அத்தியாயம் 51:
ஆதவனை சந்தித்து பேசிவிட்டு வீட்டுக்கும் விக்ரம் வந்திருந்தான்… ரிஷி ரிஷியின் நினைவுகளே அவனை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது
ஆதவன் -
ஆதவனைப் பொறுத்தவரை ரிஷிகேஷின் வளர்ச்சி அவனை உருத்தவில்லை… ஆம்… ரிஷி அவனது வளர்ச்சி… இது எதுவுமே ஆதவனுக்கு வியப்பாகவெல்லாம் இல்லை… இந்த அளவு வர முடியுமா என்பதோடு அவன் பெரிதாக அலட்டிக் கொள்ள வில்லை.. ஆனால் ஆதவனின் தந்தையும் ரிஷியின் தந்தையும் தொழில் முறை பங்குதாரர்கள் என்பதையும்… அதில் இருந்த பிரச்சனையையும் ஒரு தகவலாக மட்டுமே விக்ரமிடம் பகிர்ந்து கொண்டவன் அதற்கு மேல் ரிஷியைப் பற்றி பேசாமல்…. எதற்காக அவர்கள் சந்திப்போ… அந்த வியாபர நிமித்த சந்திப்பை பற்றி பேச ஆரம்பித்திருக்க… விக்ரமும் அதில் கலந்திருந்தான்
ஆம்… ஆதவன் தான் ரிஷியைப் பற்றி பேசி இருந்தான்… விக்ரமோ… ரிஷியை கொஞ்சம் கூடத் தெரிந்தவன் போலக் காட்டிக் கொள்ளவில்லை ஆதவனிடம்…
காரணம்…
ரிஷி இவன் பழைய நண்பன் என்று தெரிந்தால் இருவருக்கும் இடையேயான தொழில்ரீதியான சம்பந்தத்தை ரத்து செய்து விடுவானோ என்ற பயமா என்றால் அதுவல்ல காரணம்…
ஏனென்றால்.. ஆதவனை நம்பி விக்ரம் இல்லை… ஆயிரம் ஆதவன்கள் விக்கிக்கு கிடைப்பார்கள்… ஆனால் ஆதவனுக்குத்தான் விக்ரம் தேவை… அதே நேரம் ஆதவனின் பலம் அறிந்தவன் விக்ரம்… ரிஷி மற்றும் விக்ரம் இருவருமாக கல்லூரியில் செய்த மாடலை அடிப்படையாக அவன் செய்த ஆராய்ச்சியின் விளைவே அவனை இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கின்றது என்பதை நன்றாக உணர்ந்தவன்… அதன் அடிப்படை எங்கிருந்து வந்தது என்பதும் அவன் அறியாததா???… இதற்கெல்லாம் அடிப்படைக் காரணமான அந்த நட்ராஜும் ரிஷியும் இப்போது ஒன்றாக இந்த ஷோவுக்கு களம் இறங்கி இருக்கின்றார்கள் என்றால்… கண்டிப்பாக… தன்னுடைய கண்டுப்பிடிப்புகளுக்கே சவாலாக அமையப் போகிறது என்பது நன்றாகவே உணர்ந்து கொண்டவன் பதட்டமடையவில்லை… அது தேவையுமில்லை… ஏனென்றால் மீண்டும் அவர்களுக்குள் இணைவே ஏற்படும்… ஆக இதெல்லாம் நடந்து விட்டால்… தனக்கோ… ரிஷிக்கோ… இல்லை நட்ராஜுக்கோ பாதிப்பு இல்லை… அது ஆதவனுக்கு மட்டுமே… அந்தக் கோபத்தில் ஆதவன் மூலம் ரிஷிக்கு… நட்ராஜுக்கு ஏன் தனக்கு கூட பாதிப்புகள் வரலாம்… என உணர்ந்தவனாக அந்த எச்சரிக்கை உணர்வோடேயே ஆதவனிடம் ரிஷி தனக்குத் தெரிந்தவன் என்பது போலக் கூடக் காட்டிக் கொள்ளவில்லை… ஆனால் ஆதவன் ரிஷியைப் பற்றிச் சொன்னதை மட்டும் கேட்டுக் கொண்டவனாக அவனை சந்தித்து முடித்தும் வந்து விட்டான்…
ஆனால் எந்த நிமிடம் ரிஷியின் முகத்தை அந்தத் திரையில் பார்த்தானோ… அந்த நிமிடத்தில் இருந்து… அவன் முகமே அவன் எண்ணங்களில்… ஆதவனோடு ஏதோ… எப்படியோ பேசி விட்டு வந்திருந்தான்….
ரிஷி-
தன்னோடு இருந்த… தன் நண்பன் ரிஷியா அவன்…. அவனால் நம்பவே முடியவே இல்லை… ரிஷி என்றாலே… அவனுக்கு ஞாபகம் வருவது அவனது கன்னக்குழி விழும் குழந்தைத்தனமான பால் வடியும் சிரித்த முகமும்… துள்ளளான செயல்களுமே…
என்ன நடக்கட்டும்… எதுவாக இருக்கட்டும்… யார் என்ன சொல்லட்டும்… அவன் முகத்தில் அந்தப் புன்னகை விலகி இருக்காது… ஏதாவது கேலியாக பேசிக் கொண்டு… சில சமயம் விக்ரமையும் அவனது கவுண்டர்களால் எரிச்சலுட்டிக் கொண்டிருந்தாலும்… அவன் முகத்தில் இருக்கும் அந்தப் புன்னகையால்… விக்ரமையும் ரிஷியின் ஜாலி மூடுக்கு இழுத்துக் கொண்டு போய் விடுவான் ரிஷி…
கல்லூரி காலத்திலும் ரிஷி மற்றவர்களை ஈஸியாக கவர்ந்து விடுவான் தான்… ஆண்-பெண் பேதமின்றி தன் பேச்சு வார்த்தைகளால் தன்னோடு இயல்பாக பேச வைக்கும் திறன் ரிஷிக்கு இயற்கையிலேயே இருக்க… அவனது தோற்றமும் அவனுக்கு உதவியாக இருந்தது… ரிஷிகேஷ் பேருக்கு ஏற்றார் போல தமிழ்நாட்டு பையன் போல் இருக்க மாட்டான்… அவனைப் பார்த்து பலபேர் ’நார்த் இண்டியனா’ என்று தான் கேட்பார்கள்… அவன் பேசினால் மட்டுமே தமிழ் என்று கண்டு கொள்வார்கள்…
இப்போது அந்தப் புகைப்படத்தில் இருக்கும் ரிஷி… அதையும் மீறி… இந்தியனா எனும் அளவுக்கு அவனது இண்டர்னேஷனல் டச் இருந்தது… ரிஷி இந்தியாவா… இல்லை இந்திய வம்சாவளியா என்னும் அளவுக்கு அவனது தோற்றம் இருந்தது… அவனது நிறம்… உயரம்… என எல்லாமே ஒத்துப் போயிருக்க… அந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் அந்த நாட்டு மக்கள் ரிஷியோடு இயல்பாகவே ஒன்ற அவனது இந்த தோற்றமும் ஒரு காரணமாக இருந்தது… அன்று முற்றிலும் பால்வடியும் முகம்… ஆனால் இப்போதோ முக்கால்வாசி இறுக்கம் மட்டுமே… அவன் பிரபலமடைந்தற்கு இந்த முரணான முரட்டுத்தனம் கலந்த தோற்றமும் முக்கிய காரணம் என்றே தோன்றியது விக்ரமுக்கு
இது எல்லாம் மீறி… தன் நண்பனிடம் தேடியது அவனின் இயல்பான இயற்கையான புன்னகை… அது இருந்ததா???
தொலைக்காட்சியில் காட்டப்பட்ட புகைப்படத்தில் இருந்த ரிஷி புன்னகைத்துக் கொண்டிருந்தான் தான்… அது கேமராக்களுக்கென அளவிடப்பட்டுக் கணக்கிட்டு கொடுக்கப்பட்ட புன்னகை…. இந்தக் கோணத்தில் நான் இப்படித்தான் இருக்க வேண்டும் இவ்வளவுதான் புன்னகைக்க வேண்டும்… என்ற அளவீட்டை…. ஒவ்வொரு நிமிடமும் தனக்குள் அனுமானித்து நடக்கும் பயிற்சியை தனக்குள் கொண்டு வந்திருக்கின்றான் ரிஷி என்பதை விக்கியால் நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது…
இதில் கூடவே அந்த நட்ராஜும்… அவரது புகைப்படமும்… அனைத்தையும் நினைத்தபடி யோசனையோடே படுத்துக் கொண்டிருந்தவன் தனது அலைபேசியை எடுத்து… ரிஷியின் எண்களை வாட்சப்பில் பார்க்க… அதில் அவனது உருவப் புகைப்படம் கூட இல்லாமல் வெற்று புகைப்படமே அவனது அடையாளம் இருக்க… மீண்டும் வைத்தவன்… தனது அலைபேசி மெமரியில் இருந்து… தன் சென்னைக் கல்லூரியின் நினைவுகளை மீட்டெடுத்துக் கொடுக்கும் புகைப்படத் தொகுப்புகளை கிளர ஆரம்பித்து இருந்தான்…
ரிஷியும்… அவனும்… எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்…. அவனை அந்த இரண்டு வருட வாழ்க்கைக்கு மீண்டும் எடுத்துச் சென்றன தான்…
---
“மச்சான்… இன்னைக்கு யார் யார் மேட்ச் டா” என்றபடி தன் அருகில் வந்து படுத்தபடி கேட்ட ரிஷியிடம்
“ஒழுங்கு மரியாதையா ஓடிரு…. நீயும் ஒழுங்கா மேட்ச் பார்க்க மாட்ட… என்னையும் பார்க்க விட மாட்ட… “ கடுப்பாகச் சொல்ல
“சொல்லு மச்சான்….”
“கண்ணு தெரியுதுதானே… டிவில பாரு….” என்றவனிடம் ரிஷியும் பதில் சொல்லவில்லை…
இப்போது விக்கி… அவனைத் திரும்பிப் பார்த்தான்… காரணம் அலைபேசியில் ஏதோ டைப் செய்து கொண்டிருக்க…
“மறுபடியும் மகிளாவா” கடுப்பாகக் கேட்டவன்… வேகமாக அவனது அலைபேசியைப் பறித்துக் கொண்டவனாக…
“என்னைக்கு நீ அவகிட்ட லவ்வ சொல்லிட்டு வந்தியோ… எப்போ பார்த்தாலும்… மகிளா மகிளான்னு இந்த போனே கதின்னு கெடக்குற… எனக்கு கடுப்பாகுதுடா…” விக்கியின் கோபத்துக்குக் காரணம் இருந்தது…
ரிஷி முதல் வருடம் எல்லாம் இப்படி இல்லை… எப்போது அவன் அத்தைப் பெண்ணிடம் காதலைச் சொல்லி… வீட்டின் சம்மதம் வாங்கி வந்திருந்தானோ.. அந்த நாள் முதல் மகிளாதான் அவனின் சகலமும்…. கண்முன் ரிஷியின் மாற்றம் உணர்ந்திருந்தான் விக்கி…
அவள் பள்ளியில் இருக்கும் நேரம்… இவன் கல்லூரியில் இருக்கும் நேரம் தவிர… மற்ற நேரங்கள் முழுவதும் இருவரும் அலைபேசியில் ஒன்று பேசிக் கொண்டிருப்பார்கள்… இல்லை டைப் செய்து கொண்டிருப்பார்கள்… ரிஷி இவனை விட்டுவிட்டு அவனது மற்ற கல்லூரி நண்பர்களோடு பேசுவதையே எரிச்சலோடு பார்ப்பவன் விக்கி… மகிளாவோடு 24x7 நேரக் கணக்கில் பேசிக்கொண்டிருப்பது ஆனந்தமாகவா இருக்கும்…
அவர்கள் குடும்பமே அனுமதி அளித்து விட்டதுதான்… இவன் என்ன சொல்ல முடியும்… ஆனால் ரிஷியின் காதலை 24 மணி நேரமும் இவனல்லவோ சகிக்துக் கொண்டிருக்க வேண்டியதாக இருந்தது… ரிஷியின் குடும்பமா ரிஷியோடு இருக்கிறது…
போன வாரம்… இப்படித்தான் கிரிக்கெட் பார்க்கிறேன் என இவன் அருகில் வந்து படுத்தான் ரிஷி… மொத்தமும் சர்வ நாசம்… ரிஷியின் காதல் புராணத்தில் கிரிக்கெட் சேனல் மாறியது கூடத் தெரியாமல் விக்கியும் அவனோடு சேர்ந்து பேசிக் கொண்டிருந்ததுதான் மிச்சம்… இன்று சுதாரித்திருந்தான் விக்கி…
“ஒழுங்கா… உன் ஆளோட மட்டும் கடலையைப் போடு… என்கிட்ட ஏதாவது பஞ்சாயத்துக்கு வந்த…” என்று எச்சரிக்கையாகத்தான் ஆரம்பித்தான்… அந்த எச்சரிக்கை ஒரு படிக்கு அதிகமாகப் போய்… மகிளாவிடம் சென்றதுதான் விக்கி செய்த தவறு…
வேகமாக தன் நண்பனிடமிருந்து போனை வாங்கியவன்…
”எம்மா மகி… உன் மாமன் காரன்… என்னை ஏதாவது டிஸ்டர்ப் பண்ணினான் அப்புறம் உன்கிட்ட பேசுறதுக்கு போன் இருக்காது… ஞாபகத்தில் வச்சுக்கிட்டு அவன்கிட்ட பேசு” என்றபோதே… மகிளா அவனிடம் அழ ஆரம்பித்து இருக்க… விக்கி அரண்டு விட்டான்…
“மகி… ஏன்… எதுக்குடா அழற… நான் திட்டலாம் இல்லடா… சும்மா பேசுனேண்டா” என்று மகியிடம் விக்கி கெஞ்ச ஆரம்பித்து இருக்க…
“இல்லண்ணா… நீங்க இல்லை.. இங்க என் ஸ்கூல்ல என் மேத்ஸ் டீச்சர் திட்டிடாங்க”
இப்போது ரிஷி தொலைக்காட்சியில் மிகத் தீவிரமாக கிரிக்கெட்டைப் பார்த்துக் கொண்டிருந்தான்… தனக்கும் எதற்கும் சம்பந்தமுமே இல்லை என்பது போல…
வேறு வழி இன்றி விக்ரம் சில நிமிடங்கள் மகிளாவோடு பேசிவிட்டு… வேகமாக ரிஷியிடம் நீட்ட… வாங்கிய ரிஷி
”டார்லா நீ வை… அந்த மேத்ஸ் டீச்சர் போட்டோ மட்டும் அனுப்பு… நாலு சாபம் விடறேன்… அது அப்படியே ததாஸ்து ஆகிறட்டும்” என்க… மகிளாவும் அப்பாவியாக தலையாட்டியபடி போனை வைக்க… விக்கி நண்பனைப் பார்த்து முறைத்தான்
தன்னைப் பார்த்து முறைத்த நண்பனைப் பார்த்து கண் சிமிட்டிய ரிஷி…
“என்ன ஒரு பிரச்சனைனா… இந்த வானரங்கள் படிக்கிற ஸ்கூல்ல மிஸ்ஸும் செமையா இருப்பாங்கடா… பார்த்துட்டே சாபம் விடுவோம்… ஆனாலும் ஒரு நெயில்ஸ் பாலிஸ் வச்சுட்டு போனதுக்கு என் டார்லாவைத் திட்டிருக்காங்கன்னா… நான் விட மாட்டேன்… இன்னைக்கு ஃபுல்லா அவ அழுகையை சமாதானப்படுத்துறதே வேலையா போச்சு”
“தூ… இது ஒரு பொழப்பாடா… “ என்று ஆரம்பித்த உயிர் நண்பனின் அன்பான வார்த்தைகளை எல்லாம் துடைத்தவனாக…
“நல்லதா ஒரு சாபம் சொல்லுடா அந்த மேத்ஸ் டீச்சருக்கு” என்று ரிஷி கேட்க
விக்கி வேகமாக…
“அந்த மேத்ஸ் டீச்சருக்கு அம்னீசியா வந்து மேத்ஸ் ஃபார்முலா எல்லாம் மறந்து போகனும்னு சாபம் விட்றலாம்”
இப்போது விக்கியை காறி துப்பும் முறை ரிஷியாக இருக்க…
”உன்னால மட்டும் தான் இப்படிலாம் பழம் மாதிரி யோசிக்க முடியும்… இதெல்லாம் ஒரு சாபமாடா… பார்க்கத்தான் நீயெல்லாம் ரஃப் அண்ட் டைப் ஆளு… ” என்று ரிஷி முறைத்தபோதே… அவனது அலைபேசி ஒலி எழுப்ப… தன் அலைபேசியில் வந்த மகிளா அனுப்பிய அவளது கணக்கு டீச்சர் புகைப்படத்தைப் பார்க்க… அது ஒரு வயதான பெண்மணியாக இருக்க… விக்கியும் எட்டிப்பார்த்தவனாக விழுந்து விழுந்து சிரிக்க …. தலையிலடித்துக் கொண்டான் ரிஷி…
“நெனச்சேன்… என் அத்தை பொண்ணு போட்டோ அனுப்புன்னு சொன்னவுடனேயே ஒரு வார்த்தை கூட சொல்லாமல் போட்டோ அனுப்பும் போதே யோசிச்சுருக்கனும்… இந்த பாட்டிக்கு சாபம் விட்டா என்ன விடலேண்ணா என்ன” என்றபோதே
“மாமா… போட்டோ பார்த்தியா… சாபம் விட்டியா…” என மகிளா செய்தி அனுப்பி இருக்க… ரிஷியின் மொபைலை வாங்கி வேகமாக விக்ரம் டைப் செய்தான்
“உன் மாமா கண்ணுல இருக்கிற சந்தோசத்தைப் பார்க்கனுமாம்மா… ரத்தக் கண்ணீர் வடிச்சுட்டு இருக்கான்” விக்கியின் இந்த செய்திக்கு பதிலாக… மகிளா ஹைஃபை ஸ்மைலி அனுப்பி இருக்க…
”அண்ணனும் தங்கையும் சேர்ந்துட்டீங்களா… நான் காலி “ என்று சலிப்போடு போனை வாங்கி தூர வைத்தவன்… கிரிக்கெட்டில் கவனம் செலுத்த நண்பர்கள் அவர்கள் உலகத்தில் ஐக்கியமாகி இருந்தனர்…
அது கூட அரை மணி நேரம் தான்… ரிஷி மீண்டும் போனை கையில் எடுத்திருந்தான்… ஆனால் மகிளாவோடும் பேசவில்லை… விக்ரமோடும் பேச வில்லை… அதேநேரம் புன்னகைத்தபடியே மும்முரமாக மொபலைப் பார்த்துக் கொண்டிருக்க
விக்கி… வேகமாக அவனது போனை பார்க்க…
ரிஷியும் மகிளாவும் வாட்ஸப் ஸ்டேட்டஸில் தங்கள் காதலை வளர்த்துக் கொண்டிருந்தனர்…
ரிஷிதான் முதலில் ஆரம்பித்திருந்தான்…
“தென்றல் தென்றல் தென்றல் வந்து பூவுக்குள் சிலிர்க்கிறதே…
பெண்மை பெண்மை பெண்மை என்னை தீவுக்குள் அழைக்கிறதே”
மகிளா அவனது ஸ்டேட்டஸுக்கு பதில் ஸ்டேட்டஸ் வைத்திருந்தாள்…
“பூமியெங்கும் பூ இருக்கு என்னைக் கிள்ளாதே…
என் தாவணிக்குள் மீன் பிடிக்க தூண்டில் போடாதே”
ரிஷி - அடுத்து ஆரம்பித்திருந்தான்
“வாலிபத்தில் நான் துடிக்க தள்ளிப் போகாதே…
அடி பக்கம் வந்து வெட்கம் கொண்டு உன்னை மூடாதே”
விக்கி முறைத்தான் ரிஷியைப் பார்த்து…
”பெரிய அஜித் இவர்… அவங்க ரம்பா“ என்று எள்ளளலாக கிண்டலடித்தவனிடம்
“அஜித் வைஃப் ஷாலினிடா... ஏண்டா ஜோடிய மாத்துற” இதுதான் மிகவும் முக்கியம் என்பது போல் ரிஷி சொல்ல
“ரொம்ப முக்கியம் டா… ” விளையாட்டாக பேச ஆரம்பித்திருந்தாலும் அடுத்த நிமிடமே
“லூசாடா நீ… படிக்கிற பொண்ணுகிட்ட இப்டி எல்லாம் அனுப்பலாமாடா… நீ பண்றது தப்புடா” என்று திட்ட
இவனோ தோளைக் குலுக்கியபடி…
“என் அத்தை பொண்ணு… நான் லவ் பண்ற பொண்ணு… இதுல என்ன தப்பு இருக்கு… அத்தை பொண்ணு மாமா பையன்… கலெக்ஷன்ல பாட்டு வைக்கிறேன்… எனக்கு ஒண்ணும் தப்பா தோணலை” ரிஷி புரியாமல் அப்போதும் பேச
எரிச்சலான விக்கி…
“என்னமோ பண்ணித் தொலை… ஆனால் இப்படி அப்பட்டமா லவ் பண்ணுவீங்களாடா… உன் ஸ்டேட்டஸ் கூட ப்ரைவேட்டா இல்லை… எல்லாரும் பார்க்கிற மாதிரி இருக்கு… உன் அப்பா.. அம்மா… இல்லை மகிளா அப்பா அம்மா பார்ப்பாங்கன்னு கூட தெரியாதாடா உங்களுக்கு… அவள விடு அவ சின்னப் பொண்ணு… நீ இன்னும் சின்னப் பையன் இல்லைடா… லக்க்கிலி உங்க வீட்ல உனக்கு சம்மதம் கிடச்சுருச்சு… அதை மிஸ் யூஸ் பண்றடா… மகிளாகிட்ட கொஞ்சம் உன் வார்த்தைகள்ள… நடவடிக்கைகள்ள கவனமா இருக்கனும்டா… தப்பு பண்றடா… அந்தப் பொண்ணு மனசுல இப்போதே ஆசையை தூண்டி விடற… கேர்ஃபுல்டா மச்சான்“ விக்கி அவனை கவனமுடன் பொறுப்பாக எச்சரித்துக் கொண்டிருக்க
ரிஷி அதையெல்லாம் தலையில் ஏற்றிக் கொண்டால்தானே…
“இதுல என்னடா இருக்கு… இவ்ளோ அட்வைஸ் பண்ற நீ… அதுதான் எனக்குப் புரியல… அம்மா, அப்பா, தங்கச்சினு என் ஃபீலிங்க்ஸ்லாம் மறைச்சு வைக்க முடியுமா என்ன… அவங்கள்ளாம் பார்க்க மாட்டாங்க… பார்த்தாலும் ஒண்ணும் நினைக்கமாட்டாங்க… … என் ஃபீலிங்க்ஸ் நான் ஷேர் பண்றேன்… அதெல்லாம் உனக்குப் புரியாது… எமோஷனல்ஸ்லாம் டைமண்டாவா மாறப் போகுது என்ன????… உள்ளேயே வச்சு பிரஷைரைஸ் பண்ணி வைக்கிறதுக்கு… இதெல்லாம் ஃபீலிங்க்ஸ்டா… வெளில கொட்டிறனும்” ரிஷி விக்கியின் அறிவுறைகளை அலட்சியப்படுத்தியவனாக தன் வேலையில் கவனமாக இருக்க…
விக்கியோ தலையிலடித்துக் கொள்ள…
“மச்சான் இந்த சாங்க பாரு… இதுகூட ரிலேஷன்ல பொண்ணை லவ் பண்ற சாங் தாண்டா”
”ஊரைக் கூட்டிச் சொல்வேன் காதல் பாட்டு
வா வா கண்ணே … காதில் கேட்டு…” ரிஷி பாட… விக்கி வேகமாக எழுந்தவனாக…
“இன்னும் உன்கிட்ட பேசிட்டு இருந்தேன்… என்னையும் லவ் ஸ்டேட்டஸ் போட வச்சுருவீங்க”
”ஹா ஹா… அதெல்லாம் வாய்ப்பே இல்லை ராஜா… லவ்ல ‘எல்’னு யோசிச்சாலே உன் தாத்தா வந்துருவாரு…” ரிஷி விக்கியை ஓட்ட ஆரம்பிக்க… அவனோ முறைத்தபடி அவனது அறையை நோக்கிப் போக…
“ஆசை நரம்புகள் அரும்பும் நாளிது….
வீணை நரம்புகள் மீட்டும் நாளிது…” ரிஷி சத்தமாகப் பாடி விக்கியை இன்னும் அதிகமாக கடுப்பேற்ற… வேகமாக விக்கி காதுகளை மூட… விடுவானா ரிஷி… வேகமாக அவனருகில் போனவன்…
“ஐ லவ் யூ… ஐ லவ் யூ… ஐ லவ் யூ” என கைகளை விரித்து அவன் காதில் கத்த… விக்கி அறைக்குள் போயிருந்தான்…
அதன் பின் உறங்கி அவன் காலையில் எழுந்து… கல்லூரிக்கு ரெடி ஆகிக் கொண்டிருக்க… ரிஷியோ இன்னுமே உறங்கிக் கொண்டிருக்க…
“டேய்… எழுந்திருடா… ஹால்ஃப் அன் ஹவர் தான் இருக்கு”
“ப்ச்ச்… நான் செகண்ட் பீரியட் அட்டெண்ட் பண்ணிக்கிறேன்… நீ கெளம்பு” என்றபடி போர்வையை மூட… விக்கி விடுவானா என்னா
”நைட் ஃபுல்லா போன்ல குடும்பம் நடத்திட்டு… காலைல எழுந்துக்க முடியல உனக்கு… உன்னை” என்றவன்… சுற்றும் முற்றும் தேடியபடி… வேகமாக அங்கிருந்த கப்பில் இருந்த தண்ணீரை எடுத்து ரிஷியின் முகத்தில் ஊற்ற…
“படுபாவி… ஹாஸ்டல்ல இருந்தால் கூட.. வார்டன் கூட என்னை இப்படி பண்ண மாட்டான்…. ராட்சசன்” என்றபடி வேறு வழி இன்றி குளியறைக்குச் செல்ல… அதற்கு முன் மகிளாவுக்கு குட்மார்னிங் மெசேஜையும் அனுப்பி வைத்து விட்டுத்தான் தன் அன்றைய பொழுதை ஆரம்பித்திருந்தான்
”ஹப்பா… லவ்ன்ற பேர்ல இவங்க பண்ற அட்ராசிட்டிய தாங்க முடியலை…” எனும்போதே ரிஷியின் மொபைல் அடிக்க… மொபைலை எடுக்காமல் இருக்காமலும் இருக்க முடியவில்லை விக்கியால்… காரணம் அதில் ஒளிர்ந்த ரிதன்யாவின் பெயரைப் பார்த்தவனால்
“இவ ஒருத்தி… இவன் அண்ணன் எடுக்க முடியாத நேரம் பார்த்தே போனை அடிப்பா… அவனத் திட்றதுக்கு பதிலா என்னைத் திட்டிட்டு வச்சுருவா… இப்போ என்ன திட்டப் போறாளோ… ஏன் இன்னும் என் அண்ணன் காலேஜுக்கு கிளம்பாம இருக்கான்னு திட்டுவாளே” என்று சலிப்புடன் நினைத்தபடியே எடுக்க… நினைத்தார் போலவே.. ரிதன்யாவிடம் ரிஷிக்குப் பதிலாக திட்டும் வாங்கி வைத்திருந்தான் விக்ரம்…
ரிதன்யாவை நினைத்தபோதே விக்கியின் முகத்தில் தானாகவே புன்னகை ஒட்டிக் கொள்ள… அவனிடம் இருக்கும் ஒரே புகைப்படம்… ரிஷி அப்போது வைத்திருந்த புகைப்படம்… பள்ளிச் செல்லும் சிறுமியாக… தானாக அந்தப் புகைப்படத்தை தேட ஆரம்பித்தது… கண்டும் பிடித்தான்…
பார்த்துக் கொண்டிருந்த போதே அவனுக்கு ஒன்று தோன்ற… அவன் ஆறடி உயரமும் அதிர்ந்தார்ப் போல உணர்வு…
அதாவது ரிஷி போனை எடுக்க முடியாத சமயங்களாக பார்த்துதான்… ரிதன்யா தன் அண்ணனுக்கு போன் செய்தது போல தோன்றியது… இன்று நினைக்கும் போது விக்ரமுக்கு …
அப்படி என்றால் தன்னிடம் பேசுவதற்காகத்தான் ரிஷி போனை அட்டெண்ட் பண்ண முடியாத சமயமாகப் பார்த்து பேசினாளா… மனம் துள்ளியது…
அதே நேரம் விக்கியின் மனசாட்சியோ…
“ரொம்ப முத்திப் போயிருச்சுடா உனக்கு… சீக்கிரம் கன்ஃபார்ம் பண்ணித் தொலை… இல்லை அந்தப் பொண்ணு எதேச்சையா பண்ணினதெல்லாம் இப்படித்தான் லூசு மாதிரி மாத்தி யோசிப்ப” என்று ஓட்ட… அப்போதும் அவன் முகம் புன்னகையை மாற்றவில்லை… மனசாட்சி திட்டியதைக் கூட ரசிக்கத்தான் தோன்றியது.
ரிதன்யாவை உடனே பார்க்கத் தோன்றியதுதான்… ஆனால் எப்படி… அவளது பழைய எண் உபயோகத்தில் இல்லை…. இரண்டு மூன்று முறை முயற்சி செய்தும் இருக்கின்றான்… இப்போது வேறு யாரோ உபயோகத்தில் இருக்க… விட்டு விட்டான்…
காத்திருக்கத்தான் வேண்டும்… ரிஷியை மீண்டும் சந்தித்தால் மட்டுமே ரிதன்யாவைப் பார்க்க முடியும்… அவளோடு பேச முடியும்… பெருமூச்சு விட்டவனாக அந்தப் புகைப்படத்தை மட்டுமே பார்ததுக் கொண்டிருந்தவனுக்கு… ரிஷியும் தானும் சேர்ந்து தங்கி இருந்த அந்த ஏரியா ஞாபகம் வர… அதோடு பழைய ஞாபகங்கள் வரிசையாக வர தானும் ரிஷியும் சுற்றிய இடங்களைப் பார்க்க வேண்டும் என்று தோன்ற… வரும் வாரங்களில் எப்போதாவது அந்த ஏரியா பக்கம் போய் வர வேண்டும்… என்று தனக்குள் முடிவு செய்து கொண்டான்
-----
/* அடுத்த எபிசோட் நாளை... பதிவு செய்யப்படும்
“இப்போ… இப்போ மட்டும் என்னவாம்” ரிஷி உதட்டில் புன்னைகையை உறைய வைத்தவனாகக் கேட்க
----
“நாம ஒண்ணு பண்ணலாம் ரிஷி… அதே மாதிரி நாம திரும்ப சீன் ரீகிரியேட் பண்ணலாம்… அப்போ அடி வாங்கினதை இப்போ வேற மாதிரி மாத்திரலாம்.. நீங்களும் மறந்துருவீங்க…” கண்மணி உணர்ச்சி வசப்பட்டு சொல்ல
“அப்போப்ப ரைட்டர்னு காமிக்கிறடி” ரிஷியும் சொல்ல
---
”ஹ்ம்ம்ம்… அன்னைக்கு நட்ராஜ் சார் பொண்ணுனுதான் கொஞ்சம் சுதாரிக்காமல்… அவள அடிக்க விட்டுட்டேன்…”
“இப்போவும் நான் அந்த நட்ராஜ் சார் பொண்ணுதான் ஆர் கே சார்” என்றவளிடம்
---
அந்த ஊஞ்சலில் அமர்ந்தபடி அவனது நண்பனை அழைத்த காட்சி … ஏனோ தன்னையே அழைப்பது போல கற்பனைத் தோற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்க…
---
“ரித்வி… இடி… மின்னல்… இதுல டிவைஸ் வச்சு ஹேண்டில் பண்ணிட்டு இருக்க” என்றபடி வேகமாக ஊஞ்சலை விட்டு இறங்கியவள் அதே வேகத்தோடு ரித்விகாவை இழுத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தவள் முகத்தில் அப்படி ஒரு புத்துணர்ச்சி…ஒளிவட்டம்… சந்தோஷம்
*/
Nice update pravee
Vikki Rishi ah seekram meet pannuvan pola
Wife ah kanmani
Shock ah irukula