/* இந்த அப்டேட்... ரிதன்யா திட்டு வாங்குறாளோ இல்லையோ.... நான் திட்டு வாங்குவேன்னு நினைக்கிறேன்... ஏன்னு அப்டேட்ல தெரியும்.... இப்போ பை...
கமென்ட்ஸ் அண்ட் லைக்ஸுக்கு நன்றி...
நன்றி
பிரவீணா
அத்தியாயம்:69-3
கண்மணி இல்லத்தின் உள்ளே நுழைந்தான் ரிஷி…
உள்ளே வந்தவன் ஆதவனை மட்டுமே முதலில் வரவேற்றவன்… கேசவனைக் கண்டுகொள்ளவில்லை… கல்லோ மரமோ என்பது போல அவரைப் பொருட்படுத்தாமல் புறக்கணித்தவன் விக்ரமை அந்நியப் பார்வை பார்த்தபடியே… அவனை ரிஷி வரவேற்க
இப்போது ஆதவன்… விக்ரமிடம் திரும்பி….
“ரிஷி” ரிஷியை விக்கிக்கு அறிமுகப்படுத்தியவன்… ’விக்ரம்…’. ரிஷியிடம் விக்கியை அறிமுகப்படுத்த…. நண்பர்கள் இருவருமாக இருவருமாக அந்நியர்களாக கை குலுக்கிய நிமிடங்கள் அந்த நிமிடங்கள்…
விக்ரமின் கண்களும்… ரிஷியின் கண்களும் பிரயத்தனப்பட்டு… உணர்வுகளை வெளிக்காட்டாமல் மறைக்க முயன்றிருக்க… மீண்டும் இணைந்த அவர்களின் கரங்களின் அழுத்தமோ அவர்களின் நீண்ட நாள் கடந்த சந்திப்பையும்… பிரிவின் வலியையும் இருவருக்கும் இடையே உணர்த்தி இருக்க… சூழ்நிலை உணர்ந்து விக்கியை விட்டு முதலில் கைகளை எடுத்தவன் ரிஷிதான்…
ரிஷியின் கரங்களின் வன்மையை உணர்ந்த விக்கிக்கு அதுவே அவன் நிலையைத் தெள்ளத் தெளிவாக விளங்க வைத்தது… தொலக்காட்சியில் பார்த்தபோது அவனால் ரிஷியின் தற்போதைய நிலையை உணர முடியவில்லை… நேரில் பார்த்த போது… நன்றாகவே உணர முடிந்தது… அவனின் ஒரு சிறு கைக்குலுக்கலில்… அவனது நடை உடை பாவனை… பார்க்கும் பார்வை என எல்லாவற்றிலும் ஒரு இறுக்க பாவனையை நன்றாக உணர்ந்தான் விக்கி…
பார்க்கும் எவருமே ரிஷியை எளிதாக அணுகும் ஒரு உடல்மொழி அவனிடம் இருக்கும்… இப்போதும் அது அவனிடம் இருந்தாலும் அதையும் மீறி அவன் கண்களின் தீவிரம்… பழகுபவர்களை தள்ளி நிறுத்தும் படி இருந்தது
ஏழை பணக்காரர்… என வித்தியாசம் இல்லாமல் எல்லோரிடமும் சகஜமாகப் பழகுபவன் தான் ரிஷி… யாருக்கு உதவி என்றாலும்... பின்புலம் எல்லாம் ஆராயாமல் ஓடோடிச் சென்று உதவி செய்பவன் தான்… ஆனால் தனக்கென்று ஒரு பொருளைத் தேர்ந்தெடுக்கும் போது… மிகக் கவனமாக இருப்பான் ரிஷி… அதாவது வெளித்தோற்றம் மற்றும் அதன் தகுதி அவனுக்கு முக்கியம்…
அதேபோல் அணியும் உடையில் இருந்து… ஓட்டும் கார் வரை ப்ராண்டடின் மொத்த உருவமாக இருந்தவன் ரிஷி… விலைப்பட்டியல் பார்த்து விலை உயர்ந்ததாக மட்டுமே தேர்ந்தெடுப்பவன்… அவன் சைட் அடிக்கும் பெண்கள் கூட தோற்றத்திலும் உடையிலும்… மேம்பட்டவர்களாக … நவீனமாக இருக்க வேண்டும்… முக அலங்காரம்… நகப்பூச்சு… உதட்டுச் சாயம்… நுனி நாக்கு ஆங்கிலம்… மேற்கத்திய உடை… பூனை நடை நடக்கும் ஹைஹீல்ஸ் யுவதிகள் … என ரிஷியின் ரசனை அப்படித்தான் இருக்கும்…
அவனா இவன்… அந்த ரிஷியா இந்த ரி்ஷி… வாழ்க்கை கொடுத்த கஷ்டங்கள் ஒருவனை இந்த அளவுக்கு மாற்றுமா… நினைத்த போதே கண்மணி சென்ற திசையை நோக்கி அவன் பார்வை செல்லத் தவறவில்லை… இதை எல்லாம் இவன் விரும்பி ஏற்றுக் கொண்டவையா? இல்லை தண்டனையாக ஏற்றுக் கொண்டிருக்கின்றானா???
அந்தத் திமிர் பிடித்த கண்மணி.. இந்த வாழ்க்கை… இதை எல்லாம் விட…. முதலில்… இந்த இறுக்கமான ரிஷியை மாற்றி… மீண்டும் தன் பழைய நண்பன் ரிஷியாக பார்க்க வேண்டுமென்று மனம் தவிக்க ஆரம்பித்திருந்தது விக்கிக்கு
--
தினகர் ,சத்யா மற்றும் பார்த்திபனோடு நட்ராஜும் இப்போது உள்ளே வந்திருக்க… அவரிடம்
“மாமா… இவங்களை உள்ள கூட்டிட்டுப் போங்க… “ என்றவன்… வேக எட்டுக்கள் எடுத்து வைத்து அவன் மாடி அறைக்குப் போக… நட்ராஜோ…. இவர்களை அழைத்துக் கொண்டு அவர் வீட்டுக்குப் போயிருக்க…
ஆதவனோ ஆச்சரியமாக உணர்ந்தான்…
வந்த மூவரும்… யாரென்றால் கண்மணி… ரிஷி… நட்ராஜ் மூவரும் ஆளுக்கொரு திசையில்… அதாவது தனித்தனி வீட்டில் இருப்பதை…
அதே நேரம் ஒரே வீட்டில்தான் நானும் என் அன்னையும் இருக்கிறோம்... அந்நியர்களாக... ஆனால் இங்கே தலைகீழ் போல... ஆளுக்கொரு வீட்டில் இருந்தாலும்... பாசத்துடன் இருப்பார்கள் போல... தனக்குள் எண்ணிக் கொண்டிருக்க...
போன அதே வேகத்தில் ரிஷியும் வந்திருந்தான்… கையில் சில கோப்புகளோடு…
---
ஆதவன்… கேசவன்… விக்கி… பார்த்தி… நட்ராஜ் என அத்தனை பேரின் பார்வையும் ரிஷியிடம் இருக்க… ரிஷிதான் பேச ஆரம்பித்தான்
“ஆதவன் அண்ணா” என ஆதவனை அழைத்தவன்…
“நான் உங்களை ஆதவன்னே கூப்பிடட்டா… சின்ன வயசுல அப்படி சொல்லி பழகிட்டேன் … அந்த ரிஷியாவே இப்போதும் இருக்க முடியாதே… அந்த ரிஷியா இருக்க விடாமல் சில பேர் என்னை மாத்திட்டாங்களே “ கேசவனைப் பார்த்தபடியே சொல்ல
“அஃப்கோர்ஸ்… கால் மீ அஸ் ஆதவன்”
“தேங்க்ஸ் ஆதவன்” என்றபோது கேசவனின் பார்வையில் குரோதம் வழிய… அதைக் கண்டுகொண்டான் தான் ரிஷி… ஆனாலும் கேசவனை ஒதுக்கி வைத்தவனாக… ஆதவனிடம் பேச ஆரம்பித்திருந்தான்…
“சாரி ஆதவன்… இவர் பார்த்திபன்… என்னோட லீகல் அட்வைசர் அண்ட் எங்க கம்பெனி ஐ மீன் என் அப்பாவோட கம்பெனி லீகல் ரிலேட்டடா இவர்தான் பார்க்கப் போகிறார்… அதுனால அவர் இங்க இருக்கிறது நல்லதுன்னு நினைக்கிறேன்… ”
இப்போது விக்கி
“உங்க அப்பா கம்பெனி பற்றி பேசப் போறதுக்கு… நான் ஏன் டைம வேஸ்ட் பண்ணனும்… நான் கிளம்பறேன்… ஆதவன்… முதல்ல இதைப் பேசி முடிங்க… எனக்குத் தேவையில்லாத விசயம்... எனக்கு வேலை இருக்கு… எப்போ நம்ம டீல் பற்றி பேச ஆரம்பிக்கிறீங்களோ… அப்போ நான் வருகிறேன்” - எடுத்த எடுப்பிலேயே முறுக்கிய விக்கியை ஆதவன் எப்படியோ சமாதானப்படுத்தி அமர வைக்க…
விக்கி… நட்ரஜின் புறம் திரும்பியவனாக
“இங்க பாருங்க நட்ராஜ் சார்… உங்ககிட்ட இன்னொவேஷன அப்படியே நான் யூஸ் பண்ணல… அதை மட்டும் இந்த இடத்தில நான் சொல்லிக்கிறேன்” என படபடப்பாக பேச
“விக்கி சார்… உங்களுக்கு ஏன் இவ்ளோ படபடப்பு… தப்பு செய்யலைதானே… ரிலாக்ஸ்..” ரிஷி நிதானமாக விக்கியிடம் சொல்ல…
ஆதவனும் விக்கியை அமைதியாக இருக்கச் சொன்னவன்…
“ரிஷி… சுத்தி வளச்சுலாம் பேசலை… உன் அப்பாவோட பிஸ்னஸை உன்கிட்டயே கொடுத்துறேன்… நோ ஷேர்… திருமூர்த்தியும் சரி அப்பாவும் சரி இனி பிரச்சனை பண்ண மாட்டாங்க… “
கேசவன் மறுத்துப் பேச ஆரம்பிக்கப் போக… ஆதவன் அவரைப் பார்வையாலேயே அடக்கியிருந்தான்…
“ம்ஹூம்ம்ம்… அதுக்கு டீல் என்ன.. நானும் நேரடியாவே வருகிறேன்… ” ரிஷி கேட்க
“நட்ராஜ் அண்ட் விக்கி… இவங்க கொலாப்ரேஷன்… ” விக்கியையும் நட்ராஜையும் மையப்படுத்தி ரிஷியும் ஆதவனும் பேச ஆரம்பித்திருந்தனர்….
“என் முதலாளி நான் என்ன சொன்னாலும் கேட்பார்… சோ என் சைட் ஸ்ட்ராங்…. உங்க பார்ட்னர் விக்கி அண்ட் உங்க அப்பா இந்த டீலிங்க்குகு ஒகே வா”
“என்னோட சைட்ல இவங்க ரெண்டு பேரையும் சமாதானப்படுத்துறது என் பொறுப்பு… “ என்ற போதே
கேசவன் வெகுண்டவராக ரிஷியை நோக்கிப் பாய்ந்திருக்க… அனைவரும் அவரை சமாதானப்படுத்திக் கொண்டிருக்க
“டேய் ஆதவா… உனக்கு பைத்தியம் ஏதும் பிடிச்சுருக்கா… எல்லாம் ப்ளான் பண்ணி பண்ணிட்டு இருக்கான்னு தெரியுது… அவன் உன்னை ஏமாத்தப் போறான்னு அப்பட்டமா தெரியுது… என்னாச்சுடா உனக்கு… “ கேசவன் ஆதவனிடம் சொன்னபடியே… ரிஷியிடம் திரும்பி
“டேய் என் பையனயே எனக்கெதிரா திருப்புறியா….” வெறிப்பிடித்தார்ப்போல கத்த ஆரம்பித்திருக்க…
“பிபி டேப்லட் லாம் போட்டு கூட்டிட்டு வரலையா ஆதவன்… ரொம்ப ஆடறாரு உங்க அப்பா.. இவர் இனிமே இங்க இருக்க வேண்டாம்னு நினைக்கிறேன்… “ என்றபடியே
“நான் என் குடும்பமும்… இப்போ எந்த இடத்தில… எப்படி இருக்கோம்னு அவர் பார்க்கனும்னு தான் வரச் சொன்னேன்… எங்கேயிருந்த எங்களை எங்க கொண்டு வந்து விட்ருக்காருனு பார்க்கனும்னு நினைத்தேன்…. பார்த்துட்டாரு… இனி அவர் தேவையில்லை… கூட்டிட்டு போங்க… ரொம்ப உணர்ச்சி வசப்படுறாரு… போயிறப் போறாரு… ”
ரிஷி பேசிக் கொண்டிருந்த போதே அங்கு வந்த கண்மணி இவர்கள் சத்தத்தில் உள்ளே வராமல் கதவருகேயே நின்று விட்டாள்…
கேசவன் ரிஷியைப் பார்த்து
“நீ என்னடா கீழ வந்துட்ட… பொண்டாட்டி குடும்பம்னு நல்லாத்தானே இருக்க… அப்புறம் என்னடா… இன்னமும் பிச்சைக்கார இடத்துல இருக்கிற மாதிரி சீன் போடற…”
“ஆதவன்… ப்ளீஸ்” ரிஷி கேசவனைக் கைகாட்டி ஆதவனைப் பார்த்து சொல்ல
“என் புள்ளய விட்டே… என்னை வெளிய தள்ளுறியா…” கத்திக் கொண்டிருந்த கேசவனை… ஆதவன் காருக்கு அழைத்துச் செல்ல…. இருவரும் கேட்டை விட்டு வெளியேறிய அடுத்த நொடி…. விக்கியும் ரிஷியும் புன்னகைத்துக் கொள்ள
“மச்சான் என்னடா பண்ணின… ஆதவன் அரண்டடிச்சுட்டு வந்து நிக்கிறான்…” பார்த்திபனும் அதைக் கேட்டு சிரிக்க
”இன்னும் பாரு… ” என்ற போதே கண்மணி கையில் காஃபி ட்ரேயோடு உள்ளே வந்திருக்க… விக்கியும் ரிஷியுமே இப்போது மௌனமாகினர்….
அனைவருக்கும் கொண்டு வந்த காஃபியை கொடுக்க ஆரம்பிக்க…
அவள் கொண்டு வந்த காஃபியை எடுக்கும் எண்ணம் விக்கிக்கு இல்லை… எப்படி தவிர்ப்பது என்று… கண்மணியைப் பார்க்காது தவிர்த்து அமர்ந்திருக்க
அதேபோல் விக்கிக்கு காஃபியை கொடுக்கும் எண்ணத்தில் கண்மணியும் இல்லை என்பது மற்றவர்களுக்குத் தெரிந்ததோ இல்லையோ அவள் கணவனுக்குத் தெரிந்திருக்க… ரிஷி வேகமாக கண்மணியிடமிருந்து ட்ரேயை வாங்கியவன்…
“நான் கொடுக்கறேன்… நீ இரு” என்று சூழ்நிலையச் சமாளித்து கொடுக்க ஆரம்பிக்க… ஆதவனும் இப்போதும் வந்திருக்க…
ஆதவனிடம் ரிஷி ட்ரேயை நீட்ட மறுக்காமல் ஆதவனும் வாங்க…
இப்போதும் அதாவது ரிஷி கையில் ட்ரே இருந்தும், அவன் காஃபியை நீட்டியபோதும் வாங்காமல் மறுத்த விக்கி…
“டீ காஃபி எல்லாம் சாப்பிடுவேன் தான்… என் வீட்டைத் தவிர வேற எங்கும் சாப்பிடறதில்லை… அதுனால வேண்டாம்…”
ஆதவனுக்கு விக்கியின் நடவடிக்கைகள் வித்தியாசமாகத்தான் இருந்தன… அதன்பிறகு அங்கு திடீரென்று மௌனம் நிலவ… ஆதவனின் பார்வை நட்ராஜ்-பவித்ரா புகைப்படத்திற்கு சென்று… கண்மணியிடமும் மாறி இருக்க… ரிஷியும் அதைக் கவனிக்காமல் இல்லை
அதேநேரம்… ரிஷி தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்… இங்கு வருபவர்கள் அனைவருக்கும் இந்த ஒப்பீடு தவிர்க்க முடியாது போல… என்ற எண்ணத்தின் காரணமாக வந்த புன்னகை அது…
அடுத்த சில மணி நேரங்களில்… காரசாரமான விவாதமாக போய்க் கொண்டிருக்க…
ஆதவன் குரூப் ஆஃப் கம்பெனிஸ்- ஆதவன் - விக்ரம் பங்குகள் சரிசம பங்குகளாக… ஆர் கே இண்டஸ்ட்ரீசோடு பகிர முடிவு செய்யப்பட்டிருக்க… விக்ரம் அதிலும் இடையிட்டான்…
“நம்மகிட்ட 75 பெர்சண்டேஜ் ஷேர் அவங்ககிட்ட 25… ஓகேனா… நாம பேசலாம் ஆதவன்… இல்லை அவங்க என்ன நமக்கு டார்ச்சர் கொடுத்தாலும் லீகலா நாம ஃபேஸ் பண்ணிக்கலாம்… இவரோடதை வச்சு ஒண்ணுமே பண்ண முடியாது… எல்லாம் இப்போ வேலைக்காகாத ஓல்ட் ஐடியாஸ் என்ன வருசக் கணக்கா ஆனாலும் ஆகும்… பார்த்துக்கலாம் இதுதான் என்னோட முடிவு…”
“ஓகே… பார்த்துக்கலாம்… வருசக்கணக்கா இழுத்தா… உங்க ஐடியாஸும் ஓல்டாக சான்ஸ் இருக்கு மிஸ்டர் விக்ரம்.. ’காலத்தே பயிர் செய்…’ ’காற்றுள்ள போதே தூற்றிக் கொள்…’ பழமொழி தெரியும்தானே… நாங்க அதை அதுனால பாதிக்கப்பட்டவங்க…. அதோட வேதனை இதோ இவர்கிட்ட கேளுங்க… “என்று நட்ராஜைக் காட்டிச் சொல்ல… ஆதவன் விக்கியை அமைதியாக இருக்கச் சொல்ல
ரிஷி… உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவனாக
“தென் … இன்னொரு விசயம்… நீங்க என் வைஃப் கிட்ட அவங்க அம்மா வழி உரிமையான இடத்தை விலைக்குக் கேட்ருக்கீங்க… அது கூட இந்த டீல்ல வந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்…” ரிஷி சொல்ல ஆரம்பித்த போதே
கண்மணி இப்போது இடை மறித்தாள் ரிஷியை…
“ரிஷி… என் அப்பாவோட பிஸ்னஸ் …. உங்க விசயம்…. இது எதுலயும் நான் தலையிட மாட்டேன்…. ஆனால் அந்த இட விசயம் முழுக்க முழுக்க அர்ஜூன் அப்புறம் என் தாத்தாவோட சம்பந்தப்பட்டது… அவங்க இல்லாமல் ஒரு வார்த்தை கூட அதைப் பற்றி பேசக் கூடாது… நானும் பேச மாட்டேன்… அதெல்லாம் இங்க இழுக்காதீங்க” கண்மணி சட்டென்று சொல்ல…
விக்கி கண்மணியை எரிச்சலாகப் பார்த்துவிட்டு.. ரிஷியையும் ஒரு பார்வை பார்க்கத் தவறவில்லை…
விக்கி அப்படி இருக்க..
ரிஷி ஒன்று சொல்லி கண்மணி மறுப்பாளா…. பார்த்திபனுக்கு பெரிய ஆச்சரியம்….
முதன் முதலாக ரிஷியை மறுத்து கண்மணி பேசுவதை குறித்துக் கொண்டவனாக…
“நான் அர்ஜூன் சார் கிட்ட பேசுறேன் கண்மணி… அவர் ஏற்கனவே சம்மதம் சொன்ன விசயம் தான் இது…” என்றபடி அர்ஜூனுக்கு அழைக்க… அர்ஜூன் அவன் அழைப்பை எடுக்கவில்லை… அடுத்து ஆதவன் விக்ரமிடம் சொல்லி அர்ஜுனை அழைக்கச் சொல்ல… அப்போதும் அர்ஜூன் எடுக்காமல் இருக்க…
ரிஷியைப் பார்த்தாள் கண்மணி….
தலையை மட்டும் ரிஷி அசைக்க… கண்மணியும் அர்ஜூனுக்கு தன் அலைபேசியில் இருந்து அழைக்க அடுத்த நொடி அர்ஜூன் அவளது அழைப்பை எடுத்திருக்க… விக்ரமின் கண்கள் விரிந்திருந்தது…
கண்மணி அர்ஜூனிடம் இட விபரம் பற்றி பேசியவள்… அதன் பின் பார்த்திபனிடம் கொடுக்க… பார்த்திபன் அர்ஜூனிடம் தனியே பேசிவிட்டு உள்ளே வந்தவன்… விக்கியிடம் அர்ஜூன் பேச விரும்புகிறான் என்று விக்கியிடம் போனைக் கொடுக்க… விக்கி கண்மணியின் போனைத் தொடுவானா என்னா…
”ஸ்பீக்கர்ல போடுங்க பார்த்திபன்…” என்று சொல்லி நாசுக்காக மறுத்து விட
“ஹேய் விக்கி… சாரிப்பா… உன் போனை எடுக்க முடியலை… இந்த நம்பர் வேற… என்னோட அத்தை பொண்ணு பற்றி நிவேதா சொல்லி இருப்பாளே… அண்ட் நான் இன்னைக்கு யூ எஸ் கிளம்பறேன்…. அங்க ஒரு இஷ்யூ… அண்ட் நீ ஒரு விசயம் கேட்டு இப்போ என்னால செய்ய முடியலை… அதுக்கும் சாரி“ என்ற போதே ரிஷியும் நட்ராஜும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள… கண்மணியிடம் இப்போது போன் வந்திருக்க… அர்ஜூன் கண்மணியிடம் பேச ஆரம்பித்தான்
“பார்த்தி எல்லாம் பார்த்துக்குவான்… நான் பேசிட்டேன்… அண்ட் தேங்க்ஸ் கண்மணி… ஏதோ அங்கே என்னை விட்டுக் கொடுக்காமல் பேசினதுக்கு… அதிசயமா இருக்கு… அர்ஜூனுக்கு முக்கியத்துவம் இருக்கு போல மேடம் கிட்ட” என்றபடி வைக்க… விக்ரமோ இன்னும் விறைத்திருந்தான்… ஆனால் காட்டிக் கொள்ளவில்லை…
அர்ஜூன் போனை வைக்க… பார்த்திபன் பேச ஆரம்பித்தான் இப்போது…
“அர்ஜூன் சாருக்கு… இப்போ அந்த இடத்தை கொடுக்க சம்மதம் இல்லை… நட்ராஜ் உங்க பிஸ்னஸ்ல பார்ட்டனரா வர்றதுனால அவங்க தாத்தாக்கு இஷ்டம் இருக்காதுன்னு… தர சம்மதிக்கலை…” சொன்னவன் அனைவரையும் பார்க்க… ஆதவன் விக்கியைப் பார்க்க....
என்னதான் அர்ஜூன், கண்மணி… அத்தைப் பெண் என்றாலும்… கண்மூடித்தனமாக இருக்கவில்லை என்றே விக்கி என்ணினான்…
“ஓகே... என் முதலாளியும் சாதாரணமானவர் இல்லை... நாராயண குருக்கள் அளவு இல்லைனாலும்... ஓரளவு பெரிய இடம் தான்... ஆதவன் நீங்க வந்து பாருங்க உங்களுக்கு ஓகேனா... அங்கேயே நாம ஸ்டார்ட் பண்ணலாம்... அண்ட்...” கண்மணியிடம் திரும்பியவன்
“மேடம்... இதுல உங்க ஒப்பீனியன் ஏதாச்சும் இருக்கா... இந்த இடமும் உங்க பேர்லதான் இருக்கு...” என்ற போது கண்மணி... ’இல்லை’ என்பது போல ஆட்டியவள்... சம்மதம் சொல்ல...
ரிஷி... தன் கவனம் சிதறாமல்... ஒவ்வொரு வார்த்தைகளையும் யோசித்து... அழகாக கோர்த்துப் பேச... அதன் பின் முடிவில்… எப்படியோ அனைவருமாகப் பேசி.... ஆர்கே இண்டஸ்ட்ரீஸ் பார்ட்னர்ஸ் பங்கு 30 சதவிகிதமும் தவன் க்ரூப் ஆஃப் கம்பெனிஸ் பங்கு 70 அதிலும்… 30 சதவிகிதம் ஆதவனுக்கு… 40 சதவிகிதம் விக்ரமுக்கு என என பங்குகள் பேசப்பட்டு முடிவு செய்யப்பட்டு … அவர்கள் பேச்சு வார்த்தை முடிந்திருக்க....
ஆதவன் வீட்டுக்கு வந்த விக்கி அப்போதும் திருப்தி இல்லாமல்தான் பேசினான்…
“ஆதவன் உங்க டீல்னால... ரிஷியோட அப்பா கம்பெனி டீல்னால... எனக்கு 10 பெர்சண்டேஜ் லாஸ்… அந்த ரிஷிக்குத்தான் இதுல பெனிஃபிட்…” என்று குறைபட்டுக் கொள்ள…
”இந்த டீல் இல்லைனா.. நம்ம ஷேர் பெருசா இருந்தாலும் வேல்யூ இல்லை விக்கி… நட்ராஜை வைத்து வேல்யூ இல்லை… ரிஷியை வைத்துதான் வேல்யூ… அந்த ஃபேபியோ சப்போர்ட் அவனுக்கு பெரிய அளவுல இருக்கு… ஆஸ்திரேலியா டை அப்… நாம அவனுக்குத் தேவையே இல்லை… ரிஷிக்கு பணம் முக்கியம் இல்லை…. அதுனால அவங்க அப்பா கம்பெனினால நமக்கு லக் அடிச்சிருக்கு… “ ஆதவன் விக்கியிடம் எப்படியோஒ எடுத்துச் சொல்லி… விக்கியும் எப்படியோ சமாதானம் ஆக… அதாவது சமாதானம் ஆனது போல் நடித்திருந்தான்…
---
விக்கி, ரிஷியை எல்லாம் சமாளித்து விட்ட ஆதவனுக்கோ பிரச்சனை அவனது தந்தையின் மூலம் வந்திருந்தது...
”எனக்கு இதில உடன்பாடு இல்லை.. நீ உன் வழில போய்க்கோ… நான் என் வழில போய்க்கிறேன்… எதுலயும் கையெழுத்து போட மாட்டேன்… நீ பெரிய ஆளுன்னு நெனச்சேன்… கேவலம் அந்த தனசேகர் பையன் கிட்ட மண்டியிடுவேன்னு நினைத்துக் கூடப் பார்க்கலை” என மகனை எள்ளலும் செய்து… பிரச்சனையும் செய்ய
“அப்பா… இங்க எல்லாத்துக்கும் முதல்ல ரியாக்ட் பண்ணக் கூடாது… பதுங்கித்தான் பாயனும்… அவன் என்னை ஏமாத்த முடியாது கூடிய சீக்கிரமே பாருங்க… விக்கி… நட்ராஜ் ரெண்டு பேரையும் என் கண்ட்ரோலுக்கு கொண்டு வந்துருவேன்… அப்போ சொல்வீங்க…நான் யாருன்னு” என்றவனை நம்பாமல் பார்க்க
“அந்த ரிஷிக்கு பணம் புகழை விட அவன் அப்பா… அவங்க குடும்பத் தொழில் முக்கியம்னு எனக்கு நல்லா தெரியும்… ஆஸ்திரேலியால அவனுக்கு கிடைத்த புகழ்… சப்போர்ட் இதைப் பற்றி ஏதாவது தெரியுமா உங்களுக்கு... எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு வந்தவன் அவன்… அதைத் தெரிஞ்சுட்டுத்தான் நான் இந்த டீலையெ பேசினேன்… மடங்கிட்டான் தானே” ஆதவனும் எடுத்து சொல்ல… கேசவன் கேட்டால் தானே… ஆதவன் எப்படி எப்படியோ பேசியும் கெஞ்சியும்… கேசவன் தான் பிடித்த பிடிவாத நிலையிலேயே இருக்க…
மயிலே மயிலே என்றால் இறகு போடவில்லை … பிறகென்ன செய்திருப்பான் ஆதவன்…
---
ஆதவன் வீட்டில்… விக்கி… ரிஷி … அவர்கள் மட்டுமில்லை… ஆதவனைத் தெரிந்தவர்கள் அத்தனை பேரும்….. அவன் வீட்டில் குழுமியிருந்தனர்… கேசவனின் இறுதிச் சடங்கின் பொருட்டு…
”ஹால்ல ஆதவன் கூட பேசிட்டு இருந்தாரு… நான் தூங்கிட்டேன்… லேட்டாத்தான் வந்திருப்பார் போல… காலையில எழுந்துக்கவே இல்லை… தூங்கும்போதே உயிர் போயிருச்சுனு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க” ஆதவனின் அன்னை யாரிடமோ அழுதபடியே புலம்பிச் சொல்லிக் கொண்டிருக்க… ரிஷியின் கண்கள் இப்போது பனித்தது… தன் தந்தையின் மறைவை எண்ணி…
இதே போல்தானே என் தந்தையும் இறந்தார்… என்னோடு பேசிவிட்டு… என் மகன் இனி ஆறுதலாக இருப்பான் என நிம்மதியோடு படுக்கச் சென்றார்… கேசவனுக்கு அப்படி இருந்திருக்காது… ஆதவனோடு பிரச்சனை… அந்தக் கவலை என வருத்தப்பட்டு இறந்திருப்பார்..
ரிஷி அப்படித்தான் நினைத்தானே தவிர… ஆதவன் தான் அவன் தந்தையைக் கொன்றிருப்பான் என்றெல்லாம் நினைக்கவில்லை ….
இறுதிச் சடங்கை முடித்துவிட்டு… தன் பைக் நிறுத்தியிருந்த இடம் நோக்கி ரிஷி செல்ல… அந்த பைக்கைத் தொட்டபடி… ரிஷி வருகைக்காகக் காத்திருந்தான் மருது…
---
ஒரு வாரம் எப்படியோ…. கடந்திருக்க…
அன்று இலட்சுமி… ரிதன்யா… ரித்விகா… மீண்டும் சென்னைக்குத் திரும்பும் தினம்….
சொன்னது போலவே… மாலை நான்கு மணி அளவில்… பிரேம் கார் ’கண்மணி’ இல்லத்தில் நுழைந்திருக்க…
காரை விட்டு வேகமாக முதலில் இறங்கியிருந்தாள் ரிதன்யா… மகிளாவும் அவளோடே வந்திருக்க…
இறங்கிய ரிதன்யா… கண்மணியின் பைக் இருக்கின்றதா என்று நோட்டமிட… அது அவள் கண்களுக்குத் தரிசனம் அளித்திருக்க… அவளது கண்கள் அந்த பைக்கையே கண்மணியாக நினைத்து தீயை உமிழ்ந்திருக்க…
“ரிது…பொறுமை… இவ்ளோ கோபப்படாத”
தோழியை... அவள் கோபத்தை உணர்ந்தவளாக… மற்ற யாருக்கும் கேட்காதவாறு மகிளா ரிதன்யாவிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே… ரிதன்யாவோ மகிளா வார்த்தைகளை எல்லாம் கேட்கவில்லை… நேராக வீட்டை நோக்கிச் சென்றவள்… கண்மணியின் முன் தான் நின்றிருந்தாள்…
கண்மணி… ரிதன்யாவைப் பார்த்தபடியே வெளியே பார்க்க…
“ஏய்… நீ என்ன பெரிய இவள்னு நினைப்பா…”
கண்மணியின் புருவம் சட்டென்று ஏறி உயர…
“உன் நாட்டமை… சட்டம்லாம் என் அண்ணனோட வச்சுக்க… என்கிட்ட வச்சுக்காத…”
“என்ன சொல்றீங்க… புரியும்படி சொல்றீங்களா” கண்மணி பொறுமையாகக் கேட்க
“நடிக்காதடி…” ரிதன்யா இன்னும் வெகுண்டாள்
“எனக்கு மாப்பிள்ளை பார்க்க உனக்கு என்ன தகுதி இருக்கு”
“என்ன தகுதி வேணும்” கண்மணி நிமிர்ந்து கேட்க
”பார்த்திபன் எனக்கு பொருத்தமா இருப்பார்னு ...அம்மாகிட்ட பேசுனியா… ” கண்கள் சிவந்த கோபத்தில் ரிதன்யா கேட்ட போதே
“ஆமாம்… ஆனால்” கண்மணி சொல்லி முடிக்கவில்லை… ரிதன்யாவின் கைகள் கண்மணியின் கன்னத்தை நோக்கி உயர்ந்திருக்க…. கண்மணி ரிதன்யாவிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை… சுதாரிக்க முயன்று… அவளைத் தடுக்கும் முன்னரே… ரிதன்யா கண்மணியை அறைந்திருந்தாள்
---
Adapaaavi adichutale hoom