்லை... அதுனால திட்டாதீங்க....
நன்றி
பிரவீணா...
அத்தியாயம் 88-1:
/* கூண்டை விட்டு ஒரு பறவை கோடு தாண்டிப்போச்சு
வழிக் கோணல் மானல் ஆச்சு
காதலிச்ச காலமெல்லாம்
கனவுபோல ஆச்சு
அதில் கரையுது எந்தன் மூச்சு
தண்ணியில மானப் போல நானிருக்கேன்
ஓ தரையில மீனப் போல
நீயிருக்க */
வெகு ஆத்திரத்துடன் தனது சிறை அறையில் உலவிக் கொண்டிருந்தான் ஆதவன்… அனைத்தும் தோல்வி… எங்கு திரும்பினாலும் தோல்வி மட்டுமே அவனுக்கு பரிசாகக் கிடைத்துக் கொண்டிருக்க… ஆறுதல் சொல்லக் கூட அவனுக்கு யாரும் இல்லாத நிலை…. பெற்ற தாய்… நினைத்த போதே அவன் அன்னை ரிஷிக்கு சாதகமாக மாறிய கொடுமையை என்னெவென்று சொல்வது…
தந்தை இறந்தது… தாய் பிரிந்தது என அனைத்துக்கும் அவன் ஒருவனே காரணம்… இதோ இப்போது…. இதெல்லாம் ஒரு விசயமா என சாதாரணமாக நினைத்த விசயம்… ரிஷிக்கு வேண்டும் என்றால் அந்தக் கம்பெனி பெரிய விசயமாக இருக்கலாம்… அவன் வாழ்க்கையின் மிகப் பெரிய இலட்சியமாக இருக்கலாம்… ஆதவனைப் பொறுத்தவரை… அந்தக் கம்பெனி… சிறு விசயம்… கால்தூசிக்கு சமமானது… அதில் கூட இவன் ஜெயிக்க முடியவில்லை….
தீர்ப்பு வரும் வேளையில் … இப்படி இங்கு சிறையில் மாட்டிக் கொண்ட கோபம் வேறு… எல்லாம் சேர்ந்து அவன் கொதித்துக் கொண்டிருந்த போதே
“சார்… போன்… “ என அந்த நள்ளிரவில் வழக்கம் போல… அவன் வைத்திருந்த காவல்துறையின் சில கைக்கூலிகள் அவனுக்கு அலைபேசியை கொடுக்க… கோபத்தோடு வாங்கியபடியே….
“இப்போ என்ன சொல்லப் போற… அடுத்த அப்டேட் என்ன… ரிஷியும் அவன் குடும்பமும் பட்டாசு வெடிச்சு கொண்டாடிட்டு இருக்காங்கன்ற அப்டேட்டா” என்று எதிர்முனையின் ஒரு வார்த்தையைக் கூடக் கேட்காமல்… ஆதவன் எகிற ஆரம்பித்த போதே… அழைத்த ஆதவனின் உதவியாளன் பேச ஆரம்பித்தான்…
“இல்ல சார்…” “ எனத் தயங்கியவன்… ஆனால் அடுத்து உடனே யோசிக்காமல்….
“ஆனால் நான் சொல்லப் போகிற இதுவும் நமக்கு ஹேப்பியான நியூஸ் இல்லை… அந்த ஹர்ஷித் நாளைக்கே ஆஸ்திரேலியா போறானாம்…. என்ன ட்ரை பண்ணியும் அவனை நம்ம கஸ்டடிக்கு கொண்டு வர முடியல சார்… ஆனால் நாளை மதியம் வரை டைம் இருக்கு…. நாம ஏதாவது பண்ணிறலாம் சார்” என்று இழுத்தவனிடம்… ஆதவனோ இன்னும் கோபத்தோடு பேச ஆரம்பித்திருந்தான்..
“டேய்.. லூசாடா நீ… இனி அந்த ஹர்ஷித் இங்க இருந்தால் எனக்கென்ன… செத்து ஒழிஞ்சா எனக்கென்ன… இனி அவனால நமக்கு என்ன யூஸ்… அவன் கையெழுத்தைதான் வாங்கி்… இதோ கம்பெனியையும் அந்த ரிஷி வாங்கிட்டானே… அப்புறம் இந்த ஹர்ஷித் எது………க்க்……..கு” என்ற போதே… ஆதவன் யோசிக்க ஆரம்பித்திருக்க… அதில் மௌனமாகி விட
“சார் சார்… “ என எதிர்முனையில் அவன் உதவியாளன் கத்திய போதும் உடனே பேசாமல் நிதானமாக ஆதவன் பேசத் தொடங்கினான்
“வெயிட்… வெயிட்… அந்த ஹர்ஷித் நமக்கு இனி வேண்டாம் தான்… ஆனால் அவன் பிறந்த ஆதி மூலம் நமக்கு இப்போதும் உதவும் தானே…” ஆதவனின் குரலில் மாற்றம் வந்திருந்தது… தெளிவும் தெரிந்தது
”சார் புரியலை…”
“இந்த ஹர்ஷித் மேட்டர் இருக்கே… இது சொதப்பினது தான் முதல் கோணல் நம்ம விசயத்துல…. தனசேகருக்கு இன்னொருத்தி மூலமா பையன் இருக்கான்னு சொல்லி அவன் குடும்பத்தை மிரட்டலாம்னு நாம நினைத்த போதே… அந்த தனசேகர் அவன் பையனுக்கு அவனாவே தெரியப்படுத்திட்டு போயிட்டான்… அது கூட பிரச்சனை இல்லைதான்… அந்த ரிஷியும் அவன் அப்பன் மேல இருந்த கோபத்துல கம்பெனி பக்கமே வரலை… அதோட விசயத்தில தலையிடல்…. எப்படியோ நமக்கு சாதகமா இருந்தால் போதும்னு இருந்தப்போதான்… ஹர்ஷித் திருமூர்த்தியோட பையன்… தன் அப்பாக்கு பிறந்த பையன் இல்லைன்ற விசயம் அந்த ரிஷிக்கு தெரிய வந்தது… நாம எந்த அளவுக்கு அவனோட அப்பாவை எமோஷனலா ப்ளாக் மெயில் பண்ணிருக்கோம்… அதுனால அந்தாளு இறந்ததுன்னு… எல்லாம் சேர்ந்து அவனுக்கு கோபம் வந்ததுதான் எல்லாமே இங்க மாறினது… “
“சோ நாம கோட்டை விட்ட இடத்துலயே பிடிப்போம்… அப்போ அவனுக்கு அப்பா பிடிக்கும்… இப்போ அவனுக்கு யாரைப் பிடிக்கும்… ” என சிரிக்க ஆரம்பித்தவன்
“கம்பெனி என்ன பெரிய கம்பெனி… இனி அந்த ரிஷி நிம்மதியா வாழக் கூடாது… எனக்கு அதுதான் முக்கியம்”
“ஹர்ஷித் நல்லபடியா ஆஸ்திரேலியா போகட்டும்… ஆனால் அந்த ஹர்ஷித் யாரு?…. ஏன் ரிஷி அவனுக்காக இவ்ளோ மெனக்கெடறான்னு?…. அவங்க குடும்பத்துக்கு சொல்லுவோமா… இல்லை அவன் பொண்டாட்டிக்கு சொல்வோமா…” என ஆதவன் அவன் காரியதரிசியிடம் நையாண்டியாகக் கேட்க
“ஹ்ம்ம்.. அவங்க அம்மாக்கு தெரிந்தால்…. அவங்க அம்மாக்கு ஏதாவது ஆகும்… ரிஷி மறுபடியும் நம்ம மேல கோபப்படுவான்… நமக்கெதிரா மறுபடியும் ஏதாவது செய்வான்…” உதவியாளன் சொல்ல
“ஆனால் அப்படி அவன் அப்படி எதிர்த்தே நிற்கக் கூடாது… நாம அவனுக்கு கொடுக்கிற அடில எழுந்தே நிற்க கூடாது… சொல்லு அப்போ என்ன பண்ணலாம்”
எதிர்முனையில் நிசப்தம் வந்திருக்க… ஆதவன் தொடர்ந்தான்
”அதுக்கு ரிஷியை அவன் குடும்பத்தை வைத்து மிரட்டக் கூடாது… அந்தக் கண்மணியை வைத்துதான் ரிஷியை மிரட்டனும்… அவன் அப்பா போன இடத்துக்கே அவன் பொண்டாட்டியையும் அனுப்பி வைக்கல என் பேர்… ஆதவன் இல்லை… தனசேகர் இறந்ததுனாலதான் ரிஷின்னு ஒருத்தன் இந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுத்தான்… அவன் மறுபடியும் பழைய இடத்துக்கே… அதை விட மோசமா இடத்துக்கு போகனும்னா… அவன் பொண்டாட்டியை அவன்கிட்ட இருந்து பிரிச்சால் போதும்… ” ஆதவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே…
“சார்… கண்மணி மேடம்… ரிஷியோட மனைவி மட்டும் இல்லை… நாராயணன் சாரோட பேத்தியும்…” ஞாபகப்படுத்தினான் தன் முதலாளிக்கு… அதை எல்லாம் ஆதவன் கண்டுகொள்ளாமல்
“அந்த ஆளுக்கும் சேர்த்துதாண்டா ஆப்பு வைக்கப் போறேன்… லாஸ்ட் வீக்கே வெளிய வந்துருக்கனும்டா நான்.. அப்படி வந்திருந்தால் இந்தக் கேசை எப்படியாவது இழுக்க வச்சுருந்துருப்பேன்… நான் ஜெயில்ல இருக்கிற இந்த சூழ்நிலையை சரியா யூஸ் பண்ணிகிட்டான் ரிஷி… அதுக்கு அந்த நாராயணனும் ஒரு காரணம் தானே” ஆதவன் பல்லைக் கடிக்க
“சார் சொன்னா தப்பா எடுத்துக்கமாட்டீங்கன்னு நினைக்கிறேன்… நான் விசாரிச்ச வரை நாராயணன் சார் பெரிய இடம்… பண பலம் மட்டும் இல்லை… அரசியல்… அதிகாரம்… எல்லா இடத்துலயும் அவர் தலையீடு இருக்கு… இப்போ கொஞ்ச நாளா எதுலயும் பெருசா இன்வால்வ் ஆகலைதான்… ஆனால் அவரோட செல்வாக்கு அப்படியேதான் இருக்குன்ற மாதிரிதான் பேசிக்கிறாங்க… அதுமட்டும் இல்லாமல் அவரோட பேத்தி அவரோட உயிருக்கு மேல அவருக்கு…. உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை… நீங்களே பார்த்தீங்களே… ஜஸ்ட் சும்மா மிரட்டினதுக்கு… உங்களை வச்சு செஞ்சுட்டார் பார்த்தீங்கதானே”
எள்ளலாகச் சிரித்தான் ஆதவன்
“பார்த்துக்கலாம் விடு… என்ன பண்ணிருவார் அந்த நாராயணன்…”
“இங்க பாரு… மத்ததெல்லாம் விட்ரு… நான் பார்த்துக்கிறேன்… என்னை வெளிய எடுக்க ட்ரை பண்ணு… அது மட்டும் போதும்… கொஞ்ச நாள்… நீயும் எதையும் கண்டுக்காத… நானும் அமைதியா இருக்கேன்… அதுக்கப்புறம் எல்லாவற்றையும் அந்தக் கண்மணியை வைத்து நம் கைக்குள்ள கொண்டு வருவோம்…”
”சார்… அவங்கள கடத்தப் போறிங்களா… ” என ஆதவனிடம் இழுத்தவன்
“சான்ஸே இல்ல சார்… அவங்கள இல்லை அவங்க பக்கத்தில இருக்கிற துரும்பை நகர்த்தினால் கூட… நாராயணன் ஆட்கள் அடுத்த நிமிசம் அங்க இருப்பாங்க…”
“அந்தக் கண்மணியை ஃபாளோ பண்ணினப்போ நாங்க தெரிஞ்சுகிட்டது…. அந்தப் பொண்ணு அது போற போக்கில…. அது இஷ்டத்துக்கு வாழ்கிற மாதிரி தெரிஞ்சாலும்… அப்படி இல்லைன்றதுதான் உண்மை… அந்தப் பொண்ணை கடத்துறன்றதுலாம் ரொம்ப கஷ்டம் சார்…”
“கண்மணியா சமாளிக்கிற லிமிட் வரை… விட்டுப்பிடிக்கிற தூரத்தில ஆளுங்க அவளைச் சுற்றி அந்தப் பொண்ணுக்கு பாதுகாப்பா இருக்காங்க… அந்தப் பொண்ணால சமாளிக்க முடியலைன்ற பட்சத்தில… அடுத்த நிமிசம் ஒரு கூட்டமே அவளுக்காக வந்து நிற்கும்…” என்றவனை எரிச்சல் பாவனையோடு நிறுத்திய ஆதவன்…
“அவ பெருமைலாம் இங்க எதுக்கு… நிறுத்துறியா…. இங்க பாரு… அந்தப் பொண்ணை நாம தேடிப் போக வேண்டாம்…. அவளா வருவா… வர வைப்போம்…. ஹர்ஷித் விசயம் அவளுக்கும் தெரியாதுதான் நினைக்கிறேன்… ரிஷி மறைக்கிற விசயத்தை அவங்க அம்மாகிட்ட சொல்லாமல்… இவகிட்ட சொல்லி… இவளை நம்ம கஸ்டடிக்கு கொண்டு வருவோம்…” என ஆதவன் தன் திட்டத்தைச் சொல்ல
“ஒரு வேளை அவங்க கிட்ட ரிஷி சொல்லி இருந்தான்னா….” உதவியாளன் தன் சந்தேகத்தைக் கேட்க
“ரிஷி அம்மாக்கு இந்த நிமிசம் வரை ஹர்ஷித் பற்றி தெரியாது அது உனக்கும் எனக்கும் நல்லா தெரியும்… அது தெரியக் கூடாதுன்னு ரிஷியும் உறுதியா இருக்கான்… அந்தக் கண்மணிக்கு ரிஷியோட அம்மா எவ்வளவு முக்கியம்னு எனக்குத் தெரியாது… ஆனால் ரிஷி எவ்ளோ முக்கியம்னு நமக்கு நல்லா தெரியும்… சிம்பிள் ஃபார்முலா ரிஷிக்கு ஒரு கஷ்டம்னா … அவனுக்கு பிரச்சனைனா அதுல இருந்து அவனைக் காப்பாற்ற தானா வருவா…
“ஆனால் நான் ஏன் ரிஷியை குறி வைக்கலேன்னு யோசிக்கிறியா… ரிஷியை மிரட்டுனா… அவன் மட்டும் தான் நமக்கு கிடைப்பான்… ஆனால் நான் இழந்த எல்லாம்… எல்லா பக்கம் இருந்தும் எனக்குத் திரும்ப கிடைக்கனும்னா… கண்மணிதான் எனக்கு வேண்டும்… இதுதான் என் திட்டம்… ஆனால் நீங்களாம் ஒண்ணும் பண்ண வேண்டாம்… நான் பண்றேன்… ஆனால் அதுக்கு எப்படியாவது நான் வெளில வரனும்… “
என ஆதவன் அடுத்தடுத்த தன் திட்டங்களை எல்லாம் உதவியாளனுக்கு விளக்க ஆரம்பித்திருக்க… அதே நள்ளிரவில்…. ரிஷியும் நட்ராஜும்… சென்னையை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தனர்….
மனைவி மேல் கோபம்…. உள்ளுக்கு எரிந்து கொண்டிருந்த எரிமலையை அடக்கியவாறு… ரிஷி சாலையில் கவனம் வைத்தபடி…. இயல்பாக இருப்பது போல காட்டிக் கொண்டவனாக… வாகனத்தை ஓட்டி வந்து கொண்டிருக்க
நட்ராஜோ… ரிஷியையேப் பார்த்தபடி வந்து கொண்டிருக்க…. ஒரு கட்டத்தில் ரிஷியே மௌனம் உடைத்தான்
“என்ன மாமா… ஏதாவது சொல்லனுமா… ஏதாவது பேசனுமா… என்னையே ஏன் பார்த்துட்டே இருக்கீங்க…” எனும் போதே நட்ராஜ் ஆமாம் என்பது போல தலை ஆட்டியபடியே…
“வண்டியை ஸ்டாப் பண்ணிட்டு பேசலாமே ரிஷி… ஒரு பத்து நிமிசம்” என நட்ராஜ் பீடிகை போட… ரிஷியும் நட்ராஜ் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி… அடுத்த சில நிமிடங்களில்… சாலையோர தேநீர் கடை அருகே வண்டியை நிறுத்தியும் இருந்தான்…
காரை விட்டு இறங்கியவர்களாக… இருவருமாக கையில் தேநிர் குவளை வைத்தபடி… அதில் இருந்த தேநீரை சுவைத்தபடி பேச ஆரம்பித்திருந்தனர்….
“சொல்லுங்க என்ன கேட்கனும் சார்… மகிளா விசயமாவா” எனும் போதே சிரித்தபடியே மறுத்த நட்ராஜ்..
“அதெல்லாம் இல்லை ரிஷி… உன்கிட்ட கேட்கிறதுக்கு என்கிட்ட எதுவுமே இல்லை ரிஷி… ஆனால் சொல்றதுக்குத்தான் ஒரு விசயம் இருக்கு…. அதுனாலதான் வண்டியை நிறுத்தச் சொன்னேன்” என்றவரை ரிஷி அமைதியாக ஏறெடுத்துப் பார்க்க
“வீட்ல மகிளா உன்னை அடிச்ச விசயத்தைத் தவிர… மற்ற எல்லாவற்றையும் மணிக்கிட்ட சொல்லு… அதை மட்டும் சொல்ல வேண்டாம்பா…”
ரிஷி கேள்வியாக பார்த்த போதே
“என் பொண்ணுக்கு உன்னை எந்த அளவுக்குப் பிடிக்கும்னு எனக்கு மட்டும்தான் தெரியும்… உன்னை மகிளா அடிச்சது தெரிந்தால் மணி ரொம்ப வேதனைப்படும்பா…”
ரிஷி அவரையே பார்த்தபடி இருந்தவன்
“இதுதானா… வேற ஏதாவது…” என கேட்டபோதே… நட்ராஜ் வேறொன்றும் இல்லை என்பது போலத் தலை ஆட்ட… ரிஷி புன்னகை முகத்துடன் நட்ராஜைப் பார்த்துச் சிரித்தபடி… சில நொடிகள் அமைதியாக தேநீரைப் பருகியவன்… பின்
“ஆக்சுவலா… உங்க பொண்ணு நல்ல வேளை வரலை… அந்த இடத்தில் இல்லைனு சந்தோசப்பட்ட முத ஆளு நான் தான்… ஏன்னு தெரியுமா… நீங்க சொல்கிற மாதிரி…. நினைக்கிற மாதிரி… அவளுக்கு என்னைப் பிடிக்கும்தான்… கண்டிப்பா எனக்காக ஃபீல் பண்ணியிருப்பாதான்… அது ஒரு பக்கம் இருந்தாலும்… மகிளாவுக்கு நான் செஞ்சது தப்புனு இப்போதும் சொல்ற முதல் நபர் யார்னா… சாட்சாத் என் பொண்டாட்டியேதான்… சோ மகிளாவுக்கு இன்னும் கொஞ்சம் சப்போர்ட் பண்ணி ஏத்திதான் விட்ருப்பா மாமா… உங்க பொண்ணு மட்டும் இருந்திருந்தால்… வாங்கின அறை இன்னும் ரெண்டு மடங்கு எக்ஸ்ட்ரா வந்திருக்கும்” என தீவிர பாவத்தில் சொன்னபடியே
“இப்போ போய் சொன்னால் கூட…. நாலு அறைதான் அவங்க கொடுத்தாங்களான்னு… கடுப்பாதான் கேட்பா…. அவ அப்படிப்பட்ட கேரக்டர் மாமா… “ என்று சலித்தவனாக…
“ஆனால் மகிளா விசயம் எங்க ரெண்டு பேர்க்கும் ஒரு விசயமே இல்லை…. ஏன் அர்ஜூன் கூட… நாங்க தெளிவாத்தான் இருக்கோம்… அதை விடுங்க… ஆக்சுவலா நீங்க என்ன சொல்லப் போறீங்கன்னு வேற ஒண்ணு கெஸ் பண்ணி வச்சுருந்தேன்…” ரிஷி இப்போது பீடிகை போட…. இப்போது ஆராய்ச்சிப் பார்வை நட்ராஜின் முறையாக மாறி இருக்க
“அது என்னன்னா??? கண்மணி வரலைன்னு நான் கோபமா இருக்கேனோன்னு நெனச்சு… அதுக்குத்தான் அட்வைஸ் பண்ணப் போறிங்களோன்னு நினைத்தேன்” ரிஷி தனக்கும் கண்மணிக்குமான அலைபேசி உரையாடல்களை எல்லாம் தனக்குள் மறைத்து கேலியான பாவனையில் தன் மாமனாரோடு பேசிக் கொண்டிருக்க
“அதெல்லாம் உங்க ரெண்டு பேருக்கும் இடையில புருசன் பொண்டாட்டி பிரச்சனை ரிஷி… நான் என்ன சொல்றதுக்கு இருக்கு… “ என மகன்-மருமகளைப் புரிந்தவராகச் சொல்ல…. அதைக் கேட்டு ரிஷியும் தன் மாமனாரைப் பார்த்து புன்னகைத்தான்…
அதன் பின் இருவரும் மீண்டும் காரில் ஏறி அமர்ந்த போது…
நட்ராஜ்… ரிஷியிடம்
“ரிஷி… உன்கிட்ட இன்னொரு விசயம் சொல்லனும்… விசயம் அப்படின்றதை விட… எச்சரிக்கைனு வச்சுக்கலாம்..
ஆனால் உனக்குத் தேவையில்லைதான்… இருந்தாலும் சொல்லனும்னு தோணுது…” சொல்லலாமா வேண்டாமா என்ற பாவனையில் நட்ராஜ் பேச ஆரம்பித்திருக்க…
“இப்போது என்ன” என்பது போல ஆயாசமாக ரிஷி பார்க்க… நட்ராஜ் நன்றாக தனக்குள் ஒரு முறை யோசித்துவிட்டு…
“பவி அப்பாகிட்ட கொஞ்சம் பார்த்து பேசு ரிஷி… அன்னைக்கு கோவில்ல பேசின மாதிரி… ’என் பொண்டாட்டி அவ… உங்க வீட்டுக்கு போகக்கூடாதுன்னு அவளை கண்ட்ரோல் பண்ணுவேன்னு…’ அந்த மாதிரிலாம் அவர்கிட்ட பேசாத… உன்னை அவர் பிரச்சனையா நினைக்காத வரை உனக்கு பவியோட அப்பா சாதாரண மனுசன்… ஆனால்” என நிறுத்த
“அவர் கண்மணிக்கு மட்டும் இல்லை எனக்கும் தாத்தா தான் சார்… அப்படித்தான் என்கிட்ட பழகிட்டு இருக்கார்” ரிஷி நட்ராஜின் எச்சரிக்கை எல்லாம் கண்டுகொள்ளாமல்…. சாதாரணமாகச் சொல்ல
“சொன்னேனே… நீ அவருக்கு பிரச்சனையா இல்லாத வரைக்கும்னு….” நட்ராஜ் மீண்டும் வார்த்தைகளைத் தெளிவாகச் விளக்கிச் சொல்லி அவனைப் பார்க்க… ரிஷி இப்போது புருவம் சுருக்கிப் பார்க்க…
“விக்கியோட தாத்தா… கண்மணிகிட்ட நடந்துகிட்ட விதம் பார்த்தோமே… அதை விட பல லட்சம் மடங்கு… அவருக்கு என் பொண்ணு மேல பாசம்…. ஹ்ம்ம்… இப்படியும் சொல்லலாம் அவர் பேத்தி மேல…”
“நானாவது கண்மணியும் நீயும் என்னோட ரெண்டு கண்ணுனு சொல்வேன்…. ஆனால் அவருக்கு கண்மணிதான் எல்லாமே… மற்ற எல்லாமே அடுத்தபடிதான்…”
ரிஷி… இப்போது
“என்னை விடவா கண்மணி மேல பிரியம் அவருக்கு…” விளையாட்டாக கேட்டாலும்… அவன் தன் உரிமையை விட்டுக் கொடுக்காமல் பேசியதுதான் உண்மை
நட்ராஜ் விரக்தியாகச் சிரித்தார்…
“எந்த அளவு தெரியுமா… அவ ஆசைப்படுறான்னா… அவ சந்தோசம இருக்கான்னா… அது போதும் அவருக்கு… அவளோட சந்தோசத்துக்கு… அவ இயல்பா இருக்கிறதுக்கு யாராவது சின்ன தடையா இருந்தாங்கன்னு தெரிந்தால் அவ்ளோதான்… பவி அம்மா கூட கண்மணியோட எல்லா விசயங்களையும் அவர்கிட்ட சொல்ல மாட்டாங்க… ”
”அவர் ’மணி’ விசயத்தில எவ்வளவுக்கெவ்வளவு பலவீனமானவரோ… அதே போல ஆபத்தானவரும்…”
“இதுல எனக்கு என்ன பிரச்சனை வந்துறப் போகுது மாமா… நீங்க… நாராயணன் தாத்தா… அப்புறம் அந்த அர்ஜூன்… இவ்வளவு ஏன்… விக்கி தாத்தா இப்படி எல்லோரும் அவ மேல பாசமா .. அவளை உயிரா நினைக்கிறது எனக்கு சந்தோசம் தான் மாமா… எனக்கு என்ன பொறாமை… எனக்கு என்ன பிரச்சனை வரப் போகுது … சொல்லப் போனால் அத்தை… நீங்க… அர்ஜூன்… உங்க அப்பா அம்மா… நாராயணன் தாத்தா… வைதேகி பாட்டி… உங்க எல்லோருக்குமே நான் கடன் பட்ருக்கேன்… ஏன்னா… நான் தவமே செய்யாமல் கண்மணின்ற வரம் எனக்கு கிடைக்கிறதுக்கு நீங்க ஒவ்வொருத்தவங்களும் காரணம் “ மாறிய தன் நெகிழ்ச்சியான குரலை நொடியில் மாற்றியவன்
“ஆனால் நாராயணன் தாத்தவுக்கு அவர் பேத்தியோட சந்தோசம் எதுன்னு தெரியாதா…”
”கண்மணியோட சந்தோசம் உண்மையிலேயே என்ன மாமா… நீங்களும் அவரும் சேரனும்… அதுதானே… அதை ஏன் அவர் பண்ணலை… அதுதானே அவளோட சந்தோசம்… தெரியாமலா இருக்கிறார்.”
“அது அவருக்கும் தெரியும்… ஏன் கண்மணி அவர்கிட்ட கேட்டால் அதைப் பண்ணுவார்… ஆனால் என் பொண்ணு கேட்க மாட்டா..”
என நட்ராஜ் சொல்லிக் கொண்டிருக்கும் போதே
“ஏன்னா… திருமதி ’கண்மணி ரிஷிகேஷோட’ கொள்கைப்படி… இந்த அன்பு, பாசம், காதல்… எக்சட்ரா எக்சட்ரா எல்லாம் இயல்பா தானா வரணும்… அதை வற்புறுத்தி இல்லை நிர்பந்தப்படுத்தி எல்லாம் வரவழைக்கக்கூடாது வைக்கக் கூடாது… அதுதானே” ரிஷி முடிக்க…
நட்ராஜ் சட்டென்று வாய் விட்டு சிரித்து விட…
“அப்படியே நீங்க சிரிச்சுட்டே இருப்பீங்களாம்… நானும் காரைப் எடுப்பேனாம்…கிளம்பலாமா” எனக் கேட்க…
“நான் சிரிக்கிறது முக்கியம் இல்லைப்பா… நீங்க ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கனும்… அதுதான் எனக்கு முக்கியம்.. ” என தன் இருக்கையில் சாய்ந்தவரை ரிஷி இப்போது அமைதியாகப் பார்க்க… கண்களை மூடியபடி
“என் பொண்ணு இந்த ’கண்மணி’ இல்லத்துல வரைக்கும் என் பொண்ணுனு தைரியமா இருப்பேன்… ஆனால் அந்த பவித்ர விகாசுக்கு எப்போ போனாலும்… அங்க அவ காலடி எடுத்து வைக்கிற ஒவ்வொரு நொடியும்… இங்க நான் நெருப்புல நிற்பேன் ரிஷி…. திரும்பி வராமலே அங்கேயே இருந்துருவாளோன்னு… என் பொண்ணை என்கிட்ட இருந்து பிரிச்சுருவாங்களோன்னு… அவளைப் பார்க்கவே முடியாதோன்னு” நட்ராஜுக்கு குரல் நடுங்க ஆரம்பித்திருக்க
“நீ அவளை மேரேஜ் பண்ணின பின்னாலதான் அந்த பயம் இல்லை… பதட்டம் இல்லை…” நட்ராஜின் கண்களில் இருந்து நீர் வழிய ஆரம்பித்திருக்க
“மாமா… உங்க பொண்ணை உங்ககிட்ட இருந்து யாரும் பிரிக்க முடியாது… அப்படி யாராவது வந்தால்… நான் விட்ருவேனா ” என அவர் கண்களைத் துடைத்தவன் தான்… அன்றைய தினமே… அவர் மகள் நட்ராஜை விட்டு… கண்மணி இல்லத்தை விட்டு பிரிந்து சென்றதற்கும் காரணமாகிப் போனான்…
இப்போது நட்ராஜும் இயல்பாக மாறி இருக்க.... இருந்தும்
”சிரிங்க மாமா… இப்படி உம்முனு மூஞ்சியத் தூக்கி வச்சுட்டு இருந்தா எல்லாம் வண்டி ஸ்டார்ட் ஆகாது… ” என்று ரிஷி அவரை ஓட்ட… நட்ராஜ் அவரையும் மீறி சிரிக்க ஆரம்பித்திருக்க…
ரிஷி தன் வாகனத்தை மீண்டும் ஓட்ட ஆரம்பித்திருந்தான்…
---
ரிஷியும் நட்ராஜும் ’கண்மணி’ இல்லத்தை அடைந்த போது… மணி கிட்டத்தட்ட ஆறு மணி ஆகியிருந்தது…
இவர்கள் உள்ளே நுழைந்த போது… கண்மணியும் தரிசனம் தந்தாள் தான்…
வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தவள்… இவர்களைப் பார்த்தவுடன் முகமலர்ந்து சந்தோசமாக வரவேற்க… ரிஷியோ அவளைக் கோபத்துடன் பார்த்தபடி அவளை முறைக்க… அவளோ அதை எல்லாம் கண்டு கொள்ளாமல்… தன் கைகளில் இருந்த கோல மாவைத் துடைத்தபடி
”ரிஷி சார்… கங்கிராஜுலேஷன்ஸ்… வாழ்த்துக்கள்” வேகமாக அவனிடம் கைகுலுக்கி வாழ்த்துச் சொல்லும் விதமாக கை நீட்ட வேறு வழி இன்றி ரிஷியும் கடுப்பாகக் கை நீட்டி வாழ்த்துக்களைப் பெற்ற போதே
“ஏன்மா வர்றேன்னு சொல்லிட்டு… வரலை…” நட்ராஜ் ஆரம்பிக்க…
“அப்பா… வந்தவுடனே கேள்வியா… முதல்ல ரெஃப்ரெஷ் ஆகுங்க” என்றபடி வீட்டுக்குள் போனவள்… ரிஷியிடம்… அவன் வீட்டுச் சாவி… அவன் மாடி அறைச் சாவியையும் நீட்ட… ரிஷி ஏதும் பேசாமல் வாங்கிக் கொண்டு தன் மாடி அறையின் படிகளை நோக்கிப் போனவனாக…
“ஒண்ணுமே நடக்காத மாதிரி என்னமா பேசுறா…. மேல வருவதானே… அப்போ இருக்கு ” வழக்கம் போல தன்னவளைத் தனக்குள் திட்டிக் கொண்டு திரும்பிப் பார்க்க… கண்மணியோ அங்கு இல்லை… வீட்டுக்குள் சென்றிருந்தாள்…
அவனுக்குள் ஏதோ சொல்ல முடியாத உணர்வு… கண்மணி பேசினாள் தான்… ஆனால் அதில் ஏதோ ஒட்டாத தன்மை இருப்பது போன்ற உணர்வு…
”ஒரு வேளை தான்தான் அப்படி குழம்பிக் கொள்கிறோமோ… அவள் எப்போதும் போல் தான் பேசிக் கொண்டிருக்கின்றாள்… “
நினைத்த போதே
“இப்போது சிரித்தபடிதானே பேசினாள்… பிறகு ஏன் அன்று ஃபோனில் அப்படி பேசினாள்…” யோசித்தபடியே… அறையைத் திறந்தவனுக்கு… அந்த அறையே… அந்த அறையின் சுவர்களே அவன் குழப்பத்துக்கும்… கேள்விகளுக்கும் விடையை அளித்தது…
--------------
Nice update