அத்தியாயம் 84-2
/* என்னை கொல்லாதே தள்ளி போகாதே
நெஞ்சை கிள்ளாதே கண்மணி
உன்னை தீண்டாமல் உன்னை பார்க்காமல்
கொஞ்சி பேசாமல் கண்ணில் தூக்கமில்லை
என்னுள் நீ வந்தாய் நெஞ்சில் வாழ்கின்றாய்
விட்டு செல்லாதே இது நியாயமில்லை*/
”இவ சொன்னா தப்பா எடுத்துக்குவாங்கன்னு… இவ கட்ட மாட்டா, பிடிக்காதுன்னு இவளுக்குப் பதிலா சொல்லி இவளைக் காப்பாத்தலாம்னு நாம சொன்னா… கடைசியில என்னை வில்லனா மாத்திட்டா… இவள… வரட்டும்…” என பொறுமியபடி தங்கள் அறையில் நடை அளந்து கொண்டிருந்தவனுக்கு சத்யாவிடமிருந்து அழைப்பு வர… தன் பொறுமலை அப்போதைக்குத் தள்ளியவனாக… சத்யாவிடம் பேச ஆரம்பித்தான்…
“இன்னைக்கே அனுப்பிருவாங்களா….” ரிஷி ஆச்சரியத்துடன் கேட்க
“இனிஷியல் ப்ளான் தான் ’ஆர் கே’… அதுனால அனுப்பி இருக்கலாம்… சொன்னாங்க… நீங்க மேடத்துகிட்ட டிஸ்கஷன் பண்ணிட்டு… மாடிஃபிகேஷன்ஸுக்கு பில்டர் ஆஃபிஸ் போனால் போதும்…” சத்யா பதில் சொன்னான் ரிஷிக்கு
தொடர்ந்து ரிஷி சத்யாவோடு பேசிக்கொண்டிருக்கும் போதே… கண்மணி உள்ளே வர… சட்டென்று பேச்சைக் கட் செய்தவனாக…. அலைபேசியை அணைத்தவன்… வேகமாக கோபத்துடன் அவளின் அருகில் செல்ல… அதே நேரம் அவன் புருவம் சுருங்கி விரிந்தது… ஆச்சரியத்தில்
காரணம்… கண்மணி அவர்களின் திருமணப் புடவையை அணிந்திருந்தாள்… உடனடியாக அவன் கோபமெல்லாம் மறைந்திருக்க… அவளின் கரம் தொட்டு இழுத்தவன்….
“என்னடி… மகி கொடுத்த புடவையைக் கட்டிருப்பேனு பார்த்தா… நம்ம கல்யாணப்புடவையில வந்து நிற்கிற…. அழகுடி என் அம்மு” என்று அவளை கட்டிக் கொள்ள முயல… அவனிடமிருந்து விலாங்கு மீனாக நழுவியபடியே
“இப்போ மட்டும் என்ன துரைக்கு வாயெல்லாம் சிரிப்பு…. லூசா நீங்க… ஒருத்தவங்க நமக்கு ஆசையா கொடுக்கும் போது.. அதை வேண்டாம்னு முகத்தில அடிச்ச மாதிரியா சொல்வாங்க…”
அவளை மேலும் கீழும் நக்கலாகப் பார்த்தவன்…
“நீ… முகத்தில அடிச்ச மாதிரி… ஒருத்தவங்க மனசு கஷ்டப்படுவாங்கன்னு… சொன்னதே இல்லை… பேசினதே இல்லை… ஏண்டி… பூசணிக்காயைக் கூட மறைக்கலாம்… நீ பூமி உருண்டையவே மறைக்கிற மாதிரி பொய் பேசுறியேடி” ரிஷி நக்கலடிக்க
“ப்ச்ச்… அதெல்லாம் அப்படித்தான்… இப்போ என்ன…. மகி ஃபீல் பண்ணினா உங்களுக்கு பிடிக்காதுதானே… நீங்க ஃபீல் பண்ணுவீங்க தானே… அப்போ எனக்கும் ஃபீல் ஆகும் தானே…… ஏண்ணா நீங்க வேற நான் வேற இல்லை… ” என்றவளை மெய் மறந்து இவன் பார்த்த போதே… சொன்ன வேகத்திலேயே ஏமாற்றத்துடன் உதட்டைப் பிதுக்கியவள்…
“ஆனாலும் அந்தப் புடவை எனக்குப் பிடிச்ச கலர்… எனக்கு தெரியாதுப்பா… அதே மாதிரி… அதே கலர்ல… எனக்கு நீங்க வாங்கித் தரனும்… “
சம்மதம் போல தலையை ஆட்டியவன்
“புடவைதானே எடுத்துறலாம்டி…”
“சரி அதெல்லாம் விடு,… மகிட்ட என்ன சாக்கு சொன்ன… அதைச் சொல்லும்மா ஃபர்ஸ்ட்” என்றவன் தன் முன் நின்றிருந்த கண்மணியை அவளே எதிர்பார்க்காத நேரத்தில் அவள் இடையில் கை வைத்து தன்னோடு சேர்த்து அணைத்திருக்க… கண்மணியாலும் இப்போது அவனை விட்டு விலக முடியவில்லை… தன் இடையைச் சுற்றி இருந்த அவன் கைகளை விலக்க என்னதான் முயன்றாலும்… அவள் முடியாதபடி ரிஷியின் பிடி உடும்புப் பிடியாக இருக்க…
“ரிஷி… கீழ வெயிட் பண்றாங்க” கண்மணியோ அவனிடமிருந்து தப்பிக்கு வழி தெரியாமல் தடுமாற
“நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லை….” என்றவன் அவள் கன்னம் நோக்கி தன் இதழ் பயணத்தை ஆரம்பிக்க… வேகமாக அவனிடமிருந்து முகத்தைத் திருப்பியவள்…
“எப்போ பாரு… பேசிட்டு இருக்கும் போதே…. வேலையக் காட்டுவீங்களே” என்றவளிடம்
”அது அது பாட்டுக்கு …. இது இது பாட்டுக்கு… ” என்றவனின் சன்னமானக் குரலில் சரசம் மட்டுமே தொணிக்க
“சொல்லு… என்ன சொன்ன” செவி மடலில் ஊஞ்சலாடிய அவள் ஜிமிக்கியோடும்… தோள் வளைவில் உறவாடிய மல்லிகைப் பூவோடும்… இதழ் தீண்டி ரகசிய உறவை வளர்த்தபடியே… மனைவியிடம் உரையாடலை வளர்க்க…
“மேட்ச்சிங் ப்ளவுஸ் சரியா இல்லை… ஃபிட்டிங் சரி இல்லை… அப்புறம் என்கிட்டயும் அதுக்கு மேட்ச்சா ப்ளவுஸ் இல்லைனு.. சமாளிச்சேன்… போதுமா இப்போ கோபம் இல்லைதானே… நான் போகவா” கணவனின் சேட்டைகளை தாக்குப் பிடிக்க முடியாமல்… தாங்க முடியாமல் வேக வேகமாக சொல்லி அதே வேகத்தில் அவனை தள்ளியும் நிறுத்தி தானும் தள்ளி நின்றிருக்க… இப்போது ரிஷி ஒன்றும் செய்யாமல் கைகளை மார்புக்கு குறுக்காகக் கட்டியபடி கண்களில் காதல் மட்டும் தேக்கி தன்னவளைப் பார்த்தபடியே இருக்க
“என்ன…” என்றபடி அவனின் கண்களோடு கலந்த அவன் கண்மணியின் கண்களிலும் காதல் இருக்க… அதைப் பார்த்து பெருமூச்சு விட்டவன்… தன்னை மறந்து மௌனமாகி இருக்க… பதில் சொல்லாமல்… ஒன்றுமில்லை என்பது போல தலை ஆட்டியவன் பார்வையில் பிரமிப்பும் வந்திருக்க
“எப்டிடி இப்படி இருக்க… எல்லோருமே சந்தோசமா இருக்கனும்… எல்லோர் முகத்துலயும் சிரிப்பு இருக்கனும் நினைக்கிற…” ரிஷி ஆச்சரியத்தோடு புரியாமல் கேட்க
“இதுல ஆச்சரியம்லாம் இல்ல ரிஷி… ரெண்டு விசயம் தான்… நாம ஏங்கின, நமக்கு கிடைக்காத ஒரு விசயம்… நம்மால மத்தவங்களுக்கு கொடுக்க முடியும்னா அதை நாம கொடுக்க தயங்கவே கூடாது… அதே போல நாம அனுபவிக்கிற சந்தோசம்… அதை நாம மட்டும் அனுபவிக்கக் கூடாது… அதை மத்தவங்களுக்கு கொடுத்து அனுபவிக்கனும்… ரொம்பச் சிம்பிள் ஃபார்முலாதான்” எனச் சிரிக்க…
அவளை மீண்டும் இழுத்து தனக்குள் வைத்துக் கொண்டவனின் காதலில்…. அவன் நெஞ்சம் சாய்ந்தாள் அவன் மனைவியும்… அவளின் அடைக்கலத்தில் அவனது இறுக்கம் இன்னும் கூடியபடியே
“நான் கூட நினைப்பேண்டி… உனக்கு என் மேல காதல்னு…. ஆனா இப்போல்லாம் எனக்கு என்ன ஃபீல் ஆகுதுன்னா… உனக்கு இங்க எல்லாருமே ஒண்ணுதான்… ஆனா நான் மட்டும் கொஞ்சமே கொஞ்சம் சம்திங் ஸ்பெஷல்… அவ்ளோதான் வித்தியாசம்” அணைப்பின் ஆளுமையைக் கூட்டியவனின் குரலிலும் பார்வையிலும் காதலும் பிரமிப்பும் சேர்ந்தே இருக்க
“ஒரு வேளை ஏதோ ஒரு ஜென்மத்துல நான் மிகப் பெரிய புண்ணியம் பண்ணிருப்பேன் போலடி… அந்த உன்னோட கொஞ்சமே கொஞ்சம் எக்ஸ்ட்ரா அன்பு எனக்கு கெடச்சிருக்கு”
என்றவன்… அதே வேகத்தில்
“ஆனால் பாரு… அடுத்த ஜென்மத்துல உன் மொத்த காதலையும் வாங்குவேன் பாரு” அவன் குரலில் விளையாட்டெல்லாம் இல்லை…. தீவிர பாவனை வந்திருந்தது… அவளையே பார்த்தபடி இருந்தவனின் கண்களில் காதலெல்லாம் கவலை வந்திருக்க…
“சாரிடி…” எனச் சொன்னான் உண்மையான வருத்தத்தோடு……
’இது ஏன்’ இப்போது என்பது போல கண்மணி அவனைப் பார்க்க
“ஜஸ்ட் ஒரு பொண்ணு பார்க்கிற ஃபங்ஷன்… அதுக்கே இவ்வளவு தடபுடல்… ஆர்ப்பாட்டம்… ஆனால்… நமக்கு…. நம்ம கல்யாணம்… ஒரு அஞ்சு மணி நேரம் இருக்குமா… நாம முடிவெடுத்தது… கண்ணை மூடி கண்ணத் திறக்கும் முன்னாலேயே முடிஞ்சிருச்சு… நான் என்னை மட்டுமே… அப்படிக் கூட சொல்ல முடியாது… என்னோட சூழ்நிலை… குடும்பம் இதை மட்டுமே நினைச்சுப்பார்த்துட்ட்டு… உன்னை… உன்னோட மனசை எதுவுமே நினைக்கல… ஒரு பொண்ணா உனக்கும் எவ்ளோ ஆசைகள் இருந்திருக்கும்ன்றதை நினைக்கக் கூடத் தோணாத சுயநலவாதியா இருந்துட்டேன்னு நினைக்கும் போது… ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்குடி “ என்றவன் வார்த்தைகளில் வருத்தம்… கவலை இவை மட்டுமே இருக்க… அவன் வாயை தன் கரங்களால் மூடியவள்…
“எப்படி கல்யாணம் பண்றோன்னு முக்கியம் இல்லை… ரிஷி… எப்படி வாழ்றோம்… அதுல தான் இருக்கு… திருமண வாழ்க்கையோட சந்தோஷம்… ” என்றவளிடம்
“ப்ச்ச்… நீயெல்லாம் பொண்ணே இல்லடி… அதுனால…இப்படித்தான் பேசுவ…” என்றவனிடம்…
சொல்லலாமா வேண்டாமா என யோசித்து தயங்கிய கண்மணி…… பின்
“அப்படிலாம் இல்ல ரிஷி… எனக்கும் எவ்வளவோ ஆசை இருந்துச்சு… கனவு இருந்துச்சு…” என்ற போதே ரிஷியின் பார்வை மாறிய விதத்திலேயே… பதறியவளாக
”ஹல்லோ ஹல்லோ… ஆசைனா… அப்போ… அதாவது…. என் சின்ன வயசுல… அதைச் சொல்றேன்… அந்த வயசுல இருந்தே சரியா… வேற ஏதாவது யோசிச்சுறாதீங்க… என்னோட பத்து வயசுலேயே… என் ஆசை, கனவெல்லாம்…. விட்டு விலகி தூரமா வந்துட்டேன்… ஆனால் ஒரு கட்டத்துல எனக்கு இதெல்லாம் பழகிருச்சு ரிஷி… ” என்றவள்…
“அர்ஜூனைப் பார்க்கும் போதும் அதே நிலைலதான் இருந்தேன்… “ கணவனின் பார்வை உணர்ந்து அதற்கும் விளக்கம் அளித்து முடிக்க…
”ஆனால் அர்ஜூன் அப்படி இல்லையே கண்மணி… நீ எவ்ளோ சொன்னாலும்… உன்னை நீ அவர்கிட்ட தெளிவு படுத்தலை… நான் உங்க ரெண்டு பேருக்கும் இடையில வந்திருந்தாலும் வந்திருக்காவிட்டாலும்…. குழப்பமான நிலையிலதான் உங்க உறவு இருந்திருக்கும்” முதன் முதலாக ரிஷி கண்மணியிடம் அர்ஜூன்-கண்மணி உறவின் நிலைப்பாட்டை பேசி இருந்தான்…. தைரியமாக.. மனதில் சிறிதும் குழப்பமின்றி…
அதே நேரம் அந்தப் பேச்சைத் தொடராதவனாக
”இப்போ நாம எதுக்கு அதைப் பற்றி எல்லாம் பேச… நம்ம விசயத்துக்கு வருவோம்….” ரிஷியின் குரலில் குறும்பும் கள்ளத்தனமும் போட்டி போட…
கண்மணி அவனை புரியாமல் பார்க்க
“இதுவரை உனக்குனு ஏதுமே ஃபங்ஷன் நடக்கவே இல்லைதானே… சின்ன வயசுல இருந்து நீ அதுக்குஆசைப்பட்ட தானே…. “
கண்மணி வேகமாகத் தலை ஆட்ட…
”நம்ம மேரேஜ்… ஒரு மாதிரி எந்தக் குறையும் இல்லாமல் நடந்தாலும்… பெரிய விழாவா நடக்கலை…. “ ஒரு மாதிரியான குரலில் சொன்னவன்
“அதுக்குத்தான்… நான் ஒரு பெரிய ப்ளான் வச்சுருக்கேன் பொண்டாட்டி…. என்ன அதுக்கு உன்னோட ஒத்துழைப்பு ரொம்ப முக்கியம்” கண் சிமிட்ட
அவன் என்ன சொல்ல வருக்கிறான்… என்பதையும் அதில் உள்ள கள்ளத்தனம் புரிந்து ரிஷியின் கன்னத்திலேயே அடி போட்டவளிடம்… சந்தோஷமாக வாங்கிக் கொண்டவன்…
“அதேதான்… என் புத்திசாலி பொண்டாட்டி… கற்பூர புத்தி…. மேரேஜ் இன்னொரு தடவைலாம் பண்ண முடியாது… ஆனால் உன்னோட வளைகாப்பை கிரண்டா பெருசா பண்ணனும்டி…. “ என்றவன்
“ப்ளான் பண்ணி… நாம ரொம்ப உழைக்கனும்டி…. புரியுதா…. நான் அன்னைக்கே சொன்னேனே… 24/7 ” என ரிஷி மிகத் தீவிர பாவனையில் மும்முறமாக அவளிடம் சொல்லிக் கொண்டிருந்த போதே… கையிடுத்துக் கும்பிடு போட்டவள்
“அய்யா சாமி…. உங்க திட்டத்தை எல்லாம்… உழைப்பை எல்லாம்… முயற்சியை எல்லாம்… உங்க பிஸ்னஸ்லயே வச்சுக்கங்க… இந்த சைட் வந்துறாதீங்க… என்னை ஆள விடுங்க… நான் தாங்க மாட்டேன்”
“இல்லடி… என்னோட உடல் பொருள் ஆவி எல்லாம் என் பொண்டாட்டி…. என் கண்மணி… நீ மட்டும் தான்…. அவ கனவு அவ ஆசை அவ விருப்பம்… இதுதான் இது மட்டும் இனி முக்கியம்….” என்றவனின் நீட்டி முழங்கிய வசனத்தில்
“அதுக்கு” பயந்தவள் போல கண்மணி விழி விரித்துக் கேட்க
“சீக்கிரமா… நாம வளைகாப்பு பங்ஷன் நடத்தனும்… அதுக்கு நாம நம்ம ஃபுல் முயற்சியையும் போட்றோம்… சக்ஸஸ் பண்றோம்… “ என்றவனிடம் பொய்யாக அவன் வயிற்றில் அவன் மனைவியின் கைகளால் குத்தும் மொத்தும் வாங்கி இருக்க… இருந்தும் அடங்காதவனாக
“உண்மைதாண்டி அம்மு… உன் ரவுடியிசம்லாம் அதுல காட்டு…” என்றவனை ஒன்றும் செய்ய இயலாமல்… தன் தலையிலேயே அடித்துக் கொள்ள
“இன்னைக்கு நல்ல நாள் தானே… இன்னைலருந்து நாம நம்ம” என்றவனின் வாயை கைகளால் பொத்தியவளின் கைகளை எடுத்தபடியே
“விடாமுயற்சி… விஸ்பரூப வெற்றி அம்மு… எட்டே மாசம்… குட்டி ரிஷியோ…. குட்டி கண்மணியோ” என்றவனின் கைகள் அவள் வயிற்றில் தடம் பதிக்க
கண்மணியின் முகத்தில் வெட்கம் அவளையுமீறி வந்திருக்க… எப்படி சமாளித்தாலும் வெட்கத்தை மறைக்க முடியாமல் தடுமாறியவள்…. பின் எப்படியோ சமாளித்தாள் தான்…
அதே நேரம் ரிஷியைப் போல அல்லாமல் அவனை கிண்டல் செய்ய ஆரம்பித்திருந்தாள்
“பார்றா… நம்ம ஆர் கேக்கு ரொமான்ஸ்லாம் வருது… அடடே ஆச்சரியக்குறி…” என்று அவனை வம்பிழுக்க ஆரம்பித்திருக்க ரிஷி முறைத்தபடியே… மீண்டும் அவளை வேகத்தோடு தன்னோடு அணைத்து… பின் வேகத்தோடு விட்டு விலக்கியும் நிறுத்தியவன்…
“ஆத்திரத்தில் தொட்டு வைக்கிறேன்
இருக்கட்டும் ராத்திரிக்கு விட்டு வைக்கிறேன்”
ஹஸ்கி குரலில் பாடி அவளின் கன்னம் கிள்ளியவனோ… சூழ்நிலை எல்லாம் மறந்து முற்றிலுமாக கண்மணியின் கணவனாக மட்டும் மாறி இருக்க…
“ஆ…” என்று கன்னத்தை தேய்த்தபடியே… அவனைப் பார்க்க… ரிஷி சிரித்தபடியே
”இப்போ நீ… டைமிங்கா ரைமிங் பாடனும் அம்மு…”
”வலிக்குதுடா… இதுல டைமிங்கா ரைமிங்ல பாட்டு வேறயா…” சலித்தபடியே மீண்டும் கன்னத்தை பிடிக்க…
‘கன்னம் வலிக்கும் கிள்ளாதே கல்லுளி மங்கா… அப்டின்னு” ரிஷி அவளுக்கு எடுத்துக் கொடுக்க…
“சும்மா பேசினாலே… எனக்கு உங்கள மாதிரி கவுண்டர் கொடுக்கத் தெரியாது…. இதுல பாட்ல வேற பதில் சொல்லனுமா… அதெல்லாம் நமக்கு வராது…. ஓகே நான் கிளம்புறேன்… அத்தை தேடப் போறாங்க” என்றவள் கதவை நோக்கிச் செல்ல..
“அன்பே நீ இன்றி…” என பாடிக் கொண்டிருந்த பாடலின் அடுத்த வரியை ஆரம்பித்தவன்… இந்த லைன் நமக்கு செட் ஆகாது… இதெல்லாம் பொண்டாட்டியால கஷ்டப்பட்டு… அவங்க இல்லாமல் தவிக்கிறவங்களுக்கான லைன்… நமக்கு அது தேவையில்லை… நாம அதை ஸ்கிப் பண்ணிட்டு அப்படியே அடுத்த லைனுக்கு போய்ருவோம்… ” கவுண்டர் கொடுத்தபடியே
”ஆதரிக்க நல்ல இளைஞன்
மனம் விட்டு காதலிக்க நல்ல கவிஞன் காதலிக்க வந்த கலைஞன்
இவன் என்றும் தாவணிக்கு நல்ல தலைவன்”
ரிஷி பாட ஆரம்பிக்க… அவன் முகம் சிரிப்பை மட்டுமே நிறைத்திருக்க
அதே நேரம் கண்மணியிம் நின்று அவனைத் திரும்பி பார்த்தவள்… தன்னவனின் புன்னகை முகத்தை கண்களிலும் நிறைத்தவளாக
“பைத்தியம் முத்திப் போச்சு… என் ரிஷிக்கண்ணாக்கு… நான் இங்க இதுக்கும் மேல கண்டினியூ பண்ணினால்… எனக்கும் அது தொத்திக்கிரும்… மீ எஸ்கேப்” கண்மணி சிரித்தபடி…. மாடிப்படியில் புள்ளி மானாக இரண்டு இரண்டு படிகளாகத் தாண்டி இறங்க ஆரம்பித்திருக்க….. இறங்கிய அவள் முன்னே நின்றிருந்ததோ… அவளது பாட்டி கந்தம்மாள்… விடுவாளா கண்மணி…
“ஓய்க் கெழவி… ஓசிச் சாப்பாடுன்னா ஓடி வந்துறது…” கடைசிப்படியில் சாய்ந்து நின்றவாறே கந்தம்மாளை மிரட்ட
“ஏண்டி… கொஞ்ச நாளா அடங்கி இருந்த… மறுபடியும் ஆட ஆரம்பிச்சுட்ட… நீ ஆட்டம் ஆடி ஆன கதையெல்லாம் மறந்துட்ட “ கந்தம்மாள் வழக்கம் போல வசை பாட ஆரம்பித்திருக்க…
கண்மணியும் கைகளை குறுக்காகக் கட்டிக் கொண்டவளாக… சண்டைக்கு நிற்கும் தோரணையில் கந்தமாளைப் பார்த்தாள்
“அப்படியா… ஆனால் நான் ஆடவே ஆரம்பிக்கலையே…சேம்பிள் வேணும்னா காமிக்கவா” என்றவள்… கந்தம்மாளின் பதிலை எல்லாம் எதிர்பார்க்காமல்
”ரிஷி..” என மேலே தங்கள் அறையை நோக்கிக் குரல் உயர்த்திக் கத்த…
“என்னடி… ஏன் இப்படி கத்துற… என்னாச்சு” என்றபடியே ரிஷி வெளியே வந்த போதே கண்மணியோடு நின்ற கந்தம்மாளைப் பார்த்தும் விட…
“சரிதான்… இன்னைக்கு நாம மாட்டிட்டோனோமா… ரிஷி உன் மாமா வழியை அப்டியே ஃபாளோ பண்ணுடா…” தனக்குள் தன்னை எச்சரித்துக் கொண்டபடி… கீழே இறங்கி கண்மணி நின்ற படிக்கும் மேல் வந்து நிற்க…
அதே நேரம்…
”உனக்குல்ல்ல்ல்லாம் ஸ்மார்ட் போன் ரொம்ம்ம்ம்ம்ப முக்கியம்…. கொடு” என்றபடி… கண்மணி கந்தம்மாளின் கையில் இருந்த அலைபேசியை பிடுங்கியவளாக…
“அடேங்கப்பா… கெழவனோட ஜோடி சேர்ந்து போட்டோலாம் வச்சுருக்க ….” என்றபடி அந்த அலைபேசியின் கேமராவைப் பார்த்தவள்…
“ரிஷி என் தோள் மேல கை போடுங்க… “ என அவனிடம் சொல்ல…
“ஏண்டி…” ரிஷி அவஸ்தையாக கண்மணியைப் பார்க்க…
”தோள் மேலத்தான் கை போடச் சொன்னேன்… வேற ஏதாவது பண்ணச் சொன்னேனா…. என்னமோ… ரொம்பத்தான் பண்றீங்க… உங்க செல்ல கந்தம்ம்மா பாட்டிக்கு முன்னால அநியாயத்துக்கு வெட்கப்படறீங்களே ரிஷிக்கண்ணா…. லேட் பண்ணுனீங்க… அப்புறம் வேற மாதிரி சென்சாருக்கு சவால் விட்ற மாதிரி போஸ் கொடுக்கச் சொல்லிருவேன்… பார்த்துக்கோங்க… இப்போ போட்றீங்களா இல்லையா” எனக் கண்மணி மிரட்ட
“படுத்தாதடி…” ரிஷியும் முதலில் கொஞ்சம் சலிப்பாக அவளின் தோள் மேல் கை போட்டாலும்… அடுத்த நிமிடமே மனைவியோடு சேர்ந்து புகைப்படம் எடுக்கும் மகிழ்ச்சியில் அவன் முகம் புன்னகையை அனிச்சையாக அணிந்திருக்க… தானும் தன் கணவனுமாக இருந்த புகைப்படத்தை அலைபேசியில் சொடுக்கிக் கொண்டவளாக….
“ஏய் கெழவி… பார்த்த தானே… நான் கூப்பிட்ட உடனே… என் வீட்டுக்காரர் வந்துட்டாரு… நான் என்ன சொன்னாலும் கேட்கிறார் பார்த்தியா… என்னமோ சொல்லுவ… என்னைப் பார்த்து துரதிர்ஷ்சாலி…. அது இதுன்னு… நான் எவ்ளோ லக்கினு பார்த்தேல்ல… இனி ஒரு தரம் ஏதாவது அப்படி சொன்ன… அவ்ளோதான்…” அலைபேசியில் வேலை பார்த்தபடியே… இப்போது நிமிர்ந்தவள்… கந்தம்மாளின் கடுப்பான முகத்தைப் பார்த்தபடியே
“ஏன் முகம் அஷ்ட கோணலா இருக்கு…. வயிறு எரியுதா என்ன… அப்போ அப்டியே இதையும் தினம் தினம் பார்த்து குளிர்ந்துக்கோ ….” என்று கந்தம்மாளின் அலைபேசித் திரையின் முகப்பில் சற்று முன் தாங்கள் இருவருமாக எடுத்த புகைப்படத்தை வைத்துக் கொடுத்தவள்
“ஏய் கெழவி.. கண்ணு வைக்கக் கூடாது” என்றபடி…. வேகமாக தன்னையும் ரிஷியையும் சேர்த்து சுற்றிப் போட…
“அய்யோ படுத்துறாளே…” தனக்குள் சொல்லியவனாக
“கண்மணி… சும்மா இருக்க மாட்டியா” கண்மணியை முறைத்தபடியே அவளை அதட்டியவன்…
“பாட்டி நீங்க கெளம்புங்க… வீட்ல எல்லோரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.” என்று கந்தம்மாளை அங்கிருந்து கிளம்பச் சொல்ல
“ஆத்தாடி ஆத்தாடி… அப்போவே இவளைப் பிடிக்க நாலு ஆள் வேணும்… இப்போ அதுக்கும் மேல ஆட்றாளே… ஏன்ப்பா உன்னை இந்தப் பாடு பாடு படுத்தறாளே… எங்க போய் முடியப் போகுதுனு தெரியலையே… “ என நொடித்தபடியே போக…
அவ்வளவுதான் கண்மணியின் கோபமும் இப்போது அதிகரித்து இருக்க
“அய்யோ… அம்மு… என் தங்கம் ராஜாத்தி…. வாடிம்மா…” ரிஷி அவளை கையைப் பிடித்து இழுத்துக் கூட்டிப் போக
“எல்லாம் உங்களாலதான்…. யார் உங்கள கூப்பிடச் சொன்னா… கடுப்பேத்துறாங்க… இன்னொரு தடவை அவங்கள கூப்பிட்டீங்கன்னா அவ்ளோதான்… என்னமோ உங்களைப் படுத்துறாங்களாமே… அந்தக் கிழவி சொல்லுது…. நீங்களும் வாயை மூடிட்டு இருக்கீங்க…. அப்ப்போ நான் உங்களை படுத்தறேனா….” கண்மணி பட படவென எரிச்சலாகப் பேச ஆரம்பித்திருக்க… எப்படியோ ரிஷி சமாளித்து அவளைக் கூட்டிச் சென்றான் தன்னோடு…
---
கோவில் வாசலில் இப்போது கோபத்துடன் உம்மென்று இறங்கியவளிடம்
“சிரிடி…”
“அது என் டையலாக்…” என உம்மென்றபடியே முகத்தை தூக்கி வைத்து சொன்னவளிடம்
“அடேங்கப்பா… பெரிய டையலாக். நாங்கள்ளாம் கடன் வாங்கக்கூடாதா…. வாடி” என அவளின் கைகளைக் கோர்த்துக் கொண்டு கோவில் உள்ளே சென்றவனிடம்… கண்மணியும் இயல்பாகி இருக்க
“ரிஷி… ரிஷி… அம்மனுக்கு கோவில்ல இப்போதான் அலங்காரம் பண்ணி தீபாராதனை காட்ற நேரம்… சாமி கும்பிட்டுட்டு போகலாம் ரிஷி…”
ரிஷி மனைவியை நன்றாகவே முறைத்தபடி
“நீ போ… என்னை எதுக்கு கூப்பிட்ற… என்னமோ என்னை பற்றி எல்லாம் தெரியும்னு சொல்வ… இதெல்லாம் எனக்குப் பிடிக்காதுன்னு தெரியாதா… கம்பெல் பண்ணாத… நீ போய்ச் சாமி கும்பிட்டு வா… அது மட்டும் இல்லை… விக்கி வீட்ல எல்லோரும் வந்திருப்பாங்க… நான் இந்தப் பக்கம் போகிறேன்” என கண்மணியை விட்டு விலகி… எதிர் திசையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான் ரிஷி
---
இன்று…
அறைக் கதவு தட்டப்பட… ரிதன்யா… ரித்விகா… கண்மணி மூவரும் ஒரே நேரத்தில் அறையின் வாசலை நோக்கித் திரும்பினர்…
”ஹையோ லேட் ஆகிருச்சு போல அண்ணி.. டைம் என்ன ஆச்சு…“ ரிதன்யா மணியைப் பார்த்தபடியே சொல்லிக் கொண்டிருந்த போதே ரித்விகா ஓடிப் போய்… கதவைத் திறக்க… ரிஷிதான் வந்திருந்தான்… கூடவே… அவர்களின் உறவுக்காரப் பாட்டியும்
”உங்க ரெண்டு பேரையும்… அங்க கீழ தேடிட்டு இருக்காங்க…. “ தன் தங்கைகளிடம் ரிஷி சொல்ல… உடனடியாக அவர்களும் கீழே இறங்கிப் போக…. தன்னோடு வந்திருந்த மூதாட்டியை அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்தவன்… இப்போது… கண்மணியின் அருகில் வந்திருந்தான்…
கண்மணி அவனைப் பார்த்தும் பார்க்காமலும் அமர்ந்திருக்க…. ரிஷி அவளுக்கு மட்டுமே கேட்கும் குரலில்…
“உனக்கும் எனக்கும் ஆயிரம் பிரச்சனை இருக்கலாம்… அதை இவங்ககிட்ட காமிச்சுக்க வேண்டாம்… உன்னைப் பார்க்கனும்னு ரொம்ப நாளா கேட்டுட்டு இருந்தாங்க… உன்னைப் பார்க்கிறதுக்காகவே ஊர்ல இருந்து இங்க வந்திருக்காங்க… நேத்து ரிது நிச்சயத்துக்கு கூட வரலை… ஆனா இன்னைக்கு உன்னைப் பார்க்க வந்திருக்காங்க… எங்க அப்பாவுக்கே பாட்டி….. மூணு தலைமுறை பார்த்தவங்க…. அவங்க ஆசிர்வாதம் உனக்குக் கிடைக்கிறது அவ்ளோ பெரிய பாக்கியம்… புரிஞ்சுக்கோ… எனக்காக இல்லைனாலும்… அவங்க வயசுக்காகவது மரியாதை கொடு ப்ளீஸ்” என மெல்லியக் குரலில் அவளிடம் விபரம் சொல்ல… கண்மணி ரிஷியிடம் பேசாமல் அவனை விட்டு விட்டு அந்த மூதாட்டியிடம் சென்றிருந்தாள் இப்போது… குனிந்து அவரின் கால் தொடப் போக
”தாயி…. புள்ளத்தாச்சி புள்ள கால்ல எல்லாம் விழக் கூடாது… என் பேரன்(தனசேகர்) மருமகளை பார்க்கனும்னு ரொம்ப நாளா ஆசை… எனக்கு என் புள்ளைங்களை விட… உன் மாமன்னா ரொம்ப பிடிக்கும்… பாசக்கார பையன்… இவனும் அவன் அப்பாவப் போல… கிழவின்னு ஒதுக்கிப் பார்க்க மாட்டான்… புள்ள கஷ்டப்படுறான்னு உன் மாமியா புலம்பிட்டே இருப்பா… அப்படி இருந்தவ…. ஒரு நாள் சந்தோசமா குல சாமிக் கோவிலுக்கு வந்தப்போ… உன்னைப் பத்திதான் அவ பேச்சு எல்லாமே… அப்போ இருந்து உன்னைப் பார்க்கனும்னு தவிச்சுட்டு இருந்தேன்மா… “ எனப் பேச… கண்மணிக்கே ஆச்சரியமாக இருந்தது அந்த மூதாட்டியைப் பார்த்து…
90 க்கும் மேல் இருக்கும் அவருக்கு வயது… அந்த வயதிலும் முதுமையைத் தாண்டி அவருக்குள் ஒரு கம்பீரம்… ரசித்துப் பார்த்தபடியே புன்னகையுடன் பேச ஆரம்பித்திருக்க.. அவளின் கணவனோ மனைவியின் புன்னகையை ரசிக்க ஆரம்பித்திருந்தான்… வெகு நாட்களுக்குப் பிறகு தன்னவளிடம் கண்ட புன்னகையில் மயங்கியும் நின்றிருந்தான்…
அவர் அருகே அமர்ந்து கண்மணியும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க… அந்த மூதாட்டி கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க… இருவருக்கும் இடையே நிற்காமல்… ரிஷி அங்கிருந்த அலமாரியின் அருகில் சென்று ஏதோ தேடிக் கொண்டிருந்தான்… அப்போது
“ரெட்டைப் புள்ளையா தாயி…. பார்க்க அப்டிதான் தெரியுது… இங்க யாருமே சொல்லல…” கண்மணியை உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆராய்ந்து பார்த்தபடி யோசனயுடன் கேட்க…
கண்மணியின் கண்கள் ஆச்சரியத்திலும்… அதே நேரம் பதட்ட்டத்திலும் உறைந்திருக்க… ரிஷி வேகமாக கண்மணியைத் திரும்பிப் பார்த்தான்…
அவனிடமும் ஒரு பதற்றம் வந்து சேர்ந்திருக்க… அதே நேரம்… கண்மணி சுதாரித்திருந்தாள்…
“இல்ல பாட்டி… அதெல்லாம் இல்லை..” கண்மணி சாதாரணமாகச் சொல்வது போன்ற பாவனையில் சொல்லி முடிக்க… இங்கு ரிஷியிடமோ ஒரே கேள்வி ஆயிரம் சிதறல்கள்களாக வெடித்திருந்தது… அனைத்தையும் தனக்குள் அடக்கிக் கொண்டவன்… வந்திருந்த பாட்டி பேசி முடிக்கும் வரை பொறுமையோடு இருந்தவன்… அதன் பின் அவரை கீழே விட்டு வந்தவன் மீண்டும் உள்ளே வந்த போது… அவன் பொறுமையெல்லாம் எங்கோ பறந்திருக்க…. கோபத்தோடு ள்ளே வந்து கதவைப் படாரென்று திறந்து அதே வேகத்தில் அடித்து மூட…
அவனை அலட்சியமாக எதிர்கொண்ட கண்மணியோ… அவனைக் கண்டு கொள்ளாமல் மீண்டும் திரும்ப… வேகமாக அவள் முன் வந்து நின்றவன்… அவள் தாடையைப் பற்றி திருப்ப போக… சட்டென்று அவன் கைகளைத் தட்டி விட்டவளாக அவனை விட்டு தள்ளி நின்றவளாக…
”எதுவா இருந்தாலும்…. ரெண்டடி தள்ளி நின்னு பேசுங்க மிஸ்டர் ரிஷிகேஷ்…” கண்மணி சொன்னபோது அவள் வார்த்தைகளில் இருந்த மிடுக்கு பார்வையிலும் இருக்க… ரிஷியின் கோபம் இன்னுமே பலமடங்காக எகிறத்தான் செய்தது… ஆனாலும் இந்த வார்த்தைகளின் தாக்கத்தை விட இப்போது வேறொன்று அவன் முன் நிற்க…
“ஏய்,… உன்னை… ” என்றவனிடம்… அவன் அன்று வரை கடைபிடித்த பொறுமை எல்லாம் பறந்து போயிருந்தது
“பாட்டி சொன்ன மாதிரி… நமக்கு ட்வின்ஸாடி… மறைக்காதடி… என்கிட்ட கர்ப்பமானதையே மறச்சு வச்சவ தானே… எனக்கு இப்போதான் பயமா இருக்கு…. நான் ஒரு லூசுடி… இப்படி யோசிக்கவே இல்லை…” ரிஷியின் குரலில் அது நாள் வரை இருந்த தைரியமெல்லாம் போயிருக்க… அவன் குரலில் பதட்டம் பதட்டம் மட்டுமே…
கண்மணியோ புன்னகைத்தாள் வெறுமையாக….
“ஆர் கே… எதுக்கு இவ்ளோ பதட்டம்… இவ்ளோ நாள் காட்டின நம்ம கூல் ஆட்டிட்யூட் எல்லாம் எங்க போச்சு சாருக்கு… நீங்க நினைக்கிற மாதிரி அதெல்லாம் ஒண்ணும் இல்லை… அந்த பாட்டி கேட்டாங்கன்னா அதுக்கு இவ்ளோ ரியாக்ஷனா ரிஷிகேஷுக்கு ” மிகச் சாதாரணமாக அவள் பேசிக் கொண்டிருக்க…இவன் தான் நிதானமின்றி நின்றிருந்தான்
“இல்ல நான் நம்ப மாட்டேன்… இப்போவே…. நான் சொல்ற டாக்டர் கிட்ட போவோம்… அவர் சொல்லட்டும் அதுக்கப்புறம் தான் நான் நம்புவேன்…” பட படவென ரிஷி பேசிக் கொண்டிருக்கும் போதே
கண்மணி அவன் நிலை எல்லாம் கண்டு கொள்ளாமல் தன் அலைபேசியை எடுத்தவள்…
“அர்ஜூன்… அந்த டாக்குமெண்ட்ஸோட… ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் எனக்கு எடுத்த டாக்டர் ரிப்போர்ட்ஸும் உங்ககிட்ட இருக்குமே… அதையும் எடுத்துட்டு வாங்க” என வைத்தும் விட… நிமிர்ந்த ரிஷி…
“அர்ஜூனை எதுக்குடி இங்க வரச் சொல்ற… அப்புறம் அது என்ன டாக்குமெண்ட்… கோபப்படுத்தாத கண்மணி”
“இந்த மாதிரி என்னை டீ போட்டு பேசுறதை மாத்த ட்ரை பண்ணுங்க ரிஷிகேஷ்…. அப்படியே பேசிப் பழகிட்டீங்க... மாத்துறது கொஞ்சம் கஷ்டம் தான்... ஆனால் மாத்தனும்... மறக்கவும் செய்யனும் ரிஷி… அப்புறம் மறக்கக் கூடாததை மறந்துட்டீங்க… அதுதான் ஞாபகப்படுத்தி கையோட கையெழுத்தையும் வாங்கிட்டு போயிறலாம்னு இருக்கேன்….” கண்மணி நிதானமாகப் பேச
ரிஷி முறைக்க…
“அதெல்லாம் சரி… ஆமாம் நேத்து எப்படிலாம் பேசுனீங்க… இன்னைக்கு என்ன இவ்ளோ சைலண்ட்… தனசேகர்-இலட்சுமி மருமகளா வந்துருக்கியா… நட்ராஜ் மகளா வந்துருக்கியா… இதுவா வந்துருக்கியா… அதுவா வந்துருக்கியானு… அவ்ளோ பெரிய வசனம் பேசுனீங்களே… இது எல்லாம் முடிவுக்கு வரனும்தானே… உங்களுக்கு உங்க குழந்தை வேணும்… எனக்கு விடுதலை வேணும் அவ்ளோதான் ரிஷிகேஷ்… அந்த பத்திரம் பழசுதான்… ஆனால் அதுக்கு இன்னைக்கு வேலை வந்துருச்சு… அவ்ளோதான் வித்தியாசம்… என்ன டாக்குமெண்ட்னு தெரியாத மாதிரியே கேட்க்றீங்க”
“கண்மணி… நான் கையெழுத்து போட்றேன்னு சொல்லி இருக்கேன்… ஆனா இப்போ என்ன அவசரம்… வளைகாப்பு முடியட்டும் …“
“அப்படியா… ஆனால் மிஸ்டர் ஆர் கே சார்க்கு சைன் போட்றேன்னு சொன்ன ஞாபகம் இருக்கிற மாதிரியே தெரியலையே… ”
”இதை விட பெரிய காமெடி என்னன்னா… நேத்து நைட் என்னை உங்க கூட உங்க ரூம்ல இருக்க வச்சுட்டோம்னு என்னவோ சாதிச்ச மாதிரி தெனாவெட்டுல திரியுறீங்க சார்… அதுதான் இன்னையோட மிகப் பெரொஇய காமெடி… ஆனால் அதே நேரம் நீங்க ஒண்ண மறந்துட்டீங்க… உங்களோட கிட்டத்தட்ட பத்து மாசம்… அதுலயும் மூனு மாசம் உங்களோட ரிலேஷன்ஷிப்ல” என ஆரம்பிக்கும் பொதே
“ஏய்…” என குரலை உயர்த்தி ரிஷி பல்லைக் கடித்தவன்…
“எது வேணும்னாலும் பேசு… தாங்கிக்கிருவேன்… ஆனால் உனக்கும் எனக்குமான உறவை கேவலப்படுத்தாத… கொன்னுருவேன் உன்னை” என விரல் நீட்டி எச்சரிக்க ஆரம்பித்த போதே
“ப்ச்ச்… உண்மையைச் சொன்னா கோபம் வரும் ரிஷி சார்க்கு… சரி விடுங்க…. பேசிக்கா எப்போதுமே இந்த கோபமான முகம் பிடிக்காது… அதாவது நீங்க சிரிக்கனும்… அந்த ரிஷிதான் எனக்கும் பிடிக்கும்… சோ கோபப்படாதீங்க பாஸ்… நானும் மூட் ஆஃப் ஆகாமல் பேசனும்ல… அதுனால சிரிச்ச மாதிரி முகத்தை வச்சுக்கங்க பாஸ்…” என்ற போதே அவனின் முகம் அஷ்ட கோணலாக மாறி இன்னும் கடுப்பாகி இருக்க… கண்மணி அப்போதும் விடவில்லை
”எனக்கு இப்போ என் காரியம் முக்கியம்… ஒகே… டீசண்டா சொல்லனும்ணா என்னோட லிமிட் எல்லாம் தாண்டித்தான் உங்க கூட இருந்தேன்… அதைப் பண்ணினவளுக்கு நேத்து நைட் உங்ககூட… ஜஸ்ட் பக்கத்துல படுத்தது பெரிய விசயமா என்ன… என்ன ரிஷி… நீங்கள்ளாம் எப்பேர்ப்பட்ட ஆளு… எப்படிலாம் ப்ளான் பண்ற ஆளு… இப்படி ஏமாந்துட்டீங்களே”
”கண்மணி… எல்லை மீறி போய்ட்டு இருக்க… வார்த்தை எல்லாம் வரம்பு மீறுது” எனும் போதே கதவு தட்டப்படும் ஓசை கேட்க…
கடுகடுத்த முகபாவனை மாறாமலேயே கதவை திறந்தான் ரிஷி…… அவன் கடுப்பில்… கோபத்தில் இன்னும் எண்ணெய் விட்டாற் போல அர்ஜூன் அங்கு நின்றிருக்க… கண்மணிதான் அர்ஜூனை உள்ளே வரச் சொன்னாள்…
அர்ஜூனை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் ரிஷி வழி விட…
ரிஷியைப் பார்த்தபடியே… அவனை முறைத்தபடியே உள்ளே வந்த அர்ஜூன் கண்மணியின் அருகில் நின்றிருந்தான் இப்போது
”தேங்க்ஸ் அர்ஜூன்…. “ என்றவள் அர்ஜூன் கொண்டு வந்த டாக்குமெண்ட் பத்திரங்களை மேஜையில் வைத்து விட்டு…
”அர்ஜூன்… அந்த மெடிக்கல் ரிப்போர்ட்… அது எங்கே…” எனக் கேட்க… அர்ஜூனும் எடுத்துக் கொடுக்க
”இது இனிஷியல் ஸ்டேஜ்ல எடுத்த ரிப்போர்ட்… அர்ஜூன்கிட்ட டாக்டர் கொடுத்தது…. டேட் கூட பார்த்துக்கங்க… எப்போ எடுத்ததுனு… எனக்கு கைல அடிபட்டப்போ எடுத்தது…. அல்ட்ரா ஸ்கேன் ரிப்போர்ட்… ” என ரிஷியிடம் கொடுக்க
ரிஷி வேகமாக வாங்கிப் பார்த்தான்…
“எங்கேயாவது ட்வின்ஸ்னு இருக்கா” என்ற போதே மூடி வைத்தவன்…
”இதெல்லாம் எனக்குத் தேவையில்லை… என்கூட இன்னைக்கு ஹாஸ்பிட்டலுக்கு வர்ற…”
”ரிஷி…. ஒரு குழந்தையா… இரட்டைக் குழந்தையான்ற தேவையில்லாத ஆர்க்யூமெண்ட் பண்ணிட்டு இருக்கீங்க…. ஐ திங்க் இந்த டாக்குமெண்ட்ல சைன் போட்றதுக்கு பயந்துட்டு பேச்சை வேற வேற மாதிரிலாம் டைவர்ட் பண்ற மாதிரி இருக்கு உங்க நடவடிக்கைலாம்”
”சரி நாம பேசலாம்… இவரைப் போகச் சொல்லு… இது உனக்கும் எனக்குமான விஷயம்…. இதுல மூணாவது மனுசங்க இருக்கிறதை நான் விரும்பல” ரிஷி அர்ஜுனைப் பார்த்துச் சொல்ல…
”ப்ச்ச்… நீங்களே எனக்கு வேண்டாம்னு தூக்கிப் போட்டுட்டு போறேன்… இதுல இரண்டாவது மனுஷன், மூணாவது மனுஷன்னு காமெடி பண்ணாதீங்க… கையெழுத்தைப் போடுங்க…” கறாராக கண்மணி பேச
”அப்புறம்… நான் கொடுத்த பேனா இருக்கா என்ன…. அதை எடுத்துட்டு வாங்க… இந்த டாக்குமெண்ட் உங்களுக்கு ப்ரெஸ்டியஜ்ஜா அது எனக்குத் தெரியல… ஆனா எனக்கு அவ்ளோ முக்கியம்… அந்தப் பேனாவாலே சைன் போட்டுட்டு… முடிந்தால் அந்தப் பேனாவை என்கிட்டயே ரிட்டர்ன் பண்ணிருங்க… இதுல சைன் போட்ட பின்னால அந்த பேனா இனிமேல உங்க செண்டிமெண்டா இருக்கப் போகுதா என்ன…” கண்மணி அவனை வார்த்தைகளால் குதறிக் கொண்டிருக்க
அர்ஜூனும் இப்போது குழப்பமாக மாறி இருந்தான்… “ட்வின்ஸ்…” இந்த வார்த்தையிலேயே அர்ஜூனின் எண்ணங்களும் இருக்க… அர்ஜூனும் பெரிதாக பேசவில்லை… கண்மணி ரிஷியொடம் மட்டுமல்ல…. தன்னிடமும்தான் ஏதோ மறைக்கின்றாள்… முதன் முதலாக அவனுக்கும் புரிய ஆரம்பித்திருக்க…
அலைபேசியில் அவனையுமறியாமல்… கண்மணியைப் பார்த்துக் கொண்டிருக்கும் அவர்களது மருத்துவமனையில் வேலை செய்யும் மருத்துவரின் எண்களுக்கு கை சென்றிருந்தது…
அடுத்த நிமிடமே…. “கண்மணி… நான் கிளம்புறேன்” என்றபடி கிளம்பி விட…. கண்மணியும் அர்ஜூனைத் தடுத்து நிறுத்த வில்லை….
இப்போது ரிஷியிடம் திரும்பியவள்….
“ரிஷி ஆயிரம் தடவை சொல்லிட்டேன்… இருந்தாலும் இன்னொரு முறையும் சொல்றேன்… அந்த டைம்ல நீங்க கஷ்டப் பட்டீங்க… உங்களுக்கு ஒரு ஆறுதல் தேவைப்பட்டது… அதுக்கு உங்க வீட்டு மருமகளா மட்டும் என்னால இருக்க முடியல… உங்களுக்கு மனைவியாகவும் ஒரு கட்டத்துல என்னோட உதவி தேவைப்பட்டது… அந்த உதவியைத்தான் நான் பண்ணினேன்… ஒரு பொண்ணோட காதல்… அவளோட வலி… இதுக்கெல்லாம் மதிப்பு கொடுக்காத உங்களுக்கு ஒரு பாடம் கத்துக் கொடுக்கனும்னு நினைத்தேன்… அவ்ளோதான்… மற்ற படி உங்க தகுதி.. காதல்… பாசம்… இது எல்லாம் எனக்குத் தேவையில்லாதது… அன்னைக்குச் சொன்ன மாதிரிதான்… அப்போதும் எனக்கு உங்ககிட்ட காதல் இல்ல… இப்போதும் இல்லை எப்போதும் இருக்காது… அப்போ சொன்ன அதே வார்த்தைகள் தான்…. இவர்கிட்ட போய் எனக்கு காதல் வருமான்னு கேட்டேனே…. அதே கண்மணிதான்… நான் எப்போதுமே…” என்றவளிடம்
”அதுக்கு நானும் ஆயிரம் விளக்கம் கொடுத்துட்டேன்… நீ எப்போதுமே என் கண்மணிதான்… இந்த ரிஷியோட கண்மணிதான்னு… ஏன் இப்போ கூட என் முன்னால… என்கிட்ட பேசுறவ மனசுல இந்த ரிஷிக்கண்ணாதான்… அவன் மட்டும் தான் இருக்கான்னு எனக்கும் தெரியும்…”
சிரித்தவள்… கிண்டலாகத் தோளைக் குலுக்கியபடியே
“நீங்க என்ன வேணும்னாலும் நினைச்சுக்கங்க… உங்க மனசு… உங்க எண்ணம்… ஐ டோண்ட் கேர்… “ என்றவள்
“ஆனால் அதுக்காக எல்லாத்தையும் டோண்ட் கேர்னு விட முடியாதுதான்…” என அவனைப் பார்த்தபடியே
”அப்புறம்… உங்க தகுதி… அது இன்னைக்கு எங்கேயோ போயிருச்சு…. ஆயிரம் பேர் வருவாங்க உங்களுக்காக… முடிந்தால் உங்க வாழ்க்கையை ஆரம்பிங்க…. ஹ்ம்ம்… ஒருவேளை அதுக்கு உங்களுக்கு இந்தக் குழந்தை தடையா இருக்கும்னு நினைக்கும் போது”
இப்போது கண்மணியிடம் வார்த்தைகள் தடுமாற…. ரிஷி… மீண்டும் தன் நிலைக்கு வந்திருந்தான்
“சொல்லு… தடையா இருந்தால்… உன்கிட்ட வந்து கொடுக்கவா” ரிஷியின் கண்களின் கோபத்துடன் கூர்மையும் வந்திருக்க
“என் அப்பா… இல்லைனா… என் தாத்தா பாட்டிகிட்ட கொடுத்துருங்க” அவளால் சொல்லி முடிக்க முடியவில்லை…
இருவரின் இதயங்களிலும் இதயத்துடிப்பின் படபடப்பு அதிகரித்து இருக்க… இப்போது ரிஷியின் கண்கள் சிவந்திருந்தது…
கண்மணியோ ரிஷியைப் பார்க்க முடியாமல்
“இப்போ சைன் போடுவீங்களா மாட்டீங்களா… இல்லை இப்படியே கிளம்பிறவா… என்னோட ராசிப்படி எனக்கு எதுவும் நடக்காது… இன்னைக்கு இந்த சீமந்தமும் அதுல ஒண்ணு… அவ்ளோதான்… ” ரிஷியை எங்கு அடித்தால் அவன் வழிக்கு வருவான் எனக் கண்மணிக்குத் தெரியாதா என்ன…
”உனக்கு சைன் தானே வேணும்… போட்றேன்… ஆனால் நல்ல நாள் அதுவுமா ப்ளீஸ்டி ஏதாவது சொல்லிறாத…. மனசெல்லாம் சிதறிரும்டி…. இந்த நிமிசம் வரைக்கும் எனக்கு இதுதான் உன்கிட்ட சொல்லத் தோணுது… உன்னோட முட்டாள் தனத்தால நீயும் நானும் ஒரு அழகான 6 மாதத்தை இழந்துட்டோம்னு தோணுது… கண்டிப்பா அதுக்கு ஒரு நாள் நீ பதில் சொல்லித்தான் ஆகனும்… அப்போ இருக்கு உனக்கு… அந்த ஒரு நாளுக்காகத்தான் நான் காத்திருக்கேன்…. கண்டிப்பா அந்த நாள் வரும்… ” என்றவன் வேகமாக குனிந்து பரபரவென அனைத்துப் பக்கங்களிலும் கையெழுத்தைப் போட்டு முடித்து அவளிடம் கொடுத்தவன்
“இதுல சைன் போட்டதால… உன்னை விட்டு போயிருவேன்னு நினைக்காத… நான் எப்படி உன்னை விட்டு போக மாட்டேனோ… அதே மாதிரி உன்னையும் என்னை விட்டு போக விட மாட்டேன்… உனக்கு ஏண்டி இது புரிய மாட்டேங்குது… ஒரு டெலிவரி ட்யூ டேட் உனக்கும் உன் அம்மாக்கும் ஒரே மாதிரியா இருக்குன்றதுனால இவ்ளோ யோசிப்பியாடி நீ… நீ பவித்ரா இல்லடி…. அதே மாதிரி நான் நட்ராஜ் இல்லடி… உன்னை நீயே குழப்பிகிட்டு… என்னை எவ்ளோ டார்ச்சர் பண்ணிட்டு இருக்க தெரியுமா… எனக்கு எவ்ளோ கஷ்டம் கொடுத்துட்டு இருக்க தெரியுமா “
கண்மணி பெரிதாக உணர்வுகளைக் காட்டாமல்… அந்த பத்திரங்களில் அவன் கையெழுத்துகளைச் சரி பார்த்துக் கொண்டிருக்க
“தெரியும் டி… என்னை விட… இது உனக்கு எவ்ளோ கொடுமையா இருக்கும்னு… நீ எவ்ளோ கஷ்டப்படுறேன்னு… கண்டிப்பா இதுக்கெல்லாம் ஒரு முடிவு வரும்… ஆனா ஒண்ணுடி… நீயும் நானும் நூறு வருசத்துக்கு வாழ்வோம்… இது மட்டும் நிச்சயம்… பார்க்கலாம்…. ” என்ற போதே…
ரித்விகா கதவைத் தட்ட… ரிஷி அவளை வரச் சொல்ல… உள்ளே வராமல் வாசலிலேயே நின்றபடி
“அண்ணா… அண்ணி… ரெண்டு பேரையும் சாமி கும்பிட வரச்சொன்னாங்க…”
“ஹ்ம்ம் வர்றோம் போ” என ரிஷி சொல்லிக் கொண்டிருக்கும் போதே… கண்மணி…
“ரித்வி… நில்லு… “ என்று ரித்விகாவை நிறுத்தி அவளோடு சேர்ந்து முன்னே செல்ல… ரிஷி அவளைத் தடுத்து நிறுத்தவெல்லாம் இல்லை…. அமைதியாக அவள் போவதையே வெறித்து பார்த்தபடி இருந்தவன்…
“நான் எப்போதும் நம்பிக்கையை … பொறுமையை விட மாட்டேன்… விடவும் கூடாது…” தனக்குள் சொல்லிக் கொண்ட போதே அவனின் முகம் மீண்டும் பொறுமையை கொண்டு வந்திருக்க… அடுத்த நொடி அந்த இல்லத்தின் பூஜை அறையில் இருந்தான் ரிஷி…
மொத்தக் குடும்பமும் பூஜை அறையில் குழுமி இருக்க… நாராயணன் குடும்பம்… வேங்கட ராகவன் குடும்பமும் அவர்களுடன் இருந்தனர்…
தாமதமாக ரிஷி வந்தாலும்…. சரியாக கண்மணியின் அருகில் போய் அதுவும் அவளை உரசியபடி சேர்ந்து நின்ற ரிஷியைப் பார்த்து கண்மணி முறைக்க…
கண்சிமிட்டியவன்…
“ஐ ஆம் பேக்… ஐ மீன்… கூல் ரிஷி… நீ கண்ணை மூடி… சாமியக் கும்பிடு அம்மு…” என அவளையேப் பார்த்தபடி இருக்க….
அந்த இடத்தில் அவனிடம் பேச முடியாமல் கண்களை மூடி வேண்ட ஆரம்பித்திருந்தாள்…
ரிஷி கண்மணியைக் காதலுடன் பார்த்திருக்க… அதே நேரம் அவர்கள் இருவருக்கும் எதிரில் நின்றிருந்த வேங்கட ராகவன் முதன் முதலில் அவர்களைப் எப்படிப் பார்த்தாரோ அதே தரிசனம் இன்றும் கண்டார்…. அன்று அம்மன் அணிந்திருந்த அதே நிறப் புடவையில்… இன்று தான் குல தெய்வமாக நினைக்கும் கண்மணி இருக்க… மனமுருக கண்மணியை கண்களிலும் நிறைத்தவர்… தன் நினைக்கும் வீட்டு குல தெய்வம் அனைத்து பிரச்சனைனகளையும் கடந்து… அவள் கணவனோடும் … குழந்தையோடும் வாழ புகைப்படத்தில் இருக்கும் அங்கிருந்த தெய்வங்களை மனமாற வேண்ட ஆரம்பித்திருந்தார்…
-
அன்று
ரிஷி அவளை விலகி… சில அடிகள் கூட எடுத்து வைத்திருக்க மாட்டான்… அடுத்த நொடி கண்மணி அவன் பின்னாலேயே வந்து அவன் கைகளைப் பிடித்திருக்க… நின்றான் ரிஷி… கூடுதலாக சின்ன முறைப்பும் கண்மணிக்குப் பரிசாகக் கிடைத்திருக்க
“வர மாட்டேன்னு சொன்னா விட்டுட்டு போயேன்டி” என ரிஷி சலித்தபடி சொன்ன போதே
“அதெல்லாம்… அப்படில்லாம் உங்கள விட்டுட்டு போக முடியாது ரிஷிக்கண்ணா… அவ்வளவு ஈஸியாவும் விட மாட்டேன்…. வாங்க…. அட்லீஸ்ட் எனக்காக” கண்மணி கெஞ்ச ஆரம்பித்திருக்க…
“கண்மணி” என அவன் அழைத்த குரலில் சலிப்பு இல்லை… ஒரு மாதிரியான கெஞ்சல் இருக்க
விடுவாளா கண்மணி….
“தம்பதி சகிதமா வந்துட்டு…. தனியா போன வேண்டுதல் எதுவும் நடக்காதாம்…” கண்மணி அள்ளி விட
“நம்பிட்டேன்…. பரவாயில்லை… ஒண்ணு பண்ணு… உன் அம்மன்கிட்ட ஒண்ணும் வேண்ட வேண்டாம்… சும்மா பார்த்துட்டு வா… வேண்டுதல் வைக்கிறதுக்குத்தானே… தம்பதி சகிதம் வரனும்…” ரிஷியிடமா கண்மணி பேசிக் ஜெயிக்க முடியும்
“அடப் பார்க்கிறதுக்கும் தம்பதி சகிதமாத்தான் போகனுமாம்ப்பா… வாப்பா” ரிஷியின் மனைவியாக அவனிடம் இத்தனை நாள் கற்காதா வார்த்தை ஜாலங்களா என்ன…. அவள் கற்பூர புத்தி என்பதை நிரூபித்திருக்க… ரிஷியின் முகத்தில் புன்னகை வந்திருக்க
”ரிஷிம்மா… ப்ளீஸ்… ப்ளீஸ்” எனும் போதே ரிஷியின் கால்கள் அவளை நோக்கித் திரும்ப… கண்மணி சந்தோசமாகத் துள்ளிக் குதித்தாள்
“ஹப்பா… ஒரு சாமி கும்பிட உங்கள கூட்டிட்டு போறதுக்குள்ள… முடியல… என்னமோ மாமியார் வீட்டுக்கு வர அடம் புடிக்கிற மாப்பிள்ளை மாதிரியே பிகு பண்றது… சரி சரி முறைக்காதீங்க” கண்மணி அவன் கைகளை பிடித்து இழுத்துக் தன்னோடு சேர்த்து வைத்துக் கொண்டு… தன்னவனோடு அம்மனின் கருவறை இருந்த கர்ப்பகிரகம் நோக்கிச் செல்ல ஆரம்பித்திருந்தாள்……
/* என்னை விட்டு செல்லாதே எந்தன் அன்பே
வேண்டும் உன் காதல் ஒன்றே
உன்னை மட்டும் நேசித்தேன் இது உண்மை
இன்னும் ஏன் இந்த ஊடல்
உந்தன் கண்ணில் நீ சிந்தும் ஈரம்ஏனடி
நெஞ்சில் பாரம் வேண்டாமே என்னை பாரடி
என்னை கொல்லாதே தள்ளி போகாதே
நெஞ்சை கிள்ளாதே கண்மணி
*/
i think she is having superfetation pregnancy. rare case of getting pregnant when u are already pregnant. may be few weeks gap. first rishi and kanmani were not aware of their first pregnancy.