அத்தியாயம் 37-4
தன்னருகில் வந்து நின்றவளைப் பார்த்தபடியே… ஹெல்மெட்டைக் கழட்டியவன்…
“அழுதழுது காரியத்தை சாதிக்கிறதை முதல்ல நிறுத்து… பிரேம் எங்களத்தான் திட்டப் போறாரு” அவளை உரிமையாக மாமன் மகனாக அதட்ட… இவன் உரிமையான அதட்டலில் அவள் முகம் கொஞ்சம் இலேசாக வெட்கத்துடன் கூடிய மென்னகையை பூச…
அதைப் பார்த்து புன்னகைத்தவன்…
“வீட்டுக்கு போய்ட்டு அம்மா ரித்விகாவை பேசச் சொல்றேன்… டேமத் திறக்காத… இப்படி ஒரு ஹஸ்பெண்ட் கெடச்சிருக்கார்னா நீ போன ஜென்மத்தில பண்ணின புண்ணியம்… புரிஞ்சதா” என்றவனிடத்தில்…
‘ஆம்’ என்பது போல மகிளா.. சந்தோசமாக தலை ஆட்ட… பிரேமும் புன்னகையுடன் இருவரையும் பார்த்தான்..
“நீ அழுதா எப்போதுமே எனக்கு தாங்காது… புரியுதா…“ என்று சொன்னவன்… மகிளாவுக்குச் சொன்னானா… இல்லை பிரேமுக்கு உரைத்தானா… அது கடவுளுக்கே வெளிச்சம்… ஆக மொத்தம் மகிளா சந்தோசமாக இருக்கின்றாள்… அந்த நிம்மதியில் ரிஷி அங்கிருந்து கிளம்ப…
“ரிஷி மாமா … ஒரு நிமிசம்” என்று மகிளா மீண்டும் நிறுத்தினாள்…
“இந்த பைக் உனக்கு ரொம்ப பிடிக்கும் தானே… மாமா கிட்ட கேட்டு அவர் வாங்கிக் தரலைனு புலம்பினியே அந்த பைக் தானே இது“ என பைக்கை ஆராய்ந்த படியே சொல்ல ஆரம்பிக்க தூக்கி வாறிப் போட்டிருந்தது ரிஷிக்கு…
பிறகு இருக்காதா என்ன…
“பைக் மட்டுமா பிடிக்கும் என்று சொல்லி இருக்கிறான்… அவளை அழைத்துக் கொண்டு லாங் ட்ரிப்.. இன்னும் என்னென்னவோ…” அவஸ்தையோடு தலையைக் கோதிக் கொண்டவன் அவள் அடுத்து பேசப் போகிறாளோ என்ற திகிலுடனும்… அப்படி அவள் இடக்கு மடக்காக ஏதாவது பேசிவிட்டால்… அதை எப்படி நிறுத்துவது என்ற யோசிப்புடன் ரிஷி தர்ம சங்கடத்துடன் நின்றிருக்க… ரிஷியைப் பார்த்தே... அவன் நின்றிருந்த நிலையைப் பார்த்தே பிரேம் என்ன நினைத்தானோ… ஆபத்பாந்தவனாக இடையில் வந்தவனாக…
“இந்த பைக் ரிஷிக்கு மட்டும் இல்லை மகி… எல்லா பசங்களுக்குமே பிடிக்கும்… “ என்று பிரேம் சொல்ல…
“உங்களுக்கும் பிடிக்குமா… ” பெரிதாக கண்ணை விரித்து மகிளா கணவனை பார்க்க… மகிளாவின் கவனம் தானாகவே கணவனிடம் மாறி இருந்தது இப்போது
“பின்ன” என்று பிரேம் ஆர்வத்துடன் தலை ஆட்ட… மகிளாவுக்கு அவன் கணவன் மட்டுமே அங்கு இருப்பது போல
“லாங்க் ட்ரிப் போக பிடிக்குமா… “ உற்சாகமாகக் கேட்க
பிரேம் காதலுடன் தலையை ஆட்ட
ரிதன்யாவும் அவள் அண்ணனும் பார்வையாளர்கள் வட்டத்திற்கு வந்திருந்தனர்…
தன் கணவனைப் பார்த்தபடியே… “உங்க லவ்வர் டைட்டா ஹக் பண்ணிட்டு போகனும்னு ஆசைப் பட்டீங்களா” இப்போது மகிளா குறும்பாகக் கேட்க
மனைவியின் குறும்பான மகுடிப் பார்வையில் மயங்கிய பிரேம் அவனையுமறியாமல் அதற்கும் தலையாட்ட…
”என்னது இதுக்கும் தலை ஆட்டறீங்க… அப்போ உங்களுக்கு லவ்வர் இருந்தாங்களா… “
“அய்யோ இல்ல மகி “ இப்போது தன்னிலைக்கு வந்து பிரேம் அலற…
ரிதன்யா பக்கென்று சிரித்து விட…
ரிஷியோ சிறு புன்னகையுடன்… அனைத்தையும் காதால் கேட்டபடியே… மொபைலில் பார்வை வைத்தபடி நின்று கொண்டிருந்தான்…
“ஒகே நாம… நாம நம்ம பேபியோட… போகலாம் ஓகேவா” என்று கணவன் மனைவி இருவருமாக… ஒரு வழியாக சமாதானத்துக்கு வர…
ரிதன்யா சிரித்தபடியே…
“பிரேம் அண்ணா… இந்த மகிளாவை சமாதானப்படுத்துறதுக்கே உங்களுக்கு தனி டைம் தேவைப்படுமே… “
“கண்டிப்பாம்மா… “ என்றவன்
ஓரக்கண்ணால் ரிஷியைப் பார்த்தபடியே…
“முதல்ல கஷ்டமாத்தான் இருந்துச்சு… மகிளாவைப் புரிஞ்சுகிட்ட பின்னால்… அது ஒரு பெரிய கஷ்டமா இல்லை.. டெய்லி டூயூட்டி ஆகிருச்சு” எனும்போதே… இப்போது பிரேமுக்கு மகிளாவின் மென்கரங்களால் அடி விழ…
ரிஷியோ கைக்கடிகாரத்தைத் திருப்பி மணியைப் பார்த்துவிட்டு… பிரேமைப் பார்க்க… ரிஷி கிளம்புதற்கு ஆயத்தமாகி விட்டான் என்பதை புரிந்தவனாக
“ஒரு நாள் வீட்டுக்கு வாங்க ரிஷி… அம்மா… ரிதன்யா ரித்விகாவை கூட்டிட்டு” என்று பிரேம் சொல்ல..
“கண்டிப்பா… ஆனால் கொஞ்ச நாள் ஆகட்டும்… அம்மாக்கு உடம்பு சரியான உடனே கூட்டிட்டு வருகிறேன்” என்று ரிஷி முடிக்கவில்லை…
”பிரேம்… நாம போகலாமா பிரேம்… ப்ளீஸ் பிரேம்… அத்தைய பார்க்கனும்…” என்று கணவனை நச்சரிக்க ஆரம்பித்திருந்தாள் மகிளா…
பிரேம் சரி என்று சொல்லும் வரை மகிளா விட மாட்டாள்… என்று ரிஷிக்கு தெரியாதா என்ன… ரிஷி அவர்களுக்கிடையில் ஏதும் குறுக்கிடவில்லை…
ஆனால் ரிதன்யா
“பிரேம் அண்ணா அது இன்ஃபினிட் லிஸ்ட்… லிஸ்ட் பெருசாகிட்டே இருக்கும்…” என்று முடிக்க….
”என்னோட லைஃபே அவதான்… அவ லிஸ்ட் லாம் எனக்கு பெரிய விசயமே இல்லை” என்று பிரேமும் மகிளாவை விட்டுக் கொடுக்காமல் பேச… ரிதன்யா சந்தோசமாக தன் தோழியை அணைத்துக் கொண்டாள்… தன் தோழியைப் புரிந்து கொண்ட கணவன் கிடைத்த சந்தோசத்தில்
ரிதன்யா கண்மணியைத்தான் ஏற்றுக் கொள்ளவில்லை… ஆனால் மகிளாவின் கணவனாகிய பிரேமை தன் கூடப் பிறக்காத அண்ணனாகத்தான் பாவித்தாள் என்பதுதான் முரணாகிப் போன உண்மை….
அடுத்த சில நிமிடங்களில் மகிளாவும் பிரேமும் கிளம்பி விட… ரிதன்யாவும் ரிஷியும் மட்டுமே…
மகிளாவும் பிரேமும் இருக்கும் வரை புன்னகையை பூசி இருந்த அவனது முகம்… இப்போது தங்கையைப் பார்த்த பார்வையில் அந்தப் புன்னகையைத் தொலைத்திருக்க…
“சாரிண்ணா… மகிளா கூட நான் பேசிட்டு இருக்கிறது தெரிந்தால்… நீ கோபப்படுவேன்னு” இடை மறித்தான் ரிஷி…
”எதுக்கும் விளக்கம் கேட்கல நான்… எனக்குத் தெரியாமல் இனிமே எதையும் பண்ணாத… லூசுத்தனமா பண்றதுக்கு… நீயும் சின்னப் பொண்ணு இல்லை… எதையும் யோசித்து பண்ற ஆளுதான்” என்று சொல்ல… அதைக் கேட்ட அடுத்த நொடியே தன் அண்ணன் தன்னைப் புரிந்து கொண்டான் என்று ரிதன்யாவுக்கு முகம் மலர்ந்தது…
அண்ணனுக்கு கோபமில்லை என்று உணர்ந்ததில்…
“பிரேம் அண்ணா குடும்பம் கொடுத்து வச்சவங்க… மகிளா மாதிரி பொண்ணு கிடைச்சுருக்கு” உண்மையிலேயே அவள் முகம் வருத்தத்தைப் பூச… தங்கையை ஒரு மாதிரி பார்த்தபடியே…
“இப்போதான் உன்னை சின்னப் பொண்ணு இல்லை… மெச்சூர்டான பொண்ணு… எதையும் யோசித்துப் பண்ணுவேன்னு சொன்னேன்… அதை வாபஸ் வாங்கனும் போல” என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல ரிதன்யாவுக்கு குட்டு வைத்தவன்…
அதற்கு மேல் பேச ஏதுமில்லை என்பது போல… அவளை பைக்கில் அமரச் சொல்ல… ரிதன்யாவுக்கும் தன் அண்ணனோடு வாதிட மனமில்லை… காரணம்… மகிளா மீண்டும் தங்கள் குடும்பத்தோடு இணைந்து விட்டாள் என்ற மகிழ்ச்சியில் இருந்தாள்…
ஆக மகிளாவைப் பார்த்து அவளோடு பேசிய மகிழ்ச்சியோடு… அண்ணனும் தங்கையுமாக ’கண்மணி’ இல்லத்துக்குப் போக…
அங்கோ…
ரித்விகா மாலையில் எங்கு அமர்ந்திருந்தாளோ அதே இடத்தில்… அதே பிடிவாதத்தோடு அமர்ந்திருக்க… பார்த்த ரிஷி ரிதன்யா இருவருக்குமே அதிர்ச்சி தான்…
---
ரிதன்யா… ரித்விகாவின் அருகில் அமர்ந்து அவளை சமாதானப்படுத்திக் கொண்டிருக்க… தங்கையைப் பார்த்தபடியே ரிஷியோ மனைவியிடம் வந்தான்
”பெருசா ரிதிமா.. ரிதி செல்லம்னு.. கொஞ்சுவ… இவ பிடிவாதத்துக்கு எல்லாம் நீதான்… நீ கொடுக்கிற செல்லம் தான் காரணம்… இவ மொதல்லாம் இப்படி இல்லை… இப்போத்தான் இப்படி இருக்கா” ரித்விகாவை விட்டு விட்டு கண்மணியை ரிஷி திட்டிக் கொண்டிருக்க… கண்மணி ரிஷியை முறைத்துக் கொண்டிருந்தாள்…
“என்ன பார்க்கிற… ரவுடி மாதிரி முறைச்சாலும்… அதுதான் உண்மை… உன்னால ரிதிய கண்ட்ரோலுக்கு கொண்டு வந்திருக்க முடியும்… நீ சொன்னா கேட்கிற ஆளு அவ… இப்போ இப்படி இருக்கான்னா… எனக்கு டவுட்டா இருக்கே” இப்போது ரிஷி குனிந்து கண்மணியின் காதில் கிசுகிசுக்க…
கணவன் இதழ்களின் மெல்லிய ஸ்பரிசத்திலும்.. அவன் உதட்டின் மேல் கம்பீரமாக ஆட்சி செய்து கொண்டிருந்த மீசையின் பட்டும் படாத தீண்டலிலும்… அவன் இலேசான தாடியோடு கூடிய கன்னக் கதுப்பின் அருகாமையிலும்… எந்த ஒரு பெண்ணும் மனைவியாக வெட்கப்பட வேண்டும்… ஆனால் நம் நாயகியோ… நாயகனின் முகத்தை ஆராய்ந்து கொண்டிருந்தாள்
காரணம்… மாலையில் பார்த்த கோபம் சிறு துளி சாயல் கூட இப்போது அவன் முகத்தில் என்பது இல்லை… வார்த்தைகளைச் சொன்ன விதத்தில் தான் கடினபாவம் இருந்தது… அவனது முகமோ மெல்லிய சிரிப்போடு தெளிவாகி இருந்தது போன்ற தோற்ற பிம்பம் இவளுக்குள்…
அந்த ஆராய்தலில் மற்றவை எல்லாம் அவள் மூளைக்கும் செல்ல வில்லை… மூளை கடத்தினால் தானே மற்ற ரசாயான மாற்றங்கள் எல்லாம்… அவளுக்கு தெரிந்தது ... அவள் உணர்ந்தது எல்லாம் ரிஷியின் புன்னகை முகம் மட்டுமே…
“என்ன.. ரிஷிக்கண்ணா முகத்தில சிரிப்பு தாண்டவமாடுது… என்ன விசயம்” என்று நேரடியாக கண்மணி கேட்க…
கணவனோ மனைவியை விட இன்னும் பல படி மேலே இருந்தான்….
”இப்போ பாரு… ரித்விகா டூராவது ஒண்ணாவதுன்னு… எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு ஓடுவா பாரு..” அங்கிருந்தபடியே இருந்த அமர்ந்திருந்த ரிதன்யாவின் கைகளைக் காட்ட…ரிதன்யாவின் கைகளில் ரித்விகாவுக்கு பிடித்த பீட்சா பார்சல் இருந்தது…
“எப்புடி” சைகையால் கேட்ட கணவனைப் பார்த்து… கண்மணி இதழைச் சுழித்தாள் கன்னக் குழிகளோடு…
ரிஷியோ புருவத்தை உயர்த்த…
“அங்க பாருங்க சார்..” என்று மேஜையைக் காட்ட… அங்கோ கண்மணி வாங்கி வைத்திருந்த பீட்சா ரிஷியைப் பார்த்து பல்லைக் காட்ட..
அசடு வழிந்தான் ரிஷி… இருந்தும்… கண்மணியிடத்தில்… தன் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல்…
“இது ஒர்க் அவுட் ஆகலேன்னாலும்… என் தங்கச்சி… இன்னும் கொஞ்ச நேரத்தில சரி ஆகிருவா… ஏன்லாம் கேட்க கூடாது… நான் மாடிக்கு போறேன்…“ என்று அங்கிருந்து கிளம்பியவன் இரண்டடி எடுத்து வைத்து பின் கண்மணியிடம் திரும்பி…
“சாப்ட்டியா” என்று கேட்க… கண்மணி இல்லையென்று தலை ஆட்ட…
“நானும் சாப்பிடலை…” என்று மட்டும் சொன்னவன்… அதற்கு மேல் எதுவும் பேசாமல் அவன் அறைக்குப் போய் விட்டான்
“என்னாச்சு…இவருக்கு… சாப்டலைனு மாடிக்கு போறாரு… இங்கதான இருக்கனும்” என்ற ரீதியில் கண்மணி யோசித்துக் கொண்டிருக்கும் போதே…
“மகி…கி … கி” ரித்விகாவின் குரல் உச்சஸ்தாயில் ஒலிக்க… ரிஷியிடம் இருந்த கண்மணியின் கவனம் சிதறி… ரித்விகாவிடம் திரும்ப… அங்கு மகிளா வீடியோ காலில் இருந்தாள்…
ரிதன்யாவின் கையில் இருந்த போனை வாங்கிய ரித்விகாவின் அத்தனை மணி நேர பிடிவாதமும் கோபமும் இருந்த இடம் தெரியாமல் மாறிப் போயிருக்க… ரித்விகா முகத்தில் அத்தனை சந்தோசம்… கண்மணிக்கே ஆச்சரியம்…
”அண்ணி எங்க மகிளாண்ணி….” என்று ரித்விகா போனைக் காட்டி கண்மணியிடம் சொன்ன போதே… ரித்விகாவின் அந்தக் குரலில் அவள் மகிளாவை எந்த அளவு தேடியிருக்கின்றாள் என்பது நன்றாகவே புரிய… கண்மணியும் சந்தோசமாகவே புன்னகைத்தாள் கணவனின் தங்கையைப் பார்த்து
“மகி… அம்மா கிட்ட பேசு… ரொம்ப சந்தோசப் படுவாங்க…” என்று போனை எடுத்துக்கொண்டு இலட்சுமியின் அறைக்குப் போய்விட்டாள் ரித்விகா…
கண்மணி… ரித்விகாவை அழைக்க முடியாமல் போக… அருகில் இருந்த ரிதன்யாவிடம்
“அத்தைக்கு இப்போதான் மாத்திரை கொடுத்து தூங்க வைத்தேன்… ரிதி வேற போறா”
மாலையில் நடந்த சம்பவங்களை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு கண்மணி இயல்பாக ரிதன்யாவிடம் பேச முயற்சிக்க
“பரவாயில்ல… எங்க மகிளாவை விட அம்மாக்கு வேற ஏதும் பெரிசா தெரியாது… எழுந்துக்குவாங்க… அத நாங்க பார்த்துக்கறோம்… உங்க அக்கறைக்கு ரொம்ப நன்றி… நீங்க கிளம்புங்க” என்று முகத்திலடித்தாற் போல ரிதன்யா சொல்லி விட்டு இலட்சுமியின் அறையை நோக்கிப் போக…
கண்மணி ஏதும் சொல்லாமல்… சமையல் அறைக்குள் நுழைந்து விட்டாள்
இருவருமாக சேர்ந்து… இலட்சுமியை எழுப்பி விட்டார்கள் போல… அவர் குரல் கேட்க வில்லை… ஆனால் மகிளாவின் குரல் கண்மணிக்கு கேட்டது… நொடிக்கொரு முறை அத்தை என்ற வார்த்தையை விடாமல் மகிளா சத்தமாக பேசிக் கொண்டிருந்தாள்…
’மகிளா’ என்பவள் இந்தக் குடும்பத்தின் மேல் எந்த அளவுக்கு பாசம் வைத்திருக்கின்றாள்… இவர்களை அவள் எவ்வாறு சார்ந்திருக்கின்றாள்… அவளின் உணர்ச்சி வயப்பட்ட குரலே கண்மணிக்கு உணர்த்தியது…
அதே போல இவர்கள் அனைவரும் அவளை எந்த இடத்தில் வைத்திருந்தனர் என்பது நன்றாகவேப் புரிய… கண்மணிக்கு பொறாமை என்ற எண்ணம் எல்லாம் சிறிதளவு கூட வரவே இல்லை… மாறாக சமையலறையில் இருந்தபடியே கண்மணி ரசித்தாள்…
இவர்கள் மட்டுமில்லை… கண்மணிக்கு இது போல யாரைப் பார்த்தாலுமே…. தன்னை மறந்து ரசிப்பாளே தவிர… என்றுமே பொறாமைப்பட மாட்டாள்… இன்றும் அப்படியே… சமையலறையை எல்லாம் இவள் ஒழுங்கு படுத்தி விட்டு… வெளியே வந்த போது கூட… மகிளாவின் குரல் கேட்டுக் கொண்டிருக்க… அந்த வீட்டில் இருந்து வெளியே வந்தவள்… நேராக நட்ராஜிடம் வந்தாள்…
ஊட்டிக்கு செல்வதற்காக எடுத்து வைத்திருந்த பொருட்களை எல்லாம் அடுக்கி வைத்து… நாளைக் காலை கிளம்புவதற்கு வசதியாக எடுத்து வைத்தவள்..
“நான் இங்க படுத்துக்கறேன்பா… அத்தைகிட்ட சொல்லிட்டேன்” என்று முடிக்க… நட்ராஜ்…
“சரிடாம்மா” என்று சொல்ல…
“அவர் இன்னும் சாப்பிடல… இதை கொடுத்துட்டு வந்துறேன்” என்று டிபன் பாக்சை கையில் எடுத்தவள்…
“நான் சாவி எடுத்துட்டு போறேன்… நீங்க லாக் பண்ணிட்டு தூங்குங்க… ” என்று சொல்ல…
”இல்லடாம்மா… காத்தாட இந்த மரத்தடியில் படுக்கப் போகிறேன்… ” சொன்னவர் துண்டை உதறி விரித்தபடி படுத்து விட…
“ப்ச்ச்… ” என்றவள்…
“ப்பா… காத்து அதிகமா வந்தா உங்களுக்கு ஒத்துக்காது… “ என்ற போதே…
“சரிடாம்மா… கொஞ்ச நேரம் படுத்துட்டு போயிடறேன்” என்றவரை அதற்கு மேல் தொந்தரவு செய்யவில்லை… கணவன் அறையை நோக்கிச் சென்று விட்டாள் கண்மணி…
---
back to back அப்டேட் நாளையும் தொடரும்... நாளை அடுத்த கண்மணி... என் கண்ணின் மணி-37 ஃபனல் எபி...கண்மணி-ரிஷி மட்டுமே வருகிற ஸ்பெஷல் எபி*/
கண்மணி... என் கண்ணின் மணி-37-5
“ப்ச்ச்.. எனக்கும் தெரியும்… கீப் டிஸ்டன்ஸ் பற்றி தெரியுமோ தெரியாதோ இல்லையோ… இந்த ’ரிஷி’ ஸ்வாமியைப் பற்றி தெரியும்…” என்றபடி… விலகியவள்...
---
தன்னையே மேலிருந்து கீழ் வரை சந்தேகமாகப் பார்த்தவளை… தலையில் செல்லமாகத் தட்ட… அவன் கைகளைப் பிடித்தவள்..
---
அவளோ அவன் சொன்னதைச் செய்யாமல் இருக்க… இவனே அவள் வளையல்களை எல்லாம் கழட்டி வைத்துவிட்டு… மருந்து போட ஆரம்பித்தான்
---
“என்ன பண்றது… நம்ம வரலாறு ஒரு சில பேர்கிட்ட மாறிருதே…” சொன்னபடியே எழ…
அவன் சொன்ன விதம் கண்மணியை விளையாட்டுத்தனத்தை விடுத்து யோசிக்க வைக்க…
----
“அது ஒரு கால்குலேஷன் … பார்க்கலாம்… ஒரு எக்ஸ்பெக்ட் பண்ற ஒரு விசயம் நடந்தா… சார் அதுக்கு ஓகே சொன்னா… இந்த லாஸ் கண்டிப்பா நடக்கும்… கண்டிப்பா சொல்றேன் ” என்று ரிஷி சொல்ல… கண்மணி அதற்கு மேல் அவனை நச்சரிக்கவில்லை…
----- */
கண்மணி போன்று குணமுடையவர்கள் மிகவும் அரிதானவர்கள் சகோ,உங்கள் கதைகளில் வரும் நாயகிகளை மறக்கவே இயலாது ,ரிதன்யாவின் தற்போதைய நடவடிக்கைகளினால், அவளே பின்னாளில் வேதனையடைய போகிறாள் ,அருமையான பதிவு,அடுத்த பதிவிற்காக ஆவலுடல்ன் காத்திருக்கிறேன்