ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
ஃபைனல் பார்ட் 1 போட்டுட்டுட்டேன்.... தூங்காமல் போட்டுட்டேன்... மூணு மணிக்கு கிளம்பலாம்னு சொன்னதால எப்படியோ அங்க இங்க சரி பண்ணி போட்டுட்ட்டேன்.... ரொம்ப எமோஷனல் வார்த்தைகள் இல்லாமல்... ஓரளவு லைட்டாதான் சொல்ல ட்ரை பண்ணியிருக்கேன்... படிச்சுட்டு கமெண்ட் பண்ணுங்க...
மிஸ்டேக்ஸ் செண்டன்ஸ் பார்மேஷன் எங்கயாவது அடி வாங்கி இருந்தால் சாரி சாரி... திங்கட்கிழமை சரி பண்றேன்... இப்போதைக்கு படிச்சுட்டே இருங்க...
நன்றி
பிரவீணா..
அத்தியாயம் 105-1( Final)”
/ * ஒரு முறை பிறந்தேன் ஒரு முறை பிறந்தேன்
உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்
மனதில் உன்னை சுமப்பதினாலே மரணத்தை தாண்டி வாழ்திருப்பேன்
என் கண்ணில் உன்னை வைத்தே
காட்சிகளை பார்ப்பேன்
ஒரு நிமிடம் உன்னை மறக்க முயன்றதிலே தோற்றேன்
நீயே என் இதயமடா…… நீயே என் ஜீவனடா……. */
வாரம் ஒன்று கடந்திருந்தது
நாராயண குருக்களின் மைய அலுவலகம்… அந்த அலுவலகத்தின் பதினொன்றாவது தளத்தில் அமைந்திருந்த அர்ஜூனின் அறையில்…. அர்ஜூன் முன் அமர்ந்திருந்தான் சத்யா..
ஒரு மாதிரியான அலட்சிய பாவனையில் சத்யா அமர்ந்திருந்தாலும்… இலேசான பதட்டம் அவன் முகத்தில் பரவியதையும் அவனால் மறைக்க முடியவில்லை…
”என்ன சத்யா ஒரு மாதிரி டென்ஷன்ல இருக்கீங்க போல… உங்க பாஸ் கொஞ்சம் இக்கட்டான சூழ்நிலைல இருக்கார்… இப்போ அவரைக் கூப்பிட முடியாது… ஆனால் பரவாயில்லை கூப்பிட்டதுமே வந்துட்டீங்க… ” என்று நக்கல் பாவனையில் அர்ஜூன் சத்யாவிடம் பேச்சை ஆரம்பிக்க.. சத்யா முறைப்பான பார்வையுடன் அர்ஜூனை நோக்கினான்…
அர்ஜூன் சத்யாவின் முறைப்பான பார்வையெல்லாம் கண்டுகொள்ளாமல்
“அந்த பாழடைந்த பங்களாவை… உங்களுக்கு அனுப்பியதுக்கே… இவ்ளோ ரியாக்ஷனா… இதுக்கே இவ்ளோ டென்ஷன் ஆனா… இன்னும் ரொம்ப இருக்கே சத்யா சார்… அதெல்லாம் காட்டினால்…. அதுக்கெல்லாம் எவ்ளோ ரியாக்ஷன் கொடுப்பீங்க”
கேள்வி கேட்ட அர்ஜூனிடம் இப்போது சத்யா நிமிர்ந்து அமர்ந்தவனாக…
“என்ன அர்ஜூன் சார்… ப்ளாக்மெயில் பண்றீங்களா… ஏன் நீங்க எல்லாம் இந்த அண்டர் க்ரொவுண்ட் ஆக்டிவிட்டி பார்க்காமல் தான் இவ்ளோ பெரிய இடத்தை தக்க வச்சுட்டு இருக்கீங்களா… ஜஸ்ட் கண்மணி மேடத்துக்கிட்ட மேரேஜ் பண்ணிக்கிறியான்னு கேட்ட எங்க ‘ஆர்கே’ வை என்ன பண்ணுனீங்கன்னு ஞாபகம் இருக்கா… என்னமோ நாங்க புதுசா பண்ணிட்ட மாதிரி இவ்ளோ விசாரணை…”
அர்ஜூனை அலட்சியமாகப் பார்த்தபடியே….
“ஆமா…. நாங்க இப்படித்தான்… என்ன பண்ணுவீங்க… என்னமோ போட்டோ அனுப்பி உடனே வான்னு மிரட்டுறீங்க..” சத்யாவும் அர்ஜூனுக்கு அசராமல் பதிலடி கொடுத்தவனாக…
“எங்களுக்கும் தனி கோட்டை இருக்கு… எங்களுக்கு அரசன் இருக்கான்…” என்ற சத்யாவிடம்…
“ஓகே ஒகே.. கூல் …” என்றபடி அர்ஜூன் எழுந்தவன்… அவன் அருகில் வந்தவனாக….
“ஆனால் பாருங்க.. உங்க வண்டவாளம் எல்லாம் எங்ககிட்ட மாட்டிகிருச்சே…” என்றபடி அர்ஜூன் தன் அலைபேசியை உயிர்ப்பித்தான்…
ரிஷி மற்றும் சத்யா கூட்டணியின் சட்ட விரோதமான.. முறைகேடான அடிதடி அத்தனையும் சத்யாவுக்கே காட்டப்பட்டிருக்க… சத்யா அதிர்ச்சியாகவெல்லாம் இல்லை…. அமைதியாக அமர்ந்திருக்க
”இதெல்லாம் போலிஸ்க்கு போனா… என்ன ஆகும்னு தெரியுமா சத்யா அவர்களே…. உங்க சோ கால்ட் கிங்.. ’ஆர் கே’ வும்… நீங்களும் கூட்டா கம்பி எண்ணனும்… பராவயில்லையா…”
சத்யா அசராமல் அமர்ந்திருக்க….
“ரிஷியை கூப்பிடாமல் ஏன் உன்னைக் கூப்பிட்டு பேசிட்டு இருக்கேன்னு தெரியுமா.. ”
சத்யா அமைதியாகவே அமர்ந்திருக்க…
“அதை அப்புறமா விளக்குறேன்…. இப்போ நம்ம மேட்டர்க்கு வருவோம்” என்றபடியே அர்ஜூன் சத்யா முன் இருந்த மேஜை மீது ஏறி அமர்ந்தவன்….
“எனக்கு ஒரே ஒரு டவுட் தான் சத்யா… அப்படி என்ன உங்களுக்கு ரிஷி, தென் அவங்க அப்பா மேல விசுவாசம்… “ சத்யா முன் குனிந்து புருவம் உயர்த்திக் கேட்க…
“விசுவாசமா இருக்கிறதுக்கு காரணம் எல்லாம் வேணுமா அர்ஜூன் சார்…” சத்யாவும் அர்ஜூனை நேருக்கு நேர் பார்த்து கேட்க…
“ஹ்ம்ம்.. ஹர்ஷித் மேட்டர் கூட எனக்குத் தெரியும்… தெரியுமா” அர்ஜூன் கேலியாக வினவ
“கண்மணி மேடம் கூட நீங்க ஊட்டி போனதும் எனக்கும் தெரியும்…. “ சத்யாவும் அதே தொணியில் பதிலடி கொடுத்தான்…
“ஹ்ம்ம்… நல்லா பேசுறீங்க சத்யா… ஆனால் யோசிங்க சத்யா… உங்களுக்கு ஒரு அழகான குடும்பம் இருக்குனு எனக்கு தெரியும் சத்யா… அந்த அழகான குடும்பத்துல உங்களுக்காக காத்துட்டு இருக்கிற உங்க மனைவியும்…. உங்க ஒரே பெண் குழந்தையும்… இருக்காங்கனும் தெரியும்… அவங்களை விட ரிஷி முக்கியமா உங்களுக்கு” எழுந்து நின்று அர்ஜூன் கேட்க.. இப்போது சத்யா கண்களில் கொலைவெறியுடன் எழுந்தவனாக அர்ஜூனின் சட்டையைப் பிடித்திருக்க…
“இதெல்லாம் கொலை பண்ணும் போது தெரிஞ்சுருக்கனும்… எவனோ…. அவன் அவன் ஆத்திரத்துக்கு…. அவனுக்குத் தேவைனு உன்னை என்ன வேணும்னாலும் செய்ய சொல்வான்.. நீயும் செய்வியா… உனக்குனு ஒரு குடும்பம் இருக்கு… அதுல பொண்டாட்டி… புள்ளைங்கனு இருக்காங்களே அதெல்லாம் யோசிக்க மாட்டியா… ரிஷி என்ன சொன்னாலும் செய்வியா… “
“செய்வேன்… ஆர் கே வுக்காக என்ன வேணும்னாலும் செய்வேன்… அந்த துரை யார்னு தெரியும் தானே…” அர்ஜூனிடம் சத்யா ஆவேசமாகக் கேட்க
“தெரியுமே… எங்க வீட்டுப் பொண்ணோட வாழ்க்கைல விளையாண்டவனை அவ்ளோ சீக்கிரம் மறந்துருவேனா… ஆனால் என்னோட கேள்வி என்னனு உனக்குப் புரியுதா…. இல்லை புரியாத மாதிரி நடிக்கிறியா…” அர்ஜூனும் சுற்றி வளைத்துக் கேட்க…
சத்யா இப்போது குழப்பமாகப் பார்த்தான் அர்ஜூனை…
“கண்மணி ரிஷிக்கு மனைவி… ரிஷிக்கு அவன் கோபம்… உனக்கு என்ன தேவை… “
“ரிஷிக்காக… அவன் குடும்பத்துக்காக உன் குடும்பத்தை கை விடப் போறியா…”
“அவனுக்காக ஓடி ஓடி உழைத்து…. இப்போ ஜெயிலுக்கும் போகப் போறியா…உன் குடும்பத்தை கெடுத்து ரிஷி சந்தோஷமா வாழ்ந்திருவானா…
அடுத்தடுத்து அர்ஜூன் கேள்விகளை அசராமல் கேட்டபடி இருந்தான் சத்யாவுக்கு பதில் பேசக் கூட அவகாசமே கொடுக்காமல்…
-------
படுக்கையில் கண் மூடிப் படுத்திருந்த கண்மணியை கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தாள் ரிதன்யா…
இந்த இரண்டு நாட்களாக அவ்வளவாக அவளால் பேச முடியவில்லை…. இருவரும் அன்று பேசி முடித்து விட்டு அடுத்த நாள் காலையில்… கண்மணியைப் பார்த்த போது எப்படி இருந்தாளோ அப்படித்தான் இன்றும் கண்மணி இருக்கின்றாள்…
ஆம் கண்மணியின் முகத்தில் அப்படி அவள் முகமே தெரியாமல்… எங்கும் அம்மை பரவி இருந்தது…. அன்று போல் ரிதன்யா அதிர்ச்சி அடையாமல் கண்மணியைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்…
அப்போது கந்தம்மாள் உள்ளே வந்தவராக தன் பேத்தியின் அருகில் எழுந்தவர்.
“தாயி எழுந்திரு… “கண்மணியை எழுப்ப…. இப்போது கண்மணியும் எழுந்தாள்…
”இந்த கூழைக் குடி தாயி… “
“ஹ்ம்ம்… ஆனால் இது பத்தலை ரொம்ப பசிக்குதே… ஆனால் சாப்பிட முடியல” கண்மணி சொன்னவளாக….
“எனக்கு வேற எதுமே சாப்பிட முடியல கெழவி… ஆனால் ரொம்ப பசிக்குது….” கண்மணியிடம் சொல்ல…
“கஞ்சி கரச்சுத் தரேன்…. உனக்கு எப்போ வேணும்னு சொல்லு…. இப்போ இதைக் குடி… உனக்குப் பிடிச்ச கடுங்காப்பி போட்டுத்தாரேன்… ஆனால் சூடா குடிக்கக் கூடாது தாயி…” என்று கந்தம்மாள் சொல்லிக் கொண்டிருக்க…
“பாட்டி… அண்ணியோட முகத்துடல் உடம்புல…. எங்கயுமே எதுவுமே குறையலை…. அதுலயும் அவங்க வயித்துல…. கழுத்துக்கு கீழ ரொம்ப அதிகமா இருக்கு….” ரிதன்யா பரிதவிப்புடன் கேட்க
“ஆயிரம் கண்ணுடையாள்னு சும்மாவா சொன்னாங்க…. ஒண்ணும் ஆகாது… பாரு… உச்சத்துல இருக்கிற ஆத்தா இனி கொஞ்சம் கொஞ்சமா இறங்கிருவா…” கந்தம்மாள் பக்தி பரவசத்துடன் சொல்ல…
இதுவே சாதாரண கண்மணியாக இருந்திருந்தால்… கந்தம்மாளை வம்பிழுப்பதற்காக… காலடியில் கூட விழ வைத்திருப்பாள்… இப்போதுள்ள சூழ்நிலையில் அது முடியுமா… ரிதன்யாவையும் கந்தம்மாளையும் மாற்றி மாற்றி பார்த்தபடி கூழைக் குடித்துக் கொண்டிருக்க…
”ஆனால் அண்ணி ரொம்ப கஷ்டப்பட்றாங்க பாட்டி… ” ரிதன்யாவின் கவலையான தொணியில்
“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது… இப்படி பார்த்து பதறக் கூடாது… பயப்படக்கூடாது… நம்ம வீட்டுக்கு ஆத்தா வந்திருக்கான்னு நாம சந்தோசப்படனும்…” கந்தம்மாள் கன்னத்தில் போட்டபடி வெளியேறி இருக்க
ரிதன்யா கடுப்புடன் கண்மணியைப் பார்த்தாள்…
“எங்க அண்ணா இந்தக் கந்தம்மா பாட்டி மேல கடுப்பா இருக்கிறதுல தப்பே இல்லை… நீங்களும் அவங்க சொல்றாங்கன்னு வீட்லயே இருக்கீங்க…. ஹாஸ்பிட்டல் போகலாம்னா கேட்கவே மாட்டேன்கறீங்க…”
“இல்லை ரிது… ஹாஸ்பிட்டல்ல பொது இடம்.... அங்க எத்தனை பேர் இருப்பாங்க… அதுல எவ்ளோ பேஷண்ட்ஸ்க்கு இம்யூனிட்ட்டி லோவா இருக்கும்… என்னால மத்தவங்களுக்கும் தொல்லை… அதை விட ஆபத்து… தெரிந்தே மத்தவங்களுக்கு கஷ்டம் கொடுக்கச் சொல்றீங்களா… அது நம்ம ஹாஸ்பிட்டலா இருந்தாலும்… என்னதான் தனியா ஐசொலேட்டடா இருந்தாலும் ஸ்ப்ரெட் ஆகுறதைத் தவிர்க்க முடியுமா சொல்லுங்க… எமர்ஜென்சினா மட்டும் போகலாம்… ட்யூ டேட் டிசம்பர் எண்ட் தானே… இப்போ 7 மந்த்ஸ் தான் முடிஞ்சுருக்கு… பார்த்துக்கலாம் விடுங்க… நடக்கிறது நடக்கட்டும்…” விட்டேற்றியாக சொன்னவள் அசிரத்தையாக முடித்து வைத்தாள்… தொடர்ச்சியாகப் பேசவே முடியவில்லை என்பதே அவளின் அப்போதைய நிலை…
“நீங்க ஏன் அண்ணி இவ்ளோ பிடிவாதமா இருக்கீங்க… ” ரிதன்யா சொல்லிக் கொண்டிருக்கும் போதே…
மகிளா அங்கு வந்திருந்தாள்…. கண்மணியைப் பார்ப்பதற்காக அவள் வந்திருந்தாள்… வளைகாப்புக்கு வந்தவள் அதன் பின் இன்றுதான் வந்திருக்க… வந்தவள் கண்மணியைப் பார்த்தவுடனே அவளின் கண்கள் சட்டென்று கலங்கி விட…
”சாரி கண்மணி… இப்படி நீ கஷ்டப்பட்றதை என்னால பார்க்கவே முடியலை… அம்மா வந்து சொன்னப்போ எனக்கு உடனே வந்து பார்க்கனும் தான் நினைத்தேன்… ஆனால் முடியலை… இன்னைக்குதான் மனசைத் தேத்திட்டு வந்தேன்…” மகிளா உண்மையான வருத்தத்தோடு சொல்ல…
கண்மணிக்கு ஏனோ அவளுக்காக மற்றவர்கள் அழுவதே பிடிக்கவில்லை… அதை விரும்பவும் இல்லை… இதனாலேயே பெரும்பாலும் யாரையும் பார்க்காமல் தவிர்த்தாள்…
”அதெல்லாம் ஒண்ணும் இல்லை எனக்கு…” மகிளாவிடம் சொன்னவள்… ரிதன்யாவைப் பார்த்து
“ரிது அவங்ககிட்ட சொல்லுங்க… அழ வேண்டாம்னு… ப்ளீஸ்” கண்மணியின் அழுத்தமான வார்த்தைகளில் ரிதன்யாவும் மகிளாவை அமைதிப்படுத்தி இயல்பாகப் பேசிக் கொண்டிருக்க… அவர்கள் மூவருமாகப் பேசிக் கொண்டிருந்த போதே சன்னல் பக்கம் சத்தம்…. ரித்விகா விக்கியின் அண்ணன் குழந்தையை கையில் பிடித்துக் கொண்டு…. மகிளாவின் குழந்தையை கையில் தூக்கிக் கொண்டு வந்தவளாக…ஊஞ்சலின் அருகே வந்து அவர்களை விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்க…
அவர்களைப் பார்த்தவள்…
“ஏன் மகி… பாப்பாவைலாம் தூக்கிட்டு வந்தீங்க… உங்களுக்கெல்லாம் சொன்னால் புரியாதா… படிச்சிருக்கிங்கதானே….” கடிந்தபடியே… விக்கியின் அண்ணன் குழந்தையைக் கைகாட்டியபடி
”வேங்கடராகவ் தாத்தா வந்திருக்காரா….” கண்மணி ரிதன்யாவிடம் கேட்க….
“அவர் டெய்லி வந்துருவார் அண்ணி… இன்னைக்கு கண்மணிப் பாப்பாவைக் கூட்டிட்டு வந்திருக்கார் போல…”
”எதுக்கு குழந்தைங்களை எல்லாம் கூட்டிட்டு வர்றாங்க… ஏன் யாருமே புரிஞ்சுக்க மாட்டீங்கறீங்க.” கண்மணி மென்குரலில் அதட்டிக் கேட்க…
”அவங்க… வெளில தானே இருக்காங்க… விடு கண்மணி…”
கண்மணியும் அதன் பின் ஏதும் பேசாமல் சன்னல் வழியே அவர்களைப் பார்த்திருந்தாள்…
மகிளாவின் குழந்தையைக் கையில் வைத்தபடி…. கண்மணிப்பாப்பாவை ரித்விகா அந்த ஊஞ்சலில் வைத்து ஆட்டிக்கொண்டிருக்க…. இப்போது மகிளாவின் குழந்தை தானும் ஊஞ்சலில் ஆட வேண்டுமென்று அழ ஆரம்பித்திருக்க… ரித்விகாவோ திணறினாள்..
“ஏய் பாப்பு… எப்டிடா உன்னை வச்சு ஆட்ட முடியும்… சரி வா… அத்தை உக்காந்துக்குவேனாம்… நீங்க ரெண்டு பேரும் என் மடில உட்கார்ந்துக்குவீங்களாம்…” என்று ரித்விகா அமர்ந்து குழந்தைகள் இருவரையும் மடியில் வைத்துக் கொண்டி ஊஞ்சலைத் தள்ள முயற்சிக்க… அவளால் முடியவில்லை…
கண்மணி அவர்களைப் பார்த்தபடியே இருந்தாள் இப்போதும்..
”பாரு ரிதன்யா… இவங்க ஆட்டத்தை… நாம போகலாமா அங்க… ரித்வி பாவம் கஷ்டப்பட்றா” மகிளா ரிதன்யாவிடம் குழந்தைகளைச் சுட்டிக் காட்டிச் சொல்லிக் கொண்டிருக்க…
கண்மணியும் புன்னகையோடே அவள் வலியெல்லாம் மறந்து… அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் ரிஷியும் அங்கு வர… கண்மணி இப்போது மற்ற அனைவரையும் மறந்து விட்டு விட்டு ரிஷியை மட்டுமே பார்க்க ஆரம்பித்திருந்தாள்… அவன் பேசுவதை மட்டும் கேட்க ஆரம்பித்திருந்தாள்…
“ஏய் வாலுங்களா… என்ன பண்றீங்க… “ ரிஷி மூவரையும் பார்த்துக் கேட்டவனின் வார்த்தையில் மட்டும் தான் கிண்டலும் நையாண்டியும் இருந்தாலும்…. அவன் தொணியில் இல்லை… அவன் குரல் சுரத்தின்றி ஒலித்ததிலேயே அவன் நிலை எவருக்கும் புரியும்… அனைவரிடமும் என்னதான் பேசினாலும்… சிரித்தாலும்… கிண்டல் செய்தாலும்… அது எல்லாமே ஏதோ கடமைக்காக என்றே பேசினான்… சிரித்தான்….
“அண்ணா… அண்ணா… இதுங்க ரெண்டையும் வச்சுகிட்டு….ஊஞ்சல் ஆட்றது கஷ்டமா இருக்கு… ஹெல்ப்ண்ணா ப்ளீஸ்…”
ரிஷியின் இதழ்கள் இலேசாக விரிய…
“அதானே பார்த்தேன்… எவண்டா இளிச்சவாயன் மாட்டுவான்னு பார்த்துட்டு இருந்தீங்க… நான் மாட்டினேனா…” மூவரையும் ஊஞ்சலில் வைத்து ஆட்டி விட… இப்போது ரிஷியின் கை மட்டுமே ஊஞ்சலில் இருக்க… அவனின் எண்ணம் எல்லாம் அந்த ஜன்னலில் இருந்தது…. அவனுக்குத் தெரியும் அவன் மனைவி அவனைப் பார்த்துக் கொண்டிருப்பாள் என்பது…
அதே நேரம் ரிதன்யாவும்… மகிளாவும் வெளியே சென்று ஊஞ்சல் இருந்த மரத்தடிக்குச் செல்ல… ரிஷி இப்போது அவர்களிடம் தன் பொறுப்பை ஒப்படைத்து விட்டு மரத்தடியில் வந்து அமர்ந்தவன் சன்னலை வெறித்திருக்க…
கண்மணி அவனைப் பார்வையைத் தவிர்த்து… அவனைத் தவிர்த்து கட்டிலில் படுக்க ஆரம்பித்திருந்தாள்…
ரிஷியும் இப்போது எழுந்து சென்றிருந்தான் விரக்தியோடு… காலம் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம் ஒரு புறம் என்றால்… கண்மணி ஆடும் கண்ணாமூச்சி ஆட்டமோ இன்னொரு புறம்… இரண்டுக்கும் இடையில் ரிஷி தத்தளிக்க ஆரம்பித்திருக்க… மீண்டும் மீண்டும் அவனது நம்பிக்கையும் ஊசலாடி தத்தளிக்க ஆரம்பித்திருந்தது…
அன்று…. பகல் பொழுது மெல்ல மெல்ல நகர்ந்து இரவை வரவேற்க தயாராக ஆரம்பித்திருக்க…
கண்மணிக்கோ இந்த சில நாட்களாக பகல் இரவு வித்தியாசம் இல்லாமல் போயிருந்தது… 24 மணி நேரமும் படுக்கை என்றாகியிருந்தது…
ஆனாலும் தன் தந்தை நட்ராஜ் வீட்டிற்கு வந்த பிறகு… இரவுக்காகக் காத்திருக்க ஆரம்பித்திருந்தாள்… காரணம்… கண்மணி இங்கு வந்ததில் இருந்து… ரிஷி தன் இரவு படுக்கையை அந்த மாமரத்தடிக்கு மாற்றி இருந்தான்…
ரிஷி அங்கிருந்த மரத்தடியில் வந்து படுப்பதால்… அவனிடம் பேசவில்லை என்றாலும்… அவனைப் பார்க்கவில்லை என்றாலும்… அவன் பார்வையைத் தவிர்த்தாலும்… அவளருகில் அவன் இருக்க வேண்டும் என்று மனம் தவிக்க… அந்தத் தவிப்பையும் அவன் நீக்கி இருந்தான்… அவளுக்கும் அவனுக்கும் இடையே ஒரு சுவர் மட்டுமே… கூப்பிடும் தூரம்… பார்க்கும் தூரம்… என ரிஷி அவளின் அருகே இருந்தது அவள் மனதுக்கு ஆறுதலாக இருந்தது… இன்றும் வழக்கம் போல் ரிஷியின் வரவிற்காக காத்திருக்க ஆரம்பித்தாள்…
என்னதான் கண்மணியின் பிடிவாதம் ரிஷியை விட்டு விலகி இருக்க வைக்க நினைத்தாலும்… இந்த ஒருவாரம்… அவனின் அருகாமை மனதுக்கு தேவைப்பட்டது அவளுக்கு… ரிஷி வந்து அவளுக்கு காட்சி அளிக்கும் வரை சன்னலோரம் அவனுக்காக காத்திருப்பவள்… அவன் வந்த உடன் அவன் பார்வையில் இருந்து விலகி படுத்தும் விடுவாள்… அவள் உறங்குவாளா… அதுவும் கேள்விக்குறியே…
வழக்கம் போல… அன்றைய இரவும் வந்திருந்தது…. ரிஷியும் மாமரத்தடிக்கு வந்து படுக்கையை விரித்தவன்…
ரிஷியும் வந்தான்… படுக்கையை விரித்தான்… கண்மணியை இப்போதெல்லாம் எதற்காகவும் அவன் தொந்தரவு செய்வதில்லை… அவளைச் சீண்டுவதையும் விட்டு விட்டான்… கண்மணியின் மனநிலையும் உடல்நிலையும் அவனை அதிகமாகவே மௌனப்படுத்தியிருந்தது…
சத்யாவுக்கு அழைத்தான்…
“சத்யா… நீங்க ஊருக்கு எப்போ போறிங்க…”
“ஆர் கே … இப்போ இருக்கிற நிலைமைல… நான் எப்படி உங்கள தனியா விட்டு போக முடியும்” சத்யா இழுக்க
“நான் பார்த்துக்கிறேன்… எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை… நான் தைரியமாத்தான் இருக்கிறேன்… நீங்க கம்பெனியைப் போய்ப் பாருங்க…” என்றபடி அலைபேசியை வைத்தவன் வானை வெறிக்க ஆரம்பித்திருந்தான்….
வானத்தை வெறித்தபடி…. சில மணி நேரம் படுத்திருந்தவன்… அதன்பின் சன்னல் பக்கம் ஒருக்களித்துப்படுத்தபடி… கண்மணி இருந்த திசையைப் பார்த்தபடியே… உறங்க ஆரம்பித்தவனுக்கு உறக்கம் என்பதுதான் வரவில்லை…
கண்மணி ரிஷி அந்த இணைகள் பேசிக் கொள்ளவில்லை என்றாலும் ஒருவர் ஒருவரின் எண்ணங்களும் பார்வைகளும் அவர்களின் துணையிடமே இருந்தது…
அதிலும் ரிஷியின் எண்ணங்கள் கண்மணியை மட்டுமே சுற்றிக் கொண்டிருந்தது…. நேற்று வரை கடினமாகி இருந்த மனம் இன்று கொஞ்சம் ஆசுவாசப்பட்டிருந்தது காரணம்… காலையில் கந்தம்மாள் பாட்டி… இவனையும் இவன் குடும்பத்தையும் அழைத்து சொன்ன விசயத்தைக் கேட்டதில் இருந்து…
“இனி கவலைப்பட வேண்டாம் இலட்சுமி… சீக்கிரமா அம்மா இறங்கிருவா… இன்னைக்கே ரொம்ப உக்கிரமா இல்லை… நாளைக்கு நல்லா தெரியும்…. அடுத்து தண்ணி ஊத்திரலாம்… நம்ம புள்ளைக்கு ஒண்ணும் இல்லை..” கந்தம்மாள் சொல்லி இருக்க… ரிஷியின் எண்ணமெல்லாம் அந்த வார்த்தைகளில் தான் இருந்தது….. மனம் கணக்குப் போட ஆரம்பித்திருந்தது…
”இன்னும் பத்து நாள்ல இந்த கஷ்டத்தில் இருந்து கண்மணி வெளிய வந்துருவா… அடுத்து டெலிவரி வர்ற வரைக்கும் கவனமா பார்த்துக்கனும்..” மனதுக்குள் எண்ணிக் கொண்டான்…
”நீ உன் பொஞ்சாதியைப் பார்க்கக் கூடாதுப்பா…” கந்தம்மாளுக்கும் அவனுக்கு தினம் நடக்கும் வாக்குவாதம் இதுதான்…
ஆனால் கந்தம்மாள் வார்த்தைகள் எல்லாம் அவனைத் தடுத்து நிறுத்துமா என்ன… கண்மணியை அவனும் தினம் வந்து பார்க்கிறான் தான்… என்ன அவள் தான் இவனைப் பார்ப்பதில்லை…
கண்மணியின் முகம் முழுவதும் அம்மை போட்டிருப்பதை முதன் முதலொல் பார்த்து அதிர்ந்து… மயிர்க் கூச்செறிந்து நின்றிருந்தான்… ஆனால் அடுத்தடுத்து வந்த நாட்களில் அவளைப் அப்படி பார்க்க பழகிக் கொண்டான்….
யோசித்தபடியே படுத்திருந்தான் ரிஷி…
“இனி இந்த அம்மை பயம் இல்லை…. கண்மணி சரி ஆகி விடுவாள்… ”
“இதே போல… அவள் எல்லாவற்றிலும் இருந்து சரி ஆகி விடுவாள்… ” சன்னலைப் பார்த்தபடி… ஒருக்களித்துப் படுத்திருந்தவனின்… கண்களின் ஓரங்களில் விழி நீர் கசிந்திருக்க… துடைத்துக் கொண்டவன்…. தனக்குள் சொல்லிக் கொண்டான்
”டாக்டர் சொன்னது போல கண்மணிக்கு இப்போ வலி வரக் கூடாது… ”
“அம்மா தாயே நீதான் அவளைப் பார்த்துக்கனும்…” அவனையும் அறியாமல் அம்மனிடம் வேண்டுதல் வைத்திருக்க… அடுத்த நொடி சட்டென்று எழுந்திருந்தான் ரிஷி ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும்
“நானா… என்கிட்ட இருந்து இப்படி ஒரு வார்த்தையா…” அவனுக்கே ஆச்சரியமாக இருக்க… தன்னையே சுய பரிசோதனை செய்ய ஆரம்பித்திருந்தான் ரிஷிகேஷ்…
“எல்லோரும்… அம்மா அம்மான்னு அம்மனைப் பற்றியே பேசுறதுனால இப்படி நமக்கு தோணுச்சா… இல்லை கண்மணிக்கு போட்ட அம்மை… அதோட வீரியம் பார்த்து அதிர்ந்து… அது இப்போ கொஞ்சம் குறைஞ்சதுனால… எனக்கு என்னையுமறியாமல் நான் வேண்டிக்கிட்டேனா”
ரிஷி இப்போது பின்வாங்கவில்லை… தயங்கவில்லை…. மனம் முழுவதும் அம்மனை நினைத்தவனாக
“என்கிட்ட இருந்து என்ன வேணும்னாலும் எடுத்துக்கோ…. என் கண்மணிக்கு மட்டும் எதுவும் ஆகாமல் என்கிட்ட சேர்த்துரு… “ இப்போது தன் நினைவோடே வேண்டியவன்…
“அவளுக்கு இப்போதைக்கு வலி மட்டும் வரக்கூடாது… இந்த சமயத்துல வரக் கூடாதுனு சொல்லியிருக்காங்க… இப்போதைக்கு என்னோட இந்த வேண்டுதலை உன்கிட்ட வைக்கிறேன்… கண்மணி சொல்வாளே… உன்கிட்ட வந்து சொன்னா நிறைவேத்தி வைப்பேன்னு… அந்த நம்பிக்கைல சொல்றேன்…” மனமாற உறுதியுடன் வேண்டியவன்… கண்களை மூடினான்…. ஒரு கட்டத்தில் உறங்கவும் செய்தான் நம்பிக்கை தந்த தைரியம் அவன் கூடவே இருந்தது…
நல்ல உறக்கத்தில் இருந்த போதே…. தீடீரென்று
“ரிஷி…” கண்மணியின் வலி நிறைந்த குரல் அவனின் காதில் கேட்க… வேகமாக எழுந்து அமர்ந்தவன்… சன்னலைப் பார்க்க… அங்கு ஒரு மாற்றமும் இல்லை… சத்தம் வந்த சுவடும் இல்லை…
கண்மணியின் குரல் போலக் கேட்டதே… என யோசிக்கும் போதே….
“ம்மா…” கண்மணியின் மெல்லிய முணங்கல் ஒலி கேட்க… அதன் பிறகு சிறிதும் யோசிக்கவில்லை ரிஷி… வேகமாக எழுந்தவன்…. உடனடியாக அர்ஜூனுக்குப் போன் செய்து மருத்துவமனையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்யச் சொல்லி விட்டு…. வீட்டுக்குள் சென்றிருக்க… கந்தம்மாள்… ரிதன்யா… ஏன் கண்மணி உட்ப்பட அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர்….
மற்ற யாரையும் கண்டுகொள்ளவில்லை ரிஷி… வேகமாகக் கண்மணியின் அருகே சென்றவன்…
“கண்மணி…” அவளை அழைக்க… புருவம் சுருக்கினாள் கண்மணி…
“வலிக்குது ரிஷி” தூக்கத்திலேயே அவள் சொல்ல… ரிஷியின் கண்களில் கண்ணீர் வழிந்தோடி இருக்க… வேகமாக அதைத் துடைத்தவன்…
“ஒண்ணுமில்லைடா…” அவளிடம் பேசிக் கொண்டிருந்த போதே… ரிதன்யா விழித்திருந்தாள் இப்போது… தன் அண்ணியின் அருகே நின்றிருந்த தன் அண்ணனைப் பார்த்து அதிர்ச்சியான்வளாக
“அண்ணா… என்னாச்சுண்ணா…” பதறிக் கேட்க
“கண்மணிக்கு வலி வந்துருச்சு ரிது… சீக்கிரம் ஹாஸ்பிட்டலுக்கு போகனும்…” அவன் சொல்ல… ரிதன்யா தன் அண்ணனைப் புரியாத பார்வை பார்த்தாள்…
“அண்ணா…. அவங்க நல்லா தூங்கிட்டு இருக்காங்க…” ரிதன்யாவும் ரிஷியும் பேசிக் கொண்டிருந்த போதே கந்தம்மாளும் அங்கு வந்து விட்டார்…. ரிஷி அவரிடமும் கூற…
மற்ற இருவரும் அவனளவிற்கு தீவிரமாக இல்லை….
“தூக்கத்துல சொல்லி இருக்கலாம்… அதெல்லாம் ஒண்ணும் இருக்காது…” கந்தம்மாளும் சாதாரணமாகச் சொல்ல… ரிஷி அப்படி எல்லாம் விட்டு சாதாரணமாக விடுவானா என்ன…
“இல்லை… அவளுக்கு பெயின் வந்துருச்சு…. அவ குரல்லயே எனக்குத் தெரியும்… ” அவனின் கண்கள் கண்மணியிடமே இருக்க…
“இருக்கட்டுமே… இப்போ என்ன… அவதான் தூங்குறாளே…. அவளை ஏன் தொந்தரவு பண்ணனும்… வலி அதிகமா வந்தா அவளே எழுந்து சொல்லப்போறா… இது சூட்டு வலியாத்தான் இருக்கும்… பிரசவ வலினா தாங்க முடியுமா… இப்படி தூங்கிட்டு இருப்பாளா” கந்தம்மாள் தன் பாட்டி வைத்தியத்தை வழக்கம் போல் அவனுக்கு விளக்க… ரிஷி அதை எல்லாம் கண்டுகொள்ள வில்லை… அர்ஜூனுக்காக மட்டுமே காத்திருக்க ஆரம்பித்திருந்தான்….
அடுத்து சிறிது நேரத்திலேயே…. இலட்சுமி… வைதேகி… நாராயணன்… நட்ராஜ் என அங்கு வந்திருக்க…
கண்மணியின் உறக்கத்தை… அவளை தொந்தரவு செய்யாமல் ரிஷியை அழைத்துக் கொண்டு வெளியே வந்திருந்தனர்… ரிஷிக்குத்தான் அனைவரும் அறிவுரை சொல்ல ஆரம்பித்திருந்தனர்… ரிஷியின் பதட்டம் அவர்கள் யாருக்குமே புரியவில்லை…
நட்ராஜ்… நாராயணன் கூட இந்த ஒருவாரத்தில் இயல்புக்கு வந்திருந்தனர்…
ரிஷியின் வார்த்தைகளில் இயல்புக்கு மாறான பதற்றம் கூடியிருந்தது…
”இ…இல்லம்மா… நான் கேட்டேன்மா…. இங்க அவ பக்கத்தில வந்தப்போ கூட என்கிட்ட சொன்னாம்மா…”
”எனக்கு என் உள்ளுணர்வு சொல்லுதும்மா…. அவளை உடனே ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகனும்னு…”
“ஆனால் ரிஷி… இப்போ கூட்டிட்டுப் போய் என்ன ஆகப் போகுது… என்ன பண்ண முடியும்… சிசேரியன் பண்ற நிலைமைலயா இருக்கா…” இலட்சுமி அவனைத் தேற்ற முயன்றவராக
“ஒண்ணும் இல்லடா… பிரசவ வலினா தெரியும்டா… வலியில தூங்கலாம் முடியாதுடா… நீ ஏண்டா இவ்ளோ பதட்டப்பட்ற… போய் தூங்கு” இலட்சுமி மகனைத் தேற்ற… ரிஷி அதில் எல்லாம் சமாதானம் அடையாதவனாக
”அம்மா… அவளப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு… உயிரே போற வலினாலும்… அவளுக்கு அதைச் சொல்லத் தெரியாது… கொசு கடிக்கிற வலி மாதிரி வலிக்குதுனு சொல்லிட்டு நிப்பா…. உங்களுக்கு அவளைப் பற்றி என்ன தெரியும்... நான் சொல்றதைப் புரிஞ்சிக்கங்கம்மா”
ரிஷியை ரிஷியின் நடவடிக்கையில் மொத்தக் குடும்பமும் விசித்திரமாக பார்க்க ஆரம்பித்த போதே ஆம்புலன்ஸ் வந்திருக்க… அதன் பின்னே அர்ஜூன் வந்திருக்க…
ஆம்புலன்சைப் பார்த்த அனைவரும் ரிஷியைப் பைத்தியக்காரனா நீ என்பது போல பார்த்திருக்க… ரிதன்யாதான் ரிஷிக்கு ஆதரவாக நின்றாள்…
“என்ன ரிஷி… எதுக்கு இவ்ளோ ஆர்ப்பாட்டம்” கேட்டது யாருமில்லை நாராயணன் தான்…
நட்ராஜும் தன் மாமனாரின் வார்த்தைகளை வழிமொழிய
“அவளை இப்போ ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போகனும்… போகனும்… யாரும் தடுக்காதீங்க…” ரிஷி உச்சஸ்தாயில் கத்த… ரிதன்யா வேகமாக…
“சரிண்ணா… சரிண்ணா… நீ டென்ஷன் ஆகாத…” அவளைப் பொறுத்தவரை அண்ணனுக்கு ஏதும் தெரியாது… ஆனால் இதற்கே இப்படி பதட்டமாகிறான் என்றால்… எல்லாம் தெரிந்தால் என்ன ஆகும்… ரிதன்யா தன் கவலைகளை எல்லாம் தனக்குள் புதைத்துக் கொண்டவளாக… தன் அண்ணனை சமாதானமாக்க முயற்சித்தாள்…
“அண்ணியை எழுப்புவோம்… வலி இருக்கான்னு கேட்போம்… அதுக்கப்புறம் பார்த்துக்கலாம்” என்று கண்மணி இருந்த அறைக்குள் சென்றவள் கண்மணியை எழுப்ப… முன் இருந்த சிரத்தையை விட இன்று அதிகமாக இருக்க… அப்போதும் அதைக் கண்மணி கண்டு கொள்ளாமல் எழுந்து அமர்ந்தவள்…
“என்ன ரிது” என்ற போதே அவளை சுற்றி… கந்தம்மாளும்… வைதேகியும்… இலட்சுமியும் வந்திருக்க… கண்மணி மூவரையும் பார்த்துவிட்டு சுவர்க்கடிகாரத்தைப் பார்க்க…
அது மணி அதிகாலை மூன்று எனக் காட்ட…
“ஏன்… இவ்ளோ காலைல ஏன்…” எனும் போதே… அவள் முதுகுதண்டில் வலி…
சட்டென்று அவள் முகம் சுருங்கி… மீண்டும் சமாளித்தவளாக…
“என்னாச்சு… ஏன் எல்லாரும் என்னைச் சுத்தி நிற்கறீங்க” எனக் குரல் உயர்த்திக் கேட்க…
“உனக்கு வலி ஏதும் இருக்கா… கண்மணி…” இலட்சுமி கேட்க… கண்மணி விழித்தாள்…
அவளுக்கே சொல்லத் தெரியவில்லை… சற்று முன் சிறு வலி எனத் தோன்றும்படி வந்ததுதான்… ஆனால் தாங்க முடியாத வலி என்பது போல இல்லை…
“இல்லை…. ஆனால்… லைட்டா…” எனும் போதே மீண்டும் அவளுக்கு வலிப்பது போல உணர்வு… எப்படி அதைச் சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்த போதே… ரிஷி மின்னலாக அங்கு நுழைந்தவன்…
“இவளை… இவகிட்ட போய் நீங்க கேட்கறீங்களே… இந்தப் பைத்தியக்காரிக்கு ஏதும் சொல்லத்தெரியாது… அவளுக்கு உச்சக்கட்ட வலினாலே அவ இப்படித்தான் இருப்பா… அவ முகத்தைப் பாருங்க… தெரியலையா உங்களுக்கு… நீங்கள்ளா புள்ள பெத்தவங்கதானே… புரிஞ்சுக்க முடியலையா ” ரிஷி படபடவென்று கன்மணியைக் கோபத்தோடு திட்டிக் கொண்டே… மற்றவர்களிடம் சுள்ளென்று விழுந்தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே…
“டேய் நீ வெளில போ… நாங்க பார்த்துக்கிறோம்..” இலட்சுமி ரிஷியை அதட்டி வெளியே போகச் சொல்ல
கண்மணி இப்போது… இலட்சுமியிடம்
“எனக்கு பெருசா வலி இல்லத்தை… ” என்றவள்… இப்போது உதட்டை அழுந்திக் கடிக்க முயன்றாள் வந்த வலியை தனக்குள் பொறுத்துக் கொள்ளும் விதத்தில்… ஆனால் அவளுக்கே அவளின் அசாதாரண நிலை அப்போதுதான் புரிய ஆரம்பித்திருக்க
“அத்தை எனக்கு ஒரு மாதிரி இருக்கு… வலிகூட ஓகே… ஆனால்…” என்று அடுத்து சொல்லாமல் தவிர்த்தவள்…
“எனக்கு பாத்ரூம் போகனும்…” எனும் போதே கண்கள் குளமாகி இருக்க…
வயதான பெண்கள் மூவருக்கும் புரிந்தது… கண்மணிக்கு பிரசவ வலி வந்து விட்டது என்பதை… ஆனால் கண்மணிக்கு அதைச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை என்பதை….
”பனிக்குடம் உடஞ்சிறப் போகுது… சீக்கிரம் கூட்டிட்டுப் போயிட்டு வாம்மா… “ இலட்சுமியிடம் கந்தம்மாள் அவசரப்படுத்த… வைதேகி பேத்தியை தன் தோளில் சாய்த்துக் கொண்டவராக படபடப்புடன் அமர்ந்திருக்க… அவர் இலட்சுமி கந்தம்மாளைப் போலத் தைரியத்துடன் இல்லை… கண்களில் அருவியாக கண்ணீர் கொட்டிக் கொண்டிருக்க
”ரிது… எல்லோரையும் வெளில கூட்டிட்டுப் போ… நீயும் போ” ஆண்களை அழைத்துக் கொண்டு ரிதன்யாவை வெளியேறச் சொன்ன இலட்சுமி கண்மணியை குளியலறைக்கு அழைக்க…
“பாட்டி… எனக்கு ரொம்ப வலிலாம் இல்லை… இப்போ எதுக்கு இவ்ளோ அழுகை…” வைதேகியை கண்மணி தேற்றியபடி இருக்க… ரிஷியோ யார் சொல்லியும் அங்கிருந்து நகராமல்… கண்மணியையே பார்த்துக் கொண்டிருந்தான்… கண்மணி தன் அன்னையுடன் குளியலறைக்குச் சென்று மறையும் வரை…
---
ஆனால் சில நிமிடத்திலேயே
கண்மணிக்கு சில நிமிடத்திற்கு ஒரு முறை விட்டு விட்டு வந்த வலி… நொடிக்கு ஒரு முறை வந்திருக்க… அதைச் சொல்லியும் இருக்க அந்த இடமே பரபரப்பாகி இருந்தது…. அனைவரும் பரப்பாகி ஆளாளுக்கு ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்க… இப்போது ரிஷி என்ற ஒரு ஜீவன் மட்டும் தன் பதட்டத்தை எல்லாம் புதைத்தபடி… அமைதியாக படியில் அமர்ந்திருந்தது…
அடுத்த சில மணி நேரங்களில் அவன் வாழ்க்கையில் காலம் அவனுக்கு என்ன வைத்திருக்கிறது…. நினைக்கவே பயமாக இருக்க…
அவனுல்லி மற்றதெல்லாம் அவன் நினைவில் இல்லை….
“நான் உன்கிட்ட என்ன வேண்டுனேன்… அவளுக்கு இப்போ வலி வரக்கூடாதுனு தானே… நீ அப்போ பொய்தானே…” மனம் இப்படி அரற்ற ஆரம்பித்திருக்க… யாரிடமும் சேராமல் தனித்து விட்டான் ரிஷி… அதே நேரம் கண்மணி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்க… சில நிமிடங்களில் அந்த இடம் மீண்டும் அமைதி ஆகி இருந்தது…
“ரிஷி…. எல்லோரும் கிளம்பிட்டாங்க… அர்ஜூன் சார் உங்களைக் கூட்டிட்டு வரச் சொன்னாங்க…” சத்யாவும் விக்கியும்… ரிஷியிடம் சொல்லி மருத்துவமனைக்கு அழைக்க…
ரிஷி அமைதியாக எழுந்தான்….
“டேய் ஒண்ணும் ஆகாதுடா… கண்மணியே பிரீ மெச்சூர் பேபி தானே… இதெல்லாம் இப்போ சகஜம்டா…” விக்கி ரிஷிக்கு ஆறுதல் சொல்ல… ரிஷி இகழ்ச்சியாகச் இதழ் வளைத்தான்
“ஹாஸ்பிட்டல் போகலாமா…” அவன் குரல் விரக்தியின் உச்சத்தில் இருக்க… சத்யாவும் விக்கியும் ரிஷியின் குரல் மாற்றத்தில் அவனை அதிர்ச்சியாகப் பார்க்க…. ரிஷி ஆத்திரம்… ஆவேசம்…. கோபம்… ஏமாற்றம்… வேதனை எதையும் காட்ட வில்லை… மாறாக
“நீங்க வர்றீங்களா இல்லை… நான் காரை எடுத்துட்டு கிளம்பவா..” தன் முன் சிலையாக நின்ற விக்கி சத்யாவைப் பார்த்துக் கேட்டபடி…. முன்னே நடக்க ஆரம்பித்திருந்தான் ரிஷிகேஷ்…
---
அம்பகம் மருத்துவமனை…
பனிக்குடம் உடைந்தால் கண்மணிக்கு இன்னும் சிக்கலாகி விடும் என் அர்ஜூனிடம் மருத்துவர் மீனாட்சி சொல்லிக் கொண்டிருக்க… ரிஷியும் இப்போது அங்கு வந்து சேர்ந்திருந்தான்….
“சிசேரியன் பண்றதுதான் சரி.. நீங்க என்ன சொல்றீங்க ரிஷி” ரிஷியிடம் கேட்க…
”ஹ்ம்ம்… சரி டாக்டர்…” தலை ஆட்டியவனிடம்….
“ஃபார்ம்ஸ் தருவாங்க… ஃபில் பண்ணிருங்க” என்று எழுந்த மீனாட்சி… செல்லும் தருவாயில்
“என்னால முடிந்த அளவுக்கு போராட்றேன் ரிஷி…” ரிஷி வெற்று பார்வையுடன் வெளியே வந்தவன்… கண்மணியிடம் சென்றான்… வேறு யாரிடமும் ஏதும் பேசவில்லை…
“சி செக்ஷனுக்கு உனக்கு ஓகே வா கண்மணி… “ அவன் கண்மணியிடம் வேறெதுவும் பேசவில்லை…. நேரடியாக இந்த வார்த்தைகளை மட்டுமே இயந்திரக் கதியாகக் கேட்டான்…
ஆனால் கண்மணி அப்போதும் ரிஷியிடம் பேசாமல் தவிர்த்தவளாக… தன் மருத்துவரைப் பார்த்தாள் கண்மணி….
“ஆன்ட்டி…. அல்ரெடி சொல்லிட்டேன்… என் குழந்தைகளோட நிலைமைக்கு எது ஓகேவோ அந்த ப்ரொசீஜர்க்கு நான் ரெடி… குழந்தையோட அப்பாகிட்ட சைன் வாங்கிக்க…”
”தான் கண்மணியின் கணவன் இல்லை… அவளின் ரிஷி இல்லை… வெறும் குழந்தைகளின் தந்தை…” நினைத்த போதே… ரிஷியின் தொண்டைக்குழி துடித்தது… கை முஷ்டி இறுக ஆரம்பித்திருந்தது…
கோபத்திலா… பயத்திலா… ஆக்ரோஷத்திலா… பச்சாதாபத்திலா… அவன் கண்கள் சிவக்க ஆரம்பித்திருக்க….
கண்மணியின் பிடிவாதத்தைன் எல்லையை உணர்ந்தவன்…. அடுத்த நொடி ரிஷி அந்த அறையை விட்டு வெளியேறி இருந்தான்…
---
கண்மணிக்கு சில பரிசோதனைகள் எடுக்க ஆரம்பித்து முடிக்கப்பட்டிருக்க…. மீனாட்சி… மொத்தக் குடும்ப உறுப்பினர்களையும் அழைத்திருந்தார் அவரது அறைக்கு
”ரிஷிகிட்ட மட்டும் சொல்லி இருக்கலாம்…. ஆனால் இப்போ அவருக்கு சொல்றதை விட… உங்க எல்லோர் கிட்டயும் சொல்றதுதான் முறைனு தோணுச்சு… அதான் கூப்பிட்டேன்” பேச ஆரம்பித்தார் மீனாட்சி…
“கண்மணிக்கு சிசேரியன் பண்ண முடியாது…. அவ உடம்புல அம்மா போட்ருக்கதுனால இன்னுமே ஆறாம இருக்கிறது மட்டுமில்லாமல்… அவங்க வயிற்றுப் பகுதில கத்தி வைக்கவே முடியாதபடி கொப்புளம் இருக்கு கத்தியை வைக்கிறது ரொம்ப கஷ்டம்… இருந்தாலும் நாங்க ட்ரை பண்ண முடிவெடுத்தாலும் அடுத்து கண்மணியோட இரத்த அழுத்தம் நார்மலா இல்லை… சிசேரியன் இன்னுமே காம்ளிகேட் ஆகிரும்… வெயிட் பண்ணிப் பார்க்கலாம்னா… அவளுக்கு பெயினும் இருக்கு…. அண்ட் கர்ப்பபை வாயும் திறந்திருச்சு… நார்மல் டெலிவரிக்கே ட்ரை பண்ணலாம்னு இருக்கோம்… உங்க எல்லோருக்கும் ஓகே தானே… ” முழுவதுமாகச் சொல்லாமல் ஓரளவு விசயத்தை சொல்லி…. விளக்க…
“என் பொண்ணுக்கு ஒண்ணும் ஆகாதுல…” நட்ராஜ் குரல் உடைந்திருக்க…
“என் மருமகன் கேட்கிறார்ல… சொல்லுங்க…” நாராயணன் குரலை உயர்த்தி இருக்க… என்னதான் அவர் குரல் உயர்ந்தாலும் பதட்டம் வந்திருந்தது…
தன் மருமகனுக்கும் தன் நிலை வந்து விடுமோ… அந்த பயம் மட்டுமே அவரை சூழ்ந்திருக்க…. உடல் அவரையுமறியாமல் நடுங்க ஆரம்பித்திருக்க
தன் தாத்தாவின் நிலை அறிந்தவனாக அர்ஜூன் அவரைத் தனக்குள் கொண்டு வந்தவனாக… ஆற்றியபடியே
“சாதாரண டெலிவரிதானே…… ஏன் ஆளாளுக்கு டாக்டரை டார்ச்சர் பண்றீங்க…. நம்ம ஹாஸ்பிட்டல்ன்றதுனால…. இவ்ளோ கொஸ்ட்டின் பண்றோம்…. இதே மத்தவங்கள்ளாம் இப்படி பேசுவாங்களா… கடவுளா நெனச்சு காப்பாத்தித் தாங்கன்னு கெஞ்சிருப்பாங்க… “
அதே நேரம் வெங்கட ராகவனும் அங்கு வந்து சேர்ந்திருக்க.. நடந்ததை எல்லாம் கேட்டவர்…
“அட… என் குல தெய்வம் அது…. தனியா நின்னு…. எமனையே தள்ளி நிக்க வச்சுட்டு…. அத்தனை பேரையும் காப்பாத்தி… பிரசவமும் பார்த்த என் சாமி… அதுக்கு என்ன வந்துரும்னு இவ்ளோ ஃபீல் பண்றீங்க… அது தைரியத்துக்கு முன்னாடி எது வந்தாலும் ஓடிப் போயிரும்…. ரிஷித் தம்பி… உனக்குத் தெரியாதா…. நீ ஏன் இப்படி இருக்க… “
இலட்சுமி இப்போது வேகமாக ஓடி வந்தார்…
“சம்பந்தி …. கண்மணிக்கு பெயின் வந்துருச்சு… லேபர் வார்டுக்கு கூட்டிட்டு போகனும்னு சொன்னாங்க…. உங்களைப் பார்க்கனும்னு சொன்னா… ” என்று நட்ராஜிடம் சொல்ல… நட்ராஜ் பதறி ஓடி மகளிடம் சென்றார்… அனைவருமே அவர் பின் சென்றனர்… ரிஷியும் ஓடினான் அவர்கள் பின்னே
அறையில் இருந்த கண்மணி பெரிதாக வலியில் துடிக்கவெல்லாம் இல்லை… தன் தந்தையை பார்த்தவள்… மகிழ்ச்சியுடன் புன்னகைத்தவள்… அவரைத் தன்னருகே அழைத்தவள்…
“அப்பா… நான் அம்மா மாதிரி இல்லை… உங்ககிட்ட சொல்லிட்டு உங்களைப் பார்த்துட்டுத்தான் டெலிவரிக்குப் போறேன்… உங்க ப்ளெஸ்ஸிங் மட்டும் எனக்கு வேண்டும்…”
அடுத்து நாரயணனிடம்… வைதேகி… இலட்சுமி… வேங்கடராகவன்… ரிதன்யா அர்ஜூன் இருவரிடம் மட்டும் பேசாமல் மற்ற அனைவரிடமும் பேசி முடித்தவள்…
“நான் ரிதுகிட்டயும்… அர்ஜூன் கிட்டயும் தனியா பேசனும்” என்று கண்மணி மற்ற அனைவரையும் வெளியே போகச் சொல்ல… ரிஷி அவளையே பார்த்தபடி நின்றிருந்தான் வாசலிலேயே கண்களின் ஈரம் அவன் பார்வையில் இருந்து கண்மணியையே மறைத்திருந்தது…
ரிஷி என்ற ஒருவன் இருப்பதையே மறந்த பாவனையில் அவனைத் தவிர்த்து கண்மணி அனைவரிடமும் பேசிக் கொண்டிருக்க…
இலட்சுமி இப்போது…
“ஏன் கண்மணி… என் புள்ளைகிட்ட மட்டும் பேச மாட்டேங்கிற…” தழுதழுத்திருக்க…
அதற்கும் பதில் சொல்லவில்லை கண்மணி…. மாறாக
“ரிதன்யா… அர்ஜூன் கிட்ட மட்டும் தனியா பேசனும்…. மத்தவங்கள்ளாம் வெளிய போங்க ” பிடிவாதக் குரல் உயர்ந்து இன்னும் அதிகமாகி இருக்க
“சரிம்மா… சரிம்மா… டென்ஷன் ஆகாதம்மா… நான் அவனைக் கூட்டிட்டு போறேன்…” ரிஷியை இலட்சுமி இழுத்துச் சென்றிருக்க… கண்மணி… ரிதன்யா… அர்ஜூன் மட்டுமே அந்த அறையில்
ரிதன்யாவைப் பார்த்தாள் கண்மணி…
”ரிது… உன்கிட்ட இந்த ஒரு வாரம் பழகினது… பேசினது எல்லாமே என்னோட அதிர்ஷ்டம்… நான் ஏற்கனவே பலமுறை உன்கிட்ட கேட்டுகிட்டதுதான்… மறுபடியும் இப்போ கேட்கிறேன்… ரிஷி பார்த்துப்பாரு எங்க குழந்தையை… அது எனக்குத் தெரியும்… ஆனாலும் நீ என் குழந்தைக்கு சப்போர்ட்டா இருக்கனும்… அவ்ளோதான்… எனக்காக நீ அதைப் பண்ணுவியா… பண்ணுவேன்னு நினைக்கிறேன் ” என்றவள் ரிதன்யாவின் சம்மததிற்க்காகவெல்லாம் காத்திருக்கவில்லை… காரணம் இருவரும் இதைப் பற்றி ஏற்கனவே பேசி வைத்திருந்ததுதான்…
கண்மணி ரிதன்யாவிடம் தன் பேச்சினை முடித்தவளாக
“நான் அர்ஜூன் கிட்ட தனியா பேசனும்…” ரிதன்யாவிடம் சொல்ல…
ரிதன்யா அவள் அருகே வந்தவள்…
“வெயிட் பண்ணிட்டு இருக்கேன் அண்ணி… குல தெய்வம் ஏமாத்தாதுன்னு சொல்வாங்க தானே… ” அதற்கு மேல் பேச முடியாமல் ரிதன்யா வெடித்திருக்க
“எனக்கு டைம் இல்ல ரிது… உனக்கு ஆறுதல் வார்த்தைலாம் சொல்லி உன்னைத் தேற்ற… ப்ளீஸ்… அர்ஜூன் கிட்ட பேசனும்.” மனசாட்சியே இல்லாமல் ரிதன்யாவை ஆறுதல் கூடச் சொல்லாமல் வாசல் கதவைக் காட்ட… ரிதன்யா வெளியேறி இருக்க… இப்போது அர்ஜூனும் கண்மணியும் மட்டுமே
அர்ஜூன் அவளை வெறித்தபடி நின்றிருக்க… அந்தப் பார்வையில்… இன்று கோபமும்… ஏமாற்றமும் மட்டுமே….
“ஹலோ… அர்ஜூன்… பேசலாமா… கோபமா என் மேல”
அர்ஜூன் அவளிடம்…
“நிறைய கோபம் இருக்கு…. ஆனால் காட்டத்தான் முடியல….”
“காட்ட நேரமும் இல்லை…. பேசலாமா… “
“தேவையில்லை…. எனக்கு எல்லாம் தெரியும்டி…. ரிஷி சொல்லிட்டான்…. எல்லோரையும் ஏமாதிட்டேல்ல” எனும் போதே கண்மணியின் கண்களில் அதிர்ச்சி… அவளின் இதயத்துடிப்பு எகிற ஆரம்பித்திருக்க
”ரிஷி சொல்லிட்டான்னா… ரிஷிக்கு என்ன தெரியும்… ” பதட்டத்துடன் கேட்டவள்… அர்ஜூனை கண்ணில் வலியுடன் பார்க்க
அர்ஜூன் ரிஷியைப் பற்றிய பேச்சைத் தவிர்த்தவனாக…
“உனக்கென்ன.. நிவேதாவை நான் மேரேஜ் பண்ணிக்கனும் அவ்ளோதானே… ஆனால் நீ வந்து என் மேரேஜை நடத்தி வை… அப்போ பண்ணிக்கிறேன்.. போதுமா…” என்றபடி வெளியேறி இருக்க…
கண்மணியின் மனதில் இப்போது வேறொன்றுமில்லை…. ரிஷி ரிஷி மட்டுமே…. அவனுக்கு உண்மை தெரியுமா… மனமெங்கும் ஆயிரம் வலி…. ரிஷியை உடனே பார்க்க வேண்டும் என்று தோன்றிய போதே…
செவிலியர் உள்ளே வந்திருக்க…
“மேம்… இதுல நீங்க ஒரு சைன் போட்ருங்க…” என ஒரு காகிதத்தை நீட்ட…. கண்மணியும் அவள் சொன்ன இடங்களில் கையெழுத்துப் போட….
“ரிஷி சாரோட சைனும் வேணும்… வெளியதானே இருக்கார்…. அவர்கிட்ட வாங்கிக்கிறேன்” என்று வெளியேறப் போக…
“இல்லை அவரை உள்ள வரச் சொல்லுங்க….” கண்மணியின் குரலில் எதிர்பார்ப்பும்… பதட்டமும்… பரிதவிப்பும் வந்திருக்க… கண்மணி சொன்னது போல அந்த செவிலியர் ரிஷியை உள்ளே அழைத்திருந்தார்…. இப்போது ரிஷியும் உள்ளே வந்திருந்தான்…
“சார்… இந்த பேப்பர்ல சைன் போடனும்…” என்று பேனாவை நீட்ட… ரிஷி அந்தப் பெண்ணிடமிருந்து காகிதங்களை மட்டும் வாங்கிக் கொண்டவனாக…. தன்னிடமிருந்த பேனாவை கையில் எடுக்க…
“நர்ஸ்… நீங்க போங்க… டென் மினிட்ஸ் மட்டும்” ரிஷியைப் பார்த்தபடியேச் சொல்ல… ரிஷியோ தன் பார்வையை… அந்த தாளில் மட்டுமே வைத்திருந்தான்…
கண்மணி ரிஷியையேப் பார்த்திருக்க… அவள் ரிஷிக்கண்ணாவின் பிடிவாதம் வெகு நாட்களுக்குப் பிறகு அவளிடம்… அதைப் பார்த்த கண்மணியின் கண்களில் சிரிப்பு வந்திருக்க
“ஹலோ ரிஷிக்…” எனக் கண்மணி அழைக்க ஆரம்பித்த போதே…. அவன் கைகளில் இருந்த பேனா அந்தச் சுவரில் பட்டு சுக்கு நூறாக உடைந்திருந்தது… அவன் தூக்கி எறிந்த வேகத்தில்…’’
கண்மணியின் வார்த்தைகள் பாதியிலேயே நின்று கண்கள் அதிர்ச்சியுடன் நிலைகுத்தி இருக்க…. பதட்டத்துடன் எழ முயற்சிக்க…
ரிஷி அவள் அருகே வந்தவன்… அவளை ஒற்றை விரல் காட்டி எச்சரித்தபடி
“கூப்பிடாதா என்னை… இவ்ளோ நாள் எப்டி இருந்தியோ அப்படியே இரு… ஆனால் நான் தான் தப்பு பண்ணிட்டேன்டி… உன் ரிஷிக்கண்ணாவா பிடிவாதம் பிடிக்காமல்… உன்கிட்ட கெஞ்சிட்டு நின்னுட்டு இருந்தேன்…. அதான் நான் பண்ணின தப்பு… இப்போ உன் ரிஷிக்கண்ணாவா இருக்கேண்டி… அவன் அவ்ளோ சீக்கிரம் சமாதானம் ஆக மாட்டான்… அவனை சமாதானம் பண்றது அவ்ளோ ஈசி இல்லைதானே… அது உனக்குத் தெரியும் தானே… நீ சொன்ன பத்து நிமிசத்துல அது முடியாதுதானே… அப்போ என்கிட்ட பேசாத”
“ரிஷி….” கண்மணியின் அழுகை கலந்த அழைப்புகள் எல்லாம் காற்றில் கரைந்திருக்க…. அடுத்த நொடி…. அவன் அங்கு நிற்கவில்லை… கண்மணியின் அழைப்பையும் கண்டு கொள்ளாமல் வெளியே சென்று விட்டான்…
----
வெளியே வந்தவன்…. அங்கிருந்த யாரிடமும்… பேசாமல்… ஏன் நிமிர்ந்து கூடப் பார்க்காமல்… அங்கிருந்து வெளி வாசலை நோக்கிப் போக… யாருக்குமே ஒன்றுமே புரியவில்லை… என் ரிஷிக்கு இவ்வளவு கோபம் ஆத்திரம்… ஆவேசம் என…
எல்லாம் தெரிந்த ரிதன்யா மற்றும் அர்ஜூன் இருவரும் அமைதியாக இருக்க…
”டேய் ரிஷி…” விக்கி வேகமாக ரிஷி பின்னால் ஓடிச் சென்றவனாக…. ரிஷியைக் கைப்பிடித்து நிறுத்தி
“எங்கடா போற…”
“அதுவும் இந்த டைம்ல… கண்மணியை விட்டுட்டு எங்கட போற” ரிஷியை நிறுத்தி கேள்வி கேட்க… அலட்சியமாக நண்பனைப் பார்த்தபடியே தன் தோள்ப்பட்டையில் இருந்த கைகளை ஆக்ரோஷமாக விலக்கியவன்… வேக வேகமாக நடந்து செல்ல….
விக்கியும் பின்னால் ஓட எத்தனிக்க…. அப்போது அர்ஜூன் வந்து நிறுத்தினான் விக்கியை…
“விக்கி…. நீ போகாத….” என்றபடி… தன் அருகில் நின்ற சத்யாவைப் பார்த்தவன்…
“சத்யா… நீங்க போங்க… ரிஷியைப் பார்த்துக்கங்க…” சத்யாவிடம் சொல்ல…
சத்யாவும்… ரிஷி பின்னால் போயிருக்க… விக்கி அர்ஜூனைப் பார்த்தான்
“இவன் ஏன் இப்படி நடந்துக்கிறான்னு தெரியல அர்ஜூன்… “ புலம்பிய விக்கியிடம் அர்ஜூன் பதில் சொல்லாமல்…. கண்மணியை நோக்கிச் சென்றிருந்தான்….
அதிகாலை 4 மணி அளவில்… கண்மணிக்கு வலி அதிகமாகி இருக்க… கண்மணி பிரசவ அறைக்கு மாற்றப்பட்டிருந்தாள்….
அந்த அறையின் வெளியே….. மொத்தக் குடும்பமும் பதபதைப்புடன் காத்திருக்க… ரிதன்யாவுக்கு மட்டும் இதயத் துடிப்பு எகிறிக் கொண்டிருந்தது… அவளிடம் பதட்டம் ஒருபுறம் கண்மணியை நினைத்து என்றால் இன்னொரு புறம் கண்மணியின் விசயத்தை யாருக்கும் தெரியப்படுத்தாமல் இருப்பது… மற்ற அனைவரும் சாதாரணமாக ஒரு பெண் பிரசவ அறையில் இருக்கும் பரிதவிப்பில் மட்டுமே இருக்க… அவளோ அனைத்தையும் தெரிந்த நபராக … அதே நேரம் அதைச் சொல்ல முடியாத நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தாள்…
இவ்வளவு படபடப்பிலும்… பதட்டத்திலும் அவள் மனம் கண்மணிக்காக.. . தன் அண்ணிக்காக ஒருபுறம் வேண்டிக் கொண்டே இருக்க… விக்கி அவள் அருகில் வந்து அமர்ந்தவன்…
“என்னடி ஆச்சு… நீ ஏன் இவ்வளவு நெர்வஸா இருக்க… ஒண்ணும் இல்லடா…” அவளின் பதட்டம் பிரசவத்தினை நினைத்த பதட்டம் என நினைத்து அவளை ஆறுதல் படுத்த… ரிதன்யாவோ அடுத்த நொடி… அவனிடம் தேம்ப ஆரம்பித்திருக்க…
விக்கிக்கு ஒன்றும் புரியவில்லை…
“ஏய் ரிது… என்னாச்சு…” அவளை உலுக்க ஆரம்பிக்க… அவளின் அழுகை இப்போது அதன் வேகத்தை அதிகரிக்க… மற்ற அனைவரின் கவனமும் அறையின் உள்ளே இருந்த கண்மணியிடமிருந்து ரிதன்யாவுக்கு மாறியது…
அனைவரும் அவளிடம் ஓடி வந்தவர்களாக… ஒவ்வொருவரும் அவளை ஆறுதல் படுத்த முயல…
“அண்ணிக்கு ஒரு குழந்தை இல்லை…. ட்வின்ஸ்… ” ரிதன்யா தேம்பல்களுக்கிடையே சொல்ல ஆரம்பித்திருக்க…
“அண்ணிக்கு நாம நினைக்கிற மாதிரி பிரசவம் சுலபமா நடக்கப் போறதில்லை… “
அவள் ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்திருந்தாள் அழுகையோடே சேர்ந்து… தன் மனதில் இருந்த அனைத்து உண்மைகளையும் உடைத்திருந்தாள் ரிதன்யா…
---
கண்மணி நினைத்தது போல் அவளுக்கு பிரசவம் சுலபமாக இல்லை… கடுமையான வலி வந்ததே தவிர குழந்தை வெளிவராமல் இருக்க… அவள் முயற்சிகள் அத்தனையும் வீணாகிப் போயிருக்க… அதில் களைத்தும் போயிருக்க கொஞ்சம் கொஞ்சமாக கண்மணியின் நினைவும் அவ்வப்போது தப்ப ஆரம்பித்திருக்க… மருத்துவ உபகரணங்களையும்… கண்மணியையும் கண்காணித்தபடியே இருந்த மீனாட்சியின் முகம் மொத்தமாக வாடிப்போயிருந்தது….
”கண்மணி…” மீனாட்சி…. அருகில் இருந்த மெஷினில் கண்மணி இதயத் துடிப்பை பார்த்தபடியே அழைக்க…
கண்மணி அரை மயக்கத்தில் அவரைப் பார்த்தாள்…
“ஆ…ன்.. ட்டி… ” கண்மணிக்கு சுவாசம் சீராக இல்லை என்பது அவள் அழைத்த அழைப்பிலேயே மீனாட்சிக்குப் புரிந்திருக்க… தன் வாயில் மூடி இருந்த துணியை அவிழ்க்கச் சொன்ன மீனாட்சி அங்கிருந்த மற்ற மருத்துவர்களிடம் பேச ஆரம்பித்தார்…
“சிசேரியன் போயிறலாம்… இனிமேல அவளால முடியாது… பல்ஸும் குறைஞ்சுட்டே போகுது…. அட்லீஸ்ட் குழ்ந்தைகளையாவது காப்பாற்ற ட்ரை பண்ணலாம்”
கண்மணிக்கு அவர் சொல்வதெல்லாம் காதில் கேட்டுக் கொண்டிருக்கும் போதே… கொஞ்சம் கொஞ்சமாக அவர் குரல் அவளை விட்டு விலகி வெகு தூரத்தில் விலகிச் சென்று கொண்டிருப்பது போல் புரிய… அதே நேரம் வயிற்றில் பெரும் வலியும் ஏற்பட ஆரம்பித்திருக்க… அவளின் தொண்டையில் மட்டுமே அவளின் கவனம் வந்திருந்தது… சுவாசத்தை அங்கிருந்து எடுக்கவே அவள் போராடிக் கொண்டிருக்க… சட்டென்று அவள் சுவாசமே அவளுக்கு சித்திரவதையாக மாறி இருக்க அவளின் நினைவுகள் என்பது அவளிடம் சுத்தமாக இல்லாமல் போக ஆரம்பித்திருந்தது…
”ஆக்சிசன் செக் பண்ணிட்டே இருங்க… பல்சும்….” சைகை காட்டியவராக… வெளியே வந்தார் மீனாட்சி…
---
மொத்த குடும்பமும்… அவர் முன் வந்து நின்றிருக்க… மீனாட்சியின் தலை தானாகவே குனிந்திருக்க… யாருக்குமே அங்கு பேச்சு இல்லை…
“யெஸ் ஷீ இஸ் இன் வெரி கிரிட்டிக்கல்… கான்ஷியஸ் இல்லை…”
“ராஜ்… நீங்க வந்து அவகிட்ட பேசிப்பாருங்க…. உங்க வாய்ஸை அடையாளம் தெரியுதான்னு பார்ப்போம்” நட்ராஜை அழைக்க…
நட்ராஜ்… உடல் நடுங்கியது….
“இன்னொரு பிரிவை ஏற்கும் அளவுக்கு அந்த உயிருக்கு சக்தி இல்லை…”
நாராயணன் ஒரு புறம் ஒடுங்கி அமர்ந்து விட்டார்…
வேங்கட ராகவன் வேகமாக…
“நீங்க போங்க டாக்டர்… நான் கூட்டிட்டு வர்றேன்” என நட்ராஜை அழைத்துக் கொண்டு உள்ளே வர… கண்மணி முகம் மட்டுமே தெரிந்தது… அதுவுமே ஆக்ஸிஜன் சிலிண்டரின் உதவியால் கண்மணி சுவாசத்தினையே போராடி போராடி வாங்கிக் கொண்டிருக்க…
கண்மணி அவர் முதன் முதலில் பார்த்த கண்மணி… அத்தனை வேகமாக… அனைவருக்கும் முதலுதவி அளித்தவள்… திருமணமாகாத பெண்… இருந்த போதிலும்… கர்ப்பமான பெண்ணைப் பார்த்து பயப்படாமல் அந்தப் பெண்ணுக்குத் தேவையான ஆறுதலும்… நம்பிக்கை வார்த்தைகளும் சொன்னவள்… இன்று சுவாசத்துக்கே போராடிக் கொண்டிருந்தாள்… தன் குழந்தைகளோடு… வேங்கட ராகவனே நம்பிக்கை இழந்த தருணம் அது… நட்ராஜ் நிலையைக் சொல்லவா வேண்டும்…
“கண்மணிடா… அப்பாடாம்மா…” அதற்கு மேல் வார்த்தைகள் வராமல் நட்ராஜ் கதறி இருக்க…
கண்மணியின் நிலையில் சுத்தமாக மாறுபாடே இல்லை…. அவர் மட்டுமல்ல… அர்ஜூன்… நாராயணன்… இலட்சுமி… வைதேகி… என யார் குரலும் கண்மணியின் நிலையை முன்னேற்றதுக்கு கொண்டு வரவில்லை…
“ரிஷி…” அத்தனை பேரின் வாயில் இருந்தும் மந்திர வார்த்தையாக அந்த ஒற்றைச் சொல் வந்திருந்தது…
”ரிஷி வந்து பேசினா…. கண்மணிக்கு கண்டிப்பா கான்ஷியஸ் வந்துரும்…”
“ரிஷிக்கு போன் பண்ணுங்க…”
“தெரிஞ்சுதான் அவன் இங்கயிருந்து போனானா…” இலட்சுமி ஒரு புறம் அழுது கொண்டிருக்க….
மீனாட்சி வெளியே வந்தவர்… அர்ஜூனை மட்டும் அழைத்தார்…
“ஆக்ஸிஜன் மாஸ்க்கை எடுக்கப் போறோம் அர்ஜூன்… நீங்கதான் எல்லார்கிட்டையும் சொல்லனும்…. இனி சிசேரியனும் பண்ண முடியாது…. சாரி அர்ஜூன்… நீங்க கொஞ்சம் தைரியமா இருக்கனும்” மீனாட்சியின் குரல் உள்ளே போயிருக்க
“கண்மணியோட ஒரே ஆசை ஒரு குழந்தையையாவது காப்பாத்தனும்னு… அது கூட நிறைவேறாதா…” அர்ஜூனின் கண்கள் குளம் கட்டியிருக்க… வேகமாக கண்மணியிடம் ஓடினான்… அவள் அருகே மண்டியிட்டு அமர்ந்தவன்
“இதுக்குத்தானாடி உன்னை நான் கருவில இருக்கும் போது காப்பாத்தினேன்…. எ… எனக்கு என்ன செய்யுறதுன்னே தெரியலையே… அந்த ஏழு வயசுல எனக்கு தோணின அறிவு கூட இப்போ வேலை செய்யலையே…”
“நான் என்ன செய்யனும்… உன் உயிரை மீட்டெடுத்து வர என்ன செய்யனும்…” அர்ஜூனின் கதறல்கள் கண்மணிக்கு விழுமா என்ன…
கண்மணி… இருள் தேசத்தை நோக்கி தன் பயணத்தை ஆரம்பித்திருந்தாள்… இவ்வுலக வாழ்க்கை நிகழ்வுகள் அனைத்தும் அவளின் நினைவுகளில் அழிக்கப்பட்டு இருந்து வெகு தூரம் விலகி செல்ல ஆரம்பித்திருக்க…
உடலெங்கும்…. முகமெங்கும் ரத்தம்…. வயிற்றில் குத்தப்பட்ட கத்தியில் இருந்து ரத்தம் வடிந்து ஓடியிருக்க… மீண்டும் மீண்டும் அவன் கத்தியினால் குத்துகள் வாங்கிக் கொண்டே இருக்க… தடுக்க முடியாமல் தரையில் வீழ்ந்திருந்தான் அவன்….
இருளை நோக்கிய கண்மணியின் பயணம் சட்டென்று நின்றிருந்தது…
எப்போதும் நினைவில் இருக்கும் கண்மணியை மயக்கத்திற்கு கொண்டு செல்லும் காட்சி…. இன்றோ அவளை மயக்கத்தில் இருந்து நினைவுக்கு கொண்டு வர முயல… கண்மணி திணற ஆரம்பித்தாள்… இந்தப் போராட்டத்தில்…. அவளின் உடல் மொத்தமும்… அந்தக் காட்சியில் அதிர ஆரம்பித்திருக்க… அவளின் அனைத்து இயக்கங்களும் மீண்டும் ஆரம்பித்திருக்க… அந்தத் திணறலோடு… அவளுக்கு பிரசவ வலியும் வந்திருக்க
கண்மணியின் உடல் அதிர்வில்… அர்ஜூன் வேகமாக… நிமிர்ந்தான் கண்களில் கண்ணீரோடு…
“நீங்க போங்க அர்ஜூன்….” அர்ஜூன் வெளியேற்றப்பட்டிருந்தான்… மருத்துவக் குழு பரபரப்புடன் செயல்பட ஆரம்பித்திருந்தது…
“க…….. ண்……ம………ணி…” குரல் கண்மணியின் காதில் ஒலிக்க… அந்தக் குரல்
”அவள் ரிஷிக்கண்ணா…”
“அவள் ரிஷிக்கண்ணாவின் குரல்…” ஆனால் வேதனையுடனும்… வலியுடனும் ஒலிக்கிறதே…. கண்மணியின் பதட்டம் இன்னுமே அதிகரித்திருக்க…
அதே நேரம்… கண்மணி அவளின் முதல் குழந்தையை பிரசவித்திருந்தாள்… அதுவும் பெண் குழந்தை….
மொத்தக் குடும்பமும்… அந்தக் குழந்தையை மகிழ்ச்சி ஒருபுறம்…. துக்கம் ஒரு புறம் என பார்த்திருக்க…
“பிரிமெஜ்ஜூர்ட்… அதுவும் ரெண்டாவது கரு…. இப்போதைக்கு உங்ககிட்ட கொடுக்க முடியாது…. உடனடியா ட்ரீட்மெண்ட் பண்ணனும்….” என்றபடி குழந்தைக்கான தனி அறையில் வைக்கப்பட்ட…
கண்மணி இன்னுமே நினைவுகளோடு போராடிக் கொண்டிருந்தாள்… குழந்தை பிறந்தது கூடத் தெரியாமல்…
அவள் நினைவில் ரிஷி… அவள் ரிஷிக்கண்ணா மட்டுமே….
”என் ரிஷிக்கண்ணாவுக்கு…. ஏதோ ஒரு ஆபத்து… என்னைத் தேடுகிறான்… நான் அவனிடம் போக வேண்டும்… அவனுக்கு என்னை விட்டால் வேறு யாருமே இல்லை…”
அந்த மண்டபம்… வீழ்ந்து கிடந்த அவனின் முகம் மீண்டும் கண் முன் வர… அது… அது அவள் ரிஷிக்கண்ணா… அவள் ரிஷிக்கண்ணா உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றான்…. அவள் உயிர்… அவள் உயிராக இருப்பவன்…
கண்களைத் திறந்திருந்தாள் கண்மணி…. அதே நேரம் அவளின் இரண்டாவது பிரசவமும் நிகழ்ந்திருக்க… அவளின் உயிர் எங்கோ போராடிக் கொண்டிருக்க… அவள் காதில் அவனும் அவளுமாக சேர்ந்து உயிர் கொடுத்த கரு இந்த உலகத்தில் அடி எடுத்து வைத்த அடையாளமாக அழுகுரலும் கேட்டிருக்க… கண்மணியின் கண்களின் ஓரங்களில் கண்ணீர் வழிந்திருக்க…
“அ… ர்.. ஜூ… ன்…………..” என்று வலி நிறைந்த குரலோடு அர்ஜூனை கதறி அழைத்திருந்தாள்…
/* ஒரு முறை பிறந்தேன் ஒரு முறை பிறந்தேன் உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்
மனதினில் உன்னை சுமப்பதினாலே மரணத்தை தாண்டி வாழ்திருப்பேன்
என் கண்ணில் உன்னை வைத்தே காட்சிகளை பார்ப்பேன்
ஒரு நிமிடம் உன்னை மறக்க முயன்றதிலே தோற்றேன்
நீயே என் இதயம் மடி…… நீயே என் ஜீவனடி…….
ஒரே உடல் ஒரே உயிர் ஒரே மனம் நினைக்கையில் இனிக்கிறதே
நீயே என் இதயமடி…… நீயே என் ஜீவனடி……*/
Jii..Babies are safe.. About Rk jii..