/*ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...அடுத்த எபி போட்டுட்டேன்... தேங்க்ஸ் ஃபார் ஆல் ஆஃப் யுவர் கமெண்ட்ஸ்... ரொம்ப ரொம்ப நன்றி...
ஏன் இந்த ஸ்டோரி பெருசா போகுது... எனக்கே தெரியலை... எவ்ளவோ கட் பண்ணித்தான் எழுதறேன்... அரை குறையா சொல்லிட்டு அடுத்த லெவலுக்கும் போக முடியல... ரிஷி கண்மணி மீட்டிங் எபிசோட் வர்றதுக்கு இன்னும் ரெண்டு எபிசோட் இருக்கு... கண்மணி ஃப்ளாஷ்பேக் இப்போ வச்சா... ரிஷி-கண்மணி ரீயூனியன் ஃபீலை ரீடர்ஸ் முழுமையா அனுபவிக்க முடியாது... சோ அது இப்போ இல்லை...
கதை ஒரே இடத்துல இருக்குனு நீங்க ஃபீல் பண்ற மாதிரி... எனக்குள்ளயும் ரைட்டரா ஃபீல் இருக்கு... ஆனா இந்தக் கதைக்காக இல்லை....
செழியன் - ஆராதனா...
ஜீவா -ஜீவிதா( முதன் முதலா எனக்குள்ள உருவான நாயக நாயகி)
சந்திரசேகர்-குணசுந்தரி( ராகவ் ஃப்ரெண்ட்)
பிருத்விராஜ்-சம்யுக்தா
நிரஞ்சன் - மிருதுளா...
இவங்களை எல்லாம் எப்படி... எப்போ உங்ககிட்ட கொண்டு வந்து சேர்க்கப் போறேன்னு தெரியலை.... பார்க்கலாம்... கடவுள் கிட்ட இதுவும் என்னோட வேண்டுதல்...
ஹீரோ ஹீரொயினுக்கு சீன் டைலாக் எழுதும் போது.... என்னோட முந்தைய கதைகளை மட்டுமல்ல... பின்னால் வரப்போகும் ஹீரொ - ஹீரோயினையும் யோசிச்சுட்டேதான் எழுதுவேன்... எந்த ஒரு சீனும்... டைலாக்கும்... எமோசனலும் ரிப்பீட் ஆகக் கூடாதுன்னு...
பாலா கீர்த்தனா... விஜய் தீக்ஷா... ரகு-சந்தியா... கேரக்டர்ஸ் பேஸ் பண்ணித்தான் ஒவ்வொருத்தங்களுக்கும் எமோசனல் மாறுபடும்... அது மட்டும் கிராஸ் ஆகிறக்கூடாது... இதுதான் நான் யோசிக்கிறது.... லவ் ஸ்டோரிதான்... ஆனால் ஒவ்வொரு கதை நாயக-நாயகி இவங்களோட உணர்வுகள் படிக்கிற உங்களுக்கு டிஃபெரெண்ட் ஃபீல் கொடுக்கனும்...
அதே நேரம் ஒரு கதைல மைனரா இருக்கிற ஃபீல் இன்னொரு கதைல மெயினா வரலாம்... அதைத் தவிர்க்க முடியாது... எடுத்துக்காட்டா... அன்பே நீ இன்றி - நாவல்ல விஜய்-சாரகேஷ்... கேரக்டர்ஸை இங்க ரிஷி-அர்ஜூன்... கிட்டத்தட்ட சேம் லைன்ல க்ராஸ் பண்ணுவாங்க.... ஆனால் விஜய்’ கிட்ட ஃபீல் பண்ணதை அர்ஜூன் கிட்ட ஃபீல் பண்ணமுடியாது.... சாரகேசை இக்னோர் பண்ணின மாதிரி ரிஷிகேஷை இக்னோர் பண்ண முடியாது... தீக்ஷா - கண்மணி இவங்க கேரக்டர்ஸ்... அவங்க ஃபீல் தான் இங்க டாமினண்ட் பண்ணும்... பண்ணனும்... படிக்கிற ரீடர்ஸ்க்கும் அவங்க ஃபீல் தான் ட்ரான்ஸ்ஃபர் ஆகனும்...
சோ என்னோட எல்லா கதைலயும் ஹீரோ யார்னு... ஹீரோயினோட எமோசனல் அண்ட் காதல் தான் டிசைட் பண்ணும்... ஹீரோயினோட உணர்வுகளை பேலன்ஸ் பண்ணி... அவளை சமாளிச்சு... சக்ஸஸ் ஆகுறவன் தான் என்னோட கதைல ஹீரோ... ஹீரோயின் கேரக்டருக்கு மெனக்கெட்டால் போதும்... ஹீரோ கேரக்டர் ஆட்டோமெட்டிக்கா சக்ஸஸ் ஆகிரும்... ஹீரோக்குனு பெருசா யோசிக்க தேவையே இல்லை... என்னோட எல்லா கதை உருவாக்கமும்... ஹீரோயின் கேரக்டர்ஸ்டிக்ஸ்ல தான் ஸ்டார்ட் ஆகும்....
ஓகே... ஒகே... நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியுது... ரிஷி கண்மணி எப்போ மறுபடியும் பார்ப்பாங்கன்னு கேட்டதுக்கு... எவ்ளோ பேச்சு பேசிருக்கான்னு.... திட்ற மைண்ட் வாய்ஸ் கேக்குது....
எபி படிங்க... கமெண்ட்ஸ் ஷேர் பண்ணுங்க...
“இன்னொன்னு சொல்ல நினைத்தேன்... பவித்ரா ஒரு டாக்டர்... அவ எப்படி இப்படி யோசிப்பான்னு... ” கமென்ட்டுக்கான பதில்
அந்த டைரில ஒரு வரி இருக்கும்...
“நான் அவங்ககிட்ட என்னோட ஆசைய சொல்லி வளர்க்க மாட்டேன்னு... ” டாக்டரா இந்த இடம் பவித்ரா கேரக்டருக்கு ஜஸ்டிஃபை ஆகியிருக்கும்னு நினைக்கிறேன்... ஆனால் எமோசனல் ஃபீல் டாக்டர்... நார்மல் கேர்ள்னு பார்த்து வராது.... எமோஷனல் எவ்ளோ பெரிய அறிவாளியையும் அடியோட வீழ்த்துற ஆயுதம்... அதுதான் கண்மணி - ரிஷி லைஃப்போட பிரச்சனைக்கும் காரணம்...
I think.. I talked So much.... னு... உங்க கமெண்ட்ஸுக்கு ரிப்ளை பண்ண முடியாத குற்ற உணர்வு... அப்போப்ப இப்படி பேச வைக்குது... எமோசனல் ‘வாருணி’ ஆகிட்டேனோ...
சாரி சாரி.... எபி படிங்க... வழக்கம் போல உங்க ஆதரவை கமெண்டா எதிர்பார்த்துட்டே இருப்பேன்....
கமெண்ட்ஸ் அண்ட் லைக் க்குக்கு மீண்டும் மீண்டும் நன்றி... அப்புறம் சைலண்ட் ரீடர்ஸுக்கும் நன்றி ....நன்றி நன்றி... */
நன்றி
பிரவீணா...
அத்தியாயம் 63:
/*என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளோ மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளோ கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே...*/
கண்மணி ’பவித்ர விகாஸு’க்கு வரும் போது தான் மட்டுமல்ல… தன் அத்தை இலட்சுமியையும் தன் கூடவே அழைத்து வந்திருக்க… அதிலும் இலட்சுமியை தன் இரு சக்கர வாகனத்தில் வைத்து அழைத்து வருவது அத்தனை உசிதம் அல்ல என்பதால் ஆட்டோவில் வந்திருந்தாள்…
இருவருமாக பவித்ர விகாஸுக்குள் நுழைய…
இலட்சுமிக்கு… கன்மணியின் தாத்தா நாராயண குருக்கள் வசதியானவர் எனத் தெரியும்… தங்கள் குடும்பமும் செல்வ வளம் கொண்டதுதானே… இதுவரை பெரிதாக வித்தியாசம் கொண்டதில்லை…
ஆனால் பவித்ர விகாஸுக்குள் காலடி எடுத்து வைத்த போதுதான் முதன் முதலாக தங்களின் செல்வ வளத்துக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்தார் இலட்சுமி
"சாதாரண நடுத்தர குடும்பமாக இருந்திருந்தால்… நாராயண குருக்கள் வசதியானவர் என்று மட்டுமே இலட்சுமி உணர்ந்திருப்பார்… ஆனால் இங்கு இலட்சுமியும் வசதி படைத்த குடும்பமே...… வசதி படைத்தவர்களுக்கு இடையே உள்ள அளவீட்டையும்… மதிப்பீடுகளின் வித்தியாசத்தையும் புரிந்து கொண்டார் அங்கு வந்த போதே…”
ரிஷிக்கு பத்து வயதாக இருக்கும் போது அவனது பிறந்த நாள் பரிசாக என்ன வேண்டுமென்று கேட்க…
அந்த பத்து வயதில்… அவன் தன் பரிசுப் பொருளாக… கார் வேண்டுமென்று கேட்க… ”விளையாட்டு கார்” என இவர்கள் நினைத்திருக்க
“உண்மையான கார்” எனச் சொல்லி மட்டும் அவன் அவர்களை அதிர்ச்சி அடையச் செய்ய வில்லை…
அவனது பெயர்… ‘Rishikesh’ அதனால்… ‘R; - ல் தொடங்கும் ”Rolls Royce” மாடல் கார்தான் வேண்டும் என்று சொல்லி அதிர வைத்திருந்தான் அவர்களை…
அதன் பின்… அவனது 19 வயதில்… கல்லூரியில் சேர்ந்த பின்… தனசேகர்… ரிஷிக்கு… அவன் பிறந்த நாள் பரிசாக… காரை வாங்கி வந்து நிறுத்தி இருந்தார்….
”ரிஷி… நீ கேட்டது போல உன் பேரோட ஸ்டார்ட்டிங் லெட்டர்லதான் இந்த காரும்” என
”Rolls Royce” இல்ல “Range Rover” என தனசேகர் சிரித்தபடியே சொல்லியவராக மகனுக்கு கார்ச்சாவியைக் கொடுத்தது இன்றும் ஞாபகத்தில் இருந்தது…
அவன் கேட்ட… அந்த ரோல்ஸ் ராய்ஸ் வாகனம் இங்கு இரண்டு விதமான மாடல்களில் அணிவகுத்திருந்தன…
வீட்டுக்கு உரிமையாளர் என்று பார்த்தால்… மூவர் மட்டுமே… ஆனால் சீருடையோடு நிற்கும் வேலையாட்களின் எண்ணிக்கையோ அதை விட பல மடங்கு… இன்னும் பல…
இது அத்தனைக்கும் கண்மணி மட்டுமே ஒரே வாரிசு…. மலைப்பாக இருந்தது இலட்சுமிக்கு…
அன்று மருமகளின் உற்சாகம் பார்த்த போது… தோன்றிய அதே எண்ணம்… இன்றுமே ஆனால் இன்று அவளது அந்தஸ்தின் உயரம் பார்த்து வந்திருந்தால் கூட பரவாயில்லை… மாறாக இதை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு… ’கண்மணி’ இல்லத்தில் தன் தந்தை நட்ராஜோடு வசிக்கும் தன் மருமகளின் பிடிவாதம்…
மருமகளின் குணங்களை நினைக்கும் போதே… மகனை நினைத்து… மனம் கலங்க ஆரம்பித்து இருந்தது தாயாக…
அவரின் நினைவில் ஒரு நிமிடம் நட்ராஜின் தாய் கந்தம்மாள் ஏன் வந்து போனார் என்றே தெரியவில்லை…
----
கிட்டத்தட்ட… அதிகாலை மூன்று மணி அளவில்… அவர்கள் மூவரையும் அர்ஜூன் தான் கண்மணியின் ஏரியாவிற்கு கொண்டு வந்து விட்டிருந்தான்… ’கண்மணி’ இல்ல வாயிலிலேயே வந்து காரை நிறுத்தி இருந்தான்… இலட்சுமியின் உடல்நிலையை கருத்தில் கொண்டவனாக…
அவர் காரை விட்டு இறங்குவதற்கும் உதவி செய்தவனிடம்… விடைபெற்றவர்…
“தேங்க்ஸ் தம்பி… நீங்களும் உங்க தாத்தாவும் தான்… என் ட்ரீட்மெண்ட்டுக்கு ஹை லெவல்ல அப்ரோச் பண்ணி ரெகமண்ட் பண்ணி இருக்கீங்கன்னு ரிஷி சொன்னான்… நன்றிப்பா”
அதற்கு மேல் இலட்சுமி அதிகமாக யாரிடமும் பேச வில்லை… அர்ஜூனும் புன்னகையோடு தலை அசைத்ததோடு சரி…
ரித்வியிடம் மட்டும்
“தேங்க்ஸ்… ரித்வி… உன்னோட எல்லா ஹெல்புக்கும்… அம்மாவை பார்த்துக் கூட்டிட்டு போ”
என்று ரித்வியையும், இலட்சுமியையும் வழி அனுப்பி வைத்தவன்… மீண்டும் காரில் ஏறி வந்து அமர்ந்தவன்….
இன்னும் இறங்காமல் காரிலேயே அமர்ந்திருந்த கண்மணியைப் பார்த்தவனாக…
“இன்னைக்கு என்ன… என் மேல ஒரே கரிசனமா இருக்கு… கேக் கட் பண்றதுக்கு முன்னால அவ்ளோ பேசுனேன்… கோபப்படுவேன்னு பார்த்தால்… கேக் வெட்டிட்டு முதல் துண்டு எனக்கு கொடுத்து… ஷாக்காக்குன… இப்போ… காரை விட்டு இறங்காமல்… உட்கார்ந்திருக்க… என்ன ஆச்சு”
”அப்படியா…. ” எனச் சிரித்தபடியே…
”இது ஏன்… இது எதுனாலன்னு நாம ஒரு விசயத்துக்கு சரியான தெளிவு கிடைக்காமல் நமக்குள்ள போராடிட்டு இருப்போம்… அப்படிப்பட்ட விசயத்துக்கு தெளிவு கிடைக்கும் போது… ஒரு சந்தோசம் கிடைக்குமே அந்த நிலைலதான் நான் இருக்கேன்… ”
சீட் பெல்ட்டைக் கழட்டியபடி…. வசதியாக சீட்டில் அமர்ந்தவளாக…
”அதெல்லாம் விடுங்க…. தாத்தா சொன்னாங்க… நெக்ஸ்ட் 2 வீக்ஸ்… ப்ராபெர்ட்டி… கம்பெனி… போர்ட் மீட்டிங்…. இதெல்லாம் பற்றி… அப்போதான் ஞாபகம் வந்துச்சு… சொல்லுங்க நேற்று ஏதோ ஆதவன் பற்றி பேச ஆரம்பிச்சீங்க… நான் கேட்கமால் வந்துட்டேன் சொல்லுங்க அர்ஜூன்” அவனிடம் மிக மிக இயல்பாக பேச ஆரம்பித்து இருந்தாள் கண்மணி
அர்ஜூனும் அதே நிலைக்கு இப்போது மாறி இருந்தான்
”ஹ்ம்ம்… நிவேதா சொல்வேன்ல… அவளோட பிரதரோட பார்ட்னர் தான் அந்த ஆதவன்… லாஸ்ட் வீக் அவரோட அன் எக்ஸ்பெக்டட் மீட்டிங்… அவங்க அந்த இடத்துக்குப் பதிலா வேறொரு இடம் தர்றாங்கன்னு சொல்லும் போது… ஏன் பிடிவாதம் பிடிக்கனும்னு தோணுச்சு… கொடுக்கலாம்னு தோணுச்சு… ஒன் ஆஃப் தி லார்ஜஸ்ட் ப்ராஜெக்ட்… சீக்கிரம் லாஞ்ச் ஆகப் போகுது… எல்லாம் சொன்னாரு… தாத்தாகிட்டயும் சொன்னேன்… உன்னோட சம்மதம் இதுல முக்கியம்… அதுதான் உன்கிட்ட பேச வந்தேன்….” என்றவனிடம்
“எனக்கு… எப்போதுமே ஒரே சொல்தான்… நீங்க என்ன பண்ணினாலும்…. ஏன் தாத்தாவோட வாரிசா நீங்க மாத்திக்கிட்டாலும் எனக்கு ஓகே தான் அர்ஜூன்… என்னை விட உங்களுக்கு மட்டும் தான் ஃபுல் ரைட்ஸ் இருக்கு… நானோ என் அம்மாவோ என்ன பண்ணினோம் என் தாத்தா பாட்டிக்கு… தாத்தாக்கு எல்லா விசயத்திலும் நீங்கதான் உறுதுணையா இருந்துருக்கீங்க…. நீங்கதான் இது எல்லாத்துக்குமே டிசர்வ்ட்…” என்ற போதே
“டிசர்வ்ட்… தாத்தாவோட வாரிசா மட்டும் தானா… அவரோட வாரிசுக்கு கிடையாதா” அவளைப் பார்க்க முடியாமல் அர்ஜூன் ரோட்டைப் பார்த்தபடி அர்ஜூன் கேட்டவனிடம்
“’இனி என்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்னு’ எனக்கு மிகப் பெரிய காஸ்ட்லியான பர்த்டே கிஃப்ட் கொடுத்துருக்கீங்கன்னு நினைக்கிறேன் அர்ஜூன்… ஞாபகம் வச்சுக்கங்க…” என்றவள்…
“என்ன சொல்ல நினைத்தேன்னா… நெக்ஸ்ட் 2 வீக்ஸ் மட்டும் தான் நான் ஃப்ரீ… அதுக்கப்புறம் நீங்க கேட்டாலும்… என் கால்ஷீட் கிடைக்காது… உங்க அளவுக்கு பிஸினஸ் டைக்கூன் பிஸி இல்லை… பொண்ணா… பொண்டாட்டியா பிஸி ஆகிருவேன்… ரிஷியும் அப்பாவும் இந்தியா ரிட்டர்ன் ஆகுறாங்க”
”ம்ஹூம்ஹூம்….” என்று நக்கலாகக் கேட்டவன்…
“ரிஷிக்கிட்ட உன்னைப் பற்றி சொல்ல ஏன் தயக்கம்னு சொல்லவா… ஒருவேளை உன் கடந்த காலம் அவனுக்குத் தெரிய வந்தால்… உன் அப்பாவை அவன் வெறுத்துருவானோன்னு தானே பயப்படுற… அவரும் சொல்லி இருக்க மாட்டாரே…. ஆனால் ஒரு நாள் அது நடக்கும்… அப்போ ரிஷியும் அர்ஜூனும் உன்னைப் பொறுத்தவரை ஒரே இடத்துல தான் இருப்போம்….” என்றவனிடம்
“என்ன திடீர்னு… ரிஷியை உங்க இடத்துக்கு சமமா நிறுத்தி பேசறீங்க… ஆச்சரியமா இருக்கே…” மற்றதெல்லாம் விடுத்து… புருவம் உயர்த்திக் கேட்டவள்…
“ஓகே… டேட் ஃபிக்ஸ் பண்ணிட்டு சொல்லுங்க அர்ஜூன்… நான் வர்றேன்... மறுபடியும் மறுபடியும் சொல்றேன்… இந்த 2 வீக்ஸ் மட்டும்தான் நான் ஃப்ரீ…” என்றபடியே இறங்கியவள்… இறங்கியோடது மட்டுமல்லாமல்…. காரைச் சுற்றி அவன் புறமாக வந்தவள்…
“என் அப்பாகிட்ட சண்டை போட…. அவர் காலரைப் பிடிச்சு ஏன் இப்படி பண்ணினார்னு கேட்கிற உரிமை ரிஷிக்கு மட்டும் தான் உரிமை இருக்கு… வேற யாருக்கும் அந்த உரிமை இல்லை… கண்டிப்பா அது ஒரு நாள் நடக்கும்… எதிர்பார்க்காமல் எல்லாம் இல்லை… அதுக்காக பயப்படவும் இல்லை நான்… ”
“அப்புறம் மகிளாவைப் பற்றி கவலைப்பட… பிரேம் இருக்காரு… மகிளா அவ மனசுன்னு நாம ரொம்ப ஃபீல் பண்ண வேண்டாமே… ஃப்ரியா இருங்க அர்ஜூன்… ”
”அடுத்து இதை முக்கியமா சொல்லனும்..”
“இந்த உலகமே என் புருசனை தூக்கி வச்சுக் கொண்டாடனும்… அவரை நான் மேரேஜ் பண்ணினது ரொம்ப சரியான முடிவுன்னு ஒவ்வொருத்தரும் ஃபீல் பண்ணனும்… ரிஷி என் மேல வச்சுருக்க காதலை… அன்பை… நீங்க எல்லாரும் உணரனும்…. இன்னும்… எக்சட்ரா… எக்சட்ரா…. இதெல்லாம் ஆசைப்படுறதுக்கு நான் பவித்ரா இல்லை… ஓகே… கண்மணி… கண்மணி ரிஷிகேஷ்… அவ்வளவுதான்… நான் மட்டும் என் ரிஷியோட காதலை… அன்பை… அந்நியோன்யத்தை நான் ஃபீல் பண்ணினா போதும்… மற்ற யாரைப் பற்றியும் எனக்கு கவலை இல்லை… அப்புறம் தேங்க்யூ சோ மச் ஃபார் யுவர் கிஃப்ட்… உங்க பரிசு என் வாழ்க்கைல எனக்கு வெகு நாளைய குழப்பத்தை தூக்கி தூர எறிஞ்சதுனால விலை மதிப்பில்லாத கிஃப்ட்… அஃப்கோர்ஸ்… உங்க ரேஞ்சுக்கு… ஸ்டேட்டஸ்க்கு பரிசு விலை உயர்ந்தததாத்தான் கொடுக்க முடியும் … கொடுப்பீங்க… தேங்க்யூ”
”ஆனால்.. ரிடர்ன் கிஃப்ட்… நீங்க கொடுத்த கிஃப்ட்டப் போலவே …. எதிர்பார்க்கிற ரிட்டர்ன் கிஃப்ட்டும் ரொம்ப்பக் காஸ்ட்ட்லியாச்சே அர்ஜூன்… ப்ச்ச் நான் உங்க அளவுக்கு வசதியான பொண்ணு இல்லை அர்ஜூன்… அதோ அந்த மாடி ரூம்ல…. தரையில படுத்து… பேருக்கு சாப்பிட்டு…. சாதாரண பைக்ல தொழிலாளியா வேலை பார்க்கிற… வாழ்க்கைல முன்னேறத் துடிச்சுட்டு இருக்கிற சாதாரண ஒருத்தனோட பொண்டாட்டி… அவகிட்ட போய் இப்படி ஒரு காஸ்ட்ட்லி கிஃப்ட் கேட்டுட்டீங்க அர்ஜூன்… ஒரு பெர்சண்ட் கூட வாய்ப்பே இல்லை… ஆனால் நீங்க கொடுத்த கிஃப்ட்ட இனி என்கிட்ட இருந்து வாங்கவும் முடியாது…. வாக்கு முக்கியம் அர்ஜூன்” என்றபோது கண்மணி முழுக்க முழுக்க ரிஷியின் மனைவியாக மாறிய தருணங்கள்
---
அர்ஜூனிடம் விடை பெற்றபடி… கண்மணி இல்லத்துக்குள் சந்தோசமாகத்தான் நுழைந்தாள்… அதே சந்தோசத்தோடு உறங்கினாளா கேள்விக்குறிதான்…
கண்மணி… கேட்டைத் திறந்து உள்ளே வர…. இலட்சுமியோ வீட்டினுள் போகாமல்… அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்திருக்க…. அவரை நோக்கி… உற்சாகத்தோடு போனவள்…
“தூங்கப் போகலையா அத்தை… மணி 3” எனக் கேட்டபடியே அவர் அருகில் அமர்ந்தவள்… இலட்சுமியைப் பார்க்க… அவரது கண்கள் கலங்கி இருக்க… முகம் எங்கும் கவலை… துயரம் மட்டுமே
“என்னாச்சு அத்தை” பதறி கேட்டவளுக்கு…. தன் தாத்தா பாட்டி வீட்டில் ஏதாவது ரிஷியின் தாய்க்கு மரியாதைக் குறைவாக நடந்து விட்டதோ… இப்படித்தான் மனம் குன்ற ஆரம்பித்திருக்க
அவளையே பார்த்தபடி இருந்த இலட்சுமி… சட்டென்று…. என்ன நினைத்தாரோ… வேண்டுதல் போல… கண்மணியின் கைகளை தன் கைக்குள் வைத்துக் கொண்டவராக…
“என் புள்ள அவன் வாழ்க்கைல ஏற்கனவே ஒரு தடவை ஏமாந்து அடிபட்டவன்… அதை மட்டும் புரிஞ்சுக்கோம்மா”
கண்மணி புரியாமல் அவரைப் பார்த்தாள்… அவர் சொல்வதற்கும்… தன்னிடம் இப்படி வேண்டுவதற்கும் என்ன சம்பந்தம்…
“என் பையன்… நடந்து போற பாதைல சும்மா தடுமாறி விழுந்த மாதிரிதான் இவ்ளோ நாள் அவனுக்கு நடந்தது எல்லாமே… அதுக்கே அவன் இவ்ளோ மாறிட்டான்… இப்போ அவனை நீ எவ்ளோ உயரத்துல வச்சுருக்கேன்னு பார்க்கும் போது எனக்கு சந்தோசப்பட முடியல கண்மணி…. பதிலா பயமா இருக்கு… சாதராண அடிக்கே… அவன் தாங்கலை… இவ்ளோ உயரத்துல இருந்து விழுந்தான்னா… நினைத்துப் பார்க்கவே எனக்கு பயமா இருக்கு கண்மணி… என் புள்ள இப்போ தனசேகரும் - இலட்சுமியும் பார்த்து வளர்த்த எங்க ரிஷிக்கண்ணா இல்லை… அவன் உன்னோட ரிஷிக்கண்ணா… அவன் உலகமே நீ மட்டும் தான் கண்மணி… அம்மாவா என் புள்ளைய என்னால மட்டுமே புரிஞ்சுக்க முடியும்…. அவன கைவிட்ற மாட்டியேம்மா…. அவன் தாங்க மாட்டாம்மா… “ கண்மணியின் கைகளில் தலை சாய்ந்து புலம்பிக் கொண்டிருந்த கண்மணியின் கைகள் முழுவதும் இலட்சுமியின் கண்ணீர் மட்டுமே…
கண்மணி வார்த்தைகளின்றி இறுகிப் போய் அமர்ந்திருந்தாள்…
”தாய் அறியா சூழ் உண்டோ …” ஒரு முறை மகனைப் புரிந்து கொள்ள முடியாமல் தவறு செய்தவர்தான் இலட்சுமியும்… அது ஒரு முறை மட்டுமே
அதே போல தன் சேய்க்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என அந்தத் தாய் மனம் மட்டுமே முதலில் உணரும்… இலட்சுமியும் தாயாக தன் மகனின் நிலையைக் கணித்துச் சொல்ல…
கண்மணி சில நிமிடங்கள் தான் கல்லாக இருந்தாள்… அடுத்த நொடியே தன்னைச் சமாளித்தவளாக
“அத்தை… என்னைப் பாருங்க… ஏன் இப்படி எல்லாம் பெரிய வார்த்தைலாம் பேசறீங்க… முதல்ல கண்ணைத் துடைங்க… இப்போதான் உங்களுக்கு எல்லாம் சரியா ஆகிட்டு இருக்கு… நீங்க ஏன் தேவையில்லாததை எல்லாம் யோசிச்சு,பேசி உங்க ஹெல்த்தை ஸ்பாயில் பண்ணிக்கிறீங்க
”உங்க பையன நான் ஏன் விட்டுட்டுப் போறேன்… ப்ச்ச்… முதல்ல என்னால அவரை விட்டு இருக்க முடியாது…. அவர் எப்போதுமே உங்க ரிஷிக்கண்ணாதான்… அன்னைக்கு நான் சும்மா உங்ககிட்ட விளையாடினேன்… வாங்க… பனி விழறது பாருங்க” என்று அவரை கைப்பிடித்து எழ வைத்து… அவரைப் பார்த்தவள்
“கண்மணியோட ரிஷி… கண்மணி ரிஷி மேல லவ் வச்சுருக்கான்னு… ரிஷிக்கு கண்மணி தேவைன்னு… எல்லோருமே ரிஷிய கண்மணியை வச்சு பேசறீங்க… ஆனால் யாருக்குமே புரியலையா… தோணலையா… நான் ரிஷியோட கண்மணின்னு… ரிஷி இல்லைனா நான் இல்லைனு…. இதுதான்… இந்த வித்தியாசம் தான்…. உங்க எல்லாருக்கும் ரிஷிக்கும் உள்ள வித்தியாசம்… கண்மணியின் குரல் அவளையுமறியாமல் தழுதழுக்க ஆரம்பித்திருக்க
“என் மனசைப் புரிஞ்சுக்க யாருமே இல்ல அத்தை… அதே போல என்னால இயல்பா எப்படி எல்லோர்கிட்டயும் பேசனும்னும் தெரியலை…. ரிஷியைத் தவிர… அது ஏன்னு தெரியல”
அதற்கு மேல் பேசவிடவில்லை இலட்சுமி… தன்னோடு சேர்த்துக் கொண்டு கண்மணியின் நெற்றியில் முத்தமிட்டவரை…. இறுகக் கட்டிக் கொண்டாள் கண்மணி…
----
ஆஸ்திரேலியா டிசம்பர் 31 காலை… 8 மணி
ரித்விகா அனுப்பி இருந்த கண்மணியின் பிறந்த நாள் புகைப்படங்களில்தான் அன்றைய பொழுதே ரிஷிக்கு விடிந்திருந்தது….
மாமா மருமகன் இருவருமே மருத்துவமனையில் இருந்தே ’கார்லா’ வீட்டிற்கு செல்வதாக முடிவு செய்யப்பட்டிருக்க… இருவருமே மருத்துவமனையைக் காலி செய்து தயாராகியும் இருந்தனர்…
”ரிஷி…. நீங்களா காரை ஓட்டப் போறீங்க… கைல இன்னும் கட்டுப் பிரிக்கலையே…” அவனது கையை ஆராய்ச்சி செய்தபடியே நட்ராஜ் கேட்க
”அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்லை… மேனேஜ் பண்ணிக்கலாம்” என்றவன்…. தயங்கி அவரைப் பார்த்தவன்… ஏதோ சொல்ல வந்து மீண்டும் அமைதி ஆகி விட…
அவனை உணர்ந்த நட்ராஜ்….
“என்ன ரிஷி… என்னமோ சொல்ல நினைக்கிற போல… அப்புறம் ஏன் தயங்குற… காலையில இருந்தே நானும் பார்க்கிறேன்…”
“இல்ல சா… மாமா..” என்றபோதே அவனின் ’மாமா’ என்ற ஒரே சொல்லில் நட்ராஜ் அதிர்ச்சியில் அவனைப் பார்த்தபடி இருக்க
“வ… வந்து… கண்மணி இங்க வருவான்னு நினைக்கிறேன்… எப்படியும் நெக்ஸ்ட் 2 வீக்ஸ் இங்கதான் நம்ம கூட இருப்பா… உங்களுக்கு தனி ரூம் புக் பண்ணலாம்னு இருக்கேன்… அதை அதைக் கேட்கத்தான்… சொல்லத்தான்…” என்று தயங்கி… எப்படியோ தன் மாமனாரிடம் சொல்லி முடித்து அவர் முகத்தைப் பார்க்க… நட்ராஜும் இப்போது முன்னிலும் அதிர்ச்சியாக
“நீங்க டிக்கெட் போட்ருக்கீங்களா…”
”இல்லை” இட வலமாக தலையை ஆட்டினான் ரிஷி…
“அப்போ மணி சொன்னுச்சா… டிக்கெட் போட்ருக்கேன்னு”
இப்போதும் இல்லையென்று இன்னும் வேகமாக தலையை ஆட்ட
“அப்புறம் எப்படி” நட்ராஜ் குழம்பிய பார்வை பார்க்க
”எனக்கு மனசுல தோணுது… அவ வருவான்னு…” தன் கைக்காயத்தைப் பார்த்தபடியே சொல்ல…
நட்ராஜும் புரிந்து கொண்டவராக… மௌனித்தவர்… சிரித்தபடியே… ரிஷியைப் பார்க்க…
ரிஷியோ வேகமாக அவனுடையை ரிப்போர்ட்களை சரி பார்ப்பது போல அதில் பார்வையை இப்போது வைத்திருக்க…
“நான் எது எதுக்கோ பயந்து… எது எதுக்கோ என்ன… அந்த அர்ஜூனுக்கு பயந்து… மணிக்கு பாஸ்போர்ட் அப்ளை பண்ண மாட்டேன்னு சொன்னப்போ… நீதான் ரிஷி என்னை வம்படியா மணிக்கு அப்ளை பண்ண வச்ச… ஞாபகம் இருக்கா…” என்றவரிடம்…
தலை அசைத்தான்… அன்றைய நாளும் நினைவுக்கு வந்தது…
“சார்… பாஸ்போர்ட் அப்ளை பண்ணா… அந்த அர்ஜூன் உங்க பொண்ண விட்டுட்டு போயிருவானா என்ன… சீப்பை ஒளிச்சு வச்சா கல்யாணம் நின்னு போயிரும்னுன்ற மாதிரி இருக்கு… அந்த அர்ஜூனுக்கு உங்க பொண்ணை மேரேஜ் பண்ற எண்ணம்லாம் இல்லை சார்… அவருக்கு உங்க பொண்ணு மேல பாசம் அவ்வளவுதான்… நீங்களாவே கற்பனை பண்ணிக்கிட்டு ஏதேதோ பண்றீங்க… கண்மணி டீடெயில்ஸ் கொடுங்க” என்ற வார்த்தைகள் ஞாபகம் வர
புன்னகைத்தவன்…
”அவளுக்கு நீங்க பைக் வாங்கிக் கொடுத்தா… வாங்கிக்க மாட்டாள்னு…. என்னை அவகிட்ட பேச வைத்து சம்மதம் வாங்குனீங்க… ஹப்பா அவள சம்மதிக்க வைக்கிறதுக்குள்ள… போதும் போதும்னு ஆகிருச்சு… என்னை மேரேஜ் பண்றதுக்கு கூட அவகிட்ட இவ்ளோ பேசி இருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்”
தன் பாட்டுக்கு பேச ஆரம்பித்தவன்… அப்போதுதான் நடப்புக்கு வந்தவனாக… தன்னையே தலையில் தட்டிக் கொண்டவனாக…
“அவளப் பற்றியே பேசிட்டு இருக்கேனோ….“ மனதுக்குள் எல்லாம் பேசவில்லை… அந்த அவளின் தந்தை நடராஜிடமே கேட்டுக் கொண்டிருந்தான் ரிஷி
“நீங்க அவ அப்பான்றதுனால மட்டும் பேசலை… யார் இப்போ என் பக்கத்துல இருந்தாலும் கண்மணியைப் பற்றிதான் பேசிட்டு இருந்துருப்பேன்… நீங்கன்றப்போ இன்னும் அட்வாண்டேஜ் தான்… இன்னும் கண்மணியப் பற்றி நிறைய தெரிஞ்சுக்கலாம்…” மாமனாரிடம் பேசுவதைப் போலப் பேசாமல்… நண்பனிடம் பேசுவதைப் போல பேசிக் கொண்டிருக்க… அவனின் மாமனாரோ தன் மருமகனை சந்தோஷத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்…
ரிஷி-நட்ராஜ்…. இவர்களின் முதலாளி-தொழிலாளி மரியாதை, மாமனார் மருமகன் பந்தம்… அதற்கும் மேலான நட்பு… ’கார்லா’ இல்லத்திற்கு சென்று திரும்பிய போது இருந்ததா…. இருக்குமா????…
/* எனது இரவு அவள் கூந்தலில் எனது பகல்கள் அவள் பார்வையில் காலம் எல்லாம் அவள் காதலில் கனவு கலையவில்லை கண்களில் இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில் கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள் நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள் நாளைக்கு நான் காண வருவாளோ பாலைக்கு நீரூற்றி போவாளோ வழியோரம் விழி வைக்கிறேன்*/
Lovely update