I’ve posted the 47th EPISODE of கண்மணி... என் கண்ணின் மணி
/* ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
திட்டாதீங்க... வந்துட்டேன்... எபி போட்டுட்டேன்...
போன எபிக்கு கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் நன்றி நன்றி....
எபி போட்டுட்டேன்னு சந்தோசப்பட்டவங்கள்ளாம்... எபி படிச்சு முடிச்சுட்டு திட்டாதீக்க... டோட்டல் 46 எபி ல ஆதவன் கேரக்டர்க்கு ’ஆதவன்’ ந்ற ஒரு ஒரு வார்த்தை தான் இருந்துச்சு... சோ... இந்த எபி ஆதவனுக்கான எபிசோட்...
லேட்டா வந்தும்... அப்டேட் போட்டும்... நோ ரிஷி நோ கண்மணின்னு ஃபீல் பண்ணாலும் என்னால ஒண்ணும் பண்ண முடியாது...
படிங்க படிச்சுட்டு கமெண்ட்ஸ் சொல்லுங்க... பை...
அண்ட் ஆதவனை கரெக்டா சில பேர் கண்டு பிடிச்சிருந்தீங்க... சூப்பர்... நெக்ஸ்ட் எபி நாளைக்கு போடறேன்... அப்கம்மிங் எபிசோட்ஸ்... பார்த்திபன்... அர்ஜூன்... விக்ரம்... இவங்கதான் வருவாங்க..ஒரு பக்கம் ரெண்டு பக்கம்... ரிஷிக்கும் கொடுக்க ட்ரை பண்றேன்...
என்றும் அன்புடன்
வாருணி விஜய் ( பிரவீணா)*/
அத்தியாயம் 47
அந்த மிகப்பெரிய வரவேற்பறையில் பிரமாண்டமான ஆடம்பரமான சோபாவின் இருபுறமும் ஆளுமையாக கைகளை விரித்து கால் மேல் கால் போட்டு கண்மூடி தலை சாய்ந்திருந்த ஆதவனின் சிந்தனையோ சற்று முன் அவனோடு பேசிய கண்மணி என்பவளைப் பற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது…
அவளோடு பேசுவதற்கு முன்… மல்ட்டி மில்லியனரின் பேத்தி… அப்படிப்பட்ட செல்வ வளமிக்க அந்தஸ்தில் இருப்பவள் எப்படி பேசுவாள் என அனுமானித்துதான் பேச ஆரம்பித்தான் ஆதவன்…
ஆனால் அந்தப் பெண்ணின் குரலில் இருந்த நிதானம் அதோடு இருந்த கம்பீரம்… அதிகமான சொற்கள் இல்லாத தெளிவான பேச்சு… என தான் கேட்ட அந்தக் குரலில்… அந்தக் குரலுக்குச் சொந்தமானவளின் தோற்றத்தையும் தானாக கற்பனை செய்து பார்க்க ஆரம்பித்ததை அவனால் தவிர்க்க முடியவில்லை
சென்னைக்கு சற்று தள்ளித்தான்… இருந்தபோதும் மதிப்பு மிகுந்த இருந்த இடத்தில் இருந்த அந்த மிகப்பெரிய பரப்பளவு கொண்ட இடம்… இவனுக்கு தேவைப்பட… விசாரிக்க ஆரம்பித்தான்… அவனுக்கு வேண்டுமென்றால் வேண்டும்… இதுதான் ஆதவன்… யாராக இருந்தாலும் அவன் கவலைப்பட மாட்டான்.. பணபலம்… ஆள்பலம்… அதிகார பலம் எல்லாமே அவனிடம் இருந்தது… தன்னை விட பணம் மிகுந்த இடத்தில்… தன் அதிகார மற்றும் ஆள் பலத்தை காட்டி தன் வழிக்கு கொண்டு வந்து விடுவான்… தன்னை விட அதிகார பலம் மிகுந்த இடத்தில் தன் பணபலத்தையும் ஆள்பலத்தையும் காட்டி சாதித்துக் கொள்வான்… இப்படிப்பட்ட மூன்று பலங்களும் ஒரு சேர இருப்பவனை யார் வெல்வதும் கொஞ்சம் கடினமே…
ஆக மொத்தம் அவன் பக்கம் தான் வெற்றி இருக்க வேண்டும்… அவன் நினைத்தது நடக்க வேண்டும்… பெரும்பாலும் தன் காரியங்களில் அவன் கண்டது எல்லாமே வெற்றிதான்… சாதித்துக் கொண்டே இருந்தவனுக்கு ஒருகட்டத்தில் அவன் கண்ட வெற்றிகள் மட்டுமே அவனின் சந்தோசம் என்று ஆகிவிட… மெல்ல மெல்ல அது வெறியாகவும் மாறி இருந்தது அவனுக்குள்… அவனை நோக்கி வந்த வெற்றிகளை கட்டுப்படுத்த முடியாதது போல் அவனையும் கட்டுப்படுத்த முடியாமல் போக… அவன் தனி சாம்ராஜ்யமாக அவன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தான்…
அப்படிப்பட்ட ஆதவனின் பார்வையில் தான் நாராயண குருக்களின் இடம் கண்ணில் பட்டது
பரப்பளவில் இத்தனை பெரிய இடம்… அதுவும் ஒரே ஆள் பெயரில்… அது மட்டும் கிடைத்தால் அவனின் மிகப்பெரிய கனவான மகிழுந்து மற்றும் கனரக பாகங்களுக்கான மிகப் பெரிய தொழிற்சாலை ஒரே இடத்தில் அமைத்து விடலாம்…
இடத்தைப் பற்றி விசாரித்த போது நாராயண குருக்கள் என்ற பரம்பரை பணக்காரரின் பூர்வீக சொத்தாக அது இருக்க… அதையும் அந்தப் பெரியவர் தன் பேத்தி பெயருக்கு மாற்றி வைத்திருக்க… நாராயண குருக்களைத் தொடர்பு கொண்ட போது… அவர் வெளியூரில் இருப்பதாக தகவல் வர… அதனால் ’அர்ஜூன்’ என்ற அந்தப் பெண்ணின் கார்டியனிடம் பேசினர்… அந்த அர்ஜூனோ கொஞ்சம் கூட படியாமல்… அந்த இடம் ’கண்மணி’-க்கானது என்று கறாராகச் சொல்லிவிட… அடுத்து கண்மணியிடம் வர… அவளோ அதற்கு மேல்.. அர்ஜூன் அதைத்தாண்டி அவளிடம் பேசவே முடியவில்லை…
ஆதவன் அர்ஜூனிடமும் பேசி இருந்தான்… இதோ கண்மணியிடமும் பேசிவிட்டான்… அர்ஜுன் அவன் எதிர்பார்த்த விதம் தான்… நீ ’ஆதவன்’ என்றால் நான் ’அர்ஜூன்’… என்ற விதத்தில் அவர்கள் பேச்சு வார்த்தை முடிந்து விட்டிருக்க… கண்மணியையும் அதே போல் திமிரான… பணக்காரப் பெண்ணாக கணித்து பேச ஆரம்பிக்க… அவனின் கணிப்பு தவறாக மாறி இருக்க… அவள் யார் என்று பார்க்கத் தோன்றியிருந்தது ஆதவனுக்கு…
தன் உதவியாளனிடம்… அர்ஜூன் மற்றும் கண்மணி இருவரின் புகைப்படங்களையும் உடனே அவன் கண்பார்வைக்கு கொண்டு வருமாறு உத்தரவிட… உத்தரவிட்டவனின் கண்முன் அடுத்த சில நிமிடங்களில் கண்மணி மற்றும் அர்ஜூனின் புகைப்படம்…
அர்ஜூனின் தோற்றம்… வழக்கம் போல் அவனை ஏமாற்ற வில்லை… ஆதவன் நினைத்தபடியே அவன் இருக்க… கண்மணியோ மீண்டும் மீண்டும் அவனை ஆச்சரியப்படுத்த தவறவில்லை… அர்ஜூனின் புகைப்படத்தை அவன் கையால் கூட தொடவில்லை… மேஜையில் வைத்தபடியே பார்த்திருக்க… கண்மணியின் புகைப்படமோ அவன் கைகளில் வந்திருந்தது
“இண்ட்ரெஸ்டிங்… நான் ஒரு முப்பது முப்பதைந்து வயசுக்கு மேல மிடில் ஏஜ் பொண்ணுனு நினைத்தேன்…” என்று அவனையுமறியாமல் வார்த்தைகள் வெளிவர…
“22லருந்து 25 ஏஜ்குள்ளதான் இருக்கும்னு நினைக்கிறேன்…” என்றான் ஆதவனின் காரியதரிசி… அவன் சேகரித்த விபரங்களை வைத்து..
“ம்ஹூம்ம்ம்… இவ்ளோ சிம்பிள்”
“தாத்தா கூட சேர்ந்து இல்லை… ஏதோ ப்ராப்ளம் போல… ஆனால் அவர் சொத்து முழுவதற்கும் இந்தப் பொண்ணுதான் ஒரே வாரிசு…”
ஆதவன்… இப்போது ஆச்சரியத்தில் புருவம் உயர்த்தியவனாக… அர்ஜூனைப் பார்க்க… அவன் பார்வையிலேயே அவன் கேள்வி புரிந்தவனாக…
“இவர்தான் இப்போ நாராயண குருக்களோட எல்லா பிராபெர்ட்டீசையும்… ஹேண்டில் பண்ணிட்டு இருக்கார்… அவரோட அண்ணா பேரன்…”
கேட்டபடியே… கையில் இருந்த புகைப்படத்தைப் பார்த்தபடியே ஆதவன் அமைதியாக இருக்க… அவனது காரியதரிசி தொடர்ந்தான்
“ஸ்கூல்.. காலேஜ்னு இந்தப் பொண்ணொட கனவாம்… அதுக்காகத்தான் இந்த இடமாம்…”
“நாம அதே மாதிரி இன்னொரு இடம் பார்த்துக் கொடுக்கிறோம்னு சொன்னதானே…”
”ஹ்ம்ம்…. சொன்னேன்… ஆனால் அந்த அர்ஜூன் அப்போ அதை நீங்க வச்சுக்கங்கனு சொல்லிட்டாரே”
நிமிர்ந்து அமர்ந்த ஆதவன்….
“இவன் தான் இவளைக் கட்டிக்கப் போறவன்… அப்படித்தானே… கண்மணிக்காக எல்லாமேன்னு இவன் சொல்றான்… அந்தப் பொண்ணோ அர்ஜூன் என்ன சொல்றாரோ அதுக்கு மேல ஒண்ணும் இல்லைனு சொல்றா… விடு.. விட்டுப் பிடிப்போம்” எள்ளலாகக் சொன்னபடி… கண்மணியின் புகைப்படத்தை மீண்டும் கீழே மேஜையில் தூக்கிப் போட
“இல்லை சார்… கண்மணி அல்ரெடி மேரிட்… ஆனால் அவங்க ஹஸ்பண்ட் அர்ஜூன் இல்லை…” சொன்னபோதே ஆதவன் தனக்குள் யோசித்துக் கொண்டான்… அவன் ’கண்மணி’ என்ற பெண்ணைக் கணிக்கும் ஒவ்வொரு விசயமும் தவறாகிப் போகும் விந்தையை… அதே நேரம் அந்த யோசனையை நீட்டிக்கவும் செய்யாமல்..
“வழக்கம் போல டைம் கொடுங்க… விட்டுப் பிடிங்க… நம்ம வழிக்கு வர்றாங்களான்னு பார்ப்போம்… இல்லை நாம வர வைப்போம்… அந்தப் பொண்ணோட டீடெயில்ஸ் எல்லாமே கலெக்ட் பண்ணுங்க… அர்ஜூனோடதும்…”
அத்துடன் முடிந்து விட்டது என்பது போல அவனது காரியதரிசியை நோக்க… அவனும் தலை ஆட்டினான்
“விக்ரம் சார்க்கு… அப்பாயின்மெண்ட் என்னைக்கு கொடுக்க” என்று அடுத்த விசயத்துக்கு அவன் காரியதரிசி விபரங்களைச் சேகரிக்க
“2 வீக்ஸ்ல ஈசிஆர் ல மீட்டிங் இருக்கு தானே… அங்க பேசிக்கலாம்னு சொல்லிருங்க…” சொல்லி முடித்து விட்டு அவனை அவசர அவசரமாக அனுப்பிய விதமே… அவனது காரிய தரிசிக்கு ஏன் என்று புரிந்து விட்டது… அவனும் வேக வேகமாக கிளம்பும் அவசரத்தில் அர்ஜூனின் புகைப்படத்தை மட்டும் எடுத்துக் கொண்டவன்… கண்மணியின் புகைப்படத்தையோ அங்கேயே தவறவிட்டுச் சென்றிருந்தான்…
---
ஆதவன் அருகில் இப்போது… அவனின் தாய் தந்தையர்
ஊரில் இருந்து ஆதவனின் தாய் தந்தையர் வந்திருந்த காரணம் ஏன் என்பது அவனுக்குத் தெரியாதா என்ன??…
ஒரு காலத்தில் ஆதவனின் பெற்றோருக்கு அவரது மகன்… ஆச்சரியமும், பெருமையும், உயர்வும் மட்டுமே.. ஆனால் இப்போதோ… எல்லாம் போய்… கவலை மட்டுமே
ஆனால் ஆதவனுக்கோ… அப்போதும் இப்போதும் எப்போதும் அவர்கள் அலட்சியம் மட்டுமே…
தன் முன் அமர்ந்திருந்தவர்களிடம் அவன் என்னவென்று கூட கேட்கவில்லை… ஏன் நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை…
கேசவனும் அவரது மனைவியும் வந்து மூன்று நாட்கள் ஆகி இருக்க… இன்றுதான் மகனின் தரிசனமே கிடைக்கிறது…
கேசவன் மனமெங்கும் வலி… என்ன குறை வைத்தனர்… பாசத்தில் குறை வைத்தனரா… பணத்தில் குறை வைத்தனரா… மகனை தனக்கு குருவாக உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து அவன் சொன்னதெல்லாம் கேட்டதற்குத்தான் இந்த மரியாதையா…
எதுவாக இருந்தாலும்… கிடைக்காத போதும்… தகப்பனாக பாசத்திற்கு ஏங்கினார் கேசவன்…
தன் மகன் ஆதவன்… அவரே எதிர்பார்க்காத உயரங்களுக்குச் செல்ல ஆரம்பித்திருக்க… கர்வத்துடன்.. பெருமையுடன் சந்தோசமாக பார்த்திருந்தவருக்கு… இப்போதெல்லாம் அந்த சந்தோசம் இல்லை… என் மகன் இவன்… என் மகன் போல உங்களுக்கெல்லாம் உண்டா? என்று எல்லோரிடமும் பெருமைப்பட்டு சொல்லிக் கொண்ட காலமெல்லாம் இப்போது தலைகீழாக ஆகி இருந்தது…
பெருமையும்… கர்வமும் மட்டுமே இவர்களிடம் இருக்க… அவர்களது மகனோ அவர்களை விட்டு வெகுதூரமாகி இருந்தான்…
“எங்கள பார்க்கக் கூட மாட்டியா ஆது” என்று ஆதவனின் தாய் கேட்ட போதே
“***… ஆது… சாதுன்னு… இந்த மாதிரி என்கிட்ட வந்து சீன் போடாதீங்கன்னு எத்தன தடவை சொல்றது… இதெல்லாம் எனக்குப் பிடிக்காதது… ஜஸ்ட் இந்த உலகத்துக்கு என்னைக் கொண்டு வந்துருக்கீங்க… அவ்ளோதான்… உங்களுக்கும் எனக்குமான பந்தம்…” என்றவன்
“இதுதான் நான்… இதுதான் என் குணம்… எத்தனை தடவை சொல்றது உங்ககிட்ட… அம்மா அப்பா பாசம்னு வந்து கழுத்தறுக்காதீங்கன்னு”
“ஏண்டா இப்படி இருக்க… பணம் பணம்மனு” என்ற போதே
“பணம்… புகழ்.. வெற்றி… இது எல்லாமே… என்னோட தேடல்… எப்போ இந்த தேடல் தொடங்கியதுன்னு தெரியல… காரண காரியம்லாம் இல்லை… எனக்கு இந்த வாழ்க்கை பிடிச்சுருக்கு… இதை மாற்ற ட்ரை பண்ணாதீங்க” கிட்டத்தட்ட கத்தினான் ஆதவன்… பெற்றவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவன் வழியில் குறுக்காக இவர்கள் வருவது என்றுமே அவனுக்கு பிடிக்காதது…
“நாங்க உன் வழிக்கே வரலை… ஆனால் எங்களுக்கும் ஆசாபாசம் இருக்கும் தானே.. எங்களுக்கும் மத்தவங்க மாதிரி பேரப்பிள்ளைங்க… வம்சத்தோட வாரிசுன்னு ஆசை இருக்கும் தானே… நாங்க உனக்காக சேர்த்து வச்சோம்.. இப்போ நீ தேடித் தேடி ஓடி ஒடி வெறித்தனமா சம்பாதிக்கிறது யாருக்காகடா”
“எனக்காக… எனக்காக மட்டுமே” சட்டென்று வந்தது ஆதவனிடமிருந்து…
“வாரிசுக்காகவெல்லாம் கல்யாணம் பண்ணனுமா…“ எள்ளலாக வார்த்தைகள் விட்டவன்… 75 வயசுலயும் குழந்தை பெத்துருக்காங்களாம்… வேணும்னா…” என்று நிறுத்தியவன்… தாயின் முகம் போன போக்கில்
”என்னைப் பேச வைக்காதீங்க… நீங்கதான் அசிங்கப்படுவீங்க… நான் நீங்க கஷ்டபடுவீங்கனுலாம் கொஞ்சம் கூட ஃபீல் பண்ண மாட்டேன்” என்று முடித்து விட… அதற்கு மேல் கேசவனின் மனைவி அங்கிருக்கவில்லை… அழுது கொண்டே எழுந்து போய்விட
“நீ மனுசனே இல்லடா… “ கேசவன் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாட்…
“தேங்க்ஸ்… புரிஞ்சதுன்னா… மகனேன்னு வந்து நிக்காதீங்க… “ என்று எழுந்தவனிடம்…
“உட்காரு…“ என்ற போதே
“நீ என்ன சொல்வது… நான் என்ன கேட்பது” என்ற அலட்சிய பாவத்தோடு ஆதவன் கேசவனை பார்த்தபடி… நகர ஆரம்பிக்க…
“பேசனும்.. அப்பா – பையன்… உறவு முறைல இல்லை… பிஸ்னஸ் விசயமா… உனக்கும் எனக்கும் ரொம்ப நாளா இழுத்துட்டு இருக்கு…” கேசவன் சொல்ல ஆரம்பித்த போதே
”ஞாபகம் இருக்கு… தனசேகர் ஃபேக்டரி விசயம் தானே… “ என்றவன்
“இப்போ அதுல என்ன பிரச்சனை… வேற ஏதாவது முக்கியமான பிரச்சனைனா பேசலாம்” என்று தோளைக் குலுக்கியபடி மிகச் சாவதனமாகக் கேட்டவனிடம்
“என்னது!!! இது உனக்கு முக்கியம் இல்லையா… ஓகே… உனக்கு இந்தக் கம்பெனி இப்போ பெரிய விசயமா இல்லாமல் இருக்கலாம்… “
“இப்போ கரண்ட் சிச்சுவேஷனுக்கு முக்கியம் இல்லைனு சொன்னேன்… காட் மை பாயிண்ட்… அந்த தனசேகரோட பையனால ஒண்ணும் பண்ண முடியாது… சீக்கிரம் வருவான்… வரும் போது கையெழுத்தை வாங்கிட்டு… ஆள அனுப்புங்க.. இல்லை எனக்குத் தேவைப்படும் போது அவன்கிட்ட இருந்து எப்படி அந்தக் கம்பெனிய நம்மகிட்ட மொத்தமா நம்ம வசம் கொண்டு வர்றதுன்னு எனக்குத் தெரியும்… அவனால ஒண்ணும் பண்ண முடியாது… அந்த அளவுக்கு அவன் புத்திசாலி இல்லைனு உங்களுக்குத் தெரியாதா என்ன… தனசேகருக்கு ரெண்டு பொண்ணுங்க இல்லை மூணு பொண்ணுங்கன்னு சொல்வீங்கதானே” ஆதவன் சொல்லிக் கொண்டிருந்த போதே
”நானும் அந்த ரிஷியை பற்றி இங்க பேச வரலை… அவன் ஒரு பிரச்சனையே இல்லை… திரு பிரச்சனை பண்ண ஆரம்பிச்சுட்டான்…”
ஆதவன் சிரித்தபடி
“நமக்கு பிரச்சனை பண்ண ஆரம்பிச்சுட்டாங்கன்னா… அப்போ அவங்க நம்ம சைட்ல இல்லைனுதானே அர்த்தம்… ஒகே நான் பார்த்துக்கறேன்”
அடுத்து கேசவன் ஏதோ சொல்ல ஆரம்பிக்கப் போக
“என் பக்கம் ஒருத்தவங்க இருக்கிற வரைக்கும் நான் ஆதவனா நான் சுட்டெறிக்க மாட்டேன்… என்னோட மோதிப் பார்க்க நினைக்கிறாங்கன்னா… “ என்றவன்…
”அவர்கள் கதை காலி என்பது போல ” கைகளால் செய்து காட்டியவன்…
“ரிஷி… திரு அவங்களாம் எனக்கு பெரிய விசயமே இல்லை… அந்த ரிஷிலாம் பார்த்துருக்கேனே… அந்த சாக்லேட் பாய்… தங்கச்சி கூட… அம்மா கூட… அவன் அத்தை பொண்ணு கூட சுத்திட்டு இருந்தவன்… இப்போ மட்டும் எப்படி இருப்பான்… அவனைப் பத்திலாம் பேசிட்டு என் நேரத்தை வீணடிக்காதீங்க” என்றவன் அடுத்த நொடி அங்கிருந்து கிளம்பி இருக்க…
கேசவன் தளர்ந்து அமர்திருந்தார்… மனம் முழுக்க யோசனையுடன்…
“தனசேகர்… திருமூர்த்தி என அவர்களோடு நன்றாகப் போய்கொண்டிருந்த தொழிலில் இவன் எப்போது கண் வைத்தானோ… எல்லாமே மாறிப் போய்… இன்று ஒன்றுமே இல்லாமல் போயிருந்தது… இவனது சுயரூபம் தெரியாமல் மகன் என்று நம்பி…” நொந்து கொண்டவருக்கு தனசேகர் குடும்பம்… இருந்த இடம் தெரியாமல் சிதைந்து போன நிலை இப்போது கண் முன் வந்து நிற்க…
ஒரு குடும்பத்தை சின்னாபின்னமாக்கிய வேதனையை இவர் முற்றிலுமாக உணர ஆரம்பித்தார் தான்… ஆனால் என்ன செய்ய காலம் கடந்த யோசனைகள் இனி மாற்ற முடியுமா என்ன…
இவர்களுக்கு முக்கியத்துவம் இல்லாத ஒன்று… மற்றவர்களுக்கோ முக்கியத்துவம் வாய்ந்தது…
அவர்களிடமே கம்பெனியைக் கொடுத்துவிட்டு வெளியே வந்து விடலாம் என்று நினைத்தால்… இவன் அதற்கும் விட மாட்டேன் என்கிறான்… வருங்காலத்தில் அதுவும் முக்கியம் என்பது போல் விட்டுக் கொடுக்காமல் பேசுபவன்… முரணாக இப்போது அதைப் பற்றிக் கண்டு கொள்ளாமலும் இருக்கிறான்…
நெஞ்சில் சுருக்கென்ற வலி… வந்து போக… அவராகவே நெஞ்சை நீவி கொண்டிருக்க… மீண்டும் ஆதவன் வந்தான்
“அப்புறம் அம்மா கிட்ட சொல்லிருங்க… என்ன இருந்தாலும் அவங்க என் அம்மாவாகிட்டாங்க அவங்க கிட்ட சொல்ல முடியாது” என்றவன்
“அவங்க பையன்… இப்படியே இருந்து… எதையும் அனுபவிக்காமல் போயிருவானோன்னுதானே பயப்படுறாங்க… இந்த ஆதவன்… எல்லாத்தையும் அனுபவிச்சுட்டான்… அனுபவிச்சுட்டு இருக்கான்னு சொல்லிருங்க… இதை ஏன் சொல்றேன்னா… அவங்க சாகும் போது… நிம்மதியா அவங்க ஆன்மா சாந்தி அடையனும்னு சொன்னேன்…” சிரித்துக் கொண்டே சொன்னவன் அந்த இடத்தை விட்டு கிளம்பியும் இருந்தான்
பெற்ற தாய் தந்தையிடமே மனசாட்சி என்ன விலை என்று கேட்பவனும் இந்த உலகத்தில் இருக்கின்றான் என ஆதவன் நிரூபித்துக் கொண்டிருந்தான்
---
இடம்- கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒதுக்கமாக இருந்த தனிப் பங்களா
“ப்ளீஸ்… என் பொண்ணை விட்ரு” என ஆதவனின் காலைப் பிடித்துக் கெஞ்சிக் கொண்டிருந்தார் நடுத்தர வயது கொண்ட மனிதர்…
“ஒழுங்கா… நான் சொன்ன போது… சொன்னபடி என் பேச்சைக் கேட்ருந்தேன்னா… உன் பொண்ணுக்கு இந்த நிலைமை வந்திருக்காது…”
“நான் தான் கையெழுத்துப் போடுறேன்னு சொல்றேன்ல… ப்ளீஸ்… என் பொண்ணு… கொழந்தைடா” என்றவர் கெஞ்சிய போதே….
ஆதவன் கண் காட்ட… அவர் முன் காகிதம் அடங்கிய கோப்பு வைக்கப்பட… தன் முன் கெஞ்சிக் கொண்டிருந்தவரிடம் நகர்த்தினான்…
”என் பொண்ணு” பேனாவை எடுத்தவரின் கைகளோ நடுங்க.... வார்த்தைகளோ தடுமாற… ஆதவனை நோக்க
அலைபேசியை எடுத்தபடி…
“எடுக்கிறானுங்களான்னு தெரியலையே… நீ வேற ரொம்ப லேட் பண்ணிட்ட… பசங்கள டிஸ்டர்ப் பண்றது எனக்கு எப்போதுமே பிடிக்காது… பார்க்கலாம் உன் லக்கை… சாரி சாரி… உன் பொண்ணோட லக்கை” என்று பரிகாசம் செய்தபடியே… பேச ஆரம்பித்தவன்…
எதிர்முனைக்கு ஆணையிட்டு விட்டு…
“ஹ்ம்ம்… ஒரு அஞ்சு நிமிசத்துல உன் பொண்ணு தப்பிச்சுட்டா… கொஞ்சம் லேட் பண்ணிருந்தாலும்… எல்லாம் வேஸ்ட் ஆகி இருக்கும்… லக்கிதான்“ கண் சிமிட்டியவன்…
“நிவின்… எல்லா இடத்துலயும் வாங்கிட்டு… சொல்ல வேண்டியதெல்லாம் இதுங்க கிட்ட சொல்லி அனுப்பி வை.. “ என்றபடியே கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தவரின் தலைமுடியை கொத்தாக பிடித்து தன் முன் நிமிர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன்…
“பணம்… அதிகாரம்… இதெல்லாம் இருக்குனு… வெளிய போய் உன் புத்திய காண்பிக்க நினைச்ச… ஒண்ணும் உனக்கு மிஞ்சாது… உன் பையன் வெளிநாட்ல இருக்கான் தானே… டிரக்ட் அடிக்டட் கிட்ஸ் லிஸ்ட்ல பார்க்கனும்னு ஆசை இருக்கா என்ன”
அவரை விட்டவன்…
“என்னை எதிர்க்க நினைத்தால்… இது சாம்பிள் தான்… எனக்கு முன்னால யாருமே சீறக் கூடாது… நான் மட்டும் தான் இங்க அதிகாரம்… நான் வைத்ததுதான் சட்டம்… எவனாயிருந்தாலும்… என் கிட்ட வளஞ்சுதான் போகனும்…” கால்களால் அவரைத் உதைத்து தள்ளியவனாக வெளியேறினான் ஆதவன்…
ரிஷி ஆதவன் வட்டத்திற்குள் தான் இருந்தான்… ஆனால் ஆதவனை ரிஷி என்பவன் போட்டியாளனாக நெருடியதில்லை…நெருங்கியதில்லை இதனால் மட்டுமே ரிஷியும் அவனது குடும்பமும் இத்தனை நாள் தாக்குப் பிடித்திருந்தனர்… ஆனால் கண்மணியோ ஆதவனின் முதல் பார்வை பட்ட போதே அவனை யோசிக்க வைத்திருக்க… கண்மணி அர்ஜுன் ஏன் விக்ரம் கூட, ரிஷியைத் தவிர மற்ற அனைவரும் ஆதவனின் கண்காணிப்பு வட்டத்தில் இருந்தனர்…
--
“கெளம்பலாம்… நாம இங்க இனிமேல வர்றது பிரயோஜனம் இல்லை… “ கேசவன் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருக்க.. அவரது மனைவியோ காதில் வாங்காமல்… கையில் ஏதோ ஒரு புகைப்படத்தை வைத்து பார்த்துக் கொண்டிருக்க…
“நான் பேசிட்டு இருக்கேன்… நீ என்ன பார்த்துட்டு இருக்க”
என்ற போதே
கேசவனின் மனைவி முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி…
“டேபிள்ள இருந்துச்சு… நம்ம பையன்கிட்ட முதன் முதலா ஒரு பொண்ணு போட்டோ… அதுதான் யோசிச்சுட்டு இருக்கேன்… ஒருவேளை இவ நம்ம பையன் லைஃப மாத்துவாளோ… நம்ம மருமகளா” என்று அவள் பேச ஆரம்பிக்கப் போக…
தலையில் அடித்துக் கொண்டார் கேசவன்… கேசவனின் மனைவியும் கணவனின் செய்கையில் பேசாமல் பாதியோடே நிறுத்திவிட்டிருக்க… மனைவியின் கையில் இருந்த புகைப்படத்தை வாங்கியவர்… அதைப் பார்க்கக் கூடச் செய்யாமல்
அங்கிருந்த குப்பைக் கூடையில் கிழித்துப் போட்டவராக…
“நீ என்னைத்தான் நல்லவன்னு நம்பி உன் வாழ்க்கையை ஏமாத்திகிட்ட… இப்போ உன் மகன்ட்டயுமா… இவன் கைல ஒரு பொண்ணு போட்டோ வந்திருக்குன்னா… அந்தப் பொண்ணுக்கு என்ன நிலைமை ஆகுமோன்னு நான் யோசிச்சுட்டு இருக்கேன்… நீ என்னடான்னா… நம்ம பையன் வாழ்க்கை… அதை மாத்துவாள்னு… லூசு மாதிரி பேசிட்டு இருக்க… “
“ஏன்… என்ன ஆகும்… அப்படி என்ன பண்ணிருக்கான்…. “ என்ற மனைவியிடம் முதன் முதலாக மனம் திறந்து மகனின் அனைத்து சுயரூபங்களையும் சொல்ல…
அந்தப் பெண்மணி வாய் திறக்கவில்லை…
கணவனும் சரி இல்லை… தெரிந்த போது கணவனைத் திருத்தும் நிலையிலும் அவர் இல்லை… அவரே அவரது தவறுகளை புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்க… இப்போது மகனுமே அவர் வழியில்… இல்லையில்லை அவரை விட மிகப்பெரிய இராட்சசனாக…
“நான் வரலை.. நீங்க போங்க… அவன் என்னோட மகனும் தான்… உங்க மகனா இத்தனை நாள் இருந்துட்டான்… நான் என் மகனா அவனை மாத்தி கூட்டிட்டு வருகிறேன்” அந்த அப்பாவி பெண்மணி சொல்ல… கேசவனும் எப்படியோ எப்படியோ பேசி தன்னோடு கூட்டிப் போக முயற்சிக்க… முடியாமல் போக… அவளாயிற்று… அவள் மகனாயிற்று என.. கிளம்பி விட…
கேசவனின் மனைவி… குப்பைக் கூடையில் கிழித்துப் போடப்பட்டிருந்த அந்த புகைப்பட மீதங்களையே வெறித்திருந்தாள்…
நாயகியின் புகைப்படம்… நாயகனின் தந்தைக்கு கிடைத்த ஆதார வெளிச்சம்… அதைக் கொண்டு தனது இருளை துடைத்து… மகனின் எதிர்கால வாழ்க்கைக்கு அச்சாரமாக்கினார்…
அதே நாயகியின் புகைப்படம்… ஆதவன் தாயின் கைகளிலும் கிடைத்தது… ஒரே வேறுபாடு… அது அவரது மகனை அழிக்கும் ஆயுதமாக இருந்ததுதான் வித்தியாசம்…
/*அத்தியாயம் 48-- டீசர்
“சார்… கொஞ்சம் யோசிங்க... கண்மணிக்கு இன்னும் கொஞ்சம் பக்குவம் வரணும் சார்… “ அர்ஜூன் நிமிர… பார்த்திபன் தயங்கியபடியே தொடர்ந்தான்…
---
“உங்க மேல நம்பிக்கை இல்லாமல்லாம் படிக்கலை… ஜஸ்ட் என்ன இருக்குன்னு எனக்கும் தெரியனும்…” சொல்லி விட்டு படிக்க ஆரம்பிக்க
சிரித்தான் அர்ஜூன்… வேறெதுவும் சொல்லவில்லை
---
”என்ன கேட்டீங்க… ஹான் ரிஷிகிட்ட இதே மாதிரி சொல்வீங்களான்னு… ”
”சொல்ல மாட்டேன்… கண்ண மூடிட்டு சைன் போடுவேன்… இன்னும் சொல்லனும்ணா… வெத்து தாள்ள கூட என் சைன போட்டுக் கொடுப்பேன்… “
---
”அது யமுனாவுக்கும் ரிஷிக்குமான பிரச்சனை… நான் உங்களுக்கும் ரிஷிக்குமான பிரச்சனை என்னன்னு கேட்டேன்…”
---
”பார்த்திபன்… நீங்க கெளம்புங்க” என்ற படி கண்மணியிடமிருந்து அவனை விலக்க…
“நான் அப்படித்தான்… என்னை யாரையும் நான் ஃபாளோ பண்ணச் சொல்லலை… மத்தவங்களுக்காக நான் நல்லவன்னு லேபிள் போட்டுட்டுலாம் சுத்த முடியாது… மைண்ட் இட்… என் வாழ்க்கை…. என்னோட பிரச்சனை… இவ்ளோ பேசுற நீ… என்ன தெரியும் உனக்கு ரிஷிய பற்றி… ”
---
கண்மணி இப்படி படபடத்து பேசி அர்ஜூன் முதல் முறையாகப் பார்க்கின்றான்… கோபம் இருந்தாலும் நிதானித்து பேசும் கண்மணியைத்தான் அவன் பார்த்திருக்கின்றான்…
---
வெகு நாட்களுக்குப் பிறகு உணர்ச்சி வசப்பட்டத்தினாலா இல்லை கத்தியதாலா தெரியவில்லை… தலை வலிக்க ஆரம்பித்திருக்க… இதயமோ படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது…
---
எனக்கு… ஊட்டி போகனும்… ஹர்ஷித் பார்க்கனும்…” என்னமோ கடைக்குப் போகவேண்டும் லாலிப்பாப் வேண்டும் என்று சிறு குழந்தை போல அவனிடம் கெஞ்சலாகக் தன் வேண்டு கோளை வைக்க
---
”கண்மணி… உன்கிட்ட ஒரு ஒரு வார்த்தையா வாங்கி என்ன நடந்துச்சுனு கேட்கிற அளவுக்கு எனக்கு பொறுமையும் இல்லை… டைமும் இல்லை… ஷூட்டுக்கு மிடில்ல பேசிட்டு இருக்கேன்… அல்ரெடி லேட்… ஞாபகம் வச்சுக்கோ… வேகமா சொல்லு”
---
”விடு… நான் என்ன சொன்னாலும் கேட்கிற மனநிலைல இல்லை… ஊட்டிக்கு போகனும்னு கேட்ட… ஒகே சொல்லிட்டேன்… நான் வைக்கவா”
---
கண்மணி இன்னுமே சமாதானமடையவில்லை என்பதை அவளது நீண்ட மௌனமே உணர்த்த… ரிஷிக்கு மனம் வலித்தது…. தன்னந்தனியே அவள் போராடிக் கொண்டிருந்ததை நினைத்து… ஆனாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல்…
“ரிஷிக்கண்ணாலாம் எதிர்பார்க்கலை… அட்லீஸ்ட்… ரிஷி போனை வைக்கிறேன்னு சொல்லிட்டு வைங்க பார்க்கலாம்” ரிஷி இன்னுமே தாங்க…*/
Rishi appa ku senjaduku neenga anupavikrathellam romba kammi
Rishi Kaila tan un Magan alivan
Super
Nice ud sis.teaser semma.aadavan character avanga appa panna thappa unarvachirukku .pavam kanmani ,rishi Sis .how many problems they will face
Nice ud sis.teaser semma.aadavan character avanga appa panna thappa unarvachirukku .pavam kanmani ,rishi Sis .how many problems they will face
Nice ud. New character as another villain for RK. Umm good. Little upset with out R♥︎K conversation but teaser with R♡K made bit cool. Waitingggggggggg for nexxxxxxxt ud asusual.
Nice epi sis. But romba late panniteenga. Aadhavan romba villathanam kaatinaalum antha character nallaa thaan erukku. but rishu paadu rommmmba thindaattan thaan. I'm eagerly waiting your next epi. Please upload very soon.(konjam thittalaamnu thaan ninaithen. Thapichiteenga. My sweet writer ellaya neenga. Thitta mudiyumaa.)
Geetha from Srilanka
Wow asusual super word usage... Rishikanna vera ethir pakuriya RK... Kanmani ethuku epa harshith pakananumni
👏🏼👏🏼👏🏼
I love your writing, you make us love or admire at your hero/heroine/positive characters. At the same time, you either make us hate or be scared of your villainous character(s) in full swing. Great going!
இதென்ன ஆதவன் இவ்ளோ வில்லத்தனமா இருக்கான்? என்ன இருந்தாலும் ரிஷி கண்மணி part இல்லாதது கொஞ்சம் miss ஆகுது.. Tomorrow fill பண்ணிடுங்க pls
இதென்ன ஆதவன் இவ்ளோ வில்லத்தனமா இருக்கான்? என்ன இருந்தாலும் ரிஷி கண்மணி part இல்லாதது கொஞ்சம் miss ஆகுது.. Tomorrow fill பண்ணிடுங்க
Kanmani interesting character... aadhavan ku kanmaniyala tan alivu iruku pola.... Rishi oda kanmaniya parka waiting and Rishi kaga pesura kanmanium parka aasai🥰🥰🤗🤗
nice epi,adutha villan a,tesar romba intrestinga.. irukku sis,next ubdatekaga eagerly waiting
பாவம் ரிஷி எத்தனை வில்லன்களை சமாளிக்க🙆♀️🙆♀️, ஏற்கெனவே அர்ஜுன்ற ஒரு கொடச்சல் இருக்கு ,😏😏பத்தாததுக்கு கண்மணிய தப்பா புரிஞ்சுக்குட்டு அவளுக்கும்,ரிஷிக்கும் எதிரா லூசுத்தனம் பண்ண அவனோட உடன்பிறப்பே சுத்திட்டு திரியுதே🤷♀️🤷♀️.இப்போ இவன் வேற🤦♀️🤦♀️
Kanmani - For everyone she's is special.. U made jii.. U made her precious.. RK'll rule over Aadhavan n destroy his kingdom as u said.. Waiting jii.. Tmrw never forget to give update jii..