அப்டேட் போட்டுட்டேன்... ஒரே போஸ்ட் போட போட முடியல... நாளைக்கு 80-2 போட்ருவேன்...
மிஸ்டேக்ஸ் இருந்தா ப்ளீஸ் மன்னிச்சுக்கோங்க...
கமெண்ட்ஸ்.. லைக்ஸ்... போட அப்புறம் படிச்ச எல்லாருக்கு அனைவருக்கும் நன்றி...
வழக்கமா என் கதைல ஹீரோயின் ஹீரோவை வச்சு செய்வாங்க... கண்மணி ரிஷியை பெருசா எதிர்த்தோ... கலாய்ச்சதோ இல்லை.. கண்மணி கதாபாத்திரம் அப்படி... ஆனால் இந்த எபிசோட்ல இருந்து அப்படி இருக்காது... ஹீரோயின் ஹீரோவை எதிர்த்து பேசினால் தான்... நம்ம பாணில தான் கதை எழுதுறோம்னு நமக்கே ஒரு திருப்தி வருது... அப்படி தோணுன எபி... படிச்சுட்டு சொல்லுங்க
பிரவீணா விஜய்...
அத்தியாயம் 80-1 :
விக்கியின் அண்ணைன் வீட்டுக்கு ரிஷியும் ரிதன்யாவும் வந்த போது…. விக்கியின் அண்ணனும்… அண்ணியும்… ரிஷியைப் பார்த்தார்களோ இல்லையோ… ரிஷியுடன் வந்து நின்ற அந்த வீட்டின் வருங்கால மருமகள் ரிதன்யாவின் மேல் தான் அவர்களின் மொத்த பார்வையும் இருக்க… சந்தோஷமாகவே வரவேற்றனர்…
அவர்களை விட விக்கியின் அண்ணியின் கைகளில் இருந்த அவர்களின் வாரிசு…. ரிதன்யாவைப் பார்த்து சிரித்து வைக்க…
ரிஷி புன்னகையோடு அந்தக் குழந்தையைப் பார்க்க… விக்கியின் அண்ணன் மகள் பயத்தோடு தன் அன்னையோடு ஒட்டிக் கொள்ள…
“அண்ணா… நீ தாடியெல்லாம் வச்சுட்டு சுத்துனா… இப்படித்தான்… எந்தக் குழந்தையும் பக்கத்துல வராது…” தன் அண்ணனை ஓட்டியபடி… ரிதன்யா அவளையும் அறியாமல் குழந்தை கண்மணியைப் பார்த்து புன்னகைத்த போதே
“வாம்மா… ரிது தானே… உன்னைப் பார்க்கனும்னு எங்க வீட்ல எல்லாருமே காத்துட்டு இருக்கோம்… உள்ள வாங்க… ரெண்டு பேரும்” விக்கியின் அண்ணி வாஞ்சையோடு ரிதன்யாவை அழைக்க…
ரிதன்யாவுக்கு உண்மையிலேயே என்ன சொல்வதென்றே தெரியவில்லை…. விக்கி கவலையோடு இவளிடம் பேசியதென்ன… அதைக்கேட்டு பயந்து பதறியடித்து வர…. இங்கோ இவளுக்கு இப்படி ஒரு வரவேற்பு…
பதற்றம் எல்லம் போய்… அவளையுமறியமால்… அவர்கள் கையில் இருந்த குழந்தையை வாங்கியவள்…
“அம்முக் குட்டி… என்னைப் பார்த்து சிரிக்கிறீங்களா…” குழந்தையிடம் பேசியபடியே விக்கியின் அண்ணியைப் பார்த்தவள்…
“டென்சன்ல வந்ததால.. ஏதும் வாங்கிட்டு வர முடியலை அக்கா… நான் ஒரு லூசு…” என்றபடியே தன் அண்ணனைப் பார்க்க… ரிஷி கண்மணியை கையில் வாங்கி கொஞ்சியபடியே…. தன் தங்கையிடம்
“விடு… பார்த்துக்கலாம்… அதுனால என்ன… இந்தக் கண்மணிப் பாப்பாவை அடிக்கடி பார்க்க வரத்தானே போகிறோம்” என்று மீண்டும் ரிதன்யாவிடமே கண்மணியைக் கொடுக்க…
”அந்தக் குழந்தையோ எப்போதடா அவனை விட்டுப் போவோம்” என்ற பாவனையில் ரிதன்யாவிடம் ஒட்டிக் கொள்ள…
விக்கியின் அண்ணனோ… சங்கடமாகப் பார்த்தபடி…
“அவ புது ஆளுங்ககிட்ட அவ்ளோ சீக்கிரமா வர மாட்டா ரிஷி… ஆனா ரிதன்யா கிட்ட ஒட்டிகிட்டா… சித்தினு தெரியுது போல இப்போதே” எனும் போதே ரிதன்யாவின் முகத்தில் வெட்கச் சிவப்பு கோலம் போட்டிருக்க… கண்மணியைக் கொஞ்சிக் விளையாடும் பாவனையில் ரிதன்யா வேறு புறம் திரும்பிக் கொள்ள…
ரிஷியின் முகத்திலும் சந்தோஷம் திரும்பி இருக்க… இறுக்கம் மறைந்தவனாக
”விக்கி எங்கண்ணா…” ரிஷி விக்கியின் அண்ணனிடம் கேள்வியைத் தொடுக்க
”ரூம்ல தாண்டா இருக்கான்… அர்ஜூன் சாரும் வந்திருக்காரு…. எல்லார் கிட்டயும் என்ன சொல்லி வச்சான்… ஏன் இப்படி டென்சன்ல வந்துருக்கீங்க… நிவேதா போன் பண்ணி… அர்ஜூன் சார் கிட்ட சொல்லிருப்பா போல… அவரும் வந்திருக்காரு… விக்கி ரூம்ல தான் இருக்காரு… போய்ப் பார்” எனும் போதே ரிஷியின் முகம் மெல்ல மாற ஆரம்பித்தாலும்… காட்டிக் கொள்ளாமல்… விக்கியைத் தேடிச் செல்ல… இப்போது ரிதன்யாவும் அவன் பின்னே சென்றாள்…
---
”இப்போ ஏன் இவ்ளோ கோபம் உனக்கு… தாத்தா என்ன மேரேஜ் பண்ணிக்க வேண்டாம்னா சொன்னார்…” விக்கியின் அறையில் அர்ஜூன் கேட்டுக் கொண்டிருக்க… விக்கியோ.. கோபத்தோடு
“எங்க குடும்பத்துக்கு அவர் எவ்ளோ முக்கியம்னு உங்களுக்குத் தெரியாதா??… அவர் இல்லாம ஒரு துரும்பு கூட எங்க குடும்பத்துல அசையாது… அவர் ஆசிர்வாதம் இல்லாமல்… எப்படி சார்… அனாதை மாதிரி நிமிசத்துல என்னை நிறுத்தி வச்சுட்டாரு… அவர் வராமல் எங்க குடும்பத்துல யாராவது வருவாங்களா… நல்லபடியா மேரேஜ் பண்ணிக்கோ… நான் வர மாட்டேன்னு என்னை தண்ணி தெளிச்சு விட்டுட்டாரு.. அப்படி என்ன சார் தப்பு பண்ணேன்… லவ் பண்றது அவ்ளோ தப்பா… மனசுக்கு பிடித்த பொண்ணை கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிறது தப்பா… என்னால அவர் சம்மதம் இல்லாமல் மேரேஜ் பண்ணிக்க முடியாது… அதைப் புரிஞ்சுக்க மாட்டேங்கிறார்…” என்று நிமிர்ந்தவன் கண்களில் அறையின் வாசலில் ரிதன்யா பட…
ரிதன்யாவைப் பார்த்தவுடன் விக்கியின் முகம் இன்னும் சோகத்தை அப்பிக் கொள்ள… வேகமாக வேறு திசையில் திரும்பிக் கொண்டான் விக்கி… அவளைப் பார்க்க முடியாமல்
“என்ன விக்கி… ஏன் இப்படி” அவன் அருகே ரிதன்யா வந்து அமர்ந்து… அவன் கைகளை தன் கரத்துக்குள் அடக்கிக் கொள்ள…
“ப்ச்ச்… இவ்ளோ நாள் ரொம்ப கெத்தா சுத்திட்டு இருந்தேன்… எல்லா இடத்திலும் வெற்றி… மனசுக்கு பிடிச்ச பொண்ணு… அதுக்கும் நம்மள பிடிக்குதுனு… எங்கேயுமே தோல்வியே பார்த்ததில்ல… மொத மொதல்ல..” என்று புலம்ப ஆரம்பித்திருக்க…
இப்போது ரிஷியும் அர்ஜூனும்… அவர்களுக்குத் தனிமை கொடுத்தபடி அந்த அறையை விட்டு வெளியேறி வந்து விக்கியின் சகோதரன் முன் வந்து நின்றனர்…
“இப்போ ஏன் இவ்ளோ புலம்புறான்…. பெரியவங்கன்னா… அப்படித்தான் இருப்பாங்க… பேசித்தான் புரிய வைக்கனும்….” ரிஷி பொறுமையாகப் பேச
அர்ஜூன் அது கூட பேச வில்லை… அவனுக்கும் இங்கு விக்கியை மட்டுமே தெரியும்… ஏர்போர்ட்டுக்கு சென்று கொண்டிருந்த வழியில் நிவேதா அவர்கள் வீட்டுல் நடந்த விசயத்தை சொல்லி… அர்ஜூன் சொன்னால் அவன் மேல் விக்கி வைத்திருக்கும் மரியாதையில் கண்டிப்பாக சமாதானம் அடைவான் எனச் சொல்லி விக்கியைப் பார்த்து வரும் படி சொன்னவள் என கெஞ்சிக் கேட்டிருக்க வேறு வழி இல்லாமல் விக்கியைப் பார்க்க வந்திருந்தான்…
அர்ஜூனுக்கு… அவன் தற்போது இருக்கும் நிலையில் … அடுத்தவருக்கு ஆறுதல் சொல்வது ஒன்றுதான் குறைச்சல் என்று தோன்றினாலும்… நிவேதா அழுத்தம் கொடுத்ததால்… வேறு வழி இன்றி தன் அமெரிக்க பயணத்தை தள்ளி வைத்து விட்டு வந்திருந்தான்…. அர்ஜூன்…
“அவங்க தாத்தா… சம்மதம் சொல்லாமல் எல்லாம் இல்லை… இவன் தான் மேரேஜே வேண்டாம்னு சொல்லிட்டு வீறாப்பா பேசிட்டு வந்திருக்கான்” அர்ஜூன்… ரிஷிக்கு தகவல் சொல்வது போல எங்கோ பார்த்தபடி சொல்ல…
ரிஷி… விக்கியின் அண்ணனைப் பார்த்து புருவம் சுருக்க
“ஆமாம் ரிஷி… தாத்தா சம்மதம் சொல்லாமல் இருந்திருந்தாலும் இவன் வேற மாதிரி பேசிருப்பான்… அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்திருப்பான்… ஆனால்… அவர் இவனை இலட்சியம் செய்ய வில்லை… நீ யாரோ … எவரோன்னுன்ற மாதிரி பேசிட்டாரு… அதுதான் இவனால தாங்க முடியவில்லை… நீங்க வந்தா… சம்மதம் சொன்னா எனக்கு மேரேஜ்… இல்லை அப்படி ஒரு விசயம் என் வாழ்க்கையில தேவையே இல்லைனு சொல்லிட்டு வந்துட்டான்… அவரும் பிடிவாதம் பிடிக்கிறாரு… அவர் இல்லாம நாங்க மட்டும் எப்படி… அப்பா அம்மா சித்தி சித்தப்பா எல்லோரும் சொல்லிட்டோம்… தாத்தா எப்படியும் ஒரு நாள் சமாதானம் ஆகிருவாரு… நீ போய் ரிதன்யா கூட வாழுன்னு…. கேட்க மாட்டேங்கிறான்… இங்க வந்து புலம்புறான்”
விக்கியின் அண்ணன் சொன்ன விசயங்களை எல்லாம் கேட்டபடியே… ரிஷி அமைதியாக விக்கியும் ரிதன்யாவும் இருந்த மூடப்பட்டிருந்த அறைக்கதவை வெறித்தபடி நின்றிருந்தவன்…. ஒரு நிமிடம் கண் மூடி திறந்தவன்… பின் வேகமாக விக்கியின் அறைக்கதவைத் தட்ட… ரிதன்யாவும் வந்து கதவைத் திறந்தாள்…
கதவைத் திறந்த தங்கையை… வேகத்தோடு தாண்டிச் சென்றவன்….
“என்னமோ மேரேஜ் வேண்டாம்னு உன் தாத்தாகிட்ட சொல்லிட்டு வந்தியாமே… அப்போ என் தங்கச்சிக்கு… அவ வாழ்க்கைக்கு பதில் சொல்லிட்டு போ… யாரைக் கேட்டு மேரேஜ் வேண்டாம்னு சொன்ன… மேரேஜ் வேண்டாம்னு சொல்றதுக்கு முன்னால இவள யோசிச்சியா…” பாய்ந்து வந்து விக்கியின் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்டவன்…
“உனக்கு உன் தாத்தா முக்கியம்னா… அவரைச் சமாதானப்படுத்த முடியாதுனா… அப்புறம் ஏண்டா என் தங்கச்சிதான் வேணும்னு என்கிட்ட வந்து நின்ன… நாளைக்கு என் தங்கையை வேண்டாம்னு உன் தாத்தா சொன்னா… அப்போதும் என் தங்கையைப் பற்றி யோசிக்க மாட்டதானே… அப்புறம் எதுக்கு உனக்கு இவ… என் தங்கச்சிய விட்ரு… நீ வா ரிது…” என அவன் சட்டையை விட்டவன்… ரிதன்யாவின் கைகளைப் பிடித்தபடி
“அண்ணா… ப்ளீஸ்… விக்கியே மனசு கஷ்டத்தில இருக்கார்… நீ வேற ஏண்ணா அவரைக் கஷ்டப்படுத்துற”
“என்ன கஷ்டப்படுறான்… அவன் தாத்தாவை சம்மதிக்க வைக்க தைரியம் இல்லாமல் மேரேஜ் வேண்டாம்னு சொல்ற கோழை… உன்னை சந்தோசமா வச்சுக்கப் போறானா… கெளம்பு வா போகலாம்… இவனுக்கு இவன் தாத்தா முக்கியம்னா… எனக்கு என் தங்கச்சி முக்கியம்… நீ நான் சொல்றதைக் கேட்பதானே…” எனும் போதே ரிதன்யா கண்களில் கண்ணீர் வந்து நிற்க… அடுத்த நொடி ரிஷி அமைதி ஆகி தங்கையைப் பார்த்தவன்… அந்த இடத்தை விட்டு வெளியே வந்தும் நின்றான்…
தங்கையைப் பொறுத்தவரை… அவள் காதலிப்பது தனக்குத் தெரியாமல்… அண்ணன் சொன்னான் என்பதற்காக அவன்… விக்கியை மாப்பிளை என அவன் சொன்னாதால் மட்டுமே சம்மதித்திருக்கின்றாள்… இந்தக் காட்சியை… அந்த பொய்யை… அதை உடைக்கும் மனநிலை ரிஷிக்கு வரவில்லை… அதனால் பிரச்சனையை வளர்க்க முடியாமல் வெளியே வந்து விட…
கடுப்பாக இருந்தது ரிஷிக்கு… விக்கியை இப்போது பார்த்து பேசினால் நண்பனாக பேச மாட்டான்… ரிதன்யாவின் அண்ணனாகத்தான் பேசுவான் என்ற நிலையில் இருக்க… கூடுதல் கடுப்பாக அருகிலேயே… அவன் கண்பார்வையிலேயே அர்ஜூன் வேறு… என்னமோ இவனை அவன் நக்கலாகப் பார்ப்பது போல ஒரு பிரமை… ஒரு மாதிரியான அலைப்புறுதல்…
மனமெங்கும் ரிதன்யா… அவன் தங்கை மட்டுமே… அதே நேரம் கண்மணி அவனுக்கு அழைக்க
“சொல்லு…” மொட்டையாகக் கண்மணிக்கு பதில் கொடுக்க
எதிர் முனையில் அவள் என்ன சொன்னாளோ….
“இப்போ என்னடி பிரச்சனை உணக்கு… நல்லாத்தானே பேசிட்டு இருக்கேன் உன் கூட… எவன் கிட்டயும் சண்டைக்கு போகல… என்னையும் காயப்படுத்திக்கல… சும்மா எப்போ பார்த்தாலும்… நீ என்ன பண்ற… ஏது பண்றேன்னு… நீ போனை வை முதல்ல… ” எனப் பட படவென பொரிய… அர்ஜூன் முகம் கோபத்தில் குப்பென சிவந்திருந்தது… கண்மணியிடத்தில் ரிஷி காட்டிய அலட்சியமான கோபமான குரலில்
அதே நேரம் கண்மணி….
“அதெல்லாம் நீங்க சொன்னா வைக்க முடியாது… ஏன் குரல் இவ்ளோ டல்லா இருக்கு அதை சொல்லுங்க”
“ப்ச்ச்… விட மாட்டியாடி நீ”
“மாட்டேன்… விட மாட்டேன்… நீங்க விடு விடுன்னு சொன்னாலும் விட மாட்டேன்… அது உங்களுக்கும் தெரியும்… சொல்லுங்க என்ன ஆச்சு… உங்க ஃப்ரெண்ட் கிட்ட பேசுனீங்களா…“ கண்மணி எதிர்முனையில் பிடிவாதத்தைக் காட்ட… வழக்கம் போல மனைவியின் உரிமையில்… தணிந்தவனாக
“என்னை விடு… எனக்கு ஒண்ணும் இல்லை… நீ எங்க இருக்க… என்னைக் கேட்டதானே…. உன் குரல் ஏன் டல்லா இருந்துச்சே… அதைச் சொல்லு” ரிஷி அனைத்தும் மறந்து அவள் கணவனாக மாறி கண்மணியிடம் பேசிக் கொண்டிருக்க… அவன் வார்த்தைகளைக் கேட்டபடியே அங்கு அர்ஜூனின் கோபம் நொடியில் இறங்கி… கண்மணிக்கு என்ன ஆயிற்று… ஏன் அவள் குரல் வருத்தமாக இருந்தது என்ற சிந்தனைக்குத் தாவி இருக்க…
“தாத்தா வீட்ல இருக்கேன்…” கண்மணி முடிக்க…
“சரி… பார்க்கனும் பார்க்கனும்தானே சொன்ன… அப்புறம் என்ன… சந்தோசம் தானே குரல்ல வந்திருக்கனும்…” ரிஷி கேட்க
“ஹ்ம்ம்… “ கண்மணி ஒற்றை வார்த்தையில் சொன்ன போதே… அவள் குரல் ஞஙனநமண வாசிப்பது போன்ற பாவனை வந்திருக்க
“ஏய்…என்ன ஹ்ம்ம்ம்ம்… சொல்லு… யாராவது திட்டுனாங்களா”
“சொன்னா கோபப்படுவீங்க… “ கண்மணி அமைதியாகச் சொல்லி… மௌனிக்க…
“உன்கிட்ட சொல்லிருக்கேன்… எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுனு… சொல்லுடி… நீயும் என்னைப் படுத்தாதடி… சொல்லு”
எதிர்முனையில் மௌனம் மௌனம் மட்டுமே…. சற்று முன் வீட்டில் அவனிடம் சந்தோசமாகப் பேசிய மனைவியின் மௌனம்… அவனை நிலைகுலைய வைக்க... இப்போது நிமிர்ந்தவன் அர்ஜூனைப் பார்த்தபடியே… சற்று தள்ளி சென்றபடி
“என்னடா அம்மு… சொன்னாத்தானே புரியும்… சொல்லு… எதுவா இருந்தாலும் சொல்லு… கோபப்பட மாட்டேன்” எனும் போதே
“அர்ஜூன் கிளம்பிட்டாரு ரிஷி… “ கண்மணி நீண்ட இடைவேளைக்குப் பிறகு சொன்னவள்… சற்று நிறுத்தி
“என்கிட்ட சொல்லாமலேயே” என்ற போது அதில் தொணித்த வருத்தத்தில்… ரிஷிக்கு சுர்ரென்று கோபம் வந்ததுதான்… இருந்தும் அடக்கிக் கொண்டு நின்ற போதே
“சண்டை போடுவாரு… இல்லை திட்டிட்டுப் போவாரு… ஆனால் கிளம்பும் போது சொல்லாமல் போக மாட்டாரு… அட்லீஸ்ட் மெஸேஜாவது பண்ணிட்டு போவாரு… ஒரு நாள் கூட இக்னோர் பண்ணிட்டு போக மாட்டாரு… இந்த ஒரு வாரமா என்னை அவாய்ட் பண்ணாரு... எனக்கும் அது சரின்னே பட்டதுதான்… இது அவருக்கு நல்லதுன்னு… நானும் கண்டுக்கலை… ஆனால் இங்க வந்தப்போ பாட்டி அர்ஜூன் ஊருக்கு கிளம்பிட்டார்னு சொன்ன போது… மனசு கஷ்டமாகிருச்சு ரிஷி… ஒரு வார்த்தை கூட சொல்லாம போய்ட்டாரு…”
ரிஷி பல்லைக் கடித்தான் தான்…
“ஏண்டி… ஒண்ணு பண்ணவா…. குறுக்கு வழில போய் உங்க அர்ஜூன் போற ஃப்ளைட்ட ஹைஜாக் பண்ணி… அவரைக் கூட்டிட்டு வந்து உன்கிட்ட பை சொல்லிட்டு போகச் சொல்லவா… ஆனாலும் உனக்குத் தைரியம் தாண்டி… அவன் போய்ட்டான்னு என்கிட்டயே சொல்லி புலம்புற”
கண்மணி பேசாமல் இருக்க… அவள் மௌனமே சொன்னது….. அவள் கவலையை
“இப்போ என்ன பண்ண சொல்ற நீ… நான் என்ன பண்ண… ” ரிஷி இறங்கி வந்திருக்க… அவன் குரலும் ஆறுதலான பாவனையில் மாறி இருக்க
கண்மணியும்
“நீங்கதானே சொன்னீங்க… என்ன பிரச்சனைனாலும் உங்ககிட்ட சொல்லச் சொல்லி… அதை நம்பி சொல்லிட்டேன் ரிஷி சார்…. போங்க.. போய் உங்க கவலையை அதாவது உங்க தங்கச்சி கவலையை போய்ப் பாருங்க… “ என்று பட்டென வைத்திருந்தாள்…
“ஏய் ஏய் இருடி” இவன் அலைபேசியோடு மட்டுமே கத்திக் கொண்டிருக்க…
அங்கு கண்மணியோ…
“பெரிய இவனாட்டம்… என்ன பிரச்சனைனாலும் என்கிட்ட சொல்லுனு சொல்ல வேண்டியது… சொன்னோமே என்ன பண்ணிட்டாராம்… என்னைச் சொல்லனும்… அதுவும் அவன் தங்கச்சி பிரச்சனைல இருக்கும் போது நம்ம ஃபீலிங்க்ஸ்லாம் சார்க்கு புரியுமா….” ரிஷியைத் தாளித்துக் கொண்டிருக்கும் போதே… அவனிடமிருந்து மீண்டும் அழைப்பு வந்திருக்க
எடுத்தவள்… அவன் பேச ஆரம்பிப்பதற்கு முன்னமே
“ஒரு ஆறுதல் மண்ணாங்கட்டியும் தேவையில்லை… அர்ஜூன் ஊருக்கு போனதும் அவரே பேசுவாரு… “
“சொல்லு… என்ன” ரிஷியின் அலைபேசியில் அர்ஜூனின் குரல்….
அர்ஜூனின் குரலைக் கேட்ட கண்மணியின் கண்கள் விரிந்திருக்க… கண்ணைத் துடைத்துவிட்டு கையில் வைத்திருந்த அலைபேசியை மீண்டும் நம்ப முடியாமல் பார்க்க… அது ரிஷியின் அலைபேசி எண் தான்
“நான் இங்கதான் இருக்கேன்… விக்கி வீட்ல… “ என ஆரம்பித்த அர்ஜூனிடம் பாட்டி சொன்ன தகவலைச் சொல்ல…
“கிளம்பிட்டேன் தான்… விக்கியோட அக்கா பேசினா… விக்கி அவன் தாத்தா கூட சண்டை போட்டுட்டு வந்துட்டான்னு…. சோ போகலை… வேற என்ன சொல்லு… ” அர்ஜூன் பேசாமல் அமைதியாக அவள் பதிலை எதிர்பார்த்து இருக்க…
கண்மணிக்கோ அர்ஜூனின் அமைதி புதிதாக இருந்தாலும்… அவனிடம் என்ன கேட்பது… ரிஷியிடம் புலம்பலாம்… இவனிடம் புலம்ப முடியுமா…
“இல்லை வேற ஒண்ணுமில்லை… நீங்க சொல்லாம போயிட்டீங்கன்னு அவர்கிட்ட புலம்பிட்டு இருந்தேன்.. சரி போகலதானே… பாட்டி வீட்லதான் இருக்கேன்… இப்போ கிளம்பிருவேன்… அப்போ வைக்கவா…”
வேறொரு சமயமாக இருந்திருந்தால் அர்ஜூன் என்ன பேசி இருப்பான் என்று அவனுக்கே தெரிந்திருக்காது… கண்மணி கர்ப்பமாக இருக்கின்றாள்… தன் கோபம் அவளைத் தாக்கிவிடக் கூடாது… அதனால் தான் அவன் இங்கிருந்து கிளம்பியது கூட… ஆனால் அது கூட அவனால் முடியவில்லை… இதற்கு மேல் அவனுக்கு கண்மணியோடான வாழ்க்கை என்பது நடக்கவே இயலாத ஒன்று…. அவன் அத்தையின் நிறைவேறாத பல ஆசைகளில் இதுவும் ஒன்று கடந்து போக நினைத்தவனாக… எல்லாவற்றையும் மனதோடு விட்டி விலக நினைக்கிறான் தான்… ஆனாலும் மீண்டும் மீண்டும் ஏதோ ஒன்று அவனை அவளோடு கொண்டு வந்து சேர்ப்பது போலவே அவனுக்குள் எண்ணம்… அர்ஜூன் மிகக் குழம்பி இருக்க… அந்தக் குழப்பத்தில் கண்மணியோடும் அவனால் பேச முடியவில்லை…
அர்ஜூனும் கண்மணியிடம் வார்த்தையை வளர்க்காமல்…. தன் அருகே நின்று அலைபேசியை பிடித்துக் கொண்டிருந்த ரிஷியைப் பார்த்தான்…
ரிஷி வந்து அலைபேசியை நீட்டியபோது அலைபேசியை கையில் கூட வாங்காமல் அவனைப் பார்க்கக் கூடப் பிடிக்காமல் திரும்பிக் கொண்டவனிடம்… ரிஷிதான் ஸ்பீக்கர் மோடை மாற்றியபடி ஆன் செய்ய… கண்மணியும் அவளாகவே பேசி விட… அர்ஜூனும் அவள் குரலைக் கேட்ட பின்… தவிர்க்க முடியாமல் பேசியும் முடித்தான்….
அர்ஜூன் முகத்தில் என்ன கண்டானோ… ரிஷியும் அவனிடம் வம்பு வளர்க்கவில்லை… அமைதியைக் கடைபிடித்தபடி…. அர்ஜூனிடம் நீட்டியிருந்த தன் அலைபேசியைத் தன்புறம் எடுத்துக் கொண்டவன்… ஸ்பீக்கர் மோடை மாற்றியபடி… அர்ஜூனை விட்டு நகர்ந்து தனியிடம் போய்… மீண்டும் தன் மனைவியிடம் பேச ஆரம்பிக்க
“ஓய் ரிஷிக்கண்ணா… தப்பா நெனச்சுட்டேனே… என் புருசன் இவ்ளோ திறமைசாலியா…. எப்படி ரிஷிக்கண்ணா ஃப்ளைட்ட ஹைஜாக் பண்ணுனீங்க… என்ன ஒரு சாதனை…“ கண்மணி அவனிடம் வேண்டுமென்றே வம்பிழுக்க
“வீட்ல வந்து பேசிக்கிறேன்டி உன்னை… நேர்ல வந்து வச்சுக்கிறேன்…”
”ரிஷி…………… ரி…………….ஷிக்…. கண்………. ணா… ஆல்வேஸ் வெல்கம்… வரும் போது மல்லிப்பூவும் அல்வாவும் வாங்கிட்டு வந்து… அதை வச்சு விட்டுட்டு வச்சுக்கிட்டீங்கன்னா,,, இன்னும் ரொம்ப சந்தோசம்” அதே உற்சாகத்தில் அவனிடம் வேண்டுமென்றே வம்பிழுக்க…
சற்று முன் கவலையோடு ஒலித்த தன் மனைவியின் குரலா இது எனும்படி கண்மணி குரலில் அப்படி ஒரு உற்சாகம்( to be continued)
அத்தியாமம் 80-2 -இல் இருந்து சில பகுதிகள்
“ரொம்பப் பேசுறடி… இங்க விக்கியும் ரிதன்யாவும் வேதனையில இருக்காங்க… நீ என்கிட்ட விளையாடுறியா என்ன” ரிஷி கடுப்படிக்க
--
“என்ன… என் தங்கச்சி மேல இருக்கிற கோபத்தை எல்லாம் காட்றதுக்கு டைம் கெடச்சிருச்சுனு காட்றியா என்ன” சந்தேகமாக இழுத்தவனின் மூளையில் மின்னல் வெட்ட
---
“அம்மா! தாயே! ஏதோ ஒரு அவசரத்துல… உன்கிட்ட பெர்மிஷன் வாங்காமல்… உன் பதிலைக் கூட கேட்காமல் வந்துட்டேன்…. தப்புதான்… அதுக்கு வீட்டுக்கு வர்றேன்… என்னை என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ… இப்போ மேடம் நீங்க எனக்கு பெர்மிஷன் கொடுத்தா விக்கி கிட்ட பேசப் போவேன்….” குரலில் கடினத்தன்மை வந்திருக்க
---
“கம்பெனி கொடுடா… ரிதுகிட்ட கூட பெர்மிஷன் கேட்டுட்டேன்…” விக்கி மெல்லிய குரலில் சொல்ல
“எப்போ இருந்துடா இந்தப் பழக்கமெல்லாம் ஆரம்பிச்ச” விக்கியிடம் ரிஷி கடுப்பாகக் கேட்க
--
“அந்த ஆதவன் என் மேலயும் விக்கி மேலயும் செம்ம கோபத்துல இருக்கான்னு தெரியும்… அவனுக்கு ரிதுவை பற்றி எப்படியோ தெரிஞ்சுருக்கு…. விக்கிக்கு எனக்கும் பொதுவான ஒரு ஆள்னா… ரிதன்யான்னு … அவளைத் தூக்க ஸ்கெட்ச் போட்டுட்டு இருக்கானாம்…”
--
”கார்லா விசயத்தை மறந்துட்டீங்களா… துரையை போட்டது மாதிரி இவனையும் போட்டுத்தள்ள எவ்ளோ நேரம் ஆகும்… ஏன் அதை பண்ண மாட்டேங்கறீங்க”
--
Nice update