hi Friends,,,
வழக்கம் போல... லேட்... என்னைத் திட்டாமல்... யூ டேர்ன் போட்டு... ஸ்டோரி படிக்க போவிங்களாம் எல்லோரும்....
குறிப்பு...
கதையில ஹீரோயினுக்கு கூட லேப்டாப் தனியா கிடைச்சுருச்சு.... நமக்கு அந்தக் கொடுப்பினை இல்லை போல... லாஸ்ட் மந்த் டேக்ஸ் ரிட்டர்ன்ஸ் ஃபைல் பண்றதுல லேப் டாப் என் ஹஸ்பண்ட் கிட்ட பிஸி... சோ கதை கொடுக்க முடியல... [தனி லேப்டாப் கொடுத்தாலும்.. நீ அப்படியே அப்டேட் கொடுத்துருவ.... மைண்ட் வாய்ஸ் கேட்குதுதான்... ஹா ஹா.. ...] ஒகே ஒகே அப்டேட் படிங்க....
பை...
பிரவீணா விஜய்...
-----------------------------------------------------------------------------------------------------
அத்தியாயம் 79
”அம்மா” வரும் போதே ரிஷி தன் அன்னையை அழைத்தபடியே உள்ளே வர, இலட்சுமியும் சிரித்தபடியே ரிஷியை வரவேற்றார்…
”அம்மா… கண்மணி எங்க” பார்வையில் தேடலைத் தேக்கியபடியே… அன்னையிடம் கேட்க
”அதானே பார்த்தேன்… என்னடா… அம்மான்னு கூப்பிட்டுட்டு வர்றேன்னு நெனச்சேன்” ரித்விகா வழக்கம் போல் தன் அண்ணனை ஓட்ட… வழக்கம் போல ரிஷி அவளிடம் பேச்சை வளர்க்காமல்…
“அம்மா… ஸ்டார்ட் மியூசிக்” என தாயிடம் தங்கையைப் போட்டுக் கொடுத்துவிட்டு… கண்மணி எங்கு இருக்கிறாள் என கேட்டறிந்தவனாக அந்த இடத்தை விட்டு நழுவியும் இருந்தான்…
--
கண்மணி, மாடி அறையில் இருக்கிறாள் என்று தன் அன்னை சொல்லியதால்… மேலே போகாமல் நட்ராஜ் வீட்டுக் கதவைத் திறந்து தான் கொண்டு வந்திருந்த பொருட்களை வைத்தவன்… அதன் பின் மாடி அறைக்குச் செல்ல… கண்மணி தரையில் போடப்பட்டிருக்கும் அவர்கள் மெத்தையில் அமர்ந்து… சுவரில் சாய்ந்தபடி படித்துக் கொண்டிருந்தாள்…
அதே போல இவன் வருகையை அவன் படிக்கட்டில் ஏறும் போதே அறிந்ததால்… அவனை எதிர்பார்த்திருந்தவளாக… வாயிலைப் பார்த்தபடியே இருந்தவள்… ரிஷி வாசலில் வந்து நிற்க… அவனை வரவேற்கும் விதமாக புன்னகை செய்தவள்… வேண்டுமென்றே கடிகாரத்தைப் பார்த்தவளாக
“என்ன ரிஷி சார்… இவ்வளவு சீக்கிரம்… இன்னைக்கு” மலர்ந்த முகத்தோடு கேட்டபடி… அவன் அமர்வதற்கு ஏதுவாக அவளருகே அவனுக்கு இடம் விட்டு நகர்ந்து அமர…
அவனோ..
”ஹ்ம்ம்ம்… நக்கல்தாண்டி உனக்கு…” என இழுத்தவன்
””காரணம் வேணுமோ மேடத்துக்கு…”
”இந்த மணியோசை அழைச்சுருச்சு… “
சொன்னதோடு மட்டுமல்லாமல் அவளருகே குனிந்து… அவள் இதயத்தில் கை வைத்தபடி…. அதன் துடிப்பைச் சுட்டிக் காட்டியவனின் கண்களில் இருந்ததோ காதல்… ஆனால் கரங்களோ மெல்ல அவன் உரிமையை அவளிடம் காட்ட ஆரம்பித்திருக்க பொய்க்கோபத்துடன் அவன் கைகளைத் தட்டி விட்டவள்…
”என்ன இன்னைக்கு ரிஷிகேஷ் கிட்ட ரொமான்ஸ் மழை பொங்கி வழியுது… சரியில்லையே…” எனப் பயந்தவள் போல அவனை விட்டு தள்ளி அமர…
அவளருகே சாவாதனமாக அமர்ந்தவன்… அவள் தோள் மேல் கைபோட்டபடி… தன்னோடு சேர்த்து வைத்துக் கொண்டபடியே…
“ஏன் நாங்க உங்ககிட்ட ரொமான்ஸே பண்ணதே இல்லையா…. ரொம்ப பேசுறடி… “ என்றபடியே
“நாங்கள்ளாம் வாய் வார்த்தைல பாயாசம் காய்ச்சுறவங்க இல்லை… செயல்ல காமிக்கிறவங்க… பார்த்துக்கலாம் விடு… சொல்லிட்டேல்ல…. “ என்றபடியே அவள் புறம் சரிந்தவனிடம்
“ரிஷிக்கண்ணா அது அப்படி இல்லை… நான் என்ன சொல்ல வந்தேன்னா…. “ கண்மணி இழுத்தபடியே
”உங்க ரொமான்ஸ் எப்படி இருக்கும்னா… ஒண்ணு அப்டியே ஜெட் வேகத்துல உச்சக்கட்ட வேகத்துல தொட முடியாத உயரத்தில இருக்கும்… இல்லை அப்டியே… தண்ணிக்குள்ள போட்ட கல்லு மாதிரி… அடங்கிப் போயிருக்கும்… நீங்க உச்சாணிக் கொம்புல இருக்கும் போது… அந்த வேகத்தையும் சமாளிக்கனும்… இல்லை வேற மூட்ல மூஞ்சை தூக்கி வச்சுட்டு இருந்தீங்கன்னா… அய்யா சாமின்னு கொஞ்சி… ரொமான்ஸ் பண்ண வைக்கனும்.. இப்படி இயல்பா… நார்மலா என் புருசன்கிட்ட ரொமான்ஸ்னா எனக்கு ஆச்சரியமா இருக்குமா இல்லையா… அ….தைச் சொன்னேன்”
கண்சிமிட்டியவளிடம்…. அவளையேப் பார்த்துக் கொண்டிருக்க… அவன் பாவனையில்….
“ஹலோ…. ஹலோ… என்ன”
ஒன்றுமில்லை என்பது போலத் தலையாட்டியவன்….
“நான் உன்னை ரொம்பக் கஷ்டப்படுத்துறேனாடி…..” அவன் குரலில் இலேசான மிக மெல்லிய தடுமாற்றம்
“இல்லையா பின்ன… “ கண்மணி அவனை வம்பிழுக்கும் பாவனையில் கேட்ட போதே… ரிஷியும் இப்போதும் அவளுக்குச் சரியாக பேச ஆரம்பித்திருந்தான்
“சொல்லுவதானே நீ… டெஸ்டினி… டிஸ்னிலாம்… அனுபவி…. “ என்றவன்… அவள் கையில் இருந்த புத்தகங்களில் கவனம் வைத்தவனாக
“உனக்கு எப்போ எக்ஸாம்…. நெக்ஸ்ட் வீக்னு சொன்னதானே… ஒழுங்கா படிக்கிறியா…. மார்க் ஸ்டேட்மெண்ட்லாம் காட்டற நீ… “ எனும் போதே கண்மணி முறைக்க…
“என்ன!! என்ன!! முறைக்கிற…. நீ படிக்கிற மாதிரியே தெரியலையே… ஒரு புருசனா பொண்டாட்டி படிக்கிறியான்னு கேட்டா… என்னையே முறைக்கிற” ரிஷி மீண்டும் முறைக்க
“கோல்ட் மெடல்லாம் சார்க்குத் தெரியுமா…. பார்க்கிறீங்களா…. காட்டவா... ”
“சரி சரி… என் பொண்டாட்டி படிப்பைப் பற்றி கேட்கிறது என் உரிமைதானே கேட்கக் கூடாதா…” என அப்படியே பல்டி அடித்தவன்…
அவளருகே குனிந்து…
“அந்த யூனிவெர்சிட்டியையும் உங்க தாத்தா அவங்க ட்ரஸ்ட்டோட ஜாயின் பன்ண பேச்சு வார்த்தை போயிட்டு இருக்காம்…” என கிண்டல் செய்தவனிடம் முறைக்க…
“முறைக்காதடி… ப்ச்ச்… ” என எங்கோ பார்த்தவன்
”அன்னைக்கு உன்கிட்ட குழந்தை அது இதுன்னு…. படிக்கிற புள்ளைய டைவர்ட் பண்றோமோன்னு ஒரு கில்ட்டி ஃபீல் ஆகிருச்சு… அதுனால டிசைட் பண்ணிட்டேன்… நீ படிச்சு முடிக்கிற வரை… இனி முன்னெச்சரிக்கையா இருக்கனும்னு…” ரிஷி பேச ஆரம்பித்த போதே
அவனை ஒரு மாதிரியாகப் பார்க்க….
“என்ன லுக்கு” ரிஷி புரியாதவனாகக் கேட்க
“சார் ரொம்ப சீக்கிரமா முன்னெச்சரிக்கை முத்தண்ணாவா மாறிட்டீங்க…. ” என்ற போதே…. ரிஷி அதிர்ந்து பார்க்க….
“எ... என்... என்னடி சொல்ற…”
”ஹலோ…. ஹலோ… அதெல்லாம் ஒண்ணுமில்ல… சும்மா உல்லல்லாய்க்கு சொன்னேன்… அவ்ளோதான்.... ஆனால் இவ்ளோ பதட்டம் ஏன்... பண்றதெல்லாம் பண்ணிட்டு... அப்புறம் என்ன...” என அவனை ஆராய்ச்சிப் பார்த்தவள்....
“ஆனால் இந்த முன்னெச்சரிக்கை… தள்ளிப் போட்றது இதெல்லாம் வேண்டாம்… ” என்றவள்…
“நாம் மூணு குழந்தைங்க பெத்துக்குவோம்… இந்த ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுலாம் வேண்டாம்…ஓகே வா”
”அதென்னடி மூணு…”
“நீங்க மூணு பேர்தானே….”
“அதுனால…. ” ரிஷி இழுக்க…
“தனசேகர்-இலட்சுமி குடும்பம்… அவங்க வழில ரிஷி -கண்மணிக்கும் மூணு குழந்தைங்க… கணக்கு சரிதானே”
ரிஷியோ இப்போது
“நட்ராஜ்-பவித்ரா … அவங்கள மாதிரி ஒண்ணே ஒண்ணு… இந்தக் கணக்கும் சரியாத்தான் இருக்கும்”
இருவருமே பிடிவாதம் பிடிக்க.... ஒரு கட்டத்தில் கண்மணி.... தன் பிடிவாதத்திற்கு காரணம் என்ன என கணவனுக்கு விளக்கம் கொடுக்கவும் ஆரம்பித்தாள்
“ஒரு ஆளா இருக்கிறதாலதானே என்னை ஆளாளுக்கு பிச்சு எடுக்கிறாங்க … அது என் புள்ளைக்கு வரக் கூடாது…. என் பொண்டாட்டிய ஆள விடுங்கன்னு சொல்லி ஆளுக்கு ஒரு புள்ளைய கொடுத்துட்டு… என்னை யார்கிட்டயும் கொடுக்காம உங்களுக்கே உங்களுக்கு உங்க கூட வச்சுக்கங்க” கண்மணி உற்சாகமாகச் சொல்ல…
”யார்ட்டடி உன்னை கொடுக்கப் போறது… நீ எனக்கே எனக்கு…. மொத்தமா நீ எனக்கு மட்டும் தான்… யார்கிட்டயும் கொடுக்க மாட்டேன்... நீ என்னோட தேவதை” தன்னோடு சேர்த்து இறுக்கமாக அணைத்துக் கொண்டவன்…
”அதெல்லாம் சரி… அதென்ன மூணு… அந்தக் கணக்கைச் சொல்லு ”
+
“ஓ அதுவா... என் தாத்தா பாட்டிக்கு ஒரு குழந்தை… அப்புறம் என் அப்பாக்கு ஒரு குழந்தை… அப்புறம் நமக்கு…. என்ன ஆள விடுங்க சாமின்னு.. எல்லோருக்கும் கும்பிடு போட்றலாம்… எப்படி என் ஐடியா” கண்மணி அவனிடம் பெருமையாகக் கேட்க
“ஹலோ… எங்க அம்மா மட்டும் என்ன உனக்கு தொக்கா என்ன…அவங்களுக்கும் ஒண்ணு ஆட் பண்ணு… நாலு அதுதான் சரியான கணக்கு ”
“ஹலோ.... அவங்க நம்ம கூடத்தானே இருக்காங்க… அதுமட்டுமில்லாமல்… அவங்களுக்கு நீங்க என்ன ஒத்த பிள்ளையா என்ன…. ரிது இருக்காங்க… ரிதன்யா இருக்காங்க… மூணுதான் சரியான கணக்கு” கண்மணி பிடிவாதம் பிடிக்க
“ஏண்டி… அப்போ உன் அப்பாவும் நம்ம கூடத்தானே இருக்காங்க… மூணும் வேண்டாம்… நாலும் வேண்டாம்… ரெண்டு போதும்… கணக்கு போட்றாளாம்” ரிஷி கடுப்படிக்க
“அதெல்லாம் இல்லை…. மூணுதான்… ஒகே சொல்லுங்க ரிஷி” கண்மணி விடாமல் பிடிவாதம் பிடிக்க... ரிஷி ஒரு கட்டத்தில் ....
”அம்மா தாயே… மொத ஒரு குழந்தையை பெத்துக்க வழியப் பார்க்கலாம்.. அப்புறம்… அடுத்து யோசிக்கலாம்” அவன் அந்தப் பேச்சை முடிக்க நினைத்தபோதே
“யோசிக்கலாம்லாம் இல்லை… மூணுதான்… சரி சொல்லுங்க ரிஷி…. ப்ளீஸ் ப்ளீஸ்… “ என்றவளை... ரிஷி மேலிருந்து கீழாக சந்தேகமாகப் பார்த்தபடியே
”சரி இல்லையே நீ.... நீ என்ன பண்றேனா... இந்த தடவை எழுதுற எக்சாம்ஸ் மார்க்கை எல்லாம் என்கிட்ட கொண்டு வந்து காட்ற… அப்புறம் பார்க்கலாம்… ”
“ஹான் பார்டா… படிப்பை பற்றிலாம் யார் யாரோ பேசுறாங்க… மிரட்டுறாங்க… கண்மணிக்கு வந்த சோதனையா இது…”
“ஹலோ…. இந்த புத்தகத்தை கூட இன்னைக்குத் தொட்ருக்க மாட்டேன்….. லேப்டாப் இல்லை… அதுனாலதான்… இல்லை அதுல ஏதாவது எழுதிட்டு இருந்திருப்பேன்… அந்த லேப்டாப் இல்லாமல்… இங்க பாருங்க என் அம்மாவோட டைரியை எல்லாம் படிச்சுட்டு இருக்கேன்…” அவள் அன்னையின் நாட்குறிப்பை கையில் எடுத்து அவனிடம் காட்ட…
அப்போதுதான் ரிஷி தான் எதற்கு வந்தோம் என்ற விசயத்தையே மீண்டும் நினைவு கூர்ந்தவனாக… வேகமாக…. கண்மணி காட்டிய டைரியை அவள் கைகளில் இருந்து பறித்து கீழே வைத்து விட்டு… கைப்பிடித்து அவளை எழ வைத்தவன்… அவளை அழைத்துக் கொண்டு… கீழே கூட்டிக் கொண்டு வர…
“எ… எங்க ரிஷி… எங்க கூட்டிட்டுப் போறிங்க… சொல்லுங்க” எனக் கேட்டபடியே வந்தவளிடம்…. பதிலே பேசாமல்… நட்ராஜ் வீட்டிற்கு முன் வந்து நிறுத்தியவன்…. இப்போது அவள் கண்களை மூடியபடி… அந்த வீட்டிற்குள் அழைத்து செல்ல…
“ரிஷி… ரிஷிக்கண்ணா… எ… என்ன… பண்றீங்க…”
“ஒகே… இப்போ பாரு…. ” அவன் கைகளை அவள் கண்களில் இருந்து எடுக்க… அங்கே அவள் கட்டிலில்… புத்தம் புதிய மடிக்கணினி…
ரிஷியைத் திரும்பிப் பார்க்க…
“மேக்ஸிமம் எல்லாமே பேக் அப் எடுத்துட்டேன்… செக் பண்ணிப் பாரு.. ஏதாவது இல்லைனா… சாரிம்மா” என்றவனிடம் ஒன்றும் சொல்லாமல்…
அந்தக் கணினியை மகிழ்ச்சியாக ஆன் செய்ய… ’கண்மணி’ என்ற பயனர் பெயரோடு அந்தக் கணினி தன் திரையில் தன் உயிர்ப்பை ஆரம்பித்திருக்க
திரும்பினாள்… கேள்விக் குறியோடு…
அவள் பார்வை புரிந்தவனாக
“இது உனக்கே உனக்கான லேப்டாப்… கண்மணி நட்ராஜ்… கண்மணி ரிஷிகேஷ்… இந்த மாதிரி எந்தத் தலையீடும் இருக்காது” அவளை விட்டு தள்ளி நின்றபடி… கைகளைக் கட்டிக் கொண்டு அவளை ரசித்தபடியே… சொன்னவன்
“இந்த ஒரு வருசமா… அந்த பழையை லேப்டாபை நீயும் நானும்… ரொம்ப கஷ்டப்படுத்திட்டோம்… அதுக்கு வாய் இருந்தாலும் அழுதிருக்கும்… அதுமட்டும் இல்லாமல்… என்னோட பிஸ்னஸ் தான் முக்கியம்னு… எனக்காக பல முறை விட்டுக் கொடுத்திருக்க… இனி… நீ உனக்கே உனக்காக எப்போ வேணும்னாலும் எழுதிக்கலாம்…”
ரிஷியின் வார்த்தைகளைக் கேட்டபடியே…. கண்மணி…. தனது கதைத் தொகுப்பை எல்லாம் சரிபார்த்தவள்…. தீவிரமாக அதில் மூழ்க
“ஓய்… பார்த்தியா… அதை பார்த்தவுடனே என்னை மறந்துட்ட தானே… ஒருத்தன் உனக்காக லேப்டாப் வாங்கிட்டு வந்து… அதுவும்… உன் ஃபைல் எல்லாம் ரெக்கவர் பண்ணி கொடுத்திருக்கானே.. பொண்டாட்டியா புருசனுக்கு ஒரு ரிட்டர்ன் கிஃப்ட். அதெல்லாம் இல்லை… .” என்றவன் குரலில் பொறாமையோடு… சின்னதாகக் கோபமும்… அதை விட ஏக்கம் அதிகமாகக் கலந்து வர…
மெதுவாக மடிக்கணியை மூடி வைத்தவள்…
“அப்போ… நீங்க… உங்களுக்கு…” என அவனின் மற்ற கேள்விகளை எல்லாம் ஒதுக்கி விட்டு… இதுதான் முக்கியம் என்பது போல அவனை நோக்கி கேள்வி கேட்டவளிடம்
“ம்ஹ்ம்ம்ம்ம்ம்ம்…..அந்த பழைய லேப்டாப்பை சரி பண்ணி… நான் எடுத்துக்கிட்டேன்” பதிலைக் கடுப்பாக்ச் சொல்ல…
அவன் முகத்தில் இருந்த கோபத்தை ரசித்தபடியே…. எழுந்தவள்… அவன் அருகே வந்து… களைந்திருந்த அவன் கேசத்தை சரி செய்ய…
“போடி….” என தள்ளி விட்டவனை விட்டு விலகாமல்… அவன் கேசத்தை மீண்டும் கலைத்து விட்டு… மீண்டும் சரி செய்தபடியே
“என்ன வேணும் ரிட்டர்ன் கிஃப்ட்…” என மெல்ல எம்பி அவன் காதுமடலில் கிசுகிசுத்தவளின் மூச்சுக் காற்றில் இவன் மூச்சுக் காற்று உஷ்ணமாக ஆரம்பித்திருக்க… மெல்ல அவன் கரங்கள் அவள் இடையைச் சுற்றி வளைக்க ஆரம்பித்து… அவனின் தேவை அவளே என்பதை அவளிடம் உணர்த்திக் காட்ட ஆரம்பித்திருக்க
“ஓய்…. கை இப்போ சரி ஆகிருச்சுதானே….” அக்கறையில் ஆரம்பித்த அவன் வார்த்தைகள் கணவனாக மனைவியிடம் தாபத்தில் முடிந்திருக்க…
அதை.. மனைவியாக உணர்ந்தவள்… அவனிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்திருக்க… அவளை தன்னோடு இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான் ரிஷி.. இருவரின் இதழ்களோ பேசும் பணியை தற்காலிகமாக ஒத்தி வைத்து விட்டு… தன் இணையின் இதழ் வரிகளில் மௌன எழுத்துக்களால் தன் தேவைகளை எழுத ஆரம்பித்திருக்க…
கண்மணிதான் முதலில் உணர்வுக்கு வந்தவளாக… அவனிடமிருந்து விலகியவள்…
“ரிஷி…” என மெல்லிய குரலில் அவனை அழைக்க
“ரிஷிக் கண்ணா” திருத்திய ரிஷியின் குரல் இப்போதும் அதே தாபத்துடன்… அவள் விலகிய போதும் இன்னும் அதே நிலையில் இருந்தவன்... மீண்டும் அவளை தாபத்தோடு பார்க்க... அடுத்த நொடி... அவனுக்கான தேவைகள்... தற்காலிகமாக கண்மணியின் அடுத்தடுத்த தொடர் முத்தங்களால் தீர்க்கப்பட்டிருக்க... ரிஷியும் மெல்ல மெல்ல சரி ஆகி இருக்க... அவனிம் முகம் காட்டிய ஏக்கம் தீர்ந்த திருப்தியைக் கண்டு கொண்டவளாக.... அவனிடம் விலகி நின்றவள்...
“போதுமா… ஓகேவா... ரிஷிக்கண்ணா ரொம்ப நாள் ஆச்சு… லாங் ட்ரைவ்… ஹை ஸ்பீட்… கூட்டிட்டுப் போறீங்களா… அதுக்கும் முன்னால பாட்டி வீட்டுக்கு… போகவே இல்லை… “ கெஞ்சலும் கொஞ்சலுமாக அவள் கேட்க…
”அப்புறம்… வேற என்ன சொல்லு… லிஸ்ட் போடு” ரிஷி அவளின் அடுத்த கோரிக்கையை எரிச்சலான நக்கலோடு கேட்க…. அதை கண்டு கொண்ட போதும்….
“இன்னைக்கு இது போதும் ரிஷிச் செல்லம்… ” என்று உற்சாகக் குரலில் சொல்ல…
“ஏண்டி… நான் ரிட்டர்ன் கிஃப்ட் கேட்டால்… நீ உனக்குத் ஃபேவரா சொல்லிட்டே இருக்க… பரவாயில்லை… நீ கேட்டதும் பண்றேன்... ஆனால் என்னோட ரிட்டர்ன் கிஃப்ட் என்ன... அதைச் சொல்லுங்க…” புருவம் உயர்த்திக் கேட்க
அவன் நெற்றியில் செல்லமாகத் கை வைத்து தள்ளியவள்…
“என் ரிஷிக்கண்னா கேட்டு.. நான் என்னைக்கு இல்லைனு சொல்லிருக்கேன்…” என்றவள்…
அவன் கண்களைப் பார்த்தபடியே
“இது என்ன சொல்லுதுன்னு… நினைக்குதுனு... இந்த வாய் சொல்ல வேண்டாம்… எனக்கே தெரியும்…” என அவன் மீசையை முறுக்கி விட்டவளிடம்… வாய் விட்டு புன்னகைத்தவனின் கன்னக் குழியை ரசித்தவள்… அதே வேகத்தில்
“என் அழகு ரிஷிக்கண்ணா “ என அவனைச் சுற்றி நெட்டி முறித்தவளிடம்
“என் அழகு அம்முடி நீ” என்று இவனும் அவள் நெற்றியில் முத்தம் கொடுத்தவன்… அவளை விட்டு விலகியபடியே
“ஓகே… அம்மாகிட்ட… ரிது ரித்விவிட்ட பேசிட்டு இருக்கேன்… நீ ரெடி ஆகிட்டு என்னைக் கூப்பிடு…” என அவளை விட ஆரம்பித்த போதே ஞாபகம் வந்தவனாக
“என்ன மேடம்… எங்க அத்தையோட டைரி எல்லாம் படிக்கிறீங்க போல… என்ன அம்மா ஞாபகம் வந்திருச்சா” என ரிஷி அவளைக் கலாய்க்க ஆரம்பித்திருக்க
கண்மணி அவனின் கிண்டலை எல்லாம் விட்டவளாக... தீவிரமான பாவனையில் பேச ஆரம்பித்திருந்தாள்...
“அம்மா மேல என்னைக்குமே எனக்கு பாசம் இருந்தது இல்லை… ஆனால் கோபம் இருக்கும்… ஏன் இப்படி வந்தாங்க… ஏன் இப்படி எங்க அப்பாவை விட்டுட்டு போனாங்கனு… சின்ன வயசுல பெருசா தோணலை… எல்லாமே எனக்கு இடைப்பட்ட ஏஜ்ல தான்… அம்மா மாதிரி நான்னு சொல்ற எல்லா விசயங்களையும் வெறுத்தேன்… தவிர்த்தேன்… “ என்றவளின் குரலில் ரிஷியின் முகமும்… மாறி இருக்க
“அப்படி என்ன காதல்… அதுவும் அவங்களுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு ஆள் மேல… அப்பா அம்மாவை கஷ்டபடுத்துற காதல்… பெத்த அம்மா அப்பாவை கஷ்டப்படுத்திட்டு வந்த அந்த காதல் எத்தனை நாளைக்கு நிலைத்தது… என் அம்மாவைப் பெத்தவங்க சாபம் தானே ஜெயித்ததுன்னு தோணும்… ஆனால் அப்பா என்ன பண்ணினார்… அவருக்கு ஏன் இந்த தண்டனை…” எனக் கேள்விக் குறியாக கேட்டு நிறுத்தியவள்…
“இப்போ எல்லாமே… தலைகீழா மாறின மாதிரி இருக்கு… அப்படி என்ன பெரிய காதல்… அலட்சியமா யோசிச்ச அந்தக் காதலை…இப்போ நானும் ஃபீல் பண்ண நினைக்கிறேன் ரிஷி… பொண்டாட்டி போயிட்டா வாழ்க்கையே இல்லைனு வாழ்ந்த, வாழ்ந்துட்டு இருக்கிற…. அப்பாவோட உணர்வுகள்… எனக்கு புரிய ஆரம்பிக்குது ரிஷி… என் அப்பாவை இன்னும் நான் நல்லா பார்த்துக்கனும்னு தோணுது ரிஷி… அப்பாவை எனக்குப் பிடிக்கும்தான்… ஆனால் இப்போ என் அப்பாவை ரொம்ப ரொம்பப் பிடிக்குது…. ரெண்டு வருசம் அவங்க வாழ்ந்த வாழ்க்கைக்கு இப்போதும் உயிர்ப்பு இருக்குனு இப்போ அந்த டைரியப் படிக்கும் போது புரியுது.. “ என்றவள் ரிஷியைப் பார்த்து கண் சிமிட்டியபடியே…
“முதலில் எல்லாம் என் அம்மா மாதிரி இருக்கக் கூடாதுன்னு நினைப்பேன்… இப்போ என் அம்மாவை விட ஒரு படி முன்னால இருக்கனும்னு நினைக்கிறேன்… போட்டினு கூட சொல்லலாம்” எனக் கன்னக் குழி விழ குறும்போடு அவனைப் பார்த்தவள்…
“பவித்ரா… நட்ராஜா… இல்லை கண்மணி ரிஷியா… நம்ம குழந்தை கிட்ட ரிசல்ட் கேட்கணும்” கண்மணி சொன்னபோதே…
அவனையுமறியாமல் அவனின் பார்வை இப்போது அவள் வயிற்றில் சென்று மீள… தலையில் அடித்துக் கொண்டவன்... வேகமாக…
“மறந்துட்டேன் பாரு… இந்த கிஃப்ட் தான் முக்கியமான கிஃப்ட் ... இனிமேல்… லேப்டாப்பை மடியில வச்சு எழுதாத… எழுதவும் கூடாது…” என அருகில் இருந்த மடிக்கணினி வைத்து எழுதும் மேஜையைக் காட்டியவனின் மற்றொரு கரமோ கண்மணியின் இடை்யைத் தழுவியபடி….
“அஃறினையா இருந்தாலும்… எனக்கான உரிமையோடு அது போட்டி போட்டால் எனக்குக் கோபம் வரும்… இனி லேப்டாப்பை அந்த டேபிள் மேல வச்சுதான் எழுதனும்… உரிமைக்கு மட்டும்மல்ல… உன் ஹெல்த்துக்கும் முக்கியம்” அவன் சொன்ன போதே…. அவனிடமிருந்து மெல்ல நழுவியவளை… ரிஷியும் வம்பை வளர்க்காமல் விட… முகமெங்கும் மலர்ந்த புன்னகையால் வெட்கத்தை மறைத்தவளாகக் கண்மணியும் மாடிக்குச் செல்ல… ரிஷியோ அந்தக் கட்டிலிலேயே அமர்ந்து விட்டான்…
அமர்ந்தவனின் எண்ணங்கள்… கண்மணியின் வார்த்தைகளில்… அவள் அன்னையைப் பற்றிய வார்த்தைகளிலிலேயே உலா வந்து கொண்டிருக்க… அப்படியே கண்கள் மூடி படுத்தும் விட்டான் ரிஷி…
சிந்தனை ஓட்டத்தில் இருந்தவனை… அவனது அலைபேசி ஒலிதான் மீட்டெடுத்திருக்க… அலைபேசியை எடுத்துப் பார்க்க… விக்கியிடமிருந்து வந்திருந்தது…
“சொல்லுடா…” எனும் போதே விக்கி பேச ஆரம்பித்திருக்க..
”என்னடா இப்படி பேசுற… இவ்ளோ கவலை எதுக்குடா… இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை… பார்த்துக்கலாம்டா… இரு… இப்போதே கிளம்பி வர்றேன்…”
--
“சரி.. கண்டிப்பா ரிதுவையும் கூட்டிட்டு வர்றேன்…” நண்பனின் கவலையில் ரிஷியின் குரலிலும் இறுக்கம் வந்திருந்தது… அழைப்பைக் கட் செய்தவன்… வேகமாக எழுந்து… கண்ணாடியில் தன் கேசத்தை சரி செய்தபடி… உடையை சரிபார்த்து… வெளியே வர… ரிதன்யாவும் அவனை நொக்கி வந்து கொண்டிருக்க…
ரிதன்யாவுக்கும் விக்கி போன் செய்திருக்கின்றான் என ரிஷிக்குப் புரிய,… அவள் கண்களின் சிவப்பே சொன்னது… அழுதிருக்கின்றாள் என…
தங்கையின் வருத்தம் அவனுக்குள் ஆதங்கத்தைக் கொண்டு வர… ஒன்றும் செய்ய இயலாதவனாக உதட்டைக் கடித்தவனின் கை முஷ்டி இறுகியபோதே… கண்மணியும் மாடியில் இருந்து தயாராகி இறங்கி வந்திருக்க…
“மணி… விக்கி அவங்க அண்ணா வீட்ல இருக்கானாம்… அவங்க தாத்தா கூட ஏதோ பிரச்சனை பண்ணிட்டு வந்துட்டான் போல… நான் போயிட்டு வர்றேன்… சாரிம்மா… இன்னொரு நாள் போகலாம்… ஓகேவா” என சொன்னபடியே…
அவள் பதிலை எதிர்பார்க்காமல்… வேகமாக… பைக்கை எடுத்து வந்தவன்… அடுத்த சில வினாடிகளிலேயே கண்மணி இல்லத்தை விட்டு வெளியேறி… அதற்கடுத்த சில நிமிடங்களில்… விக்கியின் அண்ணன் வீட்டையும் அடைந்திருந்தான்…
Amma madriye irukanumnu nenachi nalla kulambi Rishi kastapadtha pora
Ha ha enna Pravee namma heros nizhailam ipadithame😆😆😆
Viki inda nerathula yada kupdanum marupadium iva kulapikama
Very nice
Nice
Nice epi waiting for next episode
Nice episode
Ipadi vitutu
Nice epi sis...waiting for next epi...
nice ud siss
Full R-K episode, their conversations for their children, laptop all very nice and happy to read. Did Kanmani know about her pregnancy? Interesting to know how Rishi will convince Vicky's Grandpa and meeting of Kanmani and Vicky's Grandpa. Very good writing.
Intha Rishiya enna panurathu kamani pakalnu antha arpatam ipa
Parkama poran
Such a emotion R💞K.. Wonderful feel jii..
Nice update try to give frequent updates something miss agura mathiri feel varuthu
Nice
Arumaiyana ud.
கண்மணிக்கு கூட laptop கிடைச்சுருச்சு.நம்ம செல்ல writer க்கு தான் இன்னும் கிடைக்கல இல்ல.கூடிய சீக்கிரம் புதுசு கிடைக்க வாழ்த்துக்கள்.என்னடா இப்படி சொல்லுறேனு பார்க்கிறீர்களா? எல்லாம் சுயநலம் தான்.laptop கிடைச்சா சீக்கிரமா கதை போடுவீங்கனு தான்.please upload the next one.
அருமை
Super 💞💞💞
Ovoru epi un read panum pothum ipo pirichuruvangalo sanda vanthurumo nu bayathula iruken..kanmani yen rishi ta pregnant ah irukuratha solala🧐🧐
Epayum Rishi kanmani conversation superah irukum inaikum athe alagu.. padika padika jillunu irukum manasu😍😍 waiting for next ud sis🤗🤗
கண்மணியை கூட்டிட்டு போய் இருந்தா பிரச்சனை முடிந்து இருக்கும்.…ரொம்ப சின்ன எபிசொட் …