ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
அடுத்த எபி போட்டுட்டேன்.... நெக்ஸ்ட் எபி நாளைக்கு வரும்... ரிஷி... ஆதவன்... விக்கி எபிதான் கட கடன்னு படிச்சுட்டு கமெண்ட்ஸ் போடுங்க...
கண்மணி இல்லாத அப்டேட்.... இருந்தாலும் அவ பேர் வராத அப்டேட் இல்லை...
சீக்கிரம் கண்மணி-ரிஷி கூட வர்றேன்
லவ் யூ ஆல்.... பை...
பிரவீணா...
அத்தியாயம் 72
/*பாவம் தீர்க்க ஒரு கேள்வி கேட்க
இங்கு தெய்வம் நேரில் வர வில்லை
பாவம் நேரம் அதற்கில்லை
குற்றவாளிகளின் கொட்டம் தீர
ஒரு சட்டம் ஒத்து வர வில்லை
தர்மம் செத்துவிட வில்லை*/
ஆதவன் உள்ளம் எங்கும் ஆயிரமாயிரம் எரிமலை வெடித்துக் கொண்டிருந்தது.. எப்படி எங்கு தோற்றோம்…. நெற்றி பொட்டு எங்கும் விண் விண் என்று தெறித்துக் கொண்டிருந்தது…
தான் ஏமாற்றப்பட்டோம்… ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம்… இன்னும் பல ஏமாற்றங்கள் காத்திருக்கின்றன… அதிர்ச்சி மட்டுமே அவனுக்குள்… நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தான்…
சற்று முன் தான் வீட்டுக்கே வந்தான்… எப்படி வந்தான் என்றே தெரியவில்லை அப்படி ஒரு நிலையில் தான் வீட்டுக்கே வந்தான்…
“என்ன ஆதவா… நாங்கள்ளாம் கூப்பிட்டு வராத அந்த விக்கிய எப்படியோ பிடிச்சுட்ட…”
அவனது தொழில் முறை நண்பர் ஒருவர் திடீரென நடத்திய சந்திப்பில் கலந்து கொண்ட போது… சக போட்டி நிறுவன அதிபர் அவனிடம் வேண்டுமென்றே வந்து பேச்சு கொடுக்க…
“எப்படியோன்லாம் இல்லை…. விக்கிய ரொம்ப நாளா ஃபாளோ பண்ணிட்டு இருந்தேன்… ரொம்ப கன்வின்ஸ் பண்ணித்தான் சம்மதிக்க வைத்தேன்…” ஆதவன் பெருமையாகச் சொல்ல
“ஆமாமா… பொன் முட்டையிடற வாத்துதானே… மொத்த இன்வெஸ்ட்மெண்ட்டும் இதுல தான் போல… அவ்ளோ நம்பிக்கை… இப்போ அந்த ஆர் கே இண்டஸ்ட்ரிஸும் ஜாயின் பண்ணப் போகுதாமே கேள்விப்பட்டேன்… … லக்கி தான் … உங்க காட்ல மழைதான்… ஹ்ம்ம்ம்… ரிஷியையும் விக்கியையும் காலேஜ் டேஸ்ல இருந்தே நான் ஃபாளொ பண்ணேன் எனக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கலையே… ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரையும் இப்படி உங்க பக்கம் இழுத்திட்டீங்க… ஃப்ரெண்ட்ஸ்னு கூட சொல்ல முடியாது… அந்த ரிஷியோட தங்கையைத்தான் விக்கி ரொம்ப வருசமா லவ் பண்ணாராமே… இப்போ மேரேஜும் ஆகப் போகுதாமே”
ரிஷி… சத்யா மூலம் எடுத்த நடவடிக்கை கனகச்சிதமாக நடந்து கொண்டிருந்தது…
அன்று கல்லூரியில் வந்து ரிஷியைச் சந்தித்த அந்த தொழில் அதிபர்களை சரியாக தங்கள் வலையில் விழ வைத்து… இதோ அவர்கள் மூலம்… ரிஷி- விக்கி பற்றிய தகவல்களை கசிய வைத்துக் கொண்டிருந்தான் ரிஷி…
ஆஸ்திரேலியாவில் ஒரு சிறு விற்பனை பிரிவை அந்த நபர்களுக்கு ஃபேபியோ மூலம் அறிமுகப்படுத்திக் கொடுக்க… அதன் விளைவு… ஆதவனிடம் என்ன பேச வேண்டும் என்று சத்யா சொல்லக் கேட்டு… அதன் படி ஆதவனிடமும் அவர்கள் சொல்லி விட…
இதோ ஆதவன் கொதித்துக் கொண்டிருந்தான்… ரிஷியைக் கூட அவன் விட்டு விட்டான்…
விக்கி… எத்தனை வருடமாக அவனுடன் நட்பில் இருக்கின்றான்… இப்படி ஏமாற்றுவான் என்று மனதால் கூட நினைத்துப் பார்க்கவில்லை… அவனை இவனுடன் கூட்டுச் சேர்க்கவே எவ்வளவு பாடுபட்டான்…
ரிஷி அவனது நண்பனா… எப்படி இந்த விசயம் தெரியாமல் போனது… அவன் படித்தது ஆஸ்திரேலியா… இவன் படித்தது சென்னை… என்று விசாரிக்காமல் விட்டு விட்டேனே…
விக்கியின் ஆரம்ப கால கல்லூரி படிப்பு சென்னை… அதன் பின் தான் ஆஸ்திரேலியா என இப்போது விசாரிக்கு போது தெரிய வந்திருக்க… அதிலும் விக்கியும் ரிஷியும் ஒரே வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தனர்… அந்த அளவுக்கு அவர்கள் நெருக்கம் என்பது இன்னொரு அதிர்ச்சி
அன்று விக்கி எப்படியெல்லாம் பேசினான்… ரிஷியைப் பிடிக்காத விதமாக…
கண்ணில் கண்ட பொருட்களை எல்லாம் தூக்கி விசி எறிந்து கொண்டிருந்தான் ஆதவன்…
ரிஷிக்காவது அவனை பழி வாங்க காரணம் இருந்தது…. ஆனால் விக்கிக்கு… ஒன்றுமேயில்லையே
அப்படி இருந்தும்… நண்பனுக்காக அதுவும் அந்த ரிஷிக்காக… அவனோடு சேர்ந்து தனக்கு துரோகம் செய்கிறானா விக்கி…
யோசித்துப் பார்க்க… எந்த ஒரு இடத்திலும் விக்கியை தவறாகவே நினைத்துப் பார்க்க முடியவில்லை… ரிஷியை அவன் எங்குமே முன்னிறுத்தி பேசியதே இல்லையே… அதே நேரம்… ரிஷியின் தங்கையைக் கல்லூரியில் இருந்தே நேசித்தவன் என்று தான் கேட்ட வார்த்தைகள் அவனுக்குள் ரீங்காரமிட… இதற்கு மேல் ஆதாரம் வேண்டுமா… கண்களில் கோபமும் பழி வாங்கும் வெறியும் வந்திருக்க…
விக்கியின் மேல் தான் அவன் மொத்தக் கோபமும் திரும்பியிருக்க ரிஷி கூட அடுத்துதான் அவனது பழிவாங்கும் வரிசையில் இருந்தான்… முதுகில் குத்திய விக்கியின் துரோகத்தை ஆதவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை…
தன் வெறியை எல்லாம் தனக்குள் புதைத்தவன்… அடுத்த நிமிடம் விக்கிக்குத்தான் அலைபேசி அழைப்பை விடுத்திருந்தான்…
விக்கிக்குத்தான் ஏற்கனவே ரிஷி எச்சரிக்கை விடுத்திருந்தானே… விக்கியும் சுதாரித்துக் கொண்டவனாக… சாதாரணமாக அழைப்பை ஏற்க
ஆதவனோ தன் உள்ளக் கொந்தளிப்பை… ஆவேசத்தை எல்லாம் மறைத்தவனாக
“விக்கி …. எப்போ இந்தியா வர்ற”- ஆதவனும் இயல்பாக ஆரம்பிக்க…
“2 வீக்ஸ் ஆகும்னு நினைக்கிறேன் ஆதவன்… என்ன விசயம்… ஏதாவது முக்கியமான விசயமா”
“ஹ்ம்ம்… பார்ட்னர்ஷிப் விசயமா நெக்ஸ்ட் வீக்கே டிசைட் பண்ணனும்… வர முடியுமா” ஆதவன் வேண்டுமென்றே சொன்னான்
“புரியல ஆதவன்…. என்ன ஆச்சு”
“அந்த ஆர் கே இண்டஸ்ட்ரீஸ் பார்ட்னர்ஷிப் வேண்டாம்னு இப்போ தோணுது…” ஆதவன் நிறுத்த எதிர் முனையிலோ பலத்த மௌனம்…
ஆதவன்… பல்லைக் கடித்தபடி… விக்கியின் பதிலுக்காக காத்திருக்க
“ஓ… அப்போ அந்த ரிஷியோட அப்பா கம்பெனியை அவன்கிட்டயே கொடுத்து சைன் போட்டது கூட இந்த பார்ட்னர் ஷிப்புக்காத்தானே… அதெல்லாம் பண்ணிட்டு… இப்போ என்னாச்சு… உங்க சைட்ல இருந்து இவ்ளோ ரிஸ்க் எடுத்தீங்க… உங்க அப்பாக்கு கூட அதெல்லாம் பிடிக்கலையே… அவரையே எதிர்த்துகிட்டு பண்ணுனீங்க… இப்போ என்னடான்னா இப்படி பேசுறீங்க..” என்றபடியே….
“எதுவோ… உங்க இஷ்டம்… எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை… நட்ராஜ்லாம் பெரிய விசயமே இல்லை… அவர் பிரச்சனை பண்ணக் கூடாது அவ்ளோதான்… அதோட எனக்கு என்னோட ஷேர்ஸ் முக்கியம்… அவ்ளோதான்… அதுக்கப்புறம் உங்க டெஷிசன்… ரொம்ப இம்பார்ட்டண்ட்னா நெக்ஸ்ட் வீக் வர ட்ரை பண்றேன்…” கொஞ்சம் கூட அதிராமல் வெகு வெகு சாதாரணமாக சொல்லி விட்டு விக்கி வைத்து விட்டான்…
”எப்படி நடிக்கிறான்… ராஸ்கல்….” தனக்குள் கருவிக் கொண்டிருந்தவனின் எண்ணம் விக்கியை விடுத்து அடுத்து ரிஷிக்குத் தாவியது..
எப்படியெல்லாம் அந்த ரிஷி காய்களை நகர்த்தி இருக்கின்றான்… கடைசியில் அவனுக்குத் தேவையானதை வாங்கிக் கொண்டது இல்லாமல்… ஆட்டைக் கடித்து… மாட்டைக் கடித்து…. கடைசியில் மனிதனைக் கடித்து என்பதற்கேற்ப என்னுடைய தொழிலும் அவன் தலையீடு செய்து என்னை தோற்கடிக்க முயல்கிறானா????…
எனக்கும் அவனுக்கும் பகையே இல்லை… என் தந்தையோடுதான் அவனது கோபம் எல்லாமே…. என்று நினைத்துக் கொண்டிருக்க… ஆனால் அவனது முழு திட்டமும் என்னை வைத்தே என்றால்…. என்னை பழி வாங்க நினைக்கின்றானா??… என் தந்தை… அவன் தந்தையின் கம்பெனி… இதையெல்லாம் விட்டுவிட்டு அவன் தந்தைக்கு நடந்த துரோகத்துக்கு திரை மறைவில் காரணமாக இருந்த என்னை நோக்கி வருகிறான்… அந்த ரிஷி…
இளக்காரமாக தனக்குள் சிரித்துக் கொண்டான் ஆதவன்…
“உன்னை கவனிக்கிறேன்… ஆனால் முதலில் அந்த துரோகி விக்கி… அதன் பின் தான் நீ”
ரிஷியை விட்டு விட்டு விக்கியை நோக்கி அவன் பழிவாங்கும் படலம் ஆரம்பிக்க காரணம்… விக்கிதான் அவன் முதல் கோபம் என்பதால் மட்டும் அல்ல… ரிஷியின் மேல் எடுத்த உடன் கை வைப்பது என்பது அவ்வளவு சாதாரணம் அல்ல… காரணம்… ரிஷியின் தற்போதைய பின்புலம்… அவன் மனைவி… அந்தக் கண்மணி… தொழில் அரசியல்.. பணபலம் என அனைத்துத் வகையிலும் செல்வாக்கான பெரும்புள்ளி நாராயண குருக்களின் ஒரே வாரிசு அந்த பெண்… அவளுக்கு ஒன்று என்றால்… அவளுக்கு ஒன்று என்றால் அவ்வளவுதான்…. நாராயண குருக்களின் கோபம் இவன் பக்கம் திரும்பி விடும்… அவரிடம் விரோதம் சம்பாதிப்பது தான் இருக்கும் இப்போதைய சூழலில் தனக்கு அது நல்லது அல்ல….
நாராயண குருக்கள்-அர்ஜூன் – கண்மணி இவர்களைப் பற்றி தெரிந்தவனாக ரிஷியின் மேல் கை வைக்க வேண்டாம் என்று முடிவெடுத்தவன்.. விக்கியைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான்….
ரிதன்யா-
விக்கி என்றதும்… அவன் காதலி என்று சொல்லப்படும் அந்த ரிஷியின் தங்கைதான் அவனது நினைவில் வந்து நிற்க… கல்லூரியில் படிக்கும் வயதில் இருந்தே காதலா…. அவள் என்றால் அவ்வளவு பிடிக்குமா அவனுக்கு… ரிதன்யாவைப் பற்றி யோசித்த போதே… ரிஷியின் தங்கை என்பதும் ஞாபகத்துக்கு வர… ரிதன்யாவும் ரிஷியின் குடும்பம் தானே… ரிஷிக்கோ… ரிஷியின் தங்கைக்கோ… என யாருக்கு பிரச்சனை வந்தாலும் கண்மணிக்கும் அது பிரச்சனைதான்… மீண்டும் கண்மணி தடங்கலாக அங்கு வந்து நிற்க… ரிதன்யாவை வைத்து இப்போது விக்கியை மிரட்ட முடியாது…
அப்படி என்றால் வேறு என்ன செய்வது… என்ன செய்வது… அவன் தன் போக்குக்கு வரவில்லையென்றால்…. அந்த விக்கிக்கு தான் யாரென்று காட்ட வேண்டும்……
யோசித்த போதே… அவன் கண்களில் மின்னல்…
”கண்மணி” – ஒரே பெயர்…
ரிஷியின் மீது அவனது குடும்பத்தின் மீது கைவைக்க தயங்குவதற்கு கண்மணி என்ற பெயர் காரணம் என்றால்… ’விக்கி’ அவன் என்ன அந்த விக்கியின் குடும்பத்தையே தன் காலடியில் கொண்டு வர ’கண்மணி’ என்ற அதே பெயர் போதுமே
கண்மணி… விக்கி குடும்பத்தின் தற்போதைய பெரும் சந்தோசத்தின் அஸ்திவாரம்… ’கண்மணி’ என்ற இரண்டு வயது குழந்தை…. விக்கியின் அண்ணன் வாரிசு… அந்த குழந்தைக்கு ஒன்று என்றால் அந்த குடும்பமே துடித்துப் போகும்… வேறு வழியே இல்லை… விக்கி தானாக தன் வழிக்கு வருவான்… அவன் வந்த பின் அவனை வைத்தே அந்த ரிஷியின் கொட்டத்தையும் அடக்குவேன்
ஆதவனுக்கு தெளிவு பிறக்க…. அவன் கண்களில் தீர்க்கம் வர… அடுத்த நொடி ரிஷியை அழைத்தான்…
---
”சொல்லுங்க ஆதவன்” ஆதவனின் அழைப்பை ஏற்ற ரிஷி எதுவுமே தெரியாதவன் போல்… பேச ஆரம்பிக்க
“நம்ம பார்ட்னர்ஷிப் டீட் பற்றி பேசனும்… அதுல சேஞ்சஸ் பண்ண வேண்டி இருக்கு… விக்கிகிட்ட பேசிட்டேன்…. உன் கிட்டயும் பேசனும்… மீட் பண்ணனும்” என்ற போதே
பதில் சொல்லாமல் மௌனித்த ரிஷியின் செயலில்
“என்ன ரிஷி யோசிக்கிற… சந்தேகமா… மீட் பண்ண தயங்குறியா… இல்லை பயமா” ஆதவன் நக்கலாகக் கேட்க…
ரிஷியோ
“சந்தேகமும் இல்லை… தயக்கமும் இல்லை… அண்ட் பயமும் இல்லை… நான் உன்னை மீட் பண்றப்போ தெரியும்… “
“ஓ…. அப்படியா…. என்னோட ஈசிஆர் பங்களா அட்ரெஸ் தெரியும்தானே… அங்க வந்துரு… நாம பேசலாம்… “
ரிஷி புன்னகைத்தபடியே….
“டாக்குமெண்ட்ஸ்லாம் எடுத்துட்டு சீக்கிரம் பார்க்க வர்றேன் ஆதவன்….” சொல்லி முடிக்கவில்லை
”வாட்” என அந்த அறை முழுக்க அதிர கத்தியவனின் குரலில்…. இந்தப்புறம் ரிஷி காதைத் தேய்த்தவனாக…
“ப்ச்ச்… நான் என்ன சொல்லிட்டேன்னு இவ்ளோ சத்தம் ஏன்…” ரிஷி தன் இருக்கையில் ஓய்வாகச் சாய்ந்தபடி கேட்ட தொணியில் நக்கல் மட்டுமே
“டேய் என்ன…. உன்னைலாம்… ஒரு ஆளான்னு நெனச்சேன்… பரவாயில்லை…. பார்த்துக்கிறேன்… என்ன என்ன சொன்ன நீ டாக்குமெண்ட்ஸ் எடுத்துட்டு வர்றியா… உனக்கே இது ஓவரா இல்லை… நாளைக்கு என் பங்களாக்கு உன் முதலாளி அந்த நட்ராஜோட வர்ற… நான் காட்டுற பத்திரத்தில நான் சொல்ற இடத்துல எல்லாம் உன் முதலாளிய சைன் போடச் சொல்ற… அதோட உனக்கும் எனக்கும் உள்ள டீலிங்க முடிச்சுக்க… அப்புறம் உன் அப்பன் ஃபேக்டரிய நான் உனக்கு போட்ட பிச்சைனு வச்சுக்கறேன்… பொழச்சுப்போ” என்று ஆதவனும் ரிஷி தன்னிடம் பேசிய அதே தொணியிலேயே பேச
ரிஷியோ விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்திருந்தான்…. ஆதவன் பேசப் பேச… அவன் பேச்சைக் கேட்டு
ரிஷியின் இடைவிடாத சிரிப்பில் ஆதவனின் கோபம் எகிற…
“சிரி சிரி… நீ இன்னைக்கு இருக்கிற இடம் அந்த மாதிரி… இல்லை… உன்னையெல்லாம்” ஆதவன் கடுப்போடு சொல்ல…
“என் மேல கை வைக்க அவ்ளோ யோசிக்கிறியா நீ… அவ்ளோ பயமா உனக்கு” ரிஷி இப்போது சிரிப்பை விடாமல் இருக்க
“ஹான்… எல்லாம்… ’கண்மணி’ அந்த பேர் தந்த இடம் தானே உனக்கு… இவ்ளோ ஆட்ற” ஆதவன் சொல்லி முடிக்கவில்லை… ரிஷியின் முகம் சட்டென்று கருக்க…
“ஏய்… தேவையில்லாமல் அவள ஏன் இழுக்கிற” என்ற போதே ரிஷியின் குரலில் படபடப்பு வந்திருக்க
“என்ன குரல் நடுங்குது… உண்மைதானே அந்த கண்மணி அவ அப்பா நட்ராஜ்… அவ தாத்தா… பாட்டி யாருனு அவங்க பலம் என்னன்னு தெரிஞ்சுதானே… கால்குலேஷன் பண்ணித்தானே அவள மேரேஜ் பண்ணிருக்க.. இதெல்லாம் நீ காதலித்த மகிளாகிட்ட இல்லைனுதானே… அவளத் தூர தூக்கிப் போட்டுட்டு… இவ பின்னாடி போன… நீ போட்ட எல்லா பிளானும் கரெக்டா ஒர்க் அவுட் ஆகிருச்சுனு சந்தோசப்படாத…. இனிமேலதான் உனக்கு எல்லாமே…” ஆதவனும் ரிஷிக்கு சரிக்கு சரி போட்டியாகப் பேசியவனிடம்
ரிஷி இப்போது சுதாரித்தவனாக
“ப்ச்ச்… ஆமாம்… அப்டியேதான்னு வச்சுக்கோ…. அது என் பொண்டாட்டிக்குமே தெரியும்… என்ன மிரட்டிப் பார்க்கிறியா…
ரிஷியின் குரலில் இப்போது ஏளனம் இல்லை… ஒரு விதமான கடினத்தன்மை வந்திருக்க…
“ நீ என்கிட்ட பேசிட்டு இருக்க… என்கிட்ட நேரடியா மோதத் தைரியம் இல்லை உனக்கு… அதுதான் உண்மை… வீட்ல இருக்கிற பொண்ணுங்க வழிய என்கூட மோதுற ” எனும் போதே ரிஷிக்கும் குற்ற உணர்வுதான்… அவன்கூட யமுனாவை வைத்துதானே திருமூர்த்தியை பணிய வைத்தது…
இருந்தும் சமாளித்தவனாக பேசியாக வேண்டிய நிலை… பேசிக் கொண்டு இருக்க
“நான் அப்படிதாண்டா… பெரிய கண்மணி…. இல்லைனா என்ன… சின்னக் கண்மணி… “ எக்காளமிட
ரிஷிக்குப் புரியவில்லை… அவன் என்ன சொல்ல வருகிறான் என்று…
தங்களுக்குத்தான் குழந்தையே இல்லையே…. அது யார் சின்னக் கண்மணி… யோசித்தாலும் ஒன்றும் புரிபடவில்லை.. ஆனாலும் மனதுக்குள் குறித்துக் கொண்டவனாக
“சீக்கிரம் மீட் பண்ணலாம் ஆதவன்… அப்போ நிறைய பேசலாம்… டாக்குமெண்ட்ஸ்ல… ஐ மீன் நான் கொண்டு வரப் போகிற டாக்குமெண்ட்ஸ்ல… ” என்ற போதே
”ஏய்” ஆதவன் மீண்டும் கர்ஜிக்க…
“பாஸ்…. பாஸ்… வெயிட் வெயி்ட்.. இதைச் சொல்ல மறந்துட்டேன்…. உங்க ஈசிஆர் பங்களால கூட நம்ம மீட் இல்லை… ப்ளேஸ் வேற இடம்… அதையும் நான் எப்போதோ தீர்மானம் பண்ணிட்டேன்…. அதையும் நோட் பண்ணிக்கங்க” என்று திருத்த
“என்னடா… ரொம்ப எகிறுற… உன்னை” என்றவனின் குரல் ரிஷியை வந்தடைவதற்கு முன்னமே … ரிஷி அழைப்பைத் துண்டித்திருந்தான்…
/*உனக்கும் எனக்கும் கணக்கு வழக்கு நடந்ததும்
முடிக்க போகிறேன்
அடக்க போகிறேன்
சிறுத்தை ஆகிறேன்
ஜெயிக்க போகிறேன்
தேதி இன்று குறித்தேன்*/
ஸ்னிபெட்ஸ் ஆஃப் நெக்ஸ்ட் எபி...
“ஷ்ஷ்… 40 வயசுக்கு மேல டென்ஷன் ஆனா… ஆயுசு குறஞ்சுடுமாம்… பார்த்து ஆதவன்… நீங்க இன்னும் சின்னப் பையன் இல்லை… இப்போதே பிபி சுகர் லாம் இருக்குனு கேள்விப்பட்டேன்… உடம்பை பார்த்துக்கிறது இல்லையா” ரிஷி பாசமான குரலில் நீட்டி முழங்க…
---
“ரிஷி… ஜெயிச்சுட்டேன்னு நினைக்காத… ஆடுறியாடா… உன் ஆட்டம் சீக்கிரம் அடங்கும்… நானும் பார்க்கத்தான் போறேன்…” அவன் கத்த
---
தனசேகருக்கு தான் மகனாகப் பிறந்ததை விட… சத்யா என்பவன் அவரது காரியதரிசியாக கிடைத்தது தான் அவர் முன் ஜென்மத்தில் செய்த புண்ணியமாக இருக்கும் போல…
தனக்குள் புன்னகைத்துக் கொண்டவன்.. இன்னுமே சத்யாவையேப் பார்த்துக் கொண்டிருந்தவன்… அந்தப் புன்முறுவலோடே… பார்த்திபனிடம் கை நீட்ட… பார்த்திபனும் அந்தக் கோப்பைக் கொடுக்க…
---
“ஆர் கே… இதெல்லாம் … ரொம்ப பெரிய அங்கீகாரம் எனக்கு…. சார்க்கு நீதி கிடைக்கனும்… அதான் என்னோட ஒரே நோக்கம்…” என்ற போதே
---
“ஆமாடா… என்னைப் பார்க்க நீயும் ஓடோடி வந்திருப்ப… நம்பிட்டேன்.. நண்பனை பார்க்க வர்றதுன்னா… இங்க தானே வந்திருக்கனும்… நீங்கள்ளாம் யார்னு தெரியாதா.. ஃபிகர்னா ஃப்ரெண்டக் கழட்டி விடற ஆள்தானே…. என் தங்கச்சிய பார்க்க வந்துருப்ப… அதைச் சொல்லாமால் எவ்ளோ சீன் போடற” எனும் போதே
---
“டேய்… உன் ஃப்ரெண்டா இந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வைக்கவா… இல்லை உன் மச்சானா காலடி எடுத்து வைக்கவா… வலது கால் எடுத்து வச்சு போகவா… முதன் முதலா வர்றப்போ தான்… எல்லாம் தப்பாகிருச்சு… அப்போ ஒரு வேளை வலது காலை எடுத்து வைக்கலையோ என்னவோ” விக்கி சொல்லிக் கொண்டிருக்க…
Lovely update