ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன்...
நாளைக்கு அடுத்த 104-2 போட்ருவேன்...
அண்ட்
கண்மணிக்கு கர்ப்ப அம்மை போட்ருந்த மாதிரி எழுதி இருக்கிறது... உண்மையிலேயே நடந்த சம்பவம்... யார்க்குனு கேட்காதீங்க...
ஹெவியான பார்ட் தான்... ப்ளீஸ் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க...
கமெண்ட்ஸ்.. லைக்... போட்ற அண்ட் படிக்கிற அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ....
கமென்ட்ஸுக்கு ரிப்ளை பண்ண முடியலை... கதை முடிச்சுட்டு நாம பேசுவோம்... அப்போ நீங்க என்கிட்ட கேள்வி கேளுங்க... நானும் பதில் சொல்றேன்...
இப்போதைக்கு பை பை..
நன்றி
ப்ரவீணா...
அத்தியாயம் 104-1(PreFinal)
கண்மணி இல்லத்திற்கு வந்து சேர்ந்த சில நிமிடங்களுக்கு முன்… தன் வீட்டில்
கோபத்தோடு தன் அறைக்குள் வந்தவனுக்கு… கோபம்… கோபம் மட்டுமே… தன் மேலா… தன் மனைவியின் மேலா… அவளின் ஒவ்வொரு கட்டத்திலும் அவளை மீளா வேதனையில் தள்ளிய ஒவ்வொரு நபர்களின் மீதா… இல்லை இந்த இந்த உலகத்தின் மீதா… யாரைக் குற்றம் சொல்வது… யாரை நோவது… வலி அவனது காலில் இல்லை… மனதில் மட்டுமே…
அப்படியே வந்து கட்டிலின் மீது அமர்ந்தவனுக்கு அடுத்த அடி எப்படி எடுத்து வைப்பது ஒன்றுமே புரியவில்லை… தலையில் கை வைத்து யோசித்தபடி… உலகின் அத்தனை வழிகளையும் மனம் தேட ஆரம்பித்திருந்தது…
“யாரிடம் செல்லலாம்.. என்ன செய்யலாம்…” யோசித்தபடியே இருந்தவனுக்கு ஒன்றுமே யோசனை வந்து சேரவில்லை…
கதை ஒன்று சொல்வார்களே… தன் கணவன் சத்தியவானின் உயிரை சாவித்திரி எமனிடமிருந்து மீட்டெடுத்துக் கொண்டு வந்தாள் என்று… அது போல எனக்கும் வரம் கிடைக்குமா… மனம் நிராசையில் நடக்காத கற்பனையை எல்லாம் அவனுக்குள் கொண்டு வந்திருந்தது…
நிச்சயமற்ற வாழ்க்கையில்… நிச்சயமாக மரணம் என்பது மட்டும் உண்மை… ஆனால் அதே நேரம் அது எந்த நேரத்தில் நிகழும் இதையும் நிச்சயமாக யாராலும் கணிக்க முடியாதும் நிச்சயமான மிகப்பெரும் உண்மை…
கண்மணியின் உயிருக்கு ஆபத்து… அவள் உயிர் பிழைக்கும் வாய்ப்பு மிக மிக குறைவு… இப்படித்தானே சொன்னார்… பிழைக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்பதும் அந்த சொற்களில் எடுத்துக் கொள்ளலாமே… ஆனால் அதற்கான நம்பிக்கையை ஊட்டுவதற்கான நம்பிக்கை ஒளி தான் அவனுக்கு கிடைக்கவில்லை…
விரக்தியிலும்… சோகத்திலும்.. யோசனையோடு அப்படியே படுக்கையில் படுத்தவனின் தலையில் ஏதோ தட்டுப்பட… வேகமாக திரும்பி அதைப்பார்க்க… அமுதினியின் தந்தை கண்மணிக்கு கொடுத்த பரிசுப் பொருள்…
கண்மணியின் சிறுவயதுப் புகைப்படம் என்பதை அதைப் பார்க்கும் முன்னரே… யூகித்தவனாக… அதைக் கையில் எடுத்தபடி அவர் சொன்ன வார்த்தைகளை நினைத்துப் பார்த்தான்
“ரவுடி… அப்போ எப்படி இருந்திருப்பா…” அப்போதிருந்த மனநிலைக்கு இந்த எண்ணம் சற்று ஆசுவாசம் கொடுத்திருக்க… ஆவலுடன் அந்தப் புகைப்படத்தை எடுத்தவனுக்கு அந்தப் புகைப்படத்தில் இருந்த குழந்தைகள் கூட்டத்தில் கண்மணியைக் கண்டுபிடிப்பதில் பெரிய சிரமம் எல்லாம் இருக்கவில்லை…. அதே போல அமுதினியையும் சுலபமாக அடையாளம் கண்டு கொண்டான்
அமுதினி அங்கிருந்த குழந்தைகளிலேயே முற்றிலுமாக வித்தியாசப்பட்டிருந்தாள்… அவளின் தோற்றம்… உடுத்தியிருந்த உடை… அவளின் சிகை அலங்காரம் அனைத்திலுமே நாகரீக பணக்கார களை தெரிந்திருந்தது…
அந்த அமுதினிக்கு அவளுக்கு போட்டியாக இவன் மகாராணியும் ஒப்பனை செய்து கொண்டு வந்திருந்தாள்… ஒப்பனை என்று வார்த்தை இருக்கிறது என்பதால் அந்த வார்த்தையைச் சொல்லிக் கொள்ளலாம்…. ஒப்பனை என்ற பெயரில் கண்மணி அவள் முகத்தை அலங்கோல அல்லோல்கலம் பண்ணி வைத்திருந்தாள்…
ரிஷி இருந்த சூழ்நிலையில் சத்தியமாக வாய் விட்டுச் சிரித்தே விட்டான்…
“ஏண்டி… உனக்கு ஏண்டி இந்த வேண்டாத வேலை… ஒண்ரறை டப்பா கண்மை… பவுடர்… அது என்ன லிப்ஸ்டிக்கா… அடிப்பாவி.. சந்திரமுகிக்கு டஃப் கொடுப்ப போல… “ என்றபடியே அவளைப் பார்த்தபடியே… படுக்கையில் சரிந்தவன்…
“ஆனாலும் என் அழகுடி அம்மு நீ… அந்தக் கண்ணு யாருக்கும் டஃப் கொடுக்கும்… வீடியோவா இருந்திருந்தால் என் ஆளோட குரலுக்கே… தனி அழகுதான்… யப்பா என்னமா போஸ் கொடுக்கிறா… அப்போ கூட ரவுடி கெத்துதாண்டி என் பொண்டாட்டிக்கு…” அந்தப் புகைப்படத்தையும் பார்த்து வாய் விட்டு பாராட்டியபடியே… தன் மொபைலை எடுத்து அந்த புகைப்படத்தை கிளுக்கியவன்… அதை தன் அலைபேசியில் பதிந்துவைத்தவனாக…. அந்த புகைப்படத்தை மீண்டும்.. கவரிலேயே வைத்த போதே… கதவு தட்டப்பட… மீண்டும் அவன் நிலை மாறி இருந்தது…
எரிச்சலோடு… முகத்தைக் கடுகடுத்தபடி கதவைத் திறக்க… அவனது தாய்தான்…
”டேய்… கண்மணி கிளம்புறாடா…” எனும் போதே
“அதுக்கென்ன இப்போ… “ ரிஷி அலட்சியமாக கேட்க… இலட்சுமி அவனை முறைக்க…
“ம்மா… இப்போ என்ன பண்ணனும்னுகிறீங்க… “ அன்னையின் முகபாவனையில் ரிஷி தன் குரலை மாற்றி இருந்தான்… ட்
”என்னடா ஆச்சு உனக்கு… அவ இவ்ளோ நாள் பிடிவாதம் பண்ணிட்டு இருந்தா…. இப்போ நீ பிடிவாதம் பிடிக்கிறியா…”
”ப்ச்ச்… அதெல்லாம் ஒண்ணும் இல்லைமா… அவ… அவ தாத்தா வீட்டுக்கு போன தடவை போனப்போ நான் என்ன வழி அனுப்பியா வச்சேன்… அவளே போனாள்ள… அதே மாதிரி இன்னைக்கும் போவா… மேடமுக்கு ஒரு சாரதி இருப்பானே… அதான் அந்த அர்ஜூன் ரெடியா இருப்பான் தானே அவளைக் கூட்டிட்டுப் போக… “ எனும் போதே…
“அவ அவங்க அம்மா வீட்டுக்குப் போகலை… சம்பந்தி வீட்டுக்கு போறா…” என்ற தாயிடம்
இவன் பெரிதாக ஆச்சரியத்தை எல்லாம் காட்டவில்லை… அதே நேரம்
“ஹ்ம்ம்…. என்னவாம்… திடீர்னு அப்பா பாசம் பொங்கி வழியுதாம் உங்க மருமகளுக்கு… இதைச் சொல்லத்தான் வந்தீங்களா… சரி கெளம்புங்க…” என்றவன் அடுத்த நொடியே… கதவை முகத்திலடித்தாற்போல அடைக்க… இலட்சுமியும் தன்னையே நொந்தபடி… வேறு வழி இல்லாமல் சென்று விட்டிருக்க… மீண்டும் கட்டிலில் அமர்ந்தவனின் இதயம் கனத்திருக்க… தன் அம்மாவிடம் ஏன் இப்படி நடந்தோம்… பதில் தெரிந்த கேள்வியாக இருந்த போதும் கேள்வி எழுந்ததை தவிர்க்க முடியவில்லை…
”எதற்காக இந்தக் கோபம்… இந்தக் கோபத்தால் யாருக்கு இலாபம்…” என் கண்மணியை மீட்டுத் தருமா இந்தக் கோபமும்… ஆற்றாமையும்…” மனதுக்குள் ஏதேதோ எண்ணங்கள்… குழப்பங்களும்… மீண்டும் தன்னை மீட்டெடுக்க… அலைபேசியை எடுத்தவன்… அவன் மன அமைதியின் ஒரே இடம் கண்மணி… அவள் அணைப்பு… தேற்றல்… அத்தனையும் இன்று கானல் நீராக மாறி அவனிடம் அவனைப் பந்தாடிக்கொண்டிருக்க… அனைத்து குழப்பங்களையும் மீறி… இந்த நிமிடத்தின் நானோ ஆறுதல்… கண்மணியின் சிறு வயது புகைப்படம்…. சிறுமியாக இருந்த கண்மணியை மட்டும் தன் ஒட்டு மொத்த கவனத்தையும் குவித்து… அவளை மட்டும் பெரிதாக்கி பார்த்தபடியே தன் நிமிடங்களைக் கடத்திக் கொண்டிருக்க…
அவள் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போதே திடீரென்று அவனுக்குள் ஒரு பரபரப்பு…
“இந்தக் கண்… இந்தப் பெண்… “ சட்டென்று அவன் மனம் கண்மணி என்று கூடச் சொல்லத்தோன்றாமல்… மூன்றாம் மனுஷி போல் பேச ஆரம்பித்திருக்க… மீண்டும் மீண்டும் ஃபோகஸ் செய்து பார்த்தவன்
“அந்தப் பொண்ணா இவ.. ” என்று மனம் நினைத்த போதே… அடுத்த நிமிடமே தலையைத் தட்டிக் கொண்டவனாக
“ச்சேய் என் கண்மணி தான் அவளா… அந்தப் பொண்ணுதான் என் கண்மணியா…” உறுதிப்படுத்த முடியாமல் தவித்த தருணங்கள்… பரபரத்த தருணங்கள் ரிஷியின் நிலை…
“இந்தக் கண்… இதே கண் தான் அன்று நான் பார்த்தது….”
“ஆனா… அவளுக்கு பேச்சு வராதே…” மீண்டும் மனம் சுணங்கிய போதே….
“டேய் லூசு… அவளுக்கு பேச்சு வரலைனு நீதான் நினைச்சுட்டு இருந்திருப்ப போல… உண்மையை சொல்லப் போனா… அன்னைக்கு அவ உன்கிட்ட பேசலடா… பேச விருப்பம் இல்லாமல் நடிச்சுருக்கா” என்று மனம் எடுத்துக் கொடுக்க…
“ப்ச்ச்… மறுபடியும் பார்த்தப்போ… கண்மணி கண்ணைப் பார்த்தும் நம்மால ஏன் கண்டுபிடிக்க முடியலையே… ஒரு வேளை அந்தப் பெண் வேறோ… “ மீண்டும் அந்தப் புகைப்படத்தை நிராசையாகப் பார்த்தவன்… மீண்டும் அவள் அவள் முகத்தை மறைத்து கண்களை மட்டும் பார்க்க… அது கண்டிப்பாகச் சொன்னது… அன்று இரவில் பார்த்த பெண் அவள் தான் என்பதை… வேகமாக கண்மணியின் இப்போதைய சில புகைப்படங்களை அதே போல் வைத்துப் பார்க்க…
“அவனாலே நம்ப முடியவில்லை…”
“உண்மையிலேயே கண்மணிதானா அவ… கண்மணியை சின்னப் பொண்ணா பார்த்திருந்தா கண்டுபிடிச்சிருப்பேனோ… கொஞ்சம் பெரிய பொண்ணாகி பார்த்ததுனால எனக்கு கண்டுபிடிக்கமுடியலையா…”
இந்த யோசனை வந்த போதே அவனிடம் வேறு ஏதாவது கண்மணியின் சிறு வயது புகைப்படம் இருக்கிறதா… யோசித்த போதே… கண்மணி மாமரத்தில் இருந்து குதிப்பது போல எடுத்த புகைப்படம்… அந்த துரை எடுத்த புகைப்படம்… அவனிடம் இருந்தது ஞாபகத்துக்கு வர… அந்த புகைப்படத்தை அப்போது பார்த்த போது கூட அந்தக் கண்ணில் அவளை உணரவில்லையே…
எடுத்துப் பார்க்க… அவள் குதிப்பதற்கு தயாராகி கைகளை உயர்த்தி இருந்த அந்தப் புகைப்படத்தில் அவனுக்கான ஆதாரம்… தெள்ளத் தெளிவாக இப்போது தெரிந்திருக்க…
“என்… என்னோட ப்ரேஸ்லெட்… அப்போ… கண்மணி… என் கண்மணி… என்னோட கண்மணி… எனக்காக எனக்கேனு வந்தவ…” ஒரே நாளில் உச்சக்கட்ட துக்கம்…. உச்சக் கட்ட மகிழ்ச்சி…
“தந்தையால் காப்பாற்றப்பட்ட குழந்தைதான் கண்மணி என்று அறிந்த போது… சட்டென்று ஏற்றுக் கொண்டு குதுகலித்த மனம்… இப்போது உண்மையின் உச்சத்தை… ஏனோ நம்ப மறுத்தது..”
“நான் அவகிட்ட மறச்சதுக்கு ஒரு காரணம் இருந்துச்சு… ஆனால் கண்மணி ஏன் ஏன் மறைக்கனும்… என்னொட சின்ன வயசு ஃபோட்டோஸ்லாம் அவ பார்த்துருக்காதானே… அவளும் கண்டுபிடிச்சுருப்பாளோ… அதுனாலதான் டெஸ்டினி டெஸ்டினினு கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி சொல்லிட்டு இருப்பாளோ…”
அந்தோ பரிதாபம்… அப்போதைய அந்த ரிஷி… அவள் மனதிலும் பார்வையிலும் பதியாத ஒருவனாக இருந்தான் என்பதை அறிந்தால் என்ன ஆவானோ…
ஆனால் அப்படி எல்லாம் ரிஷி நினைக்காமல்…
“ஒரு வேளை நம்மை மாதிரியே… அவளுக்கு ஸ்பார்க் இருந்திருக்குமோ….” சட்டென்று பொறாமையில் மனம் கடுப்படிக்க….
”இவ அவளேதான்… அப்போ அப்போ கண்மணிதானா…..”
கண்மணி அடிக்கடி சொல்வது போல… நீயும் நானும் இணைய வேண்டும் என்பது விதி…. எல்லாம் தெரிந்துதான் சொல்லியிருப்பாளோ…
அதிலும் மனம் சுணங்கியது ரிஷிக்கு… தன்னை விட இன்னொருவனுக்கு அவன் வாழ்வில் முக்கியத்துவமா… மருது… அர்ஜூன் இவர்கள் எல்லாம் அவன் கண்களுக்கு போட்டியாகத் தெரியாத போது சிறுவன் ரிஷி… கண்மணியின் கணவன் ரிஷிக்கு போட்டியாக பொறாமையாக மாறியது விந்தைதான்…
நினைத்த போதே…
“அப்போ அவளுக்கும் இதே மாதிரி பொறாமை வந்திருக்குமா…. தெரிஞ்சிருந்தா வந்திருக்கும்… ராட்சசியா மாறி இருப்பா… “
“அப்படி அவ மாறலையே… அப்போ அவளுக்கு நம்மளத் தெரியலைனு தானே அர்த்தம்… ”
“அம்முனு வேற கூப்பிட்டுட்டு இருக்கோமே… இப்போ இந்தக் கதை தெரிஞ்சது என்னைக் கொன்னே போட்ருவாளே… டெஸ்டினி… அது இதுன்னு இப்பொ உளறி… அவளுக்கு இருக்கிற டென்சனை இன்னும் ஏத்தனுமா ரிஷி… ”
”அவ லைஃப்ல நடந்த இவ்ளோ முக்கியமான இந்த இன்சிடெண்ட்டை மட்டும் ஏன் அவ யார்கிட்டயும் சொல்லல… நான் சொல்லலைனா அதுக்கு ரீசன் இருக்கு… அந்த பொண்ணுகிட்ட ஏதோ ஒரு அட்ராக்ஷன் இருந்துச்சு… அது உன்கிட்ட உன் கண்ல கூட எனக்கு கிடைக்கலன்னு சொல்லவா முடியும்…
“ரிஷிக்கண்ணா உஷார்டா… உனக்கு ஏன் இப்போ தெரிந்தது அதை மட்டும் யோசி… அதுவும் இப்படி ஒரு இக்கட்டான நிலைமையில் இந்த விசயம் ஏன் தெரியனும்… அதை மட்டும் பாரு… சும்மா உன் பொண்டாட்டிகிட்ட ஆச்சரியம்… விநோதம்… அது இதுன்னு பெருமை பேசி… தர்ம அடி வாங்கிக்காத… ஏற்கனவே நீ சைட் அடிச்ச மேட்டருக்கே அவகிட்ட அடிக்கடி மாத்து வாங்குவ… கண்ணு… ஸ்பார்க் இதெல்லாம் தேவையா… விட்டுத் தள்ளு… அன்னைக்கு பார்த்த பொண்ணு உன் கண்மணி… உனக்குத் தெரிஞ்சுருச்சுதானே… கண்மணிகிட்ட இதை இப்போதைக்குச் சொல்லாத… அவளா என்னைக்காவது சொன்னா மட்டும் சொல்லலாமா வேண்டாமான்னு அப்போ யோசி… அப்போ கூட யோசிச்சே சொல்லுடா ரிஷி… வீணா மாட்டிக்காதடா… சொர்ணாக்காடா உன் பொண்டாட்டி“
மனசாட்சி கண்மணியைச் சரியாகப் புரிந்து வைத்து ரிஷியிடம் அதைச் சரியான நேரத்தில் சொல்லி அவனை நேர்வழிப்படுத்தி இருக்க… ரிஷியும் கண்மணியிடம் அன்றைய நாளைப் பற்றி சொல்ல நினைக்கவில்லை… மாறாக… இன்றைய நிலையில்… காலையில் இருந்து உள்ளம் வெதும்பி… பைத்தியக்காரனாக மாறிக் கொண்டிருந்தபோது தெரிந்த இந்த விசயம்தான்… அவனுக்கு பெரிய நம்பிக்கை உருவாக காரணமாக இருந்தது… கண்மணிக்கும் தனக்குமான பந்தம் அவ்வளவு சாதாரணமானது அல்ல… அவ்வளவு சுலபமாக அவள் தன்னை விட்டு போய்விடப் போவதுமில்லை…
முதன் முதலாக கண்ணுக்குத் தெரியாத இந்த பிரபஞ்சத்தின் சக்தியை… அதன் ஆற்றலை நம்ப ஆரம்பித்திருந்தான் ரிஷி…
கடவுள் நம்பிக்கை ஏன் அவனுக்குச் சிறுவயதில் இருந்தே வரவில்லை… அது ஏன் என்றும் தெரியவில்லை… அவன் கேட்டதை எல்லாம்.. அவன் நினைக்கும் முன்னரே தந்த அவன் தந்தை.. தனசேகர் தான் அவனுக்கு எல்லாமே… அவரின் குணம்… அனைவருக்கும் உதவும் பாங்கு… அவரை கடவுள் போல் துதித்த தொழிலாளர்கள்…தனக்கு ஒரு இக்கட்டு என்றால் உடனடியாக வந்து நின்று அதில் இருந்து அடுத்த நிமிடமே அவனைக் காப்பாற்றுவது…. என அவன் கண்ணுக்கு அவன் தந்தை தனசேகர் நாயகனாக மட்டுமல்ல… கடவுளாகவும் காட்சி அளித்து இருக்க…. அவனுக்கு ஏனோ தந்தையை விட கடவுள் பெரிதாகத் தோன்றி இருக்க வில்லை… அனைவரும் கைதொழும் கடவுள் என் தந்தையை விட பெரிதில்லை என்ற எண்ணமே சிறு வயதில்… அது அப்படியே வளர்ந்து… ஒரு கட்டத்தில்… வளர்ந்த பிறகு கடவுள் நம்பிக்கை தேவையில்லை என்ற எண்ணமே ஆழப்பதிந்து… அவன் தந்தை இறந்த போதோ… முற்றிலுமாக கடவுள் என்பதையே அறவே வெறுத்தவனுக்கு… மீண்டும் தேவதையாக அவன் கண்மணி வந்து சேர்ந்தாள்தான்… ஆனால் ஏனோ அப்போதும் தெய்வ நம்பிக்கை என்பது அவனுக்கு வரவில்லை… ஏன் இப்போது கூட…
’கண்மணி’ என்ற ஒற்றை வார்த்தையில் மீண்டும் அவனின் உற்சாகமெல்லாம் வர ஆரம்பித்திருந்தது
கண்மணி என்பவள் அவனுக்காகவே தோள் கொடுக்கக் காத்திருந்தவள்… அவன் தந்தை இறந்த பிறகு… அவன் தாய் படுக்கையில் விழுந்த போது… அவனைத் திருமணம் செய்த போது… அவன் வெற்றியின் படிக்கட்டுக்களில் ஏறிய போது… உணர்ந்தான்…
கண்மணி என்பவள் அவனுக்காக பிறந்தவள்… அவன் தந்தையால் அவனுக்காகக் அவள் காப்பாற்றப்பட்டது தெரிந்த போது அவன் எண்ணியது இப்படித்தான்…
அவள் வாழ்க்கையோடு அவன் வாழ்க்கை… அவன் வாழ்க்கையோடு அவள் வாழ்க்கை அனிச்சையாகவே அவனோடு இணைந்திருந்தது… அது இடையில் விட்டுப் போகும் பந்தமா… அந்தப் பைத்தியக்காரி அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கின்றாள்…
சர்வ நிச்சயமாக அடித்து சொல்லியது அவன் மனம்…. அவன் வாழ்க்கை அவன் கண்மணியோடு வெகு தூரம் வெகு காலம் செல்லும்… அவனின் எதிர்காலக் கணக்குகள் அவன் நினைத்தபடிதான் சென்று கொண்டிருக்கின்றது… அது கண்மணி விசயத்திலும் தப்பவே தப்பாது… இந்த ஆறு வருடங்களில்… அவன் எடுத்து வைத்த எந்த முயற்சிகளிலும் அவனுக்குத் தோல்வியே இல்லை எனும் போது… அவனுக்காகவே பிறந்த அவள் தேவதை விசயத்தில் மட்டும் தவறாகி விடுமா என்ன…
அடுத்த நொடி… பழைய ரிஷியாக மாறி இருக்க… அவனுக்கு எங்கிருந்துதான் உற்சாகம் வந்ததோ… வேகமாக கீழே இறங்கி வர… அதற்கு முன்னரே கண்மணி கிளம்பிச் சென்றிருக்க…
”இங்கதானே… மாமா வீட்டுக்குத்தானே போறான்னு சொன்னாங்க…” ரிஷி அதற்கு மேல் எல்லாம் யோசிக்கவில்லை…. அடுத்த சில நிமிடங்களில்… இந்த வீட்டுக்கும் அந்த வீட்டுக்கும் இடையே இருந்த இன்னும் கட்டப்படாமல் விட்டு வைத்திருந்த பகுதி வழியே வந்தவன்… தங்கள் மாடி அறைக்கு வந்து…. வேகமாக தனது பேண்ட் ஷர்ட் உடையிலிருந்து வேஷ்டி சட்டைக்கு மாறியவன்… கண்மணிக்கு முன்னதாகவே வந்து அவளுக்காக காத்திருந்தான் கண்மணி இல்லத்தில்….
---
ரிஷியைப் பார்த்த அந்த ஒரு கணம்… கண்மணியின் கண்களில் சட்டென்று சந்தோசத்தைக் கொண்டு வந்திருக்க… அவள் மறைக்க நினைக்கவும் இல்லை… ரிஷியையே பார்த்தபடி நின்று கொண்டிருக்க… ரிஷி அவளை… அவள் பார்வையை மட்டுமே பார்த்தபடி அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான்… இப்போதும் அவனுக்கு அன்றைய கண்மணியின் பயமறியா… துடிப்பான… குறும்பான… கனவுகள்… நம்பிக்கை… கலந்த பார்வை கிடைக்கவில்லை தான்… சோகமும்… சந்தோசமும் கலந்த ஒரு பார்வைதான் இன்றுமே அவனுக்குக் கிடைக்க… அந்தப் வெகுகாலமாகத் தேடிய அந்தக் பார்வைக்கா இன்று அவன் ஏங்கவில்லை… ஏமாறவும் இல்லை… இனி அது அவனுக்குத் தேவையுமில்லை…
என் கண்மணி… என் மனைவி… இந்த ரிஷியின் கண்மணி… இவள் தான் என் அம்மு…
அவன் வாழ்க்கையில் இருந்த மிகச் சிறிய சலனமும் போயிருந்தது… என்பதே உண்மை…
ரிஷி அவள் அருகே வந்து நின்றவனாக… கண்மணியிடம் கண் சிமிட்டியவன்… தன் தாயிடம் திரும்பி…
“அம்மா… இப்போ ஆரத்தி… அப்புறம் அது என்ன… ஹான் திருஷ்டி சுத்திப் போடுங்க… எல்லாம் பண்ணுங்க… ரிஷி ரெடி… ரிது ஆரத்தி எடுத்துட்டு வா ” இலட்சுமி முறைத்தாள் தன் மகனைப் பார்த்து…
“ஏண்டா… இதெல்லாம் என்னடா…”
“ம்மா… என் பொண்டாட்டி எனக்கு காலையில ஒரு ஷாக் கொடுத்தேன்னு ஹேப்பியா இருந்தா…. அவ ஹேப்பி தானே நமக்கு முக்கியம்… அதான் அனுபவிக்க விட்டேன்…. அந்த ஷாக்குக்கு ஆயுள் ரொம்ப கம்மினு… என் அம்முக்கு இப்போ தெரிஞ்சிருக்கும்” என்றபடி அவள் தோளில் கை போட முயற்சிக்க..
சட்டென்று விலகி நின்றவள் கண்மணி சங்கடமாக அங்கிருந்தவர்களைப் பார்த்தாள்…
காரணம் அவன் இவளை அணைக்க முயன்றதற்காக இல்லை… அத்தனை பேரையும் வைத்துக் கொண்டு… ’ இவர்கள் தனிமையில் இருக்கும் சமயங்களில் அழைக்கும் பெயரான… அம்மு’ என்று அழைத்ததில் தா…]
சங்கடப்பார்வை கணவனிடம் கடுகடுத்த பார்வையாக அடுத்த நொடி மாறியும் இருக்க
“காலையில தானே டிவர்ஸ் நோட்டிஸ்ல சைன் போட்டிங்க… ஆனால் இவ்ளோ சந்தோசமா இருக்கீங்க…”
“இப்போ இத்தனை பேர் முன்னால அம்முனு செல்லப் பேரை வச்சு பேசனுமா… என் மானம் போகுது” கண்மணி பல்லைக் கடித்தபடி அடிக்குரலில் சொல்ல…
“அப்ப்போ ரவுடினு சொல்வேனே… அதைச் சொல்லவா அம்மு…” ரிஷி அவளிடம் வம்பிழுக்க ஆரம்பித்தவன்…
“ஆமாம் சைன் போட்டேன்… என்ன பண்ணச் சொல்ற… என்னை என்ன இந்தக் கதைல எல்லாம் வர்ற… பொண்டாட்டி அடிச்சு துவச்சு காயப்போட்றதுக்காக காத்துட்டு இருக்கிற ஹீரோன்னு நினச்சியா… ஆம் ஆல்வேஸ் ஸ்டெடி.. கண்மணி… துக்கம்… வேதனை… எனக்கா நெவர்”
குடிகாரன் குடித்திருக்கும் நிலையில் தள்ளாடுயபடியே சொல்லும் அந்த வசனம்… ரிஷிக்கு இன்று… பொருத்தமாக இருந்தது… தலை குப்புற கீழே விழுந் நிலையிலும்… அதாள பாளத்தில் விழுந்த நிலையிலும்… மீசையில் மண் ஓட்டவில்லை… அடிபடவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தான் அவள் கணவன்…
கண்மணி வேகமாக இப்போது வேறுபுறம் திரும்பிக் கொள்ள… அவன் திரும்பிய வேகத்தில் அவள் நெற்றியில் இருந்த நெத்திச்சூடி அதன் இருப்பிடத்தை விட்டு நகர்ந்திருக்க… அதே நேரம் ரிதன்யா ஆரத்தி தட்டோடு அவர்கள் முன் வந்து நின்றிருக்க…
”பாப்பு… இங்க வாடா….” எனும் போதே… அவன் அழைப்பில் கார்லா அவன் வேகமாக முன் வந்து நின்று… அதே வேகத்தில் புகைப்படம் எடுத்திருக்க… அதைக்கண்ட ரித்வியின் முகம் சுருங்கி இருந்தது…
“பாப்புன்னு என் அண்னா கூப்பிட்ட… இவ வந்து நிக்கிறா…” தனக்குள் சொன்னபோதே… கண்கள் பளபளத்திருக்க… விட்டால் அழுதிருப்பாள் ரித்விகா… அதே நேரம் வேகமாகத் தன் தங்கையை அழைத்தவன்
“நீயும் எடுடா… ரெண்டு பேரும் எடுங்கடா.., ” என்றவன்
“ஒரு நிமிசம்… ” என்றபடியே… கண்மணியின் புறம் திரும்பி… நெற்றிச் சுட்டியை நேராக்கி விட முயற்சிக்க… கண்மணியோ பட்டென்று அவன் கைகளைத் தட்டி விட… அவள் தட்டி விட்ட வேகமே… அவளின் கோபத்தை அங்கு அனைவருக்கும் உணர்த்தியிருக்க…
இலட்சுமிக்குத்தான் படபடப்பாகி இருந்தது… கண்மணி கோபப்பட்ட்டு ஏதாவது கத்தி விட்டால்… என்ன செய்வது… இவன் வேறு விளையாண்டு கொண்டிருக்கின்றானே… கோபப்பட்டு ஒதுங்கியிருந்தத போது கூட விபரீதமாக ஏதும் நடக்காமல் எல்லாம் சுபமாக நடந்து முடிந்தது… இப்போது என்ன ஆகுமோ… இலட்சுமிக்கு இப்போது கவலை வந்திருக்க… அது அவரது முகத்திலும் தெரிந்திருக்க்க
”ப்ச்ச்… யாரும் டென்ஷன் ஆகாதீங்க… அம்மா நீங்களும்தான் ” என்றவன்…
“அம்மு… உன் தோள் மேல கை போடாமல்… நெத்திச்சுட்டி மேல கை வச்சுட்டேன்னு கோபமா… நோ வொரி” என்றபடி அவளைச் சுற்றி அவள் தோள் மீது கை போட.. கண்மணி தட்டி விட கை உயர்த்திய போதே…
“மேடம்… 1: 3 நு இப்போ உங்க பக்கம் மெஜாரிட்டி ஆகி இருச்சு… ஆனால் இந்த மெஜாரிட்டி மாறி 1:1:2 நு வரும் போதுதான் உங்களுக்கு இந்த ரிஷிகிட்ட இருக்குங்க மேடம்… அதுவரை நீங்க ஆடுங்க மேடம்…”
ரிஷி… வயிற்றில் இருந்த இரட்டைக் குழந்தைகளை குறிப்பிட்டு… அவர்கள் நிலையை விகிதாச்சாரமாக மாற்றி வைத்து அவன் அவளுக்கு புரியாதவாறு கணக்குப் பாடம் நடத்திக் கொண்டிருக்க… நம் கணக்கு டீச்சருக்கும் அதைப் புரிந்து கொள்ளும் ஞானம் இல்லாமல் போயிருந்தது
கண்மணி இப்போது
“ரிஷி…” என்று பல்லைக் கடிக்க
“இப்போ ஏண்டி இவ்ளொ டென்ஷன்… ஓ… தோள்ள போட வேண்டாமா… இடுப்பில போடவா…” ரிஷி ஒன்றுமே அறியாதவன் போல அவளிடம் கேள்வி கேட்க…
கண்மணி இப்போது பதில் சொல்லாமல்… அமைதியாகி விட… ஆரத்தியும் எடுக்கப்பட்டு முடிந்திருந்தது… கார்லா மற்றும் ரித்விகாவை நோக்கியவன்
“தேங்க் யூ செல்லம்ஸ்… அப்டியே எடுத்த வேகத்தோட அண்ணா செல்லுக்கும்… அண்ணி செல்லுக்கும் அனுப்பிருங்க…” முன்னால் காலடி எடுத்து வைக்க… கண்மணியோ அடமாக அங்கேயே நின்றிருக்க… முன்னால் சென்று திரும்பிப் பார்த்தவன்…
“தூக்கிட்டு போகனுமாடா அம்மு… “
கண்மணி மூக்கை விடைத்தவளாக… கண்களை மூடித் திறந்தபடி… வேகமாக உள்ளே நுழைந்திருக்க… ரிஷியோ உதட்டைக் கடித்து சிரிப்பை மறைத்தவனாக…. அவள் பின்னேயே போக… அதன் பின் இருவருமே பேசிக் கொள்ளவில்லை… பூசை அறையில் சாமி புகைப்படங்களின் முன்னும் தன் அன்னையின் முன்னும் ஆசிர்வாதங்களை வாங்கியவள்… தன் அறைக்குள் போய் நுழைந்து கொள்ள… ரிஷி அவள் பின்னாலேயே சென்றவன் அடுத்து கட்டிலில் அவளருகில் அமர்ந்து கொள்ள…
“ரிஷி… வெளிய போங்க” கண்மணியின் கண்கள் சிவந்திருந்தது… ஆற்றாமையில்…
“முடியாதுன்னா என்ன பண்ணுவ… “ ரிஷி சாவகாசமாக கட்டிலில் சாய்ந்து அமர்ந்து அவளைப் பார்க்க…
வேகமாக தன் அலைபேசியை எடுத்தவள்…
“அத்தை… இங்க வாங்கத்தை… உடனே வாங்க…” கண்மணி அலைபேசியில் கத்திய கத்தலில் இலட்சுமி… என்னவோ ஏதோவென்று வேகமாக வர…
“என்னம்மா…” இலட்சுமி பரிதவிப்போடு வந்தவராக… அதே நேரம் மகனை முறைத்தபடி கேட்க
“இவரைக் கூட்டிட்டுப் போங்க… போகச் சொல்லுங்க….தேவையில்லாமல் வம்பு பண்ணிட்டு இருக்காரு… என் பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு…” கண்மணி இலட்சுமியிடம் சொல்லிக் கொண்டிருந்த போதே
“டேய் ரிஷி… ஏன்டா புள்ளத்தாச்சிப் புள்ளைய இப்படி படுத்துற… சம்பந்தி வேற வெளிய இருக்காங்க… இதெல்லாம் பார்த்தா என்னடா நினைப்பாங்க…”
”நீ வெளிய ஹாலுக்கு வா… அவ கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்” மகனை அதட்ட
“ம்மா… அவளுக்கே என்னை வெளிய போகச் சொல்ல ரைட்ஸ் இல்லை… கெளம்புங்க… என் பொண்டாட்டிகிட்ட கொஞ்சி… ” கண்மணியின் முகம் இப்போது மொத்த கடுப்பையும் காட்டி இருக்க
“சாரி சாரி… கொஞ்சம் பேசனும்… டங்க் ஸ்லிப்பாகிருச்சு அம்மு…” என்று கண்மணியின் முகபாவனையில் ரிஷி சொன்னபடியே எழுந்து அமர்ந்தவன்…
“அம்மா… எவ்ளோ வேலை இருக்கு வெளில… இவ கூப்பிட்டான்னு ஓடி வருவீங்களா… நான் தான் இவ கூட இருக்கேன்ல… உங்க மருமகளை என்னை விட யாராவது நல்லா பார்த்துப்பாங்களா…”
மகனின் வார்த்தைகளில் இலட்சுமி ஆயாசமாக…
“நீ இவ பக்கத்துல இருக்கேன்றதுதான் எனக்கு பயமா இருக்கு… டேய் அவ பிபி… டென்ஷன் எல்லாம் நீதான்ன்னுதான் என் கவலையே… பாவம்டா கண்மணி”
முறைத்தான் ரிஷி… தன் அன்னையைப் பார்த்து…
“அவ பாவம்னா… அப்போ நான் என்ன… ஆனால் கவலைப்படாதீங்க… உங்க மருமகளை எப்படி கூலாக்குறதுன்றதும் உங்க புள்ளைக்கு தெரியும்… ” அன்னையிடம் பேசியபடியே
“கண்மணி… அந்த ஃபர்ஸ்ட் எயிட் பாக்ஸ் எங்க வச்சுருப்ப…” கண்மணியிடம் திரும்பிக் கேட்க…
கண்மணி பதில் சொல்லாமல் அவனை அலட்சியம் செய்ய…
“வலி உயிர் போகுதுடி… இங்க பாரு … இரத்தம் இன்னுமே வந்துட்டு இருக்கு… இப்டியே விட்டா செப்டிக் ஆகிருமோ… விரலையே… அப்புறம் காலையே எடுத்துருவாங்களோ…”
இலட்சுமி மகனைப் பார்த்து…
“இதெல்லாம் இந்த வலிலாம் உனக்கு இப்பதான் தெரியுதாடா…” கடுப்பாகக் கேட்க… அதே நேரம்
“ஃபிரிட்ஜ் பக்கத்துல இருக்கிற ஷெல்ஃப்ல இருக்கு…” கண்மணியிடமிருந்து வார்த்தைகள் வந்திருக்க… ரிஷியின் முகத்தில் பெரிதாகப் புன்னகை… இலட்சுமியைப் பார்த்து
“பார்த்தீங்கள்ளம்மா… என் பொண்டாட்டி என் மேல எவ்ளோ கோபமா இருந்தாலும்… அக்கறையப் பார்த்தீங்கள்ள… அதுதான் என் அம்மு“ என்றபடி வெளியே போய்… அந்த முதலுதவிப் பெட்டியை எடுத்துக் கொண்டு வந்தவன்…
“அம்மு நீயே கட்டுப் போட்டு விட்றியா… வலிக்குது…” என்று கண்மணியின் முன் போய் நின்றவனின் அப்பாவித் தோரணையில்… வந்த சிரிப்பை அடக்கியபடி… இலட்சுமியோ இப்போது
“கண்மணி… வீட்டுக்கு வந்தவங்களைப் பார்க்கனும்… அவனைக் கொஞ்சம் விட்டுப் பிடி… இல்லை அடங்க மாட்டான்…” என்றபடி அங்கிருந்து சென்று விட…
“ஹெல்ப் ப்ளீஸ்… இட் ஹர்ட்ஸ் டூ மச் அம்மு” பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல
“நல்லா வலிக்கட்டும்…” என்றபடியே கண்மணி அங்கிருந்து எழுந்து சென்றவள்…. சன்னலின் அருகே நின்றபடி வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்திருக்க
“ஓகே… ஆனால் அன்னைக்கு எனக்கு குண்டூசி முனை அளவுக்கு இரத்தம் வந்ததுக்கு… ஃபீல் பண்ணவளாச்சேன்னு சொன்னேன்… மத்தபடி எனக்கு ஒண்ணும் உன் அக்கறைலாம் தேவையில்லை… என்ன… எனக்கு வந்த காயம் என ” என்றபடி… தானாகவே காயம் பட்ட இடத்தில் மருந்திட ஆரம்பித்தவன்…. காயத்துக்கு கட்டுப் போட்டபடியே..
”உண்டான காயமெங்கும்… தன்னாலே ஆறிப் போன மாயம் என்ன… பொன்மானே பொன்மானே…
என்ன காயம் ஆன போதும்… என் மேனி தாங்கிக் கொள்ளும்… உந்தன் மேனி தாங்காது செந்தேனே…”
கண்மணியை நிமிர்ந்து பார்க்கவில்லை…. பாடலை நிறுத்தியவன்…
”இந்தப் பாட்டுக்கு ஒருகாலத்தில அர்த்தம் புரியலை… கேலி பண்ணுவேன்… ஆனா அதுக்கு ஒருத்தி விளக்கம் தந்தாள் எனக்கு… அவளை நீ பார்த்தியா கண்மணி… எனக்கு ஒண்ணுனா அவ துடிச்சுப் போயிருவா…” அவன் குரல் உடைந்திருக்க… கண்மணி வேகமாக அவனைப் பார்த்து வெளியே மீண்டும் திரும்பி இருக்க… அவன் அவளின் பார்வை உணர்ந்தும் அவள் புறம் நிமிரவில்லை… மாறாக
”எந்தன் காதல் என்னவென்று… சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது… எந்தன் சோகம் உன்னைத் தாக்கும்… என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது…”
”கண்மணி அன்போடு காதலன்… நான் எழுதும் கடிதமே…”
”இந்த சாங் ஏன் உன் பேர்ல வந்துச்சுனு நான் கடுப்பாவேன் கண்மணி… உன் பேர்ல எத்தனையோ சாங் இருக்கு… ஆனால் இதை மட்டும் நான் வச்சுக்கலை… ஏன் தெரியுமா…. என் கண்மணி என்னை பைத்தியக்காரனா ஆக்கிற மாட்டான்னு நம்புனேன்…” விரக்தியாகச் சிரித்தவன்…
“இன்னைக்கு என்னையவே இந்தப் பாட்டை பாட வச்சுட்டேல்ல… பைத்தியக்காரனா மாத்திட்டடி நீ…” பேசிக் கொண்டிருந்தவன்… சட்டென்று முகம் மாறியவனாக…
“ஏன் அம்மு இப்படி… சோ உனக்கு என் மேல கோபம்… என்னைப் பிடிக்கல… நான் எவ்ளோ கஷ்டப்பட்டாலும் உனக்கு அது ஒண்ணும் பண்ணாது… குட்… இருந்துக்கோ… இப்டியே இருந்துக்கோ..” என்றபடியே அவளைப் பார்க்க… அப்போதும் கண்மணி திரும்பாமல் வெகு அசிரத்தையாக வெளியே பார்ப்பது போன்ற பாவனையில் நின்றிருக்க…
“ஆனால்… இந்த ரீல் நேத்தே அந்து போச்சு அது தெரியுமா உனக்கு.. தெரியாமல் இன்னும் உன் படத்தை ஓட்டிட்டு இருக்கியேடா…” ரிஷி இப்போது அவளைப் பார்த்தபடியே நக்கலாகச் சொல்லிக் கொண்டிருக்க… கண்மணி அப்போதும் திரும்பாமல் இருக்க
”நேத்து ராத்திரி அம்மா” பாட ஆரம்பித்தவன் கண்மணியின் சூடான பார்வையில் பாடலை நிறுத்தியபடியே…
“இந்த நெத்தில… சின்னதா ஒரு ஆக்சிடெண்ட் நடந்துச்சே அப்போவே ரீல் அறுந்து போச்சும்மா”
கண்மணி இப்போதும் அசராமல்…
“என்ன ஆக்ஸிடெண்ட்…” அவளுமே நக்கலாகக் கேட்டாள்…
அவளுக்கு நன்றாகத் தெரியும்… அவன் நெற்றியில் இதழ் பதித்த போது ரிஷி நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான் என்பது…
”என்னடி… ஒண்ணூமே பண்ணாதவ மாதிரி அப்டியே நடிக்கிற… நான் தூங்கிட்டேன் தான்… நல்லா தூங்கினா எழுந்துக்க மாட்டேன் தான்… அதெல்லாம் சரிதான்… ஆனால் ரொம்ப நாளா படாத பொண்டாட்டியோட ஸ்பரிசம்… அதுவும் இதழ் ஸ்பரிசம்… அதைக்கூட உணர முடியாத “ எனும் போதே
“அது கனவா இருக்கும்… உளறாதீங்க…” கண்மணி கொஞ்சம் கூடத் தயங்காமல் பொய் சொல்ல அலட்சியமாகப் பார்க்க…
யோசித்தவன்…
“அப்டியா… அப்போ சிசிடிவில பார்த்தது பொய்யா அம்மு”
கண்மணிக்கு படக்கென்று தூக்கிப் போட…
“லூசு… பெட்ரூம்ல எவனாவது சிசிடிவி வைப்பானா… உன்னை… அறிவிருக்கா… மடசாம்பிராணி….”
“ஏன்… வச்சா என்ன… அந்த அர்ஜூன் வச்சப்போ இதெல்லாம் சொல்லலையே நீ… ” என்றவன்…
“ப்ச்ச்… இப்போ அது முக்கியமா என்ன… ரீல் அறுந்து போன மேட்டருக்கு வா… இதுல அடுத்த நாள் டிவோர்ஸ் பேப்பர்ல கையெழுத்து… அடேங்கப்பா…”
”நான் கொடுக்கலை… எப்படிக் கேட்டாலும் இதுதான் என் பதில்… “ கண்மணி அலட்சியமாகச் சொல்ல…
“சரி விடு.. வார்த்தைல சொர்ணாக்கா அவதாரம் தாண்டவமாடினாலும்… முகமும் கண்ணும் அப்புறம் அந்த மூக்குல ‘ஆர் கே’ ஸ்பெஷல் அக்மார்க் சிவப்பு காட்டிக் கொடுத்துருச்சே… சிசிடிவிலாம் நம்ம ரூம்க்குத் தேவையா என்ன……”
“உங்க ரூம்ல…” கண்மணி திருத்திய போதே…
“அடேங்கப்பா… பெரிய இவ நக்கீரர் பரம்பரை… கரெக்ட் பண்றா… ஏண்டி எதெதுக்குத்தான் பஞ்சாயத்து கூட்ட முடியும்…. பேசுற வார்த்தைக்கெல்லாம் பஞ்சாயத்து கூட்ட முடியுமா என்ன… “
“சரி இப்போதைக்கு… எனக்கு நியாயம் சொல்றதுக்கு ஒரே ஒரு ஆள் மட்டும் தான் இருக்கு… அவங்களைக் கூப்பிடுவோம்…. நியாயம் கேட்போம்” என்றவனிடம்… கண்மணி வேகமாக…
“என்ன… யாரு…” என்ற போதே அவளின் குரலில் இருந்த பதட்டம் ரிஷியும் கண்டு கொள்ள…
”வேற யாரு… தி க்ரேட் கந்தம்மாள் பாட்டிதான்… கேட்ருவோம்… இந்த நெத்தில வந்த ஆக்ஸிடெண்ட பற்றி… காலையில கேட்ட கையெழுத்துப் பற்றி… சொன்னேன்னு வச்சுக்கோ… உன்னை நார் நாரா கிழிப்பாங்க… நானும் பார்த்து ரசிப்பேன்ல… நம்மாள முடியாததை இன்னொருத்தவங்க பண்ணினா… நமக்கும் ஒரு நிம்மத்தானே… இதோ கூப்பிடறேன் “
சொன்னவன்… தயங்காமல் அடுத்த நிமிடமே
“கந்தம்மா பாட்டி… கந்தம்மா பாட்டி…” கண்மணியாவது அவள் அத்தையை அலைபேசியில் தான் அழைத்தாள்… இவனோ… இங்கிருந்தே மைக் செட்டில் அழைப்பது போல அழைத்து வைக்க… ஒரே எட்டில் பாய்ந்து ஓடி வந்தவள்… தன் கைகளால் அவன் வாயைப் பொத்தி இருக்க…
”ஏய் பார்த்துடி… “ சொல்லி முடிக்கும் முன்னேயே… அவன் வாயை கைகளால் மூடியவளாக
“கொன்னுடுவேன்… கெழவியை மட்டும் கூப்பிட்டீங்க…” மிரட்டி முடித்தபடி அவனிடமிருந்து கையை எடுக்க முயன்ற போதே… கந்தம்மாள் உள்ளே வந்திருந்தார்… வந்தவர்… இருவரையும் மிரட்சியாகப் பார்த்த போதே… கண்மணி ரிஷியை முறைத்த பார்வையோடு கடுப்புடன் கைகளை விலக்க…
“அடியேய் என்னடி பண்ணிட்டு இருக்க… அடங்கவே மாட்டியாடி… அந்தப் புள்ளை உன்கிட்ட மாட்டிக்கிட்டு பாட்ற பாடு பத்தாதா…” என்ற போதே ரிஷி பரிதாபமாக முகத்தை மாற்றி இருக்க
“யாரு இவரு… என்கிட்ட மாட்டிகிட்டு பட்றாரு… கெழவி போயிரு… ஏதாவது சொல்லிறப் போறேன்… ஒழுங்கு மரியாதையா கெளம்பு….”
”ஆமா இவ கூப்பிட்டு நான் வந்த மாதிரி விரட்றா… நீ கூப்பிட்டா நான் வந்தேன்… அங்கிட்டு போடி… பேராண்டி என்ன ஆச்சு… கூப்பிட்டீங்களே…” ரிஷியிடம் வந்தார் கந்தம்மாள்….
“கேட்ருச்சா…” அவனையும் மீறி மாட்டிக்கொண்டவனாகக் ரிஷி வாய் பிளக்க
“பின்ன… இந்தக் காலத்து பிள்ளைங்க மாதிரியா… என் காதெல்லாம் பாம்புக் காது… சொல்லுங்க… எதுக்கு என்னைக் கூப்பிட்டீங்க…”
ரிஷி கண்மணியை அவஸ்தையாகப் பார்க்க…
“கூப்பிட்டீங்கள்ள… கேளுங்க உங்க பஞ்சாயத்தை “ என்று வாய் அவனிடம் சொன்னாலும்… அவள் பார்வையோ சொல்லக் கூடாது என்பது போல அவனை மிரட்டி இருக்க…
“பாட்டி.... என்னை மிரட்றா பாருங்க… இது இதுக்குத்தான் உங்களைக் கூப்பிட்டேன்” என்றான் பயந்தவனாக…
அவன் நடிப்பைக் கூட கந்தம்மாளுக்கு நம்ப முடியவில்லை… அந்த அளவுக்கு பேத்தி மீது அவள் குணத்தின் மீது நம்பிக்கை…
“சொன்னேனே… அப்போவே… கேட்டீங்களா.. உடம்பு முழுக்க இவளுக்குத் திமிரு… இப்போ பட்றீங்க…”
ரிஷி சிரிப்பை அடக்கியபடியே… கண்மணியைப் பார்த்தான்
“பாட்டி.. பாட்டி… உங்களுக்கு வெள்ளந்தி மனசு…. சும்மா சொன்னேன்… என் பொண்டாட்டி மாதிரி யார்க்கு கிடைப்பா… அவளைப் போய் நான் விட்டுட்டு போவேனா…”
கந்தம்மாள் இப்போது குழப்பமாக ரிஷியைப் பார்க்க…
“உங்களை எதுக்கு கூப்பிட்டேன்னா…” என இழுத்தபடியே.. கண்மணியிடம் தன் மொத்த குறும்புத்தனத்தையும் அவள் கண்களோடு கலந்து கொட்டியவனாக…
“இவ்ளோ திமிரா தெனாவெட்டா என் பொண்டாட்டி இருக்கிறதுக்கு காரணம் என்ன…”
“என்ன காரணம்…” கந்தம்மாள் இப்போது இழுக்க
“காரணம்… நீங்க… நீங்க வளர்த்தது… அதான் இந்த கெத்து… இந்தத் திமிரு… தெனாவெட்டெல்லாம்… கந்தம்மாள் பேத்தினா சும்மாவா… இதே வைதேகிப் பாட்டி வளர்த்திருந்தாங்கன்னா… இப்படி ஒரு கண்மணி எனக்குக் கெடச்சுருப்பாளா”
கந்தம்மாளின் முகம் பெருமையில் பூரித்திருக்க… கண்மணியோதலையிலடித்துக் கொள்ளாத குறைதான்…
“அதான் என் பொண்டாட்டிகிட்ட சொல்லிட்டு இருந்தேன்…. நமக்கு குழந்தை பிறந்த உடனே உங்ககிட்ட கொடுத்து வளர்க்கச் சொல்லனும்னு…”
“ஏன் இந்த உலகத்துக்கு இந்த ஒரு கண்மணி பத்தாதா…” கண்மணி பட்டென்று கேட்க… அவள் வார்த்தைகளில் வலி இருந்ததோ
கந்தம்மாள் என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்…
ரிஷி சொல்வதை எல்லாம் அப்படியே உண்மை என எண்ணிக் கொண்டு அவனையேப் பார்த்திருக்க… கண்மணிக்கு அவளையுமறியாமல் சிரிப்பு வந்திருக்க… அவளும் ரிஷியுடன் சேர்ந்து கொண்டவளாக…
“ஆனால் கெழவிகிட்ட சொல்லிருங்க… வரக்காப்பி மட்டும் கொடுக்கக் கூடாதுனு… “ கண்மணி இப்போது அவளையுமறியாமல் கந்தம்மாளை வாற ஆரம்பித்திருக்க
”ஆமாமா… அம்மு கரெக்டா சொன்ன… ஆனால் என் புள்ளை என் கலர்ல இருப்பாங்க… அந்தக் கலர்க்கெல்லாம் அந்த வரக்காபி போட்டி போட முடியாது… உன் கலர் அப்படி… எங்க பாட்டியைக் குறை சொன்ன… “ எனும்போதே… கண்மணி அவன் காலிலேயே மிதித்திருக்க…
“ஆ… அம்மா… பாட்டி… “ வலியில் அலறிய அவன் அலறலில் மொத்த குடும்பமும் அங்கு வந்திருக்க…
கண்மணி இப்போது தலையில் கை வைத்து கட்டிலில் அமர்ந்திருக்க…
“அ… அங்க அடிபட்டது… இங்க இப்போதான் ரொம்ப வலிக்க ஆரம்பிச்சிருக்கு…. அதான்…” ரிஷி சமாளித்து முடித்திருக்க… அப்போது…
“அம்மா… கண்மணி இதெல்லாம் எடுத்துட்டு… சிம்பிளா காட்டன் புடவையக் கட்டிக்கோம்மா… இனி இதெல்லாம் மாத்திக்கலாம்” என்ற போதே…
”ரித்வி… ரிது உங்க அண்ணிக்கு ஹெல்ப் பண்ணுங்க… டேய் நீ வெளில வாடா…” இலட்சுமி ரிஷியை இதுதான் சாக்கென்று அழைத்திருக்க… ரிஷியும் வேறு வழியில்லாமல் அறையில் இருந்து வெளியேறி இருந்தான்…
-------
கண்மணியோடு அத்தனை கலாட்டாக்களையும் பண்ணிய ரிஷியோ அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்திருந்தான் அமைதியாக…
வெளியே அவன் சிரித்தபடி… கண்மணியிடம் கலகலப்புடன் குறும்புதனத்துடன் விளையாடிக் கொண்டிருந்தாலும்… அவன் அடி மனம் கனத்தபடிதான் இருந்தது… அவன் மனம் சோர்ந்து இருந்ததை… யாரிடமும் காட்டிக் கொள்ளாமல் இருந்தான்… முக்கியமாக கண்மணியிடம் காட்டவே கூடாது என்பதில் உறுதியாக இருந்தான் ரிஷி…
அப்போது… நாராயணனும்… நட்ராஜும் பைக்கில் உள்ளே வர… இருவரையும் பார்த்து சிரித்தபடி….
“மாமா… தாத்தா… “ என மனமார வரவேற்றவனைப் பார்த்து நட்ராஜ் ஆரத்தழுவி இருக்க
“தேங்க்ஸ் தாத்தா….” ரிஷி நாராயணனைப் பார்த்து சொல்ல….
“என் மருமகன் கூடச் சேர்ந்ததுக்கு நீ எதுக்குப்பா தேங்க்ஸ் சொல்ற… “
சிரித்தவன்…
“மாமா… மருமகன்… புது காம்போ நல்லாத்தான் இருக்கு…. ஆனால் எங்க கூட்டணியை அடிச்சுக்க முடியாது தாத்தா… அப்டித்தானே மாமா…”
நட்ராஜ் புன்னகையுடன் மருமகனைப் பார்த்தபடியே தலையாட்டி ஆமோதித்தவராக
“அது தானாச் சேர்ந்த கூட்டணி… என்னைக்கும் யாராலும் பிரிக்க முடியாது…” நட்ராஜும் மருமகனுக்கு சேர்ந்து பேச… அப்போது… உள்ளே பரபரப்பான குரல்கள் கேட்க…
ரிஷி… நட்ராஜ்… நாராயணன் மூவருமே வீட்டை நோக்க… ரித்விகாவும் ரிதன்யாவும் வெளியே வந்திருந்தனர் இப்போது… அவர்கள் முகத்தில் ஒரு மாதிரியான பதட்டம்..
“என்னடா… “ அவர்களின் பதட்டம் நட்ராஜுக்கும் தொற்றியதால்… ரித்விகாவிடம் விசாரிக்க… ரிதன்யாதான் பதில் சொன்னாள்…
“அண்ணிக்கு…” என்ற போதே அவள் குரல் கமறி இருக்க…
ரிஷி நட்ராஜ் போல விசாரிப்பதற்கெல்லாம் நேரத்தை வீணாக்கவில்லை…. சட்டென்று வீட்டுக்குள் ஓடினான்… ரிதன்யாவின் குரல்மாற்றத்திலேயே ஏதோ கண்மணிக்கு நடந்திருக்கின்றதென்று உணர்ந்தவன் ரிதன்யாவின் வார்த்தைக்கெல்லாம் காத்திருக்கவில்லை…
வீட்டுக்குள் நுழைந்தவனாக… கண்மணியின் அறைக்குள் நுழையப் போக…. அடுத்த நொடியே… அங்கிருந்தவர்கள்…
“தம்பி… நீ உள்ள வராத…”
“நீங்க வெளில போங்க…”
ரிஷி யார் பேச்சையும் கேட்காமல் கண்மணி இருந்த அறைக்குப் போக வலுக்கட்டாயமாக எத்தனிக்க… இலட்சுமி அவனைப் பிடித்து நிறுத்தியவராக
“கண்மணிக்கு அம்மை போட்ருக்குடா… நம்ம பாட்டி பார்த்துட்டு இருக்காங்க…” இலட்சுமியின் கண்கள் சொன்ன போதே கலங்கி இருக்க… ரிஷியின் சொந்தக்காரப் பாட்டி வெளியே வந்தவராக
“அங்கங்க போட்ருக்கு இலட்சுமி… பெருசா இல்லை… பயப்டாதா தாயி…அந்த அம்மனே வந்து இறங்கி இருக்கான்னா… எதுல இருந்தோ நம்ம புள்ளையை காப்பாத்துறதுக்குத்தான்…. கண்டிப்பா ஒண்ணும் ஆகாது….” அந்தப் பாட்டி இயல்பாகச் சொல்லிக் கொண்டிருக்க
“என்ன இப்படி லூசுத்தனமா பேசுறீங்க… இது இரு வைரஸ்… அதுக்கு ட்ரீட்மெண்ட் எடுக்கனும்… ஃபர்ஸ்ட் அவளை செக் அப் பண்ற டாக்டரை வரச் சொல்றேன்” உச்சஸ்தாயில் கத்தியவன்…. யார் பேச்சையும் கேட்காமல் மருத்துவருக்கும் அழைக்க ஆரம்பித்திருந்தான் ரிஷி…
------------
கிட்டத்தட்ட அரை மணி நேரத்தில்… கண்மணியைப் பார்த்துக் கொண்டிருக்கும் மருத்துவர் அங்கு வந்திருந்தார்…. அழைத்து வந்ததோ அர்ஜூன்… அர்ஜூனுக்கு மருத்துவர் மூலமாக விசயத்தை சொல்லி வரவைத்திருந்தான்…
அம்மை போட்டதை மட்டுமல்லாமல்… அர்ஜூனிடம் கண்மணியைப் பற்றி… அவள் உடல்நிலையைப் பற்றி அனைத்தையும் சொல்லவும் சொல்லியிருந்தான் ரிஷி…
அர்ஜூன் உள்ளே வந்த போதே அவன் முகத்தில் சுரத்தே இல்லை… வந்தவன் கண்மணியைக் கூடப் பார்க்க நினைக்கவில்லை… கண்கள் ரிஷியைத் தேட… ரிஷியோ மாடிப்படியில் அமர்ந்திருந்தான்…
யாரையும் கண்டுகொள்ளாமல்… ரிஷி அவன் உலகில் அமைதியாக வெறித்தபடி அமர்ந்திருந்தான்…
மீண்டும் மீண்டும் எழ நினைத்தாலும்… அவனின் சிறகுகள் வெட்டி வெட்டி வீசப்படும் துரதிர்ஷ்டம் ஏனோ….
ரிஷியின் அதிரடி… உற்சாகம் எல்லாம் மீண்டும் வடிந்து போயிருக்க… சலனங்கள் இன்றி வானத்தை வெறித்திருந்தான்…
அப்படி அமர்ந்திருந்தவனின் அருகில் இன்னொரு உருவம் வந்து அமர்ந்தது… அந்தக் கைகள் தொட்டபோது அது உணர்த்திய வேதனை அவன் உள்ளாம் பட்டுக் கொண்டிருந்த வேதனைக்கு சமமான உணார்வு…
ரிஷியின் தோள்களில் பதிந்த அர்ஜூனின் கைகளின் அழுத்தமே அர்ஜூனின் நிலையை ரிஷிக்குத் தெளிவு படுத்தியிருக்க… நிமிர்ந்து பார்த்த ரிஷி கண்களில் வலி மட்டுமே…
”நான் தாத்தாகிட்ட எப்படி இதைச் சொல்வேன்… தாங்க மாட்டாரு ரிஷி” அர்ஜூனின் குரல் உடைந்திருக்க…
“அவ ஏமாத்திட்டா ரிஷி… நம்ம எல்லார்கிட்டயும் எதையுமே சொல்லாமல் மறச்சுட்டா ரிஷி… “
ரிஷி அமைதியாக அமர்ந்திருந்தவன்… அர்ஜூனிடம் இப்போது திரும்பி… அவன் கண்களைப் பார்த்தவன்…..
“எப்போதுமே சொல்வீங்களே அர்ஜூன்… நான் தான் கண்மணியை காப்பாத்துவேன்ன்னு… இந்த தடவை எனக்காக என் கண்மணியைக் காப்பாற்றி தருவீங்களா… இந்த ஒரு தடவை என் கண்மணியை மீட்டு எனக்காக் தாங்களேன்” ரிஷியின் அழவில்லை… அவன் குரல் உடையவில்லை… அவன் நிறுத்தி நிதானமாகச் சொன்ன வார்த்தைகளில் அர்ஜூன் தான் மொத்தமாக உடைந்தவன் ஆகி இருந்தான்…
“ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி… போராடிக் கூட கண்மணியைக் காப்பாத்திக் கொண்டு வர நான் தயார்… என் உயிரைக் கொடுத்து கூட கண்மணியைக் காப்பாத்தி வர நான் துடிக்கிறேன் ரிஷி… ஆனால் அவ உயிர் எங்க இருக்குனு எனக்குத் தெரியலையே… “ என்ற ரிஷியைப் பார்த்த அர்ஜூன் உணரவில்லை…
கண்மணியின் தவிப்பு… பாசம்… காதல்… மட்டுமல்ல… அவளின் உயிரும் அவள் ரிஷியிடம் தான்…
கண்மணியின் உயிர் ஏழுகடல் ஏழுமலை தாண்டி அல்ல… அவன் கண்ணாளனின் கண்ணில் தான் கண்மணியில் தான் இருக்கிறதென்று அர்ஜூனுக்கு தெரிய வருமா…. புரிய வருமா…
பரிதவிப்புடன் அமர்ந்திருந்த ரிஷியை அர்ஜூன் தேற்றிக் கொண்டிருக்க… பதிலே சொல்லாமல்… தனக்கும் தன் மனைவிக்குமான நினைவுகளில் தொலைந்து கொண்டிருந்தான் ரிஷி…
----
கண்மணியைப் பார்த்துவிட்டு வந்த மருத்துவர் மீனாட்சி…
“பயப்பட்றதுக்கு ஒண்ணுமில்லை… கொஞ்சம் கவனமா பார்த்துக்கங்க… ஆன்டிபயாட்டிக் டேப்லட்ஸ் மட்டும் போட்டுக்கட்டும்” என்று சமாதானமாகச் சொன்னவர்… வீட்டை விட்டு கிளம்பியிருக்க… அவரை வழி அனுப்பி வைக்கும் சாக்கில் ரிஷியும் அர்ஜூனும் தனியே வந்திருந்தனர்…
“பயபட்றதுக்கு ஒண்ணுமில்லைனு உங்ககிட்டயும் சொல்ல முடியாதே ரி்ஷி” மீனாட்சி இதை சொல்லத் தயங்கவில்லை…
ரிஷி அவரைப் பார்க்காமல் வேகமாக வேறு புறம் திரும்பினான்… தன் கண்களின் கசிவைக் காட்டும் சக்தி இல்லாமல்..
அர்ஜூன் மீனாட்சியைப் பார்த்திருக்க… அர்ஜூனிடம் பேச ஆரம்பித்தார்….
“என்ன சொல்றதுன்னு தெரியலை அர்ஜூன்…”
“புதுசா கண்மணிக்கு பெரிய பிரச்சனை வரலை… அல்ரெடி இருக்கிற பெரிய பிரச்சனைல இது இன்னொரு கூடுதலா வந்திருக்கு… ஆனால் அவளுக்கு இந்த டைம்ல வலி வந்துறக் கூடாது… அவளோட ஆசையே ஒரு குழந்தையையாவது இந்த உலகத்துக்கு கொண்டு வந்துறனும்னுன்றதுதான்… அது கூட இப்போ கேள்விக் குறியா இருக்கு…”
அர்ஜூன் முகம் வெளிர ஆரம்பித்திருக்க… ரிஷியோ அவன் முகத்தில் ஏதும் காட்டிக் கொள்ளவில்லை…
“மேடமை விட்டுட்டு கிளம்புங்க அர்ஜூன்… நான் அப்படியே நடந்துட்டு வீட்டுக் போறேன்…” என்றவன் அர்ஜூனின் பதிலுக்கு எல்லாம் காத்திருக்காமல்
அர்ஜூனை விட்டு விலகி நடக்க ஆரம்பித்திருந்தான்…
---
ரிதன்யாவும்… கண்மணியும் மட்டுமே அந்த அறையில் இருந்தனர்… மற்றவர்கள் அனைவரும் ரிஷியின் புதிய இல்லத்திற்கு போயிருந்தனர்….
கண்மணிக்கு அம்மை என்றதுமே… வழக்கம் போல நாராயணனுக்கு ரத்த அழுத்தம் வந்திருக்க… அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது... அர்ஜூன் தான் அவருக்குத் துணையாக அங்கிருந்தான்…
நட்ராஜ் மட்டுமே அங்கு இயல்புக்கு மாறாக இருந்தார்… மனதளவில் ஓரளவு தைரியமாக இருந்தவர் அவர் மட்டுமே… தன் மகளுக்கு தன் மனைவி போல ஒன்றும் ஆகாது… மனைவி துணையிருப்பாள் என்று அப்போதும் நம்பி இருந்தார்…
“அம்மா உங்களால நைட்லாம் கண்ணு முழிக்க முடியாது… டேப்லட் போட்டு நீங்க ரெஸ்ட் எடுக்கனும்… இல்லைனா உங்க உடம்புக்கு ஒத்துக்காது…. நான் அண்ணியைப் பார்த்துக்கிறேன் மா… உங்க எல்லாரையும் விட நான் அண்ணியை நல்லா பார்த்துக்குவேன்… யாரும் கவலைப்பட வேண்டாம்… வைதேகிப் பாட்டியும் வேண்டாம்… அவங்க ஹெல்த்துக்கும் ரிஸ்க்… சோ எல்லோரும் கிளம்புங்க…” ரிதன்யா பிடிவாதமாகச் சொல்லிவிட… கண்மணியும் அதை மறுக்கவில்லை… இலட்சுமியும் வைதேகியும் அவர்களின் உடல்நிலை… வயோதிகம் காரணமாக அனுப்பப்பட்டிருக்க…. கந்தம்மாளோ யார்ப் பேச்சையும் கேட்கவில்லை…
“நீங்கள்ளாம் ஒழுங்கா எதையும் பார்க்க மாட்டீங்க… அம்மா போட்ருக்குனா சும்மா இல்லை… சுத்த பத்தமா இருக்கனும்… நான் இருக்கனும்… இங்கதான் இருப்பேன்… காலையில விடிஞ்சதும் இங்க அம்மன் கோவிலுக்கு போகனும்… முதல்ல ஒரு வெள்ளைத் துணி கொடு… அதை மஞ்சள்ள முடிஞ்சு நேர்ந்துக்கனும்… “ என ஆரம்பித்து அடுத்தடுத்து அடுக்க ஆரம்பித்தவர்…
“கண்மணி கீழ தான் படுக்கனும்… அதுவும் வேப்பிலைலதான் படுக்கனும்…” எனச் சொல்ல
அப்போதுதான் மீண்டும் வீட்டுக்குள் வந்த ரிஷி கடுப்பானான்… கந்தம்மாள் கூறியவற்றை எல்லாம் கேட்டதால்
‘ஏன் பாட்டி… இன்னுமா இந்த பத்தாம்பசலிதனைத்தை விடலை… அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்… இந்த சமயத்துல அவ எப்படி கீழ படுப்பா… பெட்லயே படுக்கட்டும்… நீங்க சாமி… சடங்குன்னு அவளைக் கஷ்டப்படுத்தாதீங்க தயவு செய்து…”
எனும் போதே
“தம்பி… முதல்ல நீங்க இங்க இருக்கக் கூடாது… அவ முகத்தைப் பார்க்கக் கூடாது… அம்மை போட்ட பொண்ண புருசன் பார்க்கவே கூடாது… புருசன் முகம் பார்த்தா இன்னும் இன்னும் அம்மை பூரிப்பாகும்” சொல்ல… ரிஷி அதிர்ந்து பார்த்தவன்
”இதெல்லாம் யார் சொல்லி வச்சது… கடுப்பாக்காதீங்க பாட்டி” என்றபடி உள்ளே போனவன்… கண்மணியைப் பார்க்கவும் செய்தான்…
அரை மணி நேரத்திற்குள்… கண்களுக்கு புலப்படும் வகையில் இப்போது அவளுக்கு ஆங்காங்கே அவள் முகத்தில் அம்மை முத்துக்கள் போட்டிருக்க… கண்மணி அப்போதும் அவனை பார்க்கவில்லை…. ஒரு நொடிப் பார்வைதான்… சட்டென்று வேறு புறம் திரும்பிக் கொள்ள… ரிஷி அவளைப் பார்த்தபடியே நின்றிருக்க
“தம்பி நீங்க வெளில போங்க” கந்தம்மாள் மீண்டும் அவனிடம் வந்து நிற்க…
”மாமா முதல்ல இவங்கள ஊருக்கு அனுப்புங்க… இன்னும்… இப்போ கூட இந்த கண்மூடித்தனமெல்லாம் நம்பிட்டு இருக்காங்க… “ எனும் போதே… நட்ராஜ்தான் அவனை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருந்தார்…
அதன் பின்
ரிஷியும் நட்ராஜும் மாடி அறையில் அவர்களுக்கு துணையாக இருந்து விட்டனர்…
கூட்டம் வேண்டாம் … கண்மணிக்கு பிரச்சனை… மற்றவர்களுக்கும் பிரச்சனை என்று சொல்லப்பட்டதால் யாரும் கண்மணி இல்லத்தில் தங்கியிருக்க அனுமதிக்கப்படவில்லை…
---
கண்மணிக்கு இலேசான காய்ச்சலும் உடல் அசதியும் மட்டுமே… மற்றபடி வேறொன்றுமில்லை…
இரவு உணவு முடிந்து கண்மணி கட்டிலில் அமர்ந்திருந்தாள்… கந்தம்மாளோ புலம்பிக் கொண்டிருந்தார்… வெளியே ஹாலில்…
“சொல்றதைக் கேட்க மாட்டேங்கிறாங்களே… மெத்தைல படுத்தா இன்னும் அதிகமா ஆகுமே…” புலம்பிக் கொண்டிருக்க…
ரிதன்யா கண்மணியிடம்…
“அவங்க அப்படித்தான் சொல்லிட்டு இருப்பாங்க அண்ணி… நீங்க மேலேயே படுங்க…”
“அவங்க சொல்றது தப்பு இல்லை ரிதன்யா… பெட் சூடு… கீழ வேப்பம் இலைல படுத்தா குளிர்ச்சி…” எனக் கண்மணி சொல்ல
”அப்டியா… அப்போ ஒண்ணு பண்ணலாம்… நான் இந்த இலையை எல்லாம் மேல பெட்ல போட்றேன் அண்ணி…” என்றபடி தன் அண்ணிக்கு அழகாக வேப்பிலை மெத்தையைத் தயார் செய்தவள்…
“இப்போ படுங்க” என்றபடி தனக்கு தரையில் படுக்கையை விரித்தாள் ரிதன்யா…
“அண்ணி… தூங்குங்க… ஏதாவது தேவைப்பட்டா என்னைக் கூப்பிடுங்க” என்றபடி ரிதன்யா கீழே படுக்கப் போக… கண்மணி புன்னகையுடன் தலை ஆட்டியவள்…
“எனக்குத் தூக்கம் வரலையே ரிது… ஏதாவது பேசுங்க…. நான் கேட்டுட்டு இருக்கேன்” என்றவளிடம்…. ரிதன்யா அவளின் குழந்தைப் பருவத்தில் நடந்தவைகளை… ரிஷி ரித்விகா… மகிளா என அனைவரின் குறும்புகளையும்… விளையாட்டுத் தனங்களையும் சொல்ல ஆரம்பித்தவள்… தன் தந்தையின் நினைவுகளில் அவளையும் மீறி கண்ணீர் விட ஆரம்பித்தவள்… அடுத்த நொடியே அதைத் துடைத்தபடியே
“என் அண்ணனை ரொம்ப ரொம்ப சாதாரணமா நெனச்சுட்டு இருந்தேன் அண்ணி… ஒரு புள்ளில… எங்க வாழ்க்கையே மொத்தமா மாறி…. என் அண்ணன் வேறொரு இடத்துக்கு போயிட்டாரு… உண்மையிலேயே சொல்லப் போனால் ஒரு வேளை என் அப்பா இருந்திருந்தார்னா அண்ணா இந்த அளவுக்கு மாறி இருப்பாங்களா சந்தேகம் தான்… தனசேகர் பையன் ரிஷிகேஷ் இந்த அடையாளத்தோடே வாழ்ந்திருப்பார்… எங்கப்பாவோட ஆத்மா கண்டிப்பா சந்தோசமாத்தான் இருக்கும் அண்ணி… அதுவும் நீங்க அவர் வாழ்க்கைல வந்தது எங்க அப்பாவோட நல்ல மனசும் காரணமா இருக்கலாம்…”
கண்மணி அவளிடம்
“ரிஷியோட வாழ்க்கைல நான் எப்போதுமே பெரிய அடையாளமா மாற விரும்பலை கண்மணி… என்னோட பங்களிப்பு… ரிஷின்ற கடல்ல கரைத்த பெருங்காயம் போல… சீக்கிரமா உங்க அண்ணா வாழ்க்கைல இருந்து நான் இருந்த அடையாளம் தெரியாமல் போயிருவேன்… என்னை விடுங்க உங்க அண்ணாவோட வளர்ச்சிக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை… ஹ்ம்ம்… எங்க அப்பாவை வேணும்னா சொல்லலாம்… ரிஷி தனி மனுஷன் தான் எப்போதும்… “ என்றவள் சொன்ன வார்த்தைகளில் ரிதன்யா முகம் சுருங்கினாலும்
“நீங்க உண்மையிலேயே அண்ணாவை வெறுக்குறீங்களா அண்ணி…”
கண்மணி பதில் சொல்லாமல் அவளைப் பார்த்தபடியே இருந்தவள்… என்ன யோசித்தாளோ… சட்டென்று எழுந்து அமர்ந்தவள்…
“இதுக்கு பதில் வேணுமா… “ என்ற கண்மணியிடம் ரிதன்யா ’ஆம்’ என்று தலை ஆட்ட
“சரி ஓகே… உங்க அண்ணாகிட்ட லேப்டாப் வாங்கிட்டு வர்றீங்களா…”
“பாட்டிக்குத் தெரியாமல்… எடுத்துட்டு வாங்க….” கண்மணி சொல்ல… ரிதன்யாவும்… ரிஷியின் மாடி அறைக்குச் சென்றாள்…
ரிஷியும் அவன் மடிக்கணியை எடுத்து தன் தங்கையிடம் கொடுத்து விட்டான்…
---
”நான் கதை எழுதுவேன்னு தெரியுமா உங்களுக்கு” கண்மணி ரிதன்யாவிடம் கேட்க…
“ஹ்ம்ம்…. தெரியும் ரித்வி சொல்லிருக்கா” ரிதன்யா உள்ளே போன குரலில் சொல்ல…
“என்னோட முதல் கதை…. அதுக்கு முடிவு என்ன வைக்கலாம்னு ரொம்ப நாளா குழப்பம்… இப்போ இன்னைக்கு அந்தக் கதையோட முடிவை எழுதிறலாமா…”
“அண்ணி நீங்க இப்போ எழுதலாமா… அண்ணா இந்த லேப்டாப்பை கொடுத்தனுப்பும் போதே கோபமாத்தான் கொடுத்தார்…”
”நீங்க எதுவும் டைப் பண்ணக் கூடாதுன்னு… இதை அடிக்கடி மடில தூக்கி வச்சுட்டு எழுதுனதுனாலதான் நீங்க இந்த நிலைமைல இருக்கீங்கன்னு தர மாட்டேன்னுதான் முதல்ல சொன்னாரு…”
”எனக்குத் தேவைப்படுதுன்னு சொல்லி வாங்கிட்டு வந்தேன்”
“இல்லை நான் டைப் பண்ணலை…… ஆனால் தொடங்கின கதைக்கு முடிவு இல்லாமல் விட்டுட்டு போனா நல்லா இருக்குமா… “ கண்மணியின் வார்த்தைகள் ரிதன்யாவுக்கு புரியவில்லை….
“இப்போ நான் என்ன பண்ணனும்… நீங்க சொல்றதை டைப் பண்ணனுமா…”
”இல்லை… ஜஸ்ட் நான் சொல்ற பக்கங்களை இணைக்கனும்…” என்றபடி கண்மணி ரிதன்யாவிடம்
“அதுல முடிவு இரண்டுனு இருக்கும்… அதை மட்டும் எடுத்து இதோட கனெக்ட் பண்ணிருங்க… அப்புறம் உங்க அண்ணாகிட்ட நீங்களே ஒரு நாள் கொடுத்துருங்க…” என்றாள் கண்மணி…
ரிதன்யாவும் கண்மணி சொன்னதை செய்து முடித்து… கண்மணியின் முதல் கதைக்கு சுபம் போட்டபடி…
“ஏன் அண்ணி… இதைப் புக்கா போடப் போறிங்களா அண்ணி… ”
“இல்லை… தேவைப்படாதுன்னு நினைக்கிறேன… ஆனால் என்னோட அடுத்த இரண்டு கதை கம்ப்ளீட் பண்ணிட்டேன்… எனக்கு ஒரு ஹெல்ப் பண்றீங்களா… அதை நீங்க பப்ளிஷ் பண்ணிருங்க…” எனும் போதே கண்மணி கண்களில் தூக்கம் வந்திருக்க…
“சரி… நீங்க தூங்குங்க… எனக்கு தூக்கம் வரலை… நான் உங்க கதையை படிச்சுப் பார்க்கிறேன்…. ” என்ற ரிதன்யாவிடம் கண்மணி வேறு ஏதும் பேசாமல் உறங்க ஆரம்பிக்கப் போக…
“அண்ணி.. எந்த ஸ்டோரி முதல்ல படிக்க… ” ரிதன்யா கேள்வியாகக் கேட்க… மணியைப் பார்த்த கண்மணி…. மௌனமாகவே இருக்க
“எங்க அண்ணாக்காக… எழுதின கதை… நான் அதைப் படிக்கவா… கண்டிப்பா செமையா இருக்கும்… எங்க அண்ணா மேல இருக்கிற உங்க லவ் கண்டிப்பா அந்தக் கதைல இருக்கும்… சோ சூப்பரா இருக்கும்” ரிதன்யா கண் சிமிட்டிக் கேட்க…
கண்மணி அர்த்தப் புன்னகை பூத்தவளாக தலை ஆட்ட… அவளின் சிரிப்பின் அர்த்தம் ரிதன்யாவுக்கு அப்போது புரியவில்லை… கதை படித்து முடித்த போது புரிந்தது…. அதே போல்…
“நீங்க எங்க அண்ணாவை வெறுக்குறீங்களா” ரிதன்யா கேட்ட கேள்விக்கும் பதில் கிடைத்திருந்தது
----
Such a pain.. No other words could express R💞K jii..
Nalla end kodunga. Kanmani Rishi onnaserattum.
Please avankala piricitathinka, 2perum romba kastrapattirukinam eniyavathu nalla irukattum. 🥺
Very nice so much tacing
Nice
Super
Rishi arjun conversation really emotional nice sis
Nice
Super
Kanmani nambikai vai ma eduvum namma Kaila ila
Engalukuku nambikai iruku Rishi kanmani ah pavi meetu
Rishi , kanmani ,Arjun, Raj pa narayanan sir , kanthamal pati , Lakshmi ma, Rithvi ,Rithanya, vaithegi pati , Carla ellaraiyum frame la konduvanthu paa
semma siss
Sis kanmani Rishi chance eh ila avlo alagu rendu perum.... Kandipa kanmani sari aagiduva Ava Rishikaga. Avanga rendu per serthavudane mudichuranthenga storyah... Avanga conversation ketkanum atha romba miss panrom.. oru rendu full ud kuduthurnga avangaluku matum♥️♥️