I’ve posted 9th EPISODE of கண்மணி... என் கண்ணின் மணி
/*
முழுக்க முழுக்க இது ரிஷியோட ஸ்டோரி... அவனோட லைஃப் க்ராஃப் தான் இந்த ஸ்டோரி... ரிஷி இந்த கேரக்டர் சேஞ்ச்... ஏன் மாறுகிறான்... கண்மணி எப்படி அவனோட லைஃப்ல வருகின்றாள்... ஆஃப்டர் என் உயிரே என் உறவே... ஹஸ்பெண்ட் அண்ட் வைஃப் உறவின் நுண்ணிய உணர்வுகள் பற்றிய கதை
அண்ட் பெருசா ஃப்ளாஸ்பேக் இல்லாமல் சஸ்பென்ஸ் இல்லாமல் ஆன் த ஃப்ளோ ல எழுத ட்ரை பண்ணிருக்கேன்... இப்டி எழுத வருமான்னு தெரியலை... ரைட்டரா இதுதான் இந்த கதையில சேலஞ்ச் எனக்கு.. படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்
*/
அத்தியாயம் 9:
ரிஷியின் தந்தை தனசேகர், அவன் நினைத்தது போல் உடனடியாக ரிஷியிடம் பணத்தைப் பற்றி விசாரிக்காமல் போக.. ரிஷியும் பண விபரத்தை உடனடியாக தன் வீட்டில் சொல்ல வில்லை.. கேட்டால் சொல்லிக் கொள்வோம் என்று அசட்டையாக விட்டு விட்டான்…. மகிளாவிடம் மட்டுமே சொல்லியிருந்தான்
2 நாட்கள் சென்றிருந்த நிலையில்..
”மச்சான்… என்னடா நோட்ஸ் எடுக்கிற…. ஏதாவது புரியுதா என்ன…” வகுப்பில் தன் அருகில் வெகு தீவிரமாக எழுதிக் கொண்டிருந்த விக்கியின் காதுக்குள் மெதுவாக முணுமுணுத்தான் ரிஷி…
ரிஷியின் வாய் பேசினாலும்… கண் முன்னால் வகுப்பெடுத்துக் கொண்டிருந்த பேராசிரியரிடம் இருந்தது… என்னவோ தீவிரமாக கவனிக்கும் பாவனையில் வேறு வைத்திருந்ததுதான் உச்சக்கட்ட காமெடி…
ரிஷி எந்த தொணியில் கேட்டானோ… விக்கியும் அதே தொணியில்…
“எனக்கு புரியுதுடா…” என்றவாறு மீண்டும் வகுப்பைக் கவனிக்க…
“மேத்ஸ்னாலே அலர்ஜிடா… ஏதோ ட்வெல்த் மேத்ஸ் மிஸ் அழகா இருந்தாங்கன்னு பார்க்க ஆரம்பிச்சு ஜஸ்ட் பார்டர்ல பாஸ் ஆகிட்டேன்… இங்க வந்து மறுபடியும் மாட்டிக்கிட்டேன்… கருமம் டா கால்குலஸாம்… என்ன இண்டெக்ரலோ… டிஃபெரென்ஷியலோ ஒரு மண்ணும் சுத்தமாப் புரியலை…” என்று புலம்பியவாறே தனது மொபைலை எடுத்து நோண்ட ஆரம்பிக்க…
நண்பனின் புலம்பலில் மென்னகை புரிந்தபடியே தனது கவனத்தை மீண்டும் பாடத்தில் வைத்தான் விக்ரம்…
”அடப் போங்கடா நீங்களும்… உங்க கால்குலசும்” என்று ரிஷி சலித்துக் கொண்டிருந்த போதே… அவன் மொபைல் மிளிர… வேகமாகப் பின்னால் திரும்பிப் பார்க்க… அவனது இன்னொரு நண்பர்கள் குலாம் அவனது மொபைலை பார்க்கச் சொல்ல… அதன் பிறகு அவனது கணித வகுப்பாவது ஒண்ணாவது…
அடுத்த சில வாரங்களில் அவர்களோடு செல்லப் போகும் கோவா ட்ரிப்புக்கான ப்ளானை தனது பின்னால் அமர்ந்திருந்த நண்பர்களுடன் வாட்சப் குழுவில் வைத்து பேசிக் கொண்டிருக்க… அப்போது அதே நேரம்
கண்மணியின் மெஸேஜும் நோட்டிஃபிகேஷன் பிரிவில் வந்திருக்க…. அதை எடுத்துப் பார்த்தான்…
”அன்று மாலை ஹாஸ்பிட்டலில் இருந்து வீட்டிற்கு செல்வதாக…” அனுப்பி இருந்தாள் கண்மணி…
“அவகிட்ட… வாய் விட்டதானே… இதோ இப்போ மெஸேஜ் அனுப்பிட்டா… போய்த்தான் ஆகனும் நீ” என்று மனசாட்சி சொல்லி முடிக்க… பிடித்தம் இல்லை என்றாலும்… மருத்துவமனைக்கு போக முடிவு செய்தான் ரிஷி….
ஏனென்றால் அவன் தான் கண்மணியிடம் நடராஜ் டிஸ்சார்ஜ் ஆகும் போது சொல்லச் சொல்லி இருந்திருக்க… கண்மணியும் செய்தி அனுப்பி இருக்க… சொல்லி விட்டு போகாமல் இருந்தால் நன்றாக இருக்காது என்று ரிஷியும் மருத்துவமனைக்கு செல்ல முடிவெத்திருந்தான்
“சும்மா ஒரு வாய் வார்த்தைக்கு சொல்லிட்டு வந்தோம்… அப்பாவை வீட்டுக்கு கூட்டிட்டு போகும் போது சொல்லு… வருகிறேன்னு… அதுக்கு மெஸேஜ் அனுப்புவாளா” எரிச்சலாக போனைக் கீழே வைத்தவனுக்கு…
கண்மணி என்ற பெண்ணுக்கு... அப்படிச் சொல்வதை விட நடராஜ்க்கு உதவி செய்தோம்... அதோடு முடிந்து விட்டது அவனுக்கு… மற்ற படி கண்மணி அவனை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை…. என்னதான் ரிஷி தன் குண இயல்புகள் படி அவளிடம் இயல்பாக பழகுவது போல காட்டிக் கொண்டாலும்… கண்மணியின் அமைதியான அழுத்தமான குணம் ரிஷியை பெரிதாக ஈர்க்க வில்லை என்பதே உண்மை...
வகுப்புகள் முடிவடைந்த நிலையில்…. விக்கி ரிஷி இருவருமாக வகுப்பறையை விட்டு வெளியில் நடந்து வர…
“இன்னைக்கு கிளாஸ் இண்ட்ரெஸ்ட்டிங் டா…” என்ற விக்கியை… ரிஷி வேற்று கிரக வாசியைப் போல் பார்க்க…
“என்ன பார்க்கிற… கால்குலஸ் பற்றி தான் சொல்றேன்… கால்குலஸ் இஸ் நத்திங் பட் இட்ஸ் அ சேஞ்ச்… சிம்பிளா சொல்லனும்ணா x லருந்து Y மூவ் ஆகுற… அந்த மாற்றதுக்கு “ என்று ஆரம்பித்த போதே… ரிஷி கதறியவனாக
“ஸ்டாப் ஸ்டாப்…. போதும்டா… இதுக்கு அந்த மேத்ஸ் மேடமே பரவாயில்லை” என்றவன்
“அப்பா சாமி ஆளை விடுடா…. ஃபர்ஸ்ட் டெஸ்க் ஸ்ரேயா இருக்காள்ள அவதான் உன்னைக் கரெக்ட் பண்ண ஏதாவது ஐடியா குடுன்னு கேட்டா… மேத்ஸ்ல டவ்ட் கேட்டா போதும்… பையன்… அப்டியே அதுல முழுகிருவான்… அதை கேட்ச் பண்ணி நீயும் ஆளைக் கரெக்ட் பண்ணிடலாம்னு சொல்லிருக்கேன்… வரச் சொல்லவா… நீ என்ன சொன்னாலும் கேட்பா… அவகிட்ட இப்டி அனுபவிச்சு சொல்லு…. என்னை விட்ருடா” என்று ரிஷி பரிதாப பாவனையில் சொன்ன போதே விக்கி நண்பனை முறைக்க….
“சரி அதை விடு” என்று ரிஷி பேச்சை மாற்றியபடி…. நடராஜை பற்றிக் கூறி… விக்கியை மருத்துவமனைக்கு அழைக்க… இப்போது விக்கி ரிஷியை விசித்திரமாகப் பார்த்து வைத்தான்….
“உனக்கு என்னடா ஆச்சு…. அந்த பொண்ணு போன் நம்பர்லாம் உன்கிட்ட இருக்கு… நேத்து கூட அவரைப் போய் பார்த்துட்டு வந்த… இன்னைக்கு மறுபடியுமா….” என்று எரிச்சலாகக் கேட்க
“எனக்கு ஒண்ணும் ஆகலை…. ஆக்சுவலா நேத்து நான் போனதுக்கு ரீசன்” எனும் போதே…
“நான் வரலை… நீயும் போக வேண்டாம்” என்று ரிஷியைக் பேசவிடாமல்… விக்கி கட்டளை போல் கூற…
“செல்ஃபிஷ்டா நீ…… நடராஜ் சார் உனக்காக எவ்ளோ ஹெல்ப் பண்ணினார்…” ரிஷியும் விடாமல் கேட்க…
“அவர் ஹெல்ப் பண்ணினதுக்குத்தான் பே பண்ணிட்டோம்ல… அவ்வளவுதான்… நமக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு” என்று தோளைக் குலுக்கியவனிடம்… பரிதாபப் பார்த்தான் ரிஷி இப்போது…
நண்பனின் பார்வை புரியாமல் விக்கி கேள்வியாகப் பார்க்க…
”டேய் விக்கி நீயும் வாடா… அந்த கண்மணிப் பொண்ணு போர்டா… அட்லீஸ்ட் நீ வந்தாவது நீ அவளை முறைக்க…. அவ உன்னை முறைக்கன்னு…. கொஞ்சம் டைம் பாஸ் ஆகும்… அது பேசவே மாட்டேங்குதுடா… இதுல என்னை நல்லவன்னு வேற நம்புது… ஏதோ ஹெல்ப் பண்ணிட்டோம்னு… ஜஸ்ட் சும்மா ஒரு பேச்சுக்கு உங்க அப்பா டிஸ்சார்ஜ் ஆனா சொல்லுன்னு சொன்னேன்…. ”
என்ற ரிஷி… கெஞ்சியபடியே…
“இங்க பாரு…. “ என்று தனக்கு வந்த குறுந்தகவலைக் காட்டியவன்…
“போகலைனா… வாக்கு தவறினவனாகியிருவேன்… நண்பனைக் காப்பாத்துடா” பொய்யாக அலுத்தவனிடம்
“அவளை எல்லாம் ஒரு பொண்ணுன்னு நெனச்சுட்டு…. பல்லைக் காமிச்சுட்டு நம்பர் கொடுக்கத் தெரிஞ்சது தானே… இப்போ அனுபவி…” என்றான் விக்கி உதட்டில் அடக்கிய புன்னகையோடு… அதோடு விடாமல்…
“என்னை வீட்ல விட்டுட்டு ஹாஸ்பிட்டல் போ…. இல்லை எங்கேயோ போ” என்று தன் பிடிவாதம் மாறாமல் விக்கி இருக்க… ரிஷியும் அதற்கு மேல் வற்புறுத்த வில்லை…
இப்படியாக அடுத்த சில நிமிடங்களில் இருவருமாக கல்லூரியின் வெளிக் கேட்டிற்கு வர… இவர்களைத் தாண்டி… ரிஷியின் அந்த நண்பர்கள் கூட்டம் ஒரு ஜீப்பில் கடக்க….
ரிஷியைப் பார்த்து…. அந்த கூட்டம் உற்சாகமாக கை அசைத்தபடி
“ரிஷி…. உன்னை மிஸ் பண்றோம்டா மச்சி… பாண்டிச்சேரிதான் போகிறோம்… வரனும்னு தோணுச்சுனா வந்திருடா… ஹே…. பை….” ஆர்ப்பரித்து கத்தியபடி அவனைத் தாண்டிச் செல்ல..
ரிஷி கொஞ்சம் கூட அவர்களைக் கண்டுகொள்ளாமல் பின்னால் அமர்ந்திருக்க… அதுவும் அமைதியாக கொஞ்சம் இறுக்கமாக அமர்ந்திருக்க… சட்டென்று விக்கி தன் இருசக்கரத்தை நிறுத்தி நண்பனைப் பார்க்க…
“என்னடா” என்று மட்டும் ரிஷி அவனைப் பார்த்து வைக்க…
“அந்த நட்ராஜ் பார்க்க போறதுனால… இவனுங்க கூட போகலைங்களா சார்… அதுதான் இவ்ளோ ஃபீலா” என்று இளக்காரமாகக் கேட்க..
‘ப்ச்ச்… அதெல்லாம் இல்லை…” என்ற போதே அவன் முகம் சரியாக இல்லாதது போல் இருக்க… விக்கிக்கு ரிஷியின் தொய்ந்த முகம் ஏதோ உணர்த்த…
“ஏதாவது மறைக்கிறியாடா என்கிட்ட… உன்கிட்ட அவனுங்க வம்பு பண்றாங்களா…” என்று விக்கி கேட்ட போதே
இப்போது ரிஷி…
“லூசாடா… நீ” என்பது போல ஒரு பார்வை பார்த்தவன்…
“ப்ச்ச் ஒண்ணுமில்லைடா… நீ வண்டிய எடு” என்று சொல்ல… விக்கியோ… அடமாக அப்படியே நின்றான்…
“இப்போ சொல்றியா இல்லையா.. இவங்க கேங்கா போறானுங்க… அதுவும் உன்னை விட்டுட்டு… நீ போகலை அவங்க கூட… உன்னை இப்டிலாம் விட்டுட்டு போக மாட்டானுங்களே… உன் உயிர் நண்பர்கள்” என்று எகத்தாளமாகக் கேட்க…
அமைதியாகவே நின்றிருந்தான் ரிஷி அப்போதும்…. நண்பனைக் கூடப் பார்க்காமல் எங்கோ பார்த்தபடி இருக்க…
ரிஷியின் இந்த அழுத்தமான அமைதி விக்கிக்கு புதிதாக இருக்க…
“சொல்லுடா ஏதாவது பிரச்சனையாடா…” விக்கி அழுத்திக் கேட்க…
இப்போது ரிஷி சுதாரித்து…
“பிரச்சனைலாம் இல்லைடா… நெக்ஸ்ட் வீக் அவங்க கூட கோவா போக இப்போதான் ப்ளான் போட்டுட்டு இருந்தேன்… நீ நினைக்கிற மாதிரிலாம் ஒண்ணும் இல்லை“ என்று முகத்தை சாதாரணமாக இருப்பது போல சட்டென்று மாற்ற…
விக்கிக்கு அவன் மாற்றிய தோரணையே நண்பன் ஏதோ மறைக்கின்றான் என்று நன்றாக விளங்க…
“இப்போ ஏன் போகலைனு கேட்டேன்… அதை மட்டும் சொல்லு” விக்கி அழுத்தமாக கேட்டான்… விக்கி நின்ற தொணியே அவன் கண்டிப்பாகப் பதில் சொல்ல வேண்டும் என்ற விதத்தில் இருக்க…
சற்று திரும்பி தலையைக் கோதியவன்… அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தீர்மானித்தவனாக… நண்பனிடம் திரும்பினான்… விக்கியை நோக்கி கூர்ப் பார்வையைப் வீசியபடியே
“நான் உன் ஃப்ரெண்ட்தானே… நான் எங்க கூப்பிட்டாலும் வருவியா… ஐ மீன் என்கூட தண்ணி அடிக்க கூப்பிட்டா வருவியா?...”
“ம்ஹூம்… “ முறைத்தபடியே தலை அசைத்தான் விக்கி…. நான் என்ன கேட்டேன் இவன் என்ன கேட்கிறான் என்ற நோக்கில்
”நீ என்னோட பழகுகிற முறையில… உனக்கும் எனக்குமான சில லிமிட்ஸ் இருக்குதுதானே… ஆனாலும் நீயும் நானும் ஃப்ரெண்ட்… சோ அதே மாதிரிதான்… அவங்களுக்கும் எனக்கும் உள்ள பழக்கம்…” என்று முடிக்க
விக்கியின் புருவங்கள் நெறிந்தன யோசனையில்… அது தந்த பதில்.… உணர்ந்த நொடி விக்கியின் கண்கள் ரிஷியை கோபத்தோடு நோக்க
நண்பனும் விசயத்தைக் கிரகித்துக் கொண்டான் என்று தெரிந்தவனாக… தொடர்ந்தான் ரிஷி
“3 வீக்ஸ் பிஃபோர்… அவங்க கூட போன போது… “ என்ற ரிஷி நண்பனைப் பார்க்க முடியாமல்… வேறு புறம் சில நிமிடங்கள் பார்த்தபடி இருந்தவன்… பின் தன் பேச்சைத் தொடர்ந்தான்
“ஒரு பொண்ணையும் கூட்டிட்டு வந்திருந்தாங்கடா” என்று ரிஷி சொன்ன போதே…. விக்கி நெற்றிக் கண் இருந்திருந்தால் கூட நண்பனை எரித்திருப்பான்… அந்த அளவு அவனுக்கு கோபம் வந்திருக்க
அவனின் முறைப்பில்…
“டேய் டேய்… லூசு மாதிரி நீ ஏதாவது திங்க் பண்ணித் தொலைச்சிடாதா… ” படபடத்தவனாக ரிஷி அவன் முன் நின்றபடி…
“இந்த மாதிரி… பொண்ணுங்களைக் கூட்டிட்டு வருகிற பார்ட்டினா… என்னைக் கூப்பிடாதீங்கன்னு சொல்லிட்டு வந்திட்டேண்டா… இன்னைக்கு கூட அந்த மாதிரி பார்ட்டி… அதுதான் நான் வர மாட்டேன்னு சொல்லிட்டேன் போதுமா” என்று ஒரே வேகத்தில் சொல்லி முடிக்க
விக்கியோ கொதி நிலையின் உச்சத்தில் இருந்தான்….
”இதை மட்டும் நீ வீட்ல சொல்லிருந்தேன் வச்சுக்க உன்னை… அறஞ்சே இருப்பேன்…. பப்ளிக் ப்ளேஸ்… அதுவும் நம்ம காலேஜ்க்கு வெளிய… தப்பிச்ச நீ… எவ்வளவு கூலா சொல்ற” என்று பொறுக்க முடியாமல் ரிஷியைத் திட்ட ஆரம்பித்தவன்… பெருமூச்சை இழுத்து விட்டபடி
“ரிஷி… உன்னோட இந்த பழக்கம்… இவனுங்க எதுவும் எனக்கு சரியாப் படலைடா… புரிஞ்சுக்கோடா.. இவங்க ஃப்ரெண்ட்ஷிப்பைக் கட் பண்ணுடா” ஆற்றாமையில் விக்கி முடிக்க…
“நான் சின்ன பையன் இல்லைடா… என்னோட லிமிட் எனக்கும் தெரியும்… “ ரிஷி புரிந்து கொள்ளாதவனாகவே பேசிக் கொண்டிருக்க… விக்கி அடுத்த நிமிடங்களுக்கு ஏதேதோ அறிவுரைகள் கூற ஆரம்பிக்க… எதையுமே ரிஷி காதில் எடுத்துக் கொள்ள வில்லை…
அவனைப் பொறுத்தவரை… தான் தெளிவாக இருப்பதாகவேத் தோன்ற… விக்கியின் அறிவுரைகள் கடுப்பை ஏற்படுத்தி இருக்க… ஒரு கட்டத்தில் பொறுமை இல்லாதவனாக விக்கியிடம் கத்த ஆரம்பித்தான்
“நான் சொல்றேன்னு நீ தம் அடிப்பியாடா… தண்ணி அடிப்பியாடா… அதே மாதிரிதான்… நானும்… இவனுங்க கூட சுத்தறேன்னு… பொண்ணுங்க பின்னாடிலாம் போயிற மாட்டேன்… எனக்கும் ரெண்டு தங்கை இருக்காங்க… அது மட்டுமில்லாமல் என்னை நம்பி மகி இருக்கா… அவளுக்கு துரோகம் செய்வேனாடா” என்று தெனாவெட்டாகச் சொல்ல…
பல்லைக் கடித்தான் விக்கி…
“நான் உன் கூட இருக்கிறது…. அவனுங்க கூட நீ இருக்கிறதும் ஒண்ணாடா… மடையன் மாதிரி பேசாத… நான் சுயநினைவில் இருப்பேன் எப்போதும்… ஆனா நீ அப்டியாடா… தண்ணி உள்ள போனா நீ என்ன செய்றேன்னு உனக்கே தெரியாதப்போ… பெரிய இவன் மாதிரி பேசுற… எப்போதுமே ஒரே மாதிரி இருக்குமா… “ என்று விக்கி சொன்ன போது… விக்கியின் குரலில் ஒரு மாதிரியான பரிதவிப்பு மட்டுமே இருந்தது… நண்பனை இந்த சேற்றிலிருந்து அகற்ற வேண்டுமென்ற சிநேகித தவிப்பு மட்டுமே இருக்க
ரிஷி இப்போது அமைதியாகி இருந்தான் நண்பனின் பாவனையில்… அவனின் அமைதி விக்கியை தொடர்ந்து பேச வைக்க
“டேய்… இப்போ போனாங்களே… அவங்களுக்கு குடும்பம் இல்லையா… அக்கா தங்கை இல்லையா… சொல்லுடா… உனக்கு எதுவுமே புரிய மாட்டேங்குதுடா ரிஷி… இது ஒரு புதை குழிடா… அவங்களை மாதிரி உன்னையும் அவங்க கூட்டத்தோட இழுத்துருவாங்களோன்னு பயமா இருக்குடா… ப்ளிஸ் அவாய்ட் தெம் டா… நீ உண்மையிலேயே நல்லவண்டா… இவனுங்களோடா பழக்கம் தான் மகிகிட்ட கூட உன் லவ்வை அவசர அவசரமா சொல்ல வச்சுருக்கு போல…” என்ற போதே
“ஷட் அப் விக்கி… ” கிட்டத்தட்ட குரலை ரிஷி உயர்த்தி கத்த ஆரம்பிக்க… சுற்றம் உணர்ந்து
”மகியை கனெக்ட் பண்ணாத இதுல… என்னொட ஃபீலிங்ஸை அசிங்கப்படுத்துற மாதிரி இருக்குடா “ என்றவனின் குரலில் அத்தனை கடுமை வந்திருக்க… இருந்தும் தன்னை நிதானித்துக் கொண்டவனாக
“நீ சொல்றதெல்லாம் தப்பே இல்லை… பழகித் தொலச்சுட்டேன் சில விசயங்களை… ஆனால் நான் அடிக்டட் கிடையாதுடா… அதை மட்டும் புரிஞ்சுக்கோ... இதுக்கு மேல நாம இதைப் பற்றி பேச வேண்டாம்னு நினைக்கிறேன்… கிளம்பலாம்” என்று முடித்தவனுக்கு… நண்பன் சொன்னவற்றை அவன் முன் மறுத்துப் பேசினாலும்… மனதின் ஒரு ஓரத்தில் எங்கோ அவனுக்குள் குறுகுறுக்கத்தான் செய்தது…
“விக்கி சொன்னது போல போதையில் இருக்கும் போது உணர்வுகளைக் கட்டுப் படுத்தும் நிலையிலா இருப்போம்…” யோசிக்க ஆரம்பித்திருந்தான் ரிஷி…
அப்போதைக்கு யோசித்தான் அவ்வளவுதான்…. அந்த யோசனையே அவனுக்குள் இறுக்கத்தைக் கொடுக்க… முகம் தவறாமல் அதைப் பிரதிபலிக்க… அவன் முகத்தை கண்ணாடியில் பார்த்தபடியே தான் விக்கியும் வண்டியை ஓட்டி வந்து கொண்டிருந்தான்…
“நண்பன் யோசிக்கின்றானே… தன்னைத் திருத்திக் கொள்வானா” விக்கி இப்படி நினைத்து வந்து கொண்டிருக்க… அதே நேரம்…. இறுக்கமாக முகத்தை வைத்தபடி அமர்ந்து பயணித்து வந்த ரிஷியை எப்படி சமாதானப்படுத்துவது…. யோசித்தவனுக்கு… அதற்கான பதில் கிடைக்க… அடுத்த சில நிமிடங்களில் விக்கி தாங்கள் வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தது அவர்கள் தங்கியிருந்த வீட்டின் முன் இல்லாமல்… குணா மருத்துவமனையின் முன்புதான்….
Please give your support and comments here… It helps me to improve my writing and to correct my faults Thanks Praveena Vijay
Waiting for Kanmani entering into Rishi's Life
Superb
Super epi mam.
Nice ud sister. But katha konjam slow aa pora maathri irukke. My personal opinion. Please consider🙏🙏🙏
Good update.. Yes, interesting to read Rishi character and eager to know how Kanmani come into his life.
Very nice