அத்தியாயம் 37-1
வழக்கமான மாலை வேளை… வழக்கமான பழக்கம்… பழக்கமான வழக்கம்.. தங்கை ரித்விகாவை பள்ளியில் இருந்து அழைத்து வரும் வழமை… இன்றும் அதே போல் தான்
’அம்பகம்’ பள்ளிக்கு முன் வந்து நின்றிருந்தான் ரிஷி… எப்போதும் தங்கைக்காக காத்திருக்கும் இடத்தில் வந்து பைக்கை நிறுத்தி.. பைக்கை விட்டு இறங்கியவன்… பைக்கின் மேல் சாய்ந்து நின்றபடியே… தன் பாக்கெட்டில் இருந்த போனை எடுத்தான்…
எடுத்த போதே அப்போதுதான் தோன்றியது… கிட்டத்தட்ட 1 மணி நேரத்துக்கும் மேலாக அவனுக்கு அவனது போனில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை… குறுஞ்செய்தியும் கூட…
ரிஷி வேலையில் இருக்கும் போது அவனாக அலைபேசியை எடுக்க மாட்டான்… அவனுக்கு அழைப்பு வரும் போது இல்லை முக்கியமான தேவை என்று இருக்கும் போது மட்டுமே போனை எடுப்பான்… ஆக எந்த தேவையுமின்றி போனை எடுத்து ஓய்வாகப் பார்ப்பதென்பது… ரித்விகாவுக்காக காத்திருக்கும் போது மட்டுமே… இப்போதும் சும்மா ஒரு பார்வை பார்ப்போம் என்று எடுத்த போதே…
ஆனால் இவ்வளவு நேரம் தனக்கு எப்படி எந்த ஒரு அழைப்பும் வராமல் இருக்கிறது…. யோசித்தபடியே… போனைப் பார்க்க எத்தனிக்க… சட்டென்று ஒரு உள்ளுணர்வு…. யாரோ அவனைப் பார்ப்பது போல…
ஓர் சிறு உணர்வுதான்… ஆனால் அலட்சியம் செய்யவில்லை ரிஷி…
உடனடியாக வேகமாக சுற்றி முற்றிப் பார்க்க… யாரும் தென்படவில்லை… அதே நேரம் தனக்குத் தோன்றிய எச்சரிக்கை உணர்வும் பொய்யென்றும் தோன்றவில்லை…
இப்போது அலைபேசியிலில் இருந்து ரிஷியின் கவனம் தவறி இருக்க…. சுற்றுபுறத்தை பார்த்தபடியே இருக்க… அப்போது அவனின் முகம் மலர்ந்தது தெரிந்தவர்களைப் பார்த்த பரிச்சய பாவனையில்…
வேறு யாருமல்ல.. பள்ளியின் உள்ளே இருந்து பார்த்திபன் வந்து கொண்டிருக்க… பார்த்திபனும் இவனைப் பார்த்து விட… இருவருமே ஒரே நேரத்தில் கையைசைக்க… பார்த்திபன் ரிஷியின் அருகே வந்திருந்தான் இப்போது…
“என்ன பாஸ்… சகோதர கடமையா” என்று ரிஷியை கிண்டல் செய்ய… ஆமோதிப்பாக புன்னகை செய்த ரிஷி…
“நீங்க… என்ன இந்தப் பக்கம்… அதுவும் நடந்து” என்றபடியே ரிஷி கேட்க…
“கடந்த ஒரு மாதமாக… நான் இந்தப் பக்கம் தான்… நீங்கதான் பார்க்கலை… ”
என்றவன் ரிஷியை கூர்மையாக நோக்கியபடியே…
“அம்பகம் ட்ரஸ்டில… கொஞ்சம் வேலை” வார்த்தைகளில் அழுத்தம் கொடுக்க…
ரிஷி… பெரிதாக கண்டு கொள்ளவில்லை…
“யாராவது வெயிட் பண்றாங்களா உங்களுக்காக பார்த்திபன்…“ இதைத்தான் கேட்டான் ரிஷி… காரணம்..ற பார்த்திபனின் பார்வையில் ரிஷியிடம் பேசிக் கொண்டிருந்ததையும் மீறி ஒரு தேடல் இருக்க… பார்த்திபனிடம் கேட்க…
கேட்ட பின் தான் ரிஷியின் மனதுக்குள் தோன்றியது..
”அப்படி பார்க்க வேண்டுமென்றால் பார்த்திபன் வெளியே வர வேண்டிய அவசியம் என்ன… பள்ளி வளாகத்திலேயே அவன் இருக்கும் இடத்திற்கே வரவழைத்து பார்த்திருப்பானே… நாம் தான் லூசு மாதிரி கேட்டு விட்டோமோ”
”இல்ல பாஸ்… ஜஸ்ட்… வெளிய வந்தேன்… டீ சாப்பிட” என்ற போதே ரிஷி ஏதோ பேசப் போக
“உள்ளேயே வரும் தான்.. ஆனால் நான் தான் அப்டியே காலாற நடந்தபடி… ஃப்ரெஸ் ஏர்… வாங்கலாம்னு… அதோ அங்க இருக்கிற டீக்கடைக்கு போய்ட்டு வருவேன்…” என்று எதிரில்… சற்று தூரத்தில் இருந்த டீக்கடையைக் காட்ட… ரிஷியும் அந்தக் கடையைப் பார்த்தபடியே…
“லாஸ்ட் ஒன் மன்த்தா… இந்த டைம்ல வருவீங்களா… நான் பார்த்ததே இல்லையே… “
இப்போது பார்த்திபனின் முகத்தில் சட்டென்று ஒரு மின்னல் வந்து போய்… மீண்டும் பழையபடி ஆனது… தன்னையே சமாளித்தவனாக
”இந்த ஒரு வாரமாத்தான்… இந்த டைம்ல வர்றேன்… “ என்றான் இலேசான தடுமாற்றத்துடன்…
ரிஷிக்கும் அது புரிய… அவனது கண்கள் பார்த்திபனை ஆராயும் நோக்கில் போக…
“வீட்டுக்கு மிஸ்ஸாகிற ஏதோ ஒரு மிஸ் பின்னாடியே உங்கள அறியாமலேயே வந்துடறீங்களா” என்றான் அடக்கப்பட்ட புன்னகையோடு
“ஹலோ… மிஸ்ஸெல்லாம் பார்க்க… நான் ஏன் வெளில வரணும்… நீங்க வேற… அதெல்லாம் இல்லங்க… அதை விடுங்க…” என்ற பார்த்திபன்…
“எங்க ஸ்கூல் மிஸ்… உங்க மிஸஸ்… என்ன சொல்றாங்க” என்று வேண்டுமென்றே பேச்சை மாற்ற…
இப்போது ரிஷி சிரித்தபடியே… அவன் பேச்சை மாற்றுவதைப் புரிந்தபடியே
“அவங்க என்ன சொல்றாங்கன்னு… அதை அவங்க கிட்டதான் கேக்கனும்… ” என்ற போதே
கண் சிமிட்டிய பார்த்திபன்…
“கேட்றலாமா… வரட்டும்… இப்போ கேட்றலாம் … உங்க முன்னாடியே வச்சு” என்ற போதே…
”ஹ்ம்ம்… கேளுங்க… ஆனா இப்போ வரமாட்டாங்க… இன்னும் 1 ஹவர் ஆகும்… அவங்க ஸ்கூல் டைம் முடிய…” ரிஷி சொல்ல
“அப்டியா… ஆனால் உங்க ஆளு… நீங்க இங்க அவங்கள நெனச்சாலே போதும் உங்க முன்னால ஆஜராய்டுவாங்களே… “
ரிஷி இப்போது பொய்யான முறைப்புடன்…
“என்ன… பார்த்திபன் சார்… ஒரு ரேஞ்ல இருக்கீங்க போல…” என்றபோதே …
“உண்மை பாஸ்… கண்மணின்னு நீங்க நெனச்சா போதும்… மேடம் வந்துருவாங்க” என்றவனிடம்…
“இப்போ நான் நெனச்சு அவ வரலேன்னா… என்ன பண்ணுவீங்க… நான் நினைக்கல போதுமா” என்ற ரிஷி பார்த்திபனிடம் சொல்லிக் கொண்டிருக்க..
“ரிஷி... உண்மையச் சொல்லுங்க… கண்மணிய நெனச்சீங்கதானே நீங்க… “ என்று பார்த்திபன்…. ஆச்சரிய பாவனையுடன் கேட்க…
”இவர் ஏன் இவ்ளோ எமோசனல் ஆகிறாரு” என்று நினைத்தபடியே… பார்த்திபனின் பார்வையைத் தொடர… கண்மணிதான் வந்து கொண்டிருந்தாள்…
ரிஷிக்குத்தான் இப்போது ஹைய்யோ என்றிருந்தது…
“இவ ஏன் இந்த டைம்ல சம்பந்தமே இல்லாம ஆஜராகுறா…” வேகமாக பார்த்திபனிடம் திரும்பி…
“நான் அவள நினைக்கவே இல்ல பார்த்தி… உங்ககிட்டதானே பேசிட்டுத்தான் இருந்தேன்…” பார்த்திபனிடம் எதைப் புரிய வைக்க தான் இப்படி பேசுகிறோம் என்று ரிஷிக்கே புரியவில்லை…
கண்மணியும் இப்போது அருகில் வந்திருக்க… ரிஷி-பார்த்திபன் இருவருமே… பேசிக்கொண்டிருந்த தலைப்பை விட்டு விட்டு… சாதரணமாகி இருந்தனர்…
ரிஷியுடன் இயல்பாக கிண்டலாக பேச முடிந்த அளவுக்கு… கண்மணியிடம் பேச முடியவில்லை பார்த்திபனால்..
ஏன் அவன் அர்ஜூனிடம் கூட இயல்பாக பேசுவான்… கண்மணியிடம் அதுபோலவெல்லாம் ஏனோ பேச முடியவில்லை… அதனால் அமைதியாக நின்றிருக்க…
வந்த கண்மணியோ இருவரையும் பார்த்து… ஒரே மாதிரியான பாவனையில் புன்னைக்க…
‘ரித்வி எங்க” என்று தன் முன் வந்து நின்ற கண்மணியிடம் முதல் கேள்வியாக ரிஷி கேட்க… முறைத்தாள் கண்மணி…
”கேட்டதுக்கு பதில் சொல்லுமா… அத விட்டுட்டு.. முறைக்கிற” என்று ரிஷியும் கண்மணியை அதட்ட…
கண்மணி பதில் பேசாமால்… அவன் அருகே வந்தவள்… அவன் சட்டைப் பையில் இருந்த அலைபேசியை எடுத்து… அதை ஆன் செய்து அவனிடம் நீட்ட…
“ஒரு மணி நேரமா சார் உங்களுக்குத்தான் ட்ரை பண்ணேன்… அப்பாகிட்ட போன் பண்ணா நீங்க கம்பெனில இல்லைனு சொல்லிட்டாங்க.. கடுப்போடு முடிக்க…
ரிஷி இப்போது அலை பேசியில் கவனம் வைத்தபடியே…
“ஓ.. க்ளைண்ட் ஆஃபிஸுக்கு போகும் போது கீழ விழுந்துச்சு… ஒழுங்கா பார்க்காமல் மறுபடியும் பாக்கெட்ல வச்சுட்டேன்… ஆனால் ஆஃப் ஆகாத மாதிரிதான் இருந்துச்சு” தனக்குள்ளாகவும் கண்மணியுடனும் பேசிக் கொண்டிருக்கும் போதே…
அவர்கள் இருவரும் தன்னந்தனி உலகத்தில் இருப்பது போல… தான் இருவருக்கும் இடையில் ஒட்டாமல் இருப்பது போல் பார்த்திபனுக்குள் பிரமை தோன்ற…
“ஒகே நான் கிளம்பறேன் ரிஷி… ” என்று சொல்லி ரிஷியைப் பார்க்க… ரிஷி கண்மணியோடு பேசிக் கொண்டே… பார்த்திபனுக்கு தலை அசைக்க.. பார்த்திபன் இப்போது கண்மணியைப் பார்க்க…
ரிஷியாவது இவனைப் பார்த்தான்… கண்மணியோ வரும் போது இவனைப் பார்த்தது தான்… அதன் பிறகு பார்த்திபன் புறமே திரும்பவில்லை…
“ரிஷி… டூர்க்கு நாளைக்கு போறோம்ல… நீங்க அவங்க மிஸ்கிட்ட வந்து அவ பேரையும் கொடுக்கனும்னு ஒரே பிடிவாதம்… அதுவரை வீட்டுக்கு வரமாட்டேன்னு ரித்வி அடம் புடிச்சுட்டு இருக்கா… அதுனாலதான் நீங்க வேண்டாம்னு… நான் வரும் போது கூட்டிட்டு வர்றேன்னு கால் பண்ணேன்.. மெஸேஜ் போட்டேன் ” என்றபடி கண்மணி ரிஷியோடு தீவிரமாகப் பேசிக் கொண்டிருக்க…
பார்த்திபன்… அதற்கு மேல் அங்கு நிற்க வில்லை… நிற்க வில்லை என்பதை விட… அங்கு நிற்க அவனுக்கும் பொறுமையில்லை… வேகமாக ரிஷி-கண்மணியைக் கடந்தவன்… தேநீர் கடையின் முன் வந்து நின்றவன் முகம் உடனே பிரகாசமாகியது… அங்கிருந்த பெண்ணைப் பார்த்தவுடனேயே….
“ஹப்பா… வந்திருக்க மாட்டாளோன்னு பயந்துட்டே வந்தேன்” என்று நினைத்தபடியே… கண்களால் அவளை ரசித்தபடியே… அந்தப் பெண்ணைப் பார்ப்பதற்கு ஏதுவாக சற்று தள்ளி இருந்த மேஜையைத் தேர்ந்தெடுத்த பார்த்திபன்… அங்கு அமர்ந்தபடி.. அவள் கண்களை சந்தோஷத்துடன் நோக்க… அவளது கண்களில் இவனுக்கிருந்த சந்தோஷம் இல்லை… மாறாக கண்களில் ஆக்ரோஷம் மட்டுமே…
பார்த்திபன் முதன் முதலாக தன்னைக் கவர்ந்த பெண்ணின் கண்களைப் பார்க்கிறான்.. ஆனால் அதிலோ… அத்தனை ஆக்ரோசம்
“இவ்வளவு வெறி ஏன்?… கோபம் ஏன்…?” யோசித்தபடியே அந்த கண்களின் பார்வையைத் தொடர… அது முடிந்ததோ…. ரிஷி- கண்மணி… நின்றிருந்த இடத்தில்…
பார்த்திபனின் கண்கள் இடுங்க… மீண்டும் அவளைப் பார்க்க… அந்தப் பெண்ணோ… இப்போது கிளம்பியிருந்தாள்…
---
/back to back அப்டேட் நாமளும் போடலாமா... நாளை அடுத்த கண்மணி... என் கண்ணின் மணி-37-2*/
click her to next part - கண்மணி... என் கண்ணின் மணி-37-2 -
/*
“ரவுடி” முணுணுத்துக் கொண்டவனாக…. அவளிடம் தன் கையில் இருந்த காபிக் கோப்பையைக் கொடுத்தவன்… அவள் தலையில் இருந்த நூலாம்படையை எடுத்து விட… கண்மணியோ
“சாரி ரிஷி… ட்ரெஸ்லாம் வீணாகிருச்சா… “ என்று அவன் சட்டையில் இருந்த காஃபிக் கறையை துடைக்கப் போக… ..
---
“அங்க இவர் வார்த்தைலாம் செல்லாதுன்னு தெரியாதா ரிதி… அதை எதுக்கு பேசுற…” கண்மணியைப் பார்த்தபடியே ரிதன்யா நக்கலாகச் சொல்ல…
---
*/
Lovely update pravee
Konjam gap agiduchi