/* ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
சொன்ன மாதிரியே வந்துட்டேன்... இந்த 37 th எபிசோட் பெரிய அப்டேட்... கிட்டத்தட்ட எல்லா கேரக்டர்ஸும்.. வருகிற எபிசோட்... சோ கண்டினியூவா வரும்... இப்போதைக்கு 37-2 படிங்க.... உங்க கமெண்ட்ஸ் கொடுங்க... தேங்க்ஸ் ஃபார் உங்க எல்லோருடைய கமெண்ட்ஸுக்கும்...
என்றும் அன்புடன்
பிரவீணா(வாருணி விஜய்)
*/
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அத்தியாயம் – 37-2
கண்மணியும் ரித்விகாவும் வருவதற்கு முன்னாலே வீடு வந்து சேர்ந்திருந்தான் ரிஷி… அவனுக்கிருந்த கோபத்தில் பைக்கை வேகமாக விரட்டி இருக்க… அவர்களுக்கு முன் வந்தவன் வீட்டுக்குள் போகாமல் அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தான்…
அதன் பின் கண்மணியும் ரித்விகாவோடு வந்து சேர… ரிஷியின் பார்வை முழுவதும் ரித்விகாவிடம் மட்டுமே…
கடைசி வரை ரிஷியுடன் வரமாட்டேன் என்று… அவளது பிடிவாதத்திலேயே நின்றிருக்க… அதையும் சாதித்து விட்டாள்..
வீட்டுக்குள் கோபத்துடன் நுழைந்த தங்கையை முறைப்புடன் ரிஷி பார்த்துக் கொண்டிருக்க.. தங்கையை முறைத்துக் கொண்டிருந்த கணவனைப் பார்த்தபடியே கண்மணியும் வீட்டினுள் நுழைந்தாள்…
இது அவள் வரும் வழக்கமான நேரம் இல்லைதான்… இருந்தும்… சமையலறைக்குள் போக நினைக்க… ரிதன்யா சமையலறையில் இருப்பது தெரிய… அதற்கு மேல் அங்கு இருக்க வில்லை… வெளியே வந்து விட்டாள் கண்மணி…
ரிஷி இப்போதும் வெளியேதான் இருந்தான்… என்ன வண்டியை விட்டு இறங்கி… மரத்தடியில் இருந்த திண்டில் யோசித்தபடி அமர்ந்திருக்க…
கண்மணிக்கும் நாளை அதிகாலை ஊட்டி கிளம்புவதால் எக்கச்சக்க வேலைகள் இருக்க… கண்மணி அவனை ஏதும் தொந்திரவு செய்யவில்லை… காலையில் துவைத்துக் கொடியில் காயப் போட்டிருந்த துணிகளை எடுத்தபடி அவள் தந்தை இருந்த வீட்டை நோக்கிச் சென்று விட்டாள்…
--
கண்மணி ஒரு புறம் போய்விட… ரிஷி வெளியில் அமர்ந்திருக்க… பள்ளியில் இருந்து வந்த ரித்விகாவோ பள்ளிச் சீருடையைக் கூடக் கழட்டாமல் ஒரு மூலையில் போய் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள்…
ஆக ரிதன்யாவுக்குத்தான் ஒன்றும் புரியவில்லை… வந்த அண்ணனும் உள்ளே வராமல் வெளியிலேயே அமர்ந்து விட்டான்… கண்மணி வழக்கமாக இவள் போன பின்னால் தான் வருவாள்… இன்று அதிசயமாக இவள் இருக்கும் போதே வந்துவிட்டாள்..
“என்னவாக இருக்கும்…”
யோசித்தபடியே போட்டிருந்த காஃபியை நான்கு டம்ளர்களில் மாற்றியவள்.. தங்கையிடம் போகாமல்… வெளியில் அமர்ந்திருந்த தன் அண்ணனிடம் வந்து நின்றாள்..
“இந்தாண்ணா..” என்று கொண்டு வந்திருந்த காஃபியை நீட்ட… ரிஷியோ அதை வாங்கவில்லை…
தான் நீட்டிய காஃபி டம்ளரை வாங்காமல் நிமிர்ந்து தன்னை குற்றம் சாட்டும் பாவனையில் பார்த்த தன் அண்ணனைப் பார்த்தவளுக்கு… அந்தப் பார்வையின் காரணம் புரிந்து கொள்ள முடியவில்லைதான்.. இருந்தும் அதைப் பற்றி கேட்காமல்…
”என்னாச்சுண்ணா… ஏன் ரிதி அழுதுட்டு இருக்கா” என்று சாதாரணமாகக் கேட்க…
தான் அவளை முறைக்கிறோம் என்று தெரிந்தும்… அதைக் கண்டுகொள்ளாமல்… பேசுகிறாளே… ரிஷிக்கு கோபம் வந்ததுதான்… இருந்தும் கோபத்தை அடக்கியவனாக…
“கண்மணிக்குக்கும் சேர்த்து எடுத்துட்டு வரலையா” என்று மட்டும் கேட்க… இப்போது ரிதன்யாவுக்குத்தான் அடக்க மாட்டாத கோபம் வராத குறை…
ரித்விகாவைப் பற்றி தான் கேட்டால் தன் அண்ணனோ… கண்மணிக்கு காஃபி கொண்டு வரவில்லையா என்று கேட்கின்றானே… அவள் இந்த நேரத்திற்கு வருவாள் என்று தனக்கு எப்படி தெரியும்… தனக்குள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே…
“ஓகே… அவ இன்னைக்குத் திடீர்னு வந்துட்டாதான்… நீ அவளுக்கும் சேர்த்து காஃபி போடலைதான்… அதை விட்ரு… ஆனால் நாலு பேருக்குனு ஷேர் பண்ணினதை அஞ்சாக்க தெரியாதா ரிதன்யா” என்றவன்…
தங்கையைப் பார்த்தபடியே
”படிப்புல மட்டும் பெஸ்ட்டா இருக்கக் கூடாது… வாழ்ற வாழ்க்கைல உங்க படிப்பையும் அறிவையும் யூஸ் பண்ணுங்க…“ சொன்னபடியே நிமிர்ந்து தங்கையைப் பார்க்க… அங்கு ரிதன்யாவோ ருத்ரனின் பெண் உருவமாக மாறிக் கொண்டிருக்க…
சொல்ல வேண்டியதை ரிஷியும் சொல்லி விட்டதால் அவன் கோபமும் குறைந்திருக்க… தானாகவே தங்கையையும் சமாதானப்படுத்த விழைந்தான்…
“ஓகே… ஓகே… கூல் கூல்… செல்லத் தங்கச்சி… இன்னொரு கப் எடுத்துட்டு வாங்க செல்லம்…“ என்று சட்டென்று முகத்தை மாற்றியவனாக புன்னகையோடு சொல்ல…
அண்ணனின் தாஜா புரிந்தும்… ரிதன்யா அப்படியே நின்றிருக்க…
“சாரிடா… உனக்கும் இதெல்லாம் புதுசுதானே… பழகிக்குவ… சாரிடாம்மா.. புஜ்ஜிமால்ல… போங்க போங்க…” என்று தங்கையைக் கொஞ்ச… அண்ணனின் இந்த கொஞ்சல்கள் ரித்விகாவின் கோபத்தைக் குறைக்கத்தான் செய்தது..
“அது… அந்த பயம் இருக்கட்டும்.. ” என்று சிரித்தபடியே சொன்னவள்… இன்னொரு டம்ளரை எடுத்து வந்து கொடுத்து விட்டும் போக…
அவளைப் பார்த்து புன்னகைத்தபடி அமர்ந்திருந்தவனுக்கு வந்த போது இருந்த கோபம் எல்லாம் வடிந்து போயிருக்க… கண்மணியைத் தேடிச் செல்ல… அவளோ அந்த வீட்டில் உயரமான நாற்காலியில் ஏறியபடி அங்கிருந்த பரணுக்குள் தலையை நன்றாக உள்ளே விட்டு எதையோ தேடிக் கொண்டிருந்தாள்…
ரிஷி அதைப் பார்த்தபடியே உள்ளே வந்தவன்…
“என்ன தேடுற… என்கிட்ட சொன்ன எடுத்து தர மாட்டேனா… சரி இறங்கு நான் எடுத்து தர்றேன்”
கண்மணி இவன் புறம் திரும்பவில்லை… தன் தேடும் வேலையில் கவனம் வைத்தபடியே… பதில் மட்டும் வந்தது அவளிடமிருந்து
“சொல்லிருக்கலாம்… அல்ரெடிதான் நாம முருங்கைமரம் ஏறி இருந்தோமே… இங்க ஏற முடியுமா” ...
கண்மணி சாதரணமாகச் சொல்ல… கேட்ட ரிஷிக்குத்தான் உடனே புரையேறி விட்டிருந்தது…
அது மட்டுமல்லாமல்… புரையேறியதில்… வாயில் இருந்த காபி மொத்தமும் வெளியே சிதறியும் இருந்தது…
இப்போது அவனது புரையேறிய சத்தத்தில் கண்மணி திடுக்கிட்டு இவன் புறம் திரும்ப… அப்போதுதான் அவன் கையில் காஃபிி வைத்திருந்ததும்…. அதைக் குடித்துக் கொண்டிருந்ததும் கண்மணி உணர்ந்தாள்…
தன் தவறை உணார்ந்தவளாக... உடனடியாக
“ஓ… சாரி ரிஷிக் கண்ணா…” என்றபடியே
“கேட்டதுக்கு தேங்க்ஸ்… நானே எடுத்துட்டேன்…” என்று இவனைப் பார்த்தபடியே சொன்னவள்… அங்கிருந்தபடியே அந்த பெரிய ட்ராவல் பேக்கை வெளியே எடுத்து கீழே போட… அவள் அடுத்து என்ன செய்வாள் என்று தெரிந்து ரிஷி வேகமாக கையை நீட்ட…
அவளோ அதை எல்லாம் கண்டுகொள்ளாமல்…
”தள்ளிக்கங்க ரிஷி” என்றபடியே … அங்கிருந்து ’டமால்’ என்று குதிக்க…
“ரவுடி” முணுணுத்துக் கொள்ளத்தான் முடிந்தது ரிஷியால்….
“இதைக் க்ளீன் பண்ணி… ட்ரெஸ்லாம் எடுத்து வச்சுட்டா… அவ்ளோதான்… நாளைக்கு ஊட்டிக்கு ரெடி நான்”
சொல்லியபடியே… தன் அருகே வந்தவளிடம்… கையில் இருந்த காபிக் கோப்பையைக் கொடுத்தவன்… அவள் தலையில் இருந்த நூலாம்படையை எடுத்து விட… கண்மணியோ
“சாரி ரிஷி… ஷேர்ட் வீணாகிருச்சா… “ என்று உண்மையிலேயே வருத்தம் கலந்த அக்கறையான குரலில் கேட்டபடியே அவன் சட்டையில் இருந்த காஃபிக் கறையை துடைக்கப் போக… ..
“விடு விடு… பரவாயில்ல… ” என்று நகர்ந்து விட்டான் ரிஷி…
“நீங்க மறுபடியும் கம்பெனிக்கு போகனும்… ட்ரெஸ் அழுக்காகிடும்னுதான்… உங்கள எடுக்கச் சொல்லலை… கடைசியில நானே ” என்றவளிடம்…
“நல்லா சமாளிக்கிற கண்மணி நீ… கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான் இந்த வாய்தான் இப்போ என்னை வேதாளம்னு சொல்லாம சொல்லுச்சு” என்று குத்தலாகச் சொல்ல…
“இல்லையா பின்ன?… உண்மை அதுதானே… “ கண்மணியும் மறுக்கவில்லை…
“ஹ்ம்ம்… மேடம் எப்போதும் அங்கதான் வாசம் பண்றீங்க… நாங்கள்ளாம் அப்போப்போதான் முருங்கை மரம் ஏறுகிறோம்… அதையும் மறந்துறாதீங்க…” என்க…
“உங்ககிட்ட நான் என்னைக்கு அப்படி நடந்திருக்கேன்…” ரிஷி சொன்னவுடனே கண்மணியும் பட்டாசாகப் பொறிய ஆரம்பித்திருந்தாள்…
“என்கிட்ட இல்லம்மா… என் முதலாளி படுற பாடை பார்த்திருக்கேனே… அதைச் சொன்னேன்...” ரிஷி அவளது படபடப்பில் தானாகவே ரிஷி அவளிடம் சரண்டர் ஆக…
“நான் யாருக்கும் வேதளம் இல்லப்பா… எங்கப்பா அப்டிலாம் சொல்லிருக்க மாட்டாரு… அவரை விடுங்க… நான் உங்களுக்கு எப்போது வேதாளம் இல்ல… எனக்கு கொஞ்சம் கூட ரிலேட் ஆகாது…” இப்போதும் கண்மணி அவளது பட்டாசு வார்த்தைகளை நிறுத்தவில்லை…
அவனிடம் தான் என்றுமே கோபப்பட மாட்டேன் என்று உணர்த்தும் பாவனையே இருக்க… ரிஷியும் அதைப் புரிந்து கொண்டவனாக… அமைதிப் படுத்தும் விதமாக
“நீ எனக்கு வேதாளமா… நீ எனக்கு” என்று பேச ஆரம்பிக்க… கண்மணி அவனைப் பேச விட்டால் தானே
”ஆமா உங்களுக்குத்தானே விக்கினு ஃப்ரெண்டு இருக்காரு… அப்போ நீங்கதான் வேதாளம்… ப்ச்ச்.. இல்லல்ல அந்த விக்கிதான் வேதாளம்… முசுடு… நீங்க எப்போதுமே கிங்தான் … ச்சேய் நான் ஏன் இப்படி உளர்றேன்…” என்று தனக்குள்ளாக சொல்லிக் கொண்டு ரிஷியைப் பார்த்து அசடு வழிய… அதை பார்த்து ரசித்துப் புன்னகைத்தவன்… ஏனோ அவளை வம்பிழுக்கத் தோன்ற
“ஓ… அடிப்பாவி… இதெல்லாம் அவன் கேட்டா” என்ற போதே ரிதன்யா அங்கு வர… அவள் முகத்தைப் பார்த்தே… ரிஷியின் முகமும் மாறியது…
“என்னாச்சும்மா” என்று ரிஷி வேகமாகக் கேட்க…
“அங்க ரிதி… பிடிவாதம் பிடிக்கிறான்னா… அவ இப்படி அழுது நான் பார்த்ததே இல்ல… பாவமா இருக்கு.. நான் ஆஃபிஸுக்கு வேற கெளம்பனும்… என்னன்னு வந்து அவள வந்து கேளு… அம்மா என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறா… டூருக்கு போகனும்னு அடம் பிடிக்கிறவள… போக விட வேண்டியதுதானே”
அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே… ரிஷி வெளியேறி விட… அவன் பின்னாலேயே கண்மணியிம் ரிதன்யாவும் சென்றனர்…
ரித்விகா முதலில் இருந்த அதே நிலையில் இருந்தாள்…
அழுதழுது முகமெல்லாம் சிவந்திருக்க… தேம்பியபடியே அமர்ந்திருந்தவளைப் பார்த்த ரிஷி கோபத்தை எல்லாம் கைவிட்டவனாக… அவள் அருகில் போய் அமர்ந்து ….
“ரித்திம்மா.. குட் கேர்ள் ஆச்சே… அண்ணா சொன்னா அவ நல்லதுக்குன்னு புரிஞ்சுக்குவாதானே… இந்தாங்க காஃபி குடிங்க” என்றபடி அவள் முன் காஃபியை நீட்ட…
அவன் நீட்டிய அடித்த நொடி… காஃபிக் கோப்பை பறக்க… ரிஷியின் சட்டை எங்கும் காஃபியின் சிதறல்கள்…
“ஏய்” என்று ஆத்திரத்துடன் ரிஷி பார்க்க… ரித்விகாவோ கொஞ்சம் கூடப் பயப்படாமல்… அவனின் கோபத்துக்கு சளைக்காத பதில் பார்க்க..
வந்த கோபத்திற்கு வேறொருவன் அந்த இடத்தில் இருந்திருந்தால் அடித்து இருப்பான்… ரிஷியாக இருக்கப் போய் வந்த கோபத்தை தனக்குள் அடக்கி இருந்தான்… அதுமட்டும் அல்லாமல் அவளருகில் இருந்தால் தன்னையும் மீறி தன் தங்கையை தானே அடித்து விடுவோமோ என்று பயந்தவனாக… அவளை விட்டு எழுந்தவன்… சற்று தள்ளி நிற்கவும் செய்தான்…
ரிஷியின் இந்தச் செயலில் ரித்விகா இன்னுமே துள்ளினாள்…
“நாளைக்கு நான் அண்ணியோட… டூர் போவேன்… போகத்தான் போறேன்” என்று ரித்விகா சொல்லி விட்டு… மீண்டும் அழ ஆரம்பிக்க…
“போய்ப் பாரு… அதுக்கப்புறம் உன் அண்ணன் யாருன்னு உனக்குத் தெரியும்” என்று எச்சரிக்கும் பாவனையில் ரிஷி மிரட்ட…
“பார்க்கலாம்… அது என்ன அண்ணி மட்டும் போகலாமா… அவங்களுக்கு மட்டும் ஒண்ணும் ஆகாதா என்ன… அவங்க போறதுக்கு மட்டும் ஒண்ணும் சொல்ல மாட்டேங்கிற” என்ற போதே…
“அங்க இவர் வார்த்தைலாம் செல்லாதுன்னு தெரியாதா ரிதி… அதை எதுக்கு பேசுற…” கண்மணியைப் பார்த்தபடியே ரிதன்யா நக்கலாகச் சொல்ல…
இப்போது ரிஷியின் நெற்றிக் கண் பார்வை ரிதன்யாவிடம் மாறி இருந்தது…
ரித்விகாவோ ரிதன்யாவின் பேச்சை எல்லாம் கவனிக்க வில்லை… தான் பிடித்த பிடியிலேயே இருந்தபடி…
“பேசாமல் நம்ம அப்பா அவங்க போகும் போது என்னையும் அவர் கூடவே கூட்டிட்டு போயிருக்கலாம்” சொல்லி முடிக்கவில்லை… ரிஷியின் கைகள் உயர்ந்திருக்க… ரிதன்யா… ரித்விகாவுக்கும் ரிஷிக்கும் இடையில் போயிருக்க… கண்மணி ரிஷியை பிடித்து விட்டாள்…
“என்ன ரிஷி…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே…
“என்ன பேச்சு பேசுறா பாரு கண்மணி… இவ இப்படி பேசுறதுக்குத்தான் நான் பாடுபடுறனா கண்மணி… என்னை ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிறா…” வார்த்தைகள் தடுமாறி விழ… அவன் தடுமாற்றம் எல்லாம் ரிதன்யாவுக்கு சிறிதளவு கூட படவில்லை…
இது எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த இலட்சுமி… எதையுமே தடுக்க முடியாத வேதனையில் ஒரு புறம் தவித்துக் கொண்டிருக்க…
“என்னைக்குண்ணா இப்படி மாறுன… பொம்பள புள்ளைங்க மேல கை வைக்கிற அளவுக்கு… ரிதி சொன்னதுல என்ன தப்பு… எங்க மேல அப்பாவோ… அம்மாவோ… ஒரு நாள் கூட கை நீட்டினது இல்லை… ஏன் உன்னைக் கூடத்தான் காலேஜ் டேஸ் ல நீ பண்ணாத அலம்பலா… “ என்றவள்… தன் அண்ணனைப் பற்றி வார்த்தைகள் எல்லை மீறுவது உணர்ந்தவளாக.. அதை நிறுத்திக் கொண்டவள்… கண்மணியின் புறம் தன் வார்த்தைகளை திருப்பினாள்…
“எல்லாம் இருக்கிற இடம்.. சேர்ந்த சகவாசம்… சாக்கடை… உன்கிட்டயும் கலந்துருச்சு போல… ” ரிதன்யாவும் வேகமாகச் சொல்ல…
”ரிதன்யா” என்று ரிஷி பல்லைக் கடித்தபடியே… கண்மணியைப் பார்க்க… சிறு அளவில் கூட அவள் முகம் மாறவில்லை.. அதே நேரம் கண்மணி ரிதன்யாவின் வார்த்தைகளுக்கு பதிலும் கொடுக்கவில்லை… அமைதியாகவே இருந்தவள்… அதே நேரம் ரிஷியை விட்டும் விலகாமல் நிற்க… அவளின் அமைதியில் ரிஷியின் கோபம் எல்லாம் அப்படியே இறங்கியது போல் இருந்தது…
உண்மையிலேயே வேறு ஒரு ஆள் கண்மணியிடம் இப்படி பேசி இருந்தால்… கண்மணியும் சரிக்கு சரி இறங்கி இருப்பாள்… ஆனால் அவள் அமைதியாக இருக்கிறாள் என்றால் தனக்காக மட்டுமே… தன் குடும்பத்தை அவள் குடும்பமாக பார்ப்பதால் மட்டுமே.. கண்மணியை புரிந்து கொண்ட போதே அவன் கோபமும் குறைந்திருக்க…
இருந்த சூழ்நிலையில் யாரைச் சமாதனப்படுத்துவது… யாரைத் திட்டுவது என்றே தெரியவில்லை
“நான் ஒண்ணும் செஞ்சுக்க மாட்டேன்… விடு” கண்மணியிடமிருந்து… கைகளை விலக்க முயற்சிக்காமலேயே… ரிஷி சொல்லிக் கொண்டிருக்க…
“ஹலோ… எங்க அண்ணன் எங்கள அடிப்பாரு… என்னவோ பண்ணுவார்… நீங்க கன்ட்ரோல் பண்ணாதீங்க… “ ரிதன்யா சொல்ல…
“அவர் உங்களை அடிக்க மாட்டாரு.. அவர் தான் அவரையே வருத்திக்குவாரு… ” ரிஷியைப் புரிந்தவளாக அமைதியாவே கண்மணி, ரிதன்யாவுக்கு பதில் சொல்ல
”அப்டியா… அடேங்கப்பா… என்ன ஒரு பாசம் எங்க அண்ணா மேல… என்னமோ… பெறந்துதல இருந்து நீங்கதான் அவரப் பாதுகாத்து வச்சுருக்கிற மாதிரி பேசுறீங்க… எங்க அண்ணா சின்ன கொழந்தை பாருங்க… அவருக்கு ஒண்ணும் தெரியாது... எல்லாம் உங்களுக்குத்தான் தெரியும் பாருங்க… எங்க அண்ணா என்ன செய்யனும்னு நீங்க ஆர்டர் பண்ண வேண்டாம்.. புரிஞ்சதா… ஃபர்ஸ்ட் எங்க அண்ணா கைய விடுங்க” ரிதன்யா எல்லை மீற ஆரம்பித்திருக்க…
ரிஷிக்குத்தான் தர்மசங்கடமான நிலைதான்… ஆனாலும்… அவன் கையை கண்மணியிடமிருந்து விலக்கவில்லை…
கண்மணிதான் சூழ்நிலையை புரிந்து கொண்டவளாக… அவன் கைகளை விட்டவள்…
ரிதன்யா முன் வந்து நின்றவளாக
“நீ சொன்னதால இப்போ நான் கைய எடுக்கல… நீ என்ன… யார் சொன்னாலும் நான் அவர விட்டு விலக மாட்டேன்… ஆனால் எனக்குத் தெரியும்… எப்போ அவரை விடனும்ணு…” சொன்ன கண்மணி… அதற்கு மேல் அங்கு நிற்க வில்லை…
ரிஷியும் அங்கு இருக்கவில்லை… அவனும் கிளம்பியிருந்தான்… ரிதன்யாவிடம் பேசப் பிடிக்கவில்லை அவனுக்கு…
பேசினால் கண்மணிக்கு சாதகமாக மட்டுமே இவன் பேச முடியும்… ஆக அவளுடன் பேசுவதை என்ன பார்ப்பதையே தவிர்த்தவனாக…. ரித்விகாவின் முன் மட்டும் போய் நின்றவன்….
“என்ன பிடிவாதம் பிடிச்சாலும்… என் பதில் இதுதான்… நீ ஊட்டிக்கு போகக் கூடாது… புரிஞ்சுக்குவேன்னு நினைக்கிறேன்” போவதற்கு முன் அவளிடம் மீண்டும் சொல்லி விட்டு… வெளியேறி விட்டான் ரிஷி…
---
back to back அப்டேட் நாளையும் தொடரும்... நாளை அடுத்த கண்மணி... என் கண்ணின் மணி-37-3*/
கண்மணி... என் கண்ணின் மணி-37-3
/*
“ரிஷி எப்படியோ தெரியலை… கண்மணி ரிஷியை ரொம்ப … ” என்று பார்த்திபன் சொன்ன போதே அர்ஜூன் முகம் மாற
---
“இந்த தடவை சென்னைக்கு நான் போறதே அவளை மிஸ் பண்ணக் கூடாதுன்னுதான்..”
மருது சொல்லிக் கொண்டிருக்கும் போதே… கமிஷனர் அவர்களை நோக்கி வர…
இருவரும் எழுந்து நின்றனர்…
----
மகிளா கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்து விட.. எரிச்சலாக ரிஷி ரிதன்யாவைப் பார்த்தான்…
“இப்போ சந்தோசமா உனக்கு… “ என்று வேறு புறம் திரும்பி விட்டான்… மகிளா அழுவதை என்றைக்குமே பொறுக்க மாட்டான்… இன்று மட்டும் பொறுப்பானா என்ன… தேற்றும் நிலையிலும் அவன் இல்லை… தேற்றும் உரிமையும் இல்லை அவனுக்கு… அந்தக் கோபத்தில் அவன் நின்று கொண்டிருக்க…
----
“உண்மைதான்… உன்னால ரிதிய கண்ட்ரோலுக்கு கொண்டு வந்திருக்க முடியும்… நீ சொன்னா கேட்கிற ஆளு அவ… இப்போ இப்படி இருக்கான்னா… எனக்கு டவுட்டா இருக்கே” என்று ரிஷி குனிந்து கண்மணியின் காதில் கிசுகிசுக்க…
---
“என்ன ரிஷிக்கண்ணா முகத்தில சிரிப்பு தாண்டவமாடுது… என்ன விசயம்” என்று நேரடியாக கண்மணி கேட்க
*/
அப்டேட் போட்டுட்டு இங்க மறுபடியும் படிக்கும் போதுதான்... எக்கச்சக்க மிஸ்டேக்ஸ்... செண்டென்ஸ் பார்மேஷன் மிஸ்ஸிங் எல்லாம் தெரியுது... கரெக்ட் பண்ணிட்டேன்... அதுக்குள்ள 27 வியூ .. அந்த மக்கள் ப்ளீஸ் மறுபடியும் படிச்சுக்கங்க... சாரி சாரி..