அத்தியாயம் 69-1
கண்மணி ஊருக்கு போகும் காரணத்தால் ஏற்கனவே விடுமுறை என்று சொல்லப்பட்டிருக்க… மாணவர்களும் இன்று ட்யூசனுக்கு வரபோவதில்லை என்பதால்… அந்த வேலை இன்று இல்லை… வீட்டு வேலை மட்டுமே… அதுவும் இரவு உணவும் மூன்று பேருக்கு மட்டுமே என்று வேலைப் பட்டியல்களை தயார் செய்து முடித்தவள்… வீட்டையும் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து முடித்தபோது மணி ஐந்து ஆகி இருந்தது
’டீ’ போடலாமா ’காஃபி’ போடலாம் என்று யோசித்தபடியே இருந்தவள்… ரிஷியும் இன்று இருப்பதால் அவனுக்கு காஃபி பிடிக்கும் என்பதால் காஃபியே போடலாம் என்று முடிவு செய்தவளாக… பால் பாக்கெட்டை குளிர்சாதனப் பெட்டியில் இருந்து எடுத்த போதே கணவனின் பைக் சத்தம் ’கண்மணி’ இல்லத்துக்குள் ஒலிக்க… ரிஷி திரும்பி வந்து விட்டான் என்பதை உறுதி செய்தவளுக்கு… அவன் சற்று முன் நடத்திய ஆர்ப்பாட்டங்களும்… பிடிவாதமும் அவள் நினைவுக்கு வந்ததோடு புன்னகையும் முகத்தில் வந்து சேர்ந்திருக்க… அதே புன்னகையோடு சமையலறைக்குள்ளும் சென்றிருந்தாள்…
5 நிமிடம்… பத்து நிமிடம்… என நிமிடங்கள் கழிந்திருக்க… ரிஷி கீழே இறங்கி வரவே இல்லை… இன்னும் இவனுக்கு கோபம் தீர வில்லையா… அவனது மாடி அறைக்கே மீண்டும் தவம் செய்ய போய்விட்டானா… யோசனையோடு அடுப்பில் பொங்கி வந்த பாலை அணைத்த போதே...
வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது… கண்மணி வீட்டில் இருந்தால் அவள் வீட்டுக் கதவு திறந்துதான் இருக்கும்… ஆட்களின் வரவை… வெளிக் ’கேட்’ சத்தம் கேட்டே தெரிந்து கொள்ளலாம்... அதே நேரம் இந்த வீட்டு சமையலறையில் இருந்து பார்த்தால் யார் வருகிறார்கள் என்பதும் தெரியும்…
ரிஷி தான் சற்று நேரத்திற்கு முன் வந்திருந்தான்… அதன் பிறகு வெளியே இருந்து வேறு எந்த நபர்களும் வரவில்லை…
குடித்தனக் காரர்கள் கூட வீட்டுக் கதவு திறந்திருந்தால் கூட ’மணி’ என்று அழைத்தபடியேதான்… கதவைத் தட்டுவார்கள்…
யாராக இருக்கும் … குழப்பமாக சமையலறையில் இருந்து வரவேற்பறைக்கு வந்து எட்டிப் பார்க்க..
அங்கு நின்றிருந்ததோ ரிஷி… மிகவும் அடக்கமாக… அந்நியமாக… மூன்றாம் மனிதனைப் போல… வாயிலில் நின்றிருந்தபடி கண்மணியைப் பார்க்க…
புருவம் ஏறி உயர்ந்தது கண்மணிக்கு…
இவன் எதற்கு அழைப்பு மணியை அழுத்தினான்… அதோடு கூட வாயிலுக்கு வெளியே யாரோ வெளியாள் போல காத்திருக்க வேறு செய்கிறான் இவள் வருகைக்காக…
கேள்விக் குறியோடு சேர்ந்த ஆச்சரியப் பார்வை பார்த்தவள் … அவன் உள்ளே வருவான் என எதிர்பார்த்து… வரவேற்பறையிலேயே நின்றவளாக…
“ரிஷி வாசல்ல ஏன் நி..ற்…” என அவனிடம் ஆரம்பித்த போதே…
”மணி… ’கண்மணி’ இல்ல வீட்டுக்காரம்மா… கொஞ்சம் வெளில வர முடியுமா” வேகமாக ரிஷி அவளை மறித்துப் பேச…
ஏன் இப்படி… என்ன ஆனது இவனுக்கு…’ என யோசனை ஒரு புறம் ஓட ஆரம்பித்தாலும்…அவன் இவளிடம் பேசிய விதத்தில் கண்மணிக்கு சிரிப்பு வந்து விட… இருந்தும் அடக்கியபடி வாயிலுக்கு வந்தாள் கண்மணி…
“சொல்லுங்க ரிஷி… உள்ள வாங்க” கண்மணியும் அவனைப் போலவே மூன்றாம் மனிதனைப் போல… இயல்பாக அழைக்க
“இல்லங்க… கொஞ்சம் உங்ககிட்ட பேசலாமா…
“என் பேர் ரிஷின்னு தெரியும்… அந்த ரூம்ல ஆறு வருசமா வாடகைக்கு இருக்கேன்னு தெரியும்…. அதே போல எனக்கு மேரேஜ் ஆகிருச்சு… கிட்டத்தட்ட ஒரு வருசம் ஆகப் போகுது… அதுவும் உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன்…”
கண்மணி இப்போது வாயடைத்து போய்… அவனையேப் பார்த்துக் கொண்டிருக்க..
”ஆனால் என் வைஃப் இன்னும் என் அம்மா வீட்லதான் இருக்காங்க..”
“ஹான்..” கண்மணி அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரியாமலேயே விழி விரித்து நிற்க.. அவனோ அவன் விளையாட்டுத்தனத்தைத் தொடர்ந்தான்
“என் வீட்டுக்காரம்மாவை என் வீட்டுக்கு கூட்டிட்டு வரலாம்னு இருக்கேன்… ஐ மீன் என்னோட ரூம்க்கு… அதுக்கு ’கண்மணி’ இல்ல வீட்டுக்காரம்மாவா உங்க பெர்மிஷன் கொஞ்சம் வேண்டும்” ரிஷி முகத்தில் குறும்பெல்லாம் இல்லை… மிகத் தீவிர தொணியில் பேசிக் கொண்டிருக்க…
“என் வைஃப்… கொஞ்சம் பெரிய இடத்து பொண்ணுங்க…“ என்ற போதே கண்மணி முறைத்தாள்.
“ஏதோ என்னை நம்பி… “ என்ற போதே கண்மணியின் முறைப்பை பார்த்தவனாக
“சரி என்னை நம்பி இல்லை… எனக்கு வாழ்க்கை கொடுத்தாங்கன்னு வச்சுக்கங்க” இப்போதும் கண்மணியின் முறைப்பு அதே அளவில் இருக்க…
“அதுவும் இல்லையா… என்னங்க… அப்படி சொன்னாலும் முறைக்கறீங்க… இப்படி சொன்னாலும் முறைக்கிறீங்க… சரி விடுங்க.. ஏதோ டிஸ்னி என் பொண்டாட்டி சொல்வாளே… ஹான்… டெஸ்டினின்னு வச்சுக்கங்க… கல்யாணம் பண்ணிகிட்டோம்… “
இப்போது அவனை கைசைகையாலே நிறுத்தச் சொன்னவள்
”சரி அந்தக் கதை எல்லாம் விடுங்க…… அவங்க வர்றாங்களா… ஓகேனு சொல்லிட்டாங்களா” என்று வேண்டுமென்றே ரிஷியிடம் வம்பிழுத்தவள்
”அது உங்க குடும்ப விசயம்… எனக்கெதுக்கு…. அவங்க வந்துட்டுப் போகட்டும்… ஆனால் என்னோட பெர்மிஷன் என்ன வேணும் உங்களுக்கு... ஐ மீன் ஹவுஸ் ஓனரா…” என்று கண்மணியும் தன் கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு அதிகார பாவனையில் கேட்டவள்
”அக்ரிமெண்ட்ல… உங்க ஒருத்தவங்களுக்கு மட்டும்தான் ரூம்னு போட்ருந்தோமே அதை மாத்தனுமா” கண்மணி சிரிக்காமல் தான் கேட்க வேண்டுமென்று நினைத்தாள்… ஆனாலும் சிரிப்பை மறைக்க முடியவில்லை
”ஓ அது வேற இருக்கோ.. ‘ ரிஷி யோசிப்பது போல பாவனை செய்தவன்…
”அதுவும் மாத்துவோம்… ஆனால் இன்னைக்கு இல்லை.. இன்னொரு நாள் பார்த்துக்கலாம்… இது அதைவிட முக்கியம் மணி” என்றவன்
”அவ என்னதான் பணக்கார விட்டு பொண்ணா இருந்தாலும்…. அந்த எண்ணமே அவளுக்கு கொஞ்சம் கூட இருக்காது… ரொம்ப சிம்பிளா இருப்பா…”
“ம்ஹும்ம்… அவங்க பெருமைலாம் இருக்கட்டும்… இப்போ நான் என்ன பண்ணனும்.. அதை மட்டும் சொல்றீங்களா ரிஷி சார்”
“நீங்க ஒண்ணும் பண்ணவேண்டாம்ங்க… என் ரூம்ல கொஞ்சம் பெயிண்ட் வொர்க் பண்ண… பெர்மிஷன் கொடுத்தால் மட்டும் போதும்… அதுக்கு ஆகிற செலவு கூட நானே ஏத்துக்கிறேன்… உங்ககிட்டலாம் எதிர்பார்க்க மாட்டேன்… ”
“ஓ… அது வேற என்கிட்ட எதிர்பார்ப்பீங்களா ரிஷி சார்…” என்றவள்…
“ஆனா நீங்க என்கிட்ட பெர்மிஷன் கேட்க வந்தது மாதிரி தெரியலையே… திங்க்ஸ்லாம் வாங்கிட்டு வந்துட்டு இன்ஃபர்மேஷன் கொடுக்க வந்தது மாதிரி தெரியுதே” என்று கதவில் சாய்ந்தபடி கேட்க…
“நம்பிக்கைதாங்க வாழ்க்கை… நீங்க சம்மதம் சொல்வீங்கன்னு ஒரு நம்பிக்கைதான்… ஆறுவருசமா இருந்திருக்கேன்… தேடுனாலும் இப்படி ஒரு ஹவுஸ் ஓனரம்மா கிடைக்கமாட்டாங்க யாருக்கும்… டெனன்ட்டுக்கு ஒரு பிரச்சனைனா… உதவி பண்ற ஹவுஸ் ஓனர்ஸ்தான் பார்த்திருக்கேன்… ஆனால் வாழ்க்கையே கொடுக்கிற வீட்டுக்காரம்மா யாருக்கு கிடைக்கும் சொல்லுங்க…” என்று கண்சிமிட்ட…
“ரிஷி.. உங்கள” அவனை நோக்கி அடிப்பது போல பாவனையோடு கண்மணி அடுத்த அடி எடுத்து வைத்த போதே
வேகமாக அவளைவிட்டு விலகியவன்… அதே வேகத்தில் தன் அறையையோ நோக்கி வேகமாகப் போனவன்… மாடிப்படியின் முதல் படியில் போய் தான் நின்றிருந்தான்
கண்மணி இப்போது தன் வீட்டின் வெளியே நின்றவளாக … அவனை மூக்கு விடைக்க முறைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள்… சில மணி நேரங்களுக்கு மின் அவன் செய்த அடாவடி என்ன…. இப்போது குறும்புத்தனத்தோடு அவளைச் சீண்டி விளையாடுவது என்ன… பொய்க்கோபத்தை விடுத்து... அமைதியாக அவனை ரசிக்க ஆரம்பித்திருக்க
அங்கிருந்து சத்தமாகக் கத்தினான் ரிஷி..
”’மணி’ உன் மௌனத்தை சம்மதமா… எடுத்துக்கறேன்… ‘மணி’ தேங்க் யூ அக்செப்ட் பண்ணதுக்கு” சொன்னவன்… விசிலடித்தபடி… துள்ளளான நடையுடன்… மாடிப்படியில் ஏற ஆரம்பித்திருக்க… கண்மணி இப்போது சிரித்தபடியே தன் வீட்டுச் சமையலறைக்குள் நுழைந்திருந்தாள்…
---
”ரிஷிக் கண்ணா” அறைக்குள் நுழையும் போதே ரிஷியின் மனைவியாக வந்திருந்ததை உறுதிப்படுத்தியவளாக உள்ளே நுழைய… ரிஷியோ அந்த அறையின் சுவரின் ஒரு பகுதியில் கிட்டத்தட்ட பாதிப்பகுதியில் வண்ணம் அடித்து முடித்திருந்தான்…
அறையே சிறிய அறை… அதில் ஒரு புறம் மட்டுமே என்பதால்… அவனுக்கு அதிக சிரமம் எல்லாம் இல்லை… என்னதான் சிரம் என்றாலும் நாற்காலியின் மேல் நின்று… அடித்துக் கொண்டிருந்தவனின் மேல் எங்கும் வண்ணப் பூச்சு சிதறி இருக்க… கூடவே வேலை செய்த வியர்வை வேறு…
உள்ளே வந்தவள்… “காஃபி.. ” என்று அவனைப் பார்க்க
அவனும் நாற்காலியில் இருந்து குதித்தவனாக… குதித்த அதே வேகத்தில் இவளது துப்பட்டா நுனியைத் தன்வசம் கையகப்படுத்தியவன்… முகத்தை அதில் துடைக்க ஆரம்பித்திருக்க… வழக்கமான நிகழ்வுதான் என்பதால்.. கண்மணியும் தடுக்கவில்லை…
“ரொம்ப சீக்கிரமா கொண்டு வந்துட்ட போல… நானே பாதிச் சுவரை முடிச்சுட்டேன்” என்று நக்கலாகக் கேட்டவனிடம்... காஃபியை நீட்டியபடியே…
“கீழ் விட்டு அக்கா வந்திருந்தாங்க…” கண்மணி சொல்ல
“ ’கண்மணி’ இல்ல வீட்டுக்காரம்மாவா கடமை செஞ்சிட்டு வர்றீங்க “ என்றபடி கையில் அவள் கொடுத்த டம்ளரை வாங்கியவன் அதன் பிறகு ஏதும் அவளிடம் பேசவில்லை… அவள் கொடுத்த காஃபியை குடிக்க ஆரம்பிக்க
கண்மணி தனக்காக இன்னொரு குவளையில் கொண்டு வந்திருந்த காஃபியைக் குடித்தபடியே… அவனை விட்டு நகன்று… சுவரைப் பார்த்தவள்… பின் அவன் வாங்கி வந்த பொருட்களை எல்லாம் நோட்டமிட்டவள்… பின் மீண்டும் அவன் அருகில் வந்து நின்ற போதோ… ரிஷி அவளைப் பார்த்தபடியே காஃபியைக் குடித்து முடித்திருந்தான்…
”மணி… கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாம்ல… உனக்கெல்லாம் நானே வாலண்டியரா ஹெல்ப் பண்ணலை… அவ்ளோ பெரிய ரூம்க்கு” இயல்பான பார்வையுடன் கேட்க…
கண்மணி…. இதய வடிவிலான ஸ்டிக்கர்களை எல்லாம்… நின்ற இடத்திலிருந்து மீண்டும் பார்த்தபடியே…
“நான் ஹெல்ப் கேட்கவே இல்லையே… நீங்களா பண்ணின உதவிக்கு எதிர் உதவிலாம் எதிர்பார்க்க கூடாது… நானே இதெல்லாம் அசால்டா ஒரே ஆளாப் பண்ணுவேன் ரிஷிக் கண்ணா… அது மட்டுமில்லை பொண்டாட்டிக்குப் பண்றதுக்குலாம் அடுத்தவங்ககிட்ட ஹெல்ப் கேட்கக் கூடாது… ஃபுல் ஓனர்ஷிப்பும் நீங்கதான் எடுத்துக்கனும்… அதுதான் புருஷ லட்சணம் ” கண் சிமிட்டியவள் கன்னக் குழியோடு அவனுக்கும் குழிப் பறித்தவளாக…
“வர்றட்ட்ட்டுட்டுமா ரிஷி சார்… பை…” என்றபடியே அவன் குடித்து வைத்திருந்த காஃபிக் கோப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பப் போக…
“ஹலோ… “ என்றவனின் குரல் உயர… கண்மணி வேகமாக அவனைத் திரும்பிப் பார்க்க.. அவளின் வேகப் பார்வையில் இருந்த முறைப்பில் சட்டென்று தணிந்தவனாக அவளைப் பார்த்து நிற்க
“அப்புறம் மிஸ்டர் ரிஷி சார்… எனக்கும் கல்யாணமாகிருச்சு அது உங்களுக்கும் தெரியும்னு நினைக்கிறேன்… என் வீட்டுக்காரர்… என்னை.. இன்னைக்கு அவர் வீட்டுக்கு கூட்டிட்டு போக வர்றாரு… நான் அதுக்கு ரெடி ஆக வேண்டாமா உங்களுக்கு ஹெல்ப் பண்ணேன்னா எனக்கு லேட் ஆகாது…” அப்பாவியாய் சொல்லி அவனை இமை கொட்டிப் பார்த்தாள்…
அவனின் அடாவடிக்கு அடாவடியாக…
அவனின் விளையாட்டுத்தனத்துக்கு விளையாட்டாக
அவனின் குறும்புத்தனத்துக்கு குறும்பாக… என கண்மணி மட்டுமே மாற முடியும் என்பதை அவனிடம் காட்டி இருக்க… தானாக இறங்கி வந்திருந்தான் ரிஷி…
“மேடம் கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்க… ஒரே ஆளா கஷ்டப்படுறேன்… ஹெல்ப் மீ… பாவமா தெரியலை.. கொஞ்சம் டைம் சேவ் பண்ணலாம்ல” என்றவனிடம்
”முடியாது… முடியாது” என்று கை சைகையோடு குறும்பாாகச் சொல்லியபடியே கண்மணி… கீழே இறங்கப் போக
“அடியேய்” ரிஷி கத்திய போதும் நிற்காமல் போக
“அம்மு… “ என்றவன் குரலில் நின்று திரும்பிப் பார்த்தவள்… இப்போது பேச ஆரம்பித்தாள்…
“கீழ போய்… ஏணி எடுத்துட்டு வர்றேன்… உங்களுக்கு ஹெல்ப் பண்ணாமல் வேற யாருக்கு பண்ணப் போறேன் “ என்றவனிடம் கண்சிமிட்ட… அவளருகில் சிரித்தபடி வேகமாக வந்தவன்
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்… நீ மட்டும் போதும் வா” அவள் கையை இழுத்தவன்… உள்ளே சென்று நாற்காலியின் மேல் ஏறி நின்றபடி… அவளிடம் கையை நீட்ட… கண்மணியின் கண்கள் விரிந்தன…
அவன் தரையில் நின்று கொண்டு இவளைத் தூக்கினால்… இவளும் பயப்படப் போவதில்லை… இப்போதோ மிரண்டு விழித்தாள் கண்மணி…
“வா கண்மணி… நான் பார்த்துக்கறேன்…” அவன் அழைக்க
கண்மணிக்குமே இது போல ஏதாவது புதிதாக சாகசம் பண்ணினால் உற்சாகம் தானாக வந்து விடுமே… இரு கரங்களையும் அவனை நோக்கி உயர்த்தியவளுக்கு இப்போதும் பயம் இருந்தாலும்… அவளும் துள்ளலாக அவனிடம் கை நீட்டினாள்… அவனும் தூக்கி இருக்க…
ரிஷியை இறுக்கமாகப் பற்றிக் கொண்டவள்…
“ரிஷி நல்லா பிடிச்சுக்கோங்க… கையை விடப் போறேன்… விடப் போறேன்… விட்டுட்டேன்” என்றபடி அங்கிருந்த உயர்ந்த நாற்காலி மேஜையின் மீது இருந்த பிரஷ்ஷை எடுத்து வண்ணத்தில் தோய்த்தபடியே
அடிக்க ஆரம்பிக்க… அதன் பிறகு அங்கு அவர்களுக்கே உரிய பிரத்யோக நிமிடங்களாக மாறி இருக்க… கிட்டத்தட்ட இருள் சூழ்ந்த நேரத்தில்… அனைத்து வேலைகளும் முடிந்திருந்தது… அறையும் சுத்தமாகி இருக்க… அவர்களும் குளித்து முடித்து அன்றைய இரவுக்கு தயாராக ஆரம்பித்து இருந்தனர்…
---
நட்ராஜும் சாப்பிட்டு விட்டு…. மரத்தடியில் அமர்ந்து சிறிது நேரம் மகளுடனும் மருமகனுடனும் பேசிவிட்டு… அவரும் உறங்கச் சென்றிருக்க… ரிஷியும் தன் அறைக்குச் சென்றுவிட்டான்….
மணியும் கிட்டத்தட்ட பத்தாகி இருந்தது…. கண்மணி வழக்கம் போல அந்த இல்லத்தின் உரிமையாளராக… வெளிக்கதவைத் தாழிட்டு கண்மணி இல்லத்தின் பாதுகாப்பை மேற்பார்வையிட்டு விட்டு… பின் தான் தங்கியிருக்கும் தன் வீட்டையும்… பூட்டி விட்டு ரிஷியின் அறைக்குச் சென்ற போது… மணி பத்தைத் தாண்டி இருந்தது..
---
“வெல்கம் டூ அவர் ஹவுஸ்” வரவேற்றவனோ தன் தேவதைக்கு அவள் தலை முதல் பாதம் வரை காணிக்கையாக தன் பார்வையைச் சமர்ப்பித்திருந்தான்,,,
சாதாரண காட்டன் புடவை… தலையில் பூ கூட வைத்திருக்கவில்லை… நெற்றியில் மணமானவள் என்று பறைசாற்றும் குங்குமம் எப்போதும் இருக்காது... இன்றுமே இல்லை… நெற்றியில் சிறு பொட்டு மட்டுமே…
அணிகலன்கள் என்றால்.. இவன் அணிவித்த மாங்கல்யமும்… இவன் கொடுத்த மூக்குத்தியும்… கூடுதலாக இரு கைகளிலும் சில கண்ணாடி வளையல்கள்… கொலுசு கூட அவள் அணிந்து இவன் பார்த்ததில்லை…
முகத்தில் ஒப்பனை என்பது சிறிதளவு கூட இல்லை… கண்களில் கண்மையும் இல்லை… உதட்டில் உதட்டுச் சாயமும் இல்லை..
மொத்தத்தில் அவள் அவனை மயக்கவென்று மெனக்கெடவே இல்லை…
ஆறுதலுக்கும் அவளே
பாசத்துக்கும் அவளே
குறும்புக்கும் அவளே
சீண்டலுக்கும் அவளே
கோபத்துக்கும் அவளே
செல்லத்துக்கும் அவளே
பிடிவாதத்துக்கும் அவளே
காதலுக்கும் அவளே
மோகத்துக்கும் அவளே
காமத்துக்கும் அவளே
ஆளுமைக்கும்அவளே
புன்னகைக்கும் அவளே
கண்ணீருக்கும் அவளே
நினைவுகளுக்கும் அவளே…
என மொத்தமாக அவனின் அனைத்துமே அவளாக மாறி இருக்க அவனை மயக்கவென வெளிக்காரணிகள் எல்லாம் அவளுக்குத் தேவையா என்ன…
“உள்ள வரலாமா” அறை வாயிலில் நின்றபடியே கண்மணி கேட்க
அவளைப் பார்த்தபடியே யோசித்தபடியே நின்றிருந்தவனை கண்மணியின் குரல் அவன் மனைவியிடமிருந்து பிரித்து இவ்வுலகத்திற்கு கொண்டு வர…
தன்னவள் என்ற உரிமையோடு… காதல் காமம் மோகமெல்லாம் கலந்து யாசிப்பாய் அவளை நோக்கித் தன் இருகரங்களையும் விரிக்க
அவனுக்குத்தான் அவளின் எல்லாம் வேண்டும்…
அவள் கணவன் பேராசைக்காரன் தான்…… ஆனால் அவன் மனைவிக்கோ… அவனின் இந்த ஒரு சிறு அடைக்கல அரண் மட்டுமே போதும்… காலம் முழுவதும் அவனுக்காகவே அவள் வாழுவாள்…
அவன் நீட்டிய அந்த பரந்து விரிந்த கரங்கள் மட்டுமே கண்மணிக்குப் போதுமே.. கணவனிடம் தஞ்சமடையத் தேகமும் மனமும் பரபரக்க… கால்களை எடுத்து உள்ளே வைக்கப் போகும் போதே
ரிஷி திடீரென்று யோசித்தவனாக
“வெயிட் அங்கேயே நில்லு…. ” வேகமாக அவளைத் தாண்டி கீழே இறங்கிப் போனவன்… திரும்பி வந்த போது அவன் கைகளில் அவர்கள் தோட்டத்தில் மலர்ந்திருந்த அடுக்கு மல்லிப்பூ... அதுவும் ஒன்று மட்டுமே இருக்க. நிமிடத்தில் அந்த மலர் அவன் கைகளில் அவள் கூந்தலுக்கு இடம் மாறி இருந்தது…
“வலது காலை… எடுத்து வைக்கனுமா… கண்மணி… அந்த ஃபார்மாலிட்டிஸ்லாம் பண்ணனுமா என்ன” கேட்டபடியே… அவளோடு சேர்ந்தே உள்ளே வந்தான்…
இருவருமாகச் சேர்ந்து உள்ளே வந்த அடுத்த நொடிபொழுதில்... கண்மணி சூடியிருந்த ஒற்றை அடுக்கு மல்லிகையின் வாசம் அந்த அறையில் அப்போதுதான் அடித்த வண்ணப்பூச்சினால் வந்த மணத்தை மாற்றியிருந்தது…
--
ரிஷி கண்மணியை பின்னால் இருந்து அணைத்தபடி… அவள் தோள் வளைவில்… தன் முகத்தை வைத்தபடி… அவளை தனக்குள் வைத்தவனாக இருவருமாக அந்தச் சுவரைப் பார்க்க… அங்கிருந்த இணைந்த இதய வடிவ வரைவுகளைக் காட்டியபடியே
“எப்படி இருக்கு… மிஸஸ் ‘RK’ ஒரு ஹார்ட் ‘R’ ரிஷிகேஷ் இன்னொன்னு ‘K’ கண்மணி… “ காதருகே கிறக்கமாகக் கிசுகிசுப்பாக காதல் மொழி பேசியவனிடம்
“என்ன திடீர்னு… ரிஷிக்கண்ணாக்கு இவ்ளோ ஃபீல் இன்னைக்கு… சரி இல்லையே...” என்ற போதே அவனின் கைகள் அவள் இடையை இறுக்கி பின் தளர… அவளோ அவன் கைகளை நழுவ விடவில்லை…. அவனின் கைகளில் தன் கைகளை வைத்து அவள் இடையை அணைத்தபடி நிற்க வைத்த போதே.. ரிஷியின் அழுத்தமான முத்தத்தின் பதிவை… அவள் கன்னம் உணர… அவன் மூச்சுக்காற்று மட்டுமல்லாமல்… தடதடத்தஅவனின் இதயத்தின் ஓசையும் வழக்கமாக இல்லை….
வேகமாக அவன் புறம் திரும்பியவள்…
“என்னாச்சு ரிஷி… ஏதாவது பிரச்சனையா… சொல்லிருங்க” என்றவளிடம் அவன் உதடுகள் வார்த்தைகளாகப் பதில் பேசாமல் அவள் இதழ்களைப் பற்றியிருக்க… கணவனின் காதலின் மென்மை உணர்ந்திருந்தவள் முதல் முறையாக வன்மையும் உணர்ந்திருக்க… அப்போதும் அவனிடமிருந்து விலகாமல்… இமை விரிந்தபடி அவள் கண்கள் மட்டுமே கணவனைப் பார்த்திருக்க… அடுத்த சில நொடிகளில் அவள் இமைகளும் அவனிடம் தன்னை இழந்து கண்கள் மூடி இருக்க…
இதுநாள் வரை அவளிடம் அவன் சரணடைந்திருந்ததை உணர்த்தியவன்… இன்று அவள் தனக்கானவள் என்ற உரிமையை… அவள் எந்த அளவுக்குத் அவனின் தேவையாக மாறி இருக்கின்றாள் என்பதை அவளிடம் காட்ட... அவனின் ஒவ்வொரு தீண்டலையும்… தேடலையும் கண்மணியும் கொஞ்சம் கொஞ்சமாக பழகி சமாளிக்க ஆரம்பிக்க... நொடி கூட... இம்மி அளவு கூட அவளைத் தன்னை விட்டு பிரிய அனுமதிக்கவில்லை ரிஷி…
மொத்தமாக ரிஷி அவளை ஆக்கிரமித்திருக்க… அவன் மென்மையான ஆளுமையை உணர்ந்திருந்தவள் இன்று அவனின் அதிரடியான ஆளுமையை… அதன் ஆதிக்கத்தை உணர்ந்தாலும்… வழக்கம போல அவனைப் புரிந்து கொண்டவளாக அவனிடம் தன்னை முழுமையாக ஒப்படைந்திருந்தாள் அவன் கண்ணின் மணி..
---
மொட்டை மாடியின் சுவற்றில் கைவைத்தபடி நின்றபடி இருள் சூழ்ந்த வானை வெறித்தபடி நின்றிருந்தாள் கண்மணி… ரிஷியும் அவளுடன் சேர்ந்து நின்றிருந்தான் தான்… வெளியே வெறிக்க வில்லை… தன்னவளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்
ஏனோ தெரியவில்லை… ’அந்த துரை இறந்து விட்டான்… ’ என்று சற்று முன் ரிஷி சொல்லி தெரியவந்த போது கண்மணிக்கு மனம் அமைதி அடையவில்லை… அதுவும் தானே தன் கைகளால் கொன்று விட்டதாக அவன் மறைக்காமல் சொன்னபோது… அன்று அவளிடமிருந்து தப்பித்தவன்… இன்று ரிஷியின் கைகளுக்கு தப்பவில்லை… சந்தோசம் தான்... இருந்தும் சந்தோசப் பட முடியவில்லையே ஏன்???
அதே நேரம் அந்த துரை ரித்விகாவைத் தேடி வந்ததும் ஞாபகத்துக்கு வர… கண்மணி, கார்லா மட்டும் இல்லையோ… இன்னும் எத்தனையோ பேரோ… இவர்களிடம் சிக்கி தப்பித்தார்களா… இல்லை முடியாமல்… அதை நினைத்த போதே தொண்டைக் குழி அடைக்க ... அவள் எச்சிலை விழுங்கவே முடியாமல் தவித்து நின்றவளின் தோள்களை ரிஷியின் கரங்கள் மெல்ல அழுந்த… அவன் மார்பிலேயே அடைக்கலமானவளிடம்
“என்னாச்சும்மா” வழக்கமான கண்மணியின் ஆறுதல் வார்த்தைகள் இன்று ரிஷியிடமிருந்து வர…
”இதுக்காகத்தான்… ஆஸ்திரேலியால என்கிட்ட டைம் கேட்டிங்களா ரிஷி… ”
”இன்னுமே ஒருத்தன் உயிரோட இருக்கானே…” மருதுவின் பெயரை உச்சரிக்கவில்லை ரிஷி
“கண்ணுக்கு கண்… பல்லுக்கு பல்… இது உங்கள சமாதானப்படுத்தியிருமா ரிஷி… ”
“தெரியல கண்மணி… என் கண்ணு முன்னால ஒரு முறை தவறு நடந்து ஒண்ணும் பண்ணாம நான் விலகி வந்துட்டேன்… ஆனால் மறுபடியும் ஏன் அவன் நம்ம வழில வந்தான்… யோசித்துப் பார்க்கும் போது நான் செஞ்சது தப்பில்லை… அதே நேரம் நான் செய்தது சரின்னும் சொல்வேன்… எஙகப்பா சொன்னார் அன்னைக்கு… கடவுள் நீ சொல்ற மாதிரி கல்லு இல்லை ரிஷி… இந்த மாதிரி மனுசங்க ரூபத்துலதான் வருவார்னு… நான் அன்னைக்கு கார்லாவைக் காப்பாத்தினது சரினா… கடவுள் செய்த செயலுக்கு ஒப்பான செயல்னா… இன்னைக்குத் துரையை கொன்னதும் சரிதான்… அப்புறம் ஏதோ உன்னைப் பார்த்தது… நாம சேர்ந்ததுன்னு டெஸ்டினி கதை சொல்வியே… அதுவும் இதுல அடங்கும்… ” இறுக்கமானக் குரலில் சொன்னவனைப் பார்த்தவளின் கண்களில் வலி இருக்க.. அதிலும்
“டெஸ்டினி’ என்ற வார்த்தை… ரிஷியிடம் எத்தனையோ முறை சந்தோஷமாக சொல்லி இருக்க.. முதன் முதலாக அந்த வார்த்தை அவளுக்கு பயத்தைக் கொடுக்க ஆரம்பித்து இருந்தது… ரிஷிக்கு உணர்வுகளின் தாக்கம் அழுந்தும் போது எந்த அளவுக்குப் போவான் என்று தெரியும்… இன்று துரை வரைப் பார்த்துவிட்டாள் தான்...
இதுவரை அவன் அவன் தந்தை… தாய்… தங்கைகள் என வந்தபோது ஆறுதலாக அவனைத் தாங்கியவள்… முதன் முதலாக ஆறுதல் என்பதை மறந்து மனம் கலங்க ஆரம்பித்திருந்தாள்… கணவனை நினைத்து அவளுக்கு வந்த பயத்தால்…
“என்ன போலிஸ்… சட்டம் இதெல்லாம் யோசிக்கிறியா… கண்டிப்பா தூக்கு தண்டனைலாம் கிடைக்காது… அது உறுதி… தப்பு செஞ்சவனுங்க அவனுங்களுக்கே தப்பிச்சு வெளிய வர சட்டத்தில எத்தனையோ ஓட்டை இருக்கு.. எனக்கு இருக்காதா என்ன.. கவலைப்படாத பார்த்துக்கலாம்…” அவளுக்கு ஆறுதல் சொல்லி… அவளைப் பார்த்து சிரித்தவனை மௌனமாகப் பார்த்தவளின் மூக்கைத் திருகியவனாக…
“கூல் பேபி… நான் பார்த்துக்கறேன்… இதெல்லாம் நீ கண்டுக்காத… நீ சொல்வியே… கடந்த காலத்தைப் பார்த்துட்டே இருந்தால் எதிர்காலம் நமக்கு இருக்காதுன்னு… நீ எதிர்காலத்தை மட்டும் யோசி…” அவர்களின் வாழ்க்கையைத் திசைமாற்றப் போகும் வார்த்தைகள் என்று தெரியாமல் பேசிக் கொண்டிருந்தான் ரிஷி…
---
Lovely update
Unmaium solitan
Kanmani Rishi vitu vilaguna adu Avan nanmaikagave irukum lt
🙂🙂
Enna solradunnu theriyala.romba longa pora madhiri irukku. But very eagar to
Now I read all the episodes of KEK. Very Nice Story. As usual you are so expressive. Congratulations. And eagerly waiting for the new episodes.....
Nice episode
அருமை
RK romance super... Epadi erukravanga yeah pirinjaga???
Wonderful u
Rishi kaga thaan kanmani rishi vittu pirinchu irrukangala siss .Lakshmi amma kanmani kitta sonna varthaigal innaikku kanmani feelings towards rishi Elam vacchu Parkkum pozuthu apadithaan thonuthu semma ud sis
Very nice and interesting ud sis, eagerly waiting for your next ud sis😊👌👌
Nice update
Nice episode.
Jii.. 'Kanmaniyin kangalil therintha vali' Is this the reason for their separation..? Is that fear make a gap between them..? Waiting jii as usual..
Rishi kanmani kitta paint addika permission kekkura dialogue romba nalla erukku epadinga eppadi different ah yosikkreenga.aana kanmaniya yen rishi kitta eruthu piricheenga?
Wonderful epi sis. Innum Rishiya romba pidikuthu. And as always Kanmani's dialogues and her feelings towards Rishi are awesome.
Rk part ellam read pannumpothu pleasant as well as unarvupoorvama iruku.. Salute for the effort and ur words,.
Super semaiya
இவ்ளோ அருமையா ஒரு வாழ்க்கைய புரிதலோட வாழ்ந்துட்டு எப்படி பிரிஞ்சு இருக்காங்க?
கடைசில எல்லாரும் சொன்னத அதுவும் அந்த அர்ஜுன் பய நம்புன மாதிரி பொருத்தம் இல்லாத ஜோடின்னு prove பண்ணிட்டாங்க பிரிஞ்சு வந்து.
Nice ud sis ♥️♥️❤️❤️ Rishi kanmani oda unarvugal alagu.. ethuku piriya poranganu tan therila yen sis avangala pirikurenga vendame rendu perum
Arumaiyana ud. Rishi, Kanmani kitta paint adikka permission ketppadu sema.