/* ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
எபி போட்டுட்டேன்...
போன எபிக்கு கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் நன்றி நன்றி....
இந்த எபிசோட்டோட தொடர்ச்சி நாளைக்கு பதிவு செய்யப்படும்....” */
அத்தியாயம் 48-1:
அம்பகம் பள்ளி வளாகம்…
”பார்த்தி… அம்பகம் ட்ரஸ்ட்… கணக்கு வழக்கெல்லாம்… 2 மந்த்ஸ்க்குள்ள சால்வ் பண்ற மாதிரி பார்த்துக்கங்க… என்னோட இன்வால்வ்மெண்ட் இல்லாமல் இதை கண்மணிகிட்டேயே முழுசா ஒப்படைக்கலாம்னு இருக்கேன்” டாக்குமெண்ட்ஸை பார்த்தபடியே அர்ஜூன் சொல்லிக் கொண்டிருக்க
பார்த்திபனோ யோசனையாக அர்ஜூனைப் பார்த்தான்… அர்ஜூனின் கவனமோ முழுக்க முழுக்க கையில் இருந்த கோப்புகளில் மட்டுமே இருக்க…
“சார்… கொஞ்சம் யோசிங்க... கண்மணிக்கு இன்னும் கொஞ்சம் பக்குவம் வரணும் சார்…“ இப்போது அர்ஜூன் நிமிர… பார்த்திபன் தயங்கியபடியே தொடர்ந்தான்…
“அவங்க இன்னும் மெச்சூர்ட் ஆகனுமோன்னு ஃபீல் பண்றேன் சார்…” –
அர்ஜூனிடம் யோசனையெல்லாம் இல்லை… அதே போல் வார்த்தைகளும் இல்லை… அர்ஜூனின் வெற்றுப் பார்வையே பார்த்திபனை மேலும் பேசுமாறு ஊக்குவிக்க மனதில் இருந்தது அப்படியே வெளியே வர ஆரம்பித்தது
“ஒரு காலத்தில நானும் கண்மணியை ரொம்ப மெச்சூர்ட்னு நினைத்தேன்… ஆனால் இப்போ ரீசண்டா அவங்கள நோட் பண்ணினப்போ… அவங்க ஒருத்தவங்கள நம்பிட்டா கண்மூடித்தனமா அவங்க மேல பாசம் வைக்கிறாங்க…”
அர்ஜூன் மௌனமாக இருந்தாலும்… கண்மணியைப் பற்றி குறைவாகப் பேசிய அவன் வார்த்தைகளை ரசிக்கவில்லை என்பதை அவனின் இறுகிய தாடையே பார்த்திபனுக்கு விளக்க… இப்போது பார்த்திபன் அவனின் கோபம் பற்றி எல்லாம் கவலை கொள்ள வில்லை…
“கொஞ்சம் யோசிங்க சார்… கண்மணியை நானும் இப்படி பேசனும்னு விரும்பல… ரிஷி இங்க தான் பிரச்சனை… ரிஷி அவர் இழந்ததை எல்லாம் தேடி ஓடிட்டு இருக்கறவர்… கண்மணிய யூஸ் பண்ணக் கூட வாய்ப்பு இருக்கு… யூஸ் பண்ண என்ன… கண்மணியோட அப்பா விசயத்துல கூட அவர் எந்த மாதிரி நட்ராஜ் சாரை தன்னோட வாய்ப்புக்காக இழுத்துருக்காரு… சுயநலம் மட்டுமே ரிஷிகிட்ட நான் பார்க்கிறேன்… கண்மணியை நீங்கதான் ப்ரொடெக்ட் பண்ணனும் சார்… அஃப்கோர்ஸ் கண்மணி ரிஷிகிட்ட உண்மையாத்தான் இருக்காங்க… ஆனால் ரிஷிகிட்ட அந்த உண்மை இருக்கான்னா அது கேள்விக் குறிதான்”
“ஹ்ம்ம்… யோசிக்க வேண்டிய விசயம் தான்… இப்போ நாம நம்ம வேலையைப் பார்ப்போமா “ என்றவாறே தனது அலைபேசியை எடுத்தவன்… கண்மணிக்கு தகவல் அனுப்பினான்… அவளது ஓய்வு நேரத்தில் இங்கே வருமாறு…
கண்மணியைப் பற்றி பேசியதைக் கூட அர்ஜூன் பொறுத்துக் கொண்டான்… ஆனால் ரிஷியைப் பற்றி பேச ஆரம்பித்த போதே… அர்ஜூன் பேச்சை வேறு திசைக்கு மாற்றி விட்டான்… பார்த்திபனுக்கு ஏனோ அப்படி விட முடியவில்லை… ரிஷியைப் பற்றி பேசியாக வேண்டும் போல் இருந்தது… அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை
யமுனாவிடம் எத்தனையோ முறை பேச முயற்சிக்க… அவள் போனை எடுக்காமல் இவனை அலட்சியப்படுத்திக் கொண்டிருக்க… அந்தக் கோபம் ரிஷியின் மேல் மொத்தமாக திரும்பியிருந்தது… பொறாமையா… பழிவாங்கலா… எல்லாம் செய்து விட்டு… எதுவுமே நடக்காதது போல் அவன் இருக்கும் விதமா… அப்படிப்பட்டவனை பூஜிக்கும் ஒருத்தி… என ரிஷி மேல் ஒரு விதமான வஞ்சம் வந்திருந்தது அவனுக்குள் அவனையுமறியாமலேயே…
என்னதான் வேலையில் கவனம் இருந்தாலும்… ரிஷியைப் பற்றிய பேச்சை ஆரம்பித்து… அது முழுமையாக முடியாமல் போக… ஒரு மாதிரியான அலைப்புறுதலிலேயே தான் அர்ஜூனோடு நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தான் பார்த்திபன்
----
கிட்டத்தட்ட அரை மணி நேரம் கடந்திருக்க… கண்மணியும் அங்கு வந்து சேர்ந்தாள்… அர்ஜூனி அழைத்திருந்த காரணத்தால்
பார்த்திபன் கண்மணியைப் பார்த்தும் பார்க்காதவன் போல வேண்டுமென்றே தவிர்த்தான்… அவனுக்கு கண்மணியின் மேல் கோபம் இல்லை தான்… ஆனால் ரிஷியின் மேல் இருந்த கோபம் கண்மணியிடமும் தானாகவே திரும்பி இருந்தது
பார்த்திபனைப் பார்த்து கண்மணி புன்னகைக்க முயல… இப்போது வேறு வழியின்றி… பேருக்கு புன்னகை செய்தவன்… மீண்டும் வேறு திசையில் திரும்பி… அவன் அவளிடம் பேச விரும்பவில்லை… என்பதை அவளுக்கு நன்றாகவே புரிய வைத்தான்
அது புரிந்த கண்மணிக்கு... அவன் என்ன காரணத்திற்காக இப்படி நடந்து கொள்கிறான் என ஒரு நிமிடம் புரியவில்லைதான்… ஆனால் அடுத்த நொடியே ரிஷியின் மேல் இருக்கும் கோபத்தை தன் மேல் காண்பிக்கின்றான் என்பதை புரிந்து கொண்டவள்… அதற்கு மேல் பார்த்திபனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அர்ஜூனிடம் பேச ஆரம்பித்திருந்தாள்…
”இங்க வா” எதிரில் நின்று பேசிக் கொண்டிருந்தவளை தன் புறம் அர்ஜூன் அழைக்க… அவனருகில் சென்றாள் கண்மணி…
“இதெல்லாம் படி… படிச்சுட்டு சைன் போடு” என்றவனிடம்… அவன் நீட்டிய பேப்பர்களை வாங்கி அதை எல்லாம் கவனமாக படித்துப் பார்க்க ஆரம்பித்திருக்க… இப்போது அர்ஜூன் தான் இருந்த இருக்கையில் இருந்து எழுந்தவனாக… கண்மணியை அதில் அமர வைக்க… கண்மணியும் படித்தபடியே அமர்ந்தவள்… அதில் மூழ்கினாள்
சில நிமிடங்கள் சென்றிருக்க… அர்ஜூன் தன்னையே பார்த்துக் கொண்டிருந்ததை கண்மணியும் ஒருகட்டத்தில் உணர… அர்ஜூனை நிமிர்ந்து பார்த்தவள்…
“உங்க மேல நம்பிக்கை இல்லாமல் படிக்கலை… ஜஸ்ட் என்ன இருக்குன்னு எனக்கும் தெரியனும்…” சொல்லி விட்டு படிக்க ஆரம்பிக்க…
முகம் விரிந்த புன்னகை மட்டுமே அர்ஜூனிடம்… வேறெதுவும் சொல்லவில்லை… வேறெந்தப் பிரதிபலிப்பும் இல்லை…
ஆனால்… பார்த்திபன் பேசினான்…
“உங்க ரிஷி உங்ககிட்ட பேப்பர்ல சைன் போடச் சொன்னால் இதே மாதிரிதான் சொல்வீங்களா கண்மணி…”
கண்மணி உடனே நிமிரவில்லை…
ஆனால் அவள் அமர்ந்திருந்த இருக்கைக்கு மேலே ஓடிக் கொண்டிருந்த மின்விசிறியின் காற்றினால் அவளின் முன் உச்சிக் கேசம் பறந்து வந்து அவள் கண்களை மறைக்க… அதை சரி செய்ய நிமிர்ந்தவள்… பார்த்திபனையும் நேர்ப் பார்வை பார்த்தாள்… அவன் பேசியது தனக்கு கேட்டது என்பதை உணர்த்தும் விதமாக…
பார்த்திபனும்… இப்போது அவள் பதிலை எதிர்பார்த்து அவளை நோக்க…. கண்மணியோ பதில் சொல்லாமல் மீண்டும் குனிய…. பார்த்திபனோ ஏமாந்து போனான் எந்தப் பதிலும் கிடைக்காமல்….
அதன் பிறகு அனைத்திலும் கையெழுத்து போட்டு விட்டு நிமிர்ந்தவள்… பேனாவை மூடி அர்ஜூனிடம் கொடுத்துவிட்டு…
”நான் கிளம்பலாமா அர்ஜூன்… “ என்று கேட்டபடியே எழுந்தவளிடம்
“ட்ராப் பண்ணவா….” நக்கலாகக் கேட்டான் அர்ஜூன்
“ரித்விகிட்ட வம்பிழுக்கலைனா உங்களுக்கு தூக்கம் வராதே” என்றபடியே அர்ஜூனைத் தாண்டி பார்த்திபனின் அருகில் வந்தவள்…
”மிஸ்டர் பார்த்திபன்… நீங்க கேள்வி கேட்டிங்கதானே… சைன் போடும் போது… டிஸ்ட்ராக்ட் பண்ற மாதிரி தோணுச்சு… அதான் அப்போ பதில் சொல்லலை… சாரி… வேற எந்த காரணத்துக்காகவும் உங்க கேள்வியை அவாய்ட் பண்ணல…”
”என்ன கேட்டீங்க… ஹான்… ரிஷிகிட்ட இதே மாதிரி சொல்வீங்களான்னுதானே… ” என்று அவனை பார்த்தவள்
”சொல்ல மாட்டேன்… கண்ண மூடிட்டு சைன் போடுவேன்… இன்னும் சொல்லனும்ணா… வெத்து தாள்ள கூட என் சைன போட்டுக் கொடுப்பேன்… “
“நீங்க கேட்ட கேள்விக்கும் பதில் கிடைச்சிருக்கும்னு நினைக்கிறேன்…” என்று வெளியேற போக
“ஏன் அந்த நம்பிக்கை…. அர்ஜூன் மேல இல்லை… ” பார்த்திபன் அர்ஜூன் இருக்கின்றான் என்றெல்லாம் பார்க்கவில்லை…
அதேபோல் கண்மணியும் நிற்கவில்லை… நிற்காமல் வாயிலை நோக்கிப் போய்க் கொண்டே இருக்க…
“ஒரு ஃப்ராடு மேல இருக்கிற நம்பிக்கை… உங்களுக்காகவே உண்மையா இருக்கிறவர் மேல இல்லை… அப்படித்தானே” பார்த்திபன் பின்னால் இருந்து கத்திக் சொல்ல… நின்றவள் பார்த்திபனைப் பார்க்காமல்… அர்ஜூனைத் திரும்பிப் பார்த்து முறைக்க
“பார்த்தி… விடு… அவள ஃபோர்ஸ் பண்ணாத… ஒரு நாள் அவளுக்கே தெரிய வரும்…”
அர்ஜூன் கண்மணியைக் காயப்படுத்த விரும்பவில்லை அதே நேரம் பார்த்திபனின் வார்த்தைகளை மறுக்கவில்லை…
“என்ன தெரிய வரும்???... உங்க மேல நான் வச்சுருக்கிற நம்பிக்கை உங்களுக்கு தெரியாதா... அவர் பேசுறார்னு நீங்களும் பேசுவீங்களா அர்ஜூன்” அர்ஜூனிடம் கேட்க ஆரம்பித்து…
“ஃப்ராடுன்னு யாரச் சொன்னீங்க…” பார்த்திபனின் முன் போய் நின்றாள்… கண்மணி
அர்ஜூன்தான் கண்மணியைப் புரிந்தவனாக வினாடியில் சுதாரித்து அவளை இழுத்து தன் கைப்பிடிக்குள் கொண்டு வந்து தன் அருகே நிறுத்திக் கொண்டான்…
“ரிஷி… ரிஷிகேஷ்…” பார்த்திபன் அழுத்தமாகச் சொல்ல
“ஃப்ராடா… அப்டி என்ன உங்களுக்கு ரிஷி பண்ணினார் ஃப்ராடுன்னு சொல்ற அளவுக்கு… ஏன்னா எனக்கு அவர் அப்படி தெரியலை… உங்களுக்கு தெரிஞ்சா அது உங்களோட பிரச்சனை… நீங்க அவர நம்பாதீங்க… இன்னொரு தரம் என் முன்னாடி ரிஷிய ஃப்ராடு… அது இதுன்னு சொன்னீங்க… விடுங்க அர்ஜூன்…” என்று கைகளை அவனிடமிருந்து உதறிக் கொண்டவள்….
“அவர் எப்படியோ இருக்கட்டும்… உங்களுக்கு என்ன அதுல பிரச்சனை… அர்ஜூனுக்கு ரிஷி மேல கோபம் இருக்குன்னா… அதுக்கு ரீசன் இருக்கு… இவ்ளோ வெறுப்பு ரிஷி மேல உங்களுக்கு ஏன்… ”
“ரிஷி பற்றி அர்ஜூன் கேட்டாலே அவருக்கு தேவையில்லாத விசயம்னு சொல்வேன்.. நீ யாரு மேன்…” பார்த்திபனின் மரியாதை அவள் வார்த்தைகளில் போயிருந்த போதே… ரித்விகா அங்கு வந்திருக்க…
கண்மணியின் கோபம் அவள் வார்த்தைகள் எல்லாமே பார்த்தபடி மிரட்சியுடன் நின்றிருக்க… கண்மணி ரித்விகாவைப் பார்த்தெல்லாம்…. அவள் வந்து விட்டாள் என்றெல்லாம் அமைதி ஆக வில்லை…
“ரித்வி பைக் ஸ்டாண்கிட்ட வெயிட் பண்ணு… “
“அண்ணி” தயங்கிச் சொன்னவள் கண்மணியைப் பார்க்க…
“போன்னா போ…” கண்மணி சொல்லி முடிக்க… ரித்விகாவும் அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை… கண்மணியின் இந்தக் கோபம் அவள் காணாதது… முதன் முதலாகப் பார்க்கின்றாள்… கண்மணியின் கோப முகம் பயத்தைத் தந்தாலும்… அதுவும் தன் அண்ணனுக்காக எனும் போது… மனதுக்குள் மெல்லிய சாறலாக சுகமாகவும் தான் இருந்தது… அப்போதைக்கு தன் அண்ணியின் வார்த்தைகளுக்கு கீழ்படிவதுதான் முக்கியம் என்பது போல… அமைதியாக வெளியேறி இருந்தாள் ரித்விகா….
---
“ஏன்… எனக்குத்தான் பிரச்சனை வரணுமா… ரிஷி நல்லவன் இல்லை… ஃப்ராடுன்னு உங்களுக்குத் தெரியாதா… யமுனா ஞாபகம் இருக்குதானே” பார்த்திபனும் கண்மணி விடுவதாக இல்லை…
“அது யமுனாவுக்கும் ரிஷிக்குமான பிரச்சனை… நான் உங்களுக்கும் ரிஷிக்குமான பிரச்சனை என்னன்னு கேட்டேன்…”
“எனக்கும் ரிஷிக்கும் ஒரு ப்ராபளமும் கிடையாது… ஒருத்தவங்களை பிடிக்கலைனா… நமக்குத்தான் கெட்டது செஞ்சிருக்கனும்னு இருக்கா என்ன”
பார்த்திபன் கண்மணியை வார்த்தைகளால் பந்தாடிக் கொண்டிருக்க… கண்மணியால் இதற்கு பதில் சொல்ல முடியவில்லை… அர்ஜூனுமே பார்த்திபனை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க… இடையில் பேசவெல்லாம் இல்லை… பேச விட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் என்றே சொல்ல வேண்டும்
”ரிஷி தப்பாவே இருந்துட்டுப் போறாரு… எனக்கு அந்த ஃபீல் அவர் கொடுக்கலை… “ கண்மணி ஒரு நிமிடம் தடுமாறினாலும் சமாளித்த போதே
“வாரே வாவ்… கண்மணி.. என்ன ஒரு எஸ்கேப்பிசம்… உங்களுக்கு அந்த ஃபீல் வரலையா???… ”
கண்மணி பார்த்திபனை கேள்விக்குறியாக நோக்க
“இங்க கண்மணின்னா யார்னு, மேடம் நீங்க ஒரு இமேஜைக் கிரியேட் பண்ணி வச்சுருக்கீங்களே... நேர்மை… தைரியம்… புத்திசாலின்னு… உங்கள ரொம்ப பேர் ஃபாளோ பண்றாங்க… ஐ மீன் உன்னோட ஸ்டூடன்ஸ சொல்றேன்னு வச்சுக்கங்க… அப்படிப்பட்ட கண்மணி… தன் முன்னால நடக்கிற தப்பை தட்டிக்கேட்காமல்… எனக்கு ஏதும் தப்பா தோணலைன்னு… எஸ்கேப் ஆகுறது முட்டாள் தனமா இருக்கு… அடுத்த தலைமுறைக்கு ஒரு முன்னுதாரணமா இருக்கப் போற நீங்க…” என்ற போதே கண்மணி அவனை எரிச்சல் பார்வை பார்க்க…
”ஸ்கூல் காலேஜ்னு… வருங்கால சந்ததிய அறிவுப்பூர்வமா உருவாக்குற இடம் தான் என்னோட இலட்சியம் சொன்னவங்க தானே நீங்க… அதுனால சொன்னேன்” பார்த்திபன் அவள் பார்வைக்கும் பதில் சொன்னவனாக தொடர்ந்தான்
”தப்பான ஒருத்தவனை… அன்பு, பாசம்ன்ற பேர்ல கண்மூடித்தனமா சப்போர்ட் பண்றீங்களே… மத்தவங்ககிட்ட எப்படி வேணும்னாலும் இருக்கலாம்… என்கிட்ட அவன் ஒழுங்கா இருக்கான்… நம்பிக்கையா இருக்கான்னு… எனக்கு அவன் தான் முக்கியம்னு தப்பான ஒருத்தனை தலையில தூக்கி வச்சுட்டு கொண்டாடிட்டு இருக்குறது தப்பா தெரியலையா கண்மணி… நாளைக்கு இதே மாதிரி உங்க ஸ்டுடண்ஸும் உங்க வழிய தேர்ந்தெடுக்கலாம் இல்லையா… யார் நல்லவன் கெட்டவன்னு உங்க வாழ்கையையே சீர்படுத்திக்க தெரியாத உங்களை நம்பி… இவ்ளோ பெரிய.. ட்ரஸ்ட்… எப்படி ஒப்படைக்கிறது… எத்தனை எத்தனையோ மாணவர்கள் உருவாகிற இடம்… நீங்க அதுக்கு தலைமையா இருக்கிறதுக்கு தகுதி ஆனவங்களா??…”
கண்மணி எட்டி கொத்தாக பார்த்திபனின் சட்டையைப் பிடித்திருக்க…
“ரிஷி பற்றி பேசாதன்னு சொன்னேன்….”
“நான் உங்களைப் பற்றி பேசிட்டு இருக்கேன் கண்மணி…. யோசிங்கன்னு... ரிஷியைப் பற்றி பேசலை... ரொம்ப எமோசனலா இருக்கீங்க போல... யாரைப் பற்றி பேசறேன்னு கூட தெரியாமல் பேசறீங்க” அவனைப் பிடித்திருந்த கையின் இறுக்கம் கூடி இருக்க... அதை உணர்ந்த போதும் பார்த்திபன் கிண்டல் சிரிப்புடன் சொல்ல... நிலைமை தீவிரமாவதை உணர்ந்தான் அர்ஜூன்... அதன் விளைவு
“பார்த்திபன்… நீங்க கெளம்புங்க” என்ற படி கண்மணியிடமிருந்து அவனை விலக்க…
“நான் அப்படித்தான்… என்னை யாரையும் நான் ஃபாளோ பண்ணச் சொல்லலை… மத்தவங்களுக்காக நான் நல்லவன்னு லேபிள் போட்டுட்டுலாம் சுத்த முடியாது… மைண்ட் இட்… என் வாழ்க்கை…. என்னோட பிரச்சனை… இவ்ளோ பேசுற நீ… என்ன தெரியும் உனக்கு ரிஷிய பற்றி… ”
“உடனே… யமுனான்னு சொல்வ… வேற ஏதாவது ஒண்ணு சொல்லு… ஆயிரம் நீ சொல்லலாம்… அந்த ஆயிரத்துக்கும் பின்னால்… இலட்சம் ரீசன் இருக்கும்… அது உனக்குத் தெரியுமா… ஆனால் எனக்குத் தெரியும்… “
கண்மணி இப்படி படபடத்து பேசி அர்ஜூன் முதல் முறையாகப் பார்க்கின்றான்… கோபம் இருந்தாலும் நிதானித்து பேசும் கண்மணியைத்தான் அவன் பார்த்திருக்கின்றான்…
கவலையோடு கண்மணியைப் பார்த்தான் இப்போது…
ரிஷி அவளிடம் எந்த அளவுக்கு அவனை பதிய வைத்திருக்கின்றான்… என்பது புரிந்தது தான்…
கண்மணி ஏற்கனவே பாதிக்கப்பட்டு மீண்டிருப்பவள்… மீண்டும் அதே நிலைக்குப் போகக் கண்டிப்பாக தான் காரணமாகக் கூடாது… அவளாகவே ரிஷியை விட்டு வருவாள்… இப்படி வலுக்கட்டாயமாக ரிஷியை அவளிடமிருந்து விலக்க முயற்சித்தால் அவள் மனநிலைக்கு அது ஆபத்தாக முடியும் என்பதை அர்ஜூன் உணர்ந்து கொள்ள… உடனடியாக அதைச் செயலாற்றவும் ஆரம்பித்தான்
”பார்த்திபன்… நீங்க ரிஷிகிட்ட கேட்க வேண்டிய கேள்வி எல்லாம் இவகிட்ட கேட்டுட்டு இருக்கீங்க… என் முன்னாடியே… இவ்ளோ பேசறீங்க… எந்த தைரியம் கொடுத்தது…”
“சார்” என பார்த்திபன் அதிர்ந்து பார்க்க
“கெளம்புங்க” என்றபடி அதற்கு மேல் பார்த்திபனிடம் பேசாமல் கண்மணியை அமர வைத்தவன்
“ரிலாக்ஸ்…” என்றபடி தண்ணீர் பாட்டிலைக் கொடுக்க… நீட்டிய பாட்டிலை அடுத்த நொடியே தட்டி விட்டிருந்தாள் கண்மணி…
“ஒகே… ஒகே… கூல் நாங்க யாரும் ஏதும் உன்கிட்ட ஏதும் கேட்கல….”
“எல்லாம் கேட்க வச்சுட்டு… ட்ராமா பண்ணாதீங்க அர்ஜூன்… நான் ஓகேதான்… எனக்குப் புரியல… ரிஷிய ஏன் இத்தனை பேர் பாயிண்ட் பண்றீங்க… கேவலம் எனக்கு பிடிச்சுருக்கு… நான் அவர் மேல இவ்ளோ அன்பு வச்சுருக்கேன்ன்னா… ”
“ஒகே… ரிஷிக்கு நீ முக்கியம்… எனக்குப் புரியுது” என்று அமைதிப்படுத்தியவனுக்கு… கண்மணியின் வார்த்தைகள் ஒரு வகையில் அமைதி கொடுத்ததுதான்… அதாவது கண்மணியின் வார்த்தைகளில் எங்குமே தனக்கு ரிஷி முக்கியம் என்று சொல்லவில்லை என்ற நிம்மதிதான்…
“நாங்க ரெண்டு பேரும்… எங்களுக்காக வாழக் கூட ஆரம்பிக்கலை அர்ஜூன்… ரிஷிக்கு நான் முக்கியம்… நான் அவருக்கு வேணும்…” என்றவளை…
“ஒகே… ரிஷிக்கு நீ முக்கியம்… எனக்குப் புரியுது” என்று அமைதிப்படுத்தியவனுக்கு… கண்மணியின் வார்த்தைகள் ஒரு வகையில் அமைதி கொடுத்ததுதான்… அதாவது கண்மணியின் வார்த்தைகளில் எங்குமே தனக்கு ரிஷி முக்கியம் என்று சொல்லவில்லை என்ற நிம்மதிதான்…
திடீரென்று நிமிர்ந்தவளாக….
“என்னோட வாழ்க்கையை நான் வாழ்றதுக்கு நான் ஏன் இத்தனை பேருக்கு பதில் சொல்லனும்… ” என்றவாறு வேகமாக அறையை விட்டு வெளியேறினாள் கண்மணி….
அர்ஜூனும் புரிந்து கொள்ளாமல் பேசி விட்டானே என்ற கோபத்துடன் பார்த்திபனும் வெளியேறி இருக்க … அங்கிருந்த டாக்குமெண்ட்ஸை எல்லாம் பீரோவில் பூட்டி வைத்து விட்டு… வெளியே வந்த அர்ஜூனுக்கு… கண்மணியை ரிஷியிடமிருந்து பிரிப்பதென்பது…. முள்ளில் மாட்டிக் கொண்ட சேலையைப் போலத்தான் தோன்றியது…
முதலில் கூட நட்ராஜ் மட்டும் தான்… இப்போது ரிஷியும்… கண்மணிக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அவளை தன் வசம் கொண்டு வர வேண்டும் நினைத்த போதே…மலைப்பாக இருந்தது அர்ஜூனுக்கு… ஆனாலும் ஏதோ ஒரு நம்பிக்கை… தான் மட்டுமே அவளுக்கு கடைசி வரை பாதுகாப்பு என்றுதான் அவனுக்கு தோன்றியது…. இப்போதும் இன்னும் உறுதியாக நம்பினான்… அவனுக்குள் இந்த உணர்வு இருக்கும் வரை… யாராலும் கண்மணியை அவனிடமிருந்து பிரிக்க முடியாது… தனக்குள் உறுதி கொண்டவனாக வெளியேறி இருந்தான் அர்ஜூன்…
Purinjitu avaluku padukapa irupadu tan tru lv
Arjun parthiban ah pesa vitu. Vdikai parkura
Idu Rishi vitu varuvanu waitingvera
Apdiiye vandalum unkooda ila thaniya tan