அத்தியாயம் 49:
ரித்விகா, அர்ஜூன் மற்றும் கண்மணி மூவரும் நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஹோட்டலில் அமர்ந்திருந்தனர்…
“ஸோ… ஸ்பெஷல் பார்ட்டி… அதுவும் என்னோட நியூ ஃப்ரெண்டுக்காக “ என்று ரித்விகாவைப் பார்த்து கண்சிமிட்டியபடி அர்ஜூன் ஹைஃபை கொடுக்க…ரித்விகாவும் அவனுக்கு பதில் ஹைஃபை கொடுத்தாள்… கூடவே போலியான சிரிப்போடும்…
கண்மணி கோபமாக இருந்ததால் கண்மணியைச் சமாதானப்படுத்த வேண்டி அர்ஜூன் ரித்விகாவோடு டீல் பேச… ரித்விகாவும் சம்மதித்திருந்தாள் தன் அண்ணிக்காக மட்டுமே… இப்போதும் அவளுக்கு அர்ஜூன் மேல் பெரிதாக பாசம் எல்லாம் வந்து விடவில்லை
அதோடு மட்டுமல்லாமல் சற்று முன் நடந்திருந்த நிகழ்வுகளால் ரித்விகாவுக்கு அவள் அண்ணி தன் அண்ணனின் மீது வைத்திருந்த காதலில் முழு நம்பிக்கை வந்திருக்க… அர்ஜூன் மீதெல்லாம் இருந்த கோபம்… இலேசான பொறாமை அனைத்தும் உண்மையிலேயே போயிருக்க… ரித்விகாவுக்கும் அர்ஜூனோடு பழகுவதில் இருந்த நெருடல்கள் மெல்ல மெல்ல விலகியிருந்தது
கண்மணியைச் சமாதானப்படுத்த வேண்டும்… அதற்கு உன் துணை வேண்டும் என்று அர்ஜூன் அவளோடு சமரசம் வேண்டி வந்து நின்ற போது… மறுக்கவும் தோன்றவில்லை… சம்மதித்தாள்… அவ்வளவு உயரத்தில் இருக்கும் அர்ஜூன் தன்னிடம் வந்து கெஞ்சுகிறான் என்றெல்லாம் இல்லை… தன் அண்ணியின் முகத்தில் சந்தோசத்தைக் கொண்டு வர வேண்டும் என்று மட்டுமே அவளுமே நினைத்தாள்… சற்று முன் கோபத்தில் முகம் சிவந்திருந்த கண்மணியின் முகத்தைக் கண்டு படபடத்தவள் தானே… அதன் விளைவு இதோ… அர்ஜூன், ரித்விகா, கண்மணி மூவருமாக ஒரே மேஜையில் அமர்ந்திருந்தனர்…
பார்த்திபனோடு வாக்குவாதம் செய்து கடுப்பாகி இருந்தவள் கண்மணியுமே ரிஷியோடு பேசி விட்டு வந்த பின் இயல்பாகி இருக்க… அதைக்கண்ட அர்ஜூனுக்கும் நிம்மதியே… ஆனால் அவளின் முகமலர்ச்சி மீண்டும் திரும்பியதற்க்கு காரணம் யார் என்று தெரிய வந்த போதோ… அவன் இயல்பு தொலைந்திருந்தது….
மூவருமாக ஓரளவு பேசி சிரித்து… உணவு வகைகளை உண்ண ஆரம்பித்திருந்தனர்…
கண்மணி அவ்வளவாக பேசவில்லை என்றாலும்… மற்ற இருவரின் பேசில் ஐக்கியமாகவில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது… ஆனாலும் யோசனையின் மத்தியில் தான் பேசிக் கொண்டிருந்தாள்.
அதே போல் அர்ஜூன் என்னதான் ரித்விகாவிடம் பேசிக் கொண்டிருந்தாலும், தனக்குள்ளே ஏதோ சிந்தனையோடு இருந்த கண்மணியையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தான்…
ஒரு கட்டத்தில் ரித்விகா… ஓய்வறைக்குச் செல்ல… அர்ஜூன் வேண்டிய தனிமை கிடைக்க… கிடைத்த தனிமையைத் தவற விடாது… அர்ஜூன் கண்மணியிடம் பேச வாய் திறந்த அதே தருணம்…
“எனக்கு ஊட்டிக்குப் போகனும் அர்ஜூன்… நீங்கதான் கூட்டிட்டுப் போகனும்… எப்போ நீங்க ஃபிரீன்னு சொல்லுங்க… ரிஷிகிட்ட சொல்லி ஹர்ஷித் விசிட்டர்ஸ் அப்பாயின்மெண்ட் வாங்கனும்” கண்மணி அர்ஜூனைப் பார்க்காமலேயே சாப்பாட்டைப் பார்த்தபடியே சொல்ல
அவள் ஏன் ஊட்டிக்குச் செல்ல விரும்புகிறாள் என அர்ஜூனுக்கு புரியாமல் இல்லை… ஊட்டி எனும் போதே ஹர்ஷித்தைப் பார்க்கத்தான் என்பதை கண்மணி சொல்லும் முன்னமே அர்ஜூனும் புரிந்து கொண்டான்தான்
ஆனால் அதை எல்லாம் விட… பார்த்திபனோடு கோபத்தோடு வாக்குவாதம் செய்து விட்டு… ரித்விகாவை அழைக்க வந்த இடைப்பட்ட நேரத்தில் ரிஷியோ கண்மணி பேசி இருக்கின்றாள்… என்ற உண்மைதான் அவனை அதிர வைத்தது…
குறைந்தபட்சம் 10 நிமிடம் கூட இருக்காது… அதற்குள்ளாக அவனோடு பேசி வந்திருக்கின்றாள்… பேசியதோடு மட்டுமல்லாது… அவள் திரும்பி வந்த போது அதற்கு முன் இருந்த இறுக்கம் மறைந்தும் போயிருந்தது… ஆக கண்மணி இயல்புக்கு மீண்டு வந்ததன் காரணம் ரிஷி என்ற உண்மை கசக்கவே… இப்போது அர்ஜூனிம் முகம் மாறி இருந்தது…
கணவன் மனைவிக்குள் இது சகஜம் என்றாலும்… ரிஷி-கண்மணி இருவருக்குமிடையே இந்த அளவு அந்நியோன்யத்தை அவன் எதிர்பார்க்கவே இல்லை… முதன் முறையாக முகத்திலடித்தாற்போல அர்ஜூனுக்கு உணர்த்தி இருந்தாள் கண்மணி… ரிஷியுமே…
இத்தனை நாள் ரிஷிக்குத்தான் கண்மணி தேவை என்று நினைத்திருந்தான்… இன்றோ… கண்மணிக்கு ரிஷி எந்த அளவுக்கு முக்கியத்துவம் என்று உணர்ந்தான் அர்ஜூன்… வெகு தொலைவில் இருந்த போதும் உணர வைத்திருந்தான் ரிஷி…
அமைதியாக அர்ஜூன் அமர்ந்திருந்தான்… மனம் வலித்தது… கண்மணியின் உணர்வுகள்.. எண்ணங்கள் அனைத்தும் ரிஷி என்பவனைச் சுற்றி மட்டுமே என்ற உண்மையை கொஞ்சம் கொஞ்சமாக மனம் ஃஉணர ஆரம்பித்திருக்க… அந்த உண்மை அர்ஜூனை சுட்டெரிக்க ஆரம்பித்திருக்க… அவனையுமீறி மௌனித்திருந்தான்… கண்மணிதான் பேசிக் கொண்டிருந்தாள்
“யமுனாவும் நம்ம கூட வருவாங்க… நான் அவங்ககிட்ட பேசி கூட்டிட்டு வருகிறேன்… ஓகே தானே உங்களுக்கு” என்றபடி இப்போது அர்ஜூனைப் பார்க்க… அவனோ அமைதியாக இருக்க… சில நொடிகள் தான்… அர்ஜூனும் தன் சுயம் வந்தவனாக தன் பதிலுக்காக கண்மணி காத்திருக்கின்றான் என்பதை உணர்ந்தவன்… தன் மௌனத்தைக் கலைந்து
“நெக்ஸ்ட் 3 வீக்ஸ் கொஞ்சம் பிஸி… அதுக்கப்புறம் போகலாமா” குரல் சுரத்தின்றி ஒலித்தது… பிடிக்கவில்லை என்றாலும்… கண்மணிக்காக செய்தான் அர்ஜூன்… இப்போது கண்மணி சிரித்தாள்… ஆனால் அர்ஜூனோ சிரிக்கவில்லை… ரித்விகாவும் வந்து விட… அதன் பின் பேச்சு வேறு திசைக்கு மாறியது…
இவர்களின் உரையாடலில் ஆதவனின் அலைபேசி அழைப்பும் கண்மணியிடமிருந்து அர்ஜுனுக்கு தகவலாகச் சொல்லப்பட…
“அவ்வளவு சொல்லியும்… உனக்கும் கால் பண்ணாங்களா… என் பேரைச் சொல்லிட்டேல்ல… இனி கால் பண்ணி தொந்தரவு பண்ணினாங்கன்னா உடனே சொல்லு… “ என்ற அர்ஜூன்… அதன் பின் பெரிதாக அதைத் தங்களின் பேச்சில் கொண்டு வரவில்லை… வேறு பேச்சை பேச ஆரம்பித்து விட்டனர் மூவருமாக
---
கிட்டத்தட்ட அரை மணி நேரம் சென்றிருந்தது… கண்மணி… ரித்விகா இருவரையும் மட்டும் அங்கிருந்து அனுப்பியவன்… அடுத்து அழைத்தது பார்த்திபனை…
அர்ஜூனுக்குத் தெரியும்… பார்த்திபன் காட்டிக் கொள்ளாவிட்டாலும் கோபத்தோடுதான் வெளியேறினான் என்று தெரியும்…
இதோ அர்ஜூன் அழைத்ததும் அவன் மீது வைத்திருந்த மரியாதையின் நிமித்தம்… பார்த்திபன் வந்தும் விட்டான் தான்… ஆனால் என்ன அர்ஜூனிடம் பழகும் கலகலப்பான பார்த்திபனாக இல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தான் பார்த்திபன்
“சாரி பார்த்தி… நான் கொஞ்சம் மூஞ்சி காட்டிட்டேன் தான்… கண்மணி டென்சன் ஆனதுல நான் எமோசனல் ஆகிட்டேன்… உங்க ஆர்கியுமெண்ட் ஸ்டாப் பண்ண எனக்கு வேற வழி தெரியல… அதுனாலதான்உங்க கிட்ட கோபமா பேசிட்டேன்… ரியலி சாரி…” உண்மையான வருத்ததோடு அர்ஜூன் சமாதானம் பேச…
பார்த்திபன் அவனின் சமாதான வார்த்தைகளைக் கேட்டும் அமைதியாக அமர்ந்திருந்தவன்… அர்ஜூனையைப் பார்த்தபடி இருக்க… அர்ஜூன் தான் பேச ஆரம்பித்தான்…
“உனக்கே தெரிஞ்சுருக்கும் பார்த்தி… அவ அந்த ரிஷிக்காக அவ்வளவு சப்போர்ட்டா பேசும் போது உன்னை விட எனக்குத்தான் வலி அதிகம் இருந்திருக்கும்னு… இந்த ஆடிட்… கணக்கு வழக்கெல்லாம் என்னோட ப்ளேஸ்ல இருந்து பார்க்க முடியாதா என்ன…. நான் ஏன் இங்க வருகிறேன்… அம்பகம் ஸ்கூலுக்கு வரணும்னு எனக்கு என்ன தேவையா… அதை விட… இந்தியா ஏன் வரணும்… யுஎஸ் லயே இருந்து ஆன்லைன்ல செக் பண்ண முடியாதா…”
“நான் ஒவ்வொண்ணும் அவளுக்காகப் பார்த்து பார்த்து பண்றேன்… ஆனால் அவ ஒரு நிமிசம் கூட என்னை பற்றி யோசிக்க மாட்டேங்கிறா… என்னைப் பார்த்தா பைத்தியக்காரன் மாதிரி தெரியுதா பார்த்தி…” நக்கலாகக் கேட்டான் அர்ஜூன்… வார்த்தையில் வலியும் இணைந்திருக்க
பார்த்திபனால் அதற்கு மேல் மௌனமாக இருக்க இருக்க முடியுமா என்ன…
“சார்… உங்கள மாதிரி ஒரு பையன மிஸ் பண்ணதுல அந்தப் பொண்ணுதான் கண்மணிதான் ஃபீல் பண்ணனும்… அவங்க உங்களப் பற்றி யோசிக்கல சார்… கண்மணி, யமுனா… இவங்கள்ளாம் அந்த ரிஷி மாதிரி ஒருத்தன் கிட்ட மாட்டிட்டாங்கனுதான் ஃபீல் பண்றேன்… யமுனாக்கு கூட பிரச்சனை இல்லை… கண்மணிய நினைத்துதான்… கொஞ்சம் கவலைப்படறேன்… இவ்ளோ நல்ல பொண்ணு… அவளுக்கு இந்த மாதிரி ஒருத்தன்… கண்மணியோட அன்பையும் தப்பா சொல்லல… ஆனால் அதுக்குத் தகுதி இல்லாத ஒருத்தனுக்காகன்னும் போது… கஷ்டமா இருக்கு… நீங்க இப்போ இந்தியா வந்து தங்கினதுக்கு… ஒரு வருசத்துக்கு முன்னாடி வந்திருக்கனும் சார்… கண்மணியை நீங்க மிஸ் பண்ணிருந்திருக்க மாட்டீங்க… ம்ஹூம்ம்… கண்மணி உங்கள மிஸ் பண்ணிருக்க மாட்டாங்க..”
இப்போது அர்ஜூன் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்…
“ரிஷி.. அவளை அவ்ளோ அழகா யூஸ் பண்ணிட்டு இருக்கான் சார்… இமோசனலா தனக்குள்ள லாக் பண்ணி வச்சுருக்கான்… கன்னிங்க் பெள்ளோ… அவன் ஒருத்தவங்க கூட பழகுறான்னா தேவையா இருந்தால் மட்டுமே… இவங்கள வச்சு அவனோட மூவ் நெக்ஸ்ட் கட்டத்துக்குப் போகலாம்னு இருந்தால் மட்டுமே பழகுவான்… தேவையில்லேண்ணா தூக்கிப் போட்டுட்டு போயிட்டே இருப்பான்”
”கண்மணி… நட்ராஜ்… யமுனா… இப்படி எல்லாருமே அவனுக்கு சவாரி செய்ய ஒரு குதிரை தான்… என்ன கண்மணி, நட்ராஜ் அவனுக்கு முன்னாடி செல்ல தேவைப்படுகிற குதிரைகள்… தன்னோட வச்சுட்டு இருக்கான்… யமுனா எதிரியோட குதிரை… வீழ்த்த நினைத்திருக்கான்… இப்போ புதுசா அந்த ஸ்பான்சர்… அவனோட பொண்ணுன்னு அவனோட லிஸ்ட் போயிட்டே இருக்கும் சார்… கண்மணிக்கும் கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிக்கும்… அவன் கூட பழகும் போது தான் நானே இதை ஃபீல் பண்ணேன்…”
அர்ஜூன் சட்டென்று நிமிர்ந்து பார்த்தான் பார்த்திபனை…
“இவனுக்கு ஏன் ரிஷியைப் பற்றி இத்தனை ஆராய்ச்சி … இவ்வளவு கோபம் ரிஷியின் மேல் பார்த்திபனுக்கு” அர்ஜூனின் சிந்தனை ஒரு நொடி பார்த்திபனின் மேல் தாவியது… அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் பார்த்திபன் பேசிக் கொண்டிருந்தான்
“அந்த ஷோ பாருங்க… உங்களுக்கும் புரியும்… அவனுக்கு பணம் தேவையில்லை… வேற என்னன்னு எனக்கும் புரியலை… புரிஞ்சுக்கவும் விட மாட்டேங்கிறான்… பணம் மட்டும் தேவைனா… உங்க தாத்தாவைலாம் எப்பவோ அவன் பக்கம் இழுத்திருப்பான்…”
“அதான் சொல்றானே அவங்க அப்பா கதை… அவர் ஏமாந்த கதைனு…“ அர்ஜூன் எள்ளலாகச் சொல்ல…
“அதுவும் ஒரு காரணம்… ஆனால் என்னவோ இருந்துட்டுப் போறான்… கண்மணியை அவன் ரொம்ப ஏமாத்துறான்… அவனப் பற்றி உண்மை தெரிந்தால் இந்தப் பொண்ணு என்ன ஆகப் போகுதோ…”
“அதையும் அவனே சொல்லிட்டாவே… நான் கெட்டவன்… சுயநலவாதி… எனக்கு என் அம்மா தங்கைதான் முக்கியம்னு.. இதுக்கும் மேல ஒருத்தன் என்ன சொல்லனும்… இவளச் சொல்லனும்” அர்ஜூன் கண்மணியை நினைத்து கடுப்பாகச் சொல்ல
“ஹான் அதுதான் சார் அவன் ப்ளானே… கண்மணியை நல்லா புரிஞ்சு வச்சுருக்கான்… ஒரு நாள் இல்ல ரெண்டு நாள் இல்லை… ஆறு வருசமா கண்மணிய… அவளோட நடவடிக்கைகள்ள எல்லாம் அலசி ஆராய்ந்து இருக்கான்… கண்மணிக்கு என்ன தேவை… எப்படி அவகிட்ட பேசுனா அவ சாதகமா ரியாக்ட் பண்ணுவா… எல்லாமே அவனுக்கு அத்துபடி”
”அந்தப் பொண்ணு அன்புக்காக ஏங்குறான்னு… கண்மணியோட அடிப்படைய புரிஞ்சுக்கிட்டான்… எலும்புதுண்டை நாய்க்கு காட்டி… அதை அதுகிட்ட கொடுக்காமல் அலைய விடுவாங்களே அது மாதிரி கண்மணியை வச்சுருக்கான் சார்… “
கண்மணியை நாயோடு ஒப்பிட்டு சொன்ன வார்த்தைகளை அர்ஜூனால் ஏற்றுக் கொள்ள முடியாமல் ஆத்திரத்தோடு பார்த்திபனைக் கண்களால் எரிக்க… அவனின் கோபம் உணர்ந்த பார்த்திபனுமே அப்போதுதான் தன் வார்த்தைகள் எல்லை மீறீயதையும் உணர்ந்தான்…
“வார்த்தைகளை பார்த்து பேசு பார்த்தி… எங்க வீட்டு இளவரசி அவ… அந்த நட்ராஜ்… ரிஷி… இவனுங்களால அவள் யார் யாரோ எப்படி எப்படியோ பேசுறதை எல்லாம் கேட்க வேண்டிய நிலைமை…”
“சாரி சார்…கண்மணியை நாய்னு சொல்றேன்னு கோபம் வரலாம்… ஆனால் அதுதான் உண்மை… ரிஷி அவனோட குடும்பத்து மேல எவ்ளோ பாசம் வைத்திருக்கான்னு எல்லாருக்கும் நல்லாவே தெரியும்… கண்மணி அங்கதான் லாக் ஆகிட்டா… அந்தப் பாசத்தை அவளுக்காகவும் அந்த ரிஷிகிட்ட எதிர்பார்க்கிறா… நீங்க அவளுக்கு கொட்டிக் கொடுத்தாலும் உங்க பக்கம் வர மாட்டாள்… ஏன்னா அதை அவள் ஃபீல் பண்ணல… ஆனால் ரிஷியோட பாசம்… அன்பை… அவ கண்கூடா பார்க்கிறா… ஃபீல் பண்றா… தனக்கும் வேணும்னு நினைக்கிறா… இது மட்டும் இல்லை அவங்க அப்பா நட்ராஜ் மேல மரியாதை… பாசம்னு உண்மையா இருக்கிறான் ரிஷி… இங்கதான் அர்ஜூன் நீங்க ரிஷிகிட்ட தோத்துப் போயிட்டீங்க… “
“ப்ச்ச்… நாங்க இங்க தோற்கலை… அவ பிறந்த போதே எங்களோட கொண்டு போயிருக்கனும்… எல்லாம் தாத்தா செய்த தப்பு… கண்மணிய இங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கு…” அர்ஜூன் பெருமூச்சு விட்டபடி இருக்கையில் தலை சாய்ந்து வெறிக்க ஆரம்பித்திருக்க
“ரொம்ப பாவம் சார் அந்தப் பொண்ணு… அவ்ளோ ஆட்டிடியூட் காண்பிக்கிறான் இவன்… உங்களுக்குத் தெரியுமா… ஒரு பேனா… அதைக் கிஃப்ட் பண்ணிட்டு… அவன் அதுல கையெழுத்து போடுவான்னு… ஆசையோட பார்த்துட்டு இருந்தா…. ஆனால் அவன் அதை எவ்ளோ அலட்சியமா ஹேண்டில் பண்ணான் தெரியுமா… அப்போ கூட இந்தப் பொண்ணு சிரிச்சுட்டு இருந்தது சார்…”
அர்ஜூன் முகம் சிறுத்ததுதான்… மனம் வலி கொண்டது தான்… என்ன செய்ய… எதைத் தடுக்க முடிந்தது அவனால்
இப்போது அர்ஜூன் தலைகுனிந்து அமர்ந்திருக்க… பார்த்திபனுக்கும் அவன் வலி புரிந்ததுதான்
“ப்ச்ச்… விடுங்க சார் எவ்ளோ தூரம் போனாலும்…ஒரு நாள் உங்க உண்மையான அன்பு ஜெயிக்கத்தான் செய்யும்… போலி எப்போதுமே நிலைக்காது …”
“இருக்கலாம் பார்த்தி… அப்போ அவ கஷ்டப்படுவாளே அதுதான் இப்போ என்னோட கவலையே… நம்பி ஏமாறுறதை அவளால தாங்கவே முடியாது… எது அவளுக்கு நடக்கக் கூடாதுன்னு எச்சரிக்கையா அவகிட்ட இருந்தேனோ… அது மறுபடியும் அவளுக்கு நடக்கப் போகுது… உடஞ்சுருவா பார்த்தி…”
கவலையோடு அர்ஜூன் சொல்லும் போதே
“நீங்க இருக்கிற வரை கண்மணிக்கு ஒண்ணும் ஆகாது… கவலைப்படாதீங்க சார்… சீக்கிரம்… கண்மணி அந்த ரிஷியை விட்டு பிரிஞ்சு வரத்தான் போறா… கண்டிப்பா நடக்கும்… அதுக்கான காலம் சீக்கிரம் வரும்… அப்போ நீங்க கண்மணியை கைவிடாம… பார்த்துக்கங்க”
அர்ஜூன்… ஆமோதிப்பாக தலை அசைத்தவன்…
“நான் அவளுக்காக எப்போதுமே இருப்பேன் பார்த்தி… ஆனால் எப்படி அவனை விட்டு வருவா… எந்தக் காரணம்… யமுனா விசயத்துலயே ரிஷியை அவ விட்டுக் கொடுக்கலை… இதுக்கு மேல என்ன நடக்கனும்… யார் வரணும்” கவலையோடு புலம்பிக் கொண்டிருந்தான் அர்ஜூன்… இத்தனை மணி நேரம் ரிஷியை வாய் ஓயாமல் பந்தாடிக் கொண்டிருந்த பார்த்திபனும்… வார்த்தையின்றி அர்ஜூனைத் தேற்றும் வழி தெரியாமல் மௌனித்திருந்தான்…
----
”ஹல்லோ ஆதவன்…” பாரில் அமர்ந்திருந்த ஆதவனைக் கண்ட விக்கி அவனருகில் வந்து கை குலுக்க…
“ஹேய் சாம்ப்… ஃபைனலி… யூ ஆர் ஹியர்” ஆதவன் உற்சாகத்தோடு தாவியவனாக விக்கியை அணைத்துக் கொண்டவன்… தன் சந்தோசத்தை அவனோடு பகிர்ந்து கொள்ளும் பொருட்டு
“லெட்ஸ் என்ஜாய்… அவர் மீட்டிங்” என மேஜையில் இருந்த மதுபானம் நிரம்பிய கோப்பையில் ஒன்றை… விக்கிக்கு நீட்ட விக்கி… மறுக்காமல் வாங்கியவன்…
“ஐ டோண்ட் லைக் இட்.. பட் ஒன் லிப் டச் ஃபார் யூ ஒன்லி..” எனப் பட்டும் படாமலும் பேருக்கென ஒரு அந்த கண்ணாடி கிளாஸின் விளிம்பில் வாய் பதித்து குடிப்பது போல பாவ்லா செய்தவன்… அடுத்த நொடியே வைக்க… ஆதவனும்… தோள்களைக் குலுக்கியவனாக…
“உனக்கு இந்த இடம்னா அலர்ஜின்னு… சுத்தமா பிடிக்காதுன்னு தெரியும்… எனக்காக வருவியான்னு ஜஸ்ட் செக் பண்ணினேன்… ஆனால் நீ என்னை ஏமாத்தல…” கண் சிமிட்டியவன்…
”சோ வை டோண்ட் யூ கோ டூ ஈசிஆர் வில்லா…” எனக் கேட்க… விக்ரமும்… தலை அசைக்க… அடுத்த நிமிடம் … இருவரும் அங்கிருந்து பறந்திருந்தனர்…
----
Please click this link to next episode of ' கண்மணி என் கண்ணின் மணி’
Arju paavam tan enna seiya
Kallam ladandachu ini purijukonum
Avane telinjalum paarthi teliya vidamatanpola😀😀