/* ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
மக்களே!!!! கதையோட தலைப்பு ‘கண்மணி என் கண்ணின் மணி’... அதை மறந்துடாதீங்க... டைட்டிலே ரிஷிக்கானது... கதையும் அதை நோக்கித்தான் போகும்...
இன்னும் கதை முடியல... இப்போதான் ரிஷி கண்மணி அத்தியாயங்களே ஸ்டார்ட் ஆகுது... 37th அண்ட் 38th அப்டேட் கதை அடுத்த கட்டத்துக்கு போறதுக்கான ஒரு ஓவர் ஆல் பேக்கேஜ் அப்டேட்.. அதுனாலதான் டெய்லி போடறேன்...
கண்மணி-ரிஷி நீங்கள்ளாம் சொல்ற மாதிரி மேஜிக் தான்... கண்மணி ரிஷியை ஹேண்டில் பண்ற விதம் அப்படித்தான் இருக்கும்...
அண்ட் கண்டிப்பா கண்மணி கேரக்டர் ஒரு வித்தியாசமான கேரக்டர்... என்னால முடிந்த அளவுக்கு.. உங்களுக்கு பிடிக்கிற மாதிரி கொடுக்க ட்ரை பண்றேன்...
இந்த அப்டேட் சின்ன அப்டேட் தான்... நாளைக்கு அடுத்த அப்டேட்டோட வருகிறேன்
உங்க கமெஸ்ண்ட்ஸ்லாம் பார்த்து ரொம்ப்ப்ப்ப்ப ஹேப்பி... தேங்க்ஸ் எல்லோருக்கும்...
என்றும் அன்புடன்
பிரவீணா(வாருணி விஜய்)
*/
அத்தியாயம் 37-3
அம்பகம் பள்ளி
”பார்த்திபா… நான் கிளம்பட்டுமா… எப்போ இந்த வேலை எல்லாம் முடியும்…” இராஜம் கேட்க…
இருக்கையில் அமர்ந்தபடியே சோம்பல் முறித்தவன்… மடிக்கணினியை மேஜையின் மேல் தள்ளி வைத்தபடி
“லேட் ஆகும்மா… அதுமட்டும் இல்லை இன்னும் ஒன் மன்த் இழுக்கும்னு நினைக்கிறேன்… சரி கிளம்புங்க… அர்ஜூன் சார் கூட ஆன்லைன் மீட்டீங் வேற இருக்கு… “ என்று தன் மடிக்கணினியில் மணியைப் பார்த்தவாறே பேச…
இராஜமும் அதற்கு மேல் தன் மகனை தொந்தரவு செய்ய வில்லை… கிளம்பிவிட… பார்த்திபனுக்கோ மூளைக்குள் பல யோசனைகள் ஓடியது…
அந்தப் பெண்… கடந்த சில வாரங்களாக… இரண்டு மூன்று முறை எதேச்சையாகப் பார்த்து… அதன் பின் அவள் வரும் நேரத்தைச் சரியாக கணித்து… அதே நேரத்தில் அவளைப் பார்த்ததில் சந்தோசமாக இருக்க வேண்டும்… ஆனால் முடியவில்லையே !!! அவள் யாரைப் பார்க்க வருகிறாள்??... யோசித்தபோதே
“ரிஷியையா…” தலையை வெடித்தது பார்த்திபனுக்கு…
“யாராக இருக்கும் அவள்??.. ரிஷிக்கு திருமணம் ஆனது அவளுக்குத் தெரியாதா” எங்கோ மனமெங்கும் ஏமாற்றம்...
ஏமாற்றத்தில் உழன்று கொண்டிருந்தவனை… அழைத்தான் அர்ஜூன்… அவனது அலைபேசியில் வழியே
”மீட்டிங்க் பார்த்தி… வெயிட் பண்ணிட்டு இருக்கேன்… “ என்று சொல்ல… அதன்பின் தான்.. வேகமாக தன் நினைவுகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்து மடிக்கணினியை மீண்டும் உயிர்ப்பித்தான் பார்த்திபன்…
---
“அர்ஜூன் சார்… ஏன் உங்க ஷேர் லாம் கண்மணி பேருக்கு மாத்த சொல்லிருக்கீங்க… நாராயணன் சார் உங்க ரெண்டு பேரையும் தான் வாரிசா போட்ருக்காங்க” என்றபடி தன் சந்தேகங்களை தொடுக்க…
“அது இருக்கட்டும்… தாத்தா அவன் பேரை ஏன் சேர்க்கச் சொன்னார்னு தெரியலை… ரிஷி பேரை இப்போதைக்கு இன்க்ளூட் பண்ணாதீங்க… அதுக்காகத்தான் இந்த மீட்டீங்கே… நான் தாத்தாகிட்ட பேசிக்கிறேன்…” அர்ஜூன் தான் இருந்த இடத்தில் இருந்தே கட்டளைகளை விடுத்துக் கொண்டிருந்தான்…
“ஆனால் சார்.. உங்க தாத்தா” என்று பார்த்திபன் சொன்ன போதே
“அவன் ஒரு ஃப்ராடு பார்த்தி… உன்னை ஏன் அவங்க கம்பெனிக்கு போகச் சொன்னேன்… அந்த நட்ராஜ் கம்பெனி முன்னேறட்டும்னா… கண்மணி அவன் கிட்ட மொத்தமா ஏமாந்துறக் கூடாதுனுதான்… போகப் போக அந்த பொறு..” என்று ஆரம்பித்தவன்…
“ப்ச்ச்.. அவனப் பற்றி பேச வேண்டாம்..” என்று ரிஷியைப் பற்றி பேசுவதை நிறுத்தி விட்டான் அர்ஜூன்… ஆனால் பார்த்திபன் ஆரம்பித்தான்
“சார்.. ரிஷி கூட பழகாத வரை ரிஷி மேல எனக்கும் பெருசா அபிப்ராயம் இல்லை… ஆனால்”
அதற்கு மேல் அர்ஜூன் அவனை பேசவிடாமல்..
“ஹ்ம்ம்.. கண்மணி மாதிரி நீயும் பேசாத பார்த்தி… ஆனால் சீக்கிரம் அந்த ஃப்ராடோட முகத்திரை கிழியும்… அப்போ அவளும் புரிஞ்சுக்குவா… கண்மணி பற்றி எனக்குத் தெரியும்… ஒருத்தன் கெட்டவன்னு தெரிந்தால்… அவனை தூக்கிப் போட்டுட்டு வந்துருவா… அது எனக்குத் தெரியும்” அர்ஜூன் பேசிக் கொண்டிருக்க…
பார்த்திபனுக்கு அர்ஜூன் பேசுவதை எல்லாம் கேட்க கேட்க ஒரு மாதிரியாகத்தான் இருந்தது…
நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் இருவரை பிரிந்து விடுவர்.. என்று அர்ஜூன் பேசுவதை கேட்கப் பிடிக்கவில்லை பார்த்திபனுக்கு… அது அவன் கண்களிலும் பிரதிபலிக்க
பார்த்திபனின் பார்வையில் தான் பேசியதை விட்டு விட்டு ’என்ன’ என்பது போல அர்ஜூன் பார்க்க…
“ரிஷி எப்படியோ தெரியலை… கண்மணி ரிஷியை ரொம்ப… ” என்று பார்த்திபன் ஆரம்பித்த போதே அர்ஜூன் கண்களில் நெருப்பு பொறி பறக்க ஆரம்பிக்க… பார்த்திபன் கொஞ்சம் தயங்கியவனாக..
”அவங்களுக்கு ரிஷிய ரொம்ப பிடிச்சுருக்குனு தோணுது சார்… நானே பார்த்தேன்” எப்படியோ தன் மனதில் பட்டதை சொல்லி முடித்திருந்தான் பார்த்திபன்…
அமைதியாக சில நிமிடங்கள் பார்த்திபனைப் வெறித்த அர்ஜூன்… பெருமூச்சு விட்டபடியே..
“அதுதான் அவ… அவளோட அன்பு எல்லோருக்குமே கிடைக்கும்…. அது நிலைக்கனும்ணா அதுக்கு தகுதின்னு ஒண்ணு இருக்கனுமே… அது ரிஷிக்கு கண்டிப்பாக இல்லை… கண்மணிக்கு தகுதி இல்லாத எதுவும்… இல்லை எவனும் அவகிட்ட நெருங்க முடியாது… அது எனக்குத் தெரியும்… அவ… எங்க கிட்டதான் வந்து சேருவா… நீயும் பார்க்கத்தான போகிற… ”
தொண்டையைச் செறுமியவனாக…
“ஒகே… நாம வந்த வேலைய பார்ப்போமா… “ என்று அர்ஜூன் வேலையைக் கவனிக்க ஆரம்பிக்க… பார்த்திபனுக்கு ஏற்கனவே இருந்த குழப்பத்தோடு இதுவும் சேர… குழப்பத்துக்குத் தீர்வுதான் கிடைக்கவில்லை… அம்பகம் பற்றிய விபரங்களை எல்லாம் அர்ஜூன் கேட்க ஆரம்பிக்க… பார்த்திபனும் வேலையில் மூழ்கினான்…
--
”டேய்… என்ன தகுதினா கேட்ட… நீ பார்க்கத்தான போற… “ என்ற மருதுவை வித்தியாசமாகப் பார்த்தான் அவன் சகா…
”பின்ன… அந்தப் பொண்ண விட்டுத் தொலைய மாட்டியா… அதுவே ஒரு லூசு “ எரிச்சலுடன் சொல்ல…
”உன் பேச்சைக் கேட்டுட்டு… நான் தான் தப்பு பண்ணிட்டேன்.. இல்லேண்ணா என் மணி இன்னைக்கு என் பொண்டாட்டியா ஆகிருப்பா…” மருது உணர்ச்சி வசப்பட்டு சொல்லிக் கொண்டிருந்தான் பழைய நினைவுகளில்……
விழுந்து விழுந்து சிரித்தான் அவன் நண்பன் ..
“பொண்டாட்டியா… உன் வயசென்ன அது வயசென்ன… உனக்கு நல்லதுதான் பண்ணேன்… என்ன கொஞ்சம் மிஸ் ஆகிருச்சு”
“மணி நான் என்ன சொன்னாலும் கேட்பா… இந்த மருது கீ கொடுத்த பொம்மையா மணி ஆடுவா… உனக்குத் தெரியாதா… இப்பவும் அப்படித்தான் இருப்பா.. இந்த தடவை சென்னைக்கு நான் போறதே அவளை மிஸ் பண்ணக் கூடாதுன்னுதான்..”
இருவருமாக பேசிக்கொண்டிருக்கும் போதே… கமிஷனர் அவர்களை நோக்கி வர… இருவரும் எழுந்து நின்றனர்…
உங்களுக்கு இன்னும் ரெண்டு மாதம் தண்டனை எக்ஸ்டண்ட் ஆகியிருக்கு…
“சார் இன்னும் என்ன சார்… நாங்க ஏதாவது தப்பா நடந்துகிட்டோமா என்ன… ஏன் சார்…” அதிர்ந்து இருவரும் நோக்க…
அந்த காவல்துறை அதிகாரி… விஷமத்துடன் முறைத்தவர்….
“எனக்கு சென்னைக்கு ட்ரான்ஸ்ஃபெர் ஆகிருச்சு… நீங்களும் என் கூடத்தான் வர்றீங்க… அவ்ளோதான்… என்கிட்டயே கேள்வி வேறயா… வேலையப் பாருங்க” என்ற போதே மருதுவின் கண்கள் பளபளத்தன கண்மணியின் நினைவுகளில்…
---
மணி இரவு ஒன்பது… என்னதான் வேலையில் கவனம் வைத்தாலும்… வேலையில் கவனமே இல்லை ரிஷிக்கு… மாலையில் நடந்த சம்பவங்களே மீண்டும் மீண்டும் வந்து நிற்க..
ரித்விகாவில் ஆரம்பித்து… ரிதன்யாவால் கண்மணியிடம் முடிந்திருக்க…
“ச்சேய்…” என்று அங்கிருந்த மேஜையில் கைகளைக் குத்தப் போக… கண்மணியின் ஞாபகம் வந்து சேர..
“இவ ஒருத்தி… இருக்கிற டென்ஷன எப்படி கொறச்சுக்கிறதுனே தெரியலை….” ஓங்கிய கை அந்தரத்திலேயே வேகம் குறைந்து மேஜையில் வந்து சேர… சரியாக தினகரும் வேலனும் உள்ளே வந்தவர்கள்..
“அண்ணாத்த கிளம்பலையா… ” என்ற போதே… ’இல்லை’ என்று தலையாட்டியவன்…
“இப்போ இல்லை… லேட்டா போகனும்..”
என்று இருக்கையில் தளர்வாகச் சாய்ந்து கண் மூடிவிட்டான்…
தினகரும்… வேலனும் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்க்க…
“போகும் போது டீ மட்டும் சொல்லிட்டு போங்கடா… தலை வலிக்குது” என்று சொன்னவன் அப்போதும் கண்களைத் திறக்கவில்லை… வேலனும்.. தினகரும் அதற்கு மேல் அவனைத் தொந்தரவு செய்யவில்லை… கிளம்பிவிட்டனர்…
---
ரிஷி அவர்களிடம் சொல்லி அனுப்பியது போல… டீயும் வந்து சேர… குடிக்க ஆரம்பித்தவன்…
“இதுக்கு ரிதன்யா போடற காஃபியே பரவாயில்ல… “ நினைத்த போதே தங்கை ஞாபகத்தில் அவனையும் மீறி புன்னகை வந்தது… அதையும் மீறி ரித்விகாவை நினைத்துதான் கவலை அவனுக்கு இப்போது வந்திருக்க.. தங்கையை எப்படி சமாதானப்படுத்துவது… அவளுக்கு பிடித்த விசயங்களை எல்லாம் யோசிக்க ஆரம்பித்தவன்… சமாதானப்படுத்தும் பட்டியலில் முதலில் ரித்விகா அடுத்து ரிதன்யா… என வரிசைப்படுத்தி இருந்தான்...
உண்மையிலேயே அவன் கண்மணியைத்தான் சமாதானப்படுத்தும் பட்டியலில் முதலில் வைத்திருக்க வேண்டும்.... ஆனால் அவனுக்கு நன்றாகத் தெரியும்... கண்மணி… தவறாக நினைத்துக் கொள்ளமாட்டாள்… கோபமாகவும் இருக்க மாட்டாள் என்பது...
இருந்தாலும் ரிதன்யாவின் வார்த்தைகளின் வீரியம் புரியாதவனா… அதே நேரம் கண்மணியைச் சமாதானப்படுத்த என்று இல்லாவிட்டாலும்... ரிதன்யா பேசியதைப் பற்றி கண்மணியிடம் பேச ஆரம்பித்தால் தன் தங்கையை அவள் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற இடத்தில் தான் நிற்கும்… ஆக கண்மணியிடம் இதைப் பற்றி பேசாமலேயே இருப்பதுதான் நல்லது என்று நினைத்த போதே
”நாளை கண்மணி ஊருக்கு கிளம்புகிறாளே…” தங்கைகளையும் மீறி மனைவியின் ஞாபகம் வர… தாமதமாக கிளம்ப நினைத்தவன்… அந்த முடிவை மாற்றியவனாக எழ… அப்போதுதான் ஒரு முக்கியமான விசயமே ஞாபகத்துக்கு வந்தது…
அதாவது ரிதன்யாவை எப்போதும் அவள் அலுவலக பேருந்து நிற்கும் இடத்தில் விட்டு விட்டுத்தான் மீண்டும் கம்பெனிக்கு வருவான்… இன்று கோபத்தில் அதை மறந்ததும்… அதை மறந்தது கூடத் தெரியாமல் இந்த நிமிடம் வரை இருந்ததும்… நினைத்த மாத்திரத்திலேயே ரிஷிக்கு குற்ற உணர்வு வந்திருக்க… வேகமாக தன் அலைபேசியை எடுத்தவன்… ரிதன்யாவுக்கு போன் செய்ய… ரிதன்யா அழைப்பை எடுக்கவே இல்லை…
அவள் எடுக்காமல் விட்டாலும் அடுத்தடுத்து அழைக்க… அப்போதும் அவள் எடுக்காமலேயே போக… கொஞ்சம் உள்ளுக்குள் உதறல் எடுக்கத்தான் செய்தது ரிஷிக்கு…
ஆனால் அடுத்த சில நிமிடங்களிளேயே… ரிதன்யாவே அழைக்க… ரிஷிக்கு போன உயிர் மீண்டும் வந்திருக்க… வேகமாக எடுத்தவன்
அவள் ‘ஹலோ’ சொல்லும் முன்னேயே…
“டேய் சாரிடா… அண்ணா கோபத்துல உன்னை பஸ் ஸ்டாபிங்ல விடனும்னுன்றதையே மறந்துட்டேண்டா… என் மேல கோபமா” வேக வேகமாக பேசினான் ரிஷி… தங்கை மனைவியைப் பேசிய விதமெல்லாம் மறந்து போயிருந்தான் இப்போது...
ரிதன்யாவோ
“அண்ணா… கூல்.. கூல்… அதெல்லாம் ஒரு கோபமும் இல்லை.. ரிதி மூட் அப்செட் ஆனதுல நான் டென்சன் ஆகிட்டேன்… வேற எந்த கோபமும் இல்லை… உன்னைப் பற்றி எனக்கு தெரியாதா” என்று ஆரம்பித்தவள்.. சில நிமிடங்கள் அவனோடு பேசி விட்டு… போனை வைக்க.. ரிஷிக்கு அதற்கு மேல் வேண்டுமா… மனம் நிம்மதி ஆனதுதான்…
ஆனாலும்… மனசாட்சி உறுத்த… ரிதன்யாவை பார்க்க வேண்டும் போல் இருக்க… வண்டியை எடுத்தவன்… ரிதன்யா அலுவலகத்தின் முன் தான் நின்றான்… தங்கைக்கு அழைத்து தான் அவள் அலுவலகத்தின் கீழே இருப்பதாகச் சொல்ல… அழைப்பின் எதிர்முனையில் இருந்த ரிதன்யாவோ அதிர்ந்தாள்…
ஏனென்றால் ரிதன்யா அன்று அலுவலகத்துக்குச் சென்றிருந்தால் தானே… மகிளா வீட்டில் அல்லவோ அவள் இருந்தாள்..
---
மகிளாவிடம் பேசத் தயாராகவே இல்லை ரிஷி… ரிதன்யாவோ ரிஷியிடம் பேசவே பயந்திருக்க.. பிரேம் மட்டுமே ரிஷியோடு அலைபேசியில் பேசினான்… அது கூட ரிதன்யாவின் அலைபேசி வாயிலாக மட்டுமே…
பிரேம் எவ்வளவு சமாதானப்படுத்தியும் ரிஷி சமாதானம் அடையவே இல்லை.. ரிதன்யாவின் அலுவலகத்தின் முன்பாகவே நிற்க… வேறு வழி இல்லாமல் பிரேம் ரிதன்யாவை அழைத்து வந்து விட்டான்… கூடவே மகிளாவும் வேறு வந்திருந்தாள்..
ரிதன்யாவோடு வந்த பிரேம்-மகிளா இருவரையுமே ரிஷி கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை...
ரிஷியின் கோப முகத்தைக் கண்டவளோ
“அண்ணா” என்றாள் பயத்தோடு…
ரிஷி பேசினால் தானே… கோபத்தின் மொத்த உருவமாக இருந்தவன்… “வண்டில ஏறு…” என்றான் பைக்கை ஸ்டார்ட் செய்தபடியே…
அவன் கோபம் உணர்ந்து ரிதன்யா பதில் பேசாமல் வண்டியில் ஏற… இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த… மகிளா… அவனருகில் வந்து நின்றவள்…
“ரிஷி மாமா…” என்றபடியே… அவன் பைக் சாவியை கையில் எடுத்திருந்தாள்…
“பிரேம்… கீயைக் வாங்கிக் கொடுங்க” என்று பிரேமிடம் மட்டுமே பேச…
”நான் தான் உன் மேல கோபப்படனும்… ஆனா என் மேல நீ கோபப்படுற…” இப்போது நேரடியாக மகிளா அவன் முன் வந்து நின்றாள்… மகிளாவை முறைக்க முடியுமா… தங்கையைத்தான் ரிஷி முறைத்தான்… இன்றைய இந்த இக்கட்டான நிலைக்கு காரணகர்த்தா அவள்தானே… அதிலும் இவனுக்குத் தெரியாமல் அவள் மகிளாவோடு பேசிக் கொண்டிருக்கின்றாள் என்பது வேறு அவனுக்கு பெருங்கோபமாகி எல்லாம் சேர்ந்து அவனை கொலை வெறி ஆக்கிக் கொண்டிருக்க… அத்தனை கோபத்தையும் தங்கை மேல் உடனடியாக காட்டமுடியாத சூழ்நிலை வேறு… வேறு வழி இல்லாமல்…
“மகி… கோபம்லாம் எனக்கு இல்ல… சில விசயங்களை… தவிர்க்கிறது... தள்ளி நிற்கிறது எல்லோருக்குமே நல்லது… அவ்ளோதான்…” என்ற போதே கண்மணி அவனுக்கு அழைக்க… எடுத்தவன்… அவள் பேச ஆரம்பிக்கும் முன்னேயே
“வந்துட்டே இருக்கேன்மா… ரித்விகாவுக்காகத்தானே கால் பண்ற… நான் வந்து அவளைப் பார்த்துக்கறேன்… நீ சாப்பிட்டு தூங்கு” என்றவன்… கண்மணியின் பதிலுக்கு கூட காத்திராமல் வைத்தவன்… மகிளாவைப் பார்க்காமல் பிரேமைப் பார்க்க..
பிரேம் இப்போது பேச ஆரம்பித்தான்…
“ரிஷி… ரிதன்யா மேல எந்த தப்பும் இல்லை… நாங்கதான்…” என்று மகிளாவைச் சேர்த்து சொன்னவன்… பிறகு என்ன நினைத்தானோ
“இல்லை நான் தான்.. ரிதன்யாவை கூட்டிட்டு போனேன்… ” என்று விளக்கம் சொல்ல ஆரம்பிக்க…
வேகமாக மகிளா இருவரின் உரையாடலுக்கும் இடையே வந்தாள்…
“அதுகூட எனக்காகத்தான் மாமா… அவர் பண்ணினாரு”
”மிஸ்டர் பிரேம்… இது கடைசியா இருக்கட்டும்… மகிளா சொன்னான்னு… அவ ஆசைப்படுறான்னு… தேவையில்லாதத பண்ணாதீங்க… எங்க அப்பாவே இல்லை… அவங்க தங்கை குடும்பம் எதுக்கு…” இவன் பேசும் போதே…
மகிளா கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்து விட.. எரிச்சலாக ரிஷி ரிதன்யாவைப் பார்த்தவன்…
“இப்போ சந்தோசமா உனக்கு… “ என்று வேறு புறம் திரும்பி விட்டான்…
மகிளா அழுவதை என்றைக்குமே பொறுக்க மாட்டான்… இன்று மட்டும் பொறுப்பானா என்ன!!!… ஆனால் தேற்றும் நிலையிலும் அவன் இல்லை… தேற்றும் உரிமையும் இல்லை அவனுக்கு… அந்தக் கோபத்தில் அவன் நின்று கொண்டிருக்க…
“ரிஷி… இப்போ என்ன நடந்துச்சுனு இவ்ளோ கோபப் படுறீங்க… நான் தான் உங்க தங்கையை வரச் சொல்லிக் கட்டாயப்படுத்தினேன்… காரணம் என் மகிளா” என்ற பிரேமின் குரலும் இப்போது உயர்ந்திருக்க…
“கீயைக் கொடுங்க சார்…” என்று பிரேம் கையில் இருந்த கீயைப் அவன் எதிர்பாராத நேரத்தில் ரிஷி பறித்தும் விட்டான்…
“ஓகே… தாரளமா போங்க… எங்களுக்கு இன்னைக்கு மார்னிங் ப்ரெக்னன்ஸி ரிசல்ட் பாஸிட்டிவ் வந்தது… மகி என்கிட்ட ஆசைப்பட்டுக் கேட்டது… அவ அத்தை கூட பேசனும்… ரித்விகா கூட பேசனும்னு… அஃப்கோர்ஸ்… ரிதன்யா எங்க கூட பேசுவா… அவ கேட்ட மற்றதெல்லாம் என்னால பண்ண முடியல.. அட்லீஸ்ட் ரிதன்யாகூட ஸ்பெண்ட் பண்ணனும்னு சொன்னதை மட்டும் தான் என்னால பண்ண முடிந்தது… இதுல பெருசா எந்த தப்பும் இருக்கிற மாதிரி தோணலை…” என்று பிரேம் முடிக்க..
ரிஷி முகத்தில் பெரிதாக மாற்றம் இல்லை… அதே நேரம்… பிரேம் சொன்ன விசயத்தைப் பற்றி கேட்டபின் அத்தனை நேரம் அவன் முகத்தில் இருந்த கோபக்களை மாறியிருந்தது என்பதுதான் உண்மை…
“கங்கிராட்ஸ்...” என்று பொதுவாக வாழ்த்தைச் சொன்னவன்…
“சாரி கோபப்பட்டதுக்கு” என்று பிரேமிடம் மட்டும் சொன்னபடி... ரிதன்யாவிடம் திரும்பி…
”உன் ஃப்ரெண்டோட பேசிமுடிச்சுட்டதானே… கிளம்பலாமா” என்றவன் பைக்கையும் ஸ்டார்ட் செய்தவன்… சில அடி தூரம் போகவும் செய்து விட்டான்… ஆனால் என்ன நினைத்தானோ… அவனுக்கே தெரியவில்லை… மீண்டும் வண்டியைத் திருப்பி… நிறுத்தியவன்... மகிளாவை மட்டுமே பார்த்தான்...
”ஓய்… இங்க வா…” என்றழைக்க… மகிளாவின் கண்களிலோ இப்போது ஆனந்தக் கண்ணீர்… ரிஷி அழைத்த மறு கணமே... வேகமாக அவன் அருகே போயிருந்தாள்..
Super