அத்தியாயம்-68-2
/*
கடை கண்ணாலே ரசித்தேனே
கவின் பூவே கண்ணாளா
குடைக்குள்ளாடும் மழைக்காக
எதிர் பார்த்தேன் இந்நாளா
தரை நில்லா நில்லா இரு காலோடு
கரை கொள்ளா கொள்ளா அலை நீரோடு
உறங்காமலே……
தொடரும் உன் ஞாபகம்
உயிர் தேடலில் இடறும் உன் பூ முகம்*/
இடம்… சென்னையின் புறநகர் பகுதி… துரை வைக்கப்பட்டிருந்த அந்த ரகசிய இடம்…
காற்றில் பறந்த இலைச்சருகுகளின் சத்தம்… பறவைகளின் ஒலி… அந்தக் காட்டில் வாழும் விலங்குகள் பதுங்கி ஓடும் மெல்லிய ஓசை என என உயிரற்ற உயிருள்ள அஃறினைகளின் ஒலிகள் மட்டுமே கேட்க… உயர்திணையான மனிதர்களின் நடமாட்டம்... அவர்களின் சத்தம் கேட்பது என்பது அரிது என்பது பார்க்கும் போதே…. தெரிந்தது…
அத்தகையை இடம் தான் சிலமணி நேரங்களுக்கு தான் துரையின் மரணக் குரலையும்… சற்று முன் ரிஷி கண்மணியிடம் பேசி முடித்த அதிகாரப் பிடிவாதக் குரலையும் தனக்குள் அடக்கி… பின் மீண்டும் நிசப்தமாகி இருந்தது
கண்மணியிடம் அலைபேசியில் பேசிவிட்டு போனைத் தூரத் தூக்கிப் போட்டவன்… கண்களை மூடி.. தான் இருந்த இருக்கையில் தளர்வாகச் சரிந்துவிட்டான்…
கண்மணி இன்று ஊருக்கு போகக் கூடாது… அவள் என்னோடு இருக்க வேண்டும்…. எப்படி அவளைத் தடுத்து நிறுத்துவது.. மற்றவர்கள் யாரைப் பற்றி அவனுக்கு கவலை இல்லை… ஆனால் அவள் மட்டுமே அவன் சொல்வதைக் கேட்க வேண்டும்… அவன் சொல்வதை மட்டுமே அவள் கேட்க வேண்டும்... அது மட்டுமே அவன் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்தது…
ரிஷியின் கண்களின் அலைப்புறுதலும்… அவன் இறுகிய உடலும்… சத்யாவுக்குமே… கொஞ்சம் கலக்கத்தைத்தான் ஏற்படுத்தின…
துரையின் கதையை அவன் கைகளாலேயே முடித்த போது கூட ரிஷி இந்த அளவுக்கு நிதானம் தவறவில்லை… இறுக வில்லை… ஆனால் கண்மணியிடம் பேசிவிட்டு அவன் தவறிய நிதானம் … அவனுக்கு வந்திருந்த இந்த இறுக்க பாவம்… சத்யாவை கவலை அடையச் செய்ய..
” ’ஆர் கே’… கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க… உங்க டென்சனை மேடம் கிட்ட காட்ற மாதிரி இருக்கு… இவனை டிஸ்போஸ் பண்ற வேலையை நாங்க பார்த்துக்கறோம்… மேடம் கிட்ட நார்மலா பேசின மாதிரியே தெரியலை… அவங்ககிட்ட இப்படி பேசினா என்ன நினைப்பாங்க...” என்ற சத்யாவின் குரலில் தான் ரிஷி நிதனாத்திற்கே வந்தான்… கண்களைத் திறந்தவன்… சத்யாவிடம் இயல்பாகப் புன்முறுவல் செய்தான்…
“இல்லை சத்யா… அப்படிலாம் இல்லை… இன்னைக்குனு பார்த்து ஊருக்கு போறா… முன்னரே செய்த ஏற்பாடுதான்… இவனோட உயிரை எடுத்ததெல்லாம் தப்பா தெரியலை… ஆனாலும்… தப்புதானே சத்யா”
“கண்மணி என் பக்கதில இருக்கனும்... அவ இன்னைக்கு என் கூட இல்லை... அவ்ளோதான்... என்ன மாதிரி நான் ஆவேனோ எனக்கே தெரியலை... அவ என்கூட இருந்தா போதும்... அவ்வளவுதான்... அதுமட்டும்தான்... எதையும் சமாளிப்பேன்...” என்ற போதே அவன் குரல் தடுமாறியதுதான்.... இருந்தும் சமாளித்தபடி... இறந்து கிடந்த துரையை வெறித்தவன்…
அவனது கையையும் அதில் இருந்த மருது துரை என்று பச்சை குத்தி இருந்த பெயர்களையும் பார்த்தவன்…
“இதை மறைக்காதீங்க… இந்த துரைதான் இறந்துட்டான்னு உலகத்துக்குத் தெரியனும்…. அந்த மருதுவுக்கும் தெரியனும்... ஆனால் எப்படி இறந்தான்னு மட்டும் தெரியக் கூடாது அதுதான் முக்கியம்… அந்த மாதிரி நம்ம அடையாளம் ஏதும் மாட்டாமல் பார்த்துக்கங்க” என்றவன்
“தெரிஞ்சாலும் பரவாயில்ல… நான் சமாளிப்பேன்” இந்த வார்த்தைகளைத் தனக்குள் சொல்லிக் கொண்டவன்… துரையையே பார்த்துக் கொண்டிருந்தான்…. உயிரற்ற சடலமாக அவன் மாறியிருந்த போதும்.... அவன் தன்னிடம் சொன்ன வார்த்தைகள் இன்னுமே ரிஷியின் காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தது…
“நீ தப்பு பண்ணிட்டடா… எனக்கு மருதுவைப் பிடிக்கும்… எவ்ளோ பிடிக்கும்னா… அவன் அந்த ‘மணி’ கிட்ட போக விடாத அளவுக்கு… என்னைவிட்டு போகவிடாமல் என் கூடவே வச்சுட்டு இருக்கிற அளவுக்கு… ஆனால்… அந்த மருதுக்கு அவள்னா எவ்வளவு பிடிக்கும்னு எனக்கு மட்டும் தான் தெரியும்… உனக்கும் தெரிய வரும்… முடிந்தால் அவளை அவன்கிட்ட இருந்து காப்பாத்திக்கடா” தன் கோபம் எல்லாவற்றையும் பலமாகத் தன் கால்களுக்கு கொண்டு வந்தவன்.... அந்த உயிரற்ற ஜடத்தினை நெம்பித் தள்ளினான் தான்... அப்போதும் அவன் ஆத்திரம் அடங்கவில்லை என்பதே உண்மை ...
---
ஆஸ்திரேலியாவில் இருந்து வந்ததும்… மற்ற வேலைகளை எல்லாம் கண்டுகொள்ளாமல்… அவற்றையெல்லாம் விட்டு விட்டு ரிஷி பார்த்த முதல் வேலை துரையை வந்து பார்த்தது தான்….
அன்று…
ரிஷி வந்து பார்த்த போது… உயிர் மட்டுமே இருந்தது அவன் உடலில்… அந்த அளவு அவனை நையப்புடைத்திருந்தனர்...
ஆனால் அந்தச் சூழ்நிலையிலும்… எவ்வளவு கேட்டும் அவன் மருதுவைப் பற்றி ஒரு வார்த்தை கூட வாயைத் திறக்காதது ரிஷிக்கே ஆச்சரியம் தான்… அந்த அளவுக்கு இருக்குமா மருதுவுக்கும் அவனுக்கும் உள்ள உறவு…. இந்த கலிகாலத்தில் விசித்திரம் இல்லைதான் அது.... ரிஷி நெற்றியில் கோடு விழ… சத்யாவைப் பார்க்க…
அவன் பார்வை உணர்ந்தவனாக
“மருதுவை விடு…. ஏன் அந்த ஏரியாக்கு வந்த… அதைச் சொல்லு... அவர் கேட்கனுமாம்” சத்யா கேள்வியை மாற்றினான்… இதற்கு பதில் சொன்னான் துரை
”ஏர்போர்ட்ல பார்த்த ஒரு சின்னப் பொண்ணு அவளைப் ஃபாளோ பண்ணி வந்தேன்” ரித்விகாவைப் பற்றிச் சொல்ல..
சொன்ன அடுத்த நிமிடம் அவன் ரிஷியின் கையால் அடி வாங்காமல் இருந்திருப்பானா???….
“ஆ அ ஆ அஹ்ஹ்ஹ்ஹ்ஹ்” அதற்கு மேல் பேச முடியாமல் தலை சாய்ந்து மயங்கி சரிந்திருந்தான் துரை… ரிஷியின் கைவரிசையில்…
“நான் யார்னு தெரியுதா….” அப்படியே விடுவானா ரிஷி...
மயங்கிய நிலைக்குப் போகப் போன துரை முன் அமர்ந்தவன்… அவன் முன்னுச்சிக் கேசத்தை கொத்தாகப் பிடித்து தன்னைப் பார்க்கும்படி வைத்துக் கேட்டான்…
”தலையாட்டினான்” தெரியும் என்று….
“யாரு…” ரிஷி அதிகாரமாகக் கேட்க…
“கோவால” என்று சொல்ல முடியாமல் அவன் சொன்ன போதே….
“நீ ஃபாளோ பண்ணி வந்த அந்தப் பொண்ணு யார் தெரியுமா…”
துரை தெரியாதென்று தலையை ஆட்ட…
“என் தங்கை…” என்ற போது துரையின் கண்கள் விரிந்தது இப்போது நம்ப முடியாத பாவனையில்…
“அப்போ என் தங்கச்சினு தெரியாமலேயே அவளை ஃபாளோ பண்ணி வந்துருக்க” என்றவனின் கைகள் அவன் குரல்வளையை நெறிக்க… துரை வேதனையில் முகம் கன்றினான்…
“நீயே வந்து என் வலையில விழுந்துட்ட துரை… அன்னைக்கு உங்க ரெண்டு பேரையும் போலிஸ்ல பிடிச்சுக் கொடுத்து தப்பு பண்ணிட்டேன்… இனி அந்த தப்பு நடக்காது… சரி பண்ணப் போறேன்... சொல்லு… அந்த மருது எங்க… அவனையும் உன் கூடவே அனுப்பி வச்சுறேன்… உனக்குத்தான் அவன் இல்லாமல் இருக்க முடியாதே” ரிஷி நக்கலாகக் கேட்க
துரை நிமிர்ந்து பார்த்தான்…
”உன் தங்கையோட வந்தாளே அவ” என்று ஆரம்பித்த போதே... முடிக்க விடவில்லை அவன் வார்த்தைகளை...
துரையின் இரு பற்கள் சிதறி வெளியில் வந்திருக்க… வாயில் இருந்தோ இரத்தம் வடிய ஆரம்பித்திருக்க
“அவளா… ” ஒற்றை விரலை காட்டி ரிஷி துரையை எச்சரித்துப் பார்க்க… துரையின் கண்கள் ரிஷியை நேராகச் சந்தித்தது
“அந்த மருதுவோட மணிதானே அவ… அவளை அவள்னு சொன்னா உனக்கென்ன...” என்ற போதே ரிஷியின் முகம் குரூரமாக மாறி இருக்க… துரையைப் பிடித்திருந்த அவன் கைகளை இறுகி இருக்க
ரிஷியின் நொடி பார்வை மாற்றத்தில்… துரை இப்போது ரிஷியைப் பார்த்து சிரித்தான்… அவன் வலியெல்லாம் ரிஷியின் பார்வை மாற்றத்தில் எங்கோ பறந்து போயிருக்க
“அந்த மணியை நீயும் லவ் பண்றியா… இவ்ளோ கோபம் வருது” கேட்டபடியே துரை விழுந்து விழுந்து சிரித்தான்…
“உனக்கு நான் இதுநாள் வரை நல்லது பண்ணிருந்துருக்கேன்… நான் மருது கூட இருக்கிற வரை அந்த மணி பக்கம் திரும்பாமல் என் கூட வச்சுருந்தேன்…” என்றவனைப் பார்த்து ரிஷி இதழ் வளைத்தான் இப்போது...
”எனக்கு என் பொண்டாட்டியைப் பார்த்துக்கத் தெரியும்… நீ மருதுவைப் பற்றி மட்டும் சொல்லு” ரிஷி சொன்னபோதே துரை அதிர்ந்து பார்வை பார்க்க…
“இப்போ சொல்லு… மருது எங்க இருக்கான்னு.. நீ எனக்கு நல்ல காரியம் பண்ணிருக்கேன்னு நீயே சொல்லிட்டியே… அப்போ நான் உனக்கு நன்றிக் கடன் தீர்க்க வேண்டாமா… உன்கூடவே அவனை சேர்த்து அந்த உலகத்துக்கு அனுப்பிடறேன்…” மேலே கை காட்டி நக்கலாகக் சொல்ல
“சொல்ல முடியாது… என்ன வேண்டும்னாலும் பண்ணிக்க” துரை கறாராகச் சொல்லி விட்டு மயங்கி விட…
சத்யாவின் புறம் திரும்பினான் ரிஷி….
“சத்யா… இவன் கிட்ட இனி ஏதும் விசாரிக்க வேண்டாம்… இவன மாதிரி மருதுவும் நம்மகிட்ட மாட்டுவான்… இவன் கண்மணியைப் ஃபாளோ பண்ணி வந்துருக்கான்… மருதுவும் அதே மாதிரி வருவான்… பார்த்துக்கலாம்… இனி இவன் நமக்கும் தேவையில்லை… உலகத்துக்கும் தேவையில்லை… சரியான நேரம் நாள்… பார்த்து சொல்லு… அன்னைக்கு என் கையாலேயே” என்ற போதே…
“நீங்க வேண்டாம்… ‘ஆர் கே’… நாங்களே எல்லாம் பார்த்து முடித்து டிஸ்போஸ் பண்ணிடறோம்” என்றவனிடம் ரிஷி மறுத்து விட்டான்..
அன்று முடிவெடுத்தது போல... இதோ இன்று காலையில் சத்யா அழைத்திருந்தான்…
”எல்லா ஏற்பாடும் பண்ணிட்டோம்… இன்னைக்கு அந்த துரையை முடிச்சுறலாம்… இதுக்கு மேலயும் அவனை இங்க வச்சுட்டு இருக்கிறது சரி இல்லை… “
ரிஷியும் வந்தான்… ஒரு மாத காலமாக அவர்களின் கஷ்டடியில் துன்பப்பட்டு நரக வேதனையில் இருந்த துரைக்கு… சுதந்திரமும் அளித்திருந்தான்… என்ன உயிரற்ற உடலாக…
அப்போதும் அந்தத் துரை இவனைப் பார்த்து எள்ளலாகத்தான் பேசினான்...
“நீ தப்பு பண்ணிட்டடா… எனக்கு மருதுவைப் பிடிக்கும்… எவ்ளோ பிடிக்கும்னா… அவன் அந்த ‘மணி’ கிட்ட போகாத அளவுக்கு… என்னைவிட்டு போகவிடாம என் கூடவே வச்சுட்டு இருக்கிற அளவுக்கு… ஆனால்… அந்த மருதுக்கு அவள்னா எவ்வளவு பிடிக்கும்னு எனக்கு மட்டும் தான் தெரியும்… உனக்கும் தெரிய வரும்… முடிந்தால் அவளை அவன்கிட்ட இருந்து காப்பாத்திக்கடா” என்ற போதே அவன் உயிரை ரிஷி தன் கைகளால் முடித்திருந்தான்….
நேரம் சந்தர்ப்பம் எல்லாம் இன்று சரியாக வாய்த்து… துரையின் கதையை முடித்தவனுக்கு என்னதான் சாதாரணமாக இருப்பது போல சத்யாவிடம் காட்டிக் கொண்டாலும்… உள்ளே அவனுக்குள் அடங்காத எரிமலை கொந்தளித்துக் கொண்டிருக்க… அவனுக்கு கண்மணி தேவைப்பட்டாள் இன்றைய நிலைமைக்கு… அவனின் ஒரே சந்நிதி அவள் அவள் மட்டுமே… அவள் மட்டுமே அவனின் ஆவேசங்களை அடக்கும் சாந்தி… இப்போது அவள் தேவை…
இத்தனை நாட்கள் அவளின் ஆறுதல் வார்த்தைகளும்… அவளின் தலை கோதும் விரல்களும் அவனுக்கு போதுமானதாக இருந்தது… ஆனால் இப்போதைய ரிஷிக்கோ அதாவது உள்ளத்தாலும்…. உடலாலும் தன்னை அவளிடம் முழுமையாக ஒப்படைத்திருந்த ரிஷிக்கோ…. தன் மனைவியின் ஆறுதல் வார்த்தைகள் தேவையில்லை… அந்த ஆறுதல் வார்த்தைகளை உதிர்க்கும்…. அவளின் இதழ் வேண்டும்… வார்த்தைகளின்றி மௌனமாக… ஆழமாக அழுத்தமாக… தன்னவளின் தலை கோதும் கரங்கள் வேண்டாம்… மொத்தமாக அவளே வேண்டும்…
அவனின் ஆக்ரோஷம்… ஆரவாரம்… படபடப்பு அத்தனையையும் விட்டுவிட்டு அவளிடம் சரணடைய அவனது மனமும் தேகமும் இப்போதே கண்மணியைத் தேட ஆரம்பித்தி்ருக்க… கண்களை மூடி அமர்ந்து விட்டான்…
“மருது… ” அவனையும் மீறி இந்தப் பெயர் ரிஷிக்கு ஞாபகம் வர
”அந்த மருதுவையும் இந்தக் கைகளால் எப்போது கொல்வேனோ…” இப்போது மீண்டும் கண்கள் திறந்து வெறித்தபடி சில நிமிடங்கள் அங்கேயே அமர்ந்திருந்தவன்… எப்படியோ… அடுத்த சில சில நிமிடங்களில் ஃபேக்டரிக்கு திரும்ப வந்திருந்தாலும்… அவனால் படபடப்பை அடக்க முடியவில்லை தான்… இருந்தாலும் தன்னை நிதானப்படுத்தி… அன்றைய சந்திப்புகளை எல்லாம் ரத்து செய்தவன்… அடுத்த இரண்டு நாட்களுக்கும்… முக்கியமான மீட்டிங் தவிர மற்ற அனைத்தையும்… ரத்து செய்து செய்தவன்… ’கண்மணி’ இல்லத்தை நோக்கி விரைந்தான்
---
”அண்ணி… இதெல்லாம் வேண்டாம்… எல்லாம் எடுத்தாச்சு.. அவ்ளோதான் இதையும் மேல போட்ருங்க” நாற்காலியின் மேல் ஏறி நின்று கொண்டிருந்த கண்மணியிடம் ரித்விகா கீழிருந்து பொருட்களை கொடுத்து கொண்டிருக்க…
அதே நேரம் ரிஷியின் பைக் சத்தமும் கேட்க… கண்மணியின் கவனமும் தவறியது… கணவன் வந்து விட்டான் என்று ஆர்வத்தில் எல்லாம் இல்லை… அவன் வந்து கேட்டால் என்ன சொல்வது… என்ற பதட்டத்தில்….
இன்னும் இலட்சுமியிடம் அவள் ஏதுமே பேசவில்லை… என்ன பேசுவது… திடீரென நான் வரவில்லை… நீங்கள் எல்லோரும் போங்கள்… என்றால்… அவர் என்ன நினைப்பார்… குறைந்தபட்சம் காரணமாவது எதிர்பார்ப்பாரே…”
கண்மணிக்கு ரிஷியோடு இருப்பது சந்தோசமே… அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை…
ஆனால்... அன்றே! அதாவது இலட்சுமி முதலில் திட்டமிட்ட போதே… தான் வரவில்லை என்று ரிஷி அவன் நிலை குறித்து தெளிவாகச் சொன்னது போல ’கண்மணி நீயும் போக வேண்டாம்’ என்று தான் போவது குறித்தும் அவன் எண்ணத்தைச் சொல்லி இருந்தால்…
’ரிஷிக்கு பிடிக்கவில்லை தானும் வரவில்லை’ என்று கண்மணியும் அப்போதே சொல்லி அவர்களோடு செல்லாமல் தவிர்த்திருப்பாள்… அதைச் சொல்வதற்கு கண்மணிக்கு ஒரு பயமும் இல்லை...
ஆனால் பிரச்சனையே….அப்போதெல்லாம் ஏதும் சொல்லாதவன்… இன்று திடிரென நீ போகக் கூடாது என்று சொல்வதில் கண்மணிக்கே உடன்பாடில்லை எனும்போது… இலட்சுமிக்கு எப்படி இருக்கும்…
”காரணமும் சொல்ல மாட்டாராம்… போகவும் கூடாதாம்… … ஒரு மாதம் ஆயிற்று… ஒழுங்காகப் பேசி… சென்னை ஏர்போர்ட்டில் அவளைக் தன் குடும்பத்தோடு சேர்த்து அனுப்பி விட்டு… நட்ராஜோடு அலுவலக வேலை என்று தனியாகச் சென்றவன் தான்… அவனை மட்டுமல்ல நட்ராஜுமே வீட்டுக்கு வருவது அரிதாக மாறி இருந்தது…. வீட்டுக்கு வருவதே குதிரைக் கொம்பாக இருக்க… எங்கு பேசுவது… முதல்ல சார் வீட்டுக்கு வர்றாரான்னு பார்ப்போம்.. ஆனால் குடும்பம் மொத்தமா எல்லோரும் ஊருக்கு போறதுனால கண்டிப்பா தலைவர் வருவாரு…. சமாளிப்போம்… “ என்று கொஞ்சம் திட்டி... கொஞ்சம் கொஞ்சி தன் கணவனை நினைத்தவள்… புறப்பட ஆயத்தமாகும் வேலைகளில் மீண்டும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள்…
அவள் செல்வதை ரிஷி பெரிதாக தடுக்க மாட்டான் என்றே கண்மணி நினைத்தாள்… எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கை… ஆனால் அதே நேரம் அவள் இலட்சுமியிடம் இதைப் பற்றி சொல்ல வில்லை என்றால் கோபம் கொள்வான் என்றும் தெரியும்… யோசனையோடுதான் கிளம்பிக் கொண்டிருந்தாள் கண்மணி…
இதோ... ரித்விகாவும்,கண்மணியும் மட்டுமெ இருந்த அறையில்… ரிஷியும் இப்போது அவர்களோடு வந்து ஐக்கியமாகி இருந்தான் …
---
பைக்கை நிறுத்திய அதே வேகத்தில்…. நேரடியாக கண்மணியைத் தேடி... கண்மணியிடம் வந்திருந்தான் ரிஷி…
நாற்காலியின் மேல் நின்றிருந்த கண்மணியும் அவன் அரவம் உணர்ந்து அவனைத் திரும்பிப்பார்க்க… அவளின் அந்த ஒரு சிறு பார்வைக்கே… பேரிரைச்சலோடு அவனுக்குள் ஓடிக் கொண்டிருந்த உணர்வுகள் அத்தனையும் அடங்கி இதமான உணர்வு சட்டென்று வந்திருந்தது…
இறுக்கம் மறைந்து… முகமலர்ந்தவனாக அங்கிருந்த மற்றொரு இருக்கையில் தளர்வாக அமர்ந்தவன்… கண்மணியை மட்டுமே பார்த்தபடி இருந்தான்…
ரித்விகா கீழே இருந்த பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுக்க… மேலே பரணில் வைத்துக் கொண்டிருந்தவளின் கவனமும்… செய்து கொண்டிருந்த வேலையில் இருந்து தடுமாறி கணவனிடத்தில் சென்றிருக்க..
ரித்விகா… குறுக்கிட்டாள் இருவருக்கும் இடையில்…
“அண்ணா… இன்னைக்கு ஏன் காலையிலேயே வரலை… உன்கூட சேர்ந்து இன்னைக்கு ஃபைனல் டே ஷோ பார்க்கனும்னு சொல்லி இருந்தேன்ல…… நீ ஏன் வரலை… வர வர சரியே இல்லை நீ போ” என்று தன் அண்ணனிடம் சிணுங்கலாகப் பார்க்க… ரிஷி… தங்கைக்குப் பதில் சொல்லவில்லை… அவளைப் பார்க்கவும் இல்லை…
ரித்விகாவைத் தவிர்த்தவனாக….
“அம்மா கிட்ட சொல்லிட்டியா” பார்வையை கண்மணியிடம் இருந்து அகற்றாமல் அவளைப் பார்த்து கேட்டவன்… வார்த்தைகள் இயல்பாகவே வந்திருந்தது… கோபமோ இறுக்கமோ… முறைப்போ இல்லாமல் மனைவியை ரசித்தபடி அந்த மனநிலையிலேயே இலகுவாகக் கேட்க
கண்மணியோ அவனுக்கு பதில் சொல்லாமல்…
“ரித்வி… அந்த பையையும் பார்த்துட்டியா.. அதுல ஏதாவது எடுக்கனுமா… இல்லை அதையும் மேல போட்றலாமா…” என்ற போதே….
கண்மணி அவனைத் தவிர்த்துவிட்டு… பார்த்துக் கேட்ட பை ரிஷியின் கைகளில் இருக்க… அடுத்த நொடி அது கண்மணியின் கைகளுக்குச் செல்லாமலேயே பரணின் மேல் சென்றிருந்தது…. அவன் வீசி எறிந்த வேகத்தில்….
இப்போது ரித்விகாவின் கண்களில் சற்று கிலி பரவியிருக்க… இருவரையும் பார்த்தபடி சற்று விலகி விலகி வந்திருக்க
“நீ இங்கதானே இருக்க…” மீண்டும் கண்மணியிடம் கேட்க… இப்போது அவன் குரலில்… கேட்ட விதத்தில் எல்லாமே இறுக்கம் வந்திருக்க… கண்மணி அவனைப் பார்த்து முறைக்க ஆரம்பித்தபடியே…
“ரிஷி” என்று ஆரம்பிக்க… ரிஷி… இப்போது ரித்விகாவிடம் திரும்பினான்…
“பாப்பா… நீ கொஞ்சம் வெளில போறியா” என்ற போதே கண்மணி வேகமாகத் திரும்பிப் பார்க்க… ரித்விகா தன் அண்ணனைப் பார்த்து குழம்பியவாறே… வெளியேறி இருக்க… அதற்குள் சட்டென்று கண்மணியும் ரிஷியை உணர்ந்தவளாக... அவனின் அடுத்த நடவடிக்கையை அனுமானித்தவளாக வேகமாக நாற்காலியில் இருந்து இறங்க எத்தனிக்க… அதைவிட ரிஷி வேகமாக அவளைத் தன் கைகளில் தாங்கிப் பிடித்திருந்தான்…
கண்மணி… சட்டென்று… அறையின் வெளியே பார்க்க… நல்லவேளை ரித்விகா… அறைக்கதவை இலேசாக மூடிச் சென்றிருக்க.. சிறு இடைவெளி மட்டுமே…
நிம்மதி பெருமூச்சு அவளுக்கு வந்திருக்க… அதே வேகத்தோடு
“ரிஷி…” பல்லைக் கடித்தபடியே…. அவனிடமிருந்து இறங்க முயற்சித்திருக்க… ரிஷி அவளை விட்டால் தானே…
“ரிஷி… என்ன இது… விடுங்க என்னை…” என்றவள்… அவன் கைகளை விலக்கவில்லை… அப்படி செய்தால் இன்னும் அவன் கோபம் எந்த அளவுக்கு எகிறும் என்பதைத் தெரியாதவளா அவள்… அப்படியே இருந்த நிலையிலேயே அவனிடம் சமாளிக்க ஆரம்பித்திருக்க...
அவனோ அவளைவிடும் எண்ணம் எல்லாம் இல்லாமல்... உடும்புப் பிடி பிடித்தவனாக
“கேட்டதுக்கு பதில்” அவளையேப் பார்த்தபடி அவன் கேட்டான் தான்…
ஆனால்... கண்மணி அவனிடம் பதில் சொல்லாத போதே அவனும் ஓரளவு உறுதி செய்து கொண்டான் தான்… கண்மணி தன் அம்மாவிடம் ஏதும் சொல்லவில்லை என்பதை… இருந்தும் அவள் வாய் வார்த்தைகளை எதிர்பார்த்து கேட்க
“சொல்லலை ரிஷி… என்ன சொல்லி… என்ன காரணம் சொல்லி…” கண்மணி வார்த்தைகளைக் கூட முடிக்கவில்லை…
சட்டென்று அவளை விட்டவன்… அதே வேகத்தில் அவளைக் கடந்து… அந்த அறையைக் கடந்து… அந்த வீட்டை விட்டு வெளியேறி… மாடிப்பாடி ஏறி… தன் மாடி அறைக்குள் புகுந்தவன்… படாரென்று அந்த மாடி அறைக்கதவைப் பூட்ட
அவன் கதவை ஓங்கி அறைந்து சாத்திய சத்தம் இங்கு… இந்த வீட்டின் அறையில் நின்றிருந்த கண்மணிக்கு அவ்வளவு சத்தமாகக் கேட்க…
அவளுக்கு மட்டுமா… இலட்சுமி… ரிதன்யா… ரித்விகா… ஏன் அந்தக் ’கண்மணி’ இல்லத்தில் இருந்த மற்ற இரு குடித்தனங்களுக்குமே நன்றாக கேட்க….
அந்த இல்லத்தில் வசித்த காது கேட்கும் திறன் பெற்றிருந்த அத்தனை பேரின் தலையும் ரிஷி தங்கி இருந்த மாடி அறையில் நோக்கி தானாகவே திரும்பி இருந்தன…
இலட்சுமி… கவலையும் படபடப்புமாகக் சமையலறையில் இருந்து கண்மணியைத் தேடி வர… கண்மணியும் இப்போதும் வெளியே வந்திருக்க…
“என்னம்மா ஆச்சு… ஏன் இவ்ளோ கோபமா போனான்… அங்க போய்… அவன் கோபத்தை எல்லாம் அந்தக் கதவுல காண்பிக்கிறான்” இலட்சுமி குரல் தடுமாறி இருக்க… கண்மணி கோபமோ… கடுப்போ… என எதையும் காட்ட முடியாத பாவனையில் இருந்தாள்…
அதை விட… ரிஷிக்கு இந்த அளவு கோபம் எனும் போதே…. என்ன செய்து விட்டு வந்திருக்கின்றானோ… இல்லை அவனுக்கு என்ன ஆனதோ… கண்மணி இப்படி யோசித்துக் கொண்டிருக்க… தன் அத்தை கேட்ட கேள்விக்கெல்ல்லாம் பதில் சொல்லவே அவளுக்குத் தோணவில்லை….
ரிஷியைத் தேடி… அவனிடம் செல்லச் சொல்லி… அவள் மனம் அவளை வேகப்படுத்த…
ரித்விகாவோ…
“அண்ணா… உள்ள வரும் போதே கொஞ்சம் சீரியஸாத்தான் இருந்த மாதிரி இருந்துச்சு… ஆனால் என்னைப் பார்த்து சிரிச்சாங்க… அண்ணிக்கிட ஏதோ உங்ககிட்ட சொன்னீங்களான்னு கேட்டாங்க… அண்ணி பதில் சொல்லலை… அதுக்கப்புறம்தான் அண்ணா கோபமாகிட்டாங்க” என்று தனக்குத் தெரிந்ததை சொல்லி விட
இலட்சுமி கண்மணியைப் பார்த்தார்… இப்போது கண்மணி… இலட்சுமியிடம் வேகமாக
“அப்படிலாம்…. ஒண்ணுமில்ல அத்தை… எனக்கும் அவருக்கு ஒரு பிரச்சனையுமில்லை… ஒரு நிமிடம்…. இதோ வர்றேன் “ என்றவள் அந்த இடத்தை…. அவர்களது கேள்விப் பார்வைகளைத் தவிர்த்தவளாக… ரிஷியின் மாடி அறையை நோக்கி வேகமாகப் போக…
ரிதன்யா… தன் அன்னையை முறைத்துப் பார்த்தபடி… கடந்து செல்ல… ரித்விகாவுக்கோ…. இன்று ஊருக்கு செல்வோமா மாட்டோமோ என்ற கவலை வந்திருக்க… அந்தக் கவலையில் அவள் ஒரு ஓரமாக அமர்ந்து விட…
இலட்சுமி அப்படியே ஸ்தம்பித்து அமர்ந்து விட்டார்… மகனின் ஆவேசம்… கோபம் இவை எல்லாவற்றையும் பார்த்தவராக…
எதையும் இயல்பாக எடுத்துக் கொண்டு புன்னகையோடு கடக்கும் தங்கள் செல்ல மகன்… அவன் என்றுமே இனி கிடைக்கப் போவதில்லை… அது தெரிந்த விசயமே… ஆனால் இந்த ரிஷி…
அவரது நெற்றியில் கவலைக் கோடுகள்…. மெல்லப் படர ஆரம்பித்திருந்தது…
--
மாடி அறையில் சிலையென அமர்ந்திருந்தான் ரிஷி---
“அவன் மனைவி… அவனைப் பற்றி தெரிந்திருந்தும்… தன் அன்னையிடம் ஏதும் பேசாமல் ஊருக்கு போவதற்கு கிளம்பிக் கொண்டிருக்கின்றாள்..”
ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை… மிக மிக சிறு விசயம் என்றாலும் கண்மணி என்று வரும்போது அவனால் அதை சுலபமாகக் கடக்க முடியவில்லை… நன்றாகவே தெரிகிறது… அவன் இப்படி நடப்பது ஏதுமே சரி இல்லை என்று…. ஆனால் மாற்ற முடிய வில்லை… மாற்றவும் விரும்பவில்லை அவன்… நான் இப்படித்தான்… அவளுக்கு நான் மட்டுமே என்னை மீறிதான் எதுவும் இருக்க வேண்டும்…
கோப மூச்சு வாங்க ஆரம்பித்திருக்க… அதுவும் கண்மணி இன்னமுமே அவனைத் தேடி வராமல் இருக்க… அவன் கோபத்தின் அளவு அவன் தேகத்தின் உஷ்ணத்தைக் கூட்டி… நெற்றியில் வியர்வை முத்துக்கள் பூக்க ஆரம்பித்திருக்க… வலது கை முஷ்டியை இறுக்கியபடி…. தன் மொத்தக் கோபத்தையும் அந்தக் கைகளில் இறக்கியவன்… கைகளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்… மெல்ல மெல்ல நிதானத்திற்கு அவனையுமறியாமலேயே அவன் வந்து கொண்டிருக்க… காரணமும் அறிந்ததுதான்… அந்தக் கைகளையேப் பார்த்துக் கொண்டிருக்க…
இப்போது கண்மணியும் மாடி ஏறி…. வேகமாக உள்ளே நுழைய... உள்ளே வந்த போதே அவளது பார்வையும் அவன் கைகளுக்குச் செல்ல… இவனுமே அவளைப் பார்க்க… கண்மணியின் இதழில் மென் புன்னகை… அவனோ… இன்னும் அதிகமாக முறைக்க… இருவருக்குமே… ஆஸ்திரேலியாவில் நடந்த நிகழ்வு ஞாபகத்திற்கு வந்தது…
---
/*கண்ணாளனே…..கண்ணாளனே…..
உன்னிடமே……..என் மனமே……
கடை கண்ணாலே ரசித்தேனே
கவின் பூவே கண்ணாளா…….
அண்ணலும் நோக்கினான்….
அவளும் நோக்கினாள்….
பார்த்த நொடி யுகமாய் நீள
பதை பதைத்து கண் திறப்பேன்
பின்னும் ஆற்றாமையால் அல்லலுற்று
கவண் வீசினாள்..*/
அத்தியாயம் 68-3 இல் இருந்து சில வரிகள்...
“உங்களுக்கு எப்போதுமே… இந்த டவுட் அது ஏன்னு எனக்குத் தெரியலை… அதை இன்னைக்கு நிவர்த்தி பண்ணிறலாம்… ஹ்ம்ம்ம்… உங்களுக்கு பிறந்த நாள் பரிசா எதுவும் நான் தரலைதானே… இப்போ கொடுத்துறலாம்” என்ற போதே
---
”ரிஷிக்கண்ணா… கண்ணைத் திறக்கக் கூடாது…” என்ற போது ரிஷி முழுவதுமாக அவள் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தான்
“யெஸ்… இன்விசிபிள் டச்… நீங்க ஃபீல் பண்றீங்கதானே… அது போதும்…”
---
நீங்க ஹர்ட் ஆகும் போதெல்லாம் இந்த இன்விசிபிள் பேண்ட் உங்கள கண்ட்ரோல் பண்ணும்… இதுதான் என்னோட கிஃப்ட்…
--
“ஹ்ம்ம்… தேங்க்ஸ்… ஆனால் ரிதன்யாவுக்கு பார்த்திபன் ஓகேன்னு தோணலை கண்மணி… எனக்கே அப்படி ஒரு ஃபீல் வரலை… மே பி பார்த்திபனுக்கு ஹர்ஷித் பற்றி தெரிஞ்சதுனால உனக்கு தோணிருக்கலாம்…” என்றவன்
---
“என்ன அத்தை... ஏன் அத்தை இவ்ளோ ஃபீல் பண்றீங்க” கண்மணி அவர் கவலை புரியாமல் கேட்க
”அவங்க அப்பா சொல்வாரு… நம்ம பையனுக்கு செல்லம் கொடுத்து பழக்கிட்டோமோன்னு… அதே தப்பை நீயும் பண்ணாத கண்மணி… பார்த்து நடந்துக்கோம்மா... உனக்கு நான் பெருசா சொல்லத் தேவையில்லை”
Nice update
Nice waiting for next ud sis take care
Super ud siss.
Nice.
😊😊
Such a ud jii.. 'Temper' how pleasantly portrayed.. Rk is justifying the title jii.. Durai chap closed.. But Maruthu..? Waiting jii.. Still Vicky doesn't realize how much precious RK is.. Even Arjun too.. When'll they..? Waiting jii..
Nice ud
Super rrrrrr
ரிஷியோட காதல் அழகுன்னா,ரஷியோட கோபம் கூட ரொம்ப அழகா தான் இருக்கு.அது எப்படிங்க இவ்வளவு அழகா ஒரு கதைய எழுதுறீங்க.
RK wow... Kanmani solathathuka evalo kovam .. first thought that kanmani was addicted to rishi but now without kanmani rishi is nothing... Great
Kanmani Rishiya epdi sis yosichenga romba powerful characters.. padikura engala oru second la tsunami mathiri iluthu vachukuranga lovely😍😍.. oru villain ku mudivu Rishi Kaila👌👌👌 maruthuku epdinu parkalam aana yen neenga ivlo alaga vaalra RK va pirichenga. Kanmani kovatha ineme tan parka poroma? waiting for next ud❤️
கண்மணி is really great, ரிஷியோட அவ்ளோ பரிமாணங்களையும் தாங்கி, பிடிக்காத நாத்தனார்,முடியாத மாமியார்,அப்பா,அர்ஜூன் மாதிரி லூசு பிடிச்ச அன்பு தொல்லைங்க இப்படி எல்லாரையும் சமாளிக்கனும்.
இதுல அப்போ அப்போ விக்ரம்,பார்த்திபன் மாதிரியான கொசு தொல்லைங்க வேற இடைல வந்து நொச்சு பண்ணுங்க, நிஜமா ரொம்ப பாவம்