Hai Friends,
எபி கண்டினியூ போட்டுட்டேன்.... நெக்ஸ்ட் எபி.. வீக் எண்ட் தான் இனி...
தேங்க்ஸ் ஃபார் ஆல் ஆஃப் யுவர் கமெண்ட்ஸ்...
ரிஷியோட பல பரிமாணங்கள் இதுவரை பார்த்திருப்போம்... கண்மணி கிட்ட அவ்வளவா பார்த்தது இல்லை... ரிஷிகிட்ட மட்டுமே அவளை வித்தியாசமான கண்மணியா உணர்ந்திருப்போம்.. அது கூட பெருசா தெரிந்திருக்காது... இனி வருகிற எபிசோட்ஸ்ல... கண்மணியோட மாற்றங்கள் தெரிய வரும்... அவ ஏன் ரிஷியை விட்டு பிரிந்தாள் ...ஹிண்ட் கொடுத்துட்டே தான் வருகிறேன்... ரிஷி மட்டும் கண்மணியை அறிவான்... நீங்களும் கண்மணியை ஃபீல் பண்ணுவீங்கன்னு நினைக்கிறேன்...
நன்றி
பிரவீணா...
அத்தியாயம் 68-4
காதருகே ஒலித்த கண்மணியின் குரலில்… ரிஷி நிமிர்ந்து அவளைப் பார்க்கும் போதே
“என்னாச்சு… ஏன்… இப்படிலாம் பண்ண மாட்டீங்களே ரிஷி” கேட்டபடியே நாற்காலியில் அமர்ந்திருந்தவன் முன் மண்டியிட்டு அமர்ந்தபடி… அவன் முகத்தை தன் கைகளில் ஏந்திக் கொள்ள…
“நான் சொல்றதைக் கேட்க மாட்டதானே…. அப்புறம் என்ன ரிஷிக்கண்ணா… கிளம்பு… கிளம்பு…“ என்றபடியே… தன் அருகே இருந்த இன்னொரு இருக்கையை இழுத்தவன் அவளருகே போட…
அவன் வாய்தான் அவளைக் கிளம்பச் சொன்னது… கைகளோ… அவன் வாய் சொன்னதற்கு முரணாக அவளுக்கு இருக்கையை இழுத்துப் போட… அவன் செயலில் கண்மணிக்கு அவளையும் மீறி புன்னகைதான் வந்தது… ஆனாலும் காட்டிக் கொள்ளவில்லை… காட்டாமலேயே அவனுக்கு எதிரே அமர்ந்தவள்
“நான் எப்போ ரிஷி போறேன்னு சொன்னேன்… அத்தைகிட்ட என்ன சொல்லி சமாளிக்கலாம்னு யோசிச்சுட்டு இருந்தேன்மா… நீங்க போக வேண்டாம்னு சொல்லும் போது நான் போவேனா” கண்மணியின் வார்த்தைகளில் ரிஷியின் முகம் இப்போது பிரகாசமாக… இருந்தும்
“நீதான் கதை எழுதுற ஆளாச்சே… ஒரு பொய் கூட கிடைக்கலையா என்ன” நம்ப முடியாத பாவனையில் கேட்டவன்… நக்கல் பார்வையில் சீண்டவும் செய்ய
“ஹ்ம்ம்.. ஆனால் இமாஜினேஷன் உலகம் வேற… அதை ரியல் வேர்ல்டோட கனெக்ட் பண்ண முடியாது ரிஷி… கதைக்காக ஆயிரம் யோசிக்கலாம்.. எதார்த்தம்னு ஒண்ணு இருக்கு,… அதுமட்டுமில்லாமல்… நான் பொய் சொல்ல மாட்டேன்… அது எனக்குப் பிடிக்காது…”
”பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின். “ வள்ளுவரே சொல்லிருக்காரு.. அதுனால பொய் சொல்லலாம்… ரிஷி அவளைத் திருத்த…
“ஹப்பா ரிஷி… கடைசி பெஞ்ச் ஸ்டூடன்ட்டா நீங்க… தமிழ் மட்டும் நல்லா கவனிச்சுருப்பீங்க போல… என்ன தமிழ் மிஸ் ரொம்ப பிடிக்குமோ…” புருவம் உயர்த்தி… கண்மணி அவனிடம் வேண்டுமென்றே வம்பிழுக்க…
”பேச்சை மாத்தாத… இப்போ என்ன சொல்ல வர்ற…” ரிஷி தன் பிடியிலேயே நிற்க
”எனக்கும் எப்படி சொல்றதுன்னு தெரியல ரிஷி… அத்தை எப்படி எடுத்துப்பாங்கன்னு புரியல ரிஷி… புரியுது உங்களுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லைனு… ஆனால் அத்தையைப் பொறுத்தவரை சென்சிட்டிவ் மேட்டர் இது… அத்தை நிலைமைல இருந்து யோசிங்க… முதன் முதலா குலதெயவம் கோவிலுக்கு கூப்பிட்டாங்க… நீங்க வரமாட்டேன்னு சொன்ன போதே… அவங்க முகம் மாறிருச்சு… இப்போ நானும் வரலேன்னு… சொன்னேன்னா… எப்படி எடுத்துக்குவாங்கன்னு தெரியலை… எல்லாருமே உங்கள மாதிரி எல்லாத்தையும் ஈஸியா எடுத்துக்குவாங்கன்னு நினைக்காதீங்க ரிஷி… அவங்க இடத்தில இருந்து யோசிங்க …”
“ப்ச்ச்” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டவன்… என்ன நினைத்தானோ தெரியவில்லை… அவள் புறம் மீண்டும் திரும்பியவன்… அவளைப் பார்த்தபடியே
“நான் எல்லாத்தையும் ஈஸியா எடுத்துக்குவேன்தான்… ஆனால் உன்னைத் தவிர… நீயும் என் இடத்தில இருந்து யோசி” என்றவனிடம் அவள் ஏதோ சொல்ல வாயைத் திறந்த போதே.. அவள் வாயைக் தன் கரங்களால் மூடியவன்
“இப்போ நீ கொடுக்கிற லெக்சர்லாம் கேட்கிற மனநிலைல நான் இல்லை.. அவங்கள எல்லாம் அனுப்பிட்டு வா… எவ்வளவு நேரம்னாலும் கேட்கிறேன்…” என்ற போதே… அறை வாயிலில் நிழலாட ரிஷி வாசலை நோக்கிப் பார்க்க… கண்மணியும் இப்போது வாயிலை நோக்கிப் பார்க்க… சட்டென்று எழுந்தவள்…
“வாங்க அத்தை… இதோ வந்துறோம் அத்தை” எனப் படபடத்தவளாக கண்மணி பேச ஆரம்பிக்க…
“சொல்லுங்கம்மா… உள்ள வாங்கம்மா” ரிஷியிடம் பதட்டமெல்லாம் இல்லை… மிக மிக இயல்பாக தன் தாயைப் பார்த்து ப்பேசியவனிடம்
“பிரேம் வந்துட்டாரு… கீழ வாங்க” என்ற இலட்சுமியும் மகனை அவன் முகத்தைப் பார்த்தபடியே பேச
“ஹ்ம்ம்ம்… வர்றோம்” என்றவன்… அடுத்த வார்த்தையாக
“கண்மணி வரலை…. அவ வரமாட்டாள்… நீங்க அவளோட திங்க்ஸை விட்டுட்டு மத்தவங்க லக்கேஜ் மட்டும் கார்ல ஏத்துங்க” என்ற போதே அதிர்ந்த இலட்சுமி… மருமகளைப் புரியாமல் பார்க்க…
என்ன காரணம் சொல்வது என்று புரியாமல் விழித்த கண்மணி அவஸ்தையாக இலட்சுமியைப் பார்த்தாள்…
சில நிமிடங்கள் கண்மணியையேப் பார்த்தபடி இருந்தவன்… அவகாசம் அளித்துக் காத்திருந்தான்… அவள் காரணம் சொல்ல….
ஆனால் அவளிடம் அமைதியே நிலவ…
“அம்மா… அவ வீட்டுக்கு துரமாம்… உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியாமல்… யோசிச்சுட்டு இருக்கா”
அடுத்த அணுகுண்டை ரிஷி சுலபமாக... தயக்கம் என்பது கொஞ்சம் கூட இல்லாம் வீச இரண்டு பெண்களுமே அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்…
கண்மணி இப்போது ரிஷியைப் பார்த்து முறைக்க.. இலட்சுமி வேறெதுவும் பேசவில்லை… இதற்கு மேல் என்ன பேசுவார்... என்ன பேச முடியும்...
“கண்மணி” என்று மருமகளிடம் திரும்பினார்
“ஹான் அத்தை…” கண்மணியின் குரலா எனும் அளவிற்கு… மெல்லியதாக வந்து விழ
“கீழ வா… உன்னோடதை மட்டும் தனியா எடுத்து வச்சுரு… கார்ல வைக்கிறதுக்கு சரியா இருக்கும்” என்றவர் ரிஷியை முறைத்தபடி… வேறு ஏதும் சொல்லாமல் போய்விட…
ரிஷி இப்போதும் கண்மணியைப் பார்த்து முறைத்தபடி தான் இருந்தான்…
அவன் செய்து வைத்த காரியத்திற்கு… சொன்ன வார்த்தைகளுக்கு…. கோபப்படவேண்டியவள்… முறைக்க வேண்டியவள் அவள்… ஆனால் அவன் முறைத்துக் கொண்டிருக்க…. கடுப்பானவளாக… அவனின் முறைப்புக்கு எல்லாம் சளைக்காமல் அவன் அருகே போனவள்…
”ரிஷி..” என்று கோபமாக… எரிச்சலாக அவனை அழைத்து பேச ஆரம்பித்த போதே… அவளை கரம் பற்றி இழுத்தவன்… அவளது இதழை முரட்டுத்தனமாக ஆக்கிரமிக்க ஆரம்பிக்க… கண்மணியும் எப்படியோ சுதாரித்து அவனை தள்ளி விட்டபடி… தன்னை அவனிடமிருந்து பிரித்து விலகி நின்றவள்…
வெகுண்டவளாக… “நீ..ங்” என்று அடுத்து ஆரம்பிக்க… அவளின் ஆவேசம் கோபத்தைத் தருவதற்கு பதில் இவனுக்கோ சிரிப்பைத் தர… மீண்டும் அவளை தன்னோடு அணைத்தபடி சிரித்தபடியே அவளை பேச விடாமல் மீண்டும் ஒரு இதழ் யுத்ததிற்கு ஆயத்தம் செய்ய ஆரம்பித்தவன்… அவள் விலக அவகாசமும் அளிக்கவில்லை… அனுமதியும் கொடுக்கவில்லை… அவன் கரங்களுக்கு பழகிய கண்மணியின் தேகம்… இன்றும் ரிஷிக்கு மட்டுமே பணிந்திருக்க… கண்மணி இப்போது திமிறவெல்லாம் இல்லை… ஒருகட்டத்தில்…. அவள் மூச்சுக்காற்றுக்கு திணறியதை உணர்ந்து தானாக ரிஷி விட்ட போதும் அவன் கையணைவில் இருந்து விலகாமலே நின்றிருந்தவளை… அவன் தான் தள்ளி நிறுத்தினான் தன்னை விட்டு…
“ஒரு வார்த்தை கூட பேச அனுமதி இல்லை உனக்கு… காரணம் தேடுறியா நீ… உனக்காக நான் காரணம் சொல்லிட்டேன்… அதுக்கு ரிவெஞ்ச்” என்றவனிடம்
“ரி… ஷி” என்று ஆரம்பித்தவள் அவன் மீண்டும் அவளருகே வருவதை உணர்ந்தவளாக… சட்டென்று தன் கைகளால் வாயை மூடியவளாக… அவனை விட்டு தள்ளிச் சென்று அறைக் கதவருகே போய் நின்றவள்… இனி வரமாட்டான் என்பதை உறுதி செய்தவளாக… அவனிடம் பேச வாயைத் திறக்கப் போக… அப்போது அவன் அவளை விடாமல்… சட்டென்று அவளை உள்ளே இழுத்து இப்போதும் கண்மணியின் இதழ்களைத் தன்வசமாக்கி இருக்க… ரிஷி புன்னகையோடே அவளிடம் தன்னைத் தொலைத்திருக்க… அவளிடம் தொலைந்திருந்தவன்… ஒரு கட்டத்தில் கண்மணியின் கண்களைப் பார்க்க… அவனிடம் தவிப்பாய்ப் அது ஏதோ சொல்ல வருவதை உணர்ந்தவன்… அதன் பின் தான் தன் உணர்வுக்கே வந்தவன்… விலகவில்லை இப்போதும்… மாறாக இருவரின் இதழ்களுக்கும் மட்டும் மில்லி மீட்டர் இடைவெளி விட்டவன்…
“சொல்லு அம்மு” என்றவனின் கிறங்கிக் கேட்ட குரலில் எல்லாம் இவள் கிறங்காமல்…
“உங்கள…!!!
லூசா நீங்க!!!… போன வாரம் தான் நான் பீரியட்… அத்தை எல்லாம் கேட்டுட்டுத்தான் இந்த வாரம் ப்ளானே போட்டாங்க… என் மானத்தை அத்தைகிட்ட வாங்கிட்டு… எனக்கு தண்டனை வேற கொடுக்கறீங்களா சார்” கோபமாக குரலை உயர்த்த ஆரம்பித்தவள்… அவளாகவே சத்தத்தின் அளவை குறைத்தபடி…
”எனக்கு வருகிற ஆத்திரத்துக்கு…” என்று பல்லைக் கடித்தவளுக்கு… அவனை என்ன செய்வதென்று தெரியவில்லை… யோசித்தவளுக்கு… தன் கோபத்தை அடக்கும் வழி தெரியாமல்… அவனை நெற்றிக் கண்ணால் எரிக்க
“சரி விடு… இதெல்லாம் சகஜம் தான்…. அவங்களும் இதையெல்லாம் தாண்டித்தானே வந்திருப்பாங்க… கூல் பேபி…” கொஞ்சம் கூட வருத்தமே இல்லாமல் கூலாகச் சொல்ல… கண்மணியோ பத்ரகாளி அவதாரத்துக்கு போக முயற்சிக்க…
”அம்மு அம்மு… கூல் கூல்… பாரு மூக்குத்தி ஸ்டோன் காணாமல் போய்ருச்சு… உன் கோபத்தால… சீக்கிரம் அனுப்பிட்டு வா… நான் என் ஸ்டோனைத் திரும்பப் பார்க்கனும்” ரிஷி தீவிரமெல்லாம் குறைந்து… குஷியாக… அவளை வம்பிழுக்க ஆரம்பித்திருக்க…
“ரிஷி…” கடுப்பாக உச்சரித்தபோதே….
“என் மேல பாசம் வந்தா… ரிஷிக்கண்ணாதானே… கூப்பிடனும்… எங்க கூப்டுங்க பார்க்கலாம்” குதுகலமாக அவள் முன் நின்றபடி அவளை உசுப்பேற்றிக் கொண்டிருக்க… அவன் மேல் வந்த கோபத்தை காட்டும் வழி தெரியாமல் தவித்தவள்…
சட்டென்று… அவன் சட்டையைக் கொத்தாக பிடித்து இழுத்து தன் அருகே கொண்டு வந்தவள்.. அவன் சுதாரிக்கும் முன்னேயே… அவன் மேல் உதட்டை மெல்லக் கடித்து வைத்து விட்டு வெளியேற…
“அம்ம்ம்ம்ம்மா… இந்த ரவுடிட்ட இருந்து நான் தப்பிக்க வழியே இல்லையா” என்று பொய்யாக அலறியிருந்தான்…. அவளின் ரிஷிக்கண்ணா முகமெங்கும் படர்ந்த புன்னகையோடு
---
”அண்ணி… பை…”
தளர்வான குரலில் விடைபெற்ற ரித்விகாவுக்கு பெரிய வருத்தம்… தன் அண்ணி தங்களோடு வராதது…
அதேநேரம் ரிதன்யாவோ… ரித்விகாவுக்கு மாறாக சந்தோசமாக இருந்தாள்… கண்மணி வரவில்லை என்பதால்… யாரிடமும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை என்றாலும்… அவள் கண்மணியின் வருகையை விரும்பவில்லைதானே… ஆக ரிதன்யா சந்தோசமாக காரில் ஏறி அமர்ந்திருக்க… ரிஷி… ஓட்டுநர் இருக்கையில் இருந்த பிரேமோடு பேசிக் கொண்டிருக்க….
இலட்சுமி கண்மணியிடம் வந்திருந்தார்…
“வர்றோம்மா” என்றவரின் குரலில் சுரத்தே இல்லை… தொய்ந்திருக்க
“அத்தை… அவரை தப்பா நினைக்காதீங்க… ஏன்னு தெரியலை… சொல்லவும் மாட்டேங்கிறார்… ஆனால் காரணம் இல்லாமல் இவ்ளோ பிடிவாதம் பிடிக்கிறவர் கிடையாது… “ தாய்க்கே மகனைப் பற்றி எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்க
இலட்சுமி எதுவுமே பேசவில்லை… கண்மணியையே பார்த்துக் கொண்டிருந்தவர்…
“அவனை விடு… அவன் சொல்றதை எல்லாம் நான் சீரியஸா எடுத்துக்கலை… எங்க கூட வர நினைக்கிறேன்னா… நீ வா கண்மணி… நான் அவன்கிட்ட பேசிக்கிறேன் ”
“இல்லத்தை… ரிஷி இவ்ளோ தூரம் சொல்லி நான் வந்தால் அவர் ஃபீல் பண்ணுவாரு… நீங்க போயிட்டு வாங்க…“ என்றவளை இலட்சுமி கவலையோடு பார்த்தார்…
“என்ன அத்தை” கண்மணி அவர் கவலை புரியாமல் கேட்க
”அவங்க அப்பா சொல்வாரு… நம்ம பையனுக்கு செல்லம் கொடுத்து பழக்கிட்டோமோன்னு… அதே தப்பை நீயும் பண்ணாத கண்மணி… பார்த்து நடந்துக்கோம்மா... உனக்கு நான் பெருசா சொல்லத் தேவையில்லை”
கீழ் உதட்டைக் கடித்தபடி… கண்மணி அவஸ்தையோடு தன் அத்தையைப் பார்த்தவள்…
“அப்படிலாம் இல்ல அத்தை… அவர் இவ்ளோ டென்சன் ஆகிறார்னா… கண்டிப்பா காரணம் இருக்கும்… அதுனாலதான்… நான் வரலை… நீங்க போயிட்டு வாங்க…” என்றபோதே
“நாளைக்காவது அவனையும் கூட்டிட்டு வர ட்ரை பண்ணலாமேம்மா” உதட்டைப் பிதுக்கினாள்… கண்மணி
“அதுவும் மாட்டேனுட்டார்… “ இலட்சுமியின் முகத்தைப் பார்த்துச் சொல்ல முடியாமல்… பிரேமோடு பேசிக் கொண்டிருந்த ரிஷியைப் பார்த்து முறைத்தபடியே சொல்ல..
”என்னமோம்மா… பார்த்துக்க…” என்றபடியே
“நீ பார்த்துக்குவேன்னு தெரியும்… அவனைச் சமாளிப்பேன்னு தெரியும்…” என்ற போதே கண்மணியின் கண்கள் பளிரென மலர்ந்திருக்க….
“அப்புறம் ஏன் அத்தை கவலைப் படறீங்க… நான் ரிஷியைச் சமாளிப்பேன்னு தெரியுதுதானே… “ என்று கண்மணி புன்னகை முகமாகக் கூற.. இலட்சுமியின் முகமோ மீண்டும் கூம்பியது
“நீ.. நீ மட்டும் தான் அவனைச் சமாளிக்க முடியும்ன்ற நிலைமை… அதுதான் கண்மணி பயமா இருக்கு… உன்னை மட்டும் மையமா வச்சு உன்னைச் சுற்றியே அவன் அவனை மாத்திக்கிட்டானோன்னு கவலையா இருக்கு… அவன நினைத்து மட்டும் இல்லை… உன்னையும் நினைத்துதான்… உன்னை அவன் ஆட்டிப்படைக்கிறான்னு தெரியுதும்மா… நீயாக இருக்கப் போய் அவனைச் சமாளிக்கிற… எனக்கு அது நல்லாவே தெரியுது… இது இப்படியே நீடிச்சா… நல்லது இல்லம்மா… ரெண்டு பேருமே கஷ்டப்படுவீங்க பின்னால” அதுவரை மலர்ந்திருந்த கண்மணியின் முகம் இப்போது இலட்சுமியின் வார்த்தைகளில் இருண்டிருக்க… அப்போதுதான் இலட்சுமிக்கும் தன் வார்த்தைகள் புரிய ஆரம்பித்திருக்க வேகமாகக் கண்மணியைப் பார்க்க…
வெகுநாட்களுக்குப் பிறகு கண்மணியின் கண்கள் கலங்க ஆரம்பிக்க முயற்சி செய்ததோ என்னவோ… அதன் விளைவாக… இலேசாக கண்மணியின் உதடுகள் நடுக்க ஆரம்பித்திருக்க
மருமகளின் நிலையைச் சட்டென்று புரிந்தவர்… தன்னையே தனக்குள் திட்டிக் கொண்டவராக
“சே சே… நான் தப்பா சொல்லலம்மா… உங்க ரெண்டு பேருக்கும் இடையில இன்னொரு ஜீவன் வந்தால் அவன் தானே சரி ஆகிருவான்னு சொல்ல வந்தேன்…. உனக்கும் ஒரு சுதந்திரம் கிடைக்கும்… உன்னை அப்போவாது விடுவானான்னு பார்க்கலாம்… உன்னை ரொம்பத்தான் படுத்துறான் இவன்” இப்போது இலட்சுமியின் வார்த்தைகளில்… இருள் சூழ்ந்திருந்த கண்மணியின் முகமும் சிறு புன்னகையைப் பூசி இருந்தது
மற்றதெல்லாம் மறந்தவளாக… தனக்கும் ரிஷிக்கும் இடையே தங்கள் வாரிசு… இந்த எண்ணம் அவளுக்குள் வந்தபோதே பல சந்தோசக் கற்பனைகள் எதிர்பார்ப்புகளோடு அவளுக்குள் உதிக்க ஆரம்பித்திருக்க… அவள் முகமும்… கண்களும்… வர்ண ஜாலம் காட்ட ஆரம்பித்திருக்க… இலட்சுமியும் முகம் மலர்ந்தார்…
”இது அழகு… நான் இதைத்தான் சொல்ல வந்தேன்… “ என்று மருமகளின் முகத்தில் சந்தோசத்தை மீண்டும் நிலைநிறுத்தியவராக… அவளைப் பார்க்க
“அத்தை நீங்க அல்டிமேட்… எல்லாம் மாமியாரும் மருமகள்கிட்ட பேரனோ… பேத்தியோ குடும்பத்துக்கு வாரிசு பெத்துக் கொடுன்னுதான் கேட்பாங்க… ஆனால் நீங்க மட்டும் தான் இந்த உலகத்திலேயே இப்படி பையனப் பார்த்து பயந்து… வாரிசு வேணும்னு கேட்கிறது” சிரித்தபடியே கண்மணி சொல்ல..
“பின்ன என்னம்மா… இவன் பண்றதெல்லாம் பார்த்தால் பின்ன எப்படி கேட்பாங்களாம்மா… என்னமோ போம்மா… உனக்கு மட்டும் தான் அவன் அடங்குறான்… ஆனால் அதுக்கு நீ படற பாடு இருக்கே.. “ இலட்சுமியும் தன் மகனை நினைத்து சலித்தவராக தொடர்ந்தார்
“உனக்காகவும் என் புள்ளைக்காகவும் நானே வேண்டிட்டு வர்றேன்… பார்த்து இருந்துக்கோ… அப்பாவைப் பார்த்துக்கோ… ”
”ரிஷியைப் பார்த்துக்கோன்னு உன்கிட்ட சொல்லவே தேவையில்லை…” என்று மருமகளை போகிற வாக்கில் கிண்டல் செய்தபடியே… விடைபெற்றவர்…. காரில் ஏறி அமர்ந்துவிட… சற்று நேரத்தில் அவர்கள் அனைவரும் விடைபெற… அவர்கள் சென்ற கார் அவர்களை விட்டு கண்மறைந்த அடுத்த நிமிடம்……
ரிஷியும் இப்போது பைக்கை எடுத்தபடி… அவள் அருகே வந்து நின்றவன்
”கடைத் தெரு வரை போயிட்டு வர்றேன்”
“கொஞ்சம் வேலை இருக்கு… ” என்று பைக்கை ஸ்டார்ட் செய்தபடி ’கண்மணி’ இல்லத்தின் வெளிக்கதவு வரை போனவன்…… வெளியே போகாமல் மீண்டும் திரும்பி வந்து…. அவளைச் சுற்றி ஒரு வட்டமடித்து மீண்டும் அவளிடமே வந்து நின்றவன்…
“I will be back in an hour... and awaits many more severe punishments like this from you”
தலைக்கவசத்தை எடுத்தவன்… அணிந்தபடியே… தன் உதட்டை தொட்டுப் பார்த்து அவளைப் பார்த்து சொல்ல…
சொன்னதோடு மட்டுமல்லாமல்…
“நீகொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன் எண்ணிக்கொள்ளடிஎன்சின்னகண்மணி கொண்டாட்டம் டம் வேணாம் தாம்தூம் திண்டாட்டம் டம் ஆகும் மானேமானே”
அவளுக்கு மட்டும் கேட்கும்படி மென்குரலில் பாடியபடி உல்லாசமாகக் கண்சிமிட்ட… அவன் தலைக்கவசத்திலேயே பலமான அடியை தன் கைகளால் போட்டவள்…
”மிஸ்டர் ஆர்கே… யாருக்கு திண்டாட்டம்… கொண்டாட்டம்னு பார்த்துறலாம்… இப்போ போயிட்டு வாங்க… வழி அந்தப் பக்கம்” என்று வெளியே கை நீட்டியவளாக அவனை முறைத்தாள்… உண்மையாகவே முறைத்தாள் என்று கூடச் சொல்லலாம்…
“ஷுயுர் ஆர்கே…” என்று சன்னக் குரலில் சொன்னவன்….
”இந்த ரவுடி கண்மணி … ரிஷியோட கண்மணியா என்கிட்ட எப்போதுமே தோத்துதான் போவா… அது அவளுக்கே தெரியும்” என்றவனின் குரலில் கர்வம் மட்டுமே… அந்த கர்வத்தோடு ’கண்மணி’ இல்லம் கடந்தும் சென்றான்…
---
”பவித்ர விகாஸ்”
அர்ஜூன் மற்றும் நாராயண குருக்கள் முன்னிலையில் கமிஷனர் அமர்ந்திருந்தார்…
“எப்போ கேஸ் கொடுத்தாங்க” தன் கையில் இருந்த காகித நகல்களைப் பார்த்தபடியே அர்ஜூன் கேட்க
”இன்னைக்கு 2’0 க்ளாக் அர்ஜூன்… ஆனால் மருதுவைப் பற்றி ஏதும் தெரியலை… அவனப் பற்றி யாரும் கம்ப்ளெயிண்ட் கொடுக்கலை… ”
“ஓ… ரெண்டு பேரும் ஒண்ணாத்தானே ஜெயில்ல இருந்தாங்க…” யோசனையோடு நெற்றி சுருக்கம் விழ அர்ஜூன் யோசிக்க
“ஒரு மாதமா காணோமா… ஏன் இவ்ளோ நாள் கொடுக்கலைனு கேட்டீங்களா…” நாராயண குருக்கள் கேட்க
“எல்லாம் விசாரிச்சோம் சார்… புகார் கொடுத்தவன் க்ளோஸ் ஃப்ரெண்ட்லாம் இல்லையாம்… நாளைக்கு அவன் மேல ஏதாவது கேஸ் வந்துருமோன்னு… அவன் சேஃப்ட்டிக்கு … புகார் கொடுத்து வைப்போம்னு வைக்க வந்தானாம்… மருதுவைப் பற்றி தெரியலைன்னும் சொல்லிட்டான்… இப்போதான் இந்த துரையும் பழக்கமாம்” என்றவர்…
”இதுல நாம கவலைப்பட வேண்டிய விசயம் என்னன்னா…. உங்க பேத்தி இருக்கிற ஏரியால இருந்துதான் அவன் மொபைலோட கடைசி சிக்னல் வந்துருக்கு… இதுகூட நான் இன்வால்வ் ஆனதுனால உடனே கிடைச்ச தகவல்…” என்று முடிக்க…
அர்ஜூன் மற்றும் நாராயணன் முகம் உடனே மாறி இருக்க…
“கொஞ்சம் சீக்ரட்டாவே இந்த விசயத்தைப் பாருங்க… என் பேத்தி இதுனால டிஸ்டர்ப் ஆகக் கூடாது… பழைய ரெக்கார்ட் பேஸ் பண்ணி,… அவளை யாரும் விசாரணைன்ற பேர்ல தொந்தரவு பண்ணக் கூடாது… அது முக்கியம்..” நாராயண குருக்கள் சொல்ல
“சார்… அந்த துரை உயிரோட இருப்பான்னு நினைக்கிறீங்களா… ஒருவேளை அவனுக்கு ஏதாவது ஆகி இருந்தா… அது உங்களுக்குத் தெரிந்தால் அஃபீசியலா பெருசா தோண்ட வேண்டாம்… ஆனால் எங்களுக்கு மட்டும் இந்த கேஸோட ஃபுல் டீடெயில்ஸ் வேணும்… ” என்று அர்ஜூன் முடிக்க…
“சரி அர்ஜூன்… அதெல்லாம் நாங்க பார்த்துக்கறோம்… அவன்லாம் நல்லவனா என்ன… இவனுக்கெல்லாம் இப்படித்தான் ஆகும்… நம்ம பொண்ணுக்கு ஒரு பிரச்சனையும் வராது… அதுக்கு நான் அஸ்யூரன்ஸ் தர்றேன்… நீங்க ரொம்ப நாளா கேட்டுட்டு இருந்தீங்க… அவன் கதையை முடிக்கிறதுக்கு… இப்போ உங்களுக்கு முன்னாடி யாரோ முந்திட்டாங்கன்னு நினைக்கிறேன்… மருதுவும் இவன் கூடத்தான் இங்க வந்தான்… எப்படி பிரிஞ்சாங்க… அதைக் கண்டுபிடிக்கனும்… உங்களுக்காக மட்டும் தான் இந்தக் கேஸ்ல இவ்ளோ இன்வால்வ் ஆகுறேன்…” என்றவர்.. செய்த… செய்யப்போகும் பணிகளுக்காக சன்மானம் வாங்கியவராக அங்கிருந்து கிளம்பிச் செல்ல…
தனக்குத்தானே சில பல விசயங்களை… ஊகிக்க ஆரம்பித்து பின் குழம்பி எதையும் கணிக்க முடியாதவனாக அமர்ந்திருந்த அர்ஜூன் தன் தாத்தாவிடம் பேச ஆரம்பித்திருந்தான்…
“அந்த நட்ராஜ் ஏதும் இன்வால்வ் ஆகி இருப்பாரோ தாத்தா….” என்று சந்தேகமாக கேட்டவனுக்கு ரிஷி மேல் சிறிதும் சந்தேகம் வரவில்லை…
“ஒரு மாதம்னு சொல்றாங்களே… அவன் ரிஷியோட ஆஸ்திரேலியாவுல இருந்தானே… அப்புறம் எப்படி…” தன் பேரனிடம் எடுத்துச் சொன்னவர்…
”என் பேத்தி.. பாதுகாப்பு இல்லாமல் இருக்காளோன்னு பயமா இருக்கு அர்ஜூன்… ரிஷியும் புரிஞ்சுக்க மாட்டேங்கிறான்…” என்றவரிடம்
“அதெல்லாம் கண்மணிகிட்ட யாரும் நெருங்க முடியாது…” அர்ஜூன் சொன்னபோதே… நாராயண குருக்கள் பார்த்த பார்வையில்
”அந்த ரிஷியை நான் அந்த அளவுக்கு பெருசா நினைக்கலை… அதுனால கண்மணிகிட்ட நெருங்க விட்டுட்டேன்… ” என்று வெட்ட வெளியை வெறித்தவன் எண்ணங்களில் கண்மணி அந்த விழா மேடையில் சொன்ன வார்த்தைகள்… இன்னுமே அவன் காதில் எதிரொலித்துக் கொண்டிருந்தது…
அதாவது ரிஷிக்கு அவளுக்குமான உறவைப் பற்றி கேட்ட கேள்விக்கு கண்மணி ஆங்கிலத்தில் சொன்ன பதிலைத்தான் அர்ஜூன் யோசித்துக் கொண்டிருந்தான்
“இந்த உலகத்தில ஒவ்வொரு உயிரும்… ஏதாவது ஒரு விசயத்துல மன நிறைவா இருப்பாங்க… அதற்கு பல சமயம் காரணம் இருக்கும்.. சில சமயம் காரணமே இருக்காது… உதாரணமா… நாம எத்தனையோ நாட்டுக்கு எத்தனையோ ஊருக்கு போனாலும்… வித விதமா நாம சந்தோசத்தை அனுபவித்தாலும்… நமக்கு நம்ம ஊர்… நம்ம வீடு கொடுத்த மன திருப்தி அங்க ஃபீல் பண்ண மாட்டோம்… இன்னும் சொல்லப் போனா… நம்ம வீட்லயே… எத்தனையோ இடம் இருக்கும்… ஆனால் சில இடம் நம்ம மனசுக்கு ஆறுதலா இருக்கும்… இன்னும் எத்தனையோ சொல்லலாம்… சில பேருக்கு அந்த மாதிரி சேட்டிஸ்ஃபை கொடுக்கிற உறவா அம்மா இருக்கலாம்… சில பேருக்கு அப்பா இல்லை அவங்க கூடப் பிறந்தவங்க… சில பேருக்கு பெட் அனிமல்ஸ்… ரொம்ப பேருக்கு ஃப்ரெண்ட்ஸ்… சில பேருக்கு அவங்க லைஃப் பார்ட்னர்..
அஃப்கோர்ஸ் எனக்கு அந்த ஃபீல் ரிஷிக்கிட்ட கிடைத்தது… அவருக்கும் எனக்குமான ரிலேஷன்ஷிப்பை… ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் ரிலேஷன்ஷிப்னு சொல்றதை விடம் கம்பானியன்ஷிப்னு சொல்லலாம்… யெஸ் ரிஷி இஸ் மை எவ்ரிதிங்… அவர்கிட்டதான்… நான் முழுமையா என்னை ஃபீல் பண்றேன்… சந்தோசம்… கவலை இது எல்லாம் மீறி… நிம்மதி அவர்கிட்ட எனக்குக் கிடைக்குது”
அதே நேரம்… ரிஷி சொன்ன வார்த்தைகளுமே அர்ஜூனுக்கு ஞாபகம் வந்தது
“என் வீட்டுக்கு வேலைக்காரியாத்தான் அவளைத் திருமணம் செய்கிறேன்” என்று சொல்லி திருமணம் செய்தவனைத்தான்… உலகம் பார்க்கும் நிகழ்ச்சியில் …
“அவன் தான் என் எல்லாமே… அவனிடம் தான் நிம்மதியை உணர்கிறேன்” என்று கண்மணி சொன்னதை என்னவென்று சொல்ல… மனம் வலித்தது அர்ஜூனுக்கு
“வேலைக்காரியாகத்தான் என்னிடம் இருப்பாள்” என்று என்னிடம் சொன்னவன்… உலகத்துக்கு அவளை அவன் மனைவியாகக் காட்டிய போது அவனின் இளவரசியாக அல்லவா காட்டினான்… கண்மணியும் அந்த ரிஷியின் அருகில் நின்றிருந்த போது பூரண நிலவாக ஒளிர்ந்தாளே…
அந்த ரிஷியிடம் நான் தோற்றேனா… இல்லை கண்மணி ஏமாந்தாளா… ஏனோ ரிஷி வென்றுவிட்டான் என்ற எண்ணம் தோன்றவில்லை அர்ஜூனுக்கு…
தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தவன்… என்ன நினைத்தானோ தெரியவில்லை
“என்னாலேயே அவளை நெருங்க முடியலையே தாத்தா… கம்பானியன்ஷிப்பாம்… சொல்றா தாத்தா… என்னோட அவளுக்கான உரிமையை… ஓனர்ஷிப், டாமினேட் பண்ணிட்டேனோன்னு கில்ட்டியா என்னை திங்க் பண்ண வைக்கிறா…. ” என்ற போதே அர்ஜூனின் குரல் உடைந்திருக்க… நாராயண குருக்களோ வருத்தத்தோடு அவனைப் பார்த்தபடி இருக்க…
அர்ஜூன் வார்த்தைகளை ஆவேசமாக விட்டான்…
’நான் என் அம்மா மாதிரி இருக்க மாட்டேன்… அம்மா மாதிரியே நான்னு யாரும் என்னை சொல்லக் கூடாது’ -
”உங்க பேத்தியோட தாரக மந்திரம் இதுதானே தாத்தா… இன்னைக்கு அவ அந்த ரிஷிகிட்ட நடந்துகிறதெல்லாம்… எப்படி இருக்கு… அத்தை மாதிரியேதானே இருக்கு… ”
“அத்தையோட தோற்றத்தையோ… அவங்க குணத்தையோ அவகிட்ட எதிர்பார்க்க கூடாதுன்னு சொன்னவதானே உங்க பேத்தி… எங்க போனது அந்த வார்த்தை எல்லாம்… நட்ராஜ்-பவித்ரா.. ரிஷிகேஷ்-கண்மணி என்ன வித்தியாசம் சொல்லுங்க…”
“விடு அர்ஜூன்… நீ ஒரு தப்பும் பண்ணலை அர்ஜூன்… அதை மட்டும் புரிஞ்சுக்கோடா… ஆனால் அதே நேரம் நிதர்சனம் புரிய ஆரம்பிச்சுட்டேன்னா எனக்குமே சந்தோசம் அர்ஜூன்… எனக்கும் வைதேகிக்கும் கண்மணி எவ்வளவு முக்கியமோ… அதே போல உன் வாழ்க்கையும் முக்கியம் அர்ஜூன்…-” என்ற தன் தாத்தாவிடம்
பதிலேதும் சொல்லாமல் அறையை விட்டு வெளியேறி இருக்க… நாராயண குருக்களோ… தன் பேரன் போன திசையையே கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தார்…
கண்டிப்பாக இனிமேலாவது அர்ஜூன் நல்ல முடிவெடுப்பான் என்றே தோன்றியது அவருக்கு… அந்த நம்பிக்கை மட்டுமே அவரை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது.
---
அந்த குறுகலான அறையில்… விட்டத்தில் சத்தம் போட்டபடி ஓடிக் கொண்டிருந்த மின் விசிறியை பார்த்தபடியே படுத்திருந்த மருதுவின் மனம்… ஆதவனை மட்டுமே சபித்துக் கொண்டிருந்தது…
அவனுக்காக… அடிமையாக தாங்கள் உழைக்க… எப்படியெல்லாம் பேசிவிட்டான்… அவமானப் படுத்திவிட்டான்… எல்லாம் பணம் இருக்கும் திமிர்… பல்லைக் கடித்தபடி தூக்கம் வராமல் படுத்திருந்தவனின் கண்களில் சற்றுமுன் அடித்த போதையின் தாக்கம் அப்படியே இருக்க…
அலைபேசி ஒலித்தது…. எடுத்துப் பேசியவனின் கண்கள் எதிர்முனை பேசப் பேச அதைக் கேட்டு விரிய ஆரம்பித்திருந்தது….
ஆதவனின் உதவியாளர் தான் பேசிக் கொண்டிருந்தான்…
“சார்க்கு அப்போ ஏதோ டென்சன்… உன்னை அப்படி பேசிட்டாரு… அவரே என்கிட்ட அப்புறம் பேசினாரு… துரை விசயமாக போலிஸ் ஸ்டேஷன்ல உன் பேர் இன்வால்வ் ஆகாமல் கம்ப்ளெயிண்ட் கொடுத்தாச்சு வேலைக்கு எப்போதும் போல வா” சொல்லிவிட்டு தன் கடமையை முடித்தவனாக அவன் வைத்து விட…
மருது இப்போது எழுந்து அமர்ந்திருந்தான்… துரை பற்றியெல்லாம் இப்போது அவன் கவலை மறைந்திருக்க… தன் பெட்டியில் இருந்து வேகமாக கண்மணியின் புகைப்படத்தை எடுத்தவன்… கன்னக் குழியோடு சிரித்துக் கொண்டிருந்த அவளைப் பார்த்தவன்…
”மணி” வார்த்தைகளை உச்சரித்த போதே
“கன்னக் குழி விழும்… அவளது கலீரென்ற சிரிப்பு….” இப்போதும் அவன் காதில் அவன் அருகில் ஒலித்தாற்போன்ற பிரமை…
”கலகலப்பான அவளது சத்தமான சிரிப்பு… அவளது துடுக்குத்தனமான படபட பேச்சு… நிமிடம் கூட ஒரு இடத்தில் நிற்காத அவளின் துருதுருப்பு.. யாரைப்பற்றியும்… எதைப்பற்றியும் கவலைப்படாத குறும்பான செயல்கள்… நொடிக்கு ஆயிரம் பாவனை காட்டும் அவளது கண்கள்… கவலை என்பதே அவளுக்கு இல்லையா என்பது போல எப்போதுமெ சிரித்தபடி இருக்கும் அவள் முகம்.. …” அப்படி ஒரு பெண்ணை தன் வாழ்க்கையில் முதல் முறையாகப் பார்த்திருக்க… கண்மணியிடம் பைத்தியமாகி இருந்தவன்… அவள் தன்னை விட்டு போய்விடக் கூடாது என்ற பேராசையில்.. துரை வார்த்தைகளை கேட்டு செய்த செய்யக் கூடாத செயல்கள் எல்லாம் ஞாபகம் வந்து போக… தன்னையே அங்கிருந்த மங்கலான கீறல் விழுந்த கண்ணாடியில் வெறித்தான்…
அவன் வாழ்க்கையும்… அந்த கண்ணாடி பிம்பம் போல தெளிவற்று கீறல் விழுந்த அலங்கோலமாக மாறிப் போயிருந்த விதமும் புரியாமல் இல்லை…
கண்மணியை நினைக்கும் போதெல்லாம்… துரை அவனைத் தேற்றுவான்…. இல்லை அவன் மனதைத் திசை திருப்புவான்…. அவனும் இல்லை இப்போது
வெகுநாட்களுக்குப் பிறகு… கண்மணி மட்டுமே அவன் நினைவுகளில்…
“நீ என்கூடவே இருக்கனும்னா… உன்னைக் கல்யாணம் பண்ணனுமா… அது ஏன்… உண்மையிலேயே அப்போதான் நீ எப்போதுமே என் கூட இருப்பியா… அப்போ சரி… கல்யாணம் தானே… பண்ணிகிட்டா போச்சு… ஆனால் நான் சின்னப் பொண்ணே…”
”இப்போ இங்க சத்தியம் பண்ணிக் கொடு… நீ பெரிய பொண்ணா ஆன பின்னால… உனக்கு 20,22 வயசாகும் போது நாம மேரேஜ் பண்ணிக்கலாம்… பண்ணுவியா” கைகளை நீட்ட… அடுத்த நிமிடம்…
அந்த பத்து வயது கண்மணியின் மென்கை… கிட்டத்தட்ட அவளை விட 12 வயது மூத்தவனான மருதுவின் உள்ளங்கைகளைத் தொட்டிருக்க மருதுவின் கரங்கள் இப்போதும் கண்மணியை… அவள் கரங்களின் மென்மையை உணர்ந்திருந்தது…
அந்த உணர்வோடே… தன் உள்ளங்கையை எடுத்து… தன் மார்பில் பதித்திருந்த அவள் பெயரைத் தடவியபடி…
”அன்னைக்கு நான் நடந்துகிட்டது கூட என்னை விட்டு நீ போயிருவேன்ற பயத்துலதான் மணி… நீதான் என்னைப் புரிஞ்சுக்கலை….. நீ என்னோட மணி… யாருக்கும் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன்….
உனக்கு என்னைத் தவிர வேற யாரும் பிடிக்காதுன்னு சொல்வதானே… இப்போ நான் வந்தாலும்… அதே பதில் தான் சொல்லனும் மணி… சொல்வதானே மணி… உன்கிட்ட நான் வருவேன் மணி… என்னைப் புரிய வைப்பேன்… நீ என்னைப் புரிஞ்சுக்குவ… இந்த தடவை உன்னைக் கஷ்டப்படுத்த மாட்டேன் மணி… அது சத்தியம் என்றபடியே…
மேஜையில் மேல் வைத்திருந்த கண்மணியின் புகைப்படத்தை மீண்டும் எடுத்து பார்த்தவன்… அது கசங்கி இருக்க... அதன் காரணம் அவன் உதடுகள் மட்டுமே உணர்ந்தது… புன்னகைத்தவன்… அந்த புகைப்படத்துக்கு அழுத்தமாக முத்தம் வைக்க அந்த புகைப்படம் மீண்டும் ஒரு முறை கசங்கியது…
----
Lovely update
Maruthu epo Rishi kaiku varuvan