ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
குட்டி அப்டேட் தான்... நாளைக்கு கண்டினியூ போடறேன்... ஸ்பெல் மிஸ்டேக்ஸ் இருந்தால் சாரி.... கதை முடிச்சுட்டு கண்டிப்பா செக் பண்றேன்... இப்போ பை...
கண்மணியை ரிஷி மாதிரி நாமும் மிஸ் பண்ணுவோம்... அத்தியாயம் 88 ல தான் கண்மணி வருவா... கண்மணியைத்தான் எல்லோரும் எதிர்பார்த்துருப்பீங்க... யமுனா மகிளாவை எல்லாம் எதிர்பார்த்திருக்க மாட்டீங்க ... சா........... ரி... எபிசோட் 88 ல கண்மணியைக் கண்ல காட்றேன்... இப்போ பை...
அத்தியாயம் 87-1:
/* நல்லதொரு பூ வாசம் நான் அறிந்த வேளையில்
நந்த வனம் போன இடம் நான் அறியேன்
என்னுடைய ஆகாயம் கை சேர்ந்த வேளையில்
வெண்ணிலவு போன இடம் நான் அறியேன்
காற்றை போல வீசியவள்
கையை வீசி போனதெங்கே */
வெகுநாட்களுக்குப் பிறகு அவனின் பிறந்த ஊரில் அவர்களது இல்லத்தில்…. ரிஷியும் அவனது குடும்பமும் அந்த வீட்டில் காலடி எடுத்து வைத்த போதே… அவர்களின் உணர்வுகள் தனசேகரோடு வாழ்ந்த நாட்களோடு கலந்து விட்டிருந்தது…
இனி ஒரு போதும் நிஜத்தில் கிடைக்காத உணர்வுகளை… நினைவுகளாக மட்டுமே ஆகிப் போன உணர்வுகளை… அங்கிருந்த ஒவ்வொரு நொடியும் அந்தக் குடும்பம் அனுபவித்துக் கொண்டிருக்க… அங்கு அவர்கள் மட்டுமல்ல… அவர்கள் வீட்டில் வேலை பார்த்த வேலை ஆட்கள்… தொழிற்சாலையில் வேலை பார்த்த ஆட்கள் என அனைவரும் அங்கு வந்து சேர்ந்திருந்தனர்
ரிஷி சத்யாவை அருகில் வைத்தபடியே… மனைவியின் வார்த்தைகளை நினைத்து மனதில் பல குழப்பங்கள் இருந்த போதும்… அதை எல்லாம் வெளிக்காட்டிக் கொள்ளாமல்… புன்னகை முகத்தோடு அனைவரிடமும் பேசிக் கொண்டிருக்க… இலட்சுமியோ வேலை ஆட்களின் உதவியோடு அந்த வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்திருந்தார்..
“ஓரளவு சுத்தம் பண்ணினா போதும்மா… ஹால்… பெரிய ஐயா ரூம்… பசங்க ரூம்…. இதை கொஞ்சம் நல்லா சுத்தம் பண்ணுங்க… பிள்ளைங்க மிஸ் பண்ணிருப்பாங்க… அட்லீஸ்ட் உட்கார்ந்துட்டு போகவாவது நினைப்பாங்க…” இலட்சுமி வேலையாட்களுக்கு கட்டளையிட்டபடி அவர்களோடு சுற்றிக் கொண்டிருக்க…
ரிது ரித்விகா கூடவே மகிளா என அவர்கள் ஒருபுறம் சந்தோசத்தில் சுற்றிக் கொண்டிருக்க… விக்கி, பிரேம்… நட்ராஜ் என தனியே அமர்ந்திருந்தனர்…
விக்கி முதன் முதலாக ரிஷியின் வீட்டுக்கு வருகின்றான்… பிரேமும்….
“உண்மையிலேயே ஆச்சரியமா இருக்கு… ரிஷி ரிது ரித்விகா எப்படி அந்த வீட்ல இருந்தாங்கன்னு… “ சொன்ன பிரேம்… அதன் பின் தான் நட்ராஜும் அவர்களோடு இருப்பதை உணர்ந்தவனாக…. அவரைப் பார்த்து…
“இல்ல சார்… வசதியா இருந்து பழக்கப்பட்டவங்க… ரிஷி கூடப் பரவாயில்லை… அவனா அந்த வாழ்க்கையை ஏத்துக்கிட்டான்… ஆனால் ரிதன்யா… ரித்விகா… வலுக்கட்டாயமா அந்த வாழ்க்கைக்கு தள்ளப்பட்டவங்க… மகி என்கிட்ட புலம்பிட்டே இருப்பா… அந்த ஆதங்கத்த்ல சொல்லிட்டேன்… சாரி சார்… தப்பா எடுத்துக்காதீங்க…” என சொல்ல…. நட்ராஜ் பெரிதாக ஏதும் சொல்லவில்லை…
அவரின் கவனம் முழுவதும் ரிஷியிடம் மட்டுமே இருந்தது… அவன் வாழ்க்கையின் இலட்ச்சியமான இவ்வளவு பெரிய விசயம் நடந்திருக்க… ரிஷியின் முகத்திலோ அந்த சந்தோசத்திற்கான எந்த அறிகுறியும் இருப்பதாகவே தோன்றவில்லை… ஏதோ பலத்த யோசனையுடன் இருப்பது போலவே தோன்றியது அவருக்கு… அவன் எப்போதுமே சிரித்துக் கொண்டிருப்பவன் இல்லைதான்… அதே நேரம் ஆயிரம் கவலைகள் இருந்தாலும் சலனமின்றி தன்னைக் காட்டிக் கொள்ள நினைப்பவன்… இன்று அப்படி இல்லை… சிரித்துப் பேச ஆரம்பிக்கின்றான்… அடுத்த நிமிடமே அவன் முகம் களையிழந்து போய் விடுகிறது… பின் மீண்டும் தன்னை மீட்டெடுத்து அனைவரிடம் பேச நினைத்து பேச ஆரம்பிப்பது என அவன் அவனாகவே இல்லை என்பது நன்றாகவே நட்ராஜுக்குத் தெரிந்தது
காரணம் என்னவாக இருக்கும் எனத் தெரியாமல் இல்லை… தன் மகள் தான் காரணம் என்பது புரியாதவரா…
இன்று கண்மணி வரவில்லை… ஆனால் அதற்காக ரிஷி இப்படி இருக்க வேண்டுமா??? அவரும் சொல்லிப் பார்த்து விட்டார்…
”ரிஷி…. நீ கிளம்பும் போது அவ்ளோ சந்தோசப்பட்டு அனுப்புனவ… ஏன் உன்னைப் பார்க்க ஃப்ளைட்ட பிடிச்சு ஆஸ்திரேலியா வரை வந்தவ … இதோ ஐந்து மணி நேரம் ட்ராவல் பண்ற ஊருக்கு வர முடியாதா…. அவளால ஏன் வர முடியலைன்னு யோசிக்க மாட்டியா…”
“எக்ஸாம் டைம்பா… அதுதான் வரமுடியலப்பா… இல்லைனா அவ வராமல் இருப்பாளா???… உனக்கே தெரியும் லீவ் நாள்ள கூட ஸ்கூல்லதான் கிடப்பா… இப்போ மட்டுமா… படிக்கும் போதே அவ அப்படித்தான்… யூனிஃபார்மை மாட்டிட்டு ஸ்கூலுக்கு கிளம்பிப்போறவ… அப்படிப்பட்டவளை இப்போ மாறுன்னு சொன்னா சொன்னா மாத்த முடியுமா… வர முடியலேன்னு நினைத்து அவளும் வருத்தப்படுவாதானே… வரமாட்டேன்னா சொன்னா… இன்னைக்கு வர முடியலை… நாளைக்கு வர்றேன்னுதானே சொல்லிருக்கா…” நட்ராஜ் மருமகனுக்கு ஆறுதல் சொன்ன போதே இலட்சுமியும் அவர் வார்த்தைகளை ஆமோதிக்க…
எதுவுமே அறியாமல் அப்பாவியாகப் பேசும் இருவரையும் பார்த்த ரிஷியின் கண்களின் வெண்படலத்தில் அவனையுமறியாமல் சிவப்பு நரம்புகள் தன் பதிவைப் பதித்திருக்க… பதில் சொல்லாமல் வேகமாக வேறுபுறம் திரும்பிக் கொண்டான் ரிஷி… வேறு என்ன செய்ய முடியும் அவனால்… அவனுக்கே புரியாத குழப்பமான மனைவியின் வார்த்தைகள்… இவர்களுக்கு என்ன சொல்லி புரிய வைப்பான்
---
இப்படியாக ரிஷியின் நேரம் கழிந்திருக்க… பார்த்திபன் வந்து சேர்ந்தான்… வழக்கு தொடர்பான விசயங்களைச் சேகரித்தவனாக
“ரிஷி… ஃபேக்டரி சம்பந்தமா எல்லா டாக்குமெண்ட்ஸும் எடுத்துட்டு வந்துட்டேன்… ஆதவனோட அம்மா… யமுனா அப்பா…. இவங்களும் ரெஜிஸ்டர் ஆஃபிஸ் வந்துட்டாங்க… கோர்ட்டுக்கு போய்ட்டு… எல்லாம் டாக்குமெண்ட்ஸையும் கலெக்ட் பண்ணிட்டு ரெஜிஸ்டர் ஆஃபிஸ் போகலாம்… அம்மா ரிதன்யா… ரித்வி இவங்க உங்களுக்கு எழுதிக் கொடுத்த பவர் ஆஃப் அட்டர்னி பத்திரம் மட்டும் போதும்… அவங்க ஆஃபிஸ் வரவேண்டாம்… தேவைப்பட்டால் வந்தால் போதும்னு சொல்லிட்டாங்க.. கோர்ட்டுக்கு வந்தால் மட்டும் போதும்” என்றபடி…
“அப்புறம் ஹர்ஷித் உங்களுக்கு எழுதிக் கொடுத்த பவர் ஆஃப் அட்டர்னி பத்திரத்தை மறக்காம எடுத்து வச்சுக்கங்க… அது கண்டிப்பா வேண்டும்… “ என ரிஷிக்குக் கேட்கும்படியான ரகசியக் குரலில் சொல்ல… ரிஷி அவன் சொன்ன எல்லாவற்றுக்கு இயந்திரமாக தலை ஆட்டியபடியே கண்மணி கொடுத்த பேனாவை தன் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்டான்
--
அடுத்த சில பல மணி நேரங்கள்… கோர்ட்… அங்கு வழங்கப்பட்ட தீர்ப்பு என பரபர நிமிடங்களாக கழிந்திருக்க… ரிஷி உண்மையாகவே அந்த பரபரப்புக்குள் இழுத்துச் செல்லப்பட்டிருக்க… கண்மணியை பற்றிய நினைவுகள்… தவிப்புகள்… தற்காலிகமாக அவனை விட்டு நீங்கி இருந்தது என்றே சொல்ல வேண்டும்…
அனைவரும் எதிர்பார்த்தாற்போல வழக்கின் தீர்ப்பு தனசேகர் மற்றும் அவனது மகனான ரிஷிக்கு சாதகமாக வந்திருக்க… திருமூர்த்தி மற்றும் கேசவன் தரப்புக்கு அந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை…
தனசேகரின் கம்பெனிக்கான தார்மீக உரிமை மீண்டும் அவருக்கே வந்திருக்க… அதை வாங்கிக் கொள்ள… அவரது வாரிசான ரிஷி அழைக்கப்பட… தீர்ப்பின் நகலை வாங்கிக் கொண்டவன்… ஏற்கனவே தான் தாக்கல் செய்திருந்த கம்பெனியின் உரிமைப் பத்திரத்தில் திருமூர்த்தி மற்றும் ஆதவனின் தாய் அந்தக் கம்பெனியின் அனைத்து உரிமையில் இருந்தும் விலகிக் கொள்வதாகச் எழுதப்பட்டிருக்க… அதற்க்குச் சம்மதித்து அவர்களைக் கையெழுத்து போடப்படச் சொல்ல… அவர்களும் கையெழுத்தைப் போட்டிருந்தனர்…
அதே போல் ரிஷி அந்தக் கம்பெனியின் முழு உரிமையாளராக ஏற்றுக் கொள்ளப்பட்டு… அதற்கான கையெழுத்துப் போடப்பட சொல்ல… இந்த ஆறு வருடங்களாகக் காத்திருந்த நொடி… இதோ அவன் அருகில் வந்தி்ருக்க… அவனைச் சுற்றி இருந்த அத்தனை பேரும் ஆரவாரம் இட.. அங்கிருந்த அலுவலர்கள் எச்சரித்த போதும்… யாரும் அடங்க வில்லை…
அந்த சந்தோச தருணத்தில்… அத்தனை பேரும் ரிஷியின் கைபிடித்து… அவனுக்கு வாழ்த்துக்கள் சொல்ல… மனமாற ஒவ்வொருவரின் வாழ்த்தையும் ரிஷி ஏற்றுக் கொண்டான் தான்… ஆனால் அவன் ஒவ்வொரு முறையும் தடுமாறி… நிலைகுலைந்து… தன்னை மீறி வருந்தும் போதெல்லாம்… கைத்தொட்டு ஆறுதல் சொன்னவள்… அவனருகில் இன்று இல்லை
அவன் மதித்த… மதிக்காத… நினைத்த… நினைக்காத… பிடித்த… பிடிக்காத என அனைவரும் அங்கு அவனைச் சுற்றி குழுமி இருக்க… அவனின் சதி… அவனின் மறுபாதி மட்டும் அவனருகில் இல்லை… கண்கள் சட்டென்று கலங்கி விட… யாரும் அறியாமல் மறைத்தும் விட்டான் தான் உடனே…
அதே அவள் கொடுத்த பேனாவை கைகளில் எடுத்த போதே… அவனைக் கட்டுப்படுத்தும் அவன் கண்மணியின் விரல்கள் ஞாபகத்துக்கு வர… அவன் கைகளை கோபத்தோடோ… வாஞ்சையோடோ… காதலோட… அன்போடோ… ஏதோ ஒரு காரணம் சொல்லி பிடித்துவைத்துக் கொண்டு அவளின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரும் ஞாபகம் வந்திருக்க.. அந்த உணர்வு இதோ இப்போதும்…
”ரிஷிக்கண்ணா… என்ன லேட் பண்ணிட்டு இருக்கீங்க… வாங்க… இங்கதான்… சைன் போடுங்க… எல்லாம் சொல்லிக் கொடுக்கனும்… ஹ்ம்ம் போடுங்க” என அவனைச் செல்லமாக அதட்டி அவனை அடக்கி ஆளும் அவனவளின் குரல் அவன் அருகில் எதிரொலிக்க…
அறையின் வெளிப்புறம் நோக்கி திரும்பியவன்… அந்தக் கோர்ட் வளாகத்தின் ஒவ்வொரு மூலையையும் நப்பாசையுடன் நோக்கினான் ரிஷி
காதுகளில்… எதிரொலித்த ‘ரிஷிக்கண்ணா” குரல்… கண்களில் அவளது பிம்பத்தை தேட ஆரம்பித்திருக்க…
”நீ என்னை ஏமாத்த மாட்டதானடி… வந்துருப்ப… எனக்கு சர்ப்ரைஸ் கொடுப்ப தானே”
மனதுக்குள் சொன்னபடியே மீண்டும் அந்தச் சுற்றுப் புறத்தில் பார்வையைப் பதித்து சல்லடையாகப் போட்டு தேடியவனுக்கு தோல்விதான் பதிலாகக் கிடைத்தது…
”சார் லேட் ஆகிட்டு இருக்கு… சைன சீக்கிரம் போடுங்க… அடுத்த பார்ட்டி வெயிட் பண்றாங்க” அலுவலர் அவனை அவசரப்படுத்த…
“ஒரு நிமிசம் சார்” என்றபடியே… அலைபேசியை எடுத்து அவளைத் தொடர்பு கொள்ள முயற்சிக்க… கண்மணி எடுக்கவே இல்லை… இரண்டு முறை அவளைத் தொடர்பு கொண்டது என்பதே அங்கு அதிகப்படியான நேரத்தை எடுத்திருக்க… அதற்கு மேலும் முயற்சிக்கவில்லை…
“வரவில்லை… அழைப்பையும் எடுக்க வில்லை”
“நேற்று அவள் சொன்னது போலவே நடந்து கொள்கிறாள்… அப்படி என்றால்… அவள் பேசியது உண்மைதானா… இங்க வரமாட்டேன்னு மட்டும் சொல்லலையே… இன்னும் ஏதேதோ சொன்னாலே… அப்போ உண்மையிலேயே என்னை விட்டுட்டு போயிருவாளா…” விரல்கள் நடுங்கியது… ரிஷிக்கு… அந்தப் பேனாவைப் பிடிக்கவே முடியாமல் விரல்களை அதைத் தவறவிடப் போக..
அங்கிருந்த அனைவரும்… ரிஷி தனசேகர் நினைவில்தான் இப்படி இருக்கின்றான் என்றுதான் நினைத்தனரே தவிர… வேறொன்றும் நினைக்கவில்லை… நினைக்கவும் முடியவில்லை… எப்படியோ சமாளித்து… கண்மணி இல்லாவிட்டால் என்ன… அவளின் பேனாவின் துணை போதுமே… என்று அந்தப் பேனாவை விழாமல் பிடித்தவன்… அவள் கொடுத்த அந்தப் பேனவை…. தன்னவளே தன் அருகில் இருந்து அவனை வழி நடத்துவது போல உருவகப்படுத்திக் கொண்டவனாக… அனைத்து பத்திரங்களிலும் வேக வேகமாகக் கையெழுத்து போட ஆரம்பித்திருந்தான்… அடுத்த சில நிமிடங்களில் அந்தப் பத்திரம் அவனிடம் வந்தும் சேர்ந்தது….
தன் கையில் வைத்திருந்த அந்தப் பத்திரத்தை சத்யாவிடம் ஒப்படைத்தவனாக…
“என் அப்பாவோட நம்பிக்கையை என்னை விட நீங்கதான் அதிகமாக சம்பாதித்து வைத்தவர்… இது எல்லாம் என்கிட்ட இருக்கிறதை விட உங்ககிட்ட இருக்கிறதுதான் சரி… இந்தக் கம்பெனியோட முழுப் பொறுப்பும் இனி நீங்கதான்…”
தன்னிடம் அவன் நீட்டிய காகிதங்களை கண்களில் நீரோடு வாங்கினான் சத்யா…
சத்யாவைப் பொறுத்தவரை…. அது வெறும் காகிதங்கள் அல்ல… ரிஷி மற்றும் தனசேகரின் நம்ப்பிக்கை… இந்த ஜென்மம் மட்டுமல்ல… இனி வரும் ஏழேழு ஜென்மத்திற்கும் அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவேன் என அந்த அந்த நொடியில் இருந்து சபதம் எடுத்தவனாக ரிஷியைப் பார்க்க…
ரிஷி தன்னை நிலை… தன் கவலை எல்லாம் மறந்து… சத்யாவைத் இறுக அணைத்துக் கொண்டான்
”சத்யா… இனியாவது… நீங்க என்னை விட்டுட்டு… உங்களுக்காக யோசிக்க ஆரம்பிங்க.. உங்க விசுவாசம் தனசேகர் பையன் எனக்காக இனி வேண்டாம்… தனசேகரோட கம்பெனிக்காக மட்டும் போதும்… செய்வீங்களா” என ரிஷி கேட்க… மனதாற தலை அசைத்து சம்மதித்தான் சத்யா…
அதன் பின் சத்யாவைத் தனியே அழைத்தவன்…
“சத்யா… நான் நாளைக்கு கம்பெனிக்கு வர முடியாது… இன்னைக்கு நைட்டே சென்னை போறேன்… இப்போதைக்கு யார்கிட்டையும் சொல்ல வேண்டாம் ” எனச் சொல்ல
”மேடமுக்கு உங்களுக்கும் ஏதாவது பிரச்சனையா சார்… இந்த டைம் போன் பண்றீங்கன்னு… அன்னைக்கு நைட் பேசும் போதே மேடம் என்கிட்ட ஒரு மாதிரி பேசுனாங்க…” என சத்யா ஓரளவு அனுமானித்துக் கேட்க
“அதெல்லாம் இல்லை… ஹர்ஷித் விசயமா போகிறேன்… அவன் நாளைக்கு ஆஸ்திரேலியா போறான்ல… எல்லாம் தெரிந்த நீங்களே இப்படி பேசினா எப்படி சத்யா” சத்யாவிடம் எப்படியோ ரிஷி சமாளித்து அவனை அனுப்பியவன்… அதன் பின் அங்கிருந்த அனைவரிடமும் சொல்லிக் கொண்டு ரிஷி கிளம்ப நினைத்தவனாக… திருமூர்த்தியிடமும்… ஆதவனின் அன்னையிடமும் வந்தான்…
முதலில் திருமூர்த்தியிடம் வந்தவன்…
“நான் நன்றி சொல்வேன்லாம் எதிர்பார்க்காதீங்க… அதே நேரம் நீங்க அம்புதான்… அதுனாலதான் என்னவோ… நீங்க பெருசா பாதிப்படையல… ஆனாலும் ஒரே ஒரு அட்வைஸ் மட்டும் சொல்லிக்கிறேன்… அடுத்தவங்க பொருளுக்கு எப்போதுமே ஆசைப்படாதீங்க… “ என்றபடியே அவர் அருகில் நின்ற அவர் மகள் யமுனாவைப் பார்த்தவனின் கண்களில் ஆயிரம் அர்த்தங்கள் எல்லாம் அல்ல… ஒரு ஒரு அர்த்தம் மட்டுமே… அது ஹர்ஷித் மட்டுமே
நேரடியாக அதைச் சொல்லாமல்…
”உங்களுக்குச் சொந்தமான ஒரு பொருள் உங்க கண்ணுக்கே… உங்க கைக்கே எட்டாமல் போயிரும்… உங்களுக்குத் தெரியாமலேயே… என்னைக்காவது அது தெரியவரும் உங்களுக்கு… அப்போ நான் இன்னைக்குச் சொன்னதோட அர்த்தம் புரியும்” அதற்கு மேல் அவரிடம் பேசாமல் அவர் அருகே நின்றிருந்த… ஆதவனின் அன்னையிடம் வந்தவன் … கை கூப்பியவனாக
”நன்றிம்மா… நீங்க செய்த உதவிக்கெல்லாம் இந்த ஒரு வார்த்தை தகுமான்னு தெரியல… ஆனால் ஒண்ணு மட்டும் சொல்றேன்… நாம என்ன பண்றோமோ… அதுக்கான தண்டனை இந்தப் பிறவியிலேயே கிடைக்கும்னு கண்ணால நம்புன தருணம் கேசவன் இறந்ததுதான்… உங்க பையனும் திருந்தி வாழ நினைக்கலை… என்ன எனக்கு ஒரே வருத்தம்னா… நீங்களும் அவங்களால கஷ்டப்பட்டுட்டு இருக்கீங்க… கேசவனோட மனைவியா… ஆதவனோட தாயா… ஆனால் என்ன பண்றது… சில விசயங்கள் தவிர்க்க முடியவே முடியாதுன்னா… அனுபவிச்சுதான் ஆகனும்… என்னடா சின்னப்பையன் அட்வைஸ் பண்றான்னு நினைக்காதீங்க… நான் அதை அனுபவிச்சுருக்கேன்… கண் இமைக்கிற நேரத்துல என்னோட நிலைமை தலைகீழா மாறுச்சு…. ஆனால் அதுக்கு கேசவன் திருமூர்த்தி மட்டும் காரணம் இல்லை… அன்பவிக்கனும்னு எனக்கான விதி அது… ” என்றவன்… அதற்கு மேலும் தன்னைப் பற்றி பேசாமல்….
”உங்களுக்கு என்ன உதவினாலும் என்கிட்ட கேளுங்கம்மா…. கண்டிப்பா என்னால முடிந்ததை பண்ணுவேன்”
ஆதவனின் அன்னை பெரிதாக வருத்தம் எல்லாம் படவில்லை… மாறாக…
“கட்டின புருசனும்.. பெத்த பிள்ளையும் நமக்காக இல்லைனு எனக்கு எப்போதோ தெரியும் தம்பி… அதே நேரம் அவங்க மத்தவங்களுக்கு பிரச்சனையா ஆனதும் தெரியும்… அப்போதெல்லாம் சும்மாத்தான் பார்த்துட்டு இருந்தேன்… அந்தப் பாவத்துக்கு தண்டனைதான்…. அவங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் எதிரா எதிரா நின்னு… அவர் இறந்ததை… இவன் ஜெயில்ல நிற்கிறதை பார்க்கிற நிலைமைல வந்து நிற்கிறேன்… எங்களை விடு… நீ நல்லா இருப்பா… கண்டிப்பா… நல்லா இருப்ப தம்பி… அம்மா தங்கைனு அவங்களுக்காக ஒவ்வொண்ணும் பார்த்து செய்ற நீ… நீ நல்லா இல்லாமல் வேற யார் தம்பி நல்லா இருப்பா… நீ நல்லா இருப்பப்பா… என் பையன் எப்படியெல்லாம் வாழனும்னு ஆசைப்பட்டு கோவில் கோவிலா போனேன்… புண்ணியம் அவனைப் போய்ச் சேரலை… உனக்காவது என்னோட வேண்டுதல் எல்லாம் வந்து சேரட்டும்…” அவரின் மனப்பூர்வமான ஆசிர்வாதத்தில் உண்மையிலேயே ரிஷி நெகிழ்ந்துதான் போனான்… நேற்றில் இருந்து அவன் இருந்த மனநிலையிக்கு இதோ இந்த வார்த்தைகள்… அதுவும் ஆதவனின் அன்னையிடமிருந்து வந்த வார்த்தைகளில் எங்கோ ஒரு ஒளிக்கீற்று அவனுக்குள் நம்பிக்கையை வரவைத்திருக்க… அன்றைய தினத்தில் முதன் முதலாக அவன் புன்னகை அவன் முகத்தில் இருந்து கண்களில் பரவியது…
அந்த சந்தோஷத்தில் இருந்த போதே…. பார்த்திபன் யமுனாவோடு சேர்ந்து அவனிடம் பேச வர… அவனை யமுனாவுடன் பார்த்தபோதே… பார்த்திபன் இப்போது அவன் தொழில் விசயமாக பேசப் போவது இல்லை என்பதை…
“அப்புறம் என்ன ப்ரோ… முகமெல்லாம் தௌசண்ட் வாட்ஸ் பல்ப் தெறிக்கவிட்றீங்க ரெண்டு பேரும்… என்ன விசயம்” புருவம் உயர்த்தி ரிஷி சந்தோசமாகக் கேட்க…
அவன் கேட்ட உடனேயே பார்த்திபன் – யமுனா இருவரின் முகத்திலும் வெட்கப் புன்னகை..
“ரிஷி… மேரேஜ் பிக்ஸ் பண்ணியாச்சு… சென்னை வந்த பின்னால வீட்டுக்கு வருகிறோம்… மேரேஜ் இன்விட்டேஷனோட… கண்மணியும் நீங்களும் கண்டிப்பா வந்துறனும்… “ என்றவன் திருமூர்த்தியை நினைத்தபடி
”யமுனா அப்பாவை மனசுல வச்சுட்டு வராமல் இருந்துறாதீங்க… கண்டிப்பா வரனும்…. அம்பகம் பள்ளியோட பிரின்ஸ்பால் வீட்டுக் கல்யாணத்துக்கு வரமால் போவிங்களா இல்லை… இல்லை கண்மணி தான் விட்ருவாங்களா” என பார்த்திபன் சொல்ல
“திருமூர்த்தி… அப்புறம்… அம்பகம் பள்ளி… இந்த லேபிள்ளாம் நான் பார்க்கவே மாட்டேன்” என்றவன்… யமுனாவிடம் திரும்பிவனாக்
“என் கூடப் பிறக்கலைனாலும்… யமுனாவும் என்னோட தங்கை மாதிரிதான்… எங்க ஊர்ப் பொண்ணு… இன்னும் சொல்லப்போனால் எங்க வீட்டுப் பொண்ணு… அவளுக்காக கண்டிப்பா வருவேன்… போதுமா… வாழ்த்துக்கள் ரெண்டு பேருக்கும்” என்று பார்த்திபனிடம் கைகொடுத்தபடியே சந்தோசத்துடன் யமுனாவுக்கும் கை கொடுக்கப் போக… நீட்டிய ரிஷியின் கைகளைத் தவிர்த்தவளாகக்… கை கூம்பியவளாக
“தேங்க்ஸ்” என்று பட்டும் படாமலும் சொன்னவள்… உடனே…. பார்த்திபனிடம் திரும்பியவள்
“பார்த்தி போகலாமா” எனக் கேட்க… யமுனாவின் நடவடிக்கையில் ரிஷியின் முகம் சட்டென்று மாறினாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் கவனத்தை வேறு புறம் திசை திருப்ப… பார்த்திபனும்… யமுனாவும் அவனிடம் விடைபெற்றவர்களாக கிளம்பினார்…
யமுனா அவனை மன்னிக்கவில்லை… புரிந்தது ரிஷிக்கு… அதே நேரம்… மன்னிப்பு இவன் வேண்டியிருந்தால் தானே அவள் மன்னிப்பையுன் இவன் எதிர்பார்க்க வேண்டும்… அவளின் நிராகரிப்பை எளிதாக எடுத்துக் கொண்டு கடக்க நினைத்தான் தான் ரிஷி… ஆனாலும் எங்கோ மனம் சிறு பாரமாகி அவனை அழுத்தியது என்றே சொல்ல வேண்டும்… இருந்தும் தோளைக் குலுக்கிக் கொண்டு தன்னை இயல்பாக்கிக் கொண்டவன்… தன்னைக் கடந்து சென்றவளைப் பார்த்தபடியே இருந்த போதே… யமுனா அவனை நோக்கி மீண்டும்வந்தாள்…
அதுவும் பார்த்திபனிடம் ஏதோ சொல்லிவிட்டு… அவனை விட்டுவிட்டு தனியே வந்தாள்…
நெரித்த புருவத்துடன்… நெற்றிப் பொட்டு சுருங்க ரிஷி தன்னை நோக்கி வந்தவளை பார்த்தபடியே இருக்க… அவன் அருகே வந்த யமுனா
“ரிஷி… ஒரே ஒரு விசயம் சொல்ல மறந்துட்டேன்…. பார்த்தி இருந்ததுனால சொல்லல…. எனக்காக ஒரே ஒரு ஹெல்ப் பண்றீங்களா… நீங்க சொன்னீங்கள்ள கூடப்பிறக்காத தங்கை… எங்க ஊர்ப் பொண்ணு… எங்க வீட்டுப் பொண்ணு… ப்ளா…ப்ளா… இதெல்லாம் உண்மைனா… என் மேரேஜுக்கு வந்துறாதீங்க… ப்ளீஸ்…” என்றவள்… ரிஷியின் சலனமற்ற முகத்தைப் பார்த்தபடி…
“கூடப் பிறந்த தங்கை… அடேங்கப்பா… எப்படி இந்த வார்த்தையைச் சொல்ல மனசு வருது ரிஷி உங்களுக்கு… உங்க தங்கச்சிய பொறுக்கியை ரவுடியை விட்டு துரத்தி துரத்தி லவ் பண்ண விட்டு வேடிக்கை பார்த்துட்டு இருந்து இருப்பீங்களா… தற்கொலை வரை போன நான் செத்துருந்தா என்ன பண்ணிருப்பீங்க… இதோ எங்க அப்பாவால ஏமாந்த உங்க சொத்து வந்துருச்சு… என் உயிர் வந்திருக்குமா…. ”
“புரியுது உங்க அப்பா உயிர் போயிருச்சுதான்… அப்போ உயிரோட முக்கியத்துவம் புரிஞ்சுருக்கனும் தானே… ஆனால் உங்களுக்கு அது இல்லாமல் போயிருச்சே… அட அதை விடுங்க… இங்க எல்லோரும் சொல்றாங்களே… மூச்சுக்கு முந்நூறு தடவை… ரிஷிக்கு அவன் அம்மா தங்கைகள்னா உயிருன்னு… அந்த வார்த்தையை நான் மட்டும் சொல்ல மாட்டேன்… ஏன்னா… அப்படி உண்மையிலேயே உனக்கு அம்மா தங்கைகள் உயிர்னா… இன்னொரு வீட்டுப் பொண்ணான என்னையும் அப்படி பார்த்துருப்பீங்களே… பகடைக்காயா பழி வாங்க நினைச்சுருக்க மாட்டீங்கதானே… ” என்றவள்…
“இதெல்லாம் விட… எல்லாம் பண்ணிட்டு… தெரிந்துதான் பண்ணினேன்.. மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேன்னு தெனாவெட்டா பேச்சு… சத்தியமா சொல்றேன் ரிஷி… கண்மணி மாதிரி ஒருத்தவங்க…. உங்களப் பற்றி எல்லாம் தெரிஞ்சும்… உங்க கூட எப்படி வாழ்றாங்கன்னு தெரியலை… அதுவும் என் புருசன் இதுனாலதான் இப்படி பண்ணினான்… சாபம் விட்றாதேன்னு… கிட்டத்தட்ட தாலிப் பிச்சை கேட்கிற ரீதில என்கிட்ட பேசி என்னைப் புரியவைக்க முயற்சி பண்ணினாங்க…. அவங்களுக்காக… அவங்களுக்காக மட்டும் தான் உங்களை வேறு ஏதும் சொல்லாமல் விட்டுட்டுப் போகிறேன்…” என்றவள் அதற்கு மேல் அவனைப் பார்க்காமல்.. ஒரு நொடி கூட நிற்காமல்… விடுவிடென்று கிளம்பிச் சென்றிருக்க… ரிஷி தனக்குள் சிரித்துக் கொண்டான்… அந்த புன்னகை சுழித்த இதழில் விரக்தியும் சேர்த்துக் கொண்டது வியப்பில்லை தான் அன்றைய தினத்தில்
---
Some Snippets From கண்மணி... என் கண்ணின் மணி- 87 -2
பின் தன் கட்டிலில் வெகுநாட்களுக்குப் பிறகு அமர்ந்தவன்… அதில் சாய்ந்து படுத்தபடி விட்டத்தை வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்த போதே… அந்த அறையின் நிசப்தத்தையும் மீறி மெல்லிய கொலுசு சப்தம்…
ரிஷி தொண்டைக்குழியில் எச்சிலை முழுங்கினான்…. ஏனோ அவனது இதயம் படபடத்தது… ஆயிரம் இல்லையில்லை பல்லாயிரம் முறை கேட்டு பழகிய கொலுசொலி… மாடிப்படி ஏறும் போதே அவனுக்கு சமிக்கை காட்டி வரும் அவன் அத்தை மகள்… இன்றும் அப்படியே வந்தாள்
---
“லைட்டர் தா…” எனும் போதே ரிஷி முறைக்க…
“ஓ…ஓ…. நீங்க இப்போ பழைய ரிஷி இல்லைல… சிகரெட்லாம் அடிக்க மாட்டிங்கதானே… ச்சேய் நான் மறந்துட்டேன் மாமா… நான் இன்னும் உங்கள பழைய ரிஷியாவே பார்த்துட்டு இருக்கேன்… ப்ச்… இந்த மரமண்டைக்குத் தெரிய மாட்டேங்குது… நீங்க இப்போ வேற ஆளுதானே” அவளின் குரல் மாறிய விதத்திலேயே… ரிஷியும் சுதாரித்தவனாக
---
“என் சந்தோசம் தானே… எனக்கென்ன... நான் நல்லா இருக்கேன் ரிஷி மாமா … ரொம்ப நல்லா இருக்கேன்… ஆனால் நீ நல்லா இருக்கியா… நீ சந்தோசமா இருக்கியா... சொல்லு... கண்மணி அந்தப் பொண்ணு… உன்னை ஒரு பொருட்டா கூட மதிக்கலை… எவ்ளோ பெரிய சந்தோசமான நாள் உனக்கு இன்னைக்கு… ஆனா அவளுக்கு நீ முக்கியம் இல்லை… அவளோட வேலைதான் முக்கியம்னு வரலை…”
---
”யாரும் பக்கத்துல வராதீங்க… அவ சந்தோசம் இதுதான்னா… இதையும் ஏத்துக்கிறேன்” என்றபடி ரிஷி மகிளா கொடுத்த அடிகளை வாங்கிக் கொண்டிருக்க… ஒருகட்டத்தில் மகிளாவே ஓய்ந்தவளாக அவனை விட்டு தள்ளி நின்றவள் அழ ஆரம்பித்திருக்க
Nice update