ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
எதிர்பார்த்த அளவு வந்திருக்கானு தெரியல... அப்டேட் படிச்சுட்டு சொல்லுங்க...
அடுத்த அப்டேட்... நாளை...
------------------------------
அத்தியாயம் 76-1
கண்கள் கணினித்திரையோடு கலந்திருக்க… விரல்கலோ விசைப்பலகையில் எழுத்துக்களைக் கோர்த்து வார்த்தைகளாக மாற்றிக் கொண்டிருக்க… கண்மணியின் கண்களில் இருந்து கண்ணீர் துளிகளோ அவள் கன்னங்களின் வழியே கோடுகளாக வழிந்து கொண்டிருந்தது… துடைக்கக் கூட அவள் நினைக்கவில்லை…
எதற்காக இந்தக் கண்ணீர்… ஏன் இந்தக் கண்ணீர்… அவள் மறந்த… அவளாகவே மறுத்த கண்ணீர் இன்று ஏன் வருகிறது…. மிக மிக சிறிய விசயம் தான்… ஆனால் யாரிடம் இருந்து என்பதில் தான் மிகச் சிறிய விசயமும் பெரிதாக பார்க்கப்படுகிறது…
ஒரு வார்த்தைதான்…
”என் கண்மணி எனக்கு முக்கியம்…”
இந்த ஒரு வார்த்தைதான் எதிர்பார்த்தாள்… ஏன் எதிர்பார்த்தாள்… அதுவும் புரியவில்லை… ரிஷிக்கும் அவளுக்குமான உறவு… எதிர்பார்ப்பின்றி ஆரம்பித்த உறவுதான்… வாழ்க்கைதான்… ஆனால் அந்த வாழ்க்கையில் இன்று அவளின் நிலை என்ன… ஏன் இப்படி மாறினேன்… தன்னையே குழப்பிக் கொள்ள ஆரம்பித்திருந்தாள் கண்மணி…
அதே போல ரிஷியும் இவளை ஏமாற்றி திருமணம் செய்யவில்லையே… இப்படித்தான் நான்… இதற்காகத்தான் உன்னை திருமணம் செய்தேன்… வெகு தெளிவாக சொல்லி விட்டானே… அதுவும் திருமணமான முதல் நாளே சொல்லிய கதைதானே எல்லாம்…. அன்று… அவன் சொன்னதை எல்லாம் மிக சாதரணமாக கடந்து வந்தவள் தான்… இன்று தவிக்கின்றாள்…
”ரிஷிக்கு கண்மணியைப் பிடிக்கும்” இது யாருக்குத் தெரிகிறதோ இல்லையோ… அவன் மனைவி கண்மணிக்குத் தெரியாதா என்ன…
பிறகு ஏன் இன்று அவன் வார்த்தைகள் இவ்வளவு முக்கியம் தேடுகிறாள்,… அதற்கும் காரணம் இருக்கின்றது… தோழமை என்பது… தோள் கொடுப்பது மட்டுமல்ல… நட்பை முழுமையாகப் புரிந்து கொள்வது… நட்பின் உணர்வுகளை புரிந்து ரகசியங்களை கட்டிக் காப்பது… அப்படி அவனை முழுவதும் புரிந்து கொண்ட நண்பன் முன்… வாய் மூடி மௌனமாக இருந்தால் என்ன அர்த்தம்…
அதிலும் அந்த விக்கி எவ்வளவு தெனாவெட்டாகக் சொன்னான்….
“என் முன் அந்தக் கண்மணியைப் பிடிக்கும் என உன்னால் சொல்ல முடியாது என்று…
அவன் சொன்னது போல ரிஷியும் சொல்லவில்லையே… அந்த விக்கி சொல்வது போல்… ரிஷியால் அவன் முன் சொல்ல முடியவில்லையோ…
”இதை எல்லாம் விட… என் மனைவியைப் பற்றி பேசாதே “ என ரிஷிஅவனைத் தடுக்கவில்லையே… ரிஷியின் உயிர் நண்பனாக இருந்தாலும்… இவளைப் பற்றிப் பேச அவன் யார்… அவன் நண்பன் அவனைப் பற்றி என்ன வேண்டுமென்றாலும் பேசிக் கொள்ளட்டும்… நண்பனின் மனைவியைப் பற்றி அவனுக்கு என்ன உரிமை… நெஞ்சம் கொதித்தது கண்மணிக்கு…
என்னைப் பற்றி பேச கண்டவனையும் அனுமதித்தால்… பிறகு கணவன் – மனைவி உறவுக்கு என்ன அர்த்தம்…
எத்தனையோ முறை அர்ஜூன் ரிஷியைப் பற்றி பேச ஆரம்பிப்பான்… அப்போதெல்லாம்… ஒரு வார்த்தை கூட அவனைப் பேச விட்டதில்லையே… அவன் மட்டுமல்ல… வேறு யாரையும்… ஏன் அவன் தாயைக் கூட இவர்கள் உறவுக்கு நடுவில் விட்டத்தில்லையே… தான் அப்படி இருக்க… தன் கணவன் நண்பன் முன் தன்னை விட்டுக் கொடுத்து விட்டானே… அவள் தானாக தன் அன்பை… தன் காதலை கணவனின் செய்கைகளோடு ஒப்பீடு செய்ய ஆரம்பித்திருந்தது..
ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை கண்மணியால்… எப்படி விக்கியை பேச அனுமதித்தான்… எப்படி மௌனமாக இருந்தான்… தன்னால் அதற்கு மேல் நிற்கவே முடியவில்லையே… நின்றிருந்தால் ஒருவேளை ரிஷியிடம் சண்டை போட்டிருந்திருப்பாளோ… அதற்கு பயந்தே அப்போது ஓடி வந்து விட்டாள்…
”அதே நேரம் ரிஷியிடம் இதற்காக சண்டை போட முடியுமா என்று கூட குழம்பினாள் தான்… இதெல்லாம் ஒரு காரணமா… உனக்கு என்னைப் பிடிக்கும்… எனக்கு உன்னைப் பிடிக்கும் என வாய்வார்த்தையாகச் சொன்னால் தான் தெரியுமா…” என எள்ளலாக கேட்டு விட்டால் அது அதை விடக் கொடுமை…
’இன்னும் சொல்லப் போனால்… ஆயிரம் பேர் கூடியிருந்த அரங்கம் முன்… இவள்தான் தனக்கு எல்லாமே எனச் சொன்னவன் தானே அவன்… அப்புறம் என்ன உனக்கு… அதற்கு மேல் உனக்கு என்ன வேண்டும்..’ என்னதான் அவனுக்கு சாதகமான காரணங்கள் கிடைத்தாலும்…. விக்கியிடம் சொல்லவில்லையே… மனம் சுற்றி சுற்றி அங்குதான் நின்றது…
திடீரென்று ரிஷிக்கும் தனக்கும் இடையில் விக்கி வந்து நின்றார் போல பிரமை… அதை நினைக்கும் போதே… திடீரென்று துரை ஞாபகம் வர… நண்பர்கள் என்ற வார்த்தை ஏனோ அறவே கசந்தது அன்று போல இன்றும் கண்மணிக்கு… கண்கள் கண்ணீர் மழையை ஆரம்பித்திருந்தது…
---
“கண்மணி… சாப்பிட வரலையா…. பசிக்குது எனக்கு“ அவளை அழைத்தபடி மீண்டும் வந்திருந்தான் ரிஷி…
வந்தவன் முன்… ஏதும் காட்டிக் கொள்ள விரும்பாமல்… இயல்பாக இருப்பது போலக் காட்டிக் கொண்டவள் பெரும்பாடு பட்டு கண்ணீரை அடக்கிக் கொண்டாள்…
“எனக்குப் பசிக்கலை…” அவனைப் பார்க்காமாலேயே டைப் செய்தபடி சொல்ல…
“எனக்குப் பசிக்குதுன்னு சொன்னேன்… மேடமுக்கு கேட்கலையா” என்றபடி அவளை நோக்கி வந்தவனிடம்…
“கேட்குது… உங்க அம்மா…. உங்க தங்கைங்கலாம் இருக்காங்கதானே…. “ சொன்ன போதே… அவளின் விட்டேற்றியான வார்த்தைகளில் ரிஷியின் முகம் மாறி இருக்க… இருந்தும் சமாளித்தவனாக
“என்னாச்சு… கண்மணி… உடம்பு சரி இல்லையா” என்றபடி அவள் அருகே வந்து அமர்ந்தபடியே அவள் நெற்றியைத் தொட்டுப் பார்க்க… அடுத்த நொடி கண்மணி சட்டென்று கையைத் தட்டிவிட
“நான் நல்லா இருக்கேன்… எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை… எனக்கு அது வரவும் விடமாட்டேன்… “ கண்மணியும் விறைப்பாகவே சொல்ல….
யாரோ ஒருவனிடம் பேசுவது போல பேசிக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்து பல்லைக் கடித்துக் கொண்டு… மூக்கை விடைத்தவனுக்கு… அதே நேரம் அவளது கோபம் ஏன் என ஓரளவுக்குப் புரிய ஆரம்பிக்க… அவள் காட்டிய ஒதுக்கத்தால் வந்த தன் கோபத்தை அடக்க முயற்சித்தான்…
அவளருகில் இன்னும் நெருங்கி அமர்ந்தவனின் மூச்சுக் காற்று அவள் உணர்ந்த போது…. அவள் மனம் மெல்ல அவன் பால் சாயத் தொடங்க… அதில் கண்கள் மீண்டும் கலங்க ஆரம்பிக்கப் போக… இருந்த போதிலும்…மீண்டும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவளின் நிலை கண்டவன்…
“எனக்குப் புரியுது அம்மு… விக்கி-ரிதன்யா… அவங்க மேரேஜ் வரை கொஞ்சம் பொறுத்துக்கோ… ” உதடுகள் உதிர்த்த வார்த்தைகளை செவிகள் புரிந்து கொள்வதற்கு முன்னரே… அவன் இதழ்களின் இதமான ஸ்பரிசம் மீசையின் மெல்லிய உரசலோடு அவள் கழுத்து வளைவுகள் உணர.. அப்போதும் அவனைத் தள்ளி விட மனம் வரவில்லை… அவனை விலக்காமல்… தன் தலையைத் திருப்பிக் கொள்ள முயற்சிக்க… அவனோ இப்போது விடாமல் அழுத்தமாக இதழ் பதிக்க… இப்போது விலகவில்லை… இப்போதைய கணவனின் அன்பிற்கும்… சற்று முன் இருந்த அவனின் மௌனத்திற்கு இடையே அவள் போராட ஆரம்பித்திருக்க… கண்களில் கண்ணீர் முத்துக்கள் கோர்க்க ஆரம்பித்திருந்தது…
அவனோ அவள் கண்களைப் பார்க்கவில்லை… திரையில் அவள் எழுதிக் கொண்டிருந்த வார்த்தைகளில் கவனம் வைத்தபடியே… அவளோடு பேச ஆரம்பித்திருந்தான்…
“ப்ச்ச்… விக்கி விசயத்துல நான் ஏதாவது உன்னைக் கேட்டேனா… வழி அனுப்ப… அவ்ளோ ஏன் அவனை நீ பார்க்கக் கூட வரலை… உனக்குப் அவனைப் பிடிக்கலை… நானும் விட்டுட்டேன்… இப்போ என்ன ஆச்சுனு… என்கிட்ட இவ்ளோ பிடிவாதம் பிடிக்கிற… கோபப்படுற..” என்றவனின் குரல் மெலிதாக அவளைச் சமாதானப்படுத்தும் விதமாக வெளிவர…
கண்ணீரை எப்படியோ உள்ளிழுத்துக் கொண்டு… அவனை புறம் திரும்பியவள்…
“நான் பிடிவாதமா இருக்கேனா… அதுதான் இந்த மாதிரி சமாதானமா… இந்த சமாதானம்… என் உடம்புக்கா… இல்லை மனசுக்கா ரிஷி… ”
அவள் உதிர்த்த வார்த்தைகளின் வீரியம் உணர்ந்து சட்டென்று ரிஷி நிமிர்ந்து அவளைப் பார்க்க… இப்போது அவள் கண்களில் சிவப்பு… அவனுக்கும் தெரிய…
”அழுதியா… “ காரணம் புரியாமல் குழம்பியவன்… அவள் வார்த்தைகளை மெல்ல மெல்ல தனக்குள் கிரகிக்க ஆரம்பித்திருந்தவன்… அவளைத தன்புறம் இழுத்தபடியே…
“ஹ்ம்ம்… உனக்கு அது தேவைப்படுதோ அதை எடுத்துக்கோ… ஆம் ஆல்வேஸ் ரெடி…” கைகள் அவள் வெற்றிடையில் அழுந்தி… பயணிக்க ஆரம்பித்திருக்க… அவன் உரிமை… அவன் ஆளுமை… எல்லைகள் கடந்திருந்தது… மிக இயல்பாக அவன் மனைவியிடம்… அவளை இழுத்து தன் மடியில் அமர வைக்க முயற்சிக்க… அவளோ அவனை விலக்க முயற்சிக்க… விலக முயற்சித்தவளை எந்த ஒரு கஷ்டமும் இன்றி… தன் ஆளுமைக்குள் கொண்டு வந்திருந்தவனை… தடுக்க முடியாமல்… கண்மணி தடுமாறிக் கொண்டிருக்க…
“என்கிட்ட உன்னால… ரொம்ப நேரம்லமாம் எல்லாம் உன் கோபத்தைத் தாக்குப் பிடிக்க வைக்க முடியாது கண்மணி… அப்படியே இருந்தாலும்ம் அதெல்லாம் எப்படி போக வைக்கிறதுனு… உன் ரிஷிக் கண்ணாக்கு மட்டும் தான் தெரியும்… எதுக்கு அழுத அதைச் சொல்லு… ” என்றவன்… அவளிடம் உரிமையாக அத்துமீறி இருக்க… கண்களை மூடித் திறந்தவள்…
“நான் எதுக்கு அழனும்… எனக்கு என்ன கோபம்… பசிக்கலைனுதான் சொன்னேன் ரிஷி… வேற ஏதும் சொல்லலையே… நீங்க போங்க… உங்களுக்காக உங்க உலகம் காத்துட்டு இருக்கும்… அவங்களுக்கு நீங்க தான் முக்கியம்” இயல்பாக பேசுவது போல பேசி மெல்ல அவனை விலக்கியவள்… விலகியிருந்த புடவையையும் சரிப்படுத்த ஆரம்பிக்க…
அவளின் விலகலில்… அந்நியமான வார்த்தைகளில்… சில நிமிடம் ஸ்தம்பித்து நின்றவனின் பார்வையில் விரலின் மேல் போடப்பட்டிருந்த பேண்ட் எயிட் காட்சி அளித்தது…
அவளின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவனைக் கூறாக்கியதுதான்… ஆனாலும் அவள் பேச்சைக் கேட்காதது போல் பாவனை செய்தபடி… கேசத்தை சரி செய்தபடியே…
“விரல்லதான் காயம் பட்ருக்கே… அப்புறம் ஏன் அம்மு டைப் பண்ணிட்டு இருக்க…”
பதில் பேசாமல் கண்மணி தன் வேலையில் கவனமாக… ரிஷியின் கோபம் மெல்ல மெல்ல அவனுக்குள் மையம் கொள்ள ஆரம்பித்திருந்தது
“உனக்கு என் மேல ஏதோ கோபம்… அதைப் புரியாத அளவுக்கு நான் மடையன் இல்லை… எதுவா இருந்தாலும்… என்கிட்ட சொல்லு… என்கிட்ட காட்டு… இல்லை… என்னைத் திட்டு…. ” என குரலை உயர்த்தியவன்… அதே நொடியில் தன் குரலை மாற்றியவனாக…
“என்கிட்ட கோபத்தை காட்ட முடியாமல்… கதை எழுதுறேன்னு… உன் கோபத்தை எல்லாம் அந்த கதையில காட்டிறாத… அதுல வருகிற கேரக்டரைசை எல்லாம் வச்சு செஞ்சுடாத அம்மு… பாவம்டி” வேண்டுமென்றே கேலியாகப் பேசி… அவளைச் சீண்ட…
இப்போது அவனைப் பார்த்த அவள் பார்வையில் எரிச்சல் மட்டுமே… இத்தனை நேரம் மெல்லமாக வந்த குரல்… வழக்கமான கண்மணியின் குரலாக வெளி வந்திருந்தது… அதில் அவள் குரலும் உயர்ந்திருந்தது…
“என்னைக் கொஞ்சம் தனியா விடறீங்களா….. எனக்குன்னு ஒரு பிரைவேட் ஸ்பேஸ் இருக்கு… அதுல இண்டர்ஃபியர் ஆகாதீங்க… “ அவள் சொல்லி முடிக்கவில்லை… ரிஷியின் கைகள் அவள் கரங்களை அழுந்திப் பிடித்திருக்க… இவ்வளவு நேரமாக அடக்கி வைக்கப்பட்ட கோபம் எல்லாம் கரை கடக்க ஆரம்பித்திருந்தது ரிஷியிடம்…
“ரிஷி கையை எடுங்க…” அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே… ரிஷியின் இன்னொரு கை அவளிடமிருந்த லேப்டாப்பை பறிமுதல் செய்ய…
”ரிஷி… லேப்டாப்பை கொடுங்க… எனக்கு வேலை இருக்கு… ” எனும் போதே… ரிஷி அந்த லேப்டாப்பை…. அவள் அமர்ந்திருந்த மெத்தையின் மேல் வீசி எறிந்திருந்தான்
“ரிஷி… நான் டைப் பண்ணிட்டு இருந்தேன்… அதுலதான் என் மொத்த ஸ்டோரியும் இருக்கு…” கண்மணி குரலும் உச்சஸ்தாயை எட்டி இருக்க…
“என் பிஸ்னஸ் டீடெயில்ஸ் எல்லாம் அதுலதான் இருக்கு… உன் கதை… கட்டுரை எல்லாம் அதை விட முக்கியமா என்ன… அதுனால குரலை உயர்த்தாத… இப்போ என்ன பிரச்சனை… அதை சொல்லு… ” என்ற போதே… அவன் பேச்சை எல்லாம் அலட்சியம் செய்தவளாக… கண்மணி… அந்த மடிக்கணியை எடுத்து அதை மீண்டும் உயிர்பிக்க ஆரம்பித்திருக்க… அடுத்த நிமிடம்…. அந்த வீட்டின் மூலையில் மோதி… அதன் உயிரை முற்றிலும் துறந்திருந்தது அந்த மடிக்கணினி…
“ரிஷி” கண்மணியும் ஆத்திரத்தோடு கத்த ஆரம்பிக்க
“ஷ்ஷ்…. எதுக்கு இப்போ கத்துற… அவ்ளோ முக்கியமா அந்த லேப்டாப்… உனக்கு நான் மட்டும் தான் முக்கியமா இருக்கனும்… உயிரோட இருக்கிறவங்களுக்கு மட்டும் இல்லை… இந்த கதை அப்புறம் அதுல இருக்கிற கற்பனை கேரக்டர்களுக்கும்… இது எல்லாத்துக்குமே பொருந்தும்… ரிஷி இந்தப் பேர் மட்டும் தான் உனக்குள்ள ஓடிட்டு இருக்கனும்… இது எல்லாம் செகண்டரியாத்தான் இருக்கனும்… ” ரிஷியின் வார்த்தைகள் அதட்டலாக வெளிவர…
“என்ன உளற்ரீங்க… எல்லை மீறிட்டு இருக்கிங்க” அவனின் அவளுக்கான ஆக்கிரமிப்பு… அதிகாரம்… எல்லாம் எல்லை மீற ஆரம்பித்திருக்க… கண்மணியும் தன் கோபத்தையும் கடுப்பையும் அவனிடம் காட்ட ஆரம்பித்திருந்தாள்…
“நான் அப்படித்தாண்டி… என்னைப் பார்க்காமல்… அவ்ளோ மும்முரமா… டைப் பண்ணிட்டு இருக்க… அவ்ளோ முக்கியமா என்னைவிட அந்த கதை… அதுல வர்ற கேரக்டர்ஸ் எல்லாம்… இனி நீ இதெல்லாம் மறந்துரு” அவன் குரலை உயர்த்தவில்லை… ஆனால்… அதன் அழுத்தம் அவளால் உணர்ந்து கொள்ள முடிய… அதே நேரம்… அவனின் விதாண்டாவாதத்தையும் அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை…
இவள் கோபப்பட்டுக் அவனோடு சண்டை போட்டிருக்க வேண்டும்… ஆனால் சண்டையை விரும்பாமல்… அதைத் தவிர்க்கத்தான் கதை எழுத ஆரம்பித்திருந்தாள்…
ஆனால் நடப்பது என்ன… இவன் தன்னிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றான்… அதுவும்.. தான் கதை எழுதுவது பற்றி…. பொங்கி விட்டாள் கண்மணியும்..
“ரிஷி ஒரு அளவுக்குத்தான் உங்கள சகிச்சுக்கிட்டு உங்களோட வாழ முடியும்… எல்லாவற்றையும் பொறுத்துட்டு வாழ்றதுக்கு.. நான் உங்களோட அடிமை கிடையாது…” கண்மணியும் வார்த்தைகளை விட…
ரிஷியால் தாங்க முடியவில்லை அந்த வார்த்தைகளைக் கேட்ட போது…
”என்ன சொன்ன… என்ன சொன்ன… என்னைச் சகிச்சுட்டு வாழ்ந்துட்டு இருக்கியா… “ அவனே உக்கிரமாக மாறி இருக்க… அவன் வார்த்தைகளும் நெருப்பை உமிழ்ந்து கொண்டிருக்க… அவனது கைகள் அவளை அடிக்க உயர்ந்ததா… இல்லை கண்மணி அவனது கையை மறித்தாளா… கணிக்க முடியவில்லை…
காரணம்… சரியாக அதே நேரம்
“அண்ணி…” என்று அழைத்தபடி ரித்விகா வாசலில் வந்து நிற்க…
கண்மணி ரிஷி இருவருமே ஒரு நொடி தாங்கள் இருந்த நிலையிலேயே இருந்தனர்தான்… அதன்பிறகு முதலில் கண்மணி தான் சுதாரித்திருந்தாள்…
ரிஷி பின்னால் வாசல் புறம் திரும்பக் கூட இல்லை… அப்படியே நின்றிருக்க…
கண்மணி இப்போது… ரிஷி பிடித்து வைத்திருந்த தன் கரத்தை அவனிடமிருந்த எடுக்க முயற்சிக்க… ரிஷியோ விடவில்லை… இன்னும் தனக்குள் இறுக்க ஆரம்பித்திருக்க…
கண்மணி… அவஸ்தையோடு… அவனை முறைத்தபடியே… தன் கைகளை அவனிடம் இருந்து விலக்க முயற்சித்தபடியே
“சொல்லு ரித்வி”
”அண்ணி… கீழ் வீட்ல பவர் கட் ஆகிருச்சுனு சொல்லிட்டு போனாங்க அண்ணி… வர்றீங்களா… வர முடியுமா” என்றவளின் வார்த்தைகள் தடுமாறி வர… பார்வையோ…. சந்தேகப் பார்வையாக இப்போது தன் அண்ணனிடம் மையம் கொண்டிருக்க…
“இதோ வர்றேன் ரித்விமா” என்று அதுதான் சாக்கென்று ரிஷியின் கைகளை வேகமாக அவனிடமிருந்து இழுத்துக் கொள்ள… ரிஷியும் இப்போது விட்டிருக்க… கண்மணி சட்டென்று ரிஷி இப்போதும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை…
“தன்னை சகித்துக் கொண்டு வாழ்கிறாளா???…” அப்படியே அந்தக் கட்டிலில் அமர்ந்து விட… எத்தனை நிமிடங்கள் கடந்திருக்குமோ தெரியவில்லை…
வெளியே ஒரு கூக்குரல்… சத்தம்… மெல்ல மெல்ல தன் உணர்வுக்கு வர முயற்சித்தவன்… பெரும் முயற்சி செய்து… தன்னை மீட்டெடுத்து வெளியே வந்திருக்க…ஒரு கும்பலே கூடி இருக்க…. வேகமாக அடி எடுத்து வைத்து அங்கே போக… அங்கு கண்ட காட்சியோ… அவனை விதிர் விதிர்க்க வைத்திருந்தது…
கண்மணியின் கையில் விரல்களில் இருந்து இரத்தம் வடிந்து கொண்டிருக்க… அவ்வளவுதான் மற்றதெல்லாம் மறந்து போய்…
“என்னம்மா… என்ன ஆச்சு” பதறி அவள் அருகே போனவன்… அவள் கைகளைப் பிடிக்க… கண்மணியோ அவனைப் பார்க்கக் கூட இல்லை… சட்டென்று அவனிடமிருந்து தன் கைகளை பிரித்தெடுத்தவள்…
“அப்பா….” என சற்று தொலைவில் அவளை நோக்கி ஓட்டமும் நடையுமாக வந்த நட்ராஜைப் பார்த்து வலியால் முணங்க..
வேகமாக வந்த நட்ராஜ்…
“என்னடா ஆச்சு… கடைக்கு போயிட்டு வர்றதுக்குள்ள… அய்யோ… என் குழந்தைக்கு ரத்தம் ஆறா ஓடுதே”
“வலிக்குதுப்பா” என நட்ராஜின் மார் மேல் சரிந்தவளை… ரிஷி அதிர்ச்சியுடன் பார்த்தபடி நிற்க…
“கரண்ட் போயிருச்சு சார்… ஃப்யூஸ் போயிருக்கும்னு மணியை கூப்பிட்டேன்…. ஆனால் மேல தென்னை மரகீத்து வயர்ல விழுந்து கனெக்ஷன் கட் ஆகியிருந்துச்சு… நாளைக்கு பார்த்துக்கலாம்னு சொன்னாலும் மணி கேட்காமல்… அதை வெட்டி விட ட்ரை பண்ணிச்சு…. அப்போதான் கைல அரிவாள் பட்ருச்சு” என்று அந்த வீட்டில் வசிக்கும் பெண்மணி நடுங்கிக் கொண்டே சொல்லி முடிக்க…
“அறிவிருக்காடி உனக்கு…” ரிஷி கண்மணியைத் திட்டினாலும்… படபடப்பாக வர… கண்மணி அவனைக் கண்டு கொண்டால் தானே
”அ… ப்ப்ப்ப்ப்ப்ப்…. பா… மயக்கமா வருதுப்பா…” என நட்ராஜைக் கட்டிக் கொள்ள…
இரத்தம் நிற்காமல் இன்னும் அதிகமாக கொட்ட ஆரம்பித்திருக்க…. இப்போது இலட்சுமியும் ரித்விகாவும் அவளது கையில் துணியால் அழுத்திப் பிடிக்க ஆரம்பித்திருந்தனர்…. நட்ராஜால் தாங்க முடியவில்லை…
“அய்யோ ரிஷி… என் பொண்ணு துடிக்கிறா…. ஏதாவது பண்ணு… ” நட்ராஜ் அழ ஆரம்பித்திருந்திருக்க… அதற்குள் ரிஷி வேகமாக பைக்கை எடுத்து வந்தவனாக…. அவர்கள் அருகில் வந்து நின்றவன்…
‘பைக்ல உட்கார முடியுமாடா…” கண்மணியிடம் கேட்க… அவனை அப்போதும் அவள் பார்க்காமல் தன் கைகளையே பார்த்தபடி இருக்க… இப்போது நட்ராஜ் இருவரையும் யோசனையுடன் பார்த்த போதே…
“அப்பா… ஸ்டாண்ட்ல ஆட்டோ ஏதாவது இருக்கான்னு பாருங்க” கண்மணி சொல்லி முடிக்கவில்லை…. அடுத்த நிமிடம்… அங்கு ஆட்டோ வந்து நின்றிருந்தது…
கண்மணிக்கு ஒன்று என்றால் அந்த ஏரியாவே திரண்டு வரும் என யாருக்கும் தெரியாதா என்ன… அதே போல மொத்த ஏரியா மக்களும் அங்கு வந்து சேர்ந்திருக்க… கண்மணி ஆட்டோவிலும் ஏறியிருந்தாள்…
இதெல்லாம் நடந்து முடிந்து… அதாவது கண்மணிக்கு அடிபட்டு பத்து.. பதினைந்து நிமிடங்கள் கூட கடந்திருக்காது… அதற்குள் இத்தனை களேபரம்
கண்மணியுடன் நட்ராஜும் இலட்சுமியும் அமர… அடுத்த சில நிமிடங்களில் மூவரும் அருகில் இருந்த மருத்துவமனைக்கு விரைந்திருந்தனர்…
---
திடீரென்று யாருமே இல்லாதது போல வெறுமை அவன் மனதில் படர ஆரம்பித்திருக்க… இதற்கு முன்னர் இருவரும் பேசாமல் இருந்த போது அவன் ஆஸ்திரேலியாவில்… கண்மணியோ இந்தியாவில்… அருகருகே இருந்து அவள் பேசாமல்…. அவனைப் பார்க்காமல் இருந்தது இதுதான் முதல் முறை… இந்த சில நிமிடங்களைக் கடக்கவே அவன் பெரும்பாடு பட வேண்டியதாக இருக்க… அவன் நெஞ்சுக் கூட்டில் காற்றைச் சேகரிக்கவே சிரமப்பட வேண்டியதாக இருந்தார் போல மூச்சை அடைத்தது ரிஷிக்கு.. அப்படியே நெஞ்சை நீவி விட்டபடியே அமர்ந்து விட்டான் ரிஷி… அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றே அவனுக்கு புரியவில்லை…
“அண்ணாத்த வா… எழுந்திரு…. நாலு ஸ்டிச் போட்டா… மணி அக்காக்கு சரி ஆகிரும்… இதுக்கு போய்… ஏன் இப்படி இருக்க…” ரிஷி அமர்ந்திருந்த நிலையைப் பார்த்து வேலன் அவனை நோக்கி ஓடி வந்து … ரிஷியிடம் பேச ஆரம்பிக்க
“டேய் தண்ணி மட்டும் எடுத்துட்டு வாடா…. மூச்சு முட்ற மாதிரி இருக்கு” ரிஷியின் குரல் பிசிறு தட்ட ஆரம்பித்திருந்தது… கண்மணி அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை… இதை நினைக்கும் போதே… அவன் மூச்சுக் காற்று அதன் சீரை மீண்டும் இழந்திருந்தது…
இதற்கிடையே… வேகமாக வீட்டுக்குள் இருந்து தண்ணீர் எடுத்து வந்து வேலன் அவனிடம் கொடுத்தபடி
“தல…. “ என்ற தினகரின் குரலும் கம்ம ஆரம்பித்திருந்தது…
“நீயே இப்படின்னா… முதலாளி சும்மாவே மணி அக்காக்கு ஒண்ணுனா பதறுவாறு… அவர் எப்படி இருக்காரோ… ”
யாரிடமும் பேச முடியவில்லை அவனால்… கண்மணிக்கு நடந்த விபத்தால்… அதனால் ஏற்பட்ட காயத்தால்…. ரிஷி இப்படி இருக்கிறான் என்றுதான் மற்றவர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர்…
அவன் நிலைமை அவன் மட்டுமே அறிவான்… கண்கள் கலங்க ஆரம்பித்திருக்க… ’இந்த அளவுக்கு தன் மேல் அவளுக்கு என்ன கோபம்’ என யோசிக்க ஆரம்பித்த போதே…. ’இப்போது அது முக்கியம் அல்ல…. முதலில் அவளின் காயத்தைக் கவனிப்போம்…’ என தனக்குள் தன்னைத்தானே தேற்றிக் கொண்டவனாக… மூச்சை இழுத்துப் விட்டவன் எழுந்து தன்னைச் சரிப்படுத்தியபடி… இருசக்கர வாகனத்தை எடுத்தவன்… கண்மணி சென்ற மருத்துவமனையை நோக்கி விரைந்திருந்தான்…
---
கண்மணி என் கண்ணின் மணி-76-2- சில பகுதிகள்
சற்று முன் காற்றுக்கு தவித்த நெஞ்சம்… இப்போது படபடக்க ஆரம்பித்திருந்தது… ஏனோ எல்லாமே திடீரென்று மாறினார் போல ஒரு எண்ணம்… சில மணி நேரம் முன்தான் விக்ரமிடம் பெருமையாக பேசியிருந்தான்… அவன் போட்ட கணக்குகள் எல்லாம் சரியாக நடந்ததென்று..
---
“இப்போ நான் சொல்றதை கேட்பீங்களா மாட்டீங்களா… உங்ககிட்ட ஆர்க்யூ பண்ணிட்டு இருக்கவா… இல்லை என் பொண்டாட்டிய போய்ப் பார்க்க போகவா… சொல்லுங்க… ” என்று ரிஷி சத்தம் போட… அதில் நட்ராஜ் சற்று அடங்க… அவரது முகத்தைத் அழுந்தத் துடைத்தவன்
“நான் பார்த்துக்கிறேன் மாமா… “ என அவரை எழும்ப வைத்தவன்….
---
ரிஷி தன் அன்னையிடம் ஏதும் சொல்லவில்லை… அமைதியாக எழுந்தவன்… கண்மணி படுக்க வைக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்று அவளைப் பார்க்கச் சென்றவன்… அவளருகில் அமர்ந்தான்…
--
“ஏன் உங்க வீட்டுக்கு வேலைக்காரி வேலைக்கு வேற ஆள் உடனே தேட முடியாதா” அர்ஜூனின் ஒவ்வொரு சொல்லும் தேள் கொடுக்காக அவனைக் கொட்ட…
“ஏய்” ரிஷியின் குரலும் உயர… அந்த அறை முழுக்க அவனது குரல் எதிரொலிக்க ஆரம்பித்திருந்தது…
---
“டேய் எங்கடா இருக்கீங்க எல்லாரும்… உள்ள வாங்கடா… இவனை இழுத்து வெளிய போடுங்க…” அலைபேசியில் ஆக்ரோஷத்துடன் அர்ஜூன் கத்த ஆரம்பிக்க… அவனது சத்தத்தில் வெளியே நின்றிருந்த அனைவரும் உள்ளே வர… ரிஷியை கண்மணியின் அருகே விடாமல்… வெளியே பிடித்து இழுத்து வர முயற்சித்துக் கொண்டிருந்தான் அர்ஜூன்…
---
“வராத…. யாரும் வராதீங்க எங்க பக்கத்தில…” கழுத்து நரம்புகள் புடைக்க கத்தியவனின் கைகளில்… அங்கு வைக்கப்பட்டிருந்த கத்தரிக் கோல்…
---
“அவன மட்டும் வெளிய தூக்கிப் போடுங்க… எங்க வீட்டு பொண்ணு மேல ஒரு கை படக்கூடாது… வெயிட் வெயிட்… நான் அவளைத் தூக்கிக்கிறேன்” என கண்மணியின் அருகே போக…
--
அவனோ இவனை எல்லாம் கண்டு கொண்டால் தானே…. வேறெதுவும் கவனத்தில் இல்லாமல் கண்மணியை விடாமல் தன்னோடு வைத்திருக்கும் கவனம் மட்டுமே அவனிடம்….
கிட்டத்தட்ட இல்லையில்லை.. பைத்தியக்காரனைப் போலவே நின்றிருந்த... நண்பனை அதிர்ச்சியோடு பார்த்தவன்…
Nice update