ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
நெக்ஸ்ட் எபி போட்டுட்டேன்...
படிச்சுட்டு கமென்ட்ஸ் போடுங்க... எனக்கு தெரியும் இது அன் கம்ப்ளீட்டட் எபின்னு... அடுத்தடுத்து எபி போட ட்ரை பண்றேன்...
அண்ட் பாடல் வரிகளுக்கும் எபிக்கும் சம்பந்தம் இல்லை... சும்மா நல்லா இருந்துச்சு போட்டேன்... அவ்ளோதான்...
கமெண்ட்ஸ் அண்ட் லைக் போட்ட அனைவருக்கும் நன்றி... நன்றி... நன்றி....
அத்தியாயம் 74
/*பெண்மை கொண்ட கண்மணி உன்னைகண்டுகொண்டாள் இருகண்ணில் வெண்ணிலா அவள்கொண்டு வந்தாள்
இன்ப ராகங்கள் நெஞ்சுக்குள்ளே பொங்குகின்ற பொன் வேளை
உந்தன் கானங்கள் காதலிக்க சொல்லுகின்ற சுப வேளை
கண்ணோடு அடிக்குது மேளம் நெஞ்சோடு தகதிமி தாளம் நம்மோடு குறையட்டும் தூரம் கொண்டாடு வாலிப வாரம்*/
கோடை காலம் ஆரம்பிக்கும் தருணம்… முந்தைய தினம் வரை வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது… ஆனால் அன்றோ… அப்படி இல்லாமல்… காற்றடிக்க ஆரம்பித்திருக்க…. வானமும்… இலேசாக இருட்ட ஆரம்பித்திருந்தது…
“அண்ணி… மழை வருமோ… பலமா காத்தடிக்குது… ” என்றபடியே கேட்டை திறக்க இறங்கினாள் ரித்விகா…
இருவரும் பள்ளியிலிருந்து வீடு திரும்பியிருந்தனர்….
ரித்விகா இறங்கிய போதே…
”என்ன அண்ணி கேட் திறந்து கிடக்கு… எத்தனை தடவை சொன்னாலும் கேட்க மாட்டாங்களே இங்க யாரும்… ஏதாவது உள்ள வந்துருக்கப் போகுது” என்று குரலை உயர்த்திய ரித்வி… திடிரென ஞாபகம் வந்தவளாக…
“அய்யோ… என் செடி… இந்த ஏரியால வேற எருமை மாடெல்லாம் சுத்திட்டு இருக்குமே… புதுசா… மூனு மொட்டு இருந்ததே… காத்து வேற அடிக்குதே… ” கிட்டத்தட்ட அழும் குரலுக்கு போயிருந்தாள்…
பள்ளியிலிருந்து திரும்பி வந்தவள் அத்தனையும் மறந்தவளாக… பைக்கை விட்டு இறங்கி… நேரடியாக தான் வளர்த்த செடியை நோக்கிப் போய்விட… கண்மணியும் வழக்கமாக எப்போதும் நிறுத்தும் இடத்தில் வண்டியை நிறுத்தாமல்… உள்ளே வந்தவுடனேயே நிறுத்திவிட்டு… வீட்டைச் சுற்றிப் பார்க்க… புது மனிதர்கள் வந்தார்ப் போல இல்லை... அதே போல் விலங்குகளும் உள்ளே வந்த தடயமுமில்லை…
விக்கி தனது காரை… அந்தத் தெருவுக்கு வெளியே சற்று தள்ளி… ஒரு கடையின் அருகில் இருந்த இடத்தில் நிறுத்திவிட்டு… இங்கு வந்திருக்க… கண்மணி மற்றும் ரித்விகாவால் அவன் வருகையை எப்படி உணர முடியவில்லை… ரிஷியும் கண்மணிக்கு அலைபேசியில் அழைத்துச் சொல்லவில்லை…
பள்ளி இறுதித் தேர்வு காலம்… கண்மணியும் ரித்வியும் தாமதமாகவே பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்க… கண்மணிக்கு முன்னரே தான் வந்து விடுவோம் என நினைத்ததால் ரிஷியும் கண்மணிக்குச் சொல்லவில்லை… தன் அன்னைக்குச் சொன்னதுடன் நிறுத்திக் கொண்டாப்
ஆனால் அவன் நேரமோ என்னமோ… அன்று கண்மணி-ரித்விகா சீக்கிரமாக வீடு திரும்பியிருக்க…. ரிஷியோ வந்து கொண்டிருந்தான் கண்மணி இல்லம் நோக்கி…
--
தனது பொருட்களையும்… கூடுதலாக ரித்விகாவின் புத்தகப்பையையும் எடுத்து தோளில் போட்டபடியே… தங்கள் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பிக்க… எப்படித்தான் அவளது பாட்டி வைதேகிக்கு இவள் வீடு வருவது தெரியுமோ… கண்மணிக்கு அலைபேசியில் அழைப்பு விடுக்க… எடுத்தவள்…
“ஹம்…. இப்போதான் பாட்டி… “
---
”இன்னைக்கு வரலை… இந்த வீக் வர்றேன்…”
--
“அர்ஜூன் இருக்கார்னு அங்க வராமல் இருக்கேன்னு யார் சொன்னது….”
---
“அப்டிலாம் இல்ல பாட்டி… அர்ஜூனுக்கும் எனக்கும் ஒரு பிரச்சனையுமில்ல…. நேத்து இந்தியா லேண்ட் ஆன உடனே இங்க வந்துட்டேன்னு கூட பேசினாங்களே… நீங்களா ஏதும் போட்டு குழப்பிக்காதிங்க…”
எதிர்முனையில் என்ன பதில் வந்ததோ…
“சரி சரி… முடிந்தால் நைட் வர்றேன்….. போதுமா… இப்போ வைக்கவா” என்று போனை வைத்தவள்… கண்களை மூடிப் பெருமூச்சுவிட்டவள் யோசனையுடன் மெல்ல நடக்க ஆரம்பித்தாள்
வயதான அவளின் பாட்டி-தாத்தா… பணம் … வசதி… வேலைக்கு எத்தனையோ பேர்.. என இருந்தாலும் இவள் மட்டுமே அவர்களின் ஆதாரம்…
இப்போது அவர்களின் வயோதிகம் இன்னும் கண்மணியை அவர்கள் பக்கம் எதிர்பார்க்க ஆரம்பித்திருந்தது… கண்மணிக்கும் புரியத்தான் செய்கிறது… வேலைப்பளு காரணமாக ஒருவாரமாக அவர்களை நேரில் பார்க்கச் செல்லவில்லை…
அவ்வளவுதான் வைதேகி பொறிந்து தள்ளி விட்டார் கண்மணியிடம்…
ஒருபக்கம் தனது தந்தை… இன்னொரு பக்கம் தனது தாயின் பெற்றோர்… இருபுறமும் தனக்கு முக்கியம் என்பதைக் காட்ட முயற்சித்தாலும்… கடைசியில் அதிருப்திதான் மிஞ்சுகிறது…
ரிஷிக்கு இந்த பிரச்சனையும் இல்லை… என்னதான் ரிஷி நட்ராஜ் பார்த்த மாப்பிள்ளை என்றாலும்… ரிஷியை நாராயண குருக்கள் அவர் வீட்டு மாப்பிள்ளையாக ஏற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாமல்… கண்மணியோடு சேர்த்து ரிஷியையும் தங்கள் வாரிசாக நினைக்க ஆரம்பித்திருந்தார்….
இப்போதெல்லாம் கண்மணியை அதிகமாக அவர்களும் தேட ஆரம்பித்திருக்க… புரிந்தாலும் அவளால் முன் போல் அடிக்கடி போக முடியவில்லை என்பதே உண்மை… இதில் அர்ஜூன் வேறு… கண்மணியால் முன்னர் போல அனைவரையும் சமாளிக்க முடியவில்லையா… இல்லை அவளது மொத்த கவனமும் அவள் கணவனிடம் மட்டும் குவிந்து விட்டதா… அவளுக்கே புரியவில்லை…
அதிலும் சில நாட்களாக அவள் உடலளவிலும் சரியாக இல்லாதது போல் தோன்றியது… காலையில் 5 மணிக்கெல்லாம் எழுபவள் இந்த சில வாரங்களாக அப்படி எழ முடியவில்லை… அவள் எழுவதற்கு முன் இலட்சுமியே அனைத்து வேலைகளையும் செய்ய ஆரம்பித்து விடுவார்… கண்மணி சமையலறைக்கும் போகும் போது பாதி வேலைகளை முடித்து வைத்திருப்பார் இலட்சுமி… இது போக… அன்று ரிதன்யாவை இவள் வீட்டை விட்டு வெளியே போகச் சொன்னது இலட்சுமிக்கு வருத்தம்… இருந்தும் அதை மறைத்தபடி கண்மணியிடம் பேசிக்கொண்டிருந்தார்… கண்மணிக்கு அது வேறு குற்ற உணர்வு…
எண்ணங்கள் எங்கெங்கோ சுற்ற ஆரம்பித்திருக்க… அவளை யார் யாரோ தேடினாலும்… அவள் மனம் அவளின் ரிஷிக் கண்ணாவைத் தேட ஆரம்பித்தது… அவளையுமறியாமல்…
அவன் எப்போதும் போலத்தான் இருக்கின்றான்… அவன் -அவன் குறிக்கோள் என அதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றான்… இப்போதும் அவன் ஓயவில்லை… இன்னும் முழு மூச்சோடு போராடிக் கொண்டிருக்கின்றான்…
அன்று இவளை ஊருக்கு போக விடாமல் தடுத்து தன்னோடு வைத்துக் கொண்டவன்… அடுத்த சில தினங்களிலேயே அவளை விட்டுவிட்டு அவனது ஊருக்கு சென்றான்… கண்மணி தடுக்கவில்லை தான்… ஆனாலும் மனம் அவனை வேண்டாம் என்று சொல்லச் சொல்லி அவனைப் போல் பிடிவாதம் பிடிக்க போராடியதுதான்… இருந்தும் அவன் சூழ்நிலை புரிந்தவளாக அவனை விட்டாள்… அடுத்து இங்கு வந்த போதும்… கம்பெனி… ஆதவன் அவன் பிரச்சனை என அதை நோக்கி ஓடியவன்… கடந்த இரண்டு நாட்களாகத்தான் கொஞ்சம் இயல்புக்கு வந்திருந்தான்… கண்மணிக்கும் ஓரளவு எல்லாம் சொல்லி வைத்திருந்தான்… சத்யா தன் தந்தை கம்பெனிக்கு பங்குதாரராக மாற்றப் போவது வரை….
”அண்ணி என்னோட செடி பூ பூத்திருச்சு… மூணு பூ… இன்னைக்கு மட்டும் இது பூக்காமல் போயிருந்துச்சுனா… காத்துல உதிர்ந்து போயிருக்கும்… ” என்றபடியே கண்மணியின் முன் வந்து நின்றாள் ரித்விகா…
சட்டென்று தன் எண்ணங்களை விடுத்து நிமிர்ந்து ரித்விகாவைப் பார்க்க… அவள் கைகளில் அடுக்கு மல்லிகை… ரித்விகா அவள் வளர்த்து வரும் செடியில் இருந்து பறித்து வந்திருந்தாள்…
“இது சாமிக்கு… இது அப்பாக்கு… அப்புறம்… இது உங்களுக்கு” கண்மணியை மறித்தபடி… ரித்விகா தன் கையில் வைத்திருந்த பூக்களை காட்டியபடி சந்தோஷமாகச் சொல்ல…
இப்போது கண்மணி சிரித்தபடியே… “தேங்க்யூ” என்றபடி ரித்விகாவிடமிருந்து அதை கையில் வாங்கப் போக….
“நானே நானே… வச்சு விடறேன்…” என்று கண்மணியின் பதிலை எல்லாம் எதிர்பார்க்காமல் தலையில் வைக்கப் போக…
“அப்புறமா வச்சுக்கறேன் ரித்வி…”
“நீங்க மறந்துருவீங்க” என்றபடி… அவளின் பின்னலின் மேல் வைத்து விட்டவள்..
“சூப்பர் அண்ணி…. இப்போ செமையா இருக்கீங்க…” என்று சந்தோஷமாக துள்ளிக் குதித்தவளிடம்…
”அப்போ முன்ன எப்படி இருந்தேன்…” என்றவாறு ரித்வியை வேண்டுமென்றே கண்மணி வம்பிழுக்க…
“என் அண்ணி எப்போதுமே அழகுதான் … ஆனால் நீங்க இப்போ செமையா இருக்கீங்கன்னு… என் ஃப்ரெண்ட் சொன்னா… அப்புறம்” என்ற போதே முறைத்தவளிடம்… வார்த்தைகளை முழுங்கியவளாக… தயக்கத்துடன் தொடர்ந்தாள் ரித்விகா…
“ப்ராமிஸா அண்ணி… அவ என்ன சொன்னான்னா”
“கண்மணி மிஸ் ஃபேஸ் சம்திங் டிஃப்ஃப்ரெண்டா இருக்குனு… ஷைனா இருக்குனு” அப்பாவியாய்ச் சொன்னவளிடம்
”ஸ்கூல்ல படிக்கிறதத் தவிர… மத்த எல்லாம் பண்ணுவீங்களே… யாரது… உன் ஃப்ரெண்டு… “ என்று கண்மணி விசாரிக்க ஆரம்பிக்க… உடனே உஷாரான ரித்விகா…
“அண்ணி… உள்ள செம வாசனை வருது… அம்மா என்னமோ ஸ்பெஷலா குக் பண்றாங்கன்னு நினைக்கிறேன்… வாங்க வாங்க பார்க்கலாம்…” என்று கண்மணியை இழுத்துக் கொண்டு உள்ளே போக… முகமெங்கும் புன்னகையுடன்… அவளது கணவனின் இளைய தங்கையின் குறும்புகளை ரசித்தபடியே… கண்மணியும் அவளோடு சேர்ந்து உள்ளே நுழைந்தாள்…
இலட்சுமி சமையலறையில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்க… ரிதன்யாவைக் காணவில்லை…. ரிதன்யா சில தினங்களுக்கு முன் தான் வேலையை ராஜினாமா செய்திருந்தாள்… இலட்சுமியுடன் காட்சி தருபவள் இன்று காணவில்லை… கண்மணியும் அவளைப் பற்றி எதுவும் கேட்கவில்லை
“ரிது எங்கம்மா… நீங்க மட்டும் தனியா சமைக்கிறீங்க…” கேசரியை வாயில் போட்டவளாக ரித்விகா ரிதன்யாவைப் பற்றி கேட்க…
கண்மணி ஓரளவு சூழ்நிலையை அனுமானித்திருந்தாள்… ”யாரோ உறவினர் வந்திருக்கின்றனர்”
“யாரு அத்தை வந்திருக்காங்க… 5 மினிட்ஸ்… ரெஃப்ரெஷ் பண்ணிட்டு வந்துர்றேன்… சேர்ந்து பண்ணலாம்” என்றபடி… ரித்விகாவையும்… கையோடுதான் இழுத்துக் கொண்டு போனாள்… அடுத்த சில நிமிடங்களில் அறையை விட்டு வெளியே வந்தவள் தன் அத்தையோடு சமையலில் ஐக்கியமாகி இருக்க…
“கட்லெட்டுக்கு மட்டும் தயார் செய்யனும் கண்மணி…”
“விக்கிதான் வந்துருக்காப்ல… விக்கிக்கு கட்லெட்னா… அதுவும் கேரட் கட்லெட்னா ரொம்ப பிடிக்கும்… எப்போ ரிஷியப் பார்க்க சென்னை வருவேன்னோ… அப்போலாம் கேட்பான்… என் சமையல்னா அவ்ளோ பிடிக்கும் விக்கிக்கு” என்றவர்… கண்மணியின் முகத்தைப் பார்க்கவில்லை… அது மாறிய விதத்தையும் அவர் அறியவில்லை… சமையலில் கவனம் வைத்தபடியே பேசிக் கொண்டிருந்தார்
“ரிஷி போன் பண்ணினானாம்மா” கண்மணியிடம் கேட்க… பதில் இல்லை அவளிடமிருந்து… மௌனம் மட்டுமே….
இப்போது தன் மருமகளின் மௌனம் உணர்ந்த இலட்சுமி கண்மணியின் புறம் திரும்பியவராக…
“உன்கிட்ட சொல்லாமல் இருப்பானா?...” என்று தனக்குத்தானே பதில் சொல்லிக் கொண்டவர் தன் வேலையில் மீண்டும் கவனமாக… ரித்விகாவும் சமையலறைக்குள் வந்திருந்தாள் இப்போது… வரும் போதே…
”யாரு வந்திருக்காங்க… கெஸ்ட் வந்திருக்காங்களா”
”மறுபடியும் உன்கிட்ட வேற சொல்லனுமா” --- இலட்சுமி அலுத்தவராக…
“விக்கி… ரித்விகா…” என்று முடிக்கவில்லை… அவ்வளவுதான்… ரித்விகா சந்தோசத்தில் அவளையுமறியாமல்…
“விக்கி அண்ணனா… நம்ம வீட்டுக்கா… எங்க இருக்காங்க… மாமா வீட்லயா… இல்லை அண்ணா ரூம்ல மாடில இருக்காங்களா” என்றவாறே வெளியேறப் போக… வேகமாக இலட்சுமி தன் மகளை இழுத்துப் பிடித்து நிறுத்தி இருக்க… கண்மணியோ… அதில் எல்லாம் கலந்து கொள்ளாமல்… அவர்கள் புறம் திரும்பாமல்… கேரட்டை வெட்ட ஆரம்பித்திருந்தாள்…
அவளின் கைகள்… அதன் பிடிமானத்தில் இல்லாதது போல் உணர்வு…
’ரிஷி ஏன் விக்கி வருவதை தன்னிடம் சொல்லவில்லை…’ அது மட்டுமே அவளுக்குள் மூளைக்குள் ஓடிக் கொண்டிருந்தது…
‘வேண்டுமென்றே சொல்லாமல் தவிர்த்திருப்பானோ…’ இதைச் சுற்றியே கண்மணியின் எண்ணங்கள்
“என்னம்மா… என்னை விடுங்க… நான் போய் விக்கி அண்ணாவைப் பார்த்துட்டு வர்றேன்… ரிது எங்க… அங்கதானே இருக்கா… அவ மட்டும் உங்களுக்கு ஹெல்ப் பண்ணாமல்… அங்க இருக்கா… ” என்ற போதே…
”போகலாம்… போகலாம்… மெதுவா போகலாம்… இந்த டிஃபன்… காஃபி எல்லாம் யார் கொண்டு போறது…” காரணம் கண்டுபிடித்து இலட்சுமி சொல்ல… ரித்விகாவோ முகம் சுருக்கியவளாக… சலிப்பாக கண்மணியின் அருகே போய் நின்றாள் விறைப்பாக…
அதை இலட்சுமி கண்டு கொண்டாலும்… ரித்விகாவை பெரிதாக எடுக்காமல்
“கையும் ஓட மாட்டேங்குது… காலும் ஓட மாட்டேங்குது… திடீர்னு… விக்கி வந்துருக்கான்னு ரிஷி போன் பண்றான்… அவன் போன் பண்ணின அடுத்த நிமிசத்துல… விக்கியும் வந்து நிற்கிறான்” என்ற போதே… கண்மணியின் மூளை அவசரமாக இலட்சுமியின் செய்தியை உள்வாங்கி அவளுக்கு அனுப்ப… அவளுக்குள் சில்லென்ற உணர்வு… அவள் ரிஷி வேண்டுமென்றே மறைக்கவில்லை… அவனுக்கு சொல்ல அவகாசம் இல்லை… அவன் நண்பன் அவகாசம் கொடுக்கவில்லை…
கண்மணியின் கைகள்… இப்போது கத்தியை இலாவகமாகப் பிடித்தாற் போல உணர்வு…. கைகள் தானாகவே வேகத்தைக் கூட்டி இருக்க…
அப்போது ரித்விகா…
“ம்மா… அக்கா மட்டும் விக்கி அண்ணா கூட பேசிட்டு இருக்கா… நான் இதை எல்லாம் எடுத்துட்டு போகனுமா… அவளயும் வரச் சொல்றேன்… ரெண்டு பேரும் போறோம்” என்று விக்கியோடு சேர்த்து ’அண்ணா’… என்ற வார்த்தையை விடாமல் சொல்ல….
இலட்சுமி… அவள் தலையில் கொட்டியவராக…
“விக்கிய இனி அண்ணான்னு சொல்லாத…” இலட்சுமி சொல்லி முடிக்கவில்லை… கண்மணி சட்டென்று கைகளை உதற…
“என்னம்மா” என்று கண்மணியின் கரங்களைப் பார்த்தபடி பதறி இலட்சுமி கேட்க… சட்டென்று கைகளில் இருந்த பார்வையை மீட்டு மீண்டும் கத்தியை பிடித்தவளாக
“ஒண்ணுமில்ல அத்தை… எடுத்துட்டேன்… வெட்டல ” கண்மணி சொன்ன போதே
அவளருகே நின்ற ரித்விகாவுக்கு வேறு ஏதும் கவனமில்லை… தன் அன்னையின் வார்த்தைகளில் மட்டுமே அவளது மொத்த கவனமும் இருக்க…
“என்னது” புரியாமல் ஆரம்பித்தவளுக்கு… புரிந்தபோதோ… கண்கள் விரிந்திருந்தது…
“ம்மா… உண்மையாவா… அண்ணா அக்காக்கு பார்த்த மாப்பிள்ளை… விக்கி… அண்…” என்றவள்… நாக்கைக் கடித்தவளாக….
“என்ன சொல்லனும்… மணி அக்கா கண்மணி அண்ணி்யா மாறின மாதிரி… விக்கி அண்ணா… அத்தானா… மாமாவா…. என்ன சொல்ல… உன் பெரிய பொண்ணுக்கு ஓகேவா… ரொம்ப சீன் போடுவாங்களே மேடம் “ தன் அன்னையிடம் உற்சாகத் துள்ளளோடு கேட்டுக் கொண்டிருக்க… கண்மணியோ… இருவரிடமும் ஏதும் சொல்லாமல்… அங்கேயிருந்து நகர…
“என்ன அண்ணி…. ரியாக்ஷனே கொடுக்கலை… அண்ணிக்குத் தெரியுமாம்மா” என்ற ரித்விகா கண்மணியைப் பார்க்க… அவளோ சமையலறையை விட்டு வெளியேறி இருந்தாள்…
“உங்க அண்ணிக்குத் தெரியாமல்… உங்க அண்ணா விக்கிய மாப்பிள்ளையா பார்த்திருப்பானா…” தன் மாமியாரின் வார்த்தைகள்…. மெல்ல காற்றில் தேய்ந்திருக்க… ரித்விகாவின் குரம் மட்டுமே இப்போது இவள் காதுகளில்…
“சோ கரடி மாதிரி நான் போயிருப்பேன்னு கைல பிடிச்சு வச்சுருக்கீங்களா… ஆனால் அடிக்கடி நீங்க ஒரு வார்த்தை சொல்வீங்களே… பஞ்சு நெருப்பு… அது இப்போ மறந்து போச்சா… மகிளா வீட்டுக்கு வந்தாலே…. இந்தப் பல்லவிதானே பாடுவீங்க… இப்போ மட்டும் என்ன ஆச்சாம்” ரித்விகாவின் குரல் கண்மணிக்கு தெளிவாக கேட்க… அடுத்து வந்த இலட்சுமியின் அதட்டல் வார்த்தைகள் எல்லாம் இவள் காதுக்கு விழவே வில்லை….
அறைக்குள் சென்றவள் குளியலறைக்குள் சென்று கையால் அழுத்திப் பிடித்திருந்த விரலை விட… விரல் தாண்டி தரையெங்கும் குருதி சிதற ஆரம்பித்திருக்க… கண்மணி வெறித்தபடி நின்றிருந்தாள்… அதைப் பார்த்தபடியே…
“அம்மு… பார்த்தியும் யமுனாவும் லவ் பண்றாங்களாம்… ரெண்டு பேர் வீட்லயும் ஓகே சொல்லிட்டாங்களாம்…” சந்தோஷமாக அவளிடம் பகிர்ந்து கொண்ட ரிஷி தான்… தன் சொந்த தங்கைக்குத் தான் பார்த்த அந்த வீட்டு மருமகனைப் பற்றி ஒரு வார்த்தை கூட அவளிடம் வாயைத் திறக்கவில்லை…
’அந்த விக்ரம்… திடீரென வீட்டுக்கு வந்ததைப்போல… அவன் இந்த வீட்டு மாப்பிள்ளை என்ற முடிவு திடீரென நேற்று இன்று எடுத்த முடிவாக இருக்காது… எப்போதோ முடிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்…”
“ஆனால் ரிஷி ஏன் தன்னிடம் சொல்லவில்லை…”
”சொல்லவில்லை என்பதை விட…. ரிஷி மறைத்திருக்கின்றான்… அதை விட சொல்லாமல் வேண்டுமென்றே தவிர்த்திருக்கின்றான்…”
’காரணம் என்ன என்றும் புரியாமல் இல்லை… தனக்கு விக்கியைப் பிடிக்காது… கண்டிப்பாக தான் ஏதாவது மறுத்துச் சொல்லி விடுவேன்… தான் அப்படி சொல்லி விட்டால்… அதை ஏற்றுக் கொள்ள அவனுக்கு தைரியம் இல்லை… அதனால் சொல்லாமல் இத்தனை நாள் கடத்தி இருக்கின்றான்…
சின்ன விசயம் தான்… ஆம்! விக்கி என்பவன்… அவளைப் பொறுத்தவரை பெரிய விசயம் இல்லை… ஆனால் இதைப் பற்றி ரிஷி சொல்லி இருந்தால் என்ன ஆகி இருக்கும்… இவள் என்ன சொல்லி இருப்பாள் என்று தெரியவில்லை… கோபப்பட்டிருப்பாளா… இல்லை.. ரிதன்யா… அவள் வாழ்க்கை என்று இலேசாக விட்டிருப்பாளா இவளாளுமே சொல்ல முடியவில்லை…
ஆனால்… இங்கு அது முக்கியமில்லை… இத்தனை நாள் தனக்கும் ரிஷிக்கும் இடையே இருந்த பரஸ்பர.. உறவு… அதன் நம்பிக்கை… அத்தனையும் இலேசாக ஆட்டம் கண்டது போல் உணர்வு…
“தன்னிடம் தன் கணவன் மறைத்து விட்டான்…”
“உன்னிடம் எல்லாமே சொல்லி… உன்னோடு வாழ ஆரம்பித்தவன் போல்… இப்போது என்ன கோபம்”
“நீதான் விக்கினு சொன்னாலே மலை ஏறுவியே… அவனோட ஒரு வாரம் பேசாமல் இருந்தவதானே…. அவன் அம்மாக்கே இன்னைக்குத்தான் சொல்லி இருக்கான்… அவனே உன்கிட்ட பேசுவான் இதைப் பற்றி… பொறுமையா இரு… உனக்கு என்ன ஆச்சு இப்படியெல்லாம் யோசிக்கிற… நிதானமா இரு…”
மனசாட்சி அவனுக்கு சாதகமாகப் பேச…. அவளையுமறியாமல் தண்ணீர் குழாயைத் திறக்க ஆரம்பித்திருந்தாள்…
விரல்களை நீர் நனைக்க ஆரம்பிக்க… விரலுடன் மனமும் மெல்ல குளிர ஆரம்பித்திருக்க… கோபம் முற்றிலுமாக போக விட்டாலும்… முதலில் இருந்த அளவுக்கு இல்லை…. கொஞ்சம் மட்டுப்பட்டது போல் மனம் உணர… அவள் செவிகள் உணர்ந்ததோ… கணவனின் இருசக்கர வாகனத்தின் சப்தத்தை…
/*சோலையில் பூங்குயில் பாடிய பாடலில் சுரங்களும் நீதானே பதங்களும் நான் தானே
வாலிபம் மீட்டிய காதலின் வீணையில் சுதிசுதிநீதானே லயம் லயம் நான் தானே
எதிர் காலம் கண்களில்
நான் கண்டு கொண்டேன் அதுஎப்படி உன்னிலே நான்என்னைகண்டேன்
பூங்கொடி ஹோஓ.. உன்பார்வையே போதை தானே
உன் வார்த்தையே கீதை தானே*/
Nice update