/* சாரி சாரி... பெரிய அப்டேட்... ப்ரேக் இல்லாமல் கொடுக்க நினைத்தேன்... கொஞ்சம் டிலே ஆகிருச்சு.... நாளைக்கு அடுத்த அப்டேடோட வருகிறேன்... . . I will continue the daily update until the end of the 2nd part. Enjoy ....
நெக்ஸ்ட் எபி... தனசேகர் எபி...
என்னால முடிந்த அளவுக்கு தனசேகர் FB யை ஒரே அத்தியாயமா சுருக்கி எழுதி இருக்கின்றேன்... இவ்ளோதான் ரிஷி-கண்மணியோட கதைல சொல்ல முடியும்... நீங்களும் அக்செப்ட் பண்ணுவீங்கன்னு நினைக்கிறேன்... பை... பை...
குறிப்பு...
பிழைகள் இருந்தால்... சரி பண்ணி படிச்சுட்டு... எனக்கு சொல்லவும் செய்யலாம்... கொஞ்சம் அவசர அவசரமா போட்டுட்டேன்... நான் நாளைக்கு படிக்கும் போது சரி பண்ணிருவேன்... உங்க கண்ணுக்கு ஏதாவது பட்டால் ப்ளீஸ் மன்னிச்சுக்கங்க...
வாருணி விஜய்(பிரவீணா)
*/
அத்தியாயம் 42-2
தன் மேல் கோபமாக இருந்தும்… இன்னும் தன் பிடியில் இருந்து விலக நினைக்காதவளாக நின்றிருந்தவளைப் பார்த்தபடியே… கைகளைத் தளர்த்தியவன்…
“போ போன்னு சொல்லிட்டு… இப்போ உன்னை விடாம பிடிச்சுட்டு நிற்கிறேனே… அது ஏன்னு எனக்குத்தான் தெரியலை… உனக்கு என்ன கண்மணி… நிற்க பிடிக்கலைனாலும் போகாம என்னோட கைக்குள்ள அடங்கி நிற்கிறாயே… அதுதான் ஏன்னு உனக்குத் தெரியுதா… ஆனால் இப்போ கூட உன்னை பிடிச்சு நிறுத்தி வைத்திருக்கின்றேனே அது நீ என் மனைவி நான் உன் கணவன் அந்த பந்தத்தால இல்லை கண்மணி… அந்த சின்ன வட்டத்துக்குள்ள உன்னை நான் என்னைக்குமே நிறுத்த நினைத்ததே இல்லை… எனக்குப் புரியுது… என்னோட சுமையெல்லாம் உன்கிட்ட இறக்கி வைக்கிற சுயநலக்காரன்… ஆனால் எனக்கு நீ மட்டும் தான் கண்மணி… எல்லாமே என்னோட கோபம்… சந்தோசம்… துக்கம்… எல்லாமே நீதான்… நீ எங்கே இருந்தாலும்… நீயும் நானும் எவ்வளவு தூரம் தள்ளிப் போனாலும்… தள்ளி இருந்தாலும்… உன்னைத் தேடி வருவேன்… நீ மட்டும் என்னை விட்றாத கண்மணி”
ரிஷி முற்றிலுமாக உடைந்த நிலையில் இருக்கின்றான்… கண்மணிக்கும் புரிந்தது…. இது அவன் தந்தையைப் பற்றிய உண்மை இத்தனை பேருக்கு தெரிந்திருக்கின்றது என்ற காரணத்தினால்… கண்மணி புரிந்து கொண்டது இப்படித்தான்… ஏனோ அவனிடம் பேச முடியாமல் அமைதியாகவே நின்றிருக்க…
ரிஷி இவளது பதிலை இல்லை குறைந்தபட்சம் அவளது வார்த்தைகளை எதிர்பார்த்திருந்தானோ என்னவோ… அவள் கைகளை அழுந்தப் பற்றியிருந்த அவனது கரங்கள் இருந்தும் இறுக்கம் அதிகரித்துக் கொண்டே போக… ஒரு கட்டத்தில் மௌனம் உடைத்தாள் கண்மணி…
“ரிஷி… நீங்க ஆயிரம் காரணம் சொன்னாலும்… யமுனா வாழ்க்கைல நீங்க பண்ணியது தப்புதான்… தப்பெல்லாம் பண்ணிட்டு… இப்போ இந்த மாதிரி பேசினால்… நீங்க பண்ணினதெல்லாம் மன்னிக்க முடியுமா… இல்லை மன்னிக்கக் கூடிய விசயங்களா… ஒரு அப்பாவிப் பொண்ணோட மனசு… அதை வச்சு உங்க வன்மத்தை, பழி வாங்குற வெறிய, தீர்த்துக்க நினைக்கிற அளவுக்கு இரக்கமில்லாதவரா ரிஷி நீங்க…” அவன் கண்களைப் பார்த்து கேட்டாள் தான்… ஆனால் குற்றம் செய்தவன் அவன்… அவளைப் பார்த்தபடியே இருக்க.. இவளாலோ அவன் பார்வையை தொடர்ந்து சந்திக்க முடியவில்லை ….
”ப்ளீஸ்… என்னைப் போக விடுங்க… இப்போ உங்ககிட்ட பேசக் கூடிய மனநிலைமைல நானும் இல்லை… நீங்களும் அதைக் கேட்கக் கூடிய மனநிலைமைல இல்லை… அதை விட.. இப்போ நானும் நீங்களும் பேசுறதுனால… யமுனா வாழ்க்கைல நடந்த எதையுமே மாத்திற முடியாதுன்றப்போ.. இனி உங்களத் திட்டியோ… இல்லை நீங்க மன்னிப்பு கேட்டோ என்ன ஆகப் போகுது…” இப்போது கண்மணி எரிச்சலாகவேத்தான் பேச ஆரம்பித்திருந்தாள்…
அவனிடம் கோபப்பட நினைத்தாள்தான்… ஆனால் அவன் தந்தையைப் பற்றி எதிர்பாராத விதமாக பார்த்திபன் போட்டு உடைத்திருக்க… அதில் தொய்ந்து உடைந்து போய் நின்று கொண்டிருந்தவனிடம் கோபப்படமுடியுமா என்ன? கோபப்படவும் முடியாத சூழ்நிலை…
அதே நேரம் அவன் தொய்ந்து உடைந்து பேசிக் கொண்டிருக்க… ஆறுதல் படுத்தவும் நினைத்தாள்தான்… ஆனால் அதுவும் செய்ய முடியாத சூழ்நிலை… காரணம் யமுனாவின் வாழ்க்கையில் அவன் செய்த திருவிளையாடல்கள்…
கோபமும் பட முடியாமல்… ஆறுதலும் சொல்ல முடியாமல்… என்ன சொல்வதென்றும் புரியாமல்… அவனை விட்டு விலகிப் போகவும் முடியாமல்… கண்மணிக்கே இந்த நிலை புதிதாகத்தான் இருந்தது…
கண்மணியின் நிலை உணர்ந்தவனாக…. அவள் கரங்களை இப்போது மென்மையாக அழுத்திப் பிடித்து…. தன் அருகே அவளைக் கொண்டு வந்தவன்… தானும் அமர்ந்து…. அவளையும் தன்னருகே அமர வைத்தவன்…
”இப்படி முகத்தை வச்சுக்காத கண்மணி… இப்படி யார்கிட்ட வேணும்னாலும் இரு.. என்கிட்ட மட்டும் இருக்காத கண்மணி… யாரோ மாதிரி இருக்கு...” என்றவனை திரும்பிப் பார்த்து முறைத்தவள்…
“ஆமா… சார் நீங்க அப்டியே… எங்ககிட்ட சிரிச்ச முகத்தோடேயே இருக்கீங்க பாருங்க… “ மனதில் இருந்தது கண்மணியிடம் சட்டென்று வெளிப்பட்டு விட… அதுவும் கடுப்பான நொடிப்புடன் வர… ரிஷியோ பக்கென்று சிரித்து விட்டான்…
அவன் சிரிப்பைப் பார்த்து கண்மணிக்கே ஆச்சரியம்… அவள் எதிர்பாராத போது அவனது சிரிப்பு… நொடிகளே என்றாலும்… மனம் விட்டு அவன் சிரித்த சிரிப்பு அவன் கண்களில் நிறைந்திருக்க… இமைக்காமல் அவனையே பார்த்தபடி இருக்க… ரிஷியுமே அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் தான்… இருவருமே எத்தனை நொடிகள் அப்படியே இருந்தனரோ அவர்களை மறந்து… கண்மணி தான் உணர்வுக்கு வந்து பார்வையை விலக்கி கடலை நோக்க ஆரம்பிக்க… ரிஷியோ… அவளை பார்த்த பார்வையை மாற்ற வில்லை…
”சரி… டீச்சர் மேடத்தோட கோபம் புரியுது… அதுனால இப்போ என்ன பண்றீங்கன்னா… அட்வைஸ் பண்ணுவீங்களாம்… திட்டுவீங்களாம்… அப்புறம் பனிஷ்மெண்ட்… ஆக எது கொடுத்தாலும் வாங்க ரெடி…. ஸ்டார்ட் மியுஸிக்…” என்று இலகுவான குரலில்… பவ்யமாக அவள் முன் பேச…
கண்மணி இப்போது மீண்டும் அவன் புறம் திரும்பினாள்… தன்னை நக்கல் செய்கிறானோ என்று நினைப்பில் அவள் பார்க்க… அவனோ உண்மையாகவே அவள் முன் தலை குனிந்திருக்க… அதைப் பார்த்த கண்மணிக்கு... ரிஷியைப் புரிந்து கொள்ள அவள் இன்னும் பல அடிகள் முன்னேற வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக் கொண்டிருந்தான் ரிஷி என்ற ரிஷிகேஷ்
”என்னைத் திட்டு கண்மணி” அவள் தாடையில் கை வைத்து அவள் புறம் திருப்பியவனின் குரல் ஒலித்த விதத்தில்… கண்மணி அவளையுமறியமால் அவன் கண்களைப் பார்க்க… அவனது கண்கள் அவளை மட்டுமே பார்த்திருக்க.., அந்தக் கண்களும் ரத்தச் சிவப்பில் இவளை சரணடைந்திருந்தன…
தன் அப்பாவை ஆஸ்திரேலியா செல்ல சம்மதிக்க வைத்த தினம் இன்று நினைவுக்கு வந்தது கண்மணிக்குள்
அன்று தன்னைப் பார்க்கவே கூடாது என்பது போல ரிஷி நடந்து கொண்ட விதம் என்ன?… இன்று தன்னை மட்டுமே பார்த்து நிற்கும் அவன் கண்கள் சொல்லும் மொழி என்ன?… எதிரில் தெரிந்த ஆழ்கடலில் கூட மூழ்கி முத்தெடுத்து விடுவாள் போல… இவனிடம் மூச்சுத் திணறியது கண்மணிக்கு… ஆனாலும் அவனை விட்டு வெளியே வர முடியாத நிலைதான் கண்மணியிடம்… ரிஷி என்பவனுக்குள் அவனை விட்டு வர முடியாத ஆழத்தை நோக்கிச் சென்று விட்டாள்…
கண்மணியையே திடுக்கிட வைத்துக் கொண்டிருந்தன… அவளைப் பற்றி அவளே உணர்ந்து கொண்டிருந்த உண்மைகள்…
பார்த்திபன் சொன்னானே… ‘யமுனாவையாவது காப்பாற்றி விடலாம்… உன்னைத்தான் காப்பாற்ற முடியாது ...’ அதுதான் நிதர்சனமான உண்மையா???.. வேதனையாக இதழ் கடித்து ரிஷியைப் பார்த்தவள்… கண்களை மூடித்திறந்தாள்…
”இதெல்லாம் நான் பண்ணலைன்னு சொல்ல மாட்டீங்களா ரிஷி…” வாய் விட்டே கேட்க…
அவள் கேட்ட கேள்விக்கு பதில் வர வில்லை ரிஷியிடமிருந்து… மாறாக
“என்னைப் பிடிக்கலையா கண்மணி… “ ரிஷி எள்ளலாக இதழைச் சுழித்தவன்…
”பிடிக்கலைனாலும்… என்னைத் திட்டவாவது செய் கண்மணி… என்னை அடிக்கக் கூட… செய்” என்றவன் அவள் கைகளை எடுத்து அவன் கன்னத்தில் அவனே மாறி அறைந்து கொள்ள… கண்மணியோ அதிர்ந்து… அவனிடமிருந்து தன் கைகளை பறிக்க முயன்றவளுக்கு… அதைச்க் கூடச் செய்ய முடியவில்லை… ரிஷியின் செய்கைகள் கொடுத்த அதிர்ச்சியில்…
தானாகவே அவள் கைகளை விட்டவன்…
“பைத்தியக்காரன் மாதிரி தெரியுறேனா கண்மணி… நான் பைத்தியக்காரன் தான்… பைத்தியகாரன் தான் நான்.. ஆனால் இன்னைக்கு பைத்தியம் ஆகலை கண்மணி… என் அப்பா என்றைக்கு இந்த உலகத்தை விட்டு போனாரோ அன்னைலருந்து…” ஆங்காரமாக அவன் குரம் உயர்ந்திருந்தது… தான் பைத்தியம் என்பதை இப்படி ஒருவனால் சொல்ல முடியுமா… சொல்லி இருந்தான் ரிஷி…
அடுத்த நொடியே… அவன் குரலும் உடைந்து விழுந்தது
“முடியல கண்மணி… வாழ்க்கைல இத்தனை வலி இருக்கும்னு … அது துரத்தி துரத்தி அடிக்கும்னு எனக்கு தெரியல…. எல்லாமே புதுசு… நான் எதிர்பார்க்காத விசயங்கள்… எதிர்பாராத நபர்கள்ட்ட இருந்து… ஃபேஸ் பண்ணவே முடியலை…. நீச்சல் தெரியாத ஒருத்தனை நீச்சல் குளத்தில் விட்டாலே அவன் மூச்சடைத்து போவான்… நடுக்கடல்ல தூக்கிப் போட்டா எப்படி இருக்கும்… அந்த நிலைமைலதான் நான் இருந்தேன்… இன்னைக்கு நான் இப்படி இருக்கிறேனே…. பணம்… சொந்தம்… பந்தம்…. ஆசை இதெல்லாம் என் அப்பாவை பிஸ்னஸ்ல ஏமாத்திட்டாங்க அதுனால தான்னு நினைக்கிறியா கண்மணி… இல்லை என் அம்மாகிட்ட என்னை கெட்டவன் மாதிரி சூழ்நிலை மாத்திருச்சு… அதை உடைக்கிறதுக்காக போராடுறேன்னு நினைக்கிறியா… இது எல்லாத்தையும் விட நான் வேற ஒரு இடத்தில உடஞ்சுட்டேன்… காதல்… திருமணம்… குடும்பம் இதெல்லாம் சும்மா… இந்த சமுதாயத்துக்கான ஒரு கண் துடைப்பு… நடிப்பு… இங்க ராமன்லாம் சந்தர்ப்பம் கிடைக்காத வரைதான்…” கண்மணியைப் பார்க்க முடியாத இயலாமையோடு ரிஷி திரும்பியவன்… என்ன நினைத்தானோ… அதற்கு மேல் பேச முடியாமலோ… பேசப் பிடிக்காமலோ… இல்லை வழக்கம் போல கண்மணியிடமிருந்து ஆறுதல் வார்த்தைகளை எதிர்பார்த்தானோ…. ஆக அமைதி ஆகி விட…
கண்மணி இப்போதும் பரிதாபம் எல்லாம் படவில்லை… ரிஷி ஏதோ சொல்ல நினைக்கிறான்… அதே நேரத்தில் தன்னிடம் சொல்லவும் அவனுக்குப் பிடிக்கவில்லை… என்பது நன்றாகவேக் கண்மணிக்குத் தெரிந்தது… ’அந்த’ ஏதோ என்ற விசயம்… அவன் தந்தையின் விசயம் என்பதும் புரியாமல் இல்லை… ஆனாலும் கண்மணி அவனிடம் ஆறுதலாகவோ… ஆதரவாகவோ பேச நினைக்கவில்லை…
அவனாகவே சொல்லட்டும்… என்று வாயைத் திறக்காமல் அவனையேப் பார்த்திருக்க… அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டம் திடிரென… கூட்டமாக ஆர்ப்பரிக்க… இப்போது ரிஷியும் கண்மணியும்… இருவருமே புரியாமல் ஒருவரையொருவர் நோக்கி பின் மக்கள் ஆரவாரம் வந்த திசையைப் பார்க்க…… அங்கோ அனைவரும் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்…
ரிஷியின் முகத்தில் மெல்லிய புன்னகை… கண்மணியிடம் திரும்பி… கைகளை அவள் புறம் நீட்ட… அவளோ அவனைப் புரியாமல் நோக்க… அவளிடம் ஏதும் பேசாமலேயே…. அவள் சேலையின் தலைப்பை பற்ற…. ரிஷி என்ன செய்கிறான்!!!… என்ன செய்யப் போகிறான்!!! என்று கண்மணியின் உள்ளுணர்வு சொல்லும் முன்னேரே அவளின் முந்தானையின் நுனிப்பகுதி அவன் கைகளில் வந்திருக்க… தன் கைகளில் வந்திருந்த கண்மணியின் மெல்லிய பூனம் புடவையினை முனையை நன்றாக விரித்தவன்… அதைக் கண்களின் வைத்து நிலவினை பார்க்க ஆரம்பித்தவன்… கண்மணியையும் தன் அருகே கொண்டு வந்து… அவளையும் பார்க்கச் சொல்ல… கண்மணியும் பார்த்தாள்…
அது வானில் அப்போதுதான் தோன்றி இருந்த மூன்றாம் பிறை…
”மணி… இந்த மூன்றாம் பிறையை இப்படி மெலிசான துணியில் பார்த்தால் மூணாத் தெரியும்னு நாங்க சின்னப்பிள்ளையா இருக்கும் போது அம்மாவோட சேலைத்தலைப்ப வச்சு பார்ப்போம்… எனக்கு மூணு பிறை தெரியவே தெரியாது… உனக்கு மூணு தெரியுதா” என்று கேட்ட ரிஷி குழந்தையா?… இல்லை கண்மணியை சிறு குழந்தைப் போல பாவித்து கேட்டானா??… அங்கு விளங்கா இலக்கணம் படித்தது நம்மைப் போல அந்த மூன்றாம் பிறையும்!!!…
இப்போது கண்மணியோ… மற்றதை எல்லாம் மறந்து கணவன் சொன்னதை மட்டுமே மனதில் கொண்டவளாக புடவைத் தலைப்பை வைத்து நிலவை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க… மூன்றாம் பிறைக்கோ விளங்கா இலக்கணப் பாடம் ரிஷியிடம் இருந்து கண்மணியிடம் மாறி இருந்தது….
ஆனால் நிமிடத்தில் கண்மணி நிலைமை புரிந்தவளாக… புடவையை கண்களை விட்டு இறக்கி… மீண்டும் பழையபடி சரி செய்து அமர….
ரிஷியோ கண்மணியையே கண்மணியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்… அந்த மூன்றாம் பிறை போல் கண்மணியும் சில கால சந்தோசமாகி விடுவாளோ…. என்ற நினைப்பில்…
நினைவு தந்த வலி… கண்மணியைப் பார்க்க முடியாமல் மீண்டும் நிலவையேப் பார்க்க வைக்க … கண்மணியோ… அவனிடம்…
“மூன்றாம் பிறை… எப்போதுமே ஸ்பெஷல் தான் ரிஷி… எல்லா மதத்திலும் இந்த பிறைக்கு முக்கியத்துவம் இருக்கும்… இதைப் பார்க்கிறது அவ்வளவு ஸ்பெஷல்னு சொல்வாங்க…” என்று ஆரம்பித்தவளிடம்…
“ரிலிஜியஸ் ஓரியண்டட் எனக்குத் தெரியல… ஆனால் அமாவாசைக்கு அப்புறம் இருள் சூழ்ந்த வானத்தில… மூணாவது நாள் தெரிகிற ஒளிக் கீற்று… கொஞ்ச நேரமே இருக்கும்… அவ்வளவு ஈஸியா கண்ணுக்குத் தெரியாது… ஆனால் பார்க்கிறதுக்கு வாய்ப்பு கிடைக்கிறவங்களுக்கு… அந்தக் குறைநிலவுல இருக்கிற குளிர்ச்சி… மாசு மருவற்ற ஒளி… அது கொடுக்கிற சந்தோசம்… இந்த நிலா பூரணத்துவம் ஆகி பௌர்ணமியாகும் போது கூட கொடுக்காது…” ரிஷி நிலவைப் பார்த்து பேச ஆரம்பித்தவன் கண்மணியிடம் தன் பார்வையை முடித்திருக்க… கண்மணி அவனையேப் பார்த்திருந்தவள்
”ஆனால் அதுக்காக… நமக்கு சந்தோசம் தருதுன்றதுக்காக குறை நிலவாகவே இருக்க முடியுமா… ” அவனிடம் எதிர்கேள்வி கேட்க…
“கண்டிப்பா… பூரணத்துவம் தான் முழுமையான ஆத்மார்த்தமான முடிவு…” சிரித்தான் ரிஷி… அவன் மட்டுமே உணர்ந்து சிரித்த சிரிப்பில் வலி மட்டுமே… அந்த சிரிப்பு அவன் வேதனையை மட்டுமே அவளிடம் காட்ட… அப்போதும் அவன் வேதனை அவன் தந்தையை நினைத்து என்றுதான் நினைத்தாள்… அணு அளவிற்கு கூட அது தனக்கானது என்று நினைத்துப் பார்த்திருக்கவில்லை கண்மணி அன்றூ…
மூன்றாம் பிறை இப்போது மறைந்திருக்க… மக்களின் ஆர்ப்பரிப்பும் குறைந்திருக்க… ரிஷி கண்மணியிடம் கேட்டான்… கேள்வி அவளிடம் என்றாலும் பார்வையோ அவளிடம் இல்லை
“என் அப்பாவைப் பற்றி தெரிஞ்சும் ஏன் என்கிட்ட அதைக் கேட்க நினைக்கல” வார்த்தைகள் தெளிவாக… அழுத்தமாக… ஸ்பஷ்டமாக அவனிடமிருந்து கண்மணியிடம் வந்து சேர்ந்திருக்க
“ஏன் கேட்கனும் ரிஷி…” எதிர்கேள்வி கேட்டவளின் பார்வை முழுவதும் அவனிடமே…
இப்போது ரிஷி கண்கள் சுருக்கி கண்மணியை யோசனையுடன் பார்க்க… கண்மணியோ தொடர்ந்தாள்…
“தனசேகர்… இந்த பிம்பம் நீங்க எனக்கு காட்டினது… அதுனால நீங்க மாமாவை எப்படி பார்க்கறீங்களோ அப்படித்தான் நானும் பார்த்தேன்… அர்ஜூன் சொன்னப்போ அவர் காட்டின பிம்பம்… எனக்கு அது பெருசா தெரியல ரிஷி… நீங்க உங்க அப்பாவை இப்போதும் மதிக்கிறீங்க… அது மட்டும் தான் எனக்கு தெரிந்தது அர்ஜூன் சொன்னபோது… அர்ஜூன் கிட்டயும் அதைத்தான் சொல்லிட்டு வந்தேன்… அப்பாவைப் பற்றி எல்லாம் தெரிந்த ரிஷியே அவர் அப்பாவை மதிக்கிறாரு… இதுல நான் என்ன நினைக்கிறதுக்கு என்ன இருக்குனு” என்று முடித்தவள்…
”அன்னைக்கு அவ்வளவு தைரியமா அர்ஜூன் முகத்துக்கு எதிரா சொன்ன எனக்கு இப்போ உங்கள பார்க்க தைரியம் வரல ரிஷி… இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னீங்களே… இந்த காதல், கல்யாணம், குடும்பம்… இதெல்லாம் சுத்த வேசம்னு… அந்த வார்த்தைகள் எனக்குள்ள ஓடிட்டே இருக்கு ரிஷி… துரோகிங்களுக்காக மாறின நீங்க… குடும்பத்துக்காக மாற முடியாம அவங்ககிட்ட நடிக்க ஆரம்பிச்சுட்டீங்களோன்னு… உங்க அம்மா கஷ்டப்படக்கூடாதுன்னும்… உங்க தங்கைக்ககிட்ட உங்க அப்பாவோட நல்லவர் முகமூடி கிழியக் கூடாதுன்னு… அவரோட இமேஜ் அவங்க கிட்ட மாறக் கூடாதுன்னு உங்க அப்பா மேல பாசம் வைச்சுருக்கிற மாதிரி நடிக்கிறீங்களோன்னு” கண்மணி வார்த்தைகளை முடிக்க முடியவில்லை… ஆனால் அதற்கு மேல் பேசவும் முடியவில்லை… அமைதியாகி விட…
ரிஷி அவளருகில் இன்னும் நெருங்கி அமர்ந்தவன்…
“நீ எப்படி எனக்காக வந்து சேர்ந்தாயோ... அதே மாதிரி இந்த பாட்டைக் கேட்கும் போதெல்லாம்... நான் நினைச்சுப்பேன்... இது எனக்காக.... நமக்காகன்னு...” என்றவன்
/*நீங்காத பாரம் என் நெஞ்சோடுதான்
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா
நான் வாடும் நேரம் உன் மார்போடுதான்
நீ என்னைத் தாலாட்டும் தாய் அல்லவா
ஏதோ ஏதோ ஆனந்த ராகம்
உன்னால் தானே உண்டானது
கால்போன பாதைகள் நான் போனபோது
கைசேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி*/
ரிஷி பாடினானோ வாசித்தானோ... பாடி முடித்தவன்… கண்களில் நீர் மட்டுமே… அதைத் துடைக்கக் கூட மாட்டாமல் அவள் கரம் பற்றியவனை நிமிர்த்த…
“என்னை அழவிடு கண்மணி… கத்தி அழனும் போல இருக்குடி… இது வீடா மட்டும் இருந்தது… கண்டிப்பா நான் உன்னை விட்டு இவ்வளவு தூரம் கூட தள்ளி இருந்திருக்க மாட்டேன்” சொன்னவன் இப்போது அவள் தோள் மீது கவிழ்ந்திருந்தான்…
அவளது கழுத்து வளைவில் அவன் கண்ணீர்… தனக்கான பாதையை அமைத்திருக்க… அவன் நிலை தாங்காமல்…
“ரிஷி… விடுங்க ரிஷி… இங்க யாருக்கும் நீங்க மாமாவைப் பற்றி விளக்கம் கொடுக்க வேண்டாம்… அது தேவையுமில்லை… மத்தவங்ககிட்ட உங்க அப்பாவைப் பற்றி விளக்கம் கொடுத்து அவர் மரியாதையைக் காப்பாற்ற எந்த அவசியமும் இல்லை… அவரைப் பற்றி யாரு என்ன சொன்னால் என்ன… நீங்க அவரை மதிக்கறீங்க… உங்க குடும்பம் அவரை மதிக்குது… விட்ருங்க” என்றவளிடம்…
“இந்த உலகத்தில நான் அதிகப்பட்சமா ஒருத்தரை வெறுத்திருந்தேன்னா… திட்டி இருந்தேன்னா அது என் அப்பாதான் கண்மணி… அது உனக்குத் தெரியுமா… என் உணர்வுகளை மொத்தமா அழிச்சுக்கிட்டது யாரால தெரியுமா… அவராலதான்… இதெல்லாம் உனக்குத் தெரியுமா… யாருக்குமே தெரியாது… தெரியாமல் தான் வைத்திருந்தேன்… சத்யாக்கு மட்டும் தான் அவருக்கு மட்டும் தான் என்னோட அத்தனை நிலையும் தெரியும்… அன்னைலருந்து இன்னைக்கு வரை என்கூட இருக்கிறது அவர் மட்டும் தான்… என்னோட சோகங்களை அவரால பகிர்ந்து கொள்ள முடியலைனாலும்… எனக்காக என் அப்பாக்காக உண்மையாக இருக்கிறவர்…” கண்மணி பார்த்த பார்வையில்…“
”உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு நினைக்கலை… தேவையில்லைனு நினைத்தேன்” கடல்மணலை கைகளால் அளந்தவன்… பின் அள்ளிய மண்ணை மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக கீழே விட்டவன்… இதையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்க… அதுவே அவனது மன உளைச்சல் மன அழுத்தத்தின் அளவைக் கண்மணிக்குக் காட்ட… அவன் கைகளைப் பிடித்து நிறுத்தியவள்…
“எனக்குத் தேவையில்லை… சம்பந்தமில்லை… இதெல்லாம் விட்டுட்டு… எப்போதாவது என்கிட்ட சொல்லனும்னு தோணுச்சுனா சொல்லுங்க ரிஷி… இப்போ விடுங்க… உங்களை ஸ்ட்ரெஸ் பண்ணிக்கறீங்களோன்னு தோணுதும்மா…” என்றவளின் குரல் மென்மையாகி இருந்தது இப்போது….
கண்மணியே அழுத்தமானவள் தான்… யாருக்காகவும் இறங்கி வராதவள் தான்… ஆனால் ரிஷி என்று வரும் போது… அவள் இலகுவாக மாற வேண்டிய கட்டாயத்தில் காலம் அவளைக் கொண்டு வந்து நிறுத்தி இருந்தது…
ரிஷியின் உதடுகள் வார்த்தைகளை விடக் கூடாது என்று இறுகித்தான் இருந்தன… நினைவுகளோ அவனுக்குள் புதைந்திருந்தன…
ஆனால் அவனின் இறுக்கம் கண்மணியின் இலகுவான குரலில் கட்டவிழ்ந்தது…. நினைவுகள் மெல்ல மெல்ல அவனிடமிருந்து வார்த்தைகளாக அவனிடமிருந்து வெளிவரத் தொடங்கியிருந்தன…
”யார் சொன்னது உனக்கு சம்பந்தமில்லைனு… எல்லோரும்… ஏன் நீ கூட நினைப்பதானே.. உன்னை மேரேஜ் பண்ணினதுனாலதான் உனக்கு எனக்கும் சம்பந்தம்னு… ஆனால் கண்மணி உனக்குத் தெரியுமா… என் அப்பா உன் மூலமாகத்தான் அவர் வாழ்க்கையோட ரகசியங்களை என்கிட்ட காட்டினார் தெரியுமா… ”
அவளுக்கே புதிதான விசயங்களை அவன் சொல்லக் கேட்க… விழி விரித்து ஆச்சரியமாக நோக்கினாள் கண்மணி…
Hi sis..
Urarvugalal mattume nesikira kadhal..Rishi-Kanmani mattume nirainju irukira madhri oru feeling..
Beautiful narration..