ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
இந்த போஸ்ட் ஒரு தேங்க்ஸ் போஸ்ட்... உங்க எல்லோருடைய சப்போர்ட்டுக்கும்... என்னை தொடர்ந்து ஊக்குவிச்சுட்டு இருப்பதற்கும் ... அண்ட் ரிஷி கண்மணிக்கு நீங்க கொடுக்கிற ஆதரவுக்கும்..
மேல பார்த்துட்டு இருக்கிறது... நான் பர்ஸ்ட் பர்ஸ்ட் ஃபேஸ்புக் பேஜ்ல ரிஷி கண்மணியை ரிவீல் பண்ணின போஸ்ட்...
அன்பே நீ இன்றி எழுதி முடிச்சதுக்குப்புறம்... விஜய் மாதிரி ஒரு கேரக்டர் ... இன்னைக்கு வரைக்கும் இப்போ இந்த நிமிசம் என்கிட்ட யாராவது சாட்டுக்கு வந்தாலும்... விஜய் சான்ஸே இல்ல... எனக்கு அத்தான்ற வார்த்தையே பிடிக்காது... விஜய் அத்தான் தீக்ஷா கூப்பிட்டு கூப்பிட்டு எனக்கும் அந்த வேர்ட் பிடிக்க ஆரம்பிச்சிருச்சு... நானும் அப்படி கூப்பிடப் போறேன்... விஜய் விஜய் புராணம் தான்...
அப்படி இருக்கும் போது என் ஃப்ரெண்டு ஒருத்தவங்க என்கிட்ட சொன்னாங்க... சாரகேஷ் கேரக்டர்தான் எனக்குப் பிடிச்சிருக்கு... விஜய் மாஸ்தான்... ஆனால் சாரகேஷ் மாதிரி ஒருத்தன் ஹீரோவா ஆகக் கூடாதா... ஏன் அவனுக்கு என்ன குறைச்சல்... அப்பா இல்லாத குடும்பத்தை... அம்மாவை... தங்கையை... ஏன் தீக்ஷாக்கு நோய் இருக்குனு தெரிஞ்சும் அவளை நேசிக்கிற அவனோட லவ் எந்த விதத்தில குறைச்சல்னு கேட்டாங்க...( இருந்துட்டு போகட்டும்... அவளுக்கு மேரேஜ் ஆகிருச்சே... நான் தான் ஏற்கனவே தீக்ஷாவை விஜய் வைஃப் ஆக்கிட்டேனே.. கதையை எப்படி மாத்துறதுனு யோசிச்சது வேற விசயம்) ஆனாலும் அவங்க ஸ்டேட்மெண்ட் மண்டைக்குள்ள ஓடிட்டு இருந்துச்சு...
அதே போல விஜய் கேரக்டருமே எப்படி வந்துச்சுனா...
பாலா கேரக்டர் மதுவை மிஸ் பண்ணி அவளை தேடிருப்பான்ல... அந்த எமோஷனல கதைல ஏன் கொண்டு வரலைனு ஒருத்தவங்க கேட்டாங்க... கீர்த்தனா காணோம்னு அப்படி பதறிட்டு ஓடி வர்றான்... அதே போல மதுவுக்கும் ஃபீல் பண்ணிருப்பான் தானே... அதை ஏன் நீங்க சொல்லல... நீங்க மதுவுக்கு துரோகம் பண்ணிட்டீங்கன்னு இப்போ வரைக்கும் என்னை செல்லமா திட்டிட்டு இருக்கிற மக்கள் இருக்காங்க... சோ அப்படி திங்க் பண்ணி எழுதின கதைதான் அன்பே நீ இன்றி... ஜென்ரல் அம்னீஷியா ப்ளாட்... ஆனால் அதை செர்வ் பண்ணின விதம் வேற மாதிரி பண்ணினேன்...
ஒகே இப்படி ஒரு கதைல வெளிக் கொணராத எமோஷன்ஸ் தான் என்னோட அடுத்த கதைக்கு ட்ராவல் ஆகிட்டு இருக்கு... மே பி அதுக்கு உங்க கமெண்ட்ஸ் இன்ஃப்ளூயன்ஸும் காரணமா இருக்கலாம்...
ஹீரோயிசம் இல்லாம ஒரு ஹீரோவா ராகவ் சந்தியா ஸ்டோரி கூட விஜய் மாதிரி ஹீரோவை வச்சு எழுதினாத்தான் கதை எழுத வருமான்னு எழுதிய கதைதான்...
ரிஷியும் அந்த மாதிரிதான்... ஆனால் ஸ்டார்ட்டிங்ல அவனோட கேரக்டர் ரொம்ப ரொம்ப டம்மியா இருக்கும்... விக்கி அர்ஜூன் இப்படி ஹீரோ மெட்டிரியல்ஸ் அவனோட ட்ராவெல் பண்ணுவாங்க... அவனோட வாழ்க்கைல தேவதைப் பெண்... அவனோட லக்கி சார்ம்.. நாயகி கேரக்டர் டாமினெண்ட் கேரக்டர்( கடைசி வரைக்கும் )... கண்மணி கேரக்டர்தான் அவனை ஹேண்டில் பண்றமாதிரி கதையும் ட்ராவெல் ஆகும்... கதையோட முடிவை நோக்கிப் போகும் போது... கண்மணி கேரக்டரை... ரிஷி கேரக்டர் டாமினேட் பண்ணனும்... ரிஷிக்காக கண்மணி எல்லாம் பண்ணுவான்னு ஸ்டார்ட் ஆகிற கதை... கண்மணிக்காக ரிஷி எல்லாம் பண்ணுவான்னு மாறனும்... கண்மணி என் கண்ணின் மணி... ..கதை முடியும் போது ... டைட்டில் ஜஸ்டிஃபிகேஷன் ஆகனும்... ஆகுமா??? பார்ப்போம்...
அண்ட் ரிஷி இல்லாமல் இவ்ளோ எபிசோட்... கமெண்ட்ஸ்ல மட்டும் இல்லை... தனியா சாட்ல வந்தும்... ரிஷி எப்போ வருவான்... ரிஷி- கண்மணி(அதுவும் ரிஷியோட கண்மணி) எப்போ வருவாங்க... அவங்க எப்போ மீட் பண்ணுவாங்க... சேர்த்து வைங்க... கதை முடிக்கிறேன்னு சொல்றீங்க.... அவங்களுக்கு ஹேப்பி சீன்ஸ் இருக்காதா... அவங்களுக்கு சீன்ஸ் கொடுக்காம கதையை முடிக்காதீங்க... கதை பெருசா ஆனாலும் பரவாயில்ல.. ரிஷிகிட்ட கண்மணியைக் கொண்டு போய் சேர்த்துருங்க... அப்போதான் கண்மணி ஹேப்பியா இருப்பா... ஹேப்பி எண்ட் தான் இருக்கனும் இப்படி பல கமெண்ட்ஸ்... அண்ட் ரெகமண்டேஷன்ஸ்... ( வலிமை அப்டேட்டை பிஎஸ் ஒன் அப்டேட்டை விட உங்க அப்டேட் அதுவும் ஆர் கே சீன்ஸ் அப்டேட்டுக்காக காத்திருக்கோம்னு நீங்க சொல்லும் போது... அதைப் படிச்சுட்டு... உங்க கமெண்ட்ஸ்லாம் படிச்சுட்டு நான்லாம் இங்கயே இருக்க மாட்டேன்... வானத்துல இருப்பேன்... எழுதிட்டு இருக்கிறதையும் விட்டுட்டு லாலா மோட்கு போயிருவேன்... உண்மைல தாங்க... உங்க ஒவ்வொருத்தவங்க கமெண்ட்ஸும் அவ்ளோ பிரிஷியஸ் எனக்கு... அதுனால கமெண்ட்ஸ் போட்றதை நிறுத்திராதீங்க... எமோஷனல் ஆகிட்டேனோ... எனிவே பரவாயில்ல... )
சோ எல்லாமே நோட் பண்ணிகிட்டேன்... ஆஃப்டர் ஃப்ளாஸ்பேக் கண்டிப்பா ரிஷி கண்மணி சீன்ஸ் வரும்... பிரவீணாவா உத்தரவாதம் கொடுக்கிறேன்... ரிஷி மாதிரி ஒரு ஹீரோ கைல இருக்கும் போது... சீன்ஸுக்கு பஞ்சமா என்ன... கண்மணியை ஒரு வழி பண்ணிருவோம்... ஸ்டே டியூன்...
அடுத்து என்னோட apologies...
எனக்கு டைம் இல்லாத காரணத்தால.... என்னால ஃபேஸ் புக்... என்னோட நாவல் பேஜ்... RC group ல இப்படி அப்டேட்ஸ் லிங்க்ஸை அப்டேட் பண்ண முடியல... Sorry sorry
என்னோட சோம்பேறித்தனமும் அண்ட் நானும் ஃப்ரிக்வெண்டா அப்டேட் கொடுக்க முடியாததும் ... ஆன் கோயின் அளவு பொறுமையா படிக்க முடியாதவங்களுக்காகவும்ஸ்டோரி முடிக்கிற ஸ்டேஜ்ல ஸ்டோரி லிங் கொடுக்கலாம்னு... ஸ்டோரி லிங்க் அப்ட்டேஸ ஸ்டாப் பண்ணிட்டேன்... மறுபடியும் ஒரு சாரி...
அப்படி இருந்தும்... இந்தக் கதைக்கு இவ்ளோ வியூ... அண்ட் கமெண்ட்ஸ் ... இதுக்கு மேல ஆத்தரா என்ன வேணும்...
நன்றி நன்றி நன்றி... இதைத் தவிர வேற வார்த்தையே என்கிட்ட இல்லை....
---
அண்ட் செழியன் ஆராதனா... ஸ்டோரிக்கு அப்டேட் கேட்கிற ஃப்ரெண்ட்ஸுக்கு... இந்த ரிப்ளை...
இந்தக் கதைல அர்ஜூன் அண்ட் மருது... இந்த ரெண்டு கேரக்டோடர பாலிஷ்ட் அண்ட் பாசிட்டிவ் சைட் தான் செழியன் கேரக்டரைசேஷன்...
ஆராதனா... அது அது......சஸ்பென்ஸ்... கதைலயே சஸ்பென்ஸான கேரக்டரைசேஷன்... இங்க சொல்ல முடியாதே... வெயிட் அண்ட் என்ஜாய்??? இன் தி ஸ்டோரி இட்செல்ஃப்...
ஓகே ஃப்ரெண்ட்ஸ்... ரொம்ப நாளா பேசவே முடியல... இன்னைக்கு பேசிட்டேன்... பை...
ஹேப்பி கிறிஸ்மஸ்... அண்ட் அட்வான்ஸ் ஹேப்பி நியூ இயர்... லவ் யூ ஆல்
நன்றிகளுடன் விடைபெறுவது
உங்கள் பிரவீணா விஜய்
எனக்கு உங்க முதல் இரண்டுகதைகளும் மிகவும் பிடிக்கும்..அதை எத்தனை முறை படித்தேன் என்ற கணக்கே இல்லை..அதற்கு பிறகு மிக நீண்ட நாள் தேடலுக்கு பிறகு சந்திக்க வருவாயா கிடைத்தது...அதுவும் பாதியிலேயே நிறுத்தபட்ட நிலையில்..😢😢 ஆனால் மறுபடியும் இந்த தளத்தில் அந்த கதையை படிக்க வாய்ப்பு கிடைத்தது...உண்மையை சொல்ல வேண்டுமென்றால் முதல் இரண்டு கதை இதயத்தை தொட்ட அளவிற்கு ச.வ. இல்லைதான்....ஆனால் ரிஷி💓கண்மணி விஷய் தீக்க்ஷா பாலா கீர்த்தி அளவிற்கு நன்கு மனதில் பதிந்து போனார்கள்..அவர்கள் பிரிந்திருப்பது தாங்க முடியவில்லை.. சீக்கிரம் சேர்த்துவைச்சிடுங்க பிளீஸ்