/* ஹாய் ஃப்ரெண்ட்ஸ் எப்படி இருக்கீங்க எல்லோரும்...
வழக்கம் போல ஹெவி டைட் ஷெட்யூல்... எப்படியோ அப்டேட் போட்டுட்டேன்
அண்ட் லாஸ்ட் எபிசோட்... 69-1 பற்றி
அந்த எபி போடலாமா வேண்டாமா இல்லை தூக்கிறலாமான்னு திங்கிங்ல இருந்தேன்... ஜஸ்ட் ஆத்தர் நோட்ல அந்த எபிய ஒன் பாராகிராஃப்ல சொல்ல நினைத்தேன்... பெருசா இழுக்கிறதுனால கட் பண்ண நினைத்த எபி அது... அதுனாலதான் டீசர்ல கூட போடலை... கடைசி நேரத்துல போடத் தோணுச்சு... போட்டுட்டேன்... அந்த எபிக்கு நீங்க கொடுத்த வரவேற்புக்கு... கருத்துகளுக்கு... லைக்ஸுக்கு மிகவும் நன்றி...
அடுத்த எபி போட்டுட்டேன்... இந்த எபில இன்னும் ஒரு பார்ட் இருக்கு... நாளைக்கு போட்றேன்...
நன்றி
பிரவீணா...
அத்தியாயம்:69-2
அடுத்து இரண்டு நாட்கள் கடந்திருக்க… கண்மணியையும் ரிஷி எப்படியோ சமாதானப்படுத்தியிருக்க… அவர்களுக்கு இடையே அன்னியோன்ய… அழகான நாட்களாக மாறி இருந்தது அந்த இரு நாட்களும்
அதன் பிறகு கண்மணி ஒரு வார விடுமுறையை ரத்து செய்து மீண்டும் பணிக்குச் சென்றிருக்க… ரிஷியும் அன்று கம்பெனிக்குச் சென்றிருந்தான்…
அப்படி ஒரு வழக்கமான பகல் வேளையில் சத்யா அவன் அலைபேசியோடு வந்து நின்றான் ரிஷியின் முன்பு…
“ஆர் கே” என்று அழைத்தபடி அலைபேசியில் கைவைத்து எதிர்முனை கேட்காதவாறு மூடியவன்…
“ஆதவன்” என்று மெதுவாக ஒரு வார்த்தையாகச் சொல்ல… ஆச்சரியமாக புருவம் உயர்த்தினான் ரிஷி…
எதிர்பார்த்திருந்த விசயம் தான்… இவ்வளவு சீக்கிரம் என்பதுதான் அங்கு ஆச்சரியம்… தன் நண்பன் விக்ரமை மனதுக்குள் மெச்சியபடி கைகளை சத்யாவின் புறம் நீட்ட அலைபேசி ரிஷியின் கைகளுக்கு இடம் மாறியிருந்தது…
“ஹல்லோ நான் ஆதவன்… கேசவன் பையன்” சொன்ன ஆதவன்… ரிஷியின் அலட்சியமான பதிலை எதிர்பார்த்திருந்தான்… ஆனால்
“ஆதவன் அண்ணா” என்ற ரிஷியின் குரல் உற்சாகமாக வெளியே வர….
“ஹலோ… ஆதவன் அண்ணா.. எப்படி இருக்கீங்க… நீங்களா என்கிட்ட பேசுறது நம்பவே முடியலை… ஆண்ட்டி எப்படி இருக்காங்க… “ என ரிஷி பேசப் பேச ஆதவன் எதிர்முனையில் ஆச்சரிய பாவம் காட்ட
“என்னண்ணா விசயம்… திடீர்னு எனக்கு கால்… நம்ம பேக்டரி விசயமாவா… ஆனால் நீங்க அதுல தலையிட மாட்டீங்கன்னு கேள்விப்பட்டேனே… இல்லைனா நானே உங்ககிட்டயே வந்து பேசி இருப்பேனே…” ரிஷி கடகடவென்று பேசினாலும்… அவனது ஒவ்வொரு வார்த்தையிலும் பவ்யம் பவ்யம் பட்டுமே
“ரிஷி… ரிஷி… என்னைப் பேசவிடறியா” என்ற போது ஆதவனின் குரலில் இறுக்கமெல்லாம் இல்லாமல் மாறி சகஜ பாவம் வந்திருக்க…
”நான் உன்னை மீட் பண்ணனும்… என் பார்ட்டனர் விக்ரமும்.. அப்புறம் நட்ராஜும் இருக்கனும் அந்த மீட்ல…”
யோசித்தபடி… பதில் சொல்லாமல் ரிஷி இருக்க…
“உன்னோட அப்பாவோட ஆசை நிறைவேறனும்தானே இவ்ளோ நாள் கஷ்டப்பட்ட… எனக்கும் அது தெரியும்… நம்ம டீல அங்க இருந்தே பேச ஆரம்பிப்போம்” என்று ஆதவன் நிறுத்தி தன் அருகில் அமர்ந்திருந்த விக்ரமைப் பார்க்க… விக்ரமோ… படபடத்த மனதை தனக்குள் அடக்கியபடி நிதானப்பார்வையில் ஆதவனைப் பார்த்தான் சாதரணமாக இருப்பது போலக் காட்டிக் கொண்டான் என்றாலும் அதற்கு பிரயத்தனப்பட்டான் என்றே சொல்ல வேண்டும்..…
“ஹ்ம்ம்… சரி… எனக்கும் ஓகே… ஆனால் கேசவன் அதாவது உங்க அப்பா அவரும் இருக்கனும்…” இப்போது ரிஷியின் குரலில் கடினத்தன்மை கலந்திருக்க… ஆதவனுக்கும் அது புரியாமல் இல்லை…
மருந்துக்கு கூட கேசவனுக்கு மரியாதை கொடுக்கவில்லை ரிஷி…. ஆதவனும் உணர்ந்தான் தான்… தன் அன்னையைப் பாசத்தோடு விசாரித்தவன்… தன்னிடம் சகஜமாகப் பேசியவன்… தன் தந்தை என்று வரும் போது அவன் ஒட்டாத தன்மையைப் புரிந்துக்கொண்டு ரிஷியைப் புரிந்தவனுக்கு… ரிஷி தன்னிடம் நடிக்கவில்லை என்றே தோன்றியது… ரிஷி முதலில் ஆதவனிடம் பேசிய விதத்தில்… அவனை நம்பமுடியவில்லை… ஆனால் ரிஷி கேசவன் விசயத்தில் மறைக்காமல் காட்டிய வெறுப்பு முகம்.. ஆதவனுக்கு ரிஷியை முற்றிலுமாக இல்லாவிட்டாலும் ஓரளவு நம்ப முடிந்திருக்க… ஆதவனும் இப்போது அனுசரித்து பேச ஆரம்பித்திருந்தான்…
ரிஷியும் அதை உள்வாங்கிக் கொண்டான்…
அவன் எதிர்பார்த்தபடியே ஆதவன் அவன் இழுத்த இழுப்புக்கு வர ஆரம்பித்து விட்டான் என்ற முதல் அத்தாட்சி… நினைத்த போதே ரிஷியின் இதழ் இலேசாக வளைந்தது ஏளனத்தில்… சத்யாவை நோக்கி கட்டை விரலை உயர்த்திக் காட்டியவனாக… மீண்டும் அலைபேசியில் கவனம் வைத்தான்
”அண்ணா… சொல்லுங்க… அவரைக் கூட்டிட்டு வர்றீங்களா” என்று ரிஷி இழுக்க…
“அவரும் இங்கதான் இருக்கார்…ஒண்ணும் பிரச்சனை இல்லை.. எங்க மீட் பண்ணலாம்… எங்க வீட்ல… இல்லை வேண்டாம் பொதுவான இடத்துல நம்ம மீட்டை வச்சுக்கலாம்.. ஃபர்ஸ்ட் நாம நம்ம டேர்ம்ஸ்லாம் பேசி ஒத்து வருதான்னு பார்த்துட்டு அஃபிஷியல் அனவுன்ஸ்மெண்ட் பண்ணலாம்… அதன் பிறகு என் கம்பெனி.. இல்லை உன் கம்பெனில” என்ற போதே
“என்னோட கம்பெனி இல்லை… நட்ராஜ் சாரோட கம்பெனி மட்டுமே… ’ஆர் கே’ மீன்ஸ் ராஜ் அண்ட் கண்மணி… …” ரிஷி திருத்தியவன்…
“ஹ்ம்ம்… ஏன் நாம நட்ராஜ் சார் வீட்ல மீட் பண்ணக் கூடாது… ரொம்ப சாதாரண இடம் தான்… ஆனால் நான் இப்போ இருக்கிற இடத்தை கேசவன் சார் பார்க்கனும்னு என் ஆசை… கண்டிப்பா அவர் பார்க்கனும்… எங்கே இருந்த எங்களை எங்கே கொண்டு வந்து விட்ருக்கார்னு அவரும் தெரிஞ்சுகட்டும்…” ரிஷியின் குரல் அழுத்தமாக இருக்க…
ஆதவனுக்கும் மறுக்கத் தோணவில்லை… விக்கியைப் பார்த்தபடியே ஒப்புதல் சொல்லி முடிக்க
”அட்ரெஸ் செண்ட் பண்றேன்… என்னைக்கு மீட் பண்ணலாம்… நீங்களே சொல்லுங்க…”
“இன்னைக்கே ஓகே வா… ஈவ்னிங்” ஆதவனு சட்டென்று கேட்க… ரிஷியும் சம்மதித்து போனை வைத்தான்…
ஆதவன் அலைபேசியை வைக்க… அடுத்த நொடி… அவனது அலைபேசிக்கு ரிஷி தன் முகவரியை பகிர்ந்திருந்தான்…
விக்கியிடம் அதைக் காட்டியபடியே…
‘ரிஷிகேஷ்’… ’கண்மணி’ இல்லம்…
என்று ஆதவன் வாசிக்க…
விக்ரமின் கண்கள் ’கண்மணி’ என்ற வார்த்தையை அலட்சியப்படுத்தி அதைத் தவிர்த்து அந்த முகவரியின் மற்ற வார்த்தைகளை எல்லாம் பார்க்க ஆரம்பித்து இருந்தது..
----
மாலை 5 மணி அளவில்… ’கண்மணி’ இல்லம் முன் நின்றிருந்த காரின் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த மருதுவின் முகம் அந்தக் காரின் ஏசிக் குளிரையும் தாண்டி வேர்த்திருந்தது…
திடீரென்று மருதுவை அழைத்து… காரை எடுக்கச் சொல்ல… அவனும் எடுத்தான் தான்… ஆனால்… இந்த ஏரியாவுக்கு என்றெல்லாம் சொல்லாமல் மெயினான சென்னை ஏரியாவைச் சொல்ல.. மருதும் வந்து விட்டான் தான்… ஆனால் மெயின் ஏரியாவில் இருந்து.. மருது இருந்த… வாழ்ந்த ஏரியாவுக்கு போகச் சொல்ல… மருதுவுக்கு கைகள் நடுங்க ஆரம்பித்திருந்தது…
அடுத்து… இதுதான் முகவரி என ஆதவன் சொன்ன போது முகமெங்கும் வியர்வை பூத்திருந்தது மருதுவுக்கு… தன்னை எப்படியோ கட்டுப்படுத்தி ’கண்மணி’ இல்லத்தின் முன் வந்து காரை நிறுத்தி இருந்தான் மருது
அவன் இருந்த போது வெறும் மரம் செடி எனச் சூழப்பட்டிருந்த இடம் இப்போது சுற்றுச் சுவர்களால் மூடப்பட்டு… ’கண்மணி இல்லம்’ என்ற பெயர்ப்பலகை தாங்கியிருக்க… அவனையும் மீறி முகம் மலர்ந்தது கண்கள் அந்தப் பெயரைப் பார்த்தபோது…
ஆதவனும் அவனோடு கூட வந்தவர்களும் இறங்கி உள்ளே சென்று விட… காரில் அமர்ந்திருந்தபடியே அந்தத் தெருவை வெறிக்க ஆரம்பித்திருந்தான் மருது… அவனுக்குத் தெரிந்திருந்த முகங்கள்… பழகிய நபர்கள் இப்போதும் அவன் கண்களில் பட… இப்போதைய சூழ்நிலையில் தன்னை யாருக்கும் வெளிக்காட்டக் கூடாது… கண்மணி… அவள் இப்போது இருக்கும் நிலை எல்லாம் பார்த்துதான் கண்மணியிடம் பேச வேண்டும்… முதலில் போல அவசரப் படக்கூடாது… அவசரப்பட்டு அவளை இத்தனை நாள் இழந்தது போதும்… முடிவெடுத்தவனாக
வேகமாக கைக்குட்டையை எடுத்து அவன் முகத்தை மறைத்து கட்டியபடி அமர்ந்தவனுக்கு… கண்மணி நட்ராஜின் இன்றைய நிலையும் கொஞ்சம் அச்சத்தை ஊட்டியதுதான்… அதே நேரம் கண்மணி நட்ராஜோடு இருக்கிறாளா… இல்லை… !!!
கண்மணியின் அன்னை பவித்ராவின் தாய் தந்தையைப் பற்றி… யோசித்தான்…
அவர்கள் கண்மணியை அவமானப்படுத்திய விதம் நன்றாகத் தெரிந்தவனாதாலால் … கண்டிப்பாக கண்மணி அவர்களோடு போயிருக்க மாட்டாள்… நட்ராஜோடுதான் இருப்பாள் என்று உறுதியாக நம்பினான்.. மருது
அதே நேரம் .. ஆதவனே நட்ராஜைத் தேடி வருகின்றான் என்றால்???…
மருது ஆதவன் பலம் அறிந்தவன் மட்டுமல்ல அவன் கருப்பு பக்கங்களையும் அறிந்தவன் மருது…
நட்ராஜ் ஆதவன் பேச்சைக் கேட்காவிட்டால்…. அவனின் அடுத்த இலக்கு தன் ‘மணி’ யாகத்தான் இருக்கும்… நினைத்த போதே தொண்டை உலர்ந்தது தான் மருதுவுக்கு
ஏதேதோ யோசித்தபடி காரில் அமர்ந்திருந்தவனைத் தாண்டி சென்ற அந்த ஸ்கூட்டி… கண்மணி இல்லத்தின் முன் நின்றது… கேட்டின் முன் பைக்கை நிறுத்திவிட்டு… கண்மணி தலைக்கவசத்தை எடுத்தபடி… தன்னை நோக்கி வந்த அவள்… அவளே தான்… அவன் மணியே தான்…. மருதுவின் கண்கள் சந்தோஷத்தில் அலைபாய ஆரம்பித்திருக்க… அவனது இதயத் துடிப்போ எகிற ஆரம்பித்திருந்தது…
“என்னுடைய மணி” தன் இதயத்தில் இருந்த அவளது பெயர்…. அவனுக்கு இதயத்துடிப்பாக மாற ஆரம்பித்திருக்க… வந்த கண்மணி…அவன் இருக்கையின் கண்ணாடிக் கதவைத் தட்ட… இவனும் இலேசாகத் திறக்க…
“ஆதவன் சார் காரா” தன் படபடப்பை எல்லாம் மறைத்து வேகமாகத் தலையாட்டினான் மருது… எத்தனை நாட்களுக்குப் பிறகு கேட்கும் மணியின் குரல்…
“இங்க நிப்பாட்டாதீங்க… போறவங்க வர்றவங்களுக்கு இடைஞ்சலா இருக்கும்… கொஞ்சம் பின்னால போனிங்கன்னா.. எம்ப்ட்டி ஸ்பேஸ் இருக்கும்… அங்க நிறுத்துங்க… “ என்றபடி..
“யாராவது ஏதாவது சொன்னாங்கன்னா… ’ரிஷி’ இல்லை ’மணி’ வீட்டுக்கு வந்த கெஸ்ட்டுனு சொல்லுங்க… யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க”
என்றவள் அதன் பிறகும் சிறிதும் தாமதிக்காமல்… கேட்டைத் திறந்து உள்ளே போய் விட… மருதுவின் கண்களுக்கு.. தன் ’மணி’ யைப் பார்த்துவிட்டோம் என்பதையே நம்பமுடியவில்லை…
கண்மணி திருமணமானவள் என்று ஏனோ எண்ணத் தோண்றவில்லை அவனுக்கு… அது போல எந்த அடையாளமும் அவளிடம் இல்லை என்றுதான் தோன்றியது அவனைப் பொறுத்தவரை…
அதே நேரம்… கண்மணியின் அழுத்தமான… கொஞ்சம் அதிகாரக் குரல்.. அவனுக்கு புதிது இல்லைதான்… அவள் சிறு வயதில் இருந்தே அப்படித்தான் பேசுவாள்… ஆனால் அவனிடம் அப்படி பேசுவது என்பதுதான் புதிது…
இன்னொன்றும் ஆச்சரியமாக இருந்தது… அது கண்மணியின் நிதானம்… யோசித்தபடியே அவன் காரை எடுக்க ஆரம்பிக்க…
இங்கோ… ’கண்மணி’ இல்லத்தினுள் கண்மணி நுழைந்திருந்தாள்…
‘விக்கி…’ ’ஆதவன்…’ மற்றும் ’ஒரு வயதானவர்…’ அந்த வயதானவர் ஆதவனின் தந்தை என்பதும் அவள் நொடியில் அறியாமல் இல்லை…
அவர்களைத் தாண்டிச் சென்று தன் இருசக்கர வாகனத்தை கொண்டு போய் ஷெட்டில் நிறுத்திவிட்டு வந்தவள்… நேராக ஆதவனிடம் வந்தவளாக…
“ரிஷியும் அப்பாவும் வந்துட்டே இருக்காங்க…. வெயிட் பண்ணுங்க” என்றபடி தன் வீட்டை நோக்கி நடந்தவள்… விக்ரமின் புறம் சிறிதளவு கூட பார்வையை திருப்பவில்லை…
விக்ரமும் அவளைப் பார்க்கவில்லை… கண்மணி ஆதவனிடம் பேசிக் கொண்டிருந்த போது வேறு திசை நோக்கி வெறித்துக் கொண்டிருந்தவன்… அவள் அந்த இடத்தை விட்டு நகர்ந்த போதுதான்… இயல்புக்கே வந்தவனாக…
“என்ன பணம்… என்ன வசதி இருந்தென்ன… பழக்கவழக்கம் அது அப்படியேதான் இருக்கிறது… வந்தவங்களை எப்படி வரவேற்கிறதுன்னு அப்போதும் தெரியவில்லை… இப்போதும் தெரியவில்லை… “ இகழ்ச்சியாக இதழ் வளைந்தது விக்கிக்கு…
விக்கி அப்படி இருக்க… ஆதவனின் பார்வை கண்மணியை அலசவில்லை… மாறாக ’கண்மணி’ இல்லத்தை கூர்மையாக அலசி ஆராய்ந்து கொண்டிருந்தது… கேசவனின் பார்வையும் தான்
அவ்வளவு பெரிய பரப்பில்… ஒரு பெரிய ஓட்டு வீிடு… இரண்டு கான்கீரிட் கட்டிடங்கள்… அதே போல் எங்கும் மரம்… செடி என பார்க்கும் இடமெல்லாம் பசுமை… வெளியே இருக்கும் ஏரியாவுக்கும்.. உள்ளே ’கண்மணி’ இல்லத்துக்கும் அவ்வளவு வித்தியாசம்…
ஆதவன் இயல்பாகஅமர்ந்திருக்க.. கேசவனோ இறுக்கமாக அமர்ந்திருந்தார்… மகனோடெல்லாம் அவர் பேசவே இல்லை.. ரிஷியை சந்திக்கப் போகிறோம்… அவர் வரவேண்டும்… சொன்னவனிடம் விண்ணப்பம் இல்லை… கட்டாயம் என்பதே இருக்க இதோ தன்னோடே அழைத்தும் வந்தும் விட்டான்… தனசேகருக்கு என்னனென்ன சூழ்ச்சிகள் செய்து அந்த கம்பெனியைக் கைப்பற்றினோம்… ஆனால் என்ன ஆனது… அதைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லையே… தனசேகர் மறைந்த போது எப்படி சந்தோசப்பட்டோம்… ஆனால் இப்போது யோசித்துப் பார்த்தால் தனசேகர் இருந்திருந்தால் கம்பெனி நமக்கே நமக்கு என்று இருந்திருக்குமோ… அவன் மகன் தலையீடு இருந்திருக்காமல் போயிருக்குமோ…
எத்தனை திட்டங்கள்… இதோ தன் மகன் கூட எத்தனை ஐடியா கொடுத்தான்… இன்று இவனுக்கு என்ன ஆனது… அதைவிட பெரிய வியாபாரம்… பணம் என்று அதை நோக்கிப் போனவன் தன்னையே மிரட்ட ஆரம்பித்து விட்டானே… மனம் தவித்தது கேசவனுக்கு… என்ன ஆனாலும் நான் எனது கம்பெனியை விட்டுக் கொடுக்க மாட்டேன்… தனக்குள் உறுதி செய்து கொண்டார் கேசவன்…
---
”அண்ணாத்த பெரிய பெரிய கார் கம்பெனிலாம் நமக்குக் கொடுத்த காரை எல்லாம் ஃபேக்டரிலேயே வச்சுருக்கீங்களே… எப்போதான் அதை எல்லாம் எடுக்கிறதா ஐடியா”…
கேட்ட தினகரிடம்…. ரிஷி பதில் சொல்லாமல்… முன்னால் கையைக் காட்டினான்…
“அங்க பாரு… காரை நிறுத்த பார்த்திபன் என்ன பாடுபடறாருன்னு… இது தேவையா நமக்கு… எனக்கு என் முதலாளியோட ’ஆர் எக்ஸ் 100’ போதும் “ என்று ரிஷி சிரிப்போடு சொல்ல…
தினகரோடு வந்திருந்த சத்யா பார்த்திபனைப் பார்த்து கை அசைத்து… தாங்கள் நின்றிருந்த இடம் நோக்கி வரச் சொல்ல… பார்த்திபன் இப்போது காரை எடுத்தபடி அவனை நோக்கி வர…
அதே நேரம் அங்கு நிறுத்தபட்டிருந்த காரில் இருந்த மருதுவின் கண்கள் அவர்கள் அனைவரையும் நோட்டமிட ஆரம்பித்திருந்தது… அதிலும் தன் முன்னாள் முதலாளியைத்தான்…
ஒரு காலத்தில் அவன் தான் நட்ராஜை இப்படி அழைத்து வருவான்… என்ன இன்று சுயநினைவோடு இருக்கும் நட்ராஜ்… அப்போது முழுபோதையில் இருப்பார்… அதே போல் முன்னால் அமர்ந்திருப்பது தான் இல்லை… வேறு யாரோ….
“தன் முதலாளியா இவர்… எப்போது குடி போதையில் இருந்தவரா… இப்படி இருக்கின்றார்… இளமை இருந்த போதும் கம்பீரமின்றி இருந்தவர் … இப்போது வயதான போதோ கம்பீரத்தோடு… அந்தப் புகைப்படத்தில் இருந்த நட்ராஜாகவே இருக்க…” பைக்கில் இருந்து இறங்கியவரை ஆச்சரியத்தோடு பார்த்த மருது தன்னையும் ஒருமுறை மேலிருந்து கீழ் பார்த்துக் கொண்டான்…
நானும் கூட 33 வயது இளைஞனாகவா இருக்கின்றேன்… என்னுடைய இளமை… கம்பீரம் எல்லாம் எங்கு போனது… போதை… குடி… பெண்கள்.. ஜெயில் என குட்டிச் சுவராகப் போய் விட்டதே என் வாழ்க்கை… இனியாவது திருந்தி வாழ முடியுமா… எனக்கு என் ‘மணி’ கிடைத்தால் போதும்.. இழந்த எல்லாவற்றையும் மீட்டு மீண்டு விடுவேன்
நட்ராஜ் பைக்கை ஓட்டி வந்தவன் இப்போதும் ஹெல்மெட்டைக் கழட்டாமல்…
“மாமா இங்க ஏதாவது இடம் இருக்கான்னு பாருங்க… இல்லை பக்கத்துல ஏதாவது இடம் பார்த்து ’பார்த்தி’ காரை நிறுத்தச் சொல்லுங்க… இல்லை உங்க பொண்ணுகிட்ட இருந்து ரோட் ரூல்ஸ்… பப்ளிக் நியூசன்ஸ் அது இதுன்னு இன்னைக்கு ஒரு கிளாஸே எனக்கு போகும்…” என்றபடியே வேகமாக ’கண்மணி’ இல்லத்தை நோக்கி தன் வாகனத்தை செலுத்தி மறைந்திருக்க..
மருதுவின் காதிலும் அந்த வார்த்தைகள் விழ… அவனுக்குமே சிரிப்பு வந்தது… அவனுக்கும் கண்மணியிடம் அந்த அனுபவம் இருக்கின்றதே…
---
சில துணுக்குகள் அத்தியாயம் 69-3 இல் இருந்து
அவனா இவன்… அந்த ரிஷியா இந்த ரி்ஷி… வாழ்க்கை கொடுத்த கஷ்டங்கள் இந்த அளவுக்கு மாற்றுமா… இதை எல்லாம் இவன் விரும்பி ஏற்றுக் கொண்டவையா? இல்லை தண்டனையாக ஏற்றுக் கொண்டிருக்கின்றானா???
இந்த இறுக்கமான ரிஷியை மாற்றி… மீண்டும் தன் பழைய நண்பன் ரிஷியாக பார்க்க வேண்டுமென்று மனம் தவிக்க ஆரம்பித்திருந்தது
---
இப்போது விக்கி
“உங்க அப்பா கம்பெனி பற்றி பேசப் போறதுக்கு… நான் ஏன் டைம வேஸ்ட் பண்ணனும்… நான் கிளம்பறேன்… ஆதவன்… நீங்க இதைப் பேசி முடிங்க… எனக்குத் தேவையில்லாத விசயம்..” என்று எழுந்தவனை ஆதவன் எப்படியோ சமாதானப்படுத்தி அமர வைக்க…
---
முதன் முதலாக ரிஷியை மறுத்து கண்மணி பேசுவதை குறித்துக் கொண்டவனாக…
“நான் அர்ஜூன் சார் கிட்ட பேசுறேன் கண்மணி… அவர் ஏற்கனவே சம்மதம் சொன்ன விசயம் தான் இது…” பார்த்திபன் அர்ஜூனுக்கு அழைக்க… அர்ஜூன் எடுக்கவில்லை… ஆதவன் விக்ரமிடம் சொல்லி அர்ஜுனை அழைக்கச் சொல்ல… அப்போதும் அர்ஜூன் எடுக்காமல் இருக்க…
ரிஷியைப் பார்த்தாள் கண்மணி…. தலையை மட்டும் ரிஷி அசைக்க…கண்மணி அர்ஜூனுக்கு அழைக்க அடுத்த நொடி அர்ஜூன் அவளது அழைப்பை எடுத்திருக்க… விக்ரமின் கண்கள் விரிந்திருந்தது…
Lovely update