ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
ஃபைனல் பார்ட் 2 போட்டுட்டுட்டேன்.... ரிஷியோட போர்ஷன்... ரிஷி மேல ஏன் இந்தக் கொலை வெறின்னு திட்டாதீங்க... violence part... ஆக்சுவலா... சண்டை... வன்முறை... இதெல்லாம் வந்தா காத தூரம் ஓட்ற ஆளு நான்...
ஆனால் எழுதித்தான் ஆக வேண்டிய கட்டாயம்...
கண்மணி பார்ட் கூட ரொம்ப மைல்டா எழுதிட்டேன்... ரிஷி பார்ட்... வழக்கம் போல நம்ம ஹீரோ ரோல்னா எல்லாம் பட்டுத்தானே ஆகனும்... ரிஷி மட்டும் விதி விலக்கா என்ன...
ரிஷி ரிஷி மட்டுமே இந்த பார்ட்... கண்மணியை இதுல எதிர்பார்க்காதீங்க... கதை முடியப் போகுது கண்மணி ரிஷி இன்னுமே தனித்தனியா சீன்ஸ்தான்... அவங்க காம்போ வரவே இல்லைனு கொஞ்சம் ஃபீல் பண்றீங்க... ரிஷியோட கோபம்,வருத்தம்... இன்னும் கண்மணிக்கிட்ட காமிக்கவே இல்லை... கண்மணியும் ரிஷிகிட்ட அவ உணர்வுகளைக் கொட்டல... இதெல்லாம் வரும்... ஃபைனல் இன்னும் இருக்கு... அண்ட் ஆஃப்டெர் 5 இயர் லீப் எபிலாக் இருக்கு... சோ ஃபிங்கெர்ஸ் கிராஸ்ட் 🤞...
அண்ட் ஹெவி எமோஷனல் பார்ட்தான்.. ரிஷியை பிடிக்கிறவங்க எல்லோருக்கும் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும்... சாரி ஃப்ரெண்ட்ஸ்... திட்றவங்க என்னைக் கொஞ்சம் பார்த்து திட்டுங்க...
கமெண்ட்ஸ்... லைக் போட்ட அனைவருக்கும் நன்றிகள்... நன்றிகள்...
உங்க ஆதரவு இல்லைனா... சத்தியமா இவ்ளோ பெரிய கதைக்கு சாத்தியமே இல்லை... ரொம்ப ரொம்ப கடமைப்பட்டிருக்கின்றேன்.... உங்க அனைவரோட பொறுமைக்கும்.... ஆதரவுக்கும்... இதற்கெல்லாம் நான் சொல்ல முடிந்த ஒரே வார்த்தை நன்றி மட்டுமே... தேங்க் யூ சோ மச் ஃப்ரெண்ட்ஸ்...
நன்றி
பிரவீணா..
அத்தியாயம் 105-2(final)
/*அன்பு கொண்ட கண்களும் ஆசை கொண்ட நெஞ்சமும்
ஆணை இட்டு மாறுமோ பெண்மை தாங்குமோ
ராஜை மங்கை கண்களே என்றும் என்னை மொய்ப்பதோ
வாடும் ஏழை இங்கு ஓர் பாவி அல்லவோ
எதனாலும் மறையாது பிரேமையும்
எரித்தாலும் மரித்தாலும் விலகாத பாசமோ
கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ
காதல் என்ன காற்றிலே குலைந்து போகும் மேகமோ
அம்மாடி நான் ஏங்கவோ ஓ நீ வா வா
ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஏழை காதல் வாழுமோ இருளும் ஒளியும் சேருமோ
நீயோர் ஓரம் நான் ஓர் ஓரம்
கானல் நீரால் தாகம் தீராது*/
கண்மணி பிரசவ வார்டுக்கு சென்ற அதே நேரம் ரிஷியின் நிலை…
எவரிடமும் பேசாமல்… மருத்துவமனையை விட்டு வெளியே வந்து அந்த வளாகத்தில் நின்றிருந்த ரிஷியின் இதயம் கல்லை விட கனத்த நிலையில் இருக்க… அவனுக்கு ஆறுதல் சொல்ல ஒரு ஆதாரமும் இல்லாத நிலை… எதிர்காலம் என்ன வைத்திருக்கிறது அவனுக்கு… அவன் நம்பிக்கை வழி செல்வதா… நடக்கப்போவதை ஏற்றுக் கொள்ளும் வழி செல்வதா… எந்த வழி செல்வது
எதிர்கால வாழ்க்கையின் இரு வேறு பாதைகள் பிரியும் நிகழ்கால வாழ்க்கையின் சந்திப்பில் தடுமாறி நின்றிருந்தான் ரிஷி
இருளின் மத்தியில் அவனும் அவன் கண்மணியும்… அவளைக் காப்பாற்ற சிறு அளவுக்கு ஏதேனும் ஒரு வெளிச்சப் புள்ளி கிடைத்தால் கூடப் போதும்… எப்படியாவது காப்பாற்றி விடுவான் தன் மனைவியை… ஆனால் அவன் கண்களுக்கு இருள் மட்டுமே நீள்கிறதே…… அவளைக் காப்பாற்றி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஆதாரமாக ஒன்றுமே கிடைக்கவில்லையே…
’இன்னும் சற்று நேரத்தில் என் உலகம் தலைகீழாக மாறப் போகிறதா… என் கண்மணி… கண்மணியின் கம்பீரமான குரல்… அவளின் ஆளுமை… அவளின் பாசம்... இவனுக்கான அவள் காதல்… இதை எல்லாம் விட இவனை அத்தனை பேர் மத்தியிலும்... அண்ணாந்து பார்க்க வைக்குமாறு சிகரத்தில் தூக்கி வைத்த அவள் காதல்… தான் அவள் இதய சிம்மாசத்தின் கம்பீரமாக அமர்ந்திருந்தது அனைத்தும் காற்றோடு காற்றாக கலக்கப் போகிறதா… ’
’நான் அனாதை ஆகி விட்டேனா…’ அவன் தந்தை இறந்த போது கூட இப்படி அவன் நினைக்கவில்லை… நினைத்த போதே அவனுக்குள் ஆவேசம் வந்திருக்க…
”என்னை விட்டு வெகு தூரமாகச் செல்லப் போகிறாளா… அன்று என்னை விட்டு ஓடிச் சென்றவளை விட்டு விட்டேன் நான் சிறு பிள்ளை என்பதால்… இன்றும் அதே நிலைதானா எனக்கு…”
”விட்டு விட்டேனா அவளை… அன்று போல இன்றும் அவளை என்னோடு கூட்டிச் செல்லும் பாக்கியம் இல்லாதவனாக நிர்கதியாக நிற்கிறேனா…”
உனக்கு இதுதான் நிலை… அவள் உன்னோடு உன் வழியில் எப்போதும் தொடர மாட்டாள்… என்பதை இன்று உணரத்தான்… அன்றே… அந்த இளம் பிராயத்திலேயே அவளைச் சந்திக்க வைத்ததா விதி….
“நான் உன்னோடு சேர்ந்தது விதி… நீயும் நானும் சேர்ந்து வாழ்வதென்பது எழுதி வைக்கப்பட்ட விதி…” கண்மணி அவனிடம் அடிக்கடி சொல்லும் வார்த்தைகளை சட்டென்று அவன் மனம் நினைத்த போதே அவன் கால்கள் வேலை நிறுத்தம் செய்து மருத்துவமனையை நோக்கி திரும்பியதுதான்…. அவன் பார்வை அந்த மருத்துவமனையில் அவள் இருந்த திசையை நோக்கி ஏக்கமாக உயர்ந்ததுதான்…
வேகமாக அலைபேசியை எடுத்தான்… தனக்காக அவள் ஏதாவது செய்தி அனுப்பியிருக்காளா… நப்பாசையோடு பார்த்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது…
“அப்பா இன்னைக்கு டிஸ்சார்ஜ்… சொல்லச் சொன்னீங்க அதுனால சொன்னேன்”
“நீங்க ஃப்ரியா இருந்தா வர முடியுமா…”
“வருகிற ஐடியா இருந்தால்… சொல்லுங்க…”
“நீங்க வந்த பின்னால நான் ஹாஸ்பிட்டல்ல இருந்து கிளம்புறேன்…”
அவள் அனுப்பிய முதல் குறுந்தகவல் மனதில் நிழலாடியது… அன்று அவன் கல்லூரியில் இருக்கும் போது அவள் அனுப்பிய குறுந்தகவலை விட்டேற்றியாகப் பார்த்த ஞாபகம் வந்தது… அன்று அவளின் குறுந்தகவலை அலட்சியமாகப் பார்த்து கடமைக்காக மருத்துவமனைக்கு வந்து நின்ற ரிஷி…. இன்று அவளின் ஒரு சிறு வார்த்தையாவது தன் அலைபேசி தாங்கி இருக்குமா… மருத்துவமனை வாசலில் நின்று தனது அலைபேசியில் பைத்தியக்காரனாக தேடினான்…
அவன் உடல் இறுகியது… அனைத்தும் அவனுக்குள் சுழன்று நின்றது ஒரு புள்ளியில்... அதன் பின் அவன் சுற்றி இருந்த உலகம் சுழன்றாலும்… அவன் மனதிலோ வெறுமையின் உச்சம்…
அடுத்த நொடி அலைபேசியைத் தூக்கி தூர எறிந்திருந்தான்… அவனின் நடையின் வேகம் கூடியது…
எங்கு செல்கிறான்… எங்கு செல்லப் போகிறான் என்பதெல்லாம் அவனுக்கு தெரியவில்லை… ஆனால் அவன் காதில் கண்மணியைப் பற்றிய தகவல் இனி விழவே கூடாது… அந்த விளிம்பு இந்த உலகத்தில் எங்கிருக்கின்றதோ… அந்த இடம் நோக்கி போகத் துணிந்து விட்டான் கண்மணியின் ரிஷி… அவனை நிறுத்தும் சக்தி அவனுக்கே இல்லை…. அப்போது
“ஆர் கே.. நில்லுங்க ரிஷி நில்லு….” சத்தமாக ஒரு குரல் கேட்க… மிகவும் பரிச்சையமான குரல் தான்…
அவன் தள்ளாடும் சமயம் எல்லாம் தாங்கிப் பிடிக்கும் குரல்… இதோ இப்போதும்… இவனுக்காக ஓடோடி வருகின்றது… நின்றான் ரிஷி… ஆனால் இனி அந்த தோள் தேவையில்லை… ஜடமாகிப் போகப் போகிறவனுக்கு…. இனி ஆறுதல் எதற்கு… வலி வந்தால் தானே மருந்து தேவை… மரத்துப் போனவனாக மாறிப் போனவனுக்கு இனி என்ன உணர்ச்சி…
சத்யாவின் அழைப்பினைக் கேட்டும்… நிற்காமல் ரிஷி தன் வழியைத் தொடர… வேகமாக ஓடி வந்தான் சத்யா…
”எங்க போறிங்க… முதல்ல நில்லுங்க…” என்று ரிஷியின் கைப்பிடித்து நிறுத்திய சத்யாவுக்கும் மூச்சு வாங்கியது… ஆனாலும் தன்னைக் கண்டுகொள்ளாமல்… ரிஷியை நிறுத்துவதிலேயே குறியாக இருந்தான் சத்யா...
“ரிஷி… மேடம் பக்கத்தில இப்போ நீங்க இருக்கனும்... ஆர் கே… உங்க ரெஸ்பான்சிபிலிட்டி இது… அவங்க மேல என்ன கோபம் இருந்தாலும்… இல்லை அவங்க உங்க மேலக் கோபப்படட்டாலும் இந்த நேரத்துல இப்படி நடந்துக்கிறதுதான் உங்க மெச்சுரிட்டியா”
“எவ்வளவோ இக்கட்டான நேரத்தில் எல்லாம் நீங்க தைரியமா இருந்து சமாளிச்சு வந்தீங்க… இதையும் சமாளிங்க…”
சத்யா பேசிய விதத்திலேயே சத்யாவுக்கும் கண்மணியைப் பற்றிய விசயம் எல்லாம் தெரிந்திருக்கின்றது என ரிஷிக்கும் புரிய… தான் சொல்லவில்லை... பிறகு அந்தத் தகவல் யார் மூலம் அவனுக்கு கிடைத்திரும் என்பதும் புரிய…. கோபத்தில் சட்டென்று சத்யாவின் சட்டையை கொத்தாகப் பற்றியிருந்தான் ரிஷி
“என்ன அந்த அர்ஜூனுக்கு ஆளா மாறிட்டியா என்ன… “ சொன்னவன் அதே வேகத்தில் சத்யாவைத் தள்ளி விட்டவனாக…
”போ.. எனக்கு அவளே இல்லாமல் போகப் போறா.... இனி எவன் என் கூட இருந்தால் என்ன… இல்லைனா என்னா… துரோகி…. என்னைப் பார்த்துக்கச் சொல்லி அவன் அனுப்புனா வந்துருவியா…”
கோபமும்… துக்கமும்… பச்சாதபமும்… ஆற்றாமையும் ரிஷியை… அவன் குணத்தை எல்லாம் மாற்றி இருந்தது…
“என் பின்னாடி வந்த கொன்னுருவேன்… இல்லை என்னையே கொன்னுக்குவேன்…. அதோ அந்த பஸ் முன்னால போய் நின்றுவேன்… போ… நான் இல்லேனா என்ன… உனக்குத்தான் இப்போ அந்த அர்ஜூன் இருக்கான்ல… நல்லவன் தான்… அவனையே புடிச்சிக்கோ… இனி ரிஷி தேவையில்லைதானே… ரிஷி இடத்துல இனி அர்ஜூன்னு முடிவு பண்ணிட்டேல்ல ”
உரத்த குரலில் சொன்னவன்… அதே நேரம்.. தள்ளி நின்றிருந்த சத்யாவின் சட்டைக் கழுத்துப்பட்டையை இழுத்து மீண்டும் தன்னருகே கொண்டு வந்தவனாக… அவனைப் பிடித்து இறுக்க… அதே நேரம் மருத்துவ வளாகத்தில் அங்கும் இங்குமாக நின்றிருந்த மக்கள் எல்லாம் ரிஷியின் ஆக்ரோஷத்தைக் கண்டு… அந்த இடத்தில் ஒன்று கூடினர்…
சத்யா திணறியபடி… ரிஷியிடமிருந்து விலக முயன்று கொண்டிருந்ததைப் பார்த்து… அனைவரும் சத்யாவை ரிஷியிடமிருந்து விலக்கவும் ஆரம்பித்திருந்தனர்…
‘சார்… என்ன சார்… பைத்தியமா… உங்களுக்குத் தெரிஞ்சவரா…” சத்யாவை ரிஷியிடமிருந்து விலக்கியபடியே… சத்யாவிடம் அங்கிருந்த ஒருவன் கேட்க
சத்யா பதில் கூறும் முன்னேயே…
”யாரு… நா… நான் பைத்தியக்காரனா…” ரிஷி வேகமாக சத்யாவை விட்டவனாக ... அங்கு நின்றிருந்த இன்னொருவனை பிடித்து இழுத்தவனாக…
“என்னைப் பார்த்தால் பைத்தியம் மாதிரி தெரியுதா…” கேட்ட ரிஷியைப் பார்த்து அவன் பயந்து விழிக்க
”சொல்லு… என்னைப் பார்த்தால் பைத்தியம் மாதிரி தெரியுதா… இவன் சொல்றானே… பைத்தியக்காரன்னு… என்னைப் பார்த்தால் பைத்தியக்காரன் மாதிரி தெரியுதா… சொல்லுடா…”
அவன் பயத்தில் பதில் சொல்லாமல் இருக்க…
சட்டென்று ரிஷி… தான் பிடித்து வைத்திருந்தவனின் தலை முடியைக் கலைத்தவன்…
“பைத்தியம்னா இப்படி இருக்கனும்…”
சொன்ன அதே வேகத்தில் அவனது சட்டையைக் ஆக்ரோஷமாக கிழித்தவன்…
“பைத்தியம்னா இப்படிக் கிழிச்சுப் போட்டுத் திரியனும்…”
அடுத்து வேகமாக குனிந்து கீழே தரையில் கிடந்த மணலை அள்ளி அவன் முகத்தில் பூசி அழுக்காக்கியவன்…
“இப்படி அழுக்கா இருக்கனும்…”
”சொல்லு… இப்போ சொல்லு… நான் பைத்தியமா… உன்னை மாதிரி தலை கலஞ்சு… ட்ரெஸ் கிழிஞ்சு அழுக்கா… இருக்கேனா…”
“சொல்லுடா..” உலுக்கியவனை…
“இல்ல சார்… நீங்க பைத்தியமில்லை….” கலவர முகத்துடன் ரிஷியிடம் மாட்டிக் கொண்டவன் நடுக்கத்துடன் சொல்ல… சத்யா கண்களில் கண்ணீர் வழிய…
“ரிஷி… ஏன் ரிஷி இப்படி பண்ற… கண்மணிக்கு ஒண்ணும் ஆகாது… நீ இப்படிலாம் நடக்கிறதைப் பார்த்தால் மேடம் தாங்குவாங்களா…”
சத்யாவை ஒரு நிமிடம் பார்த்தவன்… சத்யாவிடம் பேசாமல்… அவனிடம் பிடிபட்டிருந்தவனிடம் மீண்டும் பேச ஆரம்பித்தான் ரிஷி
“என்னது பைத்தியமில்லையா… ”
“நான் பைத்தியம் தான்… அவர் சொன்னார்ல… கண்மணி கண்மணினு ஒருத்தி… அவ என்னை நம்ப வச்சு ஏமாத்திட்டாடா…. என் கூட வாழ்நாள் முழுக்க இருக்கேன்னு சொல்லி இப்போ என்னை பாதியிலேயே விட்டுட்டுப் போகப் போறா… நீ சிரிச்சுகிட்டே இருக்கனும்னு சொல்லிட்டு… என்னை வாழ்நாள் முழுக்க அழ வச்சுட்டு போகப் போறா… என் உயிர் உன்கிட்டதான் இருக்குனு சொல்லிட்டு… அதை என்கிட்ட இருந்து கேட்காமலேயே என் அனுமதி இல்லாமலேயே எடுத்துட்டு போகப் போறா… “
“இப்போ சொல்லு நான் பைத்தியம் தானே… பைத்தியம் தானே…”
“என்னைப் பைத்தியம்னு சொல்லுடா” ரிஷி வெறிகொண்டவனாக அவனைப் பிடித்து உலுக்க…
”லவ் ஃபெயிலியர் போல… அதுல புத்தி பேதலிச்சிருச்சு போல…” விட்டுட்டு வாங்க…
இப்போது கூட்டம் கலைந்திருக்க… ரிஷியும் இப்போது விலகி நடக்க… வேகமாக சத்யா ரிஷியின் பின் ஓட… சத்யா அவன் பின் வருவதைக் கண்ட ரிஷியோ சாலையின் மத்தியில் நின்றிருந்தான்…
“ரிஷி... நான் வரலை ரிஷி… ரிஷி…. ப்ளீஸ் ரிஷி… இப்படிலாம் பண்ணாத ரிஷி.. ரிஷி இங்க பாரு ரிஷி… நான் இங்கேயாதான் நிற்கிறேன்… ரிஷி வந்துரு ரிஷி…” சத்யா அதிர்ச்சியோடு அடுத்த அடி எடுத்து வைக்க பயப்பட்டு நின்றிருந்தவனாக ரிஷியிடம் கெஞ்ச ஆரம்பித்திருக்க…
அதே நேரம் ஒரு பேருந்து ரிஷி நின்றிருந்த சாலையில் அவனை நோக்கி வர….
“ரிஷி…” அலறலோடு கத்தியபடி சத்யா கண்களை மூடினான்... அடுத்த நொடியே பயத்தோடு கண்களை திறந்தும் இருந்தான்... நல்லவேளை பயந்தது போல அங்கு அசம்பாவிதம் எல்லாம் நடக்க வில்லை… மாறாக… ரிஷி அந்த இடத்தில் இல்லை…. சத்யா கண்கள் மூடி கண்கள் திறந்த வேளையில் ரிஷி அங்கிருந்து மாயமாக மறைந்திருந்தான்….
“ரிஷி… ஆர் கே…” சத்யாவின் கதறல்கள் எல்லாம் அந்த சாலையின் எட்டு திசைகளிலும் மட்டுமே சிதறி இருந்தன…
படபடப்புடன் சத்யா… வேகமாக ரிஷியின் அலைபேசிக்கு அழைக்க… அது அழைப்பு மணியை மட்டுமே நீட்டித்துக் கொண்டிருக்க…
“கண்மணி கண்மணி மின்னிடும் மின்மினி...”
“என் விழி பூத்தது உன்னாலே...”
பாடல் சத்தியாவின் வெகு சமீபத்தில் ஒலித்திருக்க...
அப்போது…. ஒருவன்
”சார்… நீங்களும் ஒருத்தரும் சண்டை போட்டுட்டு இருந்தீங்களே… அவரோடது சார்… ஸ்க்ரீன் சேவர்ல அவர் ஃபோட்டோவும் அந்தக்கா ஃபோட்டோவும் இருக்கு சார்… அதைப் பார்த்துதான் எடுத்துட்டு வந்தேன்… இந்தாங்க சார்… ஏன் சார் அவருக்கு என்னாச்சு… பைத்தியமாகிட்டாரா சார்…… அந்தக்கா பேர் கண்மணினுதானே சொன்னாரு…… ரிங் டோன் கூட கண்மணின்ற பேர்ல தான் சார் இருக்கு… ரெண்டு பேரும் ஜோடியா சூப்பரா இருக்காங்க… பாவம் சார் அந்தக்கா செத்து போயிட்டாங்களா சார்… என்ன நடந்துச்சு சார்” ரிஷியின் அலைபேசியை கொண்டு வந்து கொடுத்தபடியே சத்யாவிடம் ரிஷி-கண்மணி கதை கேட்க…
சத்யா கதை சொல்லும் நிலையிலா இருக்கின்றான்… அவனின் பேச்சை எல்லாம் கண்டு கொள்ளாமல்… அவனிடமிருந்த அலைபேசியை பறித்தபடி.. ரிஷியைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சி்யில் வேகமாக ஓடினான்…
ஆனால் எந்த திசையில் போவது… தலை சுற்றியது சத்யாவுக்கு…. உள்ளுக்குள் பயம் வேறு… ரிஷி இருக்கும் நிலையில் அவனை மீண்டும் பார்க்கும் போது எந்த நிலையில் பார்ப்போமோ என்று…
ரிஷியின் தந்தை இறந்த சமயத்தின் போது…. ஹர்ஷித் பற்றி கேள்விப்பட்டு அதனால தனசேகர் மேல் கோபம் கொண்ட போது… ஹர்ஷித்தின் தாய் நேத்ரா ரிஷியிடம் ஹர்ஷித்தை ஒப்படைத்த போது… என ரிஷியின் அனைத்து இக்கட்டான சமயங்களிலும் ரிஷியை சரிப்படுத்தி… நிலைப்படுத்தி அவனுக்கு அறிவுரைகள் கூறி தோளனைத்து தன்னோடே அழைத்து வந்திருந்த சத்யா இன்று ரிஷியை தொலைத்திருந்தான்…
---
கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் கடந்திருக்கும்…
ரிஷி கால் போன போக்கில் நடந்து வந்திருந்தான்… அவன் எங்கிருக்கிறான்… எங்கு வந்து கொண்டிருக்கிறான்…. எங்கு போகிறான்… அவனுக்கே தெரியவில்லை.. ஏதோ ஒரு வாகனத்தில் ஏறி எங்கோ இறங்கி… நடந்து வந்து கொண்டிருந்தான் ரிஷி…
“தனக்கு என்ன ஆயிற்று… தான் ஏன் இப்படி நடக்கிறோம்…” ரிஷிக்கு எந்த சிந்தனையுமே இல்லை… அதைப் பற்றி யோசிக்கும் திராணியும் இல்லை…. ரிஷி தன்னிலை மறந்து` நடந்து வந்து கொண்டிருந்த போதே… அவன் கையை யாரோ இழுக்க… சட்டென்று நிமிர்ந்து பார்க்க…
யாரோ ஒரு வயதான பெண்…
”தம்பி…. ஞாபகம் இருக்கா என்னை” ரிஷி குழப்பமாகப் பார்க்க…
“கண்ணு… மணிப்பாப்பாவோட புருஷன் தானே…. நான் வாசுவோட அம்மா… அன்னைக்கு கூட பார்த்தோமே… என் புள்ளைய மறுபடியும் காணோம்பா…” தேம்பியவராக ரிஷியின் முகத்தைப் பார்க்க…. ரிஷி பதில் சொல்லாமல்… அதைவிட அவர் யாரென்றும் புரியாமல் அப்படியே நிற்க
”நம்ம மணி சொன்ன இடத்தில என் மகனைச் சேர்த்து இப்போ ஓரளவு நல்லா இருந்தான்ப்பா… ஆனால் இன்னைக்கு வீட்ல இல்லப்பா… என் புள்ளை ஓரளவு நல்லாகிட்டான்னு சந்தோசமா இருக்கும் போது இப்படி ஆகிருச்சுப்பா… படுக்கைல படுத்திருந்தவன் திடீர்னு காணலைப்பா” எனப் புலம்ப ஆரம்பித்திருக்க…
ரிஷி இப்போதும் ஒன்றும் புரியாமல் குழப்பமாகப் பார்த்த போதே வாசு அங்கு வந்திருந்தான்…
”அம்மா… வா போகலாம்… மீனா சொன்னா.. அவ இந்த அம்மனைத்தான் நம்புனாளாம்… அது அவளைக் கைவிடலயாம்… நன்றி சொல்லச் சொன்னா… அதான் வந்தேன்… சரி வா போலாம்…” என்று தன் அன்னையின் கைப்பற்றி சொன்னபடியே…
“யார் இது..” என ரிஷியைப் பார்த்துக் கேட்க
“நம்ம மணி இருக்குதே… அது வீட்டுக்காரர்…” மகன் திரும்பி வந்து விட்டான் என்ற தாயின் சந்தோசம் வாசுவின் தாய் முகத்தில் தாண்டவமாடியது… தன் மகனிடம் ரிஷியை சந்தோசத்துடன் அறிமுகப்படுத்தினார்…
“ஓ…” என்றபடியே தன் அன்னையிடம் திரும்பியவன்
”மணி வீட்டுக்காரனா… அப்போ நம்ம முதலாளி… மருதுலாம் பார்க்கப் போறோமா அம்மா… ”
“ஆனால் மீனா எனக்காக காத்துட்டு இருப்பாளே… டாக்டர்ஸ் சொன்னாங்களே.. அவ நம்ம வீட்ல நம்ம கூடத்தான் இருக்கான்னு… நா எங்க போனாலும் மீனாகிட்ட வந்துரனும்னு… வா வா அவ வீட்ல இருப்பா… நாம அப்புறமா முதலாளியைப் பார்க்கப் போகலாம்”
ரிஷி குழப்பம் சூழ்ந்த எரிச்சலோடு பார்த்தபடி நின்றிருக்க…
”நன்றிப்பா.. நான் வர்றேன்… ஆமாப்பா… என் புள்ளை முழுசா சரியாகலதான் ஆனால் இப்போ எங்களை விட்டு போகலை…. எங்கள தெருத் தெருவா அலைய விடலை… இது போதும்பா… கொஞ்சம் கொஞ்சமா சரி ஆகிருவான்னு நம்பிக்கை வந்துருக்கு எங்களுக்கு இப்போ… எல்லாத்துக்கும் காரணம் மணிதான்… என் புள்ளைய ஓரளவு மீட்டெடுக்க அதுதான் காரணம்… மணிக்கும் எல்லாம் தெரியும்… மணிக் கண்ணை அவங்க தாத்தா வீட்ல பார்த்து நன்றி சொல்லிட்டுத்தான் வந்தேன்… எனக்கு இப்போ மணிக்கண்ணுதான் சாமி தம்பி… இந்த பெத்த மனசு வயிறு குளிர்ந்து சொல்றேன்… நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கனும் தம்பி… பாப்பா முழுகாம இருந்துச்சே… எப்போ பிரசவம்…” எனும் போதே ரிஷியின் கண்கள் கலங்கி விட… வேகமாக கண்களைத் துடைத்த போதே
“ஏன் ’கண்ணு’.. கண்ணு கலங்குற…”
“என் சாமியோட சாமி நீ.. நீ கலங்குறதைப் பார்த்தால் அது தாங்குமா..” என்ற போதே ரிஷி உடைந்திருக்க.. அவன் தன் நிலை கடந்து… வெடிக்கப் போன நேரம்
“யம்மா வா… மீனா வீட்ல காத்துட்டு இருப்பா… ” என்று வாசு தன் தாயின் கையைப் பிடித்தபடி… திரும்பி நடக்கப் போனவன்… என்ன நினைத்தானோ… மீண்டும் ரிஷியிடம் திரும்பியவன்
“நீ போ… நீயும் போ… மணி உனக்காக காத்துட்டு இருப்பா… அவ கோபக்காரி மட்டும் இல்லை பிடிவாதக்காரியும் கூட… ”
வாசுவின் வார்த்தைகளில் ஏனென்று தெரியாமல் ரிஷியின் ஆக்ரோஷம் அனைத்தும் குறைந்தார்போல இருக்க… அவன் கால்கள் தானாகவே ஒரு நிலையில் நின்றிருக்க… அந்த நிமிடத்தில் ரிஷியின் எண்ணங்களும் சீராக ஆரம்பித்திருந்தது…
அந்த அதிகாலை இன்னும் இருள் விலகாத வேளை… அந்தச் சாலையில் இப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இல்லை….
யாரோவாக… யாரோ ரிஷி… யாரோ கண்மணி எனத் தனித்தனியாக இருந்த போது… இருவருமாக தங்களைக் காப்பாற்றி கைப்பிடித்து தப்பி ஓடி வந்த நம்பிக்கை ஏன் இன்று எனக்கில்லை…
அவளை விட்டு விலகி ஏன் வந்தேன்… எது வந்தாலும் அவள் கூடத்தானே இருக்க வேண்டும்… அவள் மட்டுமா என் உலகம்… என் குழந்தைகள்...
உறைந்து நின்றான் ரிஷி.... மீண்டும் கண்மணி… மீண்டும் ஒரு நட்ராஜா… அவனுக்குள் ஒலித்த இந்த கேள்வியில்.... சித்தம் தெளிந்து… நிலை தெரிந்து… நிமிர்ந்து பார்க்க… அங்கோ அம்மன் கோவிலின் கோபுரம்…. இப்போது ரிஷியின் பார்வை மொத்தமும் அங்கிருந்த அம்மனின் கர்ப்பகிரகத்தை நோக்கியே இருக்க… வேகமாக அம்மனை நோக்கி ஓடினான்…
----
”என்ன என்ன பார்க்கிற… உன்கிட்ட கெஞ்சி… உன் கால்ல விழுந்து என் பொண்டாட்டிய என்கிட்ட கொடுன்னு கேட்கப் போறேன்னு நினச்சியா… உன்கிட்ட சவால் விட வந்திருக்கேன்… என் பொண்டாட்டி இருக்காளே அந்த பைத்தியக்காரி உன்னை நம்புவா… இதோ இப்போ போனானே அந்தப் பைத்தியக்காரன் நம்புவான்… ஆனால் நான் உன்னை நம்ப மாட்டேன்… நீ கல்லுன்றதை என்கிட்ட நிருபிச்சிட்டதானே… நேத்து உன்னையும் ஒரு ஆளுன்னு நினச்சு உன்கிட்ட கேட்டேன் தானே… அவளுக்கு வலி வரக் கூடாதுனு வேண்டினேன் தானே… என்ன பண்ணின நீ… ”
வேகமாக புறங்கையால் வழிந்த கண்ணீரைத் துடைத்தவன்
“நான் எதுக்கு அழனும்… நீ என்ன என் கண்மணியை எனக்குத் திருப்பிக் கொடுக்கிறது… நான் போய் அவ கண்முன்னால நின்னால் அவளே என்கிட்ட வருவா… அவளோட வந்து உன் கண்ணு முன்னால நாங்க எங்க குழந்தையோட வந்து நிற்போம்… அன்னைக்கு உனக்கு இருக்கு….”
“ஏய்… சொல்லு… ஏதாவது பேசு… என் கண்மணி என்கிட்ட வந்துருவான்னு சொல்லு…. என் முன்னாடி உனக்குத் தோத்துப் போக ஆசையா… நான் இங்கயிருந்து போறதுக்கு முன்னாடி அவளைக் காப்பாற்றி நான் விட்ட சவால்ல என்னைச் ஜெயிச்சுக் காட்டு பார்க்கலாம்… இல்லை கேவலம் மனுசப்பிறவி என்கிட்ட தோற்கப் போறியா… ”
அம்மனிடம் வேண்டுதல் கூட வைக்கத் தெரியவில்லை ரிஷிக்கு...
அப்போது….
“உன் பொண்டாட்டி திரும்பி உனக்கு கிடைக்கவே மாட்டா… இதுதாண்டா உனக்கு நிலை... நீ பண்ணின பாவத்துக்கெல்லாம் தண்டனை கிடைக்க வேண்டாம்… ” அசரீரி போல ஆண் குரல் ஒன்று அவன் பின்னால் எகத்தாளமாக ஒலித்தது….
அந்த எகத்தாளக் குரலில் ரிஷி வேகமாய்த் திரும்பி பார்க்க… அங்கு நின்றிருந்தது ரஞ்சித்…. இவனால் யமுனாவைக் காதல் செய்ய நடிக்க அனுப்பப்பட்டு… யமுனாவை உண்மையாகக் காதல் செய்த… யமுனாவின் முன்னாள் காதலன் ரஞ்சித்…
அவன் ரிஷியிடம் சொன்ன வார்த்தைகளில் இருந்த கிண்டல் தொணி… அவன் ரிஷியைப் பார்த்த பார்வையில் இல்லை… அதில் வன்மமும் குரோதமும்… கொப்பளித்துக் கொண்டிருந்தது…
ஒரு காலத்தில் யமுனாவிடம் இருந்த அதே வன்மம் இப்போது ரஞ்சித்திடம் இருந்தது… அன்று யமுனா இவனைக் கொலை செய்ய வன்மத்துடன் அழைந்தாள்… அது தெரியாமல் ரிஷி இருந்தான் அன்று… இதோ இன்றும் அதே நிலைதான் ரிஷிக்கு… இந்த அளவுக்கு வன்மத்துடன் கொலை வெறியுடன் ரஞ்சித் சுற்றிக் கொண்டிருப்பான் என்பதை ரிஷி எதிர்பார்க்கவில்லை… அதுவும் இந்த இக்கட்டான நேரத்தில் இப்படி ஒரு விசயத்தை ரிஷி எதிர்பார்க்கவே இல்லை… அதிர்ச்சியுடன் செயலாற்றும் திறனற்று ரிஷி ரஞ்சித்தைப் பார்த்தபடி நிற்க
”என்ன பார்க்கிற… என்னமோ வசனம்லாம் பேசிட்டு இருக்க… பொண்டாட்டி மேல அவ்வளவு லவ்வா…” ரஞ்சித் நக்கலாகக் கேட்டபடியே
“அதெல்லாம்… அப்படி ஒரு உணர்ச்சிலாம் உனக்கு இருக்கா… உனக்கு உன் அப்பனை ஏமாத்தினவங்கள எல்லாம் பழி வாங்குற உணர்ச்சி மட்டும் தான் இருக்குனு நெனச்சேன்… அது எப்படிடா… நீ மட்டும் உன் பொண்டாட்டி கூட வாழனும்… சா…மிக்கே சவால் விடுவீங்களாம்… ஆனால் நாங்கள்ளாம் இப்படி ஏங்கி ஏங்கி வாழ்க்கையை சாகடிச்சுக்கணும்… என்னடா நியாயம்… எனக்காவது யமுனா உயிரோட இருக்கா… உன் ஆளு புட்டுக்க போகுதா.. புலம்பிட்டு இருக்க…”
“கடவுள் இருக்கான் குமாரு… இல்ல இல்ல… ’ஆர் கே.’ ”
“அம்மா தாயே… நீ கல்லு இல்லை… சாமிதான்…” ரஞ்சித் அம்மன் சிலையைப் பார்த்து தலைக்கு மேலாக கைகளை உயர்த்து கும்பிட்டவன்…
“தெய்வமே… கைல விரல் இல்லைதான்… அதுனால என் பக்தியை குறச்சு மதிச்சுறாத தெய்வமே… சட்டு புட்டுனு இவன் ஆளைத் தூக்கிரு...” என்ற போதே ரிஷி ஓடி வந்து ஆத்திரத்தோடு அவனைத் தள்ளி விட்டிருக்க…
அப்போதும் ரஞ்சித் அசரவில்லை…
“இவன் பொண்டாட்டிக்கு சீக்கிரம் சொர்க்கத்துல இடம் கொடு தாயே…” என்றவனின் மேல் ரிஷி பாய்ந்திருக்க….
ரஞ்சித் கொக்கரித்துச் சிரித்தான்… தன் மொத்த வன்மத்தையும் கொட்டியவனாக…
“ஏண்டா ****… உனக்குனா ரத்தம்… எனக்குனா தக்காளிச் சட்னியா… நீ பண்றது தெய்வீகக் காதல்னா… அப்போ நான் பண்ணினது என்ன… என் யமுனாவை நீதான்டா என்கிட்ட இருந்து பிரிச்ச…. இதோ இந்த அம்மன் முன்னாலதானே இன்னொருத்தனுக்கு கூட்டிக் கொடுத்த…”
“யமுனா கிட்ட நான் ஒரு தடவை பேசியிருந்தா அவ என்கிட்ட வந்து சேர்ந்துருப்பாடா… நீ பேச விட்டியாடா… ஏன் பேச விடலை… என் கூட அவ வந்துருவானுதானே… ஏண்டா இப்படி பண்ணின… அவ இல்லாம பைத்தியம் பிடிக்குதுடா… எவ்வளவோ கற்பனைகள்… எல்லாம் கலஞ்சு மண்ணோடு மண்ணோ போயிருச்சேடா… உனக்கு அந்த வலி தெரியுமாடா…” இப்போது ரஞ்சித் ரிஷியின் சட்டையைப் பிடித்து அழ ஆரம்பித்திருக்க
ரிஷி இப்போது நன்றாகவேத் தெளிந்திருக்க… ரஞ்சித்தின் மேல் ஆத்திரம் எல்லாம் படவில்லை… மாறாக
“ரஞ்சித்… இப்போ எனக்கு உன்கிட்ட சண்டை போட தெம்பும் இல்லை… பேசிப் புரிய வைக்க எனக்கு நேரமும் இல்லை… அதே போல யமுனாவை நீ தொந்தரவு பண்ணின நான் மனுசனா இருக்க மாட்டேன்…” ரிஷி அவனிடம் அமைதியாகப் பேச எத்தனிக்க…
ரஞ்சித் மீண்டும் மீண்டவனாக…
“அவளுக்காக திருந்தினேன்... அவ காதலுக்காக என்னை எப்படி எப்படியெல்லாமோ மாத்திகிட்டேன்... அவளை சந்தோசம் தான் முக்கியம்னு உன் உலகம் அவ மட்டுமேன்னு நினைச்சிட்டு இருந்தேனாடா... எல்லாத்தையும் கெடுத்துட்டியேடா பாவி... என் தேவதையை என்கிட்ட இருந்து பிரிச்சு இன்னொருத்தன் கிட்ட கதற கதறக் கொடுத்திட்டியேடா.... ”
ரஞ்சித்தின் குரல் தழுதழுத்திருக்க... ரிஷியின் பொறுமையோ கரை கடந்திருந்தது...
“எனக்கு என் யமுனா இனி கிடைக்க மாட்டா… ஆனால் அவ இனி எனக்கு வேண்டாம்… நான் காதலிச்ச யமுனா செத்துட்டா… அவ்ளோதான் முடிஞ்சது எல்லாம்… இதோ… இங்கதான் இந்த இடத்தில தான் அவ செத்ததைப் பார்த்தேன்… அவள சாகடிச்சது யாரு… நீதாண்டா… உன்னாலதாண்டா என் யமுனா செத்தா… ”
“இங்கதான்… ரொம்ப நாளா சுத்திட்டு இருக்கேன்… எனக்கு அவ வேணும்டா… என் யமுனா எனக்குத் திரும்பக் கிடைப்பாளான்னு… கிடைப்பாளாடா…” ரிஷியின் சட்டையைப் பிடித்து ரஞ்சித் உலுக்க
ரிஷி கடுப்புடன்… அவனிடமிருந்து தன்னைப் பிரித்து எடுத்தவனாக
“தேடிட்டே இரு… நான் கிளம்புறேன்” என்ற படியே ரிஷி அந்த இடத்தை விட்டு செல்வதற்காகத் திரும்ப…. திரும்பிய ரிஷியின் பின்னந்தலையில் திடிரென்று மின்னல் வெட்டி அவன் தலை இரண்டாகப் பிளந்தது போல உணர்வு.… ரிஷியின் கை வேகமாக அவன் பின்னந்தலைக்குச் சென்றிருந்தது.... தனக்கு நடந்தது என்ன, ஏதென்று உணரும் முன்னேயே
“நீயும் யமுனா செத்த இடத்துலயே செத்து ஒழிடா…” அடுத்த அடி ரிஷியின் முன்னந்தலையில் நெற்றியில் விழுந்திருக்க
ரிஷியின் தலை எங்கும் ஆயிரம் மத்தளம் ஒரே நேரத்தில் ஒலித்தது போல உணர்வு…
“ஏ..ண்..டா…” ரிஷி தன் கைகளால் தன் தலையைத் தாங்கியபடி தள்ளாடியபடி ரஞ்சித்தைப் பார்க்க… ரஞ்சித்தின் முகத்தில் குரூரப் புன்னகை…
நெற்றி… முகம்… மூக்கு… வாய் என எங்கும் இரத்தக் கோலமாக ரிஷி காட்சி அளித்ததைப் பார்த்தவனின் கண்கள் பழிவெறியில்… கொலை வெறியில் கண்கள் பளபளத்தது…
அடுத்த நொடி… வேகமாக ரிஷி… ரஞ்சித்தின் சட்டையைப் பிடித்த போதே… அது முடியாமல் ரிஷியின் பிடி நழுவி இருக்க… ரஞ்சித் வேகமாக ரிஷியை தன்னோடு சேர்த்து… அவனை இழுத்துச் செல்ல ஆரம்பித்திருந்தான்… அங்கு தூரத்தில் நின்றிருந்த ஒன்றிரண்டு பேர் கூட அறியாமல்…
ரிஷி திடீரென்று அடி வாங்கிய அதிர்ச்சியில் இருந்ததால்… திருப்பி செயலாற்ற முடியாத நிலை… அதனால் ரஞ்சித்தை விட்டு விலகவே முடியவில்லை… ரஞ்சித் இழுத்த இழுப்புக்கு சென்று கொண்டிருந்தான்...
அந்தக் கோவிலின் பின்புறம் உள்ள மண்டபத்திற்கு அழைத்து வந்து ரிஷியைக் கீழே தள்ளி விட்ட ரஞ்சித்…
“டேய்…. இங்கதாண்டா… இங்க தான் சுத்திட்டு இருக்கேன்… நீ… அந்த பார்த்திபன்… அந்த பார்த்திபன் பொண்டாட்டி… எல்லோரையும் என் யமுனா செத்த இடத்திலேயே போட்டுத் தள்ளுவேன்…”
ரிஷி இப்போது பெரும்பாடுபட்டு எழ முயற்சி செய்ய… அடுத்த நொடி… ரிஷி மீண்டும் தரையில் விழுந்திருந்தான்… ரஞ்சித்தின் கை வண்ணத்தால்…
ரிஷியின் முகமெங்கும் ரத்த கோடுகள்… கீழே விழுந்திருந்தவனை தன் ஒற்றைக்கையால் பற்றி தூக்கி நிறுத்தியவன்… ரிஷியை மண்டியிட்டு அமரச் செய்தவனாக….
“என்ன… இதெல்லாம் எங்கேயோ பார்த்திருக்கோம்னு தோணுதா… உன் ஸ்டைல் தான்… வலி எப்படி இருக்கு…” ரஞ்சித் வார்த்தைகள் பாதி காதில் விழுந்து... பாதி கேட்காத நிலையில் ரிஷி மயக்கத்தில் இருக்க.... ரிஷியின் தலை துவண்டிருந்தது…
“என்ன உன் பொண்டாட்டி சாகப் போறாளா…” ரஞ்சித்தின் இந்தக் கேள்விக்கு ரிஷி இல்லையென்பது மறுத்து தலையாட்டினான் அந்தச் சூழ்நிலையிலும்...
”இல்லையா… நீயும் அவ கூடப் போகப் போற… சந்தோசப்படு…. “ ரிஷி முக்கால்வாசி மயக்கத்தில் இருந்தான்…. ஆனாலும்… கண்மணி மட்டுமே அவன் நினைவில் இருக்க
“இ….. ல்…..ல ம……ணி…. உ…யி ரோட இ…..ரு “ ரிஷியின் வார்த்தைகள் குழறலாக ஆரம்பித்திருக்க… அது முற்றுப் பெறவும் இல்லை… மீண்டும் தலை சரிய ஆரம்பித்திருக்க
“உன் உயிர் தானே அவ..” அந்த நிலையிலும்… ரிஷி நிமிர்ந்து சந்தோச முகத்துடன் தலை ஆட்ட…
“அப்போ உன் மணி இன்னும் உயிரோட இருக்கா… அப்போ நீ செத்தா அவ செத்துருவா… அப்படித்தானே.... ஏன்னா அவ உயிர் உன்கிட்ட இருக்குதே… நீதானே சொன்ன” ரஞ்சித் சொன்ன போதே… ரிஷியின் எண்ணங்களில் அவன் வார்த்தைகள் மட்டும் தான்…
“அவள் உயிர் என்னிடம்… என்னிடம் மட்டுமே…” நினைத்த போதே… ரிஷியின் வயிற்றில் உலோகத்தின் கூர்முனை கிழித்திருக்க… அவன் உடலின் மீதமிருந்த இரத்தமும் கொப்பளித்து வெளியே வந்திருந்தது…. வாயிலிருந்தும் … வயிற்றிலிருந்தும்
“கண்மணி….” ரிஷியின் குரல் அந்த இடமெங்கும் ஒலித்திருக்க
“செத்து ஒழிடா…” ரிஷியின் வயிற்றில் இருந்து கத்தியைக் குத்திய வேகத்திலேயே மீண்டும் எடுத்து குத்தப் போக… ரிஷி வேகமாக அவன் கைகளைத் தடுத்து நிறுத்தப் போராட முயன்ற போதே
ரஞ்சித் மீண்டும் அவன் வயிற்றில் கத்தியை இறக்கியிருக்க… ரிஷி இப்போது சுதாரிக்க முயன்றான்…
“உன்னால என்னைக் கொல்ல முடியா… து….டா….. நான் சாக மாட்டேன்… என் கண்மணியை சாக விட மாட்டேன்…” ரிஷி அவனைத் தள்ளி விட முயல.... ஆனால் ரஞ்சித்தைத் தள்ள அவனால் முடியவில்லை…. மாறாக எதிர்த்துப் போராட முடியாமல் ரிஷியே மண்ணில் ரத்த வெள்ளத்தோடு சரிந்து விட…
இப்போது ரஞ்சித்தால் கத்தியைச் சொருக முடியாத நிலை…. ரிஷியின் தலையைத் தூக்கிப் பார்க்க… ரிஷியின் மூச்சு… கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிக் கொண்டிருக்க… அதை நிதானமாக அவன் முன் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த போதே…
மக்கள் சத்தம் அங்கு திடீரென அதிகரித்தது போல இருக்க… அதைக் கேட்டவனாக சுதாரித்த ரஞ்சித் திருப்தியான புன்னகையோடு எழுந்தவன்….
“இனி யார் நினைச்சாலும் உன்னைக் காப்பாத்த முடியாதுடா….” ரிஷியை மண்டபத்திற்கு பின்னால் இழுத்துக் கொண்டு வந்து மறைவாகப் போட்டவனாக…. போட்டதோடு மட்டுமல்லாமல்…. ரிஷியை காலால் உதைத்து விட்டும் அந்த இடத்தை விட்டுக் காலி செய்திருந்தான் ரஞ்சித்…
----------
/* பாசம் வைத்த பாவம் தான் சாபம் வந்தது
இறந்தாலே இரவாது விளைகின்ற பிரேமையே
அடி நீயே வழியாக வருகின்ற பெண்மையே
விழியில் பூக்கும் நேசமாய் புனிதமான பந்தமாய்
பேசும் இந்த பாசமே இன்று வெற்றி கொள்ளுமே
இளம் கன்னி உன்னுடன் கூட வா வா
ஏக்கம் என்ன பைங்கிளி என்னை வந்து சேரடி
நெஞ்சிரண்டு நாளும் பாட காவல் தாண்டி பூவை இங்காட
காதல் கீர்த்தனம் காணும் மங்களம்
பிரேமை நாடகம் பெண்மை ஆடிடும்
ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா
இணைந்திடாது போவதோ வானம் ஆவதோ
காலம் சிறிது காதல் மனது
தேவன் நீதான் போனால் விடாது
தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே
வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி*/
OMG.. Ranjith unexpected twist.. R💞K 'll be back jii.. But that pain really felt by heart jii..
Thanks for keeping Sathya as good person.. Unexpected turns and Ranjith become a total criminal. Ranjith didn't even realise his mistake. Sad that Rishi get the punishment.
Aiyo Rishi!!!!! Waiting pls quick ah next ud potrunga
Super
Nice pravee
Oh god sorry sathiya thappa soliten
Ranjit ah yosikala piravi
thaniya irukapa senja nee veeranada
Sathya Rishi ah kapathuvan da
Rishi elundu varuvan apa iruku unaku
Parthi melaum vanmam vachiruka
Unna vitta
Ayyoo still in suspense aa? Story end la um suspense vachidathinga!!🙄😒
Athellam ethuvum aagathu Rishiku
Nice
Epi padichutu thituvomnu apology letter kuduthuta vitruvoma? Irundhalum ungaluku rishi mela yen indha kolaveri? Ena pannuvengalo theriyathu..rk va sethu vachudunga.. Rishiya kuthiteengalla? 😞😞😞ponga
Praveena yean ma ipadi pandra ...rendu perayum serthu vaipiya mattiya ma ..manasu kastama iruku .Nan ini read panna matean po
Rishi ya yar kappatha porangalo theriyalaiye, Ranjith ah kollanum pola irukku.
😭😭😭😭
Nice update