அத்தியாயம் 71
Hi friends,
Hope all are fine... and thanks for keeping your support and encouragement regarding this story.
Please adjust if you find any Spell mistakes and sentence formation
இன்னொரு விசயம்... கதைல சில சந்தேகமும் கேட்ருந்தீங்க... கண்டிப்பா... கதையை ரீரைட் பண்ணுவேன்... அப்போ லாஜிக் மிஸ்ஸாகிற இடமெல்லாம் சரி பண்றேன்... தேங்க்ஸ் ஃபார் ஆல் ஆஃப் யுவர் சப்போர்ட்...
bye...
Varuni
/*அம்மம்மா சரணம் சரணம்
உன் பாதங்கள்
அப்பப்போ தரணும் தரணும்
என் தேவைகள்
அடி ராதா தெரியாதா
இளம் போதை
புது ராதா தொடராதா
அதன் பாதை
கொடுத்தால் நான் எடுத்தால்
தேன் வடியாதா*/
”சத்யா… இந்த இடத்துக்கு வந்து நிற்கவே… இவ்ளோ நாள் ஆகி இருக்கு நமக்கு” காரின் மேல் சாய்ந்து நின்றபடியே தன் அருகே நின்று கொண்டிருந்த சத்யாவிடம் கேட்டவனின் பார்வையோ சற்று தொலைவில் இருந்த மூடப்பட்டிருந்த அவனது தந்தையின் தொழிற்சாலையின் மேலே இருந்தது…
இலட்சுமி குலதெய்வ வழிபாடோ என்னவோ… அடுத்த வாரத்திலேயே ரிஷியும் தனது பிறந்த ஊரில் நின்றிருந்தான்…
ஃபேபியோ… அவரது நிறுவனத்தின் இந்திய பிரி்வுக்கு… ரிஷியை தொழில் பங்குதாரராக மாற்றியிருக்க… அது ரிஷியே எதிர்பாராத நிகழ்வு.. ஒரு புறம் நாராயண குருக்கள்… இன்னொரு புறம் நட்ராஜ்… என அவனை வாரிசாக்க நினைத்து காத்திருக்க… அதையெல்லாம் தவிர்த்து விலகி வந்தவன் தான் ரிஷி… ஏன் அவன் தந்தை அவனுக்காக ஒதுக்கி வைத்த பங்கைக் கூட எடுக்காமல்… தனது தங்கைகள்… அன்னை பெயரில் போட்டுவிட்டு வைராக்கியமாக வாழ்ந்தவன் தானே…
தன் தந்தையின் தொழிற்சாலையை மீட்க… பணத்தை விட…. தந்திரமே தேவை என்பதை அறிந்து… அதற்காக பாடுபட ஆரம்பித்தவனை நோக்கி அனைத்துமே திரும்பி வர… கூடுதலாக… ரிஷி திரும்பிய இடமெல்லாம் பணமழையும் இப்போது…
அதிலும் ஃபேபியோ அவனிடம் அவரது கம்பெனியின் இந்திய பிரிவுக்கு பார்ட்டனராக கேட்டபோது… அதுவும் அவரது கம்பெனியின் இந்திய காலூன்றலுக்கு இவன் தேவைபடுகிறான் என்று உதவி வேண்டியும் கேட்க… ரிஷியாலும் மறுக்க முடியவில்லை… அதன் விளைவு… இவன் கணக்கில் பெருந்தொகை முதலீடாக வந்திருக்க… முதல் வேலையாக… தன் தந்தையின் முடங்கிய சொத்துக்கள் அனைத்தையும் மீட்க ஆரம்பித்திருந்தான் ரிஷி…
அதன் பொருட்டு… தன் பிறந்த ஊரும் வந்திருந்தான்… சத்யாவும் அவனோடு வந்திருந்தான்… இருவருமாக தொழிற்சாலையின் முன் நின்று கடந்தகாலத்தின் சுவடுகளின் நினைவுகளின் தாக்கத்துடன் பேசிக் கொண்டிருந்தனர்…
ரிஷ்யின் வருத்தம் தோய்ந்த வார்த்தைகளைக் கேட்ட சத்யா…
“அது எதுக்கு ஆர் கே இப்போ… கூடிய சீக்கிரம் இது நம்ம கைக்கு வரப் போகுது… அதை நினைத்து பெருமைப்படுங்க… தனசேகர் சார் நம்மோட இல்லை அதுமட்டும் தானே வருத்தமே தவிர… மத்தபடி நீங்க சாதிச்சிருக்கீங்க ரிஷி, அதை யோசிங்க…. பெருமைப்படுங்க அதுவும் தனியாளா நின்னு” என்ற சத்யாவைப் பார்த்தவன்…. புன்னகைத்தபடியே… மறுத்து தலையாட்டியவன்…
தன் மொத்த நன்றியுணர்வையும் தன் பார்வையாலேயே காட்டியவன்
“நீங்கதான் சத்யா எல்லாத்துக்கும் காரணம்… நீங்க இல்லைனா எதுவுமே இல்லை… உங்க சப்போர்ட் அதுதான் இது எல்லாத்துக்குமே அடிப்படை சத்யா… அப்புறம் நட்ராஜ் சார்… ஃபேபியோ… இப்போ பார்த்திபன்… ம…” என்று ஆரம்பித்தவன்… நிறுத்தியபடி இப்படி எல்லோருமே எனக்காக எவ்ளோவோ பண்ணி இருக்கீங்க… நான் ஒருத்தவன் மட்டுமே இதைப் பண்ணிருக்கேன்றதுலாம் அபத்தம் சத்யா” என்ற போதே பார்த்திபனும் அங்கு வந்து சேர்ந்திருக்க… கூடவே அவனுடன் யமுனாவும்…
பார்த்திபன்… இரண்டு நாட்கள் முன்னதாகவே வந்து ரிஷியின் கணக்கு வழக்குகளை எல்லாம் முடித்து வைத்திருந்தான்… யமுனா வீட்டில் தங்கி இருந்துதான் எல்லா வேலைகளையும் முடித்திருந்தவன்… ரிஷியின் வருகைக்காக காத்திருக்க…
ரிஷி வந்ததும் அவன்…. வரச் சொன்ன இடத்திற்கும் வந்து சேர்ந்தான்
“எல்லாவற்றையும் பார்க்கலாமா ரிஷி… இன்னைக்கே சைன் போட்டால் கூட… சில பிராப்பர்ட்டிஸ் உங்க கைக்கு வந்து விடும்… ஒரு ஒன் வீக்ல எல்லா வேலையும் முடிஞ்சுரும்… முக்கியமா உங்க வீடு உடனடியா உங்களுக்கு கிடைக்கிறதுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணிட்டே இருக்கேன்,” என்று பார்த்திபன் அவனிடம் சொல்லிக் கொண்டிருக்க…
கவனமாக கேட்டுக் கொண்டவனாக…
“ஹ்ம்ம்… தேங்க்ஸ் பார்த்தி…. அம்மாக்கு அந்த வீடு முக்கியம்… அப்பா அவங்களுக்காக பார்த்து பார்த்து கட்டின வீடு… என்னால முடிஞ்சது… விற்காமல் அடமானம் வைத்து பார்த்துக் கொண்டதுதான்… மீட்க முடியுமான்னுலாம் அப்போ தெரியாது.. அதைப் பற்றியும் அப்போ திங்க் பண்ணலை… ஏதோ ஒரு வேகத்தில அப்பா மேல இருந்த கோபத்துல என்னென்னவோ பண்ணி..” என்று பேச ஆரம்பித்தவன்… கண்களை மூடி தன் ஆதங்கத்தை எல்லாம் சீரணித்தவனாக… இனி நடக்கப் போகும் விசயங்களை நினைத்தபடி
”எல்லாம் ட்ராஃப்ட் பண்ணிட்டீங்களா பார்த்தி… “ ரிஷி வினவ…
‘உங்க அப்பாவோட அத்தனை ப்ராபெர்ட்டிஸும் ஆட் பண்ணிட்டேன்… ஃபேபியோவோட உங்க காண்ட்ராக்ட்… நட்ராஜ் சாரோட பிஸ்னஸ்… தென்… அதுக்கான டாக்குமெண்ட்னு உங்க இன்கம்முக்கு ஆதாரமா எல்லாமே பக்காவா ஆடிட்டர் கிட்ட இருந்து ஃபைல் பண்ணி வாங்கியாச்சு… இந்த ஃபேக்டரி மட்டுமே கோர்ட்ல இருந்து ஆர்டர் கிடைக்கனும்… அதைத் தவிர மற்ற அனைத்தையுமே…உங்க பேர்ல மாத்துறதுல எந்தப் பிரச்சனையும் இல்லை… ரிதன்யா ரித்விகா உங்க அம்மா பேர்ல அல்ரெடி எல்லா பாகமும் பிரிச்சு பணமா இருக்கிறதுனால அவங்க சைட் பிராப்ளமும் சால்வ்ட்… இன்னும் ஏதாவது பண்ணனும்னா அது நீங்க உங்க குடும்பத்துக்குள்ள பார்த்துக்கங்க…” என்று தன்னிடமிருந்த பேப்பர்களை பார்த்திபன் ரிஷியிடம் நீட்ட.. ரிஷியும் அதை வாங்கிக் கொண்டபடி…
”தேங்க்ஸ் பார்த்தி… திருமூர்த்தி அண்ட் கேசவன் ஷேர் அமவுண்ட்டயும் இங்க செட்டில் பண்ணிக் கொடுத்ததுக்கு… ஆதவனும் சைன் போட்டுட்டான்… கோர்ட்ல இருந்து ஆர்டர் மட்டும் பெண்டிங்க்“ என்றவன் சத்யாவிடம் திரும்பி…
“அது கூட… ஃபேக்டரி ஓபன் பண்ணக் கூடாதுன்னு… நாம போட்ட கேஸ்னால தான் டிலே… “கட்டை விரலால் நெற்றியை நீவியபடியே சொன்னவனின் வார்த்தைகளில் விட்டேற்றியான தன்மை இருக்க
“ஏன் ரிஷி… உங்க முகத்துல சந்தோசமே இல்லை...” சத்யா கேட்க… பார்த்திபனின் முகமும் அதையே பிரதிபலிக்க
ரிஷியின் இதழில் சிறு கீற்றலாக மட்டுமே புன்னகை….
”சந்தோசமாத்தான் இருக்கேன்… புலி வாலை பிடித்த கதையா… எதை நோக்கி ஓடினேனோ… அது எல்லாமே என்கிட்ட வரப் போகுது…. அவ்ளோதான்… ”
என்றவன்…
“இந்த ஆறு வருசமா… நான் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியிலயும் … என் அப்பா.. அவர் ஏமாந்த இந்த ஃபேக்டரி… அவரோட மரணம்… அப்புறம் என் குடும்பம்… இதுதான் என்னோட மைண்ட்ல இருக்கும்… அதை டிஸ்ட்ராக்ட் பண்ண எல்லாத்தையும் அவாய்ட் பண்ணேன்… எனக்கான சந்தோசம் எல்லாமே என் குடும்பம்னு இருந்தேன்…” தொழிற்சாலையின் மேல் மொத்தமுமாக விழுந்திருந்த அவனது கண்கள் அதை விட்டு விலகி
”இனி எங்களுக்காக வாழனும்னு நினைக்கிறேன்….” சொன்னபோது அவனது கண்களில் மட்டுமல்ல எண்ணம் நினைவுகள் அனைத்தும் அவன் கண்மணியின் முகம் மட்டுமே…
கண்மணியின் நினைவின் காரணமாக… ரிஷியின் கண்களில் வந்திருந்த பளபளப்பு… யமுனாவிடம் பிரதிபலித்தது
“கண்மணியை… கூட்டிட்டு வந்திருக்கலாம்ல ரிஷி… ”
“ஹ்ம்ம்… எல்லாம் பக்காவா க்ளியர் ஆகட்டும்…” என்று மட்டும் சொன்னவன்… சட்டென்று பேச்சை மாற்றும் விதமாக…
”யமுனா… நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டதே இல்லை… கேட்கவும் போறதில்ல… உங்க அப்பாவை டார்கெட் பண்ண உன்னை யூஸ் பண்ணிகிட்டேன்… தப்புன்னு தெரியும்… தெரிந்தேதான் செய்தேன்… அதுனால மன்னிப்பு கேட்கத் தோணலை… ஆனால் நாம பண்ணின பாவ புண்ணியம் எல்லாத்துக்கும் கண்டிப்பா பதிலடி இருக்கும்… அது எனக்கும் கிடைக்கும்… என்கிட்ட இருந்து உனக்கு ஒரே ஒரு அட்வைஸ்தான்… நீ பண்ணினது காதல்னு உன் வாழ்க்கையை வீணடிச்சுராத… ” ரிஷி சொன்ன போதே
“பாஸ்… அந்த அட்வைஸ்லாம் இவளுக்கு வேண்டாம்… சீக்கிரம் மேடத்தை எங்க வீட்டுக்கு வர்றதுக்கு அட்வைஸ் கொடுங்க” பார்த்திபன் தடாலடியாக சொல்ல… யமுனாவின் முகத்திலோ வெட்கம்…
ஆச்சரியத்தி்லும்… சந்தோசத்திலும்… நிம்மதியிலும் ரிஷியின் கண்கள் விரிய… சத்யாவின் முகத்திலும் அந்தப் புன்னகை பரவியது….
“ஹேய்.. பார்த்தி… சொல்லவே இல்லை… நீங்க எங்க ஊர் மாப்பிள்ளையா மாறப் போறிங்களா… முதல்லயே சொல்றது இல்லையா… இது எவ்ளோ நாளா ” ரிஷி பட படவென்று சந்தோசமாகக் கேட்க ஆரம்பிக்க
“அதெல்லாம் ரொம்ப நாளா… ” என அவன் யமுனாவை அம்பகம் பள்ளியின் அருகில் பார்த்த நாளை ரிஷிக்கு நினைவு படுத்த….
இருவரையும் மனதார வாழ்த்தினான் முகமெங்கும் புன்னகையோடு
“எங்க ஊர்ப் பொண்ணு…. ரொம்ப பதவிசான பொண்ணு… அப்பாவிப் பொண்ணு… பத்திரமா பார்த்துக்கங்க பார்த்தி…”
ரிஷியின் வார்த்தைகளைக் கேட்ட… யமுனாவின் கண்களிலோ கண்ணீர்த் துளி…
“ரிஷி… ஹர்ஷித்தை எங்க கிட்ட ஒப்படைச்சிருங்க… நாங்க பார்த்துக்கிறோம்… ” யமுனா தயங்கிக் கேட்க
தலையை இடவலமாக ஆட்டினான் ரிஷி…
“அவனை விட்ருங்க… அவன் அப்படி இருக்கிறதுதான் அவனுக்கு நல்லது… நான் அவனோட கார்டியன்… அவனை நான் பார்த்துக்கிறேன்… அவன் நம்மளோட சேர்ந்து வாழ்றதுன்றது… அவனுக்கும் சரி… நமக்கும் சரி தேவையில்லாதா பிரச்சனை… அவன் தூரமாவே இருக்கட்டும்… ஆனால் அவன் எப்போதுமே எனது பொறுப்பு…“ என்ற போதே… ரிஷியின் அலைபேசி அடிக்க… எடுத்துப் பார்த்தவனின் புருவங்கள் நெறிந்தன….
மகிளாவின் தந்தை நீலகண்டனிடமிருந்து அழைப்பு வந்திருக்க… யோசனையோடே எடுத்தவன்..
‘சொல்லுங்க…” என்று பட்டும் படாமலும் அலட்சியமாக ரிஷி பேச ஆரம்பிக்க... நீலகண்டனோ இவனின் அலட்சியத்தை எல்லாம் கண்டுகொள்ள வில்லை
“மாப்பிள்ள… எங்க இருக்கீங்க” நீலகண்டனின் குரல் பதற்றமாக வெளிவர… அந்தப் பதட்டம் ரிஷிக்கும் உடனடியாக பரவி இருக்க… அவனையுமறியாமல்…
“மாமா… ஏன் என்னாச்சு… இவ்ளோ பதட்டம்… அத்தை … அத்தை எங்க” என்று அவன் அத்தைக்கு ஏதாவது ஆகிவிட்டதோ என்று ரிஷியும் பதறிக் கேட்க
“உங்க அத்தைக்கு ஒண்ணுமில்ல மாப்பிள்ளை… மகிளாக்குத்தான்…. திடீர்னு பெயின் வந்துருச்சுனு… பிரேம் மாப்பிள்ளை போன் பண்ணாரு… அவரும் ஊர்ல இல்லையாம்… பாண்டிச்சேரி போயிருக்கிறாராம்… கொஞ்சம் நீங்களும்… இலட்சுமி தங்கச்சியும் போய் மகிளாவைப் பார்க்கறீங்களா… அவ அத்தை இருந்தால் மகிளாவுக்கும் கொஞ்சம் தைரியம் இருக்கும்… உங்க அத்தைகிட்ட போனைக் கொடுக்கிறேன்… ரொம்ப பயப்படு்றா… இலட்சுமிகிட்ட பேசனும்னு சொல்றா” என்ற போதே அவரை இடைமறித்தவன்
“மாமா மாமா ஒரு நிமிசம்… நானுமே சென்னைல இல்லை… நம்ம ஊர்ல தான் இருக்கேன்… அதைப் பற்றி அப்புறமா சொல்றேன்… முதல்ல ஹாஸ்பிட்டல் அட்ரஸ் கொடுங்க.. அம்மாகிட்ட போன் பண்ணி மகிய பார்க்கப் போகச் சொல்றேன்…” மருத்துவ மனை முகவரியைக் கேட்டவன்… அவனது தாய் இலட்சுமிக்கும் அடுத்த நிமிடம் தகவலைச் சொல்லி மகிளாவைப் பார்க்க அனுப்பி வைத்தவன்… அதன் பின்தான் அவனது அத்தையிடம் பேச ஆரம்பித்தான்
“ரிஷி… என் பொண்ணைப் பார்க்கனும் ரிஷி… சின்ன தலைவலினாலே வீட்டை ரெண்டாக்கிருவா… இப்போ எப்படி இருக்கான்னே தெரிலை… ” என்று மகிளாவின் தாய் புலம்பித் தவிக்க ஆரம்பிக்க… ரிஷிக்கு தெரியாதா என்ன மகிளாவைப் பற்றி…
அவனுக்குள்ளுமே படபடப்பு வந்திருந்தது இப்போது…
“பதட்டமாகாதீங்கத்தை… நான் இப்போதே வீட்டுக்கு வர்றேன்… உடனே சென்னை கிளம்பலாம்….” என போனை வைத்தவன்…. சத்யாவிடம் அனைத்தையும் ஒப்படைத்து விட்டு… பார்த்திபனிடமும் யமுனாவிடமும் விடை பெற்று கிளம்பியிருந்தான்…
--------------
’கண்மணி இல்லம்…’
மருத்துவமனைக்கு போய்விட்டு வந்து… தலை குளித்திருந்தாள் கண்மணி…
இலட்சுமி, ரிதன்யா, ரிஷி அனைவரும் மருத்துவ மனையில்தான் இன்னும் தங்கி இருந்தனர்… மகிளாவுக்கு பிரசவ வலி… என ரிஷி தகவல் சொன்ன உடனேயே மூவரும் கிளம்பி விட்டிருந்தனர்… ரிஷியும் மகிளாவின் பெற்றோரோடு நேரடியாக மருத்துவமனைக்கே சென்று விட்டான்… கண்மணியிடம் அலைபேசியில் சென்னை வந்த தகவலையும் சொல்லியவன்… அதன் பின் கிட்டத்தட்ட இரவு ஒன்பது மணி அளவில் மகிளாவுக்கு குழந்தை பிறந்த தகவலையும் கண்மணிக்குச் சொல்ல… கண்மணியும் நட்ராஜும் அதன்பிறகுதான் மருத்துவமனைக்கு சென்றனர்… தாய் சேய் இருவரையும் பார்த்து நலம் விசாரித்துவிட்டு அடுத்த அரை மணி நேரத்தில் வீடு வந்தும் சேர்ந்திருந்தனர்…
இதோ இப்போது நள்ளிரவு….
மருத்துவமனையில் இருந்து வந்ததில் இருந்து மகளிடம் ஏதும் பேசவில்லை நட்ராஜ்…. ஆனால்… இரவு உணவை முடித்தபின்… உறங்கச் செல்லும் முன்…
“மணிடா… கேட்லாம் பூட்டிட்டேன்… மாப்பிள்ளை காலைல தான் வருவார்னு நினைக்கிறேன்… நீ தூங்கும்மா… நான் மரத்தடில தான் படுத்திருப்பேன்” என்றவரிடம்
‘இல்லப்பா… ரிஷி ஏதும் அப்படி சொல்லல… வரலைன்னா என்கிட்ட சொல்லிருப்பாரே… “ என்றபடி பாத்திரங்களை சமையலறைக்கு எடுத்துச் சென்ற மகளை கவலையோடு பார்த்தவர்…
“வர மாட்டார்னு தான் நான் நினைக்கிறேன்… அவங்க சொந்தக் காரங்க வரிசையா வந்துட்டே இருக்காங்க… மகிளா அப்பாவும் ரிஷிரை விடவே இல்லை… மருமகன் இன்னைக்குத்தான் கண்ணுக்கு தெரியுறாரு போல” என்றவரை நின்று ஆச்சரியமும் திகைப்புமாக திரும்பிப் பார்த்த கண்மணி… பதில் ஏதும் சொல்லாமல்… மீண்டும் தன் வேலையில் கவனமாக இருக்க நட்ராஜ்… இப்போது சமையலறைக்கே மகளைத் தேடி வந்திருந்தார்
“அந்த நீலகண்டனுக்கு இப்போதான் ரிஷி தெரியுதா என்ன… வார்த்தைக்கு வார்த்தை மாப்பிள்ளை மாப்பிள்ளைனு” நட்ராஜ் வார்த்தைகளில் கோபமும்.. பொறாமையும் சரிவிகிதத்தில் இருக்க… கண்மணி மென்னகையோடு…
“நாரயண குருக்கள் தான் உங்க தூக்கத்தை கெடுத்தார்னா… இப்போ மகிளா அப்பாவும் அந்த லிஸ்ட்லயா…”
மகளை ஆற்றாமையோடு பார்த்தவர்…
“ரிஷி ஆஸ்திரேலியால… அவளோ பிரபலம்… அவ்ளோ பொண்ணுங்க சுத்தி வளச்சு பேசுவாங்க… அப்போலாம்… வராத கவலை… இப்பொ இந்த நீலகண்டன் ரிஷிகிட்ட பேசுறப்போ வருதும்மா… எனக்கே ஏன்னு தெரியலை… பிடிக்கலை” அங்காலாய்த்தவரிடம்… பதில் ஏதும் பேசாமல் மாத்திரையை நீட்ட
“நான் போடலை… போட்டா தூங்கிருவேன்… எனக்கு வேண்டாம் “ என்றபடியே மரத்தடியை நோக்கிப் போக
“அப்பா… ப்பா…. இது என்ன பிடிவாதம்… போடுங்க ஃபர்ஸ்ட்… “ கண்மணியும் அவர் பின்னால் சென்றபடியே வற்புறுத்த…
”ரிஷி வந்த பின்னால போட்றேன்” நட்ராஜ் பிடிவாதமாகச் சொல்ல…
“ப்ச்ச்… அப்பா… அவர் வர்றதுக்கும்… நீங்க மாத்திரை போட்றதுக்கும் என்ன சம்பந்தம்” கண்மணி புரியாமல் கேட்க
“நீதானே ரிஷி வந்துருவார்னு நிச்சயமா சொல்ற… அப்போ அவர் வர்ற வரைக்கும் நானும் காத்திருக்கேன்” என்று தோளில் போட்டிருந்த துண்டை உதறி மரத்தடி திண்டில் போட்டவர் படுத்தபடியே…
“எனக்கு ரிஷியும் முக்கியம்மா… என் மருமகன்றதுனால மட்டுமில்லை… இன்னைக்கு அவரைச் சுத்தி நிற்கிற இந்த கூட்டம் அன்னைக்கு தனியா அநாதையா அவர் நின்னப்போ எங்க போனாங்க… அவனுங்க கிட்ட எல்லாம் நான் கேட்காமல் விட மாட்டேன்… “ நட்ராஜ் ஆவேசத்தோடு சொன்னவரிடம்
“ஹப்பா… இந்த முதலாளி-தொழிலாளி பாசப்பிணைப்பு இருக்கே… முடியலடா சாமி…” என்றபடியே கண்மணியும் அவர் அருகில் அமர்ந்தாள்…
”போன் பண்ணும்மா… வர்றாரா இல்லையான்னு கேளு… பைக் கூட இங்கதான் இருக்கு… ரிஷி எப்படி வர்றாருன்னு கேளு… இல்லை நானே போய்க் கூட்டிட்டு வர்றேன்” என்று நட்ராஜ் முடிக்கவில்லை… அதே சமயம் ரிஷி கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே நடந்து வர… கண்மணி ரிஷியைக் கூடப் பார்க்கவில்லை, தன் தந்தையைப் பார்க்க…
நட்ராஜ் முகத்தில் அப்படி பாவம்… ரிஷி கண்மணி இல்லத்துக்கு திரும்பி வந்த போதும்… இன்னுமே அவர் முகத்தில் திருப்தி இல்லாத பாவமே… ரிஷியிடம் ஏதும் பேசவில்லை… மாறாக… கண்மணியிடம் திரும்பியவர்…
“மாத்திரையைக் கொடும்மா…” மகளிடம் கேட்டு வாங்கிப் போட்டுக் கொண்டவர்… வீட்டுக்குள் சென்று விட… வந்த ரிஷிக்குத்தான் நட்ராஜின் நடவடிக்கைகள் ஒன்றுமே புரியவில்லை… அவர் வீட்டுக்குள் செல்லும் வரை எதுவும் கேட்காமல் இருந்தவன்… அவர் தலை மறைந்த பின் கூட வார்த்தைகள் இன்றி கண்மணியை கேள்விக் குறியாக மட்டுமே பார்த்தான்… அவனுக்கிருந்த களைப்புக்கு அப்படியே ஆயாசமாக அமர்ந்து விட்டான்…
“ரித்வி எங்க ரிஷி… அவள கூட்டிட்டு வரலையா… அவ எங்க இருக்கா” என்றபடியே அவனிடம் தண்ணீர் செம்பை நீட்ட…
அதை வாங்காமல்… வேண்டாமென்று சொல்லி… குளித்து விட்டு வருவதாகச் சொல்லிவிட்டு… ’கண்மணி’ இல்லத்தில் தனியாக கட்டப்பட்டிருக்கும் குளியலறைக்குச் சென்றவன்… குளித்து முடித்து விட்டு வர… கண்மணியும் அவனுக்கு மாற்றுடை எடுத்து வைத்திருக்க அணிந்து வந்தவன்… உறங்கச் செல்லாமல்… மீண்டும் மரத்தடியில் வந்து அமர்ந்து விட்டான்... உறங்க அழைக்க வந்த கண்மணியை விடாமல் தன் அருகில் அமர வைத்தபடி அவளையே பார்த்துக் கொண்டிருக்க…
“என்ன மாமானாரும் மருமகனும்… இன்னைக்கு ஒரு ரேஞ்ச்ல இருக்கீங்க… பார்வைலாம் பலமா இருக்கு…. வீட்டுக்குள்ள வாங்க…” என்று சொல்லியபடியே எழுந்தவளை கைப்பிடித்து இழுத்து மீண்டும் உட்கார வைத்தவன்… அவள் கைகளை விடாமல் தனக்குள் வைத்துக் கொண்டபடியே… பேச ஆரம்பித்தான்
“மகிளா எனக்கு விபரம் தெரியற வயசுல இருந்து.. அவ சின்னப் பொண்ணா இருந்ததுல இருந்து பார்த்துட்டு வந்துருக்கேன்… ஆனால் இன்னைக்கு நான் பார்த்த மகிளா வேற மாதிரி இருந்தா கண்மணி… அவ்ளோ தைரியமா… டெலிவரி வார்டுக்கு போறா… அவகிட்ட நான் இதை எதிர்பார்க்கவே இல்லை… ஆனால் வெளிய நின்ன பிரேம்… எங்க அத்தை இவங்க எல்லாம் அவ்ளோ ஒரு டென்சன்ல இருக்காங்க… “ என்று கண்மணியைப் பார்த்தவன்
“இவ்ளோ டென்சன் ஆவாங்களா என்ன… நான் ஃபர்ஸ்ட் டைம் பார்க்கிறேன்… ப்ச்ச் ஆனால் சொல்வாங்கள்ள… ஒரு பொண்ணுக்கு பிரசவம்ன்றது.. மறுபிறவி மாதிரின்னு”
ரிஷி சொல்லிக் கொண்டிருக்க… கண்மணி… கேட்க மட்டுமே செய்து கொண்டிருந்தாள்…
”அவள் தாய்க்கு அந்த மறுபிறவி வாய்க்கவில்லையே”…
தன் உணர்வுகளை பெரும்பாடுபட்டு மறைத்து கணவன் சொன்னவற்றை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாள் ….
கண்மணிதான் அப்படி இருந்தாள்… ரிஷியோ… உணர்ச்சி வேகத்தில் பேசிக் கொண்டிருந்தான்…
பேசிக் கொண்டிருந்த போதே ரிஷியின் முகம் பிரகாசமாகி கண்மணியைப் பார்த்தவனாக…
“மகிக்கு பாப்பா பிறந்திருக்குனு… சொன்னவுடனேயே… பிரேம் முகத்தைப் பார்க்கனுமே… ஹப்பா… என்ன ஒரு சந்தோசம் அவர் முகத்தில” என நிறுத்தியவன்….
“கண்மணி…“ என்று அவளைப் பார்த்து அவள் பெயர் சொல்லி அழைத்தவனின் குரலில் இருந்த உணர்வின் தாக்கம் கண்மணியை அவளறியுமால் அவன் முகத்தைப் பார்க்க வைக்க…
“பையனோ பொண்ணோ… நமக்கே நமக்கு ஒரு குழந்தை வேணும்னு தோண ஆரம்பிச்சுருச்சு கண்மணி… “ ரிஷியின் விரல்கள்.. தாபத்தோடும் கெஞ்சலோடும் கண்மணியின் கரங்களில் தன் பதிவை ஆரம்பித்திருக்க…
கண்மணியோ வேகமாக அவனிடமிருந்து கைகளைப் பிரித்தபடியே…
”ரிஷி சார்… நாம நம்ம ரூம்ல இல்லை… அக்கம்பக்கம் பாருங்க… “ என்றபடியே… விலகப் போனவளை… விடாமல்.. அவள் இடை சுற்றி கரம் போட்டு தன்னோடு சேர்த்துக் கொள்ள…
”இதுக்கு அதுவே பரவாயில்…” என்று முடிக்கும் முன்னரே கண்மணியின் குரலும் தடுமாற ஆரம்பித்திருந்தது… அவளின் இடை தாண்டி சென்ற ரிஷியின் விரல்கள் நடத்திய ஊர்வலத்தில்…
அவள் தேகமும் அவனின் தேடலுக்கு… பதில் சொல்லும் விதமாக நெகிழ ஆரம்பித்திருக்க… “ரி…. ஷி” என்ற கண்மணியின் குரல் மெல்லத் தேய ஆரம்பித்திருந்தது… நொடியில் தன்னில் சரணடைந்தவளின் பாவத்தில் அவள் கண்களோடு தன் கண்களைக் கலந்தவன்…
“அம்மு…” ஏக்கப் பெருமூச்சோடு அவள் புறம் குனிந்து… செவி மடலில் பட்டும் படாமலும் இதழ் தீண்டி…. அந்த ஏகாந்த வேளையில் கிறங்கி அழைத்தவனின் விரல்கள் கண்மணியின் கன்னக் குழி தாண்டி அவனவளின் இதழ் வரிகளின் இதம் பார்க்க ஆரம்பிக்க…
அவன் உணர்வுகளை தடுக்காமல்… அவனின் கையணைவில் அமர்ந்திருந்தபடியே… விலகாமல்… தன் முகத்தை மட்டும் அவனிடமிருந்து விலக்கிக் கொண்டவளின் நிலைமை புரிந்தவன்… இருக்கும் இடம் உணர…. விலகி அமர்ந்தவனைப் பார்த்து
”ரிஷிக்கண்ணா கேட்டு… அவனோட கண்மணி… என்னைக்கு இல்லைனு சொல்லிருக்கா..” அவன் கன்னங்களை தாங்கியபடி கேட்டவளை…அவளே எதிர்பார்க்காத நேரத்தில் சட்டென்று தன் கரங்களில் தூக்கிக் கொள்ள…
”ரிஷி… யாராவது பார்க்கப் போறாங்க… இறக்கி விடுங்க” அவனின் எதிர்பாராத இந்த நடவடிக்கையில் தடுமாறி திமிறியவளிடம்…
“ஏண்டி… என் பொண்டாட்டிய… நான் தூக்குறேன்… எவன் பார்த்தா எனக்கென்ன… “
“ஹையோ ரிஷி… நான் உங்க பொண்டாட்டிதான்… அதுக்காக… இப்படியா… இறக்கி விடுங்க… ”
ரிஷியோ காதிலேயே விழாதவன் போல அவளைத் தூக்கியபடியே வீட்டை நோக்கிச் செல்ல..
”இறக்கி விடுறீங்களா இல்லையா” என்றவளின் அதிகாரக் குரலில்
“ரவுடி… இந்த ரோல் இந்த டைம் உனக்கு செட் ஆகாது…. காலையில உன் மிரட்டலெல்லாம் வச்சுக்க” செல்லமாக மிரட்டியவனை… இவளும் செல்லமாக முறைக்க… சிரித்தபடியே அறைக்குள் அழைத்து வந்தவன்… இறக்கி விட்டு… அந்த அறைச் சுவரில் அவளை சாய்த்தபடி… அவள் கரம் கோர்க்க….
ரிஷி-கண்மணி இரு இதயங்கள் இரு வேறாக இருந்த போது… அன்று வரைந்த இணைந்த இதயங்கள் ஒரு ஓரத்தில்… இவர்களின் கரங்கள் மட்டுமே இணைந்திருந்தன வண்ண வரிகள்களாக…
இன்று இருவரின் இதயமும் இணைந்திருந்த போதோ… கண்மணியின் மொத்த தேகமும்… அவனோடு இணைந்திருக்க… ரிஷியின் விரல்களும் இதழ்களும் கண்மணியின் தேகமெங்கும் தீட்டியதோ வர்ணக் கோலங்கள்…. தன்னவளின் உச்சி முதல் பாதம் வரை காமமென்னும் வர்ணம் தீட்டி காதல் என்னும் ஆராதனையை ஆரம்பித்தவன் வைகறை வேளை தாண்டியும் நிறுத்தவில்லை… அவன் தேவியும் ரவுடியும் தடுக்கவில்லை…
/* அப்பப்பா பெரிது பெரிது உன் பெண் பக்தி அப்பப்போ அறிவேன் அறிவேன் நான் உன் சக்தி நீ தானே நான் போற்றும் சிவலிங்கம் இவள் மேனி சரிபாதி உன் அங்கம் பகலும் நள்ளிரவும் பூஜைகள் தானே அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள் அப்பப்போ தரணும் தரணும் என் தேவைகள் */
Lovely update