அத்தியாயம் 5:
விஸ்தாரமான பரப்பளவில் பரந்து விரிந்திருந்தது ‘அம்பகம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி'....
“அம்பகம் அறக்கட்டளை” யின் கீழ் இயங்கும் ஸ்தாபனம் அது…
ஆம் கண்மணி படித்துக்கொண்டிருந்த பள்ளி அதுவே... கிட்டத்தட்ட மாலை 5 மணி... அந்தி சாயும் நேரம்... கண்மணி இன்னும் பள்ளியில் தான் அமர்ந்திருந்தாள்...
இந்த வருடம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர் நோக்கியிருக்கும் மாணவிகளுக்கான சிறப்பு வகுப்பு... படிப்பில் மந்த நிலையில் இருப்பவர்களுக்காக பிரத்தியோகமாக எடுக்கப்படும் சிறப்பு வகுப்பு... கண்மணி அவர்களுக்கு படிப்பில் பயிற்சி அளிக்க நியமிக்கப்பட்டிருந்தாள்... தேர்வில் தேர்ச்சி பெற எளிதான... முக்கியமான கேள்விகளை மட்டுமே அந்த மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்து அவர்களை முன்னேற்ற பாதைக்கு இட்டுச் செல்ல... உதவும் பயிற்சி வகுப்பு...
கடந்த வருட பத்தாம் வகுப்புத் தேர்வில் அந்தப் பள்ளியின் முதல் மாணவியாக கண்மணி வந்திருக்க... அந்தப் பள்ளியின் முதல்வர் இராஜம், கண்மணிக்கு இப்பொறுப்பை வழங்கி இருக்க... கண்மணியும் மிகவும் ஆர்வமாக அந்தப் பணியை ஏற்று நடத்த ஆரம்பித்திருந்தாள்... கண்மணிக்கு ஆசிரியர் பணி மிகவும் பிடிக்கும்... அவளின் எதிர்கால இலட்சியமே... இதைப்போல கல்வி நிறுவனம் அமைக்க வேண்டும்... ஏழை எளியவர்களுக்கு தரமான இலவச கல்வி வழங்க வேண்டும் என்பதே...
தன் முன் அமர்ந்திருந்த மாணவிகளுக்கு.... சில கணிதப் பயிற்சிகளை சொல்லிக் கொடுத்து விட்டு... அவர்களைத் திரும்ப முயற்சிக்கச் சொன்னவள்... அதில் சந்தேகம் கேட்டவர்களுக்கும் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தாள்...
அப்போது...
“கண்மணி...” என்ற குரல் கேட்க... பள்ளியின் அலுவலக உதவி பணியாளர் அழைக்க… திரும்பிப் பார்த்தவளிடம்
“மேடம் அவங்கள வந்து பார்க்க வரச் சொன்னாங்க கண்மணி” என்று அழைத்த விபரத்தை சொல்ல… அடுத்த சில நிமிடங்களில் அந்த பள்ளி அலுவலக அறையின் முன் நின்றிருந்தாள் கண்மணி… உள்ளே வர அனுமதி வேண்டி
“ராஜம் முத்துக்கிருஷ்ணன்” பெயர் பலகை கம்பீரமாக மின்னியது…. ராஜத்தைப் போலவே…
அவர் முன் ஒரு இளைஞன் அமர்ந்திருந்தான்… அவனும் வேறு யாருமல்ல ராஜத்தின் புதல்வன் தான்… இந்த வருடம் தான் சட்டக்கல்லூரியில் படிப்பை முடித்திருந்தான்.. தற்போது ’அம்பகம் ஃபவுண்டேஷனின்’ லீகல் அட்வைஸரான அச்சுதானந்ததிடம் ஜூனியராக அவன் சேர்ந்திருக்க… தன் தாயிடம் சில தகவல்கள் வேண்டி இங்கு வந்திருந்தான்…
“பார்த்தி… மற்ற டீடையில்ஸ்லாம் உங்கச் சார்கிட்ட ஏற்கனவே இருக்கு…. ஏதாவது டவுட் இருந்தா கேட்கலாம்” என்று முடித்தவராக… வாசலில் நின்றிருந்த கண்மணியைப் பார்த்தவர்… உள்ளே வருமாறு தலை அசைக்க… பவ்யமாக கண்மணியும் உள்ளே சென்றாள்… வந்தவளிடம்
“கண்மணி… நெக்ஸ்ட் அகாடெமிக் இயர் ட்ரஸ்ட் ஃப்ரீ எஜுகேஷனுக்கான ஸ்டூடண்ட் லிஸ்ட்ல உங்க ஏரியா பசங்களுக்கு ரெகமண்ட் பண்ணிருந்தாய் அல்லவா… அவங்க எல்லோரையுமே ட்ரஸ்ட்லருந்து அக்செப்ட் பண்ணிட்டாங்க… இங்கே படிக்கிற படிப்புல இருந்து அவங்க மேற்படிப்பு வரை… இனி எல்லாமே ஃப்ரீதான்….. என்றவரிடம்…
மகிழ்ச்சியாக தனது நன்றிகளைக் கண்மணியும் மனமாற தெரிவிக்க… ராஜம் எதற்கு கண்மணியை அழைத்தாரோ அதை சொல்லி முடித்ததால்… கண்மணியிடம் ….
“நீ போகலாம் கண்மணி” என்று சொல்ல… கண்மணியும் அவரிடம் விடைபெற்று வெளியேற…அப்போது…
அங்கு அமர்ந்திருந்த பார்த்திபனுக்கு திடீரென்று சந்தேகம் வந்தது… இந்த “அம்பகம் ஃபவுண்டேஷன்” பெயர் மாற்றம் குறித்து… அதன் விளைவு
“அம்மா… இந்த அம்பகம் ஃபவுண்டேஷன் பெயர் மாற்றம்… ” என்று ஆரம்பிக்கும் போதே…. ராஜம் வேகமாக… அவன் பேசுவதை நிறுத்தியவர்…
“கண்மணி போனபின் பேசலாம்” என்று கண்ஜாடை காட்ட… பார்த்திபனும் நிறுத்தினான்….
தங்கள் அலுவலகத்தை விட்டு வெகு தூரம் கண்மணி சென்ற பின்… அதை உறுதி செய்தவறாக…. இப்போது தன் மகனிடம் திரும்பி
“ஹ்ம்ம்.. இப்போ சொல்லு பார்த்தி… என்ன சந்தேகம்” அவன் சொல்ல வந்ததை ராஜம் கேட்க…
“இந்த பெயர் மாற்றம்… நாரயண குருக்கள் மேக்சிமம் ஷேர் ஹோல்டராக மாறிய பின்னாலதானம்மா வந்தது” என்ற போதே…
“ஆமாம்…. ” தலை அசைத்த ராஜம்
“நாரயண குருக்கள் இந்த ட்ரஸ்ட்ட தனக்கு கீழ கொண்டு வந்த பின்னாலதான் … தன் பேத்தியோட பேர்ல” என்று நிறுத்தியவர்… கண்மணி போன திசையைப் பார்த்தபடியே
“இப்போ வந்தாளே கண்மணிதான் அவர் பேத்தி… அவர் பொண்ணு பவித்ராவோட பொண்ணு”
“அம்பகம் 'கண்மணி' என்றும் பொருள் தரும்..” அமைதியாக விளக்கிச் சொல்ல…. பார்த்திபனின் கண்கள் இப்போது வியப்பில் பெரிதாக விரிய… அதில் தன் அன்னையை ஆச்சரியமாகப் பார்க்க…
அவன் பார்வையைப் புரிந்தவராக
“ஹ்ம்ம்… கண்மணிக்குத் தெரியாது… ஆனால் உனக்கு... ட்ரஸ்டோட லீகல் அட்வைஸரா இது தெரியவேண்டிய விசயம்… அதுனால சொன்னேன்” என்றவர்…
இன்னும் சில தகவல்களைத் தர… அமைதியாக தகவல்களைச் சேகரித்து வைத்துக் கொண்டான் பார்த்திபன்…
…
அதே மாலைப் பொழுதில்... ரிஷி-விக்கி கல்லூரியில் அலுமினி மற்றும் கல்லூரி விழாவின் கடைசி நாள்…. ஆடிட்டோரியத்தில் கலை நிகழ்ச்சிகள்... மாணவர்களின் ஆட்டம் பாட்டம் என விழா உற்சாகமாகவும் ஆர்பாட்டமாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றுக் கொண்டிருந்தது…
மேடையில் விழா நிகழ்ச்சி நிரல்களின் அணி வகுப்பாக… மாணவர்களின் இசைக் கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருக்க… ரிஷி விக்கியைப் பார்த்து
“என்னடா இவனுங்க இப்டி தூங்க வைக்கிறானுங்க.... ஏதாவது குத்துப்பாட்டு பாடுனா... நாமளும் இங்கிருந்தே செம்ம ஆட்டம் போடலாம்... இவனுங்க என்னடான்னா” என்று கொட்டாவி விட்டபடியே சொன்னவன்...
“ப்ச்ச்.. முடியலடா… இவனுங்க பண்ற அலப்பறை… பாடுறான் பாரு பாட்டு… ‘காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்’... இவன் நெஞ்சில எத்தனை தடவை தான் காதலின் தீபம் ஏத்துறாதாம்… எனக்குத் தெரிஞ்சே நாலஞ்சு பேர்… இன்னும் எத்தனை பேரோ…” கிண்டல் இருந்தாலும்… அப்படி ஒரு சலிப்பு ரிஷியின் வார்த்தைகளில்…
விக்கி அவன் பொறுமலில் சத்தமாகச் சிரித்தபடி….
“ரொம்ப ஸ்ட்ராங்கான இதயம் போலடா… இங்கலாம் பாரு சிங்கிள் தீபத்துக்கே வழி இல்ல” ஏக்கமாய் தன் நெஞ்சைத் தொட்டுக் காட்டி விக்கி சொல்ல
“ம்க்கும்… நீ லவ் பண்ணிட்டாலும்… அதுக்கு உன் தாத்தா ஓகே சொல்லிட்டாலும்…. உன் தாத்தா ஒரு பொண்ண பார்த்து வச்சிருப்பாரு… கண்ண மூடிக்கிட்டு கல்யாணம் பண்ற வழிய மட்டும் பாரு… உங்க தாத்தா ஏத்தி வைப்பாரு… உன் வாழ்க்கைல தீபத்தை” விக்கியின் குடும்ப நிலையை நன்றாக அறிந்தவன் ஆயிற்றே ரிஷி… விக்கியின் தாத்தா வார்த்தைக்கு விக்கி குடும்பத்தில் மறுப்பே இருக்காது… இருக்கக் கூடாது… அவர் வைத்ததுதான்…. அவர் சொல்வதுதான் அந்தக் குடும்பத்தில் சட்டம்…
இப்போது விக்கி ரிஷியை முறைக்க…
“உண்மையைச் சொன்னால் உடம்புக்கு ஆகாதே…. ஆனால் விக்கி… காதல்னு வந்துட்டா… தாத்தாவாவது…. ஒண்ணாவது…. பார்க்கலாம்.. அப்படி ஒண்ணு நடக்குதானு...” என்ற போதே மறுபடியும் விக்கி முறைத்தான்...
“ஹேய் விக்கி இதுவும் உண்மைதாண்டா…. காதல் வரலாறை புரட்டிப் பாரு”
“டேய்” பல்லைக் கடித்தான் விக்கி…. அவனின் கோபத்தில்… விக்கியின் கண்களில் தெரிந்த கொலை வெறியில்
”ஆனால் எனக்கென்னமோ பட்சி சொல்லுதுடா... உனக்கும் லவ் ஃபீலிங் வரும்னு” ரிஷி விடாமல் நண்பனைக் கிண்டல் செய்ய
ஆனால் அந்த நிமிடத்தில்... மனதுள் திடிரென்று ரிஷியின் தங்கை ரிதன்யாவின் குரல் வந்து போனதை ஏனோ விக்கியினல் தடுத்த நிறுத்த முடியவில்லைதான்..
முதலில் முறைத்தவன்... இப்போது அமைதியாகி விட்டிருக்க... அவனின் அமைதியில் விக்கி இன்னும் ஓட்ட ஆரம்பிக்க...
“அடங்குறியா…. இத்தோட இந்த பேச்சை நிறுத்துறியா...” எனும் போதே அடுத்து ஒரு மாணவன்...
குணா படத்திலிருந்து “கண்மணி அன்போடு” என்ற பாடலை நம் கல்லூரி காதல் இளவரசன் என ஆரம்பிக்க... அங்கு பாட வந்த மாணவைனைப் பார்த்து அரங்கமே அதிர ஆரம்பித்த்து..
“தோ பார்டா நம்ம காலேஜ் குணா கமல் இவர்தான்டா... வந்துட்டார்....” என மாணவர்கள் கிண்டல் செய்ய...
ரிஷியும்... விக்கியும் இம்முறை வாய்விட்டே சிரித்து விட்டனர்...
“இவன அந்த ராங்க்கி ராக்கமாட்ட அனுப்பனும்டா... இந்த பாட்டையே மறந்துருவாண்டா” விக்கி கமெண்ட் கொடுக்க...
ரிஷியும் விக்கிக்கு ஹைஃபை கொடுத்தான் ஆனால்.... வித்தியாசமாக விக்கியைப் பார்த்தபடியே
“நீ இன்னும் அந்தக் கண்மணியை மறக்கவில்லையா” என்பது போல அந்தப்பார்வை இருக்க...
அதைக் கண்டும் காணதவன் போல விக்கியும் மேடையை நோக்கித் திரும்ப... அடுத்த அரைமணி நேரத்தில்... கலை நிகழ்ச்சிகள் முடிந்து... விருந்தினர்கள் சொற்பொழிவு ஆரம்பிக்க...
ரிஷிக்கு அதையெல்லாம் பொறுமையாகக் கேட்க முடியுமா... அதற்கு மேல் அந்த அரங்கத்தில் உட்கார பொறுமை இல்லாதவனாக....
“ஒரே போர்டா… நான் கிளம்பட்டுமாடா” என்று பொறுமை இல்லாமல்... தாங்க முடியாதவனாக அனுமதி கேட்க…
விக்கி ரிஷியிடம்..
“இது முடிந்தவுடன் நெக்ஸ்ட் ப்ரைஸ் அனவுன்ஸ்மெண்ட் தாண்டா…. பொறுடா… நாம செஞ்ச மாடலுக்கு ப்ரைஸ் கிடைக்குதான்னு பார்ப்போம்… வந்திருக்கிற கெஸ்ட்தான் செலெக்ட் பண்ணுவாராம் “ கண்களில் ஆர்வம் மிளிர எதிர்பார்ப்போடு விக்கி பேச… ரிஷிக்கு அந்த நம்பிக்கை எல்லாம் இல்லை…
ஆனாலும் நண்பன் வார்த்தைகளை மறுத்தும் பேசாமல்... அமைதியாக விழா மேடையை கவனிக்க ஆரம்பித்தான்... இப்போது இவனுக்குள்ளும் எதிர்பார்ப்பு வந்திருந்தது
சற்று நேரத்தில் பரிசளிக்கும் நேரம் வர….
விக்கி எதிர்பார்த்தபடியே, விக்கி மற்றும் ரிஷி இருவரும் சேர்ந்து செய்த மாடல் முதல் பரிசைத் தட்டிச் செல்ல…
விக்கி அதை எதிர்பார்த்தது போல சந்தோசப்பட… ரிஷி… நம்ப முடியாமல் விக்கியைப் பார்த்துக் கொண்டிருந்தான்….
பின் உடனடியாக தன் உணர்வுக்கு வந்த ரிஷி.... வேகமாக…. விக்கிக்கு வாழ்த்துக்கள் கூறியவன்…. விக்கியை மேடைக்கு போகச் சொல்ல…
“நீயும் வாடா…. நாம ரெண்டு பேரும் சேர்ந்துதாண்டா பார்ட்டிச்சிப்பேட் பண்ணினோம்…. ” என்று அழைக்க
ரிஷிக்கு தெரியும்…. தான் ஒரு துரும்பைக் கூட நகர்த்தவில்லை என்று… எல்லாமே விக்கியின் ஐடியாதான்… பேருக்கு இவன் விக்கியின் கூட இருந்தான்…. அவ்வளவுதான்… அதற்கு அந்த நடராஜ் கூட விக்கியின் மாடலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார் என்று சொல்லாம்… அந்த அளவுக்கு நடராஜ் ஈடுபாட்டோடு செய்தார்.
“இல்ல விக்கி… இது உன்னோட உழைப்புக்கு… உன்னோட அறிவுக்கு கிடைத்த வெற்றி.. இத நான் பங்கு போட விரும்பவில்லை… ஒட்டு மொத்த பாராட்டும் உனக்குத்தாண்டா கிடைக்கவேண்டும்.. அதுதான் நியாயம்” என்று மேடைக்கு வராமல்.... பிடிவாதம் பிடிக்க…
விழா மேடையில் இவர்கள் இருவரின் பெயரும் தொடர்ந்து அழைக்கப் பட்டுக் கொண்டயிருக்க…
விக்கியும் வேறு வழியின்றி தான் மட்டுமே போய் அந்தப் பரிசினை வாங்கப் போனான்...
அந்த மாடல் ஆட்டோ மொபைல் தொழிலின் புதிய கண்டுபிடிப்பின் அடித்தளமாக இருக்க… அந்த விழாவுக்கு வந்திருந்த... இவர்களின் மாடலைத் தேர்ந்தெடுத்த பிரபல கார் கம்பெனியின் முதலாளி… விக்கி ரிஷியினைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார் இவர்களின் கல்லூரி முதல்வரிடம்…
இறுதியில்... மேடையில் ஏறி... விக்கி கோப்பையை வாங்கிய போது... அப்போது எழுந்த கரகோசத்தில்... விக்கிக்கு கிடைத்த பாராட்டினை மேடையின் கீழ் இருந்து சந்தோசமாக, நெகிழ்ச்சியோடு பார்த்தபடி இருந்தான் ரிஷி…. இதற்கெல்லாம் முழுதகுதியானவன் தன் நண்பன் என்ற பெருமிதத்தோடு
----
நடராஜுக்கு முன்பணம் மட்டுமே கொடுத்திருந்தனர் இருவரும்.... மீதித் தொகையை இந்த வாரம் தருவதாக கூறி இருக்க....
அடுத்த நாள் காலையில் நடராஜனுக்கு போன் அடித்தான் விக்கி... அவரிடம் பணம் கொடுக்க அவரது கடைக்கு வருவதை சொல்வதற்காக...
விக்கி போன் அடித்தபோது நடராஜன் ஏனோ எடுக்க வில்லை.... விக்கியும் இரண்டு மூன்று முறை முயற்சி செய்து பார்த்துவிட்டு... விட்டுவிட்டான்...
அதன் பின் நடராஜ்தான் விக்கியின் அழைப்பை பார்த்து விட்டு அவரே மீண்டும் அழைக்க.... அப்போது விக்கி முகச்சவரம் செய்து கொண்டிருக்க.... ரிஷிதான் விக்கியின் போனை எடுத்தான்..
நடராஜ் வெளியூருக்கு வந்திருப்பதாகக் கூறி..... தான் வந்தவுடன் சொல்வதாகவும்.. அதன் பிறகு பணத்தை வந்து தருமாறும் கூற...
ரிஷியும்... அவர் சொன்ன செய்தியை விக்கிக்கு கடத்தியபடி..
“என்ன சொல்ல” என்று விக்கியிடம் கேட்க
சரி என்று சொல்லுமாறு ரிஷிக்கு தலை அசைக்கப் போன விக்கி... நிறுத்தி...
‘நடராஜன் ஊரில் இல்லையா....’ ரிஷியின் இந்த வார்த்தைகளில் சற்று யோசித்தான்...
வேகமாய் தன் முகத்தை துண்டால் துடைத்தவன்...... அதே வேகத்தில் தன் போனை ரிஷியிடமிருந்து பறித்தவன்...
“இல்ல சார்... எங்களுக்கு இன்டெர்னல் எக்ஸாம் ஸ்டார்ட் ஆகுது இந்த வாரம்... அதுனால இன்றைக்கே கொடுத்து விடுகிறோம்.... உங்க பொண்ணு வீட்லதானே இருக்கும்... அதுகிட்டயே கொடுத்து விடுகிறோம்” என்று விக்கி சொல்ல...
எதிர் முனையில் நடராஜ் மௌனமாய் சில வினாடிகள் இருந்தார்... அன்று அந்த போலிஸ்காரர் சொன்னது ஞாபகம் வந்ததுதான், இப்போது அவரது மௌனத்திற்கு காரணமாக இருந்தது...
நள்ளிரவுக்கு மேல் ஆகும் இவர் வீடு திரும்ப.... என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார்... அதே நேரம்... தன் மகளிடம் இவர்களின் வால்த்தனம் எல்லாம் செல்லாது... ஒட்ட நறுக்கி விடுவாள் என்பதும் நன்றாகத் தெரியும்
அது மட்டுமின்றி... தன் மகளை தனியாக விட்டுவிட்டு அடிக்கடி வெளியூருக்கு வருவது வழக்கம்தான்... என்னதான் இருந்தாலும் பெண்ணைப் பெற்ற தந்தை ஆயிற்றே...
தந்தையாக யோசித்தவருக்கு... மின்னல் வெட்டியது...
தன் அம்மா இன்று தங்கள் வீட்டிற்கு வந்திருப்பார்களே.... இவர்கள் போகும் போது தன் அன்னையை வீட்டில் இருக்கச் சொல்வோம் என்பதை தனக்குள் முடிவெடுத்தவராய்.... விக்கியிடம் ‘சரி’ என்று சம்மதம் சொல்ல... விக்கியும் போனை வைத்தான்....
ரிஷி விக்கியின் நடவடிக்கை புரியாமல் அவனைப் பார்க்க... ரிஷியைப் பார்த்து.. விக்கி கண் சிமிட்டினான்..
“கண்ணடி... கண்ணடி.... கண்மணிகிட்ட கல்லடி வாங்காம இருந்தால் சரி.... இப்போ எதுக்குடா நடராஜ் ஊர்ல இல்லாதப்போ அவர் பொண்ணுக்கிட்ட பணத்தைக் கொடுக்கனும்னு நினைக்கிற.... ”
“அதிலும் இன்டெர்னல்.. அது இதுனு பொய் வேற சொல்ற.. என்ன விசயம்...” அதட்டலோடு கொஞ்சம் கடுப்பாகவும்... கோபமாகவும் கேட்க...
விக்கி சிரித்தபடி...
“சும்மாதாண்டா... நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது மிஸ் பண்ணாக் கூடாதுடா...” என்று ரிஷியிடம் தன் திட்டத்தைச் சொல்ல...
இப்போது ரிஷி விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான்... விக்கி சொன்ன திட்டத்தைக் கேட்டு....
“அடேங்க்கப்பா பெரிய ப்ளான் தான்” என்றபடி...
“என்னமோ பண்ணு.... இனிமேல் எல்லாம் நான் அங்க வர மாட்டேன்” என்று தப்பிக்கப் பார்க்க...
“ஹலோ... அன்னைக்கு அந்தப் பொண்ணு என்னை இன்சல்ட் பண்ணுச்சு... பதிலுக்கு திருப்பிக் கொடுக்கப் போறேன்.... அன்னைக்கு பார்வையாளனா இருந்ததானே அதே மாதிரி... இன்னைக்கும், அதாவது நான் அவள இன்சல்ட் பண்ணும் போதும் நீ பார்வையாளனா இருக்க வேண்டும்... உனக்கு பிடிக்கலைனாலும் ” ரிஷியை மிரட்டினான் விக்கி...
“ஆமாம் இது பெரிய ப்ளான் பாரு... இதுக்கு நான் வேற துணையாக்கும்... டேய் நீ படிக்க மட்டும் தான் லாயக்கு... ‘ஒரு... வயசுப் பையனா’ யோசிக்காமல்.. ‘ஒருவயசுப்’ பையனா யோசிச்சுருக்கியேடா.... காமெடியா இருக்குடா....” என்று மீண்டும் அவன் திட்டத்தை யோசித்தவன்... இப்போதும் சிரிப்பை அடக்க முடியாமல்... விக்கியைக் கேவலமாக பார்த்தபடியே தன் அறையை போக...
குழம்பி நின்றவன் விக்கியே....
“இவன் என்ன இப்படி சொல்லிட்டு போகிறான்... அதுவுமில்லாம ஒரு கேவலமான லுக்கை வேற விட்டுட்டு போகிறான் ... அவ்வளவு கேவலமாவா இருக்கு நம்ம ப்ளான்”... என்று விக்கி யோசிக்க ஆரம்பித்தாலும்... தன் திட்டத்தை கண்மணியிடத்தில் செயலாற்றி அவளை கேவலப்படுத்தி அவமானத்தில் அவள் முகம் போகும் போக்கைப் பார்க்க வேண்டும் என்ற முடிவை மட்டும் மாற்றிக் கொள்ளவில்லை..
Interesting with suspenses.
athu ena plan??? viki inum avamana pada porano
😁😁😂vikke kanmakkitta mattikittu vikkivikkialaporan😄😄😄😄😄
Nice update. Vikki vangitu vara pooran mani kitta. Kanmani trust avaluku theriyathu pola
Very nice and interesting story sister
😁😁😁😍😍😍😍