/* ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
அப்டேட் கைல இருந்தும் போட முடியாத சூழ்நிலை... பிஸி ஆகிட்டேன்... ஒவ்வொரு எபி போடும் போது உங்ககிட்ட பேசிட்டு... அந்த எபிக்கான விளக்கம் கொடுத்துட்டு அப்டேட் போடனும்னு நினைப்பேன்... முடியுறதுல்ல... அட்லீஸ்ட் எபியாவது போட்ருவோம்னுதான்.... நான் அப்டேட் மட்டும் போட்டுட்டு போயிருவேன்...
கமெண்ட்ஸ்ல... சாட்ல... மெயில்ல...
கண்மணி ரிஷியை பிரிச்சுறாதிங்க... இந்த மெசேஜ் தான்...
அண்ட் ரிஷி கண்மணிக்கு ஹேப்பி சீன்ஸ் இல்லாமல் ... கதையை முடிக்காதிங்கன்னு....
நான் கேட்டது இதை... ஆனா அவங்க கொடுத்தது இது...
இப்போ ரீசண்டா ஒரு டையலாக் வைரலா போகுதே அது மாதிரி
அதுதான் இந்த எபியிலயும் நடந்திருக்கு.... மன்னிச்சு ஃப்ரெண்ட்ஸ்.... கண்மணி நட்ராஜ்... கண்மணி ரிதன்யா.... இவங்கதான் இப்போ ஃபோகஸ் பண்ணியிருக்கேன்...
ஃபைனல் வந்துட்டோம்... அர்ஜூன்... இனியாவது மாறுவானா... இது எல்லோர்கிட்டயும் இருக்கிற கேள்வி... இந்தக் கதைல கடைசி வரை ஏன் அவன் நிலைல மாறாமல் இருக்கான்... அவன் எப்படி மாறுவான்... அவனை மாத்தப் போறது எது... இல்லை மாறவே மாட்டானா...
ஹர்ஷித் பற்றி இலட்சுமிக்கு உண்மை தெரிந்ததா... இவங்களோட பகுதியும் இருக்கு...
கண்மணி என் கண்ணின் மணி... அடுத்த பதிவு... இந்த நாவலோட கடைசி அத்தியாயம்... . எனக்கே ஆச்சரியமா இருக்கு உண்மையா ஃபைனலுக்கு வந்துட்டேனா... அதே போல ரிஷி கண்மணியை பிரியப் போறோம்னு நீங்க வருத்தப்பட்றதும் ஆச்சரியம் தான் எனக்கு...
எபிசோட்ஸ் எல்லாம் கம்பைன் பண்ணிட்டு இருந்தேன்... அப்போ எனக்கு என்ன தோணுச்சுனா
கதைல... ஃப்ளாஷ்பேக்கைத் தவிர.... கண்மணி அதிகமா யார்கிட்ட பேசி இருக்கான்னா... ரிஷிகிட்ட மட்டும்தான்... மத்தவங்ககிட்டலாம் அவளுக்கு பெருசா வசனமே கிடையாது... ரித்விகா கிட்ட கொஞ்சம்... ஆக மொத்தம் மத்தவங்ககிட்ட அவ பேசுனது ஒரு இருபது பக்கத்துக்கு வரும் அவ்வளவுதான்...
நட்ராஜ் அதாவது கண்மணி அவ அப்பா கிட்ட நேரடியா எமோஷனலா பேசுறதே ப்ரீ ஃபைனல்லதான்... கண்மணி வழக்கம் போல ஆச்சரியம் தான்...
அடுத்து கண்மணி ரிஷி...இவங்களப் பற்றி... சொல்ல எக்கச்சக்கமா இருக்கு... கண்டிப்பா அடுத்து ஃபைனல்ல பேசலாம்...
இப்போதைக்கு பை...
அப்புறம் இந்த லிங்க்... உங்களுக்கான ரெஃபெரென்சுக்காக.... கதையை கதையா மட்டும் பார்க்கனும் தான்... ஆனாலும்... கொஞ்சம் லாஜிக்காவும் இருக்கனும்... சோ அதுக்காக மட்டுமே... நான் சொன்ன மெடிக்கல் டெர்ம்ஸ்ல ஏதாவது முரண்பாடுகள் இருந்தா... கண்டிப்பா என்னை பெர்சனலா காண்டாக்ட் பண்ணுங்க...
https://www.healthline.com/health/superfetation
ஃபைனலில் சந்திக்கின்றேன்... அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்... கமெண்ட்ஸ் லைக்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி நன்றி...
நன்றி பிரவீணா...
*/
அத்தியாயம் 104-2(PreFinal)
/* ஊர் தூங்கும் நேரம் தினந்தோறும் அந்த மொட்டை மாடி சந்திப்பெலாம் வேண்டும் வேண்டும் நடக்காதா மீண்டும் தூறிடும் நேரம் சாலை ஓரம் உன் துப்பட்டா சுத்தி கொண்டும் அந்த ஈரம் கிடைக்காதா மீண்டும்
போகாதே என்று உன்னை கெஞ்சி கேட்டதும்
நீ போன பின்பு நான் புதைத்ததும்
இன்னும் மறக்கவில்லையே
இருதயம் மறக்கவில்லையே
எதுவும் இன்னும் மறக்கவில்லையே
நீ என் உலக அழகியே
உன்னை போல் ஒருத்தி இல்லையே
எதுவும் இன்னும் மறக்கவில்லையே*/
அதிகாலையில் கண்மணிக்கு விழிப்பு வந்திருக்க… ஆனால் அவளால் எழத்தான் முடியவில்லை… கைகளைப் பார்க்க… ஆங்காங்கே கொப்புளங்கள் என்பது மாறி… அதிகப்படியாக வந்திருக்க… அவள் முகமே அவளுக்கு அசாதாரண உணர்வைக் கொடுத்திருக்க…
“ரிது…” ரிதன்யாவை அழைக்க அவளும் வந்தாள்… கண்மணியால் எழவே முடியவில்லை… வேகமாக ரிதன்யா ஒடி வந்தவளாக அவள் எழ உதவி செய்தவள் எந்த ஒரு வார்த்தையும் பேசவில்லை…
“பிரஷ் பண்ணனும்” கண்மணி கேட்ட போதே… அவள் உதட்டின் மாறுபாடு அவளுக்குமே புரிய…
“பிரஷ் இல்லைனாலும்… அட்லீஸ்ட் கைலனாலும்…” உதட்டிலும் ஒரு கொப்புளம் உருவாகி இருந்தது…
“கண்ணாடி பார்க்கனும்… என் மூக்குகிட்ட வலிக்குது… என்னமோ பத்து மூக்குத்தி போட்ட மாதிரி ஃபீலா இருக்கு… ” சொன்னபடியே கண்மணி வேகமாக அங்கிருந்த சுவர்க் கண்ணாடியைத் தேட… அதுவோ அங்கு இருந்த இடத்தில் இல்லை…
”பாட்டி எடுத்துட்டாங்க…. நீங்க முகம் பார்க்கக் கூடாதுனு சொல்லிட்டாங்க… “ சொன்ன போதே ரிதன்யாவின் கண்களில் கண்ணீர் வந்திருக்க….
“இப்போ நான் பார்த்தால் என்ன ஆகிரும்… அதிகமா கொப்புளம் வந்திருச்சுதானே… கைல கால்ல இருக்கிறது முகத்திலயும் வந்திருக்காதா… அதுக்காக என்ன பண்றது” கண்மணி இயல்பாகச் சொல்ல
ரிதன்யா அடுத்த நொடியே… அடக்கி வைத்திருந்த கண்ணீரை விசும்பலோடு வெளிப்படுத்தியிருக்க…
”என்னாச்சு… “ கண்மணி கேட்ட போதே சட்டென்று ரிதன்யா அவளை விட்டு தள்ளிச் சென்றவளாக துக்கத்தை அடக்க முடியாதவளாக அழ ஆரம்பித்திருக்க…
கண்மணி ரிதன்யாவின் அருகே சென்றிருந்தாள்…
அழுகை பாதி… வார்த்தை பாதியாக ரிதன்யா அவளிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்திருந்தாள்…
“அந்தக் கதை நட்ராஜ் மாமா… பவித்ரா அத்தை கதைதானே… “
கண்மணி இப்போது இறுக்கத்தோடு கலந்த அமைதியாக நின்றிருக்க…
“சொல்லுங்க… உங்க அம்மா அப்பா கதைனு…. உங்க அப்பா அப்படி வாழ்ந்திருக்கனும்னு ஆசைப்பட்டீங்கன்னு சொல்லுங்க… மாமா இப்போ இருக்காரே அதே மாதிரி அப்போவே இருந்திருக்கனும்னு நினைச்சீங்களா” கேட்டு முடித்தவள்….
“ஆனால்” என நிறுத்தியவள்….
“பவி அத்தை நம்ம நட்ராஜ் மாமாவை விட்டு கடைசி வரை பிரியலைதானே… ஆனால் இந்தக் கதைல…. நாயகி வெறுக்கிற மாதிரி வருது… பிரியுற மாதிரி வருது அப்போ… நீங்க பவி ராஜ் கதையை எழுதலை அப்படித்தானே… “
“இந்தக் கதையை என் அண்ணாக்கு ஏன் கொடுக்கச் சொன்னீங்க”
“ஏன் அப்படி எழுதினீங்க…”
ரிதன்யா… அடுத்தடுத்து கேள்விகளை தொடுத்துக் கொண்டே இருக்க
”எழுதி இருக்கேனே… படிச்சீங்கதானே…” கண்மணியோ உணர்வுகளே இன்றி சொல்லி அவளைப் பார்க்க….
”ஏன் அண்ணி நீங்களாவே கற்பனை பண்ணி எழுதி இருக்கீங்க… ”
“ஹ்ம்ம்ம்… கற்பனைதா… ஒரு வேளை எங்க அம்மாக்கு அவங்க முன்னாடியே இறக்கப் போறது தெரிஞ்சிருந்தா… கண்டிப்பா எங்க அப்பாவோட வாழ்க்கையை சரி செஞ்சுட்டு இறந்திருப்பாங்க…. அதை யோசிச்சேன்… அதை எழுதினேன்..”
”உண்மையாவே அவ்ளோதானே… வேற எதுவும் இல்லைதானே… நட்ராஜ்மாமாவுக்காக எழுதின கதைதானே இது… வேற யாருக்காகவும் இல்லைதானே” ரிதன்யாவின் குரலில் நடுக்கம் வந்திருக்க…
இப்போது கண்மணியிடம் வார்த்தை வரவில்லை…
“சொல்லுங்க அண்ணி… வேற யாருக்கும் இல்லைதானே” ரிதன்யாவின் குரல் சற்று உயர்ந்திருக்க…
கண்மணி ’ஆமாம்’ என தலையை மட்டும் ஆட்டினாள்… ரிதன்யாவின்
“அப்போ ஏன் அண்ணி… இந்தக் கதையை என் அண்ணாகிட்ட கொடுக்கச் சொன்னீங்க…” ரிதன்யாவின் குரலில் ஆவேசம் வந்திருக்க…
கண்மணி மௌனம் சாதிக்க ஆரம்பித்திருக்க…
“சொல்லுங்க… ஏன் எங்க அண்ணாகிட்ட நான் கொடுக்கனும்… எங்க அண்ணாக்கு இந்த புக் தேவையில்லை… அவருக்கு நீங்க இருக்கும் போது அவருக்கு இந்த புக் எதுக்கு… இதுல இருக்கிற ஹீரோக்கு தேவையான அறிவுரைகள் அவருக்கு எதுக்கு… தேவையில்லைனு சொல்லுங்க அண்ணி…” ரிதன்யா கண்மணியின் தோளைத் தொட்டு உலுக்க…
“எனக்கு பயமா இருக்கு அண்ணி… உங்களை நினச்சு… அண்ணாவை நினச்சு… அ.. அண்ணாக்கு நீங்க இல்லாத வாழ்க்கையா… நினைக்கவே பயமா இருக்கு அண்ணி… என் உடம்பே நடுங்குது… நட்ராஜ் மாமாவோட ஆயிரம் மடங்கு மோசமா ஆகிருவாரு…”
கண்மணியோ இப்போது பொறுமையாக….
“ஆக மாட்டார்… கண்டிப்பா ரிஷி அப்படி ஆக மாட்டாரு… அதை நீங்க எல்லோரும் பார்ப்பீங்க…” என்ற கண்மணியின் நிச்சயமான உறுதியான வார்த்தையில் ரிதன்யா அதிர்ந்து கண்மணியைப் பார்த்தாள்…
தன் அண்ணி இந்த வார்த்தைகளைச் சொல்கின்றாள் என்றால் உண்மையிலேயே அவளுக்கு ஆபத்தா… தன் அண்ணாவுக்கான அறிவுரைகள்தான் அந்தக் கதையா“ கதையைப் படித்த பின்னால் சந்தேகப்பட்டு பயந்த நிலை போய்... இப்போது கண்மணியின் நிச்சய வார்த்தைகளில் அப்படியே அதிர்ச்சியில் சுவரோடு சுவராக ஒன்றினாள் ரிதன்யா…
கண்மணி அப்போதும் பெரிதாக உணர்ச்சி வசப்படவில்லை… அந்த இயந்திரப் பாவை ரிஷியின் கரம் பட்டு மெழுகுப்பாவையாக மாறி இப்போதோ முற்றிலும் உருக்குலைந்து போயிருக்க… அழுகை என்பது இனி வருமா என்ன…
”என் ரிஷிக்கு இந்தப் புக் கண்டிப்பா வேண்டும் ரிது… அதுல நான் எழுதின ஒவ்வொரு வார்த்தையும்… என் இறப்புக்குப் பின்னால அவரை வழி நடத்தனும்… ”
கண்மணியின் வார்த்தைகளில் ரிதன்யாவின் உள்ளம் துடிக்க… உதடுகளோ விம்ப ஆரம்பித்திருந்தது….
கண்மணி அவள் அருகே வந்தவள்…
“எனக்கு மட்டும் ஏன் ரிது இப்படியெல்லாம் நடக்கனும்… நான் பிறந்ததில இருந்து இப்போ வரைக்கும்… இந்த நொடி வரைக்கும் ஏன் இந்த அளவு நான் மட்டும் கஷ்டப்படனும்… இப்போ நான் மட்டும் இல்லாமல் என் ரிஷியும் என்னால அனுபவிக்கிறாரு…”
“ப்ச்ச்… என் ரிஷியா இருந்தால் தானே அவர் கஷ்டப்படனும்… அவர் இப்போ உங்க அண்ணன்… இலட்சுமி-தனசேகரோட பையன்… கண்டிப்பா அவருக்கு, நல்லது தானே நடக்கும்”
ரிதன்யா கண்ணீரோடு அவளை நிமிர்ந்து பார்க்க…
”இனி அவர் ரிஷிக்கண்ணா கிடையாது… ரிஷிகேஷ் தனசேகர்… அப்போ அவர் நல்லாத்தான் இருப்பார் ரிதன்யா…”
கண்மணி சொல்லி முடிக்கும் முன்னரே ரிதன்யாவிடம் உடைந்திருக்க… அழுகவில்லை ஆனால் யாரிடமும் மனதைத் திறக்காத கண்மணி… ஏன் அவளின் கணவனிடம் கூட மனம் திறக்காத கண்மணி ரிதன்யாவிடம் தன் வாழ்க்கயைப் புரட்டிப்போட்ட தினத்தை சொல்ல ஆரம்பித்திருந்தாள்…
---
ரிஷி ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்புவதற்கு முன் தினம்…
சற்று முன் தான் ரிஷியிடம் பேசிவிட்டு போனை வைத்திருந்தாள்…
“நானும் சராசரி பொண்ணுங்க லிஸ்ட்ல சேர்ந்துட்டேனா… ஏன் என்னால ரிஷிகிட்ட ஓபனா சொல்ல முடியலை… சஸ்பென்ஸா சொல்லனும்னு நினைக்கிறேன்… அதுவும் அவர் முகத்தைப் பார்த்து நேர்ல சொல்லனும்னு தோணுது… “ தன் தலையில் தனக்குத்தானே தட்டிக் கொண்டவள்… பைக் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தபடி
“ஓய்… ரவுடி… உனக்குக் கூட வெட்கம்லாம் வருதா…” சிரித்தபடியே பைக்கை எடுத்தபடி… தன் தந்தையைப் பார்க்கச் சென்றாள்… அடுத்த அரை மணி நேரத்திற்கு தன் தந்தையிடம் அவரின் கம்பெனி சம்பந்தமான விசயங்களை விவாதித்தவள்… முடிவில்
“எல்லாம் கரெக்ட்டா இருக்குப்பா… இன்னும் சந்தேகம்னா பார்த்திகிட்ட ரெஃபர் பண்ணிக்கங்க… ரிஷி வர்ற வரைக்கு கூட வெயிட் பண்ணத் தேவையில்லை…” என்னதான் அலுவலக விசயங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தாலும்… அவள் தந்தையைப் பார்த்தபடியே பேசிக் கொண்டிருந்தவளின் பார்வையில்…
”என்னடா… அப்பாவையேப் நொடிக்கொரு தடவை பார்த்துட்டே இருக்க… என்னாச்சு… என்ன விசயம்” என்றவரிடம்…
”ஒ… ஒண்ணுமில்லை….” வேகமாகத் தலையை மறுத்து ஆட்டியவள்… மீண்டும் அவரையேப் பார்த்தபடி இருக்க… அருகில் வந்தார் நட்ராஜ்…
“என்னடா… சொல்லு… ஏதோ கேட்கணும்னு நினைக்கிற… என்னவா இருந்தாலும் அப்பாகிட்ட சொல்லுடாம்மா… கேளுடாம்மா”
“இ.. இல்லை அப்படிலாம் இல்ல.. நான் வரட்டுமா… போகட்டுமாப்பா” கண்மணி முதன் முதலாக தன் தந்தையிடம் தடுமாறினாள்…
அவரிடம் பெரும்பாலும் அனுமதி எல்லாம் கேட்க மாட்டாள் அவர் மகள்… உனக்குத் தேவையானது இதுதானே… செய்து விட்டேன்… நான் வருகிறேன்… இப்படித்தான் அவளின் நடவடிக்கைகள் இருக்கு… ரிஷியிடம் அவள் இயல்பாக இருந்தாலும் நட்ராஜிடம் எப்போதும் போல் தான் இருக்கிறாள்… பெரும்பாலும் அவள் நட்ராஜிடம் உணர்வு வயப்பட்டு பேசமாட்டாள்… அவரிடம் மட்டுமா என்ன… யாரிடமுமே…. ரிஷியைத் தவிர
நட்ராஜ் மகளையேப் பார்த்திருக்க… கண்மணி கிளம்புவற்காக எழும்பியவள்… என்ன நினைத்தாளோ மீண்டும் திரும்பியவள்… சட்டென்று தந்தையின் முன் மண்டியிட்டு அமர்ந்தவளாக… அவர் மடியில் தலை சாய்ந்தவள்…
“சாரிப்பா..” வேறெதுவும் சொல்ல
“டேய் என்னடா… எழுந்திரு ஃபர்ஸ்ட்….”
“என்னைப் பற்றி நீங்க நினைக்கவே இல்லைனு எனக்கு எப்போதுமே கோபம் இருக்கும்பா… ஆனால் அது தப்புதானேப்பா … ஃபர்ஸ்ட் டைம் அம்மா கர்ப்பமா இருக்கேன்னு சொன்னப்போ… கருப்பா சிவப்பா… பெண் குழந்தையா… ஆண் குழந்தையா… இப்படி ஏதுமே நினைக்காமல் அவ்ளோ சந்தோசப்பட்ருப்பீங்கதானே…. “
நட்ராஜின் கண்களில் கண்ணீர் துளிர்த்திருக்க… கண்மணி இப்போது அவர் கண்ணீரைத் துடைத்து விட்டவளாக… முகத்தில் புன்னகையை படரவிட்டவளாக… சிறு குழந்தை போல குதூகலித்தபடி அவரிடம் பேச ஆரம்பித்திருந்தாள்….
”அம்மா உங்ககிட்ட சொன்ன போது வெட்கப்பட்டாங்களா… இந்த சினிமால எல்லாம் பார்க்கிற மாதிரி… அம்மா சொன்னதும் கெத்தா மீசையை முறுக்கிட்டு… என் இரத்தம்,,, என் குழந்தைனு அம்மாவைத் தூக்கி சுத்துனீங்களா…”
கண்மணி கண்களில் ஆர்வத்தோடும்… கனவோடும் கேட்க… நட்ராஜ் கண்களில் இருந்து கண்ணீர் முத்துக்கள் சட்டென்று தரையில் விழுந்தது… அவர் தலை ஆட்டிய விதத்தில்…
மகளை ஆரத்தழுவி அவள் நெற்றியில் முத்தமிட்டவராக
”நான் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருந்த நாள்… நான் அப்பாவாகப் போறேன்னு என் இரத்தம் முழுக்க திமிரா முறுக்கின நாள்டா… உன் அம்மா அதிகமா வெட்கப்பட்ட நொடி…” நட்ராஜின் குரலில் நடுக்கமும்… சந்தோசமும் கலந்த கலவையாகச் சொல்ல…
கண்மணியின் எண்ணங்களோ அங்கு இல்லை ரிஷியிடம் தான் இருந்தது…. நினைத்த போதே அவள் கன்னங்களில் செம்மை பரவியிருக்க… முதன் முதலாக கண்மணிக்கே அவள் வெட்கப் புன்னகை ஆச்சரியமாகத்தான் இருந்தது… ரிஷி இல்லாத போதே இப்படி செய்கிறேனே… ரிஷி முன் நின்று அவனிடம் சொல்லும் போது… மனதில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் படபடத்திருக்க… அந்தப் பூரிப்பு முகத்திலும் வந்திருக்க… தன் நினைவுகள கலைந்து தன் தந்தையைப் பார்க்க… அவரோ அங்கில்லை… வேகமாக தந்தையைப் பார்க்க… அவரோ அவர் மனைவியின் புகைப்படத்தைப் பார்த்தபடி நின்றிருந்தார்
அவர் அருகில் சென்றவள்… அவர் தோள் தொட்டு… ஆறுதல் படுத்த…
“ஒண்ணும் இல்லடா…” என்றவர்…
“நான் உன்னை நினைக்கவே இல்லைனு யார்டா சொன்னது….”
“எப்போ நீ உன் அம்மா வயித்துல ஜனிச்சியோ… அந்த நொடில இருந்து ஒவ்வொரு நாளும்… ஒவ்வொரு நொடியும் உன்னை மட்டுமே நினச்சு வாழ்ந்தவன்டா நான் மணி… ரொம்ப… ரொம்ப கற்பனை பண்ணிட்டேன்… பண்ணிட்டோம்… நானும் உன் அம்மாவும் உன்னோட சேர்ந்து வாழப் போற வாழ்க்கையை நினைத்து… அந்த கற்பனை உலகத்துல நீ நான் உன் அம்மா… மட்டும் தான்… என்னென்னவோ ஆசை… உனக்கான… எங்களுக்கான கனவுகள் இலட்சோப இலட்சம்… அதிலும் நீ பொண்ணுனு தெரிந்த பின்னால… வேற லெவல் கற்பனைகள்… அவ ஒரு பக்கம்… நான் ஒரு பக்கம்… உன்னை நினைத்துக் கட்டின கோட்டை வானைத் தொட்ட உயரம்” என்றவரை… கண்மணி பரிதாபமாகப் பார்த்தபடி இருக்க
“சீட்டுக் கட்டு மாதிரி… ஒரே நொடில கலஞ்சு போச்சுடா… தாங்க முடியலைடா… மனசு ஏத்துக்கலை… “ நட்ராஜ் சொன்ன போது அவர் கண்களில் கண்ணீர் இல்லை…. விரக்தியின் உச்சம் மட்டுமே இருக்க…
“கடைசி நிமிசத்துல… என்னைப் பற்றி ஒரு நிமிடம்… ஒரு நொடி உன் அம்மா நினைக்கமுடியாமல் அந்த எமன் அவளைக் கூப்பிட்டுட்டு போன கோபம்… அந்தக் கோபம் என்னை அறிவிழக்க வச்சுருச்சு…”
கண்மணி விழி அகற்றாமல் அவரையேப் பார்க்க…
“ஒரு செகண்ட் என்னை நினைச்சுருந்தால் உன் அம்மா என்னை விட்டுப் போயிருந்திருக்க மாட்டாடா…. நினைக்கலையே அவ… போயிட்டா அந்தக் கோபம் திசை மாற வச்சிருச்சு” என்றவர் எங்கோ பார்க்க
கண்மணி இப்போது…
“அவங்களுக்கு அனஸ்தீசியா கொடுத்துட்டாங்கப்பா… இல்லைனா அம்மா கண்டிப்பா உங்களை நினச்சிருப்பாங்க… நான் தான் சேட்டை பண்ணிட்டேன்… ” கண்மணி தந்தையைத் தேற்றும் உந்துதலில்… முதன் முதலாக தன் தந்தையிடம் குறும்பு பேசும் சிறு குழந்தையாக மாறி இருந்தாள்… வார்த்தைகளும் குழந்தைத்தனமாகவே வந்திருக்க… அந்தக் குழந்தையின் கண்களில் தந்தையின் கவலையை மாற்றும் தீவிரம் மட்டுமே
நட்ராஜ் முதன் முதலாக அவரையும் மீறி சிரித்தவராக… தன் மகளை தன்னோடு அணைத்துக் கொள்ள
“ஒழுங்கா வெளிய வந்திருக்கலாம்ல… நான் பண்ணின சேட்டைக்கு பனிஷ்மெண்ட் கிடைக்கனும் தானே… அதான் உங்க பாசத்துக்கு ரொம்ப நாளா ஏங்கிட்டேன்…” கண்மணி பேச பேச … நட்ராஜின் மனம் குதுகலித்தது…
மகள் இப்படி எல்லாம் அவரிடம் பேசியதே இல்லையே… மகளையே வைத்த கண் வாங்காது பார்த்தவராக
“எனக்கென்னடா… ராஜாடா நான்… நீ என் இளவரசி இருக்கும் போது… எனக்கென்ன குறைச்சல்…”
“அப்போ ஏன் எப்போ பார்த்தாலும்… சோகமாவே இருக்கீங்க… நீங்க ராஜான்னா… இந்த மீசையை முறுக்கிட்டு… கம்பீரமா.. கெத்தா இருக்கனுமே… ஏன் இருக்க மாட்டேங்கிறீங்க…”
இப்போது நட்ராஜ்…
“உனக்கு செஸ் விளையாட்டு தெரியுமா…”
கண்மணி புருவம் உயர்த்தி தலை ஆட்ட
“ராஜா கெத்துதான்… ஆனால் ராணி இருக்கிற வரை தான்… “
“அப்டிலாம் இல்லை… ராஜா எப்போதும் ராஜாதான்… ராணி கூட இருந்தாலும்… இல்லைனாலும்… என் அப்பாவும் அப்படித்தான் இருக்கனும்“ என்றவள்….
“நீங்க எப்போதும் செம்ம கெத்த இருக்கனும்பா… சந்தோசமா இருக்கனும்… அம்மா இதோ இங்க உங்க பக்கத்துல நின்னு,, உங்கள பார்த்துட்டு இருக்காங்கன்னு நம்புங்க…. அவங்களுக்கு நீங்க இப்படி இருந்தால் பிடிக்குமா சொல்லுங்க… “
தலை மறுத்து இடவலமாக ஆட்ட
”சோ… பவித்ராவோட நட்ராஜ்… சாரி சாரி… பவியோட ராஜ் எப்படி இருப்பாங்களோ… அந்த மாதிரி இந்தக் கண்மணியோட அப்பா இருக்கனும்… சரியா…” தந்தையை மிரட்டி இருக்க
“சரிங்க இளவரசி…” நட்ராஜ் மகளிடம் அவள் கன்னத்தைத் திருகியவராக செல்லம் கொஞ்சியவர்
“என்ன இன்னைக்கு என் இளவரசி… சந்தோச மோட்ல இருக்காங்க…. நம்பவே முடியலை… அதுவும் அவங்க ரிஷிக்கண்ணா வேற ஊர்ல இல்லை… இருந்தும் சந்தோஷக் களை முகத்துல தாண்டவமாடுதே” எனும் போதே கண்மணி முகம் சுருங்க…
நட்ராஜ் பதறிவிட்டார்….
“சாரிப்பா…” என்ற கண்மணி குற்ற உணர்ச்சியில் தலை குனிந்தவளாக
“நான் இத்தனை நாள் உங்ககிட்ட இப்படி இருக்கலை…. ஏன் இருக்கலை… தெரியலை… அதே போல உங்க மகளா உங்களை சந்தோசமா வச்சுக்கனும்னு தெரியலப்பா… யாரோ ஒரு ரிஷி”
”இப்போ அப்படி இல்லை… அப்போ… நான் மேரேஜ் பண்ணினப்போ…. அவர் யாரோ ஒரு ரிஷிதானே” என்று விளக்கம் கொடுத்தவளாக
“அந்த ரிஷியோட முகத்தில சிரிப்புக்கு அவ்ளோ பாடுபட்டவ… என் அப்பாவோட சிரிப்புக்காக ஏன் எந்த முயற்சியும் செய்யலைனு மனசு குற்ற உணர்வா இருக்குப்பா..” எனும் போதே கண்மணியின் குரல் உடைந்திருக்க
”கிருத்திகா ஆண்டியோட ஹஸ்பண்ட் விசாகன் அங்கிள் இருக்காங்கள்ள… அவங்களை பார்க்கும் போதெல்லாம் இதைச் சொல்வேன் நான்… அவங்க மட்டும் ஆன்ட்டி சொன்னதுக்கு ஓக்கே சொல்லிருந்தாங்கன்னா… மேபி எனக்கு நல்ல லைஃப் கிடைச்சிருக்கும்… ஆனால் என் அப்பா கிடைச்சிருப்பாரா….”
“அப்புறம் மருது… அவன் இல்லைனா நீங்க என் அப்பான்னு எனக்கு அவ்ளோ சீக்கிரம் தெரிஞ்சிருக்காது… இந்தக் கெழவி சரியான ஆள்ப்பா… உன்னை யார்னே சொல்லாமலே… எனக்கு காட்டாமலே வளர்த்திருக்கும்… ராட்சசி….” என்று போகிற போக்கில் கந்தம்மாளையும் வசைபாடி முடித்தவள்… தன் தந்தையின் முகம் பார்த்தவளாக
“எனக்கு என் பாசத்தை உங்ககிட்ட எப்படிக் காட்றதுன்னு தெரியலப்பா…. எனக்கு நீங்கதான் முக்கியம்னு உங்ககிட்ட வார்த்தைல சொல்றது எப்படினு தெரியலை… ஆனால் நீங்க அதைப் புரிஞ்சுக்கனும்னு நினைப்பேன்… நான் உங்க கூட இருக்கேன்னு சொன்னது… நீங்க சொன்ன உடனே அடுத்த நொடியே ரிஷியை மேரேஜ் பண்ணிக்கிறதுக்கு சரின்னு சொன்னது… இதெல்லாம் உங்களுக்காக… நீங்க என் பாசத்தை தெரிஞ்சுக்கிறதுக்கு… என்னையுமறியாமல் நான் நடந்துகிட்ட விதம் தான் இதெல்லாம்… ‘எனக்கு உங்களப் பிடிக்கும்பான்னுனு’ இந்த மூணு வார்த்தையைச் சொல்ல முடியாமல்… ஏதேதோ பண்ணிட்டு இருந்தேன்…”
நட்ராஜ் மகளின் பேச்சை… தன் முன் மடை திறந்த அவள் பேச்சை கேட்கும் வாய்ப்பை முதன் முதலாகப் பெற்றார்…
”டேய் என்னடாம்மா… அப்பா மேல நீ எவ்ளோ பாசம் வச்சிருக்கேன்னு நீ வாய் வார்த்தைல சொல்லனுமாடா… நீ என்னைத் தேடி வந்தியே அப்போவே எனக்குத் தெரியாதாடா… ஆனால் என்னால இந்தக் குடிகாரனால உனக்கு என்ன பாதுகாப்பு கொடுக்க முடியும் சொல்லு… அப்போ எனக்கு திருந்த நினைக்கனும்னு தோணலை… என்கிட்ட இருந்தால் உனக்கு பாதுகாப்பு இல்லைனு ஒரே பயம் அந்த.. பயத்தில உன்னைத் துரத்தனும்தான் தோணுச்சு… ஆனால் எதை நினச்சு பயந்தேனோ… அது கடைசியில நடந்துருச்சு…”
கண்மணி அமைதியாக சில நிமிடங்கள் இருந்தவள்…
“இல்லப்பா… நடந்தது எல்லாமே காரண காரியத்தோடதான் அப்பா… உண்மையைச் சொல்லப்போனால்… மருது, அவன் எவ்ளோ கெட்டவனா இருந்தாலும்… அவனோடத்தான் நான் இருக்கனும்னு அந்த வயசுலேயே எனக்கு பதிஞ்சிருச்சு… அவன் குடிச்சிட்டு தெருவுல கிடந்திருந்தால் கூட நான் அவன் தான் என் உலகம்னு அவனை விட்டு போயிருந்திருக்க மாட்டேன்… அது காதல் இல்லைதான்… ஆனால் அது காதல்னு நானே என்னை ஏமாத்திட்டு இருந்திருப்பேன்ப்பா…. என்னோட மனசைப் புரிஞ்சுகிறதுக்கு… இந்த உலகத்தைப் புரிஞ்சுகிறதுக்கு… நான் பெரிய விலை கொடுக்க வேண்டியதாகிருச்சு… ”
“ஆனால் ரொம்ப கஷ்டமா இருக்குப்பா… இதைப் பேசக்கூடாதுனுதான் நினைப்பேன்… “ கண்கள் கலங்கிய மகள்.. அதைத் துடைத்தபடி பேச ஆரம்பித்திருக்க.. மகளைத் தேற்ற ஆரம்பித்திருந்தார் நட்ராஜ்… அப்போது அவள் அலைபேசி அடிக்க
”ஹையோ அப்பா… அத்தை போன் அடிக்கிறாங்க…” என்று வேகமாக அலைபேசியை எடுக்க… பேசியதோ ரித்விகா
“அண்ணி… எங்க இருக்கீங்க… நான் வீட்டுக்கே வந்துட்டேன்…” என்றவளின் வேகக் குரலில் தான் கண்மணிக்கே தனசேகர் வீட்டு மருமகள் பொறுப்புகள் எல்லாம் ஞாபகத்துக்கு வந்திருந்தது… நட்ராஜின் மகளாக மாறியிருந்தவள்… இப்போது தன் நிலைக்குத் திரும்பி இருக்க…
“ஐயோ… அப்பா… எக்கச்சக்க வேலை வச்சுருந்தேன்…. எல்லாம் போச்சு…”
“சரி… நான் கெளம்புறேன்… பை… பை” என்றவள் வேகமாக அடி எடுத்து வைத்த அடுத்த நொடியே மீண்டும் தன் தந்தையின் அருகே வந்தவள்… அவர் கன்னத்தில் சட்டென்று எம்பி முத்தம் வைத்தவள்…
“எனக்கு உங்களை அவ்ளோ பிடிக்கும்பா… நீங்க நினைக்கிறதை விட… உங்களை எனக்கு அதிகமாப் பிடிக்கும்… என்னோட ஹீரோ நீங்க மட்டும் தான்…” மீண்டும் அவரின் மறு கன்னத்தில் அடுத்த முத்தத்தைப் பதித்தவள்…
“ஐ லவ் யூப்பா… “ நட்ராஜ் சந்தோசமாக உறைந்து நின்றிருக்க… மகளோ உற்சாகமாக வெளியேறி இருந்தாள்…
---
ரிஷி அன்று மயங்கிய போது சேர்க்கப்பட்ட மருத்துவமனையை அடைந்தவள்…. வரவேற்பில் இருந்த பெண்ணிடம் தான் வந்த விசயத்தைச் சொல்ல
“நீங்க கேட்ருந்தா மெயில்லயே அனுப்பியிருப்போமே சிஸ்டர்…” சிரித்தபடியே வரவேற்பு பெண் சொல்ல
“இல்லை… ரிப்போர்ட்டை கைல வாங்கி பார்த்து.. டாக்டர் ஒண்ணுமில்லைனு சொன்னா… கொஞ்சம் மனசு நிம்மதியா இருக்கும்… வேற டாக்டர் கிட்ட காட்டிருக்கலாம்… ஆனால் அவரைப் அப்போ செக் அப் பண்ண டாக்டர் அவர் என்ன சொல்றார்னு கேட்கனும்னு நினைத்தேன்… அதுக்கபுறம் எங்க ஹாஸ்பிட்டல்ல நான் வெரிஃபை பண்ணிக்கிறே…” என்ற போதே…
“என்னங்க எல்ல்லோரும்… எங்க ஃபேமிலி டாக்டர்ஸ்கிட்ட பார்த்துக்கிறோம்னு சொல்வாங்கா.. நீங்க ஃபேமிலி ஹாஸ்பிட்டல்னு சொல்றீங்க….”
”ஃபேமிலி ஹாஸ்பிட்டல்னு சொல்லல… எங்க ஹாஸ்பிட்டல்னு சொன்னேன்… ரெண்டுக்கும் டிஃபெரெண்ட் இருக்கும் மேடம்… அதை விடுங்க…. டாக்டர் எப்போ வருவாங்க…” கண்மணியின் வழக்கமாக வார்த்தைகளை திருத்தினாள்….
“இந்தாங்க… மேடம் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திருவாங்க… வெயிட் பண்ணுங்க” என்றபடி ரிஷியின் ரிப்போர்ட்டை கவரில் வைத்துக் கொடுக்க… அதை வாங்கி வைத்துக் கொண்டவள்…. மருத்துவருக்காகக் காத்திருந்தாள்…
அதே நேரம்… அந்த மருத்துவ அறிக்கையையும் மீண்டும் மீண்டும் பார்த்தவளுக்கு… அதில் அனைத்துமே நார்மல் என இருந்தும் சமாதானமடைய முடியவில்லை…
“எல்லாம் நார்மலா இருந்தா… ரிஷி ஏன் என்னைக்கு அப்படி மயங்கனும்… சாதாரண விசயத்துக்கு ஏன் அவ்வளவு பிரஷர் எடுத்துக்கனும்… “ என நினைத்த போதே
“லூசு கண்மணி…. இது உடல் சம்பந்தப்பட்ட வியாதி இல்லை… மனசு சம்பந்தப்பட்டது… உனக்கு ஏன் அவ்வளவு வீராப்பு… ரிஷி கூட பேசமல் இருந்த… அன்னைக்கு அத்தனை பேர் முன்னாடியும்… நீ அவரை வார்த்தையால இல்லாமல்… உன் மௌனத்தால அவமானப்படுத்தின… யாரோ ஒரு மூணாம் மனுஷன் மாதிரி விலக்கி வச்ச… அதுதான் அன்னைக்கு அவரோட மன அழுத்ததுக்கு காரணம்…”
“தப்புதான்… நான் பண்ணினது தப்புதான்… எனக்காக விக்கிகிட்ட ஒரு வார்த்தை எதிர்த்து பேசலைனு அந்த நேரத்துல ஒரு பொண்டாட்டியா கோபம்… நான் என்ன ஜடமா… எனக்கு கோபம் வரக்கூடாதா… “
என தனக்குள் யோசித்துக் கொண்டிருந்த போதே… அந்த தம்பதியர் வெளியே வந்தனர்….
ஏழு இல்லை எட்டு மாதம் கர்ப்பம் இருக்கலாம் அந்தப் பெண்ணுக்கு…
இவள் அருகே கணவன் மனைவி இருவரும் வந்து அமர்ந்திருந்தனர்… தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்
“மானிட்டர்ல பார்த்தீங்களா… நம்ம புள்ளயோட கை கால் முகம் எல்லாம் தெரிஞ்சதே பார்த்தீங்களா… “ அந்தப் பெண் புளங்காகிதம் அடைந்து சொல்ல
அவள் வார்த்தைகளைக் கேட்ட அந்தக் கணவனும் சந்தோசமாகத் தலையாட்ட… கண்மணிக்கு அவர்கள் பேசுவது காதில் விழுந்தாலும் அவர்களிடம் கவனம் வைக்காமல்… தன் கையில் வைத்திருந்த பேப்பர்களை புரட்டிக் கொண்டிருக்க… அவர்கள் பேசுவது காதில் விழாமல் இல்லை….
“ஏங்க நான் டாக்டருக்கு படிச்சிருக்கலாம்… “ அந்தப் பெண் வருத்ததோடு சொன்னவளாக…
”அப்படி மட்டும் நான் டாக்டரா இருந்திருந்தா… என் புள்ளைகிட்ட டெய்லி மானிட்டர்ல பார்த்து பேசிட்டு இருப்பேன்…. என்னமோ இப்பவே எனக்கு என் புள்ளையைக் கைல வச்சுக்கனும்னு இருக்கு” அந்தப் பெண் சொல்ல
“அடிப்பாவி இதுக்காக டாக்டருக்கு படிக்கனுமா… டாக்டரா இருந்திருந்தா இதெல்லாம் உனக்கு சாதாரணமா இருந்திருக்கும்… இப்போ என்ன ஜஸ்ட் 2 மந்த்ஸ்…. சீக்கிரமே லட்டு மாதிரி நம்ம புள்ளை நம்ம கைல இருக்கும் பாரு… சரி வா போகலாம்… இன்னைக்கு ஃபுல்லா இந்த ஸ்கேன்ல பார்த்த விசயம் தான் வீட்ல ஓடும் போல… “ என்று அவளைக் கூட்டிக் கொண்டு கிளம்ப…
கண்மணியின் கை அந்த தாள்களை மடக்கி வைத்தது… அவள், அவள் அன்னையின் கருவில் இருந்த நிலைக்கு எண்ணங்கள் சென்றிருக்க….
“என் அம்மா… மானிட்டர்ல என்னைப் பார்த்துருப்பாங்கள்ள… என் கூட டெய்லி பேசிருப்பாங்கள்ள… அதுனாலதான் அவ்ளோ கற்பனை பண்ணினாங்களா… அப்பா சொன்ன மாதிரி… என்னைப் பற்றியும்… அப்பாவைப் பற்றியும் நினைக்கிறதுக்கு அவங்களுக்கு எமன் வாய்ப்பே தரலையா…” கண்களில் கண்ணீர் வடிந்திருக்க… சட்டென்று துடைத்திருந்தாள் அடுத்த நிமிடமே…
“கண்மணி…” என்று அதே நேரம் அவளை அங்கிருந்து வரவேற்பறையில் இருந்த பெண் அழைத்திருக்க… மருத்துவரைப் பார்க்க போயிருந்தாள் தன் எண்ணங்களை விட்டு விட்டு…
அந்த மருத்துவரும்… ரிஷியின் அறிக்கைகளை எல்லாம் நன்றாகப் பார்த்து விட்டு… ரிஷிக்கு ஒரு பிரச்சனையுமில்லை என்று சொல்ல… கண்மணியும் மனம் நிறைந்த திருப்தியுடன் வெளியே வந்தாள்…. வந்தவளுக்குத் திடீரென்று ஒரு எண்ணம்….
வேகமாக வரவேற்பறைக்குச் சென்றவள்…
“சிஸ்டர்… எனக்கு பிரக்னன்ஸி டெஸ்ட் எடுக்கனும்… “
“கிட் வாங்கி செக் பண்ணுனீங்களா…” என அந்த செவிலிப் பெண் கேட்க ஆரம்பித்த போதே
“இல்லை… ஆனால் கன்ஃபார்ம்தான்… 40 டேஸ்க்கு மேல ஆகியிருச்சு…. ”
“எனக்கு ஸ்கேன் எடுக்கலாமா… இப்பவே பார்க்கனும்… என் குழந்தையை” என்றவள் ஆர்வக் கோளாறில் கேட்க…
அந்தப் பெண் கண்மணியை ஒரு மாதிரிப் பார்த்தவள்…
“இது என்ன உங்க ஹாஸ்பிட்டலா… நீங்க கேட்டவுடனே ஸ்கேன் பார்கிறதுக்கு…. ஃபர்ஸ்ட் கன்ஃபார்ம் பண்ணனும்… டாக்டர் செக் அப் பண்ணிட்டு… ஸ்கேனுக்கு எழுதிக் கொடுப்பாங்க… அப்புறம் தான் ஸ்கேன் பார்க்க முடியும்… அது மட்டுமில்லாமல் அப்பாயிண்ட்மெண்ட் வேணும்… அங்க பாருங்க எவ்ளோ பேர் வரிசைல இருக்காங்கன்னு… “
கண்மணி அதிருப்தியாகப் பார்த்தவள்…
“சரி ஓகே… தேங்க்ஸ்… அப்போ எங்க ஹாஸ்பிட்டலுக்கே போறேன்…. இன்னைக்கே பார்க்கிறேன்” என்றவளை அந்த வரவேற்பு பெண் இன்னுமே ஒரு மாதிரியாகப் பார்த்தாள்…
அந்தப் பெண்ணுக்குத் தெரியுமா என்ன… கண்மணி ’அம்பகம்’ மருத்துவமனையின் உரிமையாளர் என்று… கண்மணி அவளின் பார்வை உணர்ந்தாலும்… காட்டிக் கொள்ளாமல்… சிநேக பாவத்துடன் சிரித்தபடி விடைபெற்றாள் கண்மணி… அடுத்து அம்பகம் மருத்துவமனையிலும் நின்றிருந்தாள்…
”இன்னைக்கே… இப்போவே நான் என் குழந்தையைப் பார்க்கனும்” ஏனோ கண்மணியின் பிடிவாதம் வெகு நாட்களுக்குப் பிறகு வந்திருந்தது…
”நான் பார்த்த பின்னாடிதான்… எல்லோரும் பார்க்கனும்..”
மீனாட்சி… தன் முன் அமர்ந்திருந்த கண்மணியைப் பார்த்தவர்….
“பார்த்துரலாம்…. கண்மணி யாரு இந்த அம்பகம் ஹாஸ்பிட்டலோட ஓனரம்மா அவங்க கேட்டு இல்லைனு சொல்லிட முடியுமா…” என தன் தோழியின் மகளைக் கிண்டல் செய்தவர்…..
”வா ஸ்கேன் ரூம்க்கு போகலாம்….” என கண்மணியை அழைத்தபடியே…
“உனக்குத் தெரியுமா நான் இங்க ரேடியாலஜிஸ்ட்டாத்தான் முதன் முதல்ல ஜாயின் பண்ணினேன்… அப்புறம்தான் பிஜி பண்ணினேன்… … உன் அம்மாக்கு நான்தான் ஸ்கேன் பண்ணினேன்… உன்னை எனக்கு 7 வீக்ஸ்ல இருந்து தெரியும்…” மீனாட்சி புன்னகைத்துச் சொன்னவர்…
“பவி “ என ஆரம்பித்த போதே…
”இப்போ ஸ்கேன்ல பார்த்தால் எல்லாமே தெரியுமா…” சட்டென்று தன் தாய் பற்றிய பேச்சைக் கத்தறித்திருந்தாள் கண்மணி…
முதன் முதலாக ஏதோ மாதிரி ஒரு எண்ணம்…. தன் தாய் ஆரம்பித்த இடத்தில் இருந்து தான் மீண்டும் ஆரம்பிக்கின்றோமோ… தன் தாய் பவித்ரா செய்ததையே… தானும் செய்கிறோமோ… செய்ய நினைக்கிறோமோ…
அந்த நொடியில் சட்டென்று மனதில் எதிர்மறை எண்ணங்கள் ஆரம்பித்திருக்க… மாற்ற நினைத்தாள்தான் ஏனோ முடியவில்லை… காலையில் இருந்து இருந்த அத்தனை குதூகலமும் உள்வாங்கியது போல இருக்க… அசிரத்தையாக முகத்தில் மலர்ச்சியை வரவழைத்துக் கொண்டாள் கண்மணி…
“வீட்டுக்குப் போய்விடலாமா…” ஏதேதோ எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்திருந்தது கண்மணிக்குள்…
”கண்மணி…” மருத்துவர் மீனாட்சி சத்தமாக அழைக்க.. கண்மணி தன் எண்ணங்களில் இருந்து விடுபட்டு வேகமாக மீனாட்சியைப் பார்க்க
“கொஞ்ச நாளைக்கு முன்னால உனக்கு ஏதோ கைல அடிபட்ருச்சுனு… இந்த ஹாஸ்பிட்டலே அல்லோல்கலப்பட்டுச்சாமே… நீ இந்த ஹாஸ்பிட்டலுக்கு தரிசனம் கொடுத்தாலே… களேபரம் தான் போல கண்மணி… நீ பிறந்த அன்னைக்கு” எனும் போதே கண்மணியின் முகம் வாடி இருக்க…
“சாரிடா… சாரிடா… “ என்றவர்…
“என்ன குழந்தைனு கேட்கக் கூடாது… சரியா… படுத்துக்கோ… நல்லா தண்ணி குடிச்சிருக்கதானே… ” என்றபடியே அவள் அடி வயிற்றில் ஜெல்லைத் தடவினார்…
“எவ்ளோ நாள் ஆச்சு…” மருத்துவர் கேட்டுக் கொண்டிருக்க… கண்மணியின் மனதிலோ… ஒரு மாதிரியான பதட்டம்… ஆனாலும் இப்போது இடையில் வேண்டாம் என்று சொல்லி விட்டு எழுந்து செல்லாத முடியாத நிலை…
“நான் வேற எந்த கன்ஃபார்மேஷனும் பண்ணலை… உண்மையிலேயே நான் கன்சீவா இருக்கேனா ஆன்ட்டி” எனும் போதே… மீனாட்சி இவள் குரலை காது கொடுத்துக் கேட்காமல்… தன் முழுக்கவனத்தையும் மானிட்டரில் வைத்திருக்க…
கண்மணியும் அந்த கணினித்திரையையே சந்தோசப் படபடப்புடன் பார்த்தபடி இருக்க… இப்போது மருத்துவர் கண்மணியை ஒரு பார்வை பார்த்து விட்டு… மீண்டும் உன்னிப்பாக பார்த்தவர்…
“ட்வின்ஸ் மாதிரி இருக்கு… ஆனால் ஒழுங்கா தெரியலை… இன்னும் கொஞ்சம் தண்ணி குடி… மறுபடியும் பார்க்கலாம்…”
கண்மணி வேகமாக எழுந்து உட்கார… அவள் முகமெங்கும் பரவசம்… ஒரு குழந்தைக்கே அவளைக் கையில் பிடிக்க முடியவில்லை… இரண்டு குழந்தைகள் என்றால்… பரபரப்பு தொற்றிக் கொள்ள… சந்தோசத்தில் ஜில்லென்று குளிர் பரவியிருந்தது அவள் உடல் முழுவதும்… அது ஒரு மாதிரியான பரவசம்… மற்ற எந்த நினைப்புமே இல்லை அவளுக்கு… ஏன் ரிஷியைக் கூட அந்த நேரத்தில் அவள் நினைக்கவில்லை… தொப்புள் கொடி உறவு… தாலிக் கொடி உறவை விட பின் தள்ளும் என்று கண்மணி உணர ஆரம்பித்திருந்த நொடி…
“நாளைக்குப் பார்க்கலாமா… ஆனால் கன்ஃபார்மா ட்வின்ஸ்தாண்டா…” மீனாட்சி சொல்ல…
“இல்லை எனக்கு இப்போவே பார்க்கனும்… கன்ஃபார்ம் பண்ணனும்…” கண்மணியின் ஆர்வத்தில் மீனாட்சியும் சிரித்தபடியே
“சரி… வெயிட் பண்ணிப் பார்க்கலாம்… சார்கிட்டயும் ஆண்ட்டிகிட்டயும் போன் பண்ணி வரச் சொல்லலாமா… “
“இல்லை வேண்டாம்… ஃபர்ஸ்ட் ரிஷிகிட்ட தான் சொல்லனும்…” கண்மணி தயங்கவில்லை இதைச் சொல்ல…
அப்போது நர்ஸ் உள்ளே வந்திருக்க…
“அன்னைக்கு மலர் மேடம் தான் ட்யூட்டில இருந்தாங்க… மேமோட ரிப்போர்ட்ஸை அர்ஜூன் சார்கிட்ட கொடுத்துட்டாங்க… இது சும்மா எண்ட்ரி பண்ணினது நீங்க கேட்டதால எடுத்துட்டு வந்தேன்… நம்ம மேடம்ன்றதுனால சிஸ்டம்லயே இருந்துச்சு… ”
என்ற செவிலியரிடம் அந்த அறிக்கைகளை வாங்கிய மீனாட்சி…
“அன்னைக்கு ஏன் ஸ்கேன் எடுத்தீங்க… கைல தானே அடிபட்ருந்துச்சு…” மீனாட்சி அழுத்திக் கேட்க…
“அர்ஜூன் சார்தான் எல்லாமே செக் பண்ணச் சொன்னார்… அதுனால மேடம் பண்ணினாங்க… மத்தபடி எனக்கு ஏதும் தெரியாது…”
கண்மணி ஏனோ அங்கு கவனம் வைக்கவில்லை… அவள் அந்த மானிட்டரில் இருந்த இவளுக்கு எடுத்த காட்சிகளின் கணினி புகைப்பட பிரதிகளில் தான் அவள் கவனம் முழுக்க இருந்தது… ’அர்ஜூன்’… அன்று அடிபட்ட விசயம் என வந்திருந்த செவிலிப் பெண்ணின் வார்த்தைகள் எல்லாம் அவள் கவனத்தில் இல்லை… ரிஷியையே மறந்திருக்க… மற்றதெல்லாம் எம்மாத்திரம்… அவள் கருவிழி… அவள் கருவின் புரியாத நிழல் புள்ளிகளிடம் மையம் கொண்டிருந்தது…
வந்த செவிலி கொடுத்த அறிக்கைகளை பார்த்துக் கொண்டிருந்த மருத்துவரின் புருவமத்தியில் முடிச்சுகள்… கண்மணியை யோசனையோடு பார்த்தபடி….
“மறுபடியும் ஸ்கேன் பண்ணலாமா…” என்றபடியே… கண்மணியைப் படுக்க வைத்து பரிசோதனை செய்தவரின் முகம் யோசனையிலேயே இருக்க
“என்னாச்சு ஆண்ட்டி… ஏன் இவ்ளோ யோசனை…”
“ஒண்ணுமில்லடா… அர்ஜூன் கிட்ட பேசலாமா… அவரை வரச் சொல்லலாமா…” எனும் போதே….
“இது என்னோட குழந்தை… இந்தக் குழந்தைகளோட அப்பா மிஸ்டர் ரிஷிகேஷ்… என்கிட்ட இல்லை என்னோட கணவர் ரிஷிகிட்ட மட்டும்தான் எதுவா இருந்தாலும் நீங்க டிஸ்கஸ் பண்ணனும்… “ கண்மணியின் குரல் உயர்ந்திருக்க…
”அர்ஜூன் என்னோட ரிலேட்டிவ் அவ்ளோதான்… என்னைப் பற்றின விசயங்களை அவர்கிட்ட டிஸ்கஸ் பண்றதை இதோட நிறுத்திக்கனும்… அதுமட்டுமில்லாமல் இது எங்க குழந்தை சம்பந்தப்பட விசயம்… அதாவது நானும் ரிஷியும் மட்டும் சம்பந்தப்பட்ட விசயம்… சோ தேர்ட் பெர்சன்சை அவாய்ட் பண்ணலாம்… எங்க ரெண்டு பேரையும் தவிர வேற யாரையும் இன்வால்வ் பண்ண வேண்டாம் ” கண்மணியின் குரல் அதிகாரமாய் ஆணையிட்டிருக்க… கூடவே அதில் கோபமும் கடுமையும் இருந்தது
மீனாட்சி இப்போது அமைதியாக இருக்க
“ஆன்ட்டி எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க… இல்லை ரிஷிகிட்ட சொல்லுங்க… “
“ஒண்ணுமில்லைடா… ஐ மீன் பயப்பட்ற மாதிரி ஒண்ணும் இல்லை… சரி ரிஷி வரட்டுமே… வந்த பின்னால பேசலாமே…” மீனாட்சியின் குரல் மெல்ல தாழ்ந்திருக்க
”எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க ஆன்ட்டி… என்னைப் பற்றி ஓரளவு தெரியும்னு நினைக்கிறேன்… கிருத்தி ஆன்ட்டி கண்டிப்பா சொல்லியிருப்பாங்கதானே…. சொல்லுங்க…” கண்மணி இப்போது விடவில்லை… அதிகாரம்.. மிரட்டல்… உருட்டல் கூடவே தோழியின் மகளாக பாசத்தையும் அவள் குரலில் சேர்த்திருக்க… மீனாட்சியும் வேறு வழி இன்றி கண்மணியிடமே சொல்ல முடிவு செய்தார்…. பேச ஆரம்பித்தார்.
“டிவின்ஸ்னு சொன்னாலும்… ரெண்டு கருவோட வளர்ச்சியும் வேற வேற மாதிரி இருக்கு… ட்வின்ஸ்ல இது காமன் தான்… ஆனால் இது அப்படி இல்லை… ரொம்ப வேரியன்ஸ் இருக்கு”
“சூப்பர் ஃபெட்டேஷன் கருத்தரிப்பா இருக்கலாம்னு நினைக்கிறேன்… ஆனால் இது ரொம்ப ரொம்ப ரேர்… ஐவிஎஃப்ல பாஸிபிள்... ஆனால் நார்மலா எப்படி… பாஸிபிலே இல்லை….” யோசித்தவராக கண்மணியைப் பார்க்க… அவள் முகமோ இருண்டிருக்க…
“நார்மல் ட்வின்ஸ் மாதிரிதாண்டா… பயப்ட்றதுக்கு ஒண்ணுமில்லை… நாளைக்கு இன்னும் சில டெஸ்ட்ஸ் எடுப்போம்…”
“இப்போவே எடுக்கலாம்…” கண்மணியின் குரலில் சில மணி நேரங்களுக்கு முன் இருந்த குறும்பு… துறுதுறுப்பு எல்லாம் இல்லை
“கண்மணி… நீ நினைக்கிற மாதிரிலாம் உடனே எல்லா டெஸ்ட்டும் எடுக்க முடியாது… “
“எதெதெல்லாம் எடுக்க முடியுமோ… அதெல்லாம் எடுங்க… தேவையான ஃபெஸிலிட்டி இருக்குதானே “ தன் அதிகாரத்தை பயன்படுத்த ஆரம்பித்திருந்தாள் கண்மணி… அதன் விளைவு தோரணையான அவள் வார்த்தைகளில் கட்டளை மட்டுமே…
“பவியோட பிடிவாதம் அப்டியே உன்கிட்ட…” எனும் போதே…
“இல்ல இல்ல…. எனக்கும் அவங்களுக்கு சம்பந்தம் இல்லை… நான் அவங்க மாதிரி இல்லை… இருக்க மாட்டேன்… என்னைக் கம்பேர் பண்ணாதீங்க“ என்றவளின் உடைந்த ஆக்ரோஷமான குரலில் மீனாட்சி அவளின் நிலையைப் புரிந்து கொண்டவராக
“சரி ஒகே… டெஸ்ட் தானே எடுக்கலாம்… இந்த ரிப்போர்ட்ஸ் எடுத்துக்கோ… ரிஷி வரட்டும்… அவர் வந்த பின்னால… அவர்கிட்டயும் டிஸ்கஸ் பண்ணலாம்…”
“ரிஷிகிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்… ரிஷிகிட்ட மட்டும் இல்லை… யார்கிட்டயுமே… நாராயணன்… நட்ராஜ்… அர்ஜூன்… வைதேகி… கிருத்திகா… எல்லோருமே அந்த லிஸ்ட்ல இருக்காங்க… இவங்க யாருக்கு எதுவும் தெரியக்கூடாது… இது என் மேல சத்தியம்” அவளது கண்கள் அந்த ரிப்போர்ட்ஸை வெறித்தபடியே சொன்னது அதில் இருந்த பிரசவத்திற்கு குறித்த நாளைப் பார்த்தபடியே… ”டிசம்பர் 31…” அதில் இருக்க கண்மணியின் குரல் மென் மேலும் இறுகி இருந்தது…
---
அடுத்த நாள் கண்மணி அமைதியாக மீனாட்சியின் முன் அமர்ந்திருந்தாள்… அனைத்து பரிசோதனைகளும் எடுக்கப்பட்டிருந்தது…
”எனக்கே தெரியாமல் கொடுத்த போதை மருந்துகளின் விளைவு… ஹார்மோன் சேஞ்ச்… அது இம்பேலன்ஸ் ஆகியிருக்குன்றதுனால இந்த மாதிரி ஆகி இருக்கா…”
“ஒரு குழந்தையோட வளர்ச்சி நார்மலா இருக்காதா…” கண்மணியின் குரல் உள்ளடங்கி இருக்க
”அப்போ அபார்ட் பண்ணனுமா” கண்மணியின் கண்களில் உயிரற்ற தன்மை… கேள்வி கேட்டவள் மீனாட்சியைச் சலனமின்றி பார்க்க
மீனாட்சியோ… சில நிமிடம் யோசித்தபடி இருக்க…
‘”எதுவா இருந்தாலும் சொல்லுங்க…” கண்மணியின் குரலில் இப்போது அழுத்தம் அடங்கிய தீவிரம் மட்டுமே…. நிதானம்தான் அதில் இருந்தது… ஆக்ரோஷம் எல்லாம் இல்லை… கண்மணியின் நிதானப் பேச்சில்…. மீனாட்சியும் மீண்டவராக
”New born respiratory distress syndrome… நீ குறை மாதக் குழந்தையா பிறந்தப்போ இருந்த பிரச்சனை… இப்போ வரைக்கும் பிரச்சனையா இருக்கு… Acute respiratory distress syndrome உனக்கு இருக்கு…. நீ கன்சீவாகவே ஆகி இருக்கக் கூடாது கண்மணி“ மீனாட்சியின் குரல் நைந்திருக்க…
“மேரேஜ் பண்ணியிருக்கவே கூடாதுனு சொல்லுங்க ஆண்ட்டி… இதுதானே சரியான வார்த்தை… ” கண்மணியின் வார்த்தைகளில் விரக்தியும் குற்ற உணர்ச்சியும் மட்டுமே…
”நான் ஒரு பையனோட வாழ்க்கைல… அவங்க குடும்பத்துக்கே துரோகம் பண்ணிட்டேனா ஆன்ட்டி…. இந்த மாதிரி ஒரு பிரச்சனை எனக்கு இருக்குனு தெரிஞ்சிருந்தால் நான் கண்டிப்பா மேரேஜே பண்ணியிருக்க மாட்டேன்… இப்போ இன்னொருத்தரோட வாழ்க்கையும் என்னால கேள்விக் குறி ஆகிருச்சே…”
ரிஷி என்ற சொல்லையே தன் பேச்சில் தவிர்த்திருந்தாள் கண்மணி… அந்த அளவுக்கு அவள் உணர்வுளால் பந்தாடப்பட்டு படு பாதாளத்தில் தள்ளப்பட்டிருந்தாள்….
“நான் ஏன் பிறந்தேன்னு பெருசா நினைச்சதே இல்லை இதுவரைக்கும்… ஆனா இன்னைக்கு நினைக்கிறேன்… நான் ஏன் பிறந்தேன்… என்னை ஏன் காப்பாத்துனாங்க.. இது எல்லாம் கூட ஓகே… ஆனால் மேரேஜ் பண்ணியிருந்து இருக்கக் கூடாது… தப்பு பண்ணிட்டேனே ஆன்ட்டி… நான் என்ன பாவம் பண்ணினேன்… என் அம்மால இருந்து… இப்போ என் குழந்தை வரை… என்னோட பாவம் அவங்களைத் தாக்குது…”
“நான் ஒருத்தி இல்லாமல் போயிருந்தால்… ஜனிக்காமல் இருந்திருந்தால்… இங்க எத்தனையோ பேரோட வாழ்க்கை நல்லாயிருந்திருக்குமோ… என் பாட்டி சொன்ன மாதிரி… நான் ராசி இல்லாதவ… என் பாட்டி சொன்னதும் சரிதான்… என் தாத்தா நினைச்ச மாதிரி என்னைக் கருவிலேயே அழிச்சிருக்கலாமோ… அவர் நினைத்ததும் சரிதான்… ” கண்மணி புலம்ப ஆரம்பித்திருந்தாள்…
“என் அம்மாவோட உயிர்… என் அப்பாவோட வாழ்க்கை… என் தாத்தா பாட்டியோட நிம்மதி… இப்போ என் குழந்தைங்களோட உயிர்… எல்லாமே என்னாலதான் பறிபோயிருச்சா…” என்று எங்கோ பார்த்தபடி சொன்னவள்… மீனாட்சியைப் பார்த்தவளாக
“ஆனால் என் ரிஷி என்னைப் பார்த்து அடிக்கடி சொல்வாரே… நான அவரோட தேவதைனு… நான் அவரோட தேவதை இல்லையா… இனி என்னை அப்படி சொல்ல மாட்டாரா…” கண்மணியின் கண்களில் இருந்து கண்ணீர் கரை உடைக்கப் போக… சட்டென்று கைகளால் அதைத் துடைத்த போதே… திடிரென்று ஒரு எண்ணம்… அந்த தோன்றிய போதோ… அவள் கண்ணில் கண்ணீர் அருவியென கொட்ட ஆரம்பித்திருக்க… குரல் தடுமாறியது
“அபார்ட் பண்ணப் போறீங்களா… சொல்லுங்க டாக்டர்… ஏன் சுத்தி வளைக்கிறீங்க…” இதைச் சொன்ன போதே… அவள் உள்ளம் துடிக்க ஆரம்பித்திருந்தது… அவள் கருவில் இருந்த அவள் குழந்தைகளுக்காக
”கண்மணி… “அபார்ட் கூட உனக்கு பண்ண முடியாது கண்மணி…”
”இல்லைனா… அபார்ஷனுக்கு நானே ரெஃபெர் பண்ணியிருப்பேனே… ஆனால் அதுவுமே ரிஸ்க்… ஒரு கரு… நல்லா வளர்ச்சியா இருக்கு… இன்னொரு கரு இப்போதான் க்ரோத் ஆகிட்டு இருக்கு… டேப்லட்டும் முடியாது… கிளியர் பண்ணவும் முடியாது… அபார்ஷன் பண்றதும் கிட்டத்தட்ட ஆபரேஷன் மாதிரிதான்… அதுவும் உன் உயிருக்கு ஆபத்துல தான் முடியும்…”
“எப்படினாலும்… போற உயிரு… பத்து மாசம் வெயிட் பண்ணிப் போகட்டும்னு சொல்றீங்களா ஆன்ட்டி… “ எங்கோ பார்த்தபடி சொன்னவள்… அனைத்தையும் விடுத்து
“என் குழந்தைங்களையாவது காப்பாத்த முடியுமா… பாஸிபிலிட்டி இருக்கா…” கண்களில் சிறு எதிர்பார்ப்புடன் கேட்க
”எல்லாமே டிஃபிகல்ட்டியாத்தான் இருக்கு கண்மணி…. ஒரு குழந்தைனா ஓரளவு நம்பிக்கையா சொல்லியிருப்பேன்…“ அதற்கு மேல் அவர் வார்த்தைகளை தொடராமல் இருக்க
“என் அம்மா அளவுக்கு கூட நான் புண்ணியம் பண்ணலையா ஆன்ட்டி…” அவள் கண்களில் கண்ணீர் கோடுகளின் தடம் மட்டுமே…
“சிசேரியன் அப்போ… நீ எந்த அளவுக்கு கோ ஆபரேட் பண்றியோ… அதை வச்சுதான் டிசைட் பண்ண முடியும்… ஆனால் சான்ஸ் இருக்கு கண்மணி… அட்லீஸ்ட் ஒரு குழந்தையை காப்பாத்த ட்ரை பண்ணலாம்… அதுவும் ட்ரை தான்…”
”எல்லாமே ரிஸ்க்…” மீனாட்சி வருத்தத்துடன் சொல்ல முடியாமல் சொன்ன போதே போதே கண்மணி தெளிவுக்கு வந்தவளாக…
“ஓகே… நோ மோர் வொரிஸ்… நடக்கப் போறதை மட்டும் பேசலாமா” கண்மணி நிமிர்ந்து அமர்ந்திருந்தாள்… அவள் கண்களில் கண்ணீர் இல்லை…
---
அன்று நடந்ததை சொல்லி முடித்த கண்மணி ரிதன்யாவைப் பார்த்தவளாக…
“என் முடிவு தெரிஞ்சிருச்சு… அட்லீஸ்ட் ஒரு குழந்தையைக் காப்பாற்றி கொடுக்கனும்ன்ற வெறி மட்டும் தான் இப்போ எனக்குள்ள இருக்கு… கொடுப்பேன்ற நம்பிக்கை மட்டும் எனக்கு இருக்கு ரிதன்யா… அதுனாலதான் டிவின்ஸ்னு கூட யார்கிட்டயும் சொல்லலை….“
“ரிஷியோட லைஃப்ல நான் பண்ணினது மிகப் பெரிய துரோகம்… அந்த துரோகத்துக்கு பாவத்துக்கு பிராயச்சித்தமே கிடையாது…”
“சத்தியமா சொல்றேன் ரிது… என்னோட சின்ன வயசுல மருது துரை மூலம் வேற ஏதாவது நடந்திருந்தால் கூட… நான் பண்ணாத ஒரு தவறுக்கு என்னை நான் தண்டிச்சுட்டு… என் வாழ்க்கையை சோகப்பாதைல கொண்டு போயிருக்க மாட்டேன்… எனக்கு அதுல எந்த குற்ற உணர்ச்சியும் இருந்திருக்காது… ரிஷின்னு இல்லை.. அர்ஜுனை என்னை மேரேஜ் பண்ணக் கேட்டப்போ கூட எனக்கு எந்த உறுத்தலும் இல்லை…”
“மருது விசயத்துல எனக்கு எப்போதுமே குற்ற உணர்ச்சியே இருந்தது இல்லை…. ஆனாலும் உங்க அண்ணாகிட்ட நான் ஏன் சொல்லலைனு நீ கேட்கலாம்…”
“அர்ஜூன் ஓகே… என்னோட எல்லா விசயமும் தெரியும்… ஆனால் ரிஷிகிட்ட முன்னாடியே சொல்லி இருக்கனும்தான்… எந்த ஒரு சம்பவமும் நடக்கலை…. அதுனால அதை எதுக்குச் சொல்லனும்னு விட்டுட்டேன்… மேரேஜ் முடிந்த அன்னைக்கு என்னைப் பற்றி சொல்லனும்னு நினைக்கும் போது… சொல்ல முடியாத நிலை…”
“ஆனால் குழந்தை பெத்துக்க தகுதியில்லாத ஒரு பொண்ணுனு தெரிஞ்சிருந்தால் கண்டிப்பா ரிஷியை மேரேஜ் பண்ணியிருக்க மாட்டேன்…”
”இப்போ… என்னோட உடல் தகுதியே குறை சொல்ற இடத்தில இருக்கு… கண்டிப்பா நான் உங்க குடும்பத்தை நான் உணராமலேயே ஏமாத்திட்டேன்தான் ரிது… எந்த ஜென்மத்திலயும் இதுக்கு விமோச்சனம் கிடையாது எனக்கு…”
“ரிஷியோட வாழ்க்கையை எப்படி நேராக்குவேன்…” புலம்ப ஆரம்பித்திருந்த கண்மணி ரிதன்யாவைப் பார்த்த பார்வையில் அவளுக்கு உடல்நிலையில் பிரச்சனை என்பது அவள் கவலையில்லை… ரிஷிக்கு துரோகம் செய்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சியே அவளுக்கு இருந்தது…
ரிதன்யா அவள் அருகில் வந்தவளாக….
“அப்டிலாம் சொல்லாதீங்க அண்ணி… நீங்க எங்க வீட்டோட தேவதை… இது மறுக்க முடியாத உண்மை… ”
”நாம வேற டாக்டர் கிட்ட போகலாம்… இங்க முடியாதுன்னா… வெளிநாடு கூட போகலாம்… அதெல்லாம் பார்த்துறலாம்… நீங்க ஆரம்பத்துலயே சொல்லி இருந்திருக்கலாம்… தப்பு பண்ணிட்டீங்க… நீங்க பண்ணின தப்பு அது மட்டும் தான்… உங்களுக்கு ஒண்ணும் ஆகாது…” தன் அண்ணிக்கு ரிதன்யா நம்பிக்கை ஊட்ட… கண்மணி இகழ்ச்சியாகச் சிரித்தாள்…
“மீனாட்சி ஆன்ட்டி சாதரணமானவங்கன்னு நினைக்கிறீங்களா ரிது… தாத்தாவோட பணபலம் தெரியும் தானே… நான்னு சொல்லாம அவங்க எல்லா வகையிலும் ட்ரை பண்ணிட்டாங்க… ஆனால் இப்போ கூட ட்ரை பண்ணிட்டு இருக்காங்க… அவங்க எல்லாமே ட்ரை பண்ணிட்டாங்க… அதெல்லாம் விடுங்க… சில விசயங்கள்… மேல இருக்கிறவன் டிசைட் பண்றது… யாராலும் மாத்த முடியாது… நாம அதுக்கு பழகிக்கனும்… இன்னும் கொஞ்ச நாள்ள கண்மணின்ற வார்த்தைக்கு இங்கே இடம் இல்லாமல் போயிரும்…“ கண்மணி தெளிவாக ரிதன்யாவுக்கு விளக்கியிருக்க…
ரிதன்யாவின் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோட ஆரம்பித்திருக்க… கண்மணியோ அவளின் அருகில் வராமல் வெளியில் வெறிக்க ஆரம்பித்திருக்க…
ரிதன்யா சில நிமிடங்கள் அழுதவள்… பின் வேகமாக கண்ணீரைத் அழுந்தத் துடைத்தவள்…
கண்மணியின் அருகில் வந்து நின்றாள்…
“என்ன வேணும்னாலும் நடக்கட்டும்… சரி நீங்க சொன்னது போல இறப்பு எல்லோருக்கும் நிச்சயமானது தான்… அடுத்த நிமிசம் இங்க யாருக்கும் சொந்தமில்லைதான்…”
”நான் ஒத்துக்கிறேன் அண்ணி… அந்த அடுத்த நிமிசத்துக்காக இந்த நிமிசத்தை ஏன் கஷ்டப்படுத்திக்கனும்… அண்ணா கூட நீங்க சேர்ந்து இருந்திருக்கலாமே… என்ன நடக்குதோ நடக்கட்டும்… அதை விட்றலாம்… அது வரை… சந்தோசமா இருந்திருக்கலாமே…. இவ்ளோ பிரச்சனை ஏன் பண்ணனும்… அண்ணனை விட்டு ஏன் தள்ளி இருக்கனும்… அண்ணன் உங்களை வெறுக்கனும்னு நினைக்கிறீங்க…”
கண்மணி அழகாகப் புன்னகைத்தாள்…
“சில விசயங்களை மனுசங்களா நாம மாற்ற முடியாது… ஆனால் சில விசயங்களை நாம நினைத்தால்… அதாவது மனுஷங்க நினைத்தால் மாற்றலாம்… ரிஷியை விட்டு பிரிந்ததும் அந்தக் காரணமே…” என்று ரிதன்யாவிடம் நிதானமாகச் சொன்னவள்… தன் முன் நின்ற ரிதன்யாவைப் பார்த்து
“நான் இப்படிலாம் பண்ணினா… ரிஷி என்னை வெறுப்பாரா சொல்லுங்க… மனசு கஷ்டப்படுவார் அவ்ளோதான்…” கைகளை கட்டியபடி ரிதன்யாவைப் பார்த்து சொல்ல… அவளிடம் இருந்த அமைதியான மர்மப் புன்னகையில் ரிதன்யாவுக்குத்தான் உள்ளுக்குள் உதறல் எடுத்தது…
“மாமா மாதிரி அண்ணாவும் ஆகிறக்கூடாதுன்னு… நீங்க நெனச்சீங்கதானே… அதுக்காகத்தானே இவ்ளோ கஷ்டப்பட்றீங்க…”
ஒப்புதலாகத் தலை ஆட்டினாள் கண்மணியும்…
“ஹ்ம்ம்… நீங்க சொன்னதுல பாதி சரி…” என்ற கண்மணி தொடர்ந்தாள்…
“என் அப்பா இந்த நிலைமைக்கு ஆனதுக்குக் காரணம்… என் அம்மான்னு நினச்சிருந்தேன்… ஆனால் என் அம்மா மட்டும் காரணமில்லை ரிது… என் அப்பாவைப் சுத்தி இருந்தவங்கதான் காரணம்… அதுதான் முக்கிய காரணம்…”
ரிதன்யா அதிர்ச்சியுடன் பார்க்க…
“என் அப்பாவும் என் அம்மாவும் அவ்ளோ அன்னியோன்யமாக வாழ்ந்த வாழ்க்கை மட்டும் அவரோட நிலைக்கு காரணம் இல்லை… என் அம்மா போன பின்னால இந்த சமூகம் என் அப்பாவைப் பார்த்த பரிதாபப் பார்வைதான் காரணம்…”
“எப்படி வாழ்ந்தா அவன் கூட இப்படி விட்டுட்டு போயிட்டாளே… எங்கு திரும்பினாலும்… என் அப்பாக்கு இந்தப் பரிதாபப் பார்வைகள் தான்… இது என் ரிஷிக்கு வரக் கூடாதுனு நினைத்தேன்… இனி வராதுன்னு நினைக்கிறேன்…”
”பரிதாபப் பார்வைக்கு பதிலா… அந்தக் கண்மணி திமிரு பிடிச்சவ… அவகூட என்ன பெருசா வாழ்க்கை வாழ்ந்துட்டான்… அவ அவனை மதிக்கவே இல்லை… பொருட்டாவே நினைக்கலை… திமிரா ஆடுனா போய்ச் சேர்ந்துட்டா… அவளோட வாழ்ந்த வாழ்க்கைல அவனுக்கு அவமானம் தான் மிச்சம்… இவ்ளோ நாள் அவ என்ன இவன் கூடச் சேர்ந்தா வாழ்ந்தா… இப்படி தான் எல்லோரும் பேசுவாங்க…”
”இப்படித்தானே ரிஷியை எல்லோரும் பார்ப்பாங்க… ரிஷி சிலசமயம் விளக்கம் கொடுக்க நினைப்பாரு… என் கண்மணி அப்படி இல்லைனு… சோ பரிதாபப் பார்வைக்கு பயந்து தன்னை ஒளிச்சிக்கிறதுக்குப் பதிலா… அழிச்சிக்கிறதுக்குப் பதிலா… எனக்கும் அவருக்குமான வாழ்க்கைக்கு விளக்கம் கொடுக்க நினைப்பார்… கொஞ்ச நாள்ல அவரே அவருக்கும் விளக்கம் கொடுத்துக்க ஆரம்பிச்சுப்பார்… கண்டிப்பா யோசிப்பார்… முடிவு தனசேகர் – இலட்சுமி பையனா வாழ்க்கையை தொடர்வார்…”
ரிதன்யா அவளைக் கவலையோடு பார்க்க… அவளோடு அவள் பார்வையை எல்லாம் கண்டு கொள்ளாமல்
“ரிஷியை யாரும் பரிதாபமா பார்க்க மாட்டாங்க ரிது…. ஐயோ பாவம் இவன்னு யாரும் சொல்லக் கூடாது… நான் இருக்கும் போது அவன் பாவம்னு சொன்ன மனுசங்க… நான் போன பின்னால… என்னை வைத்து பரிதாபப்பட மாட்டாங்க… ”
“ரிஷியும் பரிதாபப் பார்வைகளுக்கு மத்தியில புழுவா துடிக்க மாட்டாரு”
“அப்போ அடுத்தவங்களோட பார்வைகள் இல்லைனா… என் அண்ணன் உங்களை மறந்துருவாரா…”
மறுத்து தலை ஆட்டினாள்…
“இல்லை… என் நினைவுகளின் துணையோட முன்னேறுவார்… அவரோட கண்மணி… அவர் கூடத்தான் இருப்பா… அவரோட ஒவ்வொரு அணுவிலும்… நான் கலந்து இருக்கேன்… நான் எங்கே போகப் போகிறேன்… இதோ இந்தக் கதை மூலமா அவர்கிட்ட நான் பேசிகிட்டே இருப்பேன்”
என்றவளுக்குச் சொல்ல விருப்பம் இல்லைதான் என்றாலும்
“யார் கண்டது… எதிர்காலத்துல இன்னொரு பெண் கூட அவர் வாழ்க்கைல வரலாம்…. இந்த காலத்துக்கு எதையும் மாத்துற சக்தி இருக்கு ரிதன்யா… என்னோட காதலை விட அந்தப் பொண்ணோட காதல் சக்தி வாய்ந்ததா இருந்தா… ரிஷியோட வாழ்க்கைல மறுபடியும் காதல் துளிர்க்கலாம்…”
ரிதன்யா இப்போது
“ஒரு வேளை என் அண்ணன் இடத்துல நீங்க இருந்திருந்தால் அதே காலம் உங்களையும் மாத்துமா அண்ணி” கோபமாகக் கேட்க
“சொன்னேனே… காலத்துக்கு எதையும் மறக்க வைக்கிற ஆற்றல் இருக்குனு… ஒரு காலத்துல மருதுதான் எனக்கு எல்லாம் நம்பின மனசுதான்… அர்ஜூன்கிட்ட தடுமாறின மனசுதான் இன்னைக்கு ரிஷிக்காக போராட்டிட்டு இருக்கு ரிதன்யா…”
ரிதன்யாவின் இதழ் ஏளனமாக வளைந்த விதத்திலேயே ரிதன்யாவின் நம்பாத தன்மை புலப்பட்டிருக்க..
”ரிது… ரிஷியோட வாழ்க்கையை மாற்றலாம்… அது என்னால முடியும்… அதை நான் நம்புறேன்… ரிஷின்ற ஒருத்தனோட வாழ்க்கைல கண்மணி ஜஸ்ட் வந்தா… போயிட்டா… அதை மத்தவங்க எல்லாம் புரிஞ்சுகிட்டா போதும்… அவ்ளோதான்… ரிஷி கண்டிப்பா நல்லா இருப்பாரு…”
இருவரும் சில நிமிடங்கள் பேசவே இல்லை… அப்படி ஒரு அமைதி சூழ்ந்திருக்க… கண்மணிதான் அதைக் கலைத்தாள்… ஆனால் இப்போது அவள் நிஜ வாழ்க்கையைப் பற்றி பேச வில்லை… அவள் கற்பனை உலகின் எண்ணங்களுக்கு உயிர் கொடுத்து பேசினாள்…
“அப்புறம்… நான் இந்தக் கதை மட்டுமில்லை… இன்னும் ரெண்டு கதை எழுதி இருக்கேன்… அது ரெண்டும் என் ஸ்டோரி மாதிரி நெகட்டிவ் எண்ட் இல்லை…. அது எல்லாமே ஹேப்பி எண்டிங்க் தான்… ஏன்னா என்னோட கற்பனைக் கதாப்பாத்திரங்களை நான் தான் கிரியேட் பண்ணேன்… சோ அவங்களை கஷ்டப்பட விடுவேனா… அதுமட்டுமல்ல ரொமான்ஸ் ஸ்டோரி… டைம் இருந்தா படிச்சுப் பாருங்க… அடுத்து மறக்காமல் பப்ளிஷ் பண்ணிருங்க… புத்தகமா வரனும்… கண்டிப்பா படிக்கிற எல்லோருக்கும் என் ஹீரோ ஹீரோயின் பிடிக்கும்… ” கண்மணி கண் சிமிட்ட… ரிதன்யாவோ கண் சிமிட்ட மறந்து கண்மணியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்…
---
நேரம் செல்லச் செல்ல… கண்மணிக்கு அவள் ஆடைகளே தொந்தரவாக உறுத்தலாக மாறியிருக்க… மெல்லிய பருத்தி புடவை மட்டுமே அவள் சுற்றியிருக்க… வெளி ஆட்கள் யாருமே அனுமதிக்கப்படவில்லை… வைதேகி இலட்சுமியைக் கூட அடிக்கடி வர வேண்டாம் என்று சொல்லிவிட்டார் கந்தம்மாள்…
பெண்களுக்கே இந்த கட்டுப்பாடு எனும் போது… நட்ராஜ்… நாராயணன்… என இவர்களை மட்டும் விட்டு விடுவாரா கந்தம்மாள்…
இவர்கள் அனைவரையும் விட ரிஷிக்குத்தான் கண்மணியைப் பார்ப்பதற்கு கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்தது…
”பாட்டி… அவ நிலைமை தெரியாமல் பேசுறீங்க… நான் ஏன் பார்க்கக் கூடாது… நான் என்ன மூணாம் மனுசனா… அவளை இந்த நிலைமைல பார்க்க அனுமதிக்காம இருக்கலாம்…” அவன் பாதி சொல்லியும் மீதி சொல்ல முடியாமலும் தவித்திருக்க
“அதுலாம் எல்லாம் எங்களுக்குத் தெரியும்… அவளுக்கு ஒண்ணும் இல்லை… அம்மா போட்ருக்கு… அந்த தாயி வந்து இறங்கி இருக்கான்னா காரணம் இல்லாமல் இருக்காது… இப்படி இருக்கேன்னு பயப்படக் கூடாது… பயப்பட்டு அவளைப் பார்த்தா தாய்க்கு உக்கிரம் வந்துரும்… அதுனாலதான் யாரும் பார்க்க வேண்டாம்னு சொல்றேன்… நானும்… ரிதன்யாவும் மட்டும் பார்த்துக்கிறோம்… பத்து பதினஞ்சு நாள் கழிச்சு… அவளை நீங்க பார்த்தால் போதும்…” கந்தம்மாள் அதிரடியாகச் சொல்லியபடி… அவன் கையில் கண்மணியிடமிருந்து கழட்டி வாங்கிய… அவள் அணிந்திருந்த மொத்த அணிகலன்களையும் கொடுத்திருந்தார்… வளையல்கள் மட்டுமல்ல… மூக்குத்தி… முக்கியமாகத் தாலிக் கொடியும் அதனோடு இருக்க… ரிஷி மௌனமாக வாங்கிக் கொண்டான்….
“அம்மா போட்ருந்தா உடம்புல தடங்கல் எங்கயும் இருக்கக் கூடாது… “ நகைகளைக் கொடுத்தபடி கந்தம்மாள் சொல்ல
“பாட்டி… அது அப்படி இல்லை… இந்த டைம்ல நகைலாம் போட்ருந்தால் அது இன்னும் கஷ்டம்தானே… அதுனாலதா…” என்று உண்மைக் காரணத்தை ரிஷி விளக்கிய போதே…
“அட போப்பா… என்ன சொன்னாலும்… அதுக்கு ஒரு விளக்கம் கொடுத்துட்டு… இதுல யாரும் தலையிடாதீங்க… நானே குத்தம் குறை ஏதும் ஆகிடக் கூடாதுன்னு பயந்துட்டு இருக்கேன்… சூதானமா நடந்துக்க பாருங்க… ” என்றபடி கந்தம்மாள் சொல்லி முடித்து வீட்டுக்குள் சென்று விட… ரிஷி கோபமும்… கடுப்புமாக அவரை வெறித்தபடி நின்றிருக்க… நட்ராஜும் நாராயணனும்… ரிஷியிடம் வந்தவர்களாக….
“ஏழாவது மாசம் தானே… பயப்பட்றதுக்கு ஒண்ணுமில்லைனு சொல்லிட்டாங்க ரிஷி… டெலிவரி டேட்க்கு இன்னும் நாள் இருக்கே… அதுக்குள்ள மணி நார்மலாகிருவாப்பா”
“மாப்பிள்ளை சொல்றது கேளுப்பா… எனக்கே அவர்தான் ஆறுதல் சொன்னார்…” என்று தன் மருமகன் பேச்சுக்கு ஒத்து ஊதினார் நாராயணனும்…
ரிஷி இருவரையும் பார்த்த பார்வையில் ஆயிரம் உணர்ச்சிகள்… அவர்களிடம் கண்மணியின் நிலையைச் சொல்ல துடித்ததுதான் மனது… ஆனாலும் கண்மணியையே… தங்கள் உலகமென… அவர்களின் உயிரெனச் சுற்றிக் கொண்டிருக்கும் அந்த வயதானவர்களிடம் உண்மையைச் சொல்லி அவர்களை அவன் கஷ்டப்படுத்த விரும்பவில்லை…. அவர்களின் கனவுகளை ஏமாற்ற நினைக்கவில்லை… அமைதியாக அங்கிருந்து சென்று விட்டான் ரிஷி…
ஆக அன்றைய பொழுது ரிதன்யாவுக்கும்… கண்மணிக்குமான பிரத்தியோக பொழுதுகளாக போயிருந்தது…
ரிதன்யா கண்மணியை விட்டு ஒரு நொடி கூட நகரவில்லை…. அவளின் ஒவ்வொரு தேவைகளையும் அவளே பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தாள்… கண்மணியின் நிலை பார்த்தும்… அவள் பதட்டப்படவில்லை… நம்பிக்கை இழக்க வில்லை… கண்மணிக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாகவே… அவள் பேசிக் கொண்டிருக்க…
கண்மணிதான் கேட்டாள்…
“எனக்கு ஆச்சரியமா இருக்கு ரிது… நான் உன் இடத்துல இருந்திருந்தால் கண்டிப்பா உன்னை மாதிரி இருந்திருக்க மாட்டேன்… ”
”ஏன்… அப்படி…” ரிதன்யா கேட்க
“ஏன்னா… உங்களுக்கு என்னைப் பிடிக்காது… பிடிச்சு வந்தப்போ… அந்த உறவுக்கும் பெருசா ஆயுசு கிடையாது… சொல்லப்போனால் உங்களுக்கு மனசு கஷ்டம் தான்… இந்தக் கொஞ்ச நாள் பழக்கம்… என்னை உங்களோட ஆயுசு வரைக்கும் கஷ்டப்படுத்த வைக்கும்…” கண்மணி சொன்னபோதே கண்மணியின் நினைவுகளில் அமுதினியின் கடைசி நாட்கள் நினைவில் வந்து போயிருந்தது
“ஏன் அண்ணி அப்படி சொல்றீங்க… எனக்கு என்னோட அன்பைக் காட்ட… பாசத்தைக் காட்ட வாய்ப்புக் கெடச்சிருக்கு… நீங்க ஹேப்பியா ஃபீல் பண்றீங்களா… அது எனக்குத் தெரியலை… உங்களுக்கு எப்படியோ… நான் ஒவ்வொரு நிமிசத்தையும் உங்களுக்கா செலவு பண்ண தவம் கிடக்கிறேன்… அதே நேரம்… என் அண்ணி கண்டிப்பா நல்லா வருவாங்க… எனக்கு நம்பிக்கை இருக்கு… என்னோட நம்பிக்கை உங்ககிட்டயும் வரும்… என்னைப் பார்க்கிற ஒவ்வொரு நிமிசமும்… நீங்க அதை ஃபீல் பண்ணனும்… நாளைக்கு என்ன நடக்கப் போகுதுன்னு அதை எதுக்கு யோசிக்கனும்… இது எனக்கு கடவுளே கொடுத்த ப்ரீஷியஸ் டைம்… அதை தேவையில்லாத கவலைல வீணாக்க விரும்பவில்லை… ” என்றபடி கண்மணியைப் பார்த்தவள்…
“அண்ணி… ஆனால் அமுதினி விசயத்துல உங்களை நீங்க கட்டுப்படுத்திகிட்ட மாதிரி… என்னை விட்டு தள்ளி இருக்கக் கூடாது… உங்க பாசம் எனக்கு வேணும்… முழுசா வேணும்“ என்றவளைப் பார்த்து கண்மணி முறைத்தவளாக
“இப்போ நான் பாசத்தைக் காட்ற நிலைமைலயா இருக்கேன்… என்னைப் பார்த்தால் எப்படித் தெரியுது” கண்மணி கடுப்பாகக் கேட்க…
“ஐயோ… என் அண்ணி… நார்மலா பேசுறாங்க… அதுவும் என்கிட்ட…” ரிதன்யா துள்ளிக் குதிக்காதக் குறையாகப் பேச…
ரிதன்யாவின் உற்சாகத்தில் கண்மணியின் முகம் சட்டென்று மலர… அவளையும் மீறி ரிதன்யாவிடம் இயல்பாகப் பேச ஆரம்பித்திருந்தாள்….
“எனக்கு உங்களைப் பார்க்கும் போதெல்லாம் அமுதினி ஞாபகம் தான் வரும் ரிது… அவ என்கிட்ட எதிர்பார்த்த நட்பை… என்னமோ தெரியலை உங்ககிட்ட எதிர்ப்பார்ப்பேன்… அதுவும் மகிளாவுக்காக நீங்க அவ்ளோ போராடும் போது எனக்கு அவ்ளோ பொறாமையா இருக்கும்… உங்க ஃப்ரெண்ட்ஷிப் மாதிரி எனக்கு வாழ்க்கைல கிடைக்கவே இல்லையேனு ஃபீல் பண்ணுவேன்… ஒரு வேளை எனக்கு ஒரு ஃப்ரெண்ட் இருந்திருந்தால் இந்த மாதிரி என் லைஃப் தனிமையா இருந்திருக்காதோ… மருது மாதிரி ஒருத்தனை நம்பியிருக்க மாட்டேனோ… சொல்லப் போனால் நான் இதுவரை யார்கிட்டயுமே என்னோட பெர்சனலை ஷேர் பண்ணினது கிடையாது ரிது…”
“அண்ணாகிட்ட கூடவா…” ரிதன்யா கேட்க
“ரிஷிகிட்ட எனக்குனு ரகசியம் கிடையாது… அவரை வருத்தப்பட வைக்கக் கூடாது… அவர் முகம் வாடக் கூடாது… அவ்ளோதானே தவிர… மத்தபடி சொல்லக்கூடாதுனாலாம் இல்லை… எனக்கு ரிஷிதான் எல்லாமே… இப்போ ரிஷிக்கிட்ட எல்லாம் சொல்லனும்னு நினைக்கிறேன்… ஆனால் முடியலையே நான் ரிஷிகிட்ட போகனும்… அவ்ளோ பேசனும்… அவரைக் கட்டிப்பிடிச்சு கதறனும்னு தோணுது… ஆனால் அவர்கிட்ட பேசுனா நான் மொத்தமா உடஞ்சிருவேன்… அவரையும் மொத்தமா உடச்சிருவேன்… கண்டிப்பா அதை ஒரு நாளும் பண்ண மாட்டேன்… ஆனால் யார் மடியிலயாவது விழுந்து அழனும்னு தோணுச்சு ரிது… ஆனால் எனக்கு ரிஷியைத் தவிர யாருமே இல்லையே… ” என்ற கண்மணியின் குரல் தழுதழுத்திருக்க
“என் மடில படுத்துக்கறீங்களா அண்ணி…” ரிது கண்கலங்கி கேட்க… கண்மணி அவளையேப் பார்த்தபடி இருக்க…
ரிதன்யா கட்டிலில் அமர்ந்தவளாக… அவளை கைநீட்டி அழைத்திருக்க…
கண்மணிக்கு… அவள் இருந்த நிலையில் அப்படி ஒரு ஆதுரம் தேவைப்பட்டிருக்க…
அவள் மடியில் தலை சாய்த்துப் படுத்தவளின்… கண்ணீர் கோடுகள் ரிதன்யாவின் மடியை நனைத்திருக்க… ரிதன்யா அவளைத் தடுக்கவே இல்லை…
“நான் ரொம்பலாம் ஆசைப்படலை ரிது… ரிஷி கூட சாதாரண வாழ்க்கை… அதுக்கு கூட கொடுத்து வைக்கலை எனக்கு…”
“யார் சொன்னது… கண்டிப்பா என் அண்ணா கூட நீங்க ரொம்ப வருஷம் வாழுவீங்க…” தன் மடியில் படுத்திருந்த கண்மணியின் கண்ணீரைத் துடைத்தபடி… ரிதன்யா தீர்மானமாகச் சொல்ல…
கண்மணி தலையை மட்டும் நிமிர்த்திப் பார்த்தபடி
“உண்மையாவா… நடக்குமா… “ எனக் கண்மணி குழந்தை போலக் கேட்க
“நம்புங்கண்ணி…” ரிதன்யா சொன்னபோதே
“நம்பு கண்மணி…” கண்மணி ரிதன்யாவின் வார்த்தைகளைத் திருத்த… இருவருமே மற்றவற்றை எல்லாம் மறந்து… அவர்களின் நட்புலகில் சஞ்சரிக்க ஆரம்பித்திருக்க…
இரவு வரை அவர்களின் பேச்சு தொடர்ந்தது…. அவர்கள் நட்பின் அந்நியோன்யமும் வளர்ந்திருந்தது…
வெகு நாட்களுக்குப் பிறகு… கண்மணியின் மனதில் நிம்மதி…
கண்மணியோ தன் படுக்கையில் படுத்தவள்… அடுத்த நிமிடம் உறங்கியும் போனாள்…. அதே நேரம் அமுதினியும் வந்து போனாள் அவள் நினைவில்…
“நீ ஏன் என்கிட்ட பேசலை… நீ பேசி இருந்தால் நான் சந்தோசப்பட்டிருப்பேன்ல… ரிது மாதிரி எனக்கும் பாசிட்டிவ் வைப்ரேஷன் கொடுத்திருந்தால்… நானும் உன் கூட இருந்திருப்பேன்… உன் பக்கத்துல இருந்திருப்பேன்… “ எனும் போதே அமுதினியின் சிறுமி உருவம் இன்றைய ரிதன்யாவாக மாறியிருக்க… சட்டென்று எழுந்தவள்
அமுதினி மாதிரியே… ரிதன்யாவும் அழகு… திமிர் பிடித்த குணம் அது என்னை மாதிரி… நானும் அமுதினியும் கலந்த கலவைதான் ரிதன்யா… அதுனாலதான் என்னமோ எனக்கு ரிதுவை அவ்ளோ பிடிச்சதா… அவ அறஞ்ச போதும் அது என்னை பாதிக்கவே இல்லை… ஏன் அமுதினியை அவகிட்ட நான் உணர்ந்ததாலா?….
இமை கொட்டாமல் ரிதன்யாவை ரசித்திருந்தாள் கண்மணி…. ரிதன்யாவையே பார்த்தபடி வெகு நேரம் விழித்திருந்தவள் எப்போது உறங்கினாளோ அவளுக்கேத் தெரியவில்லை…
---
நள்ளிரவைத் தாண்டியிருந்தது… வைகறைக்கு இன்னும் சிறிது நேரமிருக்க… கண்மணி கண்களைத் திறக்க முயல… அவளால் முடியவே இல்லை… அவளைச் சுற்றி எங்குமே இருள்… இருள் மட்டுமே…
வேகமாக கண்மணி படுக்கையில் இருந்து எழ முயற்சிக்க… அவளால் அது முடியவே இல்லை
உடம்பு மொத்தமும் அவளுக்கே பாரமாகி இருக்க… குரல் மட்டுமே அவளுக்கு உதவி செய்தது இப்போது…
“ரிது” என எப்படியோ முயற்சித்து அழைத்தும் இருக்க… கண்மணியின் குரல் கேட்ட அடுத்த நொடியே ரிதன்யா அடுத்த நொடியே எழுந்தவள்… வேகமாக தன் அண்ணியின் அருகே போக…
“மூச்சு விட முடியலை ரிது… பாரமா… ஏதோ ஹெவியா இருக்கு ரிது…” முதன் முதலாக கண்மணியின் நைந்த குரலை ரிதன்யா கேட்டாள்…
“ஒரு நிமிசம் அண்ணி… லைட் போட்றேன்…” பதபதைத்தவளாக… விளக்கை உயிர்ப்பிக்க… அந்த அறையில் வெளிச்சம் பட்ட அடுத்த நொடியே… அதிர்ந்திருந்தாள் ரிதன்யா கண்மணியைப் பார்த்து…
-------------
/* நீயாக அன்றுஎன்னை பார்த்ததும் நீயாகவந்து பேசி போனதும் நீஎன்னை ஏற்று ஒப்புகொண்டதும் மறக்காதே நிலவைபார்க்க ஆசைபட்டதும் நிதானமாகபார்வை விட்டதும் நீயாகவந்து முத்தம் இட்டதும் மறக்காதே உன்போர்வையாக என்னைபோற்றி கொண்டதும் பொறாமைகொண்டு ஊரேபார்த்ததும் நீஎன் உலக அழகியே உன்னைபோல் ஒருத்தி இல்லையே*/
Very emotional Praveen
Edu nadandalum kanmani meendu varanum
Kanmani Conversations are emotional and Kanmani's feelings are nicely written. Hope in next episode R-K will converse. Hope for good end.
Rithanya Kanmani raasi agitanga jii..
Please happy ending podunga
I can"t say any words. Pls give happy end.
Romba emotional ana epi. Please Kanmani and Rishi ah serthu vachirunga. Illati kashtama irukkum sis. Waiting for final epi.
Waiting for final Epi & happy ending sis
Super
Kanmaniya sakaticcidathinka!!! Pls 🥺
Ala vaikirenga sis.. Kanmani ya ipo kaapathapora doctor neenga matum than. Pls sad ending vename...
very emotional siss
rithu kanmani conversation
raj pa kanmani conversation last hha vanthalum semma emotion sis
திக் திக் நிமிடங்கள்..சீக்கிரம் பைனல் ud கொடுங்க pls
En ipadi pandreenga. Kanmani ya kolla poreengala..enaku alugaiya varuthu..avangala serthu vainga...sad ending venam