அத்தியாயம் 105-3 (ஃபைனல்)
”அர்ஜூன்” என்னதான் கண்மணியின் அழைப்பு சத்தமாக இருந்தாலும் அவளின் குரல் அந்த அறையில் மட்டுமே எதிரொலிக்கப்பட… செவிலியர் தான் அர்ஜூனை அழைக்க வெளியே வந்தார்…
“சார்… மேடம்.. உங்களைக் கூப்பிடறாங்க…” அர்ஜூனை அழைத்துச் சொல்ல
மொத்த குடும்பமும் பதட்டத்துடனும்… வேகத்துடனும்…
“கண்மணி எப்படி இருக்கா…” என்ற கேள்வியோடு செவிலியரைச் சூழ…
“மேடத்துக்கு பையன் பிறந்திருக்கான்… மேடம் நல்லா இருக்காங்க… ஆனால் அவங்க ரொம்ப உணர்ச்சிவசப்பட்றாங்க… அர்ஜூன் சாரைத்தான் கூப்பிட்டுட்டு இருக்காங்க…” எனும் போதே கண்மணி-ரிஷியின் புதல்வன் அங்கு கொண்டு வரப்பட்டிருக்க…
“இந்தக் குழந்தையும் ப்ரீ மெச்சூர்ட் தான்… ஆனால் பயப்ட்றதுக்கு ஒண்ணும் இல்லை... பாப்பாதான் கிரிட்டிகலா இருக்கு” என அந்தக் குழந்தையைக் கொண்டு வந்த செவிலிப் பெண் சொல்ல…
”என் பொண்ணைப் பார்க்கலாமா” நட்ராஜ் பரிதவிப்பாகக் கேட்டபடியே…
”என் பேரனையாவது கைல கொடுப்பீங்களா… “ ஆசையோடும் பதட்டத்தோடும் தன் பேரனைப் பார்த்து கேட்க… செவிலியர் தயங்கிய போதே…. நாராயணன் வேகமாக அந்த செவிலியரிடம்
“கொடுங்க… என் மருமகன்ட்ட கொடுங்க” என செவிலியரிடம் சொல்லி கண்மணி- ரிஷி மகனை நடராஜனிடம் கொடுக்கச் சொல்ல… நட்ராஜ் கைகளில் அந்தக் குழந்தை முதலில் கொடுக்கப்பட்டது…
நட்ராஜின் கண்கள் ஆனந்தக் கண்ணீரில் நனைய ஆரம்பித்திருக்க… குழந்தையை நாராயணன் கைகளில் மாற்றினார்… அதன் பின் இலட்சுமி என மூவருமாக கண்ணீரோடு குழந்தையை உச்சி முகர…
”சார்… இந்தக் குழந்தையும் ப்ரீ மெச்சூர்ட் பேபி தான்… புரிஞ்சுக்கங்க…. இப்போ இருக்கிற கண்டிஷனை மெயிண்டைன் பண்ணனும்… வேற யாரும்னா குழந்தையைக் கொடுத்திருக்கவே மாட்டோம்” உதவி மருத்துவர் நாராயணனிடம் தயங்கி பின் சொல்ல… அனைவரும் புரிந்து கொண்டவர்களாக குழந்தையை கண்களால் மட்டும் பார்த்துக் கொண்டிருக்க… அர்ஜூன் மட்டும் அங்கு இல்லை… அவனோ கண்மணியிடம் நின்றிருந்தான்…
கண்மணி ஆபத்தை எல்லாம் கடந்து விட்டாள்… நினைத்த போதே அவன் கண்களில் கண்ணீர் வடிந்திருக்க… கண்மணியின் உடல்நிலை சீராக ஆனதைக் கண்டவனுக்கு… அதில் ஆனந்தம் மட்டுமே… கண்மணி பிதற்றல் எல்லாம் அவனை வருத்தப்படவே வைக்கவில்லை…
“கண்மணி…” என அவள் கைகளைப் பிடித்தபடி அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவன்… அவள் கைகளைத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டவனாக
“டேய் உனக்கு ஒண்ணும் இல்லையே” என்றவனின் குரல் தழுதழுத்திருக்க… கண்மணி அவனை எல்லாம் கண்டு கொள்ளாமல்
“ரிஷிக்கு ஆபத்து … ப்ளீஸ் காப்பாத்துங்க… அர்ஜூன்… ரிஷியைக் கூட்டிட்டு வாங்க… எனக்கு அவரைப் பார்க்கனும்… அவர் அவருக்கு ஏதோ பிரச்சனை…”
அர்ஜூன் அதிர்ச்சியுடன் கண்மணியைப் பார்த்தவனாக…
“அதெல்லாம் இல்லடா… ஒண்ணும் இல்லடா…ரிஷி இங்கதான் இருக்கான்…”
“இல்லை… எனக்குத் தெரியும்… என் ரிஷிக்கு ஏதோ நடந்திருக்கு…. ப்ளீஸ் என் ரிஷியைக் காப்பாத்துங்க…” அரை மயக்க நிலையில் கண்மணி இதையே சொல்லிக் கொண்டே இருக்க
அர்ஜூன் மருத்துவரிடம் திரும்பினான்
“என்னாச்சு மேம்… இன்னும் கண்மணி கிரிட்டிகல்லதான் இருக்காளா… ஏன் இப்படியெல்லாம் பேசுறா” அர்ஜூன் கேட்க
மீனாட்சி இப்போது…
“இல்ல அர்ஜூன்… இந்த டிஸ்டர்ப்பன்ஸ் தான் அவளை கான்ஷியஸ்லயே வச்சிருந்தது…. நீங்க தொடர்ந்து பேசுங்க… ரிஷி எங்க… அவரை வரச் சொல்லுங்க ” என அர்ஜூனைக் கேட்டார்…
“ரிஷி வந்தால்… அவர் பேசினால் எல்லாம் சரி ஆகிடும்…. அவர் எங்க…” மீனாட்சி ரிஷியைப் பற்றி அர்ஜூனிடம் விசாரித்துக் கொண்டிருந்த போதே
‘அர்ஜூன்… ரிஷிக்கு .. அவரு பாவம் ரிஷி… கூட்டிட்டு வாங்க அர்ஜூன்… நான் அவர் பக்கத்துல இல்லாமல் போயிட்டேன் அர்ஜூன்… நீங்கள்ளாம் பாத்துக்குவீங்கதானே நம்புனேன்… இப்படி விட்டுட்டீங்களே… இல்ல இல்ல… நான் போறேன்… ” கண்மணி அர்ஜூனின் கைகளை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு வேகமாக எழ முயற்சிக்க…
அர்ஜூன் பதறியவனாக…
“கண்மணி…. ரிஷிக்கு ஒண்ணும் ஆகலை… நான் ரிஷியைக் கூப்பிட்டுட்டு வர்றேன்… அவனுக்கு ஒண்ணும் ஆகாது…” கண்மணியைப் படுக்க வைத்தான் மீண்டும்…
அர்ஜூனின் பதில்கள்… ஆறுதல்கள் எல்லாம் கண்மணியை சமாதானப்படுத்தவே இல்லை… மேலும் மேலும் அவள் புலம்பலகள் அதிகரித்திருக்க… அர்ஜூன் பயந்து மருத்துவரைப் பார்க்க… மருத்துவரோ கண்மணிக்கு ஒன்றும் இல்லை என்ற நம்பிக்கையைப் பார்வையாலே கொடுத்திருக்க… அர்ஜூனும் ஓரளவு நிதானித்தான்…
”அர்ஜூன்… என் உயிரை எப்போதுமே நீங்கதானே காப்பாத்துவீங்க… இப்போ என் உயிர் போராடிட்டு இருக்கு அர்ஜூன்…எனக்கு ரிஷி வேணும்… என் ரிஷி இல்லைனா நான் இல்லை… எனக்கு வேற எதுவும் வேண்டாம்… எனக்கு என் ரிஷியை மட்டும் காப்பாத்திக் கொடுங்க… ” என்றவளின் வார்த்தைகள் பாதி நினைவில் பரிதவிப்பாக வந்திருக்க…
“என்னைப் பாரு… கண்டிப்பா உன் ரிஷியை உன்கிட்ட கூட்டிட்டு நான் வருவேன்னு நம்பிக்கை இருக்கா… என்னை நம்புவியா மாட்டியா” அர்ஜூன் அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டு அவளிடம் கேட்க
கண்மணி தலை ஆட்டினாள்… சம்மதமாக… தான் சொல்வதெற்கெல்லாம் அப்பாவியாக தலையாட்டும் கண்மணியை பார்ப்பதே அவனுக்கு கொடுமையாக இருந்தது… எப்போதும் நிமிர்வோடு இருக்கும் கண்மணியைத்தான் அவன் அறிவான்… இன்று அவனிடம் அவள் பார்வை கெஞ்சலாக மட்டுமே இருக்க… அர்ஜூனால் அதைத் தாங்கவே முடியவில்லை…
”நீ என்னை நம்புறேல… இதுதாண்டா எனக்கு வேணும்… நான் பார்த்துக்கிறேன்… இப்போ என்ன… ரிஷிகிட்ட நீ பேசனும்… ரிஷிக்கு ஒண்ணும் இல்லைனு உனக்குத் தெரியனும்… அவ்ளோதானே… நான் ரிஷிக்கு போன் பண்றேன்… அவனுக்கு ஒண்ணும் இல்லடா… சத்யா ரிஷி கூடத்தான் இருக்காரு… அவரை மீறி யார் என்ன பண்ணுவா…”
வேகமாக எழுந்தவன்… ரிஷியின் அலைபேசிக்கு அழைக்க… ரிஷியின் அலைபேசியை சத்யா எடுக்க… அர்ஜூன் சந்தோசமாக கண்மணியைப் பார்த்தபடி…
“சத்யா ரிஷி கூடத்தான் இருக்கான் பாரு…. ரிஷி போனை சத்யாதான் எடுக்கிறாரு” கண்மணியிடம் தகவலைச் சொன்னபடியே சத்யாவிடம் பேச ஆரம்பித்தான் அர்ஜூன்
“சத்யா… ரிஷிகிட்ட கொடுங்க… கண்மணிக்கு ட்வின்ஸ் பிறந்திருக்காங்க…. அவளும் நல்லா இருக்கா… ரிஷிக்கிட்ட சொல்லுங்க…” எனும் போதே…
சத்யா மௌனித்திருக்க…
“என்ன ஆச்சு சத்யா… ரிஷி எங்க… உங்க கூட இல்லையா…” அர்ஜூனின் பதட்டமான குரலில்… கண்மணியின் கண்கள் அர்ஜூனிடம் வலியோடு நிலைபெற்றிருக்க… இப்போது அர்ஜூன் மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தான் சத்யாவிடம்
“உங்கள ரிஷி கூடத்தானே இருக்கச் சொன்னேன்… என்னாச்சு” அர்ஜூன் கோபம்… கவலை எனக் கலந்த கலவையாக கேட்க
“ஆமாம் சார்… அவர் பின்னாடிதான் போனேன்… ஆனால் நான் போனப்போ… பைத்தியக்காரன் மாதிரி நடந்துகிட்டான்… என் பின்னால வராதேன்னு… நிமிசத்துல ஓடி மறஞ்சுட்டாரு… தேடிட்டு இருக்கேன்… கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாச்சு ரிஷி கிடைக்கலை… பயமாருக்கு அர்ஜூன் சார்” சத்யா கவலை நிறைந்த குரலில் சொல்ல
அர்ஜூனின் முகம் கருக்க ஆரம்பித்திருந்தது…
கண்மணியோ அவனுக்கு ஆபத்து என அலறுகிறாள்… இன்னும் ரிஷிக்கு எதிரி யார் இருக்கிறார்கள்… ஆதவனும் இப்போது உயிரோடு இல்லையே…
“அர்ஜூன்… போங்க அர்ஜூன்… ரிஷியை போய்க் காப்பாத்துங்க…” கண்மணி வலியோடு உச்சஸ்தாயில் கத்த ஆரம்பித்திருக்க
“சரிடா… சரிடா… இதோ போறேண்டா” அர்ஜூன் பதட்டத்துடன் சொன்னாலும்… எங்கு தேடுவது ரிஷியை… சத்யா சொன்னதை வைத்துப் பார்த்தால்… ஏதாவது விபத்தில் கூட அவன் மாட்டி இருக்கலாம்…
கண்மணியிடம் காட்டிக் கொள்ளாமல்… உள்ளுக்குள் பதட்டத்தை மறைத்தபடி யோசனையோடு நின்றிருந்தான் அர்ஜூன்…
கண்மணி ஏதோ உளருகிறாள் என்பது மட்டுமே இதுவரை அர்ஜூனின் எண்ணமாக இருந்தது… கொஞ்சம் அலட்சியமாகவும் இருந்தான்… ஆனால்… இப்போது சத்யாவின் மூலம் ரிஷியின் நடவடிக்கைகளைக் கேட்ட பின்….
ரிஷிக்கு ஏதோ ஆபத்து… அதைக் கண்மணி உள்ளுணர்வில் புரிந்து சொல்கிறாள் என்பதை மட்டுமே கண்மணியின் புலம்பகளில் எடுத்துக் கொண்டான்… அதை நம்பவும் செய்தான்…
ரிஷியைக் உடனடியாகக் காப்பாற்ற வேண்டும்… எப்படியும் இந்த சென்னைக்குள் தான் இருப்பான்…. அதுவும் இந்த ஏரியாக்குள் தான் இருப்பான்… கண்டுபிடித்து விடலாம்… நம்பிக்கையுடன் அர்ஜூன் தனக்குள் சொல்லிக் கொண்ட போதே…. கண்மணி அவன் கைகளைப் பிடிக்க… அர்ஜூன் திரும்பினான் கண்மணியிடம்
“என்னம்மா…….”
“நீங்க நான் சொல்றதை நம்பலைதானே… அர்ஜூன்” கண்மணி அர்ஜூனைப் பார்த்துச் சொன்ன போதே அவள் குரல் கம்ம ஆரம்பித்திருக்க
”நம்ம அம்மன் கோவில் மண்டபம் இருக்கே…. அங்க போய்ப் பாருங்க… ப்ளீஸ்… எனக்குத் தெரியும்… ரிஷியைக் குத்திட்டாங்க அர்ஜூன்… எனக்குத் தெரியும் அர்ஜூன்… அவர் முகமெல்லம் இரத்தம் ரிஷி… ” அழுதபடியே சொன்ன கண்மணியின் உறுதியான வார்த்தைகளில் அர்ஜூனுக்கே உடல் நடுங்கியது…
“இந்த அளவு இந்தப் பெண் அவன் மேல் காதல் கொண்டிருக்கின்றாளா… அவளைப் பற்றி கூட அவள் நினைவில் இல்லை… அவள் நினைவு முழுவதும் அவன் மட்டுமே…” அந்த நொடியில்…. அவளின் காதல் அவளின் உயிர் யார் என்று அந்த நிமிடத்தில் அர்ஜூனுக்கு புரிந்தது முழுவதுமாக…
----
கண்மணி உயிருக்கு ஆபத்தான் நிலையில் இருந்தாள்… இப்போது அதைக் கடந்து விட்டாள்… பிறந்த குழந்தைகளில் பெண் குழந்தை மட்டுமே ஆபத்தான நிலையில் உள்ளது…. இப்படி அதிர்ச்சியான… சந்தோசமான தகவல்களுக்கு மத்தியில் நாராயணன்… நட்ராஜ்.. இலட்சுமி குடும்ப உறுப்பினர்கள் இருக்க… அர்ஜூனோ ரிஷியை தேடி அம்மன் கோவிலுக்குச் சென்றிருந்தான்…. சத்யாவும் அவனுடன் சென்றிருந்தான்
சரியாக இவர்கள் சென்ற அந்த சமயம் பார்த்துதான்… ரஞ்சித்தும் ரிஷியை விட்டு ஓடித் தப்பித்திருந்தான்…
அர்ஜூனும் சத்யாவும் வேறெங்கும் செல்ல வில்லை… கண்மணியின் வார்த்தைகளை நம்பியதால்… நேரடியாக கோவிலுக்கு வந்து விட்டனர் நேரத்தைக் கடத்தாமல்…
சரியான சமயத்தில் ரிஷியையும் காப்பாற்ற முடிந்தது என்று கூடச் சொல்லலாம்…
கண்மணி சொன்னது போலவே… அவள் சொன்ன நிலையில் ரிஷி அங்கு தரையில் கிடக்க… விடிந்தும் விடியாத நிலையில் ரிஷியை யாரும் பார்க்காத நிலை…
ரிஷியைப் பார்த்த பின் அர்ஜூனும் சத்யாவும் ஒரு சிறு நொடியைக் கூட வீணாக்கவில்லை… வேக வேகமாக செயலாற்ற ஆரம்பித்திருந்தனர்… அடுத்த சில நிமிடங்களில் ரிஷி ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு… முதலுதவியும் கொடுக்கப்பட்டு… ஓரளவு இரத்தப் போக்கையும் கட்டுப்படுத்தி இருக்க… இப்போது ரிஷி… ரிஷி மெல்லக் கண்களைத் திறந்தான்… தான் இருந்த அந்த நிலையிலும் அவர்களைப் பார்த்து சிரிக்க…
சத்யா முற்றிலுமாக உடைந்து போயிருந்தான் ரிஷியின் நிலையைப் பார்த்து
“ரிஷி… இப்படி உன்னைப் பார்க்கத்தான் உன்னோடவே சுத்திட்டு இருந்தேனா… என் பையனை என் ஸ்தானத்துல இருந்து அவனுக்கு பாதுகாப்பு அரணா இருந்து நீதான் பார்த்துக்கனும்னு என்கிட்ட சொல்வார்… அப்படித்தான் இருந்தேன்… கண்மணி மேடம் வந்த பின்னால நான் கொஞ்சம் உங்கள விட்டு விலகிட்டேன்… அதுதான் இன்னைக்கு உனக்கு இந்த நிலைமை…” சத்யா புலம்பியபடியே
“அர்ஜூன் சார் கூட உன்னைப் புரிஞ்சுகிட்டார் ரிஷி… துரை விசயமெல்லாம் கிளியர் பண்ணியாச்சு… கண்மணி டெலிவரிக்குப் பின்னால உன்கிட்ட எல்லாமே சொல்லலாம்னு இருந்தோம் ரிஷி… இப்போ இப்படி ஆகிருச்சே ரிஷி…” என்ற சத்யாவிடம்
“எனக்கு ஒண்ணும் ஆகாது… ஏன் என்னைப் பார்த்து பயப்படறீங்க… பதட்டப்படாமல் இருங்க” சத்யாவிடம் சொன்னவன்…
அர்ஜூனை மட்டும் பார்த்து
“நீங்க தண்ணி அடிக்க மாட்டீங்க தானே… உங்கள நம்பிதான் பாஸ் இருக்கேன்… காப்பாத்தி விட்ருங்க… ஏபி பாஸிட்டிவ் தானே “கண்சிமிட்டிக் கேட்டாலும் திக்கித் திணறியபடிதான் பேசினான் ரிஷி… அர்ஜூன் அவன் கேள்விக்கு ஒப்புதலாகத் தலை ஆட்டிய போதே அர்ஜூன் கண்களின் பார்வையை கண்ணீர் மறைத்திருக்க… வேகமாகத் திரும்பிக் கொண்டு கண்ணீரைத் துடைத்துக் கொண்டான் அர்ஜூன்
சத்யா இப்போது…
“மேடம் பற்றி கேட்க மாட்டீங்களா ஆர் கே” எனும் போதே ரிஷி சத்யாவிடம் தன் பார்வையை வைத்தவனாக…
“நான் உங்ககிட்ட பேசிட்டு இருக்கேன் தானே… அப்போ அவளுக்கும் ஒண்ணும் ஆகி இருக்காது…” உறுதியாகச் சொன்னபடியே… அர்ஜூனைக் கூர்ப்பார்வை பார்த்தவனாக
”என் கண்மணிக்கு ஒண்ணும் ஆகாது… அவ்ளோ சீக்கிரம் என்னை விட்டு அவளும் போக மாட்டா… அவளைப் போகவும் விடமாட்டேன்… ”
சொன்னபடியே சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவன்…
“என்ன அர்ஜூன்… இந்த ரிஷி இடையில வந்தான்…. இடையிலேயே போயிருவான்னு நினைச்சீங்களா… “
“அவ்ளோ சீக்கிரம் என் கண்மணியை விட்டு நான் போக மாட்டேன்…” ரிஷியின் புன்னகை அவனிடம் இப்போது நிலைத்திருக்க… அர்ஜூன் பதில் சொல்லாமல் வெறித்திருந்தான்…
சில நிமிடங்கள் அங்கு அமைதியே சூழ்ந்திருக்க…
“என் குழந்தைங்க எப்படி இருக்காங்க…” இதைக் கேட்ட போது ரிஷியின் முகம் கூம்பியிருக்க… இப்போது ரிஷியின் குரல் தழுதழுப்பாக வந்திருக்க
“குழந்தைங்க தானே…” தட்டுத் தடுமாறி அவன் வார்த்தைகள் வந்த போதே… ரிஷியின் குரல் சிக்கியது...
கண்மணியைப் பற்றி…. அவள் உடல்நிலையைப் பற்றி… உறுதியாக நம்பிக்கையோடு இருந்தவன்… குழந்தைகள் விசயத்தில் அப்படி இல்லை….
“சத்யா சொல்லுங்க சத்யா… என் குழந்தைங்க எப்படி இருக்காங்க... பயமா இருக்கு சத்யா… கேட்கவே… ஏன் அமைதியா இருக்கீங்க” ரிஷியின் கண்களில் இப்போது முதன் முறையாக நீர் வழிந்திருக்க… அவன் குரலில் பயம் மட்டுமே… கணவனாக நம்பிக்கையோடு பேசியவன்… தந்தையாக பேசியபோது அந்த தைரியம் இல்லை அவன் குரலில்… பரிதவித்து மாறி மாறி பார்த்திருந்தான் சத்யாவையும் அர்ஜூனையும்…
“பையன்… பொண்ணு… ” சத்யா ரிஷியிடம் சொன்ன போதே
”பாப்பா மட்டும் இன்னும் சொல்ற நிலைமைல இல்லை ரிஷி… ரொம்ப கிரிட்டிகலா இருக்கா” அர்ஜூன் வேகமாகக் கண்களைத் துடைக்க… ரிஷியின் முகம் இப்போது மாறி இருந்தது… அவன் கத்தியால் குத்தப்பட்டுக் கிடந்ததை அந்த நிமிடத்தை விட மொத்தமாக இருண்டிருக்க…
“நான் பாப்பா பார்க்கனும்…. என் குழந்தைகளைப் பார்க்கனும்….” ரிஷியின் வார்த்தைகள் அழுத்தமுடன் விழ… தன் மகள் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்ற வார்த்தைகளில் உடனடியாக அவனின் இரத்த அழுத்தமும் அசாதாரண நிலையை அடைந்திருக்க…
“சார்… பேச வேண்டாமே… ப்ளீஸ்…” அருகில் இருந்த செவிலியர் சொல்ல… ரிஷி அவர் பேச்சை எல்லாம் கேட்பானா என்ன…
“எனக்கு என் குழந்தைகளைப் பார்க்கனும்… என் பொண்ணைப் பார்க்கனும்… ஒரு குழந்தை ஒரு குழந்தைனு சொல்லி சொல்லியே என் பொண்ணை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துட்டா… “ ரிஷியின் கோபம் கண்மணியிடம் மையம் கொண்ட போதே… அவன் மயக்க நிலைக்குச் சென்றிருந்தான்… செவிலியர் அவனின் பதட்டத்தைக் குறைக்கும் பொருட்டு ஊசி செலுத்தியதால்…
அதன் பின் சத்யாவும்… அர்ஜூனும்… உடனடியாக விக்கிக்கு அழைத்து… குழந்தைகள் இருவரையும் ரிஷி பார்க்க விரும்புவதாகச் சொல்லி… அவனின் அறுவைச்சிகிச்சைக்கு முன் குழந்தைகளைப் பார்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்யச் சொல்லியிருந்தனர்…
---
ரிஷி அம்பகம் மருத்துவமனை வந்து சேர்ந்த போது மருத்துவமனையின் வாசலில் ரிஷிக்காக… அனைவரும் காத்திருந்தனர்…. ரிஷியும் அங்கு வந்து சேர்ந்த போது மீண்டும் மயக்கம் தெளிந்திருந்தான்…
அனைத்தும் கேள்விப்பட்டு மொத்தக் குடும்பமும் அதிர்ச்சியை மட்டுமே காட்ட முடிந்திருந்தது….. யார் யாருக்கு ஆறுதல் சொல்வது என்று கூடத் தெரியாத சிக்கலான நிலை…
ஆம்புலன்ஸில் இருந்து வெளியே கொண்டு வந்த தன் மகனைப் பார்த்து கதறி அழுத இலட்சுமியிடம்…
“எனக்கு ஒண்ணுமில்லைமா…” என்று தேற்றியவன்… குரலில் இப்போது சுத்தமாக சுரத்தே இல்லை… மகனின் குரலில் இலட்சுமி இன்னும் தேம்பி அழ ஆரம்பித்திருந்தார்…
“எனக்கு என் குழந்தைகளைப் பார்க்கனும்… என்னைப் போக விடுங்க ப்ளீஸ்…” என்று மட்டும் சொன்னான்… கண்மணியைப் பற்றி அவன் யாரிடமும் கேட்கவில்லை… அவளைப் பார்க்க வேண்டும் என்றும் கேட்கவில்லை…
ரிஷி மருத்துவமனைக்குள் கொண்டு செல்லப்பட்டான் உடனடியாக… அதே வேகத்தில்… ரிஷியிடம் அவன் புதல்வனும் கொண்டு வரப்பட்டு காண்பிக்கபட்டிருந்தான்…
தன் மகனைப் பார்த்தான் ரிஷி முதன் முதலாக… அந்த சின்னஞ் சிறு சிசுவை பூங்குவியலாக கைகளில் ஏந்தியும் கொண்டான்… கண்ணீரோடு… சந்தோசமாக தன் மகனைப் பார்த்தபடியே இருந்தவனிடம்
“ரிஷி… பாப்பாவை அப்புறம் வந்து பார்த்துக்கலாம்… கண்மணியைப் பார்த்துட்டு ஆபரேஷன் தியேட்டர்க்கு போகலாம்” நட்ராஜ் ரிஷியிடம் தயங்கிச் சொல்ல
“எனக்கு என் பொண்ணைப் பார்க்கனும்…. காட்டுவீங்களா இல்லையா…” ரிஷியின் குரல் அந்த அறை முழுவதும் உச்சஸ்தாயில் ஒலிக்க…
“அண்ணா… பாப்பாவைப் பார்த்தால் உன்னால தாங்க முடியாதுண்ணா… வேண்டாம்ணா…” ரிதன்யா சொன்ன போதே… ரிஷி கையில் இருந்த டியூப்களை எல்லாம் கழட்ட ஆரம்பித்திருக்க… இலட்சுமி இப்போது…
”டேய் ஏண்டா இப்படி இருக்க… ஐயோ அவனை விடுங்க… அவன் அவன்புள்ளைய பார்க்கட்டும்… ஸ்ட்ரெச்சர்ல இருந்தபடியே அவன் போய்ப் பார்க்கட்டும் விடுங்க…” என்று இலட்சுமி கெஞ்ச ஆரம்பித்திருக்க… வேறு வழியின்றி ரிஷி அவன் மகள் இருந்த அறைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தான்…
கண்மணி ரிஷியின் மகள்… 28 வார சிசு..… அந்தக் குழந்தையின் முக அமைப்பு கூட சீராக இல்லை… அந்தக் குழந்தையின் உடல் மொத்தமும் ஊசிகளால் சூழப்பட்டிருக்க… ரிஷி மொத்தமாக நிலைகுலைந்த தருணம் அந்தத் தருணம்… அவன் அடி வாங்கிய போது கூட… கத்தியால் குத்தப்பட்ட போது கூட வலியைப் பொறுத்துக் கொண்டவன்… தன் மகளின் நிலையைக் காணவே முடியவில்லை… இதயமே வெடித்தது போல இருக்க
“டேய்… என் பொண்ணை என்னடா பண்ணி வச்சுருக்கீங்க… உடம்பு முழுதும் இப்படி குத்தி வச்சுருக்கீங்க…” ரிஷி அவனையுமறியாமல் எழுந்தவனாக கதற ஆரம்பித்திருந்தவனை… கட்டுப்படுத்த முடியாமல் அனைவரும் திணற…
“ரிஷி… பாப்பாக்கு ஏகப்பட்ட பிராப்ளம்… எதைச் சரிபண்றது… எதுக்கு முதல்ல ட்ரீட்மெண்ட் பண்றதுன்னு ஒரே குழப்பமா இருக்கு… எல்லோரும் கஷ்டம்னு சொல்றாங்கடா… கண்மணிகிட்ட கூட சொல்லலைடா… நடக்கிறது நடக்கட்டும்… முதல்ல உன்னைப் பார்ப்போம்டா… வா போகலாம்” விக்கி அவனிடம் சொல்லிக் கொண்டிருந்த போதே…
“எனக்கு என்னடா… என் புள்ளை அங்க துடிச்சுட்டு இருக்கு… எனக்கு ட்ரீட்மெண்ட் முக்கியமா… என் புள்ளைக்கு ஏதாவது ஆச்சு… அவ எங்க இருக்கா… அவகிட்ட கூட்டிட்டு போங்கடா… ஒரு புள்ளை ஒரு புள்ளைனு சொல்லியே என் புள்ளையை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து நிறுத்திட்டாளே…” ரிஷியின் கோபம் ஆவேசம் எல்லாம் கண்மணியிடம் பாய்ந்திருக்க
நட்ராஜ் வேகமாக
“ரிஷி பதட்டப்படாதப்பா… கண்மணி… உன் பையன்… அவங்களாவது நமக்கு நல்லபடியா கிடைச்சாங்களே… நாம இப்படித்தான் தேத்திக்கனும்… “
அவ்வளவுதான் ரிஷி நட்ராஜைக் கொத்தாகப் பிடித்திருந்தான்…
“என்ன மனசைத் தேத்திக்கனும்மா… என் பொண்ணு… என் பொண்ணு… எப்படி கிடக்கா பார்த்தீங்கதானே… உனக்கென்னயா தெரியும்… பொண்ணு பாசத்தைப் பற்றி… பிறந்த குழந்தையைக் கூடப் பார்க்காமல் ஓடிப் போனவன் தானே நீ… நீ எனக்கு ஆறுதல் சொல்றியா… உனக்குத் அந்தத் தகுதி இருக்கா… போனா போகுதுன்னு நம்பர் கணக்கு பார்க்கச் சொல்ற… என் இரத்தம்டா… உனக்கு அதெல்லாம் துடிக்குமா என்ன… பேச வந்துட்டான்… தேத்திக்கனுமாம் நான்…” ரிஷி அவனின் கட்டுப்பாடெல்லாம் இழந்தவனாகி இருந்தான்… நட்ராஜையே மரியாதை இல்லாமல் கண்டபடி பேச ஆரம்பித்திருக்க…
ரிஷியின் வார்த்தைகளில் மொத்த கூட்டமும் உறைந்து நின்றிருக்க…
“இங்க பாரு…. எனக்கு என் பொண்ணு மட்டும் உயிரோட வரலை… உன் பொண்ணுக்கு இருக்கு அதுக்கப்புறம்… சொல்லி வை அவகிட்ட… அவ எங்க இருக்கா… அவ… இன்னைக்கு இருக்கு அவளுக்கு… எல்லாத்துக்கும் அவதான் காரணம்…” ரிஷி ஆக்ரோஷமாக பேசியபோதே… அவன் வயிற்றில் இருந்து இரத்தம் அதிகமாக கசிய ஆரம்பித்திருக்க…
“அவரைப் பிடிங்க… அவர் எமோஷனல் ஆகுறது ரொம்ப ரிஸ்க் சார்… ஆன்சைட்டி…. டிப்ரஸன்… ஸ்ட்ரெஸ்… பயம் எல்லாம் அவரை அலைகழிக்க ஆரம்பிக்குது… இதை இப்படியே விடக் கூடாது சார்…. மேடமும் இதே நிலைமைலதான் இருக்காங்க… அவங்க அவங்களையே ப்ளேம் பண்ணிட்டு இருந்தாங்க… இவர் இப்படி… ” மருத்துவர் கவலையோடு நாராயணனிடமும்… அர்ஜூனிடம் சொல்ல… ரிஷியை அனைவரும் பிடித்துக் கொள்ள… அவனுக்கு மீண்டும் ஊசி மூல மயக்க மருந்து செலுத்தப்பட்டிருக்க
“சொல்லி வைங்க அவகிட்ட… என் பொண்ணுக்கு ஏதாவது ஆச்சு… அவ முகத்துல நான் முழிக்கவே மாட்டேன்னு…” ரிஷி மயங்கிச் சரிந்திருக்க… உடனடியாக அறுவைச்சிகிச்சை அறைக்கும் மாற்றப்பட்டிருந்தான்….
”ஏற்கனவே பலம் இழந்த வந்தவரை… இப்படி பேச வைக்கனுமா… ரிஸ்க் இன்னும்தான் ஜாஸ்தி ஆகும்…” மருத்துவக் குழு… சலசலத்தபடி ரிஷியின் அறுவைச் சிகிச்சை அறைக்குள் சென்றனர்…
கண்மணிக்கு ஒருபுறம் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு மயங்கி இருக்க…. ரிஷிக்கு ஒருபுறம் அறுவைச்சிகிச்சை நடந்து கொண்டிருந்தது…
ரிஷிக்கு சிகிச்சை அளிப்பது… பெரிய சவாலாக இல்லை மருத்துவக் குழுவுக்கு… அர்ஜூன் வேறு அவனுக்குத் தேவையான இரத்தத்தைக் கொடுக்க… கூடவே நட்ராஜும் இரத்தம் கொடுத்திருக்க… ரிஷியின் உயிருக்கு ஆபத்து என்ற நிலையை எப்போதோ கடந்திருக்க
மொத்த குடும்பத்தின் கவனமும் ரிஷி-கண்மணியின் பெண் குழந்தையிடம் மட்டுமே இருந்தது…
ஒருபுறம் “கண்மணிக்கு குழந்தைக்கு ஆபத்து என்பது பற்றி சொல்லப்படவில்லை…”
இன்னொரு புறம் “ரிஷி வேறு கோபமாகச் சென்றிருக்கின்றான்…”
’அந்தக் குழந்தைக்கு ஏதாவதென்றால் கண்மணியையே ஒதுக்கி வைத்து விடுவேன் என்று வேறு சொல்லிவிட்டுச் சென்றிருக்கின்றான்…’
மொத்த குடும்பமும் மீண்டும் கலவரத்தின் மத்தியில் நின்றிருந்தனர்…
ஆக மொத்தம்… அன்று கண்மணி குழந்தையாக இருந்த போது… மனைவி இறந்து விட்டாள் என நட்ராஜ் கணவனாக மட்டுமே யோசித்து அவளை ஒதுக்கி வைத்தார்…..
இன்று தன் குழந்தைக்கு ஆபத்து என… ரிஷி தந்தையாக மட்டுமே யோசித்து தன் மனைவியை ஒதுக்கி வைக்கப் போகிறானா???…
கண்மணியின் நிலை அன்றும் இன்றும் ஒரே நிலைதானா… இந்த ஒதுக்கப்பட்ட நிலைதானா அவளுக்கு… கண்மணிக்கான ரிஷியின் காதல் என்னானது… காத்திருப்போம்…
---
Nice
Kanmani's 'nilai'..perfectly structured words jii.. Rk never leave her RK always R💞K ...Much Waiting jii.. Travel with R💞K such a great feel.. Really we miss them.. Give two more ud's before epilogue jii..
Really nice story but rombha rombha illuthute porenga .
Indha
Nice
Super
என்னவோரு கடுமையான வார்த்தை ரிஷியிடம்…குழந்தைகள் பிறந்த போதும் கண்மணிக்கு ரிஷி தான் முதன்மை…ஆனால் ரிஷிக்கு…கண்மணியிடம் அடி நிச்சயம்😀
Both Rishi and Kanmani are safe , Happy to read.. Waiting for next episode..Why Rishi is behaving like this, கண்மணி ஒரு குழந்தை என்று மறைத்து சொன்னதால் வந்த கோபமா?. Connecting Kanmani faith in god, Rishi's prayer, Arjun's understanding of Kanmani and Rishi bonding - very good narratives and writing. Paavam entire family in between these two.
Rishiyala appadi irukka mudiyadu, kandippa nalla kanavana ,nalla appava iruppan.
ரிஷி கண்மணி காப்பாத்துன மாதிரி ரிஷி பெண் குழத்தையும் காப்பாத்திடுவிங்கன்னு நம்பறோம்.
Rishiyala natraj pola kandipa iruka mudiyathu. Kanmaniya matum kaapathuna podhumnu irundhavan ipo kanmaniku onnum ilanu therinjathum kulandhaiyoda critical position nenachu emotional ah pesuran.. Rishi will soon realise that his daughter's sufferings r not bcoz of kanmani..
Emotional epi
ஏதோ குழந்தையை அந்த கோலத்தில் பார்த்ததால் ரிஷி அப்படி பேசிட்டான்.அவனாவது கண்மணியே விட்டு கொடுப்பதாவது😁
ஆனால் கண்மணி தான் ரிஷியை ரொம்பவும் கேவலப்படுத்தி,அவமானப்படுத்தி ரொம்பவும் அவனை வேதனை படுத்திவிட்டா.அவளின் காரணங்களை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியல.
Engala tension avey vachirupiya ma ne...po
Rishiyum kanmaniya ipadi panrana last
Nice and emotional ud sis.... Rendu per meetings laga waiting sis♥️
Rishi apadi ellam Vida mattan kanmaniya....
Very touching episode full of emotions