அத்தியாயம் 62:
“பவித்ர விகாஸ் ” டிசம்பர் 30 இரவு 11.30
அர்ஜூன் கையில்தான் வைத்திருந்தான் தன் அத்தையின் டைரியை… ஆனால் அதன் ஒரு பக்கத்தைக் கூடப் பிரித்துப் பார்க்கவில்லை… தன் அருகே அமைதியாக நின்றபடி… தன்னையேப் பார்த்தபடியே இருந்த கண்மணியைப் பார்த்தபடி சில நிமிடங்கள் நின்றவன்… இப்போது வெட்ட வெளியை வெறித்திருந்தான்…
ஒரு வாரத்திற்கு முன் தன்னிடம் பேசிய பேச்சென்ன… தன்னைக் கண்டு கொள்ளாமல் அலட்சியம் செய்த பாங்கு என்ன… இப்போது அவளா எனும் இவள் எனும் அளவுக்கு… தன்னைப் பார்த்து கண்கள் பளபளக்க… தன்னையே பார்த்தபடி இருக்கும் தன் அத்தை மகளைப் பார்த்து என்னவென்று சொல்வது…
“சோ… இந்த டைரி… உங்க அம்மாவோட டைரி… இன்னைக்கு உன்னை… இந்த வீட்டுக்குள்ள வர வச்சுருக்கு… சந்தோசம்… தாத்தா பாட்டிக்கு” என்று நைச்சியமாகச் சொன்னவன்
“எனக்கும்” என்று முடிக்க…
”அர்ஜூன்… நான் என்ன சொல்ல வர்றேன்னு” என்ற போதே… கை மறித்து நிறுத்தியவன்…
“என்ன சொல்லப் போற…. என் அம்மாவோட ஆசை இதுதான் தெரிஞ்சுருந்தால்… நான் உங்கள விட்டுட்டு கண்டவன மேரேஜ் பண்ணிருக்க மாட்டேன்னா” அர்ஜூன் குரல் எகிற…
’இல்லை’ என்று தலை ஆட்டினாள் கண்மணி…
அர்ஜூனுக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை எனலாம்..
அவன் கேட்ட கேள்விக்கு ‘ஆமாம்’ என்று சொல்வாள் என்று எதிர்பார்த்திருக்க…. கண்மணியோ மாறாக இல்லை என்று சொல்ல… கோபம் வராமல் என்ன செய்யும் அவனுக்கு
“உன்னலாம்… திருத்த முடியாது… உன் அருமை புரியாத ஒருத்தனுக்காக… ச்சேய்”
“கேள்விப் பட்டேன்… அவன் காதல் திருவிளையாடல் எல்லாம்... ரித்விகாகிட்ட பேசுனப்போ… அவளையுமறியாமல் கொஞ்சம் சொன்னா… “
”இவர் லவ் பண்ணுவாராம்… அந்தப் பொண்ணு இவரைக் கல்யாணம் பண்ணினால்… கஷ்டப்படுவாங்கன்னு…. சார் அவங்கள தாரை வார்த்துக் கொடுத்துருவாராம்… எனக்கு ஒரே டவுட் தான்… சாரோட அத்தை மக ரத்தினம் நாளைக்கே கஷ்டப்படறான்னா… கூட்டிட்டு வந்து அவரோட வச்சுக்குருவாராம்மா… ஏன்னா அவருக்குத்தான் அந்த மகிளா கஷ்டப்படக்கூடாதே”
நக்கலாக கண்மணியைப் பார்த்துக் கேட்க… பதிலேதும் சொல்லாமல் அமைதியாக நின்றிருந்தாள் கண்மணி….
“எப்போதும் அவனுக்கு சப்போர்ட் பண்ண மேடைப் பேச்சு மாதிரி பேசுவியே…. இப்போ என்னாச்சு…. சப்போர்ட் பண்ண முடியல தானே… “ என்ற போதே கண்மணி ஏதோ பேச வாயைத் திறக்க. நினைத்தவள்… என்ன நினைத்தாளோ தான் பேச வந்ததைப் பேசாமல்
”இன்னைக்கு நீங்க பேசுங்க… நான் கேட்கிறேன்… எதுவும் பேச மாட்டேன்“ என்று சொல்ல… அர்ஜூன் அவளைப் பார்த்து முறைத்தான்… முறைத்தபடியே
”அவரோடது தெய்வீகக் காதல்னா… அப்போ மத்தவங்களோடது… அப்போ நானும் சொல்றேன்… என் அத்தைப் பொண்ணு கஷ்டப்படறதைத் தாங்க முடியலேன்னு.. உன்னை நான் என் கூடவே வச்சுக்கவா…”
“அர்ஜூன்… மைண்ட் யுவர் வேர்ட்ஸ்” என்னதான் அர்ஜூன் பேசுவதைக் கேட்கத் தயாராக இருந்தாலும்… சில வார்த்தைகளை அவளால் அனுமதிக்க முடியாமல் கண்மணி பேச…
அதெல்லாம் அர்ஜுன் கொஞ்சம் கூட இலட்சியமே செய்ய வில்லை…
“நான் ஒண்ணே ஒண்ணு கேட்கிறேன்… அதுக்கு மட்டும் பதில் சொல்லு…” அவன் எத்தனை வருசம் அந்த மகிளாவை லவ் பண்ணிருப்பான்… சொல்லு”
கண்மணி அமைதியாக இருக்க
“ஒரு 15… சரி விடு… 6 வருசம்…”
“லவ் பண்ணின பொண்ண எப்படி அவ்ளோ ஈஸியா ஒருத்தனால விட முடியும்… அவ என்ன பொம்மையா என்ன… அந்த பொண்ணுக்கும் மனசு இருந்துருக்கும் தானே… லவ் பண்ணதா சொன்ன பொண்ணையே … அவளோட மனசையே… நினைக்காதவனுக்கு நீயெல்லாம் எம்மாத்திரம்….”
அர்ஜூன் இத்தனை நாள் தன் உரிமை… தன் காதலைப் பற்றியே பேசுவானே தவிர… இப்படி எல்லாம் பேசியதில்லை… கண்மணியும் இப்படி பொறுமையாக யார் சொன்னதையும் கேட்டதெல்லாம் இல்லை…
கண்மணி தான் இதுநாள் வரை யார் யாருக்கோ அறிவுறை கூறுவாள்… இன்று அவளுக்கே…
பேசிக் கொண்டிருந்த அர்ஜூன் அவள் மனநிலையைக் கணித்தானோ என்னவோ…
“நான் பேசுறதைக் கேட்கிறியா??… இல்லை நீ என்னவோ பேசு… எனக்கு அவன்தான் முக்கியம்னு…. இந்தக் காதுல வாங்கி அந்தக் காதுல விடப் போறியா…. ஏன்னா… “ என அர்ஜூன் கடுப்பாகச் சொன்ன போதே
”எனக்கு ரிஷிதான் முக்கியம்னு உங்களுக்கே தெரியுது தானே… அப்புறம் ஏன் அர்ஜூன்… புரிஞ்சிருந்தும்… இன்னும் பிடிவாதமா இருக்கீங்க…” வழக்கமான கண்மணியின் திமிர் இல்லை அந்த வார்த்தைகளில்… மென்மையாக ஒலிக்க…
“என்ன சொல்லி… இவளிடம் பேசுவது” எனப் புரியாமல்… அர்ஜூன் அடுத்து ஒரு ஐந்து நிமிடங்களுக்கு தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டான்…
“எனக்குத்தான் ரிஷி பிடிச்சுருக்குன்னு உங்களுக்கே தெரியும் போது… நீங்க ஏன் இவ்ளோ காம்ப்ளிகேட் பண்ணிக்கிறீங்க… நான் சந்தோசமாத்தான் இருக்கேன் அர்ஜூன்…”
“அதுதான் உலகத்துக்கே தெரியுமே… ஆனால் உன்னோட இந்த அன்புக்கு அவன் வொர்த்தா… அதுதான் பிரச்சனையே…. உனக்கு எப்படி … என்ன சொல்லி புரிய வைக்கிறதுன்னே தெரியல எனக்கு… அரோகண்ட்டா… மாஸ் காட்டிட்டு திரியுற… தெருப் பொறுக்கிங்களை லவ் பண்ற டீன் ஏஜ் பொண்ணுங்க மாதிரி… யாரையும் புரிஞ்சுக்காம அவங்க பிடிவாதத்திலயே இருப்பாங்களே… அது மாதிரி மாதிரி நீ பிஹேவ் பண்ற… பிடிவாதம் பண்ற”
“அப்போ நீங்க யாரு அர்ஜூன்… ”
கேட்ட கண்மணியைப் பார்த்து அர்ஜூன் சட்டென்று நிமிர…. கண்மணி தொடர்ந்தாள்…
“ஐ மீன்… பிடிவாதம் பிடிக்கிறது யாருன்னு கேட்டேன்… அந்த வார்த்தைக்கு உங்கள கம்பேர் பண்ணேன் அர்ஜூன்... மற்றபடி தெரு பொறுக்கினு நீங்க பேசின வார்த்தைக்கெல்லாம் உங்களை கம்பேர் பண்ணல…” என்றாள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல…
அவளின் கோபத்தின் அளவை நுனி மூக்கு சிவந்திருந்ததைக் கொண்டே கண்டு கொண்டான் அர்ஜூன்… ரிஷியைத் தெருப் பொறுக்கியோடு ஒப்பிட்டு விட்டானாம்… அதனாலாம்… அந்தக் கோபம்
அர்ஜூனுக்கு அவளின் கோபம் நொடியில் புரிய…. கண்மணியையே இமைக்காமல் பார்த்தபடி இருந்தான்…
“நீயெல்லாம்… தேவதை… எத்தனை தடவை வேணும்னாலும் சொல்லுவேன்… இதை…
“உனக்கு… ஏன் .. இப்படி… ரிஷியை வைத்து மட்டும் சொல்லலை… எல்லாமே… உன்னோட துறுதுறுப்பு… உற்சாகம்… குறும்பு… சிரிப்பு… ஸ்மார்ட்னெஸ்… திறமை…. அதெல்லாம் எங்கே போனது உனக்கு… நீ ஏன் உன்னையே இப்படி மாத்திட்டு… இதோ இன்னைக்கு… ஏதோ ஒரு குடும்பத்துல… சராசரி மனைவியா… மருமகளா… உன்னையே கீழ தாழ்த்தி வச்சுருக்க… கொஞ்சம் மூளைய யூஸ் பண்ணு… யோசி… நீ யாருன்னு உனக்கே புரியும்”
“நீ மகாராணியா வாழ வேண்டியவ… இப்படி அந்த ரிஷிக்கு வேலைக்காரி மாதிரி… அவன் சந்தோசம் தான் உன் சந்தோசம்னு நினைக்கிற அவனோட அடிமை மாதிரி…” நொந்தவனாகச் சொன்னவன்… சட்டென்று… என்ன நினைத்தானோ…
“என் விதி… தலை எழுத்து அது இதுன்னு சொல்லி கடுப்பேத்திறாத…. இருக்குற காண்டுல நான் இன்னும் ஏதாவது பேசிறப் போறேன்…”
“விதி… அதுதான் உண்மை அர்ஜூன்…” என்றவனிடம் ரிஷியிடம் தான் சொன்ன வார்த்தைகளை எல்லாம் சொல்லாமல்…
“உங்களுக்கு ஏன் அர்ஜூன்… என் அப்பாவைப் பிடிக்காமல் போகனும்… என்னை இவ்ளோ பிடிச்ச நீங்க என் அப்பா விசயத்துல… ஏன் சின்ன காம்ப்ரமைஸ் கூட பண்ணிக்க நினைக்கலை… இல்ல நான் ஏன் உங்களை கன்வின்ஸ் பண்ண நினைக்கல… இது எல்லாத்துக்கும் மேல இந்த டைரி… அது ஏன் இவ்ளோ நாளா என் கைக்கு கிடைக்கலை… நீங்க யோசிங்க அர்ஜூன்… என்னோட அம்மா ஆசை தான் இது… ஆனால் மேல இருக்கிறவன் வேற ப்ளான் பண்ணிருக்கான்….”
முடித்தவள்…
“ஒண்ணு கேட்டிங்களே… ரிஷி மகிளாவை எவ்ளோ வருசம் லவ் பண்ணிருக்காருன்னு… அவர் அவள லவ்வே பண்ணலை… அது அவருக்கே தெரியாதது… “
ஓ… மேடம் உங்களுக்கு அது தெரிஞ்சுருச்சோ… அவர் இப்போ உங்க மேல வச்சுருக்கறதுதான் லவ்வ்னு… அது எப்படினு கொஞ்சம் விளக்குறது… நாங்களும் புரிஞ்சுக்கிறோம்... ஆனால் எங்களுக்கு ஏதும் அப்படி ஒண்ணும் தெரியலையே... அந்த ரிஷி மகாராஜாகிட்ட இருந்து...” நக்கலாகக் கேட்ட தொணியே அர்ஜூன் அடக்க முடியாத ஏககடுப்பில் இருந்ததை அவளால் உணர முடிந்தது….
“அதுக்கு நீங்க கண்மணியா இருக்கனும்… “ என்றவளிடம்
நிமிர்ந்து அமர்ந்தவன்….
“அப்படீங்களா…. அர்ஜூனா எனக்கு அவனோட காதல் புரியட்டும்… புரிய வைக்கச் சொல்லு…. அடுத்த நிமிசம் நான் உன்னை என் அத்தை பொண்ணா மட்டும் பார்க்கிறேன்… ” என்று சவாலாகச் சொன்னவன்…
“என்ன சொன்ன டெஸ்டினி… பார்க்கலாம்… நீ அவனுக்குனு… டெஸ்டினி டிசைட் பண்றதுக்கு… இன்னும் லாங் வே இருக்கு… அதுக்குள்ள அவசரப்பட்டால் எப்படி… பார்த்துக்கலாம்… அதுக்கான ஃபர்ஸ்ட் சாட்சி என் அத்தையோட இந்த டைரிதான்…
கண்மணியையே அர்ஜூன் திகைக்க வைக்க…
“என்ன பார்க்கிற… உன்னைப் பற்றி என்ன தெரியும் அந்த ரிஷிக்கு…. “ என்று அவளைப் பார்த்தவன்…
”ஸீரோ பெர்சண்ட் கூடத் தெரியாது… அவனை விடு… எங்க நீ போய்ச் சொல்லு பார்க்கலாம்… உன்னாலயும் முடியாது…. உன்னைப் பற்றி தெரிந்தால்… அவனாலயும் உன்னை ஹேண்டில் பண்ண முடியாது… அது எனக்குத் தெரியும்…”
“சின்னக் குழந்தைகிட்ட… வைரத்தைக் கொடுத்தா… அந்தக் குழந்தை அதோட மதிப்புத் தெரியாமல் அதை சிம்ப்ளா… கவலை இல்லாமல்… விளையாட்டுப் பொருளா… அதை வச்சுட்டு விளையாண்டுட்டு இருக்குமே அந்த மாதிரிதான் ரிஷிக்கு நீ… இப்போ உன்னை சுலபமா உன்னை ஹேண்டில் பண்றான்…. ஆனால் உன் வேல்யு அவனுக்குத் தெரியும் போது… அவனால உன் பக்கத்துல கூட நிற்க முடியாது… ரிஷியை நீ ஹீரோன்னு சொல்லலாம்… எனக்கு அவன் ஸீரோதான் … “ என்றவன்
“ப்ச்ச்… அவன் யாரோ… என்னவா வேண்டும்னாலும் இருக்கட்டும்… எனக்கு அவனைப் பற்றி கவலை இல்லை… நீ உன்னை ஏமாத்திட்டு இருக்க… அதுதான் என் கவலை அதைப் புரிஞ்சுக்கோ ஃபர்ஸ்ட்… அதை விட்டுட்டு… இந்த தாலி…. புருசன்… இந்த மண்ணாங்கட்டி எல்லாம் என்கிட்ட எடுத்துட்டு வராத…”
அவன் சொல்லிய போதே… அந்த வானெங்கும் மத்தாப்பு தூறல்கள் வெடித்து சிதற ஆரம்பித்திருக்க… முடிந்த போது
நேரம்... டிசம்பர் 31 12:00 AM
“ஹேப்பி பெர்த்டே” என்ற எழுத்துக்கள் வானில் நின்று ஒளிர…. அதே வார்த்தைகளை அர்ஜுனும் கண்மணியிடம் சொல்ல
கண்மணியும் இப்போது மற்றதெல்லாம் விட்டு விட்டு… அவனின் வாழ்த்தை மனதார ஏற்றவளாக… மலர்ந்த முகத்துடன் அவன் வாழ்த்தையும் வார்த்தைகளையும் ஏற்றுக் கொள்ள… அவளைப் பார்த்து அர்ஜூனுக்குமே ஆச்சரியமாகத்தான் இருந்தது…
மீண்டும் அடுத்த வானவேடிக்கை வெடிக்க ஆரம்பிக்க… அர்ஜூன் அதைப் பார்க்கச் சொல்லி வானத்தை கை காட்ட… “சுபத்ரா” என்று எழுத்துக்கள் மிளிர
“இது கூட டெஸ்டினிதான்... சுபத்ரா” என்றவனிடம் கோபமாகப் முறைக்க
“சாரி… இப்போ பேசினதெல்லாம் விடு… இன்னைக்கு உன்னோட பிறந்த நாள்…. உன் ஃபேஸ்ல சந்தோசம் மட்டும்தான் இருக்கனும்… இந்த நாள்ள உன்னை டென்சன் பண்ண விரும்பல நான்… இப்போ ப்ரின்சஸ ஹேப்பி ஆக்குவோமா“ கூறியபடி அவளின் புறம் திரும்பியவன்
“என்னோட இன்னொரு ப்ரிஷியஸ் கிஃப்ட்… ரொம்ப நாளா நீ என்கிட்ட எதிர்பார்த்தது…. ஆனால் ஒரு கண்டிஷன் ரிட்டன் கிஃப்டடோட எனக்கு வேண்டும்” கண்சிமிட்டி சிரித்தவனிடம்….
“அர்ஜூன்…” என்று பல்லைக் கடித்தபடி கோபத்தில் சிவந்தவளிடம்
“நோ… நோ…. நீ நினைக்கிறதுலாம் இல்லை…
நான் இனி உன்னை டிஸ்டர்ப் பண்ணப் போறதில்ல… இதுதான் உன்னோட பிறந்தநாளுக்கான என்னோட கிஃப்ட் நான் இன்னைக்கு சொல்ல வந்த விசயத்தை நானே சொல்லாமல் உனக்கே தெரிய வந்திருச்சு… ”சுபத்ரா…” என் அத்தைகிட்ட உனக்கு நான் வைக்கச் சொன்ன பேரு… அது எப்படி உன்கிட்ட வந்து சேர்ந்துச்சோ… அதே மாதிரி நீயும் வந்து சேர்வ… எனக்கு நம்பிக்கை இருக்கு… முதல்ல சொன்ன மாதிரிதான்… அந்த ரிஷியெல்லாம் எனக்கு போட்டியே இல்லை…”
உன்னோட டெஸ்டினி அவன் இல்லை நான்தான்னு உனக்கு தெரிய வரும் போது… நீ என்கிட்ட வந்து சேரனும்… இந்த ரிட்டர்ன் கிஃப்ட் தான் நான் உன்கிட்ட எதிர்பார்க்கிறது … இந்த ரிட்டர்ன் கிஃப்ட் எப்போ வரும்னு … உன்… ப்ச்ச்… சாரி… இந்த அர்ஜூன் எதிர்பார்த்து காத்துட்டு இருப்பேன்னு மட்டும் ஞாபத்தில் வச்சுக்கோ…. வா போகலாம்… நமக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க…”
என்று அழைத்தவன்… அவள் அருகே வந்து
“அம்மா போல பொண்ணுனு யாரும் சொல்லக் கூடாதுன்னு…. எத்தனையோ மாற்ற ட்ரை பண்ணிருக்க… உன்னோட அப்பியரன்ஸ்ல இருந்து… குணம் வரை… அதுல இந்த அரேஞ்ச்ட் மேரேஜும் ஒண்ணு… என்ன தான் நீ பார்த்து பார்த்து பண்ணினாலும்… அவங்க அடையாளம் இல்லாமல்… அவங்க குணமே இல்லாமல் இருக்க எவ்வளவுதான் ட்ரை பண்ணினாலும்… நீ பவித்ராவோட பொண்ணுதான்… அவங்களோட வாரிசுதான்… அதை மாற்றவே முடியாது….”
”உன்னை நான் அறிவேன்… நான் மட்டுமே அறிவேன்” என்ற ரீதியில் சொல்லி விட்டு அர்ஜூன் சென்றிருந்தான்…
----
25 வருடங்களுக்குப் பின் பவித்ர விகாஸ் இல்லத்தில் அருள் வந்திருந்தாற் போன்ற தோன்ற தோற்றம் நாராயன் குருக்களுக்கும் வைதேகிக்கும்…
ஊர்வலம் சென்ற அம்மன் கர்ப்ப கிரகத்திற்கு மீண்டும் வந்து அமர்ந்தார்ப்போல … அந்த இல்லம் திருவிழா கோலம் கொண்டிருந்தது…
மகள்.. வேறொருவனின் காதலியாக இந்த வீட்டைச் சென்றவள்… மீண்டும் அவர்கள் மகளாக வந்தாள்… ஆனால் வந்த போது பிணமாகத்தான் வந்தாள்…
23 வருடங்களுக்கு முன்… தங்கள் பேத்தியை மருத்துவமனையிலேயே விட்டு விட்டு வந்திருக்காவிட்டால்… கண்மணி தங்கள் வாரிசாக மட்டுமே இருந்திருப்பாள்… அன்று விட்டு விட்டோமே… இருவருமாக இத்தனை நாள் வருந்தி இருக்க…
இன்று தங்கள் பேத்தி அவள் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்திருந்த அந்த கணத்தில்… ஆனந்தத்தில் மற்றதெல்லாம் மறந்திருந்தார்கள்…
அர்ஜூன் ஏற்கனவே ஏற்பாடு செய்து வைத்திருந்த கண்மணியின் பிறந்த நாள் நிகழ்வுகள்… அவன் திட்டமிட்டபடியே நடந்திருந்தது…
“என்ன ரித்விகாவை வைத்து கண்மணியை அழைக்க நினைத்திருந்தான்… அதுமட்டுமே அவன் திட்டமிட்டது போல் நடக்கவி்ல்லை….
“அதற்கு இடம் கொடுக்காமல் கண்மணியே இலட்சுமியோடு வந்து விட்டாள்…” ஆனால் எதிர்பார்த்தது நடந்துவிட்டது…
ஆக மொத்தம் அனைவரின் முகங்களிலும் ஆனந்தமே…
ஒரே ஒருவரைத் தவிர… அவர் வேறு யாருமல்ல… ரிஷிகேஷின் தாய்… இலட்சுமி….
---
/*"Some Snippets from next EPI"
"சாதாரண நடுத்தர குடும்பமாக இருந்திருந்தால்… நாராயண குருக்கள் வசதியானவர் என்று மட்டுமே இலட்சுமி உணர்ந்திருப்பார்… ஆனால் இங்கு இலட்சுமியும் வசதி படைத்த குடும்பமே...… வசதி படைத்தவர்களுக்கு இடையே உள்ள அளவீட்டையும்… மதிப்பீடுகளின் வித்தியாசத்தையும் புரிந்து கொண்டிருந்தார்…”
----
“என் புள்ள அவன் வாழ்க்கைல ஏற்கனவே ஒரு தடவை அடிபட்டவன்… அதை மட்டும் புரிஞ்சுக்கோம்மா”
----
அதன் பின்… அவனது 19 வயதில்… கல்லூரியில் சேர்ந்த பின்… தனசேகர்… ரிஷிக்கு… அவன் பிறந்த நாள் பரிசாக… காரை வாங்கி வந்து நிறுத்தி இருந்தார்….
”ரிஷி… நீ கேட்டது போல உன் பேரோட ஸ்டார்ட்டிங் லெட்டர்லதான் இந்த காரும்” என
---
“அவளப் பற்றியே பேசிட்டு இருக்கேனோ….“ மனதுக்குள் எல்லாம் கேட்கவில்லை… அந்த அவளின் தந்தை நடராஜிடமே கேட்டுக் கொண்டிருந்தான் ரிஷி
*/
Arju. Epo realise seivano hoom
Lovey update