அத்தியாயம் 36-1-
/* உங்க பொறுமையை நான் சோதிக்கிறேன்னு தெரியும்... ஆனாலும் என் ஃப்ரெண்ட்ஸ் என் மேல கோபப் பட மாட்டீங்கன்னு தெரியும்... சாரி சாரி... அடுத்த எபி... போட்டுட்டேன்... இப்போலாம் எபிசோடுக்கே பார்ட் போடற நெலம... ஓகே படிச்சுட்டு கமெண்ட்ஸ் போடுங்க...
RK and RK oda 'K' அவங்க உணர்வுகளோட சாம்ராஜ்யம் தான் இனி... கண்டிப்பா உங்களுக்கும் பிடிக்கும்னு நினைக்குறேன்.... கமெண்ட்ஸ் மறக்காம போடுங்க... உங்களோட கமெண்ட்ஸ் தான் எனக்கு எப்போதுமே பூஸ்ட்... அதை எல்லாம் பார்த்தவுடன் தான் ... லேப்டாப்பையே தூக்குறேன் நான் இப்போலாம்... கண்மணி ரிஷிக்காக காத்திருக்காங்கன்னு... தேங்க்ஸ் ஃப்ரெண்ட்ஸ்... நான் அப்பப்போ டௌன் ஆகும் போதெல்லாம்... உங்க கமெண்ட்ஸ் தான் எனக்கு பெரிய வரம்... தேங்க் யூ சோ மச்...
மறுபடி மறுபடி என்னோட சாரி ஃப்ரெண்ட்ஸ்... ஒகே.... இனஃப்... இப்போ அப்டேட் போகலாமா..”
அத்தியாயம் 36-1-
/* நீ பூமி பந்தில் வந்து
நடமாடும் குட்டி
சொர்க்கம்
நீ கல்லில் அல்ல பெண்ணே
கனியாலே செய்த
சிற்பம்
உந்தன் கண்கள்
அது ஒரு அங்குலம்
ஆனால் அதில் என்
உயிர் சங்கமம் */
கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழித்து… அழகான ஒரு மாலை வேளை….
“மணி… தீபாராதனைமா“ என்றபடி அந்த அம்மன் கோவிலின் குருக்கள் கண்மணியிடம் தீபாரதனைத் தட்டை நீட்ட
கண்களை மூடி அம்மனை மனதில் பிரார்தித்தபடி உருகி உருகி வேண்டிக்கொண்டிருந்தவள்… அர்ச்சகரின் குரலில் கண்களை திறந்தவளாக… பயபக்தியுடன் தீபாரதனையை ஒற்றிக் கொண்டவள்… திருநீறை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டபடி… அருகில் இருந்த ரித்விகாவுக்கும் வைத்து விட்டவளாக… கண்மணி மீண்டும் அம்மனிடம் சரணடைந்து விட்டாள்..…
அர்ச்சகரிடம் அம்மனின் காலடியில் வைத்து ஆசிர்வாதம் வாங்க சில பொருட்களை கொடுத்திருந்தாள் கண்மணி… அவ்வாறாகவே அந்தப் பொருட்களை எல்லாம் அம்மன் காலடியில் வைத்து அர்ச்சனையும் முடித்து… அவற்றை வெளியே எடுத்து வந்து அவள் முன் வந்து நின்றவர்…
“எப்போதுமே அம்மன் பேருக்கு அர்ச்சனை பண்ணுவ மணி நீ…”என்று ஆரம்பித்தவர்… கண்மணியின் பார்வையில் என்ன கண்டாரோ… நிறுத்தியவர்…
”நீ சொன்னபடி உன் ஆம்படையான் பேருக்கு அர்ச்சனை பண்ணிட்டேன்… சந்தோஷமா நோக்கு….” என்று புன்னகையுடன் வினவியபடியே கண்மணியிடம் அவள் கொடுத்த பொருட்களை மீண்டும் அவளிடம் கொடுத்தார்…
கண்மணியும் இப்போது புன்னகையுடன் திருப்தியாகத் தலை ஆட்டியவள்… அம்மனின் காலடியில் இருந்து வந்த பொருட்களை சந்தோசமாக மீண்டும் சரி பார்த்தபடி… கோவில் பிரகாரத்தை ரித்விகாவுடன் வலம் வர… ரித்விகாவோ யோசனையுடன் கண்மணியைப் பார்த்தவாறே சுற்றி வந்து கொண்டிருந்தாள்…
ஒரு வழியாக பிரகாரத்தை சுற்றி வந்தவர்கள்… ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அமர்ந்தனர்…
ரித்விகா இன்னுமே கண்மணியைப் பார்த்துக் கொண்டிருக்க…
“என்ன ரிதும்மா… ஒரே பார்வை… அதுவும் என் மேல… என்ன விசயம்” என்று வினவியவள் குரலில் கொஞ்சம் துள்ளலும் இருந்ததோ…
கண்மணி எப்போது தன்னிடம் இதைப்பற்றிக் கேட்பாளோ என்று இருந்தாளோ என்னவோ… ரித்விகா இப்போது சட்டென்று கேட்டாள்…
“உங்களுக்கு எங்க அண்ணாவை ஏன் இவ்வளவு பிடிச்சுருக்கு” அவள் வயதுக்கு மீறிய கேள்விதான்… ரித்விகா எப்போதுமே இப்படித்தான்… மனதில் தோன்றியதை கேட்க யாருக்காகவும் யோசிக்க மாட்டாள்… இப்போதும் அப்படியே கேட்டு விட்டாள்… கண்மணி திட்டுவாள் என்றெல்லாம் யோசிக்கவில்லை…
கண்மணியும் ஏனோ திட்டவில்லை… மாறாக இதழ் விரித்த புன்னகையுடன் ஏதோ பதில் சொல்லப் போக…அவளை ரித்விகா பேச விட்டால் தானே!
“காதல் கீதல்னு ஏதாவது சப்பக் கட்டுலாம் கட்டக் கூடாது… இந்த லவ்வெல்லாம் நான் ஏற்கனவே பார்த்துருக்கேன்… அதுவும் எங்க அண்ணாகிட்டயே… மகிளாவும் எங்க அண்ணனை லவ் பண்ணி பார்த்துருக்கேன்தான்… ஆனால் இந்த மாதிரி இல்ல அண்ணி… மகிளா கூட நான் சண்டைக்குலாம் போயிருக்கேன்… என் அண்ணா எனக்கு மட்டும் தான்னு… ஆனால் உங்கள பார்க்கும் போது… நீங்க எங்க அண்ணா மேல வச்சுருக்க… அந்த அன்பு… வித்தியாசமா இருக்கு… வெறும் காதல்னு தோண மாட்டேங்குது… இத்தனைக்கும் எங்க அண்ணா எங்க மேல காட்டுற பாசத்தைக் கூட உங்க கிட்ட காட்டினது இல்லை… “ என்றவள் கண் சிமிட்டியபடி…
“நான் பார்த்தவரைக்கும்” என்க…
அவள் தலையிலேயே செல்லமாகக் குட்டினாள் கண்மணி…
“அப்படி என்ன நீ பார்த்துட்ட… நான் ஓவர் பாசம் காட்டுறேன்… அவர் கம்மியா இருக்கார்னு” என்ற கண்மணி…
“உங்க அண்ணா உன்னைத் திட்டறது தப்பே இல்ல… அவர் சொல்ற மாதிரி பெரிய மனுசி மாதிரிதான் பேசுற” என்றவளிடம் மருந்துக்குக் கூட கோபம் இல்லை… முகமெங்கும் புன்னகை மட்டுமே பூவாக பூத்திருந்தது… இப்படியும் சொல்லலாம் பெருமிதம் மட்டுமே அவளிடம் இருக்க…. அதில் கண்மணியின் முகமே பூரித்திருந்தது…
“ஹலோ பேச்சை மாத்தறீங்க மணி அக்கா அவர்களே”
அமைதியாக சில பல நொடிகள் வெட்ட வெளியை வெறித்த கண்மணி… பின் ரித்விகாவிடம் திரும்பியவள்… நொடிகள் அவளையே உற்று நோக்கியபடி…
“உன்னைப் பற்றி நினைக்க யார் இருக்கா… அதாவது உனக்கு ஏதாவது ஒண்ணுன்னா…” என்று கண்மணி முடிக்கவில்லை…
வேகமாக ரித்விகா
“எங்க அண்ணா…” என்று சொல்லி முடிக்க…
கண்மணியும் விடாது வினவினாள்… “ரிதன்யாவுக்கு?”
”ரிஷி அண்ணாதான்”… விடை யோசிக்காமல் ரித்விகாவிடம் இருந்து வர
“அத்தைக்கு?” இந்தக் கேள்விக்கு கண்மணியின் குரல் மெலிதாகி இருக்க
“அவங்க ரிஷிக்கண்ணா தான்” ரித்விகாவோ உற்சாகமாச் சொன்னாள்…
இப்போது கண்மணி நிறுத்தி நிதானமாகக் கேட்டாள் ரித்விகாவிடம்…
“உங்க அண்ணாக்கு”
ஏனோ ரித்விகாவால் இந்தக் கேள்விக்கு உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை… யாரைச் சொல்லலாம் என்று யோசிக்க ஆரம்பிக்க.. கண்மணி அதற்கு பதில் கூற ஆரம்பித்தாள்
“யாரும் இல்லைதானே.. ஹ்ம்ம்… அத்தை இருக்காங்கதான்… ஆனால் இப்போ?.. இருக்காங்கன்னு சொல்றதை விட இருந்தாங்க… அவங்க ரிஷியை கேர் பண்ற நிலைமைல இருக்காங்களா நீயே சொல்லு…” என்ற கண்மணி…
ரிஷிக்காக நான் மட்டுமே இருக்கின்றேன் என்ற வார்த்தைகளைத்தான் சொல்லவில்லை… அந்த நேரடி வார்த்தைக்குப் பதிலாக அனைத்து வார்த்தைகளையும் சொல்லி விட்டு அத்தோடு முடித்துக் கொள்ள…
ரித்விகாவும் இப்போது பதில் சொல்லவில்லை…
“ஆம்!! சில உண்மைகள் உணர்வுகளில் இருக்கும் போது… அதை புரிந்து கொள்ள வார்த்தைகள் தேவையா என்ன… ரித்விகாவுக்கும் அதே நிலைதான்… அவள் அண்ணன் ரிஷிக்காக… தன் அண்ணி கண்மணி என்ற தேவதை இருக்கின்றாளே… வார்த்தையால் சொல்ல வேண்டுமா என்ன…
அந்த நன்றி உணர்வோடு தன் அண்ணியைப் பார்க்க…
கண்மணி மொத்தமாக ரிஷியின் மனைவியாக உருமாறியிருந்தாள் …ரித்விகா கேட்க ஆரம்பித்த காரணத்தினாலா இல்லை… அன்றைய தினத்தின் உற்சாகத்தினாலா… அவளுக்கே தெரியவில்லை… கண்மணி தன்னையுமறியாமல் ரிஷியைப் பற்றி அவள் பேச ஆரம்பித்திருந்தாள்…
இப்போது ரித்விகாவை எல்லாம் பார்க்கவில்லை… அதே போல அவள் பள்ளி செல்லும் சிறுமி என்பதையும் மறந்திருந்தாள்… கணவனைப் பற்றி அவள் பேச ஆரம்பித்ததில்
“உங்க அண்ணா சிரிச்சு பார்த்துருக்கியா ரிதி…” எங்கோ பார்த்தபடி கேட்டாள்…
ரித்விகா அதற்கு பதில் சொல்ல ஆரம்பிக்கப் போக…
“ப்ச்ச்… உன்கிட்ட போய் கேட்கிறேன் பாரு… நீ அடிக்கடி பார்த்துருப்ப… உனக்கு அந்த வித்தியாசம் தெரியாது… நான் ஒரே ஒரு தடவை பார்த்துருக்கேன் ரிதி… அவர் எந்தக் கவலையும் இல்லாமல் சிரிச்சு… அந்த ஒரு தடவை பார்த்த ரிஷிய… இந்த நிமிசம் வரை தேடிட்டு இருக்கேன்… அவர்கிட்ட” கண்மணியின் முக பாவங்கள் அவள் பேசிய ஓவ்வொரு வார்த்தைக்கு ஒவ்வொரு விதமான உணர்வுகளை பூசிக் கொண்டிருக்க…
பாவம் அந்த ரித்விகா என்ற குழந்தையோ… அந்த உணர்வுகளின் அர்த்தங்கள் விளங்க முடியாமல் குழம்பியது…
அதெல்லாம் கண்மணி அறியவில்லை… அவள் ரித்விகாவைப் பார்த்தால் தானே… அவள் தன் உலகத்தில் இல்லையில்லை... கணவன் நினைவுகளில் அல்லவா இருந்தாள்....
”என்ன சொன்ன..?? என் மேல உங்க அண்ணா பாசமா இல்லைனு…” என்றபடி கண்மணி இப்போது ரித்விகாவைப் பார்க்க… ரித்விகா முக பாவத்தில் தான் சொல்ல வந்ததை அப்படியே நிறுத்திவிட்டாள் கண்மணி…
அப்போதுதான் கண்மணிக்கும் புரிந்தது… சின்னப் பெண்ணிடம் தான் என்னவெல்லாமோ பேசிக்கொண்டிருக்கின்றோம் என்று…
இப்போது ரித்விகா…
“எங்க அண்ணா… சிரிச்சா பழைய மாதிரி இருக்கனும்னா… அவர டைம் மெஷின வச்சு அந்த வருசத்துக்குத்தான் கடத்திட்டு போகனும்.. அப்படி போனா… நீங்க இருக்க மாட்டீங்க… பரவாயில்லையா” என்று கிண்டலடிக்க…
அதுவரை மலர்ந்திருந்த கண்மணியின் முகம் இப்போது சட்டென்று கூம்ப… ரித்விகா நாக்கைக் கடித்தவளாக…
“நாம வேணும்னா… ஃப்யூச்சர் போயிறலாம் அண்ணி… அப்போ கண்டிப்பா எங்க அண்ணா சந்தோஷமா இருப்பார்…. அப்போ அவர் கூட நீங்க இருப்பிங்க… ” என்று மாற்றிச் சொல்லியவளாகக் கண்ணடிக்க…. இப்போது கண்மணியின் முகம் இயல்பு நிலைக்குத் திரும்பியது…
“ஹப்பா… என்ன ஒரு அறிவு என் ரித்திம்மாக்கு…. போகலாமா பெரிய மனுசியே…” என்று ரித்விகாவை செல்லமாகக் கிண்டலடித்த கண்மணி அவளை அழைத்துக் கொண்டு கோவிலை விட்டுக் கிளம்பினாள்…
----
அடுத்து கண்மணியும்… ரித்விகாவும்… வந்த இடம் ’ஆர்கே ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரீஸ்’
’ஆர்கே ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரீஸ்’ என்ற பெயர் தாங்கிய நுழைவாயிலின் முகப்பைப் பெருமையாகப் பார்த்தபடியே… அந்த சாலை வழியே உள்ளே நுழைந்தவர்கள்… இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடத்திற்கு வந்திருந்தனர்…
வெறும் கம்பிகளால் வேலி சுற்றி கட்டப்பட்டிருந்த அந்த பரந்து விரிந்த இடம்… இன்று சுவர்களால் சூழப்பட்டிருந்தது…
முதலில் எல்லாம் ஏதோ பெயருக்கு… வெறும் கதவு மட்டுமே அந்த இடத்தின் காவல் பொறுப்பை கையாண்டிருந்திருக்க…. இப்போது பெரிய நுழைவாயில் பெரிய இரும்புக் கதவு அதன் ஓரத்தில் ஒரு வாயில் காவலாளி காவல் என மாறி இருந்தது…
கண்மணி எப்போது வந்தாலும்… இங்கு சில இயந்திரங்கள் சத்தம் கேட்கத்தான் செய்யும்… அப்போது மொத்தம் நான்கே நபர்கள்… இப்போதோ… கிட்டத்தட்ட இருநூறு நபர்கள்..
முதலில் எல்லாம் வெறும் சத்தம்… ஒரே மாதிரியான இயந்திரங்களின் ஓசை… இப்போதோ வித விதமான இயந்திரங்களின் இரைச்சல்… அதையும் மீறி தொழிளார்களின் குரல்களும் ஒலிக்க… ஆம்!!! பெயர் கூட வைக்கப்படாதிருந்த நட்ராஜின் பட்டறை இன்று ’ஆர்கே ஆட்டோமொபைல்’ தொழிற்சாலையாக இல்லை சாம்ராஜ்யமாக மாறி… கம்பீரமாக அவளை வரவேற்றது…
உண்மையைச் சொல்லப் போனால்… அந்த சாம்ராஜ்ஜியத்தின் அரசியிடம் இருந்த கம்பீரம் இப்போது அந்த சாம்ராஜ்ஜியத்திலும் பரவி இருந்தது…
எப்போதுமே நிமிர்ந்த நன்னடைதான் கண்மணிக்கு… என்றுமே கண்மணி என்பவள் அரசிதான்… இன்றும் அப்படித்தான்…
இன்னும் சொல்லப் போனால்… கண்மணியின் ராஜ நடைக்கு இப்போதுதான் அந்த இடமும் பொருத்தமாக மாறி இருந்தது…
தன் கணவனின் தங்கையுடன் தொழிற்சாலையின் அலுவலகப் பிரிவை நோக்கி நடந்த கண்மணி… கூடவே தன்னவனின் நினைவுகளையும் தனக்குள் அசை போட்டபடிதான் வந்து கொண்டிருந்தாள்…
இரண்டே மாதத்தில் இந்த அளவுக்கு சாத்தியம் என்றால் அதன் பின் ரிஷியின் உழைப்பு மட்டுமே… அதுவும் திடீரென்று வந்தது அல்ல… அதுவும் இத்தனை தொழிலாளர்கள்… எல்லாம் உடனடி சாத்தியமா என்ன???
இந்த ஐந்து வருடங்களில்…. கொஞ்சம் கொஞ்சமாக அவன் திட்டமிட்டு வந்ததே காரணம்… மற்றவர்கள் கண்ணுக்கு திடீரென்று என்று தோன்றினாலும்… அது அப்படியல்ல என்பது ரிஷியை அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்… ரிஷி வாய்ப்புக்காக காத்திருந்தான் என்பது மட்டுமே உண்மை… அதற்கான மூலதனங்களை எல்லாம் விதையாக விதைத்தபடி தன் குறிக்கோளை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றான் என்பதை நன்றாகவே உணர முடியும்…
மற்றவர்களுக்கு எப்படியோ… கண்மணிக்கு அது நன்றாகவேப் புரிந்தது…
“அந்த ஒரு ரூபாயை வச்சு நான் சூப்பர் ஸ்டார் ஆகிருவேன்னு பயப்படுறியா” என்றோ ரிஷி சொன்னது…
கண்மணிக்கு இன்று ஞாபகம் வர… அந்த ஒரு ரூபாய் கூட தேவையில்லை என்று இதோ தன்னவன் அவனை நிருபித்துக் கொண்டிருக்கின்றான்…
தனக்குள் எண்ணங்களில் சுழன்றபடி வந்து கொண்டிருந்தவளிடம்
”அண்ணி… என்ன திங்க் பண்ணிட்டே வர்றீங்க… ”
கேட்ட ரித்விகாவிற்கு ’ஒன்றும் இல்லை’ என்பது போல தலையை அசைத்தபடி மீண்டும் மௌனித்தாள் கண்மணி…
அதன் பின் உள்ளே போனவர்கள்… முதலில் அழைத்தது வேலன் தினகரைத்தான்… அவர்களிடம் தாங்கள் கொண்டு வந்திருந்த பொருட்களை எல்லாம் கொடுத்து விட்டு… அடுத்து சென்றது நட்ராஜ் அறைக்குத்தான்…
---
நட்ராஜின் அறையில் ரிஷி… பார்த்திபன்… நட்ராஜ் மூவரும் பேசிக் கொண்டிருக்க… கண்மணியைப் பார்த்தவுடன்… பார்த்திபனும்… நட்ராஜும் அர்த்தப் புன்னகை விரிக்க… கண்மணியும் அதை உணர்ந்தவள் போல அவர்களைப் பார்த்தபடியே அவர்கள் அருகே போய் நின்றாள்…
ரிஷியோ இவர்கள் வந்ததை எல்லாம் கவனிக்கவே இல்லை… அவனுக்கு அவன் கையில் உள்ள கோப்புதான் முக்கியம் என்பது போல..
“சார்… ஃபர்ஸ்ட் லெவெல் டெலிவர் பில் பேமண்ட்… இதுக்கெல்லாம்… ஆடிட்டிங் ஆஃபிஸ்ல’ என்று பேசியபடியே நிமிர்ந்த போதுதான் கண்மணியும் அவன் தங்கையும் அங்கு வந்திருப்பதே அவன் பார்த்தவனாக… அவர்களிடம் ஒன்றுமே பேசாமல்… வேகமாக மணியைப் பார்த்தான்…
மணி 3 தான் ஆகி இருக்க… ரிஷியின் புருவங்கள் சுருங்கியது… சட்டென்று தங்கையின் மீதுதான் அவன் ஆராய்ச்சிப் பார்வை போனது…. ரித்விகா இயல்பாக இருக்க…
கண்மணியிடம் திரும்பியவன்..
“என்னாச்சு… இவ்ளோ சீக்கிரம்… ஏன்… “ அடுத்தடுத்து அவன் கேள்விக்கணைகளை கண்மணியிடம் அவன் தொடுக்க ஆரம்பிக்கும் போதே…
கண்மணியிடமோ அவள் கணவனைவிட விட வேகமாக பதில் வந்தது
“ஸ்போர்ட்ஸ் டே ஆக்டிவிட்டிக்காக ட்ரையல் ப்ராக்டிசஸ் போய்ட்டு இருக்கு… சோ நாங்க பெர்மிஷன் போட்டுட்டு வந்துட்டோம்… ரித்வி ரொம்ப நாளா இங்க வரனும்னு கேட்டுட்டு இருந்தா… சோ வந்துட்டோம்… வரக் கூடாதா…” படபட பட்டாசாக கண்மணி பேசினாலும்…. கண்மணியின் குரலில் மென்மையும் உரிமையும் அதனுடன் கூடவே இருந்தது என்ன!!!???…
அங்கிருந்த பார்த்திபன்… அம்பகம் பள்ளியின் முதல்வர் ராஜத்தின் மகன்…. சட்டென்று கண்மணியை உற்று நோக்கினான்… முதன் முதலாக கண்மணியிடம் வித்தியாசம் உணர்ந்த காரணத்தினால்…
அவன் இதுவரை பார்த்திருந்த கண்மணி இன்று ஒரே நிமிடத்தில் வேறாக உணரவைத்தாள் …
கண்மணி அவனது அம்மாவிடம் பேசும் போது கவனித்திருக்கின்றான்… நட்ராஜிடம் பேசும் போது… ஏன் அர்ஜூன்… நாரயண குருக்கள் என அனைவரோடு பேசும் போது பார்த்திருக்கின்றான்… அவளிடம் எப்போதுமே ஒரு விதமான அதிகாரத் தொணி… இல்லை கருத்துகளை விளங்க வைக்கும் நிதான பாணி இருக்கும்… ஆனால் இன்று… அவள் ரிஷியிடம் பேசும் போதோ… இந்த அளவுக்கு கண்மணி பட படவென்று பேசுவாளா… ஆச்சரியத்துடன் பார்த்திபன் கண்மணியையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்
அதே போல அவளது குரலில் குழந்தை போல மென்மையான பாவம் கேட்டறிந்ததே கிடையாது… ரிஷியோடு பேசும் போது அவள் வேறு மாதிரியாக பேசுகிறாளோ… வேறு மாதிரியாக இருக்கிறாளோ…. அந்த அளவுக்கு கண்மணியிடம் வித்தியாசம் உணர்ந்தான் அந்த பார்த்திபன்…
அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே… தினகரும்… வேலனும் உள்ளே வந்திருந்தனர்…
அப்போது ரிஷி… கண்மணியிடம்…
“ரித்விய நீ கூட்டிட்டு வரதுன்னா… எனக்கு போன் பண்ணச் சொல்லிருக்கேன்ல..” என்றவன் குரலில் அழுத்தம் மட்டுமல்ல்லாமல்… கொஞ்சம் கோபம் கலந்த அதட்டல் கூட எட்டிப் பார்க்க… அனைவரின் முன்னிலையில் கண்மணியிடம் இப்படி பேசுகிறோம் என்றெல்லாம் ரிஷி பார்க்கவில்லை
ரிஷியின் இந்த அழுத்தத்தில் அங்கிருந்த மற்றவர்களோ கண்மணி என்ன நினைப்பாளோ.. என்ன சொல்லப் போகிறாளோ என்று பார்க்க…
அவளோ…
“சாரி சாரி ரிஷி… மறந்துட்டேன்… இனிமேல் இப்படி பண்ண மாட்டேன்” என்று அடுத்த நிமிடமே சரண்டராக…
சில நொடிக்கு முன் கடுப்பைக் காட்டியவனா இவன் எனும்படி…. ரிஷியும் இப்போது இயல்பாகி அவளைப் பார்த்து புன்னகைத்திருந்தான்…
ஆனால் இவர்களின் உரையாடலில்… அங்கிருந்த மொத்த பார்வையாளர்களும்தான்… விசித்திரம் குப்தர்களாக ஆகி இருந்தனர்…
அதிலும் பார்த்திபனுக்கு… சொல்லவே வேண்டாம்
கண்மணியின் நடவடிக்கைகள் அவனுக்கு விசித்திரமோ விசித்திரமே… சொல்லப்போனால் பார்த்திபன் கண்மணியிடம் நேரடியாகப் பேசிப் பழக்கம் இல்லை… ரிஷியிடம் பேசிய அளவுக்கு கூட கண்மணியிடம் பேசியது இல்லை…
ஆனால் கண்மணியைப் பற்றி மற்றவர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கின்றான்… சில சமயங்களில் கண்மணி மற்றவர்களோடு பேசி நேரடியாகப் பார்த்திருக்கின்றான்…
அப்படிப்பட்ட பார்த்திபனுக்கே கண்மணியின் நடவடிக்கைகளின் வித்தியாசம் உணர்ந்திருக்க... இன்னொன்றும் அவனுக்கு நெருடியது
அர்ஜூன் பார்த்திபனுக்கு மிகவும் நெருக்கம்… அர்ஜூன் இந்தியா வந்து மீண்டும் திரும்பிப் போகும் போதெல்லாம்… இவனது தாய் ராஜத்திடம் … கண்மணியை பார்த்துக் கொள்ளச்சொல்வதோடு… இவனிடம் கூட கண்மணியைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டுத்தான் செல்வான்… அப்படி கண்மணியை ஒவ்வொரு நொடியிலும் நினைக்கும் அர்ஜூனை விட இந்த ரிஷி எந்த விதத்தில் கண்மணியைக் கவர்ந்தான் என்றே தோன்றியது…
இத்தனைக்கும் ரிஷி கண்மணியைப் பெரிதாகக் கண்டுகொள்ளாதது போலவே தோன்றியது… பார்த்திபன் ஆர்கே இண்டஸ்டிரீஸ்க்கு லீகல் அட்வைஸராக மாறிய காரணத்தால் ரிஷியிடம் இப்போது அடிக்கடி பேசும் வாய்ப்புக்கள்.. ரிஷி என்னும் தனிமனிதனாக… ஒரு வளரும் பிஸ்னஸ் மேனாக பார்த்திபனை ஆச்சரியபடுத்திய போதும்… கண்மணியின் கணவன் ரிஷியாக ஒரு நாளும் ஆச்சரியப்படுத்தியதில்லை…
பார்த்திபனிடம் ரிஷி பேசும் போதெல்லாம் அடிக்கடி கேட்கும் வார்த்தைகள்… அவன் தங்கைகள் தாய் மற்றும் தொழில்… இதெல்லாம் தாண்டி என்றால் நட்ராஜ் மட்டுமே
அதனாலோ என்னவோ பார்த்திபனைப் பொறுத்தவரை… கண்மணிக்கு ரிஷியை விட அர்ஜூன்தான் பொருத்தமானவன் என்ற எண்ணமே அவனை ஆக்கிரமித்திருந்தது….
அதோடு அர்ஜூனுக்கு கண்மணி மேல் இருக்கும் அக்கறை… காதல்… பாசம் இதெல்லாம் பார்த்தவனுக்கு… ரிஷி அந்த அளவுக்கு கண்மணி மேல் அக்கறை கொள்ள வில்லையோ என்றேதான் தோன்றும்… ரிஷியுடன் பேசும் போதெல்லாம்… இப்படித்தான் நினைப்பான்… கண்மணி தவறாக முடிவெடுத்து விட்டாளோ என்று…
ஆனால் இன்றுதான் கண்மணியை ரிஷியோடு சேர்ந்து பார்க்கின்றான்… அவனோடு பேசும் விதத்தையும் கவனிக்கின்றான்…
கண்மணிக்கு ரிஷி மேல் இருக்கும் பிரியத்தை… மூன்றாம் மனிதனான அவனாலேயே சில நொடிகளிலேயே புரிந்து கொள்ள முடிந்ததுதான்… ஆனால் அர்ஜூன்??? …. என கண்மணி ரிஷி அர்ஜூன் என ஒரு நொடியில் சுற்றி வந்த பார்த்திபன் பிறகு என்ன நினைத்தானோ…
”அது அவரவர் வாழ்க்கை… நாம் என்ன செய்வது…” தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான்…
இதற்கிடையே வந்த வேலன் தினகரிடம் பார்வையாலேயே அவர்களிடம் ,“எல்லாம் ஓகேவா” என்று சைகையால் கண்மணி கேட்க…
வேகமாக வேலன் தலை ஆட்டினான்…
அவன் தலையாட்டலை உள்வாங்கிய கண்மணி…
ரிசி, நட்ராஜ் பார்த்திபனிடம் திரும்பியவளாக “நீங்க பேசிட்டு இருங்க… நான் ரித்விகாக்கு நம்ம யூனிட் லாம் காட்ட கூட்டிட்டு போய்ட்டு வர்றேன்”
கண்மணியும் மற்றவர்களும் அங்கிருந்து நகர… பார்த்திபன், நட்ராஜ் மற்றும் ரிஷி மட்டுமே…
கண்மணியின் சைகைகளை... கண் அசைவை மற்றவர்கள் வேண்டுமென்றால் கவனிக்காமல் இருக்கலாம்.... ரிஷி அறியாதவனா... வழக்கம் போல... கவனிக்காதவன் போல... மீண்டும் தன் கவனத்தை கையில் இருந்த கோப்பில் வைத்தான் .
----
/*நீயும் நடந்தால்
என்னை கடந்தால் ஒரு
பூங்காவே என் மேலே
மோதும் சுகம்
கொன்று விட்டதே
உன் ஒரு பார்வையே அன்பு
செய்திடு என் அதிகாரியே*/
புதன் கிழமை அத்தியாயம் 36-2 இந்த வாரத்திலேயே....
Nice update 😊