I’ve posted 7th EPISODE of கண்மணி... என் கண்ணின் மணி
கண்மணி... என் கண்ணின் மணி-7
அத்தியாயம் 7:
வரும் வழி எங்கும்… ரிஷிக்கு விக்கியைப் பார்க்கும் போதெல்லாம் சிரிப்பு சிரிப்பாகத்தான் வந்தது....
“25 பைசா... பிச்சைக் காரன் கிட்ட கூட இப்போலாம் இருக்கிறது கிடையாது... அதை விட கீழ இறக்கிட்டாடா உன்னை.... அந்த மணி அக்கா...”
நினைக்கும் போதே விக்கிக்கு பெரிய அவமானமாக இருந்தது... அவனின் இள ரத்தம் இந்த அவமானத்திற்கே கொதிக்க.... அது அவன் கண்களில் தெரிய... நண்பன் மிகுந்த கோபத்தில் இருக்கின்றான் எனத் தெரிந்ததுதான்…. ஆனாலும் ரிஷி தன் சிரிப்பை அடக்கவில்லை.. அடக்கவில்லை என்பதை விட அடக்க முடியவில்லை...
“நீ அந்தப் பொண்ண மட்டம் தட்டனும்னு ப்ப்பெரிய திட்டத்தோட வந்த... அவ அதை எல்லாம் தூக்கி தூரப் போட்டுட்டு... உன்னை மண்ணக் கவ்வ வச்சுட்டா... போடா” என்றவன்... நண்பனின் கோபத்தை பார்த்து கொஞ்சம் கூட அசராமல்
“இந்த லுக்குக்கு ஒண்ணும் குறைச்சல் கிடையாது...... கடைசியா நமக்கு 2000 வேற நஷ்டம்” என்று வேறு சொல்லிக் காட்ட..
அந்தச் சூழ்நிலையிலும் விக்கி ரிஷியைப் பார்த்து…
“நீ எப்போட கணக்குப் பார்க்க ஆரம்பிச்ச… “ நக்கலாகக் கேட்டான்…
“ஹ்ம்ம்ம்… நீ எப்போ 25 பைசா கைல வாங்குற நிலைமைக்கு வந்தியோ அப்போதிலிருந்து….” என்று மீண்டும் சொல்லிக் காட்ட… விக்கி மீண்டும் காண்டாக…
“ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹேய்… கூல் கூல்… மறுபடியும் முருங்கை மரம் ஏறிடாதாடா….” என்றவன்…
“வேதாளம் தான் முருங்கை மரம் ஏறும்… இங்க.. விக்கிரமாதித்ய ராஜாவே ஏறிடுறாரு” மனதிற்குள் சொல்லிக் கொண்டவன்… அதன் பிறகு விக்கியை விட்டு விட்டான்… பெரிதாக ஓட்ட விட்டலை…
-----
அன்று இரவு... விக்கியின் உறவினர் வீட்டு விஷேசம் இருக்க... விக்கி தன் அண்ணன் வீட்டிற்கு கிளம்பிச் சென்று விட்டான்....
விக்கியின் அண்ணன் வீடு சென்னையில் தான் இருந்தது... அவனது அண்ணன் வேலை நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு செல்வதால்... விக்கி அங்கு தங்க வேண்டாம் என்று அவனது தாத்தா சொல்லி விட்டதால்தான்... ரிஷியோடு தங்கி இருந்தான் விக்கி...
இதுபோல.... விஷேச நாட்கள் என்றால் அவன் ஒட்டு மொத்த குடும்பமே அவன் அண்ணன் வீட்டிற்கு வந்து விடும்... விக்கியும் அங்கு சென்று விடுவான்...
அதாவது விக்கியின் குடும்பம் சென்னை வந்தால்…. விக்கியும் அவன் அண்ணன் வீட்டிற்கு வந்து விட வேண்டும் என்பது அவர்கள் குடும்பத்தின் எழுதப்படாத சட்டம்…. அதன் படி …. அன்றும் விக்கி சென்று விட்டான்...
அன்று விக்கி அவ்வாறு போகும் போது… கூடவே ரிஷியையும் அழைக்க… ரிஷியோ தன் தலைக்கு மேல் கையெடுத்து கும்பிட்டபடி…
“அய்யா சாமி… அந்த மிலிட்டரி குடும்பத்துக்கும் உனக்கும் சரியா இருக்கும்… உங்க தாத்தா உட்காருங்கன்னு சொன்னா…. எல்லாரும் உட்காருவீங்க…. சாப்பாட்ல கையை வைங்கன்னு சொன்னா அட் அ டைம்ல சாப்பாட்டுல கை வைப்பீங்க… போன தடவை வந்தப்பவே முடிவு பண்ணிட்டேன்… உங்க குடும்ப பக்கமே தலை வைத்து படுக்க கூடாதுன்னு” என்ற போதே விக்கி முறைக்க…
“கிளம்பு… கிளம்பு… உங்க தாத்தா டைமர் வச்சுருக்கப் போறாரு… 2 செகண்ட் லேட்டா போனால் கூட உனக்கு பனிஷ்மெண்ட் கொடுத்துறப் போறாருடா… “ என்றபடியே
“நீ இப்படியே எந்தப் பொண்ணையும் பார்க்காம… எந்தப் பொண்ணையும் உன்னைப் பார்க்காம.. இரு… உன் தாத்தாவே உனக்கு பொண்ணு பார்த்து மேரேஜ் பண்ணி வைக்கிறவரைக்கும் இப்டியே நல்லவனாவே இரு… அதுதான் உனக்கும் நல்லது உன் குடும்பத்துக்கும் நல்லது” என்று ஓட்ட வேறு ஆரம்பிக்க…
“டேய்… “ என்று பல்லைக் கடித்தபடி விக்கி அவனிடம் பாய ஆரம்பிக்கப் போக….
“டைம்… தாத்தா… பனிஷ்மெண்ட் ….” விக்கிக்கும் நண்பனிடம் சண்டை போடநேரம் இல்லாமல் போக…
“வந்து கவனிச்சுக்கிறேண்டா உன்னை” என்று கிளம்பிப் போய் விட்டான்…
என்னதான் ரிஷி நண்பனைப் பற்றி சொன்னாலும் விக்கியும் சாதாரண மனிதன் தானே… விக்கியும் காதல் வலையில் விழுந்து… தன் தாத்தாவின் சம்மதத்திற்கும் தவித்து நிற்க… தன் காதலியோடு கரை சேர்வானா…. காலமும் காத்திருந்தது… நாமும் காத்திருப்போம்….
----
ரிஷியோ... விக்கி வீட்டில் இரவு தங்கவில்லை என்றால்... அவனது மற்ற நண்பர்களை அழைத்து வந்து அமர்க்களப்படுத்துவான்.... விக்கிக்கும் இது தெரியும்... விக்கி ரிஷியைக் கண்டித்துப் பார்த்தான்.... ஆனால். ரிஷியோ...
“நீ இல்லாத போதுதானே விக்கி... உனக்கு பிடிக்காததை நீ இருக்கும் போது பண்ணினால் என்னைத் திட்டு... மற்றபடி என்னைக் கண்ட்ரோல் பண்ண நினைக்காத” என்று கறாராகச் சொல்லி விட...
ரிஷி வாய் வார்த்தையாக மட்டுமின்றி…. விக்கி வீட்டில் இருந்தால் வேறு யாரையும் அழைக்கவோ…. அல்லது இந்த மாதிரி விஷயங்களுக்கு அனுமதிக்கவும் விட்டதில்லை என்பதால் விக்கியும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை...
அதே போல… இன்று விக்கி அந்தப்பக்கம் போக… இந்தப்பக்கம் தனது பார்ட்டி நண்பர்களை எல்லாம் அழைத்து விட்டிருக்க… அந்தக் கூட்டத்தோடு தண்ணீர்…. தம்… என ரிஷி ஒரு ஆட்டம் ஆடிக் கொண்டிருக்க… போதை தலைக்கேறினால் என்ன நடக்குமோ என்னவெல்லாம் நடக்குமோ...
அதெல்லாம் நடந்து கொண்டிருக்க... ரிஷியின் நண்பனில் ஒருவன்.. அதிலும் விக்கியைப் பிடிக்காத நண்பன் அவன்…
ரிஷியைப் பார்த்து....
“ரிஷி...... ஆனாலும் நீ அந்த விக்கிக்கு ரொம்பதான் இடம் கொடுக்கிற... என்று ஆரம்பிக்க...
மற்றொருவனோ...
“இந்த ரிஷி அந்த விக்கிக்கு பயப்படுறாண்டா” என்று ரிஷியைத் தூண்டிவிட..
போதையின் உச்சத்தில் இருந்த ரிஷி….
“யாருடா… பயப்படுறா… உயிர் நண்பண்டா… நண்பனை மதிக்கிறேன்…. அவன் நட்பை மதிக்கிறேன்… நண்பனுக்கு பிடிக்காததை செய்யலை அவ்வளவுதான்” என்றவனுக்கு திடிரென.. தங்களை விட சிறிய பெண்... இன்று நண்பனை கேவலப்படுத்தியது ஞாபகத்துக்கு வர…
“விக்கிக்கெல்லாம் நான் பயப்படுறதா… ஹா… ஹா… கேவலம் ஒரு ஸ்கூல் படிக்கிற பொண்ணே அவனப் பார்த்து பயப்படலை… நான் அவனுக்கு பயப்படப் போறேனா…”
“போங்கடா டேய்…. என்னைப் பார்த்து இப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்டி சொல்லீட்டீங்க்களேடா… “ என்றவனை அதற்கு மேல் நிறுத்திவைக்கவா முடியும்……..
கண்மணியைப் பற்றியும்… அவள் விக்கியை அவமானப்படுத்திய விதத்தையும் குடி போதையில் உளறி விட… குடிகாரர்கள் பேச்சு மட்டும் தான் விடிந்தால் போகும் போல… அவர்கள் காதில் கேட்கும் விஷயங்களுக்கு அது பொருந்தாது போல…
அதற்கேற்றவாறு ரிஷியின் அந்த நண்பர்கள் குலாம்… அடுத்த நாள் விக்கி கல்லூரிக்குள் நுழையும் போதே… தங்கள் வேலையைக் காட்ட ஆரம்பித்திருந்தனர்
“கண்மணி அன்போடு” என ஆரம்பிக்க… தன்னை நோக்கி வந்த அந்தப் பாடலில் விக்கிக்கு முதலில் ஒன்றும் தோன்ற வில்லை….
அடுத்து வகுப்பறையில் நுழைய… அதே கூட்டம்…. அடுத்து ஒரு பாடல் பாட.. அதுவும் கண்மணியில் ஆரம்பிக்க… விக்கி சற்று சுதாரித்தான் இப்போது…
ரிஷியின் இந்த நண்பர்களுக்கு விக்கியைப் பிடிக்காது… விக்கிக்கும் இவர்களைப் பிடிக்காது…. இவர்களின் சகவாசம் வேண்டாம் என்று எத்தனையோ முறை சொல்லி இருக்கிறான்… ரிஷி கேட்டால் தானே…
சமயம் கிடைக்க விக்கி இன்று மாட்டினான்… அடுத்தடுத்து கண்மணி என்ற வார்த்தையில் ஆரம்பிக்கும் பாடல்கள் தான் விக்கியின் காதில் விழுந்து கொண்டிருக்க… அது மட்டுமல்லாமல்…. அந்த கூட்டம் கொஞ்சம் ஓவராகப் போய் கண்மணியோடு விக்கியைச் சேர்த்து, கண் காது வைத்து இஷ்டத்திற்கு ஒட்ட…. ஒரு கட்டத்தில் முடியாமல் திரும்பி அவர்களை முறைக்க ஆரம்பிக்க… அவர்கள் அப்போதும் அவனை விட வில்லை…
இவர்களுக்கு எல்லாம் அந்தக் கண்மணியைப் பற்றி எப்படி தெரியும்… ரிஷி சொல்லி இருப்பானோ… ஆனால் நண்பனைத் தவறாகவும் நினைக்கவும் முடியவில்லை…
விக்கி தன் அண்ணன் வீட்டிலிருந்து நேரிடையாக வந்திருந்ததால்… ரிஷியின் வருகைக்காக காத்திருந்தான்….
இந்தக் கும்பலோடு அவனுக்கு மோத அவனுக்கு துளி அளவும் இஷ்டம் இல்லை... ஆனால் நேற்று நடந்த பைசா விவகாரத்தை வைத்தெல்லாம் ஓட்ட… இன்னும் இன்னும் காண்டான விக்கிக்கு இப்போது புரிந்தது….
ரிஷி நேற்று ஏதோ குடி போதையில் இந்த கூட்டங்களிடம் உளறி வைத்திருக்கின்றான் என்று…. ஆக இதற்கெல்லாம் காரணகர்த்தாவான நண்பனைக் காய்ச்சி எடுக்க காத்துக் கொண்டிருக்க…. ரிஷியோ அன்று கல்லூரிக்கே வரவில்லை… விக்கி காத்து காத்து பூத்துப் போனதுதான் மிச்சம்…
முந்தைய தினம் போட்ட போதையில்… அதனால் போட்ட ஆட்டத்தில்…. ரிஷி அடுத்த நாள் காலை எங்கு எழுவது…. விக்கி வீட்டில் இருந்திருந்தால் எப்பாடுபட்டாவது எழுந்திருக்க வைத்திருப்பான்.. அவனும் அன்றும் இல்லாமல் போக… தாமதமாக எழுந்த ரிஷி கல்லூரிக்கு மட்டம் போட்டு விட்டான்…
நண்பன் கல்லூரிக்கு வர மாட்டான் இனி என்று தாமதமாகத்தான் உணர்ந்தான் விக்கி...
“வீட்டுக்கு வந்து இருக்குடா உனக்கு இருக்கு கச்சேரி” எப்போதடா கல்லூரி முடியும் என்று விக்கி காத்து இருக்க
வீட்டில் ரிஷியோ….
இன்று தான் கல்லூரிக்கு மட்டம் போட்டதற்கு கண்டிப்பாக விக்கியிடம் இருந்து திட்டு விழும் என்று தெரிந்திருந்தும் நண்பனின் வரவுக்காக காத்திருந்தான் ரிஷி… இல்லையில்லை விக்கியின் கொஞ்சும் மொழிகளுக்காக காத்திருந்தான் ரிஷி…
விக்கியும் வந்தான்… அப்படி ஒரு கோபாவேசத்தோடு… வீட்டுக்குள் நுழைந்தான்… நுழைந்த போதே… அவன் கையில் வைத்திருந்த பேக் வேகமாக ஒரு திசையில் தூர விழ… அதிர்ச்சியில் நண்பனின் முகத்தைப் பார்த்த ரிஷிக்கு உண்மையிலேயே கலவரம் உண்டானதுதான் உள்ளுக்குள்….
ரிஷி வழக்கம் போல அவனின் கோபத்தை எதிர்பார்த்திருத்தான் தான்…… ஆனால் அதில் ஒரு உரிமை இருக்கும் எப்போதும்… கோபம் தீர்ந்த பின் அறிவுரை என வழக்கமான விக்கியை எதிர்பார்க்க…
ஆனால் இன்றோ… அவன் முகத்தில் உக்கிரமான கோபம் மட்டுமே இருக்க… புருவம் சுருக்கினான் ரிஷி….
மின்னல் வேகத்தில் வந்த விக்கி……. அதே வேகத்தில் ரிஷியின் முன் நிற்க…
“என்னடா விக்கி… ஏன் இவ்வளவு கோபம்” என்று ரிஷியின் வாய் அவனையுமறியாமல் கேட்க…. அவனின் பார்வையோ நண்பனின் கோபம் என்னவாக இருக்கும் என்ற ரீதியில் இருந்தது…
“நேத்து என்னடா சொல்லி வச்ச… உன் கூட சுத்திட்டு இருக்கிற அந்த வீணாப் போன தடி மாடுக கிட்ட” கண்கள் சிவந்திருந்தன விக்கிக்கு…
“ஏன் என்னாச்சு” ரிஷியும் எரிச்சலும் கோபமும் சரிவிகிதத்தில் கேட்க… விக்கி அவனிடம் விஷயத்தைச் சொன்னவன்… சொல்லி முடித்து விட்டு
“சொல்லி வை…. நாளைக்கு மட்டும் என்னை அந்தப் பொண்ணோட சேர்த்து வச்சு ஒட்டுனானுங்க தொலஞ்சானுங்க… உன்கிட்ட சொல்லிட்டேன்… இதுக்கு மேல என்னோட அவள வச்சு ஓட்டுனானுங்க…. அதுக்கு மேல மனுசனாவே இருக்க மாட்டேன் “ விரல் நீட்டி ரிஷியிடம் எச்சரிக்கையை வைக்க……
“அடப்பாவிங்களா… எங்கிட்டேயே ஒசியில சரக்கை வாங்கி அடிச்சுட்டு… எனக்கே ஆப்பு வச்சுட்டீங்களேடா” என்று மனதிற்குள் தனக்குள்ளாகவே நொந்தபடி… விக்கி தன் முன் நீட்டிய அவன் விரலை தன் கைகளுக்குள் கொண்டு வந்தவன்…
“சாரிடா…. “ என்றான்… உண்மையான வருத்தத்தோடேயே…
“இனிமேல் அவனுங்க ஓட்ட மாட்டானுங்க்க…. அதுக்கு நான் கியாரண்டி…..” எனும் போதே…
“ஓட்டினானுங்கனா” என்று நம்பமுடியாமல் விக்கியும் விடாமல் கேட்க…
“ப்ச்ச்… நம்புடா என்னை” என்றவன்… விக்கியின் தெளிவில்லாத முகத்தைப் பார்த்தபடி கெஞ்சலாக சமாதானம் பேசப் போக… விக்கி அப்போதும் சமாதானம் அடையாமல் தன் அறைக்குள் போய்விட்டான்….
ரிஷி தன் தலையச் சிலுப்பியபடி…
“இவன் நல்லவன்னு தெரியும் இவ்வளவு நல்லவனா… ஒரு பொண்ணை வச்சு ஓட்டுனதுக்கு இவ்ளோ ஃபில்டப்பா” என்று தனக்குள் சொல்லியபடி… விக்கியின் ரூமை நோக்கி
“டேய் விக்கி… அவனவன் நம்மள எந்தப் பொண்ணோடயும் வச்சு ஓட்ட மாட்டாங்களானு… திரியிறானுங்க.. நீ என்னடான்னா ரொம்ப பிகு பண்ற…. என்னைலாம் சீனியர் பொண்ணுகளோட கூட வச்சு ஓட்றானுங்க…. வயசு வித்தியாசம் கூட பார்க்க மாட்டேங்கிறாங்கடா… “ என்று கவலையாகச் சொல்ல….. இப்போது அறையில் இருந்து வெளியே வந்த விக்கியின் முறைப்பில்..
“ஜுனியர் நீரஜா கூடவும் தான்…’ என்று முணங்கியவனைப் பார்த்து…. இப்போது விக்கி ஒரு கோணல் சிரிப்பை வீசியவனாக…
“அந்த கெஸ்ட் லெக்சரர் லிசியை விட்டுட்ட….” என்ற படியே…. விக்கி இப்போது சிரிக்க…
மனதுக்குள் நிம்மதி வந்திருந்தது நண்பனின் சிரிப்பில்… அவன் கோபம் மாறியதில்…
ரிஷி இனி விக்கியை விடுவானா என்ன…. நண்பனிடம் இன்னும் என்னென்னவோ பேசி… சரி செய்தவன்… இருவருமாக காபி போட்டு…. ஆளுக்கொரு கப்பை எடுத்துக் கொண்டு…. மீண்டும் பேச ஆரம்பிக்க… இப்போது…. ரிஷி
“இந்த வயசுல இதை எல்லாம் ஃபேஸ் பண்ணலேண்ணாதான் தப்பு விக்கி” என்று நண்பனைப் பார்த்து கண் சிமிட்டியவன்…
“விளையாட்டா எடுத்துக்கடா….. ஓட்டுறதெல்லாம் ஒரு ஃபன்னுக்கு… “ என்று முடிக்க…
“அதுக்காக… இந்த மாதிரி ஒரு பொண்ணோடவா…” விக்கியின் குரலில் அனலடிக்க… முகமோ விளக்கெண்ணெய் குடித்தார்ப் போல பாவனையில் மாறி இருக்க
ரிஷியோ… அவன் பாவனையில் சத்தமாகச் சிரித்தபடி….
“அதுக்காக…. நயன் கூடவா வைத்து ஓட்ட முடியும்”
விக்கி இன்னும் முறைக்க….
“நயன்தாராடா” என்று முடிக்க வில்லை… விக்கி கையில் வைத்திருந்த டீ கப்பை அவனை நோக்கி தூக்கி எறியப் போக…
“அப்போ…தீபிகா படுகோனே ஓகேவா…”
குரல் மட்டும் தான் விக்கிக்கு கேட்டது… ஆளைப் பிடிக்கும் முன் ரிஷி தன் அறைக்குள் போய் தாளிட்டுக் கொள்ள…
“மகி நம்பர் எங்கிட்ட இருக்குடா அதை மட்டும் ஞாபகம் வச்சுக்கோ…” விக்கி சத்தமாகக் கூற..
“சொல்லு சொல்லு…. அவகிட்ட என்ன அவ அப்பன்கிட்டயே சொல்லு…. ரிஷி அதுக்கெல்லாம் பயப்படுற ஆள் இல்லை……” என்று தெனாவெட்டாகச் சொல்ல…..
”உனக்கெல்லாம்… மகி சரியான ஆள் கிடையாதுடா…. நீ என்ன சொன்னாலும் கேட்கிற மாதிரி அவளை மோல்ட் பண்ணி வச்சுருக்க… அந்த தைரியத்தில் ஆடிட்டு இருக்க” என்று கத்தியபடி சொன்னபடி விக்கி தனது அறைக்குப் போய் விட்டான்…
ஆக மொத்தம்…. ரிஷிக்கு வாழ்க்கை குறித்த பயம் என்பது இல்லை… காதல் குறித்த தெளிவு இல்லை…. படிப்பைப் பற்றிய அக்கறை இல்லை… எதிர்காலம் என்பதைப் பற்றிய சிந்தனை அவனுக்கு அவசியமாய் இருக்காமல் போக… நிகழ்காலத்தை தன் போக்கில் குதுகலத்துடன் வாழ்ந்தான் அதன் சந்தோசத்தை அனுபவித்தான்… கவலைகள் என்பதை அவன் நினைக்கவும் இல்லை… அது அவனை அப்போது நெருங்கவும் இல்லை… வாழ்க்கை வாழ்வதற்கே என்று மட்டும் நினைத்தவன்… வாழ்க்கை நெறிமுறையுடன் வாழ்வதற்கே என்று நினைக்க வில்லை…. தனக்கான தன் வாழ்க்கையை அதன் சந்தோஷங்களோடு மட்டுமே வாழ்ந்திருந்தான்….
----
இப்படியாக நாட்கள் கழிந்து மாதங்களும் கழிந்திருக்க.... ஒருநாள் நள்ளிரவுக்கு மேல்...
விக்கிக்கு திடிரென்று தூக்கம் கலைய… எழுந்தவன்… மணியைப் பார்க்க மணி ஒன்றைத் தாண்டியிருந்தது…
ரிஷியின் அந்த நண்பர் கூட்டத்தில் எவனுக்கோ பார்ட்டி என்று இரவு வெளியில் சென்றிருக்க…. ரிஷி வந்து விட்டானா என்று அவனது அறைக்குச் சென்று பார்க்க… ரிஷி இன்னும் வந்திருக்க வில்லை என்பதை உணர்ந்தவன்…
“வர வர இவன் ரொம்பப் பண்றான்” தனக்குள் நொந்தபடி அவனின் அலைபேசிக்குத் தொடர்பு கொள்ள…
ரிஷியும் உடனே எடுத்தான்… தங்கள் ஏரியாவிற்கு அருகில்தான் இருப்பதாகவும்… இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவதாகவும் கூறி போனை வைக்கப் போக….
விக்கி இப்போது நண்பனின் மேல் அக்கறையாக
“நீ தான் ட்ரைவ் பண்றியாடா…. பார்த்து வாடா” என்று சொல்ல… அவன் கவலையை உணர்ந்தவனாக
“விக்கி… நான் கன்ட்ரோலாத்தான் குடிச்சுருக்கேன்… நீ வொரி பண்ணிக்காத.. போய் தூங்கு…” என்ற போதே
“ஆமாடா….. குடிக்கிறதை கண்ட்ரோல் பண்ணுங்கடானா… அதை அப்படியே திருப்பிப் போட்டு… கன்ட்ரோலாத்தான் குடிக்கிறேன்னு சொல்லுங்கடா…” விக்கி நக்கலாய்ச் சொல்ல…
நக்கலாய் சொன்ன போதிலும் எரிச்சலும் கோபமும் அதில் இருக்க…..
“கூல் மச்சான்…. நீ சொல்றதுலாம் கரெக்ட்தான்… ஆனா குடிகாரன் கிட்ட எதைச் சொன்னாலும் மாத்திதானே புரிஞ்சுக்குவாங்க…. ’குடிக்கிறதை கண்ட்ரோல்’ பண்ணுனு சொன்னதை மாற்றி போட்டு ‘கன்ட்ரோலாக் குடிக்கிறாங்க’….” ரிஷியும் கூலாகப் பதில் கொடுக்க..
அவன் பதிலில் ..விக்கி.. இந்த முனையில் இருந்து கோபமாய்ப் பதில் கொடுக்க ஆரம்பிக்கப் போக….
“விக்கி….. போனை வை… நான் அப்புறம் பேசுகிறேன்..” பதட்டத்துடன் ரிஷி சொல்ல..
நண்பன் குரலில் மாற்றம் உணர்ந்தவன்…
“என்ன ரிஷி… ஏதாவது பிரச்சனையா” நண்பனின் பதட்டம் விக்கிக்குள்ளும் வந்திருக்க……
“இல்லை… எனக்கு ஒண்ணும் இல்லை… அவர் பேர் என்ன… ஹான் அந்தப் பொண்ணு… பேரு…” என்று நிறுத்தியவன்…
“கண்மணி மாதிரி இருக்குதுடா…. இந்த நேரத்தில்… அதுவும் ரோட்டில் நிற்குது” என்று இழுத்தவன்
“சரி சரி போனை வை” என்று கட் செய்ய….
“குடிபோதைல கண்மணின்ற பேரை பேப்பர்ல பார்க்கும் போது அதை ஒழுங்காக் கூட வாசிக்கத் தெரியலை… அதுவே பொண்ணாப் பார்க்கும் போது தெளிவா தெரியுறாளாடா” விக்கி சொல்லி முடிக்கவில்லை… ரிஷி போனை எப்போதோ கட் செய்திருந்தான்…
Please give your support and comments here…
It helps me to improve my writing and to correct my faults
Thanks
Praveena Vijay
Dont delay next ud sis.