அத்தியாயம் 55:
தாங்கள் படித்த கல்லூரி… அதன் அருகில் இருந்த பகுதிகள் என சுற்றித் திரிந்த விக்கி… அவர்கள் இருவருமாக தங்கி இருந்த வீடு என அன்றைய ஞாபகங்களை மீட்டெடுத்தபடி வந்து கொண்டிருந்தவனுக்கு ஒரு கட்டத்தில் மனம் நிறைந்திருக்க… அந்த ஏரியாவை விட்டு கிளம்ப முடிவெடுத்தபடி தன் பைக்கை கிளப்ப… எங்கிருந்து அப்படி ஒரு மழை பெய்ய ஆரம்பித்ததோ தெரியவில்லை…
விக்கி வந்திருந்ததோ இரு சக்கர வாகனத்தில்….
’பரவாயில்லை… கிளம்பிவிடலாம்’ எனத் தீர்மானித்தவனாக… சிறிது தூரம் தான் சென்றிருப்பான்.. மொத்தமாக தொப்பலாக நனைந்து விட… அதை விட மழையின் வேகத்தில் அவனால் பைக்கை ஓட்டவே முடியாமல் போக… வேறு வழி இல்லை… பைக்கை நிறுத்தி விட்டு எங்காவது ஒதுங்கி நிற்பதுதான் புத்திசாலித்தனம்… என முடிவு செய்தவனாக… சுற்றி முற்றி பார்க்க.. அருகில் பேருந்து நிறுத்தம்… வேகமாக அதனருகில் சென்றவன்… பைக்கை நிறுத்தி விட்டு… உள்ளே சென்றவன்… அங்கிருந்த கூட்டத்தை விட்டு ஒதுங்கி நின்றவனாக… ஹெல்மெட்டைக் கழட்டியபடி… ஹெல்மெட்டையும் மீறி… நனைந்த கேசத்தை கைகளால் கோதியபடி நின்றிருக்க…
அவனுக்கு முதலில் ஒன்றும் தெரியவில்லை… ஆனால் அருகில் நின்றிருந்த ஒரு இளம் பெண் அவனையே பார்ப்பது போல் அவனுக்குத் தோன்றியது…
ஒன்றிரண்டு முறை என்றால் கூட பரவாயில்லை… மூன்று நான்கு இல்லை இப்போது எண்ணிக்கையை விட்டிருந்தான்… அடிக்கடி என்று பார்த்தது அவனுக்குப் புரிய… விக்கிக்கே ஒரு மாதிரியாக இருந்தது
“இது என்னடா… இந்தப் பொண்ணு நம்மளயே பார்த்துட்டு இருக்கு” என்று தோன்றியபோதே
அந்தப் பெண்ணின் அலுவலகப் பேருந்து போல… வந்திருக்க… வேகமாக அதை நோக்கிச் செல்ல… இப்போது விக்கி, போன அவளையேப் பார்த்தபடி நிற்க… ஏனோ அந்தப் பெண்… அந்தப் பேருந்தில் ஏறவில்லை… ஒரு வித தயக்கத்தோடே ஏதோ யோசித்தவளாக திரும்பி இவனைப் பார்த்தவள்… என்ன நினைத்தாளோ…
“நான் வரல… லீவ் சொல்லிருங்க” என்று பேருந்தின் சன்னலோர இருக்கையில் இருந்த அவளது சக அலுவலகத் தோழியிடம் சொல்ல…
“ஏன் ரிதன்யா… லீவ்னு பஸ் ஸ்டாப் வரை வந்து சொல்லனுமா என்ன… லீட்க்கு மெயில் அனுப்பி இருக்கலாம்ல” என்ற அவள் தோழியின் சத்தமான குரலில்… விக்கியின் உலகம் ஒரு முறை நின்று சுழன்றது…
யாரை தனது மனதோடு வைத்து இத்தனை வருடங்களாக தவித்துக் கொண்டிருந்தானோ… அவள் தன்னருகில்… தன் கைக்கு எட்டும் தொலைவில்…
என்னால் அவளை உணரமுடியவில்லை… ஆனால் அவள் தன்னைக் கண்டு கொண்டாளே… ஒரே நொடியில் குற்ற உணர்வில் குறுகியவனாக… நின்றவன்… அதற்குப் பின் சிறிதும் தாமதிக்கவில்லை… ரிதன்யா தனக்காக தன்னை நோக்கி வரும் வரை எல்லாம் அவன் நிற்கவில்லை… வேகமாக அவளை நோக்கிப் போனவன்…
“ரிது” என்று சந்தோசமாக அவள் பெயரை அழைத்தவன் வார்த்தைகளில்… கண்களில்… இதுநாள் வரை அவன் ஆழ்மனதில் சுமந்திருந்த… தேக்கி வைத்திருந்த மொத்த காதலும்… வெளிப்பட்டிருக்க… அவனால் வார்த்தைகளைக் கூட ஒழுங்காக உச்சரிக்க முடியவில்லை….
“நான் நான்… விக்… இல்லை… ரிஷி… உன் அண்ணாவோட ஃப்ரெண்ட்… ”
ரிதன்யா… இப்போது பேசாமல் அவனையே பார்த்திருக்க
“நீ என்கிட்ட பேசியிருக்க… ஞாபகம் இருக்கா” விளக்கிய விக்கிக்கு இப்போது கொஞ்சம் ஏமாற்றம் வந்திருந்தது… ரிதன்யாவிடம் பெரியதாக உணர்ச்சிக் கொந்தளிப்புகள் எல்லாம் இல்லை…. ஆனால் தன் அண்ணனின் நண்பன் என்பதை உறுதி செய்த மலர்ச்சி மட்டுமே அவள் முகத்தில் இருக்க
“டேய்… உன் ஃபீலிங்க்சை அடக்குடா… அவ அவன் அண்ணோட ஃப்ரெண்ட்… அப்படித்தான் உன்னைப் பார்க்குறா…” என்று அவன் மனசாட்சி கேலி செய்த போதே
“என் கூட போன்ல மட்டும் தான் பேசிருக்கா… ஆனாலும் அவ என்னைக் கண்டுபிடிச்சுட்டாளே… அவ அண்ணன் ஃப்ரெண்டுன்றதையும் மீறி அவளுக்கு ஃபீல் இருக்கு” என தன் மனசாட்சிக்கு பதில் சொன்ன போதே
“ம்க்கும்… அப்போ உன்னால ஏன் கண்டுபிடிக்க முடியலை… “ மீண்டும் அது கேள்வி கேட்ட போதே… அதோடு பதில் சொல்லும் நிலையில் இல்லை விக்கி
எல்லாமே அவனுக்கு புது மாதிரியான உணர்வு… தன்னவள்.. தனக்கானவள் இவள் தான் என உறுதியான நிமிடம் அது எனத் தோன்ற… அந்த உணர்வு அவளுக்கான அவனது உரிமையாக மாறி அவனை மீறி ஆட்கொள்ள ஆரம்பித்திருந்தது…
அந்த உரிமை.... அவன் பார்வையை… குமரியாக மாறியிருந்த ரிதன்யாவை… அவள் அழகை… ரசிக்கும் பார்வையாக மாற்றியிருக்க… அதுவும் மழையில் நனைந்திருந்த விதம் வேறு அவனை இம்சிக்க… அவள் தன்னவள் என்ற உரிமையை அவனே எடுத்தபடி…. அளவிட ஆரம்பித்திருந்ததை தவிர்க்க முடியவில்லைதான்… இருந்தும் தன்னைச் சமாளித்தபடி பேச முயற்சி செய்த போதே…
”விக்கி தானே… நீங்க ஹெல்மெட்டை கழட்டினபோதே பார்த்துட்டேன்…. ஆனால் கொஞ்சம் சந்தேகமாகவே இருந்துச்சு… இப்போ கன்ஃபார்ம்… எப்படி இருக்கீங்க… “ என்றவள் அவனை நேர்ப்பார்வை பார்த்து… கணீர் குரலில் ரிதன்யா பேச…
விக்கியும் இப்போது தன்னை நன்றாகவே சமாளித்து… அவளை இயல்பாக எதிர் கொண்டிருந்தான்…
---
இந்த ஆறு வருடங்களில் தங்கள் குடும்பம் எங்கிருந்து… இங்கு வந்தது… என சொல்லி முடித்தவள்… விக்கியைப் பார்த்து புன்னகைக்க… இதழ்களிளோ வெற்றுப் புன்னகை… கண்களிலோ கண்ணீர் குளம் கட்டியிருந்தது…
அந்த ஹோட்டலில் அவளின் எதிர்புறம் அமர்ந்திருந்தவன்… அவனையுமறியாமல்… அவள் கரங்களை தன் கைக்குள் வைத்துக் கொள்ள… ரிதன்யாவும் அந்த ஆறுதலை விலக்கவில்லை… எதிர்பார்த்திருந்திருப்பாள் போல…
இன்னும் சொல்லப் போனால்… அவனின் ஒரு தொடுகையில் விழலாமா? வேண்டாமா ?என்று அதுவரை கண்களில் இருந்த கண்ணீர் துளிகள் கட கடவென கரை கடந்த வெள்ளம் போல கன்னங்களில் வழிய… விக்கி பதறியபடி…. அவள் புறம் வந்து அமர்ந்தவன்…. அவளைத் தன் தோள்களில் தாங்கிக் கொள்ள…
”நான்… எனக்கு ஒண்ணுமே பிரச்சனை இல்லை… அப்பா டெத்… அம்மா இப்படி இருந்தது… இதுதான் எனக்கு பிரச்சனை… ஆனால் அண்ணா… என் ரிஷி அண்ணா எல்லாத்தையுமே தொலச்சுட்டாரு… மொத்தமா… அவரை… அவர் ஜீவனை… வாழ்க்கையை”
“ஹ்ம்ம்..” என்ற விக்கிக்குமே பேச முடியவில்லை…. வார்த்தைகள் தொண்டைக் குழிக்குள் சிக்கியது போல்தான் இருந்தான்
ரிஷி… யார்… அவன் எப்படிப்பட்டவன்… அவன் அப்பா அம்மா… தங்கைகள்… மகிளா… இவர்கள் மேல் எல்லாம் அவன் வைத்திருந்த பாசம் காதல் என அருகில் இருந்து பார்த்தவன் அவன் தானே…
”உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு”
தன் நண்பனுக்கு அப்படி ஒரு நட்பை தன்னால் கொடுக்க முடியவில்லையே… கண்கள் கலங்கியதைத் தவிர்க்க முடியவில்லை…
“மகிளா எப்படி இருக்கா…” ரிஷியைக் கூட அவன் கூட கேட்கவில்லை… மகிளா அந்த அப்பாவி இளம் பெண்ணின் காதல் அவனுக்கும் தெரியுமே… என்னதான் ரிஷியிடம் திட்டினாலும்… மகிளா அவனிடம் பேசும் போதெல்லாம் தங்கையாகத்தான் பாவித்திருந்தான்…
“ஹ்ம்ம்… நல்லா இருக்கா… வளைகாப்பு… நெக்ஸ்ட் மன்ந்த்…” கண்களில் வழிந்த நீரைத் துடைத்தபடி சொன்னவள்
“ப்ரேம் அண்ணா லக்கியா… இல்லை மகிளா லக்கியான்னு தெரியாது… ஆனால் நாங்க அன்லக்கி… மகிளாவை மிஸ் பண்ணிட்டோம்….” வெறித்தபடி சொன்னவளின் கண்களில் வேதனையோடு நிமிர்ந்தவளிடம் அடுத்த கண்ணீர் மழை… விக்கி வேதனையோடு பார்த்தவனாக
“ப்ச்ச்… நீயே இவ்ளோ ஃபீல் பண்ற… அப்போ ரிஷி நிலைமை… ஏன் இப்படி பண்ணினான்… மகிளாவை அவனுக்கு எவ்ளோ பிடிக்கும்னு எனக்கு மட்டும் தான் தெரியும்” பெருமூச்சு விட்டவனாக…
”ஆனால் மகிளா நல்லா இருக்கனும்னு தான்… மனசைக் கல்லாக்கிக்கிட்டு இப்படி பண்ணியிருக்கான்… அவ நல்லா இருக்காள்ள… அதுவே அவனுக்கு நிம்மதி…” விக்கியும் ரிஷியைப் புரிந்தவனாக பேச… ரிதன்யாவும் தலையை ஆட்டினாள் சந்தோசமாக
ரிதன்யாவும் விக்கியும் இப்போது சரளமாகப் பேச ஆரம்பித்திருக்க…
“அண்ணாகிட்ட பேசலாமா… இப்போ அவர் ஃப்ரியாத்தான் இருப்பார்…. ரொம்ப சந்தோசப்படுவார்…” என வேகமாக அவளது அலைபேசியை எடுக்க… வேகமாக அவளது அலைபேசியை கைப்பற்றியவனாக…
“வேண்டாம்… வேண்டாம்… இப்போ வேண்டாம்… “ என்றவன்… ஆதவனைப் பற்றி எல்லாம் சொன்னவனாக
“அந்த ஆதவன் கொஞ்சம் ஆபத்தானவன்…. நானும் ரிஷியும் ஃப்ரெண்டுன்னு அவனுக்கு தெரியக்கூடாது… ரிஷிக்கு இப்போ என்னோட ஹெல்ப் வேணும்… அதுக்கு ஆதவன் கிட்ட நான் இருந்தாகனும்…. நான் ரிஷியோட பேச ஆரம்பித்தால்… ஆதவன் ஈஸியா கண்டுபிடிச்சுருவான்…. இந்த ஷோ முடியற வரை… ரிஷியும் நானும் பேசாமல் இருக்கிறது தான் நல்லது… என் ஃப்ரெண்டுக்கு இப்போவாவது என்னால முடிந்த அளவு ஹெல்ப் பண்ணனும்னு இருக்கேன்” எனத் தீவிரமாகச் சொல்ல… ரிதன்யாவுக்கு கொஞ்சம் புரிந்தாலும்… பல புரியாமலும் இருக்க…
“அப்போ அண்ணன்கிட்ட உங்கள மீட் பண்ணதை சொல்ல வேண்டாமா…” என்று இவர்கள் இங்கு பேசிக் கொண்டிருக்கும் போதே…
ரிஷிக்கு…. அவள் தங்கை விக்கியிடம் பேசிக் கொண்டிருந்த புகைப்படங்கள் அலைபேசிக்கு அனுப்பப்பட்டிருக்க… தனக்கு வந்த புகைப்படங்களை பார்த்தவன்… அனுப்பிய சத்யாவை அழைத்தவன்… விக்கியால் தன் தங்கைக்கு ஒரு போதும் பிரச்சனை வராது எனச் சொல்லி.... விக்கியையும்… ரிதன்யாவையும் தொடர வேண்டாம் என்றும்… அவர்களை திரும்ப வரும்படியும் சொல்லி அனுப்பியவன் இனி புகைப்படங்கள் அனுப்ப வேண்டாம் என்று சொல்லி விட்டான் தான்…
ஆனாலும் விக்கியைச் சந்தித்தைப் பற்றி.... தங்கை அவனிடம் சொல்லுவாளா மாட்டாளா… மனம் தவிக்க ஆரம்பித்திருந்தது… மகிளாவிடம் தனக்குத் தெரியாமல் பேசிக் கொண்டிருந்தவள் தானே… இப்போதும் தனக்குத் தெரியாமல்தான் பேசுவாள் என்றே நினைத்தான்…
ரிஷி இந்தியாவில் இருந்து கிளம்பிய போதே ரிதன்யாவுக்கான பாதுகாப்பாக மட்டுமே சத்யாவிடம் சொல்லி ஆளை நியமித்திருக்க… அதன் காரணமாக ரிஷிக்குத் தகவல் போனது கூடத் தெரியாமல்… விக்கியும் ரிதன்யாவும் பேசிக் கொண்டிருந்தனர் இங்கு…
“அவனத்தான் என்கூட பேச வேண்டாம்னு சொல்லச் சொன்னேன்… ஆனால் என்னைப் பார்த்ததை…. என் கூடப் பேசினதை அவன் கிட்ட சொல்லிரு… உன் அண்ணன் மேல எனக்கு கோபம் இருக்குதான்… அது தனிக்கதை அதை அப்புறம் தீர்த்துக்கறேன்… இன்னொரு முக்கியமான விசயம்… ஆனால் அவனுக்கு எப்போதுமே நான் சப்போர்ட்டாத்தான் இருப்பேன்னு சொல்லு… யார்க்காகவும் எதுக்காகவும் அவனை விட்டுக் கொடுக்க மாட்டேன்னு மட்டும் சொல்லிரு…”
ரிதன்யா புரியாமல் விழிக்க… அதை உணர்ந்த விக்கி
“அவன் புரிஞ்சுப்பான்… நீ கன்ஃப்யூஸ் ஆகாத” என்ற விக்கியைப் பார்த்து இன்னும் ரிதன்யா குழம்ப…
”நட்ராஜ் சார் இருக்கார்ல… அவரோட நாலெட்ஜ் பேஸ் வச்சுத்தான்… என்னோட ப்ராஜெக்ட்ஸ் எல்லாமே… சோ கண்டிப்பா… இஷ்யூ ஆகும்…. அந்த டைம்ல ரிஷிக்கும் நட்ராஜ் சார்க்கும் என்னோட சப்போர்ட் தேவைப்படும்… ரிஷிக்கு புரியும்… உனக்கு இதெல்லாம் புரியாது“ என்றபடி சிரித்தவன்…
“ஆச்சரியமா இருக்கு ரிது… நான் தான்… என்னோட கம்பல்ஷன்லதான் ரிஷி நட்ராஜை மீட் பண்ண வந்ததே… அவரை மீட் பண்றதுக்கு அவனை கூட்டிட்டு போறதுக்குள்ள… அவ்ளோ கஷ்டபட்டேன் தெரியுமா… இன்னைக்கு அவரால… அவர் மூலமா ரிஷி இவ்ளோ பெரிய இடத்துக்கு வந்திருக்கான்னு நினைக்கும் போது…” மனம் நிறைந்த சந்தோஷத்தில் இப்போது விக்கி பேச ஆரம்பித்திருந்தான்…
அதே நேரம் மிகக் கவனமாக கண்மணி என்னும் பெயரை முடிந்த அளவு தவிர்க்க நினைத்திருக்க… அவளது பெயரை எங்குமே விக்கி உச்சரிக்கவில்லை… மிக மிக கவனமுடன் இருந்தான் விக்கி… கண்மணி விசயத்தில்
காரணம்… என்னதான் கண்மணி என்பவள் ரிஷியின் மனைவி என்று ரிதன்யா மூலம் கேள்விப்பட்டாலும்…. அவனால் அதைக் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை… அதே நேரம் கண்மணியைப் பற்றி இவன் ஏதாவது பேசப் போய்… தன்னையுமறியாமல் ஏதாவது சொல்லி விட்டால்… ரிதன்யா… ஏதாவது கோபித்து கொண்டு போய் விடுவாளோ என்ற எச்சரிக்கை உணர்வுமாக கண்மணியை தனது வார்த்தைகளில் கொண்டு வரவே இல்லை…
அதே நேரம் நட்ராஜைப் பற்றி… அவரைச் சந்தித்தது பற்றி.. மிகப் பெருமையுடன் ரிதன்யாவிடம் பகிர்ந்து கொண்டிருக்க…
“நட்ராஜ் மாமா தெரியும்னா… அப்போ உங்களுக்கு கண்மணியையும் தெரியுமா?… அவ கூட பேசி இருக்கீங்களா?…”
ரிதன்யா.. நட்ராஜை விட்டுவிட்டாள்… கண்மணியிடம் வந்து நின்றிருந்தாள்…
இப்போது ’ஆமாம்’ என்று சொல்வதா… இல்லை… ’இல்லை’ என்று சொல்வதா…. விக்கி என்ன சொல்வதென்று தெரியாமல் யோசனையில் இருக்க… அதுவே ரிதன்யாவுக்குச் சொன்னது விக்கிக்கு கண்மணியைப் பற்றி தெரிந்திருக்கின்றது என்று…
“ஆக… என் அண்ணனை… அந்த கண்மணிக்கிட்ட மாட்டி விட்டது நீங்கதானா… உங்களாலதான்… எல்லாமேவா” அஷ்ட கோணலாக மாறியிருந்தது ரிதன்யாவின் முகம்… அப்படி ஒரு முகமாற்றமாகி இருக்க… அதைப் பார்த்த விக்கிக்கோ ஆச்சரியம்…
“ஏன்… கண்மணி உனக்கும் பிடிக்காதா” கேட்டவனிடம்
“உங்களுக்கும் பிடிக்காதா…” ரிதன்யா கேட்ட விதத்தில்…
“ப்ச்ச்.. பிடிக்காது பிடிக்கலைன்லாம் இல்லை… இக்னோர் பண்ணனும்னு நினைப்பேன்… அவ்வளவு தான்… அதுதான் இப்போ கூட பேசலை” விட்டேற்றியாகச் சொன்னவன்…
”உண்மையைச் சொல்லனும்ணா… ரொம்ப கஷ்டமா இருக்கு… ரிஷி அவனோட மேரேஜ் விசயத்தில அவசரப்பட்டுட்டானோன்னு…. என்னை விடு… உனக்கு ஏன் அந்தக் கண்மணியைப் பிடிக்காது… ஏன் உன்கிட்டயும் அவ அவ திமிரைக் காட்டினாளா” விக்கி கேட்டானோ இல்லையோ… அவ்வளவுதான் மடை திறந்த வெள்ளம் போல கண்மணியைப் பற்றி தன் மனதில் உள்ளதை எல்லாம் கொட்டியிருக்க… கேட்டுக் கொண்டவன்
”முடிந்த அளவு… அவள விட்டு தள்ளி இரு ரிதன்யா…. தவிர்க்கப் பாரு… ஆனால் ரிஷிக்கு எப்போதுமே அவ மேல ஒரு சாஃப்ட் கார்னர் உண்டு… அதைக் கரெக்டா கண்டுபிடிச்சு யூஸ் பண்ணிகிட்டா… அவள்ளாம் ரிஷியோட… என்னால சொல்லக் கூட முடியலை… ” என்றவன் தயங்கியபடியே
”நீ அவன் சிஸ்டர்… சொல்லக் கூடாதுதான்... இருந்தாலும் சொல்றேன்… அவன் ஒரு பொண்ணை சைட் அடிக்கிறதுனா கூட ஆயிரம் க்ரைட்டீரியா வச்சுத்தான் சைட் அடிப்பான்… ஃபிசிக்கல் அப்பியரன்சுக்கு அவ்ளோ முக்கியத்துவம் கொடுப்பான்… அவன் எப்படி இவள மேரேஜ் பண்ணின்னான்னுதான் எனக்குத் தெரியலை…”
ரிதன்யாவுக்கு தன் அண்ணனைப் பற்றி தெரியாதா என்ன… ஏதும் சொல்லாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தவள்… மணியைப் பார்க்க… மணி பத்தாகி இருக்க…
”நான் கிளம்பனும்…” என்றாள்…
விக்கிக்கோ… அவளை அனுப்பவே மனதில்லை… தன்னைப் பற்றி… தன் மனதைப் பற்றி… ஒரு வார்த்தை கூட பேசாமல்… குறைந்த பட்சம் பார்வைகளில் கூட பறிமாறிக் கொள்ளாத நிலையை நினைத்து தன்னையே நொந்து கொண்டான்தான்… இருந்தும்
“ஆஃபிஸ்க்கா… இனிமே போக முடியுமா… ” விக்கி தன் மனதை அடக்கியபடி கேட்க
“இல்லல்ல.. வீட்டுக்குத்தான்… ரித்வி மட்டும் தான் இருக்கா… கண்மணி நைட் வந்துருவேன்னு சொல்லிட்டுத்தான் போனா… ஆனால் எத்தனை மணிக்குனு தெரியலை… அதுனாலதான் நானே ஆஃபிஸுக்கு கிளம்பினேன்…” என்றவாறே எழுந்தவளிடம்
“எங்க போயிருக்கா…” விக்கியும் எழுந்தபடியே கேட்டான்…
“தெரியல… கேட்டாலும் சொல்லிட்டுத்தான் மறுவேலை பார்ப்பாள்… அண்ணாக்கே தெரியுமான்னு தெரியாது… அவ விசயத்தில யாரும் தலையிடக் கூடாது… தலையிடவும் முடியாது… அவ ஒரு மிஸட்ரி பாக்ஸ்….” தலையை உலுப்பியபடி ஒவ்வாத குரலில் சொன்னவள்…
“பை விக்கி… கால் பண்ணுங்க… அப்புறம் மகிளாவை இப்போ மீட் பண்ண வேண்டாமே… மே பி ஷீ வில் ஃபீல் எம்பாரசிங்…. தென் அண்ணாகிட்ட உங்கள மீட் பண்ணதா சொல்லுவேன்…” கிளம்பும் அவசரத்தோடே படபடவென சொல்லி விட்டு அவனை விட்டு விலக எத்தனிக்க… சட்டென்று விக்கி அவளது கைகளைப் பிடித்திருந்தான்…
ரிதன்யா… அதிர்ச்சியாகவெல்லாம் திகைத்தெல்லாம் பார்க்கவில்லை… அவன்புறம் திரும்பாமலேயே
“ப்ளீஸ்… உன்னைப் பிடிக்கும்… என்னை மேரேஜ் பண்ணிக்கிறியான்னு மட்டும் கேட்றாதீங்க விக்கி”
விக்கிதான் இப்போது அதிர்ந்து போய் அவளைப் பார்க்க… அவனிடமிருந்து தன் கைகளை விலக்கிக் கொண்டவளாக…
“தெரியலை… சென்னைக்கு உங்களைப் பார்க்க வர்றேன்னு… ஏன்னே தெரியாத அவ்ளோ சந்தோசம்…. ஆனால் அந்த சந்தோசம் ஒரு வாரம் கூட நீடிக்கலை… நீங்க ஆஸ்திரேலியா போய்ட்டீங்கன்னு அண்ணா ஃபீல் பண்ணினான்… அப்போதே ஒரு ஏமாற்றம்… ஜஸ்ட் இம்பாக்சுவேஷன்…. அந்த வயசுன்னு… நானே என்னை மாத்திக்கிட்டேன்… இப்போ… என்னோட வாழ்க்கை அதோட முடிவு எதுவுமே என் கைல இல்லை… என் அண்ணாகிட்ட மட்டுமே… எங்களுக்காக மட்டுமே எங்க அண்ணா இருக்கிறார்… அவர் வாழ்க்கையைத்தான் அவர் நினைத்த மாதிரி நடத்திக்க முடியலை… எங்க வாழ்க்கையையாவது அவர் நினைத்த மாதிரி நடக்கட்டும்… என் அண்ணா யாரைக் காட்டுறாரோ அவரத்தான் மேரேஜ் பண்ணிக்கனும்னு நான் எப்போதோ முடிவு பண்ணிட்டேன்…. அட்லீஸ்ட் இந்த சந்தோசத்தையாவது அவர் தங்கையா அவருக்கு கொடுக்கனும்ன்றது என்னோட ஆசை”
என்றவள் விக்கியை… அவன் முகத்தைப் பார்க்காமல்… பார்க்க முடியாமல் வேக வேகமாக நடக்க… அப்படியே சிலையாகி நின்றிருந்தான் விக்கி…
ரிஷி… ரிதன்யா… இவர்கள் அண்ணன் தங்கை உறவு முறையில் எவ்வளவு மாற்றங்கள்…
“அன்று ரிஷியை அண்ணன் என்று கூட அழைக்காதவள்… இன்று அவனுக்கு… அவன் வார்த்தைகளுக்கு… கொடுக்கும் மதிப்பு… “ ரிஷியின் மாற்றம் இதற்கு மேல் அவன் உணர வேண்டுமா என்ன… உடல் சிலிர்த்தது…
உணர்வு வந்து நிமிர…. ரிதன்யாவோ… அவனை விட்டு சில அடி தூரம் முன்னே சென்றிருக்க
இவனும் அவள் பின்னாலேயே ஓடிப் போய்…
“ஒகே… உன் அண்ணா சொல்றவனை மேரேஜ் பண்ணிப்ப அவ்ளோதானே… சொல்லிட்டேல்ல… நான் பார்த்துக்கறேன்…” புன்னகைத்தவன்
“ஆனாலும்… நீ சொன்னது ஹர்ட் ஆகுதுதான்… அதுக்கும் காலம் வரும் பார்த்துக்கலாம்…” என்றவனைப் பார்த்து முறைக்க…
அதே நேரம்…. அவர்கள் அருகே ஒரு வாடகைக் கார் வந்து நிற்க…
தங்கள் அருகே யார்?… என யோசித்தவாறு… இருவரும் பார்க்க… இருவரையும் பார்த்தபடியே அந்தக் காரில் இருந்து இறங்கினாள் கண்மணி…
/*Some snippets from கண்மணி... என் கண்ணின் மணி-56
“நீங்க ரிஷி ஃப்ரெண்ட்… விக்கி சார்தானே” என்று மரியாதையாகத்தான் ஆரம்பித்தாள் கண்மணி… ஏனோ விக்கியால்தான் அவள் கொடுத்த மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை….
விக்கியை நோக்கி பேசிய கண்மணியை சற்றும் கண்டுகொள்ளாமல்… அலட்சியப்படுத்தியவனாக…
---
“ரிதன்யா… வார்த்தைகளை பார்த்து விடு… யார் முன்னால… யார்கிட்ட பேசுறோம்னு தெரிந்து பேசு” என்று விரல் காட்டி பத்திரம் என்பது போல் கண்மணியும் எச்சரிக்கை விடுக்க…
---
“நீங்க சொல்லுங்க…. இவ என் அண்ணனுக்கு ஏத்த பொண்ணா… என் அண்ணனோட நிலை நாளைக்கே மாறிரும்… ஆனா இவ என் அண்ணாவோட வாழ்க்கைல இருந்து போயிருவாளா…”
---
”அதை அவ நினைக்கனும்… உன்னலாம் மனுசியாவே நினைக்க முடியாது… இதுல அண்ணினு வேற நினைப்பாங்களாமா” விக்கி எள்ளலாகப் பேசியபடி கண்மணியைப் பார்க்க
----
”என்ன மாதிரி இருந்திருக்கும்… காட்டுங்க பார்க்கலாம்” கண்மணி அவன் முன் நின்றபடி கேட்க… விக்ரமும் ஆவேசத்துடன் பார்க்க…
----
“நீ இரு ரிதன்யா… என்கிட்டயே இவ்ளோ திமிரைக் காட்டுறான்னா… அப்போ உங்க கிட்டலாம்… நீ சொன்னப்போ கூட விட்டுட்டேன்… என்ன பண்ணிருவா இவ… ரிஷி இந்தியா வரட்டும்… அப்புறம் இவளுக்கு இருக்கு” என்ற போதே
நாளை பதிவிடப்படும்
*/
Nice and interesting ud