மகிளாவின் வளைகாப்பு நிகழ்ச்சி... உறவினர்கள் நண்பர்கள் சூழ சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்க... கண்மணியும் விழா நடக்கும் நேரத்திற்கு சரியாக வந்து விழாவில் கலந்தும் கொண்டாள்...
ரிஷியின் தாய் இலட்சுமி... யாரின் பார்வையும் தன் மருமகள் மேல் கீழாக விழ வைக்க விடவில்லை... யாரைப் பார்த்தாலும்... யாரிடம் பேசினாலும்... கண்மணி புராணம் தான்... ரிஷியின் மனைவி என்று தெரியாதவர்களுக்கு எல்லாம் தன் மருமகளை அறிமுகப்படுத்தி... அவளைப் பற்றியே பேசிக் கொணடிருக்க... மகிளா கூட இந்த முறை கண்மணியிடம் நன்றாகவேப் பேசினாள்... பழகினாள்... ஏன் நீலகண்டன் கூட கண்மணியிடம் மரியாதையுடன் பழகினார்... சொந்தங்களுக்கிடையே... கண்மணி யார் எனத் தெரிய... நட்ராஜின் பிம்பம் போய்... நாராயண குருக்கள்... அவரின் அந்தஸ்து மட்டுமே அங்கு ஓங்கியிருந்தது... கண்மணிக்குத் தெரியாமலா இருக்கும்... தெரிந்தும் கண்டுகொள்ளவில்லை...
விக்கி வரவில்லை... நேற்று புத்தாண்டை இவர்களோடு கொண்டாடியவன்... இன்று வராமல் இருக்க... கண்மணியும் விக்கியும் மீன்டும் நேருக்கு நேராகச் சந்திக்கும் வாய்ப்பு அன்று தள்ளிப் போயிருந்தது...
சுமார் 11 மணி அளவில்... தன் அத்தை இலட்சுமியிடம் வந்த கண்மணி...
"அத்தை நான் கிளம்புறேன்... அவர் ஷோ இன்னைக்கு டெலிகாஸ்ட் டே... 11.30 க்கு ஸ்டார்ட் ஆகிரும்..." என்றவளை இலட்சுமியும் வற்புறுத்தவில்லை...
"அத்தை... நான் மதியம் ஆஸ்திரேலியா கிளம்புறேன்... நேற்றே டிக்கெட் போட்டுட்டேன்... தாத்தா எல்லா ஏற்பாடும் பண்ணிட்டார்... இப்போதான் கன்ஃபார்ம் பண்ணினார்..." என்ற மருமகளை ஆச்சரியமாகவெல்லாம் பார்க்கவில்லை... கண்மணிக்குப் பழகி இருந்தார் இலட்சுமி... அதேநேரம் வளைகாப்பு நிகழ்ச்சியிலும் தங்கி இருக்காமல் ரித்விகாவை அழைத்துக் கொண்டு... கண்மணியோடு கண்மணி இல்லமும் வந்து சேர்ந்திருந்தார்... ரிதன்யாவோ வழக்கம் போல தனது அதிருப்தியை முகத்தில் அப்பட்டமாகவே காட்டியிருந்தாள் மூவரிடமும்...
....
"அண்ணி... அண்ணனுக்கு பிறந்த நாள் ட்ரீட்டா அண்ணி..." வீட்டிற்கு வந்ததும் வராததுமாக ரித்விகா கண்மணியை ஓட்டிக் கொண்டிருக்க... கண்மணி அமைதியாக இருந்தாள் எதையோ சிந்தித்தபடி...
சிந்தனை வயப்பட்ட அவளின் அமைதியை பார்த்துக் கொண்டிருந்த இலட்சுமி
"கண்மணி... ஏதாவது பிரச்சனையாம்மா... விக்கி விசயமா" எனக் கேட்ட போதே....
"அதெல்லாம் இல்ல அத்தை..." என்றபடியே கொண்டு போவதற்குத் தேவையான தனக்கானப் பொருள்களை எல்லாம் எடுத்து வைக்க...
"என்னம்மா... இதுதானா... இவ்வளவு தானா..." என்றவரிடம்...
"பாட்டி... நேற்றே... எல்லா அரேஞ்ச்மென்ட்டும் பண்ணிட்டாங்க அத்தை... அங்க எல்லா பொருளும் எனக்காக வாங்கி வச்சுட்டாங்க... இது கொஞ்சம் என்னோட.... நான் யூஸ் பண்ற திங்க்ஸ் மட்டுமே"
"அப்புறம்... எங்க பாட்டி... வைதேகி பாட்டி சொல்லல... கந்தம்மாள் பாட்டி... இன்னைக்குப் போயிருவாங்க அவங்க அப்படி இப்படிதான் பேசுவாங்க... அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க அவங்க போகிற வரை" என்றவள் இப்போது தொலைக்காட்சியில் கவனம் வைக்க... நிகழ்ச்சியும் ஆரம்பித்திருந்தது...
நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் பத்து நிமிடங்கள் இயபல்பாகப் போய்க் கொண்டிருக்க... ரிஷியிடமே கண்மணியின் பார்வை இருக்க... அவன் முகமே சரி இல்லை... என்பது நன்றாகவேத் தெரிந்தது... அவனையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்க... நட்ராஜ் ரிஷியிடம் பேசுவது... அவன் விட்டேற்றியாகப் பதில் சொல்வது என... பார்த்துக் கொண்டே இருக்க... திடிரென அமளி துமளி...
ஆன்ட்ரூஸும்... அவனது பார்ட்டனரும்... சேர்ந்து கொண்டு வன்முறையில் ஈடுபட்ட காட்சிகள்... ரிஷி தான் ஆன்ட்ரூஸை முதலில் அடித்திருந்தான்... ஆனால் நிகழ்ச்சியில் அது வரவில்லை...இலட்சுமி பதறிப் போய்ப் பார்த்திருக்க.. ரித்விகாவோ அழ ஆரம்பித்து இருந்தாள் தன் அண்ணனின் நிலை பார்க்க முடியாமல்...
பார்த்துக் கொண்டிருந்த சில நிமிடங்களில்... கார்லா மற்றும் நட்ராஜ் இருவருமாக சேர்ந்து ரிஷியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொன்டு வர முயற்சித்துக் கொண்டிருக்க... அவர்களிடமிருந்து விலக முயற்சித்தவனாக... வெறி கொன்டவன் போல் அங்கிருந்த கார்க் கண்ணாடியில் தன் கையை ஓங்கிக் குத்த ... அதேசமயம் ஆன்ட்ரூஸ் இரும்பினாலான ஆயுதத்தில் பலமாகத் தாக்கி இருந்தான் ரிஷியை... சரிந்த ரிஷியின் நெற்றியில் இருந்து இரத்த வெள்ளம் சில நொடிகளிலேயே... அடுத்த சில நிமிடங்களில்... வேறெதுவும் காட்டப்படவில்லை... அடுத்து மயக்கத்தில் இருந்த ரிஷி ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்ட காட்சி மட்டுமே... நிகழ்ச்சியும் இரத்து செய்யப்பட்டு... ஆன்ட்ரூஸ் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்ட செய்தி வந்து... நிகழ்ச்சியின் இறுதியில் ரிஷி... தலையில் கட்டோடு... சரியாகி விட்டான்....நன்றாக இருக்கின்றான் என்ற மருத்துவமனைக் காட்சிகளோடு முடிந்திருக்க...
கண்மணியின் கண்களிலோ அனல் தெறித்தது...
தன் பிறந்த நாள் அன்று... டைரியைப் படித்த பின்பு கூட... தான் உணர்ச்சி வயப்பட்டிருந்த நிலையிலும் அவன் வாங்கிக் கொடுத்து அணிந்திருந்த மூக்குத்தியை அவனிடம் காட்டுவதற்காக.. ரிஷியை வீடியோ காலுக்கு வரச் சொல்ல...
"உன்னை இப்போ பார்த்தால்... அவ்வளவுதான்... அடுத்த நிமிடம்... இந்தியாவில்... சென்னையில்... இல்லையில்லை... 'கண்மணி' இல்லத்தில்... இல்லையில்லை... கண்மணியின் மடியில் தான்..." எப்படியெல்லாம் காதல் வசனம் பேசினான்... எல்லாம் ஆஸ்திரேலியா மருத்துவமனை கட்டிலின் மடியில் படுத்துக்கொண்டுதானா... அவன் காதல் வசனம் பேசியபோதே உணர்ந்திருக்க வேண்டும்... மதி மயங்கி விட்டேன்... தனக்குள் பொறுமியபடி இருந்தவள்..
நேற்று பேசியபோது அவன் குரலே சரி இல்லை... தன்னிடம் பேச மிகவுமே பெருமுயற்சி எடுத்துப் பேசுகிறான் என்று தெரிந்திருக்க... உறுதி செய்ய நினைத்தவள்... வேண்டுமென்றே... லைன் சரி இல்லை என்று சொல்ல... அடுத்த நிமிடம்... அவனும் போனை வைத்து... அவனுமே அவளிடம் மாட்டிக் கொண்டிருக்க... இங்கு இவளுமே தன் தாத்தாவிடம் சொல்லி டிக்கெட்டை புக் செய்திருந்தாள்
நேற்று அவளை கணவனைப் பார்க்கப் போகச் சொன்ன உள்ளுணர்வு... கணவனுக்கு அடிபட்ட போது வரவில்லையே... ஏன் வரவில்லை... அவன் வேண்டுமென்றேயும் செய்த செயலையும் அவள் பார்க்காமல் இல்லை... அதே நேரம் அந்த இரும்புக் கம்பியினால் அடிபட்டதையும் அவளால் தாங்கவே முடியவில்லை... இந்த நிமிடம் வரை எதையுமே அவன் காட்டிக் கொள்ளவே இல்லையே... இவன் ஏன் இப்படி இருக்கின்றான்... தனக்குப் பிடித்தவர்களோடு மகிழ்ச்சியை மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டுமா என்ன???...
தான் மட்டும் எப்படி எனத் தன்னைப் பற்றி யோசிக்காமல் எல்லாம் இல்லை... தேவையில்லாத பழைய குப்பைகள்... நடந்தது மாறப்போவதில்லை... தேவையில்லாத சோகம்... அது எதற்கு என்று தானே தவிர... மறைக்க வேண்டுமென்றெல்லாம் இல்லை... அதற்கென்று ஒரு சரியான சமயம் வாய்க்கும்... அப்போது சொல்லிக்கொள்ளலாம் என்றுதான் இருந்தாள் அவளைப் பொறுத்தவரை...
....
விக்கியோடு பேசி முடித்து விட்டு... அமர்ந்திருந்தவனுக்கு... கொஞ்சம் தெளிவு பிறந்திருந்தது... கண்மணியைப் பற்றி இருவருமே பேசவில்லை... ரிஷிக்கும் அவன் கண்மணியைப் பற்றி பேச்சை எடுக்காதது ஒரு வகையில் நிம்மதி தான்... இன்றிருந்த மனநிலையில்... விக்கியிடம் வாக்குவாதம் செய்யவோ... போராடவோ தெம்பில்லாத நிலை... ஆதவனிடம் ஆரம்பித்து... எங்கெங்கோ போய்... இறுதியில் ரிதன்யாவிடம் முடிந்திருக்க... அதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்திருந்தான்...
"ரிஷி... எனக்கு ஒரு பொண்ணைப் பிடிச்சுருக்கு"
ரிஷி உள்ளுக்குள் சிரித்தபடியே
"அவ அண்ணாகிட்ட போய் பொண்ணு கேட்கணுமா... ஹீரோ ஃப்ரெண்ட்னாலே இதுதானே எங்க தலை எழுத்து... நீங்க லவ் பண்ணுவீங்க... டூயட் பாடுவீங்க... அடி மட்டும் என்னை மாதிரி அப்பாவி நண்பன் வாங்கனும்... சொல்லு சொல்லு... அட்ரஸ் என்ன... உனக்கு அவன் தங்கையைக் தர மாட்டானாம்மா" ரிஷி எல்லாம் தெரிந்தும் வேண்டுமென்றே சலிப்பது போன்ற பாவவையில் நக்கலாகப் பேசி முடிக்க...
விக்கியும் அவனைப் புரிந்துக் கொண்டவனாகச் சிரித்தான்...
"அவ அண்ணாகிட்டலாம் பயம் இல்லை..."
"அப்போ... அவ அண்ணிகிட்டயா" விக்கியை ஓட்டத்தான் ஆசை... கண்மணி மனக்கண்ணில் வந்த போதே ரிஷியின் முகமும் வாடி விட... இருந்தும் சமாளித்துக் கொண்டவன்
"அப்போ என்னடா பிரச்சனை... "
"தாத்தா கிட்ட வந்து பேசனும்" என்ற போதே...
"ஹான் அது சரி... இவர் லவ் பண்ணுவாராம்... நாங்க உங்க தாத்தாகிட்ட தர்ம அடி வாங்கனுமோ... ஹீரோன்னு சொல்றோம்ல... அதுக்கேத்த மாதிரி எல்லாம் சமாளிக்கனும் ஹீரோ சார்... " என்ற போதே
"ப்ச்ச்... விளையாடாதடா.." விக்கியின் குரலில் தீவிரம் வந்திருக்க
"ஆமாம்... எனக்கும் ஆசை பாரு... என் நிலைமை தெரியாமல்... போடா நீ வேற" ரிஷி மீண்டும் அவன் கவலைக்குப் போகப் போக... விக்கி இப்போது நண்பனிடம் விளையாட்டுப் பேச்சை விட்டு விட்டு
"ரிதன்யாவைப் பிடிச்சுருக்குடா... இப்போ இல்லை... காலேஜ் டேஸ்ல இருந்து... அப்போ அந்த வயசுல அந்த ஃபீலிங்ஸுக்கு இம்பார்ட்டன்ட் கொடுக்கலைனு இல்லை... அது எந்த அளவுக்கு முக்கியம்னு எனக்கு நானே டெஸ்ட் வச்சுக்கிட்டேன்..." என்று அனைத்தையும் சொல்லியவன்... ரிதன்யா சொன்னதையும் சொன்னவன்...
"உன் தங்கைய எனக்குத் தர சம்மதம் சொல்ல மாட்டியாடா..." என்று நிறுத்த
"என்னைப் பற்றி... அதுவும் என் நல்ல விசயம்லாம் அதிகமா தெரிஞ்ச ஆளு நீதான்... மாப்பிள்ளையாக்குனா எனக்கு நானே ஆப்பு வச்சுக்கிற மாதிரி இருக்கே... அதுதான் யோசிக்கிறேன்..." என்று சிரித்த படியே...
"சரி விடு... பார்த்துக்கலாம்... ஹ்ம்ம்ம்... என் தலைஎழுத்து... வேற வழி... " என்று வருத்தப்படுவது போல நண்பனிடம் நடித்தவன்... கொஞ்சம் தீவிர பாவனைக்கு மாறியவனாக
"உன்னை விட என் தங்கச்சிக்கு நல்ல மாப்பிள்ளை தேடனுமாடா நான்... அங்க வந்த பின்னால எல்லாம் பேசலாம்டா... அப்புறம் ஆதவன் கிட்ட ஜாக்கிரதையா இருடா... நீ முக்கியம்டா எனக்கு" என்று எச்சரித்தும் நெகிழ்ந்துமாக பேசியபடி அடுத்த சில நிமிடங்களில் போனையும் வைத்திருந்தான்...
.....
சுவரில் தலை சாய்ந்து... கண்களைத் திறந்தபடி மேலே பார்த்தபடியே வெறித்துக் கொண்டிருந்தான்... இப்போதும் ரிஷி... அந்த மருத்துவமனை வராண்டாவில் அவன் மட்டுமே அமர்ந்திருந்தான்...
பிரேம் மகிளா... மகிளாவின் முகத்தில் இருந்த சந்தோஷம்... இன்னொருவனை விரும்பியவளை... அவனவளாக மாற்றி இருக்கின்றான் என்றால் பிரேம் எந்த அளவுக்கு அன்பைக் காட்டியிருந்திருப்பான் மனைவி மேல்... அந்த அன்பின் சாட்சியாக இதோ இருவரின் வாரிசாக இன்னொரு உயிர்....
விக்கி... ஆறு வருடக் காதல்... அதில் இப்போதுமே பொறுமை... யாரையும் நோகடிக்காமல் குடும்பத்தாரின் ஆசிர்வாதம் வேண்டும் என்ற தவிப்பு... காதலித்தவளையும் தவிக்க விடவில்லை... தன் தங்கை ரிதன்யா முகத்தில் வெகுநாட்களுக்குப் பிறகு உயிர்ப்பு வந்திருந்ததே... அண்ணனாக அதையும் கவனித்திருந்தானே ...
அவனைச் சுற்றி இருந்தவர்கள் அனைவருமே... ஹீரோக்களாக இருக்க.... தான் இப்போதும் ஸீரோவாகவே இருக்கும் நிலையை எண்ணி தன்னையே வெறுத்துக் கொண்டிருந்தான்...
"நீ என்ன செய்தாய்... உன் குழந்தைப்பருவம் என்ன... உனக்கு என்ன பிடிக்கும்... ஏன் இப்படி இருக்கிறாய்... ஏன் தாத்தா பாட்டியோடு வசிக்கவில்லை... இன்னும் எத்தனையோ " என்றாவது ஒருநாள் தன் மனைவியிடம் கேட்டிருப்பானா... இல்லை அவளைப் பற்றி சிறு விசயமாவது இவன் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டி இருப்பானா... தனக்கு ஏதாவது என்றால்... அவளின் மடி வேண்டும்... அவளின் ஆறுதல் வேண்டும்.. அவளுக்காக நான் என்ன செய்திருக்கின்றேன்... எனக்காக மட்டுமே யோசித்து... என் குடும்பத்துக்காக மட்டுமே வாழ்ந்து... அவளைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டேனே..."
அர்ஜுன்... அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வானே... அவனையும் தள்ளி வைத்து என்னை நேசித்தவளுக்கு நான் என்ன செய்தேன்... " கண்கள் மீண்டும் ஈரமாகி சிவக்க ஆரம்பித்திருக்க... அதேசமயம்... நட்ராஜ் விழித்து விட்டதாகக் கூறி... செவிலியர் வந்து சொல்லிச் செல்ல...
மகளைப் பார்க்கத் தவறிவிட்டார் என அவரைக் குற்றம் சாட்டினாயே.. நீ பெரிய ஒழுங்கா... நீ உன் மனைவியைப் மிக நன்றாகக் கவனித்துக் கொண்ட அழகுதான் உலகம் அறிந்ததே... மனசாட்சி... அவனைக் கூற்கூறாகக் கிழித்துப் போட... நட்ராஜின் அருகில் போய் அமர்ந்திருந்தான்... வார்த்தையினிறி... தலை குனிந்தபடி..
எழுந்து அமர்ந்திருந்தார் நட்ராஜ்...
நட்ராஜின் கையில் முகத்தை வைத்தவனின்... உடல் குலுங்கிய போதே... அவன் கண்களின் கண்ணீர் முத்துக்கள் அவர் கையில்
"ப்ச்ச்... ரிஷி... இது என்னப்பா... என் பொண்ணுக்காக நீ கேட்காமல் வேறு யார் என்னைக் கேட்பாங்க... " என்ற போதே... அவனை நிமிர்த்தியவரிடம்
"உங்க பொண்ணுக்குத் தகுதியானவனா நான்???... இல்லவே இல்லைனு இப்போ புரியுது மாமா... ஆனால் அவ இல்லாமல் என்னால இருக்க முடியாது... அவ வேணும் எனக்கு... ஆனால் என்னால அவள ஃபேஸ் பண்ண முடியுமா...என்னை விட்டு போயிருவாளோன்னு பயமா இருக்கு மாமா... "
நட்ராஜ்... அவன் கைகளை இறுகப் பற்றியவராக
"இதை மட்டும் புரிஞ்சுக்கோ... அர்ஜுனுக்கு என்னைப் பிடிக்கலைனு நான் கண்மணியை அவன் கிட்ட இருந்து பிரிக்கலை ரிஷி... 'அர்ஜூன்'... கண்மணிய மகாராணி மாதிரி வச்சுருப்பான் தான்... கண்மணியும் சந்தோசமா இருந்திருப்பாதான்... ஆனால் கண்மணியா இருந்திருப்பாளா... அது விடை தெரியா கேள்வி... ஆனால் என் பொண்ணை கண்மணியா உன் கிட்ட பார்த்தேன் ரிஷி... என் அம்மாக்கு அப்புறம் கண்மணி அவளா இருக்கிறது உன்கிட்ட மட்டும் தான்... என் பொண்ணு உன் மூலமா திரும்ப கிடைச்சுட்டு இருக்கா... நட்ராஜ்... அர்ஜூன்... நாராயணன் வைதேகின்னு ஆயிரம் பேர் வரலாம்... ஆனால் என் பொண்ணு எங்க எல்லாருக்குமே ஒரு எல்லைக் கோடு போட்டு நிறுத்தி வச்சுட்டா... உன்னை... உன்னை மட்டும் தான் அவ எல்லாமுமா நினைக்கிறா... "
"நான் என்ன பண்ணினேன் அவளுக்காக... ஒண்ணுமே இல்ல... என்னோட சுயநலத்துக்காக மட்டுமே பலமுறை அவளை யூஸ் பண்ணிருக்கேன்... ஆனா என்னை அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்னு தெரியும்... என்னை ஏன் அவளுக்குப் பிடிச்சது... அதுவும் தெரியாது எனக்கு... ஆனால் என்னை விட்டு அவ போகவே கூடாது... அதை மட்டும் எனக்குத் தாங்கிக்க முடியாது..."
அவனின் அலைபேசி அழைக்க... எடுத்துப் பார்க்க... இலட்சுமிதான் அழைத்திருந்தார்... ரிஷியை... நிகழ்ச்சியில் நடந்த கலவரம்.. அதன் காரணம் எல்லாம் விசாரித்து விட்டு... கடைசியாக கண்மணி விமானத்தில் ஏறிய தகவலையும் சொல்ல... ரிஷியின் கண்களில் வெளிப்பட்ட அதிர்வுகளை நட்ராஜ் கண்டு கொண்டவராக
"நீ நீயாவே இரு ரிஷி... அது போதும்... கண்மணி உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டாள் " என்றவரின் வார்த்தைகள்... அவனுக்கு அவன் வாழ்க்கைக்கான ஒளியாக மாறி இருந்தது...
Super
Very nice ud sis, Rishi ipo fully kanmani's Rishi ah maari ulla tharunam, very nice ud sis, eagerly waiting for Kanmani's reaction.
Lovely UD sis..
Happy New Year 2022 to All.. Happy to read that Rishi is trying to understand and caring for Kanmani now. Waiting to read how he is going to meet Kanmani. Happy forgive Natraj. Nice. But now also Rishi didn't tell Kanmani's importance and place in his life to Vicky as well as Rithanya and both of them again going to illtreat her..Not liking both.. Waiting for next update..
Sis RK meeting episode epo varum?? Waiting sis ♥️
nice update
Newyear vanthuruchu but RK ku Valentines day vanthuruchu..Happie to see their union on 2022
HAPPY NEW YEAR TO EVERYONE
HAPPY BIRTHDAY RISHI
HAPPY NEW YEAR SIS, arumaiyaana pathivukal ,waiting for u r next ubdate
HAPPY NEW YEAR TO ALL💐
Why are you not say kanmani matterwhen you open it.
Happy new year to rishi kanna and kanmani and all readers and their
மிக கனமான பதிவு.ரிஷி விக்கியிடம் ஆறுதல் தேடும் அளவு விக்கியை நண்பனாக நினைத்த அளவு விக்கி ரிஷி நட்பை உணர்ந்தவனாகத் தெரியவில்லை.கண்மணியிடம் அவன் பேசிய பேச்சுக்கள் அவனை நண்பனாகவும் பிடிக்கவில்லை நல்ல மனிதனாகவும் பிடிக்கவில்லை.ரிஷி விக்கி நட்பு அவ்வளவு ஆழமானதாக மனதில் பதியவில்லை.சுயநலவாதியாய் விக்கி ரிஷியை விட்டு விலகி சென்றது போல் தோன்றுகிறது
Speechless...
Happy New Year 💐💐💐💕💕💕🎉🎉🎉
Rishi and Vikram conversation is super.romba naalaikku appuram rishi sagajama pesura maathi erukku.finaly kanmani is going to Australia. I'm happy.
Rishi's maturity towards kanmani is amazing.. Ponna protect panna mis pannitalum kanmani and rishi bonding ah correct ah understand panirukar natraj.. Happy with that.. Expecting towards rk meet..
Happy new year sis..
Happy New year
Nice ud siss.
A very Happy New year sis for u and ur family... Lot of emotions from Rishi view. Want to see how he going to handle kanmani..