ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன்.... 78-2 ... நாளை...
அப்டேட் படிங்க... மறக்காமல் கமெண்ட்ஸ் போடுங்க... போன அப்டேட்டுக்கு கமெண்ட்ஸ் அண்ட் லைக்ஸ் போட்ட எல்லோருக்கும் என் நன்றிகள்...
பிரவீணா
----
அத்தியாயம் 78-1
இடம்: “ஆர் கே “” இண்டஸ்டிரீஸ்…
“டேய் உன்கிட்டதான் பேசிட்டு இருக்கேன்… உன்கிட்ட தான்டா கத்திட்டு இருக்கேன்… கேட்குதா இல்லையா..” விக்கி அந்த விஸ்தாரமான மிஷினரி அறையில் தன் மொத்த சக்தியையும் திரட்டிக் கத்த… அவன் குரலைக் கேட்டவனோ…
ரிஷியோ… அதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை… இன்னும் வேகமாக அங்கிருந்த இயந்திரங்களோடு போராட ஆரம்பித்தவன்… அதன் வேகத்துக்கு இணையாக… போட்டி போட்டுக் கொண்டு… வேலை செய்து கொண்டிருக்க அதில் இன்னும் அதிகமாக அவன் உடலெங்கும்… வியர்வை வழிந்தோட ஆரம்பித்திருக்க…
விக்கிக்குத்தான் தொண்டை வறண்டு போக ஆரம்பித்திருந்தது
”ஏண்டா இப்படி ராட்சசன் மாதிரி பிகேவ் பண்ற… ஸ்டாப் பண்ணுடா… மனசையும்… உடம்பையும் ஒரே நேரத்துல ஸ்ட்ரெஸ் ஆக்கிறடா… ரொம்ப ஆபத்துடா… ரொம்ப ஸ்வெட்டிங் ஆகுதுடா ” அங்கிருந்த துண்டை எடுத்து ரிஷியின் முகமெங்கும் துடைத்து விட்டபடியே…
” என்ன நடந்துச்சுனு இப்போ இப்படி இருக்க… நிறுத்துடா… வெறித்தனமா பிகேவ் பண்ணாதாடா… ப்ளீஸ் ரிஷி… விட்ருடா… ஏதாவது ஆகப் போகுதுடா… உன் வீட்ல அங்க எல்லோர்கிட்டயும்… நீ நார்மலாத்தான் இருக்கேன்னு சொல்லி வைச்சுருக்கேண்டா… இவ்ளோ ஏன் உன்னைக் கஷ்டப்படுத்தி்க்கிற உன்னை இப்படி பார்க்க என்னாலேயே முடியலடா… அவங்களாம் தாங்குவாங்களாடா”
பேசிக் கொண்டே விக்கி அவன் கைகளைப் பிடித்து தடுத்து நிறுத்த… அநாயசமாகத் தள்ளி விட்ட ரிஷி இன்னும் வேகமாக தன் தன் வேலையில் தன்னை மும்முறப்படுத்திக் கொள்ள… விக்கியோ ரிஷி தள்ளிவிட்டதில் தடுமாறிப் பின் சமாளித்தவன்…
“டேய் பைத்தியக்காரா… என்ன நடந்துச்சுனு இப்படி மூர்க்கத்தனமா நடந்துக்கிற.. “
விக்கி எவ்வளவோ கத்திப் பார்த்தான் தான்…. ஆனாலும் ரிஷி கண்டுகொண்டால்தானே… ஒரு கட்டத்தில் ஒய்ந்து போனவனாக… அவனை வேடிக்கை பார்க்கமட்டுமே முடிந்தது விக்கியால்…
“ரிஷி என்றாலே அந்தக் கன்னக்குழி சிரிப்பும்… எதையும் இலகுவாக எடுத்துக் கொள்ளும் இயல்பும்… யாரிடமும் நட்பு பாராட்டும் குணமும் இதுதான் ஞாபகம் வரும்… அந்தக் கல்லூரிக் கால ரிஷிதான் இன்னும் இவன் நினைவில் நிற்கின்றான்… அவனா இவன்… கவலை என்பதே இல்லையா எனத் தோன்றும்படி கலகலப்புடன் சுற்றி வந்த தன் நண்பனா…” கண்கள் கலங்கி விட்டது விக்கிக்கு….
“முரட்டுத்தனம்… ஆவேசம்… மூர்க்கத்தனம்… கோபம்… ஆக்ரோஷம்…” அவனறிந்த அவன் நண்பனாக இல்லாமல்… ரிஷி முற்றிலுமாக வேறொரு ஆளாகத் தெரிய… ரிஷியைச் சமாதானப்படுத்த முடியவில்லை விக்கியால்…
ஒரு காலத்தில்… இவன் வார்த்தைகளைச் காது கொடுத்துக் கேட்டவன் தான் அவன் நண்பன்… ஆனால் இப்போது தன்னால் அவனைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லையே… என்ன செய்வது எப்படி அவனை அமைதிப்படுத்துவது…. என விக்கி தடுமாறிக் கொண்டிருந்த போதே…. அவனுக்கு கண்மணியின் ஞாபகம் வர… வேகமாக ரிஷியின் அலைபேசியை எடுத்துக் கொண்டவனான…
“டேய்.. உன் பொண்டாட்டிக்கு கால் பண்றேன்… அப்போதான் நீ அடங்குவ… அவதான் உனக்கு சரியான ஆளு … நாங்க சொன்னாலாம் கேட்க மாட்ட நீ…” என அவனை மிரட்ட ஆரம்பித்த போதே… சட்டென்று அவன் கையில் இருந்த அலைபேசியை பிடுங்கியவன்… அதை அங்கிருந்த மேஜையில் தூக்கி விச…… விக்கி இப்போது புரியாமல் தவித்தான்…
ஒரு பேச்சுக்குத்தான் கண்மணி பெயரை இழுத்தான்…. அதற்கும் ரிஷி அசைந்து கொடுக்க வில்லை… வேறு வழியில்லை… ரிஷியின் அம்மா இல்லை நட்ராஜைத்தான் வரவழைக்க வேண்டும்… ஒரு வார்த்தை கூட பேசாமல் நின்றிருந்த ரிஷி… நண்பனின் மௌனம் உணர்ந்து… இப்போது திரும்பி…
“இங்க யாராவது… அதுவும் நீ சொல்லி வந்தால்… விக்கி “ என ஆட்காட்டி விரல் காட்டி உயர்த்தி எச்சரித்தவன்…
“தனியா இருக்கனும்னுதானே வந்தேன்… ஏன் என்னை தொல்லை பண்ற… போடா” மூச்சிறைத்தபடி… வியர்வை வழிந்தபடி அவன் கத்தியது சப்தம் காற்றையும் கிழித்துக் கொண்டு… அதன் பேரிரைச்சலையும் தாண்டி அந்தப் பகுதி முழுவதும் எதிரொலிக்க
வேறு வழி இல்லாமல் விக்கி ஒரு நிமிடம் அங்கிருந்து போக நினைத்தான்தான்… ஆனால்… போகவும் மனம் வரவில்லை… அவனுக்கு ரிஷிக்கு ஏதாவது ஆகி விடுமோ… மனம் பரிதவித்தது…
இப்படி… தவித்துக் கொண்டிருந்த போதே… மெல்ல மெல்ல விளக்குகள் அணைய ஆரம்பித்தபடி… இவர்கள் நின்றிருந்த இடத்திலும் விளக்குகள் அணைய… ரிஷிக்கோ தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை பார்க்க முடியாத நிலை… இப்போது வேறு வழி இல்லாமல் ரிஷி அனைத்தையும் தூக்கிப் போட்டு விட்டு… ஆத்திரத்தோடு வெளியே வந்து நிற்க…. எங்கும் இருள்… விக்கி தன் மொபலில் விளக்கை உயிர்ப்பிக்க
ரிஷி… முற்றிலும் களைத்தவனாக… அங்கிருந்த திண்டில் போய் அமர… விக்கி அவனருகில் போய் அமர்ந்தான்…
ரிஷி இப்போது…
”ப்ளீஸ்டா… என்னைத் தனியா விடுடா… எத்தனை தடவைடா சொல்றது… “ அவன் குரல் இப்போது அடங்கி வெளிவந்தது… அவனால் பேசக் கூடத் திராணியில்லை என்பது விக்கிக்கு நன்றாகவேத் தெரிய…
“நான் உன்கிட்ட பேசனும்” ரிஷியின் கைகளில் தண்ணீர் பாட்டிலை கொடுத்தபடி… விக்கி அழுத்தமாகச் சொல்ல… அதை வாங்காமல்… அவனை நிமிர்ந்து பார்த்தான் ரிஷி… இதழ் வளைந்த சிரிப்போடு…
”நீ முதல்ல என்கிட்ட பேசினதுக்கெல்லாம்… அதை நான் கேட்டதுக்கெல்லாம் இப்போ உனக்கு பதில் கெடச்சிருக்குமே… இன்னும் என்னடா சொல்லனும்… இன்னும் என் கண்மணியப் பற்றி சொல்ல ஏதாவது இருக்கா… ” வார்த்தைகளில் நக்கல் இழையோடினாலும்…. வருத்தமே வெளிப்பட
“டேய்… ஏண்டா” விக்கி குற்ற உணர்வோடு அவனைப் பார்க்க…… ரிஷியின் கண்கள் ஆயாசமாக அவனைச் சந்தித்து… பின் வேறு புறம் திரும்பிக் கொள்ள… ரிஷியை தன் புறம் வலுக்கட்டாயமாகத் திருப்பியவன்
“நீ கண்மணியை உன் குடும்ப சூழ்நிலைக்காக… வேறு வழி இல்லாமல் மேரேஜ் பண்ணியிருக்கன்னு நினைத்தேண்டா… அதை விட அவ உன்னை டாமினேட் பண்றா… நீ அவகூட சந்தோசமா இல்லை போலன்னு தப்பா நெனச்சுட்டேண்டா… ஆனால் அவளை இவ்ளோ உனக்குப் பிடிக்கும்னு நெனச்சுக் கூடப் பார்க்கலடா… உன் குணத்துக்கும் அவ குணத்துக்கும் என்னால இப்படித்தான் நினைக்கத் தோனுச்சுடா… ஆனால்.. .இவ்வளவு.. அவளை லவ் பண்றியாடா…“ விக்கி நேருக்கு நேராகப் பார்த்துக் கேட்க… ரிஷியின் கண்களிலோ சட்டென்று கண்ணீர் துளிகள் அவன் கன்னங்களில் இருந்து சிதற ஆரம்பித்திருக்க…
”ம்ஹூம்… இல்லை” இடவலமாக மறுத்து தலை ஆட்ட… விக்கி அதிர்ந்து பார்க்க..
“காதல்னு சொன்னால்… ரொம்ப சாதாரணம்… அதுக்கும் மேல… நான் அவ மேல வச்சிருக்கதுக்கு பேரு என்னன்னு சொல்லத் தெரியலடா… எனக்கு எல்லாமே அவதான்… எனக்கு அவ வேணும்… எனக்கு மட்டுமே அவளோட ரிஷிக்கண்ணா எனக்காக மட்டுமே இருக்கனும்… “
விக்கி புன்னகைத்தபடி… அவனையே சில நிமிடங்கள் பார்த்திருந்தவன்…
“அதே மாதிரி அவளும் நினைப்பா தானே ரிஷி… நினைப்பாளா மாட்டாளா“ விக்கியின் கேள்வியில் ரிஷி அவனைப் பார்த்தபடி…
“அவ எல்லாத்தையுமே புரிஞ்சுப்பாடா… எனக்கும் சேர்த்து அவ யோசிப்பாடா…. நம்மை… சாரி என்னை மாதிரி அவ இமெச்சூர் இல்லை… ”
“குட்… இம்மெச்சூரா நீ பிஹேவ் பண்ணினப்போ எல்லாம் கண்மணி அந்தச் சூழ்நிலையையும் கையில எடுத்துகிட்டு… உன்னையும் சமாளிச்சு… உன் குடும்பத்தையும் சமாளிச்சு… ஏன் என்னை மாதிரி அர்ஜுன் மாதிரி… இவங்க எல்லாரையும் சமாளித்து உங்க லைஃப அடுத்த லெவல்க்கு கொண்டு போயிருக்கா… ”
“ஹ்ம்ம்..” அவன் சொன்னதை எல்லாம் ரிஷி மனதார உணர்ந்து ஆமோதித்து தலை ஆட்ட…
“ப்ச்ச்… நீ அப்படி பிஹேவ் பண்ணிப்போ எல்லாம் அவ உன்னை எப்படி ஹேண்டில் பண்ணாளோ… அதே போல இன்னைக்கு நீயும் நடந்திருக்கனுமா என்ன… நடக்கலையே நீ… நீ சின்னப்புள்ளதனமா இருக்கும் போதெல்லாம் கண்மணி அதை பெருசா எடுக்காமல்… உன்னைச் சமாளித்தாள்…. இன்னைக்கு அவ எமோஷனலா வீக்காகி நிற்கிற நிலை… அவ அப்படி இருக்கிறப்போ… நீ எப்படி நடந்திருக்கனும் ரிஷி… “ கேள்வியாகக் கேட்டபடி ரிஷியைப் பார்க்க…
ரிஷியும் இப்போது சற்று தெளிய ஆரம்பித்திருந்தான்…
“நம்ம ரெண்டு பேரும் பேசினதைக் கேட்டாளோ… கேட்கலையோ தெரியலடா… ஆனால் நீ தான் பிரச்சனைக்குக் காரணம்… ஆனால் அதை அவ சரியா சொல்லலடா… அவ என்கிட்ட நேரடியா சொல்ல மாட்டேங்கிறா… இப்போ கூட இதுதான் காரணமா எனக்கும் தெரியல… ஆனால் இப்பவும் சொல்றேன்… அவ என்னை யார்கிட்டயும் விட்டுக் கொடுக்க மாட்டா… என்னை விட்டு அவளால இருக்க முடியாதுடா… ” கண்கள் சிவக்க ஆரம்பித்த போதே அவன் குரலும் தடுமாற… தன்னைச் சமாளித்து… பின் மீண்டும் பேச ஆரம்பித்தான் ரிஷி
”உனக்குத் தெரியுமா… நான் அவ மேல வச்சிருக்க காதல்லாம் சும்மா ஒண்ணுமே இல்லை… அவ என் மேல வச்சுருக்க காதல் அது எல்லாம் உனக்குச் சொன்னால் புரியாதுடா… நான் எவ்வளவு ஜென்மம் எடுத்தாலும் அது மாதிரி அன்பு எனக்கு கிடைக்குமான்னு தெரியாது… அதே போல என்னால அவளுக்கு திருப்பிக் கொடுக்க முடியுமான்னு தெரியலடா… யாருக்குமே கிடைக்காத ஒரு அபூர்வம்டா என் கண்மணி… அந்த அபூர்வம் எனக்குக் கிடைச்சிருக்கு… அதைத் தவற விடக் கூடாதுன்ற.. பதட்டம் தான்… பயம் தான்… இப்போ என்னோட பிரச்சனை… எனக்கும் தெரியுது… நான் ஓவர் ரியாக்ட் பண்றேன்னு… என்னால ஒரு பிரச்சனையை ஹேண்டில் பண்ணத் தெரியலை… எல்லாமே புரியுது… ஆனால் ஒண்ணு மட்டும் சொல்றேண்டா… அவள என்னை விட்டு பிரிய விட மாட்டேன்… நான் எந்த சூழ்நிலையில இருந்தாலும் எனக்கு அவ வேணும்டா… இது அவளுக்கும் தெரியும்டா… இருந்தும் இன்னைக்கு இப்படி பண்றாடா… அதுதான் பயமா இருக்குடா… என்னை விட்டு போக மாட்டாதா… ஆனால் என்னை விட்டுப் போயிருவாளோ… இந்த எண்ணம் ஏன் எனக்கு வருதுன்னு தெரியலடா… அந்தப் பயம் வரும் போது… என்னை என்னாலேயே கண்ட்ரோல் பண்ண முடியலடா… நான் என்ன பண்றேன்னு எனக்கே தெரியலடா… ஒரு மாதிரி நரக வேதனையா இருக்குடா… ”
நடுங்கிய ரிஷியின் கைகளை தனக்குள் வைத்துக் கொண்ட விக்கியிடம்
”அதே போல அந்த அர்ஜுன் மேல எல்லாம் எனக்குக் கோபம் இல்லைடா… எனக்கெதுக்குடா அவன் மேல கோபம் வரணும்…பொறாமை வரணும்…. எனக்கே எனக்குனு… என் தேவதை என் மேல அப்படி ஒரு பாசத்தைக் கொட்டும் போது… அவனெல்லாம் எனக்கு ஒரு ஆளே கிடையாதுடா… ” ரிஷியின் குரல் இப்போது திமிராக வெளி வந்திருக்க…
“அந்தப் பொண்ணு பாவம்டா… அவளை ஆளாளுக்கு பந்தாடுறீங்க… ஹப்பா… ஒரே நாள்ள பார்த்துட்டேண்டா… நீயும் அவங்க கூட சேர்ந்துடாதாடா… மத்தவங்க கிட்ட அவ தள்ளி நிற்கிறா… உன்கிட்ட தான் அவ அவளா இருக்கா… நீ அவளுக்கு சம்திங் ஸ்பெஷல்… அது எனக்கு நல்லா புரியுதுடா… அதுனால நீ கொஞ்சம் மெச்சூர்டா நடக்கப் பாருடா… உன் அவசரம்… உன் ஆவேசம் இதெல்லாம் மாத்திக்க ட்ரை பண்ணு… கண்மணியை கை நழுவ விட்றாத… அஃப்கோர்ஸ்… அவ உன்னை விட மாட்டாதான்… ஆனாலும் நீ அவளுக்காக இருக்கேன்னு காட்ட ட்ரை பண்ணுடா… அதை விட்டுட்டு… அவங்க அப்பா… தாத்தா பாட்டி இவங்க மாதிரி அவளுக்கு சுமை ஆகிறாதடா… ஏன்னா… அவங்களை எல்லாம் விட உன்னைய அவளுக்கு பிடிக்குது… அந்த அளவுக்கு உன்னை நேசிக்கிறாடா…. அவ கழுத்தைப் நெறிக்கிற நீ… அப்போ கூட அர்ஜூன் உன்னை அடிச்சிடக் கூடாதுன்னு… வேகமாக அர்ஜூன் கையைப் பிடிக்கிறா… அந்த ஒரு நொடில நான் அவளைப் புரிஞ்சுக்கிட்டேண்டா… நீ அவ உயிர்னு…” விக்கியின் குரல் அவனையுமறியாமல் மென்மையாக மாறி இருக்க
நிமிர்ந்தவன்…
“அதுக்கும் மேலடா… அதெல்லாம் நான் மட்டுமே ஃபில் பண்ண முடியும்“ சொன்ன போதே ரிஷியில் குரலில் கர்வமும் பெருமையும்… காதலும் தழும்ப… ரிஷியைச் சமாதானப்படுத்தும் சூத்திரம் தெரிந்தது விக்கிக்கு…
கண்மணி தேவையில்லை…கண்மணி என்ற பெயரே போதும் ரிஷியைச் சமாதானப்படுத்த… உணர்ந்தவனாக கண்மணியைச் சுற்றியே… அவளைப் பற்றியே விக்கி தன் பேச்சை மாற்ற… அவனுக்கு பதில் கொடுக்க ஆரம்பித்த ரிஷி அவனையுமறியாமல்… மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு வந்திருக்க… அதே நேரம்… அந்த இருள் சூழ்ந்த பகுதியில் திடீரென வெளிச்சம் பாய… நண்பர்கள் இருவரும் ஒளி வந்த அந்த திசையை நோக்கினர்…
கண்மணியின் இருசக்கர வாகனம் தான்… நண்பர்கள் இருவருக்கும் தூரத்தில் இருந்து வந்த வாகனத்தின் சத்தமும்… அதன் வெளிச்சமுமே மட்டுமே முதலில் கவனத்தில் விழ… வருவத்ய் யார் என்று முதலில் தெரியவில்லை… வாகனம் அருகே வர வர … ரிஷி தெரிந்து கொண்டான்…. வருவது கண்மணி என்று…
சட்டென உடல் இறுக… முகம் மாறியிருந்தான் ரிஷி….
“நீ கெளம்புடா… ” விக்கியை அங்கிருந்து கிளம்ப அவசரப்படுத்தியவன்
”அவதாண்டா வர்றா…… கைல வேற அடிபட்ருக்கு… காத்தும் மின்னலும் அடிக்குது… இந்த நைட்ல எப்படி தன்னந்தனியா வர்றா பாரு… யார் பேச்சையும் கேட்ருக்க மாட்டா… இவ பிடிவாதம் இருக்கே“ ” பல்லைக் கடித்தபடி… கோபத்தோடு சொல்லிக் கொண்டிருக்கும் போதே
“நீ கேட்டியா… அவள குறை சொல்ற… உன்னை மாதிரி ஒருத்தனைக் கட்டிட்டு… அவ அப்படியெல்லாம் வீட்ல நிம்மதியா இருந்துற முடியுமா…” விக்கியும் அவனைக் கடிந்தபடியே…
“சரி சரி… நான் கெளம்புறேன்… ஏற்கனவே என்னால பல பிரச்சனை… இதுக்கும் மேல நான் நந்தியா இருக்க விரும்பல… காலைல போன் பண்றேன்… முடிந்தால்… உன் பொண்டாட்டி பெர்மிஷன் கொடுத்தால் பேசுப்பா“ என்று எழுந்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தவன்… பின் என்ன நினைத்தானோ… வேகமாக ரிஷியிடம் திரும்பி
“டேய்… முரடா.. அவகிட்ட ஒழுங்கா பேசு… ரொம்ப பிகு பண்ணாத… அந்தப் பொண்ணை ஆளாளுக்கு படுத்தறாங்க… நீயாவது புரிஞ்சு நடக்க ட்ரைப் பண்ணு… கோபப்படாமல் நிதானமா அவளுக்கு எடுத்துச் சொல்லு… நானும் ஒருநாள் கண்மணிகிட்ட பேசுறேன்… அவகிட்ட சொல்லி வை… விக்கி முன்ன மாதிரி இல்லைனு….” சொல்லியபடியே… வேக வேகமாக காரை நோக்கி நடக்க ஆரம்பிக்க… அதே நேரம் கண்மணி அவன் அருகே வந்திருக்க… முதன் முதலாக அவள் முகம் பார்த்து சமாதானமாக புன்னகைக்க நினைத்து அவளைப் பார்த்து நிற்க… அவளோ… அவனை எல்லாம் கண்டு கொள்ளாமல்… தன் கணவனிடம் மட்டுமே தன் பார்வை என இவன் புறமெல்லாம் சிறிது கூட திரும்பவில்லை…
விக்கியும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்… அலட்சியமாகத் தன் தோளைக் குலுக்கியவனாக…. தன் வாகனத்தை நோக்கிச் சென்றவன்… அதில் ஏற நினைக்க… அதே நேரம்… அவன் மனசாட்சியோ அவனை ஏற விடாமல் தடுத்து நிறுத்தி இருந்தது
“டேய் … அவங்க ரெண்டு பேரும் ஏற்கனவே சண்டை.. இப்போ இவ வேற வேகமா போற… அவன் அதை விட இருக்கான்… உன் ஃப்ரெண்ட் ரிஷி எந்த நேரத்துல என்ன பண்ணுவான்னு அவனுக்கே தெரிய மாட்டேங்குது… இதுங்க ரெண்டு பேரையும் தனியா விட்டுட்டு போகப் போறியா… ” அவன் மனசாட்சி எடுத்துச் சொல்ல… யோசித்தவன்…
ரிஷியின் கோபத்தை… உணர்ச்சிவசப்படுதலை… மருத்துவமனையில்… வீட்டில்… இதோ இங்கு சற்று முன் பார்த்தது… என எல்லாம் நினைவுக்கு வர… ஒருவேளை… இப்போது இருவருக்கும் இடையே…. பிரச்சனை இன்னும் அதிகமானால் என்ன செய்வது… குழம்ப ஆரம்பித்தவன்…
பின் முடிவெடுத்தவனாக
“கண்மணி என்ன சொன்னாலும்… திட்டினாலும் eஎன் அடித்தாலும் பரவாயில்லை… இங்கேயே இருப்போம்… பிரச்சனை ஏதும் இல்லை என்று முற்றிலும் தெரிந்தால் மட்டும் இங்கிருந்து செல்வோம்… என கண்மணி-ரிஷியை தனியே விட்டுப் போக மனம் இல்லாமல்… தன் காரின் அருகிலேயே நின்று அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்தபடி காத்திருக்க ஆரம்பித்தான்…
---
அங்கு கண்மணியோ ரிஷியின் அருகில் சரியாக வந்து நின்று… தன் வண்டியை நிறுத்தியவள்… வாகனத்தை விட்டு இறங்கவில்லை… இறங்காமல் அவனைப் பார்த்தபடியே இருக்க.. ரிஷியும் அவளைச் சளைக்காமல் எதிர்கொண்டான் தான்… மௌனத்தோடு … முகமெங்கும் இறுகிய பாவத்தோடு…
சில நிமிடங்கள்…மௌனமாகவே இருவருக்கும் இடையே ஆட்சி செய்ய… கண்மணி அதட்டல் குரல்… அவளையுமீறி வந்திருந்தது
“உட்காருங்க… வீட்டுக்கு போகலாம்” இது மட்டுமே சொல்ல… ரிஷியோ எழும் எண்ணம் இல்லாதது போல இப்போது இன்னும் வசதியாக அந்த திண்டில் அமர… இப்போது வண்டியை விட்டு… கண்மணி கோப முகத்தோடே இறங்க… அதே நேரம் மழையும் சிறு தூறலாக வர ஆரம்பித்திருக்க… தன் மேல் பட்ட மழைத்துளிகளை கண்டு… விழி உயர்த்தி வானம் பார்த்தவள்…
“ரிஷி… வாங்க போகலாம்… ப்ச்ச் பாருங்க தலையெல்லாம் தண்ணி” அவன் கேசத்தில் இருந்த ஈரத்தை துடைத்தவள்… அவன் கையைப்பிடித்து அவனை எழ வைக்க முயல… அவள் இழுத்த இழுப்புக்கு அசையாமல்… அழுத்தமாக… அப்படியே அமர்ந்திருக்க
“ரிஷிக்கண்ணா…. பெரிய மழை வரப் போகுது… “ என சொல்லி முடிக்கும் முன்னேயே மழை பேரிரைச்சலுடன் சோவென்று பெய்ய ஆரம்பிக்க… அடுத்த நொடி… ரிஷி சட்டென்று அவளை இழுத்தவன்.. அவள் காயம் பட்ட கையை நனையாமல் தனக்குள் வைத்து இறுக கட்டிக் கொள்ள…
விக்கி அங்குதான்… இவர்களைப் பார்த்தபடிதான் இருக்கின்றான்… உணர முதலில் ரிஷியிடம் தயங்கினாள் தான் கண்மணி.. ஆனால் அடுத்த நொடி…. ரிஷிதான் தனக்கு முக்கியம் மற்றதெல்லாம்… மற்றவர்கள் எல்லாம் பற்றி ஏன் நினைக்க வேண்டும்… முடிவெடுத்த அடுத்த நொடி… அவன் அணைப்பில் அடங்க… கண்மணியாவது ஓரளவு நிதானத்தில் இருந்தாள்… ரிஷிக்கோ அதெல்லாம் இல்லை… அவள் இடைபற்றி தன் முகம் நோக்க வைத்தவன்… அவள் நெற்றியில் ஆரம்பித்து… அவள் முகமெங்கும் தன் இதழ் முத்திரையை பதிக்க ஆரம்பிக்க… கண்மணியால் அவனை விலக்க விலக முடியாமல்… ஒரு கட்டத்தில் அவனிடம் சரணடைய…. ரிஷியோ… அவளை விடவே இல்லை… தன் இதழ்களின் பயணம் முடிவில்லா பயணமாக அவள் முகத்தில் இருக்க…
“சாரிம்மா… நான் உன்னை இவ்வளவு கஷ்டப்படுத்திட்டேன்னு நினைக்கும் போது எனக்கே என்னை நினைத்தால் கோபம் கோபமா வருது” மூச்சுக்குத் தவித்த போதும்… கண்மணி ரிஷியிடம் பேச ஆரம்பிக்க முயல… அவனோ… ஒரு வார்த்தை கூடப் பேசாமல்… அவளை விட்டு விலகாமல் இன்னும் இன்னும் அவளை தன் இதழ் ஆளுமையிலேயே வைத்திருக்க… அவர்களைத் தூரத்தில் இருந்து பார்த்த விக்கிகோ… இதழோர கள்ளப் புன்னகை மட்டுமே இப்போது…. மன நிறைவோடு… சந்தோசத்தோடு தன் வாகனத்தில் ஏற அமரத் திரும்ப… அவன் திரும்பிய அதே நேரம்…
”ரிஷி… ரிஷி… ரிஷிக்கண்ணா” கண்மணியின் எதிரொலித்த அலறல் குரல் அவன் காதுகளை அடைய… விக்கி பதறி…. வேகமாக மீண்டும் திரும்பிப் பார்க்க… ரிஷி மெல்ல மெல்ல மயங்கிச் சரிந்து கொண்டிருக்க… கண்மணியால் அவனைத் தாங்கிப் பிடிக்க முடியவில்லை… அதோடு கைகளின் காயம் வேறு… பிடிக்க முடியாமல் தடுமாற ஆரம்பித்தவள்.. ஒரு கட்டத்தில் முடியாமல்…
“விக்கி...” என வாய்விட்டே விக்கியை நோக்கி கண்மணி சத்தமாக அழைக்க… வலியோடு பரிதவித்து கதறலாக உதவியை நோக்கிய அந்தக் குரலில் அவன் உணர்ந்தது என்ன… விக்கிக்கேத் தெரியவில்லை
“வர்றேன்மா… வந்துட்டேன்… கண்மணி” என்றவாறு… அவர்கள் அருகில் ஓட்டமும் நடையுமாக வந்து நின்றவன்… அதே வேகத்தில் ரிஷியைத் தாங்கிக் கொள்ள…
”ரிஷி… ரிஷி… ரிஷியைப் பாருங்க விக்கி என்னாச்சு விக்கி…. ஏன் திடீர்னு… எனக்கு பயமா இருக்கு விக்கி… பாருங்க.. அவரை கண்ணு முழிக்கச் சொல்லுங்க… என் கிட்ட பேசச் சொல்லுங்க… என்னைப் பார்க்கச் சொல்லுங்க… ஏன் இவ்ளோ வேர்த்துருக்கு… என்ன பண்ணினாரு…” படபடவெனப் பேசியவளிடம்… அவள் நிதானமெல்லாம் அவளிடம் தவறி இருக்க…
விக்கி…. ரிஷியைத் அங்கிருந்து தூக்கிக் கொண்டு…வந்து சமதரையில் கிடத்தி… அவன் மூச்சைச் சரிபார்க்க… அது சீராக இருக்க… அதன் பின் தான் அவன் நிம்மதி கொள்ள… கண்மணியோ… இப்போது அழ ஆரம்பித்திருந்தாள்…
“ரிஷி… ரிஷி….” எனப் பிதற்ற ஆரம்பிக்க…
“ப்ச்ச்… கண்மணி… ஒண்ணும் இருக்காது… “ என தண்ணீரைத் தெளிக்கப் போக…
“ஏற்கனவே மழையிலதான் நின்னுட்டு இருந்தாரு… நீங்க எந்த ஃபர்ஸ்ட் எயிடும் பண்ண வேண்டாம்… நேரத்தை கடத்தாதீங்க… வாங்க… ஹாஸ்பிட்டல் போகலாம்… ப்ளீஸ்… இப்படிலாம் இவர் மயங்கினதே இல்லை…. காரை எடுங்க… சீக்கிரம் “ அழுதபடியே விக்கி என்ன செய்ய வேண்டும் என கண்மணி கட்டளையிட ஆரம்பித்திருக்க… விக்கிக்கு அவளிட்ட ஆணைகளில்… கோபம் வரவில்லை…. மாறாக… தன் நண்பன் குறித்த பயம் வர ஆரம்பித்திருந்தது… ஆனாலும் கண்மணியிடம் காட்டிக் கொள்ளவில்லை…
“ஒண்ணும் பயப்படாதே… இதோ இப்போதே பக்கத்துல இருக்கிற ஏதாவது ஹாஸ்பிட்டலுக்கு… போயிறலாம்… நீ பதட்டபடாத…” என கண்மணிக்கு ஆறுதல் கூறியபடியே ரிஷியைக் கைகளில் தூக்கிக் கொண்டவன்…
“வேகமா போய்க் கார்க்கதவைத் திற கண்மணி… ” என கண்மணிக்கு இவன் இப்போது உத்தரவிட… கண்மணியும் அடுத்த நொடி காரின் அருகே சென்று… காரின் கதவைத் திறந்து விட… ரிஷியைப் பின் இருக்கையில் படுக்க வைக்க… அடுத்த நொடி கண்மணியும் வேகமாக உள்ளே சென்று அமர்ந்து ரிஷியைத் தன் மடியில் வைத்துக் கொள்ள… அடுத்த சில நிமிடங்களில்… விக்கியின் வாகனம்… அந்த ’ஆர்கே’ இண்டஸ்டீரிசை விட்டு வெளியேறி …. அருகில் இருந்த மருத்துவமனை வளாகத்திக்கிற்குள் நுழைந்திருந்தது
---
Both very cute